July 12 2018

From Nithyanandapedia
Revision as of 05:10, 24 August 2020 by Ma.Supraja (talk | contribs)
Jump to navigation Jump to search

Title:

THE SUPREME PONTIFF OF HINDUISM HDH BHAGAVAN NITHYANANDA PARAMASHIVAM

Link to Video:


Transcript in Tamil

பரமஹம்ஸரின் குரு புர்ணிமை தின சிறப்பு சத்சங்கம் -12 ஜூலை 2014 இந்த இனிமையான குரு புர்ணிமை நன்நாளில் உங்கள் அனைவரையும் ஆசிர்வதித்து வரவேற்கின்றேன். இன்று உங்கள் எல்லோருக்கும் நான் சொல்ல விரும்பும் செய்தி குரு புர்ணிமை செய்தி, அத்வைதத்தை வாழுங்கள். உங்கள் சிந்தனையாலும், செயலாலும், வார்த்தைகளாலும் ஆழ்ந்து ஆழ்ந்து அத்வைதத்தை வாழுங்கள். உங்கள் வாழ்க்கை முடிந்துவிட்டதென்றும், இதற்கு மேல் மாற்றம் சாத்தியமில்லை என்றும் நினைக்காதீர்கள். சாத்தியம் இருப்பதனால்தான் இன்னமும் நீங்கள் சுவாசிக்க அனுமதிக்கப்படுகிறீர்கள். நீங்கள் இன்னமும் சுவாசிக்க அனுமதிக்கப்படுவதனாலேயே தெரிந்துகொள்ளுங்கள் ஞானத்தின் சாத்தியம் உங்களுக்கு இருக்கிறது, ஜீவன் முக்தியின் சாத்தியம் உங்களுக்கு இருக்கிறது, அத்வைதத்தை வாழ்வதற்கான சாத்தியம் உங்களுக்கு இருக்கிறது. புதிய பரிமாணத்தோடு புது உடலையும், மனதையும், உணர்வையும் அத்வைத சத்தியங்களை சார்ந்து உருவாக்குங்கள். களிமண்ணை பிசைந்து குயவன் தான் விரும்பும் விதத்திலே பானைகளையும், சட்டிகளையும், சிலைகளையும் செய்வதுப்போலே உங்கள் மனதையும், உடலையும், எண்ணங்களையும் பிசைந்து நீங்கள் வேண்டுகிற வடிவத்திலே வாழ்க்கையை வடிவமைத்துக்கொள்ளுங்கள். இது உங்களுக்கு சாத்தியம், இது சத்தியம். அத்வைதத்தை வாழ்வதற்கான நேர் வழி, நேரடியான வழி சங்கத்தின் பாகமாக மாறுங்கள். பொறுப்பேற்றுக்கொண்ட, பொறுப்பெடுத்துக்கொண்ட தானேதாராகவோ கோட்டாரியாகவோ மஹந்தாகவோ சங்கத்தின் பாகமாக மாறுங்கள். இந்த பொறுப்பை தவிர்ப்பதற்காக உங்கள் மனம் சொல்லும் எல்லா காரணங்கள், குறைத்தன்மைகள், ைெஉழஅிடநவழைெ, பயம், சந்தேகம், அனைத்தையும் துறந்து விடுங்கள். எந்த காரணத்தை சொல்லி நீங்கள் சங்கத்தின் பாகமாக மாறாமல் இருக்கிறீர்களோ, அந்த காரணத்தாலேயே தான் உங்கள் வாழ்க்கை அழிந்து கொண்டே இருக்கும். அதே காரணத்தை வைத்துத்தான் உங்கள் வாழ்க்கையை நீங்களே அழித்துக்கொண்டிருப்பீர்கள். அந்த காரணத்தை குறைத்தன்மையை அழிக்கும் நேரம் வந்துவிட்டது!. அதுதான் குரு புர்ணிமை. உங்கள் தன்மைகளையும் குறை உணர்வுகளையும் சம்ஸ்காரங்களையும் குறை மனப்பதிவுகளையும் எண்ணப்பதிவுகளையும் சமர்ப்பியுங்கள். அவைகளையெல்லாம் எரித்து அவைகள் எல்லாவற்றிலிருந்தும் அதன் தாக்கங்களிலிருந்தும் உங்களை விடுக்கின்றேன். இந்தநாள் குறை மனப்பாங்கிலிருந்து உங்களை விடுவிக்கும் நன்னாள். இந்த நாளை உபயோகப்படுத்திக்கொள்ளுங்கள். உங்களை நான் வேறொன்றும் கேட்கவில்லை உங்கள் குறை மனப்பாங்கையும், ஆகாது ஆகாது