Difference between revisions of "July 08 2017"

From Nithyanandapedia
Jump to navigation Jump to search
Line 9: Line 9:
 
|alignment=center }}
 
|alignment=center }}
  
 +
==Transcript in Tamil==
 +
உயிரின் உயிர்ப்பின் நோக்கம் - சதாசிவத்துவத்தை அடைதல்
 +
உங்களனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன்.
 +
இந்த இனிமையான பௌர்ணமி மாலைப்பொழுதில் உங்களனைவரையும் வணங்கி வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். 
 +
உலகம் முழுவதிலிருமிருந்து பெங்களுரு ஆதீனத்தில் திரண்டிருக்கும் அன்பர்களயைும், இருந்த இடத்திலேயே ஷாலினி தொலைக்காட்சி, தீபம் தொலைக்காட்ச, நித்யானந்த தொலைக்காட்சி மூலமாக கண்டகளித்துக் கொண்டிருக்கும் அன்பர்களையும் வணங்கி வரவேற்கின்றேன்.
 +
மொத்த மனித வாழ்க்கையின் சாரம் நம் உயிரின் உயிர்ப்பின் நோக்கம்  சதாசிவத்துவத்தை அடைதல்.
 +
ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள். உயிரின் உயிர்ப்பின் நோக்கம் ஏன் உங்கள் உயிர் உயிர்த்திருக்கிறது? இந்த நோக்கமே இறை நிலையை அடைதல்.
 +
ஞான நிலை, யோக நிலை, சித்த நிலை, இறை நிலை, சதாசிவத்துவம், ஆன்ம ஞானம் அடைதல், கடவுளை உணர்தல், தன்னை உணர்தல், ஆன்மாவை உணர்தல் இந்த மாதிரி பல்லாயிரம் வார்த்தைகளை உபயோகம் பண்ணாலும் அது ஒரு சத்தியம் தான் இந்த பல ஆயிரக்கணக்கான வார்த்தைகள் வழியா சொல்லப்படுது.
 +
உருண்டையா இருந்தா இட்லி. பரவலா இருந்தா தோசை. வார்த்தைகள் வேறு வேறு. ஆனால் இறுதியின் சத்தியம் ஒன்று.
 +
இறைநிலை அடைதல், ஞானமடைதல், சித்தநிலை அடைதல், யோகநிலை அடைதல், ஞான நிலை அடைதல், ஆன்ம ஞானம் அடைதல், தன்னை உணர்தல் எல்லா வார்த்தைகளின் பொருளும் சதாசிவத்துவத்தை, சதாசிவ நிலையை அடைதல்.
 +
ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள்.
 +
சதாசிவ நிலை மூன்று பரிமாணங்கள் உடையது.
 +
சதாசிவனின் இருப்பு நிலை. சதாசிவனின் இருப்பு நிலை அப்படின்னா உங்களுடைய உள் உணர்வினாலே நீங்க எப்படி இருக்கீங்கன்னு நீங்க உணர்றீங்களோ, நல்லாப் புரிஞ்சுக்கங்க.., உங்களை நீங்கள் எவ்வாறு உணர்கிறீர்களோ அந்த இருப்பு நிலை சதாசிவமயமாக மாறுதல்.
 +
இப்ப சாதாரணமா உங்களை எப்படி நீங்க உணர்றீங்க? அதெல்லாம் ஏன் சாமி கேட்கறீங்க? எப்படியெப்படி உணர்றோம்னு நமக்கே பல நேரத்தில புரியறது கூட இல்லை. அதெல்லாம் ஒரு நேரத்தில் ஒரு மாதிரி இருக்கும் சாமி. காலைலே எந்திரிச்சா ஃபுல்லா காஃபி குடிச்சிட்டு ஃப்ரெஷ்ஷா இருந்தா ஒரு மாதிரி இருக்கும், அப்புறம் மத்தியானம் ஆபிஸ்ல சாப்பிட்டவுடனே இன்னொரு மாதிரி இருக்கும், மேனேஜரைப் பார்த்தா ஒரு மாதிரி இருக்கும், சர்வண்ட்டைப் பார்த்தா இன்னொரு மாதிரி இருக்கும், மாமியாரைப் பார்த்தா ஒரு மாதிரி மாறும், மாமனாரைப் பார்த்தா ஒரு மாதிரி மாறும், மருமகளைப் பார்த்தா இன்னொரு மாதிரி மாறும். சைக்கோ ட்ராமான்னு சொல்வோம்.  சைக்கோ ட்ராமான்னு சொல்வோம்.
 +
கணவன் மனைவி உறவை ஒரே வார்த்தையில சொல்லணும்னா ஒரு பாகம் லாஜிக். இன்னொரு பாகம் சைக்கோ. சைக்கலாஜிக்.  ஒருபாகம் சைக்கோ இன்னொரு பாகம் லாஜிக்கல்.
 +
ஒவ்வொருவருடையும் ஒவ்வொரு மாதிரி ரியாக்ட் பண்றோம், ஒரொரு சுழ்நிலைல ஒவ்வொரு மாதிரி ஃபீல் பண்றோம். ஒரே ஒருவேளை சாப்பாடு மிஸ் ஆயிடுச்சுன்னா நம்பளை சுத்தியிருக்கறவங்க அத்தனைப் பேரையும் கடிச்சு வெச்சிடுவோம்.
 +
எத்தனைப் போ் இதை அனுபவமா உணர்ந்திருக்கீங்க?
 +
ஒருவேளை சாப்பாடு மிஸ் ஆயிடுச்சுன்னா சுத்தியிருக்கறவங்க அத்தனைப் பேரையும் கடிச்சு வெச்சிடுவோம்.
 +
ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள்.
 +
நம்முடைய இருப்பு நிலை தரம் தாழ்ந்துபோனது மட்டுமல்லாமல் ஸ்திரம் இல்லாமலும் போனது. இதுதான் நமக்கு நாமே இழைத்துக் கொண்ட மிகப்பொிய கொடுமை.
 +
ஐயா நமக்கு நாமே இழைத்துக் கொண்ட மிகப்பொிய கொடுமைன்னு நீங்க வேறு எதையாவது உங்க வாழ்க்கையில எதையாவது நினைச்சீங்கன்னா அதெல்லாம் மறந்திருங்க.
 +
நாம நினைச்சிருப்போம் இந்த கல்யாணத்திற்கு சரின்னு சொன்னேனே அதான் சாமி நான் எனக்குப் பண்ண பொிய கொடுமை!..
 +
இந்த வேலையை ஏத்திக்கிட்டேன் பாருங்க சாமி அதான் நான் எனக்குப் பண்ணப் பொிய கொடுமை!
 +
இல்லை இந்த நாட்டிலபோய் இருக்கறதுன்னு முடிவு பண்ணேன் பாருங்க,நான் எங்கேயோ இருக்க வேண்டியவன் இங்க இருக்கேன்.
 +
என்னென்னவோ நினைச்சிகிட்டு இருக்கோம்.
 +
நாம நமக்கே செஞ்சுகிட்ட கொடுமைகள் என்று..
 +
நல்லாத் தெிஞ்சுக்கங்க. தன்னிலைத் தாழ்தலும், பிறழ்தலும் -
 +
தாழ்தல்னா குறைதல் - பிறழ்தல்னா தொடர்ந்து மாறுதல்.
 +
தொடர்ந்து நிலையில்லாது இருத்தல்.
 +
எத்தனை பேருக்கு நான் சொல்றது ஆஹா எனக்கே சொல்றா மாதிரி இருக்கே அப்படின்னு ஃபீல் பண்றீங்க?
 +
அதுதான் உண்மை.
 +
உங்களுக்குத்தான் சொல்லிட்டிருக்கேன். நமக்குள் இருக்கின்ற ‘நாம்’ அப்படிங்கற உணர்வு தாழ்ச்சியும், பிறழ்ச்சியும் இல்லாமல் ஸ்திரத்தன்மைக்கு வருவது.
 +
ஆழ்ந்து தொிந்து கொள்ளுங்கள்.
 +
நாம் நமக்கே இழைச்சுகிட்ட மிகப்பொிய கொடுமை தன்னிலை தாழ்தல்.
 +
நம்மைப் பற்றி நாம் வைத்திருக்கும் புரிதல் குறைந்து கொண்டே செல்லுதல். 
 +
நம்மைப்பற்றி நாம் வைத்திருக்கும் புரிதல் பிறழ்ந்து கொண்டே செல்லுதல்.
 +
நம்மைப்பற்றி நாம் வைத்திருக்கும் புரிதல் மேம்பட்டுக் கொண்டே சென்றால் வாழ்க்கையில் வெற்றி அடைகிறோம். நம்மைப்பற்றி நாம் வைத்திருக்கும் புரிதல் தாழ்ந்து கொண்டே சென்றால் வாழ்க்கையை இழந்து கொண்டிருக்கின்றோம்.
 +
இதுதான் வாழ்க்கை வெற்றியா? தோல்வியா?  என்பதற்கான இலக்கணம். வெற்றியோ தோல்வியோ உங்க பேங்க்ல சோ்ற ஜீரோ இல்லை. கட்டுக் கட்டா பொட்டில சோ்த்து பெட்டுக்கடில புட்டி வெச்சிக்கிறது இல்ல.  திடீர்னு ஒரு நாள் செல்லாதுன்னு சொல்லிடறாங்க.
 +
பெட்டுக்கு கீழே இருந்தது மொத்தமும் சமாதி.
 +
வாழ்க்கையினுடைய வெற்றித் தோல்வி பொருள் சார்ந்தது அல்ல. தன்னிலைப்பற்றி வைத்திருக்கும் தௌிவு சார்ந்தது.
 +
ஒரு நல்ல செய்தி என்னன்னா.., இப்ப உங்களுக்கு இருக்கிற ஸ்திரமில்லாத தன்னிலையிலருந்து சதாசிவ நிலையை அடைவது சாத்தியம். சாத்தியமில்லாத ஒண்ணை நான் சொல்லலை.
 +
சில வைத்தியர்கள் இருப்பார்கள். கள்ளிச்செடி ஆணிவோ் அறாம புடுங்கி உள்நாக்கில படாம முழுங்கினா வயித்துவலி சரியாப்போகும். (அழகான சிரிப்பு)
 +
இது ஆகற வைத்தியமா?
 +
வயித்துவலின்னு வைத்தியர்ட்டே போனா கள்ளிச்செடியை ஆணிவோ் அறாம புடுங்கப்பா உள் நாக்கிலபடாம முழுங்கப்பா வயித்து வலி சரியாப்போகும்னா நாம போனது வைத்தியர் இல்லை. பைத்தியர் என்று தொிஞ்சிக்கங்க.
 +
ஏதோ நடப்பதற்கு சாத்தியமில்லாத ஒன்றை உங்கள் முன்னால் திறந்து வைக்கவில்லை.
 +
நல்ல செய்தி என்னன்னா சாத்தியத்தை மட்டும்தான் உங்கள் முன் பேசுகிறேன்.
 +
அதைவிட நல்ல செய்தி என்னன்னா சாத்தியம் மட்டுமல்ல எளிமையானது.
 +
ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள், இந்த ஆன்ம வித்தை தன்னுடைய ஆன்மாவின் சத்தியத்தை தன்னுடைய இருப்பின் சத்தியத்தை ஆன்ம வித்தையை புரிந்து கொள்ளுதல். ஆன்ம வித்தையை புரிந்து கொள்ளுதல்.
 +
உண்மையிலேயே சாத்தியம் மற்றும் எளிமையானது.
 +
சதாசிவத்துவ நிலையை அடைவது சாத்தியம் மற்றும எளிமையானது.
 +
காரணமென்னன்னா நம்மை உருவாக்கும்பொழுதே பெருமான் தன்னை உணர்வதற்கான சாஃப்ட்வேரையும் இன்சர்ட் பண்ணிதான் உருவாக்கி அனுப்பியிருக்காரு.
 +
அந்த சாஃப்ட்வேரோட தான் நம்பளை அனுப்பிச்சிருக்கார். அந்த மன அமைப்பு சாத்தியக்கூறுகள் அந்த எண்ணத்தின் மலர்ச்சியின் சாத்தியக்கூறுகளை நமக்குள் வைத்துத்தான் அனுப்பியிருக்கார்.
 +
எப்படி ஒரு மாம்பழத்திற்குள் இருக்கின்ற விதைக்கு மாமரத்தையே உருவாக்கி ஆயிரக்கணக்கான  பழங்களை உருவாக்கி அந்தப் பழங்களுக்குள் தன்னுடைய விதையையும் வைக்கின்ற சக்தியை உள்வைத்து அனுப்புகின்றாரோ, அதேபோல் நமக்குள்ளும் சதாசிவத்துவ நிலையை அடைகின்ற சாத்தியத்தை வைத்துத்தான் அனுப்பியிருக்கின்றார்.
 +
ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், நம்முடைய இருப்பில் நாம் எவ்வாறு இருக்கின்றோமோ அதில் சதாசிவத்துவ நிலை நாம் எவ்வாறு செயல்படுகின்றோமோ, நமது தினசரி நடவடிக்கைகள் சிந்தனைகள், செயல்பாடுகள் இவைகளிலும் சதாசிவத்துவ நிலை.
 +
ஒவ்வொன்றாகப் புரிந்து கொள்ளுங்கள்.
 +
இருப்பிலே சதாசிவத்துவநிலை என்றால் எல்லாவற்றையும் கடந்த ஒரு தௌிவு. கேட்கும்பொழுது பொிய வார்த்தை மாதிரி இருக்கும். ஆனால் வாழத்துவங்கினீர்களாளால் ரொம்ப எளிமையானதாக இருக்கும்.
 +
இங்கிலிஷ்ல டெசிஷன் பெட்டிக்னு சொல்வாங்க. அந்த வார்த்தைக்கு அர்த்தம் என்னன்னா பொிய பொிய அதிகாரிகளா இருப்பவங்க காலைலருந்து ஒண்ணுமே செஞ்சிருக்க மாட்டாங்க. கார்த்தாலேருந்து சாயந்திரம் வரைக்கும் அந்த சுத்தற சோ்ல உட்கார்ந்து பத்து காஃபி குடிச்சு போற வர்றவங்களையெல்லாம் சும்மாவே நாலு கேள்வி கேட்டிருப்பாங்க. அதுக்குள்ளே டயர்டாயிடுவாங்க.
 +
சிந்தனையில் உழைப்பதால் செயல்படுவதாலேயே தான் ரொம்ப சாதிச்சிட்டதா கற்பனைப் பண்ணிக்கிட்டு, அதுனால வர்ற சோம்பல்தனத்தைத்தான் டெசிஷன் ஃபெட்டிக்னு சொல்றோம்.
 +
நம்ம வாழ்க்கையிலலாம் கூட திரும்பிப் பாருங்க. ஒண்ணும் பொிசா பண்ணியிருக்க மாட்டோம் நாலு போிட்ட நாலு விஷயத்தைப் பேசியிருப்போம். நம்ம ஆபிஸ்லயோ கடையிலயோ உட்கார்ந்து, நாலு இடத்தில சைன் பண்ணியிருப்போம். அவ்வளவுதான். அதுக்குள்ளே ஏ! ரொம்ப இன்னிக்கு வேலைப்பா.
 +
ஆனா உட்கார்ந்து ஆராய்ந்துப் பார்த்தோமானால் மொத்தமா ஒரு அரைமணி நேரம் ஆக்டிவ்வா ஏதாவது செஞ்சிருப்போம். அவ்வளவுதான். எத்தனைப் பேருக்கு நான் சொல்றது புரியுது? ‘‘ஆஹா! என் வாழ்க்கையை சிசிடிவி கேமரா வெச்சு பார்த்து பேசறா மாதிரியே இருக்கே!’’ உண்மை!
 +
டெசிஷன் ஃபெட்டிக்னு சொல்றது. சில முடிவுகளை எடுத்துவிடுவதனாலேயே தான் மிகவும் பொிய விஷயங்களை சாதித்துவிட்டதாக, கற்பனை போதையை உருவாக்கிக் கொண்டு கற்பனை போதையினால் வருகின்ற மிதப்பினால் வருகின்ற சோம்பல்த்தனத்தின் எச்சம். அதுதான் சரியான வார்த்தை ‘எச்சம்’ இந்த சோம்பல்தனத்தின் எச்சம் தான் டெசிஷன் ஃபெட்டிக். முடிவெடுப்பதால் வருகின்ற மிகப்பொிய..!  ரொம்ப உழைத்து ஓய்ந்துவிட்டதாகவருகின்ற மன அமைப்பு. ரொம்ப உழைச்சிட்டதா நினைச்சிட்டு வர்ற சோர்வு.  சிந்தனையினால், முடிவெடுப்பதனாலேயே உழைத்துவிட்டதாக பொியதாக சாதித்துவிட்டதாக ஏற்படுகின்ற சோர்வு.
