Difference between revisions of "December 05 2017"

From Nithyanandapedia
Jump to navigation Jump to search
Line 2: Line 2:
 
Causing Takes Any Cognition to Your Depth
 
Causing Takes Any Cognition to Your Depth
  
==Description==
+
==Narration==
 
 
In this video (5th December 2017), Paramahamsa Nithyananda conducts a special initiation to make any cognition we want as part of our depth and reality.
 
 
 
 
 
==Link to Video 1: ==  
 
  
 +
==Video - Causing Takes Any Cognition to Your Depth ==
 +
In this video (5th December 2017), Paramahamsa Nithyananda conducts a special initiation to make any cognition we want as part of our depth
 
{{#evu:  
 
{{#evu:  
 
 
https://www.youtube.com/watch?v=s0NdhOhKyW8
 
https://www.youtube.com/watch?v=s0NdhOhKyW8
  
 
|alignment=center }}
 
|alignment=center }}
  
 
+
==Audio - Video - Causing Takes Any Cognition to Your Depth==
==Link to Audio 1==
 
 
<div align="center">
 
<div align="center">
 
===  Causing - Takes - Any - Cognition - To - Your - Depth  ===
 
 
 
<soundcloud url="      https://soundcloud.com/nithyananda-radio/2017-12dec-05-causing-takes-any-cognition-to-your-depth?in=nithyananda-radio/sets/2017-list    " />
 
<soundcloud url="      https://soundcloud.com/nithyananda-radio/2017-12dec-05-causing-takes-any-cognition-to-your-depth?in=nithyananda-radio/sets/2017-list    " />
 
 
Line 26: Line 18:
  
  
==Link to Video 2==
+
==Video - காலம்சார்ந்துவாழகற்றுக்கொள்ளுங்கள்==
 
 
 
{{#evu:
 
{{#evu:
 
 
https://www.youtube.com/watch?v=A6Ywr5iC2WY&feature=youtu.be
 
https://www.youtube.com/watch?v=A6Ywr5iC2WY&feature=youtu.be
  
Line 35: Line 25:
  
  
==Link to Audio 2==
+
==Audio - காலம்சார்ந்துவாழகற்றுக்கொள்ளுங்கள்==
<div align="center">
+
<div align="center">
 
===  காலம்சார்ந்துவாழகற்றுக்கொள்ளுங்கள்  ===
 
 
 
<soundcloud url="    https://soundcloud.com/nithyananda-radio/2017-12dec-05?in=nithyananda-radio/sets/2017-list      " />
 
<soundcloud url="    https://soundcloud.com/nithyananda-radio/2017-12dec-05?in=nithyananda-radio/sets/2017-list      " />
 
 
Line 170: Line 157:
  
 
<!-- SCANNER_END_OF_PHOTOS -->
 
<!-- SCANNER_END_OF_PHOTOS -->
==Sakshi Pramana:==
+
==Sakshi Pramana - Sharing about Mahasadashivoham==
 
 
 
<div align="center">
 
<div align="center">
 
 
===Sharing about Mahasadashivoham ===
 
===Sharing about Mahasadashivoham ===
 
 
</div>
 
</div>
 
{{#evu:https://www.youtube.com/watch?v=_EPAm8IiHrs
 
{{#evu:https://www.youtube.com/watch?v=_EPAm8IiHrs

Revision as of 15:59, 7 September 2020

Title

Causing Takes Any Cognition to Your Depth

Narration

Video - Causing Takes Any Cognition to Your Depth

In this video (5th December 2017), Paramahamsa Nithyananda conducts a special initiation to make any cognition we want as part of our depth

Audio - Video - Causing Takes Any Cognition to Your Depth


Video - காலம்சார்ந்துவாழகற்றுக்கொள்ளுங்கள்


Audio - காலம்சார்ந்துவாழகற்றுக்கொள்ளுங்கள்

Transcript in Tamil

உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன்.. இன்றைய சத்-சங்கத்தின் மொத்த சாரத்தையும் ஒரே வரியில் சொல்லிவிடுகிறேன் கேளுங்கள்.. மூன்றே மூன்று வார்த்தைகள்.. தசை நினைவு உயிர் நினைவு உயிர் சக்தி மிக அருமையாக ஔவை பிராட்டியார் - திருவள்ளுவ நாயனாருடைய தமக்கை ஓளவைபிராட்டியார். அணுவுக்கும் அணுவாய், அப்பாலுக்கும் அப்பாலாய், மைக்ரோஸ்கோப்பிக் அண்டு டெலஸ்கோபிக் ஆழ்ந்து கேளுங்கள் மைக்ரோஸ்கோப்பிக் அண்டு டெலஸ்கோபிக், அணுவுக்கும் அணுவாய், அப்பாலுக்கும் அப்பாலாய், அருமையான வார்த்தையை ஔவைபிராட்டியார் விநாயகர் அகவலில் சொல்கிறார். அடுத்து தொடர்ந்து பாடுகின்றார். ’’கனுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி வேடமும் நீரும் விளங்க நிறுத்தி கூடுமெய் தொண்டர் குழாத்துடன் கூட்டி அஞ்சக்கரமும் அங்குசபாசமும் நெஞ்சில் நிலைகொண்ட நீலமேனியும் நான்றவாயும் நால் இருபுயமும் மூன்று கண்ணும் மும்மதச்சுவடும் திறண்ட முப்புரி நூல் திகழ்ஓடி மார்பும் சொற்பதம் கிடந்த துரிய மெய்ஞானம் அற்புதம் கடந்த அற்புதக்களிரே’’ இப்படியே தொடர்ந்து பாடுகிறார். இந்த ஒரு வார்த்தை, இந்த ஒரு சொற்றொடரை புரிந்துகொள்வோம். நம்முடைய தினசரி வாழ்க்கையிலே நாம் செய்கின்ற எல்லா செயல்கள், அது சார்ந்த நினைவு தசைநினைவாக நமக்குள் இருக்கும். மசில் மெமரின்னு ஆங்கிலத்துல சொல்லலாம். காலைல எந்திரிச்சவுடனே எப்படி எந்திரிக்கறீங்க. எப்படி குளிக்கப்போறீங்க. எப்படி பல்விளக்கறீங்க. உங்களுடைய தினசரி நடவடிக்கை எல்லாமே உங்களுடைய உணவு உண்ணுகிற விதம், உணவை ஜீரணிக்கின்ற விதம், விழித்தது முதல் உறங்குவது வரை உங்களுடைய தினசரி செயல்பாடுகள், இந்த செயல்பாடுகள் சார்ந்த நினைவுப்பதிவுகள் தசைநினைவாக உங்களுக்குள் இருக்கும். உங்களைப்பற்றி நீங்கள் வைத்திருக்கின்ற கருத்துக்கள் உயிர் நினைவாக உங்களுக்குள் இருக்கும். உங்களுடைய முயற்சி அது வெற்றி அடையுமா? அடையாதா? உங்கள் வாழ்க்கையின் போக்கு எப்படி இருக்கும், இதைப்பற்றியெல்லாம் நீங்கள் சில கருத்துக்களைக் கோர்த்து வைத்திருப்பீர்கள். உங்களைப்பற்றிய முடிவுகள் உங்களை சுற்றி இருக்கும் நபர்கள் மற்றும் பொருட்களை பற்றிய முடிவுகள் ?