என்றே வாழுகின்ற எண்ணப்பாங்கையும், முடியாது முடியாது என்று சொல்லிக்கொண்டிருக்கும் மனத்தின் சம்ஸ்காரப்பாங்கையும்தான் கேட்கின்றேன். கொடுங்கள் அதை எரித்துவிடுகின்றேன். குறை மனப்பாங்கிலிருந்தும் அதன் தாக்குதலிலிருந்தும் தாக்கத்திலிருந்தும் விடுபடுவீர்களாக. குரு பௌர்ணமி மிகச்சிறந்த நன்னாள். அத்வைதத்தை வாழ்வதற்கு துவங்குவதற்கான அருமையான நன்னாள். சங்கத்தின் பாகமாக இன்று பொறுப்பெடுங்கள், அத்வைதத்தை வாழத் துவங்குங்கள். உங்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைக்கின்றேன். மொத்தமா கூட்டத்துல அநநவபைெ -ல ிரடிடைஉ அநநவபைெ -ல பேசுற வார்த்தை இல்ல இது. உங்கள் ஒவ்வொருவரோடும் தனித்தனியாக பேசிக்கொண்டிருக்கின்றேன். என் கண் முன்னால் இருந்தாலும், கண் முன்னால் இருக்க பயந்து ஓடி ஔிந்துகொண்டிருந்தாலும், ரகசியமாக நித்யானந்தா டிவியில் பார்த்துக்கொண்டிருந்தாலும், திரைக்கு பின் நின்றிருந்து பார்த்துக்கொண்டிருந்தாலும் மறைந்திருந்து பார்க்கும் மர்மம் தெரிந்தவன் நான், நீங்கள் மறைந்திருந்து பார்க்கும் மர்மம் தெரிந்தவன் நான். நான் ரொம்ப நாள் னநஎழவநந, எனக்கு சாமிய நல்லா தெரியும், நான் வௌியில இருந்தே இருந்துக்குறேன். எனக்கே என்னைய பத்தி தெரியாது உங்களுக்கு எப்படி என்னைய பத்தி தெரியும்.? எனக்கே தினந்தோறும் நான் ஒரு புதுமையானவனாக இருந்துகொண்டிருக்கின்றேன், புரியாத புதிராக இருந்து கொண்டிருக்கின்றேன், அதனால்தான் என் வாழ்க்கையே உற்சாகத்தோடும் உத்வேகத்தோடும் ஆனந்தத்தோடும் நிகழ்கின்றது. ஒவ்வொரு நாளும் நான் என்னை கண்டுபிடுத்துக்கொண்டிருக்கின்றேன். அப்படிங்கும்பொழுது, உங்களுக்கு எப்படி என்ன தெரியும்? என்னை நான் கண்டுபிடித்து கண்டுபிடித்து ருசித்தவைகளையெல்லாம் படையலாய் சமைத்து உங்களுக்கு நான் பகிர்ந்துகொள்வதுதான், சத்சங்கங்களும் தியானமுகாம்களும். என்னையே நான் மீண்டும் மீண்டும் கண்டுபிடுத்துக்கொண்டிருக்கின்றேன். புதுமைகளைப் பார்த்துப் பார்த்து என்னையே நான் ரசித்துக்கொண்டிருக்கின்றேன். அப்பிடுனும்பொழுது ஏற்கனவே உங்களுக்கெல்லாம் தெரிந்துவிட்டதாக நிச்சயமாக அணைந்துவிடாதீர்கள் அமர்ந்துவிடாதீர்கள், அத்வைதத்தை வாழத் துவங்கும்பொழுதுதான் வாழ்க்கை துவங்குகிறது, அப்பொழுதுதான் நீங்கள் பிறக்கிறீர்கள். இயலாது இயலாது என்கின்ற மனஅமைப்பை துறந்துவிட்டு, பொறுப்பெடுங்கள் வாருங்கள் அத்வைதத்தை வாழ்வோம். தோளோடு தோள் கொடுத்து, உங்கள் சுமையைச் சுமந்து அத்வைதத்தை வாழ்விப்பதற்க்காக நான் காத்திருக்கின்றேன். வாருங்கள் அத்வைதத்தை வாழ்வோம். சில பேர் சொல்றது உண்டு நினைக்குறது உண்டு, எனக்கு வீட்டுல நிறைய வேலை, கடையில வேலை, ஆபீஸ்ல வேலை, இவ்வளவுக்கும் நடுவில் சங்கத்து வேலைய எப்படி பார்ப்பேன்.? அப்படி நீங்க நினைச்சீங்கன்னா நீங்கதான் முதல்ல சங்கத்து பாகமா மாறனும் ஏன்னா செஞ்சுக்கிட்டே இருக்குறது