September 14 2013

From Nithyanandapedia
Jump to navigation Jump to search

Title

Tamil Satsang by The Supreme Pontiff of Hinduism HDH Bhagavan Nithyananda Paramashiam (பக்தர்களின் சந்தேகங்களும்... பரமஹம்ஸரின் தீர்வுகளும்...)


Link to Video

Audio Link

பக்தர்களின் சந்தேகங்களும்... பரமஹம்ஸரின் தீர்வுகளும்...

Transcript in Tamil

பக்தர்களின் சந்தேகங்களும் பரமஹம்ஸரின் தீர்வுகளும்

உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன்.

இன்றை நித்ய சத்சங்கம் தமிழில் நிகழும், நாளை நாளை மறுநாளும் நித்ய சங்கம் தமிழிலேயே இருக்கும். நாளை மட்டும்தான் - தமிழிலேயே இருக்கும் நல்லது, நித்ய க்ரியா யோகா தியான முகாமிற்கு வந்திருக்கும் அன்பர்களின் கேள்விகளுக்கு விடையளிப்பதன் மூலம் நித்ய சத்சங்கத்தைத் தொடர்வோம்.

முதல் கேள்வி : திரு. மோகன். கடந்த வாழ்க்கையை பின்னோக்கி செல்லுதல் மற்றும் (அரிதுயில் நிலை மூலம்) நோய் தீர்த்தல் என்னும் பிரிவுகளில் அதாவது மயக்கமூட்டுகிற எனும் நிலைக்கு ஒரு நபரை எடுத்து சென்று அவர்கள் வாழ்வில் அனுபவித்த அதிர்ச்சிகளிலிருந்து விடுபடுத்தப்படுத்துகிறார்கள். அவர்களும் அந்த சம்பவங்களை முழுமையாக மீண்டும் வாழ வைக்கப்படுகிறார்கள். என்னுடைய சந்தேகம் என்னவென்றால் இந்த முறை சரியானதா? இந்த முறைக்கும் நாம் செய்கின்ற புரணத்துவ க்ரியைகளுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன ஸ்வாமிஜி?

பதில் :

இது ஒரு அருமையான கேள்வி. மிகவும் முக்கியமான கேள்வி. ஹிப்னாடிஸம் பத்தி ஹிப்னோதெரபி பத்தி நிறைய தவறான கருத்துக்கள் இருக்கின்றன. நல்லா புரிஞ்சுக்கோங்க. முதல் விஷயம் நான் சொல்ல விரும்பறது ஹிப்னோதெரபி தவறானதல்ல. ஆனால் அதை உங்கள் மீது ப்ரயோகப்படுத்துபவர் ஒரு ஞானியாக இல்லாதிருந்தால், ஒரு ஞானமடைந்த ஞானபுருஷராக இல்லாதிருந்தால் உங்க மேல அந்த ஹிப்னோதெரபியை செயல்படுத்தற அவருடைய பேட்டர்ன்ஸ் உங்களுக்கு வந்திடும். ஆழந்து புரிஞ்சுக்கோங்க. ஹிப்னோதெரபி தவறானதல்ல. ஹிப்னோதெரபி மூலமா பாஸ்ட் லைஃப் ரெக்ரஷன் மூலமா நம்முடைய ஹிப்னாடிக் ட்ரான்ஸ் அப்படிங்கற ஒரு ஸ்டேட்ல உங்களைப் போகச்சென்று எடுத்துச்சென்று உங்களுடைய கடந்த கால வாழ்க்கையை கம்ப்ளீட் பண்றது. துக்கம் அதிர்ச்சி இதிலிருந்தெல்லாம் கம்ப்ளீட் பண்றது. இது சாத்தியம்.

ஆனா ஒரு முக்கியமான விஷயம் என்னன்னா? அதை செய்யறவரே கம்ப்ளீட்டா நிரந்தரமான நித்ய புரணத்துவத்திலே நிலை பெற்றவரா இருக்கணும். முதல் விஷயம் ஹிப்னாடிஸம் பத்தி மக்களுக்கு நிறைய பயம் இருக்கு. அது தேவையில்லாதது. கவலையேப்படாதீங்க. உங்களை யாருமே ஹிப்னாடைஸ் பண்ணி தவறா உபயோகப்படுத்தவே முடியாது. பல ஆராய்ச்சிகள் தௌிவா சொல்லுது. ஒரு பெண்ணை ஹிப்னாடைஸ் பண்ணி என்ன பண்ணச்சொன்னாலும் செய்வா ஆனா உடையை விளக்கச் சொன்னா செய்யமாட்டாங்க.

அதாவது உங்களது இயல்பான ஒழுக்கத்திலிருந்து யாராலும் உங்களை மாற்றமுடியாது. ஹிப்னாடிஸம் மூலமா அதிகபட்சம் உங்கள் உடல் மன வியாதிகளைத் தீர்க்க முடியுமேத்தவிர அதுக்கு மேல எதுவும் பண்ணமுடியாது. அதே மாதிரி ஒரு ஆணை ஹிப்னாடைஸ் பண்ணி உங்க சொத்தெல்லாம் எழுதிக்கொழுங்கன்னா செய்யமாட்டாரு. அதனால ஹிப்னாடிஸம் பத்தி நீங்க வெச்சிருக்கற கருத்துக்கள் நிறைய தவறான கருத்துக்களை தூக்கியெறிந்து விடுங்கள். நீங்க வெச்சிருக்கற நிறைய கருத்துக்கள் தவறானது.

முதல்ல ஹிப்னாடிஸமே தௌிந்த வாழ்க்கையை வளப்படுத்தக்கூடிய அறிவியல். இரண்டாவது உங்க மேல அந்த பாஸ்ட்லைஃப் ரிக்ரஷன் போன்ற கலைகளை உபயோகித்து உங்களுக்கு உதவி செய்யறவர் அவர் கம்ப்ளீட்டான கம்ப்ளீஸன் புரணத்துவத்தில இல்லாமலிருந்தால் அவருடைய பேட்டர்ன்ஸ் உங்களுக்கு வந்திடும். அப்ப என்ன ஆகும் தொியுமா? யானை குளிக்கப்போய் சேத்தையெல்லாம் வாரி மேல புசிக்கிட்டு வந்திடுச்சாம். அது நடந்திடக்கூடாது அதுதான் முக்கியம். அது நடந்திடக்கூடாது அதுதான் ரொம்ப ரொம்ப ரொம்ப முக்கியம்.

அதனால நல்லாப்புரிஞ்சிக்கங்க..., ஒரு சாதாரண மனிதர் உங்களை ஹிப்னாடிஸ ட்ரான்ஸ் ஸ்டேட்டுக்கு எடுத்திட்டுப்போய் உங்களுடைய கடந்த கால அதிர்ச்சிகளிலிருந்து உங்களை விடுபடுத்தி, பாஸ்ட்லைஃப் ரிக்ரஷன் மூலமா உங்க கடந்த கால வாழ்க்கை சம்பவங்களை முழுமையாக வாழ வெச்சு இதை செய்யறதுக்கும், இங்க நாம செய்யற புரணத்துவ க்ரியைக்கும் பொிய வேறுபாடு இருக்கு. முதல்ல இங்க செய்யற புரணத்துவ க்ரியை தானே கம்ப்ளீஷன்ல எஸ்டாப்ளிஷ் ஆன ஒரு ஞானி ஒரு அவதாரப் புருஷர் உங்களை அந்த நிலைக்குள்ள எடுத்திட்டுப் போறாரு.

