Difference between revisions of "July 24 2016"

From Nithyanandapedia
Jump to navigation Jump to search
Line 140: Line 140:
 
</div>
 
</div>
  
[[Category: 2016 ]] [[Category: Satsang]]  [[Category: Tamil]]
+
[[Category: 2016 ]] [[Category: Satsang]]  [[Category: Tamil]] [[Category: தமிழ்]]

Revision as of 22:38, 21 August 2020

Link to Video:

Title

மஹாதேவ ரஹஸ்யம் பாகம் -2

Link to Video:

Link to Video:

Link to Audio

Morning Address By Honored Guest Sri Narendra Giriji Maharaj

Transcript in Tamil

மஹாதேவ ரஹஸ்யம். உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன். உலகம் முழுவதிலும் இரு முனை காணொளி கட்சியின் வழியாகவும் நித்யானந்த தொலைக்காட்சி, ஷாலினி தொலைக்காட்சி, முகநூல் நேரடி ஔிபரப்பு, சமூக வலைத்தளமான லழரவரடிந நேரொலி ஔிபரப்பு போன்றவற்றின் மூலமாக நம்மோடு அமர்ந்திருக்கும் அன்பர்கள், பக்தர்கள், சீடர்கள், சமாஜிகள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன். மஹாதேவ ரஹஸ்யம். கடந்த சத்சங்களின் தொடர்ச்சியாக வேதாந்த சித்தாந்த ஆகமாந்த சாரம். வேதாந்த சித்தாந்த ஆகமாந்த சாரம், மகாதேவ ரகசியம்.

ஆழ்ந்து கேளுங்கள் வாழ்க்கையில் ராஜ ரகசியத்தை கிருஷ்ணன் கீதையில் சொல்ல கேட்டிருப்பீர்கள், தேவ ரகசியத்தை எமன் கடோபநிஷதத்தில் சொல்ல கேட்டிருப்பீர்கள். மகாதேவ ரகசியத்தை இப்பொழுது கேட்டுக்கொள்ளுங்கள். உங்களுடைய இருப்பு - செயல்பாடு. நீங்கள் யார் என்று உங்களை நீங்கள் கருதுகிறீர்களோ அந்த இருப்பு, உங்கள் செயல்பாடு. உங்கள் செயல்பாட்டிலே வருகின்ற வெற்றியோ தோல்வியோ, வியாபாரம், உறவுகள், சமூக அந்தஸ்து, பேர் புகழ் இதெல்லாம் செயல்பாடுகள் சார்ந்து வருகின்ற வெற்றி அல்லது தோல்வி. செயல்பாடை சார்ந்து வருகின்ற வெற்றியோ தோல்வியோ உங்கள் இருப்பையே பாதிப்பதாக நீங்கள் வைத்திருக்கும் கற்பனைக்குத்தான் மாயைனு பெயர். உங்களுடைய செயல்பாட்டினால் தோன்றுகின்ற வெற்றியோ தோல்வியோ உங்கள் இருப்பை பாதிக்குமானால் செயல்பாட்டில் வெற்றி சாத்தியமே இல்லை. அது உங்கள் இருப்பை பாதிக்காமல் நிலை நிறுத்தி கொள்ள துவங்கினீர்களானால் இருப்பில் மாத்திரம் அல்ல செயல்பாட்டிலும் வெற்றி நிகழ்ந்து கொண்டே இருக்கும். அதாவது வௌியிலே செயல்பாட்டினால் வருவதும் போவதும் உயர்வதும் தாழ்வதும் உங்கள் இருப்பு நிலையை, உங்களை பற்றி நீங்கள் வைத்திருக்கும் கருத்தை பாதிக்காத வண்ணம் வாழ்தல் ஆன்மீக வாழ்க்கை. அதுவே ஜீவன் முக்த வாழ்க்கை. செயல்பாட்டின் உயர்வும் தாழ்வும், விருப்பும் வெறுப்பும் உங்களுடைய இருப்பு நிலையை பாதிக்காமல் மனா உளைச்சல், மனா அழுத்தம், மனக்கொந்தளிப்பு, மன மாற்றம், போன்றவைகளை உங்களுக்குள் நிகழ்த்தாமல் உங்களால் உங்களை காத்துக் கொள்ள முடியுமானால், நீங்கள் உங்களைக் காத்துக் கொள்ளத் துவங்குவீர்களேயானால் உங்களுடைய செயல் பாட்டின் மேம்பயும், செயல் பாட்டில் மேம்பாடையும் செயல் பாட்டில் நுண் மேலாண்மையையும் செயல் பாட்டில் வெற்றியும், வாழ்க்கையின் வழியாக மாறிவிடும். (5.43) ’’யோகஹ கர்மசு கௌசலம்’’ என்று கீதையில் கிருஷ்ணன் சொல்லுகின்றான். யோகம் என்பது செயல்பாட்டில் நுண் மேலாண்மை. "யோகஹ கர்மசு கௌசலம்", யோகம் என்பது செயல்பாட்டில் நுண் மேலாண்மை.

