September 26 2019-Tamil

From Nithyanandapedia
Revision as of 16:55, 23 July 2020 by Gowtham (talk | contribs) (Created page with "==Title== Satsang from The Supreme Pontiff of Hinduism HDH Bhagavan Nithyananda Paramashivam in Tamil ==Description== இன்றைய சத்சங்கத்தின...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to navigation Jump to search

Title

Satsang from The Supreme Pontiff of Hinduism HDH Bhagavan Nithyananda Paramashivam in Tamil


Description

இன்றைய சத்சங்கத்தின் எழுத்தாக்கம்! 26-செப்டம்பர்-2019

  • நித்யானந்தேஸ்வர பரமசிவ சமாரம்பாம்

நித்யானந்தேஸ்வரி பராசக்தி மத்யமாம் அஸ்மதாச்சார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம்...

  • உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன்..

ஆழ்ந்து கேளுங்கள்.. இன்று ஒரு ஆழமான உயிரையே உயிர்பிக்கும் சத்தியத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ளுகிறேன் கேளுங்கள்.

  • சான்றோன் செய்யும் அறிவியல், தாயார் அன்னை பராசக்தி காஞ்சியம்பதி ஏவியபோது கொண்டுவந்த அறிவியல், சான்றோன் செய்யும் அறிவியல் இதை உள்வாங்கிக் கொள்ளுங்கள்.
  • ஆழ்ந்து கேட்டுக்கொள்ளுங்கள்..

என்னுடைய வாழ்க்கையில் நடந்த ஒரு சிறிய நிகழ்ச்சி, இதைச் சொன்னால் உங்களுக்குப் புரிந்துவிடும்..

  • ஒருமுறை அருணகிரி யோகீஸ்வரரிடம் சென்று என்னுடைய இரண்டு குருமார்கள், இரண்டு பேரைப்பற்றியும், குப்பம்மாள் ரகுபதியோகி அதாவது விபுதானந்தபுரி, யோகானந்தபுரி புகார் செய்துகொண்டிருந்தேன். அதாவது இவர்கள் இருவரும் நான் தினந்தோறும் மலைவலம் வந்தாகவேண்டும் என்பதில் மிகுந்த சீரியசாக, கண்டிப்பாக இருப்பார்கள். கட்டாயப்படுத்தியாவது தினம்தோறும் நான் அண்ணாமலையை வலம் வருவதை செய்தே தீருவார்கள்.
  • ஒருநாள் வெகு நேரம் அருணகிரியோகீஸ்வரரோடு இருந்துவிட்டு வீட்டிற்கு சென்றேன், மறுநாள் விடிகாலை கோயில் திறக்கும்பொழுது வந்துவிட வேண்டும் என்பதற்காக அன்று மலைசுற்றச் செல்லவில்லை. பொதுவாக இரவில்தான்.. மலைச்சுற்றச் செல்வேன். ஏனென்றால் பகல்முழுக்க அருணகிரியோகீஸ்வரவரோடு இருந்துகொண்டிருந்ததனால், அந்தக் காலக்கட்டத்தில் மட்டுமல்ல மற்றக் காலக்கட்டத்தில்கூட பொதுவாக இரவில் தான் மலைச்சுற்ற செல்வது வழக்கம்.
  • ஏனெனில் பகலில் இந்த குருமார்கள் எல்லோருடனும் இருப்பது, கோவிலுக்குச் செல்வது இதுபோன்று வாழ்க்கை இருப்பதனாலே இரவிலேதான் மலைச் சுற்ற செல்வது வழக்கம். ஒரு நாள் அந்த மாதரி அருணகிரி யோகீஸ்வரரோடு இருந்ததனால், இரவு வெகுநேரம் இருந்ததனால், காலையில சீக்கிரம் வர வேண்டும் என்பதனால் அன்று மலைச் சுற்றச் செல்லவில்லை.
  • அதை தெரிந்து கொண்டு அன்று இரகுபதியோகியும், விபுதானந்தபுரியும் என்னைக் கடிந்துக்கொண்டார்கள், போய் ஆகவேண்டும் என்று கட்டாயப்படுத்தினார்கள். அதனால் மறுநாள் வந்தது அவர்களைப் பற்றி அருணகிரியோகீஸ்வரரிடம் புகார் செய்துகொண்டிருந்தேன்.

அருணகிரியோகீஸ்வரர் கையை மட்டும்தான் தூக்கினார்..

  • அவர் தூக்கி எனக்கு காட்டிய காட்சியை உங்களக்குச் சொல்கிறேன் கேளுங்கள்.

அந்தக் காட்சியின்பொழுது எனக்குப் புரிந்த சத்தியங்கள்.. வார்த்தையால் பெருமான் பதில் சொல்லவில்லை, ப்ளாஷ் மாதிரி.. அந்த சத்தியம் எனக்குள் மலர்ந்தது. இது சொன்ன சத்தியம் அல்ல, காட்டிய சத்தியம்.

  • அதாவது வார்த்தையால் சொல்லாமல் காட்சியால் காட்டினார் இந்த சத்தியத்தை.. கேளுங்கள்.

உலகமே நமக்கு சுகம் தருவதற்காக படைக்கப்பட்டது என்று நினைப்பவன் சுயநலவாதி. உலகமே நமக்கு நலம் தருவதற்காக படைக்கப்பட்டது என்று நினைப்பவன் நல்ல வாழ்க்கை அடைவான்.