அதாவது யார் உங்களை அந்த ட்ரான்ஸ்ககுள்ள எடுத்திட்டுப் போயி அந்த உணர்வுக்குள் எடுத்திட்டுப் போயி உங்களை கம்ப்ளீஷன் பண்ண வைக்கிறாரோ அவர் தானே கம்ப்ளீஷன்ல நிலைத்து இருக்கின்ற சக்தி. கம்ப்ளீஷனுக்கு ஆதாரமா இருக்கற ஒரு சக்தி. எப்படி, நீங்க கேட்கற இந்த டிபரன்ஸ் எப்படின்னா, ஒரு சாதாரணமான ஒருத்தர் ஹிப்னாடிக் ட்ரான்ஸ் மூலமா எங்களை பாஸ்ட் லைஃப்க்கு எடுத்திட்டுப் போறதுக்கும் இங்க நீங்க புரணத்துவ க்ரியைக்கு எடுத்திட்டுப்போறதுக்கும் என்ன சாமி வித்யாசம்? ஒரு சின்ன கதை சொல்லலாம் நிறைய நம்ம தமிழ்நாடு க்ராமங்கள்ள பார்த்தீங்கன்னா பத்தாவது பன்னண்டாவது வரைக்கும் படிச்சவங்க ஏதாவது ஒரு பாப்புலரான டாக்டர் கீழே ஒரு அஞ்சு வருஷம் கம்பவுண்டரா இருந்தா ஒரு தனியா ஒரு போர்டு போட்டு தானே டாக்டர் ஆயிடுவாங்க. ஏன்னா கொஞ்ச நாள்ள தொிஞ்சுப்பாங்க. கால் வலிக்கு கறுப்பு மாத்திர. தலைவலிக்கு பச்சை மாத்திரை. வயித்துவலிக்கு வௌ்ளை மாத்திரை முதுகுவலிக்கு மஞ்ச மாத்திரை. அந்தக் கம்பவுண்டருங்க சில நேரத்துல கொடுக்கற மாத்திரை கரெக்டா வேலை செஞ்சிரும் கூட. ஏன்னா அந்த மருந்து ப்ரொட்யுஸ் பண்ற பார்மசி கம்பெனி மாத்திரை கலரை மாத்தாத வரைக்கும் உங்க வியாதி தீர்ந்திடும். கம்பவுண்டர் கொடுத்த மருந்து சில நேரத்தில வொர்க் அவுட் ஆயிடுதுங்கறதுக்காக கம்பவுண்டர் கிட்டேப் போறது ஸேஃபா. கம்பவுண்டர் கிட்டே போறதுக்கும், ஒரிஜினலா எம்.டி படிச்ச டாக்டர் ்கிட்டே போறதுக்கும் இருக்கற வித்யாசம்தான் யாராவது ஒருத்தர்ட்டே ஹிப்னாடிக் ட்ரான்ஸ்க்கோ பாஸ்ட் லைஃப் ரிக்ரஷனுக்கோ போறதும். இங்க புரணத்துவ க்ரியைக்கு வரதுக்குமான வித்யாசம். இங்க ரெண்டு விஷயம் நடக்குது. ஒண்ணு அந்தப் புரணத்துவத்துக்குள்ள நீங்க போறதுக்காக அந்த எனர்ஜி ஸ்பேசை நேரடியா ஒரு ஞான புருஷனுடைய சாந்நித்யத்தில், ஒரு ஞானியினுடைய சாந்நித்யத்திற்குள்ள நடக்கறதால அந்த ஸ்பேஸ்குள்ள ஈஸியா போயிடுவீங்க. கம்ப்ளீஷன் நடக்க ஆரம்பிச்சிடும். அது ஒண்ணு. இரண்டாவது உங்களால கண்டுபிடிக்க முடியாத சில ஆழமான உணர்ச்சி முடிச்சிக்கள் இன்கம்ப்ளீஷன்ஸ் கடந்த காலத்திலருந்து எடுத்து வந்தது இதெல்லாம் இருந்தால் கூட ஞானிகளுடைய சாந்நித்யத்தால் அது அறுந்து கரைந்து போகிறது. இதுக்கு அடுத்து உங்களையே அந்த நிலைக்குள்ள எடுத்திட்டுப் போறதுக்குப் பயிற்றுவிக்கறேன். நீங்களே அதுக்குள்ள போறதுக்கு பழக ஆரம்பிக்கறீங்க. அப்ப என்ன ஆகுதுன்னா வீட்டுக்குப் போன பிறகும் நீங்க யாரோ ஒருத்தரை டிபண்ட் பண்ண வேண்டியிருக்காது. நீங்களே அந்த புரணத்துவ நிலைக்குள்ள போய் கம்ப்ளீஷன் பண்ணிர முடியும்.

அதனால பொிய டிபரன்ஸ் இது. இந்த ஒரே ஒரு விஷயத்தை நினைவு வெச்சிக்கங்க. தலை வலிக்கு பச்சை மாத்திரை. கால்வலிக்கு கறுப்பு மாத்திர. மார் வலிக்கு மஞ்ச மாத்தினை்னு கொடுக்கற கம்பவுண்டர் கிட்டே போலாமா இல்லை எம்.டி படிச்ச டாக்டர் கிட்டே போலாமா? சில நேரத்தில எம.்டி படிச்ச டாக்டர் கிட்டேப் போனா கொஞ்ச்ம் டைம் எடுக்கும். . அவரைப் பார்க்க சில நாள் எடுக்கும். அவரைப் பார்க்கறது கஷ்டம். ஏன்னா அவரைப் பார்க்கறதுக்கு நிறைய போ் இருப்பாங்க. என்னக் கஷ்டமாயிருந்தாலும் எதுதான் பாதுகாப்பு? எம்.டி படிச்ச டாக்டர் கிட்டே போனாத்தான் பாதுகாப்பு.

அதனால புரணத்துவத்தை உருவாக்குகின்ற. உங்களுக்குள்ள புரணத்துவத்தை உருவாக்கற ஸ்பேசே புரணத்துவத்தில இருக்கணும். எரிகின்ற விளக்கிலிருந்து தான் இன்னொரு விளக்கை தீப்பிடிக்க முடியும். சுடர் எரியும் விளக்கிலிருந்து தான் இன்னொரு விளக்கிற்கு செல்ல முடியும். முழுமையான கம்ப்ளீஷனும் ஒரு வாழும் ஞானியிடமிருந்துதான் உங்களுடைய ஆத்மாவிற்குள் போக முடியும். உங்களுடைய ஜீவனுக்குள்ள போக முடியும். அதனால நாம இங்க செய்யற புரணத்துவ க்ரியைகளுக்கும் ஹிப்னாடிஸ் ட்ரான்ஸ்னு சொல்ற அந்த முறைக்கும் பாஸ்ட்லைப் ரிக்ரஷன் போன்ற முறைகளுக்கும் மிகப்பொிய வித்யாசமிருக்கு. அந்த வித்யாசம் என்னன்னா? யார் அந்த நுணுக்கங்களை முறைகளை நுட்பங்களை கலைகளை உங்களுக்கு அளிக்கிறார்கள். யாருடைய சாந்நித்யத்தில் அது நடக்கிறது.

