November 21 2015

From Nithyanandapedia
Revision as of 21:11, 24 August 2020 by Ma.mythreyi (talk | contribs)
Jump to navigation Jump to search

Title:

THE SUPREME PONTIFF OF HINDUISM HDH BHAGAVAN NITHYANANDA PARAMASHIVAM

Link to Video:

Transcript in Tamil

ஆதி சைவம் - நாள் - 5 உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன்.. கடந்த சில நாட்களாக ஆதி சைவம் எனும் தலைப்பில் நிகழ்ந்த சத்சங்கங்களின் தொகுப்பு. ஆதி சைவம் என்பது ஆதிசிவன் பெருமானே ஜீவனெல்லாம் சிவத்துவ நிலையில் வாழ்ந்து, எல்லா நன்மைகளையும் சக்திகளையும் வௌிப்படுத்தி நித்யானந்த நிலையில் இருப்பதற்காக வௌிப்படுத்திய அறிவியல். வாழ்வியல் சார்ந்த அறிவியல். அதன் முக்கியமான நான்கு அங்கங்கள் சரியை, கிரியை, யோகம், ஞானம். ஆதிசைவம் என்பது வெறும் த்வைத, அத்வைத, விஷிஷ்டாத்வைத என்கின்ற தத்துவ கோட்பாடு வட்டங்களுக்குள் அடக்கிவிட முடியாத பெறும்ஞானத் தத்துவம். இதில் சரியை உயர்ந்ததா? கிரியை உயர்ந்ததா, யோகம் உயர்ந்ததா? ஞானம் உயர்ந்ததா? என்கின்ற கேள்விக்கே இடமில்லை. ஏனென்றால் இந்த நான்கும் படிகள் அல்ல, பாகங்கள் மட்டுமல்ல அங்கங்கள். ஒன்றில்லாவிட்டால் இன்னொன்று இயங்க முடியாத அங்கங்கள். இதை விளக்குவதற்கு நாம் சுந்தரமூர்த்தி சுவாமிகளின் அருள் வாழ்க்கையை சொல்ல முயற்ச்சிக்க, அதிலே சில தர்க்க குதர்க்க விதர்க்க கேள்விகள் வர, அதில் தர்க்க விதர்க்கங்களுக்கு விடையளித்து முடித்துவிட்டு, குதர்க்க கேள்விக்கு விடையளித்துக்கொண்டிருப்பதுதான் இன்றுவரை நடந்த சத்சங்கத்தின் சாரம். வந்த குதர்க்கம் என்னவென்றால், ’’சுந்தரமூர்த்தி சுவாமிகளை, சுந்தரமூர்த்திப் பெருமானை நான் தரம் குறைந்து இழித்து உரைத்துவிட்டேன்’’ என்ற வந்த சில குதர்க்க கேள்விகளுக்கு விடையளித்துக்கொண்டிருக்கிறோம். ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள்.. சுந்தர மூர்த்திப் பெருமானைப்போல பக்தியின் சக்தியை வௌிப்படுத்திய வேறொரு பக்தரை, ஞானபுருஷரை சைவம் மட்டுமல்ல வேறு எந்த சம்பிரதாயமும் காட்ட முடியாது. பகவான் பக்தனுக்கா இறங்கி வந்து சேவை செய்திருப்பது பல சம்பிரதாயங்களிலும் நிகழ்ந்திருக்கின்றது. கிருஷ்ணனே வந்து அர்ஜுனனுக்கு தேரோட்டியாய் இருந்ததும், மற்ற மற்ற பல்வேறு லீலைகள் நிகழ்ந்திருக்கின்றது. பெருமாட்டியே நேரடியாய் வந்து வள்ளலாருக்கு சோறு சுமந்ததும் நிகழ்ந்திருக்கின்றன. ஆனால் சுந்தரர் வாழ்க்கையில் பெருமான் வந்து பக்தனுக்காக செய்த சேவைகள் ஒரு சிறப்புடையவை. காரணம் என்னன்னா... கிருஷ்ண பரமாத்மா அர்ஜுனனைப் பார்த்து, இறுதியில் எல்லாவற்றையும் என்னிடம் சரணடைத்தவிட்டு, என்னிடம் ஒப்படைத்துவிட்டு போர் செய் என்று சொன்னவுடன் அந்தக் கட்டளைக்கு அர்ஜுனன் அடிபணிந்தான். அவருக்கு அர்ஜுனன் உண்மையாக இருப்பதனால் ஜீவன் - ஜீவாத்மா பரமாத்மாவிற்கு உண்மையோடு இருப்பதனால், பரமாத்மா ஜீவாத்மாவிற்கு சேவை செய்தது உண்மை.

உண்மையில் கிருஷ்ணன் சொன்னதை அர்ஜுனன் செய்ததனால், அர்ஜுனனுக்கு தேவைப்பட்டதை கிருஷ்ணன் செய்தார். உண்மையில் கிருஷ்ணன் தனக்கு என்ன வேண்டுமோ அதை அர்ஜுனன் மூலம் சாதித்துக்கொண்டார். ஆனால் இங்கு சுந்தரமூர்த்த சுவாமிகளின் வாழ்க்கயைப் பார்த்தார், தம்பிரான்தோழர் வன்தொண்டர் அவருடைய வாழ்க்கையை பார்த்தோமானால், மோதல்லதான் அவர் காதலே துவங்குது. முதலில் பெருமானைப் பார்த்தவுடன் அவர் சொன்ன வார்த்தையே பித்தா. பெருமானே சொல்றாரு, வன்மையான வார்த்தைகளை என்னை நோக்கிச் சொன்னதனால் நீ வன்தொண்டன் எனப்படுவாய் என்று. தம்பிரான்தோழர் பெருமானுக்கு தோழனாய் இருந்து, பல இடங்களிலே பெருமானுடைய உபதேசமாக ஆகமத்தை வாழவேண்டிய ஆதிசைவ குலத்தில் பிறந்தும், ஆகமத்திற்கு அப்பாற்பட்டு, ஜீவன் சிவனுக்குப் பொய்த்தாலும், சிவன் ஜீவனுக்குப் பொய்க்காமல் இருக்கின்ற சத்தியத்தை, பக்தியின் சக்தியை சுந்தரமூர்த்தி சுவாமிகளின் வாழ்க்கையில் மாத்திரம்தான் பார்க்க முடியும். சைவத்தால் மட்டும்தான் பக்தியின் சக்தியை இத்துனை அழகாக சொல்ல இயலும். இத்துனை அழகாக விளக்க இயலும். சைவம் அன்றி வேறொரு சம்பிரதாயத்தினாலும், சமயத்தினாலும் இதைச் சொல்ல இயலுமா என்று நிச்சயம் நாம் நினைக்க முடியாது. ஏனென்றால் வேறு ஒரு இடத்திலும் காணாத ஒன்றை சைவத்தில் நாம் கண்டோம்.



