Difference between revisions of "October 19 2017"

From Nithyanandapedia
Jump to navigation Jump to search
Line 22: Line 22:
  
 
Paramahamsa Nithyananda infused life into the deity of Kali as he performed the sacred process of Prana Pratishtha.  
 
Paramahamsa Nithyananda infused life into the deity of Kali as he performed the sacred process of Prana Pratishtha.  
 
 
  
 
Diwali Fireworks
 
Diwali Fireworks
  
 
Bengaluru Aadheenam celebrated Diwali with fireworks in the presence of Paramahamsa Nithyananda.
 
Bengaluru Aadheenam celebrated Diwali with fireworks in the presence of Paramahamsa Nithyananda.
 +
 +
==Transcript in Tamil==
 +
பரமஹம்ச நித்தியானந்தரோடு -ஒரு நேர்காணல்...அவதாரத்தோடு ஆன்மீகக் கேள்விகள்"
 +
ஞானாத்தமா சுவாமி அவர்கள் ஆத்மபிரிய சுவாமியை அறிமுகம் செய்து வைக்கின்றார்.  இதுவரை நாம் சந்தித்த ஆதினவாசிகள் ஒவ்வொருவரும் அவர்கள் வாழ்வில் என்ன சந்தித்தார்கள், எப்படிச் சுவாமிஜியைச் சந்தித்தார்கள், எப்படி ஆதினவாசியாக வந்தார்கள் என்று இந்த வாழ்க்கையின் சிறப்புகளை அடிப்படையாக வைத்து அறிமுகப்படுத்தினோம்.  இன்று நாம் சந்திக்கப்போகும் ஆதினவாசி இந்தப் பிறவியிலிருந்து அறிமுகப்படுத்துவதைக் காட்டிலும் அவருடைய வாழ்க்கையில் சிறிது முன்னாடியிருந்து அறிமுகப்படுத்தினால்தான் அவருடைய அறிமுகம் நிஜ அறிமுகமாகவிருக்கும்.  பரமஹம்ச நித்தியானந்த சுவாமிகளின் இந்த அவதார நோகத்தில் சிலருக்கு அவதார நோக்கத்தைக் கொடுக்க வந்தார்.  சிலருக்கு மனநலத்தைக் கொடுக்கிறதற்காக வந்திருக்கிறார்.  சிலருக்கு ஞானத்தையே கொடுப்பதற்காக  வந்திருக்கிறார்.  ஆனால் ஒருவரை தன்கூடவே வைத்து வாழ அழைத்து வந்திருக்கின்றார்.  அவர்தான் அந்த நபர். இதைக் கேட்டவுடன் நீங்கள் நினைக்கலாம் பரமஹம்சர் கூடவே வாழ்வதற்காக அழைத்து வந்திருக்கின்றாரா? என.  உங்களுக்கு ஒரு கேள்வி வரலாம்.  பரமஹம்சரை அவருக்கு எப்படித் தெரியும் என.  இதற்குப் பதில் தெரிந்தால்தான் இன்றைய அவதாரத்தைக் கேட்டல்" நிகழ்வில் யார் வருகின்றார்கள் என்ற பதில் கிடைக்கும். 
 +
பரமஹம்சரின் புர்வ அவதாரமான மீனாட்சி அவதாரத்தில், அங்கயற்கண்ணியாக தன் அஷ்டசகிகளுடன் அரசாட்சி செய்தபோது ஒருவரை மாதங்கி" எனப் பெயரிட்டு வளர்த்து வந்தாள்.  மாதங்கி அன்னை மீனாட்சியிடம் ஒரு வரம் கேட்டாள்.  எப்பொழுதெல்லாம் அகிலம் காக்க அன்னை உடலெடுத்து வந்தாலும் தான் அவளுடன் வாழவேண்டும் என வரம்கேட்க, அற்புத வரத்தை அக மகிழ்ந்து மாதங்கிக்கு வழங்கினாள்.  அந்த வரத்தால்தான்  மாதங்கி இன்று எம்முடன் ஆத்மப்பிரியானந்த சுவாமியாக பரமஹம்ச சுவாமிகளுடன் வாழ்வதற்காக வந்திருக்கின்றார்கள். 
 +
ஆத்மப்பிரயானந்த சுவாமிகளை மேடைக்கு அழைக்கின்றேன்.  .இன்று ஆத்மப்பிரயானந்த சுவாமி மீனாட்சியின் புனர்ஜென்மமான பரமஹம்சருக்கு மதுரை மீனாட்சி கோவிலில் இருந்து மீனாட்சிக்குச் சுடிய மாலையைப் பரமஹம்சருக்கு அணிவதற்காக எடுத்துவந்திருக்கின்றார். 
 +
இப்பொழுது ஆத்மபிரியானந்த சுவாமி எப்படிப் பரமஹம்ஸ சுவாமிகளைச் சந்தித்தார் என்று பார்க்கலாம். 
 +
மா நித்ய ஆத்மப்பிரியானந்த சுவாமி சென்னையில் ஒரு மருத்துவக் குடும்பத்தில் பிறந்தார்.  சிறு வதிலிருந்தே விளையாட்டிலும், பரம்பரிய இசையிலும் ஆர்வமுடையவராக இருந்துவந்தார்.  தன்னுடைய 8ம் வயதில் பாரம்பரிய இசையைப் பயிலும் பயணத்தைத் தொடர்ந்தார்.  நிறைய அரங்கேற்றங்களில் பல பரிசுகளைப் பெற்றார்.  இருந்தாலும் தன் பெற்றோர் விரும்பியவாறு  பல் மருத்துவத் தேர்ச்சியும் பெற்றார். 
 +
இதற்கிடையில் தன் வாழ்வின் நோக்கத்திற்கான தேடலும் அவருக்குள்ளே இருந்து வந்தது.  அப்போதுதான் அவருடைய புர்வ ஆஸ்ரம அப்பா ஒரு இளம் வயதான ஒரு சந்நியாசியின் படத்தை அவரிடம் காட்டி நீ விரும்பியதை அடைய விரும்பினால் இவரை வணங்கினால் அடையலாம் எனக் கொடுக்க, ஆத்மப்பிராயனந்த சுவாமியோ நான் சாமியை வணங்குவேன் ஆனால் ஆசாமிகளை அல்ல எனப் பதிலளித்தார். 
 +
அப்போது அவருடைய அப்பா உனக்கு ஒருநாள் உண்மை புரியும் எனப் பதிலளித்தார்.  அதிஷ்டவசமாக அந்த ஒரு நாள் சீக்கிரமே வந்தது.  நித்யானந்த ஸ்புரணா என்ற நிகழ்வில் சுவாமிஜி அவர்களைச் சந்தித்தார்.  சுவாமிஜியைப் பார்த்தவுடன் கண்களில் தண்ணீர் பெருக இவரே தன் வாழ்வின் குருவென்று உணர்ந்தார். 
 +
தரிசனத்திற்காகச் சென்றபோது எப்போதும் சுவாமிஜியுடன் இருக்க வேண்டுமென்று வரம் கேட்டபோது, சுவாமிஜி சிரித்துக்கொண்டே ஆனந்தமாக இருப்பாய் எனப் பதிலளித்தார். 
 +
பின்பு புர்வஆஷ்ரம அம்மா புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்தபோது தியான சிகிட்சை பெறுவதற்காக வந்திருந்தபோது கல்பதரு நிகழ்வில் கலந்து கொண்டு ஒரு சந்நியாசியாக சுவாமிஜியுடன் வாழவேண்டுமென்று கேட்டார்.  சுவாமிஜி அளித்தவரத்தால் சீக்கிரமே சந்நியாசம் பெற்றார். 
 +
தற்பொழுது சுவாமிஜியின் சத்தியங்களை உலக மக்களுக்கு எடுத்துச் சென்று சேர்ப்பதிலும், ஐந்து சனல்களில் சக்திவழிப்படுத்துதல் நிகழ்வுகள்  மூலம்  இலட்சக்கணக்கான மக்களுக்கு ஆன்மீக ஆலோசனைகளும் வழங்கி வருகின்றார். இப்பொழுது அவர் ஆன்மீகம் சம்பந்தமான கேள்விகளைத் தொடருவார்.
 +
ஆத்மப்பிரியானந்த சுவாமி:  எத்தனை பிறப்பெடுத்தாலும் இந்த அரிய வாய்ப்பு இப்பிறவியில்தான் எனக்குக் கிடைத்திருக்கிறது.  என்றென்றும் உங்கள் மகளாகப் பிறந்து உங்களோடு இருந்து சேவை செய்ய விரும்புகின்றேன். 
 +
சுவாமிஜி என்னுடைய முதலாவது கேள்வி...,
 +
என்னுடைய வாழ்க்கையில  எனக்கு உங்களைப் பார்த்த மாத்திரத்தில், எனக்கு ஆன்மத் தேடுதல்வந்து நான் உங்களைக் குருவென்று ஏற்றுக்கொண்டேன்.  குருவை அடைவது கர்மத்தினாலா? அல்லது தனி மனித முயற்சியாலா?  அல்லது அவன் அருளால் அவன்தாழ் வணங்கி என்கின்ற மாதிரி் குருவின் அருளாலா?
 +
சுவாமிஜி: முதலில் நீ கேட்டவரம் கேட்டபடியே அமையட்டும்.  மகளென்னும் உறவிற்கு மாட்சிமை கற்புச் செய்து நான் ஆட்சி செய்ய உலகிற்கு வரும்பொழுதெல்லாம் என் காட்சியோடு நீயிருப்பாய். 
 +
அடுத்தது நீ கேட்ட கேள்வியம்மா,  உன்னுடைய வாழ்க்கையில நடந்த நிகழ்ச்சியை மேற்கோளாகக் காட்டி, நான் பார்த்தவுடன் எனக்கு ஆன்மீகத் தேடுதல் எழுந்தது.  குருதான் வாழ்க்கையென பிடித்துக் கொண்டேன்.  குருவை அடைவது கர்மத்தினாலா? முற்பிறவிப் பயனாலா அல்லது தன் முயற்சியாலா?  உண்மையில் பார்த்தால் இந்த மூன்றினாலும் அடையப்படுகிறார்கள்.  சிலபேருக்கு புர்வஜென்மத் தொடர்பு இருந்து, அந்த தொடர்பைத் தொடர்ந்து வருவதானால். அடைகின்றார்கள்.  ரொம்பக் குறைந்தளவு.  மிக மிகக் குறைந்த எண்ணிக்கை.  இரண்டாவதாகத் தன்னுடைய வாழ்க்கையிலே பல்வேறு விதமான துக்கங்கள். துன்பங்கள், துயரங்கள், இவற்யையெல்லாம் பார்த்ததினால் ஏற்பட்ட விரக்தி. கைவல்ய நவநீதம் என்ற அருமையான தமிழ் வேதாந்த நூல் சொல்லும். 
 +
ஆனவி மனைவி மக்கள் அத்தவீடு அனைக்கண் மூன்றும்
 +
கானவர் வலையில்பட்டு கைதப்பி ஒடும் மான்போல்
 +
போனவன் வெறும்கையோடே போகாத வண்ணம் சென்று
 +
ஞான சற்குருவைக் கண்டு நன்றாக வணங்கினானே. 
 +
 +
ஆனவி, மனைவி மக்கள் இந்தப் பல்வேறுவிதமான பந்தங்களிலே சிக்கி,  பல்வேறு விதமான துக்கங்களைப் பார்த்து, ஒரு வேடனுடைய வலையிலே சிக்கி ஆனால் ஏதோ ஒரு மான் ஏதோ ஒரு காரணத்தால் தப்பிவிட்ட மான் என்ன வேகத்தோடு அங்கிருந்து ஓடுமோ அந்த வேகத்தோடு ஆனவி மனைவி மக்கள் அத்தவீட அனைக்கண் மூன்றும் கானவர் வலையில் பட்டு கைதப்பி ஓடும்மான்போல்,  அந்த வேகத்தில் ஓடி போனவன் வெறுங்கையோட போகாத வண்ணம் ஞான சற்குருவைக் கண்டு நன்றாக வணங்கினானே. 
 +
ஆனவி, மனைவி, மக்கள், அர்த்தம், வீடு அனைக்கண்.  இவைகள் எல்லாவற்றினுடைய எரிப்பு.  ஒரு மனிதனைத் துக்கம்,  துயரம், போன்றவைகளால் தகித்து, விரக்தியின் உச்சத்திற்குக் கொண்டு சென்றால், அவனால் குருவை அடையாளம் கண்டு, சரணடைந்து,  வாழ்க்கையின் குறிக்கோளைத் தெரிந்து கொள்ளும் பக்குவத்தை அடைந்து விடுகின்றான். 
 +
இன்னும் சிலபேர் தங்களுடைய வாழ்க்கையிலே எந்தவிதமான துக்கமும், பிரச்சினையும் இல்லை. ஆனால் இருக்கின்ற வாழ்க்கை வாழ்க்கையின் நிரந்தரம் அற்ற தன்மை, குருவினுடைய சதாசிவ நிலை, சதாசிவ இருப்பு, சதாசிவ சக்திகளின் வௌிப்பாட்டைக் கண்டு, ஆகா! வாழ்க்கை இப்படியல்லவா இருக்க வேண்டும், இவரோடு அல்லவா இருக்க வேண்டும் என்கின்ற உத்வேகத்தின் காரணமாக தான் இருக்கும் நிலையின் நிலை அற்ற தன்மையும், கலை அற்ற தன்மையும், இதைப் புரிந்துகொள்வதனால் குருவைக் கண்டுபிடிப்பவர்களும் உண்டு.  நீ கேட்ட மூன்றும் கர்மம், வினைப்பயன், தேடுதல், தன்முயற்சி, இவைகளினாலும், குரு தேடப்படுகின்றார். அடையப்படுகின்றார். 
 +
அடிப்படையாக ஒரு மனிதனுக்கு ஆழமான ஒரு தேவை இறுதி வாழ்க்ககையின் இறுதி நோக்கமான நம்முடைய சாத்தியக்கூறுகள் எல்லாம் மலர்ந்து முடிகின்றவரை ஒய்வு கொள்ளாது இருத்தல். 
 +
 +
நாம் எதற்காகப் படைக்கப்பட்டிருக்கிறோமோ நம்முடைய சாத்தியங்கள், சக்திகள். (ிழளளடைிடைவைநைளஇ ிழறநசள)  சாத்தியங்களையும், சக்திகளையும் வௌிப்படுத்தி முடிக்கின்றவரை ஓய்வெடுக்காது இருத்தல் என்ற ஒன்றைமட்டும் மனிதன் பற்றிக்கொள்வானேயானால், குரு நம்மைத்தேடி வருவாரொன்று. அவர் நம்மைத்தேடி வரும்பொழுது நாம் கண்டுகொள்வோம் என்பது மற்றொன்று.  இரண்டுமே நடந்திடும். 
 +
பீரங்கியில் நெருப்பு வைத்த வினாடியே பீரங்கி வெடிக்கின்றது.  அதற்குப் பீரங்கி தயார்படுத்தப்படுகின்றது.  மருந்தால் நிறைக்கப்பட்டு, வெடிமருந்தும் கரித்தூளும் வைத்து இடிக்கப்பட்டு, தயார்செய்யப்படுகின்றது. அதேபோல, நம்முடைய உணர்வும், உன்னுடைய அனுபவத்தைச் சொல்லுகின்றேன். இப்ப வந்து உன்னுடைய அனுபவத்த சொன்னமா...,  பார்த்தவுடனேயே தாரைதாரையாகக் கண்களில் கண்ணீர் பெருகி இவர்தான் என்குருவென்று உணர்ந்தேன்.  என்னுடைய ஆன்மீகத் தேடுதல் மலர்ந்தது.  நீ ஏற்கனவே உள்ளுக்குள் இருந்த அனுபவத்தை ஒருவினாடி தொட்டவுடன் அது மலர்ந்துவிட்டது.  இது எல்லோருக்கும் நடப்பதில்லை.  ஏனெனில், தயாரிக்கப்பட்ட பீரங்கிதான் வெடிக்கும்.  தயாரிக்கப்படாத பீரங்கி வெடிப்பதில்லை.  அதேபோல, எந்த மனிதன் தேடுதல் என்கின்ற வெடிமருந்தை வைத்து, தன்முயற்சி என்கின்ற கரித்தூளும் சேர்த்து மீண்டும், மீண்டும், மீண்டும் குறிக்கோளில் இருந்து மாறாமல் இருக்கின்ற நேர்மையால் இடிக்கப்பட்டு, தயாராக இருக்கின்ற  பீரங்கிதான் குருவின் தீட்சையெனும் நெருப்புப் பட்டவுடன், பிரச்சார பீரங்கியாக மாறுகிறது.
 +
குரு சிஷ்ய சம்பிரதாயம் சனாதன இந்து தர்மத்தின் ஆணிவேர்.  தமிழும் சைவமும் இந்தக் குரு சிஷ்ய சம்பிரதாயத்தில் மட்டும்தான் உயிரோடு இருந்தது, உயிரோடு இருக்கின்றது, உயிரோடு இருக்கும். 
 +
ஆத்மப்பிரியானந்த சுவாமி்: சுவாமிஜி! நான் கடவுள் என்கின்ற அந்த மிக உயர்ந்த புரிந்துணர்வு நிலையிலிருந்து கடவுளே இல்லை, கடவுள் ஒருவர்தான் என்கின்ற புரிந்துணர்வு நிலைக்கு மனித மன அமைப்புத் தள்ளப்பட்டது எதனால்?  இந்த உணர்வுரீதியான சீரழிவிற்கு என்ன காரணம்?  இதை நிறுத்துவதற்கு என்ன வழி? 
 +
சுவாமிஜியன் பதில்:  மனிதனுடைய உடலும், உடல் இசைவும் (ிாலளழைடழபல) மனமும், மன இசைவும், இசைவு என்பது (டழபைஉ) உயிர், உயிர் இசைவும், எப்பொழுது ஒரு ஆரோக்கியமான உடல் இசைவும், உயிர் இசைவும், மன இசைவும் இருக்கிறதோ அப்பொழுது மனிதன் இந்தப் பிரபஞ்சத்தை மிகப் பெரிய சுதந்திரத்தன்மையுடனும், கொண்டாட்டத்தோடும், ஆனந்தத்தோடும், பரவசக்களிப்போடும் பார்க்கிறான். 
 +
எப்போ தன் உடலும் உடல் இசைவும், மனதும் மனஇசைவும், உயிரும் உயிரிசைவும் இசைவில் இல்லாது இருக்கின்றதோ, இசைவுகள் இல்லாது அசைவுகள் நடக்கும்பொழுது தன்மீது நம்பிக்கை இழந்து, தன்னைச் சுற்றியிருக்கும் சமுகத்தின்மீது நம்பிக்கையிழந்து, இயற்கையின்மீது நம்பிக்கையிழந்து இயற்கையையே செயற்கையாக செய்துவைத்த  இறைவன்மீது நம்பிக்கையையிழந்து இவைகள் எல்லாவற்றின் மீதும் நம்பிக்கையிழந்து தன்னை அவை்களோடு தொடர்புபடுத்திக்கொள்கின்ற தௌிவை இழந்து,யடஅழளவ சித்தப்பிரமை பிடித்த இயக்கம் இல்லாத மயக்கத்தில் இருக்கின்றபொழுதுதான் தான் கடவுள் என்கின்ற இருப்புத் தன்மையை இழக்கின்றான். 
 +
அதாவது ஒரு மனிதன் எதைவேண்டுமானாலும் இழக்கலாம்.  ஆனால் குழந்தைப் பருவத்திலே இருக்கின்ற மன இசைவு, உயிர் இசைவு, உடல் இசைவு, இதனால் இருக்கின்ற காரணமில்லாத களிப்பு அதை இழந்துவிடக் கூடாது.  காரணம் இல்லாத களிப்பு மீனாட்சி கொடுத்தனுப்பிய சீதனம்.  அவள் கொடுத்தனுப்பிய ஸ்ரீதனம்.  இந்தக் காரணமில்லாத களிப்பு குறையும்போதுதான், எல்லாவற்றிலும் சந்தேகம் வருவதனால், இறுதிச் சத்தியங்களை உள்வாங்க மறுக்கின்றான், மறக்கின்றான். 
 +
உதாரணத்திற்கு ஒரு குளத்தினுடைய நீர் தௌிந்து இருக்குமானால், வானத்தில் இருக்கின்ற சுரியனை, சந்திரனை மட்டுமல்ல வானத்தில் இருக்கின்ற நட்சத்திரங்களைக்கூட நாம் இந்த சநகடநஉவழைெ  பார்க்கலாம்.  அந்த நீரில் கொஞ்சச் சலனம் இருந்தால், நட்சத்திரங்களைப் பார்க்க முடியாது, சந்திரனைப் பார்க்கலாம்.  ரெம்பச் சலனம் இருந்தால் சந்திரனையும் பார்க்க முடியாது. 
 +
அதுமாதிரி, நமது உள்ளம் உடலும் உடல் இசைவும், மனதும் மன இசைவும், உயிரும் உயிர் இசைவும், மிகவும் தௌிவாக இருக்குமானால் இந்த நான் கடவுள் என்கின்ற இருப்பிலேயே இருக்கலாம்.  ஒரு ஆனந்தமான மனிதனை நாம் கடவுள், கடவுள் சக்தியின் வௌிப்பாடு என்று சொன்னால் உடனே நம்பிவிடுவான்.  அவனுக்கு அது ஒன்றும் பெரிய    கஷ்டமாகவிருக்காது. 
 +
ஆனந்தத்திற்கு இருக்கின்ற ஆன்மீகக் குணமே உயர்ந்த சத்தியங்களை மூளை பிரதிபலிப்பதற்கு அது உதவியாக இருக்கின்றது, உறுதுணையாகவிருக்கின்றது.  அதனால்தான் இந்த ஆனந்தம் எனும் குணம் சதாசிவப் பெருமானால் சஷ்டாங்க யோகத்தில் ஒரு அடிப்படையான தேவையாகச் சொல்லப்படுகின்றது.  தனக்குள் இருக்கின்ற ஆனந்தம் தன்னைத்தானே சந்தோஷமாக வைத்திருத்தல் என்பது ஒரு மிகப்பெரிய ஆன்மீக குணம்.  காரணம் என்னவென்றால்,  ஒரு இசைவு உடைய மனதில்தான் உயர்ந்த சத்தியங்கள் பிரதிபலிக்கும்.  சைவ உணவு எந்த அளவுக்கு உடலுக்கும்,  உடல் இசைவிற்கும் தேவையோ அதுபோல சந்தோஷமாயிருத்தல் மனதிற்கும் மன இசைவிற்கும் வேண்டும். 
 +
இந்த இடத்தில் சந்தோஷம், ஆனந்தம் என்ற இரண்டு வார்த்தையையும் ஒரு பொருள்பட உபயோகப்படுத்துகின்றேன்.  காரணம் என்னவென்றால், தன்னுடைய முயற்சியினால் ஆனந்தத்தைக் கொண்டுவருவது சந்தோஷம்.  தானாகவே சந்தோஷம் நிரந்தரமாய் இருப்பது ஆனந்தம்.  சாதனை, சாத்தியம்.  இந்த இரண்டு காலத்திலும் ஆனந்தத்தின் குணத்தைச் சொல்வதற்காக இரண்டு வார்த்தைகளை உபயோகப்படுத்துகின்றேன். 