சில நேரத்தில ஹிப்னாடிஸ் ட்ரான்ஸ் பண்ற பாஸ்ட் லைப் ரிக்ரஷன் பண்ற டாக்டர்ஸூம் ஓரளவு அந்த கம்ப்ளீஷன் நிலையை அடைஞ்சிருப்பாங்க. அந்த அளவுக்கு மட்டும் உங்களுக்கு கம்ப்ளீஷன் நடக்கும். ஆனா ஒரு ஞானியின் சாந்நித்யத்தில் தான் புரணத்துவமான பூரணத்துவம் ் நடக்கும்.

அடுத்த கேள்வி :

ஜோதிடம் பார்ப்பவர்கள் நம் ஜாதகத்தைப் பார்த்து முன்வினை காரணமாக தோஷங்கள் இருக்கு. இந்த தோஷத்தில் இருந்து நீங்கள் தப்பிக்க வேண்டுமென்றால் யாகம் வளர்க்க வேண்டும் என்று சொல்கிறார்கள். இவ்வாறு பணம் தந்து நமது தோஷத்திலிருந்து வௌிவருவது தப்பிப்பது சரியா? இல்லை செய்த பாவத்திற்கு பகவான் கொடுக்கும் தண்டனையை ஏற்பது சரியா? எனக்குப் புரியவில்லை. தௌிவுபடுத்துங்கள் சாமிஜி.

கட்டாயமா கடவுள் தண்டனை குடுக்கல்லாம் காத்தில்லீங்கய்யா. கடவுள் ஆனந்தத்தை மட்டும்தான் குடுக்கறாரு. தண்டனை நீங்களே உங்களுக்குக் கொடுத்துக்கறது. தண்டனை நான் குடுக்கறது இல்லீங்கய்யா. நான் டிபார்ட்மெ்ணட்டை குடுக்கறது. திருட்டு நீங்க பண்றது. கடவுள் புமியைக் குடுக்கறாரு. அதுல ரௌடியிசம் பண்றது மனிதர்கள். கடவுள் வாழ்க்கையைக் குடுக்கறாரு. அதுல தீவிரவாதம் பண்றது. மனிதர்கள். நாம நல்லாப் புரிஞ்சுக்கணும். இந்தக் கேள்வியில நிறைய தவறான கருத்துக்கள் இருக்கு. இன்கம்ப்ளீஷன்ஸ் இருக்கு.

முதல் விஷயம் பகவான் கடவுள் தண்டனை குடுக்கறதில்லை. இரண்டாவது விஷயம். ஜோதிடம் பார்க்கறவங்க ஜாதகம் பார்க்கறவங்க உங்க ஜாதகத்தில் முன்வினை காரணமா தோஷமிருக்கு. அந்த தோஷம் காரணமாக நீங்க தப்பிக்கணும்னா யாகம் வளர்க்கணும் அப்படின்னு சொல்றாங்க. இவ்வாறு பணம் தந்து தோஷத்திலருந்து வௌிவருவது சரியான்னு கேட்கறீங்க.

நல்லாப் புரிஞ்சுக்கங்க. பணம் கொடுத்து நீங்க தோஷத்திலருந்து வௌில வந்திட முடியாது. நீங்களே அங்க போய் உட்கார்ந்து அந்த யாகத்திலே முழுமையாக இன்டெக்ரிட்டியோட கலந்துகிட்டாகணும். நுல்லாப் புரிஞ்சுக்கங்க. இந்த யாகம் செய்கிறவர்களுடைய இன்டெக்ரிட்டி அவர்களுடைய வாக்சித்தி. முதல்ல அவங்களுக்கு அது இருக்கணும். அதனால தான் பார்த்தீங்கன்னா நம்ம குருகுலத்து குழந்தைகளை உட்கார வெச்சுத்தான் மந்திரங்களையே சாண்ட் பண்ண வைக்கிறேன். யாராவது இப்ப ரீசண்டா ஆசிரமத்தில நடக்கற ஹோமங்கள்ளாம் பார்த்தீங்கன்னா தொியும். காரணம் என்னன்னா நம்முடைய குழந்தைகள் நல்லாப் புரிஞ்சுக்கங்க. ஒரு நேஷனல் சேனல்ல பேசிக்கிட்டிருக்கேன். அதனால பொறுப்போடப் பேசறேன். பத்தே நிமிடங்களுக்குள் என்னுடைய குருகுல குழந்தைகளால் மழையை வரவழைக்கவும் நிறுத்தவும் முடியும். இது ஒரு முறை இரு முறை அல்ல. குறைஞ்சது ஒரு இருபது இருபத்தஞ்சு முறை நானும் சோதிச்சுப் பார்த்திட்டேன். குழந்தைங்க நைவேத்தியத்தை தூக்கிட்டுப் போகும்போதுதான் வேணும்னே பண்ணி மழையை வரவழைப்பேன். என்னப் பண்ணுதுங்கன்னு பார்க்கலாம். என்னப் பண்ணும்னே தொியாது. நான் எய்தற அஸ்திரத்துக்கு மாற்று அஸ்திரம் எய்திட்டுப் போயிடுவாங்க. அவங்க கோவிலுக்கு நைவேத்தியம் எடுத்திட்டுப் போறதுக்குள்ள மழை நின்னுப்போயிடும். இன்டெக்ரிட்டியோட சக்தி. அவங்களோட விளையாட்டுத்தனமா பரிசோதிச்சுப் பார்த்ததில அதுவும் நமது லீலைகளில் ஒன்றுன்றா மாதிரி இல்ல இந்தக் குழந்தைகளோட இன்டெக்ரிட்டியோட பவர் வேணும்னா மழையை வரவழைக்கறதும், வேணான்னா போக வைக்கறதும் அவங்களால அந்த இயற்கையோட சக்திகளோட விளையாட முடியறதை தௌிவா ஒரு முறையல்ல. இரு முறையல்ல. பலமுறை நிரூபித்திருக்கிறேன். நமக்குள்ள அந்த இன்டெக்ரிட்டி ஆழமா இருந்ததுன்னா இயற்கை சக்தி நம்மளோட இனிமையா இயங்கும். இதே மாதிரி நம்ம குருகுலத்துக் குழந்தைங்க குருகுலத்தில பொிய ரோஜாத்தோட்டம் இருக்கு. இந்தக் குழந்தைகளுக்கு என்ன வேலைன்னா தினந்தோறும் காலைல அந்த சில நிமிடங்களாவது அந்த ரோஜாச்செடிகளோட உட்கார்ந்து பேசி தானாகவே அந்த ரோஜாச்செடி தனது முட்களை தூக்கி எறிந்துவிட வேண்டும். நாம அந்த செடியைத் தொடவே கூடாது. முள்ளைமல்லாம் எடுத்துவிட்டிடறதில்லை. நாம தொடக்கூடாது தானா அந்தச்செடி முட்களை விட்டிரணும். வெற்றிகரமாக பல மாணவர்கள் இதை செய்து முடித்திருக்கிறார்கள்.