 +
பலபோ் என் கிட்டே வந்து சொல்றதுண்டு. சாமி நீங்க மட்டும் எப்படி எத்தனை நாட்டுக்குப் பறந்தீங்கன்னாலும் போய் இறங்கினவுடனே நேரே போய் வகுப்பெடுக்கறீங்க.
 +
நாங்க போய் இறங்கினா அடுத்த வேலையை எந்திரிச்சு செய்யறதுக்கு இரண்டு நாள் ஆகுது. ஜெட் லாக்.  நான் சொன்னேன். நல்லா உட்கார்ந்து நிஜத்தை ஆராய்வோம். ஆமா, அமொிக்காப் போனோம். என்னப் பண்ணோம். கார்ல இருந்து ஏர்போட்டுக்கு இறங்கி ப்ளைட்டுக்கு போன அந்த அரைகிலோ மீட்டர் அல்லது முக்கா கிலோ மீட்டர் நடந்தோம் அவ்வளவுதானே. மீதி நாம் ஏதாவது பண்ணமா? ஆனா நம்ம மனசு என்ன நினைக்கிறது. இத்தனாயிரம் மைல் நான் ட்ராவல் பண்ணியிருக்கேன். நான் டயர்ட் ஆயித்தானே ஆகணும்?
 +
ஐயா! படுத்திருந்த கட்டிலோட கொண்டு போய் அங்க இறக்கி விட்டாங்க. அவ்வளவுதான். தூங்கிட்டேயிருந்து டயர்ட் ஆகுமா? ஆழ்ந்து சிந்தியுங்கள். இதெல்லாம் நமது மனதிற்குள் இருக்கின்ற தௌிவில்லாத முடிச்சுக்களினால் ஏற்படுகின்ற சோர்வு.
 +
உங்கள் தினசரி வாழ்க்கையிலையும் பாருங்க. நான் பல நாடுகளுக்கு போற உதாரணத்தைக் கொடுத்தேன். உங்க வாழ்க்கையிலும் பாருங்க.
 +
பலநேரத்தில ஒண்ணும் பொிசா செஞ்சிருக்க மாட்டோம்.. ஒண்ணும் ஆக்டிவ்வாலாம் இருந்திருக்க மாட்டோம். மனசுக்குள்ளே யாராவது நாலு பேரை நினைச்சுத் திட்டியிருப்போம். இன்னொரு நாலு பேரை நினைச்சு எரிஞ்சிருப்போம். ரெண்டு மணி நேரத்துக்குள்ள என்ன ஆயிடுது? டயர்டாயிடறோம்.
 +
இருப்பின் ஸ்திரம் இல்லாதத் தன்மை. இருப்பின் ஸ்திரம் இல்லாதத் தன்மை.
 +
இருப்பின் ஸ்திரம் இல்லாத தன்மைதான் நமக்கு நாமே இழைத்துக்கொள்கின்ற மிகப்பொிய சங்கடம். மிகப்பொிய துரோகம்.
 +
எந்த நிலையில் நாம் இருக்கின்றோம்? எந்த நிலையில் நாம் செயல்படுகின்றோம்? 
 +
தினந்தோறும் நாம செயல்படறதுக்கான உத்சாகமாக எந்தவிதமான உணர்ச்சிகள் இருக்கின்றது?
 +
காலைல எந்த உணர்ச்சி நம்மை பெட்டிலிருந்து வௌியில தள்ளிவிடுது?
 +
இன்னொரு நாள் வந்திருச்சே? எந்திரிச்சுப் போய்த்தானே ஆகணும். அந்த உணர்வா? ஆஹா இன்னும் ஒரு நாள் புலர்ந்தது. எழுந்திருப்போம் வாழ்க்கையைக் கொண்டாட!
 +
எந்த உணர்வு நம்மை படுக்கையிலிருந்து தள்ளுகிறது?
 +
எந்த உணர்வு நம் வாழ்க்கையை இயக்குவதற்கு உந்துகின்றது?
 +
எதனால் நாம் தயாரிக்கப்பட்டிருக்கின்றோம்?
 +
எது நமது எரிபொருளாக இருக்கின்றது?
 +
எதனால் நாம் தயாரிக்கப்பட்டிருக்கின்றோம்னா.. ஒரு காருக்கு என்ஜின் என்ன உலோகத்தால் ஸ்திரத்தன்மையான உலோகத்தால் செய்யப்பட்டிருக்கிறது, அதுல  என்ன எரிபொருள் இயக்குகிறது? இந்த இரண்டுமே முக்கியம்.
 +
உங்களட வாழ்க்கையிலும் நீங்கள் உங்களை எப்படிக் கருதுகின்றீர்களோ அதுதான் நீங்க செய்யப்பட்டிருக்கும் உலோகம். நீங்கள் எந்த உலோகத்தால் செய்யப்பட்டிருக்கிறீர்களோ அந்த உலகத்தைத்தான் நீங்கள் உணர்வீர்கள். 
 +
நீங்க உங்களை ஸ்திரமாக பலமாக ஆழமாக உணர்ந்தால் உங்களை சுத்தியிருக்கிற உலகமும் ஸ்திரமாக பலமாக உங்களுக்கு பலமாக இருக்கும்.
 +
உலகம் கண்ணாடி மாதிரிங்கய்யா. பயந்து நடுங்கினா ஏய்! அப்டிங்கும்.
 +
நிமிர்ந்து தைரியமா நின்னோம்னா ஐயா அப்டிங்கும். அவ்வளவுதாங்கய்யா.
 +
உலகம் கண்ணாடி மாதிரி.
 +
உலகத்தைப்பற்றி யோசித்தோமானால் உங்கள் வாழ்க்கையில் எதிலும் எதையும் சாதிக்க முடியாது. எதையும் நிறைவேற்ற முடியாது. எதையும் நடத்த முடியாது. எதிலும் நிற்க முடீயாது.
 +
அவர்கள் உங்கள் வாழ்க்கையை னைஉவயவந பண்ணா நீங்க ஜெயில்ல இருக்கீங்க. அவர்கள் வைத்த சிறையில இருக்கீங்க.
 +
உங்களை சுற்றியிருக்கறவங்க உங்களைப்பற்றி என்னக்கருத்து வெச்சிருந்தாலும் உங்களுக்குப் பாதிப்பில்லை. ஆனா நீங்க பயந்தாங்கோளின்னு மட்டும் நினைச்சிட்டாங்கன்னா நீங்க செத்ததுக்கு சமம்.
 +
ஒரு நிருபர்ட்டே நான் சொல்லிட்டிருந்தேன். என் கிட்டே கேட்டுட்டாரு. என்ன சாமி உங்களை சுற்றி நிறைய கான்ட்ராவர்சியா இருக்கு?
 +
உயிரோட இருக்கற வாழற யாராவது ஒரே ஒருத்தரைப்பற்றி, ஏதாவது ஒரு விஷயத்தை வாழ்க்கையில சாதிச்சவங்களைப் பற்றி கான்ட்ராவர்சி வராம இருந்தா ஒரே ஒருத்தர் போ் கொடுங்கன்னு சொன்னேன்.
 +
எந்தத்துறையானாலும் நாம் ஒன்றை செய்யும்பொழுது எதிரிகள் ஒரு கான்ட்ராவர்சியை உருவாக்கறது மூலமாத்தான் நம்மயை மிரட்டுவாங்க..  பணிந்தால் நாம் அவருக்கு அடிமை. பணியாவிட்டால் அவர் நமக்கு அடிமை. அவ்வளவுதான். இவ்வளவே வாழ்க்கை.
 +
மிரண்டால் நாம் அவர்க்கு அடிமை. மிரளாவிட்டால் அவர் நமக்கு அடிமை.
 +
என்ன மாதிரியான ஸ்திரத்தன்மையோடு உங்களைப்பற்றி நீங்கள் கணக்குப்போடுகிறீர்கள்? உங்களுடைய பலம் பலவீனத்தைப் பற்றி நீங்கள் என்னத் தௌிவோடு இருக்கின்றீர்கள்? அதுதான் உயிர் கற்பு.
 +
ஒரு மனைவியோடு ஒரு கணவனோடு வாழ்வது உறவுக் கற்பு.
 +
நம்மைப்பற்றித் தௌிவோடு இருப்பது உயிர் கற்பு.
 +
நம்மைப்பற்றி நாமே ஒரு தௌிவை உருவாக்கி அந்தத் தௌிவோடு இருப்பதுதான் உயிர்க்கற்பு.
 +
உறவுகளை மாற்றிக்கொண்டேயிருப்பது எப்படி கற்பில்லாத்தனமோ தமிழ்ல வேசித்தனம்னு சொல்வோம்.  உறவுகளை.. அது ஆணானாலும் பெண்ணானாலும் பெண்ணுக்கு மட்டும் ஆணுக்கு மட்டுமல்ல எப்பாலாயிருந்தாலும் எந்த மனிதராயிருந்தாலும் ஆணோ பெண்ணோ யாராயிருந்தாலும் உறவுகளை மாற்றிக்கொண்டேயிருப்பது வேசித்தனம். ஓர் உறவுக்கு நோ்மையோடு வாழ்வது கற்பு.
 +
அதேமாதிரி நம் உயிரும் நம்மைப்பற்றி ஒரு தௌிந்த கருத்தோடு ஸ்திரமாக இருப்பது உயிர் கற்பு.
 +
நமக்கே ஸ்திரம் இல்லைன்னா மாறிக்கிட்டயிருந்தோம்னா வாழ்க்கையின் அடித்தளம் ஆடிக்கொண்டேயிருக்குமானால் எதை நீங்கள் சாதித்தாலும் உங்களுடைய வாழ்க்கை உயிர்ப்போடோ, மலர்ச்சியோடோ, நிம்மதியோடோ, நிறைவோடோ அமைவதில்லை.
 +
உயிர் கற்பு. நீங்கள் உங்களைப்பற்றி வைத்திருக்கும் கருத்தின் தௌிவினால் ஏற்படும் உயிர்க்கற்புதான் வாழ்க்கையை நிறைவடைவதற்கு, முழுமைத்தன்மை அடைவதற்கான அடிப்படையான தேவை.
 +
இன்னிக்கு உங்க எல்லாருக்கும் புரணத்துவ தியானம் அளிக்கப்பட்டிருக்கும். கம்ப்ளீஷன் மெடிட்டேஷன். அது உயிர் கற்பை உருவாக்குவதற்கான தியானம்.
 +
தினந்தோறும் 21 நிமிடமாவது தூங்கறதுக்கு முன்னாடி, பல போ் சொல்றதுண்டு. டைமே இல்லை சாமி. எப்படியாயிருந்தாலும் டெய்லி தூங்கித்தானே ஆகணும்.  அதுக்கு டைமே இல்லைன்னு சொல்றீங்களா? தூங்கறதுக்கு முன்னாடின்னு அதனால தான் சொல்லிட்டேன். அப்ப டைம் இல்லைன்னு சொல்ல முடியுமா? தூங்கறதுக்கு முன்னாடி படுக்கையிலிருந்தபடியே அப்ப மனதுக்குள் இருக்கின்றதான சிக்கலான மனச்சிக்கல்களான இந்த எல்லா இன்-கம்ப்ளீஷன்ஸையும் குறை உணர்வு நிலைகளையும் ஆழ்ந்து வாழ்ந்து பாருங்கள்.
 +
மலச்சிக்கல் போக கடுக்காய்ப் பொடியும்.
 +
மனச்சிக்கல் போக கம்ப்ளீஷன் தியானமும், இதை முடிந்நிட்டு மட்டும் படுங்க. உங்கள் உடலும் மனமும் சதாசிவத்துவ நிலையிலேயே நிலைத்திருக்கும். அதுக்கு நான் உறுதி.
 +
கடுக்காய் கொடுத்திட்டான்னு, ரொம்ப கிண்டலா பழமொழி சொல்றோம் பாருங்க.
 +
நம்முடைய பாரம்பரிய கருத்துக்கள் எல்லாவற்றையுமே நம்முடைய பாரம்பரியத்தின் சத்தியங்கள் எல்லாவாற்றையுமே வில்லனாவோ, காமெடியாகவோ காட்டிக் காட்டி நமக்கு அதன் மீது மரியாதை இல்லாமல் செய்தார்கள். கொடுமை!
 +
இந்தக்கடுக்காய்ப் பொடி வயிற்றுக்கான மலச்சிக்கல் மட்டும் நீக்குவதல்ல. மனச்சிக்கலையும் நீக்கும். மலச்சிக்கலையும் நீக்கும். மனச்சிக்கலையும் நீக்கும்.
 +
ராத்திரி உறங்குவதற்கு முன்பு இந்தப் புரணத்துவ தியானம் கம்ப்ளீஷன் மெடிடேஷனைப் பண்ணிணீங்கன்னா அந்த உயிர்க்கற்பு உங்களுக்குள் ஆறு மாதத்திற்குள் மலர்ந்துவிடும். அதிகபட்சம் ஆறு மாதம்தான் வேணும்.
 +
உங்கள் இருப்பை சதாசிவமயமாக மாற்றுவதற்கு சக்திவாய்ந்த தியானமுறை இந்த கம்ப்ளீஷன் மெடிடேஷன். உங்களுடைய தினசரி நடவடிக்கைகளை எந்த உணர்விலிருந்து செயல்படுகிறீர்களோ, இயங்குகிறீர்களோ அதை மாற்றியமைப்பதற்கு சதாசிவநிலையாக சதாசிவனின் இருப்பும், சதாசிவனின் நிலையும் சதாசிவசக்திகளை வௌிப்படுத்தலும் இந்த மூன்றும் சோ்ந்ததுதான் சதாசிவத்துவம்னு சொல்றேன்.
 +
சதாசிவனின் இருப்பு நிலை, சதாசிவனின் இருப்பு - அதாவது உங்களைப் பற்றி நீங்க வெச்சிருக்கற கருத்து புரணத்துவத்தோட இருப்பது. உங்கள் சிந்தனை செயல் சொல் எல்லாமே பொறுப்பெடுத்தல் மூலமாக உலகையே வளப்படுத்துவதாக அமைவது.
 +
எப்படி வேணா வாழ்ந்திடலாங்கய்யா.., சாராயம் வித்தும் சம்பாதிச்சிடலாம். நாலுபேருக்கு நாட்டு மருந்து. சித்த மருந்து கொடுத்தும் சம்பாதிக்கலாம். உயிர்கொடுத்தும் சம்பாதிக்கலாம். உயிர் எடுத்தும் சம்பாதிக்கலாம். புகையிலை வித்தும் சம்பாதிக்கலாம், சிகரெட் வித்தும் சம்பாதிக்கலாம், நாலு பேருக்கு கல்வியையும் ஞானத்தையும் கொடுத்தும் சம்பாதிக்கலாம்.
 +
நல்லாத் தொிஞ்சுக்கங்க. ஒரு பொிய கொடுமை என்னத்தொியுமா? புகையிலையோ சாராயமோ ஃப்ரீயா கிடைக்கணும்னு யாரும் எதிர்பார்க்கறதில்லை. ஆனா சிவதீக்ஷையும், ஞானமும், யோகமும், தீக்ஷையும் ஃப்ரீயா கிடைக்கணும்னு எதிர்பார்க்கறாங்க. கொடுமை.
 +
சாராயம் விக்கறவன், புகையிலை விக்கறவன், சிகரெட் விக்கறவன் அவன் வாழ்க்கையை நடத்தணும் இல்லை. பணம் கொடுக்கணும்தானே அப்படின்னு நினைக்கற மக்கள் ஆன்மிகத்தையும், ஞானத்தையும் யோகத்தையும் அளிக்கிற அவங்களும் அந்த நிறுவனத்தை நடத்தணுமேன்னு நினைக்கறதேயில்லை.
 +
சாராயம் புகையிலை அதுக்கெல்லாம் என்ன வேணா செலவு பண்ணத்தயாரா இருக்கோம். ஆனா இது என்னவா கிடைக்கணும் ஃப்ரீயாத்தான் கிடைக்கணும். சரிப்பா பரவாயில்லை. அப்படியாவது செஞ்சா போதும். ஃப்ரீயா கொடுப்போம். ஊரிலிருந்து பெங்களுர் வரைக்கும் போயிட்டு வரதுக்கு பஸ் கொடுப்பாங்களா?
 +
அதுவும் குடுத்து கூப்பிட்டுட்டு போலாமில்லை. சாமி தங்கமாத்தானே போட்டுட்டு இருக்கு.
 +
மனித மனமப்பா! மனித மனமப்பா!
 +
எந்த நிலையிலிருந்து வாழ்க்கையில் இயங்குகின்றோம்?
 +
நமக்கும் நம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கும், பொறுப்பெடுத்தலும் நாம் செய்வது எல்லாமே நம்மையும் உலகத்தையும் வளப்படுத்துவதையுமாக இருப்பதுதான் சதாசிவநிலை.