 +
அடிப்படையாக யாரெல்லாம் தன்னுடைய வாழ்க்கையை ஆனந்தமாக அமைத்துக்கொண்டார்களோ இசைவோடு அமைத்துக்கொண்டார்களோ அவர்களுக்கு  நீங்கள் கடவுள் என்று சொன்னவுடன் புரிந்துகொள்ள முடிந்தது. (உழபெணைந)  பண்ண முடிந்தது. உயிராலே அந்த உண்மையை உறைத்துக்கொள்ள முடிந்தது.  அந்த உண்மை உயிருக்குள் உறைத்தது. சில நேரத்தில் மூளையில் மட்டும் உறைக்கும், உணர்ச்சியில் மட்டும் உறைக்கும், உணர்வில் உறைக்காது.  அந்த உணர்வில் உறைத்தல்தான். (உழபெவைழைெ)  என்று சொல்கின்றேன். இருப்பில் .(உழபெணைந செய்துகொள்வது.  ஒரு இசைவு இருக்கின்ற மனிதனால் நீ கடவுள் என்று சொன்னதும் அந்த மனிதனுக்கு உயிரிலே உறைக்கின்றது. 
 +
ஒன்றும் இல்லை ஒரு சின்ன எடுத்துக்காட்டு.  சதாரணமாக மனிதர்களைப் பார்த்து வசை பாடினீர்கள் என்றால், எருமையே போன்ற வார்த்தைகளை பாவித்தீர்களானால், உடனே புரிந்து கொண்டு கோபமும், வேகமும் வௌிபடுவதைப் பார்க்கலாம்.  என்ன தைரியம், நீ என்னைச் சொல்லிவிட்டாயா? என் வம்சத்தைச் சொல்லிவிட்டாயா? என் பரம்பரையைச் சொல்லிவிட்டாயா?  உன்னை நான் என்ன செய்கின்றேன் பார்.  அந்த (உழபெவைழைெ)  வேகம் உயிரிலே உறைக்கின்ற வேகம். 
 +
அதே மனிதனைப் பார்த்து நீ சதாசிவன், நீ இறைவனின் வடிவம் என்ற சொன்னால் கொக்னைஸ் பண்ண மாட்டார்கள்.  வேறு வேலையைப் பாருங்கள்,  டீ- க்கே காசில்லை.  சதாசிவன் என்று சொல்லுகிறீர்கள்.  வேகத்தோடு ஒரு சத்தியத்தை உயிரிலே உணர்வது. 
 +
ஒரு அடிப்படை என்னவென்றால் நாம் உயிரிலே உணர்ந்தாலும் அதுதான் உண்மை.  எந்தச் சத்தியம் உயிரில் உறைக்கின்றதோ அதைச் சார்ந்துதான் நம் வாழ்க்கையின் நோக்கும், போக்கும் இருக்கும். 
 +
நமது உடம்பும், மனதும் ஒரு அடிப்படையான பக்குவப்படுத்தப்பட்ட நிலையிலே நாம் அதை வளர்ப்போமானல் நீங்கள் கடவுள் என்ற சத்தியத்தைச் சொன்னமாத்திரத்திலேயே அது உயிரில் உறைத்துவிடும்.  கொஞ்சம் சஞ்சலம் இருந்தால், கடவுள் இருக்கிறார், அவர் ஒருவர்தான், ஆனால் நான் கடவுள் என்பது தெரியவில்லை.  அதாவது சந்திரன் தெரியும் விண்மீன்கள் தெரியாது.  அந்தளவிற்குச் சஞ்சலம் இருக்கின்ற ஒரு நீர் நிலை.  சுத்தமாக் குழம்பிப்போன குட்டைதான் விண்மீனுமில்லை, சந்திரனுமில்லை, எனக்குத் தெரிந்ததெல்லாம் என்மீன்தான்.  அடிச்சு சாப்பிடு.  அடிப்படையாக நீங்கள் கடவுள் என்கின்ற உண்மையை மனிதனுக்கு உணர்த்துவதுதான் அவனுக்குச் செய்கின்ற மிகப்பெரிய நன்மை.  அதுதான் மிகப்பெரிய அபாயமும்கூட.  ஏனெனில் அதை சொல்ல வருபவர்களை மனிதன் பொறுமையோடு எதிர்கொள்வதில்லை.
 +
 +
ஒருவன் நன்றாகத் தூங்கிக்கொண்டிருக்கின்றான்.  விடியற்காலைக் கனவு புலி விரட்டுவதாக.  இரண்டு புலி அவனை விரட்கிறது. வேக வேகமாக ஓடிச் சென்று ஒரு மரத்தின்மேல் ஏறுகிறான்.  அங்கு ஒரு மலைப்பாம்பு அவனை விழுங்குவதற்காகக் வாயைத் திறந்துகொண்டிருக்கின்றது.  மரத்திலிருந்து குதித்துவிடலாம் என்று பார்த்தால் அங்கே பெரிய ஆறு, அதில் 4 முதலை வாயைத் திறந்து கொண்டு உட்கார்ந்திருக்கின்றன.  கனவில் அவன் ஐயோ ஐயோ என்று கத்துகின்றான்.  துப்பாக்கி கொண்டுவா, அணுகுண்டு கொண்டுவா, பீரங்கி கொண்டுவா என்று.  பக்கத்தில் விழித்துக்கொண்டிருக்கின்ற நண்பன் அவனுக்குச் செய்யவேண்டிய உதவி துப்பாக்கி, கத்தி, அணுகுண்டெல்லாம் கொண்டுசென்று கொடுப்பதா?  அல்லது ஒரு தட்டு தட்டி  அடிச்சி எந்திரி அப்படீங்கிறதா?  பக்கத்தில் இருக்கும் நண்பன் எழுத்திரு என்றால், அவனோ நான் உன்னை அணுகுண்டு கேட்டேன், துப்பாக்கி கேட்டேன், கத்தி கேட்டேன், முடிந்தால் அவைகளையெல்லாம் கொடு, அல்லது எழுந்து செல்.  நீ எனது நண்பன் இல்லை.  நீ என் விரோதி, துரோகி.  அவசரத்திற்கு உதவி செய்யாத துரோகி.
 +
கடைசிவரை, அவனுக்கு நிசமாக எந்த உதவி வேண்டுமோ அதைப் பெற்றுக்கொள்ள அவன் தயாராக இருக்கவிில்லை.  அதனால்தான், அவர்களை நான் ஆண்டவன் என்று சொன்னாலும், என்னை அவர்கள் ஏமாற்றுக்காரன் என்று கூறுகின்றார்கள்.  நான் அவர்களை என்னைப்போல விளிக்கின்றேன்.  அவர்கள் என்னை அவர்களைப்போல விழிக்கின்றார்கள்.  விளிப்பினால் ஏற்படும் வலிப்பு எனக்கு இல்லாததினால், வலிக்க வைக்க வேண்டி விளித்தாலும் வலியில்லை. வலிப்பதற்காக அல்ல விழிப்பதற்காக அவர்களை நோக்கி விளித்தாலும், விழிக்க விரும்பாததனால்,  விளிப்பு அவர்களுக்கு வலிப்பாகத் தோன்றுகிறது. 
 +
நீயே இறைவன் எனும் விழிப்பு வலிக்க வைப்பதற்காக அல்லாமல் விழிக்க வைக்க வேண்டிச் சொல்லப்பட்டாலும்,  விழிக்க விருப்பம் இல்லாத காரணத்தால் வலிக்கச் சொல்லப்பட்டதாய் அவன் நினைப்பதனால் மனிதனுக்கு இந்த உண்மையைச் சொல்லிப் புரியவைப்பதுதான் மிகப்பெரிய சேவை. புரிந்துகொள்ளுகின்றவரை அவனுடைய எதிர்வினை மிகப் பெரிய அபாயம்.  கத்தி வேண்டும் என அவன் கத்திக்கொண்டிருக்கின்றான்.  அவனுக்குத் தேவை கத்தியோ சுத்தியோ அல்ல.  சாதாரண புத்தி.  வேறு ஒன்றுமே வேண்டியதில்லை. 
 +
அடிப்படையாக சைவ உணவால் உடலையும், நல்ல சந்தோஷமான கருத்துக்களால் மனதையும், இசைவுபடுத்தினீர்களானால் போதுமானது.  நீங்களே சதாசிவப் பெரும்பொருளின் சொருபம் என்ற சத்தியம் எங்கிருந்தோ உங்கள் காதில் விழுந்து, உங்கள் உணர்வில் உறைத்து. உங்களின் உயிர்இசைவை உருவாக்கிவிடும். 
 +
உடல் இசைவையும், மனஇசைவையும் மட்டும் நீங்கள் செய்து வைத்தாலே பெருமான் உயிர் இசைவைச் செய்துவிடுவார்.  அடிப்படையாக மனிதன் செய்யவேண்டியது உடல் இசைவையும், மன இசைவையும் செய்து வைக்க வேண்டியது.
 +
ஆத்மப் பிரியானந்த சுவாமிஜி:  சுவாமிஜி.  இப்ப எனக்கு ஒரு விஷயம் நடக்குது.  கர்மத்தினாலா? அல்லது நான்தான் அதைச் செய்கின்றேனா?  இங்கு என்னுடைய வினை என்ன? 
 +
சுவாமிஜி:  இது ஒரு அருமையான, முக்கியமான சத்தியம்,  விதி, மதி, சதி.
 +
விதி வெல்லுமா? மதி வெல்லுமா? மதியையே மாற்றும் விதி சதியா? அல்லது விதியையே மாற்றும் மதி பதியா?  விதியையே மாற்றும் மதி பதியா?. மதியையே மாற்றும் விதி சதியா? 
 +
 +
அடிப்படையாகப் பார்த்தோமானால், இருப்பு அதாவது நம்முடைய உயிர், நம்முடைய உயிரின் நோக்கம், நமக்கு நாமே இருக்கின்ற சத்தியத்தன்மை, அதாவது என்னுடைய வாழ்க்கையின் நோக்கத்திற்கும், என்னுடைய செயல்களுக்கும் இடையில் இருக்கின்ற சத்தியத்தன்மை (வைெநசபசவைல) இருப்பென்று சொல்கிறேன். 
 +
இந்த இருப்பும், இருப்பில் இருந்து இழுப்பும் எப்படியென்றால் வாழ்க்கையில் கற்பனைகூட இருப்பில் இருந்துதான் இழுப்பு நடக்க முடியும்.  கம்பர் அழகாக  ஒரு உவமை சொல்கிறார்.  "இருகை வேளத்து இராகவன் வந்தான்’.  இராமபெருமான் வருவதைக் கம்பநாட்டாள்வார் மிக அழகாகச் சொல்வார்.  இரண்டு கை இருக்கின்ற யானையைப் போல இருகை வேளத்து இராகவன் வந்தான்.  ஒரு தும்பிக்கை இருக்கின்ற யானையைப் பார்த்தால் அதைப்பற்றிய அறிவு, அதைப்பற்றிய தௌிவு இருந்தால் மட்டும்தான், அனுமானம் இருந்தால் மட்டும்தான் இருகை வேழன் செய்கின்ற இழுப்பை நாம் செய்ய முடியும்.  இருப்பு,  இருப்பு சார்ந்து மட்டும்தான் இழுப்பு நிகழும்.  ஒரு கை வேழம் என்கின்ற இருப்பு இருந்தால் மட்டும்தான் இருகை வேழம் என்கின்ற இழுப்பு நடக்க முடியும்.  இது கவிதை நிலை. 
 +
இதுவே நம் நிஷவாழ்க்கை நிலையில், நம்முடைய இருப்பும், இருப்பு சார்ந்த நிலையில் இழுப்பும்தான் இந்த விதி, மதி.  பிரச்சினையே.  நம்முடைய இருப்பு. அதனுடைய ஆழம் சார்ந்து மட்டும்தான் நம்முடைய வாழ்க்கையின் இழுப்பு இருக்கும்.  இந்த இழுப்பில் இருக்கின்ற (டிடனைௌிழவள)  தௌிவு இல்லாத நம்முடைய குறிக்கோளுக்கும், நம்முடைய செயல்பாட்டிற்கும் நேர்மைப்படாது இருக்கின்ற மன அமைப்புகள் செயல்பாடுகள்.  இது எதிர்வினையைக் கொண்டுவரும்பொழுது அதைத்தான் நாம் விதி என்று சொல்கின்றோம். 
 +
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்.  ஒரு காலை நம்மால் தூக்க முடியும்.  அது நம் சுதந்திரம்.  தூக்கியகாலை இறக்காமல், இன்னொருகாலைத் தூக்க முடியாது அது பந்தம்.  ஒரு சுதந்திரம் ஒரு பந்தத்தை அளிக்கின்றது.  எது சுதந்திரம், எது பந்தம்?்  எந்த சுதந்திரம்? நமக்கு வேண்டும், எந்தச் சுதந்திரம் பரவாயில்லை. இதைப்பார்த்துத் தான் வாழ்க்கை இயங்குகின்றது. 
 +
சில இடங்களில் நாம் என்ன தேவையென்று முடிவு எடுப்பது நம் சுதந்திரம்.  ஆனால் அதன் எதிர்வினை, பக்க வினை எல்லாவற்றிற்கும் நாம்தான் பொறுப்பு.  அந்தப் பொறுப்பை நாம் மறந்துவிட முயற்சிக்கும்பொழுது, பொறுப்பு நம்மீது வலியத் திணிக்கப்படும்பொழுது, அதனுடைய எதிர்வினையும், பக்கவினையும் நம்மீது திணிக்கப்படும்பொழுது நாம் அதனை விதியென்று குற்றம் சாட்டுகின்றோம்.  உண்மையில் மதியைத் தாண்டிய விதி இல்லை.  மதியிலே நாம் மறந்துவிட்ட பாகங்கள் நாம் எதிர்பார்க்காத செயல்வினையையும், எதிர்வினையையும் கொடுக்கும்பொழுது நாம் அதனை விதியென்று நம்புகின்றோம்.  நம்புவது மட்டுமல்லாமல், அது விதி செய்த சதியென்று கோபமும் கொள்கின்றோம். 
 +
உண்மையில் நம் விதிக்கும், விதி செய்த சதிக்கும்கூட நாமே பதியென்பதுதான் மதி. ஆழ்ந்து திரும்பிப் பாத்தோமானால், இந்த மொத்தக் கேள்விக்கும், நீங்கள் இப்போது கேட்ட இந்தச் சிந்தனையோட்டத்திற்கான தீர்வு என்னவென்றால், நம் குறிக்கு நாம் சத்தியத்தோடு இருந்தால் கோள் எல்லாம்கூட நம்குறிக்கு அருள் செய்யும். குறிக்கோளை நாம் அடைவோம். 
 +
நமது குறிக்கு நாம் எவ்வளவு சத்தியமாய் இருக்கின்றோம்.  நம்முடைய நோக்கத்திற்கும், தலைவனுக்கும், நமது குறிக்கோளுக்கும் நாம் எவ்வளவு சத்தியத்தோடு இருக்கின்றோம் என்பதுதான்.  இந்த விதி, மதி, சதி, பதி மொத்த சுழலுக்குமான தௌிவு. 
 +
எப்பெல்லாம், வாழ்க்கையில விதி விளையாடுகிறதென நினைக்கின்றோமோ அப்பெல்லாம் நாம் செய்யவேண்டியது நமக்கும் நமது குறிக்கோளுக்கும் இடையில் இருக்கின்ற சத்தியத்தை ஆழமாக்குதல்.  அதை ஆழமாக்கிக்கொள்ளுதல்.  அந்தச் சத்தியத்தின் ஆழத்தை அதிகமாக்கிக் கொள்ளுதல். (டிடனைெ ளிழவ) ஐக் குறைத்தல். இருளகற்றல்.  உண்மையில் பார்த்தால். இருப்பில் இருக்கின்ற ஓட்டைகள்தான் இழுப்பிற்குக் காரணம்.  இருப்பு தன்னுடைய சத்தியநிலை.  இழுப்பு கருமம்.  இருப்பிலே இருள் இல்லாமல் இழுப்பு நடந்தால் அது இனிமையான தெய்வவாழ்க்கை. 
 +
இருப்பிலே இருள் இருந்து இழுப்பு நடந்தால், அது வரப்போகின்ற செயல்வினையும், எதிர்வினையும் நாம் எதிர்பார்க்காததாக இருக்கும் என்பதால், அதை நாம் விதியென்று சொல்வோம்.  விதி செய்த சதியென்று பழிப்போம்.  நம் மதியெங்கே போனது என்று நம்மை நாமே பழித்துக்கொள்வோம்.
 +
இந்த மொத்த விதி வலியதா? மதி வலியதா?  மதியையே மாற்றுகின்ற சக்தி விதியின் சதியா?  அல்லது விதியையே மாற்றுகின்ற மதியே பதியா? என்கின்ற இந்த மொத்த சுழலுக்கும் கேள்விகளுக்கும் உண்மையான தீர்வு என்னவென்றால், நம் வாழ்க்கையில் நாம் எதைக் குறிக்கோளாகக் கொண்டோமோ அதற்கு நம்முடைய நேர்மையையும், சத்தியத்தையும் ஆழமாக்கிக் கொள்வது. 
 +
அப்பொழுது இருப்பின் ஆழம் அதிகமாவதனால், இழுப்பின் அகலம் குறையும்.  இழுப்பின் அகலம் குறைவதனால், இருள் இல்லாத சிந்தை யோட்டம் இருக்கும்.  இருள் இல்லாத சிந்தனை  ஓட்டத்தினால், நாம் எதிர்பாராத, எதிர்நோக்காத வினைப்பயனும், செயல்பயனம், கருமப்பயனும் வராது.  அதனால் வாழ்க்கையை விதியென்று பழிக்கவும் மாட்டோம்.  விதியின் சதியென்று இழிக்கவும் மாட்டோம்.  விதியென்றும், விதியின் சதியென்றும் பழிப்பதானாலும், இழிப்பதானாலும் நம்மை நாமே அழிக்கவும் மாட்டோம். 
 +
ஆத்மப்பிரியானந்த சுவாமி:  சுவாமிஜி ஓரு நாடையாளும் தலைவர் எப்படி நடந்துகொள்ளவேண்டும்.
 +
சுவாமிஜி:  ஆகா! ஆள்மைத் தன்மை.  இந்த ஆள்மைக்கு சதாசிவப்பெருமான் அளிக்கின்ற விளக்கம் என்ன?  இருக்கின்றது எல்லாமே தன்னைப் பெருக்கிக்கொள்வது இயல்பு. ஒரு டாக்டர் நிறைய டாக்டர்களை உருவாக்குவார்.  ஒரு என்ஜினியர் நிறைய என்ஜினியர்களை உருவாக்குவர். ஒரு குரு நிறையக் குருமார்களை உருவாக்குவார்.  ஒரு  நடிகன் நிறைய நடிகர்களை உருவாக்குவார்கள்.  எதுவாக நாம் நமது இருப்பை உணர்கின்றோமோ அதை நாம் பெருக்குவோம்.  ஒரு மனிதன் தன்னை ஒரு மனிதனாக மட்டும் நினைத்தால், நிறைய மனிதர்களை உருவாக்குவார், ஒரு பன்றி நிறையப் பன்றிகளை உருவாக்கும்.  தன்னை எதுவாகத் தான் உணர்கின்றானோ, இருப்பைப் பெருக்குவது அந்த இயற்கைக்குப் பெயர்தான் ஆள்மை. 
 +
நாடாள்மை தன்னுடைய இருப்பையே நாடாக, நாட்டு மக்களாக, இவர்களின் நாலனாக உணர்கின்ற ஒருவன் அதைப் பெருக்குவதுதான் நாடாள்மை.  நம்மை நாம் எதுவாக உணர்கின்றோமோ அதைப் பெருக்குவது ஆண்மை.  தன்னை தான் எந்த இனமாய் எதுவாய் கருதுகிறானோ அதைப்பெருக்குவது ஆண்மை.  இனம் பெருக்குவது ஆண்மை.  நாட்டையும், நாட்டின் நலனையும், குடிகளையும் குடிகளின் நன்மையையும் தானாய் உணர்ந்து அதைப் பெருக்குபவன் நாடாள்பவன்.  அதைப் பெருக்குவது நாடாள்மை. எவன் தன்னையும், தன் குடியையும், குடியின் கொற்றத்தையும், அவர்கள் சுற்றத்தையும், நன்மையையும் தானாய் உணர்ந்து பெருக்குகின்றானோ அவனே நாடாள்மை செய்பவன்.  இதுவே நல்ல நாடாள்மை. 
 +
ஆத்மப்பிரியானந்த சுவாமி:  சுவாமிஜி:  சாஸ்த்திரத்தில் அனுமதிக்கப்பட்ட ஒரு விஷயம்.  பெண்களுக்கு சந்யாசம்.  புராணத்தில் ஹார்கி, மைத்ரேயி போன்ற சந்நியாசிகளும் மற்றும் வட இந்தியாவில் பெண் சந்நியாசிகளுக்கு வழங்கப்பட்ட அங்கிகாரம் ஏன் தமிழ்நாட்டிலோ திராவிடத்திலோ இல்லை?  மற்றும் ஏன் பெண் சந்நியாசிகளை மடாதிபதிகாளாக நியமிப்பதில்லை. ?
 +
சுவாமிஜி:  முதல் விஷயம் நீ சொன்ன, புராண விஷயங்கல்ல சொல்லப்பட்டிருக்கிற, புராணங்கல்ல இல்ல, வேதத்திலே அவர்கள் சொல்லப்பட்டிருக்கிறார்கள். உபநிடதங்களில் அவர்கள் சொல்லப்பட்டிருக்கிறார்கள், மைத்ரேயியும் கார்கியும்  புராண காலத்து மாதர்கள் அல்ல, வேத காலத்து உபநிடத காலத்து மாதர்கள்.  அதற்கும் மூத்தது. சன்யாச மந்திரமே மிகத் தௌிவாக  பெண்களுக்கு சன்யாச உரிமை உண்டு என்றுதான் மந்திரமே வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதெல்லாம் ஒருபுரம்.  நீ கேட்கின்ற இந்தக் கேள்விம்மா ஏன் தமிழ் நாட்டிலும், திராவிடத்திலும் பெண் சந்நியாசிகளுக்கு முக்கியத்துவம் இல்லாமல் போனது?  நீ சொல்கின்ற இந்தப் பிரச்சினை நிட்சயமாக நாத்திக நாராசம் பரவிய பின்பு வந்த பிரச்சினைதானே தவிர அதற்கு முன்பாக இருந்ததாக இல்லை.  மங்கையற்கரசியாரைப் பார்,  உண்மையிலேயே பெரிய ஞானியாக வாழ்ந்திருக்கின்றார்.  திலகவதியார்.  நால்வரின் வாழ்க்கையைப் புரட்டிப் பார்த்தோமானால் பெண்களுக்கு எந்தளவில் உயர்ந்த இடம் அளிக்கப்பட்டிருக்கின்றது.  ஞானசம்பந்தப் பெருமான் மங்கையற்கரசியாரையும், மீனாட்சியையும் ஒன்றாகப் பாடுகின்றார்.  திருநாவுக்கரசர் தன்னுடைய தமக்கை அக்கா திலகவதியம்மையாரால்தான் சைவத்திற்கு மீண்டும் இழுத்து வரப்பட்டிருக்கின்றார்.  திருநீறு கொடுத்து, சுலையைக் குணமாக்குகின்ற சக்தி திலகவதியாருக்கு இருந்திருக்கின்றது.  சுந்தர மூர்த்தி நாயனாரது வாழ்க்கையில் சங்கிலி நாச்சியாரும், பரவை நாச்சியாரும். 