ஆழந்து கேளுங்கள். இந்த உலகம் இயற்கை இதைப்பற்றிய முடிவுகள், இறைவன் இதைப்பற்றிய முடிவு, நாம நம்ம வாழ்க்கையில பல்வேறு அனுபவங்கள் காரணமாக, நம்முடைய சொந்த அனுபவங்கள், மற்றவர்கள் அனுபவங்களைக் கேட்டுக் கொண்டு அறிதல், இதன் காரணங்களால் ஜீவன் நம்மைப்பற்றியும், ஜகத் உலகைப் பற்றியும், ஈஸ்வரன் இறைவனைப் பற்றியும் எடுத்து வைக்கும் முடிவுகள் தான் நம்முடைய உயிர் நினைவாக நமக்குள் இருக்கும். நம்முடைய தினசரி நடவடிக்கைகள் எல்லாம் தசை நினைவிலிருக்கும் மஸில் மெமரிஸ்னு சொல்வோம். நம்முடைய வாழ்க்கையைப் பற்றி எடுத்திருக்கும் முடிவுகளெல்லாம் உயிர் நினைவு. பயோ-மெமரில இருக்கும். ஆழந்து தொிந்து கொள்ளுங்கள். ஒரு ஆழமான பயோ-மெமரி உடைய மனிதன் அதாவது நிறைய முடிவுகளை எடுத்து வைத்திருப்பது. தம்மைப்பற்றியும், உலகைப்பற்றியும், கடவுளைப்பற்றியும் நிறைய முடிவுகளை எடுத்து வைத்திருக்கின்ற மனிதன் வாழ்க்கையில் ஒரு ஆழமான வாழ்க்கையை வாழ்கிறான். நான் நல்லா நான் சொல்றதை ஆழந்து கேளுங்க. நல்ல முடிவுகளை எடுத்த மனிதன்னு நான் சொல்லலை, நிறைய முடிவுகளை எடுத்த மனிதன்னு சொல்றேன். ஏன்னா, அணுவுக்கு அணுவாய் இருக்கின்ற எல்லாப் பொருளைப்பற்றியும், அப்பாலுக்கு அப்பாலாய் இருக்கின்ற எல்லாப் பொருளைப்பற்றியும் அதிக முடிவெடுக்கும்பொழுது சரியான முடிவாக மட்டும்தான் அமையும். ஆ தனால் தான் சொல்றேன் கடவுள் இல்லை எனும் நாத்தீகவாதிகள் தான் மேம்போக்கான வாழ்க்கை வாழ்ந்து மோசமான மரணத்தை அடைகிறார்கள். கடவுள் இருக்கார்னு முடிவுக்கு வந்துரணும்னு சொல்லலை. அது சார்ந்து அதிக முடிவுகளை எடுத்துக்கொண்டே செல்லுதல். அப்ப என்ன ஆகும்னா தேடுதல் உயிரோடு இருக்கும். தேடுதல் உயிரோடு இருக்கும் ஒரு மனிதன் ஒரு ஆழமான வாழ்க்கை வாழுவான். அணுவுக்கும் அணுவாய் இருப்பது தன் சுய-இருப்பு. அப்பாலுக்கு அப்பாலாய் இருப்பது இறைவனின் இருப்பு. இவை இரண்டுக்கும் இடையிலே இருப்பது பிரபஞ்சத்தின், ஜகத்தின் இருப்பு. அணுவுக்கும் அணுவாய், அப்பாலுக்கும் அப்பாலாய், இந்த இரண்டுக்கும் இடையில் இந்த மூன்று இருப்பைப் பற்றியும், மேம்போக்கான நினைவோடு வாழ்பவர்கள் முடிவுகளோடு வாழ்பவர்கள் மிகவும் சுப்பர்ஃபீஷியலான (மேம்போக்கான) அவர்கள் இருந்தும், இறந்தும் அவர்களால் எந்தவிதமான பங்களிப்பும் இல்லாத, இருப்பதும் யாருக்கும் தொியாது இல்லாதிருப்பதும் யாருக்கும் தொியாது. ஆட்டு மந்தைகளைப்போல தனித்துவம் தனி உயிர் விழிப்படையாமலேயே இறந்து போய்விடுகின்றார்கள். மீண்டும் சொல்லுகின்றேன். ஆழந்து கேளுங்கள். அறிமுகப்படுத்தும்பொழுது மூணே மூணு வார்த்தையைத்தான் சொன்னேன். தசை நினைவு, உயிர்நினைவு, உயிர்சக்தி. அணுவுக்கும் அணுவாய், அப்பாலுக்கும் அப்பாலாய், நம்முடைய வாழ்க்கையிலே தினசரி வாழ்க்கை நினைவுகள் எல்லாம் தசை நினைவு. ஓவ்வொரு தினசரி வாழ்க்கை நடவடிக்கையும் நம்மை அணுவுக்கும் அணுவாயும், அப்பாலுக்கும் அப்பாலாயும், இருக்கின்ற பொருளோடு இணைக்கின்ற நினைவாய் இருக்க வேண்டும். சாதாரண பல்துலக்கும் செயல் உணவு உண்ணும் செயல் நீரருந்தும் செயல் இந்த சாதாரண செயல்கள்கூட வாழ்க்கையின் ஆழத்தை நாம் அனுபவிப்பதற்கு வழிகாட்டும் தியானமாக நிகழ முடியும். பலபோ் என்கிட்ட வந்து சொல்றதுண்டு. எனக்கு தியானம் பண்ணவே நேரமில்லை சாமி. தியானம் செய்ய நேரம் தேவையில்லை. காலம்தான் வேண்டும். நேரம் வேறு. காலம் வேறு. நேரம் நாமாய் நியமித்துக் கொண்ட கடிகாரம் சார்ந்தது. காலம் இறைவனின் இருப்பின் இயக்கம் சார்ந்தது. தியானத்திற்கு நேரம் தேவையில்லை. காலம்தான் வேண்டும். ஆழந்து புரிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு நேரமில்லாமல் இருக்கலாம். காலமில்லாமல் நீங்கள் இருக்கவே முடியாது. காலத்தில் தான் உங்கள் இருப்பே இருக்கின்றது. காலத்தில் தான் நீங்கள் விழிக்கிறீர்கள். இருக்கிறீர்கள். உழல்கிறீர்கள், மாய்கிறீர்கள், உறங்குகிறீர்கள். உயிர்ப்பும், உயிர் நினைப்பும், நினைப்பு மறப்பும், மறப்பின் கனப்பும் காலத்தில் தான் நிகழ்கின்றது. உண்மையில் உயர்நிலை அடைவதற்கு உங்களுக்கு நேரம் தேவையில்லை. காலம்தான் தேவை. காலத்தை நேரமாக தரம் குறைப்பதுதான் மனிதன் செய்யும் தனக்குத்தானே செய்துகொள்ளும் மிகப்பொிய துரோகம். காலம் வாழ்க்கை. நேரம் உங்கள் வாழ்க்கை சமூகத்திற்காக குறைக்கப்படும் அல்லது சீரழிக்கப்படும் அலகு. ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள். காலம் உங்கள் வாழ்க்கை. நேரம் சமூகம் உங்களிடமிருந்து எதிர்பார்க்கின்ற ஒன்று. காலத்தை "தன"த்திற்காக நேரமாக மாற்றுகின்றவன் "வைசியன்" காலத்தை "பதவி"க்காக நேரமாக மாற்றுகின்றவன் "ஷத்ரியன்" காலத்தை "காரணமே"தொியாமல் நேரமாக மாற்றி குழப்பத்தில் இருப்பவன் "சுத்திரன்". காலத்தை "நேரமாக" மாற்றாமலே வாழ்வை வாழ்பவன் "பிராம்மணன்" ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள். ஆழந்து கேளுங்கள். வர்ணம் பிறப்புச் சார்ந்தது அல்ல. ஜாதி தான் பிறப்புச் சார்ந்தது. தமிழ்நாட்டில் ஜாதிச்சங்கங்களாக தங்களை வகுத்துக்கொண்டு பிரிந்து கிடக்கின்ற ஜாதிதான் பிறப்புச் சார்ந்தது. வர்ணம் "குணம்" சார்ந்தது. பிறப்புச் சார்ந்தது அல்ல. வைதீகத்தின் வர்ணதர்மம், ஆசிரம தர்மம், பிறப்புச்சார்ந்தது அல்ல. சமூகத்தின் மிக இழிந்த பழக்கமான வேற்றுச் சமயங்களின் புகுத்தலாக இந்து தர்மத்திற்குள் நுழைந்த ஜாதி எனும் கொள்கை தான்பிறப்புச் சார்ந்தது. வர்ணம் என்றுமே பிறப்புச் சார்ந்ததாக இருந்ததில்லை. ஆழ்ந்து கேளுங்கள். காலத்தை நேரமாக ஏன் மாற்றுகிறோம்? எப்பொழுது நம்முடைய நடவடிக்கைகளான தசை நினைவின் சாஃப்ட்வோ் ப்ரொக்ராமிங், மஸில் மெமரியோட ப்ரொக்ராமிங்கும், பயோ-மெமரி உயிர் மெமரியோட ப்ரொக்ராமிங்கும் ட்யுன்ல இல்லைன்னா உங்களைப் பற்றி நீங்கள் வைத்திருக்கும் கருத்தும், உங்கள் நோக்கத்தின் நோக்கும், உங்கள் செயலுக்கும் இடையிலே இடைவௌி ஏற்படுமானால், உங்கள் மீது நீங்களே மரியாதை இழக்கத் துவங்கி, உங்களை நீங்களே மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக உங்கள் காலத்தை நேரமாக மாற்றத் துவங்குகிறீர்கள். ஆழந்து புரிந்துகொள்ளுங்கள். உங்களுக்குள் இறைத்தன்மை இல்லைன்னு நினைச்சீங்கன்னா தினம்தொறும் எந்திரிச்சு இறைவனை தியானம் பண்ணனும்னு முடிவு பண்ணுவீங்க. உங்களுக்கு போதுமான அளவிற்கு செல்லவளம் இல்லைன்னு நம்பினீங்கன்னா தினம்தோறும் எந்திரிச்சு பணத்தை சம்பாரிச்சு ஒரு நாள் பணக்காரணா மாறிடணும்னு நினைப்பீங்க். எது உங்களுக்கு இல்லையென்ற வெறுமையை நீங்கள் உணர்கின்றீர்களோ அதை நோக்கி நீங்கள் உங்கள் வாழ்க்கையை செலவிடத்துவங்குவது தான் காலத்திலிருந்து நேரத்திற்கு நீ்ங்கள் விழும் வீழ்ச்சி. காலத்திலிருந்து நேரத்தில் விழாமல் வாழ்பவன் "சந்யாசி". ஒரு சந்யாசியின் நேரத்திற்கு மதிப்பே கிடையாது. ஏனென்றால் அவன் அதை காலமாகப் பார்க்கின்றான். ஆழ்ந்து கேளுங்கள். உங்களுடைய காலம் உங்களுடைய முதலாளிக்குப் பணம். மேன் ஹவர்ஸ். உங்க மனைவிக்கு பட்டு சேலை. உங்க மகளுக்கு ஸ்கூட்டி. உங்க மகனுக்கு பைக்கு. உங்கப்பாவுக்கு மருந்து மாத்திரை. ஆனா உங்க காலம் உங்களுக்கு வாழ்க்கை. காலம் நேரமாக மாறாமல் வாழ்பவன் சந்யாசி. நன்றாகத் தொிந்து கொள்ளுங்கள். என்னுடைய வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியைச் சொல்லுகின்றேன். என்னுடைய குரு யோகானந்தபுரி என்று அவருடைய பெயர். திருவண்ணாமலையில் வாழ்ந்தார். மிகப்பொிய யோகி. ஊருக்குள் பலபேருக்கு அவரைத் தொியும். மிகப்பொிய யோகி. ஒரு நாள் அந்த சுரிய நமஸ்காரத்தைப் பற்றி ஒரு சில கருத்துக்களைச் சொல்லிக் கொண்டிருந்தார். சுரிய நமஸ்காரம்னா என்னன்னு. பிரபஞ்சத்துக்கே உயிரளிக்கக் கூடிய பரம்பொருளான சுரியனின் சக்தியை உள்வாங்கி நம்முடைய உள்-உறுப்புக்கள் எல்லாம் சுரியனுடைய சக்தியினாலே சுறுசுறுப்படைந்து இயங்குகின்றத் தன்மையைப் பெறுவது தான் சுரிய நமஸ்காரம். சிவத்தை உள்வாங்கி சக்தியை ஏற்றுகின்ற நுட்பம். சிவத்தை உள்வாங்கி சக்தியை ஏற்றிக் கொள்ளுகின்ற நுட்பம். ரொம்ப அருமையாக சொல்லிக் கொண்டிருந்தார். நானும் ஆழ்ந்து கேட்டுக்கொண்டிருந்தேன். பிறகு மறுநாள் காலை சுரிய நமஸ்காரம் பண்ணச்சொன்னார். நானும் பண்ண ஆரம்பிச்சேன். அவர் சொன்ன கருத்துக்கள் என்னுடைய மனதிலே ஆழமாக பதிந்திருந்தன. செய்யத் துவங்கினேன். ஒரு ஒரு மணிநேரத்திற்குப் பிறகு நான் உட்கார்ந்திட்டேன் டயர்ட் ஆகி. அவர் கேட்டாரு. என்ன நான் சொன்னதெல்லாம் புரிஞ்சுதா. சுர்ய நமஸ்காரம் செஞ்சியா அதன் பலன் கிடைத்ததான்னு? இல்லை சாமி ஒரு மணிநேரம் செஞ்சேன். டயர்டா இருக்கு. டெய்லி காலைல ஒரு மணி நேரம் செய்யறேனே அப்படின்னு சொன்னேன். அப்ப சொன்னார் இப்பொழுது தான் உன் காலம் நேரமாக மாறத்துவங்குகிறது. காலம் நேரமாக மாறாமல் இருக்க வேண்டுமென்றால் உயிர் நினைவாக