ஆழ்ந்து கதையைக் கேட்டோமானால், பக்தி வேண்டும், முக்தி வேண்டும், என்று பெருமானக் கேட்பதும், அவர் கொடுக்கும் அருளையும், ஆசியையும் சக்தியையும் அவர் புகழைப் பரப்புவதற்கு மாத்திரம் உபயோகிப்பதும் எல்லா அன்பர்கள், தொண்டர்கள் அடியார்கள் வாழ்விலும் நடக்கின்ற ஒன்று. பக்தி வேண்டும் என்று திருநாவுக்கரசப் பெருமான், பெருமானைப் பார்த்துப் பிரார்த்திக்கின்றார், சைவத்தைப் பரப்புகின்றார். பரப்பும்பொழுது வருகின்ற இடர்பாடுகளிலே அரசன் இவரை கல்லில் பூட்டி கடலில் பாய்ச்சுகின்றான். கல் தெப்பமாய் மிதந்து கரையேறுகின்றார். இந்த அத்புதத்தை, அதிசயத்தை சைவத்தைப் பரப்புவதற்கு உபயோகிக்கின்றார். இதுபோன்று பெருமானிடம் படிக்காசு பெற்று அன்னதானம் செய்து சைவத்தைப் பரப்புகிறார், பாடல் பாடி திருக்கதவு திறந்து சைவத்தைப் பரப்புகிறார். இது எல்லாவற்றையுமே ஜீவன் சிவனுக்கு உண்மையுடையதாக இருக்கின்றது, சிவன் ஜீவனுக்கு உண்மையுடையதாக இருக்கின்றார். இது எல்லா யோகிகள், சித்தர்கள், புருஷர்கள், ஞானிகள், அவதாரபுருஷர்கள் இவர்களின் வாழ்க்கையில் எல்லாம் பார்க்கலாம். ஆனால் சுந்தரமூர்த்திப் பெருமான் பொன் கொடுக்கவில்லை என்று ஏசுகின்றார். பெருமான திட்ராரு.. என்னயா சாமி நீ.. கேட்டா குடுக்கமாட்டேங்கிற. திட்டிட்டு அப்புறமா உழஅிடநவழைெ பன்றாரு. பெருமான இரண்டையும் பொறுத்துக்கொண்டு அவர் கேட்டபடி பொன்னையும் அளிக்கின்றார். அதாவது வாழ்க்கையே.. எனக்கு ஒப்படைத்த ஒரு சன்யாசி.. தெருவுல நடந்துபோகும்பொழுது தெரியாம என்னுடைய படத்தை மிதிச்சிட்டுபோய்ட்டார்னா.. யாராவது என்கிட்ட வந்து சொன்னாங்கன்னா.. சாமி உங்க படத்தை அவர் மிதிச்சிட்டு போய்ட்டாருன்னு சொன்னாங்கன்னா.. நான் என்ன சொல்லுவேன்.. அப்பா, தெரியாம நடந்திருக்கும் விடப்பா, தெரிந்து நடந்திருக்காது. தவறே செய்தாலும் அவன் தெரிந்து செய்திருக்கமாட்டான் என்கின்ற ஒரு மனப்போக்கு எப்பொழுது நமக்குள் வருமென்றால், அவனுடைய வாழ்க்கையின் நோக்கம் அந்த அளவிற்கு ஆழமாக என்னுடைய நம்பிக்கையைப் பெற்றிருக்கும்பொழுதான் வர முடியும். ஜீவன் சிவனுக்குப் பொய்த்தாலும், இல்லை அவர் வாழ்க்கையின் நோக்கமும், அந்த நோக்கம் அவனுக்குள் பொதிந்திருக்கும் ஆழமும், அந்த ஆழத்தின் தாக்கமும் கண்டவன் நான், அதனால் நான் அவனுக்குப் பொய்க்க மாட்டேன் என்று சிவனே நினைக்கின்ற அளவிற்கு ஜீவனின் பக்தியின் சக்தியை வௌிப்படுத்தியது சுந்தரமூர்த்தி சுவாமிகளின் வாழ்க்கை மாத்திரம்தான். தாக்கத்தின் ஆக்கம், எந்த அளவிற்கு சுந்தரமூர்த்தி சுவாமிகளின் பக்தியின் தாக்கம் பெருமானுக்குள் ஆக்கமாய் இருந்திருந்தால், வைதுவிட்டு, அதுவும் ஞானம் கொடுக்கவில்லையே என்று வைதிருந்தாலும் பரவாயில்லை, பேக்கட் மணி (கைப்பணம்) கொடுக்கவில்லையே என்று திட்டுகிறார். பெற்ற தந்தைகூட பேக்கட் மணி கொடுக்கவில்லை என்று திட்டினால் இன்னொருமுறை கொடுக்க மாட்டார். வேகவேகமாக திட்டிவிட்டு.. சரி சரி திட்டிட்டேன் அதுக்காக குடுக்காம விட்டுவிடாதீர்கள்.. கொடுங்கள்.." என்ன இனிமையான உறவு பாருங்கள். அதுதான் பக்தியின் சக்திங்கையா. தம்பிரான்தோழர் வன்தொண்டர் சமூகத்தின் அளவுகோல்படி, தனிமனித ஒழுக்கம் - சமூகச் சமச்சீர் நிலையைக் காக்கவேண்டியதற்கான சமூக ஒழுக்கம் இதை எல்லாவற்றையும் பக்தியின் சக்தியாலே தகர்த்து எறிகின்றார் சுந்தரமூர்த்திப் பெருமான்.

ஓன்னொன்னா, ஒன்னொன்னா பார்த்தோமென்றால் முதல் நிகழ்ச்சி, வயதான கிழவனாக ஓலை கொண்டு வருகிறார். பார்த்தவுடனே சுந்தரமூர்த்திப் பெருமான் செய்கின்ற முதல் வேலை, ஓடிப்போய் ஓலையைப் பிடித்து இழுத்து வாங்கி கிழித்து எறிந்துவிடுகின்றார். னுநளவசரஉவழைெ ழக நஎனைநெஉந. சாட்சியத்தை அழித்தல். பெருமான் பொறுத்துக்கொண்டு... ஏன்ன வரம் கொடுத்திருக்கிறார்.. பெருவரம் கொடுத்திருக்கிறார்.. என்னன்னா.. நான் உன் வழி நிற்க நீ என் வழி நின்றால்.. அது த்வைதம். நான் உன் வழி நிற்க மறந்தாலும் நீ என் வழி நிற்க வேண்டும் என்றால் அது விஷிஷ்டாத்வைதம், நானும் நீயும் எப்போதும் ஒன்றாய் இருக்க வேண்டும், ஒன்றோடொன்று கலந்திருக்க வேண்டும் என்றால் அது அத்வைதம். நான் உனை மறந்தாலும், மறுத்தாலும் நீ என் வழி நிற்க வேண்டும் என்பது - சைவம். என்ன வரம் வாங்கிட்டு வந்திருக்கிறார். கைலாயத்திலேயே கேட்டுவிடுகிறார்... "அப்பனே என்னை நீ பூமிக்கு அனுப்புகிறாய்.. ஒன்று மற்றொன்றோடு... இன்னொன்று மூன்றாவதோ.. கர்மச்சக்கரம் சேர்ந்து அடுத்தடுத்த பிறவிகளிலே நான் அலையக்கூடாது, நான் உனை மறந்தாலும், மறுத்தாலும் நீ எனைத் தடுத்தாட்கொள்ள வேண்டும். திருநாவுக்கரசர்கூட "பிறவாமை, பிறந்தாலும் உனை மறவாமை வேண்டும்" - என்றுதான் கேட்டாறே தவிர, சுந்தரமூர்த்திப் பெருமான், நான் உனை மறந்தாலும், அதுமட்டுமல்ல மறுத்தாலும் எனைத் தடுத்தாட்கொள்ள வேண்டும் - என்ற இந்த வரம் கொடு.. இதுதான் பெரு வரங்கையா!. நான் உனை மறந்தாலும் எனை ஆட்கொள்ள வேண்டும் என்று கேட்டால் அது திருவரம், நான் உனை மறுத்தாலும் எனை ஆட்கொள்ள வேண்டும் என்று கேட்டால் அது பெருவரம்.


