Difference between revisions of "23 நவம்பர் 2006 பத்திரிகை செய்தி"

From Nithyanandapedia
Jump to navigation Jump to search
(Created page with "==<big>வெளியீடு</big>== தினத்தந்தி === நிகழ்வு === '''நிகழ்வின் சாரம்:''' ஆனந்த ர...")
 
 
Line 37: Line 37:
  
  
[[Category:2006]][[Category:பத்திரிகை செய்தி]][[Category:தமிழ்]]
+
[[Category:2006]][[Category:பத்திரிகை செய்திகள்]][[Category:தமிழ்]]

Latest revision as of 16:55, 5 January 2021

வெளியீடு

தினத்தந்தி


நிகழ்வு

நிகழ்வின் சாரம்: ஆனந்த ரதத்திற்கு வேலூரில் வரவேற்பு

நாள்: 23 நவம்பர் 2006

தலைப்பு: தியானபீடத்தின் ஆனந்த ரதத்திற்கு வேலூரில் வரவேற்பு

"ஆனந்த ரதம் 22 நவம்பர் 2006 அன்று வேலூர் வந்தடைந்தது. ரதத்திற்கு தியானபீடத்தின் நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் வரவேற்பு அளித்தனர்.

ஆனந்த ரதம் திருவண்ணாமலையில் பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்களால் 24 செப்டம்பர் 2006 அன்று துவக்கி வைக்கப்பட்டது. திருவண்ணாமலையிலிருந்து ரதம் தமிழகம் முழுவதும் உத்சவமாக வலம் வருகிறது.

கண்ணமங்கலத்தில் இருந்து ரதம் 22 நவம்பர் 2006 அன்று வேலூர் வந்தது. பாகாயம் மற்றும் விருபாட்சிபுரத்தில் ஆனந்த ரத உத்சவத்திற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

விருபாட்சிபுரத்திலிருந்து சாய்நாதபுரம், சங்கரன்பாளையம், டோல்கேட், கிருஷ்ணா நகர், ரவுண்டானா, வேலப்பாடி வழியாக காட்பாடி சென்றது.

மாலையில் சில்க்மில் பேருந்து நிறுத்தம், கழிஞ்சூர், திருநகர், ஓடைப்பிள்ளையார் கோவில், காட்பாடி காங்கேயநல்லூர் வழியாக காந்தி நகர் வந்தடைந்தது.

ரதம் சென்ற வழியெங்கும் பொது மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்து சுவாமியை வழிப்பட்டனர்.

23 நவம்பர் 2006 அன்று ரதம் சத்துவாச்சாரிக்கு செல்கிறது. ரங்காபுரம், காகிதப்பட்டரை, மெயின் பஜார், லாங்கு பஜார் வழியாக தோட்டாபாளையத்திற்கு வருகிறது. முழுவதும் ரதம் செல்கிறது. 24 நவம்பர் 2006 அன்று காலை 7 மணி முதல் 9 மணி வரை ஜலகண்டேஸ்வரர் கோவிலிலும், 9 மணி முதல் 11 மணி வரை திருமலைக்கோடி நாராயணி அம்மன் கோவிலிலும், பகல் 3 மணி முதல் இரவு சொற்பொழிவு முடியும் வரை வேலூர் கோட்டை மைதானத்திலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக நிறுத்தி வைக்கப்படும் என்ற தகவல்களை தியானபீட பொது செயலாளர் அவர்கள் தெரிவித்தார். "

23 நவம்பர் 2006

23 நவம்பர் 2006 -பத்திரிகை செய்தி