September 13 2013

From Nithyanandapedia
Revision as of 08:31, 22 November 2021 by Ma.mythreyi (talk | contribs) (September 13 2013)
Jump to navigation Jump to search

Title

தாழ்வு மனப்பான்மைகளில் இருந்து விடுவிக்க || பாகம் 1 || நித்ய க்ரியா யோகா || 13 செப்டம்பர் 2013

Description

நிகழ்ச்சி நிரல் - நித்ய க்ரியா யோகா
தலைப்பு - தாழ்வு மனப்பான்மைகளில் இருந்து விடுவிக்க பாகம் 1
இடம் - ஆதிகைலாஸா, பெங்களூரு, கர்நாடகா, இந்தியா
தேதி - 13 செப்டம்பர் 2013

இந்த வீடியோ பதிவில் பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் பக்தர்களிடம் அவர்களுடைய அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வளிக்கும் தியான நுட்பத்தை விளக்குகிறார் மற்றும் பக்தர்கள் அனைவரும் தாம் செய்த முழுமைத் தன்மை தியான நுட்பத்தை பற்றி அவர்களுடைய அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார்கள். இந்த வீடியோ பதிவு 13 செப்டம்பர் 2013 அன்று ஆதிகைலாஸா, பெங்களூரு, கர்நாடகா, இந்தியாவில் நடைபெற்றது.

The Supreme Pontiff of Hinduism Jagatguru Mahasannidhanam His Divine Holiness #Nithyananda Paramashivam (HDH) is the reviver of #KAILASA - the ancient enlightened civilization and the great cosmic borderless Hindu nation. Revered as the incarnation of Paramashiva - the primordial Hindu Divinity, HDH has a following of 2 billion Hindus worldwide with de facto spiritual embassies in over 150 countries. He has worked untiringly for over 26 years for the revival of Kailasa, for global peace and to give super conscious breakthrough to humanity. He has survived the worst persecution of multiple assassination attempts on person and on character by anti-Hindu elements. He is collecting, organising, preserving, time capsuling, decoding, spreading and reviving 20 Million source books of Hinduism and the 64 sacred arts & sciences like Ayurveda, music, dance, sculpting, astrology, vastu and much more. Close to 20,000 hours of HDH’s timeless talks have been recorded till date (Sep 2020), which are a treasure trove of powerful cognitions to solve individual and global problems of any kind.

Link to Video:

Video Audio






Title

தாழ்வு மனப்பான்மைகளில் இருந்து விடுவிக்க || பாகம் 2 || நித்ய க்ரியா யோகா || 13 செப்டம்பர் 2013

Description

நிகழ்ச்சி நிரல் - நித்ய க்ரியா யோகா
தலைப்பு - தாழ்வு மனப்பான்மைகளில் இருந்து விடுவிக்க பாகம் 2
இடம் - ஆதிகைலாஸா, பெங்களூரு, கர்நாடகா, இந்தியா
தேதி - 13 செப்டம்பர் 2013

இந்த வீடியோ பதிவில் பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் பக்தர்களிடம் அவர்களுடைய அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வளிக்கும் தியான நுட்பத்தை விளக்குகிறார் மற்றும் பக்தர்கள் அனைவரும் தாம் செய்த முழுமைத் தன்மை தியான நுட்பத்தை பற்றி அவர்களுடைய அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார்கள். இந்த வீடியோ பதிவு 13 செப்டம்பர் 2013 அன்று ஆதிகைலாஸா, பெங்களூரு, கர்நாடகா, இந்தியாவில் நடைபெற்றது.

The Supreme Pontiff of Hinduism Jagatguru Mahasannidhanam His Divine Holiness #Nithyananda Paramashivam (HDH) is the reviver of #KAILASA - the ancient enlightened civilization and the great cosmic borderless Hindu nation. Revered as the incarnation of Paramashiva - the primordial Hindu Divinity, HDH has a following of 2 billion Hindus worldwide with de facto spiritual embassies in over 150 countries. He has worked untiringly for over 26 years for the revival of Kailasa, for global peace and to give super conscious breakthrough to humanity. He has survived the worst persecution of multiple assassination attempts on person and on character by anti-Hindu elements. He is collecting, organising, preserving, time capsuling, decoding, spreading and reviving 20 Million source books of Hinduism and the 64 sacred arts & sciences like Ayurveda, music, dance, sculpting, astrology, vastu and much more. Close to 20,000 hours of HDH’s timeless talks have been recorded till date (Sep 2020), which are a treasure trove of powerful cognitions to solve individual and global problems of any kind.

Link to Video:

Video Audio







Title

தாழ்வு மனப்பான்மைகளில் இருந்து விடுவிக்க || பாகம் 3 || நித்ய க்ரியா யோகா || 13 செப்டம்பர் 2013

Description

நிகழ்ச்சி நிரல் - நித்ய க்ரியா யோகா
தலைப்பு - தாழ்வு மனப்பான்மைகளில் இருந்து விடுவிக்க பாகம் 3
இடம் - ஆதிகைலாஸா, பெங்களூரு, கர்நாடகா, இந்தியா
தேதி - 13 செப்டம்பர் 2013

இந்த வீடியோ பதிவில் பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் பக்தர்களிடம் அவர்களுடைய அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வளிக்கும் தியான நுட்பத்தை விளக்குகிறார் மற்றும் பக்தர்கள் அனைவரும் தாம் செய்த முழுமைத் தன்மை தியான நுட்பத்தை பற்றி அவர்களுடைய அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார்கள். இந்த வீடியோ பதிவு 13 செப்டம்பர் 2013 அன்று ஆதிகைலாஸா, பெங்களூரு, கர்நாடகா, இந்தியாவில் நடைபெற்றது.

The Supreme Pontiff of Hinduism Jagatguru Mahasannidhanam His Divine Holiness #Nithyananda Paramashivam (HDH) is the reviver of #KAILASA - the ancient enlightened civilization and the great cosmic borderless Hindu nation. Revered as the incarnation of Paramashiva - the primordial Hindu Divinity, HDH has a following of 2 billion Hindus worldwide with de facto spiritual embassies in over 150 countries. He has worked untiringly for over 26 years for the revival of Kailasa, for global peace and to give super conscious breakthrough to humanity. He has survived the worst persecution of multiple assassination attempts on person and on character by anti-Hindu elements. He is collecting, organising, preserving, time capsuling, decoding, spreading and reviving 20 Million source books of Hinduism and the 64 sacred arts & sciences like Ayurveda, music, dance, sculpting, astrology, vastu and much more. Close to 20,000 hours of HDH’s timeless talks have been recorded till date (Sep 2020), which are a treasure trove of powerful cognitions to solve individual and global problems of any kind.

Link to Video:

Video Audio




Title

Tamil Satsang by The Supreme Pontiff of Hinduism HDH Bhagavan Nithyananda Paramashiam (ஒருங்குவித்தல் -- மனிதர்களை புனிதர்களாக்கும் சத்தியம்!)


Link to Video

Video Audio



Transcription

விமர்சனம் நீங்கள் விழித்துக் கொள்வதற்கே!

உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன்.. ஏற்கனவே சில கருத்துக்களை உங்களோடு நான் பகிர்ந்து கொண்டிருந்தேன்.. கடந்த மூன்று நாட்களாக தமிழ் தியான சத்சங்கம் காலை நித்ய சத்சங்கத்தின் மூலமாக.. இன்று தொடர்ந்து உங்கள் கேள்விகளுக்கும் பதில் அளிக்கின்றேன். உங்களுடைய சந்தேகங்களுக்கும் விடை அளிக்கின்றேன்.

கேள்வி : சித்தர்களும் ஆழ்வார்களும் நாயன்மார்களும் வாழ்ந்த பக்தி தமிழ்த்திரு நாட்டின் இப்பொழுது பக்திக்கு பஞ்சமும், பங்கமும் நிகழ்கிறதே சுவாமிஜி.. பக்தி உணர்வோடு இருப்பவர்கள் எல்லோரையும் முட்டாள்கள் என்றும் அவர்கள் புத்தி இழந்தவர்கள் என்றும் சொல்லி கேலிக்குள்ளாக்குகிறார்கள்..  இந்த அநியாயமான நிலைமாற என்ன செய்ய வேண்டும்?  இந்துக்களான நாங்கள் எங்கள் முன்னோர்கள் போன்று உறுதியாக வௌிப்படுத்த வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? தனி நபரான என்னுடைய பணி இதில் என்ன? சுவாமிஜி:

நான் பொதுவாக இந்த மாதிரி சப்ஜெக்டையே தொடர்றது இல்ல. ஏன்னா என்னுடைய பதில் மிகவும் நேரடியான பதிலாக இருக்கும்.!. பெரிய கொடுமைங்கயைா..  தமிழர்களாகிய நாம் விமர்சனத்தைத் தாங்கிக்கொள்ளக்கூடிய தன்மையை, குணத்தை இழந்துவிட்டோம். நம்முடைய தலைவர்கள் விமர்சனத்தை தாங்கிக்காம பன்ற ரௌடிசங்களைப் பார்க்கும்பொழுது, அதாவது காலைல பத்திரிக்கைல ஏதாவது ஒரு வார்த்தை பிசறி தப்பாக அறிக்கை கொடுத்துவிட்டால் மாலைக்குள்ள ஒன்னு ஆட்டோலையோ.. இல்லை டூவீலர்லையோ அவங்க வசதிக்கு ஏத்தாமாதிரிற ரௌடிகள் உங்க வீட்டுக்கு வந்திடுவாங்க.  கல்லால் அடிக்கவோ, பெட்ரோல் குண்டு போடவோ அவரவர் வசதி, தகுதிக்கு ஏற்ப தங்கள் எதிர்ப்பை ஜனநாயகமான முறையில் வௌிக்காட்டுவார்கள். இதப் பாத்து பாத்து பாத்து என்ன ஆனீங்கையா.. இந்த  விமர்சனத்தை தாங்கி கொள்ளும் சக்தியை இழந்துவிட்டீர்கள்.

நல்லாத் தெரிஞ்சிக்கோங்க.. விமர்சனத்தை தாங்கிக்கொள்கின்ற சக்தியை இழக்கின்ற அந்த நாளே அந்த வினாடியே கற்றுக் கொள்கின்ற சக்தியை இழந்து விட்டோம். நம்மை மாற்றிக் கொள்ளும் சக்தியை இழந்துவிட்டோம். கேட்க விரும்பாதவர்களிடம் உபதேசம் சொல்வது சொல்பவனுக்கு கேடு! அப்படீன்னு சாஸ்திரத்துல படிச்சிருக்கேன் ஆனால் என் அனுபவத்திலேயே இப்ப பார்ததுட்டேன்! கேட்க விரும்பாதவனுக்கு சொல்வது சொல்பவனுக்குக் கேடு! அதனாலதான் பொதுவா இந்த மாதிரி, என்னா இப்ப இந்த கேள்விக்கு நான் விடையளிச்சேன்னா.. எப்படியாருந்தாலும் இதற்கு காரணமானவர்கள், சில உண்மைகள் அன்பினால் மட்டுமே புகட்ட முடியும்.

அது என்னன்னா ஒரு கவிதை எழுதறது, ஓவியம் வரையறது. ஒரு சிற்பத்தை செதுக்கிறது, இத வந்து நீங்க ஒருத்தர அடிச்சி போர்ஸ் பண்ணி கத்துக்குடுக்கவே முடியாது. அதனால தான் சொல்றேங்கையா ஆயிரம் ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்ட தஞ்சாவுர் ஆலயம், இராஜஇராஜன் அமைத்த தஞ்சை ஆலயம், சுந்தரபாண்டியன் செய்துவைத்த மீனாட்சி மதுரை மாநகர்.. வெறுமனே தமிழனின் கட்டடக்கலைக்கான எடுத்துக்காட்டு அல்ல, கட்டிடக்கலைக்கான  ஒரு சின்னம் அல்ல! அந்த காலகட்டத்திலே மனிதர்கள் வளமான வாழ்ந்திருக்கிறார்கள் என்பதற்கான சான்று! எகிப்தில் இருக்கிற பிரமிட பாத்தா அந்த காலத்தில் மக்கள் நிறைய உழைத்தார்கள் அப்படீங்கறதுக்கான சான்று, ஏன்னா அதுல எந்தவிதமான சிற்பமும் இருக்காது. மொத்தமா ஒரு போரில் ஜெயிச்சி ஒருபத்து லட்சம் பேரை அடிமையாக்கி அவர்கள் அடிச்சு உதைச்சா  செதுக்கி எடுத்து அடிக்கிட முடியும். அடிமைகள் செய்துவிட முடியும்.

தஞ்சாவுர் பெரிய கோவில் செய்ய அடிமைகள் முடியுமா? மதுரை மாநகரத்தை அடிமைகள் சமைக்க முடியுமா? முடியாது அரசனின் உத்தரவை ஏற்றுகூட அந்த மாதிரியான ஒரு கலைப்பொக்கிஷத்தை சமைக்கமுடியாது!

தானே ஆனந்தத்தில் பொங்கிக்கொண்டு துள்ளி குதித்து உற்சாகத்தோடு செயல்பட்டால் மட்டும்தான் என்னால தௌிவாபாக்க முடியது அந்த ராஜராஜேஸ்வரம் தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம் கட்டப்படும்பொழுது, சிற்பிகளும், பணியாளர்களும் உழைப்பாளர்களும் ஆங்காங்கு சிவ நாமத்தை சொல்லி சங்கீர்த்தனம் செய்து கொண்டே வேலை செய்திருப்பார்கள்! தஞ்சாவுர் கோவில் மாதிரி ஒரு அமைப்பை உருவாக்க உடல்பலம் மட்டும் கூட பத்தாதுங்கையா! உருவாக்க வேண்டும் என்கின்ற உற்சாகம் அது எப்ப மட்டும்தான் வரும்னா தான் பூர்ணத்துவ உணர்வில் இருந்தால்  மட்டும்தான் வரும்.