மாறிய ஒரு தௌிவு தசை நினைவாக மாறும்வரை விடாது பழகுதல். நான் சொன்னேன் என்ன சாமி சொல்றீங்க? புரியலையே. அருமையாகச் சொன்னார். சுரியனை நோக்கி இந்த நமஸ்காரத்தைச் செய்தால் அவருடைய சக்தி உயிர்த்தன்மை உள்சென்று நம் உள் உறுப்புக்களை எல்லாம் சக்திமயமாக்கும். இதுதான் சத்தியம். இது உனக்குப் புரிஞ்சுதான்னு கேட்டாரு. ஆமா நல்லா புரிஞ்சது சாமின்னு சொன்னேன். அப்ப நீ சுரிய நமஸ்காரம் பண்ணிட்டிருக்க பண்ணிட்டிருக்க உனக்கு சக்தி ஜாஸ்தியாதானே போயிட்டிருக்கணும்? நான் சொன்னேன் அந்த மாதிரி நடக்கலை சாமி. அதனால தான் நான் நினைக்கிறேன் தினந்தோறும் ப்ராக்டீஸ் பண்ணனும்னு. தப்பு. அந்த அனுபவம் வரும்வரை தொடர்ந்து செய்ன்னார். எப்பொழுது உயிரிலே பதிந்துவிட்ட அறிவு, நினைவு தசையின் நினைவாக, தினசரி அனுபவமாக மாறவில்லையோ அப்பொழுதுதான் நாம் நம் காலத்தை நேரமாக மாற்றி நம் வாழ்க்கையின் தரத்தைக் குறைக்கிறோம். காலம் நேரமா மாறக்கூடாது. இந்த உணர்வுப்புரிதல் அனுபவமாய் மாறும் வரை பயோ மெமரில புரிஞ்ச ஒரு சத்தியம் மஸில் மெமரியோட ரியாலிட்டியா மாற்ற வரைக்கும் உன் உயிர்ப்புரிவு, உயிர்ப்புரிவு தசைப்புரிவாக மாறுகின்றவரை தொடர்ந்து செய். முதல்ல கொஞ்சம் கஷ்டமாத்தான் இருந்தது. சுரியன் உதிக்கும்பொழுது ஆரம்பிச்சேன். ஒரு இரண்டு மணி நேரம் ஆனவுடனே கஷ்டமாய்த்தான் இருந்தது. ஆனா குருவாக்கு. தொடர்ந்து செய்யும்பொழுது ஒரு நாலு மணி நேரத்திற்குப் பிறகு இந்தத் தயக்கம், சோர்வு எல்லாம் மறந்திருச்சு. சோர்வுன்னா என்னன்னா வேற ஒண்ணுமேயில்லை. நம்ம உடம்பு நம்பளை டெம்ப்ட் பண்ணிப் பார்க்கும். எப்படியாவது இவனை சாய்ச்சு படுக்கையில கிடத்திரலாமான்னு. மாட்டோம். சாய மாட்டோம்னு தொிஞ்சா போயிரும். அவ்வளவுதான். சாய்க்க இயலுமோ, நமை மாய்க்க இயலுமோ என முயற்சிக்கும் மன மாயையே சோர்வு. சாய்க்க முடியாதுன்னு தொிஞ்சிட்டா போயிரும். அவ்வளவுதான். அன்னிக்கு சுரிய உதயத்திலிருந்து சுரிய அஸ்தமனம் வரை சுரிய நமஸ்காரம் செய்தேன். ஆழ்ந்து தொிந்து கொள்ளுங்கள். அன்று புரிந்தது. காலத்தை நேரமாக மாற்றுவது நம் மனச்சோர்வும். உடல் சோர்வும்தான். வாழ்க்கையிலே நமக்குப் புரிந்த ஒரு கருத்து நிஜமாக மாறுவதைத் தள்ளிப்போடுவதுதான் காலத்தை நேரமாக்கின்ற, நேரமாக மாற்றுகின்ற ஒரு மிகப்பொிய கொடுமை. நல்லாப்புரிஞ்சுக்கங்க. காலம் இருப்புச் சார்ந்தது. நேரம் சமூகம் சார்ந்தது. நீங்க எப்ப உங்களுடைய காலத்தை நேரமாக வகுத்து ஏதோ ஒரு விஷயத்தை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் செய்வதனால் உங்கள் காலத்திலே ஒரு சாதனையை சாதித்துவிட முடியும்னு ஒரு கற்பனை காண்றீங்களோ அப்போதே நீங்கள் தோற்றுவிட்டீர்கள். எல்லா மிகப்பொிய சாதனையும் காலத்தில் நிகழ்வது. நேரத்தில் அல்ல. நேற்று இரவு மூணு அல்லது நாலு மணியிருக்கும். என்னுடைய லைப்ரரி இன்சார்ஜ்க்கு மெஸேஜ் அனுப்பி இந்த மாதிரி ஒரு குறிப்பிட்ட தமிழ்ப் புத்தகம் படிக்கணும். எடுத்துத் தேடிக்கண்டுபிடிங்கன்னு மெஸேஜ் அனுப்பினேன். அவங்களும் மெஸேஜ் பார்த்திட்டு எத்தனை காப்பி வாங்கணும் சாமின்னு கேட்டாங்க. இல்லை நம்ம லைப்ரரில இருக்கு எடுத்திட்டு வாங்க. கொஞ்ச நேரம் கழிச்சு கண்டுபிடிச்சிட்டேன் எங்க குடுக்கணும் சாமி. கோர்ட்யார்டுல கொடுத்திடுங்க. கொண்டு வந்து அதைப் படிச்சு முடிச்சிட்டு இப்ப நான் இறங்கி வரேன். காலம் நேரமாக மாறாமல் இருக்க வேண்டுமென்றால் "தள்ளிப்போடுவதை" நிறுத்துங்கள். புரிந்துவிட்ட ஒரு சத்தியம் வாழ்க்கையாய் மாறும்வரை அதை நோக்கிச் செயல்பட்டுக்கொண்டேயிருப்பவன் சந்யாசி. அவனுக்குக் காலம் வாழ்க்கை. நேரம் வாழ்க்கையல்ல. நல்லாப்புரிஞ்சுக்கங்க. காலத்தை காசுக்காக நேரமாக மாற்றுபவன் "வைசியன்". காலத்தை "பதவி"க்காக நேரமாக மாற்றுகின்றவன் "ஷத்ரியன்" காலத்தை "காரணமே"யில்லாமல் குழப்பத்தால் நேரமாய் மாற்றி அதையும் வீணடிப்பவன் "சுத்திரன்". காலத்தை "நேரமாக" மாறவேவிடாமல் காலமாகவே வாழ்க்கையை வாழ்பவன் "சந்யாசி". காலம்னா என்ன? உங்களுடைய இருப்பு நிலை. உயிர் நிலை. உயிர் நினைவுகள். நேரம்னா என்ன? உங்க தினசரி வாழ்க்கை. அட்டவணை. காலைல எந்திரிச்சு இந்தச் செயலை செய்யணும். அதுக்கப்புறம் இந்த மாதிரி இருக்கணும். இந்த தினசரி நடவடிக்கைகள் சார்ந்த நினைவு மசில்மெமரி நேரம் சார்ந்தது. உங்கள் வாழ்க்கையைப் பற்றிய உயிர் நினைவுகள் பயோமெமரி காலம் சார்ந்தது.

