November 19 2015
Title:
Aadhi Saivam, Bhaktiyin Shakti (Tamil) ஆதி சைவம் பக்தியின் சக்தி Day 04
Description
The 19th November, 2015 Satsang in Tamil delivered by Paramahamsa Nithyananda
Watch, share and like the video's and Subscribe to our channel to be notified of the next upload. click http://bit.ly/20j90wr to subscribe.
Website and Social Media: http://www.nithyananda.org http://www.nithyananda.tv http://www.innerawakening.org https://twitter.com/SriNithyananda https://www.facebook.com/ParamahamsaN...
Paramashivoham: 22-day Ultimate Spiritual Journey with the Avatar HDH Nithyananda Paramashivam Learn more: https://paramashivoham.nithyananda.org
Link to Video:
Link to Video:
Transcript in Tamil
உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கிறேன். இருமுனை காணொலி காட்சி வழியாகவும் நித்யானந்தா தொலைகாட்சி வழியாகவும், எஸ்டிவி தொலைகாட்சி, வுரநெ6 தொலைகாட்சி வழியாகவும் ஆதிசைவம் என்னும் வாழ்வியல் சத்தியத்தைப் பற்றி இறைத்தன்மையை அனுபவம் ஆக்கிக்கொள்ள இந்த இனிய இரவினில் எங்களோடு இயைந்து அமர்ந்திருக்கும் உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கிறேன். கடந்த சில நாட்களாக, ஆதிசைவம் என்னும் வாழ்வியல் முறையை அறிமுகம் செய்து, அதன் அங்கங்களான சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் அமைப்புக்களையும் அறிமுகம் செய்து, இவைகள் சார்ந்து பொதுவாக இருக்கும் சந்தேகங்கள், குழப்பங்கள் போன்றவற்றிற்கும் தௌிவையும், விடைகளையும் அளித்து, அளிக்கப்பட்ட தௌிவு, விடைகள், இவை சார்ந்து இப்பொழுது வந்திருக்கும் தர்க்க, குதர்க்க, விதர்க்க வாதங்கள், கேள்விகளுக்கு இன்று விடை காண முயற்சிப்போம். நேற்று, தம்பிரான் தோழன், பெருமான் சுந்தரன் வாழ்வை வரி வடிவாக்கி விவரித்தோம். தர்க்கரீதியாக கேட்கப்பட்ட சில கேள்விகள், உலகம் முழுவதிலிருந்து பார்க்கும் அன்பர்கள், தங்களுடைய கேள்விகளை தொலைக்காட்சியில் காணும் எண்ணிற்கு தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம். அதை செய்துகொண்டிருக்கிறார்கள். அதில் வந்த தர்க்க ரீதியான சில கேள்விகள்.. இறைவனையே நேரில் தரிசித்த சுந்தரர் ஏன் சாதாரண ஆசைகளில் வீழ்ந்தார்? தர்க்க ரீதியான கேள்வி. ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள், சுந்தரப்பெருமான் இறைவனுக்கு அருகாமையில் கைக்கலகு தாங்கும் திருப்பணி செய்து வரும் சாமீப்ய முக்தி பெற்ற அடியார். திருநீற்று பெட்டகமான திருநீற்று ஆலயம் என்று சொல்லப்படும் சொல்லப்படும் கைக்கலகு தாங்கும் திருப்பணி. பெருமானுக்கே கைக்கலவு தாங்கும் திருப்பணி செய்பவர். ஒரு நாள் காலை, பெருமான் திருமுடியிலே மலர் சுட்டுவதற்கா, கைலாயத்தின் நந்தவனத்திலே மலர் பரிக்கச்சென்றார். சென்ற இடத்தில், தேவியாரின் இரண்டு தாசிமார்கள், சேடிமார்கள், மலர் பரிக்க வந்திருந்தார்கள். அவர்கள் அழகில் இவர் மயங்கினார், இவருடைய அழகில் அவர்கள் மயங்கினார்கள். மனம் மீண்டு மீண்டும் நாதனின் சந்நிதிக்கு வந்த பொழுது, பறித்து வந்த மலரிலேயே சுந்தரனின் எண்ணத்தையும் கண்டார் எம்பெருமான். தொடும் பொருளில் தொட்டவன் எண்ணமும் ஒட்டியிருக்கும். மலர் கண்டதும், அதில் மலர்ந்த இரண்டு மங்கையரின் முகத்தையும் கண்டார் எம்பெருமான். கண்டதும் கேட்டார், சுந்தரா இருவரையும் கண்டாயா? நாணி குறுகி வெட்கத்தோடு தலை கவிழ்ந்து தம்பிரான் தோழன் நிற்க கயிலை நாதனோ "அஞ்சாதே அப்பனே! செல்வாய் புவுலகிற்கு, சிறப்பொடு இருபெண்ணோடும் வாழ்ந்து, கொண்ட மோகம் தணிந்த பின் மீண்டும் வருவாய்" என்றார். கேட்டதும், உளமெலாம் நடுநடுங்கினார் சுந்தரர். "ஐயகோ, ஒரு பெண்ணின் மோகமா, பெண்ணின் எண்ணமா, சாமீப்ய முக்தியிலிருக்கும் என்னை தள்ளி வைக்கும் சக்தி வாய்ந்தது?" சாயுஜ்யம் அடையும்வரை, எது வேண்டுமானாலும் நம்மை கீழ் இறக்கலாம் என்பதற்கு சாட்சி இந்த நிகழ்வு. இரண்டற இறைவனோடு ஒன்றிவிடும் சாயுஜ்யமான ஜீவன் முக்தி அமையும் வரை, எது வேண்டுமானாலும் நம்மை கீழ் இழுத்துவிடலாம் என்பதற்கான சாட்சி. எப்படியானாலும் சரி, ஒரு வினாடி மயங்கினார் என்பது உண்மைதான், ஆனால், உளம் முழுவதும் இறைவன் பாகமல்லவா? அதனால், நடுநடுங்கினாலும், வரமொன்று கேட்கிறார், "அப்பனே! பிறவாமை வேண்டியே வந்தேன் பிறந்தாலும், உன்னை மறவாமை