பல குருகுலக் குழந்தைகள் அவர்களுடைய அந்த ரோஜாச்செடில அந்த முள் தானாகவே விழுந்து போயிருக்கிறது. அந்த மாதிரியான இன்டெக்ரிட்டியும், வாக்சித்தியும் உடையவர்கள் ஹோமம் பண்ணா யாகம் பண்ணா யக்ஞம் பண்ணா மட்டும்தான் அந்த சக்தி உங்களுக்கு நேரடியாக உபயோகமாகும். நீங்க அங்க உட்கார்ந்து கலந்துகிட்டா மட்டும் தான் உங்களுடைய அந்த தோஷங்கறது வேற ஒண்ணுமில்லைங்கய்யா. உங்களுக்குள்ள இருக்கற சில இன்-கம்ப்ளீஷன்ஸ். நாகதோஷங்கறது ஒண்ணுமில்லை. பாம்பு பற்றிய பயத்தோடு உங்களுக்கிருக்கிற இன்கம்ப்ளீஷன்ஸ். ஆந்த இன்கம்ப்ளீஷன் கம்ப்ளீஷன் ஆச்சுன்னா அவ்வளதான் உங்க நாகதோஷம் போச்சு. ராகு தோஷம்னா வேற ஒண்ணுமில்லை. அந்த அரகன்ஸ். அடமண்ட்டா இருப்பீங்க பாருங்க.

உங்க அறிவுக்கு எட்டி இது சரியில்லைன்னு தொியும். ஆனா உங்க அடமண்ட்ல என்னப் பண்ணுவீங்க செஞ்சேத்தீருவேன். பாரு நானாச்சு. நீயாச்சு. பார்த்திடறேன் ஒரு கை. அந்த அடமண்ட்டா இருக்கறதுதான் இராகுதோஷம். அந்த அடமன்சியோட இருக்கற இன்கம்ப்ளீஷன்ஸ் தான் இராகுதோஷம். அதை கம்ப்ளீட் பண்ணீங்கன்னா அந்த இராகுதோஷம் போயிடும். உங்களுக்குள்ள இருக்கற இன்கம்ப்ளீஷன்ஸ் தான் வேற வேற தோஷங்கள். அதனால ஒரு சரியான இன்டெக்ரிட்டி இருக்கற ஒரு ஆச்சாரியர் உட்கார்ந்து யாகம் பண்ணாங்க ஹோமம் பண்ணாங்கன்னா நேச்சுரலா உங்களுக்குள்ள இருக்கற இன்கம்ப்ளீஷன்ஸ் எல்லாம் கரைஞ்சு போயிரும். அந்த மாதிரி யாகம் பண்ணி இன்கம்ப்ளீஷன்ஸ் கரையும்பொழுதுதான் நீங்க தோஷங்கள்ளருந்து வௌில வர முடியும். யாகம் யக்ஞம் இதனுடைய தத்துவத்தையும் பணம் வந்து அதில ஒரு இன்சிடெண்ட். அந்த காலத்தில ப்ராம்மணர்களுக்கு அரசர்கள் எல்லா உதவியும் செய்து பார்த்துகிட்டாங்க. அரசர்கள் இப்ப யாரு. நீங்கள் தான். ஏன்னா குடியாட்சி. மக்களாட்சி. அதனால நீங்க அவங்களுக்கு குடுத்துப் பார்த்துக்க வேண்டியிருக்கு. அதனால தானே தவிர. புணம் சார்ந்து இந்த தோஷம் விலகுவதில்லை. பணம் கொடுக்கறதனாலோ கொடுக்காததனாலோ தோஷம் விலகுவதில்லை. செய்கின்ற நபர்களின் இன்டெக்ரிட்டி சார்ந்துதான் தோஷம் விலகுது. அதனால் யார் உங்களுக்காக யாகங்கள் ஹோமங்கள் தோஷ பரிகாரங்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு இன்டெக்ரிட்டியோட பலமிருக்கான்னு செக் பண்ணிப் பார்த்திடு்ங்க.

வள்ளுவர் சொல்வார் : தெய்வம் தொழாள் தொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை இறைவனை வழிபடாவிட்டலும் கூட தன் கணவன் அப்படிங்கற ஒரு கமிட்மெண்ட் இருக்கு பாருங்க. அந்த கமிட்மெண்ட்க்கு இன்டெக்ரிட்டியோட இருந்தாக்கூட போதும். அவர்கள் பெய்யெனப் பெய்யும் மழை. இன்டெக்ரிட்டி இருந்தா போதும். தெய்வம் தொழாவிட்டாலும் கணவனைத் தொழுகின்றவளயிருந்தால் கூட அந்த இன்டெக்ரிட்டியோட இருந்தா பெய்யெனப் பெய்யும் மழை. ஆம்பளைங்க இதை யுஸ் பண்ணி பெண்களை அடிமையாக்கலாம்னு நினைக்காதீங்க. சில நேரத்தில ஆண்கள் நினைக்கறதுண்டு பாரு நீ என்னை மட்டும் வழிபட்டாப் போதும் நீங்களும் அந்த ஸ்டேண்ட்ல இருக்கணும். அப்ப மட்டும்தான். இது கணவன். கணவனை வழிபடறது அப்படிங்கறதை விட இந்த வார்த்தைக்கு உண்மையான விளக்கம் என்னவாயிருக்க முடியும்னா கணவன்ங்கற அந்த உறவுக்கு கொடுத்த கமிட்மெண்ட்டுக்கு இன்டெக்ரிட்டியா இருக்கறது. அப்படின்னு தான் சொல்லணுமேத் தவிர வெறுமனே கணவனுக்கு கணவன் மீது இருக்கிற டெடிகேஷன் அப்படிங்கற பொருளை முழுமையா கொடுக்க முடியாதுன்னு நினைக்கறேன். இன்டெக்ரிட்டி. அந்த இன்டெக்ரிட்டியினுடைய பலத்தினால மட்டும்தான் உங்களுடைய இன்கம்ப்ளீஷன்ஸை கரைக்க முடியும். கரைப்பது சாத்தியம்.

அடுத்த கேள்வி : சந்யாச வாழ்க்கையில் என்ன தனித்துவம் இருக்கிறது? நான் சந்யாசம் எடுக்கவேண்டுமென்று நினைக்கின்றேன். இன்னொரு பக்கம் ஏன் தனியாக வாழ்ந்து கஷ்டப்பட வேண்டும் என்றும் தோன்றுகிறது. இல்லற வாழ்க்கையில் இருந்து கொண்டே தத்துவங்களைப் பயிற்சி செய்துகொண்டு இனிமையாக, நிம்மதியாக நிறைவான வாழ்க்கையை வாழ்ந்துவிட முடியாதா?

பதில் : பொிய கேள்வி. அடுக்கடுக்கான கேள்வி. முதல்ல ஒரு இளைஞரிடமிருந்து வந்திருக்கும் கேள்வி. அந்த வார்த்தை ரொம்ப முக்கியம். ஏன்னா யார் கேட்கறாங்கன்றதைச் சார்ந்து தான் விடை கொடுக்கப்பட வேண்டும். விடை கேள்விக்கல்ல. கேட்பவருக்கு சந்யாச வாழ்க்கையில் என்னத் தனித்துவம் இருக்கிறது? சந்யாசத்தை டிபைன் பண்றேன் கேட்டுக்கோங்க. டெபினிஷன் வாழ்க்கையில் உச்ச சாத்தியக்கூறுகளை உள்ளும் வாங்கி வௌியிலும் வாழ்ந்து தன்னுடைய முழுமைத்தன்மையை புரணத்தன்மையை நிஜத்தில் வௌிப்படுத்துபவர் தான் சந்யாசி.

