என் வாழ்க்கை உங்கள் வாழ்வின் நோக்கத்தை அறிவதற்கான அழைப்பு
சுயசரிதை(Auto Biography)
வருடம் : 1978
நடைபெற்ற இடம் : திருவண்ணாமலை
நிகழ்வின் விவரனை :
"
எனது அன்பிற்குரியவர்களே!
உங்கள் வாழ்வின் நிறைவிற்காகவே நான் அவதரித்துள்ளேன்...
இவ்வார்த்தைகளை நீங்கள் தற்போது வாசிப்பது வேண்டுமானால் முதன் முறையாக இருக்கலாம். ஆனால் உயிரால் நாம் அனைவரும் ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ளோம்.
நாம் ஒருவருக்கொருவர் நன்றாக பரிட்சையமானவர்களே.
நான் யார், என் வழிகள் என்ன? என்பதை நீங்கள் நன்றாக அறிவீர்கள். அதேபோன்று உங்களுடையதை நான் அறிவேன். நீங்கள் என்னிலிருந்து, முழுமையிலிருந்து பிரிவது ஒருபோதும் அனுமதிக்கப்படவில்லை. உங்களுடைய எதிரெழுச்சியினாலே பிரிந்தீர்கள். இந்த பிரிவானது உலகில் உயிர் உருவாகும்போது நிகழத் துவங்கியது. சீரற்ற வடிவமும், அளவும் உடைய ஒரு செல் உயிரினமாக, அமீபாவாக நீங்கள் முதலில் வடிவெடுத்தீர்கள். உங்கள் தனியுணர்வு ஊசி முனைபோன்று மிக சிறிய புள்ளியாக இப்பிரபஞ்சத்தில் துவங்கியது. அன்றிலிருந்து உங்கள் கவனம் திசைமாறி திசைமாறிச் சென்று முழுமையை விட்டு விலகியதால் வந்த வலியை நீங்கள் அறியப் பெற்றிருப்பீர்கள். அந்த வலியை உங்களுக்கு நீங்களேதான் உருவாக்கினீர்கள் என்பதையும், நீங்கள்தான் நிகழும் கவனச் சிதறலுக்கான காரணம் என்பதை மரணத்தின்போதுதான் உணர்வீர்கள்.
என்னோடு மீண்டும் ஒருங்கிணைந்திட வேண்டும் என்னும் தீவிர ஏக்கத்தில் மிக நீண்ட பயணத்தை செய்துள்ளீர்கள். அமீபாவிலிருந்து மீனாக, மீனிலிருந்து ஆமையாக, ஆமையிலிருந்து குரங்காக, குரங்கிலிருந்து மனிதனாக பயணித்து வந்தடைந்துள்ளீர்கள்.
ஒரு செல் நுண்ணுயிரியான அமீபாவிலிருந்து மீன் வரை நடந்தது - உடல் வளர்ச்சி, மீனிலிருந்து குரங்கு வரை நடந்தது - உடல் மன வளர்ச்சி, குரங்கிலிருந்து மனிதன் வரை நடந்தது - உடல், மனம், உயிர் வளர்ச்சி.
இப்போது மனிதனிலிருந்து இறை மனிதனுக்கு மனிதனை எடுத்து செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. இது உடல் மன உயிர் சக்தி வளர்ச்சி நடைபெறும் காலம்.
இறைசக்தி வளர்ச்சி இப்பொழுது நடந்து வருகிறது.
ஆழ்ந்து தெரிந்து கொள்ளுங்கள்... பிரிவின் வேதனை உச்சத்தை அடையும் ஒவ்வொரு முறையும் என்னுடன் முழுமையாக கரைந்திட துடிக்கின்றீர்கள். உன்னதத்தை அடைவதற்காக அழுகின்றீர்கள். என்னை ஆழமாக அழைக்கின்றீர்கள். உங்களுடைய இந்த தேடுதல், ஏக்கம் பல யுகங்களாக குவிந்து ஒன்று சேர்ந்துள்ளது.