வேண்டும். அங்கு செல்லும் பொழுதும், ஆபத்தில் நீயே வந்து, நானே மறுத்தாலும்.. நீயே வந்து என்னை தடுத்தாட்கொண்டிடல் வேண்டும்" என்ற வரம் கேட்டு வாங்கிக்கொள்கிறார். அப்பனும்.. "ஆகட்டும் அப்படியே" என்று அருளி விடுகின்றார். தம்பிரான் தோழனல்லவா? பக்கத்தில் இருந்து பணிவிடை செய்தவன், அவன் கருணையின் ஆழம் தெரிந்தவன். பெருமான் கருணையின் ஆழம் தெரிந்தவர்களுக்கே தவறு செய்யும் தைரியம் வந்துவிடுகின்றது. எல்லா இடத்திலும் நடக்கற ஒரு நிகழ்ச்சி. பெருமான் கருணையின் ஆழம் தெரிந்தவர்களுக்கு தவறு செய்யும் தைரியம் வந்துவிடுகின்ற ஏனென்றால் எப்படியும் அவன் ஏற்றுக்கொள்வான். தம்பிரான் தோழன் சுந்தர மூர்த்தி பெருமான் திருமேனி தாங்கியதே, உடல் தாங்கியதே, இந்த இரண்டு பெண்களின் மீதும் ஏற்பட்ட காமம் தணிந்து வாழ்ந்து முடித்து மீண்டும் தன் சிவா சாமீப்ய முக்தி நிலையான பெருமானின் அணுக்குத் தொண்டு செய்யும் நிலைக்கு சென்றிட வேண்டும் என்பதற்காகத்தான். பிறவியின் நோக்கமே இந்த இச்சையை வாழ்ந்து தீர்ந்து முடிக்க வேண்டும் என்பது. அதனால் தான், இரண்டு பெண்களின் மீதும் காதல் வயப்பட்டார். காரணமே அது என்பதனால், இறைவனைக் கண்டபின்னும் காதல் வயப்பட்டார். தர்க்க ரீதியாக வந்த கேள்வி இது, அதனால் அதற்கு இதுதான் விடை. அடுத்து, விதர்க்க ரீதியான நம்பிக்கை இருக்கின்ற, இந்த சத்தியங்களைப் புரிந்துகொள்கின்ற அளவுக்கு பகுத்து, அறிந்துகொள்வதற்காக பகுத்தறியும் சில அன்பர்களிடமிருந்து வந்த கேள்விகள் பெருமான் தடுத்தாட்கொண்ட பின்பும், இரண்டு மனைவியரை மணந்துகொண்டு, ஒருவரின் உத்தரவு பெறாமலேயே இரண்டாம் திருமணம் செய்துகொண்டு, இது சமூக ஒழுக்கத்திற்கு எதிரானதல்லவா? இது சரியா? என்று, விதர்க்கம் இருக்கின்ற சில பக்தர்கள் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், சுந்தரரை போன்றதொரு இறைவனோடேயே விளையாடித்திரியும் ஒருவருடைய வாழ்கையை, நம்முடைய சாதாரண மிகவும் தாழ்ந்த மனத்தைக் கொண்டு, அது சொல்லுகின்ற சரி, தவறுகளை வைத்துக்கொண்டு, எடை போடுவது சாத்தியம் இல்லை. அது சரியும் இல்லை. அவர் இருக்கின்ற உணர்வு நிலை, நாம் இருக்கின்ற உணர்வு நிலை, இதைப்பார்தோமானால், சாதாரண நம்முடைய சரி - தவறுகளைக்கொண்டு, அவரைஎடை போட்டுவிடும் மிகப்பெரிய தவறைச் செய்துவிட வேண்டாம். கருத்துச் சுதந்திரம் என்ற பெயராலேயே ஒரு சில முட்டாள்கள், ஞான சம்பந்தப்பெருந்தகையை மிகுந்த அவதூறு செய்து எழுதியிருக்கும் சில நாவல்கள், புதினங்கள், கட்டுரைகள் அவரவர்கள் மனத்திலிருக்கும் வக்கிரத்தை வௌிப்படுத்தியிருக்கின்றனவே தவிர, ஞானசம்பந்தர் போன்றதொரு பெரிய மகானை நம்முடைய சாதாரண மனம் சார்ந்து மதிப்பிடவோ, ஒப்பிடவோ இயலவே இயலாது. அதேபோல், சுந்தரமூர்த்தி பெருமானின் வாழ்க்கையையும் சாதாரண லாப நஷ்டங்களில், நன்மை தீமைகளில், கொடுக்கல் வாங்கலில், வலி சுகத்தில், துக்கம் ஆனந்தத்தில் உழல்கின்ற மனம் எடைபோட இயலாது. சாத்தியம் இல்லாதது. விதர்க்கத்தால் ஏற்கனவே பக்தி உங்களிடம் இருப்பதனால், சந்தேகம் மட்டும் தௌிய வேண்டும் என்ற அன்பர்களுக்கு இது பதில். நம்முடைய சாதாரண மனம் கொண்டு அவருடைய செயல்களை எடைபோட இயலாது. எடை போட வேண்டாம். அடுத்து, குதர்க்கத்தால் வந்த சில கேள்விகள் - இந்த குதர்க்கவாதிகளுடைய பெரிய பிரச்சினையே என்னவென்றால், அவர்கள் கேள்விகள் கேட்பதில்லை, அவர்களுடைய முடிவை நம் மீது திணிப்பார்கள். குதர்க்கவாதிகளுடைய சில குதர்க்க கேள்விகள், நான் நினைக்கிறேன் - மடமையை ஒழிக்காத, மடங்களினுடைய தலைமையை மட்டும் பிடித்த சில பேருடைய சீடர்களகாக இருக்கலாம் என்று நினைக்கின்றேன். அல்லது கை தொண்டர்கள் என்று சொல்ல முடியாது, குண்டர்களாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். அந்த கேள்விகளே எப்படி இருக்கிறதென்றால், நாம் சுந்தரரை அவமானப்படுத்தி விட்டதாகவும் அவமரியாதை செய்து விட்டதாகவும் இகழ்ந்து உரைத்து விட்டதாகவும் தான் கேள்வியையே கேட்கிறார்கள். ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள் - குதர்க்கவாதிகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை. தேவையும் இல்லை. ஆனா உங்க எல்லாருக்கும் சில விஷயங்களை, சில சத்தியங்களை சொல்லவும், வௌிப்படுத்தவும் கடமைப்பட்டிருக்கிறேன், விரும்புகிறேன். துக்கத்திலும், சுகத்திலும், இன்பத்திலும் துன்பத்திலும், நல்லதிலும் கெட்டதிலும் அலைகின்ற மனம் சார்ந்து இவர்களை எடை போடுவது சாத்தியமில்லை. ஆனால் தம்பிரான் தோழரான சுந்தரரும் தம்பிரானும் இருக்கின்ற, எம்பெருமான் ஈசனும் இருக்கின்ற உணர்வு நிலையை என் வாழ்க்கையில் உணர்ந்ததனால், எந்த உணர்வு நிலையில் இந்த மொத்த நிகழ்ச்சியும் நடந்தது என்று நடந்ததை நடந்தவாறு, நடந்த நிலையிலிருந்து பார்த்து உங்களுக்கு சொல்லவேண்டிய கடமை எனக்குள்ளது. இப்பொழுது பார்ப்போம். தம்பிரானுக்கும் தம்பிரான் தோழனுக்கும், தம்பிரான் என்றால் இறைவன், ஈசானத்தான், தம்பிரான்சுவாமி என்று சொல்வார்கள். தம்பிரானுக்கும் தம்பிரான் தோழனுக்கும் இடையிலே நடந்த பக்தியின் லீலை பக்தியின் விளையாட்டு. சுந்தர மூர்த்தி பெருமான், மிக உயர்ந்த ஆதி சைவர் குலத்திலே அவதரிக்கிறார். அரசனாலே வளர்க்கப்படுகின்றார். ஆதிசைவர் குலத்திலே அவதரித்தாலும், நாட்டு அரசன் அவரைக்கண்டு, தேஜசைப்பார்த்து, நான் இவரை அரசிளங்குமரனாக மாற்றுகின்றேன் என்று, தன்னுடைய அரசிளங்குமரனாக வேண்டுமென்று, வலிந்து சென்று அரண்மனையிலே வளர்க்கின்றார். திருமணப்பருவம் வந்ததும், தந்தையார், பெண் பார்க்கின்றார். அருகாமையில் ஆதிசைவர் குலத்திலே பெண் பார்த்து திருமணமும் நிச்சயிக்கிறார்கள். அரசிளங்குமரனாக வளர்ந்ததனாலே அரசனே திருமணத்திற்கு வருகின்றார். எல்லா சடங்குகளுக்கும், எல்லா பொருட்களும், எல்லாம் தயாராக இருக்கிறது. இரவு நடைபெறவேண்டிய சடங்குகள் நிறைந்து, மறுநாள் திருமணத்திற்கான சடங்குகள் துவங்குகின்ற நேரம். சுந்தர மூர்த்தி பெருமான், அரசுடையுடையும் வேதியர் உடையும், இரண்டையும் ஒன்றாக அணிந்து வருகின்றார். அரசனுக்கு உரிய உடையும் ஆபரணங்களும், வேதியர்க்கு உரிய திருநீறும் தாங்கி ஆதி சைவ அரசன் போலவே வருகின்றார். திருமணம் ஆரம்பிக்கும் முன் திடீரென்று வயதான ஒரு கிழவர். அந்தணர், எந்த நிமிடமும் கீழே விழுந்து இறந்து போகலாம் என்கின்ற நிலையிலே முதுகு வளைந்து, மூன்றாவது கால் ஊன்றி மட்டுமே நடக்க முடியும் என்கின்ற நிலையிலே இருக்கின்ற, மூன்றாவது கால் என்றால் கோல், கைத்தடி அதுதான் மூன்றாவது கால் மூன்றாவது கண் திறக்கலாம், மூன்றாவது காது கேட்கலாம், ஆனால் மூன்றாவது கால் தேவைப்படகூடாது. மூன்றாவது கால் காலான கோலை ஊன்றி வயதான அந்தணர் வந்து கொண்டு இருக்கின்றார். சபைக்குள் நுழைந்தவுடனேயே.. "நிறுத்துங்கள் திருமணத்தை!" என்று வேகமாக சத்தம் போடுகின்றார்.
எல்லோரும் கேட்கிறார்கள் ஏன்? நீங்கள் யார் என்று? அத்றகு அந்தணர் சொல்கிறார்... "திருமண கோலத்தில் இருக்கின்ற இந்த சுந்தரன் என்னுடைய அடிமை.. இவன் எனக்கு ஊழியம் செய்ய வேண்டியவன் இவன் திருமணம் செய்து கொள்ளலாமா? வேண்டாமா? என்று முடிவு செய்ய வேண்டியது நான், என்னை கேட்காமல் இவன் எப்படி திருமணம் முடிக்கலாம்? இவன் என் அடிமை" என்று மிகுந்த சப்தத்துடன் சொல்லுகின்றார். அங்கிருந்த ஆதி சைவர்கள் எல்லாம் அரண்டு போனார்கள். ஏன் என்றால் அந்தணர் அந்தணர்க்கு அடிமை ஆவது இல்லாத மரபு. உலகத்திலே இல்லாத மரபு. அந்தணன் அந்தணர்க்கு அடிமை ஆதல். எல்லோரும் கேட்க்கிறார்கள் அது எப்படி சாத்தியம்? சுந்தரரோ இரண்டு கையையும் இடுப்பில் வைத்துக்கொண்டு.. "நன்று நன்று" என்று இகழ்ச்சியான புன்னகையோடு பார்க்கிறார். புதிய அந்தணன் ஓலையை எடுத்து காட்டுகிறார். இதுதான் சாட்சி சுந்தரனுடைய முப்பாட்டன் எனக்கு எழுதி கொடுத்த ஓலை. சுந்தரர் படு வேகமாக ஓடி அந்த ஓலையை பறிக்க முயற்சிக்கின்றார். கிழவனாக வந்ததோ ஈசன் எம்பெருமானே!.. அவரும் ஓடுகிறார் இவரும் ஓடுகிறார். ஒருவர் ஓடும் போது பிடிக்க வேண்டுமானால், வேகம் தேவை இல்லை அவருடைய ஓட்டதினுடைய போக்கை தெரிந்து கொள்ள வேண்டும். பாம்பு விரட்டும் பொழுது நேரா ஓடனும், ஏனென்றால் பாம்பு வளைஞ்சு வளஞ்சுதான் போகும். அதிலேயே ரொம்ப நேரம் செலவு ஆயிடும். யானை விரட்டும்போது வளைஞ்சு வளைஞ்சு ஒடணும் காரணம் என்னன்னா யானையால நேராதன் வர முடியும். அந்த ஓடுவதும் பிடிப்பதும் ஓட்டத்தின் வேகம் சார்ந்தது அல்ல ஓடுபவர் பிடிப்பவர் இதைபற்றிய தன்மை சார்ந்தது. வேகம் சார்ந்ததாக இருந்தால் பெருமானை ஒருவர் பிடிக்க முடியுமா? நம் எல்லோர் உள்ளத்திற்கு உள்ளேயும் அமர்ந்து கொண்டு நாம் திரும்பிப்பார்கின்ற ஒரு க்ஷணம் கூட நம் கண்ணில் சிக்காமல் எங்கோ ஓடி ஔிந்து மறைந்து கொண்டு இருக்கின்றவனை, முப்புரம் எரித்தவனை, மாலும் அயனும் காணாத பாதம், பிரமனும் விஷ்ணுவும் தேடியே காணாத பாதத்தை பிடிக்க முடியுமா? சாத்தியமே இல்லை!