மாயையே உங்கள் செயல் உங்கள் இருப்பை பாதிப்பதாக நீங்கள் நம்புவது. நல்லா புரிஞ்சிக்கோங்க அய்யா, வாழ்க்கையில் அடிமட்டத்தில் வறுமையில் இருந்தீர்களானால் செயல் பாட்டின் வெற்றி மூலம் கொஞ்சும் பணம் பேரு, புகழ் இவற்றையெல்லாம் சம்பாதிப்பதின் மூலம் வீடு கார், இதையெல்லாம் சம்பாதிப்பதின் மூலம் நடுத்தர வர்க்கத்துக்கு வந்து விட முடியும். ஆனால் நடுத்தர வரகத்திலிருந்து மேம்படுவதற்கு செயலின் வெற்றி உதவாது. இருப்பின் வெற்றியே உதவும். ஒரு நடுத்தர வர்க்க நிலைக்கு விட்டீர்களேயானால், அதற்கு பிறகு வாழ்வில் மேம்பட ஒரே வழி, இருப்பை மேம்படுத்துவது. செயல்பாட்டின் மேம்பாடும், செயல்பாட்டின் வெற்றி தோல்வியும், இருப்பை பாதிக்கின்ற வகையில் இருக்கின்றவரை நீங்கள் நடுத்தர வர்கத்தை சார்ந்தவர்களாக வாழ்ந்து சாவீர்கள். ஆழ்ந்து தெரிந்து கொள்ளுங்கள், வாழ்க்கையை நடுத்தர வர்க்கத்தில் தொடங்குவது தவறில்லை நடுத்தர வர்க்கமாய் சாவது பெரும் தவறு.