இப்ப இந்த டிடபனிஷன் சார்ந்து இந்த கேள்விகளுக்கு அடுத்தடுத்து பதில் சொல்லப்போறேன். கேள்வில இருக்கற அடுத்தடுத்த பாகம் பெரும்பாலானவர்கள் தான் கம்ப்ளீஷன்ல இருக்கறதா உள்ள நினைக்கறாங்க. சில நேரத்தில கம்ப்ளீஷனுக்குள்ளேயும் போறாங்க. ஆனா அந்தக் கம்ப்ளீஷன் எப்போ உங்களுக்கும் மத்தவங்களுக்கும் உபயோகமாகும்னா புரணத்துவ நிலை எப்போ உங்களுக்கும் மத்தவங்களுக்கும் உபயோகமாகும்னா நீங்க ஏதாவது ஒரு பொிய பங்களிப்பை உங்களுக்கும் உலகத்துக்கும் செய்யும்பொழுதுதான் அது நிஜமாகும். உங்களுக்கும் உலகத்துக்கும் ஏதாவது ஒரு பொிய பங்களிப்பை அளிக்கும்பொழுதுதான் உங்களுடைய புரணத்துவ நிலை உபயோகப்படுகிறது. நீங்க அந்த புரணத்துவ நிலையிலேயே இருக்க முடியும்.

உங்க வாழ்க்கையில பொிய விஷயங்களை உருவாக்க முடியலைன்னா நீங்க ஏற்கெனவே புரணத்துவ நிலை அடைஞ்சிருந்தாலும் அதை இழந்திடுவீங்க. பொிய விஷயங்களை உருவாக்கும்பொழுதுதான் அந்தப் புரணத்துவ நிலை உங்களுக்குள் மலர்ந்து கொண்டே செல்கிறது. நான் பார்த்திருக்கேன். பல தரம் என்னுடைய அனுபவத்தில பார்த்திருக்கேன். பல போ் வீட்டையெயல்லாம் விட்டிட்டு சந்யாசம் போறதுக்காக ஓடிப்போயிருவாங்க. ஹரித்வார்க்கோ ரிஷிகேஸ்க்கோ காசிக்கோ போயிடுவாங்க. சொத்தெல்லாம் விட்டுட்டு போயிடுவாங்க. ஆனா அங்க போய் பிச்சை எடுக்கற இடத்துக்குப் போய் சண்டை போட்டுட்டு இருப்பாங்க. ஒரு கொடுமையான ஆனால் என் அனுபவத்தில பார்த்த ஒரு நிகழ்ச்சி. சொத்தெல்லாம் விட்டிட்டுப் போயிருவாங்க. ஆனா அங்க போய் அந்த பிச்சை எடுக்கற இடத்தில அவங்களுடைய அந்த கமண்டலம் வெச்சிருக்காங்க பார்த்தீங்களா தண்ணி குடிக்கறதுக்கு அது மேல மாளாத பற்று இருக்கும். அதை உட்கார்ந்து தொடச்சி தொடச்சி கழுவி கழுவி வெப்பாங்க. நல்லாப் புரிஞ்சுக்கங்க. பொிய விஷயங்களை உருவாக்கும்பொழுதுதான் பொிய பங்களி்ப்பை உருவாக்கும்பொழுதுதான் உங்கள் புரணத்துவம் நிரந்தரமானதாக மாறுகின்றது. உங்கள் புரணத்துவம் நிரந்தரமானதாக நிலைபெறுகின்றது.

ஏன் சந்யாசம். சந்யாசத்தின் தனித்துவம் என்ன? யுனிக்னெஸ் என்ன? உண்மையில நீங்க இதை வாழ்ந்தா மட்டும்தான் சொல்லமுடியுங்கய்யா. இப்ப யாராவது உங்க கிட்டே வந்து ஏன் நாம் ஒரு நாட்டோட பிரதமர் ஆகணும் அதிபர் ஆகணும் அப்படின்னு கேட்டா என்ன பதில் சொல்வீங்க? ஆகிப்பார்த்தா தான் தொியும் எந்த அளவுக்கு பவர் இருக்கு. ரெஸ்பான்சிபிளிட்டி இருக்குன்னு ரெண்டுமே புரியும். அதே மாதிரி சந்யாசமும் இந்தப பிரபஞ்சத்துக்கு அதிபராக மாறுதல். உங்களுக்கு அளப்பறிய சக்திகளும் இருக்கும். பொறுப்புகளும் வந்து சேரும். வாழ்க்கையில சக்தி பொறுப்பு இந்த இரண்டுமே ஒண்ணாத்தான் வந்து சேரும். பொறுப்பு மட்டும் வந்து சக்தியில்லாம போகாது. சக்தி மட்டும வந்து பொறுப்பில்லாம போகாது. ரெண்டும் ஒண்ணாத்தான் வரும். நல்லாப் புரிஞ்சுக்கங்க.

ஆனா இந்த பொறுப்பு சக்தி இரண்டும் வரும்பொழுதுதான் வாழ்க்கை விரிவடையத் துவங்கும். நீங்க ஒரு சாதாரண கவுன்சிலரா கூட ஆகலைன்னா ஏன் பிரதமர் ஆகணும்னு உங்களுக்கு புரிய வைக்கறது சாத்தியமில்லை. ஒரு கவுன்சிலராவாவது ஆனீங்கன்னா ஆஹா இது எவ்வளவு பொறுப்பு வருது. எவ்வளவு பவர் வருதுன்னு தொியும். அப்ப என்னப் பண்ணலாம் நீங்க அடுத்தடுத்து யோசிக்க ஆரம்பிப்பீங்க. ஆம் இப்ப ஒரு மேயராகலாம் எம் எல் ஏ ஆகலாம். ஒரு மினிஸ்டர் ஆகலாம். சீஃப் மினிஸ்டா ஆகலாம். இல்லை ப்ரைம் மினிஸ்டா ஆகலாம். ஏதோ ஒரு நிலைல யோசிக்க ஆரம்பிப்பீங்க. அதே மாதிரிதான் உங்களுக்குள்ள கம்ப்ளீஷன் வந்ததுன்னா சந்யாசத்தின் தனித்துவம் என்னன்னு உங்களுக்கு என்னால புரிய வைக்க முடியும். அந்தக் கம்ப்ளீஷன்லயே நிரந்தரமா வாழறதும் அந்தக் கம்ப்ளீஷனை மத்தவங்களுக்கு குடுத்துக்கிட்டேப் போறதும் மத்தவங்களை கம்ப்ளீஷன் மூலமா வளப்படுத்திக்கிட்டேப் போறதும் எவ்வளவு பொிய ஆனந்தம்னு வாழ்ந்தால்தான் தொியும். இந்தக் கேள்வில அடுத்து அந்த இளைஞர் சொல்றார் சந்யாசம் எடுக்க வேண்டுமென்று நினைக்கிறேன். இன்னொரு பக்கம் ஏன் தனியாக வாழ்ந்து கஷ்டப்பட வேண்டுமென்று தோன்றுகிறது. நாங்க தனியாவாங்கய்யா வாழ்ந்திட்டிருக்கிறோம்? உண்மையில பார்த்தீங்கன்னா எங்க வாழ்க்கையில பந்தத்தைக் கொடுக்கிற குறைத்தன்மையைக் கொடுக்கின்ற இன்கம்ப்ளீஷன் சார்ந்த உறவுகள் தான் இல்லை. அதுதான் உண்மை.