உண்மையிலேயே சொல்றங்கையா.. சத்தியமா  இது நான் உங்க எல்லாருக்கும் சொல்லவேண்டிய ஒரு உண்மை! உலகத்திலேயே ஒரு பெரிய சிவாலயத்தை அமைக்கனும் அப்படீங்கிறதுக்கா  நானும் ஒரு ரெண்டு வருஷமா உட்கார்ந்து பிளான் பண்ணிட்டு இருக்கேன். இவ்வளவு விஞ்ஞான வளர்ச்சி, வாகன வசதி இப்போ வந்துருச்சி இன்னமும்கூட, என்னால் இன்னொரு தஞ்சை கோபுரத்தை உருவாக்கிவிட முடியும் கற்பனைகூட பண்ணமுடியல. இப்ப கற்பனை பண்ணி செயல்படுத்தாம விடுறத விடுங்க..  கற்பனையே என்னால பண்ண முடியல. பொதுவாகவே சங்கத்துல நான் தான் பெரிய பெரிய வேலைகளை பண்ணச் சொல்லி சொல்வேன்... மத்தவங்கல்லாம் இல்ல சாமி அது முடியுமா? இந்த லெவல்ல பண்ணிறலாம், அப்படீம்பாங்க.. என்னாலேயே தஞ்சை பெரிய கோபுரத்தை கற்பனை பண்ணி பாக்கமுடியல.

நல்லா புரிஞ்சுக்கோங்க அந்த பெரிய கோபுரத்தைக் கற்பனைப் பண்ணவர்களுடைய இதயம் அதுமட்டுமல்ல ஸ்தபதி மட்டும் அதை உள்ளத்தில் உருவாகபடுத்தினால் மட்டுமல்ல. குறைந்தது அந்த முதல் நிலையில் வேலை பண்றாங்க பாருங்க, இரண்டாம் கட்ட தலைவர்கள்னு சொல்லுவோமே ஒரு பொலிட்டிக்கல் பார்ட்டியில, அந்த முதல் நிலையில் ஒரு ஐந்தாயிரம் பேராவது அந்த தஞ்சை கோபுரம் அந்த கான்செப்ட கம்ப்ளீட்டா அவங்க உணர்வில் வாங்கணும்... அப்ப ஐயாயிரம் பேராவது ஒரு கம்ப்ளீஷன்ல இருந்தாகனும், அந்த விஷுவலைசேஷன் அந்த க்ரியேட்டிவிட்டியை அவங்களால கிராஸ்ப் பண்ண முடியனும், அத ரியாலிட்டியா மாத்தனம் என்கிற உற்சாகம் இன்ஸ்பிரேஷன் வந்தாகணும், இது சத்தியமா சாதாரண வேலை இல்லைங்கையா.. ஏன்னா.. இந்த மொத்த 10 ஆண்டுகளாக நான் உழைத்து இந்த தியானபீட சங்கத்தின் மூலம் இவ்வளவு வேலை செய்து, இவ்வளவு பேசி இவ்வளவு சொல்லியும், ஒரு சில 100 பேர்களைத்தான் கம்ப்ளீஷன்ல இருக்க வைக்க முடியுது!  ஆவங்கள அந்த

கம்ப்ளீஷனுக்கு எடுத்துட்டு வந்து, அவர்ளுடைய க்ரியேட்டிவிட்டியை இன்ஸ்பையர் பண்ணி, இது எல்லாத்துக்கும் நடுவில், உக்காந்து யோசிச்சி பாத்தாதான் தெரியிது.. தஞ்சை பெரிய கோபுரம் தமிழனுடைய கட்டிடக்கலைக்கு மாத்திரம் எடுத்துக்காட்டு அல்ல!  அந்தக் காலக்கட்டத்திலே தமிழ் இனமே வாழ்ந்த ஒரு வெல்னஸ்,  ஒரு ஆனந்தமான உயர்ந்த உணர்வு நிலையை கல்லாலே வடித்துவிட்டுச் சென்றிருக்கின்றான் இராஜராஜன்! இல்லைனா இது சாத்தியமே இல்ல, எந்தவிதத்திலும் சாத்தியமில்லை. அடிமைகளாலே இவ்வளவு அருமையான சிற்ப வேலையை செய்யமுடியாது.  ஆடிமைகளால மொத்த மொத்தமாக செதுக்கி வைக்க முடியும்! பிரமிடெல்லாம் பாத்தீங்கன்னா ஒன்னுமில்ல மொத்த மொத்தமா செதுக்கி அடுக்குன கல்லுங்க..  ஆனால் தஞ்சாவூர்  கோபுரம் அப்படியில்ல.

ஒரே ஒரு இன்ஞ் தாராசுரம் கோவில், கங்கைகொண்ட சோழபுரம் கோவில், இதெல்லாம்ப் பார்க்கம்பொழுது ஒரேஒரு இன்சகூட கார்வ் பண்ணாம விடல, செதுக்காம விடல.  நம்மல்லாம் எப்படி பவுடர் போட்டு நம்ம உடம்ப ஒரு இன்சுகூட விடாம அழகு படுத்த முயற்சி பன்றோமோ..  அந்த மாதிரி மொத்த ஒரு கோவிலையே  ஒரு ஒரு இன்ச் விடாமல்  செதுக்கி அழகு  பண்ணயிருக்காங்க. இந்த மாதிரியான கலைகள் அன்பால் தான் கற்றுக்கொடுக்க முடியும் ஒரு ஆழமான கொடுப்பவருக்கும் வாங்குபவருக்கும் நடுவுல ஒரு ஆழமான அன்பு இருந்தாகனும்.

இன்னொரு முக்கியமான விஷயம் உங்களுக்கெல்லாம் தெரியனும்! தெரியணும் கருங்கல் வேலைசெய்யறவங்க ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் வாழ்வதில்லை காரணம் என்னதான் நீங்க முகத்துல திரை போட்டு பாதுகாத்தாலும், அந்தக்கல் தூசி பவுடர் மாதிரி போய் லங்ஸ்-ல உட்கார்ந்துவிடும். அதனால பொதுவாக கருங்கல்லில் வேலை செய்கிற ஸ்தபதிகள், பணியாளர்கள் 50 ஆண்டுகளுக்கு மேல் இருப்பதில்லை.  இது தெரிந்தும் தங்கள் வாழ்க்கையை தியாகம் பண்ணியிருக்காங்க.

இன்னும் சில கலைகள் இருக்க.. அன்பும் தேவையில்லை, வெறுப்பும் தேவையில்லை, ஜஸ்ட் ஒரு சாதாரணமா சொன்னா கேட்கிறவங்க கத்துக்க முடியும்.  கணிதம் - ஒரு கணிதத்தைக் கத்துக்கொடுக்க.. ஆசிரியருக்கும் மாணவனுக்கும் நடுவுல எந்தவிதமான ஒரு ஆழ்ந்த அன்புறவு தேவையில்லை. ஆனா ஒரு கவிதையையும், கலையையும், ஓவியத்தையும் கத்துக்குடுக்கனும்னா கொடுப்பவருக்கும் வாங்குபவருக்கும் ஆழமான உறவு வேணும்! அன்பு வேணும். அன்பில்லாது அந்த இடத்துல கவிதை பிறக்க முடியாது. அன்பு ஒன்னு குடுக்கனும் இல்ல முறியனும் அப்பதான் கவிதை பிறக்கும்.