 +
எந்த உயர்ந்த ஸ்தானத்தை வகித்திருக்கின்றார்கள்.  ருத்திர கன்னிகைகளாக இருந்து சிவனும் சிவத்தொண்டும் செய்திருக்கின்றார்கள்.  சுந்தரமூர்த்தி நாயனாரது வாழ்க்கையைப் பார்த்தோமானால், தன்னுடைய பரம்பொருளுக்கு நெருங்கிய நண்பன் சுந்தரமூர்த்தி நாயனார்.  அவர்கிட் போய் சொல்றாரு, கவலப்படாத நீ சொல்கின்ற மாதிரித் திருவொற்றியுரில் நீ சத்தியம் பண்ணுகின்ற நேரத்தில் நான் கோவிலில் இருந்து வௌியே வந்து வன்னி மரத்திற்குக்கீழ் இருந்திருக்கின்றேன் அப்படீன்னு சொல்லிட்றாரு.  சொல்லிவிட்டு, அந்தம்மாவின் கனவில் சென்று, நீ அவனை கோவிலில் சத்தியம் கேட்காமல், வன்னி மரத்திற்குக்கீழ் சத்தியம் பண்ணச் சொல்லுவென்று. 
 +
சுந்தரமூர்த்தி நாயனாருக்கும் சதாசிவப் பரம்பொருளுக்கும் இருந்த அந்த நெருக்கம், அவர்களுக்கும் பெருமானுக்கும் இருந்திருக்கின்றது.  சைவத்தைத் திரும்பிப் பார்த்தோமானால், தமிழ்நாட்டிலே வேரூன்றியிருந்த ஆன்மீக இயக்கங்களைத் திரும்பிப் பார்த்தோமானல், நிட்சயமாகப் பெண்களுக்கு இடமில்லையென்று என்னால் சொல்ல முடியவில்லை.  சந்நியாசம் இல்லையென்றும் என்னால் சொல்ல முடியவில்லை.  சந்நியாசிகள் இருந்திருக்கின்றார்கள்.  ஔவைப் பிராட்டி வாழ்க்கை முழுவதும் சந்நியாசியாக வாழ்ந்திருக்கிறார்.  சித்தர்க்ள், பல பெண் சித்தர்கள் இருந்திருக்கின்றார்கள்.  மடாதிபதிகளாகப் பெண்கள் இல்லை என்பதை என்னால் ஒரு முழுமையான கருத்தாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 
 +
சைவம் எனும் மிகப் பெரிய சம்பிரதாயம் மனித இனத்தின் சரிபாதியான பெண்மைக்கு மறுக்கப்பட்டிருக்கச் சாத்தியமேயில்லை.  இடைச்செருகல்களும், இஸ்லாமியப் பயங்கரவாதப் படையெடுப்புகள் போன்ற காலங்களிலும், பாதுகாப்புக்கருதி மடாதிபதிகள் போன்ற பொறுப்புக்களில் நியமிக்கப்படாமல், அல்லது கலந்து கொள்ளாமல் இருந்திருப்பதற்கான வாய்ப்புகள் இருந்திருக்கின்றதே தவிர கல்வெட்டுக்களைப் புரட்டிப் பார்த்தோமானால், பல இடங்களில், சிவாச்சாரியார்களைப்போல, பீடாதிபதிகளைப்போல ருத்திர கன்னிகைகள் பல்லக்கிலே வந்து பெருமானுக்குப் புஜை செய்துவிட்டுத் திரும்பியிருக்கிறார்கள். 
 +
மடாதிபதிகள் அறக்கட்டளைகளை நிறுவியதுபோல ருத்திரகன்னிகைகள் நித்திய புஜைகளுக்கு அறக்கட்டளைகளை நிறுவி வைத்திருக்கிறார்கள்.  பெண்களுக்கான சந்தியாச மடங்கள், சந்நியாச பீடங்கள் நிச்சயமாக இருந்திருக்கின்றது. 
 +
பெண்களே குருவாக இருந்திருக்கின்ற பீடங்களும் மடங்களும் இருந்திருக்கின்றது.  இஸ்லாமியப் பயங்கரவாத போர்களின்போதும், படையெடுப்புகளின்போதும், அந்தக் காலகட்டத்தில் உருவான சைவ சம்பிரதாயங்கள் பெண்களைப் பீடங்களில் அமர்த்துவதில்லை என்கிற முடிவை பாதுகாப்புக் கருதி எடுத்திருக்கலாமென நினைக்கின்றேன்.  தவிர, வடநாட்டு வேதாந்த சம்பிரதாயங்களில் பெண்களுக்கு அளிக்கப்பட்ட இடம் தென்னாட்டு சம்பிரதாயங்களில் அளிக்கப்படவில்லை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 
 +
ஒருவேளை இந்த நாத்திக நாராசக் கூத்தடிப்பினால் அது குறைந்திருக்கின்றதென நினைக்கின்றேன்.  அதைச் சரி செய்வதற்காகத்தான் உங்களையெல்லாம் உருவாக்கியிருக்கின்றேன்.  அனுப்புகின்றேன். 
 +
ஏன் இப்படி என்பவர்கள் சாதாரண மனிதர்கள்?  எப்படி மாற்றுவது என்பவர்கள் நித்தியானந்தரின் சீடர்கள்.  நிச்சயமாகப் பெரும் சித்தர்களும், ஞானிகளும் மடாதிபதிகளும், துறவிகளும், சந்நியாசிகளுமாக எல்லாவிதமான நிலைகளிலும் பெண்களும் இருந்திருக்கின்றார்கள்.  நடுவில் சற்றுத் தொய்வு ஏற்பட்டிருக்கின்றது.  மீண்டும் அந்தத் தொய்விலிருந்து நாம் எழுந்து வௌியில் வந்து சைவத்தில் பெண்மைக்குச் சமபங்களித்து, அவர்களுக்கும் சம உரிமை தந்து, அவர்களும் சைவம் தழைக்க பங்களிப்பதற்கான எல்லா  வேலைகளையும் செய்ய வேண்டிய பொறுப்பு நம்முடையது. 
 +
ஆத்மப்பிரியானந்த சுவாமி::  சுவாமிஜி! உன் குருவை ஒருவர் அவதூறு செய்தால் அவருடைய நாக்கை அறு என பகவான் இராமகிருஷ்ணர் சொல்லியிருக்கின்றார்.  சுவாமிஜி எங்கள் குருவான உங்கள் கருத்து என்ன?  எம் பக்தர்களுக்கு நீங்கள் என்ன ஆணை கொடுக்கிறீர்கள்?
 +
சுவாமிஜி::  அம்மா! அலியென்றும் விளிக்கப்பட்டுவிட்டேன்.  ஆண்டவன் என்றும் விளிக்கப்பட்டுவி்ட்டேன்.  விளிக்கப்படுவதனால் களிப்பும், வலிப்பும் இல்லாத நிலையை என்றோ பார்த்துவிட்டேன். விளிக்கப்படுவதனால் கழிப்பும் இ்ல்லை.  வலிப்பும் இல்லை.  விளிக்கப்படுபவன் களிப்பும், வலிப்பும் இல்லாதவன் என்பதனால், விளிப்பவர்கள் செய்வது சரியென்று அர்த்தமில்லை.  விளிக்கப்படுபவன் வலிப்பும், கழிப்பும் கடந்தவன் என்பதானல், விளிப்பவர்கள் சரியானவர்கள் என்பது பொருளல்ல. 
 +
அதாவது. எதிர்வினையாக எதுவுமே செய்ய வேண்டியதில்லை.  ஆனால், இவர்களுக்கு பதில் சொல்லாமல் இருந்தால் என்னை மட்டுமல்ல, எந்தச் சத்தியத்திற்கு நான் பலமாக நிற்கின்றேனோ அந்தச் சத்தியத்தை அழிக்க முயற்சிக்கின்றார்கள்.  சம்பிரதாயத்தை அழிக்க முயற்சிக்கின்றார்கள்.  சட்டத்திற்கு உட்பட்டு இவர்களுக்கு எல்லாவிதமான பதிலும் சொல்லியே தீரப்பட்டாக வேண்டும். 
 +
ஒருவேளை இராமகிருஷ்ணர் இருந்த காலத்தில் நாக்கை வெட்டுவது சட்டத்திற்கு உட்பட்டு இருந்ததோ இல்லையோ என எனக்குத் தெரியாது.  இப்போதய சுழ்நிலையில் நாட்டின் சட்டத்திற்கு உட்பட்டு, உங்கள் உரிமைகளை நிலைநாட்டிக்கொள்ளுங்கள்.  உங்கள் உரிமைகளை நிலைநாட்டிக்கொள்ள மறந்தால், உயிர்கூட இருக்காது.  எனெனில் முதலில் ஓட்டகம் கூடாரத்திற்குள் தலையை விடும்.  நீங்கள் அதைக் கவனிக்காது விட்டீர்களானால் ஒட்டகம் கூடாரத்திற்குள் இருக்கும்.  நீங்கள் வௌியில் கிடப்பீர்கள்.  முதலில் அவர்கள் உங்கள் உரிமைகளில்தான் தலையிடுவார்கள்.  பிறகு உங்கள் உடமைகளில் தலையிடுவார்கள்.  பிறகு உங்கள் உயிரையே எடுத்துவிடுவார்கள்.  விளிக்கப்படுவதனால் வலிப்போ, களிப்போ எனக்கு இல்லை என்பது வேறு.  அதற்காக விளிப்பவர்கள் செய்வது சரியாகிவிட முடியாது.  நீங்களும் உங்கள் உரிமைகளைப் பெற்றுக்கொள்ளாது, நிலைநாட்டிக்கொள்ளாது இருந்துவிட முடியாது.  சட்டத்திற்கு உட்பட்டு உங்கள் உரிமைகளை நிலைநாட்டிக்கொள்ளுங்கள்.  இது உங்கள் கடமை.  இல்லையேல் உயிர்கூட இருக்காது. 
 +
ஆத்மப்பிரியானந்த சுவாமி:: சுவாமிஜி: அத்வைதம் ஒரு சாராசரி மனிதனின் பார்வைக்கு.  உங்களின் விளக்கம் என்ன? 
 +
சாராசரி  மனிதன் என்பதே (கயரடவசல பநநெசயடணையவழைெ ) தவறான ஒருமைப்படுத்தல்.  தமிழில் அழகான இந்த வார்த்தை.  ஒருமை. ஒற்றுமை. நரன் என்பது மனிதன். அயனம் என்பது வழி.  வழிகாட்டப்பட்ட  நாராயணன்.  அவ்வாறெனில்  நரன் அயன்  சேர்ந்தால் நாராயணன்.  அகம். வெறும் அகம் சேர்ந்தால் நரகாசுரன்.  நரன்  அகம் மும் சேரந்தால் நரகாசுரன்.  நரன்  அயனன் நாராயணன்.  ஒருமை. ஒற்றுமை.  ஒருமை கசதடற வல்லினம்.  ஙஞணநமன என்பது மெல்லினம். யரழவளல இடையினம்.  அடிப்படையாக ஒற்றுமைக்கும் ஒருமைக்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.
 +
எவ்வளவு  நாள்வரை தன்னக்குள் வன்மை இருக்கிறதோ அவ்வளவு நாள்வரை ஒற்றுமையும் வருவதில்லை, ஒருமையும் வருவதில்லை.  எப்பொழுது நாம் இருக்கின்ற எல்லாவற்றுடனும் ஒற்றுமையைக் கொண்டுவருகின்றோமோ அப்பொழுது ஒருமை நிகழத் துவங்குகிறது.  சரியான மனிதன் என்ற வார்த்தை (கயரடவசல பநநெசயடணையவழைெ ) தனிமனிதன்தான் இருப்பு.  சராசரி மனிதன் கற்பனை.  சராசரி மனிதன் என்றால் பலமனிதர்களின் குணத்தை ஒன்றாகச் சேர்த்து அது கற்பனை.  அது இருப்பு அல்ல. 
 +
ஒருமையோ அல்லது ஒற்றுமையோ தனக்குள் யாருக்கு வாழ்க்கையைப் பற்றிய நோக்கும் போக்கும் தௌிவாக இருக்கின்றதோ அவர்களுக்குள்தான் நடக்கும்.  சராசரியான மனிதன் என்கின்ற கற்பனைப் பாத்திரத்திற்கு வாழ்க்கையின் நோக்கும் போக்கும் கிடையாது.  கற்பனைக் காட்டூன்களுக்கு வேண்டுமானால் மூக்கும் முழியும் வைக்கலாம்.  நோக்கும், போக்கும் சொல்ல முடியாது.  மூக்கும் முழியும் இருப்பதனால் நோக்கும் போக்கும் இருந்துவிடும் என்ற அர்த்தமில்லை.  நோக்கும், போக்கும் இருப்பவன் மனிதன்.  வெறும் மூக்கும் முழியும் இருப்பவன் சராசரி மனிதன். ஆதி வேறு.  உயிர் வேறு.  கும்பலாகச் சேர்ந்து வாழுகின்ற ஆடுகளுக்கு ஆதி இருக்கின்றது.  நோக்கும் போக்கும் இல்லாததினால் அவர்களுக்கு உயிர் கிடையாது. 
 +
ஆடுமாடுகளைப் போல பட்டியைத் திறந்தால் தொட்டியில் விழுந்தோம்னு மொத்தமாக வாழுகின்ற, நீங்கள் சொல்கின்ற சராசரி மனிதர்களுக்கு ஆதியுண்டே தவிர, உயிர் இல்லை.  அதனால் அவர்கள் ஆவி பிடிக்கின்ற இடத்திற்குப் போவர்கள்.  உயிர் நோக்கும், போக்கும் புரிந்தவனுக்குத்தான் உண்டு.  நோக்கும், போக்கும் புரிந்தவனுக்குத்தான் அத்வைதத்தைச் சொல்ல முடியும்.  அத்வைதத்தைத் தனி மனிதனுக்குத்தான் சொல்லலாமேயொழியச் சராசரி மனிதனுக்குச் சொல்ல முடியாது.  யாருக்குத் தன் வாழ்க்கையின் நோக்குப் புரிந்திருக்கிறதோ, போக்குப் புரிந்திருக்கி்றதோ அவன் இருக்கின்ற எல்லாவற்றுடனும் ஒற்றுமையைக் கொண்டுவருவானேயானால் ஒருமையைப் பார்ப்பான்.  அவன். ஓற்றுமை ஒருமையாகி ஓர்மையாகும்.  ஒரேயொரு வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் தேடுதல் உடைய தனிமனிதர்களுக்குத்தான் அத்வைதம் புரியும்.  சராசரி மனிதனுக்குப் புரிவதில்லை.  பொழுது போகிறதற்கு மஞ்சள் பத்திரிகை.  பொழுது போகவில்லையென்றாலும் மஞ்சள் பத்திரிகை.  அவ்வளவுதான் அவன் வாழ்க்கை.  அடுத்தவன் வாழ்க்கையில் இருக்கின்ற துக்கத்தையெல்லாம் பார்த்து ரசிக்கிறது மஞ்சள் பத்திரிகை.  தன் வாழ்க்கையில் வருகின்ற துக்கத்தையெல்லாம் பார்க்கிறதற்கு வருவதுதான் மஞ்சள் பத்திரிகை.  கல்யாணப்பத்திரிகை.  பத்தி வரும் வியாதியஞ்சேன்.  பரவிவரும் டெங்கும் அஞ்சேன்.  முத்தி வருமோ வராதோ யெனும் பயமும் அஞ்சேன்.  தன் வாழ்வுத் துக்கமும், பிறர்வாழ்வுத் துக்கமும் ஒன்றாய்க் கொண்டுவரும் மஞ்சள் பத்திரிகை அம்மனாம் அங்சுமாறே. 
 +
ஆத்மப்பிரியானந்த சுவாமி:: சுவாமிஜி! மாணிக்கவாசகப் பெருமான் பெருமானைப் பார்த்து எழுதிய திருவாசகம் போல நீங்கள் பெருமானைப் பார்த்து திருவாசகம் எழுதினால் ஒரு நாலு வரிகள். 
 +
சுவாமிஜி::  வாசகம்கூட ஆசகமும் யாசகமும் நிகழ்த்தும் சுசகம்தான்.  சோகஹமும், சிவோகஹமும் தசோகஹமும், சாதாசோகஹமும் மாறி மாறி மனதிற்குள் கூறி விளைந்திட யாசகமும் இல்லை. ஆசககமும் இல்லை.  அம்பலவாணா வாசகம் ஏது செய்வேன்நான்.
 +
என் சுவாசகத்து நீயுற்றதால் சுவாசமே திருவாசகமாய் போனதால் வாசத்திற்கு. சுவாசத்திற்கு, விசுவாசத்திற்கு வாசகம் ஏது. என் வாசமும் சுவாசமும் விசுவாசமும்  உன் நேசமாய்ப் போனதால்  வாசகம் இந்த நேசகத்தை வாசிக்கவொண்ணாது.  வாசிக்க முயற்சிக்கும் ஆசிக்கவும் ஒண்ணாது.  ஆசிக்கச் செய்திடும் யாசிக்கவும் ஆகாது.  வாசமே உன் வாசம்.
 +
மரபுக்கவிதை வெண்பாவோ புதுக்கவிதைப் பண்பாவோ நான் மரபின் புதுமை.  சுரியனின் புதுமையும் ரவியின் பழமையும் சுரியனின் புதுமையும் சேர்ந்ததென்பதனால், மரபுக்கவிதையின் வெண்பாவும், புதுக்கவிதையின் பண்பாவும் சேர்த்து இந்த வாசம் மலர்ந்தது.
 +
கசடு தவத்தால் அறும்.  ஙனணம் நமனம் என அறும்.  யரழம் வழலம் என வளரும் என்பதனால் வல்லினமும், மெல்லினமும் இடையினமுமான என்னினமே உனை என்றென்றும் தன்னினமாய் நான் பார்க்க என் இனம் உன் முக்கண் இனமாய் மாற வாராயோ வந்தருள் தாராயோ.
 +
ஆத்மப்பிரியானந்த சுவாமி:் சுவாமிஜி! திருவாசகத்திற்கு உருகாதோர் ஒரு வாசகத்திறகும் உருகாதோர் என்பதுபோல இத்துடன் என்னுடைய கேள்விகள் நிறைவு பெறுகின்றன. 
 +
சுவாமிஜி்:  சைவமும், சைவத்தின் சத்தியங்களும் ஆழ்ந்து தெரிந்து கொள்ளுங்கள்.  ஆகமத்தில் மட்டும்தான் ஆலயங்கள் வெறும்  உழபெசைஉயவழைளெ  அதாவது நம்பிக்கையாளர்களின் சந்திப்பு மையம் மட்டுமல்ல, அல்லது உபதேசம் செய்யப்படும் பாடசாலை மட்டுமல்ல, வழிபாடுகள் நிகழ்த்தப்படும் இடம் மட்டுமல்ல, சதாசிவப் பரம்பொருள் வாழும் இடம்.  வாசம் செய்யும் இடம். 
 +
வேறு எந்த மதவழிபாட்டுத் தலங்களையும் மாற்றிக்கொள்ளலாம்.  தலங்கள் அந்த மதங்கள் அனுமதிக்கின்றது.  காரணம் அந்த வழிபாட்டுத் தலங்களை இறைவன் வசிக்கின்ற வசிப்பிடங்களாகச் சொல்லவில்லை.  ஆனால் ஆகமங்கள் சதாசிவப் பரம்பொருளின் வசிப்பிடமாக ஆலயங்களைச் சொல்கின்றன.  அப்படிப் பார்த்தோமானால் சிவன் நாடு எது.  அதிகம அளவு சிவபெருமான வசிக்கின்ற  ஆகமப்படி எதுவென்றால் அதிகமாக அமைக்கப்பட்ட தென்னாட்டு ஆலையங்கள்தான்.  அதனால்தான் என்னாட்டவர்க்கும் இறைவன் ஆனாலும் தென்னாடுடைய சிவனே!.  எல்லா இடத்திற்கும் போவார், வருவார், வந்துவிடுவார்.  தன்னாடு, தான் இருப்பு தென்னாடே.
 +
அன்னை மீனாட்சிபோல உலகெலாம் சைவம் பரப்பி, அருளாட்சி செய்து, மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெலாம் என சைவம் பரப்ப அதிகாரமும், செங்கோலும் அளித்தோம்.  தமிழெனும் அமிழ்தால் கடைந்தான் நெஞ்சம் நெகிழ்வது மட்டுமல்ல, தொண்டையிலிருக்கின்ற நஞ்சும் இனிக்கின்றது. 
 +
நம்பரனார் வந்து அம்பலவாணத் தம்பிரான் என்று தமிழாலே கையொப்பம் செய்து மேன்மைகொள் சைவத்தை தன் சமயம் என்று உறுதிப்படுத்தி இன்நெறி தன்நெறியென்று முன்னறி செய்துவைத்து என்நெறிகொண்டார்க்கும் தன்நெறியே முன்நெறியென்று சொல்லியும், அனுபுதியாய் அளித்தும், வாழ்வில் மலரச் செய்து, இந்தச் சத்தியங்களை வாழ்வின் சாத்தியமாக்க அவர் ஆணைப்படி, அவர் அருளாலே அவன் தாள் வணங்கி, மற்றோரை வணங்க வைக்கும் இயக்கமே நம் சங்கம். 
 +
என்றென்றும் சைவம் பரப்பி, நித்யானந்த சங்கமே பல்லாண்டு வாழ்ந்திரு.  இன்று தீபாவழித்திருநாள்.  முதல் முறையாக 2000 ஆண்டிலே ஆனந்தமாயிருங்கள் எனும் அற்புதமான ஆசி செந்தமிழ் மொழியில் பொங்கிய நன்னாள். 
 +
மற்றவையெல்லாமே மொழி பெயர்ப்பு.  ஆனந்தமாயிருங்கள் என்ற வார்த்தை மட்டும்தான் பொழிபெயர்ப்பு. பொழிந்தது, மொழியில் பெயர்ந்தது.  ஆனந்தமாயிருங்கள் எனும் வார்த்தைதான.் 
 +
மற்றவையெல்லாமே மொழியில் இருந்து பெயர்ந்தது. 
 +
மொழிக்குள் பெயர்ந்தது ஆனந்தமாயிருங்கள் எனும் வார்த்தையே. 
 +
எல்லோரும் ஆனந்தமாயிருக்க, ஆனந்தமாயிருங்கள் என ஆசீர்வதிக்கின்றேன். 
 +
நித்யானந்தத்தில் நிறைந்து, நித்யானந்தத்தில் கரைந்து, நித்ய ஆனந்தமாயிருக்க ஆசீர்வதிக்கின்றேன்.  ஆனந்தமாயிருங்கள்.
 +
 
