24 November 2025 SPH Live Darshan

From Nithyanandapedia
Revision as of 12:45, 7 December 2025 by Testkailasa (talk | contribs) (Created new satsang page)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to navigation Jump to search

On this day, THE SUPREME PONTIFF OF HINDUISM (SPH), BHAGAVAN SRI NITHYANANDA PARAMASHIVAM—the ultimate manifestation, Paramavatara of Paramashiva, the ultimate superconsciousness—gave a Live Darshan on the auspicious occasion of the Thirukarthikai Deepam Brahmotsavam, attended by devotees, disciples, citizens, and e-citizens of the United States of KAILASA (USK). THE SPH transitioned the discourse from introductory concepts to the higher, ultimate truths (Parama Satyas), revealing the profound Royal Secret (Raja Guhyam) embedded within the Arunachala Purana regarding the ten characteristics (Lakshanas) of creation, sustenance, and dissolution. THE SPH specifically elaborated on the concept of 'Timeless in Time,' declaring the fundamental truth that the future never arrives and the past never existed, thereby exposing how projecting life onto future materialistic goals is a societal brainwash based on an imaginary construct.

Title

கடந்த காலம் நிழல், எதிர்காலம் மாயை! | அருணாசலப் புராணம் | பாகம் 4

Link to Video

Transcript

ஓம்

நித்யானந்தேஶ்வர பரமஶிவ ஸமாரம்பாம் நித்யானந்தேஶ்வரி பரமஶக்தி மத்யமாம் அஸ்மதாச்சார்ய பர்யந்தாம் வந்தே குரு பரம்பராம்

உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன்.

உலகம் முழுவதிலும் இணையத்தின் மூலமாகவும், இதயத்தின் மூலமாகவும் இணைந்திருக்கும் அன்பர்கள், பக்தர்கள், சீடர்கள், கைலாஸவாசிகள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன்.

கைலாயத்தின் குடிமக்கள் மற்றும் உலகம் முழுவதிலும் இருந்து கைலாயத்தின் எல்லா ஆலயங்களிலும், பல்கலைக்கழகங்களிலும், குருகுலங்களிலும், கோசாலைகளிலும் இருந்து இந்த திருக்கார்த்திகை தீப ப்ரஹ்மோத்ஸவத்தை அனுபவித்துக்கொண்டு, அதில் கலந்துகொண்டு பரமஶிவப் பரம்பொருளின் பேரருள் பெற்றுக்கொண்டு, இந்த ஸத்ஸங்கத்தில் இணைந்திருக்கும் அன்பர்கள், பக்தர்கள், சீடர்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன்.

ஆழ்ந்து கேளுங்கள்... இன்று நாம் உயர்நிலை ஸத்யங்கள், பரம ஸத்யங்களுக்குள் நுழையத் துவங்குவோம்.

நான் முதல் மூன்று நாட்களும் அறிமுக நிலை ஸத்யங்களைத்தான் விளக்கினேன். அதனால் தான் Hollywood fantasy heroes> Avengers> Imaginary characters-ஐ எல்லாம் compare பண்ணி, நம்முடைய புராணத்தின் ஸத்யத்துவத்தை, ஸத்யத்தை, ஸத்ய நிரூபணத்தை செய்து கொண்டிருந்தேன். இப்பொழுது அதை எல்லாம் தாண்டி, பர ஸத்யங்கள்... உயர் ஸத்யங்களை உரைக்கின்றேன், வெளிப்படுத்துகின்றேன்.

ஆழ்ந்து கேளுங்கள், அமைதியோடு அமர்ந்து, தொடர்ந்து உங்களுக்குள் இருக்கும் இந்த பரபரப்புத் தன்மையில் இருந்து உங்களை விடுபடுத்திக்கொண்டு, ஆழ்ந்து கேளுங்கள். இந்த ஸத்யங்கள் தாமாகவே உங்களுக்குப் புரியும். இந்த ஸத்யங்களை 'ஶ்ரவண மனனம்' செய்வீர்களானால், இவைகள் உங்கள் வாழ்க்கையையே அடுத்த நிலைக்குக் கொண்டு சென்றுவிடும். அதனால் ஆழ்ந்து கேளுங்கள்.

கடந்த மூன்று ஸத்ஸங்கங்களிலே, புராண லக்ஷணத்தை விளக்கிக் கொண்டிருந்தேன்.

ஸர்கோ த்யாத: விஸர்கஸ் ச விருத்தி ரக்ஷான் தராணிச வம்ஸோ வம்ஸானு சரிதம் ஸம்ஸ்தா ஹேதுரபாஸ்ரய: தஸபி லக்ஷணைர் யுக்தம் புராணம் தத்விதோ விது:

ஸர்க்கம் - முதன்மைப் படைப்பு, விஸர்க்கம் - இரண்டாம் படைப்பு, விருத்தி - வாழ்வாதாரம், ரக்ஷா - பாதுகாப்பு, அந்தராணி எனப்படும் மன்வந்தரம் - வம்ஸம் வம்ஸாவளிகள், வம்ஸானு சரிதம் எனும் வம்ஸச் செயல்கள், ஸம்ஸ்தா எனும் அழிவு, ஹேது காரணம் எனும் கர்மா, அபாஸ்ரயம் எனும் பரமப் புகலிடம். - இந்தப் பத்தையும் விளக்கத் துவங்கிக்கொண்டிருந்தேன்.

இப்பொழுது இந்தப் பத்தையும், அருணாச்சல புராணம் ஈஶ்வரனுடைய கோணத்தில் இருந்து, ஈஶ்வரன் எவ்வாறு முதன்மைப் படைப்பாய் வெளிப்படுகின்றார்... இரண்டாம் நிலை படைப்பாய் வெளிப்படுகின்றார்... எப்படி இந்த அருணாச்சலத்திலே வெளிப்பட்டு, அதற்குப் பிறகு நடந்த எல்லாவற்றையும் நிகழ்காலம் வரை விளக்குகின்றது…

முழுமையாக இந்த அருணாச்சல புராணத்தைப் புரிந்துகொண்டு, நம் வாழ்க்கையை ஜீவன் முக்தர்களாக மாற்றிக்கொள்ள வேண்டுமானால், இந்த அருணாச்சல புராணத்திற்கு உள்ளே புதைந்து கிடக்கும் ஆழமான, ரகசியமான பரம ஸத்யங்கள்... ஆகாயப் பதிவுகளிலே ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் ராஜ வித்யை, ராஜ குஹ்யம்.

பரம ஸத்யங்கள்... பர வித்யையான, பரம ரகசியங்களான இந்த ஸத்யங்களை உங்களுக்கு சொல்லுகின்றேன். ஆழ்ந்து கேளுங்கள்.

சற்றே பொறுமையோடு இருந்து ஆழ்ந்து கேளுங்கள். மீண்டும் ஒருமுறை சொல்லுகின்றேன்... கேனேஷிதம் பததி ப்ரேஷிதம் மனக்கேன: ப்ராண: ப்ரதம: ப்ரைதி யுக்த: கேனேஷிதம் வாஜமிமாம் வதந்தி சக்ஷு: ஸ்ரோத்ரம் கவு தேவோ யுனக்தி

கண்கள் மூலம் பார்ப்பவன் யாரோ? செவிகள் மூலம் கேட்பவன் யாரோ? மனம் செயல்படச் செய்கின்ற உள்ளார்ந்த ஶக்தி யாரோ? ப்ராணன் சுழலச் செய்கின்ற ஆதாரம் யாரோ? நமக்குள் பேச்சை நிகழ்த்தி, வெளியிலும் பேசுவது, உள்ளுள் பேசுவது எனும் இரண்டு பேச்சையும் செய்கின்ற உள் இயக்கம் யாரோ? அவர் மீது உங்கள் கவனத்தைச் செலுத்தி அமர்ந்திருங்கள்."

வெளியிலிருக்கும் குருவாகிய நான், உங்கள் உள்ளிருக்கும் பரமகுருவாகிய உங்கள் ஆன்மாவிடம் தான் இப்பொழுது பேசிக்கொண்டிருக்கின்றேன். நீங்கள் அமைதியோடு அமர்ந்து, அந்த ஆன்மா உங்களுக்கு என்ன சொல்கின்றது என்பதை கேட்டீர்களானால்... நான் உங்கள் ஆன்மாவுக்கு சொல்வது ஸ்ரு'தி - Pure Science, பரம ஸத்யங்கள். உங்கள் ஆன்மா அதை உள்வாங்கி, உங்கள் வாழ்க்கைக்கு உரியதாக மாற்றிக்கொண்டு, உங்களுக்குப் புரிய வைப்பது ஸ்ம்ரு'தி'.

ஸ்ரு'தி, ஸ்ம்ரு'தி - இரண்டும், உங்களுக்குள் இருக்கும் குருவிடம் இருந்து பெறுவீர்கள்.

அதனால், கேனேஷிதம் பததி ப்ரேஷிதம் மனக்கேன: ப்ராண: ப்ரதம: ப்ரைதி யுக்த: கேனேஷிதம் வாஜமிமாம் வதந்தி சக்ஷு: ஸ்ரோத்ரம் கவு தேவோ யுனக்தி

கண்கள் மூலம் பார்ப்பவன் யாரோ? செவிகள் மூலம் கேட்பவன் யாரோ? மனம் செயல்பட அந்த உள்ளார்ந்த ஶக்தி யாரோ? மனதை செயல்படச் செய்கின்ற அந்த உள்ளார்ந்த ஶக்தி யாரோ? ப்ராணனை சுழலச் செய்கின்ற அந்த ஆதாரம் யாரோ? மனிதர்களைப் பேசச் செய்கின்ற அந்த உள் இயக்கம் யாரோ? அவர் மீது உங்கள் கவனத்தை செலுத்தி அமர்ந்திருங்கள்."

உங்களுக்குள் யார் பார்க்கிறாரோ, யார் கேட்கிறாரோ, யார் உங்களுக்குள் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறாரோ, அவர் மீது கவனத்தை செலுத்திக் கேளுங்கள். நான் சொல்வது உங்கள் வாழ்க்கையில் முழுமையாக வெளிப்படும்.

ஒன்றுமே வேண்டாம் ஐயா, இந்த பர.. பர.. பர.. வென்று எப்போதும் இருக்கின்ற, அந்த பர.. பர.. பர வென்று இருக்கின்ற அந்த மன அமைப்பை விட்டுவிட்டு, ஒரு நிமிடத்திற்கு ஒருமுறை scroll பண்ணுவது, அங்கும் இங்கும் பார்த்துக்கொண்டே இருப்பது என்ற இந்த பரபரப்பான மன அமைப்பை விட்டுவிட்டு அமைதியோடு அமர்ந்து, வெளியில் இருந்து அல்ல, வெளியில் இருந்து வந்த இந்த வார்த்தைகள் விழுந்து, உள்ளுக்குள் என்னவற்றை எல்லாம் விளக்குகின்றது என்று, உள்ளுக்குள்ளே என்னவற்றை எல்லாம் வெளிப்படுத்துகிறது என்று அமைதியோடு பாருங்கள்.

நிமிர்ந்து அமருங்கள்.

ஆழ்ந்து கேளுங்கள்… Formless in form Nameless in name Timeless in time Spaceless in space Causeless in cause

அவ்யக்தம் வ்யக்தமாய் வெளிப்படுவது தான் 'ஸர்க்க:' - முதன்மைப் படைப்பு.

இப்பொழுது ஒவ்வொன்றாகப் பார்ப்போம்: Timeless in time: காலம் கடந்தது, காலாதீதமானது காலத்திற்குள் வெளிப்படுவது.

கொஞ்சம் பொறுமையோடு உட்கார்ந்து, 'காலம் என்றால் என்ன?' என்று புரிந்துகொள்ளுங்கள். இந்த ஒரு ஸத்யத்தை உள்வாங்குங்கள்: 'எதிர்காலம் என்றுமே வராது. இறந்த காலம் இருந்ததே கிடையாது.'

நன்றாகக் கேளுங்கள்... இந்த ஸத்யம் புரிந்த பிறகு, உங்களுக்கு ஒரு மிகப்பெரிய 'ஆஹா.… ! இந்த அளவிற்கு எளிமையான ஸத்யம் புரியாமல் வாழ்வையே துக்கத்தில் தொலைத்தேனே' என்று யார் யாரெல்லாம் வெகுண்டு எழுகின்றீர்களோ, அதுதான் 'ஆன்மீக எழுச்சி!'

இந்த ஸத்யத்தின் பலம், இது புரிந்தவர்கள் பலபேர் நான் பார்த்திருக்கின்றேன், இதை tattoo பண்ணியே வைத்துக்கொள்கிறார்கள். ஏனென்றால், மறக்காமல் பார்த்துக்கொண்டே இருப்பதற்கு. படுக்கை அறையில் வேண்டுமானாலும் எழுதி வைத்துக்கொள்ளுங்கள் அல்லது tattoo பண்ணி வைத்துக்கொள்ளுங்கள். என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள்.

முதலில் புரிந்துகொள்ளுங்கள், எதிர்காலம் எக்காலத்தும் வருவதில்லை.

நாளைக்கு சந்தோஷமாக இருக்கலாம், 10 லக்ஷம் ரூபாய் வந்த உடனே அமைதியாக இருக்கலாம், 10 கோடி ரூபாய் சம்பாதித்துவிட்டால் அமைதியாகிவிடுவேன், 100 கோடி ரூபாய் லாட்டரியில் கிடைத்துவிட்டால், சந்தோஷமாகி வாழ்க்கையே பூர்ண முழுமை அடைந்துவிடுவேன், எப்படியாவது இந்த பையன், இந்த பெண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டா life-ல் settle ஆகிவிட்டு happy-யாக இருப்பேன், எப்படியாவது இந்த goal-ஐ achieve பண்ணிவிட்டேன் என்றால் அல்லது இந்த job கிடைத்துவிட்டால், இந்த மாதிரியான career-ல் settle ஆகிவிட்டால், இந்த career breakthrough அமைந்துவிட்டால், இந்த cinema-வில் நடிக்கின்ற chance கிடைத்துவிட்டால் வாழ்க்கையிலே settle ஆகிவிடுவேன் என்று உங்கள் வாழ்க்கையை எதிர்காலத்துக்கு விற்றுக்கொண்டிருக்கும் அனைவரும் தயவுசெய்து கேளுங்கள்.