  • உலகம், நம்மை சுற்றி இருக்கின்ற எல்லா நபர்களும் உறவுகளும், பொருட்களும் நமக்கு தருவதற்காக படைக்கப்பட்டிருக்கிறது என்று நினைப்பவன் சுயநலவாதி. ராட்சஸன்.. எல்லாமே தன் சுகத்திற்காக படைக்கப்பட்டதாக நினைப்பவன், நம்மை சுற்றியிருக்கும் உறவுகள் எல்லாமே கூட தனக்கு சுகம் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடனேயே வாழ்பவன், அப்படி கொடுக்க வில்லை என்றால், அவர்களை எதிரிகளாகப் பார்ப்பவன்.
  • இந்த ஒரு சத்தியம் உங்களை சான்றோனாக்கும்..

வாழ்க்கையே இனிமையாகிவிட வேண்டும் என்றால் இந்த ஒரே ஒரு சத்தியத்தை உள்வாங்குங்கள்.. நம்மை சுற்றி இருக்கும் எல்லோரும், எல்லா சூழலும், எல்லாப் பொருளும், உலகம், வாழ்க்கை, நமக்கு சுகம் தருவதற்காகத்தான் என்று நினைத்தால் நேரடியாகவோ, மறைமுகமாகவோ இப்படி நினைத்தோமானால், வாழ்க்கையே நரகமாகிவிடும்.

  • வாழ்க்கையே நம்மைச் சுற்றியிருக்கின்ற நபர்கள், பொருட்கள் எல்லாமே நலம் தருவதற்காக படைக்கப்பட்டது என்று நினைத்தோமானல் அது எல்லாவற்றிலிருந்தும் தொடர்ந்து நம் வாழ்க்கையை நலமாக்குகின்ற பாடங்களை மட்டும் கற்றுக்கொள்வோம்.

ஒரு ஒரு நபரும் எப்படி நமக்குப் பொறுப்பை கற்றுத்தருகின்றார், வெளியில் எந்த ஒரு சூழ்நிலையிலும் நாம் உள் திரும்பிப் பார்த்து அந்தப் பொறுப்பை நாம் ஏற்றுக்கொள்ள நமக்குள் பூரணத்துவத்தை எடுத்து வரவேண்டும்.

  • ஆழ்ந்துபுரிந்துகொள்ளுங்கள்..

இது இன்றைய சத்சங்கத்தின் சாரம் மட்டும்மல்ல இது வாழ்க்கையினுடைய சாரம்.. வாழ்க்கையே நமக்கு சுகம் தருவதற்காகதான் படைக்கப்பட்டிருக்கிறது என்று நினைப்பவன் எப்போதும் நரகத்திலேயே இருப்பான். அவன் வாழ்க்கை ராட்சனைபை;போல இருக்கும் தீய சக்தியாக இருப்பான். வாழ்க்கையே நமக்கு நமக்கு நலம் தருவதற்காகத்தான் படைக்கப்பட்டிருக்கிறது என்று நினைப்பவன் தெய்வத்தைப் போல் வாழ்வான்.

  • நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள்

மீண்டும் சொல்கிறேன்.. வாழ்க்கையே நமக்கு சுகம் தருவதற்காக படைக்கப்பட்டிருக்கிறது என்று நினைப்பவன் சுயநலவாதியாக, ராட்சஸனாக தீய சக்தியாக இருப்பான். வாழ்க்கையே நமக்கு நலம் தருவதற்காக படைக்கப்பட்டிருக்கிறது என்று நினைப்பவன் தெய்வமாக ஞானியாக, முழுமையடைந்த ஒரு நபராக வாழ்ந்து மலர்வான்.

  • இந்த இரண்டையும் புரிந்துகொள்ளுங்கள்..

உங்களைச் சுற்றி இருக்கின்ற நபர்கள், பொருட்கள், எல்லாமே நம் சுகத்திற்காக படைக்கப்பட்டிருக்கிறது என்று அடிப்படையாக நீங்கள் நம்பினீர்களானால், சோற்றைக்கூட கண்டடி உண்டு இறப்பீர்கள். பாலாக இருந்தாலும் கண்டபடி குடித்தால் இறந்துவிடுவோம். விஷமாக இருந்தாலும், தேவைப்படும்பொழுது வேண்டிய அளவிற்கு மட்டும் எடுத்தால் மருந்தாக மாறி நலமடைந்துவிடுவீர்கள்.

  • நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்..

பரமசிவம் பரம்பொருள் உங்களைச் சுற்றி எப்பொழுதும் சுகம் தர வேண்டும் என்று நினைத்தாள் வாழ்க்கை துக்கமாகவே அழியும். நலம் பெற வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்த்தால் ஞானமாக மலரும். ஒவ்வொரு நபரிடம் இருந்தும் ஒவ்வொரு சூழலில் இருந்தும் ஒவ்வொரு பொருள் இடமிருந்தும் வாழ்க்கையாக எதிர்ப்படுத்துகின்ற எல்லாமே உங்களை மேம்படுத்ததான். நேர்மையிலும் உண்மையிலும் பொறுப்பிலும் உயிர்த்தெழும் மேம்படுத்த நலம் படுத்த என்ற தெளிவுக்கு வந்தீர்களானால் வாழ்க்கை நலமும் படும், சுகமும் படும். ஆனால் வாழ்க்கையில் இருக்கின்ற பொருட்கள் மனிதர்கள் நபர்கள் எல்லாமே சுகம் பட என்று நினைக்கிறீர்கள் ஆனால் வாழ்க்கையை நாசமாக்கும்.

  • நன்றாக புரிந்துகொள்ளுங்கள்..

வாழ்க்கை சுகம் தர வேண்டும் என்று நினைப்பவன் அங்குமிங்கும் சுகம்பொறுக்கிக் கொண்டு இருக்கும் குப்பை பொறுக்கியாக முதிர்ச்சியடையாத பொறுக்கியாக வாழ்க்கையை நடத்துவான். வாழ்ந்து அழிவான். இந்த சுகம் தேடும் மனிதர்கள் பார்த்தீர்களென்றால் தனக்கு ஒரு சிறிய சுகம் வருகிறது என்றால் ஒருவன் அழிந்துபோவது பற்றி கூட கவலைப்பட மாட்டார்கள்.