ஆனால் உள்ளுக்குள் திரும்பி ஒருமுறை அவனது பாதத்தை பிடித்தோமேயானால் வௌியில் அவன் ஓடினாலும் பிடிப்பது சாத்தியம். சுந்தரர் ஏற்கனவே ஒரு முறையாவது ஏற்கெனவே பிடித்து இருக்கிறார் என்பதனால் வௌியிலே ஓடிய அந்தணரை பிடித்து விட்டார். உள்ளுக்குள் அவனை ஒரு முறையாவது அவனை தேடி பிடித்து இருந்தால் தான் சாமீப்ய முக்திவரை செல்ல முடியும். உள்ளே பிடித்தவர் என்பதனால் ஒடுபவனுடைய ஓடும் முறை தெரிந்து அந்தணரை பிடித்து விடுகின்றான். பிடித்து அந்த ஓலையை கிழித்து எரிந்து விடுகிறார். ஓடும் முறையை சுந்தரர் கற்றாரே தவிர பெருமான் உள்ளத்து முறையை கற்கவில்லை. அதனால் தான் அந்த ஓலையை கிழிச்சு போட்ட உடனேயே அந்த வேதியர் சொல்கிறார்.. "மூல ஓலை தனியா இருக்கிறது.. இது படி ஓலை தான் அப்பனே" என்கிறார். சாமிப்யம் வரைக்கும்தான் வந்திருக்கார் சாயுஜ்யம் அடையலே அதனாலே உள்ளே எப்படி ஓடுதுன்னு தெரியவில்லை. வௌியில எப்படி ஓடுகிறார் என்று மட்டும் தான் கண்டுபிடிக்க முடிந்தது. சாமிப்யதிலே இருப்பவர்களே தெரிந்து கொள்ளுங்கள்! இன்னும் நீங்கள் சாயுஜ்யத்தை அடையவில்லை அதனால் உள்ளே என்ன இருக்கிறது என்று உங்களுக்கும் இன்னும் தெரியாது. பக்கத்திலேயே பல காலம் இருந்து விட்டால் உள்ளே என்ன இருக்கிறது என்று தெரிந்து விட்டதாக சிலபேர் திமிர் பிடித்து அலைவது, மூல ஓலை வௌியில் கொண்டு வரும் பொழுதுதான் அவர்களுக்கு மூர்க்கத்தனம் அவர்களுக்கே புரியும்.
முதியவராக வந்த அந்தணர் பெருமான் "மூல ஓலை பக்குவமாக பாதுகாப்போடு இருக்கிறது, இவர் சுந்தரர் கிழித்து படி ஓலை தான். மூல ஓலை பக்கத்திலேயே இருக்கிற திருவெண்ணெய் நல்லூரிலே இருக்கின்றது. அதுதான் என்னுடைய சொந்த ஊர்.. அங்கே சென்று மூல ஓலையை உங்கள் எல்லோருக்கும் காட்டுகிறேன்.. வாருங்கள்" என்று வழக்குக்கு அழைக்கிறார். ஊரார் எல்லாம் இந்த வழக்கு என்ன ஆகுமோ? என்று ஒன்றாக சேர்ந்து சுந்தரரோடு செல்கிறார்கள். சென்றவுடன் திருவெண்ணெய் நல்லூரிலே சான்றோர் சபையிலே அந்தணர் ஒரு நிபந்தனையை சொல்கிறரார். "படி ஓலையை கிழித்த இவன் மூல ஓலையையும் கிழிக்க மாட்டான் என்று சபையோர் உறுதி கொடுத்தால் ஓலை காட்டுகிறேன்" என்று சபையோர் உறுதி அளிக்க மூல ஓலையை எடுத்து காட்டுகிறார். மூல ஓலை தௌிவாக சொல்கிறது.. "சுந்தரருடைய முப்பாட்டனார் எழுதி கொடுத்தது.. வழி வழியாக திருவெண்ணெய் நல்லூர் சித்தருக்கு பித்தன் என்கிற பெயருடைய சித்தருக்கு நாங்கள் அடிமை செய்ய கடவது நாங்கள் அடிமைகள்" என்று எழுதி கொடுத்து இருக்கிறார்கள் சாட்சி மூன்று சாட்சிகள் கை எழுத்து இட்டு இருக்கிறார்கள். முப்பாட்டன் கை எழுதும் இருக்கின்றது. அவர்களுடைய மற்ற கை எழுத்துக்களுடன் ஒப்பிட்டு பார்த்தால் இவருடைய கை எழுத்து ஒப்பாகின்றது. சான்றோர் சபை தீர ஆய்ந்து அறிந்து "சுந்தரா நீ இவருக்கு அடிமை" என்று தீர்ப்பு அளிக்கிறார்கள். சாட்சி மூன்று சாட்சிகள் கை எழுத்து இட்டு இருக்கிறார்கள். முப்பாட்டன் கை எழுதும் இருக்கின்றது அவர்களுடைய மற்ற கை எழுத்துக்களுடன் ஒப்பிட்டு பார்த்தால், இவருடைய கை எழுத்து ஒப்பாகின்றது சான்றோர் சபை தீர ஆய்ந்து அறிந்து "சுந்தரா நீ இவருக்கு அடிமை" என்று தீர்ப்பு அளிக்கிறார்கள். சுந்தரரும் வேறு வழி இல்லாமல்.. இவருக்கு அடிமைதான் என்று அவர் பின்னாலேயே செல்கிறார்.
ஊராருக்கெல்லாம் திடீர் என்று ஒரு சந்தேகம் "நீங்கள் திருவெண்ணெய் நல்லூர் என்று ஓலையில் போட்டு இருக்கிறதே.. இது வரைக்கும் நாங்கள் உங்களை ஊரில் பார்த்ததே இல்லேயே..! உங்கள் வீடு எது? எங்கு வாழ்கிறீர்கள்?" என்று கேட்க, சிரித்துகொண்டே பித்தன் என்கின்ற பெயரிலே வந்த முதியவர் ஆலயத்திற்குள் சென்று பெருமான் திருமேனியில் மறைகின்றார். மறைந்த உடனேயே சுந்தரர் உடலெல்லாம் நடுங்க விதிர் விதிர்த்து போய்.. "இறைவா! நீயே நேரில் வந்து செய்த இந்த லீலையின் காரணம் என்ன? திருமணம் தடுத்து நிறுத்த வேண்டிய காரணம் என்ன?" என்று கேட்க, பெருமான்.. "அப்பா மறந்தாயா? மனித உடல் தாங்கியதும் கைலாய நினைவெல்லாம் போனதா? நீ என் கைக்கலகு தாங்கும் சாமீப்ய முக்தி பெற்ற ஆலால சுந்தரன். ஆலகால விஷத்தை கண்டவுடன் பிரம்மா -விஷ்ணுவுடன் எல்லோரும் அஞ்சி நடுங்கி ஓட, அதை நான் பருகி உலகத்தை காக்கவேண்டும் என்று கட்டளை இட தைரியத்தோடு சென்று அந்த விஷத்தையே ஒரு குடத்தில் உருட்டி கொண்டு வந்ததனால் ஆலாலசுந்தரன் என்று பெயர் பெற்ற சுந்தரன் நீ! மறந்தாயோ உன் நிஜ நிலையை? இரு பெண் மீது கொண்ட காமத்தால் நீ புவுலகம் வந்தாய், வந்தாலும் உன்னை நான் தடுத்து ஆட்கொள்ள வேண்டும் என்று வரம் வாங்கி வந்தாயே" என்று சொன்னவுடன் சுய நினைவுக்கு வந்தார் சுந்தரர். "ஆஹா! பெருமானே நானே மறுத்தாலும் எனை தடுத்தாட்கொள்ள வேண்டும் என்று கொடுத்த வரத்தை நிறை வேற்ற வந்தாயோ" என்று உளம் எலாம் உருகி, நெஞ்சு பஞ்சாய் கரைய தன்னுடைய சுய நிலையை உணர்ந்து திருமணத்தை மறுத்து பெருமானிடம் தவ வாழ்க்கை வரம் கேட்க பெருமானும் அவ்வாறே அளிக்கின்றார். இந்த முதல் நிகழ்ச்சியே மிக அருமையான நிகழ்ச்சி நாளமிலா சுரப்பிகள் என்று தமிழில் ஒரு வார்த்தை இருக்கிறது. ஆங்கிலத்தில் ஹார்மோன்ஸ் என்று சொல்வோம். இந்த நாளமிலா சுரப்பிகள் மனதாலே கட்டுபடுத்தபடுவதனால், உடலோடு எந்த நாள இணைப்பும் இல்லாதது.