கடவுள்கூட தலையிடமுடியாத ஒரு இடம் எது என்றால், உங்களுடைய தனிச் சுதந்திரம். கடவுள்கூட தலையிடமுடியாத ஒரு இடம் உங்கள் வாழ்க்கையின் தனிமனிதச் சுதந்திரம். கடவுள்கூட தலையிடமுடியாது. நன்றாக புரிந்துகொள்ளுங்கள்.. ஆக்கல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் 5 தொழில். ஆக்கல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல். ஆக்கல் என்றால் உருவாக்குதல்.. காப்பாற்றுதல், அழித்தல், மறைத்தல், அருளல். இந்த நான்கு.. முதல் நான்கு நிலைகள், இந்த ஐந்தில் முதல் நான்கு நிலையான ஆக்குதல், காப்பாற்றுதல், அழித்தல், மறைத்தல் இந்த நான்கையும் செய்யும்பொழுது உங்களுக்கு அந்தத் தனிமனிதச் சுதந்திரம் இல்லை. நான் - நான் என்கிற அந்த தனி விழிப்பு உங்களுக்குள் இல்லை. தனி இருப்பு உங்களுக்குள் இல்லை. அந்த நான்கையும், இறைவன் நேரடியாக வடிவம் கடந்த தன்னுடைய சதாசிவ நிலையில் இருந்தே செய்துவிடுகின்றார். இந்த மறைத்தல், மாயையில் போட்டு உங்களை அழுத்தியவுடனேயே, நான் - நான் - நான் என்கிற அந்தத் தனிமனிதர் சுதந்திரம் வந்துவிடும். அதற்குப்பிறகு பெருமானேகூட அதில் தலையிட முடியாது. தோளுக்கு மிஞ்சினால உங்கள் மகனேகூட தோழன்தான். அதுக்குமேல தலையிட முடியாது. அதுபோல மாயையில பட்டு நான் நான் என்கிற அந்த தனி அகங்காரம் வந்துவிட்டால், இறைவன்கூட தலையிட முடியாது. அதனாலதான் இந்த ஐந்தாவது செயலான ஞானம் அளித்தல் செயலை அவர், அவர் விருப்பப்படி செய்துவிட முடியாது. நீங்களும் அதற்கு இயைந்தாக வேண்டும். உங்களுடைய இயைபு வேண்டும், இசைவு வேண்டும். அந்த உங்களுடைய இயைபையும், இசைவையும் பெறுவதற்காகத்தான் தன்னுடைய இருப்புநிலையான, பரம்பொருள் சதாசிவ நிலையிலிருந்து, குருமேனி தாங்கி மனிதவடிவிலே ஞானமளிக்கின்ற ஒரு செயலைச் செய்யத்தான் வருகின்றார். காரணம் என்னவென்றால் இந்த ஐந்தாவது செயலான ஞானமளித்தலைச் செய்வதற்கு உங்களுடைய தனிமனித சுந்திரத்தோடு நீங்கள் அதை வேண்டும் என்று கேட்டாக வேண்டும். நீங்கள் மறுத்தால் பெருமானெகூட உள்ளே வர முடியாது. அதுமாதிரியான சுதந்திரத்தை கொடுத்துவிடுகின்றார். இருக்கிறதிலேயே மிகப்பெரிய கொடுமை என்னவென்றால்.. பெருமானை மறுக்கும் சுதந்திரம். ஈசனை, அருவுரு ஈசனை, குருவுருநாதனை மறுக்கும் சுதந்திரம்தான் வாழ்க்கையில் கொடிது. கொடிது, கொடிது பெருமானை மறுக்கும் சுதந்திரம். அந்த ஒரு செயலை செய்துவிட்டால், மறுத்தல் - மறுதலித்தலைச் செய்துவிட்டால், என்னாலும் யாராலும் எவராலும் எதுவும் செய்ய முடியாது. பிரம்மாவின் கோபத்திற்கு ஆளானால், விஷ்ணு காப்பார். விஷ்ணுவின் கோபத்திற்கு ஆளானால் சிவன் காப்பார், சிவனின் கோபத்திற்கு ஆளானால் குருகாப்பார், குருவை மறுதலித்துவிட்டால், அவரை மறுக்கும் சுதந்திரத்தை நீங்கள் உபயோகப்படுத்திவிட்டால் அவரும்கூட ஒன்றும் செய்ய முடியாது. இந்த மறுக்கும் சுதந்திரம்தான் மிகப்பெரிய மாயை. அதில்தான் அந்த மறைத்தல் என்கின்ற லீலையைப் பெருமான் புரிகின்றார். அந்த மறைத்தல் என்கின்ற மறுக்கும் சுதந்திரத்திற்குள் நான் விழக்கூடாது என்கின்ற வரத்தை வாங்கிக்கொண்டுதான் சுந்தரமூர்த்திப்பெருமான் கீழே வருகின்றார். வரும்பொழுதே ளவயல வாங்கிக்கொண்டுதான் கீழே வருகின்றார். வரும்பொழுதே.. "தப்புதான்.. மனம் மயங்கியது தவறுதான், ஆனா இதுக்குமேல இது கீழபோகாம இருப்பதற்கு இங்கேயே நிறுத்தனும் பெருவரம் பெற்று வருகின்றார் சுந்தரமூர்த்திப்பெருமான். நான் உனை மறந்தாலும், மறுத்தாலும் எனைத் தடுத்தாட்கொள்ளவேண்டும். திருவண்ணாமலைகூட நினைத்தால்தான் முக்தி, சுந்தரமூர்த்திப்பெருமான் மறந்தால் மட்டுமல்ல மறுத்தாலும் எனக்குக் கொடுத்தாக வேண்டும் என்கின்ற வரத்தைப் பெற்றுக்கொண்டு வந்ததனாலே, முதலில் பெருமான் தோன்றிய உடனேயே, சுந்தரமூர்த்திப்பெருமான் என்ன செய்கிறார் என்றால்.. படு டிசடைடயைவெ பாருங்கள், ஓலையைப் பிடித்து கிழித்துப் போட்டுவிடுகின்றார். முதலில் வந்தது பெருமான்தான், எனைத் தடுத்தாட்கொள்ள வந்திருக்கிறார் என்பதை மறந்துவிட்டார், அதையும் மீறி அவர் ஓலையைக் காட்டியவுடனே அந்த ஓலையைக் கிழித்துப்போட்டு மறுக்கவும் செய்கிறார், இரண்டையும் தாங்கிக்கொண்டு, இவனுக்கு ஒரு அடிமை தேவையா? உலகமே அடிமையாய் இருக்கும் அவனுக்கு இன்னொரு அடிமை தேவையா? என்னையா முட்டாள்தனம், சில நேரத்துல யாராவது இந்த பிள்ளைகளோ, பசங்களோ சன்யாசத்துக்கு வந்துட்டா அவங்க அப்பா அம்மா நினைப்பதுண்டு இவருக்கு வேலை செய்வதற்கு ஆள் வேணும் என்பதற்கு என் பொண்ணையொ பையனையோ சன்யாசி ஆக்கிவிட்டார் என்று சொல்வதுண்டு. பிரபஞ்ச பேரியக்கம் அடிமை செய்யும் அவனுக்கு இன்னொரு அடிமை வேண்டுமா? மூடத்தனத்திற்கு ஒரு ஈடு இல்லையா? பித்தா என்று பழித்தும், ஓலைச்சுவடியை அழித்தும் னநளவசரஉவழைெ ழக நஎனைநெஉந அப்புறமும் சொல்கிறார்... இல்லை இல்லை, இவன் கிழித்தது படி ஓலை, மூலஓலை பத்திரமாக வெண்ணை நல்லூரில் இருக்கின்றது. ஒருவேளை அதிலிருந்துதான் வெண்ணை என்று சொல்ல ஆரம்பித்தார்களோ என்னவோ...! தமிழில் ஒரு வழக்குச் சொல்லா மாறினதோ என்னவோ! "வா வெண்ணைநல்லூர் வா அங்கு காட்டுகிறேன்" என்று வெண்ணைநல்லூர் கொண்டுபோகிறார். அங்கு இறுதித் தீர்ப்பாக... ’’சுந்தரம் பித்தன் என்கின்ற இந்த சித்தருக்கு அடிமை’’ என்று தௌிவாக சொல்லிவிடுகிறார்கள். அப்பொழுதும் சுந்தரர் சும்மா இருக்கவில்லை, என்னசொல்கிறார் என்றால், அந்த ஓலையில் இந்த ஊர் உங்கள் ஊர் என்று போட்ருக்கே.. உங்க வீடு எது என்று காட்டுங்கள், உங்களுடைய குடும்பம் சுற்றம் சுழல் இதையெல்லாம் காட்டுங்கள் என்று கேட்கின்றார். தீர்ப்பிற்குப் பிறகும் நஎனைநெஉநஅ ஆராய்ச்சிப் பன்றாரு. ஊழவெநஅிவ ழக உழரசவ பெருமான் வா, காட்டுகிறேன் என்று சென்று கருவரைத் திருமேனிக்குள் இரண்டறக் கலந்தார். சுந்தரனுக்கு உரைத்தது. சுளீரென்று உரைத்தது.. ஆஹா!! ஐயனே வந்தது நீரா..! அப்பொழு பெருமான தோன்றி.. ரிஷபாரூடராய் அன்னையாரோடு தோன்றி.. சுந்தரா வந்தவேலை சொந்தவேலை எந்தவேலையோ.. அந்த வேலை மறந்தாயா? இந்தக் காலைப் பற்றவே இந்த வேலைக்கொண்டு வந்தாய் என்பதை மறந்தாயா? என்று அவருடைய பூர்வ திருக்கயிலாய வாச நிலையை நினைவூட்டுகிறார். நினைவுக்கு வந்தவுடனே விழித்துக்கொள்கின்றார் சுந்தரமூர்த்திப் பெருமான். விழித்து ஆஹா! ஐயனே... வந்த நோக்கத்தைக் காட்டியதற்கு நன்றி. இனி நான் தவ நிலையில் இருந்து வந்த நோக்கத்தை நிறைவேற்றி, உன்னுடைய பாதத்தைப்பற்றிட வேண்டும், தவநிலை அருளுக என்று கேட்க, அவ்வாறு சுந்தரமூர்த்திப்பெருமானுக்கு பெருமான் தம்பிரான் தவநிலை அருளுகிறார்.