எதிர்காலம் வருவதே இல்லை! காரணம் என்னவென்றால், அந்த எதிர்காலம் ஒருவேளை நீங்கள் அந்த குறிக்கோளையே அடைந்துவிட்டால்கூட, 'நிகழ்காலமாக' தான் வரும். அது நிகழ்காலமாக வரும்பொழுது, எதிர்காலத்தின் மீதே உங்கள் வாழ்க்கையை தள்ளிப்போடுகின்ற இந்த மன அமைப்பின் காரணமாக, 100 கோடி குறிக்கோள் 1000 கோடியாக மாறிவிட்டு, 1000 கோடி achieve பண்ணிவிடலாம். பிறகு happy-யாக இருப்போம் அப்பா, அதற்குப் பிறகு என் life-ஏ celebration-தான் பா, party-தான் பா என்று எண்ணுவீர்கள்.

ஆழ்ந்து கேளுங்கள், எதிர்காலத்தின் மீது உங்கள் வாழ்க்கையை தள்ளிப் போட்டுக் கொண்டிருக்கின்ற... எதிர்காலம் நிகழ்காலம் ஆனபோதும், எதிர்காலத்தின் மீது நீங்கள் சுமத்திய குறிக்கோள் நிகழ்காலம் ஆனபொழுதுகூட, மீண்டும் உங்கள் வாழ்க்கையை எதிர்காலத்தின் மீதே தள்ளிப் போட்டுக் கொண்டிருக்கிறீர்கள். இது எத்தனைப் பேருக்கு புரிகின்றது?

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். எதிர்காலம் என்பதே, இது நடந்தால் வாழ்வேன். அது நடந்தால் சுகமாய் இருப்பேன். அது நடந்தால் ஆனந்தமாக இருப்பேன்..." என்ற எதிர்காலத்தின் மீது உங்கள் வாழ்க்கையைத் தள்ளிப்போடும் மன அமைப்பு. அது நடந்தால் நான் ஆனந்தம் அடைந்துவிடுவேன், சுகம் அடைந்துவிடுவேன், அமைதி அடைந்துவிடுவேன், நிம்மதி அடைந்துவிடுவேன், சாந்தம் ஆகிவிடுவேன், என் வாழ்க்கை முழுமை ஆகிவிடும் என்ற இந்த மன அமைப்புதான், உங்களுக்கு சமுதாயம் செய்து வைத்த மிகப்பெரிய மூளைச் சலவை.

லோகாயதம் எனப்படும் materialistic philosophy> materialistic-ஐ life principle-ஆக வைத்திருக்கின்ற materialistic philosophy, உங்களுக்குச் செய்யும் மிகப்பெரிய மூளைச்சலவை - எதிர்காலத்தின் மீது உங்கள் வாழ்வை சுமத்துவது.

எதிர்காலம் வரப்போவதே இல்லை ஐயா. எதிர்காலம் ஒரு கற்பனை construct ஐயா. கற்பனையின் உருவாக்கம்.

அதே மாதிரிதான்... இது நடந்துருமோ, அது நடந்துருமோ, இது நடந்தால் என் வாழ்வு அழிந்துவிடுமோ, அது நடந்தால் என் வாழ்வு அழிந்துவிடுமோ...? எதிர்காலத்தில் எதிர்மறையாக நிகழ்ந்து விடுமோ?... என்று நீங்கள் நினைக்கின்ற எண்ணங்கள் எல்லாமே, வெறும் காலியான, காற்றடைத்த பலூன் ஐயா.

அதை அமைதியாக பார்த்தீர்களானாலே புரிந்துவிடும், எத்தனை முறை உங்கள் கற்பனையாலே ஊதி பெரிதாக்கப்பட்ட இந்த 'பய பலூன்கள்', நிகழ்காலமாக வரும்போது உடைந்து காணாமல் போய்... bogus-ஆன பயங்களால் உங்கள் மனதை அழித்துக்கொண்டு, உணர்வை அழித்துக் கொண்டு, வாழ்விழந்து நிற்கின்றீர்கள் என்பது எத்துனைப் பேருக்குப் புரிகின்றது?

எதிர்காலம் என்பதே imaginary construction ஐயா.

ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், இப்பொழுது... நாளை காலையில் வா, இரண்டுபேரும் ஒன்றாக டீ சாப்பிடலாம், 10-ம் தேதி வா, நாம் இரண்டு பேரும் உட்கார்ந்து break fast சாப்பிடலாம்" என்ற அந்த கடிகாரம் சம்பந்தப்பட்ட காலம் வேறு.

அந்த கடிகாரம் எதற்காக? நாம் எல்லோரும் சேர்ந்து, நாம் எல்லோரும் வாழ்வதற்கு smooth-ஆக நம்முடைய வாழ்க்கையின் போக்கு, நம் shared reality-ல், நாம் எல்லாரும் பகிர்ந்துகொண்டிருக்கின்ற இந்த reality-ல், வாழ்க்கையின் போக்கு கொஞ்சம் சுமூகமாக இருக்க வேண்டும் என்பதற்காக நாம உருவாக்கிக்கொண்டது கடிகாரம்.

கடிகாரம் கடவுள் ஆகாது. பஞ்சாங்கம் பரமஶிவம் ஆகாது.

பஞ்சாங்கத்தால் சொல்லப்படும் காலம், நேரம் - பரம்பொருள் ஆகாது. நம்முடைய உபயோகத்திற்காக உருவாக்கிக்கொள்ளப்பட்ட இந்த கடிகாரம் என்பது வேறு, நீங்கள் வாழுகின்ற எதிர்காலம், கடந்த காலம், நிகழ்காலம் வேறு.

இப்பொழுது நீங்கள் வாழுகின்ற, அதாவது எதை உங்களுடைய அனுபவமாக வாழுகின்றீர்களோ... அந்த எதிர்காலம், நிகழ்காலம், கடந்த காலத்தைப் புரிந்துகொள்ளுங்கள்.

உங்களுடைய எதிர்காலமே ஏக்கம், பயம், 'ஏமாறப் போகின்றோம்' என்று தெரிந்தும் வைத்திருக்கின்ற ஒரு விதமான hope... 'நம்பிக்கை' என்பது பெரிய வார்த்தை, அது கிடையாது. அந்த வார்த்தையை உபயோகப்படுத்த மாட்டேன். 'ஏமாறப்போகின்றோம்' என்று தெரிந்தும், குருட்டுத்தனமான, அதை ஆழ்ந்து பார்க்கவேண்டாம் என்று நம்மை நாமே கண்களைக் கட்டிக் கொண்டிருக்கின்ற குருட்டு நம்பிக்கை.

ஆழ்ந்து கேளுங்கள், அதுதான் blind spot hope. அதாவது நமக்கு நன்றாகத் தெரியும், பத்து கோடி ரூபாய் வந்த உடனே life-ல நான் happy-யாக இருப்பேன், life-ஐ celebrate பண்ணுவோம் பா, life-யே achieve பண்ணிட்டம்பா என்று இப்பொழுது நினைத்துக்கொண்டிருக்கின்ற நீங்கள், பத்து கோடி வந்த உடனே அதை நூறு கோடியாக மாற்றுவீர்கள். அப்பொழுதும் goal-ஐ மாற்றி, வாழ்க்கையை வாழ்வதை தள்ளிப் போடுவீர்கள் என்று உங்களுக்கேத் தெரியும். ஆனால், ஒரு விதமான... அதாவது அந்த உண்மையைத் திரையிட்டு மறைத்து வாழ்க்கையைப் பரபரப்போடு செலுத்துதல்.

எதிர்காலம் என்பது, நீங்கள் கற்பனையாய் கட்டமைத்துக்கொண்டு, இல்லாத, நிகழவேப்போகாத, நிஜத்தில் வரப்போவதே இல்லை என்கின்ற கற்பனையான பயங்களும், நிறைவேறினாலும் நிம்மதியை தரப்போவதில்லை என்கின்ற எதிர்பார்ப்புகளும் - இவைகளையெல்லாம் நிறைத்துத்தான் 'எதிர்காலம்' என்கின்ற கற்பனையைக் கட்டமைக்கின்றீர்கள்.

அடுத்து: கடந்த காலம். சற்றே பொறுமையாகக் கேளுங்கள், கடந்த காலம் என்கின்ற ஒன்று இல்லவே இல்லை!

உடனே, ஆஹா! சாமி, எனக்கு memory இருக்கே... இந்த மாதிரி நான் பிறந்தேன், இந்த மாதிரி வளர்ந்தேன், இங்கு படித்தேன், இங்கு இருந்தேன், இவர்களையெல்லாம் பார்த்தேன், இதெல்லாம் go through பண்ணேன்.. எனக்கு memory இருக்கே!" என்று சொல்லாதீர்கள்.

தயவுசெய்து, அப்படியே உங்களுடைய கடந்த காலம் என்று நீங்கள் எதைப் பார்க்கின்றீர்களோ, அதை கொஞ்சம் பாருங்கள்.

உங்களுக்கு விருப்பமான நிகழ்வுகளை எடுத்து, அதுவும் சில நிகழ்வுகளை மட்டும் எடுத்து, background music-ஐ மாற்றி, உங்கள் own... உங்களுக்கு விருப்பமான music-ஐ போட்டு, அதாவது கடந்த காலத்திலே ஒரு கோடி நிகழ்வுகள் நிகழ்ந்திருந்தால், அதில் வெறும் பத்து, இருபதை மட்டும் எடுத்து, 'உங்கள் கடந்த கால வாழ்க்கை', 'உங்கள் கடந்த கால நீங்கள்' என்று ஒரு பொய் கட்டமைப்பை, பொய்யுருவாக்கியக் கட்டமைப்பை வைத்துக் கட்டிக்கொண்டுதான் நீங்கள் அழுது கொண்டிருக்கிறீர்கள்.

உங்கள் கடந்த காலமே, past-ஏ ஐயா... past என்று ஒன்று கிடையாது. Past is dead - அது இறந்து விட்டது.

ப்ரபஞ்சத்திலே, கடந்த காலம் இல்லை. நிகழ்காலம் மட்டும் தான் இருக்கின்றது. கடந்த காலத்தைப் பற்றி நீங்கள் வைத்திருக்கின்ற நினைவுகள், இந்த நிகழ்காலத்திலே நீங்கள் வைத்திருக்கின்ற 'நினைவுகள்'தான் இருக்கின்றதே தவிர, 'கடந்த காலம்' இல்லை! இந்த இரண்டிற்கும் முதலில் வித்தியாசம் புரிந்துகொள்ளுங்கள்.

கடந்த காலத்தைப் பற்றி, நீங்கள் நிகழ்காலத்தில் வைத்திருக்கின்ற நினைவுகள்தான் இருக்கின்றதே தவிர, கடந்த காலம் இல்லை. கடந்த காலம் வேறு, கடந்த காலத்தைப் பற்றி நீங்கள் வைத்திருக்கும் நினைவுகள் வேறு.

இந்த நினைவுகளுக்கு வருவோம். இந்த நினைவுகள் உண்மையிலேயே கடந்த காலத்தைப் பிரதிபலிக்கின்றதா? இல்லை! முழுக்க முழுக்க இல்லை. ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள்!

திருவண்ணாமலையிலே அண்ணாமலையாருக்கு மஹா ஆரத்தி நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. எல்லோரும் அருணாச்சல ஸ்மரணம் செய்து, அண்ணாமலையானை நினைந்து, 'அருணாச்சலம் அருணாச்சலம் அருணாச்சலம்' என்று நினைந்து... பரமஶிவப் பரம்பொருளின் அருணாச்சல கருணாமூர்த்தியின் பேரருள் பெற்று, இந்த பரம ஸத்யங்களை உள்வாங்கி அனுபூதியாய் அடையுங்கள். ஆழ்ந்து கேளுங்கள்... டில்லிக்கு ராஜவானாலும் அப்பனுக்குப் பையன். கைலாஸத்திற்கு அரசனானாலும், அண்ணாமலையானுக்கு என்றென்றும் அடிமை.

வழிவழியாய் மாதொருபாகனுக்கு அடிமை செய்ய வந்த வாழ்வே! அவன் தந்த வாழ்வே!...

ஆழ்ந்து கேளுங்கள்... நினைக்க நெஞ்செல்லாம் உருகி, கண்ணெல்லாம் பணிக்க, தன்னை மறந்து கரைய வைக்கும் தனிப் பரம்பொருளே... 'நான்' இலாது 'தானாய்' விளங்கும் தன்மய சொரூபமே! அண்ணாமலையானே!

நேரலையில் உங்களுக்கும் காட்டலாம் என்று நினைத்தோம். ஆனால் Copyright problem இருப்பதனால், நேரலையில் உங்களுக்குக் காட்ட முடியவில்லை. என் கண்களில் பார்த்துக் கொள்ளுங்கள். என் கண்களில் கண்டுகொள்ளுங்கள். அருணாச்சல கருணாமூர்த்தியின் பேரருளை, இப்பொழுது நான் அவரைக் கண்டுகொண்டிருக்கின்றேன். என் கண்களில் அவரைக் கண்டுகொள்ளுங்கள். அதற்கு யாரும் copyright strike அடிக்க முடியாது.

ஆழ்ந்து கேளுங்கள், கடந்த காலம் இறந்துவிட்டது. அதற்கு உங்கள் மீது எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தும் ஶக்தியோ, எதுவுமே கிடையாது. அது இல்லாமல் போய்விட்டது! இறந்துவிட்டது!

கடந்த காலத்தைப் பற்றி, நீங்கள் இன்னும் நிகழ்காலத்திலே தூக்கி சுமந்து கொண்டிருக்கின்ற நினைவுகள்தான், உங்கள் வாழ்க்கையை சின்னாபின்னம் ஆக்கிக் கொண்டிருக்கின்றது. இதைப் புரிந்துகொள்ளுங்கள்.

அடுத்து அந்த நினைவுகளைப் பற்றி பார்த்தோமானால், அந்த நினைவுகள் உண்மையிலேயே கடந்த காலத்தில் நிகழ்ந்தவைகளையா பிரதிபலிக்கின்றது? சத்தியமாக இல்லை. சத்தியமாக இல்லை!