 +
எதனாலும் அசைக்க முடியாத ஸ்திரத்தன்மையான முழுமைத்தன்மையோடு இருப்பது சதாசிவன் இருப்பு. எதனாலும் அசைக்க முடியாத முழுமைத்தன்மையோடு இருப்பது சதாசிவன் இருப்பு.
 +
நமக்கும் உலகத்திற்கும் பொறுப்பெடுத்து, நம்மையும் உலகத்தையும் வளப்படுத்தும் சிந்தனை செயல்களோடு மட்டும் இயங்குவது சதாசிவ நிலை.
 +
இன்டெக்ரிட்டியும், ஆத்தன்டிசிட்டியும் சதாசிவனின் ஸ்டேட்.
 +
ரெஸ்பான்சிபிளிட்டியும் என்ரிச்சிங்கும் சதாசிவனுடைய ஸ்பேஸ்.
 +
இந்த ரெண்டையும் நமக்குள் கொண்டுவந்தால் சதாசிவன் சக்திகள் நமக்குள் வௌிப்படத்துவங்கும்.
 +
பார்த்திருப்பீங்க, மூன்றாவது கண் மூலமாக படித்தல். பல்வேறு சக்திகள் வௌிப்பாடுகள் அதெல்லாம் எதுவும் மாயமோ, மந்திரமோ, சித்துவிளையாட்டோ ஏமாற்று வித்தையோ இந்திரஜால வித்தையோ அல்ல. மாயமும் அல்ல. ஜாலமும் அல்ல. மந்திரமும் அல்ல.
 +
சதாசிவனின் அறிவியல். எனக்கும் சாத்தியம். உங்களுக்கும் சாத்தியம். இதுவே சத்தியம். அதனாலதான் சொல்றேன் இது அறிவியல்.
 +
சதாசிவனின் இருப்பு நிலையில் இருப்பதற்கான உயிர்கற்பு நிலையை அடைவதற்கான முறை புரணத்துவ தியானம்.
 +
தினந்தோறும் இருபத்தோரு நிமிடம் செய்யுங்கள்.
 +
சதாசிவனுடைய இயங்குநிலை. செயல்படுநிலை அதில் இருந்து செயல்படுவதற்கான நுட்பம் இப்ப உங்களுக்கு அளிக்கப்படப்போகின்ற சமய தீக்ஷை மந்திரம்.
 +
நேரம் கிடைக்கும்பொழுதெல்லாம் இந்த சமய தீக்ஷை மந்திரத்தை மனத்தாலே ருசித்து இரசித்து அசைபோட்டுக் கொண்டிருங்கள். எப்படி ஒரு மாடு உண்டுவிட்டு வந்து ஓய்ந்து இருக்கும் நேரத்தில் வாயிலே அதை அசைபோடுகின்றதோ,  நமக்கு அந்த மெக்கானிசம் இல்லமப் போனதுதான் இவ்வளவு பொிய வயிறு இருக்கறதுக்கான காரணம்.
 +
வாயில் தங்காதது வயிற்றில் தங்கும். பொியவங்க சொல்லி வெச்சிருக்காங்க. வாயிலே வைத்து நன்கு அரைத்து உள்ளே தள்ளாதது வயிற்றில போய் டயர் மாதிரி நின்னுடும்.
 +
ஒரு ரெண்டு டயர் கட்டிண்டு சுத்தறா மாதிரியே சுத்தறோம் பாருங்க.
 +
வாயிலே தங்காதது வயிற்றில் தங்கும்.
 +
மாடு எப்படி அசைபோடுதோ அதுபோல இந்த மந்திரத்தை எப்போதும் இரசித்து அசைபோட்டுக்கொண்டேயிருங்கள். ஜபிக்கணும்னு சொன்னாக்கூட பொிய வேலை மாதிரி நினைப்போம். ரிலாக்ஸ்டா அசைபோட்டுக் கொண்டேயிருத்தல்.
 +
வேற ஏதாவது ஊர்ல இருக்கற கண்டதையெல்லாம்  யோசிக்காம, மனசுக்குள்ள டிப்ரஷன்லயே இருக்காம இந்த மந்திரத்தை இரசித்து ருசித்து அசைபோட்டுக் கொண்டேயிருங்கள். நீங்கள் செயல்படும் நிலை, உங்களுடைய உயிருக்கான சக்தி மிகப்பொிய நிலைக்கு மாறும்.
 +
இப்போ உங்களுக்குள்ள எந்த எண்ணங்களை வைத்திருக்கிறீர்களோ அதுதான் உங்களுக்குள்ள ஊத்தற எரிபொருள்.  அது என்ன கிரசின் கூட இல்லை. காவாய்த்தண்ணி.  கெரசின் ஊத்தி வண்டி எடுத்தா எப்படி இருக்கும் என்று தெரியுமில்லை? அப்படியில்லாம ப்யுர் பெட்ரோலா ஃபுயலா மாத்தறது நம்முடைய பொறுப்பு. அதுதான் நம் பொறுப்பு.
 +
ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள்.
 +
உங்களுடைய சிந்தனை ஓட்டம் அதன் மூலம் இந்த மந்திரமயமாக மாறினால் சதாசிவன் இருப்பிலிருந்து சதாசிவன் நிலையில் செயல்படத் துவங்குவீர்கள். அப்ப சதாசிவ சக்திகள் வௌிப்படத் துவங்கும்.
 +
இந்த மூன்றும் சோ்ந்ததுதான் சதாசிவத்துவம்.
 +
வாழ்க்கையின் மனித வாழ்க்கையின் குறிக்கோள் இந்த சதாசிவத்துவம். சதாசிவத்துவத்தை அடைவதுதான் மனித வாழ்க்கையின் குறிக்கோள். மற்ற எல்லாமே, நீங்க புடுங்கற எல்லாமே தேவையில்லாத ஆணிதான்.
 +
தொண்ணூறு வயசு வரைக்கும் புடுங்கி முடிச்சாலும் தேவையில்லாத ஆணிதான். அது எப்பப் புரியுதோ வேகமாப் புரிஞ்சா நல்லது. அவ்வளவுதான்.
 +
இன்னைக்கே புரிஞ்சா வாழ்க்கையில உருப்படுவோம்.
 +
என்னைக்குப் புரியுதோ அன்னிக்கு உருப்படுவோம். அவ்வளவுதான்.
 +
சதாசிவனின் இருப்பில் இருக்கத் துவங்குதல்.
 +
சதாசிவனின் நிலையிலிருந்து இயங்கத்துவங்குதல்.
 +
சதாசிவ சக்திகளை வௌிப்படுத்துதல் இந்த மூன்று தான் வாழ்க்கையின் சாரம்.
 +
 +
வாழ்க்கையின் நோக்கு. வாழ்க்கையின் போக்கு. வாழ்க்கையின் சாரம். 
 +
இந்த மூன்று தான் வாழ்க்கையின் சாரம். வாழ்க்கையின் நோக்கு. வாழ்க்கையின் போக்கு. வாழ்க்கையின் சாரம்.
 +
நல்லாத் தொிஞ்சுக்கங்க. உலகம் என்னைக்குமே நீங்கள் எந்த உருப்படியான  விஷயத்தையுமே  செய்வதற்கு அனுமதிக்காது. அதனால யாரோ ஒருவரை நம்பி அவங்கள்ளாம் போனா மாதிரியே நானும் போனேன் அப்படின்னா சரி அவங்கள்ளாம் விழற குழில விழ வேண்டியதுதான். அவங்கள்ளாம் அழியற குழியில அழிய வேண்டியதுதான்.
 +
ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள். நம் வாழ்க்கை, நம் நோக்கம், நம் போக்கு நம் தௌிவு சார்ந்ததாக இருக்க வேண்டும். ஏனென்றால் பலன்கள் நமக்குத்தான் வரப்போகின்றது. போக்கும் - நோக்கும் - சென்றுசேரும் இடமும் அதன் பலாபலன்களும் நமக்குத்தான் வரப்போகின்றது.
 +
அருமையான கதை இந்த வால்மீகியின் கதை. வால்மீகி ஒரு பொிய கொடுமையான வேட்டுவன்.  திருடன், வேட்டுவர் மட்டுமல்ல திருடர். உயிர்களை மட்டும் கொன்றால் வேட்டுவன். மனிதர்களுடைய சொத்துக்களையும் எடுப்பவன் கொள்ளையன். வெறும் வேட்டுவனல்ல. வேட்டுவன் வாழ்க்கைக்காகச் செய்வது. இவன் கொள்ளையனும் கூட. 
 +
நாரதர் அவன் முன்னேத்தோன்றி அப்பா! இத்துனை பாவம் பண்றியே, நரகத்திற்கு நீ தனியாத்தான் போவே. இதனுடைய பலன்களை தனியாத்தான் அனுபவிப்பேன்னு தொியலையா. அவன் சொல்றான் நான் சம்பாதிக்கறதுல பாதியை என் மனைவி சாப்பிடறா மகன் சாப்பிடறான் மற்றும் உறவினர்கள் சாப்பிடறாங்க. அவங்கள்ளாம் சோ்ந்துத்தானே வரப்போறாங்க போய்க்கேட்டுப் பார்.
 +
மனைவி சொல்றா நீ என் கணவன் எனக்குச் சோறு போடுவது உன்னுடைய கடமை. எப்படி நீ எடுத்திட்டு வரேன்ற கவலை எனக்கெதற்கு? அந்தக் கருமம் உனக்கு.
 +
மகன் சொல்றான் ‘நான் உன் மகன் என்னை வளர்ப்பது உன் கடமை, நீ நாலு பேருக்கு உயிர்கொடுக்கின்ற மருத்துவம் செய்து கொண்டு வரியா? இல்லை நாலு போ் உயிரை எடுத்து கொள்ளையடிச்சு எடுத்திட்டு வரியான்றது எனக்கென்ன கவலை. என்னை கவனிப்பது உன் கடமை, அவ்வளவுதான்.  மத்த கருமங்கள் உன்னோடு சோ்ந்தது.’’ என்று இந்தத் தௌிவு நமக்கு வருகின்றதோ அன்றே நமக்கு உலகிடமிருந்து விடுதலை.
 +
உலகிடமிருந்து விடுதலை அடைந்தவன் தான் ஸ்திரத்தன்மை உடைய மனிதன்.
 +
உலகிடமிருந்து விடுதலை அடையாதவன் பலருடைய கூட்டுத் தொகுப்பில் இருக்கும் ஆட்டு மந்தையில் ஒருவனைப்போல.
 +
இந்த ஆட்டு மந்தைகள் பார்த்தீங்கன்னா, பல ஆடுகள் எடுக்கிற கூட்டுத் தொகுப்புகளின் முடிவுதான் இந்த ஆடும். இந்த ஆட்டுக்குன்னு தனியானத் தௌிவு கிடையாது. அப்படியே ஒரு ஆடு போனா எல்லா ஆடும் போகும். எதையும் சிந்திக்காது. ஆட்டு மந்தையின் தொகுப்பு மனம் உழடடநஉவைஎந றடைட சொல்வாங்க. இன்டுவிஜிவல் அவேக்கனிங் இல்லாத உழடடநஉவைஎந றடைட்.
 +
அது வாழ்க்கையை மயக்கத்தில் நீங்கள் நடத்துவதற்கான ஒரு மறுதலிப்பு காரணமாக இருப்பதனால் வாழ்க்கையின் தண்டனைகளிலிருந்து நீங்கள் தப்பித்துவிடலாம் என்று தயவு செய்து கற்பனை காணாதீர்கள்.
 +
வாழ்க்கையின் பலன்கள் தனியாகத்தான் நம்மை சந்திக்கும். தனியாகத்தான் நம்மை வந்து பார்க்கும். தனியாகத்தான் அவைகளை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
 +
ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள். மிகுந்த நன்மை, மிகுந்த தீமை..
 +
மிகுந்த நன்மையானாலும், மிகுந்த தீமையானாலும் வாழ்க்கை உங்களை தனிமையில்தான் எதிர்கொள்ளும்.
 +
‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்று தௌிந்து உயிர்த்தெழுபவன் தான் வாழ்க்கையின் குறிக்கோள் நோக்கி இயங்கத் துவங்குகிறான்.
 +
வாழ்க்கையின் குறிக்கோள் சதாசிவத்துவம். சதாசிவத்துவ நிலையிலிருந்து இயங்குதல், சதாசிவன் இருப்பில் இருத்தல், சதாசிவ சக்திகளை வௌிப்படுத்தல் சதாசிவனின் இருப்பும் நிலையும் சக்திகளும்  இந்த மூன்றும் தான் வாழ்க்கையின் சாரம்.
 +
காலைலே பார்த்திருப்பீங்க. சாட்சிப் ப்ரமாணமாக பார்த்திருப்பீங்க. பல போ் இந்த சக்திகளை வௌிப்படுத்துவதை எத்தனைப்போ் பார்த்தீங்க? 
 +
அது வேற ஒண்ணுமேயில்லை.
 +
சதாசிவனுடைய இருப்புத்தன்மையையும், நிலையையும் வாழ்வதனால் சதாசிவனின் சக்திகள் வௌிப்படத்துவங்குகிறது.
 +
சதாசிவனுடைய இருப்பையும், நிலையையும் வாழ்வதுடைய முக்கியத்துவத்தைக் காட்டறதுக்காகத்தான் அந்த சக்திகளை உங்களுக்குக் காட்டினாங்க. வேற ஒண்ணும் மேஜிக்கோ ஒண்ணும் கிடையாது. இதுல மாய ஜாலம் எதுவுமில்லை.
 +
இதுல மாய ஜாலம் என்னன்னா இந்த உலகம் தான் மாயஜாலம்.
 +
இந்த உலகம்தான் சதாசிவனின் மாயஜாலம்.
 +
இந்த சக்திகள் அவனுடைய சத்திய நிலை.
 +
பெருமானுடைய சத்திய நிலை இந்த சக்திகள்.
 +
இது மாயாஜாலமல்ல. பெருமானுடைய மாயாஜாலம் இந்த உலகம். பெருமானுடைய சத்திய நிலை இந்த சக்திகள்.
 +
பெருமானுடைய இருப்பையும் நிலையையும் வாழத்துவங்குங்கள். அவர் சக்திகள் வௌிப்படத்துவங்கும்.
 +
மொத்த சாரமும், நான் இப்ப உங்களோடப் பேசின சத்சங்கத்தின் மொத்த சாரமும் என்னன்னா..
 +
மனித வாழ்வின் குறிக்கோள் சதாசிவனின் இருப்பில் இருத்தல், சதாசிவனின் நிலையில் வாழ்தல், சதாசிவ சக்திகளை வௌிப்படுத்தல். அவ்வளவுதான்.
 +
அதற்கான வழி தினந்தோறும் புரணத்துவ தியானத்தை செய்வதன் மூலமாக உயிர்கற்பு நிலையில் நிற்றல், இந்த சிவதீக்ஷையான சமயதீக்ஷை மந்திரத்தை தினந்தோறும் இரசித்து ருசித்து சிந்தித்து செயல்படுவதனால் ஜபிப்பதனால் சதாசிவ நிலையை வாழுதல்.
 +
இந்த இரண்டையும் செய்யும்பொழுது சதாசிவனின் சக்திகள் உங்களுக்குள் வௌிப்படும்.
 +
தினந்தோறும் இரவு உறங்கும் முன்பாக புரணத்துவ தியானம் நேரம், கிடைக்கும்போதெல்லாம் இந்த சமயதீக்ஷை மந்திரத்தை மனத்தால் ருசித்து ரசித்து அசைபோட்டுக் கொண்டேயிருப்பது, இந்த இரண்டும்தான் செய்ய வேண்டியவைகள். இதனால் சதாசிவ சக்திகள் தானாகவே வௌிப்படும்.
 +
ஆழ்ந்து இதைப் புரிந்து கொள்ளுங்கள். சதாசிவத்துவத்தை அடைந்து சதாசிவ நிலையிலிருந்து சதாசிவன் சக்திகளை வௌிப்படுத்தி சதாசிவன் இருப்பில் இருந்து சதாசிவ நிலையில் இயங்கி சதாசிவ சக்திகளை வௌிப்படுத்தி நித்யானந்தத்தில் இருந்து நித்யானந்தமாகிட ஆசீர்வதிக்கின்றேன் ஆனந்தமாக இருங்கள்.
  