ஓன்னு இதயம் மலரனும், இல்ல மலர்ந்திருக்கும் இதயம் முள்ளாலக் குத்தப்படனும், அப்பதான் கவிதை வரும்! அன்பினுடைய ஆனந்தமாகட்டும் சோகமாகட்டும் ஆனால் அன்பு சார்ந்து மட்டும்தான் கவிதை வரும். சில கலைகள் ஆழமான கொடுப்பவருக்கும் வாங்குபவருக்கும் இடையே ஆழமான அன்பிறிருந்து மட்டுமே கற்றுக்கொடுக்கப்பட கூடியவை.  அப்ப மட்டும்தான் டிரான்ஸ்மிஷன் நடக்கும்.

சில கலைகளில் அன்பும் தேவையில்லை, எதுவும் தேவையில்லை.. ஜஸ்ட் சொன்னா அடுத்தவங்க கத்துக்க முடியும்.  அது கணிதம்! ரெண்டும் ரெண்டும் நாலு,  அதுக்க அன்ப தேவையில்லை, வெறுப்பும் வர்றதுக்கு வாய்ப்பில்லை!

ஆனால் சில விஷயங்கள் சில பாடங்கள் சொல்லுகின்ற ஆசான் மீது வெறுப்பை உண்டாக்க கூடியவை! அது என்னன்னா ‘தன்னை மாற்றிக்கொள்ள சொல்லி கற்றுக்கொடுக்கப்படும் பாடங்கள்’  எப்பொழுது கற்றுக்கொடுக்கும் ஆசான் மீது வெறுப்பும் தன்னை மாற்றிக்கொள்வதற்கான விருப்பத்தையும் இழந்து ஒரு

இனம் தவிக்கிறதோ அந்த இனம் தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் அழிவை நோக்கி வேகமாக இயங்கிக் கொண்டிருக்கிறது! ரொம்ப அழகா வள்ளுவர் சொல்கிறார்.. ‘இடித்து உரைப்பார் இல்லாவிட்டால் ஒரு அரசன் கூட கெடுப்பான் இன்றி தானே கெடும். இடித்து உரைப்பவன் மீது வெறுப்பைக் காட்டுவது. இடித்து உரைப்பவன் மீது வெறுப்பைக் காட்டுவது மட்டுமல்லாமல், இடித்துரைக்க யாருமே இல்லாமல் வைத்துக் கொண்டே வாழ்வது! தமிழினத்திற்கு வந்த மிகப்பெரிய சாபபம் என்னன்னாங்கையா.. விமர்சனத்தை தாங்கி கொள்வதற்கான தகுதியை இழந்து விட்டு வாழ்ந்து கொண்டிருப்பது!

இப்ப நீங்க கேட்ட கேள்வி சித்தர்களும் ஆழ்வார்களும் நாயன்மார்களும் வாழ்ந்த பக்தி தமிழ் திருநாட்டில் தெய்வீக திராவிட நாட்டில், இப்பொழுது பக்திக்கு பஞ்சமும், பங்கமும்  நிகழ்கிறதே!..

சிலபேர் என்கிட்ட சொல்றதுண்டு..  ‘‘இல்ல சாமி பக்தி வளந்திருச்சி பிரதோஷத்துக்கு பாருங்க சிவாலயங்களை எவ்வளவு மக்கள் ஒவ்வொரு கோவிலிலும் மக்கள் பாருங்க! திடீர்னு பாருங்க திருவண்ணாமலை மாசமானா 10 லட்சம் பேர் மலை சுத்துறாங்க...! மீனாக்ஷி அம்மன் கோயில் ஒரு நாளைக்கு 60 ஆயிரம் பேர் தரிசனம் பண்றாங்க! பழனி முருகன் பாக்குறதுக்கு பத்து மணி நேரம் நிக்க வேண்டியதா இருக்கு!

நல்லா ஆழமாக புரிஞ்சுக்கோங்க இவைகள் எல்லாம் நல்லவை! தவறு என்று நான் சொல்ல ரொம்ப நல்லவை ஆனால் இதையெல்லாம் பக்தி வளர்ந்திருக்கிறது என்பதற்கான ஒரு சாட்சியாக நிரூபணங்களாக ஏற்றுக்கொள்ள முடியாது! பக்தி பலம் சார்ந்துதான் வளரும்! பக்தி வளர்ந்து இருந்தால் இந்நேரம் தமிழினம் பலமாக மாறி இருந்திருக்கும் அது நடக்கவில்லை. இன்னமும் உலகத்துல நல்லா புரிஞ்சுக்கோங்க தமிழ்நாட்டில, இந்தியாவில் இல்லை உலகத்திலேயே அதிகம் பேர் தற்கொலை செய்துகொள்ள மாநிலமாக தமிழ்நாடுதான் இருக்கு. இதுக்கும் கைத்தட்டிடாதீங்க.. எதுக்கா இருந்தாலும் கைத்தட்டிப் பழகிப்போயி..   இந்தியாவிலேயே அதிக அளவு குடிக்கின்ற மாநிலமாகவும் தமிழ்நாடு தான் இருக்கு. ஒருவேளை நாமெல்லாம் நினைக்கிறா மாதிரி. நான் விரும்பறமதிரி பக்தி வளர்ந்திருந்தால்,  இவ்வளவு பலவீனம் இருக்காது!

அதாவது டீச்சர்க்கும் ஸ்டூடண்ட்க்கும் நடுவுல ஒரு ஆழமான அன்பு இருந்தா மட்டும்தான் நாட்டியம் ஓவியம் சிற்பம் இந்த மாதிரி கலைகள் கற்று தரப்படும். கலைகளைக் கற்றுத்தருவது சாத்தியம்! அதனாலதான் பாத்தீங்கன்னா.. இந்தக் கலைகளைக் கற்றக்கொடுக்கிற பள்ளிகள் ரொம்ப கம்மியா இருக்கும்! ஏன்னா அந்த டீச்சர்க்கும் ஸ்டூடண்ட்க்கும் நடுவுல அந்த ரிலேஷன்ஷிப் வர்றது, அன்பான உறவு மலர்வது ரொம்ப கஷ்டமா இருக்கும். ரொம்ப கஷ்டம் ஆக்சுவலா! அதே மாதிரி அந்த உண்மையான கலைஞன் பாத்தீங்கன்னா.. ஆசான் மேல.. பொதுமக்கள் மத்தியில் காட்ட ஒரு மரியாதை மட்டுமல்ல தனிப்பட்ட விதத்தில் ஒரு ஆழமான அன்பு பரிமாற்றம் நடந்திருக்கும்.

ஏன்னா அன்பு என்கிற பாத்திரத்தில மட்டும்தான் கலை என்கிற உணவை கொடுக்க முடியும்! கணிதம் மாதிரி விஷயங்களை கற்றுக்கொடுக்க அன்பு தேவை இல்லை வெறுப்பும் வராது. இப்ப யாராவது வந்து உங்களுக்கு ரெண்டு ரெண்டு நாளுன்னு கத்துக்கொடுத்தா அவற வெறுக்க ஆரம்பிக்க மாட்டீங்க. மூன்றாவது விதமான அறிவு புகட்டல்..

