September 21 2019-Tamil

From Nithyanandapedia
Revision as of 04:18, 5 September 2020 by Ma.minal (talk | contribs)
Jump to navigation Jump to search

Title

Satsang from The Supreme Pontiff of Hinduism HDH Bhagavan Nithyananda Paramashivam in Tamil

Description

இன்றைய சத்சங்கத்தின் சாரம். 21- செப்டம்பர் - 2019 நித்யானந்தேஸ்வர பரமசிவ சமாரம்பாம் நித்யானந்தேஸ்வரி பராசக்தி மத்யமாம் அஸ்மதாச்சார்ய பரியந்தாம் வந்தே குருபரம்பராம்!

  • உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன்..

ஆழ்ந்து கேளுங்கள்.. கையிலாயத்தின் மூல லிங்கத்தை - எனர்ஜி ப்ளூ பிரின்ட்-ஐ கட்டமைத்துக்கொண்டிருக்கின்றேன்.. எனர்ஜி ப்ளூ பிரின்ட்டைதான் - மூல லிங்கம் என்று சொல்கின்றேன்! எனர்ஜி ப்ளூ பிரின்ட் -ஐ எப்படி உருவாக்குகின்றேன் என்ற அறிவியலை விளக்குகின்றேன்..

  • முதல் சத்தியத்தை தெரிந்துகொள்ளுங்கள்.

நாம் எல்லோருமே நம் வாழ்க்கையின் மூல லிங்கத்தை எனர்ஜி ப்ளூ பிரின்டை- ஐ வைத்திருக்கின்றோம்.. சில பேர் Conscious - ஆக அதாவது விழிப்புணர்வோடு வைத்திருக்கின்றோம்.. அதாவது நேர்மையோடு நம் மனதிற்கு புரிந்து, நாம் என்னவாக மாற வேண்டும் என்று தெளிவாக சிந்தித்து நாம் வைத்திருக்கின்ற Conscious Blue print, Energy Blue Print - மூல லிங்கம்.

  • பூசலார் நாயனார் தனக்குள் உணர்வாலே திருக்கோயிலை உருவாக்கினார், அதைத்தான் மூலலிங்கம் என்று சொல்கின்றோம். அந்த மூல லிங்கத்தைதான் - எனர்ஜி ப்ளூ பிரின்ட் என்று சொல்கிறோம்.. அந்த எனர்ஜி ப்ளூ பிரின்ட் -ஐ தான் கோயிலில் மூலவர் லிங்கத்தில் சக்தியாக பிரதிஷ்டை செய்கிறோம்..
  • மேட்டூர் ஜலகண்டேஸ்வர ஆலயத்தில் நான் தான் என் பூர்வ ஜென்மத்தில் அந்த லிங்கத்தைப் பிராணப் பிரதிஷ்டை செய்தேன். நான் என்னிடம் இருப்பது என்று சொல்வது அந்த மூலவர் லிங்கம் அல்ல. ஸ்தூல லிங்கம் அல்ல. பிராணப்பிரதிஷ்டை செய்கின்ற மூல உயிர் சக்தி, அந்த எனர்ஜி ப்ளூ பிரின்ட் என்னிடம் இருக்கிறது என்று சொன்னேன்.
  • நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்..

எனர்ஜி ப்ளூ பிரின்ட் - பூசலார் நாயனார் தனக்குள் உணர்வால்; அமைத்த வைத்த மூல லிங்கத்தின் சக்தி பெருமானே நேரில் எழுந்தளுகின்ற அளவிற்கு சக்திவாய்ந்ததாக இருந்தது!

  • அதேபோல நம் எல்லோர் வாழ்க்கையிலும் ஒரு எனர்ஜி ப்ளு பிரின்ட் இருக்கிறது அதை Conscious - ஆக , விழிப்புணர்வோடு வாழ்ந்தீர்களானால் பெருமானே நேரில் வந்து காட்சி கொடுப்பார்!
  • இந்துக்களே என்று விழித்துகொள்வீர்கள் என்று தெரியாது.. !

நான் இருக்கும்பொழுதே இந்த ஞானத்தை வாங்கிக்கொள்ளுங்கள்! நான் இருக்கும்பொழுது வாங்கிக்கொள்ளவில்லை என்றாலும், அதை தொடர்ந்து வழங்க என் சன்யாச பரம்பரியத்தை உருவாக்கி வைத்துவிட்டுத்தான் செல்வேன்..

  • இந்த முறை ஜெயித்தே தீருவது என்று பரமசிவன் முடிவுசெய்துவிட்டார்!