 
==Photo of The Day==
 
==Photo of The Day==
Line 84: Line 260:
 
</div>
 
</div>
  
[[Category: 2017]][[Category: Program]][[Category: Kalpataru]][[Category: Darshan]][[Category: Darshan]][[Category: Power Manifestation]]
+
[[Category: 2017]][[Category: Program]][[Category: Kalpataru]][[Category: Darshan]][[Category: Darshan]][[Category: Power Manifestation]] [[Category: தமிழ்]]

Revision as of 01:00, 22 August 2020

Title

Manifesting Powers Massive Demos | Shivastamba Demos | Kalpataru Yoga - Tamil program | Padayatris Arrive from Tiruvannamalai.

Transcript in Tamil

உயிரின் உயிர்ப்பின் நோக்கம் - சதாசிவத்துவத்தை அடைதல் உங்களனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன். இந்த இனிமையான பௌர்ணமி மாலைப்பொழுதில் உங்களனைவரையும் வணங்கி வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். உலகம் முழுவதிலிருமிருந்து பெங்களுரு ஆதீனத்தில் திரண்டிருக்கும் அன்பர்களயைும், இருந்த இடத்திலேயே ஷாலினி தொலைக்காட்சி, தீபம் தொலைக்காட்ச, நித்யானந்த தொலைக்காட்சி மூலமாக கண்டகளித்துக் கொண்டிருக்கும் அன்பர்களையும் வணங்கி வரவேற்கின்றேன். மொத்த மனித வாழ்க்கையின் சாரம் நம் உயிரின் உயிர்ப்பின் நோக்கம் சதாசிவத்துவத்தை அடைதல். ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள். உயிரின் உயிர்ப்பின் நோக்கம் ஏன் உங்கள் உயிர் உயிர்த்திருக்கிறது? இந்த நோக்கமே இறை நிலையை அடைதல். ஞான நிலை, யோக நிலை, சித்த நிலை, இறை நிலை, சதாசிவத்துவம், ஆன்ம ஞானம் அடைதல், கடவுளை உணர்தல், தன்னை உணர்தல், ஆன்மாவை உணர்தல் இந்த மாதிரி பல்லாயிரம் வார்த்தைகளை உபயோகம் பண்ணாலும் அது ஒரு சத்தியம் தான் இந்த பல ஆயிரக்கணக்கான வார்த்தைகள் வழியா சொல்லப்படுது. உருண்டையா இருந்தா இட்லி. பரவலா இருந்தா தோசை. வார்த்தைகள் வேறு வேறு. ஆனால் இறுதியின் சத்தியம் ஒன்று. இறைநிலை அடைதல், ஞானமடைதல், சித்தநிலை அடைதல், யோகநிலை அடைதல், ஞான நிலை அடைதல், ஆன்ம ஞானம் அடைதல், தன்னை உணர்தல் எல்லா வார்த்தைகளின் பொருளும் சதாசிவத்துவத்தை, சதாசிவ நிலையை அடைதல். ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள். சதாசிவ நிலை மூன்று பரிமாணங்கள் உடையது. சதாசிவனின் இருப்பு நிலை. சதாசிவனின் இருப்பு நிலை அப்படின்னா உங்களுடைய உள் உணர்வினாலே நீங்க எப்படி இருக்கீங்கன்னு நீங்க உணர்றீங்களோ, நல்லாப் புரிஞ்சுக்கங்க.., உங்களை நீங்கள் எவ்வாறு உணர்கிறீர்களோ அந்த இருப்பு நிலை சதாசிவமயமாக மாறுதல். இப்ப சாதாரணமா உங்களை எப்படி நீங்க உணர்றீங்க? அதெல்லாம் ஏன் சாமி கேட்கறீங்க? எப்படியெப்படி உணர்றோம்னு நமக்கே பல நேரத்தில புரியறது கூட இல்லை. அதெல்லாம் ஒரு நேரத்தில் ஒரு மாதிரி இருக்கும் சாமி. காலைலே எந்திரிச்சா ஃபுல்லா காஃபி குடிச்சிட்டு ஃப்ரெஷ்ஷா இருந்தா ஒரு மாதிரி இருக்கும், அப்புறம் மத்தியானம் ஆபிஸ்ல சாப்பிட்டவுடனே இன்னொரு மாதிரி இருக்கும், மேனேஜரைப் பார்த்தா ஒரு மாதிரி இருக்கும், சர்வண்ட்டைப் பார்த்தா இன்னொரு மாதிரி இருக்கும், மாமியாரைப் பார்த்தா ஒரு மாதிரி மாறும், மாமனாரைப் பார்த்தா ஒரு மாதிரி மாறும், மருமகளைப் பார்த்தா இன்னொரு மாதிரி மாறும். சைக்கோ ட்ராமான்னு சொல்வோம். சைக்கோ ட்ராமான்னு சொல்வோம். கணவன் மனைவி உறவை ஒரே வார்த்தையில சொல்லணும்னா ஒரு பாகம் லாஜிக். இன்னொரு பாகம் சைக்கோ. சைக்கலாஜிக். ஒருபாகம் சைக்கோ இன்னொரு பாகம் லாஜிக்கல். ஒவ்வொருவருடையும் ஒவ்வொரு மாதிரி ரியாக்ட் பண்றோம், ஒரொரு சுழ்நிலைல ஒவ்வொரு மாதிரி ஃபீல் பண்றோம். ஒரே ஒருவேளை சாப்பாடு மிஸ் ஆயிடுச்சுன்னா நம்பளை சுத்தியிருக்கறவங்க அத்தனைப் பேரையும் கடிச்சு வெச்சிடுவோம். எத்தனைப் போ் இதை அனுபவமா உணர்ந்திருக்கீங்க? ஒருவேளை சாப்பாடு மிஸ் ஆயிடுச்சுன்னா சுத்தியிருக்கறவங்க அத்தனைப் பேரையும் கடிச்சு வெச்சிடுவோம். ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள். நம்முடைய இருப்பு நிலை தரம் தாழ்ந்துபோனது மட்டுமல்லாமல் ஸ்திரம் இல்லாமலும் போனது. இதுதான் நமக்கு நாமே இழைத்துக் கொண்ட மிகப்பொிய கொடுமை. ஐயா நமக்கு நாமே இழைத்துக் கொண்ட மிகப்பொிய கொடுமைன்னு நீங்க வேறு எதையாவது உங்க வாழ்க்கையில எதையாவது நினைச்சீங்கன்னா அதெல்லாம் மறந்திருங்க. நாம நினைச்சிருப்போம் இந்த கல்யாணத்திற்கு சரின்னு சொன்னேனே அதான் சாமி நான் எனக்குப் பண்ண பொிய கொடுமை!.. இந்த வேலையை ஏத்திக்கிட்டேன் பாருங்க சாமி அதான் நான் எனக்குப் பண்ணப் பொிய கொடுமை! இல்லை இந்த நாட்டிலபோய் இருக்கறதுன்னு முடிவு பண்ணேன் பாருங்க,நான் எங்கேயோ இருக்க வேண்டியவன் இங்க இருக்கேன். என்னென்னவோ நினைச்சிகிட்டு இருக்கோம். நாம நமக்கே செஞ்சுகிட்ட கொடுமைகள் என்று.. நல்லாத் தெிஞ்சுக்கங்க. தன்னிலைத் தாழ்தலும், பிறழ்தலும் - தாழ்தல்னா குறைதல் - பிறழ்தல்னா தொடர்ந்து மாறுதல். தொடர்ந்து நிலையில்லாது இருத்தல். எத்தனை பேருக்கு நான் சொல்றது ஆஹா எனக்கே சொல்றா மாதிரி இருக்கே அப்படின்னு ஃபீல் பண்றீங்க? அதுதான் உண்மை. உங்களுக்குத்தான் சொல்லிட்டிருக்கேன். நமக்குள் இருக்கின்ற ‘நாம்’ அப்படிங்கற உணர்வு தாழ்ச்சியும், பிறழ்ச்சியும் இல்லாமல் ஸ்திரத்தன்மைக்கு வருவது. ஆழ்ந்து தொிந்து கொள்ளுங்கள். நாம் நமக்கே இழைச்சுகிட்ட மிகப்பொிய கொடுமை தன்னிலை தாழ்தல். நம்மைப் பற்றி நாம் வைத்திருக்கும் புரிதல் குறைந்து கொண்டே செல்லுதல். நம்மைப்பற்றி நாம் வைத்திருக்கும் புரிதல் பிறழ்ந்து கொண்டே செல்லுதல். நம்மைப்பற்றி நாம் வைத்திருக்கும் புரிதல் மேம்பட்டுக் கொண்டே சென்றால் வாழ்க்கையில் வெற்றி அடைகிறோம். நம்மைப்பற்றி நாம் வைத்திருக்கும் புரிதல் தாழ்ந்து கொண்டே சென்றால் வாழ்க்கையை இழந்து கொண்டிருக்கின்றோம். இதுதான் வாழ்க்கை வெற்றியா? தோல்வியா? என்பதற்கான இலக்கணம். வெற்றியோ தோல்வியோ உங்க பேங்க்ல சோ்ற ஜீரோ இல்லை. கட்டுக் கட்டா பொட்டில சோ்த்து பெட்டுக்கடில புட்டி வெச்சிக்கிறது இல்ல. திடீர்னு ஒரு நாள் செல்லாதுன்னு சொல்லிடறாங்க. பெட்டுக்கு கீழே இருந்தது மொத்தமும் சமாதி. வாழ்க்கையினுடைய வெற்றித் தோல்வி பொருள் சார்ந்தது அல்ல. தன்னிலைப்பற்றி வைத்திருக்கும் தௌிவு சார்ந்தது. ஒரு நல்ல செய்தி என்னன்னா.., இப்ப உங்களுக்கு இருக்கிற ஸ்திரமில்லாத தன்னிலையிலருந்து சதாசிவ நிலையை அடைவது சாத்தியம். சாத்தியமில்லாத ஒண்ணை நான் சொல்லலை. சில வைத்தியர்கள் இருப்பார்கள். கள்ளிச்செடி ஆணிவோ் அறாம புடுங்கி உள்நாக்கில படாம முழுங்கினா வயித்துவலி சரியாப்போகும். (அழகான சிரிப்பு) இது ஆகற வைத்தியமா? வயித்துவலின்னு வைத்தியர்ட்டே போனா கள்ளிச்செடியை ஆணிவோ் அறாம புடுங்கப்பா உள் நாக்கிலபடாம முழுங்கப்பா வயித்து வலி சரியாப்போகும்னா நாம போனது வைத்தியர் இல்லை. பைத்தியர் என்று தொிஞ்சிக்கங்க. ஏதோ நடப்பதற்கு சாத்தியமில்லாத ஒன்றை உங்கள் முன்னால் திறந்து வைக்கவில்லை. நல்ல செய்தி என்னன்னா சாத்தியத்தை மட்டும்தான் உங்கள் முன் பேசுகிறேன். அதைவிட நல்ல செய்தி என்னன்னா சாத்தியம் மட்டுமல்ல எளிமையானது. ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள், இந்த ஆன்ம வித்தை தன்னுடைய ஆன்மாவின் சத்தியத்தை தன்னுடைய இருப்பின் சத்தியத்தை ஆன்ம வித்தையை புரிந்து கொள்ளுதல். ஆன்ம வித்தையை புரிந்து கொள்ளுதல். உண்மையிலேயே சாத்தியம் மற்றும் எளிமையானது. சதாசிவத்துவ நிலையை அடைவது சாத்தியம் மற்றும எளிமையானது. காரணமென்னன்னா நம்மை உருவாக்கும்பொழுதே பெருமான் தன்னை உணர்வதற்கான சாஃப்ட்வேரையும் இன்சர்ட் பண்ணிதான் உருவாக்கி அனுப்பியிருக்காரு. அந்த சாஃப்ட்வேரோட தான் நம்பளை அனுப்பிச்சிருக்கார். அந்த மன அமைப்பு சாத்தியக்கூறுகள் அந்த எண்ணத்தின் மலர்ச்சியின் சாத்தியக்கூறுகளை நமக்குள் வைத்துத்தான் அனுப்பியிருக்கார். எப்படி ஒரு மாம்பழத்திற்குள் இருக்கின்ற விதைக்கு மாமரத்தையே உருவாக்கி ஆயிரக்கணக்கான பழங்களை உருவாக்கி அந்தப் பழங்களுக்குள் தன்னுடைய விதையையும் வைக்கின்ற சக்தியை உள்வைத்து அனுப்புகின்றாரோ, அதேபோல் நமக்குள்ளும் சதாசிவத்துவ நிலையை அடைகின்ற சாத்தியத்தை வைத்துத்தான் அனுப்பியிருக்கின்றார். ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், நம்முடைய இருப்பில் நாம் எவ்வாறு இருக்கின்றோமோ அதில் சதாசிவத்துவ நிலை நாம் எவ்வாறு செயல்படுகின்றோமோ, நமது தினசரி நடவடிக்கைகள் சிந்தனைகள், செயல்பாடுகள் இவைகளிலும் சதாசிவத்துவ நிலை. ஒவ்வொன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். இருப்பிலே சதாசிவத்துவநிலை என்றால் எல்லாவற்றையும் கடந்த ஒரு தௌிவு. கேட்கும்பொழுது பொிய வார்த்தை மாதிரி இருக்கும். ஆனால் வாழத்துவங்கினீர்களாளால் ரொம்ப எளிமையானதாக இருக்கும். இங்கிலிஷ்ல டெசிஷன் பெட்டிக்னு சொல்வாங்க. அந்த வார்த்தைக்கு அர்த்தம் என்னன்னா பொிய பொிய அதிகாரிகளா இருப்பவங்க காலைலருந்து ஒண்ணுமே செஞ்சிருக்க மாட்டாங்க. கார்த்தாலேருந்து சாயந்திரம் வரைக்கும் அந்த சுத்தற சோ்ல உட்கார்ந்து பத்து காஃபி குடிச்சு போற வர்றவங்களையெல்லாம் சும்மாவே நாலு கேள்வி கேட்டிருப்பாங்க. அதுக்குள்ளே டயர்டாயிடுவாங்க. சிந்தனையில் உழைப்பதால் செயல்படுவதாலேயே தான் ரொம்ப சாதிச்சிட்டதா கற்பனைப் பண்ணிக்கிட்டு, அதுனால வர்ற சோம்பல்தனத்தைத்தான் டெசிஷன் ஃபெட்டிக்னு சொல்றோம். நம்ம வாழ்க்கையிலலாம் கூட திரும்பிப் பாருங்க. ஒண்ணும் பொிசா பண்ணியிருக்க மாட்டோம் நாலு போிட்ட நாலு விஷயத்தைப் பேசியிருப்போம். நம்ம ஆபிஸ்லயோ கடையிலயோ உட்கார்ந்து, நாலு இடத்தில சைன் பண்ணியிருப்போம். அவ்வளவுதான். அதுக்குள்ளே ஏ! ரொம்ப இன்னிக்கு வேலைப்பா. ஆனா உட்கார்ந்து ஆராய்ந்துப் பார்த்தோமானால் மொத்தமா ஒரு அரைமணி நேரம் ஆக்டிவ்வா ஏதாவது செஞ்சிருப்போம். அவ்வளவுதான். எத்தனைப் பேருக்கு நான் சொல்றது புரியுது? ‘‘ஆஹா! என் வாழ்க்கையை சிசிடிவி கேமரா வெச்சு பார்த்து பேசறா மாதிரியே இருக்கே!’’ உண்மை! டெசிஷன் ஃபெட்டிக்னு சொல்றது. சில முடிவுகளை எடுத்துவிடுவதனாலேயே தான் மிகவும் பொிய விஷயங்களை சாதித்துவிட்டதாக, கற்பனை போதையை உருவாக்கிக் கொண்டு கற்பனை போதையினால் வருகின்ற மிதப்பினால் வருகின்ற சோம்பல்த்தனத்தின் எச்சம். அதுதான் சரியான வார்த்தை ‘எச்சம்’ இந்த சோம்பல்தனத்தின் எச்சம் தான் டெசிஷன் ஃபெட்டிக். முடிவெடுப்பதால் வருகின்ற மிகப்பொிய..! ரொம்ப உழைத்து ஓய்ந்துவிட்டதாகவருகின்ற மன அமைப்பு. ரொம்ப உழைச்சிட்டதா நினைச்சிட்டு வர்ற சோர்வு. சிந்தனையினால், முடிவெடுப்பதனாலேயே உழைத்துவிட்டதாக பொியதாக சாதித்துவிட்டதாக ஏற்படுகின்ற சோர்வு. பலபோ் என் கிட்டே வந்து சொல்றதுண்டு. சாமி நீங்க மட்டும் எப்படி எத்தனை நாட்டுக்குப் பறந்தீங்கன்னாலும் போய் இறங்கினவுடனே நேரே போய் வகுப்பெடுக்கறீங்க. நாங்க போய் இறங்கினா அடுத்த வேலையை எந்திரிச்சு செய்யறதுக்கு இரண்டு நாள் ஆகுது. ஜெட் லாக். நான் சொன்னேன். நல்லா உட்கார்ந்து நிஜத்தை ஆராய்வோம். ஆமா, அமொிக்காப் போனோம். என்னப் பண்ணோம். கார்ல இருந்து ஏர்போட்டுக்கு இறங்கி ப்ளைட்டுக்கு போன அந்த அரைகிலோ மீட்டர் அல்லது முக்கா கிலோ மீட்டர் நடந்தோம் அவ்வளவுதானே. மீதி நாம் ஏதாவது பண்ணமா? ஆனா நம்ம மனசு என்ன நினைக்கிறது. இத்தனாயிரம் மைல் நான் ட்ராவல் பண்ணியிருக்கேன். நான் டயர்ட் ஆயித்தானே ஆகணும்? ஐயா! படுத்திருந்த கட்டிலோட கொண்டு போய் அங்க இறக்கி விட்டாங்க. அவ்வளவுதான். தூங்கிட்டேயிருந்து டயர்ட் ஆகுமா? ஆழ்ந்து சிந்தியுங்கள். இதெல்லாம் நமது மனதிற்குள் இருக்கின்ற தௌிவில்லாத முடிச்சுக்களினால் ஏற்படுகின்ற சோர்வு. உங்கள் தினசரி வாழ்க்கையிலையும் பாருங்க. நான் பல நாடுகளுக்கு போற உதாரணத்தைக் கொடுத்தேன். உங்க வாழ்க்கையிலும் பாருங்க. பலநேரத்தில ஒண்ணும் பொிசா செஞ்சிருக்க மாட்டோம்.. ஒண்ணும் ஆக்டிவ்வாலாம் இருந்திருக்க மாட்டோம். மனசுக்குள்ளே யாராவது நாலு பேரை நினைச்சுத் திட்டியிருப்போம். இன்னொரு நாலு பேரை நினைச்சு எரிஞ்சிருப்போம். ரெண்டு மணி நேரத்துக்குள்ள என்ன ஆயிடுது? டயர்டாயிடறோம். இருப்பின் ஸ்திரம் இல்லாதத் தன்மை. இருப்பின் ஸ்திரம் இல்லாதத் தன்மை. இருப்பின் ஸ்திரம் இல்லாத தன்மைதான் நமக்கு நாமே இழைத்துக்கொள்கின்ற மிகப்பொிய சங்கடம். மிகப்பொிய துரோகம். எந்த நிலையில் நாம் இருக்கின்றோம்? எந்த நிலையில் நாம் செயல்படுகின்றோம்? தினந்தோறும் நாம செயல்படறதுக்கான உத்சாகமாக எந்தவிதமான உணர்ச்சிகள் இருக்கின்றது? காலைல எந்த உணர்ச்சி நம்மை பெட்டிலிருந்து வௌியில தள்ளிவிடுது? இன்னொரு நாள் வந்திருச்சே? எந்திரிச்சுப் போய்த்தானே ஆகணும். அந்த உணர்வா? ஆஹா இன்னும் ஒரு நாள் புலர்ந்தது. எழுந்திருப்போம் வாழ்க்கையைக் கொண்டாட! எந்த உணர்வு நம்மை படுக்கையிலிருந்து தள்ளுகிறது? எந்த உணர்வு நம் வாழ்க்கையை இயக்குவதற்கு உந்துகின்றது? எதனால் நாம் தயாரிக்கப்பட்டிருக்கின்றோம்? எது நமது எரிபொருளாக இருக்கின்றது? எதனால் நாம் தயாரிக்கப்பட்டிருக்கின்றோம்னா.. ஒரு காருக்கு என்ஜின் என்ன உலோகத்தால் ஸ்திரத்தன்மையான உலோகத்தால் செய்யப்பட்டிருக்கிறது, அதுல என்ன எரிபொருள் இயக்குகிறது? இந்த இரண்டுமே முக்கியம். உங்களட வாழ்க்கையிலும் நீங்கள் உங்களை எப்படிக் கருதுகின்றீர்களோ அதுதான் நீங்க செய்யப்பட்டிருக்கும் உலோகம். நீங்கள் எந்த உலோகத்தால் செய்யப்பட்டிருக்கிறீர்களோ அந்த உலகத்தைத்தான் நீங்கள் உணர்வீர்கள். நீங்க உங்களை ஸ்திரமாக பலமாக ஆழமாக உணர்ந்தால் உங்களை சுத்தியிருக்கிற உலகமும் ஸ்திரமாக பலமாக உங்களுக்கு பலமாக இருக்கும். உலகம் கண்ணாடி மாதிரிங்கய்யா. பயந்து நடுங்கினா ஏய்! அப்டிங்கும். நிமிர்ந்து தைரியமா நின்னோம்னா ஐயா அப்டிங்கும். அவ்வளவுதாங்கய்யா. உலகம் கண்ணாடி மாதிரி. உலகத்தைப்பற்றி யோசித்தோமானால் உங்கள் வாழ்க்கையில் எதிலும் எதையும் சாதிக்க முடியாது. எதையும் நிறைவேற்ற முடியாது. எதையும் நடத்த முடியாது. எதிலும் நிற்க முடீயாது. அவர்கள் உங்கள் வாழ்க்கையை னைஉவயவந பண்ணா நீங்க ஜெயில்ல இருக்கீங்க. அவர்கள் வைத்த சிறையில இருக்கீங்க. உங்களை சுற்றியிருக்கறவங்க உங்களைப்பற்றி என்னக்கருத்து வெச்சிருந்தாலும் உங்களுக்குப் பாதிப்பில்லை. ஆனா நீங்க பயந்தாங்கோளின்னு மட்டும் நினைச்சிட்டாங்கன்னா நீங்க செத்ததுக்கு சமம். ஒரு நிருபர்ட்டே நான் சொல்லிட்டிருந்தேன். என் கிட்டே கேட்டுட்டாரு. என்ன சாமி உங்களை சுற்றி நிறைய கான்ட்ராவர்சியா இருக்கு? உயிரோட இருக்கற வாழற யாராவது ஒரே ஒருத்தரைப்பற்றி, ஏதாவது ஒரு விஷயத்தை வாழ்க்கையில சாதிச்சவங்களைப் பற்றி கான்ட்ராவர்சி வராம இருந்தா ஒரே ஒருத்தர் போ் கொடுங்கன்னு சொன்னேன். எந்தத்துறையானாலும் நாம் ஒன்றை செய்யும்பொழுது எதிரிகள் ஒரு கான்ட்ராவர்சியை உருவாக்கறது மூலமாத்தான் நம்மயை மிரட்டுவாங்க.. பணிந்தால் நாம் அவருக்கு அடிமை. பணியாவிட்டால் அவர் நமக்கு அடிமை. அவ்வளவுதான். இவ்வளவே வாழ்க்கை. மிரண்டால் நாம் அவர்க்கு அடிமை. மிரளாவிட்டால் அவர் நமக்கு அடிமை. என்ன மாதிரியான ஸ்திரத்தன்மையோடு உங்களைப்பற்றி நீங்கள் கணக்குப்போடுகிறீர்கள்? உங்களுடைய பலம் பலவீனத்தைப் பற்றி நீங்கள் என்னத் தௌிவோடு இருக்கின்றீர்கள்? அதுதான் உயிர் கற்பு. ஒரு மனைவியோடு ஒரு கணவனோடு வாழ்வது உறவுக் கற்பு. நம்மைப்பற்றித் தௌிவோடு இருப்பது உயிர் கற்பு. நம்மைப்பற்றி நாமே ஒரு தௌிவை உருவாக்கி அந்தத் தௌிவோடு இருப்பதுதான் உயிர்க்கற்பு. உறவுகளை மாற்றிக்கொண்டேயிருப்பது எப்படி கற்பில்லாத்தனமோ தமிழ்ல வேசித்தனம்னு சொல்வோம். உறவுகளை.. அது ஆணானாலும் பெண்ணானாலும் பெண்ணுக்கு மட்டும் ஆணுக்கு மட்டுமல்ல எப்பாலாயிருந்தாலும் எந்த மனிதராயிருந்தாலும் ஆணோ பெண்ணோ யாராயிருந்தாலும் உறவுகளை மாற்றிக்கொண்டேயிருப்பது வேசித்தனம். ஓர் உறவுக்கு நோ்மையோடு வாழ்வது கற்பு. அதேமாதிரி நம் உயிரும் நம்மைப்பற்றி ஒரு தௌிந்த கருத்தோடு ஸ்திரமாக இருப்பது உயிர் கற்பு. நமக்கே ஸ்திரம் இல்லைன்னா மாறிக்கிட்டயிருந்தோம்னா வாழ்க்கையின் அடித்தளம் ஆடிக்கொண்டேயிருக்குமானால் எதை நீங்கள் சாதித்தாலும் உங்களுடைய வாழ்க்கை உயிர்ப்போடோ, மலர்ச்சியோடோ, நிம்மதியோடோ, நிறைவோடோ அமைவதில்லை. உயிர் கற்பு. நீங்கள் உங்களைப்பற்றி