ஒரு அழகான ஒரு மொழி, ஒற்றை வாக்கியம்: நூறு நன்மை செய்து, ஒரு தீங்கு செய்ய - 'தீங்கை' மட்டும் நினைப்பவன் மனிதன். நூறு தவறு செய்தாலும், ஒரு நன்மை செய்தால் - 'நன்மையை' மட்டும் பார்ப்பவன் பரம். தெய்வம்! இது ஒரு one liner - ஒற்றை வரி வாக்கியம்.

கொஞ்சம் ஆழ்ந்து உங்களுடைய கடந்த காலத்தை நீங்களே பாருங்கள் ஐயா. உண்மையில் நிகழ்ந்தவைக்கும், நீங்கள் 'உங்கள் கடந்த காலம்' என்று கடந்த காலத்திலுடைய நிகழ்வுகளைச் சார்ந்து, உங்களைப் பற்றி நீங்கள் வைத்திருக்கும் இந்தக் கருத்து, கடந்த காலத்தின் நிஜத்தைக் காட்டவில்லை.

உங்களுடைய past-ஐ பற்றிய memories, அந்த memories-ஆல் நீங்கள் construct பண்ணி வைத்திருக்கின்ற உங்களுடைய identity, உண்மையிலேயே past-ல் நடந்த past life-ஐ, exact facts -ஐ mirror பண்ணவில்லை ஐயா.

உங்கள் கடந்த காலம்... நிகழ்ந்ததையும், நீங்கள் வைத்திருக்கின்ற memories-யும் compare பண்ணி பார்த்தீர்களானாலே தெரியும் - 'இதுதான் மிகப்பெரிய பொய் செய்தி'. நீங்கள் தலையிலே சுமந்து கொண்டிருக்கும் மிகப்பெரிய opinionated news!

Zero fact - 100% opinion. உங்கள் வாழ்க்கையின்மீது நீங்களே ஒரு Yellow Journalism நடத்திக்கொண்டிருக்கின்றீர்கள் என்று புரியும் ஐயா. உங்களுக்கு நீங்களே மிகப்பெரிய கொடுமை இழைத்துக்கொள்ளுகின்றீர்கள்.

இன்று ஒரு... ஒரு மணி நேரம் மட்டும் செலவு செய்து, கடந்த கால வாழ்க்கையிலே உங்களுக்கு நினைவிலே இருக்கின்ற நிகழ்வை எல்லாம் எழுதுங்கள். உண்மையிலேயே ஶ்ரத்தையோடு செய்யுங்கள். செய்தீர்களானால் உங்களுக்குப் புரிந்துவிடும், ஆஹா! எவ்வளவு நன்மைகள், எவ்வளவு வெற்றிகள், எவ்வளவு பெருமைகள், எவ்வளவு நடந்துருக்கு! ஆனால் கடந்தது... கடந்த கால நினைவுகள் என்று எனக்குள் இருப்பதைப் பார்ததால் - வெறும் வலி, வேதனை, துக்கத்தையே மீண்டும் மீண்டும் உருவாக்குகின்ற நினைவுகள்தான் கடந்ததைப் பற்றிய நினைவுகளாக இருக்கின்றன'. 'கடந்த காலம்' என்கின்ற ஒரு போலிக் கட்டமைப்பை எனக்குள் உருவாக்கி வைத்து, தொடர்ந்து என்னை நானே விமர்சனம் செய்துகொண்டே இருக்கிறேன் ' என்பது உங்களுக்குப் புரிந்துவிடும்.

தொடர்ந்து உங்களை நீங்களே சுய சந்தேகம், சுய வெறுப்பு, சுய மறுப்பு சார்ந்த வார்த்தைகளை எரிந்து கொண்டே இருந்து… இதில் ஒரு கொடுமை என்னவென்றால், உங்களை நீங்களே convince வேறு செய்துகொள்கின்றீர்கள், நான் என்ன criticize பண்ணிட்டே இருந்தேன் என்றால்தான், என்னை நான் இதற்குமேலாவது develop பண்ணிப்பேன். என்னை control-ல் வைத்திருந்தேன் என்றால்தான் இதற்குமேல் நான் என்னை develop பண்ணிப்பேன்" என்று.

ஐயோ! இதை விட மிகப்பெரிய தவறான, பொய்யான கருத்தினால் மூளைச் சலவை செய்யப்படுவது வேறொன்று உண்டோ?

உங்களை நீங்களே தொடர்ந்து self doubt-ல், self hatred-ல், self denial-ல்... சுய சந்தேகம், சுய வெறுப்பு, சுய மறுப்பு சார்ந்த வார்த்தைகளைப் போட்டு உங்களை விமர்சனம் செய்துகொண்டே இருந்தீர்களானால், self negative words-ஐ உபயோகப்படுத்திக் கொண்டே இருந்தீர்களானால், உங்களுக்குள் என்ன வார்த்தைகளைத் திரும்பத் திரும்ப சொல்லிக் கொள்ளுகின்றீர்களோ, அந்த வார்த்தைகள் நேரடியாக ப்ரபஞ்சத்திற்கு நீங்கள் இடும் கட்டளை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

அந்த வார்த்தைகளை யாரும் கேட்கவில்லை என்று நினைக்காதீர்கள். ப்ரபஞ்சம் கேட்டுக் கொண்டிருக்கின்றது. அதனால் அப்பொழுது ப்ரபஞ்சம் என்ன பண்ணும்? அதே மாதிரிதான் உங்கள் வாழ்க்கையை உங்களுக்கு mirror செய்து காட்டும்.

SDHD-என்று சொல்லுவேன். ADHD மாதிரியே SDHD- Self Doubt> self Denial> self Hatred. இந்த SDHD சார்ந்த வார்த்தைகளையே, எண்ணங்களையே உங்களை நோக்கி நீங்கள் பிரயோகப்படுத்திக் கொண்டே இருப்பீர்களானால், ப்ரபஞ்சம் அதைக் கேட்டு, அதைப்போலவே உங்கள் வாழ்க்கையையும் கட்டமைக்கின்றது. என்ன ஒரு கொடுமையான vicious circle இது! சூழ்ச்சி வலை.

இதில் ஒரு மிகப்பெரிய கெட்ட செய்தி என்னவென்றால், இதை அமைத்துக்கொண்டதே நீங்கள்தான் ஐயா. இதில் ஒரு மிகப்பெரிய நல்ல செய்தி என்னவென்றால், இந்த வலையில் இருந்து வெளியில் வரவும் உங்களாலேயே முடியும். வேறு யாரும் உதவ வேண்டும் என்று தேவையில்லை.

மிகப்பெரிய கெட்ட செய்தி: இந்த மாய வலையை உருவாக்கி, அதற்குள் உங்களைக் கட்டி சீரழித்துக் கொண்டிருப்பது நீங்கள்தான். வேறு யாரும் செய்வில்லை. நீங்களேதான் செய்துகொள்கின்றீர்கள். ஒரு நல்ல செய்தி என்னவென்றால், உங்களால் உடனடியாக இதிலிருந்து வெளிவர முடியும்.

ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், கடந்த காலம் இறந்துவிட்டது.

இந்த ஸத்யத்தைப் புரிந்துகொள்ளுங்கள். உங்களை ஏமாற்றமாட்டேன், பொய் சொல்லமாட்டேன், உங்களுக்கு ஸத்யத்தைச் சொல்கின்றேன்... புரிந்துகொள்ளுங்கள். 'கர்மா' என்று ஒன்று கிடையாது. கடந்த காலம் இறந்துவிட்டது. அது உங்களைப் பாதிக்கவே முடியாது.

கடவுள் CCTV எல்லாம் வைத்துக்கொண்டு, உட்கார்ந்துகொண்டு, மேலே இருந்து பார்த்துக்கொண்டெல்லாம் இல்லை ஐயா.

கடந்ததைப் பற்றி நீங்கள் வைத்திருக்கும்... நிகழ்காலத்திலே நீங்கள் சுமந்து கொண்டிருக்கும் நினைவுகள்தான் நிஜமான கர்மம். அதுதான் நிஜமான பிரச்சினை. இந்த நினைவுகளை சீரமைத்துவிட்டீர்களானால், இந்த கடந்த காலத்தின் நினைவுகளை, நிகழ்காலத்தில் நீங்கள் சுமந்து கொண்டிருக்கும் இந்த நினைவுகளை சீரமைத்து விட்டீர்களானால், கடந்த காலத்திலிருந்து உங்களுக்கு விடுதலை இந்த வினாடி!

நிகழ்காலத்திலே நீங்கள் தூக்கிச் சுமந்துகொண்டிருக்கும் கடந்த காலத்தின் மலம், நரல் மட்டும்தான் பிரச்சினையே தவிர - கடந்தது 'மறைந்தது', 'இறந்தது'.

இறந்த காலம் - இறந்துவிட்ட காலம்! அதைப் புரிந்துகொள்ளுங்கள் ஐயா. இறந்த காலம் - இறந்துவிட்ட காலம். இறந்த காலத்திலே நிகழ்ந்த நிகழ்வுகளுக்காக, நீங்கள் ஒருபோதும் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவதில்லை.

ஐயா, நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், இது பரம ரகசியம். ஆனால், 'தண்டனை' என்கின்ற பயம், பயத்தால் உங்களை மூளைச்சலவை செய்து, அதனால் உங்களைத் தங்களுக்கு ஏற்றார்போல, 'தங்களுடைய அடிமைகளாக மாற்றிக்கொள்ள வேண்டும்' என்று நினைக்கின்ற கும்பல் உருவாக்கி வைத்த சதி வலையில் சிக்கி, நீங்கள் சின்னாபின்னம் ஆகிக் கொண்டிருக்கிறீர்கள்.

ஆனாலும், சிக்கியதற்கு நீங்கள் பொறுப்பு. சிக்க வைத்ததற்கு அவர்கள் பொறுப்பு.

ஒன்றுமில்லை ஐயா, கட்டணமில்லாத பொதுக்கழிப்பிடத்தில், எல்லாரும் கழிந்து வைத்துவிட்டுப் போனதை, நீங்கள் ஏன் ஐயா மொத்தமாக தலையில் சுமந்துகொண்டிருக்கின்றீர்கள்? தலையில் சுமப்பது உங்கள் தவறு தானே?

உங்கள் கடந்த காலம் என்பது ஒன்றுமே இல்லை ஐயா. உங்களைச் சுற்றியிருந்த சமூகம், கட்டணமில்லாப் பொதுக்கழிப்பிடத்தில் கழிந்தது மாதிரி, கழிந்து வைத்துவிட்டு போனது ஐயா. கொஞ்சம் strong-ஆன, அருவருப்பான வார்த்தைங்களை உபயோகம் பண்ணுகிறேன். ஆனால் அதைச் சொன்னால்தான் புரியும் என்பதனால் அதைச் சொல்கின்றேன்.

கட்டணக் கழிப்பிடத்தை யோசிக்காதீர்கள், அது ரொம்ப சுத்தமாக இருக்கும். இலவசக் கழிப்பிடத்தைச் சொல்கிறேன். ஊர் பொதுக் கழிப்பிடத்தில், அவன் அவன் மொத்தமாக கழிந்து வைத்துவிட்டுப் போனதை, நீங்கள் ஏன் ஐயா தலையில் சுமந்துகொண்டிருக்கின்றீர்கள்?

உங்கள் கடந்த காலமே இலவச ஊர் பொதுக்கழிப்பிடம் ஐயா. உங்களைச் சுற்றியிருந்த சமுதாயம், மொத்தமாக கழிந்து வைத்துவிட்டு போன நரல். அவர்கள் கழிந்தது, அவர்கள் தவறு. ஆனால் அதை நிகழ்காலத்திலே உங்கள் தலையில் சுமந்து கொண்டிருப்பது - உங்கள் தவறு.

நிகழ்காலத்திலே நீங்கள் சுமந்து கொண்டிருக்கும்... நிகழ்காலத்தில் நீங்கள் சுமந்து கொண்டிருக்கின்ற கடந்தகால நினைவுகள்கூட, உண்மையிலேயே கடந்த காலத்தை நிஜத்தில் பிரதிபலிப்பதில்லை என்பதைப் புரிந்துகொண்டு, இது ஒரு விதமான பைத்தியக்காரத்தனத்தைத்தான், நீங்கள் தலையில் தூக்கிக்கொண்டு திரிகின்றீர்கள் என்பதை மட்டும் புரிந்துகொள்ளுங்கள் ஐயா.

Past is your creative reconstruction. Nothing but creative reconstruction. Future is nothing but creative construction.

Past is creative reconstruction. Future is creative construction. - இரண்டுமே இல்லை ஐயா. இருப்பது, 'இப்பொழுது' இருக்கின்ற நித்ய நிகழ்காலம்.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், 'நிகழ்காலம் இருக்கிறது' என்று நான் சொல்லமாட்டேன். காரணம் என்னவென்றால், நீங்கள் என்ன புரிந்துகொள்கின்றீர்கள் என்றால், 'எதிர்காலம் நிகழ்காலமாக வந்து, கடந்த காலத்துள் மறைகிறது' என்று நினைக்கின்றீர்கள்.

நீங்கள் ஆழ்ந்து ஆழ்ந்து, அறிந்து அறிந்து, அறிந்து அறிந்து அறிந்து தேடிப் பாருங்கள், நிகழ்காலமே இருக்காது. காரணம் என்னவென்றால், 'இது' என்று identify பண்ணுவதற்குள், அந்த நிகழ்காலம் கடந்த காலமாக மாறிவிட்டது.

Atom என்ற வார்த்தையைப் புரிந்துகொள்ள வேண்டும். அது Greek Philosophy-ல் 'அறிந்து அறிந்து அறிந்து... அதற்கும் மேல் கத்தியால் அறிய முடியாதது'. அதை Atomos என்று சொல்வார்கள். ஏனென்றால், Greek-ல் வந்து ஒரு பொருளைப் பற்றிய உண்மையை, ஆழத்தைத் தெரிந்து கொள்வதற்கு அவர்கள் உபயோகிப்பது, cut பண்ணிப் பார்ப்பது மட்டும்தான்.

அதனால்தான் சிறு துகள்... இதற்குமேல் இதை இன்னமும் சிதைக்க முடியாது என்கிற, cut பண்ண முடியாது என்கின்ற அந்த சிறு துகளை 'atom' என்று சொல்கின்றார்கள்.