உங்கள் அழைப்பிற்கு பதிலாக உங்களுக்காக நான் ஒவ்வொரு முறையும் அவதரிக்கின்றேன். ஒவ்வொரு முறை நான் அவதரிக்கும்போது நான் எடுக்கும் வடிவமே அடுத்தடுத்த நிலைக்கான திருப்புமுனையாக அமைகிறது. ஒரு செல் உயிரியான அமீபாவில் ஆரம்பித்து, வளர்ந்து வளர்ந்து வளர்ந்து மீனாய், மீன் வளர்ந்து வளர்ந்து வளர்ந்து மீனிலிருந்து நீரிலும் நிலத்திலும் வாழக்கூடிய ஆமையாய், ஆமையிலிருந்து நிலத்தில் மட்டுமே வாழக்கூடிய வராகம், வராகத்திலிருந்து பாதி மிருகம் பாதி மனிதனான நரசிம்மம், நரசிம்மத்திலிருந்து குள்ள மனிதனான வாமனம், வாமனத்திலிருந்து ஓரளவுக்கு வளர்ந்து ஆனால் ஆட்சி மட்டுமே செய்யக்கூடிய இராமனும், இராமனிலிருந்து ஆட்சி மட்டுமல்ல ஞானத்தின் அருளாட்சியும் செய்யக்கூடிய கிருஷ்ணனும், ஒவ்வொன்றாய், ஒவ்வொன்றாய், ஒவ்வொன்றாய் பரிணமித்து வருகின்ற அந்தப் பரிமாணத்தைத்தான் நாம் இந்து மதத்திலே அவதாரங்கள் என்று சொல்றோம்.
நன்றாக புரிந்துகொள்ளுங்கள்...உலகின் எல்லா அனுபவங்களையும் அனுபவித்து முடித்த பிறகுதான் அதை விடுவோம். அதுதான் உயிரின் ஸ்வபாவம். உயிரின் குணம், உயிரின் தன்மை. உயிரின் இயற்கை. எப்பொழுதைவிடவும் தற்பொழுது பூமியில் வாழும் ஒவ்வொரு உயிரும் மிக அதிக அளவில் துன்பத்தை தழுவியுள்ளது. தற்போதைய மனித குலத்தின் கூட்டு விழிப்புணர்வின் தீவிரத்தன்மை மீண்டும் என்னை பூமியில் அவதரிக்கச் செய்துள்ளது.
உங்கள் உயிரின், உங்கள் வாழ்வின் நிறைவிற்காக - இதை பிரத்யேகமாக உங்கள் ஒவ்வொருவருக்கும் நிகழ்த்துவதற்காகவே நான் அவதரித்துள்ளேன்.
முழுமையிலிருந்து பிரிந்த பாகமாக இனி நீங்கள் உங்களை உணர வேண்டிய அவசியமில்லை.
என்னுடைய வாழ்க்கையை நீங்கள் ஆழ்ந்து படிக்கும்போது நீங்கள் உங்கள் வாழ்க்கையின் அழியாத சத்தியத்தை அறிந்து கொள்வீர்கள். நான் ஏன் அவதரித்தேன் என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்களானால் உங்கள் வாழ்வையும் புரிந்து கொள்வீர்கள்.
என்னுடைய வாழ்க்கை... நீங்கள் நித்யானந்த நிலையை அனுபவிப்பதற்கான அழைப்பு. உங்கள் வாழ்வின் நோக்கத்தை அறிவதற்கான அழைப்பு.
என்னுடைய நாமமே... 'நித்யானந்தா' என்பது உலக நிகழ்வுகளால் பாதிக்கப்படாத, முரண்பாடற்ற, சக்தி வாய்ந்த புரிந்துணர்வுகளை கொண்டு வாழும் வாழ்க்கை...நித்யமான ஆனந்தம்.
அதை உங்கள் வாழ்வில் நீங்கள் உணர்வதே என் வாழ்வின் நோக்கம்.
"
தரிசனம்
{{}}
ஆதிநட மாடுமலை யன்றிருவா் தேடுமலை
சோதிமதி யாடவரஞ் சூடுமலை - நீதி
தழைக்குமலை ஞானத் தபோதனரை வாவென்
றழைக்குமலை யண்ணா மலை
- திருவண்ணாமலை குகைநமச்சிவாய சுவாமிகளால் உபதேசம் பெற்ற சிதம்பரம் குருநமச்சிவாய சுவாமிகள் அருளிச் செய்த அண்ணாமலை வெண்பா.
சுயசரிதை_சாஸ்திர பிரமாணம்
எப்பொழுதெல்லாம் வேத பாரம்பரியத்தினுடைய அடிப்படைகளுக்கு ஆபத்து வருகின்றதோ, சனாதன தர்மத்திற்கு எப்பொழுதெல்லாம் பங்கம் ஏற்படுகின்றதோ ... அப்பொழுதெல்லாம் மனித குலம் அழிவுறத் துவங்கும். மனித குலத்தை காப்பாற்றவும், அழிவிலிருந்து தடுக்கவும் சனாதன இந்து தர்மத்தை புதுப்பிக்கவும் பிரபஞ்ச சக்தி ஜெகத்குருவாக அவதரிக்கிறது.
