Difference between revisions of "01 ஜூன் 2009 உலக அமைதிக்கான பங்களிப்பு"

From Nithyanandapedia
Jump to navigation Jump to search
(Created page with "==<big>உலக அமைதிக்கான பங்களிப்பு( Contribution for World Peace)</big>== '''வருடம் ''' : 2009 '''நாள் :'''...")
 
 
(One intermediate revision by the same user not shown)
Line 39: Line 39:
 
<img src="http://drive.google.com/uc?export=view&id=1J4Te-6q6yLN7P4HeKgkE7qQFpCvtuc_S" height="1200">
 
<img src="http://drive.google.com/uc?export=view&id=1J4Te-6q6yLN7P4HeKgkE7qQFpCvtuc_S" height="1200">
  
<img src="http://drive.google.com/uc?export=view&id=1B3t4-i1XuQ1Cki4_ubeWi3yS5CMMPkzq" height="1200">
+
</div>
 
 
<img src="http://drive.google.com/uc?export=view&id=1nck2NLLOHlLdz4vi9fA7BETB7abll5cL" height="1200">
 
 
 
</div>  
 
  
 
==<big>உலக அமைதி-சாஸ்திர பிரமாணம்</big>==
 
==<big>உலக அமைதி-சாஸ்திர பிரமாணம்</big>==
Line 86: Line 82:
  
  
[[Category:2009]][[Category:தமிழ்]][[Category:Tamil]][[Category:உலக அமைதிக்கான பங்களிப்பு]][[Category:விழிப்புணர்வு முகாம்கள்]]
+
[[Category:2009]][[Category:தமிழ்]][[Category:Tamil]][[Category:உலக அமைதிக்கான பங்களிப்பு]]

Latest revision as of 12:08, 16 January 2021

உலக அமைதிக்கான பங்களிப்பு( Contribution for World Peace)

வருடம்  : 2009

நாள் : 01 ஜூன் 2009

நாட்கள் : ஒரு நாள்

நிகழ்வு : விழிப்புணர்வு தியான முகாம்

நிகழ்வின் பெயர் : ஆன்மிக விழிப்புணர்வு முகாம்

பங்கேற்பாளர்களின் விபரம் : பொது மக்கள் மற்றும் மாணவர்கள்

நடைபெற்ற இடம் : இணைய இணைப்பு வழியாக நடைபெற்றது

நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் : கோவை

நிகழ்வினை நடத்தியவர் : கோயம்புத்தூரில் உள்ள கைலாஸா

பயனடைந்தவர்களின் எண்ணிக்கை : 1000

நிகழ்வின் விவரனை : "நித்யானந்த தியான பீடம் மகளிர் அமைப்பு சார்பில் 'ஆன்மிக விழிப்புனர்வு விழா' கோவையில் உள்ள என்.எஸ்ஆர் ரோட்டில் உள்ள சாய் பாபா காலணியில் 31 மே 2009 அன்று நிகழ்ந்தது.

இந்நிகழ்ச்சியை கேஎம்சிஆர்இடி நிர்வாக அறங்காவலர் டாக்டர் தவமணி பழனிச்சாமி அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி வைத்து துவக்கி வைத்தார். விழாவில் எழுத்தாளரும், பாடகருமான சோபா சந்திரசேகர் அவர்கள் குருவின் மேன்மையை பற்றி பேசினார். அவர் தம்முடைய உரையில், ' நாம் எல்லோரும் கொட்டிக்கிடக்கும் செங்கல்கள். அதை கட்டி முடித்து கோபுரமாய் உயர்த்தி பார்க்கும் அளவிற்கு செய்து முடிப்பவர் குரு. அந்த குருவை போற்றுவோம். குரு காட்டிய பாதையை பின்பற்றுவோம்' என்று பேசினார்.

நித்யானந்த வைத்தியாலயா தலைமை மருத்துவர் பேசுகையில், ' எண்ண ஓட்டங்களால் தான் உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படுகிறது.நோய் நொடி ஏற்படுகிறது. இதை குறைக்க தொடர் தியானம் செய்தால் உடல் நல பாதிப்புகளை குறைக்கலாம்' என்று தெரிவித்தார்."

விழிப்புணர்வு தியான முகாம்



உலக அமைதி-சாஸ்திர பிரமாணம்

உலக அமைதி என்பது ஒவ்வொரு தனிமனிதரும் தன்னைப்பற்றி உணரும் உணர்வு, மற்றவர்களைப்பற்றி உணரும் உணர்வு, உலகைப்பற்றி உணரும் உணர்வுகளில் உன்னதம் நிகழும்பொழுதே சாத்தியம்.