தலைமை எந்த துறையாக இருந்தாலும், தலைமை தன்மை அரசியலாகட்டும், சமூகமாகட்டும், ஆன்மீகமாகட்டும், அறிவாகட்டும், தௌிவாகட்டும், தலைமைத்தன்மை, செயலால் வரும் இன்பு துன்புக்கு அப்பாற்பட்டு, செயலால் வரும் இன்பாலும் துன்பாலும், சித்தம் கலங்காது இருப்பவர்க்கே தலைமை சாத்தியம். ஆழ்ந்து கேளுங்கள். செயலால் வரும் உயர்வும் தீதும். நன்றும் தீதும், உயர்வும் தாழ்வும், உங்களை பாதிக்க துவங்கினால், தொடர்ந்த மன உளைச்சல், துக்கத் தாக்குதல், பயத் தாக்குதல் போன்றவைகளினால் வாழுகின்ற சக்தியும் விருப்பமும் குன்றி நடுத்தர வாழ்க்கையாகவே நம் வாழ்க்கை கழிந்துவிடும். எப்பொழுது செயலின் உயர்வும் தாழ்வும், செய்கையின் நன்றும் தீதும் உங்கள் இருப்பு நிலையை அசைக்க முடியாது, இருக்கத் துவங்குகிறீர்களோ அப்பொழுதே வாழ்வை வாழ்வதற்கான சக்தியும் விருப்பமும் நமக்கும் தௌிவாக இருக்கும். ஆழ்ந்து கேளுங்கள்.. மிக ஆழ்ந்து புரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை உண்மை. ஆழ்ந்து நீங்கள் புரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை சத்தியம். மஹாதேவ ரகசியத்தின் முதற் பகுதி. இருப்பு வேறு. செயலால் வரும் நன்றும் தீதும் வேறு. இதை தௌிவாக புரிந்து கொண்டீர்களானால்தான் இருப்பில் இறைவனை நிறுத்தி செயலில் வெற்றியாய் வௌிப்படுத்த முடியும். இல்லையேல் செயலின் நன்றும் தீதும் உயர்வும் தாழ்வும் இறைவனை காரணம் என்று சொல்லி அவருக்கு இழுக்கு சாற்றி அவருக்கும் உங்களுக்கும் இடையே இடைவௌியை ஏற்படுத்துவார்கள். இறைவன் மீது இழுக்கு சாற்றல் இடைவௌி ஆக்கும். (11.40) மனிதனுடைய மிகப்பெரிய பிரச்சின இறைவனை இழுப்பதற்கும் பழிப்பதற்கும் பொருளாக உபயோகப் படுத்த துவங்குவது. நாம் நினைத்தது நினைத்த படி நடக்கவில்லை என்றால் இறைவனை பழித்து விடுவது. பரிட்சைல பாஸ் ஆனா தேங்கா உடைக்கறது கயடை ஆனா பிள்ளையாரையே உடைக்கறது. ஆழ்ந்து தெரிந்துகொள்ளுங்கள். நினைத்ததை நினைத்தபடி நிறைவேற்ற இறைவன் காத்திருக்கிறான், அதன் அறிவியல் தெரிந்து நினைப்பவருக்கு. நீங்களே தல கால் புரியாமல் குழம்பி போய் தரித்தரமா இருக்கும் போது நீங்க நினைச்சதை அவர் நிறைவேற்ற முயற்சி பண்ணா என்ன ஆகும். இருப்பதைவிட நரகம். வாழ்க்கை நரகமாய் மாறும். இருப்பு செயல்பாட்டால் பாதிக்க படுவதில்லை என்கின்ற தௌிவு அடிப்படையாக உங்களுக்குள் வரும்பொழுது, இருப்பில் இறைவனை கண்டு இருப்பில் இறைவனை நிறுத்தி சங்கல்பம் செய்து அதன் மூலம், இறை சக்தியை சதாசிவன் சக்தியை செயலிலும் வௌிப்படுத்துவது சாத்தியமாகும் சத்தியமாகும். வேதாந்த சித்தாந்த ஆகமாந்த சாரமான ’சிவத்துவமசி’ என்னும் சத்தியத்தை சங்கல்பமாய் உங்களுக்குள் சங்கல்பிக்கும் பொழுது, வௌியில் உங்கள் வாழ்க்கையில் உங்கள் உள்ளில், இறைநிலையில் என்ன நிகழ்கிறது என்பவைகளை ஆழ்ந்து பார்ப்போம். அதை நாம் எப்படி முழுமை இன்றி புரிந்து கொள்கிறோம் என்பதையும் ஆழ்ந்து பார்ப்போம். 