இந்த சாராயம் விற்று பணம் பண்ணுகின்ற பொறுக்கிகள் உயிரை குடித்து பணம் செய்வீர்கள் பணத்திற்கு எத்தனை? வழிகள் இருக்கின்றது. உயிர் கொல்லும் சாராயம் விற்பனை செய்வீர்கள்? சோறு போட்டு படம் பண்ணலாம்? கல்வியை விற்று பணம் செய்வதைக்கூட பொறுத்துக் கொள்ளலாம் பரவாயில்லை.! சாராயம் விற்ற பணம் சம்பாதிப்பது. ? என்னிடம் ஒருவர் வந்தார் சாமி நான் விற்கவில்லை என்றால் யாராவது ஒருவர் பிடித்து வைக்கப் போகின்றார் அதற்கு நானே விற்கலாமில்லையா..? அடப்பாவிகளா! இப்படித்தான் எல்லோரும் நினைத்துக்கொண்டு பயம் மற்றும் அழுத்தத்தை உருவாக்கி விடுகின்றீர்கள்..

  • பலபேருடைய அறியாமை சார்ந்து Create பன்ற Space க்கு நகரம் என்று பெயர்..

பலபேருடைய அறிவு சார்ந்த Create பன்ற Space சொர்க்கம் என்று பெயர்!

  • இந்த சத்தியத்தை கேளுங்கள்..

அருணகிரியோகீஸ்வரர் எனக்குச் சொல்லிய மிகப்பெரிய சத்தியம்.. அவர் சொன்னார், உன்னுடைய குருமார்கள் எல்லோருமே நீயே உனக்கு வைத்துக்கொண்ட அலாரம் எடுத்துப் பார்த்தோமானால் அது வந்து உண்மை எனக்கு 'பளிச்'சென்று உயிருக்குள் உரைத்தது ஆமாம்! இப்பொழுது நான் மலை சுற்றினால் யோகானந்தபுரிக்கோ, குப்பம்மாளுக்குதேகா ஏதாவது வருமானமா? கிடையாது! என்மீது இருக்கின்ற ஆழமான கருணை ஒன்றே காரணத்தினால் என் வெறுப்பையும் மேரி என்மீது உயிர் காதல் புரிந்தவர்கள்.

  • நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள் நான் அவர்கள் மீது நிதர்சனமாக காட்டிய வெறுப்பையும் மீறி என் உயிரை காதலித்தார்கள்.

நன்றாக கேட்டுக்கொள்ளுங்கள். இன்று மணிக்கணக்காக அமர்ந்து உங்களுக்கு சத்சங்கங்கள், தரிசனங்கள், என்று அளிக்கிறேன் என்றால் அது அவர்களின் கடும் உழைப்பு! எனக்கு 20 வயது ஆகும்போது என் பொது வாழ்க்கையை துவங்கினேன், ராமகிருஷ்ண மடத்திற்கு சென்ற உடனேயே பொதுவாழ்க்கையில் துவங்கிவிட்டேன்.

  • இத்தனை ஆண்டுகள் தொடர்ந்து மணிக்கணக்காக, நாள் கணக்காக, வார கணக்காக, மாதக்கணக்காக அமர்ந்து எந்த விதமான முரண்பாடும் இல்லாமல் இந்த ஒரு விஷயத்தை சொல்ல முடியும். அதிக மணிநேரம் பேசி பதிவு செய்து வீடியோ வைத்திருக்கின்ற ஒரே ஆன்மீக குரு நான்தான் அது சந்தேகமே இல்லை.
  • ஆயிரக்கணக்கான மணிநேரங்கள் சத்சங்கங்கள் கொடுத்துக் கொண்டே இருப்பதற்கான காரணம் என்னுடைய உடலை தயார் செய்தவர் கடும் உழைப்பை கற்றுக் கொடுத்து விட்டார். உடலின் மனதின் நரம்பு மண்டலங்களை மிகுந்த சக்தி வாய்ந்தது கடும் உழைப்பு தயாராக்கி வைத்துவிட்டார்கள்.என்னுடைய குரு எனக்கு செய்த பெரும் அவர்களுடைய உழைப்பு அதில் சேர்க்கப்பட்டது.
  • நன்றாக புரிந்து கொள்ளுங்கள் நிஜமான குரு யார் என்றால் உங்கள் வெறுப்பையும் மீறி உங்கள் உயிரை காதலிப்பவர். நீங்கள் அவரை வெறுத்தாலும் உங்களை உங்கள் உயிருக்காக உங்களை அவர் வெற்றி அடையச் செய்வார். அதற்கு அவருக்கு எதுவுமே தேவையில்லை உங்ளுடைய உடலையோ, மனதையோ, சொத்தையொ அவர் காதலிக்கவில்லை. உங்கள் உயிரைக் காதலிக்கின்றார். நேர்மையான உயிர்க்காதல் உடையது உங்கள் உயிர் மீது காதல் கொண்டவர்.
  • யோகானந்தபுரி, விபுதானந்தபுரி இவர்களுடைய மிகப் பெரிய தியாகம் என்னவென்றால் சில நேரத்தில் நான் விரும்பினாலும் சில நேரத்தில் நான் விரும்பாவிட்டாலும் என்னைக் கட்டாயப்படுதியாவது செய்ய வைத்தவிடுவார்கள். இவர்கள் மீது நான் கொண்டிருக்கும் மாறாத நன்றிக்கு காரணம் அவன் விரும்பாத போதும் கட்டாயபடுத்தி தன்னை வெறுக்கிறான் என்று தெரிந்தும் அதைப்பற்றி கவலைப்படாமல் தான் பார்க்க வேண்டும்.
  • ரகுபதியோகி சிவ சமயம் குப்பம்மாளிடம் புலம்புவார், குப்பம்மாள் என்னுடைய பாட்டியின் தோழி என்பதனால், இரகுபதியோகியைவிட குப்பமாளிடம் கொஞ்சம் அதிகமான உரிமை உண்டு. அதனால் ரகுபதி யோகி சொன்னால் செய்யாத ஒரு சில விஷயங்களை கூட குப்பம்மாள் சொன்னால் செய்து விடுவேன்.
  • ஒருமுறை ரகுபதி குப்பம்மாளிடம்; புலம்புகின்றார் ஏதாவது சொன்னால் செய்கிறானா? இவளை என்ன செய்வது?