தவ நிலையில் இருந்து தான் சாமீப்ய முக்தனாக இருந்ததை ஆனுபூதியாக உணருகின்றார் சுந்தரமூர்த்திப் பெருமான். நான்கு நிலை முக்தி நிலை : சாலோக்ய முக்தி - திருக்கயிலாயத்திலே இடம் கிடைத்து அங்கே வாழ்வது. சாமீப்ய முக்தி - அருகாமையில் இருந்து பணி செய்கின்ற புண்ணியம். சாரூப்ய முக்தி - அவருடைய வடிவத்திலேயே இருந்து, கோவிலில் பாரத்தீர்களென்றால் துவார பாலகர்கள் பெருமானைப்போலவே நான்கு கரங்களோடு மான் மழுவேந்தி இருப்பார்கள். அவருடைய வடிவத்திலேயே சடா மகுடந்தாங்கி இருப்பார்கள். ருத்ரர்கள், ஏகாதர ருத்ரர்கள்.. இவர்களெல்லாம் சாரூப்ய முக்தி பெற்றவர்கள். அஷ்ட பைரவர்கள், ஏகாதச ருத்ரர்கள் இவர்களெல்லாம் சாரூப்ய முக்தி பெற்றவர்கள். அவருடைய ரூபத்திலேயே வாழ்ந்து அவருரைடைய நிலையிலேயே இருப்பவர்கள். சாயுஜ்யம் - என்றால் இரண்டறக் கலந்து, மாணிக்க வாசகப் பெருமானைப்போல, ஞானசம்பந்தப் பெருமானைப்போல, தனியாக ஒன்றில்லாமல் இரண்டறப் பெருமானோடேயேக் கலந்து முக்தியடைந்தவர்கள் சாயூஜ்ய முக்தர்கள். இந்த நான்கு நிலை முக்தியிலே: சாமீப்ய முக்தியில் அருகாமையில் இருந்து, கைக்கலகு தாங்கும் பெருந்தொண்டு செய்துவந்தவர் சுந்தரமூர்த்திப்பெருமான். கைக்கலகு தாங்குதல் என்றால், அந்தத் திருநீற்றுக்கோவிலான, திருநீற்றுப்பெட்டகமான, பெருமானுக்கே திருநீற்றுப்பெட்டகம் தாங்கும், கைக்கலகு தாங்கும் சேவை. அப்படியென்றால் 24 மணிநேரம் கூடவே இருந்தாக வேண்டும். ஏனென்றால் எழுந்தவுடன் திருநீற பூசிக்கொள்வார் பெருமான். வருபவர்களுக்கெல்லாம் அளிப்பார். தூங்கும்முன் பூசிக்கொள்வார், எப்போதும் உடனிருக்க வேண்டும், இரவு பெருமாட்டி அன்னையார் பாதசேவை செய்யும் நேரத்தில் வேண்டுமானால் வாசலுக்கு வௌியில் நிற்கலாம், அதுவும் பெருமான் எழுந்தவுடன் கைக்கலகு காட்டவேண்டும் என்பதனால் வாசலிலேயே நிற்க வேண்டும். தன்னுடைய சுய நிலையான சாமீப்ய முக்த நிலையை அனுபூதியாக உணர்ந்து, தான் வந்த நோக்கத்தைப் புரிந்துகொண்டு வாழத்துவங்குகிறார் சுந்தரர். அடுத்தது, பொன் கொடுக்க வேண்டும் என்று பாடிக்கேட்கின்றார், கொடுக்கவில்லை என்பதனால் திட்டிவிடுகின்றார், திட்டியபிறகு அதற்காக மன்னிப்பும் கேட்கின்றார். இரண்டையும் ஏற்றுக்கொண்டு பெருமான் பொன்னையும் அளிக்கின்றார். என்ன ஆழமான உறவு பாருங்கள்! அவன் என்னைத் திட்டினாலும், அவன் என்மீது கொண்டிருக்கும் அன்பின் ஆழம், என்மீது கொண்டிருக்கும் கசப்பின் ஆழத்தைவிட அதிகமானது என்று பெருமானே நம்பிக்கைக்கொண்டிருக்கும் பக்தியின் சக்தி. நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள் ஐயா! என் மீது அவனுக்கு ஏற்பட்டிருக்கும் மனக்கசப்பின் ஆழத்தைவிட, என்மீது அவனுக்கு இருக்கும் பக்தியின் இனிமையின் ஆழம் அதிகம் என்று பெருமானே நம்பிக்கை கொண்டிருக்கும் நம்பிக்கை. பெருமானுக்கே அந்த நம்பிக்கை வரவேண்டும் என்றால், தன் உயிரையே உருக்கி ஊற்றினால் மட்டுமாம்தான் அது சாத்தியம். உயிரையே உருக்கி அவன் உருவாக வார்த்தெடுத்தால் மட்டுமதான் அது சாத்தியம். நீங்க பெருமானை நம்பினால் அது பக்தி. பெருமான் உங்களை நம்பினால் அது சக்தி. ஜீவன் சிவனை நம்பினால் அது பக்தி. சிவன் ஜீவனை நம்பினால் அது சக்தி. இவனுக்கு இதுகொடுக்க வீணாகவோ, விரயமாகவோ ஆகாது அவன் நம்பிக்கை வைக்கும்பொழுதுதான், அது உங்களுக்கு ஆகும். சிவம் மீது நீங்கள் வைக்கும் நம்பிக்கை பக்தி. அவர் வைக்கும் நம்பிக்கை சக்தி. திட்ராரு... வரம் வாங்கி வரும்பொழுதுகூட நான் மறந்தாலும், மறுத்தாலும் எனை ஆட்கொள்ள வேண்டும் என்று சொன்னாரே தவிர, திட்டினாலும் ஆட்கொள்ளவேண்டும் என்று கேட்டு வரவில்லை. அதையும் செய்கிறார். ஆனால் கருணா மூர்த்தியான பரம்பொருள், உழஅிடநவழைெ - னோட ஆழத்தையும், ைெஉழஅிடநவழைெ-னோட ஆழத்தையும் தெரிந்தவர். உண்ணும்பொழுது குழந்தை தவறி, உணவு சரியில்லை என்ற கோபத்தால் ஒருபொருளை நம்மீது விட்டெறிந்தால், அதைக் கொலை வழக்காக பதிவுசெய்ய நாம் நினைக்க மாட்டோம். கொலை முயற்சி வழக்கென்று நாம் நினைக்க மாட்டோம். கொலை முயற்சி என்று நினைக்கமாட்டோம். நன்றாகத் தெரியும், செயலைவிட இருப்பின் நோக்கம் நமக்குப் புரியும் பொழுது, செயலை ஒரு பொருட்டாக பொருட்படுத்துவதில்லை. இதோட விட்டாரா? இல்லை...!! பொருள் கேட்டு கொடுக்கவில்லை என்று திட்டியதோடு விடவில்லை. பொருளும்பெற்றார், திருநாவுக்கரசர் வாழ்க்கையில் எல்லாம் பார்த்தீர்களென்றால், துக்கம் அவர்மீது திணிக்கப்படும்பொழுதெல்லாம் பெருமானை நினைந்து, திருவிளையாடல்கள் நிகழ்ந்து அதிலிருந்து அவர் வௌியில் வந்திருக்கிறார். திருநாவுக்கரசர் வாழ்க்கையில் அப்படித்தான் பலது நடக்கும். ஞானசம்பந்தப்பெருமான் வாழ்க்கையில் பார்த்தீர்களென்றால், துக்கம் இவர்மீது திணிக்கப்படவில்லை என்றாலும் இவராகத் தேடிப்போய் வாது செய்து பெருமான் சக்தியை நிரூபித்து அவர்களையெல்லாம் வெற்றுவிட்டு வருவார். அதாவது பெருமானுடைய சக்தியை எப்படி வாழ்க்கையில் உபயோகப்படுத்துகிறார்கள் என்று பார்த்தோமானால், திருநாவுக்கரசருக்கு தானாக பிரச்சினை வரும்பொழுது பெருமான் சக்தியை உபயோகித்து அதிலிருந்து வௌிவந்துவிடுவார். ஞானசம்பந்தப் பெருமான் தானாக வரவில்லையென்றாலும் இவர் தேடிப்போய் வாது செய்து வென்று இறைவன் சக்தியை உபயோகம் செய்து ஜெயித்துவிட்டு வருவார். நம்ம ஆள் சுந்தரர், இதெல்லாம் ஒன்னும் வேணாம், பொழுதுபோக்கு வேற ஒன்னும் வேலை இல்லையென்றால், இறைவனின் சக்தியை கூப்பிட்டு உபயோகம் செய்வார். பொன்னை ஆற்றிலே விட்டு குளத்திலே எடுப்பது. பார் பெருமான் சக்தியை! அதாவது நமக்கு புதுசா ரொம்ப பெரிய ஆள் கசநைனெ-ஆ ஆயிட்டார்னா... நாம என்ன பண்ணுவோம், நம்ம மத்த கசநைனௌ-களுக்கெல்லாம், இப்ப பாரு.. அவருக்கு உயடட பன்றேன் பாக்கறியா?? பேசுகிறார் பாரு, நேரா ிைஉமரி பன்றாருபார் என் உயடட-ஐன்னு ளுிநயமநச -ல போட்டு அவருக்கு உயடட - பண்ணி, என்னன்னே.. நல்லா இருக்கீங்களான்னே.. ஒன்னுமில்ல.. சும்மா இருந்தேன் அதனால் உங்களோட கொஞ்சநேரம் பேசிகிட்டு இருக்கலாம்னு உயடட பன்னேன்" காட்டுவோமில்லையா? அதேமாதிரி தம்பிரான்தோழன் என்பதை நம்பாதவர்களுக்கெல்லாம் நம்பவைப்பதற்காகவே, அப்ப என்ன உயளரயட-ஆ என்ன ஜாலியா.. என்ன ஆனந்தமா.. என்ன இனிமையா.. என்ன உரிமையாக தம்பிரான்தோழர் என்று அவருடைய சக்தியோடு விளையாடி இருக்கிறார் பாருங்கள். பரவை நாச்சியாரை ைஅிசநளள பன்னனும், தான் யார் என்று பரவை நாச்சியாருக்கு காண்பிக்க வேண்டும், அதுக்காக கொடுத்த பொன்னை ஆற்றிலே இட்டு, குளத்திலே எடுத்துக்காட்டுகிறார். தம்பிரான் தோழர்னு காட்டுவதற்காக.. அதையும் பொறுத்து பெருமான் செய்கின்றார். பெருமானும் இவரோடு விளையாடுகின்றார். இவர் என்ன பன்றாரு ஆற்றிலே இடும்பொழுது அதில் எத்தனை மாத்திரை என்று.. எத்துனை மாத்து தங்கம் என்று சநஉழசன பொறித்து வைத்தது விடுகின்றார். ஏன்னா பெருமான் மாற்றிவிடக்கூடாது என்று. பெருமானோ வேண்டும் என்றே இங்கு அதை மாற்றி வைக்கின்றார். மாத்து குறைவான தங்கமாக இங்கிருந்து கிடைக்கின்றது. எடுத்துக்கொண்டுபோய் திரும்பக் காட்டுகின்றார். இது எப்படி மாற்றுக்குறைவாக நீ மாற்றி வைத்திருக்கிறாயே..?? இது என் விளையாட்டு என்றவுடன், அதை மாற்றை மாற்றி பெருமான் திரும்பக் கொடுக்கின்றார். அதாவது பரவை நாச்சியாருக்கு, தனக்கும் பெருமானுக்கும் இருக்கின்ற உறவின் பலத்தைக் காட்ட வேண்டும். இதெல்லாம் நான் பண்ணும்பொழுது பெருமான் நம்மை ஏமாற்றினாலும் ஏமாற்றிவிடுவார் என்று, இடுகின்ற தங்கத்தையே மாற்று முத்திரையைப் பொறித்துக்கொண்டு இடுகின்றார். அந்த முத்திரை, அதே மாற்று இங்கு வரவில்லை என்று தனியாகச் சென்று வேறு கேட்கின்றார். என்ன நீ பன்ற? பெருமானும் இவரோடு விளையாடுகின்றார். மீண்டும் பாடியதும் அதை மாற்றியும் கொடுக்கின்றார். சைவத்தை வாழனுங்கையா!!! வார்த்தையில் எல்லாம் பேசக்கூடாது. த்வைதத்தை பாடலாம், விஷிஷ்டாத்வைதத்தை யோசிக்கலாம், அத்வைதத்த தியானிக்கலாம், சைவத்தை வாழனுங்கையா!!! சைவத்தை வாழவேண்டும். பெருமானோடு தினந்தோறும் விளையாடல்கள் செய்து, அதாவது மனித மனம் இயங்குகின்ற ஒரு விதி கட்டுப்பாடு. அதற்குத்தான் தர்மம் என்று பெயர். பிரபஞ்சப் பேரருளான் பரம்பொருள் இயங்குகின்ற விதிகளைக் கடந்த சக்தி, அது தர்மம் விதிகள் இதெல்லாம் கடந்த விளையாடல். எந்த சட்ட திட்ட விதி, புரிதல், புரியாமைக்குக் கட்டுப்பட்டு மனிதன் இயங்குகிறானோ அதற்கு தர்மம் என்று பெயர். எந்தக் கோட்பாடு தத்துவங்களுக்கு உட்பட்டு இறைவன் இயங்குகின்றானோ அதற்கு லீலை என்று பெயர். தர்மம் லீலைக்குக் கட்டுப்பட்டால் பக்தி, லீலை தர்மத்திற்கு கட்டுப்பட்டால் சக்தி. பிண்டாண்டம் பிரம்மாண்டத்தில் கரைந்தால் பக்தி, பிரம்மாண்டம் பிண்டாட்டத்தில் கரைந்தால் சக்தி. சுந்தரமூர்த்திப் பெருமான் பக்தியின் சக்தியின் உச்சம். பேக்கட் மணிக்காக பெருமானோ சண்டையிட்டது அதோட முடிஞ்சிரல. திருவாரூர் கோவிலுக்குப் போகிறார், கோவிலில் பரவை நாச்சியாரைப் பார்க்கிறார். பார்த்தவுடனேயே தன் வாழ்க்கையின் நோக்கத்திலே, நாம் வாழ்ந்து அனுபவிக்க வேண்டிய பெண் இவள் என்று புரிகின்றது. தன்னை மறந்தார் பரவை நாச்சி வயப்பட்டார். உடனே அவர் பரவை நாச்சியாரிடம் சென்று தன் காதலைச் சொல்லவில்லை. பெருமானிடம் செல்கிறார். ஆ.. எனக்குத் தெரியும்பா எங்குபோகவேண்டும் என்று!. பெருமானே!. பாருங்க.. யார் தூது என்று பாருங்கள். பெருமானிடம் சென்று.. ஆரூரன் தியாகராஜப் பெருமானிடம் சென்று, புற்றிடம்கொண்ட நாதர், வன்மீகநாதர் பெருமானைப் பார்த்து, "நீயே பொறுப்பு" என்கிறார். நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், உயர்ந்த ஆன்மிகத் தேவைகளுக்காக மட்டுமல்ல. பக்திக்காக மட்டுமே பகவானிடம் செல் என்று சொல்வது த்வைதம், ஞான அனுபவத்திற்காக மட்டுமே பகவானிடம் செல் என்று சொல்வது விஷிஷ்டாத்வைதம், முக்திக்காக மட்டுமே இறைவனை நாடு என்று சொல்வது அத்வைதம், முக்தியானாலும் சரி, மூக்குத்தியானாலும்சரி பெருமானிடம் போடா என்று சொல்வது சைவம். வேறு எந்த பாரம்பரியத்திலும், மண் வேண்டும், பெண் வேண்டும், பொன் வேண்டும், ஒரு த்வைத குருவிடம் சென்று கேட்டீர்களானால், ஏ அதெல்லாம் பகவானுக்குத்தான் சொந்தமப்பா, அவரப்பிடி போதுமப்பா என்பார். ஒரு விசிஷ்டாத்வைத குருவிடம் சென்று கேட்டீர்களானால், அதெல்லாம் பண்ணி என்னப்பா பண்ணப்போற, காலம் வீணாப்போகும் பெருமானை நினைப்பா" என்று சொல்வார். ஒரு அத்வைத குருவிடம் சென்று கேட்டீர்களானால், "அதெல்லாம் மாயையப்பா விடப்பா, ஞானத்தை அடைப்பா" என்று சொல்வார். ஒரு சைவ குருவிடம் சென்று கேட்டால் மட்டும்தான், "இரப்பா பெருமானிடம் கேட்டு வாங்கிக் குடுக்கிறேன்" என்பார். எவ்வளவு வேணும், எப்பவேணும்னு சொல்லப்பா கேட்டு வாங்கிக் குடுக்கிறேன் என்பார். தன்னுடைய குழந்தை இறந்துபோய்விட்டது என்று ஒரு பெண் குழந்தை தூக்கிக்கொண்டு புத்தரிடம் செல்கின்றார். புத்தர் உடனே சொல்கிறார், உடனே சென்று "யார் வீட்டில் மரணம் நடக்கவில்லையோ அவர்கள் வீட்டில் ஒரு கைப்பிடி கடுகு கொண்டு வா, நான் உயிர்ப்பித்து தருகிறேன்" என்று. இதச் சொல்றதுக்கு நீ எதற்கு? எங்களுக்குத் தெரியாதா? அதேப் பெண் சுந்தரரிடம் ஓடியிருந்தால், உடம்புகூட இல்ல, அங்கு புத்தன் முன்னாவது குழந்தையின் உடல் இருந்தது, இங்கு சுந்தரரிடம் ஓடிய தாய் தகப்பனிடம் பையனின் உடம்புகூட இல்லை. முதலை விழுங்கிவிட்டது!. ஐயனே...!!! மகனை முதலை விழுங்கிவிட்டது என்று சொல்கிறார்கள். அஞ்சாதே என் தோழன் இருக்கின்றான். பெருமானைப் பார்த்துப் பாடுகின்றார், முதலை வாயிலிருந்து மீட்டெடுக்கின்றார்.