உங்களுடைய உணவு உங்களுடைய உடலினுடைய இயற்கையான எந்த ஒரு விஷயத்தாலும் இந்த நாளமிலா சுரப்பிகள் கட்டுபடுத்தபடுவதில்லை. அதனால்தான் அதற்கு நாளமிலா சுரப்பிகள் என்று பெயர். இணைக்கின்ற நாளம் இல்லை. ஏன் அது அதிகமா சுரக்குது? குறைவாக சுரக்குது? என்று பௌதிக காரணம் கிடையாது. உடல் ரீதியான காரணம் கிடையாது. மன ரீதியா மட்டும்தான் அதை இயக்கவும் கட்டுபடுத்தவும் முடியும். நன்றாக ஆழ்ந்து கேளுங்கள் இந்த சத்தியத்தை மனசுதான் நாளமிலா சுரப்பியை கட்டுபடுத்தணும் நாளமிலா சுரப்பிகள் சுரந்து விட்டால், அதன் இயக்கத்தை அதற்கு பிறகு மனம்கூட கட்டுபடுத்த முடியாது. அதாவது இது ஒன்றோடு ஒன்று ஆழமாக இணைந்தது. முதலில் இருந்தே மனசு கட்டுப்பாடோடு இருக்கணும், அப்படி இல்லேன்னா அந்த நாளமிலா சுரப்பிகள் தானாகவே இயக்கி விடும் சுரப்பிகள் சுரந்துவிட்டால் அதற்கு பிறகு மனத்தால்கூட அதை கட்டுப்படுத்த முடியாது. ஒரு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால்.. யனசநயெடநைெ படயனௌ பயம் சார்ந்தது உங்கள் மனம் கட்டுபாட்டோடு, பயம் இல்லாமல் பயப்படாமல் இருக்குமானால் நல்லது. ஒரு முறை பயந்து அந்த யனசநயெடநைெ உடம்பு முழுக்க பரவ அனுமதித்திர்களானால், அதற்குப் பிறகு நீங்கள் மனதைக் கட்டுபடுத்தினாலும்கூட, பயத்தால் வருகின்ற பக்க விளைவுகளான நடுக்கம், விதிர் விதிர்ப்பு, நரம்பு தளர்ச்சி இதை எல்லாம் கட்டுபடுத்த முடியாது. வாயில் வேண்டுமானால் சொல்லலாம் எனக்கு பயம் எல்லாம் ஒண்ணும் இல்லை என்று. ஆனால் கண் காட்டி விடும் பயத்தை இந்த நாளமிலா சுரப்பிகளின் போக்கும், இயக்கமும் உடல் - மனம் இது சார்ந்து அது இயங்குகின்ற விதம் பக்குவம். மற்ற எல்லாவற்றையும் நீங்கள் கட்டுபடுத்திவிடலாம். ஆனால் இந்த நாளமிலா சுரப்பிகள் ஹார்மோன்ஸ் முன்புவிழுந்தீர்களானால் போய்விட்டது. விழக்கூடாத இடம் அதுதான். அங்கு விழுந்தால் கடவுளாலும், கடவுளின் அவதாரமான குருவாலும் மட்டும்தான் உங்களை தூக்கி விட முடியும். ஆனால் பிரச்சினை என்னவென்றால், அங்கு விழுந்தால் பிறகு கடவுளையோ கடவுளின் அவதாரமான குருவையோ கூட தூக்கி விடுங்கள் என்று கேட்ககூடத் தெரியாது. அதனாலதான் விழுவதற்கு முன்பு, "அப்பனே! ஒரு வேளை நான் விழுந்தாலும், நான் வேண்டாம் என்று சொன்னாலும், என்ன தூக்கி விட்டுவிடு" என்று கேட்டுவிடுவது. அந்த வரம் பெற்று வந்தவர் சுந்தரர். தெரியாமல் நான் விழுந்தேனென்றால்கூட, நான் வேண்டாம் என்று சொன்னால்கூட என்னை தூக்கிவிடு"
ஏனென்றால், நாளமில்லா சுரப்பியின் கட்டுப்பாடு ாழசஅழநௌ ளவசரபபடந- இல் ாழசஅழயெட உழஅிடைஉயவழைெ- இல் ாழசஅழயெட ிசநளளரசந -இல் விழுந்தால் எழுந்துவிட வேண்டும் என்று கேட்ககூட தோணாது. சுந்தரருக்கு புரிந்து விட்டது. சிலவினாடிகள் மாத்திரம்தான் அந்த ாழசஅழயெட ிசநளளரசந - இல் விழுந்தேன், அதற்காக இந்த ஜென்மம்! மனித ஜென்மம் வந்ததே! மானுட ஜென்மம் வந்ததே "ஐயோ சரி நடந்ததுதான் நடந்தது, இதற்கு மேலாவது அந்த மானுட ஜென்மம் தொடர்ந்து அடுத்தடுத்த ஜென்மங்களுக்கு கொண்டு போய் சேர்க்காமல் அந்த பாதுகாப்பு உறுதியையாவது இந்த ஒரு ஜென்மத்தோடு முடிந்து விட வேண்டும்" என்ற பாதுகாப்பு உருதியையாவது கேட்டு வாங்கிக்கொள்ளலாம் என்றுதான் தான் பெருமானிடம் கேக்றாரு.
சரியான வரம் கேட்டார். சுந்தரர் கேட்ட வரம் சரியான வரம்.. "நானே மறுத்தாலும் எனை தடுத்து ஆட்கொள்ள வேண்டும்." நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்.. இந்த வரம் கொடுத்தல் - வரம் வாங்கல் இந்த மொத்த தாத்பரியமும் புரிந்தால்தான் சுந்தரர் எந்த தௌிவில் இருந்து இந்த வரத்தை வாங்கி இருக்கிறார் என்று புரியும்.