அப்பொழுது குப்பம்மாள் அவரிடம் அடிச்சி செய்ய வைத்துவிடுங்கள் இப்பொழுது அவனுக்கு புரியுதோ? இல்லையோ? என்று கவலை கொள்ள வேண்டாம். அடித்து செய்ய வைத்து விடுங்கள்! பிறகு புரியும்போது புரிந்துகொள்ளட்டும்.

  • ஒரு குருவின் மிகப்பெரும் தியாகம் அவர் உயிர் மீது கொண்ட பெரும் காதலினால் பெரும் கருணையினால் தொடர்ந்து அவர்கள் செய்ய வேண்டியதை செய்வார்கள். அவர்கள் நிஜமான தியாகிகளாக இருந்தால் கட்டாயப்படுத்தியாவது என்னை மலை சுத்த வைத்துவிடுவார்கள். என்ன செய்ய வேண்டுமோ அதைச் சரியாகச் செய்து விடுவார்கள். கட்டாயப்படுத்தியாவது செய்ய வைத்துவிடுவார்கள்.
  • ஒருமுறை ஏதோ ஒரு சின்ன identity -யை பேச்சுவாக்கில் வெளிப்படுத்திவிட்டேன். உடனே எனக்கு அது அகந்தையாக மாறிவிடக்கூடாது என்பதற்காக மறுநாளே என்னை பிச்சை எடுக்க அனுப்பினார்கள். அப்பொழுது புரட்டாசி மாதம் சனிக்கிழமை, சரியாக அத்தருணத்தில் வந்தது!

உடனே எனக்கு நெற்றில் நாமம் போட்டு கையில் ஒரு சொம்பை கொடுத்து, கோபாலா, கோவிந்தா, நாராயணா என்று சொல்லி போய் பிச்சை எடுத்துவா என்று அனுப்பி விட்டாரகள்.

