27 ஆகஸ்ட் 2005 பத்திரிகை செய்தி
வெளியீடு
வானம்பாடி - மலேசியா, சிங்கப்பூர்
நிகழ்வு
நிகழ்வின் சாரம் :உன்னைப்பார் வாழ்வு - வாழ்வு வளமாகும்: ஆன்மிக தொடர்
நாள் :27 ஆகஸ்ட் 2005
தலைப்பு : ஜனாதிபதி மாளிகையிலிருந்து தவழ்ந்து வந்த காற்று
"டெல்லியில் உள்ள இந்திய ஜனாதிபதி மாளிகையில்... ஜனாதிபதி டாக்டர் திரு அப்துல் கலாம் அவர்களை சந்தித்து பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் ' கதவைத்திற காற்று வரட்டும்' எனும் புத்தகத்தை அளித்த நிகழ்வு இந்த பகுதியில் வெளியிடப்பட்டது.
கட்டுரையில் இருந்து சில சுவாரசியமான தகவல்கள்... ' ஒரு திங்கட்கிழமை டெல்லிக்கு ஒரு பெருமை. காரணம் பரமஹம்ஸ ஶீ நித்யானந்தர் எழுதிய கதவைத்திற காற்று வரட்டும் என்ற நூலை ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு நித்யானந்தர் வழங்கினார்.
கதவைத்திற காற்று வரட்டும் தொடர்ந்து குமுதத்தில் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் முதல் பாகம் வெளிவந்திருப்பது சிறப்பு. அதை ஜனாதிபதியிடம் வழங்கி சிறப்பிக்க வேண்டும் என்று பக்தர்கள் விரும்ப ஜனாதிபதி - சுவாமிகள் சந்திப்பு நிகழ்ந்தது.
குமுதம் இதழில் வரும் கதவைத்திற காற்று வரட்டும் தொடரை ஜனாதிபதி கலாம் தொடர்ந்து படித்து வருகிறாராம். இத்தொடரில் எழுதப்பட்ட பல தலைப்புகளை சொல்லி நினைவுகூர்ந்து எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்தார். அதுமட்டுமல்ல சுவாமிகளிடம் சில விளக்கங்களையும் கேட்டறிந்தார்.
பக்தி சம்பந்தமான விஷயங்களில் ஜனாதிபதியின் ஆர்வம் வியக்க வைக்கிறது. 'சுவாமிஜியின் சிரிப்பு போல் இந்திய இளைஞர்களும் உற்சாகமாய் சிரிக்க வேண்டும். அதற்கு இளைஞர்களுக்கு தியானம் பயிற்சி கொடுக்கப்பட வேண்டும்' என்று சுவாமிஜியிடம் யோசனை சொன்னார்களாம்."
27 ஆகஸ்ட் 2005
27 ஆகஸ்ட் 2005 -பத்திரிகை செய்தி