14.40 சிவத்தவமசி. நீங்களே சிவமாக இருக்கிறீர்கள். இந்த சிவத்தவமசி என்ற மகாதேவ ரகசியத்தில் மொத்தம் மூனே மூனு பேர் தான் சம்பந்தம் பட்டிருக்கிறார்கள். ஒன்னு, சதாசிவன். இன்னொன்னு அவருடைய வடிவமாக இருந்து இந்த சத்தியத்தை உங்களுக்கு அனுபுதியாக மாற்றுகிற குரு. மூன்றாவது நீங்கள். இந்த மூன்று பேர் தான் இதில் சம்பந்தம் பட்டிருக்கிறீர்கள். இந்த மூன்று பேருக்கும் உண்மையிலேயே, உள் உணர்வில் என்ன இருக்கிறது? ஆனால் அதனை நீங்கள் எப்படி புரிந்து கொள்கிறீர்கள் என்பதை புரிந்து கொண்டாலே இந்த மகாதேவ ரகசியம் விளங்கும். ஒரு வீட்டை வாங்கணும்னு நீங்க நினைக்கிறீங்க. அந்த வீட்டை பாத்தவுடன் ரொம்ப புடிச்சிடுது. ஆனால் உங்களுக்கு பயம். ரொம்போ புடிச்சிடுச்சுனு சொன்னா வீட்டு வெலை ஒரு கோடி ஆனா வீட்டு ழறநெச 5 கோடி கேப்பாரே. அந்த வீட்டு ஓனருக்கு எப்படியாவது 50 லக்ஷத்துக்காவது யார் தலையிலாவது கட்டிட்டு நாம வௌியில போனா போதுமய்யா அப்படின்னு அவர் தவிச்சிட்டு இருக்காரு. வோனேர் மனசுலே என்ன இருக்குன்னு வாங்கறவன் மனசுலே என்ன இருக்குன்னு ரெண்டு ரகசியத்தையும் தெரிஞ்சிட்டு ரெண்டு பேருக்கும் கரெக்டான ரகசியங்களை புரிய வெச்சு செயலை நடத்தி வைப்பவர் தான் புரோக்கர். 16.31 வாங்கணும்னு நினைக்கறவர் கிட்ட போய். அப்பா உனக்கு ரொம்போ பிடிச்சிருக்குன்னு தெரியுது. கவலையே படாதே. அவர் எப்போ வித்துட்டு வௌியிலே போலாம்னு நினைக்கிறாரு. அவர் 50 லக்ஷம் தான் மனசுலே வெச்சிருக்காரு. நீ 5 கோடியெல்லாம் கவலையே படாதே. அப்படிங்கற ரகசியத்தை சொல்லி, அதே மாதிரி ஓனர் மனசுலயும் போய் அப்பா அவனுக்கு ரொம்போ புடிச்சிடுச்சு. வாங்குவாரோ வாங்கமாட்டாரோ பயப்படாதீங்க. நீங்க மனசுல நினைக்குறே வேலையான 50 லக்ஷத்தான் 60 லக்ஷமே சொல்லி வாங்கி வைக்கிறேன். அப்படின்னு அவருக்கும் தைரியம் கொடுத்து, வேலைய சுமூகமா முடிச்சு, இருவருக்கும் ஒருவரை பற்றி ஓருவர் ரகசியங்களை சொல்லி வேலையே முடிக்கிறவர்தான் நல்லா புரோக்கர். நல்ல தரகர். நீங்கல்லாம் நினைச்சிட்டுருக்கீங்க உள் மனசுலே சிவமே நாம்னு சொன்னா சிவன் கண்ணா குத்திர மாட்டாரா? அவருக்கு கோபம் வந்துராதா? என் தகுதி என்னென்னு கேட்க மாட்டாரா? ரெண்டு நாளைக்கு முன்ன கூட கரி தின்டு தண்ணி அடிச்சிண்டு படுத்திருந்தேனே நானு. இப்படி இருக்கிற என்னையே ’சிவம்’ நானுன்னு சொன்னா ஒத்துப்பாரா? இல்லாத சந்தேகங்கள், மனக் கலக்கங்கள். ஆனா சிவன் என்னென்னு நினைச்சிட்டிருக்காரு, "என்ன பன்னா என்னடா? உன்னுடைய உயிர்ல நான் வௌிப்படனும் னு நினைக்கிறேன். உன் உயிரை மட்டும் நான் இருப்பதற்கு அளிக்க மாட்டாயா? உன் செயலயா நான் கேட்டேன்? உன் சிந்தனையையா நான் கேட்டேன். உன் சித்தத்தை அல்லவா நான் கேட்டேன். அவரொரு மூட்ல உட்கார்ந்து இருக்காரு. இவங்க ஒரு மூட்ல உட்கார்ந்து இருக்காங்க. ஆனா இந்த ரெண்டு பேரோட மூட் ரகசியத்தையும் தெரிஞ்சவர் குரு. (18.54) சீடனுக்கு அப்பா கவலைப்படாதே சிவனே நான்னு சொன்னா அவர் கோவப் படலாம் மாட்டாரு. அவர் அந்த மாதிரி மூட்ல இல்ல உன்னுடைய உயிரான சித்தத்திற்குள் பொன்னம்பலத்தான் சித்தத்தில் பொன்னம்பலமாய் வைத்து சிதம்பரம் தாண்டவம் செய்திடவே எத்தனித்து காத்திருக்கிறான் ஏன் பெருமான் ஈசன். தராதரம் கேளான் தகுதியும் கேளான். பலனும் கேளான். பலவும் கேளான். ஏதும் கேளான் என்பதை