அதென்னன்னா தன்னைத் தானே தன்னைத்தானே மேம்படுத்தி கொள்ளுகின்ற அந்த கலை யார் கத்துக்கொடுத்தாலுமே அவங்க மேல நமக்கு வெறுப்பு வந்துடுது. ஏன்னா அவங்க என்ன சொல்றாங்க? உங்களுக்குள் இருக்கிற உங்களுடைய புற்றுநோயை அறுத்து எடுத்து வௌியே எறிய சொல்றாங்க.   அது புற்றுநோய் கட்டியைதான் எடுத்து வௌியில்போட சொல்றாங்கன்னு நாம் நம்பறதில்லை. நம்முடைய கையையோ காலையோதான் வெட்டி வௌியிலே எறிய  சொல்றாங்கன்னு நாம நினைக்க ஆரம்பிச்சிடறோம்!

அதாவது தன்னுடைய குறைத்தன்மையை தௌிவில்லாமையை, உணர்வு மாற்றத்திற்கு தயாராக இல்லாததன்மையை, நம்முடைய வாழ்க்கைக்கு பாடம் சொல்லும் ஆசான் மீது வெறுப்பாகவும் கோபமாகவும் காட்டுகின்ற மூடர்களுக்கு ஞானம் வருவதில்லை! அவர்களுக்கு ஞானமளிக்க முயற்சித்தாலும் எனக்கு நடந்த கதிதான்! என்று வருங்கால ஞானிகளுக்கு சொல்லி வைத்து விட்டுப் போக வேண்டிய வருத்தமான சுழல்.

முதல் நிலை கல்வி கலைகளை கொடுக்கின்ற கல்வி.. இரண்டாவது நிலை கல்வி இந்த கணிதம் அந்த மாதிரியான துறை கல்வி மூன்றாவது நிலை கல்வி தன்னுடைய உணர்வு மாற்றம்

தமிழன்னா ஆலயம் சார்ந்த வாழ்க்கைமுறைங்கையா.. நம்முடைய அடையாளத்தை, நம்முடைய அடையாளத்தையே மறக்கச் செய்துவிட்டு இந்த அடையாளமே இல்லாதவர்களைத்தான் அறிவு பூர்வமாக காட்டி,  அவர்களுக்கு இல்லாத விருதுகளை எல்லாம் பூட்டி,  எருதுகளாய் பூட்ட வேண்டிய மூடர்களுக்கு, மூடர்களுக்கு விருதுகளைப் பூட்டி, இந்த உணர்வு மாற்றம் சார்ந்த எந்தக் கல்வியும் வேரூன்றாமல் பார்த்துக்கொண்டார்கள்.

கொஞ்ச நாளாக சைவ சித்தாந்தம் பத்தி நிறைய புத்தகங்கள் படித்திருக்கிறேன் கூடிய விரைவில் தியானபீடத்தின் சார்பில் சைவசித்தாந்த கல்லூரியை எதிர்பார்க்கலாம்! அதற்கான திட்டங்கள் வேகமாக விரைவாகத் தீட்டப்பட்டுக்கொண்டிருக்கின்றன..   அப்போது ஆய்வு பண்ணிட்டிருந்தேன்..  சைவம் மொத்தம் பாப்புலரான அஞ்சு சம்பிரதாயங்களை பாகமாக உள்ளடக்கியது. சௌராஷ்ட்ரத்து லகுலீஷ சைவிசம்.. காஷ்மீரத்து தாந்திரீக சைவிசம்.. லிங்காயத் வீர சைவிசம்.. தமிழ்நாடு சைவ சித்தாந்த சம்பிரதாயம் மேற்கு வங்காளம், காமாக்யா, அஸ்ஸாம் போன்ற பகுதிகளில் பரவலாக இருக்கும் அகோர சைவம். இந்த 5 தான் மேஜரான சைவ சம்பிரதாயங்கள். இந்த ஐந்தையும் ஆழ்ந்து பார்த்தோமானால் எதையும் உயர்ந்தது தாழ்ந்தது மதிப்பிட வரல

ஆனால் கொடுமை என்னன்னா? இப்போ இந்த காலகட்டத்தில் இந்த ஐந்து சைவத்துல மிகக் குறைந்த நபர்கள் படிப்பது சைவசித்தாந்தம்தான். ரொம்ப கம்மிபேர்..  படிக்க ஆள் இல்லாததனால்  கல்லூரிகள் இல்லாம போச்சு! அதுமட்டுமில்லாமல், அதாவது மனிதனை மேம்படுத்தக்கூடிய அறிவாக அந்த சைவசித்தாந்தம் முன்னிறுத்தப்படாததும், முன்னிறுத்தினால் நிறுத்துபவர்களை மூக்கை உடைத்து அவர்கள் மடங்களுக்குள் முடக்குவதும் தொடர்ந்து தமிழ்நாட்டில் நடந்து கொண்டே இருப்பதால் இது ஒரு கொடுமையான சுழ்நிலை! ஒரு பெரிய ஒரு ஜென் ஞானியை ஒரு சீடன் கேட்கிறான் மனிதனுக்கு மோசமான நிலை எது?

அவர்கள் நீயே சொல்லப்பா! நீ என்ன மோசமான நிலையில் நினைக்கிற? அவன் சொல்றான் வைத்து சாப்பாடு இல்லாம இருக்கிறது! ஞானி சொல்றாரு இல்ல! இல்ல உடுத்திக் உடை இல்லாம இருக்கிறது? ஞானி சொல்றாரு இல்ல! தன்னுடைய பெயர் புகழ் எல்லாம் இழந்த அவமானப்படுவது? அதுவும் இல்லை.. வாழ்க்கையில் ஆன்மிக சக்திகளை கற்றுக்கொடுக்க ஒரு ஆசான் இல்லாமல் இருப்பது? அதுவும் இல்ல சீடன் குழப்பம் அடைந்து.. இதுக்கு மேல வேற என்ன இருக்க முடியும்? ஞானத்தை நமக்கு அளிக்கவரும் ஆசானின் வார்த்தைகளை ஏற்றுக்கொள்கிற மனப்பான்மை இல்லாது இருத்தல்!

உள்வாங்குகின்ற மனப்பாங்கு இல்லாது இருத்தல் அதனாலதான் நல்லா புரிஞ்சிகோங்க...   ‘இடித்து உரைக்க ஆள் இல்லாமல் போனதால்தான் கெடுப்பார் இன்றி, நம் தமிழ் இனம் தானே கெட்டழிந்து கொண்டிருக்கின்றது’ தற்கொலையும், மதுவுக்கு அடிமையும், அளவுக்கு மீறிய மனம் சார்ந்த பிரச்சனைகள் துக்கங்களும்.. சமீபமாக இணையத்தில் ஒரு ஆய்வு பார்த்தேன்.. இந்தியாவிலேயே அதிக அளவு விவாகரத்து தமிழ்நாட்டில்தான் நடக்குது.