ஏனென்றால், அவர்கள் வந்து கத்தி போட்டு அறுத்து பார்த்து, அதனால் உண்மையைத் தெரிந்து கொள்பவர்கள். உதாரணத்திற்கு ஒரு apple எடுத்து cut பண்ணி பார்ப்பது. அதை இன்னும் சிறிதாக, இன்னும் சிறிதாக, இன்னும் சிறிதாக, இன்னும் சிறிதாக, இன்னும் சிறிதாக என்று, கத்தி முனையை விட சிறிதாகிவிட்ட, அதற்குமேல் அதை சிறிதாக்க முடியாத பொருளை atom என்று சொல்லுவார்கள்.

நம் ஸம்ஸ்க்ரு'தத்தில் அதே atom-க்கு ஒரு வார்த்தை இருகிறது, அதுதான் 'அணு'! நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், இந்த வார்த்தைக்கு என்ன தெரியுமா அர்த்தம்? மனதால் நினைந்து, நினைந்து, நினைந்து, நினைந்து, நினைந்து, அதற்குமேல் தாண்டிச் செல்ல முடியாதது என்று அர்த்தம்.

ஏனென்றால், நம்மைப் பொறுத்தவரை, நாம் அறிவை அடைகின்ற வழியாக மனதையும், புத்தியையும் உபயோகித்தோம்.

ஆனால் Egyptian culture-ல், Greek culture-ல் எல்லாம், வெளியில் இருக்கும் முறைகளை உபயோகப்படுத்தி அறிவைத் தேடினார்கள். அதனால்தான் அது external materialistic culture. நம்முடையது internal subjective enlightenment science.

நம்முடையது முழு அறிவாக மாறியதற்குக் காரணம், முற்றறிவாய், பேரறிவாய் மலர்ந்ததற்கு காரணம், நம்முடைய அலகுகள், அளவிகள்... units -ஏ different ஐயா.

அதனால்தான் கைலாஸவாசிகள், கைலாயத்தின் குடிமக்கள், என்னுடைய பக்தர்கள் அனைவரும் தயவுசெய்து கொஞ்சம் ஸம்ஸ்க்ரு'தம் படித்துவிடுங்கள் ஐயா. கொஞ்சம் ஸம்ஸ்க்ரு'தம் படியுங்கள்.

ஏய்! நம்... நம்முடைய பாரம்பரியமான தமிழன்கள், நாம் அடிப்படையாக ஸம்ஸ்க்ரு'தத்தையும்-தமிழையும் ஒன்றாகச் சேர்த்துத்தான் வாழ்ந்தோம்! தமிழ், ஸம்ஸ்க்ரு'தம் - இரண்டுமே நம்முடைய மொழிகள் ஐயா.

மொழியை உபயோகித்து, நம் மெய்யியலை சிதைக்க நினைத்தவர்கள்தான், இந்த மொழிப்பிரிவினை பேசி, சதி செய்கின்றார்கள். இரண்டு மொழிகளும் நம்முடையது ஐயா! இரண்டு purpose-க்காக manifest பண்ணப்பட்ட, develop பண்ணப்பட்ட இரண்டு dialects!

Horizontal time zone--ல் enjoy பண்ணுவதற்குத் தமிழையும், vertical time zones-ஐ புரிந்துகொள்வதற்கு ஸம்ஸ்க்ரு'தத்தையும் நாம்தான் develop பண்ணோம் ஐயா. இரண்டும் நம்முடையது ஐயா.

கொஞ்சம் உலக வரலாற்றைப் படியுங்கள், 'ஸம்ஸ்க்ரு'தத்தை அழிப்பதற்கான முயற்சிகளை யார் செய்கிறார்கள்?, ஏன் செய்கிறார்கள்?' என்று எல்லாம் உங்களுக்குப் புரியும்.

என்னுடைய பக்தர்கள், என்னுடைய சீடர்கள் எல்லோருக்கும் நான் வைக்கின்ற வேண்டுகோள். கைலாஸவாசிகளுக்கு குருவாக். கைலாயத்தின் குடிமக்களுக்கு இது கட்டளை.

கொஞ்சம் அடிப்படை ஸம்ஸ்க்ரு'தம் படித்துவிட வேண்டும், தெரிந்துகொள்ள வேண்டும். ஸம்ஸ்க்ரு'த பாரதி என்று தமிழ்நாடு முழுக்க ஓர் அருமையான இயக்கம் வகுப்புகள் எடுக்கின்றார்கள். 10 நாட்களில் உங்களுக்கு பேசுகின்ற அடிப்படை ஸம்ஸ்க்ரு'தம் கற்றுக்கொடுத்துவிடுவார்கள் ஐயா. பத்தே நாளில் நன்றாகக் கற்றுக்கொள்ளலாம். கற்றுக்கொண்டீர்களானால், கலாச்சாரத்தின் அளவி, அளவு, அடிப்படை புரிந்துவிடும் ஐயா.

ஒன்றும் இல்லை.. Atom என்ற வார்த்தைக்கும் 'அணு' என்ற வார்த்தைக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கின்றது. நாம் usually English-ல என்ன பண்ணுவோம், அணுவை atom- என்று மொழிபெயர்த்துவிடுகின்றோம். அந்த வார்த்தையின் வேர்சொல், அந்த வார்த்தை எவ்வாறு உருவானது என்று பார்த்தீர்களானால் புரியும்... அவர்கள் வெளியில் அறிவைத் தேடியவர்கள். இவர்கள் உள்ளுக்குள் மொத்த ப்ரபஞ்சத்திற்குள்ளும் அறிவைத் தேடியவர்கள். அவர்கள் வெறும் பூ மண்டலத்திலே, கண்ணால் காணக்கூடிய புலன்களாலே தெரியக்கூடிய பொருட்களிலே அறிவைத் தேடியவர்கள். இவர்கள் ஆன்மாவினால் உணர்வினால் உணரக்கூடிய அனைத்தையும், அனைத்திற்குள்ளும் புகுந்து அறிவைத் தேடியவர்.

Atomos என்கின்ற அந்த Greek-ல் அந்த வார்த்தைக்கு அர்த்தமே என்னவென்றால், இதற்குமேல் cut பண்ண முடியாது, uncuttable> indivisible. Uncuttable- என்ற வார்த்தைத்தான் correct. That which cannot be split.

ஆனால் ஸம்ஸ்க்ரு'தத்தில், அணு என்ற அந்த வார்த்தைக்கு, அர்த்தத்தை எடுத்துப் பாருங்கள், 'எங்கு புத்தி, மனத்தின் ஆராய்ச்சி முடிவு பெறுகின்றதோ அங்கு, அது...'

திருக்குறளை தமிழில் அனுபவிக்க வேண்டும் ஐயா, ஆங்கிலத்தில் படித்தால், அது வாழ்க்கைக்கான வெறும் மருந்து. தமிழில் அனுபவித்தால்தான், அது வாழ்க்கைக்கான பெரும் விருந்து!

அதே மாதிரி இந்த பரம ஸத்யங்களை, அந்த technical terms-ஐ, அப்படியே மூல மொழியிலேயே புரிந்துகொள்ள வேண்டும்.

நல்லது, ஆழ்ந்து கேளுங்கள். இந்த காலத்தைப் பற்றிய ஸத்யத்தைப் புரிந்துகொள்ளுங்கள்.

கடந்தது இறந்து விட்டது, இருப்பு இல்லாதது. உங்களை சுற்றி இருந்த சமூகம், மொத்தமாக உங்கள் மீது செய்த, அவர்களுடைய உணர்ச்சியினுடைய masturbation. அவர்களுடைய உணர்ச்சி, உணர்வு இது எல்லாவற்றையும் உங்கள் மீது masturbate பண்ணி விட்டுவிட்டிருக்கிறார்கள், கழிந்திருக்கின்றார்கள். உங்களை dustbin மாதிரி உபயோகப்படுத்தியிருக்கிறார்கள். கழிப்பிடம் மாதிரி உபயோகப்படுத்தியிருக்கிறார்கள்.

ஆனால், அதை தலையில் தூக்கிக்கொண்டு சுமப்பது உங்கள் தவறு. கடந்தது இறந்தது. அதனால், அதை நிகழ்காலத்தில் சுமந்து கொண்டு செல்வதை விடுங்கள்.

அதை நிகழ்காலத்தில் சுமப்பதற்காக, உங்களுக்கு நீங்களே ஏற்படுத்திக்கொள்ளுகின்ற எல்லா நியாயப்படுத்திக்கொள்ளும் கருத்துக்களும் பொய், தவறு.

கடந்ததற்கு punishment-ஏ கிடையாது ஐயா, சும்மா விடுங்கள் ஐயா.

உண்மையில், காலத்தைப் பற்றி புரிந்துகொண்டவன், மிகப்பெரிய ஆனந்தத்தையும் அமைதியையும் அடைகின்றான், முழுமை அடைகின்றான்.

'நிகழ்காலம் எது?' என்று தேடிப் பார்த்தீர்களானால், தேடி தேடி தேடி தேடி தேடி பார்த்தீர்களானால், நீங்கள் இது நிகழ்காலம்" என்று பிடிப்பதற்குள், அது கடந்த காலமாகிவிட்டது! மனதாலே 'இது இது இது நிகழ்காலம்' என்பதற்குள் அது கடந்த காலமாகிவிட்டது!

அதனால், ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள்: அப்பொழுது நீங்கள் கேட்கலாம், என்ன சாமி சொல்றீங்க? எதிர்காலமும் இல்லை, கடந்த காலமும் இல்லை, நிகழ்காலமும் இல்லை. அப்ப எதுதான் இருக்கு?' என்று.

புரிந்துகொள்ளுங்கள்: 'நித்ய நிகழ்வு - Eternal Now!' இப்பொழுது நிகழ்ந்து கொண்டிருக்கின்ற… உங்களுடைய கடந்தகால நினைவுகளும், எதிர்காலத்தைப் பற்றிய எண்ணங்களும் - இரண்டையும் நீங்கள் இப்பொழுது அனுபவித்துக் கொண்டிருக்கின்ற இந்த 'நித்ய நிகழ்வு' தான் நிரந்தரமாக, நித்யமாக இருக்கின்ற ஒன்று.

கடந்த காலத்தின் நினைவுகளாலே இந்த நித்ய நிகழ்வை ஆக்கிரமித்து, நீங்கள் கடந்த காலத்தில் இருப்பதாகக் கற்பனை செய்து கொள்வதும், எதிர்காலத்தின் ஏக்கங்கள், எண்ணங்களைக் கொண்டுவந்து இந்த நித்ய நிகழ்வை ஆக்கிரமித்து, நீங்கள் எதிர்காலத்தில் இருப்பதைப்போல கற்பனை செய்வதும்… - இந்த இரண்டிற்கும் நடுவிலே, 'எங்கடா நிகழ்காலம்?' என்று தேடி... அது 'இல்லவே இல்லை' என்று புரிந்துகொள்வதும்... இந்த மூன்றையும் நீங்கள் செய்யும்பொழுதும் இருக்கின்ற ஒன்றே ஒன்று - 'நித்ய நிகழ்வு!' உங்களுடைய இந்த focal point.

Comedy movie ஓட்டினாலும், romance movie ஓட்டினாலும், horror movie ஓட்டினாலும், terror movie ஓட்டினாலும் அல்லது உங்களை ஓட வைக்கிற, ஐயோ பணத்த கொடுத்து waste பண்ணிட்டோமே டா" என்று உங்களை அலண்டடித்து ஓட வைக்கின்ற terrific movie ஓட்டினாலும் - screen ஒன்றுதான். அதே screen-ல்தான் ஓட்டுகின்றார்கள்.

அதேமாதிரி, கடந்த காலத்தைக் கொண்டுவந்து நீங்கள், 'கதறு கதறு' என்று கதறும்பொழுதும், எதிர்காலத்தை நினைந்து நீங்கள் ஏங்கும்பொழுதும் அல்லது எதிர்காலத்தைப்பற்றி பயந்து நடுநடுங்கும்பொழுதும், நிகழ்காலத்தைத் தேடி எங்கடா நிகழ்காலம்?" என்று… ஏனென்றால், இந்த நிறைய இந்த த்யானம் பண்ணுகிறேன் என்கின்ற பேர்வழிகள், Power of Now - நிகழ்காலத்தில் இருங்கள்" என்றெல்லாம் எதையாவது அரைகுறையாக….

இன்னொரு முக்கியமான விஷயத்தை இப்பொழுது சொல்லிவிடுகின்றேன் கேட்டுக்கொள்ளுங்கள்: இந்த பரம ஸத்யங்கள், ஜ்ஞாநங்களை திருடிக்கொண்டுபோய், digest பண்ணி, இந்த வார்த்தைளில் மட்டும் விளையாடிக்கொண்டிருக்கின்ற இந்த Max Mullerian மரபிலே கற்ற குருமார்களிடம் போனீர்களானால்... மகனுங்களா... காக்கா பிரியாணிதான்!

ஏனென்றால், இந்த மூல ஸ்லோகங்கள் Max Mullerian translation-ல் இங்கிலீசுல.. நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், இங்கிலீசுல, Socrates -ஐ படித்துக்கொள். ஆனால் இங்கிலீசுல ஸனாதன ஹிந்து தர்மத்தினுடைய enlightenment science-ஆன உபநிஷத், ப்ரஹ்ம ஸுத்ரம், பகவத் கீதை மற்றும் ஸனாதன ஹிந்து தர்மத்தினுடைய அறிவியல்... ஸம்ஸ்க்ரு'தம் தெரியாமல் இங்கிலீசுல படித்தவர்களிடம் போய் இதைக் கேட்டீர்களானால் போச்சு! காக்கா பிரியாணி திண்ணுவிட்டு உண்ணி கிருஷ்ணன் குரல் வருமா என்ன? ஊ.. ஊ... ஊ.. என்று கத்திக்கொண்டு இருக்க வேண்டியதுதான்.

Sanskrit is non-translatable.

அந்த ஸத்யங்களை அப்படியே... மரபுப் பாடம் கேட்டவர்களிடமிருந்து அந்த ஸத்யங்களை உள்வாங்கினீர்களானால்தான், ஸத்யம் உடனடியாக அனுபூதியாக மலர்ந்து, அனுபவத்தைத் தந்து, மிகப்பெரிய ஶக்தி வெளிப்பாடாய் மலரும்.