  • நான் வீடு வீடாக சென்று கோவிந்தா, நாராயணா, என்று சொல்லி பிச்சை எடுத்து வரவேண்டும்.
  • திருவண்ணாமலை இது ஒரு பழக்கம் உண்டு குழந்தைகளெல்லாம் இந்த புரட்டாசி மாதம் வந்தவுடன் புரட்டாசி சனிக்கிழமைகளில் நாமம் இட்டுக்கொண்டு கையில் ஒரு பித்தளை செம்புடன் வீடுவீடாகச் சென்று பிச்சை எடுத்து அதில் கிடைக்கும் அரிசியை சமைத்து பெருமாளுக்குப் படைத்துவிட்டு பிரசாதமாக வழங்கிவிடவேண்டும். திருவண்ணாமலையில் பூத நாராயணர் கோவில் இதைச் பிச்சையாக எடுக்கின்ற எல்லாவற்றையும் படைத்தவிடுவோம். அந்தக் காசுகளை ஒரு மஞ்சள் துணியில் கட்டி வீட்டில் உள்ள பெருமாள் படத்தில் மாட்டி வைத்துவிடுவார்கள். திருப்பதிக்கு செல்லும்பொழுது எடுத்துச்சென்று உண்டியலில் சேர்த்துவிடுவாரகள். இது பெருமாளை குலதெய்வமாகக் கொண்டவர்களுக்கு வழக்கம். பெரும்பாலும், திருவண்ணாமலை சைவவேளாளர்களுக்கு பெருமாள் குலதெய்வமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் திருப்பதி சென்று தரிசனம் செய்வதை வழக்கமாக வைத்திருக்கின்றார்கள்.
  • அதுபோல என்னையும் அனறு என்று பிச்சை எடுத்து வா என்று அனுப்பி விட்டார்கள்! எனக்கு மிகப்பெரிய திமிரே நான் ராஜு முதலியார் பேரன் என்பதுதான்! அந்த அளவிற்கு ஒரு நல்ல மனிதர். வசதியானவர் என்பது மட்டுமல்ல, அந்த ஊரிலே ஒரு பெரிய மனிதர் என்பதற்கான அச்சு மாறாமல் வாழ்ந்தவர். அதுபோக அவர் நல்ல மனிதர் என்பதை நானே ஆழமாக நம்பினேன். எனக்கு அவர் மீது ஒரு மிகப்பெரிய அன்பு உண்மையான அன்பு உண்டு.
  • சிறுவயதில் குழந்தைகளுக்கு தாத்தா மீது அன்பு இருக்கும் அது வேறு, ஆனால் இப்போது வளர்ந்த பிறகு, ஒரு அவதாரபுருஷனாக பரிணமித்த, சமூகத்தை பார்த்தபிறகும், இத்துனை மக்களைப் பார்த்தபிறகும் இந்த அறிவிலிருந்து இந்த கண்ணோட்டத்தோடு அவரை பார்த்தால் கூட அவர் மாண்பு குறையாத மாட்சிமை உடையவர்.
  • நான் எத்தனையோ நாள் அவருடைய கடையில் அமர்ந்திருக்கின்றேன், ஒருமுறைகூட அந்த கடை படியேறி தானம் வேண்டும் என்று வந்த பிச்சைக்காரர்கள், வழிப்போக்கர்கள், ஏழைகள், இந்தக் கோவில் கும்பாபிஷேகங்கள், இறைபணி மன்றம், கிருத்திகை திருவிழா என ஏதாவது ஆன்மீக சங்கங்கள் இந்த காரணத்திற்காக அந்த கடையேறி அவர்களுக்கு உதவி என்று வந்தவர்கள் ஒருவரைக்கூட இவர் வெறும் கையோடு அனுப்பியதை நான் பார்த்ததே இல்லை. யாரையும் வெறுங்கையோடு அனுப்பக்கூடாது ஏதாவது ஒன்றைத் தன்னால் இன்ற ஒன்றை கொடுத்துதான் அனுப்ப வேண்டும் அந்த பழக்கம் எனக்கு அவரிடமிருந்து தான் வந்தது.
  • யார் வந்தாலும். இந்த வெல்லமும் பொரியும் கலந்து ஒரு பிளாஸ்டிக் பக்கெட்டில் ஓரமாக வைத்திருப்பார். சாப்பாடு நேரத்தில் வந்துவிட்டால் வீட்டிற்கு சாப்பிடச்சொல்லி அனுப்பு விடுவார். ஒரு சில நேரத்தில் சாப்பாடு நேரம் தவறி யாரேணும் வந்தால் உணவு தராமல் இருக்க கூடாது என்பதற்காக, சில நேரங்களில் நேரம் தவறி அவர்கள் பசியோடு சென்றுவிடக்கூடாது என்பதற்காக இந்த கலந்து வைத்திற்கும் பொரியம் வெல்லமும் அளித்து அவர்களை சாப்பிடவைத்துதான் அனுப்புவார். இப்போதுதான் சொல்வதெல்லாம் வெறும் கதையல்ல இதற்கு எல்லாவற்றுக்கும் சாட்சிகள் இருக்கிறார்கள். அவர்களோடு வாழ்ந்தவர்கள் இருக்கிறார்கள். மாண்புடைய மனிதர்.
  • திருவிழா என்று யார் என்று பணம் கேட்டாலும் உதவி கேட்டாலும் குறைந்தபட்சம் ஒரு இருபத்தி ஐந்து ரூபாய். பத்து ரூபாய் அவரால் முடிந்தது குறைந்தபட்சம் ஏதோ ஒன்று கொடுத்துதான் அனுப்புவார்கள். யாரையும் வெறுங்கையோடு அனுப்ப மாட்டார்கள். இதையெல்லாம் நான் பலமுறை பார்த்திருக்கிறேன். மாட்சிமையுடைய மனிதர். மாண்புடைய மனிதர். அதனால் அவர்தான் என்னுடைய பெருமை.
  • அதனால் அந்தப்பெருமைகூட இருக்கக்கூடாது என்பதற்காக குப்பம்மாள் பிச்சை எடுக்கச் சொல்லி அனுப்புகிறார்கள்.
  • கடைக்காரர்கள் சரியாக அதே மாதிரி கிண்டல் செய்வார்கள். ஊரில் என்கின்ற அரிசி மொத்தமும் உங்க தாத்தா விற்கிறர், நீ பிச்சை எடுத்துக்கொண்டு போய் அந்த அரசியை வாங்கி கடை கொடுத்து திரும்பவும் விற்கிறீர்களா? தாத்தாவும் நீயும் சேர்ந்து வியாபாரம் பண்றீங்களா? என்று கிண்டல் செய்வார்கள்..

உங்க தாத்தா அரிவி விற்பார், நீ அதை வந்து பிச்சையா வாங்கிட்டு போயி திரும்ப தாத்தா கிட்ட கொடுத்து விற்கப் போகிறாயா? ஏன்று கிண்டல் செய்வார்கள். நான் "இல்லைன்னா. பாட்டி பிச்சை எடுக்க சொல்லுச்சு அதனால வந்தேன்."

  • திருவண்ணாமலையில் எல்லா நடுத்தர வர்க்கத்தினரும் அதாவது ஒரு இருபதிலிருந்து முப்பது வயதிற்குள் இருக்கும் எல்லா ஆண்களும் அண்ணன். முப்பதிலிருந்து ஐம்பது வயதிற்குள் இருக்கும் எல்லா ஆண்களும் மாமா. நடுத்தர வயது எல்லா பெண்களுமே அக்காதான் அவ்வளவுதான். இதுதான் உறவுமுறை.
  • என்னுடைய குருமார்களுடைய மிகப்பெரிய தியாகம் என்னவென்றால்.. எனக்கு புரியுதோ புரியலையோ சில நேரத்தில் புரிய வைக்க முயற்சி செய்வார்கள் ஆனால் புரியவில்லை என்பதற்காக என் சோம்பல் தனத்தை என் இயலாமையை காரணம் காட்டி அவர்கள் என் வாழ்க்கையில் இருந்து ஒதுங்கிக் கொள்ளவில்லை.
  • என் மீது கொண்ட நேர்மையான உயிர் காதலால் ஒரு குரு தன் சீடனுக்கு செய்யவேண்டிய கடமையை கட்டாயப்படுத்தியது செய்து முடித்துவிட்டார்கள் என்றென்றும் அதற்காக அவர்களுக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன்.