அதாவது நீங்க ஒரு குறைத்தன்மைல இருக்கறதா நினைச்சா தான் இன்னொருத்தர்ட்டேருந்து காதலோ காமமோ தேவைப்படும். அந்த மாதிரி குறைத்தன்மையில் இருந்து கொண்டு எதிர்பார்க்கின்ற உறவுகள் தான் எங்க வாழ்க்கையில இல்லை. நிறைத்தன்மையில தான் இருந்து கொண்டு நிறைத்தன்மையை எல்லோருக்கம் உருவாக்குகின்ற இனிமையான கம்ப்ளீட் பண்ற ஃபுல்ஃபில் பண்ற பல உறவுகள் இருக்குங்கய்யா. ஒரு பொிய கொடுமை என்னன்னா இந்த வெஸ்டர்னைசேஷன் மேலை நாட்டு மோகத்தாக்குதல்னால நம்ம நாட்டிலேயுமே கூட இளைஞர்கள் இந்த ஜெனரேஷன் இளைஞர்கள் காதலனோ அல்லது காதலியோ மட்டும் தான் வாழ்க்கையோட முக்கியமான பொிய உறவுன்னு நினைக்க ஆரம்பிச்சிட்டோம். ஒரு பொிய முட்டாள்தனங்கய்யா. நம்முடைய ஒரிஜினலான பாரத கலாச்சாரத்திலே மனைவி தவிர மற்ற எல்லாப் பெண்களுமே தாய் தங்கை தமக்கை. மனைவியும் கூட கொஞ்ச நாளுக்குப்பிறகு மகள். ஆனா மேலைநாட்டுக் கலாச்சாரத்தில தாய் தவிர மீதி எல்லாமே கோ்ள் ப்ரெண்டுதான். அதான் பொிய கொடுமை. நாமளும் இப்ப என்ன ஆனோம். அந்த மோல்ட் அந்த மென்ட்டல் செட்டப்பை நம்ப ஆரம்பிச்சிட்டோம். அந்த மென்ட்டல் செட்டப்பை நம்ப ஆரம்பிச்சதனால இந்தக் காதலன் காதலி கணவன் மனைவி ஒரு கொடுமை என்னன்னா சிட்டில ஸ்கூல்ஸ்ல 15 வயசு பசங்கள்ளாம் கூட கோ்ள் ப்ரெண்டு அப்படிங்கறது வாழ்க்கையோட இம்பார்ட்டென்ட் பாகமா நினைக்கறாங்க. நம்ம செலிப்ரட்டிஸூம் இந்த மூடத்தனத்தையே பரப்பிட்டிருக்காங்க. இப்ப நானே தமிழ்ல ரியாலிட்டி ஷோஸ் பண்றதனால நித்ய தர்மம்னு ஒரு ஷோ பண்ணிட்டிருப்பேன் தந்தி டி..வி யில பார்த்திட்டிருப்பீங்க. அதனால இந்த மத்தவங்க நடத்தற ஷோஸ் எல்லாம் உட்கார்ந்து பார்க்கறேன். என்னதான் சொல்லவராங்கன்னு.

எவ்வளோ ஒரு பொிய மனித உணர்வுக்கு ஒரு டேமேஜை உண்டு பண்ணிடறாங்க. இந்த செலிபிரிட்டிஸ்ஸோட ஷோஸ் அவங்களுடைய இன்கம்ப்ளீஷனை வாமிட் பண்ணி அதாவது கோ்ள் ப்ரெண்டோ பாய் ப்ரெண்டோ வாழ்க்கையோட ஒரு இம்பார்ட்டண்ட்டான பாகம் செல்ஃபோன் மாதிரி ஒரு லக்ஸூரி தேவை கூட இல்லை. துணி மாதிரியான ஒரு அடிப்படைத் தேவைங்கறா மாதிரி மாத்திவிட்டாங்க. எப்படி உடம்புக்கு துணி ஒரு அடிப்படையான உடல்ரீதியான தேவையோ, அந்த மாதிரி இமோஷனலா உணர்வுரீதியா கோ்ள் ப்ரெண்டோ பாய் ப்ரெண்டோ வாழ்க்கையோட ஒரு அடிப்படைத்தேவைங்கறா மாதிரி டீச் பண்ணிவிட்டாங்க. கொடுமை. இன்கம்ப்ளீஷன் ரீசன்ட்டா ஒரு ஷோ பார்த்திட்டிருந்தேன் அதில ஒரு செலிபிரிட்டி ரொம்ப வேகமா சொல்றாரு தன்னுடைய மூன்றாவது மனைவியைப் பார்த்து சொல்றாரு இந்தம்மா என்னைக் கம்ப்ளீட் பண்ணுதுன்னு. எனக்கு ஒண்ணுமே புரியலை. உண்மையிலேயே ஒண்ணுமே புரியலை. உங்களுக்குள்ள இன்கம்ப்ளீஷன் இருந்தா அதை யாருமே கம்ப்ளீட் பண்ண முடியாது. ஏன்னா நான் நல்லாப் பார்த்தேன் அந்த அம்மா பாவம் அது இன்னொரு இன்கம்ப்ளீஷன்ல உட்கார்ந்திட்டிருக்கு. நான் நினைச்சேன் அந்தம்மாவே இவ்வளவு இன்கம்ப்ளீஷன்ல இருக்கும்போது இவரை எங்க கம்ப்ளீட் பண்றது. இது ஒரு ராங்கான போலித்தனமான நம்பிக்கை. மித். குறைநத்தன்மைல இருக்கறதுனால தேடுதல் தேவையில இருக்கறதால ஏற்படுத்திக்கற எல்லா உறவுமே மேலும் மேலும் உங்களுக்கு காயத்தைத்தான் உருவாக்கும் இன்கம்ப்ளீஷன்ஸை தான் உருவாக்வுமே தவிர சத்தியமா கம்ப்ளீஷனைக் கொடுக்காது. இது ஒரு ஆழமான உண்மை தொிஞ்சுக்கோங்க. நீங்க திருமணம் செஞ்சிக்கங்க வேண்டாம்னு கூட நான் சொல்லவரலை. செஞ்சிக்கறதும் செஞ்சிக்காததும் உங்க விருப்பம். ஆனா திருமணம் செஞ்சிக்கற முடிவெடுத்தாலும் வேண்டாங்கற முடிவெடுத்தாலும் கம்ப்ளீஷன்ல இருந்து எடுங்க.

முக்கியமான ஒண்ணு என்னன்னா உங்களுடைய லஸ்ட் பேட்டர்ன் காம எண்ணப்பதிவு வந்து ரூட் பேட்டனா இருக்கவே இருக்காது. காமம் வந்து ஏழு வயசுக்கு பிறகு தான் வர ஆரம்பிக்கும். அந்த ரூட் பேட்டன் ஏழு வயசுக்கு முன்னாடியே வந்திடும். வேற வேற சிக்கலான ரூட் பேட்டனை சார்ந்து தான் காமம் வரும். ஆழ்ந்து உங்களுடைய காமத்தை அனலைஸ் பண்ணிப் பார்த்தீங்கன்னா நீங்க ரிஜக்ட் பண்ணப்பட்டிருப்பீங்க தோல்வி ரிஜக்டானது அன்பில்லாதது அந்த பேட்டர்ன்ஸ் எல்லாம் சுத்தி சுழ்ந்து பண்டில் ஆகி அதிலருந்து தான் இந்த காமங்கற பேட்டர்ன் உருவாகும். இந்த ரூஃப் கார்டன் மாதிரி. ரூஃப்ல இருக்கற மணல்லயோ தொட்டில்லயோ வேரோடி பொங்கறா செடி மாதிரி தான் லஸ்ட் பேட்டர்ன்.