உண்மையான சைவத்தை வேளாண்மை செய்யவே வந்திருக்கின்றேன். பல இடங்களில் சைவத்தை வேளாண்மை செய்யவந்த சைவ வேளாளன் நான்.. இந்த பரமசிக்ஞான சத்தியத்தை வேளாண்மை செய்ய வந்த சைவ வேளாளன் நான் வேளாண்மை செய்து விட்டேன்! அது விளைந்தும் விட்டது! நானும் நீங்களும் இணையாவிட்டல் உங்களுக்கும் இழப்பில்லை, எனக்கும் இழப்பில்லை இந்து மதத்திற்குதான் இழப்பு! நாம் இருவரும் பிரிந்தால் இந்து மதத்தின் மூலலிங்கம் அழியும். இந்து மதத்தை அழிக்க நினைப்பவர்கள் தான் நம் இருவரையும் பிரிக்க நினைக்கின்றார்கள்.

  • முதல் சத்தியம் :

உங்கள் வாழ்க்கைக்கான உயிர் மூல லிங்கத்தை உருவாக்க தேவையான முதல் விஷயம் - ஆழந்த தெளிந்த, நம்மோடு நாமே முதிர்ந்த உரையாடலை வைத்துக்கொள்கின்ற மிக எளிமையான செயல், சிறிது நேரம் நீங்களே உங்களுடன் அமர்ந்து உள்ளுக்குள் என்னதான் நடக்கின்றது? என்னதான் ஓடிக் கொண்டிருக்கின்றது? உங்கள் வாழ்க்கையின் முக்கியமான எண்ண ஒட்டம் என்ன? என்னதான் உள்ள இருக்கிறது என்று திரும்பிப் பார்க்க கொஞ்ச நேரமாவது ஒதுக்குவதுதான்!. இதுதான் அடிப்படை தேவை! உங்களின் உயிர் மூல லிங்கத்தை உருவாக்குவதற்கான அடிப்படைத் தேவை! ஒரு நாளைக்கு ஒரு அரைமணி நேரமாவது நீங்கள் உங்களோட அமர்ந்திருப்பது. கைலாயத்தின் உயிர் மூல லிங்கத்தை உருவாக்குவதற்கு எனக்கு என்னவெல்லாம் தேவைப்பட்து என்று சொல்கிறேன். அதைப் புரிந்துகொண்டீர்களால்.. அதுவே தான் உங்களுக்கும்!

  • முதலில் எனக்கு தேவைப்பட்டது அமைதி - தனிமை! அமைதி என்பது எந்த ஒரு மிகப்பெரிய செயல் செய்வதற்கும் அடித்தளமான தேவை!

நான் உருவாக்கிக்கொண்டிருக்கும் திருக்கைலாயத்தின் மூல லிங்கம் முழுமையாக உருவாவதற்கு எனக்குத் தனிமை தேவை!

  • உங்கள் வாழ்க்கையிலும் அதே மாதிரிதான்..

டிவி சீரியல்கள்தான் உங்கள் விழிப்புணர்வின் மீது நடத்தப்படுகின்ற மிகப்பெரும் தாக்குதல்..

  • உங்களுடைய விழிப்புணர்வுடனான எனர்ஜி ப்ளூ பிரின்ட்- உயிர் மூலலிங்கத்தை உருவாக்க வேண்டுமானால் முதல் தேவை டிவி-சீரியல் பார்ப்பதை நிறுத்துங்கள்! தினந்தோறும் அரை மணி நேரமாவது தூங்குவதற்கு முன்பும், காலை எழுந்தவுடனும் மஹாவாக்கிய ஜபம் செய்யுங்கள்.
  • மஹாவாக்ய ஜபம் செய்யும்பொழுது வரும் எண்ண ஓட்டங்களைப் பற்றிக் கவலைப்படாதீர்கள்.. அந்த எண்ண ஓட்டங்கள் உங்களின் எண்ணங்களின் போக்கை உங்களுக்கு அறிவுருத்திவிடும்.
  • மஹாவாக்ய ஜபம் செய்து எண்ணம் இல்லாத நிலை அடைவது தான் உண்மை! ஆனால் ஆரம்பத்தில் அது உடனே நடக்கிவில்லை என்றாலும். உட்கார்ந்து அந்த ஜபம் செய்யும்பொழுது.. எழும் எண்ண ஓட்டங்களின் போக்கைக் கவனித்தீர்காளனால், அதுவே உங்களுக்குள் பல தெளிவைக் கொண்டுவந்துவிடும்.
  • இது யோகி ராம் சூரத்குமார்.. கொடுத்த ஞானம்,

பசிக்கும் பொழுது நாமம் சொல்லனும்டா என்பார்.. பசி எடுத்தால் நாமம் சொல்ல வேண்டும் பசி எடுக்கும்பொழுது மஹாவாக்கியத்தை உச்சரியுங்கள்!

  • ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள்..