எத்துனை வரம் நான் கொடுத்தாலும், நீங்கள் அது வேண்டாம் என்று சொல்லிவிட்டீர்கள் என்றால், அதற்குமேல் அந்த கட்டுப்பாட்டிற்குள் நான் இல்லை. அதை நிறைவேற்ற வேண்டும் என்ற கட்டுப்பாடு எனக்கு இல்லை. நீங்க வேண்டாம் என்று சொல்லாத வரைக்கும்தான் அந்த கமிட்மென்ட் அந்த கட்டுபாட்டிற்கு கட்டுப்பட்டு இருக்க வேண்டிய தேவை இருக்கிறது.
ஏனென்றால், தனி சுதந்திரத்திற்கு தனி சிந்தனை சுதந்திரத்திற்கு மிக பெரிய சக்தி உண்டு. முக்தியே வேண்டும் என்று நீங்க கேட்டு மூவாயிரம் ஆண்டு தவம் கிடந்து ஏதோ ஒரு நாள் "இல்லையப்பா வேண்டாம்" என்று பெருமானிடம் சொல்லிவிட்டீர்களென்றால், உங்களுக்கு முக்தி கொடுக்க வேண்டும் என்கின்ற அவசியம் அவருக்கு இல்லாமல் போய்விடுகிறது. அது தனி சுதந்திரத்தின் சக்தி.
பொதுவாக பெருமான் சோதனை செய்யும்பொழுதுது அந்த தனி சுதந்திரத்தின் சக்தியைதான் கிளறி விடுவார். கிளறி விட்டு நம்ம வாயாலேயே வேண்டாம் என்று சொல்ல வைத்துவிடுவார். அதற்குத்தான் எல்லா விளையாட்டும் செய்வார். ஆனால் சுந்தரர் பக்கத்திலேயே இருந்தவர்தானே எல்லாமே தெரியுமில்லை என்ன செய்கிறார்..? எப்படி ஒவ்வொன்றையும் நடத்துகின்றார்.. எப்படி எல்லாவற்றையும் பார்க்கின்றார், பக்கத்தில் இருப்பவர்களுக்கு அது ஒரு பெரிய வரம். ஏனென்றால் லாஜிக் என்ன கசயஅந -ஐ வைத்து இயங்குகின்றால் என்பதை அந்த உள்ளிருந்து பாக்கலாம். ளைெனைநசள எநைற-ஐ பார்க்கலாம். அதனால்தான் அந்த வரம் கேட்கிறார். நானே மறுத்தாலும் கை விடாது என்னை தடுத்தாட்கொண்டு மீண்டும் கொண்டு வர வேண்டும்" என்ற வரம் வாங்கிவிடுகிறார்.
சிவபெருமான் என்ன வரம் கேட்டாலும் கொடுத்துவிடுவார். காரணம் என்னவென்றால் எந்த வரம் கொடுத்தாலும் அதிலிருந்து தப்பித்துக்கொள்வதற்கு எதாவது டழழி ாழடந இருக்கும் என்பது அவருக்கு தெரியும். ஆனால் அவரே காரணம் சொல்லி தப்பித்துகொள்ள முடியாத ஒரு வரத்தை கேட்டு பெறுவதற்கு பக்கத்திலேயே இருந்து பார்த்தவரால் மட்டும்தான் முடியும். அதை சுந்தரர் பார்த்து இருக்கின்றார். எப்பவாவது உங்க வாழ்க்கையில், இந்த தன்னை மறந்து கரைந்து இறைவனோடு இணைந்து இருக்கின்ற தரிசனமோ - அனுபவமோ வந்தால், இந்த ஒரு வரத்தை மறக்காமல் வாங்கி விடுங்கள். "நானே மறந்தாலும் எனை நீ மறவாது தடுத்து ஆட்கொள்ள வேண்டும், நானே விட்டாலும் நீ என்னை விடாமல் தடுத்து ஆட்கொள்ள வேண்டும், நானே மறுத்தாலும் நீ என்னை மறுதலிக்காது தடுத்து ஆட்கொள்ள வேண்டும், நானே எதிர்த்தாலும் நீ எனை எரிக்காது தடுத்து ஆட்கொள்ள வேண்டும்" இந்த ஒரு வரத்தை வாங்கி விட்டீர்களானால் சுந்தரர் செய்ததுபோல என்ன செய்தாலும் வேறு வழி இல்லை அவர் காப்பாற்றியே ஆகணும். இந்த ஒரு வரம் பெற்றவன் திருவரம் பெற்றவன். பக்கத்திலேயே இருந்து பார்க்கின்றவர்களுக்கு பெருமான் எந்த தர்மத்தை சார்ந்து இயங்குகிரார் என்கின்ற அவருடைய தர்மம் புரியும்.
சில பேர் எங்கிட்ட கேட்பதுண்டு "எப்படி நாங்கள் தெரிந்துகொள்வது.. நீங்க கொடுக்கின்ற எந்த வரம் நிஜமாகும் எந்த வரம் நிஜம் ஆகாது என்கிற சுட்சுமத்தை எப்படி புரிந்துகொள்வது, பக்கத்துல இருக்கறவங்களுக்கு கரெக்ட்டா புரியும். பக்கத்தில் கைக்கலகு தாங்குகிறவர்கள் கண்களைப் பாத்தீர்களென்றால் புரிந்துவிடும். இது ஆறுதலா..? அருளா? வரமா? மரமா? அல்லது மருதலிக்கவைக்கும் திறமா? வியாதி என்று ஒருவர் வந்தால்.. சரியாகும் போங்க சாமி பாத்துகறேன் என்று சொன்னால் அதற்கு ஒரு அர்த்தம். கட்டாயம் சரி பண்றேன் கவலைப்படாதீங்க போங்க, மாங்கல்யம் நிரந்தரமா இருக்கும் என்று சொன்னால் அதற்கு ஒரு அர்த்தம். ஒழுங்கா இருந்துருக்கலாமேப்பா.. திருநீறு புசிக்கோ கஷ்டம் குறையும் என்று சொன்னால் அதற்கு ஒரு அர்த்தம். கோவில்ல போய் பிரார்த்தனை பண்ணிட்டு போ என்று சொன்னால் அதற்கு ஒரு அர்த்தம்.
தைர்யமா இரு என்று சொன்னால் அதுக்கு ஒரு அர்த்தம். ஆனந்தமா இருங்க என்று சொன்னால் அதுக்கு ஒரு அர்த்தம். முடியலேன்ன ஜாலியா இரு என்று சொன்னால் அதற்கு ஒரு அர்த்தம். கைக்கலகு தாங்கும் அணுக்க தொண்டர்களுக்குத்தான் இந்த ஒவ்வொரு வார்த்தைக்கும் என்ன அர்த்தம் இது அருளா? மருளா? மரமா? திறமா? இதன் பக்க விளைவு என்ன? எதிர் விளைவு என்ன? அடுத்த விளைவு என்ன? என்று புரியும். பலகாலம் கைக்கலகு தாங்கி, எதிர் விளைவு, பக்க விளைவு எல்லாம் புரிந்தவர் என்பதினால் வரத்திலே பெரும் - திருவரம் கேட்டு வாங்கினார் சுந்தர பெருமான். நானே மறந்து மறுத்தாலும் நீ மறந்து மறுக்காது எனை தடுத்தாட்கொளல் வேண்டும் அரச வாழ்க்கை வாழ்ந்த உடனேயே கைலாய எண்ணம் மறைந்தது. வந்த நோக்கம் மறந்தது.
