Difference between revisions of "21 டிசம்பர் 2019 நித்யானந்த இந்து பல்கலைக்கழகம்"

From Nithyanandapedia
Jump to navigation Jump to search
(Created page with "==<big>நித்யானந்த இந்து பல்கலைக்கழகம்( Nithyananda Hindu University)</big>== '''வருடம் ''' : 2019 '''ந...")
 
Line 64: Line 64:
  
  
[[Category:2019]][[Category:தமிழ்]][[Category:Tamil]][[Category:Nithyananda Hindu University]][[Category:பல்கலைக்கழகம்]][[Category:நித்யானந்த இந்து பல்கலைக்கழகம்]]
+
[[Category:2019]][[Category:தமிழ்]][[Category:Tamil]][[Category:Nithyananda Hindu University]][[Category:பல்கலைக்கழகம்]][[Category:நித்யானந்த இந்து பல்கலைக்கழகம்]][[Category:வித்யாதானம்]]

Revision as of 13:24, 6 January 2021

நித்யானந்த இந்து பல்கலைக்கழகம்( Nithyananda Hindu University)

வருடம்  : 2019

நாள் : 21 டிசம்பர் 2019

நாட்கள் : ஒரு நாள்

நிகழ்வின் பெயர் : நித்யானந்த இந்து பல்கலைக்கழகம் - தமிழ் புத்தக வெளியீடு

நடைபெற்ற இடம் : கைலாஸா

நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் : நித்யானந்த இந்து பல்கலைக்கழகம்

நிகழ்வினை நடத்தியவர் : இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள்

பயனடைந்தவர்களின் எண்ணிக்கை : 10000

நிகழ்வின் விவரனை : இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் தமது அவதார பெருநாள் அன்று உலக நன்மைக்காக நித்யானந்த இந்து பல்கலைக்கழகம் மூலமாக இரண்டு தமிழ் புத்தகங்களை இணைய இணைப்பு வழியாக வெளியிட்டார். அப்புத்தகங்களாவன ஶீ குரு கீதை மற்றும் பிரதம விந்யாஸ க்ரமம் ( யோகா புத்தகம் ) ஆகும்


குருகுலம்-புகைப்படங்கள்




நித்யானந்த இந்து பல்கலைக்கழகம்_சாஸ்திர பிரமாணம்

வேத பாரம்பரியத்தில் பரமசிவஞானம், பரமசிவன் அருளிய உபதேசங்கள் வழி வழியாக குரு சிஷ்ய பரம்பரையால் உயிர்ப்போடு வைக்கப்பட்டது. அஞ்ஞானத்தை அழிக்கும் ஞானத்தீயான பரமசிவ குருவின் உபதேசங்கள் நைமிசாரண்யத்தில் பல்லாயிரக்கணக்கான தபஸ்விகளால் தியானிக்கப்பட்டது. அஞ்ஞானத்தை அகற்றி ஞானத்தை உணர்வதற்காக அவர்கள் தங்கள் வாழ்வையே அர்ப்பணம் செய்தனர். அந்த ஞானத்தை வழி வழியாக உலகோடு பகிர்ந்து கொள்கிறார்கள்.

அநேகஜந்ம-ஸம்ப்ராப்த-கர்மபந்த-விதாஹிநே

ஜ்ஞாநாநல-ப்ரபாவேந தஸ்மை ஶீகுரவே நம: ||

எண்ணற்ற ஜென்மங்கள் வாயிலாக பெறப்பட்ட கர்மத் தளைகளையும், நிறைவேற்றப்படாத செயல்களையும் ஆசைகளையும் தம் ஞானத்தீயால் எரிக்கும் அந்த ஶீ குருவுக்கு நமஸ்காரம்.

- ஶீ குருகீதை

பரமசிவன் அருளிய பரமஞான உபதேசங்கள் நைமிசாரண்யத்திலிருந்து கர்ண பரம்பரையால் யுகயுகமாக பாதுகாக்கப்பட்டு உலகத்தோடு பகிரப்பட்டு வந்தது. தொடர் படையெடுப்புகளாலும், கொடுமையான மதத்தாக்குதல்களாலும் கர்ணவழிப் பரம்பரையில் முறிவு ஏற்பட்டது.

இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் பரமசிவன் அருளிய பரமசிவஞானம் அனைவருக்கும் கிடைக்கும் பொருட்டு நைமிசாரண்யத்தை புனரமைக்கிறார்.

இதன்பொருட்டு பகவான் வேத கல்வி நிறுவனங்கள், கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களை நிர்மாணித்துள்ளார்.

கைலாஸாவின் நித்யானந்த இந்து பல்கலைக்கழகம் வழியாக நைமிசாரண்ய முனிவர்கள் போன்ற பல வேத பண்டிதர்கள் உருவாக்கப்படுகிறார்கள்.

வேத தத்துவங்களில் முனைவர் பட்டம் பெறும் இவர்கள் இந்து பல்கலைக்கழகங்களில் தலைமை பொறுப்பேற்று இந்த பரமசிவ ஞானம் அனைவருக்கும் சென்று சேர வழிவகை செய்கிறார்கள்.

கைலாஸாவின் நித்யானந்த இந்து பல்கலைக்கழகம் வழியாக பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, பரமசிவ ஞானத்திற்காக, அந்த அறிவியலை பாதுகாப்பதற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த ஞானகுருமார்களின், யோக புருஷர்களின் தியாகத்தால் கிடைத்த ஞானம் அதன் உண்மைத்தன்மை மாறாமல் பாதுகாக்கப்பட்டு உலகிற்கு வழங்கப்படுகிறது.