காட்டவே சுடலையிலும் தாண்டவம் செய்திருக்கும் சுந்தரப் பெருமகன். சுடலையில்கூட தாண்டவம் செய்கின்றான் என்றால் அதை விடவா உன் மனம் அழுக்காய் மாறி விட்டிருக்கவா முடியும். என்று மகாதேவன் உள்ளத்தில் இருப்பதை உனக்கு சொல்லி உன் உள்ளத்தில் இருப்பதை பெருமானுக்கு தெரிவித்து என்னவெல்லாம் உங்களுக்குள் சந்தேகங்கள் இருக்கின்றதோ தவறான கருத்துக்கள் இருக்கின்றதோ அதையெல்லாம் அழித்து தௌிவாக்கி, சிவத்துவமசி என்னும் அனுபுதியை உங்களுக்குள் மலரச் செய்பவர்தான் குரு. உங்கள் உள்ளத்தில் இருக்கும் கிடைக்கையை தவிர்த்து, உள்ளத்தில் இருக்கும் சந்தேகங்கள் அழித்து, உள்ளத்தில் இருக்கும் துக்கங்கள் எரித்து உள்ளத்தில் இருக்கும் தூய்மையை தௌிவை மலரச்செய்து உங்களுக்குள் சிவத்தவமசி என்னும் அனுபுதியை மலர்வதற்காக எம்பெருமான் இருப்பு நிலையில் இருக்கும் ரகசியங்களை உங்களுக்கு சொல்வதுதான் இந்த மஹாதேவ ரகசியம் என்ற சத்சங்கத்தின் காரணம். பொறாமை கொள்ளான் பொல்லாப்பு இல்லான். நல்லாப்பு செய்து நமனையும் அழித்து இருப்பும், இன்மையும் கடந்த உங்கள் சித்தம் ஒன்றையே தன் சிதம்பரமாய் மாற்றி திருநடம் செய்திட காத்திருக்கும் கபாலீசன். இறைவன் விட்ட தூதுவன் தான் குரு. இறை விடு தூதுவே குரு. சிவன் சீவனுக்கு விடும் தூது குரு. 23.10 நன்றாக புரிந்து கொள்ளுங்கள். மஹாதேவ ரகசியத்தை உங்கள் எல்லோருக்கும் சொல்ல பெருமான் விட்ட தூதுவன் நான். கபாலத்தில் நீங்கள் எழுதிக் கொண்டதை மாற்றி வைக்கும் கபாலீஸ்வர். நீங்களாய் தாறுமாறாய் நிலை தடுமாறி எழுதிக்கொண்ட மூட எழுத்தெல்லாம் அழித்திடும், இறைவன் உள்ள கிடக்கையை சிவனின் உள்ள கிடக்கையை சீவனுக்கு சொல்லவே வந்த தூதுவன். ஆழ்ந்து தெரிந்து கொள்ளுங்கள். ஒவ்வொரு முறை நீங்கள் ’நானே சிவம்’ என்கின்ற சத்ய சங்கல்பத்தை உங்களுக்குள் உருவாக்கும் பொழுதும் பெருமான் அனுபவத்தை கொண்டாடுகிறார். ஒவ்வொரு முறை அந்த சத்ய சங்கல்பத்தை உங்களுக்குள் உருவாக்கும் பொழுதும் பெருமான் நீங்கள் உருவாக்கும் சத்ய சங்கல்பத்தை ஏற்றுக்கொள்வது மட்டும் அல்ல. ஆனந்த தாண்டவம் செய்கின்றார். சிதம்பர நாதனாய் உங்கள் சித் அம்பலத்தில் ஆனந்த தாண்டவம் செய்ய காத்திருக்கிறார். அவருக்கு வேண்டியது உங்கள் திறமை அல்ல. எதையெல்லாம் நீங்கள் வாழ்க்கையில் முக்கியமானவைகளாக கருதுகிறீர்களோ அவைகளெல்லாம் அவருக்கு எந்த விதத்திலும் உபயோகம் இல்லை. பிரெச்சனையே என்னென்னா, சரி சிவன் அனுப்பிய தூதன் ஜீவனுக்கு சிவன் அனுப்பிய தூதன் குரு உண்மை, புரோக்கர் கமிஷன் என்னய்யா. ஏனா நாம கமிஷன் வாங்காமே வேலை செஞ்சி பழக்கம் இல்லங்கறதனால, இந்த ப்ரோக்கரும் கமிஷன் வாங்காமே வேலை செய்ய மாட்டார் நினைக்கற மன அமைப்பு வௌி உலகில் நடக்கும் வியாபாரம் பாரம். அதனாலே புரோக்கர் கமிஷன் வாங்கி அவருக்கு சேத்து வெச்சிகிட்டார். உள்ளுலகில் நடக்கும் விஷயங்கள் பரிமாற்றம். பாரம் அல்ல. நீங்கள் என்று பெருமான் வருவார் என்று காத்திருக்கீர்களோ அதுபோல என்று நீங்கள் அழைப்பீர்களோ என்று எம்பெருமானும் காத்திருக்கின்றார்.

