03 ஆகஸ்ட் 2006 நித்யானந்த தெய்வீக கலைப் பல்கலைக்கழகம்
நித்யானந்த தெய்வீக கலைப் பல்கலைக்கழகம்( Nithyananda Sacred Arts University)
வருடம் : 2006
நாள் : 03 ஆகஸ்ட் 2006
நாட்கள் : ஒரு நாள்
நடைபெற்ற திருப்பணி : திருமேனி செய்தல்
நிகழ்வின் பெயர் : ஶீ நித்யானந்தேஸ்வரி பராசக்தி சமேத ஶீ நித்யானந்தேஸ்வர பரமசிவ திருமேனிகளின் உருவாக்கம்.
நடைபெற்ற இடம் : நித்யானந்தா தெய்வீக கலைப் பல்கலைக்கழகம் - பட்டறை - கும்பகோணம்
நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் : நித்யானந்த தெய்வீக கலைப் பல்கலைக்கழகம்
திருப்பணி நிகழ்த்தியவர் : இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள்
பயனடைந்தவர்களின் எண்ணிக்கை : கோடிக்கணக்கான பக்தர்கள்
நிகழ்வின் விவரனை : இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் நித்யானந்த தெய்வீக கலைப் பல்கலைக்கழகத்தின் மூலம் மாபெரும் பங்களிப்பான திருமேனி செய்தலை தாமே முன்னிற்று நிகழ்த்தினார். கும்பகோணத்தில் உள்ள பட்டறையில் உருவாக்கம் நிகழந்து கொண்டிருந்த ஶீ நித்யானந்தேஸ்வரி பராசக்தி சமேத ஶீ நித்யானந்தேஸ்வர பரமசிவ திருமேனிகளை காணச் சென்றார். ஔிரும் நிறத்தில் மெழுகால் வடிவமைப்பு செய்யப்பட்ட திருமேனிகளை பார்வையிட்டார். ஒவ்வொரு அளவிலும் சரியாக உள்ளதாக என்பதை சரிபார்த்தார். அதனை வடிவமைப்பு செய்த ஸ்தபதிகளுடன் ஆலோசனை நிகழ்த்தினார். அங்கு வடிவமைப்பு செய்யப்பட்ட பிற திருமேனிகளையும் பார்வையிட்டார். உலோகம் உருக்கி வார்க்கப்படுவதற்கு முன் பகவான் அவர்கள் தாமே சிரத்தையுடன் அனைத்தையும் மேற்பார்வை செய்தார்.
நித்யானந்த தெய்வீக கலைப் பல்கலைக்கழகம்-புகைப்படங்கள்
நித்யானந்த தெய்வீக கலைப் பல்கலைக்கழகம்_சாஸ்திர பிரமாணம்
ஜீவன்முக்த விஞ்ஞானத்தை வாழ்ந்து, பரமசிவனின் சக்திகளை தங்கள் வாழ்வில் வெளிப்படுத்தி, அதே உயர்ந்த சத்தியத்தை கொண்டு மற்றவர்களின் வாழ்வையின் வளப்படுத்தும் தெய்வீக சூழலியல் இந்து கோவில் சார்ந்த சூழலியலில்தான் சாத்தியம்.
இந்த தெய்வீக சூழலியலுக்கு தேவையான அனைத்தையும் - கோவில் கட்டமைப்புகள், விக்ரஹங்கள், விக்ரஹங்களுக்கான வாகனங்கள், கொடிகள், கோவில் நகைகள், வழிபாட்டுப் பொருட்கள், கவசங்கள், விக்ரஹங்களுக்கான புனித ஆயுதங்கள், பிரபாவளிகள், தலைக்கவசங்கள், ரதம், சிம்மாசனங்கள் ஆகியவற்றை கட்டமைக்கும் அறிவியலை பரம்பொருள் பரமசிவனே ஆகம சாஸ்திரங்களில் அருளியுள்ளார்.
இந்து மதத்தில்... விக்ரஹங்கள் வழிபடப்படுவதில்லை. விக்ரஹங்கள் மூலமாக வழிபடுகின்றோம்.
பரமசிவன் அளித்த அனைத்து கல்வி, கட்டிடக்கலை, வாழ்க்கை முறை, திருவிழாக்கள் என அனைத்துமே கோயில் பாரம்பரியத்தையே அடிப்படையாக பெற்றிருந்தது. தூய விழிப்புணர்வு வெளிப்பட்டு பிரத்யேக திருவுருவத்துடன், அர்ச்சாவதாரத்துடன் இணைத்துக் கொண்டு உணரும் பக்தியுணர்வால் அத்தெய்வத்துடன் ஒருமைத்தன்மை அனுபவமாகிறது. பரமசிவன் அளித்த தெய்வீக கலைகளை கற்பதனாலும், தெய்வ திருப்பணிகளை செய்வதன் மூலமாகவும், அதற்கு உதவுவதன் மூலமாகவும் உயிர் விழிப்படையும். அது நம்மை மனித உணர்விலிருந்து விடுப்படுத்தி தெய்வீக உணர்விற்குள் நிலைநிறுத்தும்.
