Difference between revisions of "20 டிசம்பர் 2015 நிவாரண சேவை"

From Nithyanandapedia
Jump to navigation Jump to search
(Created page with "==<big>நிவாரண சேவை (Disaster Relief Seva)</big>== '''வருடம் ''' : 2015 '''நாள் :'''20 டிசம்பர் 2015 '''நாட்...")
 
Line 91: Line 91:
  
  
[[Category:2015]][[Category:Disaster Relief Seva]][[Category:தமிழ்]][[Category:Tamil]][[Category:நிவாரண சேவை]]
+
[[Category:2015]][[Category:Disaster Relief Seva]][[Category:தமிழ்]][[Category:Tamil]][[Category:நிவாரணப் பணிகள்]][[Category:சென்னை புயல் நிவாரணம்]]

Revision as of 18:52, 5 January 2021

நிவாரண சேவை (Disaster Relief Seva)

வருடம்  : 2015

நாள் :20 டிசம்பர் 2015

நாட்கள் : ஒரு நாள்

நிகழ்வு : நிவாரண சேவை

பாதிப்பின் விபரம் : 2015 டிசம்பர் மாதத்தில் பெய்த கண மழையால் சென்னையின் பல பகுதிகள் பாதிப்படைந்திருந்தது.

நிகழ்வின் பெயர் : வெள்ள நிவாரணம், சென்னை - பாடி, தமிழ்நாடு, இந்தியா

நடைபெற்ற இடம் : பாடி, சென்னை

நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் : ஜெ.ஜெ நகரில் உள்ள கைலாஸா ( Kailaasa in JJ Nagar)

நிகழ்வினை நடத்தியவர் : இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்களின் அருளாணைப்படி தீட்சை பெற்ற சீடர்களால் நடத்தப்பட்டது.

பயனடைந்தவர்களின் எண்ணிக்கை : 1000

நிவாரண சேவை நிகழ்வின் விவரனை : பாடி, சென்னையில் வசித்துவரும் மக்களுக்கு பகவானின் ஆறுதல் மற்றும் அருளாசியையும் தெரிவித்தனர். அவர்களின் உடனடி தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு உணவு பொருட்களையும், உடைகளையும் வழங்கினார்கள்.

நிவாரண சேவை_படங்கள்



நிவாரண சேவை_சாஸ்திர பிரமாணம்

" மக்கள் சேவையே மகேசன் சேவை.

பூமியில் உள்ள ஒவ்வொரு அணுவும் தெய்வீகமானது. பிரபஞ்சத்தின் ஒவ்வொரு நபரும், ஒவ்வொரு பொருளும் பரமசிவ பரம்பொருளின் தனித்துவமான படைப்பே, தெய்விகத்தின் பிரதிபிம்பமே. நமது இந்து தர்ம சாஸ்திரங்கள்...ஒவ்வொரு உயிருக்கும் செய்யும் சேவை மகேசனுக்கு செய்யும் சேவை என்று அறிவிக்கின்றன. சுயநலமற்ற செயல்கள், பலன்களை கருதாது செய்யப்படும் சேவைகளின் மகிமைகளை மனித குலத்திற்கு எடுத்துரைக்கின்றன.

லபந்தே ப்ரஹ்மநிர்வாணம் ரு'ஷய: க்ஷிணகல்மஷா |

சிந்நத்வைதா யதாத்மாந: ஸர்வபூதஹிதே ரதா: ||

பாவங்கள் அழிக்கப்பட்டு, மற்ற உயிரினங்களின் நலனுக்காகப் பாடுபடுகிற புனிதமான மனிதர்கள், புலனின்பங்களை மறுத்தவர்கள், தங்களுடைய சந்தேகங்களையும் இருமைத்தன்மையையும் நீக்கி தெளிவு பெற்றவர்கள் ஆகிய அனைவரும் தெய்விகமான ஆனந்தத்தை அடைகிறார்கள். - பகவத் கீதை, கர்ம ஸந்ந்யாஸ யோகம் (ஐந்தாம் அத்தியாயம் 25 ஆம் ஸ்லோகம்)

இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்களின் அருளாணைப்படி தீட்சை பெற்ற சீடர்கள் அனைவரும் ஆனந்த சேவைகள் செய்கின்றனர். கைலாஸா ஆனந்த சேவகர்களின் கடின உழைப்பால் கட்டமைப்பட்டது.

பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் அனைத்து உயிர்களின் நலனுக்காக பல சேவைகள் நேரடியாகவும், தம் பக்தர்களுக்கு அருளாசியை வழங்கி கைலாஸாவின் மூலமாகவும் உலகின் அனைத்து பகுதிகளிலும் நிகழ்த்துகின்றார்.

குருவின் அருளாணையை ஏற்று சிரத்தையுன் ஆனந்த சேவை செய்யும் சீடர்களுக்கும், சேவைகளை பெறுபவர்களுக்கும் புண்ணியம் கிட்டுகிறது. அவர்களது...

- பாவங்கள் (கர்மங்கள்) அழிக்கபடுகிது.

- சந்தேகத்திற்கு காரணமாக இருக்கும் அனைத்து உயிர்களையும் தனியாக கருதும் இருமைத்தன்மை நீங்குகிறது.

- அனைவரையும் தன்னுடைய அங்கமாக, தன்னுடைய பாகமாக பார்க்கும் பக்குவம் பெறுகின்றார்கள். இதனால் சிற்றின்பங்களின், புலனின்பங்களால் கட்டுறுத்தப்படுவதில்லை.

- ஒவ்வொருவரும் தங்களுக்குள் தெய்வீக ஆனந்தத்தை பெறுகின்றார்கள். "