இன்று மணிக்கணக்காக அமர்ந்து பேசிக் இந்த சத்தியங்களை எல்லாம் உங்களுக்கு கொடுத்துக் கொண்டிருப்பதற்கான உடல்நலம் எனக்கு இருப்பதற்கான ஒரே காரணம் அவர்களுடைய தியாகம். அன்று அவர்கள் என் உயிர் மீது கொண்ட காதலால் கட்டாயப்படுத்துதியாவது அவர்கள் கொடுக்க வேண்டிய பயிற்சிகளை கொடுக்காமல் என்னை தயார் செய்யாமல் விட்டிருந்தால் இன்று இத்தனை மணி நேரம் உங்களுக்காக என்னால் உழைத்து இருக்க முடியாது.

  • நன்றாக புரிந்துகொள்ளுங்கள், என் ஞானம் உங்களுக்கு பலன் தருகிறது என்றால் அருணகிரி யோகேஸ்வரருக்கு நன்றி கடன் பட்டிருக்கிறீர்கள்.

மணிக்கணக்காக தொடர்ந்து அமர்ந்து இந்த நேரத்தில் நான் உங்களுக்கு அளிக்கின்ற உழைப்பு உங்களுக்கு பலன் தருகிறது என்றால் குப்பம்மாளுக்கும் ரகுபதியோகிக்கும் நன்றியோடு இருங்கள். அயராது உழைக்கக்கூடிய உடம்பை எனக்கு செய்து வைத்தவர்கள் ரகுபதியோகியும், குப்பம்மாளும்.

  • இந்த மென்மையான அன்பை காட்டி ஏமாற்றுவது மிகவும் சுலபம்.

அப்பா நல்லா இருக்கியா? மென்மையான அன்பை காட்டி ஏமாற்றி விடுவது வெகுசுலபம். எப்பொழுதுமே உங்கள் மாமாவும் மாமியும் வந்தார்கள் ஆனால் அவர்கள் மிகவும் அன்பாகதான் இருப்பார்கள். ஏனென்றால் அவர்கள் இருக்கின்ற இரண்டு அல்லது மூன்று நாட்கள் உங்களோடு சிரித்து இனிமையாக பேசி சென்றுவிட்டால் போதும் நிறைய பரிசுகள் வாங்கி வருவார்கள் நீங்கள் கேட்பது எல்லாம் சாப்பிடுவதற்கு வாங்கித் தருவார்கள் உங்கள் உடலைப்பற்றி கவலைப்படுவதற்கு அவசியமில்லை. உங்களை ஜாலியாக வைத்திருந்து விட்டு சென்று விடுவார்கள். ஆனால் அப்பா அம்மாவிற்கு தான் நேர்மையான அன்பு இருக்க வேண்டும் இந்த காலத்தில் சில அப்பா அம்மாக்களே, மாமா மாமி மாதிரி இருக்க ஆரம்பித்து விட்டார்கள் அது ஒரு பெரிய கொடுமை.

  • நேர்மையான அன்பு என்றால் தன்னுடைய பொறுப்பிற்கு தான் செய்ய வேண்டியதை செய்கின்ற அன்பு.
  • புரிந்து கொள்ளுங்கள்..

அருணகிரியோகீஸ்வரர் எனக்கு காட்டிய ஒரு அடிப்படையான சத்தியம் உங்களை சுற்றி இருக்கின்ற வாழ்க்கை உங்களுக்கு சுகம் தருவதற்காக என்று நீங்கள் Unconscious -க நம்புகிறார்கள் ஆனால் வாழ்க்கையே நரகமாக இருக்கும். You will start demanding from life left, right, center.

  • புரிந்து கொள்ளுங்கள்..

ஒரு நபர். சூழ்நிலை பொருள் எதுவாக இருந்தாலும் அது உங்களுடைய சுகத்திற்காக என்று நினைப்பீர்கள் ஆனால் வாழ்க்கையே நரகமாகிவிடும். சுயநலத்தால் அழிந்து போவீர்கள்.

  • நன்றாக தெரிந்து கொள்ளுங்கள் இந்த ஒரே ஒரு மாற்றம் வாழ்க்கையே சொர்க்கம் ஆகிவிடும்.. உங்களை சுற்றி இருக்கின்ற நபர் பொருள் எல்லாமே உங்களுக்கு நலம் பயப்பதாக செய்யப்பட்டிருக்கிறது சுகம் பார்ப்பதற்காக அல்ல. அப்பொழுது ஒவ்வொரு நபரும் உங்களை எப்படி உணர்த்துவதற்கு எடுத்து வருகின்றார் ஒவ்வொரு சூழ்நிலையும் உங்களை இப்படி ஒரு புடவை எடுத்து வருகின்றது. ஒவ்வொரு பொருளும் உங்களை எப்படி வாழ்க்கையின் குறிக்கோளை நோக்கி செலுத்துகின்றது மொத்த வாழ்க்கையின் பநயச மாறிவிடும் வாழ்க்கையின் பநயச மாறிவிடும்.
  • ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள் மொத்த வாழ்க்கையும் மாற்றுவதற்கு ஒரே ஒரு சத்தியம்...

உங்களைச் சுற்றி இருக்கின்ற பொருட்கள் நபர்கள் வாழ்க்கை சூழ்நிலை எல்லாமே உங்களுக்கு சுகம் தருவதற்காக படைக்கப்படவில்லை உங்களுக்கு நலம் தருவதற்காக படைக்கப்பட்டிருக்கிறது.