==Photo==
 
==Photo==
 
<div align="center">
 
<div align="center">
Line 82: Line 183:
 
{{#hsimg:1|300||http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-10-Oct-19_nithyananda-diary_bengaluru-aadheenam_diwali-fireworks_IMG_6982.JPG}}</div>
 
{{#hsimg:1|300||http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-10-Oct-19_nithyananda-diary_bengaluru-aadheenam_diwali-fireworks_IMG_6982.JPG}}</div>
  
[[Category: Puja]][[Category: 2017]][[Category: Diwali]][[Category: Ask The Avatar]]
+
[[Category: Puja]][[Category: 2017]][[Category: Diwali]][[Category: Ask The Avatar]] [[Category: தமிழ்]]

Revision as of 01:12, 22 August 2020

Day's Event

Los Angeles Aadheenam Address

History was made today when the City of Montclair declared October 18th 2017 as “Paramahamsa Nithyananda Day”. The Mayor Pro Temple of Montclair Carolyn Raft presented the proclamation from the City Council which cited Paramahamsa Nithyananda’s contribution to superconscious evolution of humanity by reviving Veda-Agamic tradition of Sanatana hindu Dharma via Third Eye Awakening and Manifesting Shaktis (Extraordinary Powers). The proclamation was signed by Mayor Paul M Eaton, and issued jointly with the members of the city council. Council Member Bill Ruh was also present on the occasion, as was Mr. Harry Sidhu from Anaheim who had not only served for 8 years on the Anaheim City Council but also served as Mayor Pro Temple of Anaheim three times.


Ask The Avatar - Tamil

Today's edition of Ask The Avatar was conducted in Tamil with Ma Nithya Atmapriyananda Swami posing questions to the Avatar.

Link to Video:


Kali Puja - Prana Pratishtha

Paramahamsa Nithyananda infused life into the deity of Kali as he performed the sacred process of Prana Pratishtha.

Diwali Fireworks

Bengaluru Aadheenam celebrated Diwali with fireworks in the presence of Paramahamsa Nithyananda.

