Difference between revisions of "சைவ உணவு: 41 வது உலக சைவ மாநாடு"

From Nithyanandapedia
Jump to navigation Jump to search
 
Line 45: Line 45:
  
 
</gallery>
 
</gallery>
 +
 +
</div>
  
 
==விவரனை==
 
==விவரனை==
Line 81: Line 83:
 
பரமஹம்ஸ நித்யானந்தர் – சைவ உணவு முறையையே வாழ்வின் உண்ணும் முறையாக்கிட வேண்டியும் அதற்கான மாற்றத்தை உருவாக்கிடவும் அனைவருக்கும் அழைப்புவிடுத்தார்.
 
பரமஹம்ஸ நித்யானந்தர் – சைவ உணவு முறையையே வாழ்வின் உண்ணும் முறையாக்கிட வேண்டியும் அதற்கான மாற்றத்தை உருவாக்கிடவும் அனைவருக்கும் அழைப்புவிடுத்தார்.
  
 +
</div>
  
 
==பத்திரிகை செய்திகள்==
 
==பத்திரிகை செய்திகள்==

Latest revision as of 13:13, 13 January 2021

41 வது உலக சைவ மாநாடு (Hindu Diaspora)

வருடம்  : 2013

நாள் : 05 அக்டோபர் 2013

நோக்கம் : சைவ உணவின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விழிப்புணர்வு மாநாடு

நடைபெற்ற இடம் : தலைநகர் புத்ரா வாணிப மையம், மலேசியா.

நிகழ்வு : 41 வது உலக சைவ மாநாடு, மலேசியா

மாநாட்டில் கலந்துகொண்ட இயக்கங்கள் : அனைத்துலக சைவ இயக்கம், ஆசியான் சைவ இயக்கம், மலேசிய ஐ-குவான் தாவ் கழகம், மலேசிய சுகாதாரத்துறை அமைச்சகம், மலேசிய சைவ கழகம் மற்றும் மலேசிய நித்யானந்த சங்கம்.

சிறப்பு பங்கேற்பாளர்கள் : சனாதன இந்து தர்மத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள்

பயனடைந்தவர்களின் எண்ணிக்கை : லட்சக்கணக்கான பக்தர்கள்

நிகழ்வின் விவரனை : பத்திரிகை செய்தி:மலேசியாவில் இருந்து வெளிவரும் நாளிதழான நம் நாடு பத்திரிகை 'மலேசியாவில் நித்யானந்தா' என்ற தலைப்பில் நிகழ்ந்த மாநாட்டின் விபரங்களை செய்தியாக வெளியிட்டது.

உலகளாவிய இந்து சமுதாயங்கள்-உலக சைவ மாநாடு

வீடியோ

சைவ உணவு: 41 வது உலக சைவ மாநாடு



படங்கள்

விவரனை

உண்ணும் உணவே நீங்கள்!

அக்டோபர் 5 அன்று காலை, வாழும் அவதார புருஷர் பரமஹம்ஸ நித்யானந்தரின் துவக்க உரையுடன் அகில உலக சைவ உணவுமுறை மாநாடு மலேஷியாவில் இனிதே தொடங்கியது.

‘சைவ உணவு – சரியான உணவுமுறையின் மூலம் குண்டலினி சக்தியை விழிப்பிக்கச் செய்தல்’ என்னும் தலைப்பில் கருத்தரங்கைத் தொடக்கி வைத்து உரையாற்றிய பரமஹம்ஸ நித்யானந்தர், இன்று உலக மக்கள் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கும் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு அவர்களுடைய தவறான உணவுமுறையே காரணம் என்பதை பல நிரூபணங்களுடன் சுட்டிக் காட்டினார்.

அகில உலக சைவ உணவுமுறை சங்கமும், ஆசிய சைவ உணவுமுறை சங்கமும், மலேஷிய சைவ உணவுமுறை சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இம் மாநாட்டில் உலக முழுவதிலும் இருந்து ஏராளமான அறிஞர்களும், சைவ உணவுமுறை ஆர்வலர்களும் பங்குகொண்டனர். அவர்களுள் முக்கியமானவர்கள், அகில உலக சைவ உணவுமுறை சங்கத்தின் தலைவர் திரு. மார்லி வின்க்ஸர், ஆசிய சைவ உணவுமுறை சங்கத்தின் தலைவர் பேராசிரியர் திரு.டியோ லீ, மலேஷிய சைவ உணவுமுறை சங்கத்தின் தலைவர் டாக்டர் திரு.பி. லைத்தியலிங்கம், செயலாளர் திரு. கிருஷ்ணா ஆகியோர் அடங்குவர்.