ஆழ்ந்து கேளுங்கள்: கடந்தது இறந்தது - அது இல்லை! எதிர்காலம் இப்போதைக்கு இல்லை - அது வரப்போவதும் இல்லை. எதிர்காலம் என்றைக்குமே வரப்போவதில்லை. காரணம் என்னவென்றால், எதிர்காலம் வந்தாலும், அது நித்ய நிகழ்வாகத்தான் வரும். இப்பொழுது உங்களுக்கு இருக்கின்ற இந்த focal point, எதற்குள் உட்கார்ந்து இப்பொழுது உங்களைச் சுற்றி நடப்பதையும், நான் பேசுவதையும் கேட்டுக்கொண்டிருக்கின்றீர்களோ, இப்பொழுது உங்களுக்கு நடக்கின்ற அனுபவங்கள், இதெல்லாம் எந்த உணர்வுக்குள் உங்களுக்குள் நடக்கிறதோ, இந்த focal point -தான் - நித்ய நிகழ்வு. அதை 'நிகழ் காலம்' என்று சொல்லமாட்டேன்.

இந்த Power of Now ... இதையெல்லாம் தேடிக்கொண்டிருக்கின்ற அந்த கும்பல் பாவம்… உட்கார்ந்து.... ம்ம்ம்... present> presence> practising the presence> be in the present moment... ம் ம் ம் ம் என்று முக்க வேண்டியதுதான், முக்கிக்கிட்டே இருக்க வேண்டியதுதான்.

அவர்களுக்குப் புரியாத ஒரு பரம ஸத்யத்தை உங்களுக்குச் சொல்லிவிடுகின்றேன் கேட்டுக்கொள்ளுங்கள், இதுவரைக்கும் உங்களில் பலபேர்கூட இந்த மாதிரி presence-ல் இருக்க வேண்டும், present-லயே இருக்க வேண்டும், நிகழ்காலத்திலேயே இருக்க வேண்டும் என்று அப்படியே உற்று உற்று உற்று, நோண்டி நோண்டி நோண்டி, தலைவலி மட்டும்தான் கடைசியில் வந்து இருப்பவர்கள் யாராவது இருந்தீர்களானால், உங்களுக்கும் சொல்லிவிடுகின்றேன்... கேட்டுக்கொள்ளுங்கள், புரிந்துகொள்ளுங்கள். நித்ய நிகழ்விலே - எதிர்காலமும், கடந்தகாலமும், நிகழ்காலமும் include ஆகிவிடுகிறது.

நிகழ்காலத்தைத் தேடினீர்களானால் கடந்ததையும் எதிர்காலத்தையும்... இந்த இரண்டையும் exclude பண்ணுகின்றீர்கள். அது exclude பண்ணும் பொழுது, இந்த fleeting நிகழ்காலத்தை உங்களுடைய மனத்தாலேப் பிடிக்க முடியாது.

ஏனென்றால், காலம் Consciousness-னுடைய manifestation. உங்கள் மனம், காலத்தைவிட சற்று குறைந்த நிலை manifestation.

Length> breath> depth-னுடன் உங்கள் மனதினுடைய செயல்பாடுகள், அதனுடைய தகுதி, அதனுடைய jurisdiction முடிந்துவிடுகின்றது. இந்த length> breath> deapth- ஐ தாண்டி, 4th dimension-ஆன time -ஐயும், space -ஐயும் உங்கள் மனம் பிடிக்க முயற்சி செய்தால், jurisdiction-ஐ தாண்டி போகின்ற மனம் ஜெயிக்க முடியாது. அதனால் இந்த ஸத்யத்தைப் புரிந்துகொள்ளுங்கள், இந்த present moment-லையே இருக்கேன் என்று முக்குகிறவர்கள் எல்லோரும், எல்லாம் முக்கி, மண்டைவலி, தலைவலிதான் வரும். வேறு ஒன்றும் வராது. அப்பொழுது பரம ஸத்யம் என்னவென்றால், நித்ய நிகழ்வு!

இப்பொழுது எது நிகழ்ந்துகொண்டிருக்கின்றதோ, இந்த focal point தான் - 'இருப்பு ஸத்யம்'. இந்த Secret Key, இதைப் புரிந்துகொள்ளுங்கள்: 'நிகழ்காலத்தில் இருங்கள்' என்று நான் சொல்லவில்லை, 'நித்ய நிகழ்வில் இருங்கள்' என்று சொல்கிறேன். Eternal Now> Not the present now. NO! இரண்டிற்கும் வித்யாசம் இருக்கின்றது.

நிகழ்காலத்தைத் தேடினீர்களானால் கடந்ததையும் எதிர்காலத்தையும்... இந்த இரண்டையும்… அதாவது, எதிர்காலம் பற்றி எண்ணமே வரக்கூடாது. கடந்த காலத்தைப் பற்றிய எண்ணமும் வரக்கூடாது. நினைவுகளும் வரக்கூடாது. நிகழ்காலம் எங்கே எங்கே? என்று நோண்டி நோண்டி நோண்டி நோண்டி நோண்டி, 'நிகழ் காலம்' என்று உங்கள் மனம் பிடிக்கும்பொழுதே, அதற்குள் அது கடந்த காலமாகிப் போய்விட்டது.

காரணம் என்னவென்றால், மனம், நீல-அகல-உயர - length, breadth, depth dimension-குள் மட்டும்தான் விளையாட முடியும். அதற்காக உருவாக்கப்பட்ட கருவி. அதனால் காலம், தேசம் என்கின்ற பரிமாணத்திற்குள் விளையாடவோ, அளக்கவோ, பிடிக்கவோ இயலாது.

அதனால் நித்ய நிகழ்வு... மனதை உபயோகப்படுத்தி நிகழ்காலத்தில் இருப்பது சாத்தியமல்ல. மனதை உபயோகப்படுத்துவதை விட்டால், நித்ய நிகழ்வில் இருப்பீர்கள்! இந்த 'நித்ய நிகழ்வு' என்று இப்பொழுது இருக்கின்ற இது, ஒரு pure awareness. இப்பொழுது நிகழ்ந்துகொண்டே இருக்கிறது - இந்த நித்ய நிகழ்வு!

இதில்தான் நீங்கள் வந்து past movies, உங்களுடைய கடந்தகால memory... terror movie> horror movie எல்லாவற்றையும் கொண்டு வந்து, project பண்ணி ஓட்டிப் பார்த்து, ஐயோ யம்மா" என்று தரையில் உருண்டு பிரண்டு... இதில் ஒரு கொடுமை என்னவென்றால், இந்த movie-ல் hero-வும் நீங்கள்தான், villain-னும் நீங்கள்தான், heroine-னும் நீங்கள்தான், comedian-னும் நீங்கள்தான், இதில் வருகின்ற சகல character-ம் நீங்கள்தான், உட்கார்ந்து பார்க்கின்ற audience-ம் நீங்கள்தான், இதை விமர்சனம் செய்துகொண்டிருக்கின்ற critic-ம் நீங்கள்தான், இதைக் கைத்தட்டி ரசித்துக்கொண்டிருக்கின்ற ரசிகனும் நீங்கள்தான்.

என்னக் கொடுமையப்பா!

Producer> director… அப்பா, producer> director, கதை, எழுத்து, இயக்கம், இது எல்லாம் சகல கலா வல்லவர்கள்கூட ஒன்றாக சேர்ந்து பண்ணியிருக்கிறார்கள். வரலாறுகள் இருக்கின்றன, History இருக்கிறது. ஆனால் audience-ம் நீங்களாகவே இருந்து, அதை ரசிக்கின்ற ரசிகர்களாகவும் நீங்களாவே இருந்து, critic-ஆகவும் நீங்களாகவே இருந்த 'ஒரே movie' - உங்களுடைய 'past'-ஐ நீங்கள் எடுத்துட்டு வந்து, இந்த 'நித்ய நிகழ்வு' என்கின்ற இந்த தூய்மையான உங்கள் Conscious screen மீது project பண்ணி பார்த்துகொண்டிருப்பதுதான் தான் ஐயா.

ஐய்யோ! எவ்வளவு நாள் இந்த விளையாட்டை விளையாடிக்கொண்டிருக்கப் போகின்றீர்கள்?

எத்தனை பேருக்கு ஆஹா! என்னடா... இந்த மாதிரி தானாடா நாம் விளையாடிட்டு இருக்கின்றோம்" என்று புரிகிறது? கை உயர்த்துங்கள்.

ஹப்பா! இவ்வளவுதான் அடிப்படை ஸத்யம், பரம ஸத்யம்.

'நித்ய நிகழ்வு' என்கின்ற இந்த காலத்திலே இருங்கள் ஐயா... இதுதான் இருப்பு.

நிகழ்காலத்தை தேடினாலும் கிடைக்காது. எதிர்காலமும் என்றுமே வாராது. கடந்தகாலம் இறந்து விட்டது. இறந்துவிட்ட கடந்த காலத்தின் நினைவுகளைக் கொண்டுவந்து திரைப்படமாக்கி, அந்த படத்தை உங்கள் மீதே, உங்கள் நித்ய நிகழ்வின் மீது விரித்துப் பார்த்து... நடிப்பவனாயும், அதைப் பார்த்து ரசிப்பவனாயும், விமர்சிப்பவனாயும், உங்களை நீங்களே பெரும் நரகத்திற்குள் ஆட்படுத்திக் கொள்கின்றீர்கள்.

இன்னொரு முக்கியமான ஆழ்ந்த ரகசியம், பரம ரகசியம்: இது என்னுடைய வாழ்க்கையின் ரகசியம் என்று வேண்டுமானால்கூட சொல்கின்றேன் புரிந்துகொள்ளுங்கள். உங்களை நீங்களே உள்ளுக்குள் விமர்சனம் செய்துகொண்டே இருந்தீர்களானால், வெளியில் எவனாவது ஒரே ஒரு கமெண்ட் அடித்துவிட்டால் போதும், அவ்வளவுதான்... அப்படியே உடைந்து விழுந்து, அன்று முழுக்க நாள் நாசமாகப் போகிறது. நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். வெளியிலிருந்து எத்தனை துக்கம் தரும் விஷயங்கள் வந்தாலும், அது உங்கள் skin -னோடு வந்த உடனே நின்று போய்விடும். நீங்கள் கதவைத் திறந்து உள்ளுக்குள் இழுத்து, ஆமா... ஆமா... வா வா வா... நானே ஏற்கனவே அப்படித்தான் நினைச்சுக்கிட்டு இருந்தேன்... நீ சொல்லி confirm பண்ற, இது கரெக்ட்தான்" என்று உள்ள இழுத்து வைத்து, நீங்கள் சீரழிந்தால்... என்ன செய்வது?

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள் ஐயா, கர்ணனுக்கு கவச குண்டலம் மாதிரி, நம் எல்லோரையும் பெருமான் 'நித்ய நிகழ்வு' என்கின்ற இந்த மிகப்பெரிய கவச குண்டலத்தோடுதான் அனுப்பியிருக்கின்றார் ஐயா. நாம்தான் சும்மா வீணாப்போனப் பெருமைக்காக, அதை தானம் பண்ணிவிட்டு, அதை ஏதோ பெருமை என்று நினைத்துக்கொண்டு..... யாராவது... ஏதாவது ஒரு கமெண்ட் அடித்தால், இங்கு உள்ளுக்குள் நாம் அதையே சொல்லிக்கொண்டே இருப்பதனால், நாமே நம் கடந்ததைக் கொண்டு வந்து, நாமே நம்மீது தொடர்ந்து விமர்சனங்களை வைத்துக்கொண்டே இருப்பதனால்தான், வெளியில் இருந்து ஒருவன் ஒரு கமெண்ட் அடித்த உடனேயே அது வலிக்க ஆரம்பித்துவிடுகிறது.

உள்ளுக்குள் இந்தத் தொடர்ந்த எதிர்மறை விமர்சனத்தை, உங்களை நோக்கி வைத்துக் கொள்ளாமல் இருந்தீர்களானால்... வெளியிலிருந்து யார் எந்த அம்பை எய்தாலும், அஸ்திரம் எய்தாலும்... இந்த 'நித்ய நிகழ்வு' என்கிற இந்த மிகப்பெரிய கவசம் உங்களைக் காத்து, அந்த அம்பு உங்கள் மீது படாமல், உங்களை எந்த பாதிப்புக்கும் உள்ளாக்காமல், காணாமல் போய்விடும். அவ்வளவுதான் ஐயா என் வாழ்க்கை.

React-ஏ பண்ண மாட்டேன், respond-டே பண்ண மாட்டேன். பாவம்... அந்த அம்பை எய்பவர்கள், ஏதோ ஒன்றும் ஸத்யத்திற்காக அதை எல்லாம் ஒன்றும் பண்ணவில்லை ஐயா.போய், அவர்கள் ஊரில், அவன் மீது யார் யாரெல்லாம் பொதுக்கழிப்பிடத்தில் கழிக்கின்ற மாதிரி கழிந்தார்களோ, அந்த நரலை எடுத்து, என்னுடைய பெயர் மீது…. 'என் மீது கிடையாது', என்னுடைய பெயர், என்னுடைய பெயர் சார்ந்தப் பெயரை வைத்து இந்த உலகத்தவர்கள் வைத்திருக்கின்ற ஒரு பிம்பம்... அதன்மீது யார் யாரெல்லாம் என்ன கழிந்திருக்கின்றார்களோ… இதில் இவன் கழிந்ததற்கு ஏற்ற மாதிரி, அவனுடைய past -க்கு ஏற்ற மாதிரி, எது எதெல்லாம் இதில் match ஆகிறதோ, அதை எடுத்து கோர்த்து, இவனே இன்னொரு image narrative-ஐ set பண்ணி, அதை என்மேல் செலுத்தினான் என்றால், அதை 'நான்' என்று நினைத்துக் கஷ்டப்படுவதற்கு, 'நான் என்ன நீயா கேட்கிறேன்?'

நான் என்ன, 'அனுப்பிய நீயா?' என்று கேட்கிறேன்? அதற்கு நான் எப்பவுமே பெயர் வைப்பேன், 'மலாஸ்திரம்' என்று பெயர் வைப்பேன். அவன் சுய-மலம் மற்றும் அவன் மீது ஊரே செய்த மலம்... இவைகளை ஒன்றாக்கி, அந்த கண்ணில் இருந்து, ஊர் என்னுடைய 'Brand' என்று ஒன்றைக் கட்டமைத்து, அவர்கள் பெய்த மலம்... இந்த இரண்டையும் ஒன்றாக்கி, இதில் அவனுக்கு தேவையானதையெல்லாம்… ஏனென்றால், அவன் எந்தெந்த விதத்திலெல்லாம் தன்னை தொடர்ந்து விமர்சித்து, வருந்தி துக்கத்தில் இருக்கின்றானோ, அதே பார்வையில்தான் அவன் உலகத்தையும், மற்றவர்கள் பொழிந்த மலத்தையும் பார்ப்பான்.