வடிவம் தாங்கிய உடன் விஷ்ணுவுக்கே அவதாரங்கள் பல எடுத்த விஷ்ணுவுக்கே வந்த காரணம் மறந்து விடுகிறது. நரசிம்மாவதாரம் எடுத்ததும் இரண்யன் இரன்யாட்சனை அழித்து விட்டு, வெறி கோபம் தாங்காமல் அசுரர்களின் ரத்தத்தை குடித்ததனால் மேலும் கொண்ட கோபம் தணியாமல் உலகத்தையே மிரட்டி கொண்டு இருண்டது நரசிம்ஹம். பெருமான் சரபேஸ்வரராக வந்து நரசிம்மத்தின் கோபம் தனித்து "அப்பா நீ நாராயணன் வந்த வேளை முடிந்து விட்டது" என்று நரசிம்ம உடலை கிழித்து நாராயணனுக்கு விடுதலை அளிக்கின்றார். ஒவ்வொரு அவதாரத்திலும் ராமனாக வந்த பொழுது ராவண வதம் முடிந்து எல்லாம் முடிந்து அயோத்தியை காலம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தொடர்ந்து ஆண்டு கொண்டு இருக்கிற ராம ராஜ்ஜியம் அருமையாக நடக்கின்றது. தான் விஷ்ணு என்பதையே மறந்து விட்டு ராஜ்ஜியம் செய்து கொண்டு இருக்கின்றார். காலகாலன் முன்தோன்றி அப்பா நீங்கள் விஷ்ணு வந்த வேலை முடிந்தது கிளம்பி வாருங்கள் என்று சொல்லி லக்ஷ்மணனை தற்கொலை செய்து கொள்ள வைத்து அருமையான கதை. காலகாலன் சிவனடியார் கோலம் புண்டு ராமனிடம் வந்து ராமா உன்னிடம் நான் தனியாக உரையாட வேண்டும் அந்த நேரத்தில் வேறு யாரும் உள்ளே வரக்கூடாது என்று சொல்ல ராமனும் லக்ஷ்மணனை காவலுக்கு நிறுத்த லக்ஷ்மணனிடம் யாராவது மீறி உள்ளே வந்தால் உயிர் போகும் என்று எச்சரித்து காவலுக்கு நிறுத்த அந்த நேரம் பார்த்து கோபமே வடிவான துர்வாசர் வர, லக்ஷ்மனனுக்கோ திண்டாட்டம். உள்ளே விட்டு மரணத்தை சம்பாதிப்பதா? அல்லது துர்வாசரின் சாபத்துக்கு ஆளாவதா என்று சிந்தித்து மரணமே மேலானது என்று துர்வாசரை உள்ளே விட்டு விட்டு சரயு நதிக்குச் சென்று உடலை விட அந்த செய்தியைக் கேள்விப்பட்ட உடன் ராமன் என்ன நடந்தது!? என்று திகைக்கும் பொழுது முதியவராக வந்த ஈசன் தன் காலகால ஸ்வரூபமான மூல சிவனின் திருவுருவம் தாங்கி.. "அஞ்சாதே ராமா வந்தது நானே! உன் வந்த நோக்கம் முடிந்ததனால் உன்னை அழைத்துச் செல்லவே வந்தோம்" என்று உன் அம்சமான ஆதிசேஷமான லக்ஷ்மணன் உடலை விட்டு விட்டான், நீயும் கிளம்பு பென்று சொல்ல, அதே இடத்தில் வந்து எம்பெருமானும் ஸ்ரீராமச்சந்திரனும் சரயு நதியில் உடலை விட்டு தன்னுடைய ஸ்வய ரூபமான விஷ்ணு வடிவத்தை அடைந்து வைகுண்டம் செல்கின்றார். ஒவ்வொரு முறையும் திருமேனி தாங்கியதும் விஷ்ணுவுக்கே வந்த நோக்கம் மறந்து விடுகின்றது. சுந்தரருக்கும் அதேதான் நிகழ்ந்தது. ஆனால், சுந்தரர் பக்கத்தில் இருப்பவரல்லவா? சரியான வரத்தோடு வந்திருக்கிறார். திருவரம் வாங்கி வந்தார். திருவரங்கத்தானுக்கும் கிடைக்காத திருவரம் வாங்கி வந்தார். சுந்தரர் வாழ்க்கையிலே அருமையான 32 நிகழ்சிகள் உள்ளது. முதல் நிகழ்ச்சியைத்தான் இன்று சொல்ல முடிந்தது. இன்னமும் அவருக்கும் பெருமானுக்கும் இடையிலே இருக்கின்ற பக்தியின் ஆழத்தை விளக்கும் நிகழ்சிகள் நான் ஆரம்பிக்கக்கூட முடியவில்லை. அதற்குள் காலம் ஆகி விட்டது. ஆனாலும் தொடர்வோம். பரவை நாச்சியாரோடும் சங்கிலி நாச்சியாரோடும் அவர் வாழ்ந்த விதம், அவை ஒவ்வொன்றிற்கும் பெருமானையே உபயோகித்த விதம். நன்றாக ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள்.. பக்தியில் இரண்டு விதம் உண்டு. இறைவனை பக்தி செய்து முக்தி நிலையை கேட்டு பெற்று கொள்வது திருநாவுக்கரசு சுவாமிகள் மாதிரி. அந்த முக்தி நிலை கேட்டு பெற்று அந்த முக்தி நிலையை பற்றிய அந்த சத்தியத்தை உலகத்திற்கு சொல்வதற்காக சில சக்திகளை வௌிப்படுத்தி, ஞான கருத்துக்களை பரப்புவது திருநாவவுக்கரசர் செய்தது போல். ஆனால் சுந்தரருடையது அதைவிட ஆழமான பக்தி. முக்தி மட்டுமல்ல. முக்தி பற்றிய ஞானத்தை விஞ்ஞானத்தை உலகிற்கு பரப்புவது மட்டுமல்ல சாதாரண அடிப்படை தேவைகளுக்குகூட பெருமானோடுதான் நேரடியான உறவு. தங்கம் வேணும் கொடுக்கவில்லையென்றால் திட்டுவேன். திட்டிருக்கார். கொடுக்கவில்லை என்பதற்காக இகழ்ந்து பேசி ’’இகழ்ந்து பேசியதை பொறுத்து கொள்ளுங்கள் ஆனால் தங்கத்தை கொடுத்து விடுங்கள்’’ என்று மீண்டும் பாடி வாங்கியும் இருக்கின்றார்.
