Difference between revisions of "04 மார்ச் 2009 பத்திரிகை செய்தி"

From Nithyanandapedia
Jump to navigation Jump to search
(Created page with "==<big>வெளியீடு</big>== தினகரன், நம் தினமதி, தினத்தந்தி, தமிழ் முரசு === நிக...")
 
 
Line 59: Line 59:
  
  
[[Category:2009]][[Category:பத்திரிகை செய்தி]][[Category:தமிழ்]]
+
[[Category:2009]][[Category:பத்திரிகை செய்திகள்]][[Category:தமிழ்]]

Latest revision as of 17:13, 5 January 2021

வெளியீடு

தினகரன், நம் தினமதி, தினத்தந்தி, தமிழ் முரசு


நிகழ்வு

நிகழ்வின் சாரம் :‘ஜீவன் முக்தி’ புத்தக வெளியீட்டு விழா

நாள் :04 மார்ச் 2009

தலைப்பு : பரமஹம்ஸ நித்யானந்தரின் ‘ஜீவன் முக்தி’ புத்தகம் வெளியீடு

"பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்களின் 'ஜீவன் முக்தி’ புத்தகம் ஆன்மிக உலகில் சரித்திரம் படைத்தது மட்டுமல்லாது திருப்புமுனை ஏற்படுத்திய புத்தகம் என்று கூறினால் அது மிகை அல்ல.

‘ஜீவன் முக்தி’ புத்தகம் பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்களால் மார்ச் மாதம் 3 ஆம் தேதி 2009 வருடம் சென்னையில் வெளியிடப்பட்டது.

மற்ற நகரங்களில் அவரது சீடர்களால் வெளியிடப்பட்டது.

கோவை:

அவ்வகையில் கோவை பீள மேட்டில் 03 மார்ச் 2009 வருடம் வெளியிட்டதை தினகரன் நாளிதழ் மார்ச் மாதம் 4 ஆம் தேதி 2009 வருடம் வெளியிட்டுள்ளது. இப்புத்தகத்தின் முதல் பிரதியை பேரூர் இளைய பட்டம் மருதாசல அடிகளார் அவர்கள் வெளியிட சுங்கம் கலால் மற்றும் சேவை வரி ஆணையர் ராஜேந்திரன் அவர்கள் பெற்றுக் கொண்டார். சிரவை ஆதீனம் குமர குருபர சுவாமிகள், அவிநாசிலிங்கம் பல்கலைக்கழக வேந்தர் சண்முகானந்தம் அவர்கள், காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள், கே.ஜி.மருத்துவமனை தலைவர் டாக்டர் பக்தவத்சலம் அவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இப்புத்தகம் வெளியிடப்படுவதற்கு முன்பே இரண்டரை லட்சம் புத்தகங்கள் முன்பதிவு செய்யப்பட்டு சாதனை படைத்துள்ளது.

திருவண்ணாமலை:

‘ஜீவன் முக்தி’ புத்தகத்தை திருவண்ணாமலை எம்.எல்.ஏ கு.பிச்சாண்டி அவர்கள் வெளியிட சேஷாத்திரி ஆசிரம தலைவர் முத்துகுமாரசாமி அவர்கள் பெற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் தலைவர் இரா.திருமகன் அவர்கள், அறங்காவலர் குழுத்தலைவர் தனுசு அவர்கள், வழக்கறிஞர் பழனி அவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இச்செய்தியை புகைப்படமாக நம் தினமதி என்கின்ற நாளிதழ் மார்ச் மாதம் 4 ஆம் தேதி 2009 வருடம் வெளியிட்டுள்ளது.

ஈரோடு:

'ஜீவன் முக்தி’ புத்தகத்தை ஈரோடில் தில்லை நகர் செங்குந்தர் மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கூட வளாகத்தில் நடைபெற்றது. இப்புத்தகத்தின் முதல் பிரதியை வேளாளர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் எஸ்.டி.சந்திரசேகர் அவர்கள், ஈரோடு செங்குந்தர் கல்வி அறக்கட்டளை துணைத்தலைவர் பி.எஸ்.நடராஜன் அவர்கள், சென்னை சில்க்ஸ் உரிமையாளர் கே.பரஞ்ஜோதி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இச்செய்தியை புகைபடத்துடன் தினத்தந்தி நாளிதழ் மார்ச் மாதம் 4 ஆம் தேதி 2009 வருடம் வெளியிட்டுள்ளது.


சென்னை:

பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்களால் எழுதபட்ட ‘ஜீவன் முக்தி’ புத்தகம் மார்ச் மாதம் 3 ஆம் தேதி 2009 வருடம் சென்னையில் வெளியிடப்பட்டது.

பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் ஆசிர்வாதத்துடன் இப்புத்தகத்தை நடிகர் சரத்குமார் அவர்கள் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் நடிகை மனோரமா அவர்கள், மலைச்சாமி எம்.பி அவர்கள், இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்கள், நடிகர் விவேக் அவர்கள், நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன் அவர்கள் இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.


ஈரோடு:

ஈரோட்டில் இப்புத்தகத்தின் முதல் பிரதியை பேரூர் இளைய பட்டம் மருதாசல அடிகளார் அவர்கள் வெளியிட சுங்கம் கலால் மற்றும் சேவை வரி ஆணையர் ராஜேந்திரன் அவர்கள் பெற்றுக்கொண்டார். சிரவை ஆதீனம் குமர குருபர சுவாமிகள், அவிநாசிலிங்கம் பல்கலைக்கழக வேந்தர் சண்முகானந்தம் அவர்கள், காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள், கே.ஜி.மருத்துவமனை தலைவர் டாக்டர் பக்தவத்சலம் உட்பட பலர் கலந்து கொண்டனர். அவ்வகையில் ‘ஜீவன் முக்தி’ புத்தகத்தை ஈரோடில் செங்குந்தர் பள்ளியில் நடை பெற்றது. இப்புத்தகத்தின் முதல் பிரதியை மேயர் குமார்முருகேசன் அவர்கள் வெளியிட வேளாளர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் எஸ்.டி.சந்திரசேகர் அவர்கள் பெற்றுக்கொண்டார். அருகில் செங்குந்தர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் சுத்தானந்தன் அவர்கள் மற்றும் பலர் கலந்துக்கொண்டனர். இச்செய்தியை புகைபடத்துடன் தமிழ் முரசு நாளிதழ் மார்ச் மாதம் 4 ஆம் தேதி 2009 வருடம் வெளியிட்டுள்ளது."

04 மார்ச் 2009

04 மார்ச் 2009 -பத்திரிகை செய்தி