ரூட் பேட்டர்ன்ங்கறது தரையிலேயே இருக்கற வோ் மாதிரி. லஸ்ட் பேட்டர்ன் ரூஃப் கார்டன் மாதிரி. எல்லா லஸ்ட் பேட்டர்ன் ரூஃப் கார்டன் மாதி தான். இது ஒரு பொிய நல்ல செய்தி உங்களுக்கு. ஏன்னா மத்த பேட்டர்ன்ஸ் எல்லாம் கம்ப்ளீட் பண்ண ஆரம்பிச்சீங்கன்னாலே இந்த ஆழமான லஸ்ட் பேட்டர்ன் கரைஞ்சு போயிடும். லஸ்ட் பேட்டனோட கம்ப்ளீட் பண்ணிட்டு அதுக்குப்பிறகு நீங்க திருமணம் பண்ணிக்கலாம்னு முடிவெடுத்தாக்கூட அது என்ரிச்சிங் டெசிஷனா தான் இருக்கும். வளப்படுத்துகிற முடிவா தான் இருக்கும். மஹாதேவரைப் பாருங்க. சிவனைப் பாருங்க. காமனை எரிச்சிட்டு தான் பார்வதியைக் கல்யாணம் பண்ணிக்கறாரு. காமனை எரித்துவிட்டு லஸ்ட் பேட்டனை கம்ப்ளீட் பண்ணிட்டு அப்புறம் பார்வதியை திருமணம் பண்ணிக்கறாரு. அதனால தான் அது என்ரிச்சிங் டெசிஷனா இருக்கு. வளப்படுத்தும் முடிவாக இருக்கின்றது.

காமம்ங்கற ஒரு இன்கம்ப்ளீஷனைச் சார்ந்து நீங்க திருமணம் பண்ணிக்கறதுன்னு முடிவெடுத்தாலும் கட்டாயமா அது மேலும் மேலும் உங்களுக்குள்ள அந்த புண்ணைக் கிளறிவிடறா மாதிரி தான் இருக்கும். ஒரு புண்ணை சொறிஞ்சா அந்தப் புண் ஆறுமா? ஆறாது. அந்த லஸ்ட் பேட்டர்னை காமங்கற மன அமைப்பை பேட்டர்னை கம்ப்ளீட் பண்ணிட்டு அதுக்குப்பிறகு நீங்க திருமணம் செய்து கொண்டாலும் வாழ்க்கை வளமாகும். ஆனந்தமாயிருக்கும். மீனாட்சி சுந்தரேஸ்வரர் மாதிரி வாழ்வீங்க. ஆனா அந்தக் கம்ப்ளீஷன் நடக்காம வாழ்க்கையில எந்த முடிவெடுத்தீங்கன்னாலும் திருமண முடிவெடுத்தாலும் சரி. சந்யாச முடிவெடுத்தாலும் சரி வாழ்க்கை நரகமாத்தான் இருக்கும்.

அந்த கம்ப்ளீஷன் நடந்த பிறகு திருமண முடிவெடுத்தாலும் சரி சந்யாச முடிவெடுத்தாலும் சரி வாழ்க்கை இனிமையா இருக்கும். நீங்க கேட்கற இந்தக் கேள்வி நான் ஏன் தனியாக வாழ்ந்து கஷ்டப்பட வேண்டுமென்றும் தோன்றுகிறது. ஆக்சுவலா நீங்க தனியா வாழ்ந்து கஷ்டப்படணும்னு நினைச்சிங்கன்னா கல்யாணம் பண்ணிக்கோங்க. ஏன்னா தனிக்குடித்தனம் போவீ்ங்க. உங்க பையனை ரெசிடென்ஷியல் ஸ்கூல்ல போடுவீங்க. அவன் வயசானவுடனே உங்களை ஓல்ட் ஏஜ் ஹோம்ல போட்டுருவான். தனியா இருந்து சாகலாம். துனியா இருந்து கஷ்டப்படக்கூடாதுன்னு நினைச்சீங்கன்னா ஒழுங்கா ஆசிரமத்திற்கு வாங்க. வந்து சந்யாசம் எடுத்துக்கோங்க. என்னா நீங்க பல்லாயிரக்கணக்கான பேரை என்ரிச் பண்ணியிருப்பீங்க. வளப்படுத்துவீங்க. ஒரு பொிய சங்கமா இருக்கும். நான் பார்த்திருக்கேன். என்னுடைய வாழ்க்கையில பார்த்திருக்கேன். இராமகிருஷ்ண மடத்தில பார்த்திருக்கேன் ரிடையர்ட சந்யாசிகள் வயதான சந்யாசிகள் மொத்த ஆசிரம்த்திலேயே ஹேப்பியா இருக்கற க்ரூப் அவங்கதான். ஏன்னா அவங்களை சுத்தி ஒரு 20 25 ப்ரம்மசாரிங்க உட்கார்ந்திகிட்டு அவங்களுக்கு பாத சேவை பண்ணிக்கிட்டு காலமுததி விட்டுகிட்டு தண்ணி கொடுத்து சாப்பாடு கொடுத்து இதை சொல்லுங்க சாமி அதை சொல்லுங்க சாமி அவங்களுடைய அந்த காலத்து கதைகள் ஆன்மீக உபதேசங்கள் இதையெல்லாம் கேட்டுக்கிட்டு நான் நினைப்பேன் என்ன அருமையான ஓல்ட் ஏஜ்ப்பா உண்மையில பார்த்தா அந்த வயசான சந்யாசிகளைப் பார்த்து தான் இந்த மாதிரியான ஓல்ட் ஏஜ் வேணும்னா பெட்டர் இந்த மடத்துக்கு போயிடலாம்னு நான் போயிட்டேன்.

ஏன்னா ஒரு மனிதனுடைய வாழ்க்கையை அவன் முழுமையா வாழ்ந்திருக்கானா திருப்தியா வாழ்ந்திருக்கான அப்படிங்கறதுக்கு அளவுகோல் என்னன்னா வாழ்க்கயைினுடைய கடைசி பகுதியில அவன் அனுபவிக்கின்ற அமைதியும் நிம்மதியும் திருப்தியும். நல்லாப் புரிஞ்சுக்கோங்க. குடும்பமே பாதுகாப்புன்னுல்லாம் நினைக்காதீங்க. குடும்பமே எத்தனை பேருக்கு நரகமா மாறியிருக்குன்னு உங்களுக்கு நான் சொல்லவேண்டியதில்லை. உண்மையில பார்த்தா நான் ஏன் தனியா வாழ்ந்து கஷ்டப்படணும்னு உங்களுக்கு தோணினா அந்தக் கஷ்டத்திலருந்து நீங்க விடுபடுத்திக்கறதுக்கான பெஸ்ட் வழி சந்யாசமெடுக்கறதுதான். ஏன்ன ஒரு பொிய சங்கம். இன்னொரு விஷயங்கய்யா. இனிமையான கம்ப்ளீஷனைக் கொடுக்கற ஒரு தாய். கம்ப்ளீஷனைக் கொடுக்கற ஒரு தந்தை. கம்ப்ளீஷனைக் கொடுக்கற ஒரு சகோதரி. கம்ப்ளீஷனைக் கொடுக்கற ஒரு சகோதரன். கம்ப்ளீஷனைக் கொடுக்கற ஒரு நண்பன். இந்த உறவுகளை எல்லாம் உங்க வாழ்க்கையில் நீங்க அனுபவிக்காததனால தான் காதலன் அல்லது காதலிங்கற உறவு கம்ப்ளீஷனைக் கொடுத்திடும்னு நினைக்கறீங்க. கம்ப்ளீஷனைக் கொடுக்கற ஒரு தாய் தந்தை சகோதரன் சகோதரி நட்பு இந்த உறவுகளை அனுபவிச்சுப் பாருங்க. அப்புறம் தொியும். ஏண்டா மனுஷனுங்க வீணாப்போறாங்க. அப்புறம் தான் தொியும்.