விவாகரத்து பெற்றவர்கள் தமிழ்நாட்டுடைய 8.8% மக்கள்தொகையில் அப்படீன்னா புரியுதுங்களா

என்ன சொல்றேன்னு.. 100 பேரில் 8.8 பேர்! ஒரு சமுதாயமே, ஒரு இனமே விமர்சனத்தை ஏற்றுக் கொள்வதில்லை அப்படீங்கற ஒரு மனஅமைப்புக்குள்ள போனதுக்கு காரணம்,  அந்த இனத்தை வழிகாட்டிய தலைவர்கள்.

விமர்சனத்தை உள்வாங்குவதில்லை என்கிற சரியான..  சரியான வார்த்தை சரியானதில்லை சரியில்லாத ஒரு தன்மையோடு வாழ துவங்கியதுதான். மனநிலையை விமர்சனம் பண்ணியாகனம், தூக்கி போட்டாகனும். அந்த மனநிலையை. அந்த மனநிலையை விமர்சனம் பண்ணாலே கேட்கத் தயாராக இல்லாத மனிதர்களிடம் பேசுவது ஆபத்தானது!

இந்த தஞ்சாவுர் பிரகதீஸ்வரரை ஒரே ஒரு உதாரணமாகச் சொன்னேன், ஆனா அதுவே எல்லாம்னு தயவு செய்து நினைச்சுராதிங்க.. மதுரை கூடலழகர் கோவிலப் பாத்தா தஞ்சாவுர் கோயிலுக்கு செய்த வேலையில் குறைந்த பட்சம் பாதியாவது செஞ்சுதான் இருந்தாகனும் அவங்க!

நல்லா ஆழமா புரிஞ்சுக்கோங்க.. ஒவ்வொரு ஊர்ல இருக்கிற ஆலயமுமே அந்த காலகட்டத்தில் அந்த மக்கள் வாழ்ந்துவந்த ஒரு வளமான சிந்தனையோட்டத்தை கல்லிலே வடித்து வைத்துவிட்டு சென்று இருக்கின்றது! ஆலயம் சார்ந்த மக்கள், வாழ்க்கை முறை. ஆனா இன்னைக்கு ஒரு சிறிய விமர்சனத்தையோ கல்வியையோ விமர்சனத்தையோகூட தாங்கிக்கொள்ள தகுதி இல்லாதவர்களாக மாறிவிட்டார்கள். அதாவது எல்லா விமர்சனமுமே நம்மள அழிக்கனும்ங்கறதுக்கா வர்ரதில்ல..  அத விட்றலாம.் எல்லாத் தலைவர்களும் விமர்சனத்தை தாங்கி கொள்வதை நிறுத்தி விட்டார்கள், தலைவர்கள் நிறுத்தினால் மக்களும் விமர்சனத்தை தாங்கி கொள்வதை நிறுத்தி விட்டார்கள், மக்களும் விமர்சனத்தைத் தாங்குவதை நிறுத்தனதனாலு இந்த  இந்த உணர்வு மாற்றம் சார்ந்த கல்வி மக்களுக்கு கிடைக்காமல் போய்விட்டது. இப்ப மருத்துவத்துறைக்கு மிகப்பெரிய விரோதிகள் போலி மருத்துவர்கள், அதேமாதிரி இந்த ஆன்மீக ஞானத்தை மக்களுக்கு கொடுக்கின்ற துறைக்கு மிகப்பெரிய விரோதி யார்னா ஊடகத்துறை ரவுடிகள். அவங்க என்ன பண்றாங்க.. மத்தவங்கள தாக்குவதற்காகவே விமர்சனம் செய்கிறார்கள். உண்மையில் சரியான விமர்சனம் பண்றதில்லை, இந்த விமர்சனம் பண்றது அப்படிங்கறத ஒரு கருவிய மத்தவங்கள அழிக்கனும் என்பதற்காக யுஸ் பண்றாங்க. அப்ப என்ன அது யார் விமர்சனம் பண்ண வந்தாலும் எல்லா தலைவர்களும் பயப்படுறாங்க ஓ! இவன் என்னை அழக்க தான் வரனோ!? ஆழ்ந்து பார்த்தால் காரணம் எங்க இருக்குன்னு நீங்க கண்டுபிடிச்சிடலாம்! போலி மருத்துவர்களைப் பார்த்து மருத்துவர்கள் கிட்ட மக்கள் போக பயப்பட்றமாதிரி, விமர்சனம் என்கிற ஒரு ஆயுதத்தை மக்களை மற்றவர்களை அழிக்க உபயோகம் பன்ற இவங்களால நல்ல விஷயமாக சொல்லப்படறதுக்கா சொல்லப்படுகின்ற விமர்சனங்கள் ஏத்துக்ககூட தயாராக இல்லாத நிலைக்கு தலைவர்கள் போயிட்டாங்க. அதே நிலைக்கு மக்களும் போனாங்க. இப்ப நீங்க கேட்ட இந்த கேள்வி சித்தர்களும், ஆழ்வார்களும், நாயன்மார்களும் வாழ்ந்த பக்தி தமிழ் திருநாட்டில் இப்பொழுது பஞ்சமும் பங்கமும் நிகழ்கிறதே சுவாமிஜி! அதாவது உங்களை மேம்படுத்துவதற்காக விமர்சித்தல்! அழிப்பதற்காக பழிப்பது அல்ல... உங்களை விழிப்பதற்காக பழிப்பது! அழிக்கப் பழிக்கின்ற ரவுடிகள் நக்கீரன் மாதிரி ரவுடிகளால். உங்களை விழிக்க பழிப்பவர்களையும் நீங்கள் கேட்க மறந்துவிட்டீர்கள் ஒதுக்க துவங்கி விட்டீர்கள்! போலி மருத்துவர்களை ஒழிச்சாதான் நிஜ மருத்துவர்கள் மேல மக்களுக்கு நம்பிக்கை வரும்! அழிக்க பழிக்கும் நினைக்கும், அழிப்பதற்காகவே பழிக்கும் இந்த ரவுடிகள் ஒழிக்கப்பட்டால்தான், விழிப்பதற்காக.. உங்களை விழிக்க பழிக்கும் ஞானிகளின் வார்த்தைகளை உள் வாங்குவீர்கள். நமக்குத் தேவை சுந்தரேஸ்வரருடைய உபதேசங்கள் ஐயா.. நக்கீரன் உடைய குத்துறது இல்ல! திருவிளையாடல் படத்தில் வரும் வசனம் மாதிரி, சிலபேர் பாட்டெழுதி பெயர் வாங்குவார்கள்,  சிலபேர் குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்குவார்கள்,   ஆனால் இந்த குற்றம் கண்டுபிடித்து பெயர்வாங்குகின்ற அழிக்கப்பழிப்பவர்கள்,

ஒரு காலகட்டத்தில் என்ன பண்ணுவாங்க.. அளவுக்கு மீறிப் பழிச்சி பாட்டெழுதற அத்தனை பேரையும் அழிச்சிறனும்னு நினைக்கிறாங்க.! முழுமைத்தன்மையிலே நிலை பெற்றிருந்ததனால் சுந்தரேஸ்வரர் என்ன சொன்னாலும், செய்தாலும் அது மக்களுக்கு நன்மையாகும்.. முழுமைத் தன்மையை நிலைபெறாமல் தன் மீது ஆழமான வெறுப்பும் இருந்ததால நக்கீரன் என்ன சொன்னாலும் அது தவறு!