Transcript in Tamil

பரமஹம்ச நித்தியானந்தரோடு -ஒரு நேர்காணல்...அவதாரத்தோடு ஆன்மீகக் கேள்விகள்" ஞானாத்தமா சுவாமி அவர்கள் ஆத்மபிரிய சுவாமியை அறிமுகம் செய்து வைக்கின்றார். இதுவரை நாம் சந்தித்த ஆதினவாசிகள் ஒவ்வொருவரும் அவர்கள் வாழ்வில் என்ன சந்தித்தார்கள், எப்படிச் சுவாமிஜியைச் சந்தித்தார்கள், எப்படி ஆதினவாசியாக வந்தார்கள் என்று இந்த வாழ்க்கையின் சிறப்புகளை அடிப்படையாக வைத்து அறிமுகப்படுத்தினோம். இன்று நாம் சந்திக்கப்போகும் ஆதினவாசி இந்தப் பிறவியிலிருந்து அறிமுகப்படுத்துவதைக் காட்டிலும் அவருடைய வாழ்க்கையில் சிறிது முன்னாடியிருந்து அறிமுகப்படுத்தினால்தான் அவருடைய அறிமுகம் நிஜ அறிமுகமாகவிருக்கும். பரமஹம்ச நித்தியானந்த சுவாமிகளின் இந்த அவதார நோகத்தில் சிலருக்கு அவதார நோக்கத்தைக் கொடுக்க வந்தார். சிலருக்கு மனநலத்தைக் கொடுக்கிறதற்காக வந்திருக்கிறார். சிலருக்கு ஞானத்தையே கொடுப்பதற்காக வந்திருக்கிறார். ஆனால் ஒருவரை தன்கூடவே வைத்து வாழ அழைத்து வந்திருக்கின்றார். அவர்தான் அந்த நபர். இதைக் கேட்டவுடன் நீங்கள் நினைக்கலாம் பரமஹம்சர் கூடவே வாழ்வதற்காக அழைத்து வந்திருக்கின்றாரா? என. உங்களுக்கு ஒரு கேள்வி வரலாம். பரமஹம்சரை அவருக்கு எப்படித் தெரியும் என. இதற்குப் பதில் தெரிந்தால்தான் இன்றைய அவதாரத்தைக் கேட்டல்" நிகழ்வில் யார் வருகின்றார்கள் என்ற பதில் கிடைக்கும். பரமஹம்சரின் புர்வ அவதாரமான மீனாட்சி அவதாரத்தில், அங்கயற்கண்ணியாக தன் அஷ்டசகிகளுடன் அரசாட்சி செய்தபோது ஒருவரை மாதங்கி" எனப் பெயரிட்டு வளர்த்து வந்தாள். மாதங்கி அன்னை மீனாட்சியிடம் ஒரு வரம் கேட்டாள். எப்பொழுதெல்லாம் அகிலம் காக்க அன்னை உடலெடுத்து வந்தாலும் தான் அவளுடன் வாழவேண்டும் என வரம்கேட்க, அற்புத வரத்தை அக மகிழ்ந்து மாதங்கிக்கு வழங்கினாள். அந்த வரத்தால்தான் மாதங்கி இன்று எம்முடன் ஆத்மப்பிரியானந்த சுவாமியாக பரமஹம்ச சுவாமிகளுடன் வாழ்வதற்காக வந்திருக்கின்றார்கள். ஆத்மப்பிரயானந்த சுவாமிகளை மேடைக்கு அழைக்கின்றேன். .இன்று ஆத்மப்பிரயானந்த சுவாமி மீனாட்சியின் புனர்ஜென்மமான பரமஹம்சருக்கு மதுரை மீனாட்சி கோவிலில் இருந்து மீனாட்சிக்குச் சுடிய மாலையைப் பரமஹம்சருக்கு அணிவதற்காக எடுத்துவந்திருக்கின்றார். இப்பொழுது ஆத்மபிரியானந்த சுவாமி எப்படிப் பரமஹம்ஸ சுவாமிகளைச் சந்தித்தார் என்று பார்க்கலாம். மா நித்ய ஆத்மப்பிரியானந்த சுவாமி சென்னையில் ஒரு மருத்துவக் குடும்பத்தில் பிறந்தார். சிறு வதிலிருந்தே விளையாட்டிலும், பரம்பரிய இசையிலும் ஆர்வமுடையவராக இருந்துவந்தார். தன்னுடைய 8ம் வயதில் பாரம்பரிய இசையைப் பயிலும் பயணத்தைத் தொடர்ந்தார். நிறைய அரங்கேற்றங்களில் பல பரிசுகளைப் பெற்றார். இருந்தாலும் தன் பெற்றோர் விரும்பியவாறு பல் மருத்துவத் தேர்ச்சியும் பெற்றார். இதற்கிடையில் தன் வாழ்வின் நோக்கத்திற்கான தேடலும் அவருக்குள்ளே இருந்து வந்தது. அப்போதுதான் அவருடைய புர்வ ஆஸ்ரம அப்பா ஒரு இளம் வயதான ஒரு சந்நியாசியின் படத்தை அவரிடம் காட்டி நீ விரும்பியதை அடைய விரும்பினால் இவரை வணங்கினால் அடையலாம் எனக் கொடுக்க, ஆத்மப்பிராயனந்த சுவாமியோ நான் சாமியை வணங்குவேன் ஆனால் ஆசாமிகளை அல்ல எனப் பதிலளித்தார். அப்போது அவருடைய அப்பா உனக்கு ஒருநாள் உண்மை புரியும் எனப் பதிலளித்தார். அதிஷ்டவசமாக அந்த ஒரு நாள் சீக்கிரமே வந்தது. நித்யானந்த ஸ்புரணா என்ற நிகழ்வில் சுவாமிஜி அவர்களைச் சந்தித்தார். சுவாமிஜியைப் பார்த்தவுடன் கண்களில் தண்ணீர் பெருக இவரே தன் வாழ்வின் குருவென்று உணர்ந்தார். தரிசனத்திற்காகச் சென்றபோது எப்போதும் சுவாமிஜியுடன் இருக்க வேண்டுமென்று வரம் கேட்டபோது, சுவாமிஜி சிரித்துக்கொண்டே ஆனந்தமாக இருப்பாய் எனப் பதிலளித்தார். பின்பு புர்வஆஷ்ரம அம்மா புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்தபோது தியான சிகிட்சை பெறுவதற்காக வந்திருந்தபோது கல்பதரு நிகழ்வில் கலந்து கொண்டு ஒரு சந்நியாசியாக சுவாமிஜியுடன் வாழவேண்டுமென்று கேட்டார். சுவாமிஜி அளித்தவரத்தால் சீக்கிரமே சந்நியாசம் பெற்றார். தற்பொழுது சுவாமிஜியின் சத்தியங்களை உலக மக்களுக்கு எடுத்துச் சென்று சேர்ப்பதிலும், ஐந்து சனல்களில் சக்திவழிப்படுத்துதல் நிகழ்வுகள் மூலம் இலட்சக்கணக்கான மக்களுக்கு ஆன்மீக ஆலோசனைகளும் வழங்கி வருகின்றார். இப்பொழுது அவர் ஆன்மீகம் சம்பந்தமான கேள்விகளைத் தொடருவார். ஆத்மப்பிரியானந்த சுவாமி: எத்தனை பிறப்பெடுத்தாலும் இந்த அரிய வாய்ப்பு இப்பிறவியில்தான் எனக்குக் கிடைத்திருக்கிறது. என்றென்றும் உங்கள் மகளாகப் பிறந்து உங்களோடு இருந்து சேவை செய்ய விரும்புகின்றேன். சுவாமிஜி என்னுடைய முதலாவது கேள்வி..., என்னுடைய வாழ்க்கையில எனக்கு உங்களைப் பார்த்த மாத்திரத்தில், எனக்கு ஆன்மத் தேடுதல்வந்து நான் உங்களைக் குருவென்று ஏற்றுக்கொண்டேன். குருவை அடைவது கர்மத்தினாலா? அல்லது தனி மனித முயற்சியாலா? அல்லது அவன் அருளால் அவன்தாழ் வணங்கி என்கின்ற மாதிரி் குருவின் அருளாலா? சுவாமிஜி: முதலில் நீ கேட்டவரம் கேட்டபடியே அமையட்டும். மகளென்னும் உறவிற்கு மாட்சிமை கற்புச் செய்து நான் ஆட்சி செய்ய உலகிற்கு வரும்பொழுதெல்லாம் என் காட்சியோடு நீயிருப்பாய். அடுத்தது நீ கேட்ட கேள்வியம்மா, உன்னுடைய வாழ்க்கையில நடந்த நிகழ்ச்சியை மேற்கோளாகக் காட்டி, நான் பார்த்தவுடன் எனக்கு ஆன்மீகத் தேடுதல் எழுந்தது. குருதான் வாழ்க்கையென பிடித்துக் கொண்டேன். குருவை அடைவது கர்மத்தினாலா? முற்பிறவிப் பயனாலா அல்லது தன் முயற்சியாலா? உண்மையில் பார்த்தால் இந்த மூன்றினாலும் அடையப்படுகிறார்கள். சிலபேருக்கு புர்வஜென்மத் தொடர்பு இருந்து, அந்த தொடர்பைத் தொடர்ந்து வருவதானால். அடைகின்றார்கள். ரொம்பக் குறைந்தளவு. மிக மிகக் குறைந்த எண்ணிக்கை. இரண்டாவதாகத் தன்னுடைய வாழ்க்கையிலே பல்வேறு விதமான துக்கங்கள். துன்பங்கள், துயரங்கள், இவற்யையெல்லாம் பார்த்ததினால் ஏற்பட்ட விரக்தி. கைவல்ய நவநீதம் என்ற அருமையான தமிழ் வேதாந்த நூல் சொல்லும். ஆனவி மனைவி மக்கள் அத்தவீடு அனைக்கண் மூன்றும் கானவர் வலையில்பட்டு கைதப்பி ஒடும் மான்போல் போனவன் வெறும்கையோடே போகாத வண்ணம் சென்று ஞான சற்குருவைக் கண்டு நன்றாக வணங்கினானே.

ஆனவி, மனைவி மக்கள் இந்தப் பல்வேறுவிதமான பந்தங்களிலே சிக்கி, பல்வேறு விதமான துக்கங்களைப் பார்த்து, ஒரு வேடனுடைய வலையிலே சிக்கி ஆனால் ஏதோ ஒரு மான் ஏதோ ஒரு காரணத்தால் தப்பிவிட்ட மான் என்ன வேகத்தோடு அங்கிருந்து ஓடுமோ அந்த வேகத்தோடு ஆனவி மனைவி மக்கள் அத்தவீட அனைக்கண் மூன்றும் கானவர் வலையில் பட்டு கைதப்பி ஓடும்மான்போல், அந்த வேகத்தில் ஓடி போனவன் வெறுங்கையோட போகாத வண்ணம் ஞான சற்குருவைக் கண்டு நன்றாக வணங்கினானே. ஆனவி, மனைவி, மக்கள், அர்த்தம், வீடு அனைக்கண். இவைகள் எல்லாவற்றினுடைய எரிப்பு. ஒரு மனிதனைத் துக்கம், துயரம், போன்றவைகளால் தகித்து, விரக்தியின் உச்சத்திற்குக் கொண்டு சென்றால், அவனால் குருவை அடையாளம் கண்டு, சரணடைந்து, வாழ்க்கையின் குறிக்கோளைத் தெரிந்து கொள்ளும் பக்குவத்தை அடைந்து விடுகின்றான். இன்னும் சிலபேர் தங்களுடைய வாழ்க்கையிலே எந்தவிதமான துக்கமும், பிரச்சினையும் இல்லை. ஆனால் இருக்கின்ற வாழ்க்கை வாழ்க்கையின் நிரந்தரம் அற்ற தன்மை, குருவினுடைய சதாசிவ நிலை, சதாசிவ இருப்பு, சதாசிவ சக்திகளின் வௌிப்பாட்டைக் கண்டு, ஆகா! வாழ்க்கை இப்படியல்லவா இருக்க வேண்டும், இவரோடு அல்லவா இருக்க வேண்டும் என்கின்ற உத்வேகத்தின் காரணமாக தான் இருக்கும் நிலையின் நிலை அற்ற தன்மையும், கலை அற்ற தன்மையும், இதைப் புரிந்துகொள்வதனால் குருவைக் கண்டுபிடிப்பவர்களும் உண்டு. நீ கேட்ட மூன்றும் கர்மம், வினைப்பயன், தேடுதல், தன்முயற்சி, இவைகளினாலும், குரு தேடப்படுகின்றார். அடையப்படுகின்றார். அடிப்படையாக ஒரு மனிதனுக்கு ஆழமான ஒரு தேவை இறுதி வாழ்க்ககையின் இறுதி நோக்கமான நம்முடைய சாத்தியக்கூறுகள் எல்லாம் மலர்ந்து முடிகின்றவரை ஒய்வு கொள்ளாது இருத்தல்.