யதா யதா ஹி தர்மஸ்ய க்லாநிர்பவதி பாரத |
அப்யுத்தாநமதர்மஸ்ய ததாத்மாநம் ஸ்ருஜாம்யஹம் ||
பரித்ராணாய ஸாதூநாம் விநாஶாய ச துஷ்க்ரு'தாம் |
தர்மஸம்ஸ்தாபநார்தாய ஸம்பவாமி யுகே யுகே ||
தர்மம் குறைந்து, அதர்மம் அதிகரிக்கும் சமயங்களில் நான் மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்கிறேன். பக்தி உடையவர்களைக் காப்பதற்கும் தீயவர்களை அழிப்பதற்கும் நேர்மையை மீண்டும் நிலைநாட்டுவதற்கும் நான் காலங்காலமாக, மீண்டும் மீண்டும் பிறக்கிறேன். - பகவான் ஶீ கிருஹ்ணர் பகவத்கீதையில் அளித்த வாக்குறுதி ( 4.7 & 8)
இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் வேத பாரம்பரியத்தை புனரமைக்கிறார், பூமியில் கைலாஸாவை புனரமைக்கிறார்.
பூமியில் பரமசிவ ஞானம் அழியும் அபாயத்தில் உள்ளது. பரமசிவம் என்பது சத்தியம். அது வெறும் உயர் உயிர் நிலைப் பண்புகளின் அல்லது தாத்பரியங்களின் தொகுப்பு அல்ல. பரமசிவம் அவை அனைத்தையும் உள்ளடக்கியதாக இருந்தாலும், அவற்றிற்கு அப்பால் உள்ளது, அவற்றை கடந்தது, அதனினும் மேலானது. பரமசிவம் தன்னிச்சையாக பிரபஞ்சத்தை இயக்கும் அறிவாற்றல், அதுவே பிரபஞ்சத்தின் ஆதாரமாகும். பஞ்ச கிருத்தியங்களான படைத்தல் (சிருஷ்டி), காத்தல் (ஸ்திதி), அழித்தல் (சம்ஹாரம்), மாயையிலிருந்து மீட்டல் (த்ரோபாவம்), முக்தியளித்தல் (அனுக்கிரஹம்) ஆகிய ஐந்து கிருத்தியங்களையும் புரிகிறார். கைலாலத்தில் அமர்ந்து பிரம்மாண்டத்தில் நிகழ்வதை பிண்டாண்டத்தில் நிகழ்த்தும் பரமசிவ பரம்பொருள் பூமியில் பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் உடலில் அவதரித்து தன்னை வெளிப்படுத்துகிறது. பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் தம்முடைய பரமசிவ அனுபவத்தை 'கைலாஸா'விலிருந்து மனித உடல்களுக்குள் பரிமாற்றம் செய்கின்றார்.
வேத பாரம்பரியம் பூமியில் தழைத்தோங்க காரணமான மூன்று அடித்தளங்கள் மீதும் தொடர் தாக்குதல் நடத்தப்படுகின்றது. இதனால் பூமியில் தர்மத் நிலை குலைந்து உள்ளது.
1. வேத ஞானத்தை பாதுகாக்கும் பீடங்கள். 2. புனித சிறப்புக் கலைகள் மற்றும் கட்டிடங்கள். 3. சத்தியத்தை மிகத் தூய்மையாகவும், துரிதமாகவும் உரைக்கும் மொழி.
இன்றைய சூழலில் இம்மூன்றும் அதன் உயரிய நோக்கத்திலிருந்து துண்டிக்கப்பட்டு பெயரளவில்தான் இயங்கிக் கொண்டிருக்கின்றது.
பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் இம்மூன்று அடிப்படைகளும் அதன் உண்மை நோக்கத்திற்கு ஒருங்குவித்தலுடன் இயங்க பரமசிவன் அருளிய சாஸ்திரங்களை அடிப்படையாக கொண்டு சாசனங்களை வகுத்தளித்து தமது கைலாஸாவில் செயல்படுத்துகிறார். இதன்மூலம் பூமி முழுவதும் ஜீவன் முக்த சமுதாயத்தை நிர்மாணிக்கின்றார்.