அதனால், அந்த மலத்திலே… அதாவது அவன் மீது உலகம் பொழிந்த மலத்தையும், உலகம் என்னுடைய பிம்பத்தின் மீது பொழிந்த மலத்தையும், இரண்டையும் எடுத்து, கலந்து, அவனே அதில் ஒரு creative- வாக construct பண்ணி, மலாஸ்திரம் அனுப்பினால், அதை உள்வாங்குறதுக்கு நான் என்ன அனுப்பியவனா கேட்கிறேன்?

உள்வாங்கவும் மாட்டேன், பதில் சொல்லவும் மாட்டேன்.

வாழ்க்கையிலே growth வேண்டும் என்று நினைப்பவர்கள், மற்றவர்களுடைய criticism, feedback எல்லாம் வாங்கிக்கொள்ளுங்கள் ஐயா. அதாவது 1 கோடியில் இருந்து 2 கோடியாக வளர வேண்டும், 2 கோடியில் இருந்து 5 கோடியாக வளர வேண்டும், 5 கோடியில் இருந்து 10 கோடியாக வளர வேண்டும், உங்கள் வாழ்க்கையில் எந்த field-ல் இருந்தாலும், இந்த மாதிரி வளர வேண்டும் என்று நினைப்பவர்கள் எல்லாம், மற்றவர்களுடைய feedback எல்லாம் வாங்கி, தட்டில் வைத்து வாரி வாரி தின்றுகொண்டிருங்கள். நான் வேண்டாம் என்று சொல்லவில்லை.

யாருக்கெல்லாம் வாழ்க்கையில் breakthrough வேண்டும் என்று நினைக்கின்றீர்களோ...Breakthrough வேண்டும் என்று நினைக்கின்றீர்களோ, அவர்கள் எல்லோரும், நான் சொல்வதைக் கேளுங்கள்.

நித்ய நிகழ்வில் இருங்கள். ஒரு நாளும், கடந்ததை சார்ந்து உங்களை நீங்களே விமர்சிப்பதையும் நிறுத்துங்கள். மற்றவர்கள் ஏதேனும் விமர்சனம் கொடுத்தாலும், திரும்பிக்கூட பார்க்காதீர்கள். வேண்டுமானால் அந்த நேரத்தில் அவரை அவமரியாதை பண்ணாமல் இருப்பதற்காக, பணிவோடு இருங்கள்.

நான் எப்பொழுதும் சொல்வேன்... சொல்வதெல்லாம் பணிவோடு கேட்டுக்கும் சாமி, ஆனால் சாமிக்குத் தோன்றதைத்தான் செய்யும் என்று.

நான், என்னை தனிப்பட்ட வாழ்க்கையில் பேசும்போது… அதாவது இப்பொழுது பொதுவெளியில்தான் 'நான்' என்கின்ற வார்த்தையை உபயோகம் பண்றேன். தனிப்பட்ட வாழ்க்கையிலே, என்னோடு தனிப்பட்ட வாழ்க்கையிலே interact பண்ணி, என்னோடு வாழ்ந்தவர்கள், வாழ்கிறவர்களுக்குத் தெரியும்... 'நான்' என்கின்ற வார்த்தையை உபயோகிப்பதில்லை. 'சாமி, சாமி... சாமி' என்று தான் சொல்லுவோம்.

ஏனென்றால், அந்த 'நான்' என்கின்ற வார்த்தைக்கு அர்த்தமில்லாமல் போனதனால்... 'நான்' என்று ஒன்று இல்லாமல், அது முளைக்கும் முன்பாகவே, 'தான்' என்று பரம்பொருள், தனிப்பரம்பொருள், தன்மயப் பரம்பொருள், அருணாச்சலப் பரம்பொருள் எழுந்து நின்றதனால், 'நான்' இல்லாத காரணத்தினால், தனிப்பட்ட வாழ்க்கையில், 'நான்' எனும் வார்த்தையை உபயோகிக்கும் வழக்கம் இல்லை .

இப்பொழுது பொதுவெளியில் இந்த 'நான்' என்கின்ற வார்த்தையை சொல்லவில்லை என்றால், உங்களுக்குப் புரியாது என்பதற்காக அந்த வார்த்தையை உபயோகப்படுத்துகின்றேன்.

ஆனால் 'நான்' என்று சொல்லும்பொழுதும்கூட, 'தானாய்' எனக்குள் விளங்கும் தனிப்பரம்பொருளைத்தான் 'நான்' என்னும் வார்த்தையாலும் நான் சுட்டுகின்றேன்.

கேளுங்கள்... எக்காரணம் கொண்டும், வெளியிலிருந்து வரும் எந்த feedback-யையும் எடுக்காதீர்கள். நித்ய நிகழ்விலே இருங்கள். ப்ரபஞ்சம் உங்களுக்கு உள்ளிருந்து வழிகாட்டும். பரம்பொருள் உங்களிடம்… உங்கள் மூலமாய் வெளிப்படுவார். பரம்பொருள் வெளிப்படுவதுதான் breakthrough ஐயா.

வெளியில் இருப்பவர்களுடைய விமர்சனம், கருத்து இதை வைத்து நீங்கள் develop பண்ணுவது - Growth. எவ்வளவு நாள் வரை growth வேண்டும் என்று நினைக்கின்றீர்களோ, அவ்வளவு நாள் வெளியுலகத்தில் இருப்பவர்கள், உங்களுடைய friends> well-wishers அவர்கள் கொடுக்கின்ற feedback-ஐ வைத்துக்கொண்டு வாழுங்கள்.

எப்பொழுது breakthrough வேண்டும் என்று நினைக்கின்றீர்களோ, அப்பொழுது எல்லாவற்றையும் வெளியில் வைத்துவிட்டு, 'இது மொத்தமும் மலாஸ்திரம் அப்பா' என்று வெளியில் வைத்துவிட்டு, நித்ய நிகழ்விற்குள் அமருங்கள்.

கடந்தது இறந்தது! எதிரும் பொய்! 'நிகழ்காலம்' என்று சொல்லப்படும் இந்த புதிரும் பொய்!

கடந்ததும் பொய், எதிரும் பொய், நிகழ்காலம் என்று சொல்லப்படும் இந்த புதிரும் பொய், நித்ய நிகழ்வே மெய்!.

நித்ய நிகழ்வை 'நிகழ்காலம்' என்று சொல்ல முடியாது. நித்ய நிகழ்வு.

ஏனென்றால், இந்த நிகழ்வின் மீதுதான் நீங்கள் கடந்த காலத்தையும் காணுகின்றீர்கள், எதிர்காலத்தையும் காணுகின்றீர்கள், நிகழ்காலத்தையும் காணுகின்றீர்கள். இந்த மூன்றையுமே பார்க்கிற screen, உங்களுடைய conscious screen, conscious focal point - இதுதான் நித்ய நிகழ்வு.

இந்த நித்ய நிகழ்வில் இருந்து பாருங்கள். வாழ்வின் மிகப்பெரிய நிம்மதி… இது மட்டும்தான் வாழ்க்கை ஐயா.

வாழ்க்கை என்றைக்கு வந்தாலும்… அதாவது இதைப் பாருங்கள், இன்று இந்திய நேரப்படி 24-ம் தேதி என்று நினைக்கிறேன், அதவாது நவம்பர் மாதம் 24-ம் தேதி. 25-ம் தேதி வந்தாலும், இந்த நித்ய நிகழ்வாகத்தான் வரும். 26-ம் தேதி வந்தாலும், இந்த நித்ய நிகழ்வாகத்தான் வரும். 27-ம் தேதி வந்தாலும், இந்த நித்ய நிகழ்வாகத்தான் வரும்.

அதனால் இந்த நித்ய நிகழ்விலே... நீங்கள் என்ன quality- யோடு இருக்கின்றீர்களோ, அந்த qualityயோடு தான் உங்கள் வாழ்க்கை நிகழப்போகிறது.

இப்பொழுது நித்ய நிகழ்விலே நிம்மதி இருந்தால், வாழ்க்கை முழுவதும் நிம்மதி. நித்ய நிகழ்விலே ஆனந்தம் இருந்தால், வாழ்க்கை முழுவதும் ஆனந்தம். நித்ய நிகழ்விலே ஶாந்தம் இருந்தால், வாழ்க்கை முழுவதும் ஶாந்தம். நித்ய நிகழ்வு துக்கமாக இருந்தால், வாழ்க்கை முழுவதும் துக்கம். நித்ய நிகழ்விலே ஏக்கம் மட்டும் இருந்தால், வாழ்க்கை முழுவதும் ஏக்கம் - இதுதான் பரம ரகசியம், பரம ஸத்யம்.

பஞ்சாயத்து முடிந்தது, இவ்வளவுதான். இவ்வளவுதான் மொத்த வாழ்க்கைப் பஞ்சாயத்து ஐயா. நித்ய நிகழ்வில் நிம்மதியாய் நிலைபெறுங்கள்.

அப்படியே நித்ய நிகழ்வில் இருந்து பார்த்தீர்களானாலே தெரியும் ஐயா... கடந்தது என்று நீங்கள் கொண்டு வருவது மொத்தமும், fake memories> fake narratives ஐயா, fake narrations.

எதிர்காலம் என்று நீங்கள் கொண்டு வருவது மொத்தமும், தேவையே இல்லாத பயங்கள், anxiety. தேவையே இல்லாத, நிகழவேப் போவதில்லை என்கின்ற நிலையிலே இருக்கின்ற bogus ஆன fears, anxieties.

உங்களை நீங்களே தொடர்ந்து scam பண்ணிக்கொண்டே இருந்து, அந்த மாயையில், அந்த மூடத்தனத்தில், மடத்தனத்திலேயே முடிவுகளை எடுத்துக்கொண்டு போய்க்கொண்டே இருக்கின்றீர்கள் என்று தெரிகிறதா ஐயா?

குருடன் குருடனுக்கு வழிகாட்டியது போலே... நித்ய நிகழ்விலே… கடந்ததும், எதிர்வருவதும், நிகழ்காலம் என்று நீங்கள் நினைப்பதும், இந்த மூன்றினுடைய தாக்கத்தையும் விட்டுவிட்டு, நித்ய நிகழ்வில் இருங்கள். இருந்தீர்களானால், அதில் இருக்க இருக்க, முக்காலத்திலிருந்தும் விடுதலை அடைந்து, காலாதீதராக நீங்கள் இருக்கத் துவங்குவீர்கள்.

காலத்தாலே கலைக்க முடியாத, கலக்க முடியாத, கரைக்க முடியாத, மறைக்க முடியாத ஒரு நிறைவில், காலத்தினால் உங்களிடமிருந்து திருடிக்கொள்ள முடியாத ஒரு இருப்பில், நித்ய நிகழ்வில் இருங்கள். Timeless in time என்பது புரியும்.

இந்த நித்ய நிகழ்வில் எவ்வாறு இருப்பது? மீண்டும் மீண்டும் மீண்டும்... இப்பொழுது கடந்த காலம் உடனே... அதாவது கடந்த கால நினைவுகள் உடனே விட்டுவிடாது. காரணம் என்னவென்றால், என் movie-ஐ தானே இவ்வளவு நாள் இந்த screen-ல் ஓட்டிட்டு இருந்த... எப்படி நீ screen கொடுக்க மாட்டே என்று சொல்லலாம்? என்று சண்டைக்கு வரும். திரும்ப திரும்ப வந்து அது movie-ஐ தானாக project பண்ணும். அதேமாதிரி எதிர்காலம்... ஏய் என் share-ஐ எனக்குக் கொடு, நானும் தானே ஓட்டிட்டு இருந்தேன்" என்று அது வந்து அந்த movie- ஐ ஓட்டும். நிகழ்காலம், அது அப்படியே ஒன்றும் தெரியாமல் மயங்கிக்கொண்டு கிடக்கும். இந்த 2-3 movies ஒன்றன் மீது ஒன்று ஓட்டிக்கொண்டு, இந்த குழப்பம் எல்லாம் திரும்ப வரும் தான்.

வந்தாலும் கவலைப்படாது... நீங்கள் நித்ய நிகழ்வு, உங்களுடைய பரம ஸத்யம், உங்கள் இருப்பு - நித்ய நிகழ்வு, இந்த focal point.. இந்த conscious focal point தான் உங்களுடைய இருப்பு, அதன் பரம ஸத்யம்.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள் ஐயா, வெளியிலே பல பேரையும், பல யானை, குதிரைகள் காலாட்படை… இந்த வெளியில் போர் செய்து, வெற்றி பெறுபவன் - வீரன்.

உள்ளுக்குள்ளே நித்ய நிகழ்விலே, காலத்தோடு... இந்த எதிர்காலம், நிகழ்காலம், கடந்த காலம் இந்த மூன்றினுடைய நினைவுகளோடு தைரியமாக போர் செய்து, தன்னை நிலைநிறுத்திக்கொள்பவன், நித்ய நிகழ்விலே தன்னை இருத்திக் கொள்பவன் - தீரன்.

உண்மையில், போர்கூட செய்ய வேண்டியதில்லை ஐயா. புரிதல் போதும். இங்கு ஜ்ஞாந கட்கம்தான் வேண்டும். ஜ்ஞாந வாள், ஜ்ஞாநமே இங்கு வாள். புத்தியே இங்கு கேடயம்.

இந்த ஜ்ஞாந கட்கத்தால், ஜ்ஞாந வாள் ஏந்தி, உங்கள் மீது, உங்கள் நித்ய நிகழ்வு மீது, கடந்த கால கழிமலங்களும், எதிர்கால பய, ஏக்க பிசாசுகளும்... அவர்கள் அவர்கள் movie-ஐ project பண்ணாமல்... சில நேரத்தில் இரண்டும் ஒரே நேரத்தில் project பண்ணி, அந்த movie-ஐ பார்க்கக்கூட முடியாமல் confuse பண்ணிக்கொண்டு இருக்கும். அந்த மாதிரி இல்லாமல், நித்ய நிகழ்வில் இருக்கத் துவங்குங்கள்.