நாம் எதற்காகப் படைக்கப்பட்டிருக்கிறோமோ நம்முடைய சாத்தியங்கள், சக்திகள். (ிழளளடைிடைவைநைளஇ ிழறநசள) சாத்தியங்களையும், சக்திகளையும் வௌிப்படுத்தி முடிக்கின்றவரை ஓய்வெடுக்காது இருத்தல் என்ற ஒன்றைமட்டும் மனிதன் பற்றிக்கொள்வானேயானால், குரு நம்மைத்தேடி வருவாரொன்று. அவர் நம்மைத்தேடி வரும்பொழுது நாம் கண்டுகொள்வோம் என்பது மற்றொன்று. இரண்டுமே நடந்திடும். பீரங்கியில் நெருப்பு வைத்த வினாடியே பீரங்கி வெடிக்கின்றது. அதற்குப் பீரங்கி தயார்படுத்தப்படுகின்றது. மருந்தால் நிறைக்கப்பட்டு, வெடிமருந்தும் கரித்தூளும் வைத்து இடிக்கப்பட்டு, தயார்செய்யப்படுகின்றது. அதேபோல, நம்முடைய உணர்வும், உன்னுடைய அனுபவத்தைச் சொல்லுகின்றேன். இப்ப வந்து உன்னுடைய அனுபவத்த சொன்னமா..., பார்த்தவுடனேயே தாரைதாரையாகக் கண்களில் கண்ணீர் பெருகி இவர்தான் என்குருவென்று உணர்ந்தேன். என்னுடைய ஆன்மீகத் தேடுதல் மலர்ந்தது. நீ ஏற்கனவே உள்ளுக்குள் இருந்த அனுபவத்தை ஒருவினாடி தொட்டவுடன் அது மலர்ந்துவிட்டது. இது எல்லோருக்கும் நடப்பதில்லை. ஏனெனில், தயாரிக்கப்பட்ட பீரங்கிதான் வெடிக்கும். தயாரிக்கப்படாத பீரங்கி வெடிப்பதில்லை. அதேபோல, எந்த மனிதன் தேடுதல் என்கின்ற வெடிமருந்தை வைத்து, தன்முயற்சி என்கின்ற கரித்தூளும் சேர்த்து மீண்டும், மீண்டும், மீண்டும் குறிக்கோளில் இருந்து மாறாமல் இருக்கின்ற நேர்மையால் இடிக்கப்பட்டு, தயாராக இருக்கின்ற பீரங்கிதான் குருவின் தீட்சையெனும் நெருப்புப் பட்டவுடன், பிரச்சார பீரங்கியாக மாறுகிறது. குரு சிஷ்ய சம்பிரதாயம் சனாதன இந்து தர்மத்தின் ஆணிவேர். தமிழும் சைவமும் இந்தக் குரு சிஷ்ய சம்பிரதாயத்தில் மட்டும்தான் உயிரோடு இருந்தது, உயிரோடு இருக்கின்றது, உயிரோடு இருக்கும். ஆத்மப்பிரியானந்த சுவாமி்: சுவாமிஜி! நான் கடவுள் என்கின்ற அந்த மிக உயர்ந்த புரிந்துணர்வு நிலையிலிருந்து கடவுளே இல்லை, கடவுள் ஒருவர்தான் என்கின்ற புரிந்துணர்வு நிலைக்கு மனித மன அமைப்புத் தள்ளப்பட்டது எதனால்? இந்த உணர்வுரீதியான சீரழிவிற்கு என்ன காரணம்? இதை நிறுத்துவதற்கு என்ன வழி? சுவாமிஜியன் பதில்: மனிதனுடைய உடலும், உடல் இசைவும் (ிாலளழைடழபல) மனமும், மன இசைவும், இசைவு என்பது (டழபைஉ) உயிர், உயிர் இசைவும், எப்பொழுது ஒரு ஆரோக்கியமான உடல் இசைவும், உயிர் இசைவும், மன இசைவும் இருக்கிறதோ அப்பொழுது மனிதன் இந்தப் பிரபஞ்சத்தை மிகப் பெரிய சுதந்திரத்தன்மையுடனும், கொண்டாட்டத்தோடும், ஆனந்தத்தோடும், பரவசக்களிப்போடும் பார்க்கிறான். எப்போ தன் உடலும் உடல் இசைவும், மனதும் மனஇசைவும், உயிரும் உயிரிசைவும் இசைவில் இல்லாது இருக்கின்றதோ, இசைவுகள் இல்லாது அசைவுகள் நடக்கும்பொழுது தன்மீது நம்பிக்கை இழந்து, தன்னைச் சுற்றியிருக்கும் சமுகத்தின்மீது நம்பிக்கையிழந்து, இயற்கையின்மீது நம்பிக்கையிழந்து இயற்கையையே செயற்கையாக செய்துவைத்த இறைவன்மீது நம்பிக்கையையிழந்து இவைகள் எல்லாவற்றின் மீதும் நம்பிக்கையிழந்து தன்னை அவை்களோடு தொடர்புபடுத்திக்கொள்கின்ற தௌிவை இழந்து,யடஅழளவ சித்தப்பிரமை பிடித்த இயக்கம் இல்லாத மயக்கத்தில் இருக்கின்றபொழுதுதான் தான் கடவுள் என்கின்ற இருப்புத் தன்மையை இழக்கின்றான். அதாவது ஒரு மனிதன் எதைவேண்டுமானாலும் இழக்கலாம். ஆனால் குழந்தைப் பருவத்திலே இருக்கின்ற மன இசைவு, உயிர் இசைவு, உடல் இசைவு, இதனால் இருக்கின்ற காரணமில்லாத களிப்பு அதை இழந்துவிடக் கூடாது. காரணம் இல்லாத களிப்பு மீனாட்சி கொடுத்தனுப்பிய சீதனம். அவள் கொடுத்தனுப்பிய ஸ்ரீதனம். இந்தக் காரணமில்லாத களிப்பு குறையும்போதுதான், எல்லாவற்றிலும் சந்தேகம் வருவதனால், இறுதிச் சத்தியங்களை உள்வாங்க மறுக்கின்றான், மறக்கின்றான். உதாரணத்திற்கு ஒரு குளத்தினுடைய நீர் தௌிந்து இருக்குமானால், வானத்தில் இருக்கின்ற சுரியனை, சந்திரனை மட்டுமல்ல வானத்தில் இருக்கின்ற நட்சத்திரங்களைக்கூட நாம் இந்த சநகடநஉவழைெ பார்க்கலாம். அந்த நீரில் கொஞ்சச் சலனம் இருந்தால், நட்சத்திரங்களைப் பார்க்க முடியாது, சந்திரனைப் பார்க்கலாம். ரெம்பச் சலனம் இருந்தால் சந்திரனையும் பார்க்க முடியாது. அதுமாதிரி, நமது உள்ளம் உடலும் உடல் இசைவும், மனதும் மன இசைவும், உயிரும் உயிர் இசைவும், மிகவும் தௌிவாக இருக்குமானால் இந்த நான் கடவுள் என்கின்ற இருப்பிலேயே இருக்கலாம். ஒரு ஆனந்தமான மனிதனை நாம் கடவுள், கடவுள் சக்தியின் வௌிப்பாடு என்று சொன்னால் உடனே நம்பிவிடுவான். அவனுக்கு அது ஒன்றும் பெரிய கஷ்டமாகவிருக்காது. ஆனந்தத்திற்கு இருக்கின்ற ஆன்மீகக் குணமே உயர்ந்த சத்தியங்களை மூளை பிரதிபலிப்பதற்கு அது உதவியாக இருக்கின்றது, உறுதுணையாகவிருக்கின்றது. அதனால்தான் இந்த ஆனந்தம் எனும் குணம் சதாசிவப் பெருமானால் சஷ்டாங்க யோகத்தில் ஒரு அடிப்படையான தேவையாகச் சொல்லப்படுகின்றது. தனக்குள் இருக்கின்ற ஆனந்தம் தன்னைத்தானே சந்தோஷமாக வைத்திருத்தல் என்பது ஒரு மிகப்பெரிய ஆன்மீக குணம். காரணம் என்னவென்றால், ஒரு இசைவு உடைய மனதில்தான் உயர்ந்த சத்தியங்கள் பிரதிபலிக்கும். சைவ உணவு எந்த அளவுக்கு உடலுக்கும், உடல் இசைவிற்கும் தேவையோ அதுபோல சந்தோஷமாயிருத்தல் மனதிற்கும் மன இசைவிற்கும் வேண்டும். இந்த இடத்தில் சந்தோஷம், ஆனந்தம் என்ற இரண்டு வார்த்தையையும் ஒரு பொருள்பட உபயோகப்படுத்துகின்றேன். காரணம் என்னவென்றால், தன்னுடைய முயற்சியினால் ஆனந்தத்தைக் கொண்டுவருவது சந்தோஷம். தானாகவே சந்தோஷம் நிரந்தரமாய் இருப்பது ஆனந்தம். சாதனை, சாத்தியம். இந்த இரண்டு காலத்திலும் ஆனந்தத்தின் குணத்தைச் சொல்வதற்காக இரண்டு வார்த்தைகளை உபயோகப்படுத்துகின்றேன். அடிப்படையாக யாரெல்லாம் தன்னுடைய வாழ்க்கையை ஆனந்தமாக அமைத்துக்கொண்டார்களோ இசைவோடு அமைத்துக்கொண்டார்களோ அவர்களுக்கு நீங்கள் கடவுள் என்று சொன்னவுடன் புரிந்துகொள்ள முடிந்தது. (உழபெணைந) பண்ண முடிந்தது. உயிராலே அந்த உண்மையை உறைத்துக்கொள்ள முடிந்தது. அந்த உண்மை உயிருக்குள் உறைத்தது. சில நேரத்தில் மூளையில் மட்டும் உறைக்கும், உணர்ச்சியில் மட்டும் உறைக்கும், உணர்வில் உறைக்காது. அந்த உணர்வில் உறைத்தல்தான். (உழபெவைழைெ) என்று சொல்கின்றேன். இருப்பில் .(உழபெணைந செய்துகொள்வது. ஒரு இசைவு இருக்கின்ற மனிதனால் நீ கடவுள் என்று சொன்னதும் அந்த மனிதனுக்கு உயிரிலே உறைக்கின்றது. ஒன்றும் இல்லை ஒரு சின்ன எடுத்துக்காட்டு. சதாரணமாக மனிதர்களைப் பார்த்து வசை பாடினீர்கள் என்றால், எருமையே போன்ற வார்த்தைகளை பாவித்தீர்களானால், உடனே புரிந்து கொண்டு கோபமும், வேகமும் வௌிபடுவதைப் பார்க்கலாம். என்ன தைரியம், நீ என்னைச் சொல்லிவிட்டாயா? என் வம்சத்தைச் சொல்லிவிட்டாயா? என் பரம்பரையைச் சொல்லிவிட்டாயா? உன்னை நான் என்ன செய்கின்றேன் பார். அந்த (உழபெவைழைெ) வேகம் உயிரிலே உறைக்கின்ற வேகம். அதே மனிதனைப் பார்த்து நீ சதாசிவன், நீ இறைவனின் வடிவம் என்ற சொன்னால் கொக்னைஸ் பண்ண மாட்டார்கள். வேறு வேலையைப் பாருங்கள், டீ- க்கே காசில்லை. சதாசிவன் என்று சொல்லுகிறீர்கள். வேகத்தோடு ஒரு சத்தியத்தை உயிரிலே உணர்வது. ஒரு அடிப்படை என்னவென்றால் நாம் உயிரிலே உணர்ந்தாலும் அதுதான் உண்மை. எந்தச் சத்தியம் உயிரில் உறைக்கின்றதோ அதைச் சார்ந்துதான் நம் வாழ்க்கையின் நோக்கும், போக்கும் இருக்கும். நமது உடம்பும், மனதும் ஒரு அடிப்படையான பக்குவப்படுத்தப்பட்ட நிலையிலே நாம் அதை வளர்ப்போமானல் நீங்கள் கடவுள் என்ற சத்தியத்தைச் சொன்னமாத்திரத்திலேயே அது உயிரில் உறைத்துவிடும். கொஞ்சம் சஞ்சலம் இருந்தால், கடவுள் இருக்கிறார், அவர் ஒருவர்தான், ஆனால் நான் கடவுள் என்பது தெரியவில்லை. அதாவது சந்திரன் தெரியும் விண்மீன்கள் தெரியாது. அந்தளவிற்குச் சஞ்சலம் இருக்கின்ற ஒரு நீர் நிலை. சுத்தமாக் குழம்பிப்போன குட்டைதான் விண்மீனுமில்லை, சந்திரனுமில்லை, எனக்குத் தெரிந்ததெல்லாம் என்மீன்தான். அடிச்சு சாப்பிடு. அடிப்படையாக நீங்கள் கடவுள் என்கின்ற உண்மையை மனிதனுக்கு உணர்த்துவதுதான் அவனுக்குச் செய்கின்ற மிகப்பெரிய நன்மை. அதுதான் மிகப்பெரிய அபாயமும்கூட. ஏனெனில் அதை சொல்ல வருபவர்களை மனிதன் பொறுமையோடு எதிர்கொள்வதில்லை.

ஒருவன் நன்றாகத் தூங்கிக்கொண்டிருக்கின்றான். விடியற்காலைக் கனவு புலி விரட்டுவதாக. இரண்டு புலி அவனை விரட்கிறது. வேக வேகமாக ஓடிச் சென்று ஒரு மரத்தின்மேல் ஏறுகிறான். அங்கு ஒரு மலைப்பாம்பு அவனை விழுங்குவதற்காகக் வாயைத் திறந்துகொண்டிருக்கின்றது. மரத்திலிருந்து குதித்துவிடலாம் என்று பார்த்தால் அங்கே பெரிய ஆறு, அதில் 4 முதலை வாயைத் திறந்து கொண்டு உட்கார்ந்திருக்கின்றன. கனவில் அவன் ஐயோ ஐயோ என்று கத்துகின்றான். துப்பாக்கி கொண்டுவா, அணுகுண்டு கொண்டுவா, பீரங்கி கொண்டுவா என்று. பக்கத்தில் விழித்துக்கொண்டிருக்கின்ற நண்பன் அவனுக்குச் செய்யவேண்டிய உதவி துப்பாக்கி, கத்தி, அணுகுண்டெல்லாம் கொண்டுசென்று கொடுப்பதா? அல்லது ஒரு தட்டு தட்டி அடிச்சி எந்திரி அப்படீங்கிறதா? பக்கத்தில் இருக்கும் நண்பன் எழுத்திரு என்றால், அவனோ நான் உன்னை அணுகுண்டு கேட்டேன், துப்பாக்கி கேட்டேன், கத்தி கேட்டேன், முடிந்தால் அவைகளையெல்லாம் கொடு, அல்லது எழுந்து செல். நீ எனது நண்பன் இல்லை. நீ என் விரோதி, துரோகி. அவசரத்திற்கு உதவி செய்யாத துரோகி. கடைசிவரை, அவனுக்கு நிசமாக எந்த உதவி வேண்டுமோ அதைப் பெற்றுக்கொள்ள அவன் தயாராக இருக்கவிில்லை. அதனால்தான், அவர்களை நான் ஆண்டவன் என்று சொன்னாலும், என்னை அவர்கள் ஏமாற்றுக்காரன் என்று கூறுகின்றார்கள். நான் அவர்களை என்னைப்போல விளிக்கின்றேன். அவர்கள் என்னை அவர்களைப்போல விழிக்கின்றார்கள். விளிப்பினால் ஏற்படும் வலிப்பு எனக்கு இல்லாததினால், வலிக்க வைக்க வேண்டி விளித்தாலும் வலியில்லை. வலிப்பதற்காக அல்ல விழிப்பதற்காக அவர்களை நோக்கி விளித்தாலும், விழிக்க விரும்பாததனால், விளிப்பு அவர்களுக்கு வலிப்பாகத் தோன்றுகிறது. நீயே இறைவன் எனும் விழிப்பு வலிக்க வைப்பதற்காக அல்லாமல் விழிக்க வைக்க வேண்டிச் சொல்லப்பட்டாலும், விழிக்க விருப்பம் இல்லாத காரணத்தால் வலிக்கச் சொல்லப்பட்டதாய் அவன் நினைப்பதனால் மனிதனுக்கு இந்த உண்மையைச் சொல்லிப் புரியவைப்பதுதான் மிகப்பெரிய சேவை. புரிந்துகொள்ளுகின்றவரை அவனுடைய எதிர்வினை மிகப் பெரிய அபாயம். கத்தி வேண்டும் என அவன் கத்திக்கொண்டிருக்கின்றான். அவனுக்குத் தேவை கத்தியோ சுத்தியோ அல்ல. சாதாரண புத்தி. வேறு ஒன்றுமே வேண்டியதில்லை. அடிப்படையாக சைவ உணவால் உடலையும், நல்ல சந்தோஷமான கருத்துக்களால் மனதையும், இசைவுபடுத்தினீர்களானால் போதுமானது. நீங்களே சதாசிவப் பெரும்பொருளின் சொருபம் என்ற சத்தியம் எங்கிருந்தோ உங்கள் காதில் விழுந்து, உங்கள் உணர்வில் உறைத்து. உங்களின் உயிர்இசைவை உருவாக்கிவிடும். உடல் இசைவையும், மனஇசைவையும் மட்டும் நீங்கள் செய்து வைத்தாலே பெருமான் உயிர் இசைவைச் செய்துவிடுவார். அடிப்படையாக மனிதன் செய்யவேண்டியது உடல் இசைவையும், மன இசைவையும் செய்து வைக்க வேண்டியது. ஆத்மப் பிரியானந்த சுவாமிஜி: சுவாமிஜி. இப்ப எனக்கு ஒரு விஷயம் நடக்குது. கர்மத்தினாலா? அல்லது நான்தான் அதைச் செய்கின்றேனா? இங்கு என்னுடைய வினை என்ன? சுவாமிஜி: இது ஒரு அருமையான, முக்கியமான சத்தியம், விதி, மதி, சதி. விதி வெல்லுமா? மதி வெல்லுமா? மதியையே மாற்றும் விதி சதியா? அல்லது விதியையே மாற்றும் மதி பதியா? விதியையே மாற்றும் மதி பதியா?. மதியையே மாற்றும் விதி சதியா?

