Difference between revisions of "02 ஜனவரி 2012 நிவாரண சேவை"

From Nithyanandapedia
Jump to navigation Jump to search
(Created page with " ==<big>தானே புயல் நிவாரணம் (Disaster Relief Seva)</big>== '''வருடம் ''' : 2012 '''நாள் :'''02 ஜனவரி 2012 '...")
 
 
Line 84: Line 84:
  
  
[[Category:2012]][[Category:Disaster Relief Seva]][[Category:தமிழ்]][[Category:Tamil]][[Category:நிவாரண சேவை]][[Category:தானே புயல் நிவாரணம்]]
+
[[Category:2012]][[Category:Disaster Relief Seva]][[Category:தமிழ்]][[Category:Tamil]][[Category:நிவாரண சேவை]][[Category:தானே புயல் நிவாரணம்]][[Category:அன்னதானம்]][[Category:உணவு அளித்தல்]][[Category:மருத்துவ முகாம்கள்]][[Category:யோக நுட்பங்கள்]][[Category:ஆரோக்கிய தானம் ▼]]

Latest revision as of 08:25, 14 January 2021

தானே புயல் நிவாரணம் (Disaster Relief Seva)

வருடம்  : 2012

நாள் :02 ஜனவரி 2012

நாட்கள் : ஏழு நாட்கள்

நிகழ்வு : தானே புயல் நிவாரணம், புதுச்சேரி, இந்தியா.

பாதிப்பின் விபரம் : கடுமையான புயல் - இயற்கை சீற்றத்தால் புதுச்சேரி மாநிலம் முழுவதும் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் குடிநீர் மற்றும் வாழ்வாதாரத்திற்கு பெரும் இடையூறு நிகழ்ந்தது.

நிகழ்வின் பெயர் : தானே புயல் நிவாரணம்

நடைபெற்ற இடம் : புதுச்சேரி, இந்தியா

நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் : நித்யானந்தபீடம் - புதுவை ஆதீனம் (Kailaasa in Puduvai)

நிகழ்வினை நடத்தியவர் : இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள்.

பயனடைந்தவர்களின் எண்ணிக்கை : 1,00,000 - லட்சக்கணக்கான பொது மக்கள்

நிவாரண சேவை நிகழ்வின் விவரனை : தினந்தோறும் 1 லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது, 25000 பேருக்கு மருத்துவ சேவை வழங்கப்பட்டது, 25000 பேருக்கு உடைகள் வழங்கப்பட்டது, நூற்றுக்கணக்கான மைல்கள் சாலைகளில் இருந்த தடைகள் அகற்றி தரப்பட்டது, 6 ஜெனரேட்டர்கள் மூலம் கிராமங்களில் குடிநீர் தேவை நிறைவேற்றப்பட்டது.

நிவாரண சேவை_படங்கள்


Swamiji at the Tiruvannamalai ashram temple http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2011-01jan-02-nithyananda-photo-6a.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2011-01jan-02-nithyananda-photo-6b.JPG Temple at the Embalam ashram used by volunteers discussing relief activities while the Brahmacharis repair the roof that was ripped out by the cyclone. Swamiji blesses the cooks working 24/7 to provide hot meals throughout the day. http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2011-01jan-02-nithyananda-photo-12b.JPG Medical camp at the Bhavanar nagar. Pondicherry http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2011-01jan-02-nithyananda-photo-13.JPG Prayer at start of the medical camp Medical camp at the Bhavanar nagar. Pondicherry Hot meals served at the same location Venue of the food distribution site at Jawahar nagar. Pondicherry http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2011-01jan-02-nithyananda-photo-16.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2011-01jan-02-nithyananda-photo-17.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2011-01jan-02-nithyananda-photo-18.JPG


நிவாரண சேவை_சாஸ்திர பிரமாணம்

" மக்கள் சேவையே மகேசன் சேவை.

பூமியில் உள்ள ஒவ்வொரு அணுவும் தெய்வீகமானது. பிரபஞ்சத்தின் ஒவ்வொரு நபரும், ஒவ்வொரு பொருளும் பரமசிவ பரம்பொருளின் தனித்துவமான படைப்பே, தெய்விகத்தின் பிரதிபிம்பமே. நமது இந்து தர்ம சாஸ்திரங்கள்...ஒவ்வொரு உயிருக்கும் செய்யும் சேவை மகேசனுக்கு செய்யும் சேவை என்று அறிவிக்கின்றன. சுயநலமற்ற செயல்கள், பலன்களை கருதாது செய்யப்படும் சேவைகளின் மகிமைகளை மனித குலத்திற்கு எடுத்துரைக்கின்றன.

லபந்தே ப்ரஹ்மநிர்வாணம் ரு'ஷய: க்ஷிணகல்மஷா |

சிந்நத்வைதா யதாத்மாந: ஸர்வபூதஹிதே ரதா: ||

பாவங்கள் அழிக்கப்பட்டு, மற்ற உயிரினங்களின் நலனுக்காகப் பாடுபடுகிற புனிதமான மனிதர்கள், புலனின்பங்களை மறுத்தவர்கள், தங்களுடைய சந்தேகங்களையும் இருமைத்தன்மையையும் நீக்கி தெளிவு பெற்றவர்கள் ஆகிய அனைவரும் தெய்விகமான ஆனந்தத்தை அடைகிறார்கள். - பகவத் கீதை, கர்ம ஸந்ந்யாஸ யோகம் (ஐந்தாம் அத்தியாயம் 25 ஆம் ஸ்லோகம்)

இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்களின் அருளாணைப்படி தீட்சை பெற்ற சீடர்கள் அனைவரும் ஆனந்த சேவைகள் செய்கின்றனர். கைலாஸா ஆனந்த சேவகர்களின் கடின உழைப்பால் கட்டமைப்பட்டது.

பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் அனைத்து உயிர்களின் நலனுக்காக பல சேவைகள் நேரடியாகவும், தம் பக்தர்களுக்கு அருளாசியை வழங்கி கைலாஸாவின் மூலமாகவும் உலகின் அனைத்து பகுதிகளிலும் நிகழ்த்துகின்றார்.

குருவின் அருளாணையை ஏற்று சிரத்தையுன் ஆனந்த சேவை செய்யும் சீடர்களுக்கும், சேவைகளை பெறுபவர்களுக்கும் புண்ணியம் கிட்டுகிறது. அவர்களது...

- பாவங்கள் (கர்மங்கள்) அழிக்கபடுகிது.

- சந்தேகத்திற்கு காரணமாக இருக்கும் அனைத்து உயிர்களையும் தனியாக கருதும் இருமைத்தன்மை நீங்குகிறது.

- அனைவரையும் தன்னுடைய அங்கமாக, தன்னுடைய பாகமாக பார்க்கும் பக்குவம் பெறுகின்றார்கள். இதனால் சிற்றின்பங்களின், புலனின்பங்களால் கட்டுறுத்தப்படுவதில்லை.

- ஒவ்வொருவரும் தங்களுக்குள் தெய்வீக ஆனந்தத்தை பெறுகின்றார்கள். "