செத்து சுடுகாட்டில் சுண்ணாம்பாய் பொசுக்கப்பட்டு, குடத்திலே அடைக்கப்பட்ட சாம்பலை மயிலாப்பூரில் ஞானசம்பத்தப்பெருமான் பூம்பாவை எனும் பெண்ணாக்குகின்றார். தன் பெயராலேயே திருப்பணிகள் பலவும் செய்து, திருநாவுக்கரசருக்கே தாசனாக வாழ்ந்த அப்பூதி அடிகள் மகன் இறந்ததனால், பாம்பு கடித்து இறந்ததனால், இறைவனை நோக்கி பதிகம் பாடி, சிறுவனை உயிர்த்தெழச்செய்து மீட்டுக்கொண்டு வருகின்றார் அப்பர் பெருமான். இந்த முதலை வாய்ப்பட்ட குழந்தையை, ஞானசம்பந்தருக்காவது எலும்பு மிச்சம் இருந்தது, திருநாவுக்கரசருக்காவது உடம்பு இருந்தது உயிர்கொடுக்க, இங்க இரண்டுமே இல்ல முதலை விழுங்கிவிட்டது. முதலை வாயிலிருந்து மீட்டுவருகின்றார் சுந்தரப்பெருமான். சுந்தரமூர்த்திநாயனார். ஐயா!... வாயாலே வடைசுடுகிற மதங்கள் இருக்கு.. இல்லை உண்மையிலேயே.. வாயாலையே வடைசுடுவது!. பக்தியின் சக்தியை நிரூபித்துக் காட்ட துணிவில்லாதவர், வார்த்தைகளை வைத்து வாயால் வடை சுட்டே நிரூபித்துவிடுகின்றார்கள். கொஞ்சநாளைக்கு முன்னாடி ஒரு குரு ஹீலிங்கெல்லாம் பண்ணக்கூடாது... பண்ணத்தெரியாதுன்னு சொல்லிட்டு நிம்மதியா இருக்கலாம் இல்ல. மெடிரியலைஷேஷன் எல்லாம் பண்ணக்கூடாது, பண்ணத்தெரியாதுன்னு சொல்லிட்டு சும்மா இருக்கலாம்ல. இப்ப அடுத்து ஒரு ளவயவநஅநவெ வரனும், ஏன் வரலைன்னு இன்னும் தெரியல.. மூனாவது கண்ணெல்லம் திறக்க முடியாது. சொன்னப்புறம் திறந்து காட்டலாம்னு நினைத்தேன். அவருக்கு யாராவது பசங்களோ, பொண்ணோ, பையனோ இருந்தா வந்து நித்யானந்தம் அட்டன் பண்ணி மூணாவது கண்ண திறந்து அனுப்பலாம்னுதான் நினைச்சேன். சக்திகளை வௌிப்படுத்தக்கூடாது அப்படீன்ற கருத்தைப் பரப்பினதே.. சக்திகளை வௌிப்படுத்த முடியாத மூடக்கும்பல்தான். அவர்களெல்லால் சொல்வதுண்டு, இல்லையில்லை இதெல்லாம் வௌிப்படுத்தினால் அகங்காரம் வந்துவிடும், ஈகோ வந்துவிடும், ஞானப்பாதையில் தடையாகிவிடும். இப்போ நீங்கள் எல்லாம் அடைஞ்சிட்டீங்களா? தப்பா ஒன்னும் கேட்களிலேய.. அப்புட்டுத்தேன்.. இப்ப தப்பா ஏதா சொல்லிபுட்டமா?? சில நேரத்துல இவர்களையெல்லாம் பார்த்தால் தோணுது.. வாயால வட சுடுகிறவர்களைப் பார்த்திருக்கிறேன்.. வாயிலேயே வடசட்டிய வச்சிருக்கிறவர்களை இப்பதான்யா பார்க்கிறேன். இந்த ஆன்மிகம் பொய், இந்த பகுத்து எறியிர கும்பல் இருக்கில்லையா.. அதையாவது பரவாயில்ல வாயால வடசுடுகிற கும்பல் என்று சொல்லாம், இது வாயிலேயே வடசட்டிய வச்சிருக்கிற கும்பலா இருக்கே.!! இந்த வாயால வடசுடுகிற கும்பலுக்கு.. சிட்டிகை விபூதி போட்டால் போதும், இந்த வாயிலேயே வடசட்டிய வச்சிருக்கிற கும்பலுக்கு கொஞ்சம் விபூதிய அள்ளித்தான் போடனும்போல இருக்கு. இது கிள்ளிப்போட்டா போதும்போல, அது அள்ளித்தான் போடனும் போல. நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள், பெருமான் அளித்து வௌிப்படும் எந்த சக்தியும் நம்மை அகங்காரத்திற்கு ஆட்படுத்தாது. பாதை விலக்கிக் கொண்டுசெல்லாது. நோதல் கொடுக்காது, நுடங்கள் அளிக்காது, மனம் அவன் பாதத்து அடங்கள் மாத்திரமே நிகழும். புரியாத மூடர்களே இது தடங்கல் என்று கருதுகிறார்கள். பெருமான் கொடுக்கும் சக்திகள் தடங்கல் அல்ல தடங்கள். ஞானவழித்தடங்கள். பக்தியின் சக்தியை, சைவம்போல வாழ்ந்து ருசித்து, ரசித்து, இனித்து, தினந்தோறும் நெஞ்செலாம் நிறைந்து மூச்செல்லாம் மூழ்கி உடலெல்லாம் நிறைந்து சைவத்தை வாழ்ந்தவர் சுந்தரமூர்த்திப்பெருமான்.