சைவ உணவுமுறையின் முக்கியத்துவத்தையும் சிறப்பையும் ஆழமாக விளக்கிய பரமஹம்ஸ நித்யானந்தர் உரையின் சாரம்: மனித உடல் அமைப்பே சைவ உணவுமுறைக்காக வடிவமைக்கப்பட்டதுதான். மனிதன், ஒருபோதும் தனக்குச் சமமான உணர்ச்சி அலைவரிசை கொண்ட விலங்குகளைக் கொன்று அவற்றின் மாமிசத்தை உணவாகக் கொள்ளக்கூடாது, ஏனெனில் விலங்குகளைக் கொல்லும்போது, அவை வெளிப்படுத்தும் பயம், கோபம், ஆழமான குறைத்தன்மை மற்றும் பதட்டம் போன்ற எல்லா எதிர்மறை உணர்ச்சிகளும் அவற்றின் உடலில் உயிர்ப்பதிவுகளாகப் பதிந்துவிடுகின்றன. இப்படி எதிர்மறை உணர்ச்சிகள் பதிந்த அவற்றின் மாமிசதத்தை உண்ணும் மனிதனின் உடல்-மன அமைப்பையே அந்த எதிர்மறை உணர்ச்சிகள் சீரழித்து பாழ்படுத்திவிடுகின்றன.

ஆனால், சைவ உணவோ இதற்கு மாறாக, மனிதனுக்குள் எழும் குழப்பம், பேரார்வம் போன்ற கட்டுக்கடங்காத உணர்ச்சிகளை மட்டுப்படுத்துகிறது. இதனால் மூளையிலுள்ள நுணுக்கமான வரித் தடங்கள்(ஆணூச்டிண ஞ்ணூணிணிதிஞுண்) விழிப்படைகிறது. விளைவு… உங்கள் சிந்தனைமுறை சூட்சுமமானதாகவும், நுட்பமானதாகவும் மேம்படுகிறது. குண்டலினி சக்தி விழிப்புக்கும், உணர்ச்சிகளுக்கும் சிந்தனைகளுக்கும் நெருக்கமான தொடர்பு இருப்பதால், உணர்ச்சிகளும் சிந்தனைகளும் மேம்படும்போது, மனிதனின் உயிர்ச் சக்தியான குண்டலினி சக்தி எளிதாக விழிப்படைகிறது. ஆழமாக நோக்கினால், குண்டலினி சக்திவிழிப்புக்கு உணர்ச்சிகளே அடிப்படை ஆதாரமாக விளங்குகின்றன என்பது விளங்கும்.

துரதிர்ஷ்டவசமாக, அசைவ உணவின் மூலம் உருவான எதிர்மறை உணர்ச்சிகள் பதிந்த உங்கள் உயிர்ப்பதிவை, உயிர்ச் சக்தியை அடுத்த தலைமுறையினருக்குக் கொடுத்து, அவர்களையும் துன்பம், வலி என்ற விஷப் பொறிக்குள் சிக்கவைத்துவிடுகிறீர்கள்.

பொதுவாக, உணவின் தரத்தை ஜாதி தோஷம், நிமித்த தோஷம், ஆச்ரய தோஷம் என்னும் 3வித தோஷங்கள் பாதிக்கின்றன. 1.ஜாதி தோஷம் என்பது உணவு பெறப்படும் முறையில் இருக்கும் குறையைக் குறிக்கிறது. உதாரணத்திற்கு, பிற விலங்குகளைக்கொன்றோ இல்லது பிறரை ஏமாற்றியோ பெறப்படும் உணவு ஜாதி தோஷத்தால் பாதிக்கப்படுகிறது. 2. நிமித்த தோஷம் என்பது உணவு உருவாக்கப்படும் முறையில் இருக்கும் குறையைக் குறிக்கிறது. அதாவது புழு, நகம், முடி போன்ற அசுத்தங்களுடன் சமைக்கப்படும் உணவு நிமித்த தோஷத்தால் பாதிக்கப்படுகிறது. 3.ஆச்ரய தோஷம் என்பது உணவைக் கையாள்பவர்களின் மனப்பாங்கில் இருக்கும் குறையைக் குறிக்கிறது. அதாவது உணவைத் தயாரிப்பவர்கள், உணவைக்கொடுப்பவர்கள் மற்றும் உணவைப் பரிமாறுபவர்களிடம் உள்ள குணக் குறைபாடுகளுடன்கூடிய உணவு ஆச்ரய தோஷத்தால் பாதிக்கப்படுகிறது.