நல்லாத் தொிஞ்சுக்கங்க, காலம் சார்ந்து ஆழமான முடிவை எடுத்தவர்கள், நேரம் சார்ந்து செயலைச் செய்தாலும், செய்யாவிட்டாலும் உலகத்தின் மீது மிகப்பொிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். அவர்கள் செய்கின்ற செயல்கள் சில செயல்களாக இருந்தாலும் கோடிக்கணக்கான பேரை வழிநடத்துகின்ற, வாழ்வளிக்கின்ற செயலாக இருக்கும். காலத்தையும், நேரத்தையும் புரிந்து கொள்ளுங்கள். எப்போ நேரத்தின் கட்டுப்பாடுகளிலிருந்து உங்களைச் சுதந்திரராகப் பிரகடணப்படுத்திக் கொள்கிறீர்களோ அப்பொழுது நீங்கள் சந்யாசி. என் நேரம் யாருக்கும் சொந்தமில்லை. என் காலத்தை வளமாக்கிக் கொள்வதற்கே என் நேரம் என்று முடிவெடுத்தவன் சந்யாசி. அப்ப என்ன ஆகுதுன்னா உயிர் நினைவுகளி்ல் நாம் என்ன முடிவுகளை எடுத்திருக்கிறோமோ அதை வாழ்க்கையாக மாற்றுவதற்கு மட்டும்தான் நம் நேரம் செலவாகின்றது. வேறு எதுக்கும் நம் நேரம் கிடையாது. அதுக்கு மட்டும்தான் நேரம் செலவிடப்பட வேண்டும். தள்ளிப்போடாது இருத்தல். ஊயிர் நினைவாக நீங்கள் முடிவெடுத்துவிட்ட எதையுமே தள்ளிப்போடாது வாழுதல் உங்களுடைய காலத்தை காலமாகவே வைத்திருக்கும். நேரமாக மாறவிடாது. சுரிய நமஸ்காரம் பற்றி ஒரே ஒரு சிறிய நிகழ்ச்சியைச் சொன்னேன். என்னுடைய குருமார்கள் எனக்குக் கொடுத்த பயிற்சியே காலம் சார்ந்தது. நேரம் சார்ந்ததேயில்லை. ஒரு கருத்தைச் சொன்னால் நான் அதைப் புரிந்து அதைத் தொிந்து வாழுகின்றவரை இன்னொரு நிகழ்ச்சிக்கு இன்னொரு செயலுக்குப் போக விடமாட்டாங்க. நானும் போக மாட்டேன். காலம் சார்ந்தே இயங்குபவனுக்கு இராப்பகல் இல்லை. இராப்பகல் இல்லா பெருவௌிவீட்டில் இலயித்து இருக்கின்ற பக்குவத்தை அவன் அடைகின்றான். யார் காலம் சார்ந்து இயங்குகிறார்களோ அவர்களுக்கு இராப்பகல் கிடையாது. நேரம் சார்ந்து இயங்கறவங்களுக்குத்தான் இராப்பகல் உண்டு. இராப்பகல் இருந்தால் நீ மனிதன். இராப்பகல் இல்லா பெருவௌி வீட்டில் வாழ்ந்தால் நீ யோகி. நேரம் பார்த்து தூங்கி நேரம் பார்த்து எந்திரிச்சா போகி. நேரம் பார்க்காம தூங்கிக்கிட்டேயிருந்தா போரராகி. காலம் சார்ந்து வாழ்பவன் யோகி. நேரம் பார்த்துத் தூங்கி நேரம் பார்த்து எந்திரிச்சா போகி. நேரம் பார்க்காம தூங்கி்க்கிட்டேயிருந்தா போாகி. காலம் சார்ந்து வாழ்பவன் யோகி. ஒவ்வொரு கருத்தாக ஒவ்வொரு சத்தியமாக உள்வாங்கி உள்வாங்கி ஜூரணித்து அது உயிர் நினைவாக மாறுகின்ற வரை வேறொன்றைப்பற்றியும் கவலையில்லாமல் இதையே உள்ளில் அரைத்து அதை உயிர் நினைவாய் மாற்றுகின்றவரை அதைச்சார்ந்தே வாழ்வதுதான் காலம் சார்ந்த வாழ்க்கை. இந்த சுதந்திரத்தை நமக்கு நாமே குடுத்துக்கறது தான் ஆதீனவாசி வாழ்க்கை. சிலபேரு சொல்றதுண்டு ஆதீனவாசி வாழ்க்கை ரொம்ப இன்டென்ஸா இருக்கு சாமி. இராத்திரி பகலே தொியாம வாழறோம். இது இன்டென்ஸான வாழ்க்கைன்னு சொல்றது கூட உண்மை கிடையாது. இன்னர் சென்ஸோட வாழற வாழ்க்கைன்னு சொல்றதுதான் உண்மை. நல்லாப்புரிஞ்சுக்கோங்க. நேரம் சார்ந்து இயங்கி பொிய பொிய விஷயங்களை சாதிக்கறது வந்து படிக்கட்டுல ஏறிப்போயி 40 அடுக்கு மாடியின் உச்சத்துக்குப் போறா மாதிரி. காலம் சார்ந்து சாதிக்கறதுங்கறது லிஃப்ட்ல 400 அடுக்கு மாடிக்கு மேல போயிடறா மாதிரி. இந்த 40 அடுக்குல இருக்கறவன்லாம் நினைச்சிட்டிருக்கிறான் இந்த 40 அடுக்குக்கே நான் இந்தப் பாடுபடறேனே அவன் 400 அடுக்குக்கு என்னப்பாடுபட்டிருப்பான்னு அவனுக்குத் தொியாது. நீங்க போறது லிஃப்ட். நேரங்காலம் புரியாதவன் தான் நேரங்காலம் தொியாம வாழ்ந்திட்டிருக்கான்.


இந்த இரண்டு விஷயத்தை மட்டும் புரிந்துகொள்ளுங்கள். தசை நினைவு, உயிர் நினைவு, உயிர் சக்தி உயிர் நினைவில இருக்கிற சத்தியங்களெல்லாம் உங்களைப்பற்றி நீங்கள் வைத்திருக்கின்ற கருத்து எல்லாம் நிஜமாகும்பொழுது அது உயிர் சக்தியாக மாறிடும். அணுவுக்கும், அணுவாய் உங்களைப்பற்றி நீங்கள் வைத்திருக்கும் கருத்து அப்பாலுக்கு அப்பாலாய் இருக்கும் இறைவனைப்பற்றி நீங்கள் வைத்திருக்கும் கருத்து இந்த இரண்டுக்கும் இடையிலே இருக்கின்ற ஜகத் உலகத்தைப்பற்றி நீங்கள் வைத்திருக்கும் கருத்து இது எல்லாம் ஆழமானதாக மாறிக்கொண்டே செல்லுமானால் வாழ்க்கை திடமானதாகவும் கனமானதாகவும் இருக்கும். மேம்போக்கான ஆழமில்லாத வாழ்க்கையை வாழ்பவர்கள் வெறும் நேரத்தில் சிக்கி நீசர்களாய் முடிகிறார்கள். நம்ம எல்லாருக்கும் அடுத்து வர்ர கேள்வி இதுதான். காலத்திலேயே அப்போ வாழ்வது எப்படி? நல்லாப்புரிஞ்சுக்கங்க. ஒரு அடிப்படை நுட்பத்தை கொடுக்கிறேன். இன்று. இன்று. உங்கள் வாழ்க்கையிலே உங்களைப்பற்றி நீங்கள் வைத்திருக்கின்ற உயர்ந்த முடிவுகள் கருத்துக்கள் இவைகளையெல்லாம் நிஜமாக்குங்கள். தள்ளிப்போடாதீர்கள். ப்ளான் பண்ணாதீங்க. நான் பொிய சமூக சேவகனாக இருக்கணும்னு நினைக்கறேன். அதுதான் என்னுடைய என்னைப்பற்றி நான் வெச்சிருக்கற உயர்ந்த கருத்து ஆதர்ஷம் என்னுடைய நோக்கம் அப்ப நான் என்னப் பண்ணுவேன் டெய்லி காலைல ஒன் அவர் சமூக சேவை பண்ணுவேன். நாசமாப்போச்சு. இந்தக் கருத்து நிஜமாகின்ற செயல்களை செய்து முடிக்கும்வரை வேறு எதைப்பற்றிய சிந்தையும் கிடையாது. தள்ளிப்போடுவது கிடையாது. ப்ளான் பண்ணாலே நாசமாப்போச்சு. ப்ளான் பண்றவன் செய்யமாட்டான். செய்யறவன் ப்ளானே பண்ண முடியாது. செஞ்சுக்கிட்டேயிருக்கும்போது மாறிக்கிட்டேயிருக்கும். ப்ளான் பண்ணமுடியாது. ப்ளான் பண்றவன் செய்ய முடியாது. செய்யறவன் ப்ளான் பண்ண முடியாது. இதுதான் வாழ்க்கை. சாமிப்ளானைச் சொல்லுங்கன்னு கேட்டாலே அவன் ஒரு லுுசு. இதுவரைக்கும் வாழ்க்கையில வேலையே செஞ்சதில்லைன்னு அர்த்தம். வேலை செஞ்சாத்தான் ப்ளான் பண்ண முடியாதுப்பான்னு. ஆழந்து புரிந்துகொள்ளுங்கள். ஒரு விஷயத்தை அது நடக்கக்கூடாதுன்னு நீங்க நினைச்சீங்கன்னா அதுக்கு ப்ளான் போட்டுக்கொடுத்திருங்க போதும். அது நடக்கவே நடக்காது. அது நாசமாப்போச்சு. இப்ப நீங்க சமூக சேவகராகணும்னு நினைக்கறீங்க. அதுக்குப் ப்ளான் பண்ணுங்கப்போதும். நாசமாப்போச்சு. கட்டாயமா ஆகவே மாட்டீங்க. ப்ளான் பண்ணாம உள்ளுக்குள் கருத்தை ஆழ்ந்து உயிர் நினைவுக்குள் புடம்போட்டு சொக்கப்பானை கொளுத்தறதுன்னு தமிழ்நாட்டில ஒரு பழக்கம் உண்டு. கார்த்திகை தீபத்திற்குக் கொளுத்துவார்கள். பனைமரத்துப்புவை பதமாக நெருப்பில் வைத்து பொடியாக அரைத்து சாக்குத்துணியில் சுற்றி மூங்கில்கோல் இடைச்செருகி கரி நெருப்பை வைத்து கழட்டி சுத்தினா பொறியா பறக்கும். அதுதான் சொக்கப்பனைன்னு சொல்லுவோம். கிராமங்கள்ளலாம் இன்னும் அந்தப் பழக்கம் இருக்கு. சொக்கப்பனை கொளுத்தல். கார்த்திகைத் தீபத்தப்போ செய்வார்கள். அந்த சொக்கபனை கொளுத்தறதுக்கு பனை மரத்துப்புவை புடம்போடுவார்கள். உள்ளுக்குள்ளேயே அதை எறிக்க வேண்டும். மொத்தமா எறிஞ்சு சாம்பலாயிடப்படாது. அதுமாதிரி ஒரு சத்தியத்தை உள்ளுக்குள்ளேயே வைத்து எரிக்க வேண்டும். புடம்போட வேண்டும். அப்ப சொக்கப்பனை நெருப்புபோல அது சார்ந்த உண்மைகள் நமக்குள் வெடித்துப்பொங்கி நம்மைச்சுற்றிப் பறக்கும். ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள். எந்த ஒரு சத்தியத்தையும் உயிர் நினைவாக மாற்றி உயிர் நினைவின் பொங்குதலால் அது தசை நினைவாகவும் செயலாகவும் வௌிப்படும்பொழுது நீங்கள் டைம்டேபிள் போட்டு நேரம் வகுத்து செயலைச் செய்து அதை அடைய மாட்டீர்கள். அதை அடைவதற்கு சிந்திக்க மாட்டீர்கள். நேரம் வகுக்கறோம்னாலே என்ன அர்த்தம்னா அதுவே தன் சுவாசமாக மாற்றிக்கொள்ளுகிற அளவிற்கு நமக்கே அந்த சத்தியத்தின் மீது நம்பிக்கையும், ஸ்ரத்தையும், தைரியமும் இல்லாததனால் யராவது உங்க பேரென்னன்னு கேட்டா மறந்துட்டேன். பத்து நாள் டைம் டேபிள் போட்டு ஒரு அரை மணி நேரம் 108 தடவை எழுதிட்டு அப்புறமா உங்களுக்கு சொல்லட்டுமான்னு கேட்டீங்கன்னா நீ சத்தியமா பகுத்தறிவுவாதியாத்தான் இருப்பே. ஆழ்ந்து தொிந்து கொள்ளுங்கள். ப்ளான் பண்ணி நேரம் ஒதுக்கி பயிற்சி செய்து முயற்சி செய்து இது மொத்தமுமே நடுத்தரவர்க்கத்தின் மன அமைப்பு. அதிலிருந்து இந்த அமைப்புச்சார்ந்து பெருஞ்சாதனை செய்வதற்கான வாழ்க்கை மலர்ச்சி நடைபெறுவதேயில்லை. என்னுடைய குருமார்கள் எனக்குக் கத்துக்கொடுத்த ஒரு முக்கியமான விஷயம் அறுபடாத சாதனை தான் பலன் கொடுக்கும். அதாவது நிராகாரம் உணவைக் கடந்த நிலைக்குப் போகணும்னா அந்த மூணு மணிநேரம் உண்ணாவிரதம்னு சொன்னாங்களே ஏதோ ஒண்ணு ப்ரேக்ஃபாஸ்ட் முடிச்சிட்டு கட்டில்ல படுத்துக்கிட்டு லன்ச்க்கு முன்னாடி எந்திரிச்சு உண்ணாவிரதத்தை முடிச்சுகறது. அந்த மாதிரியெல்லாம் பண்ணா அடைய முடியாது. நாம என்னப் பண்ணுவோம் உடனே நேரம் போட்டு டெய்லி ஒரு குறிப்பிட்ட நேரம் வெச்சுட்டு அந்த நேரத்தில சாப்பிடாம இருக்கறது. அப்புறமா அந்த நேரத்தை அகலமாக்கிக்கிட்டே போய் ஒரு நாளைக்கு 5 மணி நேரம் அடுத்து ஒரு ஒரு மாசம் கழிச்சு அது ஒரு எட்டு மணி நேரம் அடுத்த ஒரு 1 மாசம் கழிச்சு 10 மணி நேரம் இப்படியெல்லாம் யாரும் நிராகார நிலையை அடைந்தவனே கிடையாது. இப்பொழுது முடிவெடுக்கின்றேன். அடையும்வரை இதுதான் வாழ்க்கை. காலம் சார்ந்து தான் பொிய சாதனைகள் சாதிக்கப்படுகிறது. நேரம் சார்ந்து விரதம் வேணா இருக்கலாம். ஆனா நிராஹார நிலையை அடைய முடியாது. நேரம் சார்ந்து படிச்சு பாஸ் ஆவலாம். அறிஞன் ஆக முடியாது. அறிவு நேரம் சார்ந்த முயற்சியால் வருவதல்ல. காலம் சார்ந்த முயற்சியால் வருவது. ஒரு விஷயத்தை தொிஞ்சுக்கணும்னு இராத்திரி மூணு மணி்க்கு நினைக்கறேன் அதைப்பத்தி கவலையேப்படாம உடனடியா மெஸேஜ் பண்ணி அந்த புக்கை கொண்டு வா. நம்பள்ளாம் என்னப் பண்ணுவோம். நாளைக்கு காலைல லைப்ரரிக்புக்போய் தேடி, நேரம் சார்ந்து சிந்திப்பவர்கள் நடுத்தர மனநிலையோடேயே வாழ்க்கையை நட்டாற்றில் கழிக்கிறார்கள். காலம் சார்ந்த இயங்குபவர்களே மிகப்பொிய வெற்றிகளை அடைகின்றார்கள். உங்கள் வாழ்க்கையின் நோக்கம் உங்கள் தினசரி நேரப் பட்டியல் சார்ந்து இருக்கக்கூடாது. உங்கள் வாழ்க்கை சார்ந்தே இருக்க வேண்டும். நேரம் காலத்திற்குக் கட்டுப்பட்டு இயங்க வேண்டும். காலம் உங்கள் நோக்கத்திற்கு எற்றாற்போல் அகலமாகவோ குறுக்கமாகவோ மாற்றம் செய்யப்படும். நேரம்மாற்ற முடியாதது. ஏன் என்றால் அது அளவு நேரம் அலகு அளவு காலம் செயலி யுீீ யுனிட்டே வேற. நேரத்திற்கு யுனிட் செகண்ட் நிமிஷம் மணி. காலத்ததுக்கு யுனிட்டு சிந்தனை வேகம், செயல் தௌிவு, வாழ்க்கையின் நோக்கம். உங்க வாழ்க்கையோட நோக்கமே ஒரு வீடு ரெண்டு வீட்டுக்காரி மூணு காரு அவ்வளவுதான் அப்படின்னா அப்ப காலம் வந்து அவ்வளவு தேவையில்லையே. போதும் 70 வருஷம். உங்கள் நோக்கம் சார்ந்து காலம் விரியும். நேரம் விரிய முடியாது. நேரம் விரிய முடியாது. காலம் விரிய முடியும். காலம் உங்கள் வாழ்க்கை. அதன் போக்கும், நோக்கும் உயிரும் உயிரின் உயிர்ப்பும் சார்ந்தது. நல்லாப் புரிஞ்சுக்கோங்க. நேரம் சார்ந்து இயங்கினீங்கன்னா 60 வயசானவுடனே டயர்டாகணும் 70 வயசான பெட்டுல படுத்தாகணும். 80 வயசானா இருமிக்கிட்டே இருக்கணும். சுத்தி இருக்கறவங்கள்ளாம் ஏன்யா இன்னும் போமாட்டேங்கறன்னவுடனே போயிரணும். ஆனால் காலம் சார்ந்த வாழ்க்கை அப்படியல்ல. நீங்கள் செய்ய வேண்டியதை செய்கின்ற வரை அமர்ந்து கொண்டேயிருக்கலாம். அது 50ல் முடிந்தாலும் புறப்பட்டுச் செல்லலாம். 150ல் தான் முடியுமென்றாலும் அமர்ந்திருக்கலாம். காலம் சார்ந்தது. இருப்பின் இருப்பு. உயிரின் உயிர்ப்பு. நேரம் சார்ந்தது நிகழ்ச்சிகளின் தொகுப்பு.

ஆழ்ந்து கேளுங்கள். இதை ஆங்கிலத்திலே மொழிபெயர்க்கவே முடியாது. ட்ரான்ஸ்லேட்டர்ஸ் ஒண்ணும் பண்ண முடியாது. இதை நானே ட்ரான்ஸ்லேட் பண்ணிச் சொன்னா தான் உண்டு. அவர்கள் கேட்ட மிச்சத்தை அவர்கள் வாயிலிருந்து வரும் எச்சத்தை வைத்து நீங்கள் புரிந்து கொள்வது துச்சத்தைக்கூட இருக்காது. இது ஒரு பெரிய சத்தியம் - காலம் வேறு, நேரம் வேறு. எங்கெங்கெல்லாம் நேரத்திலே நீங்கள் உங்கள் நங்கூரம் சிக்கிக் கொண்டு தத்தளிக்கிறீர்கள் என்று பாருங்கள். காலம் என்கின்ற கடலிலே இனிமையாகத் தன் கப்பலை நெகிழ்த்தத் தொியாதவன் நேரம் என்கிற நங்கூரச் சங்கிலிகளிலே சிக்கித் தவி்க்கின்றான். காலத்தில் வாழுகின்ற தலைவனுக்கு நேரம் விடுதலை அளித்துவிடுகின்றது. காலத்தில் வாழத்தொியாத மூடனைத்தான் நேரம் கட்டுப்படுத்தி வைக்கின்றது. நேரத்திலிருக்கும் நங்கூரங்களெல்லாம் எடுத்துவிட்டவுடனேயே கட்டிலே கதின்னு கிடந்தா சரி நேரத்திலயாவது கட்டுப்பட்டு இரப்பான்னு பெருமான் கட்டி வெச்சிற்றாரு. நேரம் எனும் நங்கூரத்திலிருந்து விடுபடுத்தப்பட்டால் காலம் வாழ்க்கையின் உயிர் நோக்கத்தை நோக்கி உயிர்த்து எழுமானால் நேரம் எனும் கட்டுப்பாடுத் தேவையில்லை. பக்தி மலர்ந்துவிட்டவன் தினந்தோறும் குறிப்பிட்ட வேளையை வைத்துக்கொண்டு நீருற்றி அபிஷேகம் செய்து முறையா புஜை பண்ணனுன்ற அவசியமில்லை. காலத்திலே மலராததால் தான் நேரத்திலே சாதனை செய்தாக வேண்டி இருக்கிறது. தன் உடலையும், மனதையும் உயிர் கொண்டு கட்டிவிட்டவன் நேரத்தை வைத்துக் கொண்டு யோகத்தாலும் ப்ராணாயாமத்தாலும் உடலை வளைக்க வேண்டிய அவசியமில்லை. மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே. இங்க ஆகாததனால் தான் இங்க கம்பத்து மேலயும் கயித்திலயும் கட்டிவிட வேண்டியதா இருக்கு. யார் காலம் சார்ந்து செயல்படத்துங்குகிறார்களோ தலைவர்களாக மாறுகிறார்கள். அவர்களுக்கு நேரம் சார்ந்த எந்தக் கட்டுப்பாடும் இல்லை. தேவையுமில்லை. காலம் சார்ந்த உயிரின் உயிர்ப்பைக் காணாதவர்கள் தான் நேரம் சார்ந்து அவர்களை பயிற்சி செய்ய வைக்க வேண்டிய கொடுமை கட்டாயம் ஏற்படுகின்றது. காலத்தைச் சார்ந்து இயங்குபவனுக்கு சோம்பலும் இல்லை. மனச்சோர்வும் இல்லை. அந்த சோம்பல் மனச்சோர்வை வெல்ல முடியாததனால் தான் நேரம் சார்ந்து ஒரு ரொட்டினைப் போட்டு நம்மளை நாமளே அரைக்க வேண்டியதாயிருக்கு. காலம் சார்ந்து வாழக்கற்றுக்கொள்ளுங்கள். காலபைரவன் அருள் கிட்டும். இன்றைய சத்சங்கத்தின் சாரம் தசை நினைவு, உயிர் நினைவு, உயிர் சக்தி அப்பாலுக்கும் அப்பாலாய் அணுவுக்கும் அணுவாய் காலம் என்பது வேறு. நேரம் என்பது வேறு. இவையனைத்தையும் ஆழ்ந்து சிந்தியுங்கள். இதை நிஜமாக்கும் வாழ்வின் நடைமுறையாக்கும் நுட்பங்களோடு நாளைய சத்சங்கத்தில் மீண்டும் சந்திப்போம். நீங்களெல்லோரும் நித்யானந்த நிலையிலிருந்து நித்யானந்த நிலையில் கரைந்து நித்யானந்தமாகிட ஆசீர்வதித்து முடிக்கின்றேன். நன்றி. ஆனந்தமாக இருங்கள்.


Photos From The Day:


Nithyananda Peetham, Bengaluru Aadheenam | Tamil Nithya Satsang | Nithya Satsang

https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-05-nithyananda-diary_bengaluru-aadheenam_tamil-nithya-satsang_IMG_1100.jpg?1512496523 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-05-nithyananda-diary_bengaluru-aadheenam_tamil-nithya-satsang_IMG_1160.jpg?1512496527 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-05-nithyananda-diary_bengaluru-aadheenam_tamil-nithya-satsang_IMG_1180.jpg?1512496532 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-05-nithyananda-diary_bengaluru-aadheenam_tamil-nithya-satsang_IMG_1199.jpg?1512496536 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-05-nithyananda-diary_bengaluru-aadheenam_tamil-nithya-satsang_IMG_1232.jpg?1512496541 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-05-nithyananda-diary_bengaluru-aadheenam_-nithya-satsang_IMG_1359.jpg?1512687941 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-05-nithyananda-diary_bengaluru-aadheenam_-nithya-satsang_IMG_1386.jpg?1512687944 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-05-nithyananda-diary_bengaluru-aadheenam_-nithya-satsang_IMG_1403.jpg?1512687950 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-05-nithyananda-diary_bengaluru-aadheenam_-nithya-satsang_IMG_1438.jpg?1512687955 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-05-nithyananda-diary_bengaluru-aadheenam_-nithya-satsang_IMG_1440.jpg?1512687960 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-05-nithyananda-diary_bengaluru-aadheenam_-nithya-satsang_IMG_1359_4.jpg?1512688112 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-05-nithyananda-diary_bengaluru-aadheenam_-nithya-satsang_IMG_1386_0.jpg?1512688117 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-05-nithyananda-diary_bengaluru-aadheenam_-nithya-satsang_IMG_1403_0.jpg?1512688121 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-05-nithyananda-diary_bengaluru-aadheenam_-nithya-satsang_IMG_1438_0.jpg?1512688125 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-05-nithyananda-diary_bengaluru-aadheenam_-nithya-satsang_IMG_1440_1.jpg?1512688130 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-05-nithyananda-diary_bengaluru-aadheenam_-nithya-satsang_IMG_1447.jpg?1512688212 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-05-nithyananda-diary_bengaluru-aadheenam_aadheenam-pictures_DSC00587.jpg?1512688212 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-05-nithyananda-diary_bengaluru-aadheenam_aadheenam-pictures_DSC00616.jpg?1512688149 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-05-nithyananda-diary_bengaluru-aadheenam_aadheenam-pictures_DSC00619.jpg?1512688152 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-05-nithyananda-diary_bengaluru-aadheenam_aadheenam-pictures_DSC00641.jpg?1512688160 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-05-nithyananda-diary_bengaluru-aadheenam_aadheenam-pictures_DSC00648.jpg?1512688165 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-05-nithyananda-diary_bengaluru-aadheenam_aadheenam-pictures_DSC00657.jpg?1512688169 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-12-Dec-05-nithyananda-diary_bengaluru-aadheenam_aadheenam-pictures_DSC00673.jpg?1512688174

Sakshi Pramana - Sharing about Mahasadashivoham

Sharing about Mahasadashivoham