பெண்மீது கொண்ட காதலோ, காமமோ அதெல்லாம், அது சரியோ தப்போ, ஒழுக்கமோ ஒழுக்கமின்மையோ சாதாரணக் கண்ணோட்டத்தில் பார்த்தால், என்னையா கோயிலுக்குச் சாமியப் பக்கப்போனியா, இல்ல பொம்பளைய பாக்கப் போனியான்னு கேட்கலாம். அவர்சொல்கிறார் நான் இரண்டையும்தான் பார்க்கப் போனேன் இப்போ என்ன? அப்படீங்கிறார். அதையும் பெருமானிடமே கொண்டு செல்கின்றார். அப்ப என்ன தைரியம் இருக்கும் பாருங்க! தன் பக்திமீது பெருமான் வைத்திருக்கின்ற நம்பிக்யைின் மீது இருக்கும் நம்பிக்கை. நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்.. சரணாகதி என்றால் என்னவென்றால், தான் பெருமான் மீது வைத்திருக்கும் நம்பிக்கை, அவரும் தன்மீது வைத்திருக்கின்றார் என்கின்ற தௌிவு சரணாகதி. பக்தர் என்று சொல்லிக்கொள்கின்ற ஒருவர் சொன்னாராம், சென்னைலதான்.. "நான் சாமியை புரிந்துகொண்டேன்.. அவருதான் என்ன புரிஞ்சிக்கில.." (சிரிப்பு) "நான் சாமியை புரிந்துகொண்டேன்.. அவருதான் என்ன புரிஞ்சிக்கில.." அது பேரம். நான் அவரைப் புரிந்துகொண்டதுபோல் அவரும் என்னைப் புரிந்துகொண்டார் என்கின்ற சிரத்தை - சரணாகதி. இல்லையென்றால் தைரியம் வருமா, பெருமானிடம் சென்று "ஏதோ ஒரு பிள்ளையைப் பார்த்தேன்.. அது பெயர்கூட தெரியல.. உனக்குத்தான் தெரியும்போல என்ன பண்ணனுமோ பண்ணி வை" என்று போய் கேட்கின்ற தைரியம் வருமா?. ஏ! என்ன பார்க்க வந்தாயா? இல்லை அவளைப் பார்க்க வந்தாயா? என்று பெருமான் திரும்பக் கேட்டால் என்ன செய்வது. ஆனா தைரியமாகச் சென்று கேட்கின்றார். காரணம் என்ன? நான் அவனுக்கே ஆள்! அதில் எனக்கு நம்பிக்கை இருப்பது மட்டுமில்லாமல், அவன் எனக்கு ஆள் அதன் மேலயும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.