வைத்திருக்கும் கருத்தின் தௌிவினால் ஏற்படும் உயிர்க்கற்புதான் வாழ்க்கையை நிறைவடைவதற்கு, முழுமைத்தன்மை அடைவதற்கான அடிப்படையான தேவை. இன்னிக்கு உங்க எல்லாருக்கும் புரணத்துவ தியானம் அளிக்கப்பட்டிருக்கும். கம்ப்ளீஷன் மெடிட்டேஷன். அது உயிர் கற்பை உருவாக்குவதற்கான தியானம். தினந்தோறும் 21 நிமிடமாவது தூங்கறதுக்கு முன்னாடி, பல போ் சொல்றதுண்டு. டைமே இல்லை சாமி. எப்படியாயிருந்தாலும் டெய்லி தூங்கித்தானே ஆகணும். அதுக்கு டைமே இல்லைன்னு சொல்றீங்களா? தூங்கறதுக்கு முன்னாடின்னு அதனால தான் சொல்லிட்டேன். அப்ப டைம் இல்லைன்னு சொல்ல முடியுமா? தூங்கறதுக்கு முன்னாடி படுக்கையிலிருந்தபடியே அப்ப மனதுக்குள் இருக்கின்றதான சிக்கலான மனச்சிக்கல்களான இந்த எல்லா இன்-கம்ப்ளீஷன்ஸையும் குறை உணர்வு நிலைகளையும் ஆழ்ந்து வாழ்ந்து பாருங்கள். மலச்சிக்கல் போக கடுக்காய்ப் பொடியும். மனச்சிக்கல் போக கம்ப்ளீஷன் தியானமும், இதை முடிந்நிட்டு மட்டும் படுங்க. உங்கள் உடலும் மனமும் சதாசிவத்துவ நிலையிலேயே நிலைத்திருக்கும். அதுக்கு நான் உறுதி. கடுக்காய் கொடுத்திட்டான்னு, ரொம்ப கிண்டலா பழமொழி சொல்றோம் பாருங்க. நம்முடைய பாரம்பரிய கருத்துக்கள் எல்லாவற்றையுமே நம்முடைய பாரம்பரியத்தின் சத்தியங்கள் எல்லாவாற்றையுமே வில்லனாவோ, காமெடியாகவோ காட்டிக் காட்டி நமக்கு அதன் மீது மரியாதை இல்லாமல் செய்தார்கள். கொடுமை! இந்தக்கடுக்காய்ப் பொடி வயிற்றுக்கான மலச்சிக்கல் மட்டும் நீக்குவதல்ல. மனச்சிக்கலையும் நீக்கும். மலச்சிக்கலையும் நீக்கும். மனச்சிக்கலையும் நீக்கும். ராத்திரி உறங்குவதற்கு முன்பு இந்தப் புரணத்துவ தியானம் கம்ப்ளீஷன் மெடிடேஷனைப் பண்ணிணீங்கன்னா அந்த உயிர்க்கற்பு உங்களுக்குள் ஆறு மாதத்திற்குள் மலர்ந்துவிடும். அதிகபட்சம் ஆறு மாதம்தான் வேணும். உங்கள் இருப்பை சதாசிவமயமாக மாற்றுவதற்கு சக்திவாய்ந்த தியானமுறை இந்த கம்ப்ளீஷன் மெடிடேஷன். உங்களுடைய தினசரி நடவடிக்கைகளை எந்த உணர்விலிருந்து செயல்படுகிறீர்களோ, இயங்குகிறீர்களோ அதை மாற்றியமைப்பதற்கு சதாசிவநிலையாக சதாசிவனின் இருப்பும், சதாசிவனின் நிலையும் சதாசிவசக்திகளை வௌிப்படுத்தலும் இந்த மூன்றும் சோ்ந்ததுதான் சதாசிவத்துவம்னு சொல்றேன். சதாசிவனின் இருப்பு நிலை, சதாசிவனின் இருப்பு - அதாவது உங்களைப் பற்றி நீங்க வெச்சிருக்கற கருத்து புரணத்துவத்தோட இருப்பது. உங்கள் சிந்தனை செயல் சொல் எல்லாமே பொறுப்பெடுத்தல் மூலமாக உலகையே வளப்படுத்துவதாக அமைவது. எப்படி வேணா வாழ்ந்திடலாங்கய்யா.., சாராயம் வித்தும் சம்பாதிச்சிடலாம். நாலுபேருக்கு நாட்டு மருந்து. சித்த மருந்து கொடுத்தும் சம்பாதிக்கலாம். உயிர்கொடுத்தும் சம்பாதிக்கலாம். உயிர் எடுத்தும் சம்பாதிக்கலாம். புகையிலை வித்தும் சம்பாதிக்கலாம், சிகரெட் வித்தும் சம்பாதிக்கலாம், நாலு பேருக்கு கல்வியையும் ஞானத்தையும் கொடுத்தும் சம்பாதிக்கலாம். நல்லாத் தொிஞ்சுக்கங்க. ஒரு பொிய கொடுமை என்னத்தொியுமா? புகையிலையோ சாராயமோ ஃப்ரீயா கிடைக்கணும்னு யாரும் எதிர்பார்க்கறதில்லை. ஆனா சிவதீக்ஷையும், ஞானமும், யோகமும், தீக்ஷையும் ஃப்ரீயா கிடைக்கணும்னு எதிர்பார்க்கறாங்க. கொடுமை. சாராயம் விக்கறவன், புகையிலை விக்கறவன், சிகரெட் விக்கறவன் அவன் வாழ்க்கையை நடத்தணும் இல்லை. பணம் கொடுக்கணும்தானே அப்படின்னு நினைக்கற மக்கள் ஆன்மிகத்தையும், ஞானத்தையும் யோகத்தையும் அளிக்கிற அவங்களும் அந்த நிறுவனத்தை நடத்தணுமேன்னு நினைக்கறதேயில்லை. சாராயம் புகையிலை அதுக்கெல்லாம் என்ன வேணா செலவு பண்ணத்தயாரா இருக்கோம். ஆனா இது என்னவா கிடைக்கணும் ஃப்ரீயாத்தான் கிடைக்கணும். சரிப்பா பரவாயில்லை. அப்படியாவது செஞ்சா போதும். ஃப்ரீயா கொடுப்போம். ஊரிலிருந்து பெங்களுர் வரைக்கும் போயிட்டு வரதுக்கு பஸ் கொடுப்பாங்களா? அதுவும் குடுத்து கூப்பிட்டுட்டு போலாமில்லை. சாமி தங்கமாத்தானே போட்டுட்டு இருக்கு. மனித மனமப்பா! மனித மனமப்பா! எந்த நிலையிலிருந்து வாழ்க்கையில் இயங்குகின்றோம்? நமக்கும் நம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கும், பொறுப்பெடுத்தலும் நாம் செய்வது எல்லாமே நம்மையும் உலகத்தையும் வளப்படுத்துவதையுமாக இருப்பதுதான் சதாசிவநிலை. எதனாலும் அசைக்க முடியாத ஸ்திரத்தன்மையான முழுமைத்தன்மையோடு இருப்பது சதாசிவன் இருப்பு. எதனாலும் அசைக்க முடியாத முழுமைத்தன்மையோடு இருப்பது சதாசிவன் இருப்பு. நமக்கும் உலகத்திற்கும் பொறுப்பெடுத்து, நம்மையும் உலகத்தையும் வளப்படுத்தும் சிந்தனை செயல்களோடு மட்டும் இயங்குவது சதாசிவ நிலை. இன்டெக்ரிட்டியும், ஆத்தன்டிசிட்டியும் சதாசிவனின் ஸ்டேட். ரெஸ்பான்சிபிளிட்டியும் என்ரிச்சிங்கும் சதாசிவனுடைய ஸ்பேஸ். இந்த ரெண்டையும் நமக்குள் கொண்டுவந்தால் சதாசிவன் சக்திகள் நமக்குள் வௌிப்படத்துவங்கும். பார்த்திருப்பீங்க, மூன்றாவது கண் மூலமாக படித்தல். பல்வேறு சக்திகள் வௌிப்பாடுகள் அதெல்லாம் எதுவும் மாயமோ, மந்திரமோ, சித்துவிளையாட்டோ ஏமாற்று வித்தையோ இந்திரஜால வித்தையோ அல்ல. மாயமும் அல்ல. ஜாலமும் அல்ல. மந்திரமும் அல்ல. சதாசிவனின் அறிவியல். எனக்கும் சாத்தியம். உங்களுக்கும் சாத்தியம். இதுவே சத்தியம். அதனாலதான் சொல்றேன் இது அறிவியல். சதாசிவனின் இருப்பு நிலையில் இருப்பதற்கான உயிர்கற்பு நிலையை அடைவதற்கான முறை புரணத்துவ தியானம். தினந்தோறும் இருபத்தோரு நிமிடம் செய்யுங்கள். சதாசிவனுடைய இயங்குநிலை. செயல்படுநிலை அதில் இருந்து செயல்படுவதற்கான நுட்பம் இப்ப உங்களுக்கு அளிக்கப்படப்போகின்ற சமய தீக்ஷை மந்திரம். நேரம் கிடைக்கும்பொழுதெல்லாம் இந்த சமய தீக்ஷை மந்திரத்தை மனத்தாலே ருசித்து இரசித்து அசைபோட்டுக் கொண்டிருங்கள். எப்படி ஒரு மாடு உண்டுவிட்டு வந்து ஓய்ந்து இருக்கும் நேரத்தில் வாயிலே அதை அசைபோடுகின்றதோ, நமக்கு அந்த மெக்கானிசம் இல்லமப் போனதுதான் இவ்வளவு பொிய வயிறு இருக்கறதுக்கான காரணம். வாயில் தங்காதது வயிற்றில் தங்கும். பொியவங்க சொல்லி வெச்சிருக்காங்க. வாயிலே வைத்து நன்கு அரைத்து உள்ளே தள்ளாதது வயிற்றில போய் டயர் மாதிரி நின்னுடும். ஒரு ரெண்டு டயர் கட்டிண்டு சுத்தறா மாதிரியே சுத்தறோம் பாருங்க. வாயிலே தங்காதது வயிற்றில் தங்கும். மாடு எப்படி அசைபோடுதோ அதுபோல இந்த மந்திரத்தை எப்போதும் இரசித்து அசைபோட்டுக்கொண்டேயிருங்கள். ஜபிக்கணும்னு சொன்னாக்கூட பொிய வேலை மாதிரி நினைப்போம். ரிலாக்ஸ்டா அசைபோட்டுக் கொண்டேயிருத்தல். வேற ஏதாவது ஊர்ல இருக்கற கண்டதையெல்லாம் யோசிக்காம, மனசுக்குள்ள டிப்ரஷன்லயே இருக்காம இந்த மந்திரத்தை இரசித்து ருசித்து அசைபோட்டுக் கொண்டேயிருங்கள். நீங்கள் செயல்படும் நிலை, உங்களுடைய உயிருக்கான சக்தி மிகப்பொிய நிலைக்கு மாறும். இப்போ உங்களுக்குள்ள எந்த எண்ணங்களை வைத்திருக்கிறீர்களோ அதுதான் உங்களுக்குள்ள ஊத்தற எரிபொருள். அது என்ன கிரசின் கூட இல்லை. காவாய்த்தண்ணி. கெரசின் ஊத்தி வண்டி எடுத்தா எப்படி இருக்கும் என்று தெரியுமில்லை? அப்படியில்லாம ப்யுர் பெட்ரோலா ஃபுயலா மாத்தறது நம்முடைய பொறுப்பு. அதுதான் நம் பொறுப்பு. ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள். உங்களுடைய சிந்தனை ஓட்டம் அதன் மூலம் இந்த மந்திரமயமாக மாறினால் சதாசிவன் இருப்பிலிருந்து சதாசிவன் நிலையில் செயல்படத் துவங்குவீர்கள். அப்ப சதாசிவ சக்திகள் வௌிப்படத் துவங்கும். இந்த மூன்றும் சோ்ந்ததுதான் சதாசிவத்துவம். வாழ்க்கையின் மனித வாழ்க்கையின் குறிக்கோள் இந்த சதாசிவத்துவம். சதாசிவத்துவத்தை அடைவதுதான் மனித வாழ்க்கையின் குறிக்கோள். மற்ற எல்லாமே, நீங்க புடுங்கற எல்லாமே தேவையில்லாத ஆணிதான். தொண்ணூறு வயசு வரைக்கும் புடுங்கி முடிச்சாலும் தேவையில்லாத ஆணிதான். அது எப்பப் புரியுதோ வேகமாப் புரிஞ்சா நல்லது. அவ்வளவுதான். இன்னைக்கே புரிஞ்சா வாழ்க்கையில உருப்படுவோம். என்னைக்குப் புரியுதோ அன்னிக்கு உருப்படுவோம். அவ்வளவுதான். சதாசிவனின் இருப்பில் இருக்கத் துவங்குதல். சதாசிவனின் நிலையிலிருந்து இயங்கத்துவங்குதல். சதாசிவ சக்திகளை வௌிப்படுத்துதல் இந்த மூன்று தான் வாழ்க்கையின் சாரம்.