  • இந்த ஒரு தெளிவோடு உங்களுடைய கணவனையோ மனைவியையோ பார்த்தீர்களானால் தெரியும் இவர்கள் நான் முழுமை அடைவதற்காக என் வாழ்க்கையின் பாகமாக வந்திருக்கிறார்கள் நான் நலம் அடைவதற்காக என் வாழ்க்கையின் பாகமாக வந்திருக்கிறார்கள் சுகம் அடைவதற்காக இல்லை நலம் அடைவதற்கு.
  • சுகம் வேறு நலம் வேறு!

ஒரு சிறு பொருளை கூட இது நான் சுகம் அடைவதற்காக பெருமான் படைக்கவில்லை நலம் அடைவதற்காக படைத்திருக்கிறார் என்று புரிந்துகொண்டீர்களானல்.. அப்பொழுது தேவையானதை சரியானதை சாப்பிடுவீர்கள். கண்டதையும் தின்று விட்டு வயிறு சரியில்லை என்று கவிழ்ந்து படுத்துக் கொண்டிருந்தார் யாருக்கு நஷ்டம்? கண்ணில் படுவதை எல்லாம் தின்பது. ரோட்டில் செல்வதில் பஸ் கார், கடலில் செல்வதில் கப்பல் இதை விட்டு மீதம் எல்லாவற்றையும் தின்பது. தின்றுவிட்டு வயிறு சரியில்லை என்று கவிழ்ந்து படுத்துக் கொள்வது.

  • பொருட்களும் மனிதர்களும் சூழலும் உங்களுக்கு நலம் தர படைக்கப்பட்டிருக்கிறது சுகம் தர அல்ல.
  • நன்றாக புரிந்துகொள்ளுங்கள் நீங்கள்தான் பரமசிவம்!

இந்த உலகம் ஆக நீங்கள் விரிந்து மலரும் பொழுது உங்களை நீங்களே பரமசிவத்தின் அனுபவிப்பதற்காக தான் நீங்கள் உலகமாக வாழ்க்கையாக மலர்ந்து இருங்கள் அதனால். உங்களை சுற்றி இருக்கின்ற வாழ்க்கையை நீங்கள் தான் உங்கள் வாழ்க்கையாக மலர்ந்தது. நீங்கள் உங்களுக்கு நலம் கொடுத்து கொள்வதற்காக உங்கள் பரமசிவ தன்மையை ரசிக்கவும், ருசிக்கவும், கொண்டாட்டவும்தான் உங்களைச் சுற்றி இருக்கின்ற நபர்களாக, பொருட்களாக, வாழ்க்கையாக மலர்ந்து இருக்கிறீர்கள் என்று மட்டும் புரிந்து கொண்டீர்கள் ஆனால் இந்தத் தெளிவு உங்களுக்கு கிளிக் ஆகிவிட்டது என்றால் உங்களைச் சுற்றி இருக்கின்ற எல்லாவற்றையுமே ஆஹா! சரிதானே என்னை சுற்றி இருக்கின்ற எல்லாவற்றையும் என் முழுமைநிலையை, உச்சநிலையை உணர்வதற்காக அனுபவிப்பதற்காக என்னை தூண்டி விட்டுக் கொண்டிருக்கின்றார்கள் அதை நோக்கித்தான் என்னை செலுத்துகிறார்கள். என் நலத்தை நோக்கி செலுத்துகிறார்கள் ஆனால் நான் சுகத்தை நோக்கி தேடிக் கொண்டிருக்கின்றேன் அங்குதான் முரண்பாடு வருகின்றது .

  • உங்கள் வாழ்க்கையில் பிரச்சினை துவங்குவதை அங்குதான் நீங்கள் சுகம் நோக்குகிறார்கள் அது நலம் நோக்கி நின்றது விழித்துக் கொள்ளுங்கள் நபர்களும் நபர்களும் சூழலும் சுற்றமும் அனைத்துமே வாழ்க்கையில் உங்களுடைய நலம் செய்வதற்காக உங்களுக்கு சுகம் செய்வதற்காக அல்ல. சில நேரத்தில் நலம் சார்ந்து வருகின்ற சுகம்தான் இறந்த சுகம் நலம் சார்ந்து வரும் சுகம் ஆனந்தம்.
  • இன்றைய சத்சங்கத்தின் சாரம் இதுதான்.

உங்கள் வாழ்க்கை உங்களுக்கு நலம் சேர்த்த செய்யப்பட்டது சுகம் சேர்க்க அல்ல பல நேரத்தில் நலத்தோடு சேர்ந்து சுகம் சேரும் அது ஆனந்தம் இந்த ஒரு சத்தியத்தை வைத்து உங்களுடைய வாழ்க்கை சூழ்நிலை எல்லாவற்றையும் புரிந்துகொள்ளதொடங்குங்கள். அப்பொழுது தெரியும் என்னென்ன குறை உணர்வுகள் உங்களுக்கு யார் யார் மீது இருக்கின்றது அது எல்லாமே உங்களுடைய தவறான போக்கான நோக்கமான சுகம் சார்ந்தது. உங்கள் எல்லோருக்குள்ளும் இருக்கின்ற அந்த ராட்சச தன்மையான தீயசக்தி சார்ந்தது.

  • ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள்..

உங்களைச் சுற்றி உங்கள் வாழ்க்கை உங்களுக்கு என்னவெல்லாம் செய்தது என்று சுகம் சார்ந்து பார்த்தாள் உங்கள் வாழ்க்கை உங்களை ஏமாற்றி விட்டதாக நினைப்பீர்கள் நலம் சார்ந்து பார்த்தாள் உங்கள் வாழ்க்கை உங்களை எவ்வளவு கொடுத்து இருக்கிறது மேம்படுத்தி இருக்கிறது என்று தெரிந்து கொள்வீர்கள்.

  • சுகம் சார்ந்தவன் நரகம் செல்வான்

நலம் சார்ந்தவன் கையிலை செல்வான். சுகம் நரகம் நலம் கையலை!