நான் அவர் மேல் வைத்திருக்கின்ற பக்தி, அவர் என் மேல் வைத்திருக்கின்ற நம்பிக்கை இது அசைக்கவே முடியாது. நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், பக்தி எப்பொழுது முழுமையடைகிறது என்றால், நாம அவர்மேல நம்பிக்கை வைப்பது மட்டுமல்ல. நம்ம நம்பிக்கையினுடைய தாக்கமாக அவரும் நம்மீது நம்பிக்கை வைத்திருக்கார் என்ற நம்பிக்கை நமக்குள்ள மலர்வதுதான் பக்தியின் முழுமை!. என்னை நம்பவில்லை..? என்று பெருமானைப் பார்த்து, இறைவனையோ குருவையோப் பார்த்து நீங்கள் கேட்டுவிட்டீர்களென்றாலே உங்களுக்கு அவர் மீது நம்பிக்கை இல்லை என்பதை முடிவாகிவிடுகிறது. சத்தியம் புரியவில்லை. என்ன நம்பலியா?ன்னு கேட்டவுடனேயே.. "நான் உன்னை நம்பவில்லை, நீ என் மீது வைத்திருக்கின்ற நம்பிக்கையின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை" என்று நிரூபித்துவிடுகின்றோம். சத்தியம் புரியலையா? இவருக்கு, சுந்தரமூர்த்திப் பெருமானுக்கு பெருமான் மீதிருந்த பக்தி, பெருமான் இவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கையின் மீது இவருக்கிருந்த நம்பிக்கை, நம்பிக்கையின் மீதிருந்த நம்பிக்கை. அதனாலத்தான் நேராச் சென்று கேட்கின்றார்.. ஒரு பெண்ணைப் பார்த்தேன், திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று நினைக்கின்றேன், பண்ணிவைங்கள்" என்று பெருமானை நேரடியாகக் கேட்கின்றார். ஐயனும், ஆகட்டும் செய்கிறேன் அப்பா!" என்று சொல்லிவிட்டு அன்று இரவே பரவை நாச்சியாருடைய குடும்பத்தார் சுற்றத்தார் கனவிலும், தம்பிரான் தோழரின் உற்றத்தார் குடும்பத்தார் கனவிலும் சென்று "இருவருக்கும் திருமணம் செய்து வைக்க!" என்று ஆணையிடுகின்றார். உடனடியாக ஏற்பாடுகள் செய்து திருமணம் செய்து வைக்கப்படுகிறது. இனிமையோடு திருவாரூரில் பரவை நாச்சியாரோடு வாழ்ந்துவருகின்றார்.


கொஞ்ச நாள் கழித்து எல்லா சிவத்தலங்களையும் சென்று பார்க்க வேண்டும் என்று கிளம்புகிறார். வழியெல்லாம் பல்வேறு விதமான அத்புதங்களை நிகழ்த்தி, எத்துணை எத்துணையோ இறைவனின் லீலைகளை விளையாடல்களை மக்களுக்குக் காட்டி, பெருமானை கசிந்துருகி ஸ்தோத்திரங்கள் செய்து, பாடல்கள் செய்து சைவம் பரப்பி திருத்தலம் திருத்தலமாக தம்பிரான்தோழர் யாத்திரை செய்கின்றார். செய்து திருவொற்றியூர் வருகின்றார். திருவொற்றியூர் வந்து தங்கியிருந்து தினந்தோறும் பெருமானை தரிசித்து வரும் வேளையிலே, திருவொற்றியூரில் தான் இரண்டாவது பெண் சங்கிலி நாச்சியாரைப் பார்க்கின்றார். இதில் பிரச்சினை என்னவென்றால் சங்கிலி நாச்சியார் சைவ வேளாளர் குலத்துப் பெண்மணி, சுந்தரமூர்த்திப்பெருமானோ ஆதிசைவ குலத்து உதித்தவர். குலம் சார்ந்த பிரச்சினை வேற! சங்கிலி நாச்சியாரின் தகப்பனார், குலம் சார்ந்த ஒரு நபரை திருமணம் செய்துகொள்ள தயார் செய்தபொழுது, சங்கிலி நாச்சியார் இறைவனுக்கு அடிமை செய்யும் வன்-தொண்டருக்கே நான் என் வாழ்க்கையை முடிப்பேன் என்று உறுதியோடு திருமணத்தை மறுத்து ஆலயத்திலேயே இருந்து பெருமானுக்கு சேவை செய்து கொண்டிருக்கின்றார். சுந்தரமூர்த்தி நாயனாருக்கு சங்கிலி நாச்சியாரைக் கண்டவுடன் காதல், இரண்டாவது காதல். திரும்பவும் சிறிதும் அச்சம், மடம், நாணம், வெட்கம் எதுவுமில்லாமல் நேராக பெருமானிடம் செல்கின்றார். இவர் ஒன்னும் அத்வைதி இல்லையே, இவர் சைவர்! நேராக பெருமானிடம் செல்கின்றார், ஐயனே.. நம்பர் 2, இன்னைக்குதான் பார்த்தேன் தம்பிரான் தோழர்தானே.. நீங்கள் தான் ப்ளான் பண்ணனும் என்னடா இது!!? நானாக இருந்தால் யுஉவரயடட-ஆ இதுக்குமேல எந்த கோவிலுக்கும் போகாதே என்று சொல்லியிருப்பேன், இல்ல நீ இங்கேயே உட்காரு. என்ன இனிமையான உறவுபாருங்க, பக்தியின் சக்தி பாருங்க.. நம்பர்1-னிடம் ிநசஅளைளழைெ வாங்கவில்லை. பரவை நாச்சியாரிடம் ிநசஅளைளழைெ ல்லாம் வாங்கவில்லை.