27.31 காத்திருப்பு இரண்டையும் ஒன்றாக்கி காற்றலை தவிர்த்து இருத்தலை ஓன்றாகும் வேலையை செய்பவர்தான் குரு. இரண்டுபுறமும் காத்திருத்தல் நிகழ்கின்றது. ஒருபுறம் அறியாமையினால் மறுபுறம் அழையாமையினால். சிவம் அழையாததால் காத்திருக்கின்றது. ஜீவன் அறியாததால் காத்திருக்கின்றது.

ஜீவன் காத்திருக்கும் காரணம் அறியாமை. சிவம் காத்திருக்கும் காரணம் அழையாமை. அறியாமையினால் நிகழும் நிலைமையை தவிர்த்து அழைக்கச்செய்து காத்திருத்தலை முற்று பெறச்செய்து, காற்றலை கற்றலாய் மாற்றி இருப்பை ஒன்றாகும் செயலே குருவின் செயல்.

காத்திருத்தலை விட்டு கற்றிருத்தலை துவங்குங்கள். காத்திருத்தல் காலத்தை வீணாக்கும் கற்றிருத்தல் வாழ்க்கையை மலர வைக்கும். மகாதேவ ரகசியத்தை கற்று இருத்தல், காற்றிருத்தல் அறியாமல் அதனால் அழையாமை. கற்று இருத்தல் அறிவு. அதனால் வருவது ஞானச்செறிவு. நிகழ்வது இறைவன் ஆனந்த வௌிப்பாடு, சிதம்பரத்திற்குள்ளே, சித் அம்பலத்திற்குள்ளே. பொறாமை இல்லாதவன் பொல்லாப்பு இல்லாதவன், நிலத்தை தான் ஒருவர் புடித்து கொண்டால் இன்னொருவர் இருக்கின்றாரோ என்கின்ற பயம். நெருப்பிற்கு அந்த பயம் இல்லை. எத்துனை பேர் உள்வந்தாலும் அவர்களையெல்லாம் தனதாக்கி தானே தன் மயமாக்கிக் கொள்ளும் ஒருமை தன்மையின் வௌிப்பாடு நெருப்பு. நிலத்தில் இருக்கும்வரை இது எனது என்று ஒருவர் சொன்னால் மற்றவர்க்கு அது கிடைக்காது. பொறாமையும், புரட்டும், போட்டியும், வந்தே தீரும். ஆனால் நெருப்பை பொறுத்த வரையில் ’நான் நெருப்பு’ என்று எத்துனை பேர் சொன்னாலும், நெருப்புக்கு போட்டியும் இல்லை. பொறாமையும் இல்லை. எல்லோரையும் தன்மயம் ஆக்கிக்கொண்டு, எத்துனை பேர் வந்தாலும், அதனால் மீண்டும் மீண்டும் பொங்கி ஔிரும் சக்தி உடையது நெருப்பு. (31.42) இறைவன் நெருப்பை போன்றவன். ஒருவன் அல்ல பொறாமையோடு திரிய. ஒருமை தன்மை. இறைவன் ஒருவன் அல்ல, ஒருமை தன்மை. அதனால்தான் ஒருவர் என்றால் நானே நீ என்று சொன்னால் பொறாமை வந்தாக வேண்டும். ஒருமை தன்மை என்பதால் தான் நானே நீ என்று சொன்னால் வாவென்று வாரி அணைத்து. நீ சொன்னால் போதும் அவர் செய்து காட்டி விடுவார். சொன்னவண்ணம் செய்யும் பெருமான். இன்று முழுவதும் இந்த தேவ ரகசியத்தை மகாதேவ ரகசியத்தை ஆழ்ந்து சிந்தியுங்கள். உங்கள் இனம், குணம், மனம், நன்று, தீது, வரவு, செலவு, சரி, தவறு, இவை எல்லாவற்றையும் கடந்து, உங்கள் இருப்பிலே நீங்கள் சிவமாகவெ இருக்கிறீர்கள். உங்கள் செயலும் அதன் விளைவும் உங்கள் இருப்புதன்மையான சிவமை தொடுவதும் இல்லை, சுடுவதும் இல்லை, பாதிப்பதும் இல்லை, பாதிக்கவும் இயலாது. இந்த சத்தியத்தை தொடர்ந்து சிந்தியுங்கள். கரும்பால் நா இனிக்கும். இச்சத்தியதை மனதால் விரும்ப மனமே இனிக்கும். கரும்பு சுவைக்க நாவினிக்கும். இச்சத்தியதை நினைக்க மனம் இனிக்கும். நாவினிக்க கரும்பு சுவைப்பது போலே மனம் இனிக்க இந்த சாத்தியமான சிவத்தவமசியை தொடர்ந்து சிந்தியுங்கள். அடுத்த 24 மணி நேரம் இந்த சத்தியத்தை தொடர்ந்து சிந்தியுங்கள். இதை அனுபுதியாய் அடைய விரும்போருக்கு அருமையான ஒரு வாய்ப்பு. ஆகஸ்ட் 13,14 நித்ய தியான யோகானு இரண்டு நாட்கள் தியான முகாம் பெங்களுாரு ஆதீனத்தில் அனுபுதி வேண்டும் என்று ஆவல் உடையவர்கள். வாருங்கள். பெங்களுாருவுக்கு. வரலாமா? அனுமதிப்பீர்களா? என்று நீங்கள் காத்திருப்பது எனக்கு தெரியும். வருவீர்களா வரமாட்டீர்களா என்று நான் காத்திருப்பது உங்களுக்கு தெரியுமா? வாருங்கள் காத்திருக்கின்றேன். வழிகாட்ட. தொடர்ந்து மகாதேவ ரகசியங்களை அடுத்தடுத்த சத்சங்களில் காண்போம். தினந்தோறும் மாலை 7 மணி முதல் நேரடி ஔிபரப்பு நேரடி சத்சங்கம் மூலம் இணைந்திருங்கள். முகநூல் மூலமாக, ஷாலினி தொலைக்காட்சி மூலமாக இணையதள சமூக வலைதளமான லுழரவரடிந மூலமாக. நீங்கள் எல்லோரும் நித்யானந்தத்தில் நிறைந்து நித்யானந்தத்தில் மலர்ந்து நித்தியானந்தம் ஆகிட ஆசீர்வதிக்கிறேன். நன்றி. ஆனந்தமாக இருங்கள்.