வாழ்க்கையின் நோக்கு. வாழ்க்கையின் போக்கு. வாழ்க்கையின் சாரம். இந்த மூன்று தான் வாழ்க்கையின் சாரம். வாழ்க்கையின் நோக்கு. வாழ்க்கையின் போக்கு. வாழ்க்கையின் சாரம். நல்லாத் தொிஞ்சுக்கங்க. உலகம் என்னைக்குமே நீங்கள் எந்த உருப்படியான விஷயத்தையுமே செய்வதற்கு அனுமதிக்காது. அதனால யாரோ ஒருவரை நம்பி அவங்கள்ளாம் போனா மாதிரியே நானும் போனேன் அப்படின்னா சரி அவங்கள்ளாம் விழற குழில விழ வேண்டியதுதான். அவங்கள்ளாம் அழியற குழியில அழிய வேண்டியதுதான். ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள். நம் வாழ்க்கை, நம் நோக்கம், நம் போக்கு நம் தௌிவு சார்ந்ததாக இருக்க வேண்டும். ஏனென்றால் பலன்கள் நமக்குத்தான் வரப்போகின்றது. போக்கும் - நோக்கும் - சென்றுசேரும் இடமும் அதன் பலாபலன்களும் நமக்குத்தான் வரப்போகின்றது. அருமையான கதை இந்த வால்மீகியின் கதை. வால்மீகி ஒரு பொிய கொடுமையான வேட்டுவன். திருடன், வேட்டுவர் மட்டுமல்ல திருடர். உயிர்களை மட்டும் கொன்றால் வேட்டுவன். மனிதர்களுடைய சொத்துக்களையும் எடுப்பவன் கொள்ளையன். வெறும் வேட்டுவனல்ல. வேட்டுவன் வாழ்க்கைக்காகச் செய்வது. இவன் கொள்ளையனும் கூட. நாரதர் அவன் முன்னேத்தோன்றி அப்பா! இத்துனை பாவம் பண்றியே, நரகத்திற்கு நீ தனியாத்தான் போவே. இதனுடைய பலன்களை தனியாத்தான் அனுபவிப்பேன்னு தொியலையா. அவன் சொல்றான் நான் சம்பாதிக்கறதுல பாதியை என் மனைவி சாப்பிடறா மகன் சாப்பிடறான் மற்றும் உறவினர்கள் சாப்பிடறாங்க. அவங்கள்ளாம் சோ்ந்துத்தானே வரப்போறாங்க போய்க்கேட்டுப் பார். மனைவி சொல்றா நீ என் கணவன் எனக்குச் சோறு போடுவது உன்னுடைய கடமை. எப்படி நீ எடுத்திட்டு வரேன்ற கவலை எனக்கெதற்கு? அந்தக் கருமம் உனக்கு. மகன் சொல்றான் ‘நான் உன் மகன் என்னை வளர்ப்பது உன் கடமை, நீ நாலு பேருக்கு உயிர்கொடுக்கின்ற மருத்துவம் செய்து கொண்டு வரியா? இல்லை நாலு போ் உயிரை எடுத்து கொள்ளையடிச்சு எடுத்திட்டு வரியான்றது எனக்கென்ன கவலை. என்னை கவனிப்பது உன் கடமை, அவ்வளவுதான். மத்த கருமங்கள் உன்னோடு சோ்ந்தது.’’ என்று இந்தத் தௌிவு நமக்கு வருகின்றதோ அன்றே நமக்கு உலகிடமிருந்து விடுதலை. உலகிடமிருந்து விடுதலை அடைந்தவன் தான் ஸ்திரத்தன்மை உடைய மனிதன். உலகிடமிருந்து விடுதலை அடையாதவன் பலருடைய கூட்டுத் தொகுப்பில் இருக்கும் ஆட்டு மந்தையில் ஒருவனைப்போல. இந்த ஆட்டு மந்தைகள் பார்த்தீங்கன்னா, பல ஆடுகள் எடுக்கிற கூட்டுத் தொகுப்புகளின் முடிவுதான் இந்த ஆடும். இந்த ஆட்டுக்குன்னு தனியானத் தௌிவு கிடையாது. அப்படியே ஒரு ஆடு போனா எல்லா ஆடும் போகும். எதையும் சிந்திக்காது. ஆட்டு மந்தையின் தொகுப்பு மனம் உழடடநஉவைஎந றடைட சொல்வாங்க. இன்டுவிஜிவல் அவேக்கனிங் இல்லாத உழடடநஉவைஎந றடைட். அது வாழ்க்கையை மயக்கத்தில் நீங்கள் நடத்துவதற்கான ஒரு மறுதலிப்பு காரணமாக இருப்பதனால் வாழ்க்கையின் தண்டனைகளிலிருந்து நீங்கள் தப்பித்துவிடலாம் என்று தயவு செய்து கற்பனை காணாதீர்கள். வாழ்க்கையின் பலன்கள் தனியாகத்தான் நம்மை சந்திக்கும். தனியாகத்தான் நம்மை வந்து பார்க்கும். தனியாகத்தான் அவைகளை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள். மிகுந்த நன்மை, மிகுந்த தீமை.. மிகுந்த நன்மையானாலும், மிகுந்த தீமையானாலும் வாழ்க்கை உங்களை தனிமையில்தான் எதிர்கொள்ளும். ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்று தௌிந்து உயிர்த்தெழுபவன் தான் வாழ்க்கையின் குறிக்கோள் நோக்கி இயங்கத் துவங்குகிறான். வாழ்க்கையின் குறிக்கோள் சதாசிவத்துவம். சதாசிவத்துவ நிலையிலிருந்து இயங்குதல், சதாசிவன் இருப்பில் இருத்தல், சதாசிவ சக்திகளை வௌிப்படுத்தல் சதாசிவனின் இருப்பும் நிலையும் சக்திகளும் இந்த மூன்றும் தான் வாழ்க்கையின் சாரம். காலைலே பார்த்திருப்பீங்க. சாட்சிப் ப்ரமாணமாக பார்த்திருப்பீங்க. பல போ் இந்த சக்திகளை வௌிப்படுத்துவதை எத்தனைப்போ் பார்த்தீங்க? அது வேற ஒண்ணுமேயில்லை. சதாசிவனுடைய இருப்புத்தன்மையையும், நிலையையும் வாழ்வதனால் சதாசிவனின் சக்திகள் வௌிப்படத்துவங்குகிறது. சதாசிவனுடைய இருப்பையும், நிலையையும் வாழ்வதுடைய முக்கியத்துவத்தைக் காட்டறதுக்காகத்தான் அந்த சக்திகளை உங்களுக்குக் காட்டினாங்க. வேற ஒண்ணும் மேஜிக்கோ ஒண்ணும் கிடையாது. இதுல மாய ஜாலம் எதுவுமில்லை. இதுல மாய ஜாலம் என்னன்னா இந்த உலகம் தான் மாயஜாலம். இந்த உலகம்தான் சதாசிவனின் மாயஜாலம். இந்த சக்திகள் அவனுடைய சத்திய நிலை. பெருமானுடைய சத்திய நிலை இந்த சக்திகள். இது மாயாஜாலமல்ல. பெருமானுடைய மாயாஜாலம் இந்த உலகம். பெருமானுடைய சத்திய நிலை இந்த சக்திகள். பெருமானுடைய இருப்பையும் நிலையையும் வாழத்துவங்குங்கள். அவர் சக்திகள் வௌிப்படத்துவங்கும். மொத்த சாரமும், நான் இப்ப உங்களோடப் பேசின சத்சங்கத்தின் மொத்த சாரமும் என்னன்னா.. மனித வாழ்வின் குறிக்கோள் சதாசிவனின் இருப்பில் இருத்தல், சதாசிவனின் நிலையில் வாழ்தல், சதாசிவ சக்திகளை வௌிப்படுத்தல். அவ்வளவுதான். அதற்கான வழி தினந்தோறும் புரணத்துவ தியானத்தை செய்வதன் மூலமாக உயிர்கற்பு நிலையில் நிற்றல், இந்த சிவதீக்ஷையான சமயதீக்ஷை மந்திரத்தை தினந்தோறும் இரசித்து ருசித்து சிந்தித்து செயல்படுவதனால் ஜபிப்பதனால் சதாசிவ நிலையை வாழுதல். இந்த இரண்டையும் செய்யும்பொழுது சதாசிவனின் சக்திகள் உங்களுக்குள் வௌிப்படும். தினந்தோறும் இரவு உறங்கும் முன்பாக புரணத்துவ தியானம் நேரம், கிடைக்கும்போதெல்லாம் இந்த சமயதீக்ஷை மந்திரத்தை மனத்தால் ருசித்து ரசித்து அசைபோட்டுக் கொண்டேயிருப்பது, இந்த இரண்டும்தான் செய்ய வேண்டியவைகள். இதனால் சதாசிவ சக்திகள் தானாகவே வௌிப்படும். ஆழ்ந்து இதைப் புரிந்து கொள்ளுங்கள். சதாசிவத்துவத்தை அடைந்து சதாசிவ நிலையிலிருந்து சதாசிவன் சக்திகளை வௌிப்படுத்தி சதாசிவன் இருப்பில் இருந்து சதாசிவ நிலையில் இயங்கி சதாசிவ சக்திகளை வௌிப்படுத்தி நித்யானந்தத்தில் இருந்து நித்யானந்தமாகிட ஆசீர்வதிக்கின்றேன் ஆனந்தமாக இருங்கள்.