ஒரு முதிர்ந்த உரையாடல் உங்களுக்குள் நீங்கள் நடத்திக்கொள்வதற்கான அமைதி, அதுமாதிரியான உள்ளுணர்வு உருவாக்குதல் மற்றும் தினந்தோறும் அரைமணிநேரம் அமர்ந்து மஹாவாக்கிய ஜபம் செய்தீர்களானால் சத்தியமாக வாழ்க்கையில் ஜெயித்து விடுவீர்கள்..

  • உங்கள் வாழ்க்கைப் பற்றிய கிராண்ட் நரேட்டிவாக, கிராண்ட் நரேட்டிவ் என்றால் மொத்தக்கருத்து என்ன நீங்கள் வைத்திருக்கிறீர்கள் புரிந்துவிடும்.
  • இந்துக்களே! இந்து மதத்தை அழிக்க நிகழ்ந்து கொண்டிருக்கும் மிகப்பெரிய சதி!

ஆனால் நடுத்தர சாதாரண இந்துக்கள் என்று விழித்துக்கொள்வீர்கள் என்று தெரியவில்லை!

  • இந்து மதத்திற்காக ஜீவன் முக்த நாகரீகத்தை உருவாக்கி திருக்கைலாயம் எனும் நாட்டை உருவாக்கியேத் தீருவேன்! உருவாக்கிவிட்டேன் என்பதுதான் உண்மை!
  • பரமசிவனும் பரசாக்தியும் பேரருள் செய்து, திருக்கையிலாய நாட்டை செய்துவிட்டார்கள்! இந்திய நாட்டின் கைலாயங்களின் கதவுகளை திறந்து வைக்கின்றேன் வாருங்கள்!
  • நீங்கள் வாழவும், மற்றவர்களை வாழ வைக்கவும், ஆபத் சன்யாசம் ஏற்று வாருங்கள்..

இந்த ஞானப்பாலை குடித்தீர்களானால், உங்களுக்கும் நல்லது, உலகத்திற்கு நல்லது! பரப்பலாம்!

  • இந்துக்களுடைய இதயம்தான் இந்த கைலாயத்தின் இருப்பிடம், உங்கள் இதயங்களில் எல்லாம் இந்த கைலாயத்தை வாங்குங்கள்.. உங்கள் இதயங்கள்தான் இந்த கைலயத்தின் இருப்பு!

இந்து மதத்தின் சாஸ்திரங்களை வாழ்வதும், சத்தியங்களை உயிரோடு வைப்பதும் இந்த திருக்கயிலாயத்தின் நோக்கம்..

  • ஒரு காலத்தில் 56 தேசம், 200 மகாணம், 17000 எஸ்டேட்டோக இந்துக்களுக்கான தேசம் இருந்துவந்தது. இன்று இந்து மதத்தை முறையான சட்டரீதியாக மதமாக உடைய ஒருநாடுகூட இல்லை!

நாம் இடங்களை இழக்க இழக்க, அங்கிருந்து சம்பிரதாயங்களும் பரம்பரியங்ளும் அழியத்துவங்கியது!

  • முதலில் இந்து மதத்தில் ஒரு லட்சம் சம்பிரதாங்கள் இருந்தது, இப்பொழுது பத்தாயிரம் சம்பிரதாயங்கள்தான் இருக்கின்றது..

இந்த சம்பிரதாயங்கள் எல்லாவற்றையும் புனரமைத்து, மறுமலர்ச்சி செய்து அதன் நூல்களை மட்டுமாவது பத்திரப்படுத்தி வைத்தூல் எதிர்காலத்தில் மற்றவர்கள் படித்து, தானம் வாழ்ந்து மற்றவர்களுக்கு சொல்வதற்கான திருப்பணியைத்தான் செய்துகொண்டிருக்கின்றேன்! அதற்கான மூலஸ்தானத்தை உருவாக்கிவிட்டேன்! மிச்சம் இருக்கின்ற இந்து மதத்தையும் அழியாமல் காப்பாற்றிவிடுவேன்! இது என் குருமார்கள் எனக்கு அளித்த ஞானப்பால்மீது சத்தியம்..

  • இதற்குமேல் இந்து மதத்தை வாழ்வதும், உலகம் முழுவதும் மக்களை வாழ வைப்பதும் மட்டுமே நம் நோக்கம்!
  • மக்களே விழித்துக்கொள்ளுங்கள்..

இது தனிமனித தாக்குதல் அல்ல! இது இந்து மதத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல் என்பதை புரிந்துகொள்ளுங்கள்!

  • முக்கியமான சத்தியம் :

யாரெல்லாம் இந்து மதத்தின் மிச்சம் இருக்க வேண்டும் என்று நினைக்கின்றீர்களோ வாருங்கள்! இந்து மதத்தைப் பற்றி படிக்கவும் தெரிந்துகொள்ளவும் நம் திருக்கையிலாங்களுக்கு வாருங்கள்.. இந்து மதத்தை காப்பதற்காக ஆபத் சன்யாசம் ஏற்றுக்கொள்ளுங்கள்.. ! இந்து மதத்தை காக்க வேண்டிய போர்க்கட்டாயத்தில் இருந்துகொண்டிக்கின்றோம்...