சைவ உணவால் விழிப்படையும் குண்டலினி சக்தியானது, தாவரங்கள் எவ்வாறு சூரிய ஒளியிலிருந்தும், காற்றிலிருந்தும் தங்களுக்குத் தேவையான சக்தியைப் பெற்றுக்கொள்கின்றனவோ, அதேபோல் மனிதர்களும் தங்களுக்குத் தேவையான சக்தியைச் சூரிய ஒளியிலிருந்தும், காற்றிலிருந்தும் பெற்றுக்கொள்ள உதவுகிறது. இதன்மூலம் மனிதன் உணவைக் கடந்து செல்ல முடிகிறது. அதாவது திடஉணவின்றி, வெறும் பழச்சாறோ தண்ணீரோ அருந்தியே, ஆரோக்கியமான வாழ்வை வாழ முடியும் என்பதற்கு தியானபீட அன்பர்கள் பலர் சான்றுகளாக விளங்குகிறார்கள்.

திடஉணவின்றி, வெறும் திரவ உணவான பழச்சாறோ தண்ணீரோ அருந்தி வாழும் இத் தியான நுட்பத்தை நிராஹார ஸம்ஸமா என்கிறோம். இந் நிராஹார ஸம்யம தீகை்ஷயை, இதுவரை ஆயிரக்கணக்கான மக்களுக்கு இலவசமாக நித்யானந்த தியான பீடம் வழங்கியிருக்கிறது. இவர்கள் உணவை கடந்து செல்வதால் ஏற்படும் பலன்களையும் அதன் சாத்தியக்கூறுகளையும் நமக்கு நிரூபிக்கும் சான்றாக வாழ்கிறார்கள்.

இந்த தனித்துவம் வாய்ந்த செயல்முறையை பயிற்சி செய்த பங்கேற்பாளர்களிடம் செய்த ஆராய்ச்சியில் பெற்ற அரிய முடிவுகள்… 1. 90 % பங்கேற்பாளர்களின் உடல் எடையும் கொழுப்பும் ( கொலஸ்டிரால்) நிலையான முறையில் ஆரோக்கியமாக குறைந்து. 2. வைட்டமின் பி 12 -லின் அளவு உயர்ந்திருப்பதாக 92% பங்கேற்பாளர்கள் தெரிவித்துள்ளனர். 3. 70% பங்கேற்பாளர்களின் ஹீமோகுளோபின் அளவு அதிகரித்திருந்தது. 4. உடலில் இருக்கும் யூரியா அளவு 85 % அளவு குறைந்திருந்தது. 5. அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் (100 %) – வைட்டமின் டியின் அளவு அதிகரித்திருந்தது. மேலும் பல உயிருக்கு பங்கம் விளைவிக்கும் நோய்களான இருதய நோய், நீரிழிவு நோய், உயர் கொழுப்பு பாதிப்பு, நாள்பட்ட சோர்வு, குறை தைராய்டு மற்றும் மன உளச்சலிலிருந்தும் குணமடைந்த மருத்துவ அற்புதங்கள் நிகழ்ந்தது.

பரமஹம்ஸ நித்யானந்தர் – சைவ உணவு முறையையே வாழ்வின் உண்ணும் முறையாக்கிட வேண்டியும் அதற்கான மாற்றத்தை உருவாக்கிடவும் அனைவருக்கும் அழைப்புவிடுத்தார்.

பத்திரிகை செய்திகள்

சாஸ்திர பிரமாணம்

உணவே மருந்து, மருந்தே உணவு என்பது முதுமொழி. இது நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய அனைத்தையும் விழிப்புணர்வோடு தேர்ந்தெடுத்து உள்ளுக்குள எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்பதை உள்ளடக்கிய முதுமொழி.