06 அக்டோபர் 2006 பத்திரிகை செய்தி
வெளியீடு
தினத்தந்தி
நிகழ்வு
நிகழ்வின் சாரம்: ஆனந்த ரதோற்சவம் - கோடிக் கண்கள் தரிசிக்கும் தென்னக யாத்திரை
நாள்: 06 அக்டோபர் 2006
தலைப்பு: ராசிபுரம் நஞ்சப்ப செட்டித் தெருவில் உள்ள வீராலய தியான சிகிட்சை மையத்திற்கு ஆனந்தேஸ்வரர் எழுந்தருளும் காட்சி.
"ஆனந்தேஸ்வரி சமேத ஆனந்தேஸ்வரர் ரத யாத்திரை தென்னிந்தியா முழுவதும் நடைபெறுகிறது. அவ்வாறு பயணம் செய்யும் வேளையில் ராசிபுரம் தாலுகாவில் நாமகிரிப்பேட்டை, தண்ணீர் பந்தல்காடு, பச்சுடையாம்பாளையம், ஒசவுதாபுரம், வெண்ணத்தூர், பட்டணம், ப.மு.பாளையம், கைலாசம்பாளையம், வடுகம் ஆகிய கிராமப் பகுதிகளுக்கு ஆனந்த ரதம் சென்றது. ரதத்தை ஆயிரக்கணக்கானோர் தரிசித்தனர். பிறகு மாரியம்மன் கோவில் அருகே பிரம்மாண்ட வான வேடிக்கை ஏற்பாடு செய்யப்பட்டது. பிறகு அங்கிருந்து நகர் வலம் மீண்டும் துவங்கியது.
பிடதி ஆஸ்ரமத்தில் நிர்மாணிக்கப்படும் ஆனந்தேஸ்வரர் திருகோவிலுக்காக சிலைகள் தயாரிக்கும் சிற்பக் கூடத்திற்கும் ஆனந்த ரதம் சென்றது. மேலும் வித்யாமந்திர், வித்யாநிகேதன், எஸ்.ஆர்.வி. பள்ளி, பாவை கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங்களுக்கும் ஆனந்த ரதம் சென்றது. "
06 அக்டோபர் 2006
06 அக்டோபர் 2006 -பத்திரிகை செய்தி