Photos From The Day:


Morning Satsang

Nithyananda Morning Satsang Nithyananda Morning Satsang Nithyananda Morning Satsang Nithyananda Morning Satsang

Honored Guest Sri Narendra Giri Ji Maharaj arrived to Meet His Divine Holiness

Honored Guest Sri Narendra Giri Ji Maharaj arrives to Satsang Nithyananda Morning Satsang with Honored Guest Sri Narendra Giri Ji Maharaj Sri Narendra Giri Ji Maharaj addresses all those present and the viewers around the world. Nithyananda Morning Satsang with Honored Guest Sri Narendra Giri Ji Maharaj Sri Narendra Giri Ji Maharaj how His Holiness is boldly raising Sanatana Hindu Dharma and sharing Dharma through various social media outlets. Nithyananda Morning Satsang with Honored Guest Sri Narendra Giri Ji Maharaj Nithyananda Morning Satsang with Honored Guest Sri Narendra Giri Ji Maharaj Nithyananda Morning Satsang with Honored Guest Sri Narendra Giri Ji Maharaj Nithyananda Morning Satsang with Honored Guest Sri Narendra Giri Ji Maharaj Nithyananda Morning Satsang with Honored Guest Sri Narendra Giri Ji Maharaj His Holiness offers all His respects to Sri Narendra Giri Ji Maharaj, speaking of how he is the Pope of Hinduism, staunchly protecting Sanatana Hindu Dharma. Nithyananda Morning Satsang with Honored Guest Sri Narendra Giri Ji Maharaj Nithyananda Morning Satsang with Honored Guest Sri Narendra Giri Ji Maharaj Nithyananda Morning Satsang with Honored Guest Sri Narendra Giri Ji Maharaj

Aadi Shaivam - Tamil Evening Satsang

Aadi Shaivam - Tamil Evening Satsang Aadi Shaivam - Tamil Evening Satsang Aadi Shaivam - Tamil Evening Satsang Aadi Shaivam - Tamil Evening Satsang Aadi Shaivam - Tamil Evening Satsang Aadi Shaivam - Tamil Evening Satsang