உண்மையிலேயே சொல்றேங்கய்யா என்னாலத் தௌிவா பார்க்க முடியுது. புரணத்துவம்னு நம்ம உபநிஷதம் சொல்லுகிற சயின்ஸை மக்களுக்கு அறிமுகப்படுத்திய பிறகு அவர்களுடைய அனுபவமா மாத்தத் துவங்கினப்பிறகு என்னால தௌிவா பார்க்க முடியுது. ரொம்ப சாதாரணமா அடுத்த ஒரு பத்தாண்டுகளுக்குள் குறைந்தபட்சம் பத்துலட்சம் சந்யாசிகள் தியானபீடத்தில உருவாவாங்க. நீங்க பார்ப்பீங்க. நாம செய்ய வேண்டியது என்னன்னா இந்தக் கம்ப்ளீஷனை சார்ந்து உங்க உடலை மனதை இயக்கத் துவங்குங்கள். அப்ப புரிஞ்சுப் போயிடுங்கய்யா. கம்ப்ளீஷன்ல இருந்து கம்ப்ளீஷனை கொடுக்கற புரணத்துவத்தில இருந்து புரணத்துவத்தைக் கொடுக்கற இனிமையான நட்பு சகோதர உறவே உங்க வாழ்க்கையில அவ்வளவு முழுமைத்தன்மையைக் கொடுத்திடும். வேற எந்த உறவுமே தேவைப்படாது. வேற எந்த உறவுமே தேவைன்ற எண்ணமே கூட இருக்காது. வேற ஏதாவது உறவு தேடிச்சின்னா உள்ள கம்ப்ளீஷனோட உள்ள ஒரே ஒரு நட்பு கூட இல்லைன்னு அர்த்தம். நீங்க தனியா வாழ்ந்து ஏன் கஷ்டப்படணும்னு கேட்கறீங்க. அப்புறம் ஏன் கல்யாணம் பண்ணிக்கலாம்னு நினைக்கறீங்க. கல்யாணம் பண்ணிக்கிட்டா தான் ஒரு அட்டைப்பெட்டி மாதிரி அபார்ட்மெண்ட்ல நீங்களும் உங்க மனைவியும் தனியா உட்கார்ந்திட்டிருக்கணும். நீங்க ஆபிஸ் போயிடுவீங்க. இல்லை அந்தம்மா எங்கயாவது போயிடும். திரும்பி வந்து பார்க்கும்பொழுது திருடன் குடுத்தனம் இருந்திருப்பான். மும்பைல்லலாம் பக்கத்து அபார்ட்மெண்ட்ல இருக்கறவங்க செத்துப் போயிட்டா கூட ஆறு மாதம் கழிச்சுதான் கண்டுபிடிக்கறாங்க. உண்மையிலேங்கய்யா.

அடுத்த கேள்வி கேட்கறீங்க இல்லற வாழ்க்கையில் இருந்து கொண்டே தத்துவங்களைப் பயிற்சி செய்து இனிமையாக நிம்மதியாக அமைதியான வாழ்க்கையை வாழ்ந்துவிட முடியாதா?

இந்த கேள்விக்கு நான் ஒரே ஒரு வார்த்தையில தான் பதில் சொல்லணும்னு நினைக்கிறேன். முடிஞ்சா முயற்சி பண்ணிப் பாருங்க. நான் உங்களை டிஸ்கரேஜ் பண்ண விரும்பலை. அதாவது நான் உங்களுடைய தைரியத்தைக் குறைக்க விரும்பலை. உங்களை பலகீனமாக்க விரும்பலை நான். ஜஸ்ட் இந்த வார்த்தை மட்டும் தான் சொல்ல விரும்பறேன். முடிஞ்சா முயற்சி பண்ணிப்பாருங்க. முடியும். முடியாதுன்னு இல்லை. ஆனா ப்ரச்னை என்னன்னா நீங்க கம்ப்ளீஷனுக்கு வந்தவுடனே உடனே பக்கத்தில இருக்கற யாராவது என்னப் பண்ணுவாங்க இன்கம்ப்ளீஷனை இழுத்துவிட்டுடுவாங்க. ஒருவேளை உங்களை சுத்தியிருக்கற உங்களுடைய முக்கியமான உறவுகள் நீங்க இன்டர் ஆக்ட் பண்ற நபர்கள் எல்லாருமே கம்ப்ளீஷன்ல இருந்தா அப்பப் ப்ரச்னையே இல்லை. அப்ப இல்லற வாழ்க்கையே இனிமையா இருக்கும். சந்தேகமேயில்லை. அவங்க எல்லாருமே கம்ப்ளீஷன்ல இருந்தாங்கன்னா அப்ப நீங்க எங்க வாழ்ந்தா என்ன வாழ்க்கை நிறைவா இருக்கும். புரணமாயிருக்கும். அது சாத்தியம். ஆனா உங்களை சுற்றியிருக்கறவங்க எல்லாருமே கம்ப்ளீஷன்ல இருந்து நீங்களும் கம்ப்ளீஷன்ல இருந்து அந்த சுழ்நிலை சாத்தியமான்னு நீங்க தான் யோசிக்கணும்.

இது எப்படின்னா சாமி ! இந்த புமியிலேயே ஒரு சொர்க்கத்தை உருவாக்க முடியாதா? அப்படின்னு நீங்க கேட்டீங்கன்ன நான் சாத்தியம் இல்லைன்னு சொல்ல மாட்டேன். சாத்தியம தான். தேனாலே ஓடுகின்ற காவிரியும், பாலேலே ஓடுகின்ற கங்கையும். பன்னீராலே ஓடும் சரஸ்வதியும் அதன் நடுவிலே மாணிக்கத் தீபத்தாலே ஒரு பொிய மந்தார மலை செய்து அதன் நடுவிலே ஒரு முத்துப் பந்தலாலே ஒரு ஆலயம் செய்து அதன் நடுவிலே உங்களுக்கென்று வைரத்தாலே ஒரு வீடமைத்துக் கொண்டு உங்களை சுற்றி பல்வேறு சேவைகள் செய்வதற்காக முழுநிலையடைந்த பலரும் இருந்து நீங்க வாழ்ந்தா புமில சொர்க்கம் இருக்கும். ஆனா அது சாத்தியமான்னு யார் தான் முடிவு பண்ணணும். நீங்க தான் முடிவு பண்ணணும். ஏன்னா ஒரே ஒரு வார்த்தையில இந்த கேள்விக்கு ஆன்ஸர் பண்ணிடலாம் ஒருவேளை அந்த மாதிரி இல்லற வாழ்க்கையில இருந்துகிட்டே தத்துவங்களைப் பயிற்சி பண்ணி நிம்மதியா நிறைவான வாழ்க்கை வாழ்ந்து விட முடியாதா? அப்படின்ற கேள்விக்கு ஒரு வேள அப்படி வாழ்ந்திட முடியும்னா சந்யாசியான நாங்கள்ளாம் முட்டாளா? நாம் இப்பொழுது நிராஹாரா சம்யமாவிற்குள் நுழைவோம்.

Photos From The Day: