Difference between revisions of "10 செப்டம்பர் 2016 ஆனந்த யோகம்"

From Nithyanandapedia
Jump to navigation Jump to search
 
Line 105: Line 105:
  
  
[[Category:2016]][[Category:தியான முகாம்கள்]][[Category:தமிழ்]][[Category:Tamil]][[Category:Tamil Meditation Programs]][[Category:வித்யாதானம்]][[Category:ஆனந்த யோகம்]][[Category:நித்யானந்த யோகம்]][[Category:சாக்ஷி பிரமாணம்]]
+
[[Category:2016]][[Category:தமிழ்]][[Category:Tamil]][[Category:Tamil Meditation Programs]][[Category:வித்யாதானம்]][[Category:ஆனந்த யோகம்]][[Category:நித்யானந்த யோகம்]][[Category:சாக்ஷி பிரமாணம்]]

Latest revision as of 10:32, 6 January 2021

நித்யானந்த யோகம் (Meditation Programs)

வருடம்  : 2016

நாள் : 10 செப்டம்பர் 2016

நாட்கள் : ஒரு நாள்

நிகழ்வு : தியான முகாம்

பங்கேற்பாளர்களின் விபரம் : தீட்சை பெற்ற சீடர்கள்

தியான முகாமின் பெயர் :நித்யானந்த யோகம்

நடைபெற்ற இடம் : ஆதி கைலாஸா - நித்யானந்தபீடம், பெங்களூர் ஆதீனம், பிடதி, பெங்களூர், கர்நாடகம்

நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் : நித்யானந்த இந்து பல்கலைக்கழகம்

நிகழ்வினை நடத்தியவர் : இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள்

பயனடைந்தவர்களின் எண்ணிக்கை : 200

நிகழ்வின் விவரனை : இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் நித்யானந்த யோகம் மாணவர்களுக்கு 25 நிலை விழிப்புணர்வு, 11 தளங்கள் மற்றும் சதாசிவனின் 5 நிலைகள் பற்றிய வேத பிரபஞ்வியலை கற்றுத் தந்தார்.


நித்யானந்த யோகம்



ஆனந்த யோகம்_சாக்ஷி பிரமாணம்


ஆனந்த யோகம்_சாஸ்திர பிரமாணம்

" நமது இந்து பாரம்பரியத்தில் ஆனந்த வாழ்க்கைக்கான வழிமுறை குருவிடமிருந்து சீடர்களுக்கு வழங்கப்படுகிறது.

சீடர்கள் தங்களுடைய உடல் மனம் மற்றும் விழிப்புணர்வின் உச்சபட்ச செயல்பாட்டில் இயங்க குருவால் தயார்படுத்தப்படுகிறார்கள். அவர்களது எதிர்காலம் பற்றிய தெளிவு, அவர்களின் தேவை என்ன, அதற்கான காரணம் என்ன மற்றும் அதை அவர்கள் எவ்வாறு உறுதியான வெற்றியாக செயல்படுத்த முடியும் என்பதை குருவிடமிருந்து கற்று தங்களை நெறிபடுத்திக் கொள்கிறார்கள்.

ஜ்ஞேயம் யத்தத்ப்ரவக்ஷ்யாமி யஜ்ஜ்ஞாத்வாம்ரு'தமஶ்நுதே |

அநாதிமத்பரம் ப்ரஹ்ம ந ஸத்தந்நாஸதுச்யதே || 13.12

எது அறியப்பட வேண்டியதோ, எதை அறிந்து மனிதன் பரமானந்தத்தை அடைகிறானோ அதை விளக்கிக் கூறுவேன். அது தொடக்கமற்றது, காரண - காரியங்களுக்கு அப்பாற்பட்டது, உலகியலுக்கு அப்பாற்பட்டது.

- பகவத் கீதை ( க்ஷேத்ர க்ஷேத்ரஜ்ஞ விபாக யோகம் 13.12 )

உலகியலுக்கு அப்பாற்பட்ட பரமசிவ ஞானம் குருவால் சீடர்களுக்கு உபதேசிக்கப்படுகிறது.

இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் இளைய சமுதாயத்தை நல்வழிப்படுத்தும் பொறுப்பை ஏற்றிருக்கின்றார். நித்யானந்த இந்து பல்கலைக்கழகம் மூலம் நித்யானந்த யோகம் என்னும் பாடத்திட்டத்தை வழங்குகிறார்.

ஒவ்வொரு இளைஞருக்கும் இந்த பாடத்திட்டம் இலவசமாக வழங்கப்படுகிறது. தங்கும் இடமும், உணவும், புத்தகங்களும் இலவசமாக வழங்கப்படுகிறது.

3 மாதங்கள், 6 மாதங்கள், 1 வருடம், 2 வருடங்கள் தங்கி இந்த யோகம் பயிலப்படுகிறது. வாழ்க்கையை வாழ்வதற்கு தேவையான புத்திசாலித்தனம் ஒவ்வொருவருக்கும் கற்றுத் தரப்படுகிறது. வாழ்வினை நேர்மையாக எதிர்கொள்வதற்கு கற்றுத் தரப்படுகிறது.

நித்யானந்த யோகத்தில்... நிஜமான அடக்கம், கர்வமின்மை, அஹிம்ஸை, பொறுமை, சகிப்புத்தன்மை, எளிமை, ஒரு ஞானகுருவிற்கு சேவை செய்தல், தூய்மை, மன உறுதி, சுயக்கட்டுப்பாடு, புலன்களைத் திருப்தி செய்யும் பொருட்களைத் துறத்தல், அஹங்காரமின்மை, பிறப்பு, இறப்பு, முதுமை, வியாதி ஆகியவற்றின் சுழற்சியை அறியும் திறன், குழந்தைகள், மனைவி, வீடு மேலும் மற்றவைகளின்மீதும் பற்றின்மை, சுக, துக்கங்களில் சமநிலையில் இருத்தல், குருவிடம் நிலையான கலப்படமற்ற பக்தி, ' தன்னை உணர்தலின்' முக்கியத்துத்தை ஏற்றுக்கொள்ளுதல், இறுதி சத்தியத்திற்கான தத்துவத் தேடல் - இவையெல்லாம்தான் 'புத்திசாலித்தனம்'. இவை நித்யானந்த யோகத்தில் கற்றுத் தரப்படுகிறது.

இவையெல்லாம் உலகியல் வாழ்க்கையிலிருந்து தங்களை சில காலம் விடுபடுத்திக் கொண்டு குரு அளித்த தெய்வீக வாழ்க்கை முறையை வாழும்பொழுது அடையப்படுகிறது. இந்த தெய்வீக வாழ்க்கை முறையில் வாழ்வு உச்சமான நேர்மறை தன்மையுடன் வாழப்படுகிறது. இவ்வாறான வாழ்க்கை முறையாலேயே இதற்கு எதிர்மறையாக உள்ள உலகியல் வாழ்க்கை முறையால் சேர்க்கப்பட்ட 'அறியாமை' விலக்கப்படுகிறது.

இந்த நித்யானந்த யோகத்தில் பயிலும் இளைஞர்கள் சமுதாயத்திற்கு வரப்பிரசாதம் ஆவார்கள். ஆக்கப்பூர்வமாக வாழ்க்கையை வாழ்ந்து, மற்றவர்களுக்கு வழிகாட்டும் தலைவர்களாக பரிணமிக்கிறார்கள். "