இதுதான் ஒரு மனிதனுக்கு அளிக்கப்பட வேண்டிய அடிப்படைப் பாடம் ஐயா. ஒரு குழந்தை பிறந்த உடனே, அது வளரும்பொழுது, time பார்க்கக் கற்றுக்கொடுப்பதற்கு முன்பாக, அந்த குழந்தைக்கு அளிக்கப்பட வேண்டிய ஸத்யம், அறிவு - 'நித்ய நிகழ்வில் இருக்கக் கற்றுக்கொள்' என்பதுதான்.

உங்கள் குழந்தைகளுக்கெல்லாம் தயவுசெய்து இதைச் செய்யுங்கள் ஐயா. யார் யாரெல்லாம் 7 வயதிற்கு உட்பட்ட குழந்தைங்களை வைத்திருக்கின்றீர்களோ, அந்த குழந்தைகளுக்கெல்லாம், இந்த நித்ய நிகழ்வைப் பற்றி புரியவைத்து, அதில் இருப்பதற்கு, ஜாலியாக life-ஐ நித்ய நிகழ்வில் இருந்து நடத்துவதற்குக் கற்றுக்கொடுத்துவிட்டு, அதற்குப் பிறகு time பார்க்கக் கற்றுக்கொடுங்கள் ஐயா.

காலம் பற்றிய அறிவை, நீங்கள் காலம் கடந்து பெற்றிருந்தாலும், உங்கள் குழந்தைகளுக்குக் காலத்தே இந்த ஜ்ஞாநத்தை அளித்திடுங்கள். அடுத்த தலைமுறையாவது ஜ்ஞாநிகளாக, ஜீவன் முக்தர்களாக, ஸநாதன ஹிந்து தர்மத்தின் வாழும் வாரிசுகளாக மலரட்டும்.

இன்னொரு பெரிய கொடுமை... இந்தப் பரம ஸத்யங்கள், பரம ஸூக்ஷ்மங்கள் அடுத்த தலைமுறைக்கு அளிக்கப்படாமலேயே... நாமும் வாழாமல், அடுத்த தலைமுறைக்கும் அளிக்காமல், வெறுமனே 2 கோவிலைச் சுற்றி வந்துவிட்டாலே, 'நாம் ஹிந்துக்கள்' என்றும், நம்முடைய அடுத்தத் தலைமுறை 'ஹிந்துக்களாக வாழ்கின்றார்கள்' என்றும் நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டு திரிந்தால், ஏன் conversion நடக்காது? ஏன் தீவிரவாதம் பெருகாது?

உன் வீட்டு உணவை உன் குழந்தைக்குத் தர மறுத்ததனால்… அதாவது உனக்கே தெரியாமல், நீயே உண்ணாமல் இருந்ததனாலும், உன் குழந்தைக்கும், பேரனுக்கும் அதைக் கொடுக்க மறுத்ததனாலும், மறந்ததனாலும்… அவன் ஹோட்டலில் போய் சாப்பிட ஆரம்பிக்கின்றான். என்ன பண்ண முடியும்?

அவன் பசியோடு... அவனுடைய 'தேடுதல்' என்கின்ற பசியோடு வாழ முடியாது. எப்படி வெறும் வயிற்றோடு வாழ முடியாதோ, அதேமாதிரி தேடுதலுக்கு விடை கிடைக்காமல், ஸத்யம் புரியாமல், வாழ்க்கையைப் பற்றிய அறிவு தெரியாமல், வெறும் உணர்வோடும் வாழமுடியாது.

அவன் ஹோட்டல் சாப்பாடு சாப்பிடப் போய்விடுகின்றான். பிறகு, ஐயோ convert ஆயிட்டான், ஐயோ தீவிரவாதி ஆயிட்டான், ஐயோ லவ் ஜிஹாத் நடந்துருச்சு, ஐயோ இந்த ஜிஹாத் நடந்துருச்சு, அந்த conversion ஆகிப்போயிட்டான் என்று புலம்புவது.

ஏன் நடக்காது? வேகமாக, மோசமாக, அடுத்த தலைமுறையை இழந்து கொண்டிருக்கின்ற religion - ஹிந்துக்கள். இது உங்களுக்குக் கெட்ட செய்தி.

நல்ல செய்தி ஒன்று இருக்கிறது. இந்த அறிவை எல்லாம் பல மேலை நாட்டுக் குழந்தைகள், மேலை நாட்டிலே, உலக நாடுகளிலே, வளர்ந்த நாடுகளிலே தேடுதல் உடையவர்கள் பெற்று, ஹிந்துக்களாக மாறிக்கொண்டிருக்கிறார்கள். அதனால், இந்த ஜ்ஞாநத்தை உங்களுடைய அடுத்த தலைமுறைக்குக் கடத்தி, நீங்களும் பெற்று, மற்றவர்களுக்கும் கொடுத்து, உங்கள் வாரிசுகளை இழக்காமல், வம்ஸத்தை இழக்காமல் உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

வம்ஸத்தை இழந்தீர்களானால், பிண்ட தர்ப்பணம் செய்வதற்கு வம்ஸம், வாரிசு இல்லாமல் பேயாய்த் திரிவீர்கள். உங்கள் மகனோ... உங்களுக்கு 7 தலைமுறைக்கும் பிண்ட தர்ப்பணம் கொடுக்கப்பட்டால் மட்டும்தான்... அதாவது ஸநாதன ஹிந்து தர்மத்தின்படி முறையாக பித்ரு கர்மா செய்து பிண்ட தர்ப்பணம் கொடுக்கப்பட்டால் மட்டும்தான், நீங்கள் பித்ரு லோகத்தில் நிம்மதியாக இருந்து, அடுத்தடுத்த லோகங்களுக்கு travel பண்ணி, பரமுக்தி அடைய முடியும்.

பரமுக்தி அடையும் வரை, நீங்கள் ஏதாவது தவம் புரிய வேண்டி இருந்தது என்றால், கொஞ்சம் கர்மங்களைத் தீர்க்க வேண்டி இருந்தது என்றால், அந்த மேல் உலகங்களில் இருந்து travel பண்ணி மேலே பரமுக்தி அடைவதற்கு உதவியாக, உங்களுக்கு வழியாக, துணையாகத்தான், இங்கிருந்து உங்களுடைய வாரிசுகள் உங்களுக்குக் கொடுக்கிற தர்ப்பணம், பிண்ட தர்ப்பணம், பித்ரு கர்மா இதில் செய்கின்ற அவைகள் எல்லாம் உங்களை வந்து சேரும்.

பித்ரு தர்ப்பணம் கொடுப்பதற்கு உன் வாரிசு இல்லாமல், மதம் மாறிப் போயிட்டான், காணாமல் போயிட்டான் என்றால்… அதாவது மதம் என்றால், நான் வெறும் கிறிஸ்தவம், இஸ்லாம் மட்டும் சொல்லவில்லை, நாத்திகனாகப் போய்விட்டான் என்றால்கூட, நாத்திகனாக போய்விட்டான் என்றாலும், உங்களுக்கு பிண்ட தர்ப்பணம் கொடுக்க மாட்டான். போயிட்டான்னா, அங்க போய் மகனுங்களா பேயாத் திரிஞ்சிட்டு இருப்பீங்க.

அதனால் ஒழுங்காக வாழும்பொழுதே, இந்த ஜ்ஞாநத்தையும், பரம ஜ்ஞாநத்தையும் அறிவையும், ஸநாதன ஹிந்து தர்மத்தின் ஸத்யங்களையும், நீங்களும் உள்வாங்கிக்கொண்டு, சிறிது நேரத்தைச் செலவு செய்து, உங்களுடைய அடுத்த தலைமுறைக்குக் கடத்திவிடுங்கள்.

வெறும் எப்பொழுது பார்த்தாலும், நாம் busy-யாக இருக்க வேண்டும், செல்போனில் busy-யாக இருக்க வேண்டும் என்பதற்காகாக, அவர்களுக்கும் செல்போனை வாங்கிக்கொடுத்துவிட்டு, எப்படியோ நீ வாழ்ந்துக்கோ என்றால் - உங்கள் குழந்தைகளை நீங்கள் வளர்க்கவில்லை. செல்போன், உங்கள் social media Influencers இருக்கிறார்கள் இல்லையா, அவர்கள்தான் வளர்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.

குழந்தைகளை அவர்கள் வளர்க்க விட்டுவிடுவது, பிறகு ஐயோ இது இப்படி ஆயிருச்சே, நாசமா போயிருச்சே, தரித்திரமா போயிருச்சே என்று புலம்பினால் யார் மீது தவறு? உங்கள் பொறுப்பை அவர்களிடம் விட்டுவிட்டால், அவர்கள் அவர்களுக்கு ஏற்ற மாதிரிதான் வளர்ப்பார்கள்.

Showing off–ல் வருகின்ற friends> relationship> followers... அதெல்லாம் நிலைக்காதப்பு. என்ன வேண்டுமானாலும் 'Showing up' - அதில் வருகின்ற நிரந்தரமான உறவுகள்தான், வாழ்க்கையின் அடித்தளம்.

Showing off – னால் followers வருவார்கள், face book friends வருவார்கள், Insta followers வருவார்கள், You tube subscribers வருவார்கள், பணம் வரும். நிஜமான உறவுகள் - அதில் வருவது கிடையாது. ஒருவக்கு ஏதாவது ஒன்று என்றால், நீங்கள் போய் showing up பண்ணுகிறீர்கள் பாருங்கள், அதில்தான் நட்பும் அன்பும் மலர்ந்து, நிஜமான உறவுகள் வரும். Showing off relationships வேறு, showing up relationships வேறு.

இந்த ஜ்ஞாநத்தை எல்லாம் உங்கள் அடுத்த தலைமுறைக்குச் சொல்லாமல் விட்டீர்களானால், அவர்களை social media influencers வளர்த்துக்கொண்டிருப்பார்கள். பிறகு வந்து, ஐயோ, கையோ, லபோ, திபோ என்று அடித்துக்கொண்டீர்களானால், என்ன பண்ண முடியும்? போச்சு... அது ஓடிப் போயிருச்சு.

கரெக்டா 18 வயது ஆன மறுநாளே பட்சி பறந்து போயிருச்சு என்று பலபேர் மீடியாவில் வந்து கத்துகிறீர்கள். ஐயோ 18 வயசாச்சு, இரண்டாவது நாள் ஓடிப் போயிட்டா என் பொண்ணு, நான் என்ன பண்றது? என்று அழுகின்றீர்கள்.

சிறுவயதிலிருந்தே இந்த ஜ்ஞாநத்தைக் கொடுக்க ஏன் மறந்தீர்கள்?

வெறும் ஆலயம், வெறும் சில சடங்குகள் மாத்திரம் ஸனாதன ஹிந்து தர்மம் அல்ல. ஆலயம் வேண்டும், சடங்குகள் வேண்டும் - அது வேண்டாம் என்று நான் சொல்லவில்லை.

என்னைப் பார்த்திருப்பீர்கள், நானே அண்ணாமலையார் ஆலயத்தில் தீபாராதனை நடக்கிறது என்றால், எப்படித் தன்னை மறந்து கரைகின்றேன் பாருங்கள். பக்தி வேண்டும், சடங்குகள் வேண்டும்.

Deception... அலைகின்ற அந்த deception-ஐ devotion என்று சொல்லாதீர்கள்.

மிகுந்த தெளிந்த ஜ்ஞாநப் புரிதலோடு, ஜ்ஞாநத்தின் மீது ப்ரதிஷ்டை செய்யப்பட்ட பக்தி, ஜ்ஞாந வரிஷ்டா பக்தி - இதுதான் சத்தியமான பக்தி, பரம பக்தி. இதுதான் ஆலயம் செல்வதற்கும், சடங்குகள் செய்வதற்குமான ஆதாரமாக இருக்க வேண்டும். ஸநாதன ஹிந்து தர்மத்தின் சொத்து இந்த அறிவு, இந்த ஜ்ஞாநம்... இதையெல்லாம் அடுத்த தலைமுறைக்குக் கடத்துங்கள்.

கடிகாரத்தில் நேரம் பார்க்கக் கற்றுக்கொடுக்கும் முன், நித்ய நிகழ்விலே இருப்பதற்கு உங்கள் குழந்தையைப் பயிற்றுவியுங்கள். நான் ஒரு வாட்ச் வைத்திருப்பேன், கட்டுவது இல்லை. அதில் அப்படித்தான் போட்டு வைத்திருக்கின்றோம் - 'நித்ய நிகழ்வு'.

ஒன்றுமில்லை, கால பைரவர் இருப்பார். அதுதான். கால பைரவர் பார்த்தீர்களானால், நித்ய நிகழ்வுதான்.

அவரைச் சுற்றி ஒரு பெரிய காலச்சக்கரம் இருக்கும் பாருங்கள்…. அதாவது கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் - இது எல்லாமே இப்போதுதான் இருக்கின்றது. 'இந்த நித்ய நிகழ்விலே இருக்கின்றது' என்று காட்டுவறதுக்காகத்தான், காலத்தைச் சக்ரமாக வைத்து, அதில் கால பைரவர் இருக்கின்றார்.

காலம் linear கிடையாது. இது ஒரு பெரிய பிரச்சினை. western calender பார்த்தீர்களானால் linear, இந்த பூமி சார்ந்த, வெறும் Horizontal Time Zone. இது மட்டும் சார்ந்த விஷயங்களை document பண்ணுவதற்கு, record பண்ணுவதற்கு, இந்த interaction-க்காகத்தான்... time-ஐ linear time-ஆக western civilization காட்டுகின்றது.

ஆனால் உண்மையில் நம்முடைய ஸநாதன ஹிந்து தர்மத்திலே, ஹிந்து civilization, Time is always circular concept- Spiral. Time is always spiral, never linear.


நித்ய நிகழ்விற்குள் வாருங்கள். Vertical Time Zone-க்கு போய்கொண்டே இருப்பீர்கள். spiral-லாகி மேலே சென்று கொண்டே இருப்பீர்கள். Linear time zone -ல் சிக்கினீர்களனால், spiral down ஆகி கீழே சென்று கொண்டே இருப்பீர்கள். பாதாளத்திற்கும், நரகத்திற்கும் சென்று கொண்டே இருப்பீர்கள்.

உங்களுடைய இருப்புதான் ஐயா, நரகமா ஸ்வர்கமா என்று முடிவு செய்ய வேண்டும்.