நல்லாப் புரிஞ்சிக்கோங்க..  நக்கீரன் என்ன சொன்னான் என்பதைவிட எந்த நிலையிலிருந்து சொன்னான் என்பதைப் பாருங்க.. ஒரு ஆழமான அகங்காரத்தில் இருந்து சொல்றான். அடிப்படையான ஒரு உண்மை அழிப்பதற்காக பழிக்கும் இந்த தீவிரவாத கும்பலால் உங்களை விழிக்கவைப்பதற்காக பழிப்பவர்களையும்  கேட்க நீங்கள் மறந்துவிட்டீர்கள்.. மறுத்து விட்டீர்கள்! அவர்களிடம் இருந்து உங்கள் வாழ்க்கைகளை மறைத்தும் விட்டீர்கள்!




Photos Of The Day:

Paduka Puja

Nature in the Aadheenam

Temple pictures

Swastimantra Pictures

Nithya Satsang

SarvaDarshan

Nithya Kriya Yoga - Darshan

Nithya Kriya Yoga_Swamiji Session

Nithya Kriya Yoga - Yoga

Photos Of The Day:

PadukaPuja

Temple

Nature

CrowdShots-Swastimantra-Pictures

Nithya-Satsang

SarvaDarshan

NKY-Swamiji-Session-Pictures

NKY-Darshan

NKY-Yoga-Pictures

Photos Of The Day:

Pratyaksha-Pada-Puja

Leela-Alankar

Satsang

Sarva-Darshan

Final-Blessings

IA-Banyan-Tree

IA-Darshan

Homa

Sacred-Arts

1--Padukapuja

IMG_1237_CMP_WM done IMG_1239_CMP_WM IMG_1266_CMP_WM IMG_1267_CMP_WM IMG_1341_CMP_WM done IMG_1342_CMP_WM done IMG_1343_CMP_WM done IMG_1344_CMP_WM done IMG_1345_CMP_WM done

10--NKY-Yoga-Pictures

IMG_1208_CMP_WM IMG_1212_CMP_WM IMG_1215_CMP_WM

2--Temple

IMG_1284_CMP_WM IMG_1287_CMP_WM IMG_1288_CMP_WM IMG_1289_CMP_WM IMG_1308_CMP_WM IMG_1309_CMP_WM IMG_1312_CMP_WM

6--SarvaDarshan

IMG_1497_CMP_WM IMG_1500_CMP_WM IMG_1501_CMP_WM IMG_1505_CMP_WM IMG_1506_CMP_WM IMG_1510_CMP_WM IMG_1515_CMP_WM IMG_1541_CMP_WM IMG_1542_CMP_WM IMG_1543_CMP_WM IMG_1545_CMP_WM IMG_1546_CMP_WM IMG_1548_CMP_WM IMG_1550_CMP_WM IMG_1553_CMP_WM IMG_1554_CMP_WM IMG_1555_CMP_WM IMG_1556_CMP_WM IMG_1557_CMP_WM IMG_1558_CMP_WM IMG_1559_CMP_WM IMG_1560_CMP_WM IMG_1561_CMP_WM IMG_1567_CMP_WM IMG_1568_CMP_WM IMG_1570_CMP_WM

7--NKY-Darshan

IMG_1330_CMP_WM IMG_1331_CMP_WM IMG_1517_CMP_WM IMG_1521_CMP_WM IMG_1522_CMP_WM IMG_1533_CMP_WM IMG_1534_CMP_WM IMG_1535_CMP_WM IMG_1578_CMP_WM IMG_1579_CMP_WM IMG_1582_CMP_WM IMG_1583_CMP_WM IMG_1584_CMP_WM IMG_1588_CMP_WM IMG_1589_CMP_WM IMG_1614_CMP_WM IMG_1615_CMP_WM IMG_1619_CMP_WM IMG_1625_CMP_WM IMG_1626_CMP_WM IMG_1630_CMP_WM IMG_1631_CMP_WM IMG_1634_CMP_WM IMG_1635_CMP_WM IMG_1641_CMP_WM IMG_1643_CMP_WM IMG_1644_CMP_WM IMG_1645_CMP_WM IMG_1646_CMP_WM IMG_1647_CMP_WM IMG_1648_CMP_WM IMG_1649_CMP_WM IMG_1650_CMP_WM IMG_1651_CMP_WM IMG_1654_CMP_WM IMG_1655_CMP_WM IMG_1656_CMP_WM IMG_1659_CMP_WM IMG_1661_CMP_WM IMG_1662_CMP_WM IMG_1663_CMP_WM IMG_1666_CMP_WM IMG_1667_CMP_WM

8--NKY-Swamiji-Session-Pictures

IMG_1332_CMP_WM IMG_1356_CMP_WM IMG_1357_CMP_WM IMG_1358_CMP_WM IMG_1359_CMP_WM IMG_1360_CMP_WM IMG_1361_CMP_WM IMG_1364_CMP_WM IMG_1365_CMP_WM IMG_1366_CMP_WM IMG_1369_CMP_WM IMG_1370_CMP_WM IMG_1371_CMP_WM IMG_1373_CMP_WM IMG_1375_CMP_WM IMG_1376_CMP_WM IMG_1377_CMP_WM IMG_1378_CMP_WM IMG_1379_CMP_WM IMG_1380_CMP_WM IMG_1381_CMP_WM IMG_1382_CMP_WM IMG_1383_CMP_WM IMG_1384_CMP_WM IMG_1400_CMP_WM IMG_1401_CMP_WM IMG_1402_CMP_WM IMG_1403_CMP_WM IMG_1404_CMP_WM IMG_1405_CMP_WM IMG_1407_CMP_WM IMG_1410_CMP_WM IMG_1412_CMP_WM IMG_1413_CMP_WM IMG_1414_CMP_WM IMG_1415_CMP_WM IMG_1418_CMP_WM IMG_1434_CMP_WM IMG_1435_CMP_WM IMG_1441_CMP_WM IMG_1453_CMP_WM IMG_1454_CMP_WM IMG_1475_CMP_WM IMG_1476_CMP_WM IMG_1487_CMP_WM IMG_1493_CMP_WM IMG_1494_CMP_WM