எதுவும் நடக்காதது, அதுதான் உங்க வாழ்க்கையா இருக்கு, செய்யாமலே இருக்குறது எல்லாம் நடக்குறது அத உங்களுக்கு கற்றுக்கொடுக்கறேன் வாங்க. செஞ்சிட்டே இருக்கறது எதுவுமே நடக்காது, அதுதான் உங்க வாழ்க்கையா இருக்கு, நாய்க்கு வேலை இல்ல, நிக்க நேரம் இல்ல. அது உங்க வாழ்க்கையா இருந்தாதான் நீங்க சொல்வீங்க எனக்கு நெறைய வேலை நான் எப்படி சங்கத்து வேலை சேர்த்து எடுக்கறது, சங்கத்தின் பாகமாக மாறுங்கள் எதுவுமே செய்யாமல் எல்லாவற்றையும் நடத்துகிற ரகசியத்தை உங்களுக்கு அனுபவபுர்வமாக அளிக்கின்றேன். அத்வைதத்தை வாழ்வதை உங்கள் அனுபவமாக மாற்றுகின்றேன். அத்வைதத்தை வாழ்வதை உங்கள் அனுபவமாக மாற்றுகின்றேன். வார்த்தைகளால் தினந்தோறும் சத்சங்கங்கள் மூலம் வகுப்புகள் மூலமும் அத்வைதத்தை கற்றுக்கொடுக்கின்றேன், அளிக்கின்றேன். ஆனால் சங்கத்தின் பாகமாக மாறுங்கள் அதை உங்கள் வாழ்க்கையின் அனுபவமாக மாற்றுகின்றேன். ைெநெச யறயமநெபைெ அப்படிங்கிறது நபெநைெநசபைெ படிக்கற மாதிரி, நபெநைெநசபைெ படிச்சிருந்தாக்கூட வாழ்க்கைல நபெநைெநச-அ நீங்க வேலை செய்யலைனா படிச்ச நபெநைெநசபைெ மறந்துபோய்டும். டயற படிச்சிருந்தீங்கனாக்கூட ிசயஉவைஉந பண்ணலன்னா படிச்சது மறந்துபோய்டும். அதே மாதிரி ைெநெச யறயமநெபைெ யவவநனெ பண்ணிருந்திங்கன்னாக்கூட, அது ைெநெச யறயமநெபைெ அத்வைதத்தை படிக்கறது, சங்கத்தின் பாகமாக மாறி பொறுப்பெடுக்கறதுதான் அத்வைதத்தை வாழறது, வாழ்த்தீங்கன்னா மட்டுந்தான் படிச்சது கூட நினைவில் இருக்கும், வாழலன்னா படிச்சது மறந்துபோகும். ஒரு ஆயிரம் ரூபா கொடுத்து ஒரு ளாழந வாங்கிட்டுவந்து அதை ரளந பண்ணாம ஓரமா போட்டு வச்சிருந்தா கூட உங்கள மன்னிச்சிரலாம், மூன்று லட்ச ரூபா கொடுத்து ஒரு டிவிய வாங்கிட்டுவந்து வெச்சி அதை ரளந பண்ணாமலே இருந்தா நீங்க எவ்வளவு பெரிய முட்டாள். அந்தமாதிரிதான் இத்தனை செலவு பண்ணி அத்வைதத்தை படிச்சுட்டு வந்து அத வாழாம இருந்தா அது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்? வாழுங்கள், சங்கத்தின் பாகமாக மாறுங்கள். நேரடியாக உங்களை அழைக்கின்றேன், ஒவ்வொருவரையும் அழைக்கின்றேன், ஒவ்வொருவரையும் அழைக்கின்றேன். அத்வைதத்தை வாழ்வதை ஸ்ரத்தையோடு உங்கள் வாழ்க்கையின் பாகமாக்குங்கள். வாழ்க்கைல ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயங்களையெல்லாம் உயளரயட-ல எடுத்துக்குறோம், உபயோகம் இல்லாத விஷயங்களையெல்லாம் ரொம்ப ஸ்ரத்தையோடு னநயட பண்ணிட்டு இருக்கின்றோம். இதைத்தான் முட்டாள்தானம்னு சொல்றேன். நல்ல தெரிஞ்சுக்கோங்க அய்யா அத்வைதத்தை வாழ்வதன் மூலமா என்ன அடஞ்சீங்களானும் பொருள்,பணம், புகழ், உறவுகள், நட்பு, சங்கம், அது நீங்க செத்தாக்கூட உங்கள விட்டுப்போகாது மரணம்கூட அதை உங்களிடம் இருந்து திருடிவிடமுடியாது. செத்தாலும் அடுத்த வினாடியே நீங்க எதயெல்லாம் விட்டுட்டுப்போனீங்களோ அதோடையே சேர்ந்து பொறப்பீங்க.