உள்ளுக்குள் எவ்வாறு பார்க்கின்றோமோ, அவ்வாறே புரிந்து கொள்கின்றோம். அதனால் தான் நமது இந்து மதத்தில் இந்த 'பார்த்தல்' என்பதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது... அதில் உன்னதம் நிகழ அனைத்து வகையிலும் வழிகாட்டப்படுகிறது.

ஸமம் ஸர்வேஷூ பூதேஷூ திஷ்டந்தம் பரமேஸ்வரம் |

விநஶ்யத்ஸ்வவிநஶ்யந்தம் ய: பஶ்யதி ஸ பஶ்யதி ||

யார் ஒருவர், எல்லா உடல்களிலும் அந்த மேலான பரம்பொருளே தனி ஆத்மாவாக இருக்கிறது என்பதை பார்க்கிறாரோ, அந்தத் தனி ஆத்மாவிற்கும், அந்த மேலான பரம்பொருளுக்கும் எப்பொழுதுமே அழிவில்லை என்று புரிந்து கொள்கிறாரோ, அவர்தான் உண்மையிலேயே பார்க்கிறார்.

- பகவத்கீதை ( க்ஷேத்ர க்ஷேத்ரஜ்ஞ விபாக யோகம் -13.27)

அனைத்தும் பரம்பொருளாக காணும் உள்முகப் பார்வையே இந்து மதத்தில் குருவால் ஒவ்வொரு குழந்தைக்கும் உள்ளுலக ஞானமாக அருளப்படுகிறது. உள்ளுலக அமைதியே இந்து மதத்தின் அடிப்படை போதனையாகும். உள்ளுலக அமைதியாலேயே உலக அமைதி நிகழும்.

ஓம் ஸஹனாவவது |

ஸஹனெளபுனக்து |

ஶஹவீர்யங்கரவாவஹை |

தேஜஸ்வினாவதீதமஸ்து மாவித்விஷாவஹை: ||

ஓம் ஶாந்தி: ஶாந்தி: ஶாந்தி:

ஓம். நாம் இருவரும் (குரு மற்றும் சீடன்) ஒன்றாக பாதுகாக்கப்படுவோம். நாம் இருவரும் இந்த ஞானத்தால் வளர்க்கப்பட்டு வளப்படுத்தப்படுவோம். நாம் இருவரும் உயர்ந்த ஆன்ம பலம், சக்தி மற்றும் உத்சாகத்துடன் பணிபுரிவோம். கல்வியும் கற்றலும் நம் இருவருக்கும் உயர் ஞானத்தின் ஒளியை அளித்து கூர்மையாக்கட்டும். நாம் இருவரும் நமக்குள் எந்த குறையுணர்வும் எதிர்ப்புத்தன்மையும் அற்று இருப்போம். ஓம் நமது உள்ளத்தில் அமைதி நிலவட்டும். இந்த இயற்கையில் அமைதி நிலவட்டும். இந்த தெய்வீக சக்தி வெளிப்பாடுகளில் அமைதி நிலவட்டும்.

- க்ருஷ்ண யஜூர் வேதம், தைத்ரிய உபநிடதம் 2.2.2

குறையுணர்வுகளை நிறைவு செய்து, சக்திகளை வெளிப்படுத்தி அனைத்திலும் அமைதியை நிகழ்த்தும் குருவின் பங்களிப்பே உலக அமைதிக்கான முதன்மையான பங்களிப்பாகும்

இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் உலகம் முழுவதும் அமைதி நிலவ இந்த ஞானப்பார்வையை அனைவருக்கும் அறிவியலாக கற்றுத் தருகிறார்.

வாழ்க்கையை உச்சமான நேர்மறைத்தன்மையில் வாழ கற்றுத்தரும் தியான முகாம்கள், தியான சொற்பொழிவுகள், யாகங்கள், பூஜைகள் ஆகியவற்றை அளிக்கின்றார். உயர் உயிர் விழிப்புணர்வை வாழும் சாத்தியத்தை அனைவருக்கும் அளிக்கின்றார்.

தொடர்ந்து உலக அமைதிக்காக தன்னலமற்ற சேவை புரியும் பகவானின் செயல்களை பாராட்டி பல உலகத்தலைவர்கள் தங்கள் தலைநகரத்தில் பகவானின் சாந்நித்யம் நிகழ வரவேற்பு அளிக்கின்றனர். பகவானின் சங்கத்திற்கு தொடர் அங்கீகாரம் அளித்து ஊக்கம் அளிக்கின்றனர்.