  • சூழலையும் நபரையும் இந்தக் கோணத்தை ஓடு பார்த்தீர்கள் ஆனால் இவர்கள் எனக்கு நலம் தருவதற்காக பரம்பொருள் பரமசிவம் அனுப்பியிருக்கிறார் சுகம் தருவதற்காக அல்ல இந்த கோணத்தோடு பார்த்தீர்களானால் வாழ்க்கையில் ஒவ்வொரு நபரும் உங்களுக்கு நலம்தந்து உங்களை மேம்படுத்தும் நீங்கள் உங்களுக்குள் திரும்பிப்பார்த்து வருவதற்கான வாய்ப்பை அளிக்கும்.
  • இன்றைய சத்சங்கத்தின் சாரம் பொருட்களும் நபர்களும் வாழ்க்கையும் நமக்கு நல்ல புடவை சுகம் கூட அல்ல நலத்தோடு பேருந்து சுகம் வருமானால் அது நன்று ஏனென்றால் நலத்தோடு சேர்ந்து வரும் சுகம் ஆனந்தம்.
  • இந்த சத்தியத்தை தியானியுங்கள் ஒரு பத்து நிமிடம் எடுத்துக்கொண்டு இந்தத் தெளிவை உங்களோடு அமர்ந்து சிந்திக்கும் பொழுது என்னென்ன உங்களைச் சுற்றி இருக்கின்ற நபர்கள் பொருட்கள் நீதித்துறை உணர்வுகள் சுகம் தேடியதால் வந்தது என்று படுகின்றதோ அதை எழுதுங்கள்!

வாழ்க்கையே சுகம் சேர்க்க வந்தவர்கள் என்ற போக்கோடு நீங்கள் அணுகுவதே கற்பழிப்பு! கீழ்தரமான அவதூறான இருக்கும் இருப்பு!

  • வாழ்க்கையோடு காதலில் மலருங்கள் நேர்மையான காதலில் மலருங்கள் .

ஒரு பத்து நிமிடம் அமர்ந்து உங்களுக்குள் எழுவதை பட்டியலிடுங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய மிகப்பெரிய தெளிவோம் வளர்ச்சியும் வரும்

  • நீங்கள் எல்லோரும் நித்யானந்தத்தில் நிறைந்து, நித்யானந்தத்தில் மலர்ந்து நித்யானந்தத்தில் கரைந்து நித்யானந்தமாகிட ஆசிர்வதிக்கின்றோம் நன்றி ஆனந்தமாக இருங்கள்!



Photos

Adi Shaivam Satsang Tamil

Nithya Satsang Tamil - 2019-09-26_IMG_1321_nithya-satsang-tamil.jpg Nithya Satsang Tamil - 2019-09-26_IMG_1323_nithya-satsang-tamil.jpg Nithya Satsang Tamil - 2019-09-26_IMG_1324_nithya-satsang-tamil.jpg Nithya Satsang Tamil - 2019-09-26_IMG_1325_nithya-satsang-tamil.jpg Nithya Satsang Tamil - 2019-09-26_IMG_1326_nithya-satsang-tamil.jpg Nithya Satsang Tamil - 2019-09-26_IMG_1329_nithya-satsang-tamil.jpg Nithya Satsang Tamil - 2019-09-26_IMG_1330_nithya-satsang-tamil.jpg Nithya Satsang Tamil - 2019-09-26_IMG_1336_nithya-satsang-tamil.jpg Nithya Satsang Tamil - 2019-09-26_IMG_1337_nithya-satsang-tamil.jpg Nithya Satsang Tamil - 2019-09-26_IMG_1353_nithya-satsang-tamil.jpg Nithya Satsang Tamil - 2019-09-26_IMG_1359_nithya-satsang-tamil.jpg Nithya Satsang Tamil - 2019-09-26_IMG_1361_nithya-satsang-tamil.jpg Nithya Satsang Tamil - 2019-09-26_IMG_1371_nithya-satsang-tamil.jpg Nithya Satsang Tamil - 2019-09-26_IMG_1372_nithya-satsang-tamil.jpg Nithya Satsang Tamil - 2019-09-26_IMG_1373_nithya-satsang-tamil.jpg Nithya Satsang Tamil - 2019-09-26_IMG_1374_nithya-satsang-tamil.jpg Nithya Satsang Tamil - 2019-09-26_IMG_1375_nithya-satsang-tamil.jpg Nithya Satsang Tamil - 2019-09-26_IMG_1385_nithya-satsang-tamil.jpg Nithya Satsang Tamil - 2019-09-26_IMG_1391_nithya-satsang-tamil.jpg Nithya Satsang Tamil - 2019-09-26_IMG_1392_nithya-satsang-tamil.jpg Nithya Satsang Tamil - 2019-09-26_IMG_1394_nithya-satsang-tamil.jpg Nithya Satsang Tamil - 2019-09-26_IMG_1398_nithya-satsang-tamil.jpg Nithya Satsang Tamil - 2019-09-26_IMG_1399_nithya-satsang-tamil.jpg Nithya Satsang Tamil - 2019-09-26_IMG_1401_nithya-satsang-tamil.jpg Nithya Satsang Tamil - 2019-09-26_IMG_1404_nithya-satsang-tamil.jpg Nithya Satsang Tamil - 2019-09-26_IMG_1410_nithya-satsang-tamil.jpg Nithya Satsang Tamil - 2019-09-26_IMG_1427_nithya-satsang-tamil.jpg Nithya Satsang Tamil - 2019-09-26_IMG_1433_nithya-satsang-tamil.jpg Nithya Satsang Tamil - 2019-09-26_IMG_1439_nithya-satsang-tamil.jpg