கோட்டாரியாகவோ தானேதாராகவோ செத்தீங்கன்னா முக்தி, அப்படி முக்தி வேணான்னு நினைச்சீங்கன்னா குருகுலத்துல பிறப்பு. நீங்ககூட இருந்து பாக்கணும் அப்படின்னு நினைசீங்கன்னா குருகுலத்துல பிறப்பு, ஏன்னா உங்களைய நான் ஜீவன் முக்தியை வாழ வைக்கணுன்னா நீங்க எனக்கு அனுமதி கொடுக்கணும். வாருங்கள் அத்வைதத்தை வாழுங்கள், வாருங்கள் அத்வைதத்தை வாழ்வோம். இந்த அத்வைத சத்தியத்திலிருந்து செயல்படாம, நீங்க ஒருவேளை சொத்து, பணம், புகழ், அடஞ்சிட்டு இருந்தீங்கன்னாக்கூட அது விபத்தா வந்தது வாழ முடியாது அத நீங்க, இருக்கும் வாழ முடியாது. சக்கர குடோனே நடத்தினாலும் சக்கர வியாதி இருந்தால் ஒரு கை அள்ளி வாயில போடா முடியாது. இருக்கும் வாழ முடியாது. ஆனா அத்வைதம் சார்ந்து அத்வைதத்திலிருந்து எதை உருவாக்கினீங்கனாலும் அது நீங்க வாழ்வீங்க அதை யாராலையும் உங்ககிட்ட இருந்து எடுக்க முடியாது. எத்தனபேர் முயற்சி பண்ணாங்க இந்த சிம்மாசனத்தை அசைக்க, யாராலும் அசைக்கவோ அழிக்கவோ முடியாது. அத்வைதம் சார்ந்து அடையப்படும் விஷயங்கள். இதை அசைக்கவோ அழிக்கவோ முயற்சி பண்ணவங்களான்தான் அழிஞ்சிப்போனாங்க. அழிந்தார்கள், ஒழிந்தார்கள். இந்த சிம்மாசனத்தை அசைக்கவும் அழிக்கவும் முயற்சி செய்தவர்கள்தான் அழிந்து ஒழிந்தார்கள். அழிந்து ஒழிந்துக்கொண்டிருக்கிறார்கள், அழிந்து ஒழிவார்கள். ஏனென்றால் அத்வைத சத்தியத்தின் அடிப்படையில் இருந்து அடித்தளத்திலிருந்து ஆக்கப்பட்டது இந்த பீடம். அசைக்கவும் முடியாது அழிக்கவும் முடியாது. உங்கள் வாழ்க்கையிலும் சரி, அத்வைத்தம் சார்ந்து அத்வைத சத்தியம் சார்ந்து நீங்கள் உருவாக்கும் எல்லாமே, வாழ்வீர்கள் அது உங்களோடு என்றும் இருக்கும், யாராலும் அதை பிரிக்க முடியாது. வாருங்கள் அத்வைதத்தை வாழலாம், இன்று நான் உங்களுக்கு அளிக்கும் குரு புர்ணிமை செய்தி, அத்வைதத்தை வாழுங்கள், ஒரே வழி பொறுப்பேற்று சங்கத்தின் பாகமாக மாறுங்கள். இன்று முறைப்படி தமிழ்நாட்டில் துவங்கி இருக்கும் நூற்றியெட்டு நித்யானந்தேஸ்வரர் ஆலய பிரதிஷ்டையையும் நூற்றியெட்டு நித்யானந்த தியான பீடங்களும் நித்யானந்தேஸ்வரர் ஆலயமும் அமைக்கும் பணியை முறைப்படி துவங்கிவைக்கின்றேன். பல்லவ நாட்டிற்கு பதினாறு நித்யானந்தேஸ்வரர் நித்யானந்தேஸ்வரி நித்யானந்தர் திருமேனிகளை அளிப்பதன் மூலமாக, சோழ நாட்டிற்கு பதினோரு திருமேனிகளும் பாண்டிய நாட்டிற்கு ஐந்து திருமேனிகளும், தொண்டை நாட்டிற்கு, தொண்டை நாடுதான் பதினாறு, பல்லவ நாடு மற்றும் பாண்டிச்சேரியில் இரண்டாவது ஆலயமாக மூலப்பாளையத்தில் அமையவிருக்கும் ஆலயத்திற்கு திருமேனியை வழங்குவதன் மூலமாகவும் நூற்றியெட்டு நித்யானந்தேஸ்வரர் ஆலயம் அமைக்கும் திருப்பணியை முறைப்படி துவங்கிவைக்கின்றேன். I Bless you all, let you all radiate with integrity - authenticity- responsibility and enriching and causing eternal bliss Nithyananda. Thank you.