வன்தொண்டர் என்கின்ற வார்த்தைக்கு இலக்கணம் சுந்தரமுர்த்திபெருமான் சைவத்தை வாழணும். பெருமானை வாழ வேண்டும். சுந்தரரை போல பெருமானை வாழ்ந்த ஒரு பக்தர் இன்னொருவர் இருந்ததே இல்லை. இனியும் இருக்க முடியாது என்பதுதான் உண்மை. சைவம் மட்டுமல்ல வேறு எந்த சம்பிரதாயத்திலும் சைவத்தை வாழ வேண்டும். சுந்தரரை போல வாழ வேண்டும். வாருங்கள் சைவத்தை வாழ்வதற்கு பெருமான் காட்டிய வழி சமய தீக்ஷையும் விசேஷ தீக்ஷையும். தமிழ் உலகே திரண்டு வா. நவம்பர் 21, 22, 23, 24 நான்கு நாட்களும் விசேஷ தீக்ஷையும் நவம்பர் 22 அன்று சமய தீக்ஷையும் நவம்பர் 28 அன்று சமய தீக்ஷையும் உங்கள் எல்லோருக்காகவும் காத்து இருக்கிறது. ஜாதி மதம் இனம் கடந்து எல்லா உயிர் இனங்களுக்கும் பொது என்று எம்பெருமான் அருளிய இந்த தீக்ஷைகள் சைவத்தை வாழும் வழி வாழ்வியல் சத்தியமான சைவத்தை வாழ்ந்திட வாருங்கள். இரண்டு தீக்ஷைகளையும் பெற்று இறைமயமாக மாறுங்கள். சொல்ல சொல்ல சொல் இனிக்கின்றது. சொல்லும் நாவினிக்கின்றது நாக்கில் ஊறும் எச்சில் உள் செல்வதால் தொண்டை இனிக்கின்றது. சிந்தை செய்து வார்த்தைகளாய் மாற்றுவதனால் நெஞ்சு இனிக்கின்றது. சிந்தைக்கு ஆதாரமாய் இருப்பதனால் உணர்வே இனிக்கின்றது. உணர்விற்கு மூலமாய் இருப்பதனால் உயிரே இனிக்கின்றது..
சுந்தரா! உன் வாழ்வை சொல்லும் என் உயிரே இனிக்கின்றது. எல்லாம் இனிக்க தமிழ் தாயின் இந்த தெய்வ கதையை மீண்டும் சொல்வதற்கு என் நாவினில் வந்தமர்ந்து தானே இனித்து தன்மயமாய் தானே இதை ரசித்து உண்மையை உள்ளத்தில் உள்ளபடியே சொல்லும் உரைதனை ஆதிசைவத்தை கேட்பவர்கள் வாழ்க!
கேட்பவர்கள் சென்று மற்றோருக்கு உரைத்து அதை கேட்பவர்கள் வாழ்க! இதை எல்லாம் கேட்டு சைவத்தை மனதால் ஏற்று மார்க்கமாய் மாற்றி கொள்ளும் மக்களே எல்லோரும் வாழ்க! உங்கள் எல்லோருக்குள்ளும் இனிது இருந்து சைவம் எனும் வாழ்வியல் நெறி வாழ்க! நீங்கள் சைவம் எனும் வாழ்வியலை வாழ்வதற்க்கு பேருற்சாகமாய் பேருணர்வு பெரும்சக்தியாய் உங்களுக்குள் இருந்து உற்சாக உணர்வை ஊற வைத்துக்கொண்டே இருக்கும் பரம்பொருள் ஈசன் வாழ்க!
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம் மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம் என்று உரைத்து நாளை சுந்தரரின் பக்தியின் சக்தியை பார்ப்போம்.
அய்யா முதல் மனைவி பரவை நாச்சியாருக்கு சொல்லாமலேயே சங்கிலி நாச்சியார் இரண்டாம் மனைவிக்கு பொய்யாய் சத்தியம் செய்து கொடுத்து.. உன்னை விட்டு பிரிய மாட்டேன் இரண்டாவது மனைவிக்கு சத்தியம் செய்து கொடுத்து கல்யாணம் பண்ணிக்கிறார். அதை மீறி திரும்ப பரவை நாச்சியாரை பார்க்க வருகிறார் பரவை நாச்சி விட மாட்டேன் என்று சொல்கிறார். உடனே பெருமானேயே கூட்டி தூது அனுப்புகிறார். பெருமான் தூது போய், பரவை நாச்சியார் ஒத்துக்கொள்ளவில்லை. திரும்பி வருகிறார். வந்தவுடன் பெருமானை கடிந்து கொள்கிறார். "என்னய்யா தூது போற? இத கூட முடிச்சிட்டு வர முடியல்ல, போய் இந்த முறை உன் சக்தியை எல்லாம் காட்டி நீதான் பெருமான் என்று சொல்லி புரிய வைத்து விட்டு வா" என்று அனுப்புகிறார்.
அதையும் கேட்டு கொண்டு பெருமான் சென்று "நான் ஈசன் நானே தூது வந்து இருக்கிறேன்" என்று சொல்லி பரவை நாச்சியார் ஏற்று கொள்கிறார். இதைவிட பக்தியின் சக்தியை சொல்ல வேறு என்ன உதாரணம் அய்யா வேணும்? வைஷ்ணவத்துல சொல்வாங்க பெருமானே தேர் தட்டில் உக்காந்து அர்ஜுனனுக்காக தேர் ஓட்டினார் பீஷ்ம பாணம் முகத்தில் தாங்கினார்னு அதெல்லாம் ரொம்ப சுலபம் ஐயா. பொய் சொல்ற பக்தனுக்காக உண்மையில் இல்லாத பக்தனுக்காக, இரண்டு முறை தூது செல்வதுதான் உண்மையில் கஷ்டம். தானே ஆகமத்தில் வகுத்த விதியை இவன் மீறுகிறான் என்று தெரிந்தும், பகவத் கீதையில கிருஷ்ணன் வகுத்த விதிகளை ஒன்னும் அர்ஜுனன் மீறிவிடவில்லை. அவன் முறையாக வாழ்கிறான். வாழ்ந்தவனுக்கு இவர் துணையாக நின்றது ஒன்றும் பெரிய பக்தியின் ஷக்தி ஒன்று இல்லை ஐயா. ஆகமத்திலே பெருமான் வகுத்த எதையுமே இவர் வாழவில்லை, மறுக்கின்றார் ஆதிசைவனாக பிறந்து ஆகமத்தில் பெருமான் வகுத்த விதிகளையே மீறி மனதிற் பட்டதை எல்லாம் செய்தும் அவர் ஆண்டவனுக்கு நேர்மையாக இல்லாதிருந்தும் ஆண்டவன் அவருக்கு நேர்மையாக இருந்ததுதான் பக்தியின் ஷக்தி. சுந்தரரின் பக்தியின் சக்தியை நாளை காண்போம். நீங்கள் எல்லோரும் நித்யானந்ததில் நிறைந்து நித்யானந்ததில் மலர்ந்து நித்யானந்தமாகிட ஆசீர்வதிக்கின்றேன். நன்றி ஆனந்தமாக இருங்கள்.