அடிப்படையாகப் பார்த்தோமானால், இருப்பு அதாவது நம்முடைய உயிர், நம்முடைய உயிரின் நோக்கம், நமக்கு நாமே இருக்கின்ற சத்தியத்தன்மை, அதாவது என்னுடைய வாழ்க்கையின் நோக்கத்திற்கும், என்னுடைய செயல்களுக்கும் இடையில் இருக்கின்ற சத்தியத்தன்மை (வைெநசபசவைல) இருப்பென்று சொல்கிறேன். இந்த இருப்பும், இருப்பில் இருந்து இழுப்பும் எப்படியென்றால் வாழ்க்கையில் கற்பனைகூட இருப்பில் இருந்துதான் இழுப்பு நடக்க முடியும். கம்பர் அழகாக ஒரு உவமை சொல்கிறார். "இருகை வேளத்து இராகவன் வந்தான்’. இராமபெருமான் வருவதைக் கம்பநாட்டாள்வார் மிக அழகாகச் சொல்வார். இரண்டு கை இருக்கின்ற யானையைப் போல இருகை வேளத்து இராகவன் வந்தான். ஒரு தும்பிக்கை இருக்கின்ற யானையைப் பார்த்தால் அதைப்பற்றிய அறிவு, அதைப்பற்றிய தௌிவு இருந்தால் மட்டும்தான், அனுமானம் இருந்தால் மட்டும்தான் இருகை வேழன் செய்கின்ற இழுப்பை நாம் செய்ய முடியும். இருப்பு, இருப்பு சார்ந்து மட்டும்தான் இழுப்பு நிகழும். ஒரு கை வேழம் என்கின்ற இருப்பு இருந்தால் மட்டும்தான் இருகை வேழம் என்கின்ற இழுப்பு நடக்க முடியும். இது கவிதை நிலை. இதுவே நம் நிஷவாழ்க்கை நிலையில், நம்முடைய இருப்பும், இருப்பு சார்ந்த நிலையில் இழுப்பும்தான் இந்த விதி, மதி. பிரச்சினையே. நம்முடைய இருப்பு. அதனுடைய ஆழம் சார்ந்து மட்டும்தான் நம்முடைய வாழ்க்கையின் இழுப்பு இருக்கும். இந்த இழுப்பில் இருக்கின்ற (டிடனைௌிழவள) தௌிவு இல்லாத நம்முடைய குறிக்கோளுக்கும், நம்முடைய செயல்பாட்டிற்கும் நேர்மைப்படாது இருக்கின்ற மன அமைப்புகள் செயல்பாடுகள். இது எதிர்வினையைக் கொண்டுவரும்பொழுது அதைத்தான் நாம் விதி என்று சொல்கின்றோம். நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். ஒரு காலை நம்மால் தூக்க முடியும். அது நம் சுதந்திரம். தூக்கியகாலை இறக்காமல், இன்னொருகாலைத் தூக்க முடியாது அது பந்தம். ஒரு சுதந்திரம் ஒரு பந்தத்தை அளிக்கின்றது. எது சுதந்திரம், எது பந்தம்?் எந்த சுதந்திரம்? நமக்கு வேண்டும், எந்தச் சுதந்திரம் பரவாயில்லை. இதைப்பார்த்துத் தான் வாழ்க்கை இயங்குகின்றது. சில இடங்களில் நாம் என்ன தேவையென்று முடிவு எடுப்பது நம் சுதந்திரம். ஆனால் அதன் எதிர்வினை, பக்க வினை எல்லாவற்றிற்கும் நாம்தான் பொறுப்பு. அந்தப் பொறுப்பை நாம் மறந்துவிட முயற்சிக்கும்பொழுது, பொறுப்பு நம்மீது வலியத் திணிக்கப்படும்பொழுது, அதனுடைய எதிர்வினையும், பக்கவினையும் நம்மீது திணிக்கப்படும்பொழுது நாம் அதனை விதியென்று குற்றம் சாட்டுகின்றோம். உண்மையில் மதியைத் தாண்டிய விதி இல்லை. மதியிலே நாம் மறந்துவிட்ட பாகங்கள் நாம் எதிர்பார்க்காத செயல்வினையையும், எதிர்வினையையும் கொடுக்கும்பொழுது நாம் அதனை விதியென்று நம்புகின்றோம். நம்புவது மட்டுமல்லாமல், அது விதி செய்த சதியென்று கோபமும் கொள்கின்றோம். உண்மையில் நம் விதிக்கும், விதி செய்த சதிக்கும்கூட நாமே பதியென்பதுதான் மதி. ஆழ்ந்து திரும்பிப் பாத்தோமானால், இந்த மொத்தக் கேள்விக்கும், நீங்கள் இப்போது கேட்ட இந்தச் சிந்தனையோட்டத்திற்கான தீர்வு என்னவென்றால், நம் குறிக்கு நாம் சத்தியத்தோடு இருந்தால் கோள் எல்லாம்கூட நம்குறிக்கு அருள் செய்யும். குறிக்கோளை நாம் அடைவோம். நமது குறிக்கு நாம் எவ்வளவு சத்தியமாய் இருக்கின்றோம். நம்முடைய நோக்கத்திற்கும், தலைவனுக்கும், நமது குறிக்கோளுக்கும் நாம் எவ்வளவு சத்தியத்தோடு இருக்கின்றோம் என்பதுதான். இந்த விதி, மதி, சதி, பதி மொத்த சுழலுக்குமான தௌிவு. எப்பெல்லாம், வாழ்க்கையில விதி விளையாடுகிறதென நினைக்கின்றோமோ அப்பெல்லாம் நாம் செய்யவேண்டியது நமக்கும் நமது குறிக்கோளுக்கும் இடையில் இருக்கின்ற சத்தியத்தை ஆழமாக்குதல். அதை ஆழமாக்கிக்கொள்ளுதல். அந்தச் சத்தியத்தின் ஆழத்தை அதிகமாக்கிக் கொள்ளுதல். (டிடனைெ ளிழவ) ஐக் குறைத்தல். இருளகற்றல். உண்மையில் பார்த்தால். இருப்பில் இருக்கின்ற ஓட்டைகள்தான் இழுப்பிற்குக் காரணம். இருப்பு தன்னுடைய சத்தியநிலை. இழுப்பு கருமம். இருப்பிலே இருள் இல்லாமல் இழுப்பு நடந்தால் அது இனிமையான தெய்வவாழ்க்கை. இருப்பிலே இருள் இருந்து இழுப்பு நடந்தால், அது வரப்போகின்ற செயல்வினையும், எதிர்வினையும் நாம் எதிர்பார்க்காததாக இருக்கும் என்பதால், அதை நாம் விதியென்று சொல்வோம். விதி செய்த சதியென்று பழிப்போம். நம் மதியெங்கே போனது என்று நம்மை நாமே பழித்துக்கொள்வோம். இந்த மொத்த விதி வலியதா? மதி வலியதா? மதியையே மாற்றுகின்ற சக்தி விதியின் சதியா? அல்லது விதியையே மாற்றுகின்ற மதியே பதியா? என்கின்ற இந்த மொத்த சுழலுக்கும் கேள்விகளுக்கும் உண்மையான தீர்வு என்னவென்றால், நம் வாழ்க்கையில் நாம் எதைக் குறிக்கோளாகக் கொண்டோமோ அதற்கு நம்முடைய நேர்மையையும், சத்தியத்தையும் ஆழமாக்கிக் கொள்வது. அப்பொழுது இருப்பின் ஆழம் அதிகமாவதனால், இழுப்பின் அகலம் குறையும். இழுப்பின் அகலம் குறைவதனால், இருள் இல்லாத சிந்தை யோட்டம் இருக்கும். இருள் இல்லாத சிந்தனை ஓட்டத்தினால், நாம் எதிர்பாராத, எதிர்நோக்காத வினைப்பயனும், செயல்பயனம், கருமப்பயனும் வராது. அதனால் வாழ்க்கையை விதியென்று பழிக்கவும் மாட்டோம். விதியின் சதியென்று இழிக்கவும் மாட்டோம். விதியென்றும், விதியின் சதியென்றும் பழிப்பதானாலும், இழிப்பதானாலும் நம்மை நாமே அழிக்கவும் மாட்டோம். ஆத்மப்பிரியானந்த சுவாமி: சுவாமிஜி ஓரு நாடையாளும் தலைவர் எப்படி நடந்துகொள்ளவேண்டும். சுவாமிஜி: ஆகா! ஆள்மைத் தன்மை. இந்த ஆள்மைக்கு சதாசிவப்பெருமான் அளிக்கின்ற விளக்கம் என்ன? இருக்கின்றது எல்லாமே தன்னைப் பெருக்கிக்கொள்வது இயல்பு. ஒரு டாக்டர் நிறைய டாக்டர்களை உருவாக்குவார். ஒரு என்ஜினியர் நிறைய என்ஜினியர்களை உருவாக்குவர். ஒரு குரு நிறையக் குருமார்களை உருவாக்குவார். ஒரு நடிகன் நிறைய நடிகர்களை உருவாக்குவார்கள். எதுவாக நாம் நமது இருப்பை உணர்கின்றோமோ அதை நாம் பெருக்குவோம். ஒரு மனிதன் தன்னை ஒரு மனிதனாக மட்டும் நினைத்தால், நிறைய மனிதர்களை உருவாக்குவார், ஒரு பன்றி நிறையப் பன்றிகளை உருவாக்கும். தன்னை எதுவாகத் தான் உணர்கின்றானோ, இருப்பைப் பெருக்குவது அந்த இயற்கைக்குப் பெயர்தான் ஆள்மை. நாடாள்மை தன்னுடைய இருப்பையே நாடாக, நாட்டு மக்களாக, இவர்களின் நாலனாக உணர்கின்ற ஒருவன் அதைப் பெருக்குவதுதான் நாடாள்மை. நம்மை நாம் எதுவாக உணர்கின்றோமோ அதைப் பெருக்குவது ஆண்மை. தன்னை தான் எந்த இனமாய் எதுவாய் கருதுகிறானோ அதைப்பெருக்குவது ஆண்மை. இனம் பெருக்குவது ஆண்மை. நாட்டையும், நாட்டின் நலனையும், குடிகளையும் குடிகளின் நன்மையையும் தானாய் உணர்ந்து அதைப் பெருக்குபவன் நாடாள்பவன். அதைப் பெருக்குவது நாடாள்மை. எவன் தன்னையும், தன் குடியையும், குடியின் கொற்றத்தையும், அவர்கள் சுற்றத்தையும், நன்மையையும் தானாய் உணர்ந்து பெருக்குகின்றானோ அவனே நாடாள்மை செய்பவன். இதுவே நல்ல நாடாள்மை. ஆத்மப்பிரியானந்த சுவாமி: சுவாமிஜி: சாஸ்த்திரத்தில் அனுமதிக்கப்பட்ட ஒரு விஷயம். பெண்களுக்கு சந்யாசம். புராணத்தில் ஹார்கி, மைத்ரேயி போன்ற சந்நியாசிகளும் மற்றும் வட இந்தியாவில் பெண் சந்நியாசிகளுக்கு வழங்கப்பட்ட அங்கிகாரம் ஏன் தமிழ்நாட்டிலோ திராவிடத்திலோ இல்லை? மற்றும் ஏன் பெண் சந்நியாசிகளை மடாதிபதிகாளாக நியமிப்பதில்லை. ? சுவாமிஜி: முதல் விஷயம் நீ சொன்ன, புராண விஷயங்கல்ல சொல்லப்பட்டிருக்கிற, புராணங்கல்ல இல்ல, வேதத்திலே அவர்கள் சொல்லப்பட்டிருக்கிறார்கள். உபநிடதங்களில் அவர்கள் சொல்லப்பட்டிருக்கிறார்கள், மைத்ரேயியும் கார்கியும் புராண காலத்து மாதர்கள் அல்ல, வேத காலத்து உபநிடத காலத்து மாதர்கள். அதற்கும் மூத்தது. சன்யாச மந்திரமே மிகத் தௌிவாக பெண்களுக்கு சன்யாச உரிமை உண்டு என்றுதான் மந்திரமே வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதெல்லாம் ஒருபுரம். நீ கேட்கின்ற இந்தக் கேள்விம்மா ஏன் தமிழ் நாட்டிலும், திராவிடத்திலும் பெண் சந்நியாசிகளுக்கு முக்கியத்துவம் இல்லாமல் போனது? நீ சொல்கின்ற இந்தப் பிரச்சினை நிட்சயமாக நாத்திக நாராசம் பரவிய பின்பு வந்த பிரச்சினைதானே தவிர அதற்கு முன்பாக இருந்ததாக இல்லை. மங்கையற்கரசியாரைப் பார், உண்மையிலேயே பெரிய ஞானியாக வாழ்ந்திருக்கின்றார். திலகவதியார். நால்வரின் வாழ்க்கையைப் புரட்டிப் பார்த்தோமானால் பெண்களுக்கு எந்தளவில் உயர்ந்த இடம் அளிக்கப்பட்டிருக்கின்றது. ஞானசம்பந்தப் பெருமான் மங்கையற்கரசியாரையும், மீனாட்சியையும் ஒன்றாகப் பாடுகின்றார். திருநாவுக்கரசர் தன்னுடைய தமக்கை அக்கா திலகவதியம்மையாரால்தான் சைவத்திற்கு மீண்டும் இழுத்து வரப்பட்டிருக்கின்றார். திருநீறு கொடுத்து, சுலையைக் குணமாக்குகின்ற சக்தி திலகவதியாருக்கு இருந்திருக்கின்றது. சுந்தர மூர்த்தி நாயனாரது வாழ்க்கையில் சங்கிலி நாச்சியாரும், பரவை நாச்சியாரும். எந்த உயர்ந்த ஸ்தானத்தை வகித்திருக்கின்றார்கள். ருத்திர கன்னிகைகளாக இருந்து சிவனும் சிவத்தொண்டும் செய்திருக்கின்றார்கள். சுந்தரமூர்த்தி நாயனாரது வாழ்க்கையைப் பார்த்தோமானால், தன்னுடைய பரம்பொருளுக்கு நெருங்கிய நண்பன் சுந்தரமூர்த்தி நாயனார். அவர்கிட் போய் சொல்றாரு, கவலப்படாத நீ சொல்கின்ற மாதிரித் திருவொற்றியுரில் நீ சத்தியம் பண்ணுகின்ற நேரத்தில் நான் கோவிலில் இருந்து வௌியே வந்து வன்னி மரத்திற்குக்கீழ் இருந்திருக்கின்றேன் அப்படீன்னு சொல்லிட்றாரு. சொல்லிவிட்டு, அந்தம்மாவின் கனவில் சென்று, நீ அவனை கோவிலில் சத்தியம் கேட்காமல், வன்னி மரத்திற்குக்கீழ் சத்தியம் பண்ணச் சொல்லுவென்று. சுந்தரமூர்த்தி நாயனாருக்கும் சதாசிவப் பரம்பொருளுக்கும் இருந்த அந்த நெருக்கம், அவர்களுக்கும் பெருமானுக்கும் இருந்திருக்கின்றது. சைவத்தைத் திரும்பிப் பார்த்தோமானால், தமிழ்நாட்டிலே வேரூன்றியிருந்த ஆன்மீக இயக்கங்களைத் திரும்பிப் பார்த்தோமானல், நிட்சயமாகப் பெண்களுக்கு இடமில்லையென்று என்னால் சொல்ல முடியவில்லை. சந்நியாசம் இல்லையென்றும் என்னால் சொல்ல முடியவில்லை. சந்நியாசிகள் இருந்திருக்கின்றார்கள். ஔவைப் பிராட்டி வாழ்க்கை முழுவதும் சந்நியாசியாக வாழ்ந்திருக்கிறார். சித்தர்க்ள், பல பெண் சித்தர்கள் இருந்திருக்கின்றார்கள். மடாதிபதிகளாகப் பெண்கள் இல்லை என்பதை என்னால் ஒரு முழுமையான கருத்தாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சைவம் எனும் மிகப் பெரிய சம்பிரதாயம் மனித இனத்தின் சரிபாதியான பெண்மைக்கு மறுக்கப்பட்டிருக்கச் சாத்தியமேயில்லை. இடைச்செருகல்களும், இஸ்லாமியப் பயங்கரவாதப் படையெடுப்புகள் போன்ற காலங்களிலும், பாதுகாப்புக்கருதி மடாதிபதிகள் போன்ற பொறுப்புக்களில் நியமிக்கப்படாமல், அல்லது கலந்து கொள்ளாமல் இருந்திருப்பதற்கான வாய்ப்புகள் இருந்திருக்கின்றதே தவிர கல்வெட்டுக்களைப் புரட்டிப் பார்த்தோமானால், பல இடங்களில், சிவாச்சாரியார்களைப்போல, பீடாதிபதிகளைப்போல ருத்திர கன்னிகைகள் பல்லக்கிலே வந்து பெருமானுக்குப் புஜை செய்துவிட்டுத் திரும்பியிருக்கிறார்கள். மடாதிபதிகள் அறக்கட்டளைகளை நிறுவியதுபோல ருத்திரகன்னிகைகள் நித்திய புஜைகளுக்கு அறக்கட்டளைகளை நிறுவி வைத்திருக்கிறார்கள். பெண்களுக்கான சந்தியாச மடங்கள், சந்நியாச பீடங்கள் நிச்சயமாக இருந்திருக்கின்றது. பெண்களே குருவாக இருந்திருக்கின்ற பீடங்களும் மடங்களும் இருந்திருக்கின்றது. இஸ்லாமியப் பயங்கரவாத போர்களின்போதும், படையெடுப்புகளின்போதும், அந்தக் காலகட்டத்தில் உருவான சைவ சம்பிரதாயங்கள் பெண்களைப் பீடங்களில் அமர்த்துவதில்லை என்கிற முடிவை பாதுகாப்புக் கருதி எடுத்திருக்கலாமென நினைக்கின்றேன். தவிர, வடநாட்டு வேதாந்த சம்பிரதாயங்களில் பெண்களுக்கு அளிக்கப்பட்ட இடம் தென்னாட்டு சம்பிரதாயங்களில் அளிக்கப்படவில்லை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஒருவேளை இந்த நாத்திக நாராசக் கூத்தடிப்பினால் அது குறைந்திருக்கின்றதென நினைக்கின்றேன். அதைச் சரி செய்வதற்காகத்தான் உங்களையெல்லாம் உருவாக்கியிருக்கின்றேன். அனுப்புகின்றேன். ஏன் இப்படி என்பவர்கள் சாதாரண மனிதர்கள்? எப்படி மாற்றுவது என்பவர்கள் நித்தியானந்தரின் சீடர்கள். நிச்சயமாகப் பெரும் சித்தர்களும், ஞானிகளும் மடாதிபதிகளும், துறவிகளும், சந்நியாசிகளுமாக எல்லாவிதமான நிலைகளிலும் பெண்களும் இருந்திருக்கின்றார்கள். நடுவில் சற்றுத் தொய்வு ஏற்பட்டிருக்கின்றது. மீண்டும் அந்தத் தொய்விலிருந்து நாம் எழுந்து வௌியில் வந்து சைவத்தில் பெண்மைக்குச் சமபங்களித்து, அவர்களுக்கும் சம உரிமை தந்து, அவர்களும் சைவம் தழைக்க பங்களிப்பதற்கான எல்லா வேலைகளையும் செய்ய வேண்டிய பொறுப்பு நம்முடையது. ஆத்மப்பிரியானந்த சுவாமி:: சுவாமிஜி! உன் குருவை ஒருவர் அவதூறு செய்தால் அவருடைய நாக்கை அறு என பகவான் இராமகிருஷ்ணர் சொல்லியிருக்கின்றார். சுவாமிஜி எங்கள் குருவான உங்கள் கருத்து என்ன? எம் பக்தர்களுக்கு நீங்கள் என்ன ஆணை கொடுக்கிறீர்கள்? சுவாமிஜி:: அம்மா! அலியென்றும் விளிக்கப்பட்டுவிட்டேன். ஆண்டவன் என்றும் விளிக்கப்பட்டுவி்ட்டேன். விளிக்கப்படுவதனால் களிப்பும், வலிப்பும் இல்லாத நிலையை என்றோ பார்த்துவிட்டேன். விளிக்கப்படுவதனால் கழிப்பும் இ்ல்லை. வலிப்பும் இல்லை. விளிக்கப்படுபவன் களிப்பும், வலிப்பும் இல்லாதவன் என்பதனால், விளிப்பவர்கள் செய்வது சரியென்று அர்த்தமில்லை. விளிக்கப்படுபவன் வலிப்பும், கழிப்பும் கடந்தவன் என்பதானல், விளிப்பவர்கள் சரியானவர்கள் என்பது பொருளல்ல. அதாவது. எதிர்வினையாக எதுவுமே செய்ய வேண்டியதில்லை. ஆனால், இவர்களுக்கு பதில் சொல்லாமல் இருந்தால் என்னை மட்டுமல்ல, எந்தச் சத்தியத்திற்கு நான் பலமாக நிற்கின்றேனோ அந்தச் சத்தியத்தை அழிக்க முயற்சிக்கின்றார்கள். சம்பிரதாயத்தை அழிக்க முயற்சிக்கின்றார்கள். சட்டத்திற்கு உட்பட்டு இவர்களுக்கு எல்லாவிதமான பதிலும் சொல்லியே தீரப்பட்டாக வேண்டும். ஒருவேளை இராமகிருஷ்ணர் இருந்த காலத்தில் நாக்கை வெட்டுவது சட்டத்திற்கு உட்பட்டு இருந்ததோ இல்லையோ என எனக்குத் தெரியாது. இப்போதய சுழ்நிலையில் நாட்டின் சட்டத்திற்கு உட்பட்டு, உங்கள் உரிமைகளை நிலைநாட்டிக்கொள்ளுங்கள். உங்கள் உரிமைகளை நிலைநாட்டிக்கொள்ள மறந்தால், உயிர்கூட இருக்காது. எனெனில் முதலில் ஓட்டகம் கூடாரத்திற்குள் தலையை விடும். நீங்கள் அதைக் கவனிக்காது விட்டீர்களானால் ஒட்டகம் கூடாரத்திற்குள் இருக்கும். நீங்கள் வௌியில் கிடப்பீர்கள். முதலில் அவர்கள் உங்கள் உரிமைகளில்தான் தலையிடுவார்கள். பிறகு உங்கள் உடமைகளில் தலையிடுவார்கள். பிறகு உங்கள் உயிரையே எடுத்துவிடுவார்கள். விளிக்கப்படுவதனால் வலிப்போ, களிப்போ எனக்கு இல்லை என்பது வேறு. அதற்காக விளிப்பவர்கள் செய்வது சரியாகிவிட முடியாது. நீங்களும் உங்கள் உரிமைகளைப் பெற்றுக்கொள்ளாது, நிலைநாட்டிக்கொள்ளாது இருந்துவிட முடியாது. சட்டத்திற்கு உட்பட்டு உங்கள் உரிமைகளை நிலைநாட்டிக்கொள்ளுங்கள். இது உங்கள் கடமை. இல்லையேல் உயிர்கூட இருக்காது. ஆத்மப்பிரியானந்த சுவாமி:: சுவாமிஜி: அத்வைதம் ஒரு சாராசரி மனிதனின் பார்வைக்கு. உங்களின் விளக்கம் என்ன? சாராசரி மனிதன் என்பதே (கயரடவசல பநநெசயடணையவழைெ ) தவறான ஒருமைப்படுத்தல். தமிழில் அழகான இந்த வார்த்தை. ஒருமை. ஒற்றுமை. நரன் என்பது மனிதன். அயனம் என்பது வழி. வழிகாட்டப்பட்ட நாராயணன். அவ்வாறெனில் நரன் அயன் சேர்ந்தால் நாராயணன். அகம். வெறும் அகம் சேர்ந்தால் நரகாசுரன். நரன் அகம் மும் சேரந்தால் நரகாசுரன். நரன் அயனன் நாராயணன். ஒருமை. ஒற்றுமை. ஒருமை கசதடற வல்லினம். ஙஞணநமன என்பது மெல்லினம். யரழவளல இடையினம். அடிப்படையாக ஒற்றுமைக்கும் ஒருமைக்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். எவ்வளவு நாள்வரை தன்னக்குள் வன்மை இருக்கிறதோ அவ்வளவு நாள்வரை ஒற்றுமையும் வருவதில்லை, ஒருமையும் வருவதில்லை. எப்பொழுது நாம் இருக்கின்ற எல்லாவற்றுடனும் ஒற்றுமையைக் கொண்டுவருகின்றோமோ அப்பொழுது ஒருமை நிகழத் துவங்குகிறது. சரியான மனிதன் என்ற வார்த்தை (கயரடவசல பநநெசயடணையவழைெ ) தனிமனிதன்தான் இருப்பு. சராசரி மனிதன் கற்பனை. சராசரி மனிதன் என்றால் பலமனிதர்களின் குணத்தை ஒன்றாகச் சேர்த்து அது கற்பனை. அது இருப்பு அல்ல. ஒருமையோ அல்லது ஒற்றுமையோ தனக்குள் யாருக்கு வாழ்க்கையைப் பற்றிய நோக்கும் போக்கும் தௌிவாக இருக்கின்றதோ அவர்களுக்குள்தான் நடக்கும். சராசரியான மனிதன் என்கின்ற கற்பனைப் பாத்திரத்திற்கு வாழ்க்கையின் நோக்கும் போக்கும் கிடையாது. கற்பனைக் காட்டூன்களுக்கு வேண்டுமானால் மூக்கும் முழியும் வைக்கலாம். நோக்கும், போக்கும் சொல்ல முடியாது. மூக்கும் முழியும் இருப்பதனால் நோக்கும் போக்கும் இருந்துவிடும் என்ற அர்த்தமில்லை. நோக்கும், போக்கும் இருப்பவன் மனிதன். வெறும் மூக்கும் முழியும் இருப்பவன் சராசரி மனிதன். ஆதி வேறு. உயிர் வேறு. கும்பலாகச் சேர்ந்து வாழுகின்ற ஆடுகளுக்கு ஆதி இருக்கின்றது. நோக்கும் போக்கும் இல்லாததினால் அவர்களுக்கு உயிர் கிடையாது. ஆடுமாடுகளைப் போல பட்டியைத் திறந்தால் தொட்டியில் விழுந்தோம்னு மொத்தமாக வாழுகின்ற, நீங்கள் சொல்கின்ற சராசரி மனிதர்களுக்கு ஆதியுண்டே தவிர, உயிர் இல்லை. அதனால் அவர்கள் ஆவி பிடிக்கின்ற இடத்திற்குப் போவர்கள். உயிர் நோக்கும், போக்கும் புரிந்தவனுக்குத்தான் உண்டு. நோக்கும், போக்கும் புரிந்தவனுக்குத்தான் அத்வைதத்தைச் சொல்ல முடியும். அத்வைதத்தைத் தனி மனிதனுக்குத்தான் சொல்லலாமேயொழியச் சராசரி மனிதனுக்குச் சொல்ல முடியாது. யாருக்குத் தன் வாழ்க்கையின் நோக்குப் புரிந்திருக்கிறதோ, போக்குப் புரிந்திருக்கி்றதோ அவன் இருக்கின்ற எல்லாவற்றுடனும் ஒற்றுமையைக் கொண்டுவருவானேயானால் ஒருமையைப் பார்ப்பான். அவன். ஓற்றுமை ஒருமையாகி ஓர்மையாகும். ஒரேயொரு வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் தேடுதல் உடைய தனிமனிதர்களுக்குத்தான் அத்வைதம் புரியும். சராசரி மனிதனுக்குப் புரிவதில்லை. பொழுது போகிறதற்கு மஞ்சள் பத்திரிகை. பொழுது போகவில்லையென்றாலும் மஞ்சள் பத்திரிகை. அவ்வளவுதான் அவன் வாழ்க்கை. அடுத்தவன் வாழ்க்கையில் இருக்கின்ற துக்கத்தையெல்லாம் பார்த்து ரசிக்கிறது மஞ்சள் பத்திரிகை. தன் வாழ்க்கையில் வருகின்ற துக்கத்தையெல்லாம் பார்க்கிறதற்கு வருவதுதான் மஞ்சள் பத்திரிகை. கல்யாணப்பத்திரிகை. பத்தி வரும் வியாதியஞ்சேன். பரவிவரும் டெங்கும் அஞ்சேன். முத்தி வருமோ வராதோ யெனும் பயமும் அஞ்சேன். தன் வாழ்வுத் துக்கமும், பிறர்வாழ்வுத் துக்கமும் ஒன்றாய்க் கொண்டுவரும் மஞ்சள் பத்திரிகை அம்மனாம் அங்சுமாறே. ஆத்மப்பிரியானந்த சுவாமி:: சுவாமிஜி! மாணிக்கவாசகப் பெருமான் பெருமானைப் பார்த்து எழுதிய திருவாசகம் போல நீங்கள் பெருமானைப் பார்த்து திருவாசகம் எழுதினால் ஒரு நாலு வரிகள். சுவாமிஜி:: வாசகம்கூட ஆசகமும் யாசகமும் நிகழ்த்தும் சுசகம்தான். சோகஹமும், சிவோகஹமும் தசோகஹமும், சாதாசோகஹமும் மாறி மாறி மனதிற்குள் கூறி விளைந்திட யாசகமும் இல்லை. ஆசககமும் இல்லை. அம்பலவாணா வாசகம் ஏது செய்வேன்நான். என் சுவாசகத்து நீயுற்றதால் சுவாசமே திருவாசகமாய் போனதால் வாசத்திற்கு. சுவாசத்திற்கு, விசுவாசத்திற்கு வாசகம் ஏது. என் வாசமும் சுவாசமும் விசுவாசமும் உன் நேசமாய்ப் போனதால் வாசகம் இந்த நேசகத்தை வாசிக்கவொண்ணாது. வாசிக்க முயற்சிக்கும் ஆசிக்கவும் ஒண்ணாது. ஆசிக்கச் செய்திடும் யாசிக்கவும் ஆகாது. வாசமே உன் வாசம். மரபுக்கவிதை வெண்பாவோ புதுக்கவிதைப் பண்பாவோ நான் மரபின் புதுமை. சுரியனின் புதுமையும் ரவியின் பழமையும் சுரியனின் புதுமையும் சேர்ந்ததென்பதனால், மரபுக்கவிதையின் வெண்பாவும், புதுக்கவிதையின் பண்பாவும் சேர்த்து இந்த வாசம் மலர்ந்தது. கசடு தவத்தால் அறும். ஙனணம் நமனம் என அறும். யரழம் வழலம் என வளரும் என்பதனால் வல்லினமும், மெல்லினமும் இடையினமுமான என்னினமே உனை என்றென்றும் தன்னினமாய் நான் பார்க்க என் இனம் உன் முக்கண் இனமாய் மாற வாராயோ வந்தருள் தாராயோ. ஆத்மப்பிரியானந்த சுவாமி:் சுவாமிஜி! திருவாசகத்திற்கு உருகாதோர் ஒரு வாசகத்திறகும் உருகாதோர் என்பதுபோல இத்துடன் என்னுடைய கேள்விகள் நிறைவு பெறுகின்றன. சுவாமிஜி்: சைவமும், சைவத்தின் சத்தியங்களும் ஆழ்ந்து தெரிந்து கொள்ளுங்கள். ஆகமத்தில் மட்டும்தான் ஆலயங்கள் வெறும் உழபெசைஉயவழைளெ அதாவது நம்பிக்கையாளர்களின் சந்திப்பு மையம் மட்டுமல்ல, அல்லது உபதேசம் செய்யப்படும் பாடசாலை மட்டுமல்ல, வழிபாடுகள் நிகழ்த்தப்படும் இடம் மட்டுமல்ல, சதாசிவப் பரம்பொருள் வாழும் இடம். வாசம் செய்யும் இடம். வேறு எந்த மதவழிபாட்டுத் தலங்களையும் மாற்றிக்கொள்ளலாம். தலங்கள் அந்த மதங்கள் அனுமதிக்கின்றது. காரணம் அந்த வழிபாட்டுத் தலங்களை இறைவன் வசிக்கின்ற வசிப்பிடங்களாகச் சொல்லவில்லை. ஆனால் ஆகமங்கள் சதாசிவப் பரம்பொருளின் வசிப்பிடமாக ஆலயங்களைச் சொல்கின்றன. அப்படிப் பார்த்தோமானால் சிவன் நாடு எது. அதிகம அளவு சிவபெருமான வசிக்கின்ற ஆகமப்படி எதுவென்றால் அதிகமாக அமைக்கப்பட்ட தென்னாட்டு ஆலையங்கள்தான். அதனால்தான் என்னாட்டவர்க்கும் இறைவன் ஆனாலும் தென்னாடுடைய சிவனே!. எல்லா இடத்திற்கும் போவார், வருவார், வந்துவிடுவார். தன்னாடு, தான் இருப்பு தென்னாடே. அன்னை மீனாட்சிபோல உலகெலாம் சைவம் பரப்பி, அருளாட்சி செய்து, மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெலாம் என சைவம் பரப்ப அதிகாரமும், செங்கோலும் அளித்தோம். தமிழெனும் அமிழ்தால் கடைந்தான் நெஞ்சம் நெகிழ்வது மட்டுமல்ல, தொண்டையிலிருக்கின்ற நஞ்சும் இனிக்கின்றது. நம்பரனார் வந்து அம்பலவாணத் தம்பிரான் என்று தமிழாலே கையொப்பம் செய்து மேன்மைகொள் சைவத்தை தன் சமயம் என்று உறுதிப்படுத்தி இன்நெறி தன்நெறியென்று முன்னறி செய்துவைத்து என்நெறிகொண்டார்க்கும் தன்நெறியே முன்நெறியென்று சொல்லியும், அனுபுதியாய் அளித்தும், வாழ்வில் மலரச் செய்து, இந்தச் சத்தியங்களை வாழ்வின் சாத்தியமாக்க அவர் ஆணைப்படி, அவர் அருளாலே அவன் தாள் வணங்கி, மற்றோரை வணங்க வைக்கும் இயக்கமே நம் சங்கம். என்றென்றும் சைவம் பரப்பி, நித்யானந்த சங்கமே பல்லாண்டு வாழ்ந்திரு. இன்று தீபாவழித்திருநாள். முதல் முறையாக 2000 ஆண்டிலே ஆனந்தமாயிருங்கள் எனும் அற்புதமான ஆசி செந்தமிழ் மொழியில் பொங்கிய நன்னாள். மற்றவையெல்லாமே மொழி பெயர்ப்பு. ஆனந்தமாயிருங்கள் என்ற வார்த்தை மட்டும்தான் பொழிபெயர்ப்பு. பொழிந்தது, மொழியில் பெயர்ந்தது. ஆனந்தமாயிருங்கள் எனும் வார்த்தைதான.் மற்றவையெல்லாமே மொழியில் இருந்து பெயர்ந்தது. மொழிக்குள் பெயர்ந்தது ஆனந்தமாயிருங்கள் எனும் வார்த்தையே. எல்லோரும் ஆனந்தமாயிருக்க, ஆனந்தமாயிருங்கள் என ஆசீர்வதிக்கின்றேன். நித்யானந்தத்தில் நிறைந்து, நித்யானந்தத்தில் கரைந்து, நித்ய ஆனந்தமாயிருக்க ஆசீர்வதிக்கின்றேன். ஆனந்தமாயிருங்கள்.