தெய்வ விக்ரஹங்கள் செய்யும் திருப்பணி பற்றி நமது சாஸ்திரங்கள்...
ஶில்பம் ஹாஸ்மின்னாதிகம்யாத் யா யேவம் வேத | யாதேவ ஶில்பாணி |
ஆத்மஸம்ஸ்க்ரு'திர்வாவ ஶில்பாணி ச்சந்தோமயம் வா
யேதைர்யஜமான ஆத்மானம் ஸம்ஸஸ்குருதே ||
சிற்பம் என்பது மனிதர்கள் செய்யும் கலை வேலை, இது இறைவனின் வடிவத்தை உண்மைரூபம் மாறாமல் அப்படியே வடிப்பது. தேர்ந்த கைவினைஞர்கள் தங்கள் உணர்வை வரைமுறைக்குட்பட்ட மனித அறிவின் வரம்பிலிருந்து புனித பாசுரங்கள் மூலம் வரையறுக்கப்பட முடியாத ஞானத்தை அறிகின்றார்கள். தங்கள் உணர்வை திருத்தியமைத்து கொள்வதால் அது தங்கள் வேலையில் செய்யும் தாளத்தையும் திருத்தி அமைக்கிறது.
- ஐத்ரேய உபநிடதம், ரிக் வேதம் ( 6.5.27)
இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் நம்முடைய அனைத்து இந்து தெய்வீக திருப்பணிகளையும் கைலாஸாவில் புனரமைக்கின்றார்.
பகவான் அவர்கள் நித்யானந்த தெய்வீக கலைப் பல்கலைக்கழகம் மூலமாக இந்து மதத்தின் சிற்பக் கலைகள் மற்றும் கைவினைக் கலைகளை பாதுகாக்கவும், புதுப்பிக்கவும், பரப்பவும் செய்கிறார். தெய்வீக கலைகளின் மகிமைகளை உலக மக்கள் உணரச் செய்து அவர்களை வாழச் செய்கிறார். நித்யானந்த தெய்வீக கலைப் பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்படும் இந்த புனிதமான தெய்வீக பொருட்கள் கைலாஸாவின் அனைத்து நித்யானந்தேஸ்வர பரமசிவ தேவாலயங்களுக்கும் அனுப்பப்படுகிறது.
உலகம் முழுவதும் வேத பாரம்பரியத்தை வாழ்வதன் மூலம் மனித குலத்தின் உயிர் மலர்ச்சியை பகவான் நிகழ்த்துகிறார்.
பகவான் அவர்கள் உண்மையான கோயில்கலை அறிவியலை உயிர்ப்பிக்கிறார். அதனுடன் இந்த அரிய கலைகளை உயிரோடு வைத்திருக்கும் ஸ்தபதிகளின் சமூகத்திற்கு புதுவாழ்வையும், வாழ்வாதாரத்தையும் அளிக்கின்றார். இதன்மூலம் உண்மையான கோவில் கட்டிடக்கலை அறிவியலின் தூய்மைத்தன்மையை நிலைநிறுத்துகின்றார்.
நித்யானந்த தெய்வீக கலைப் பல்கலைக்கழகத்தின்கீழ் ஸ்தபதிகள் செய்யும் வேலையின் ஒவ்வொரு படியும், கட்டிடக்கலை அறிவியலின் சாஸ்திரமான ஸ்தாபத்ய வேதம் மற்றும் ஆகமத்தில் கோடிட்டு காட்டியுள்ளபடியும், பாரம்பரியத்தின் தூய்மையைத் தாங்கிப் நிற்கும்படி மிகுந்த பக்தியுடனும், பொறுப்புடனும், கவனத்துடன் அணுகப்படுகிறது.
பகவான் அவர்கள் ஸ்தபதிகள், கோயில் கட்டமைப்பாளர்கள், நூற்றுக்கணக்கான கலைஞர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் வளர்வதற்கான வாய்ப்பையும், வாழ்வாதாரத்தையும், பயிற்சியையும் அளிக்கின்றார். பல தலைமுறைகளாக உயிரோடு இருந்துவந்த இந்த குடும்பங்களின் பாரம்பரிய தொழிலை அவர்கள் தொடர்ந்து செய்வதற்கான பொருளாதார வசதியையும் அளிக்கின்றார். இதன்மூலம் தெய்வீக சூழலியலின் ஆதார அறிவியல் புனரமைக்கப்படுகிறது.