Photo of The Day

Sakshi Pramana

Massive Manifesting Powers demos happened the whole day at Bengaluru Aadheenam! From Blindfold Reading to Body Scanning and Materialization, several powers were exhibited by over 100 Yogis! Manifesting Powers demos - Blindfold Reading Manifesting Powers demos Manifesting Powers demos Manifesting Powers demos Manifesting Powers demos ManifestinManifesting Powers demos Manifesting Powers demos Manifesting Powers demos Manifesting Powers demos

Mallakhamba Yoga

Shivastambha Demonstration Shivastambha Demonstration Shivastambha Demonstration Shivastambha Demonstration Shivastambha Demonstration Shivastambha Demonstration Shivastambha Demonstration Shivastambha Demonstration Shivastambha Demonstration Shivastambha Demonstration

Temple

Kalpataru Yoga Program in Tamil at Nithyanandeshwara temple Sacred Banyan Tree

Tamil Kalpataru

Kalpataru Yoga Program in Tamil at Nithyanandeshwara temple Kalpataru Yoga Program in Tamil at Nithyanandeshwara temple

Padayatris

Padayatris Arrive from Tiruvannamalai Padayatris Arrive from Tiruvannamalai Padayatris Arrive from Tiruvannamalai Padayatris Arrive from Tiruvannamalai Padayatris Arrive from Tiruvannamalai Padayatris Arrive from Tiruvannamalai Padayatris Arrive from Tiruvannamalai Padayatris Arrive from Tiruvannamalai Padayatris Arrive from Tiruvannamalai Padayatris Arrive from Tiruvannamalai Padayatris Arrive from Tiruvannamalai Padayatris Arrive from Tiruvannamalai Padayatris Arrive from Tiruvannamalai Padayatris Arrive from Tiruvannamalai

Kalpataru Session

Kalpataru Session, Initiation and Darshan http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-7jul-8th-nithyananda-diary_IMG_0085_bengaluru-aadheenam-kalpataru-darshan-temple.swamiji.jpg http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-7jul-8th-nithyananda-diary_IMG_0099_bengaluru-aadheenam-kalpataru-darshan-temple.swamiji.jpg http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-7jul-8th-nithyananda-diary_IMG_0100_bengaluru-aadheenam-kalpataru-darshan-temple.swamiji.jpg http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-7jul-8th-nithyananda-diary_IMG_0101_bengaluru-aadheenam-kalpataru-darshan-temple.swamiji.jpg http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-7jul-8th-nithyananda-diary_IMG_0163_bengaluru-aadheenam-kalpataru-darshan-temple.swamiji.jpg http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-7jul-8th-nithyananda-diary_IMG_0180_bengaluru-aadheenam-kalpataru-darshan-temple.swamiji.jpg http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-7jul-8th-nithyananda-diary_IMG_0195_bengaluru-aadheenam-kalpataru-darshan-temple.swamiji.jpg http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-7jul-8th-nithyananda-diary_IMG_0206_bengaluru-aadheenam-kalpataru-darshan-temple.swamiji.jpg http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-7jul-8th-nithyananda-diary_IMG_0644_bengaluru-aadheenam-kalpataru-darshan-temple.swamiji.jpg http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-7jul-8th-nithyananda-diary_IMG_0645_bengaluru-aadheenam-kalpataru-darshan-temple.swamiji.jpg http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-7jul-8th-nithyananda-diary_IMG_0649_bengaluru-aadheenam-kalpataru-darshan-temple.swamiji.jpg http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-7jul-8th-nithyananda-diary_IMG_0662_bengaluru-aadheenam-kalpataru-darshan-temple.swamiji.jpg http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-7jul-8th-nithyananda-diary_IMG_0664_bengaluru-aadheenam-kalpataru-darshan-temple.swamiji.jpg http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-7jul-8th-nithyananda-diary_IMG_0674_bengaluru-aadheenam-kalpataru-darshan-temple.swamiji.jpg http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-7jul-8th-nithyananda-diary_IMG_0687_bengaluru-aadheenam-kalpataru-darshan-temple.swamiji.jpg http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-7jul-8th-nithyananda-diary_IMG_0701_bengaluru-aadheenam-kalpataru-darshan-temple.swamiji.jpg http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-7jul-8th-nithyananda-diary_IMG_0709_bengaluru-aadheenam-kalpataru-darshan-temple.swamiji.jpg http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-7jul-8th-nithyananda-diary_IMG_0712_bengaluru-aadheenam-kalpataru-darshan-temple.swamiji.jpg http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-7jul-8th-nithyananda-diary_IMG_0714_bengaluru-aadheenam-kalpataru-darshan-temple.swamiji.jpg

Darshan

http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-7jul-8th-nithyananda-diary_IMG_0879_bengaluru-aadheenam-kalpataru-darshan-temple.swamiji.jpg http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-7jul-8th-nithyananda-diary_IMG_0929_bengaluru-aadheenam-kalpataru-darshan-temple.swamiji.jpg http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-7jul-8th-nithyananda-diary_IMG_0838_bengaluru-aadheenam-kalpataru-darshan-temple.swamiji.jpg