Photo

Satsang

http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-10-Oct-19_nithyananda-diary_bengaluru-aadheenam_la-aadheenam-anniversary_IMG_5204.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-10-Oct-19_nithyananda-diary_bengaluru-aadheenam_la-aadheenam-anniversary_IMG_5206.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-10-Oct-19_nithyananda-diary_bengaluru-aadheenam_la-aadheenam-anniversary_IMG_5212.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-10-Oct-19_nithyananda-diary_bengaluru-aadheenam_la-aadheenam-anniversary_IMG_5264.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-10-Oct-19_nithyananda-diary_bengaluru-aadheenam_la-aadheenam-anniversary_IMG_5312.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-10-Oct-19_nithyananda-diary_bengaluru-aadheenam_la-aadheenam-anniversary_IMG_5315.JPG

Ask The Avatar

http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-10-Oct-19_nithyananda-diary_bengaluru-aadheenam_ask-the-avatar-tamil-satsang_IMG_5350.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-10-Oct-19_nithyananda-diary_bengaluru-aadheenam_ask-the-avatar-tamil-satsang_IMG_5359.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-10-Oct-19_nithyananda-diary_bengaluru-aadheenam_ask-the-avatar-tamil-satsang_IMG_5370.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-10-Oct-19_nithyananda-diary_bengaluru-aadheenam_ask-the-avatar-tamil-satsang_IMG_5401.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-10-Oct-19_nithyananda-diary_bengaluru-aadheenam_ask-the-avatar-tamil-satsang_IMG_5431.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-10-Oct-19_nithyananda-diary_bengaluru-aadheenam_ask-the-avatar-tamil-satsang_IMG_5528.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-10-Oct-19_nithyananda-diary_bengaluru-aadheenam_ask-the-avatar-tamil-satsang_IMG_5532.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-10-Oct-19_nithyananda-diary_bengaluru-aadheenam_ask-the-avatar-tamil-satsang_IMG_5590.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-10-Oct-19_nithyananda-diary_bengaluru-aadheenam_ask-the-avatar-tamil-satsang_IMG_5687.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-10-Oct-19_nithyananda-diary_bengaluru-aadheenam_ask-the-avatar-tamil-satsang_IMG_5699.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-10-Oct-19_nithyananda-diary_bengaluru-aadheenam_ask-the-avatar-tamil-satsang_IMG_5717.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-10-Oct-19_nithyananda-diary_bengaluru-aadheenam_ask-the-avatar-tamil-satsang_IMG_5790.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-10-Oct-19_nithyananda-diary_bengaluru-aadheenam_ask-the-avatar-tamil-satsang_IMG_5819.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-10-Oct-19_nithyananda-diary_bengaluru-aadheenam_ask-the-avatar-tamil-satsang_IMG_5861.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-10-Oct-19_nithyananda-diary_bengaluru-aadheenam_ask-the-avatar-tamil-satsang_IMG_6033.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-10-Oct-19_nithyananda-diary_bengaluru-aadheenam_ask-the-avatar-tamil-satsang_IMG_6111.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-10-Oct-19_nithyananda-diary_bengaluru-aadheenam_ask-the-avatar-tamil-satsang_IMG_6170.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-10-Oct-19_nithyananda-diary_bengaluru-aadheenam_ask-the-avatar-tamil-satsang_IMG_6235.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-10-Oct-19_nithyananda-diary_bengaluru-aadheenam_ask-the-avatar-tamil-satsang_IMG_6247.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-10-Oct-19_nithyananda-diary_bengaluru-aadheenam_ask-the-avatar-tamil-satsang_IMG_6252.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-10-Oct-19_nithyananda-diary_bengaluru-aadheenam_ask-the-avatar-tamil-satsang_IMG_6300.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-10-Oct-19_nithyananda-diary_bengaluru-aadheenam_ask-the-avatar-tamil-satsang_IMG_6416.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-10-Oct-19_nithyananda-diary_bengaluru-aadheenam_ask-the-avatar-tamil-satsang_IMG_6423.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-10-Oct-19_nithyananda-diary_bengaluru-aadheenam_ask-the-avatar-tamil-satsang_IMG_6429.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-10-Oct-19_nithyananda-diary_bengaluru-aadheenam_ask-the-avatar-tamil-satsang_IMG_6430.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-10-Oct-19_nithyananda-diary_bengaluru-aadheenam_ask-the-avatar-tamil-satsang_IMG_6469.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-10-Oct-19_nithyananda-diary_bengaluru-aadheenam_ask-the-avatar-tamil-satsang_IMG_6553.JPG

Kali Puja

http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-10-Oct-19_nithyananda-diary_bengaluru-aadheenam_kali-prana-pratishtha_IMG_6593.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-10-Oct-19_nithyananda-diary_bengaluru-aadheenam_kali-prana-pratishtha_IMG_6594.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-10-Oct-19_nithyananda-diary_bengaluru-aadheenam_kali-prana-pratishtha_IMG_6597.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-10-Oct-19_nithyananda-diary_bengaluru-aadheenam_kali-prana-pratishtha_IMG_6603.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-10-Oct-19_nithyananda-diary_bengaluru-aadheenam_kali-prana-pratishtha_IMG_6606_0.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-10-Oct-19_nithyananda-diary_bengaluru-aadheenam_kali-prana-pratishtha_IMG_6657_0.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-10-Oct-19_nithyananda-diary_bengaluru-aadheenam_kali-prana-pratishtha_IMG_6699_0.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-10-Oct-19_nithyananda-diary_bengaluru-aadheenam_kali-prana-pratishtha_IMG_6704.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-10-Oct-19_nithyananda-diary_bengaluru-aadheenam_kali-prana-pratishtha_IMG_6713_0.JPG

=Diwali

http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-10-Oct-19_nithyananda-diary_bengaluru-aadheenam_diwali-fireworks_IMG_6753.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-10-Oct-19_nithyananda-diary_bengaluru-aadheenam_diwali-fireworks_IMG_6799.JPG

http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-10-Oct-19_nithyananda-diary_bengaluru-aadheenam_diwali-fireworks_IMG_6982.JPG