NKY-Darshan

NKY-Darshan_Photo_1000_IMG_1501_CMP_WM NKY-Darshan_Photo_1001_IMG_1505_CMP_WM NKY-Darshan_Photo_1002_IMG_1517_CMP_WM NKY-Darshan_Photo_1003_IMG_1521_CMP_WM NKY-Darshan_Photo_1004_IMG_1522_CMP_WM NKY-Darshan_Photo_1005_IMG_1533_CMP_WM NKY-Darshan_Photo_1006_IMG_1534_CMP_WM NKY-Darshan_Photo_1007_IMG_1535_CMP_WM NKY-Darshan_Photo_1008_IMG_1556_CMP_WM NKY-Darshan_Photo_1009_IMG_1557_CMP_WM NKY-Darshan_Photo_1010_IMG_1578_CMP_WM NKY-Darshan_Photo_1011_IMG_1579_CMP_WM NKY-Darshan_Photo_1012_IMG_1582_CMP_WM NKY-Darshan_Photo_1013_IMG_1583_CMP_WM NKY-Darshan_Photo_1014_IMG_1588_CMP_WM NKY-Darshan_Photo_1015_IMG_1589_CMP_WM NKY-Darshan_Photo_1016_IMG_1614_CMP_WM NKY-Darshan_Photo_1017_IMG_1615_CMP_WM NKY-Darshan_Photo_1018_IMG_1619_CMP_WM NKY-Darshan_Photo_1019_IMG_1625_CMP_WM NKY-Darshan_Photo_1020_IMG_1626_CMP_WM NKY-Darshan_Photo_1021_IMG_1630_CMP_WM NKY-Darshan_Photo_1022_IMG_1631_CMP_WM NKY-Darshan_Photo_1023_IMG_1634_CMP_WM NKY-Darshan_Photo_1024_IMG_1635_CMP_WM NKY-Darshan_Photo_1025_IMG_1641_CMP_WM NKY-Darshan_Photo_1026_IMG_1643_CMP_WM NKY-Darshan_Photo_1027_IMG_1644_CMP_WM NKY-Darshan_Photo_1028_IMG_1645_CMP_WM NKY-Darshan_Photo_1029_IMG_1646_CMP_WM NKY-Darshan_Photo_1030_IMG_1647_CMP_WM NKY-Darshan_Photo_1031_IMG_1648_CMP_WM NKY-Darshan_Photo_1032_IMG_1650_CMP_WM NKY-Darshan_Photo_1033_IMG_1651_CMP_WM NKY-Darshan_Photo_1034_IMG_1654_CMP_WM NKY-Darshan_Photo_1035_IMG_1655_CMP_WM NKY-Darshan_Photo_1036_IMG_1656_CMP_WM NKY-Darshan_Photo_1037_IMG_1659_CMP_WM NKY-Darshan_Photo_1038_IMG_1661_CMP_WM NKY-Darshan_Photo_1039_IMG_1662_CMP_WM NKY-Darshan_Photo_1040_IMG_1663_CMP_WM NKY-Darshan_Photo_1041_IMG_1666_CMP_WM NKY-Darshan_Photo_1042_IMG_1667_CMP_WM

NKY-Swamiji-Session

NKY-Swamiji-Session_Photo_1000_IMG_1356_CMP_WM NKY-Swamiji-Session_Photo_1001_IMG_1357_CMP_WM NKY-Swamiji-Session_Photo_1002_IMG_1359_CMP_WM NKY-Swamiji-Session_Photo_1003_IMG_1360_CMP_WM NKY-Swamiji-Session_Photo_1004_IMG_1361_CMP_WM NKY-Swamiji-Session_Photo_1005_IMG_1364_CMP_WM NKY-Swamiji-Session_Photo_1006_IMG_1365_CMP_WM NKY-Swamiji-Session_Photo_1007_IMG_1366_CMP_WM NKY-Swamiji-Session_Photo_1008_IMG_1369_CMP_WM NKY-Swamiji-Session_Photo_1009_IMG_1370_CMP_WM NKY-Swamiji-Session_Photo_1010_IMG_1371_CMP_WM NKY-Swamiji-Session_Photo_1011_IMG_1373_CMP_WM NKY-Swamiji-Session_Photo_1012_IMG_1375_CMP_WM NKY-Swamiji-Session_Photo_1013_IMG_1376_CMP_WM NKY-Swamiji-Session_Photo_1014_IMG_1377_CMP_WM NKY-Swamiji-Session_Photo_1015_IMG_1378_CMP_WM NKY-Swamiji-Session_Photo_1016_IMG_1379_CMP_WM NKY-Swamiji-Session_Photo_1017_IMG_1380_CMP_WM NKY-Swamiji-Session_Photo_1018_IMG_1381_CMP_WM NKY-Swamiji-Session_Photo_1019_IMG_1382_CMP_WM NKY-Swamiji-Session_Photo_1020_IMG_1383_CMP_WM NKY-Swamiji-Session_Photo_1021_IMG_1384_CMP_WM NKY-Swamiji-Session_Photo_1022_IMG_1401_CMP_WM NKY-Swamiji-Session_Photo_1023_IMG_1402_CMP_WM NKY-Swamiji-Session_Photo_1024_IMG_1403_CMP_WM NKY-Swamiji-Session_Photo_1025_IMG_1407_CMP_WM NKY-Swamiji-Session_Photo_1026_IMG_1410_CMP_WM NKY-Swamiji-Session_Photo_1027_IMG_1412_CMP_WM NKY-Swamiji-Session_Photo_1028_IMG_1413_CMP_WM NKY-Swamiji-Session_Photo_1029_IMG_1414_CMP_WM NKY-Swamiji-Session_Photo_1030_IMG_1415_CMP_WM NKY-Swamiji-Session_Photo_1031_IMG_1441_CMP_WM NKY-Swamiji-Session_Photo_1032_IMG_1454_CMP_WM NKY-Swamiji-Session_Photo_1033_IMG_1475_CMP_WM NKY-Swamiji-Session_Photo_1034_IMG_1476_CMP_WM NKY-Swamiji-Session_Photo_1035_IMG_1487_CMP_WM NKY-Swamiji-Session_Photo_1036_IMG_1493_CMP_WM NKY-Swamiji-Session_Photo_1037_IMG_1494_CMP_WM

NKY-Yoga

NKY-Yoga_Photo_1000_IMG_1186_CMP_WM NKY-Yoga_Photo_1001_IMG_1212_CMP_WM NKY-Yoga_Photo_1002_IMG_1215_CMP_WM

Paduka-Puja

Paduka-Puja_Photo_1000_IMG_1239_CMP_WM Paduka-Puja_Photo_1001_IMG_1255_CMP_WM Paduka-Puja_Photo_1002_IMG_1257_CMP_WM Paduka-Puja_Photo_1003_IMG_1266_CMP_WM Paduka-Puja_Photo_1004_IMG_1267_CMP_WM

Satsang

Satsang_Photo_1000_IMG_1330_CMP_WM Satsang_Photo_1001_IMG_1331_CMP_WM Satsang_Photo_1002_IMG_1332_CMP_WM

Temple

Temple_Photo_1000_IMG_1284_CMP_WM Temple_Photo_1001_IMG_1287_CMP_WM Temple_Photo_1002_IMG_1288_CMP_WM Temple_Photo_1003_IMG_1289_CMP_WM Temple_Photo_1004_IMG_1292_CMP_WM Temple_Photo_1005_IMG_1308_CMP_WM Temple_Photo_1006_IMG_1309_CMP_WM Temple_Photo_1007_IMG_1311_CMP_WM Temple_Photo_1008_IMG_1312_CMP_WM Temple_Photo_1009_IMG_1325_CMP_WM Temple_Photo_1010_IMG_1326_CMP_WM