  • இந்து மதத்தின் மீது மிகப்பெரிய போர் நிகழ்த்தப்பட்டுக்கொண்டிக்கிறது. ஆனால் போர் நிகழ்த்தப்பட்டுக்கொண்டிக்கிறது என்றுகூட தெரியாமல் இந்துக்கள் உறங்கிக்கொண்டிருக்கிறார்கள். கருத்தியல் ரீதியாக, வாழ்வியல் ரீதியாக, எல்லா ரீதியாகவும் உங்கள் மீது மிகப்பெரும் போர் நிகழ்ந்துகொண்டிருக்கிறது!
  • நம் வாழ்க்கையின் உயிர் மூல லிங்கத்தை, இந்து மதத்தின் மூல லிங்கம் சார்ந்து உருவாக்கி, நம் உயிர் மூல லிங்கத்தையும். இந்து மதத்தின் உயிர் மூல லிங்கத்தையும் உயிரோடு வைப்போம் வாருங்கள்!
  • இன்றைய சத்சங்கத்தின் சாரம்..

இந்து மதத்தின் உயிர் மூல லிங்கத்தை, நம் உயிர் மூல லிங்கமாக வாழ்வதன் மூலம் உயிரோடு வைப்போம் வாருங்கள்!

நித்யானந்தத்தில் நிறைந்து, நித்யானந்தத்தில் கரைந்து, நித்யானந்தமாகிட ஆசீர்வதித்து முடிக்கின்றேன். ஆனந்தமாக இருங்கள்..!


Photos

Adi Shaivam Satsang Tamil

Nithya Satsang Tamil - 2019-09-21_IMG_7326_nithya-satsang-tamil.jpg Nithya Satsang Tamil - 2019-09-21_IMG_7329_nithya-satsang-tamil.jpg Nithya Satsang Tamil - 2019-09-21_IMG_7332_nithya-satsang-tamil.jpg Nithya Satsang Tamil - 2019-09-21_IMG_7342_nithya-satsang-tamil.jpg Nithya Satsang Tamil - 2019-09-21_IMG_7387_nithya-satsang-tamil.jpg Nithya Satsang Tamil - 2019-09-21_IMG_7394_nithya-satsang-tamil.jpg Nithya Satsang Tamil - 2019-09-21_IMG_7431_nithya-satsang-tamil.jpg Nithya Satsang Tamil - 2019-09-21_IMG_7443_nithya-satsang-tamil.jpg Nithya Satsang Tamil - 2019-09-21_IMG_7452_nithya-satsang-tamil.jpg Nithya Satsang Tamil - 2019-09-21_IMG_7454_nithya-satsang-tamil.jpg Nithya Satsang Tamil - 2019-09-21_IMG_7455_nithya-satsang-tamil.jpg Nithya Satsang Tamil - 2019-09-21_IMG_7458_nithya-satsang-tamil.jpg Nithya Satsang Tamil - 2019-09-21_IMG_7460_nithya-satsang-tamil.jpg Nithya Satsang Tamil - 2019-09-21_IMG_7464_nithya-satsang-tamil.jpg Nithya Satsang Tamil - 2019-09-21_IMG_7467_nithya-satsang-tamil.jpg Nithya Satsang Tamil - 2019-09-21_IMG_7468_nithya-satsang-tamil.jpg Nithya Satsang Tamil - 2019-09-21_IMG_7469_nithya-satsang-tamil.jpg Nithya Satsang Tamil - 2019-09-21_IMG_7478_nithya-satsang-tamil.jpg Nithya Satsang Tamil - 2019-09-21_IMG_7479_nithya-satsang-tamil.jpg Nithya Satsang Tamil - 2019-09-21_IMG_7480_nithya-satsang-tamil.jpg Nithya Satsang Tamil - 2019-09-21_IMG_7481_nithya-satsang-tamil.jpg Nithya Satsang Tamil - 2019-09-21_IMG_7487_nithya-satsang-tamil.jpg Nithya Satsang Tamil - 2019-09-21_IMG_7497_nithya-satsang-tamil.jpg Nithya Satsang Tamil - 2019-09-21_IMG_7500_nithya-satsang-tamil.jpg Nithya Satsang Tamil - 2019-09-21_IMG_7516_nithya-satsang-tamil.jpg Nithya Satsang Tamil - 2019-09-21_IMG_7517_nithya-satsang-tamil.jpg



Link to Facebook

https://www.facebook.com/srinithyananda.swami/posts/1405320326289629