அப்பர் பெருமான் சொல்கிறார் பாருங்கள்... நாம் ஆர்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம், நரகத்தில் இடர்ப்படோம்" - என்ன அருமையாக சொல்கிறார் பாருங்கள் ஐயா… நாம் யாருக்கும் குடி கிடையாது ஐயா... தங்கள் Conscious Sovereignty-ஐ declare பண்ணுகிறவர்கள்தான் கைலாயத்தின் குடிமக்கள்.

கைலாயத்தின் குடிமக்கள் என்றால் வேறு என்ன? அவர்கள் எல்லோரும் என்னுடைய குடிமக்கள் கிடையாது. ப்ரபஞ்சத்தின், பரமஶிவப் பரம்பொருளின் குடிமக்கள். தன்னுடைய Conscious Sovereignty-ஐ reclaim பண்ணிக்கொள்கின்றவர்கள். தன்னுடைய Conscious Sovereignty -க்குள்ளே யாரும் நுழையாமல், தலையிடாமல் பார்த்துக் கொள்பவர்கள். அவர்களைத்தான் கைலாயத்தின் குடிமக்கள் என்று சொல்கிறேன் ஐயா.

நாம் ஆர்க்கும் குடியல்லோம்" என்று declare பண்ணுகிறவர்கள்தான் கைலாஸவாசிகள். நமனை அஞ்சோம் நரகத்தில் இடர்ப்படோம் நடலை இல்லோம் ஏமாப்போம் பிணியறியோம் பணிவோமல்லோம் - என்ன தீரத்தன்மை பாருங்கள், என்ன தீரத்தன்மை பாருங்கள். சிறையிலே வதைபட்டுவிட்டு வெளியில் வந்து இதைப் பாடுகின்றார்.

இன்னொரு ரகசியம் சொல்லட்டுமா? சொன்னால், ஐயோ ஐயோ ஐயோ என்று எல்லோரும்... நான் சொல்வதற்கு முன்னாடியே எனக்கு... என் mind voice-ஏ எனக்கு 'சிரி சிரி' என்று சிரிக்கின்றது. ஆனால் இது உண்மை, அதனால் சொல்லிவிடுகிறேன்.

எந்த ஒரு பயமுமே ஐயா, நிஜமாக உங்கள் கண் முன்னால் வந்துவிட்டதென்றால், அது ஒன்றுமே இல்லை. 'அட ச்சீ! இதுக்காடா இந்த ஆட்டம் ஆடி, ஆட்டம் காட்டி, பயம் பயம் பயம், இப்படி இப்படி என்று பயமுறுத்தினீர்கள்?' என்று ஆகிவிடும் ஐயா.

அதனால் நீங்கள் யாரையாவது control-ல் வைத்திருக்க வேண்டுமானால், பயமுறுத்திக்கொண்டே இருக்க வேண்டுமேத் தவிர, உண்மையிலேயே punish பண்ணிவிடக்கூடாது. இப்பொழுது ஒருவனுக்கு ஜெயில் பயம் என்றால், ஜெயில் பயத்தைக் காட்டிக்கொண்டே இருக்க வேண்டும். ஆனால் ஜெயிலில் போட்டீர்களானால், அவன் free ஆகிவிடுவான். அதற்குப் பிறகு அவனை உங்களால் control பண்ண முடியாது.

ஏனென்றால், அவனுக்குத் தெரிந்துவிடும், இது ஒன்னுமே இல்லடா டேய்! இந்தப் பயத்த வச்சு எத்தனை எத்தனை கொடுமைகளை சந்திக்க வேண்டியதா இருக்கு, அதைவிட இது better டா என்று அவன் ஆகிவிடுவான். பயம் போய்விடும்.

பெருமான் ஆனால், அப்பர் பெருமான் ஒரு படிமேல, ஜெயிலில் இருக்கும்பொழுதே பாடுகிறார். சுண்ணாம்பு காளவாயில் இருக்கும்பொழுதே பாடுகிறார்…

"மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேணிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி நிழலே" என்று பாடுகின்றார்.

ஐயா... ஒன்று புரிந்துகொள்ளுங்கள், சுண்ணாம்புக் காளவாயில் இருக்கும்பொழுது இந்த visualization வருவதே சாத்தியம் இல்லை ஐயா.

மாசில் வீணையும் மாலை மதியமும்" - அதாவது மாசு இல்லாத, இனிமையான ஸ்ரு'தி கெடாத, இயைந்து இயங்கக்கூடிய சூழல்... time, space, இசை இந்த மூன்றும் சேர்ந்து இணைந்து இனிமையாக இருக்கின்ற மாதிரியான வீணை இசைக்குத்தான், 'மாசில் வீணை' என்று பெயர். மாசில்லாத வீணை. அந்த இசைக்கும், மாலை மதியம்... சுண்ணாம்பு காளவாயில் இருந்தால் இந்த visualizations முதலில் பண்ண முடியுமா ஐயா? இந்த visualization அவரால் பண்ண முடிகிறது என்றாலே, நித்ய நிகழ்விலே நிலைபெற்று இருக்கின்றார் பெருமான், அப்பர் பெருமான்.

நித்ய நிகழ்விலே இருப்பதனால்தான், இந்த visualization-யே பண்ண முடிகிறது ஐயா. மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேணிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி நிழலே"

சற்றே ஆழ்ந்து கேளுங்கள்: நித்ய நிகழ்விற்குள் வந்தீர்களானால், எந்த பயமும் உங்கள் மீது எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது. உங்களை யாராலும் பயமுறுத்த முடியாது.

இந்த நித்ய நிகழ்வுக்கு வரும்பொழுது, மெது மெதுவாக இந்த நித்ய நிகழ்வில் இருக்க இருக்க, இன்னொரு ஆழமான ஸத்யம் புரிந்துவிடும். 'உங்களுக்கு மரணம் இல்லை, உங்களுக்கு அழிவு இல்லை'. ஐயா... இந்த ஸத்யத்தை நான் ஏதோ உபதேஸமாக, பெரிய தத்துவமாக, ஸத்யமாக உங்களுக்குச் சொல்கிறேன் என்றெல்லாம் தயவுசெய்து நினைக்காதீர்கள் ஐயா.

உங்களுடைய close friend, உங்கள் தோள்மீது கை போட்டுக்கொண்டு, இரண்டு பேரும் ஒன்றாக உட்கார்ந்து, ஒரு மரத்தடியில் sweet-ஆக டீ குடித்துக்கொண்டு இருந்தோமானால், ஒரு கிராமத்தில் ஆலமரத்தடியில் உக்காந்து டீ குடித்துக்கொண்டிருக்கும் போது... personal-லாக எப்படி நாம் ஒருவருக்கொருவர் உயிர் மலர்ந்து, உயிர் திறந்து, open up பண்ணி personal-லாக விஷயங்களை share பண்ணிப்போமோ, அந்த space-ல் (உணர்வில்) இருந்து சொல்கிறேன் ஐயா... உண்மையிலேயே உங்களுக்கு மரணம் இல்லை, அழிவு இல்லை ஐயா.

எவன் எவனோ லூசுத்தனமாக, உங்களை மரணம் என்கின்ற மூளைச் சலவை செய்து வைத்திருக்கிறார்கள். இந்த வளர்சிதை மாற்றம் என்பது நிகழ்ந்துகொண்டே இருப்பது ஐயா. அது அப்படியே கடந்து நடந்து சென்றுகெண்டே இருக்கிறது.

இப்பொழுது நீங்கள் எல்லாம் என்ன நினைக்கின்றீர்கள், correct சாமி ,நான் இறந்தவுடனே இன்னொரு பிறப்பு எடுத்துவிடுவேன் என்று எனக்குத் தெரியுது, ஆனால் இந்த ஜென்மத்தில் சம்பாதித்த பணம் எல்லாம் போய்விடுமே என்று நினைக்கின்றீர்கள். கவலையேப் படாதீர்கள், இப்பொழுது என்ன மாதிரி space, state இதையெல்லாம் நீங்கள் manage பண்ணுகிறீர்களோ, responsible-ஆக manage பண்ணுகிறீர்களோ, அது அப்படியே அதே மாதிரி space-ல் தான் நீங்கள் அடுத்த பிறவி எடுப்பீர்கள் அல்லது இதைவிட next level-க்குத்தான் போவீர்கள் ஐயா. Breakthrough தான் நடக்கும்.

ப்ரபஞ்சம் மங்களமானது ஐயா, ஶிவமயம் ஐயா. 'ஶிவம்' என்றால் காரணமில்லாத மங்களத்தன்மை ஐயா.

யாரெல்லாம் என் personal friend-ஆக வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? மனசுவிட்டு என்னிடம் நீங்கள் உங்களுடைய வாழ்க்கையைப்பற்றி எல்லாவற்றையும் சொல்ல வேண்டும். நானும் அதே மாதிரி மனம் திறந்து, என் உயிர் திறந்து, என் வாழ்க்கையைப் பற்றியெல்லாம் உங்களுக்குச் சொல்ல வேண்டும். அந்த ஸத்யங்களை, என் வாழ்க்கையினுடைய அனுபவத்தின் சாரத்தை, உண்மைகளை, இறுதி உண்மையை, அறுதி உண்மையை, உறுதி உண்மையை உங்களுக்குச் சொல்ல வேண்டும். 'Over a cup of coffee> over a cup of tea,' என்று அந்த மாதிரி நினைக்கின்றீர்களோ, அவர்கள் எல்லோருக்கும் இப்பொழுது சொல்கிறேன் ஐயா…

நன்றாக நினைத்துக்கொள்ளுங்கள், ஒரு அழகான பெரிய ஆலமரத்தடியில், sweet-ஆக நாம் இருவர் மட்டும் உட்காந்திருக்கோம், exclusively-வாக... நான் உங்கள் தோள் மீது கை போட்டுக்கொண்டு, நீங்கள் ஒரு cup of tea, நான் ஒரு cup of tea-யை குடித்துக்கொண்டு, நீங்கள் உங்கள் கதையெல்லாம் சொல்றீங்க, என்னென்ன தோணுதோ சொல்றீங்க. என்கூட time spend பண்ணனும் என்பதற்காக, சில நேரத்துல காரணமே இல்லாததைக்கூட பேசிட்டு இருக்கீங்க, just அந்த மாதிரி space-ல் இருக்கும்போது, நான் என்னுடைய வாழ்க்கையினுடைய மொத்த ஸத்யங்கள், ரகசியங்கள்... அணுவுக்கு அணுவான, ஆழத்திற்கும் ஆழமான பரம ரகசியங்களையும், secrets-யும், ஸத்யத்தையும் உங்களுக்குச் சொல்கிறேன், என்னை open up பண்ணி செல்கிறேன்- உண்மையிலேயே உங்களுக்கு அழிவில்லை! மரணம் இல்லை!

பயம் அத்தனையுமே bogus ஐயா. உங்களுக்கு ஏதோ motivation கொடுக்கின்றேன், motivation speech, சுய-முன்னேற்றம்... அதெல்லாம் ஒன்றும் கிடையாது. இந்த motivation மொத்தமும் தொடப்பக்கட்டை. எனக்கு அந்த motivation மீதெல்லாம்... இந்த self-development, motivation இதன்மீதெல்லாம் எந்த நம்பிக்கையும் இல்லை. அது எல்லாம் டுபாக்கூர்.

பரம ஸத்யத்தின் மீது மட்டும்தான் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. பரம ரகசியமாக இருக்கின்ற இந்த பரம ஸத்யத்தை உங்களுக்குச் சொல்கின்றேன் ஐயா.

நேசகா... என் மனதிற்கு இனிமையானவர்களே! என் அன்பிற்கு உரியவர்களே! யாரைக் காண்பதனால் என் அன்பு எனக்குள்ளிருந்து பெருகுகின்றதோ, 'நான் அன்புக்கு உரியவன்' என்று என்னை உணருகின்றேனோ, Loving and lovable என்று உணருகின்றேனோ, உங்களைப் பார்த்துச் சொல்லுகின்றேன் கேளுங்கள்.

உங்களுக்கு மரணம் இல்லை! உங்களுக்கு அழிவு இல்லை! பயம் அனைத்துமே… அனைத்து விதமான பயங்களும் உங்கள் மீது நிகழ்த்தப்படும் மூளைச்சலவை.

அதனால், நித்ய நிகழ்விலே நிலை பெறுங்கள். ஈஶ்வரனின் ஸர்க்க விஸர்கமும் புரியும். இந்த ப்ரஹ்மாண்டத்தின் ஸர்க்க விஸர்கமும் புரியும். உங்கள் ஜீவனின் ஸர்க்க விஸர்கமும் புரியும்.

ஸர்க்க விஸர்கம்... இந்த முதன்மைப் படைப்பு, இரண்டாம் படைப்பை, ஈஶ்வரன் கோணத்திலிருந்து அருணாச்சல புராணம் மற்றும் விஷ்ணு புராணம், கந்த புராணம் என பல புராணங்கள் விளக்குகின்றன. Universe... Universe-னுடைய பார்வையிலிருந்து, ப்ரஹ்மாண்ட புராணம் விளக்குகின்றது. ஜீவன்... Individual ஜீவனுடைய பார்வையிலிருந்து, ஆத்ம புராணம் விளக்குகின்றது.

நித்ய நிகழ்வில் இருங்கள், இந்த மூன்றுமே... ஜீவன், ஈஶ்வரன், ஜகத் - இந்த மூன்றினுடைய ஸர்க்க விஸர்கங்கள் முழுமையாய் புரியும். முதல் நிலை படைப்பும், இரண்டாம் நிலை படைப்பும் முழுமையாய் புரியும்.

நித்ய நிகழ்வில் நிலைபெற்று, நித்ய ஶாந்தத்தில், நித்ய நிம்மதியில், நித்ய சுகத்தில், நித்ய ஆனந்தத்தில் நிலைபெறுவீர்களாக என்று ஆசீர்வதிக்கின்றேன்.

பரமாத்வைத ப்ராப்திரஸ்து.

Blessings.







Event Photos

Photo 1 Photo 2 Photo 3
Photo 4 Photo 5 Photo 6
Photo 7 Photo 8 Photo 9
Photo 10 Photo 11 Photo 12
Photo 13 Photo 14 Photo 15
Photo 16 Photo 17 Photo 18