திருவெற்றியூர் பெருமான் "என்ன பன்றதுன்னு?" அப்படியே பார்த்துக்கொண்டிருக்கின்றார்.! ஏன்னா இந்த அம்மா நம்பர் 2க்கு தெரியும், ஏற்கனவே நம்பர் 1 இருக்காங்கன்னு, இது என்னடா...? ஆனால் பக்தியின் சக்தி.. பெருமான் சொல்றாரு, சரி என்ன பன்றதுன்னு பார்க்கிறேன். நல்லா இந்த இந்த இரவின் நிகழ்ச்சியைப் புரிந்துகொண்டீர்களென்றால், சைவம் என்னவென்று புரிந்துவிடும். ஆழ்ந்துகேளுங்கள், இந்த இந்த இரவு என்ன நடந்ததோ அதைப் புரிந்துகொண்டால் உங்கள் வாழ்க்கை விடிந்தது.! வேறு ஒன்றும் வேண்டாம், பிரபஞ்சத்தையே இயக்கும் பெருமான்! முப்பத்துமுக்கோடி தேவர்களும், நாற்பத்து எண்ணாயிரம் ரிஷிகளும், கின்னர கிம்புருட, கந்தர்வ, காந்தார, யக்ஷ, ரக்ஷ, தேவர், மானுடர் எல்லாம் நின்று துதிக்கும் திருக்கயிலாயத்து காமதேனு கற்பகவிருக்ஷத்தோடு கொலுவிருக்கும் பெருமான், எத்துனைகோடி சுழல்களை காத்து இரட்சித்து நடத்திக்கொண்டிருக்கும் பெருமான், இந்த சுந்தரர் விஷயத்துக்காக மட்டும் அன்று இரவு ஏறத்தாழ ஒரு 20 முடிவு எடுக்க வேண்டியிருக்கிறது. முதலில் சுந்தரர் சென்று விண்ணப்பம் செய்கிறார், அப்பா திருவொற்றியூருக்கு இன்றைக்குத்தான் வருகிறேன், தரிசனம் பண்ண இப்பத்தான் வரேன், வரும் வழியிலேயே பார்த்துவிட்டேன்! - நானாக இருந்திருந்தால் முதல் கேள்வி கேட்டிருப்பேன்.. அப்போ என்னைப் பார்க்க வரவில்லையா" என்று! அதையும் பெருமான் பொறுத்துக்கொள்கிறார். "நீங்கதான் கல்யாணம் செய்து வைக்க வேண்டும்." ஆகட்டும் பார்க்கிறேன்! சுந்தரமூர்த்திப்பெருமான் தங்கியிருக்கின்ற இடத்திற்கு சென்று விடுகின்றார், இரவு சங்கிலி நாச்சியார் கனவிலே பெருமான் தோன்றுகின்றார், தோன்றி அம்மா! எனக்கே அடிமையான பக்தர்களில் ஒருவரைத்தான் மணம்புரிவேன் என்கின்ற எண்ணத்தோடு இருக்கிறாயே... வன்தொண்டன் தம்பிரான் தோழன், நல்ல சிவபக்தன் - எனது அடிமை, அவனை திருமணம் செய்துகொண்டு வாழ்!" என்று சொல்ல.. அவள் "ஆகட்டும் அப்பனே அவ்வாறே செய்கின்றேன், ஆனால் என்னுடனேயே இங்கேயே வாழவேண்டும், என்னை விட்டுப்பிரியக்கூடாது என்று அவர் உறுதிமொழி கொடுத்தால் செய்து கொள்கிறேன்". ஏனென்றால் அந்த அம்மாவிற்கு தெரியும் ஏற்கனவே ஒரு மனைவி இருக்கிறாள் என்று!. ஏற்கனவே அவர் ஒருவரை திருமணம் செய்துகொண்டிருக்கிறார் அதனால், இங்கேயே இருப்பதாக உறுதிமொழிப் பெற்றுத்தந்தால் செய்துகொள்கிறேன்" என்று சொல்கிறார்கள். அந்தம்மாவினுடைய பக்தியைப் பாருங்கள், பெருமான் சொன்னாரே என்று நேரடியாக லநள என்று சொல்லவில்லை. உழனெவைழைெ போட்டுதான் லநள சொல்கிறார்கள். பெருமான். என்ன செய்வது? இந்த வேலைக்கு வந்துவிட்டோம், எல்லாத்தையும் கேட்டுதானே ஆகனும் - பொறுத்துட்டுதானே ஆகனும். உடனே சுந்தரமூர்த்தியிடம், சென்று அப்பா! இந்த மாதிரி அவ சொல்றா, அவளை விட்டுப் பிரியாமல் இங்கேயே இருக்க வேண்டும் என்று அவள் சொல்கிறாள்" ’’இவர் உடனே இந்த உழனெவைழைெ ல்லாம் இல்லாம் கல்யாணம் செய்து வைக்க ஏதாவது ீடயெ பண்ணுங்களேன்." நல்லவேளை பெருமானுடைய முடியெல்லாம் சடை முடியாக இருந்ததனால பிச்சிகிட்டு கீழ வரல. சாதாரண முடியாக இருந்திருந்தால் பிச்சிகிட்டு எல்லாம் உதிர்ந்து போயிருக்கும். சரி யோசித்து சொல்கிறேனப்பா! அங்கே திரும்ப செல்கிறார். "ஏம்மா அவன் நிறைய சிவஸ்தலங்களுக்கெல்லாம் சென்று வருகின்ற பக்தன், இந்த மாதிரி ஒரே இடத்தில் இருக்கச் சொல்லி விதி போட்டால், அவனுக்கு அது கட்டுப்படுத்த முடியமா? அது சாத்தியமா? கொஞ்சம் யோசிச்சிப் பாருங்க" சங்கிலி நாச்சியார் தௌிவாச் சொல்ராங்க, என்னோடு மட்டும்தான் வாழ்வேன், திருவொற்றியூரிலேயே இருப்பேன் என்று உறுதிமொழி கொடுத்தால் வாங்க, அந்த உறுதிமொழியோடு வாங்க, போங்க" என்று சொல்லி விடுகிறார்கள். உடனே பெருமான் இங்க வர்ராரு.. "இல்லப்பா அவ ரொம்ப உறுதியா இருக்கா, ரொம்ப தௌிவா இருக்கா.. அவளோடத்தான் வாழ்ந்தாகவேண்டும், இந்த ஊர் எல்லையை விட்டுத் தாண்டக்கூடாதுன்னு சொல்ரா, அதுவும் உறுதிமொழி வேற செய்து கொடுக்க வேண்டும் என்று சொல்கிறாள்", சுந்தரமூர்த்த்தி நாயனார் இவர்தான் பெருமானையே விளையாட்டுக்காட்டியவராச்சே.. உடனே சொல்றாரு "அவ்வளவுதானே. சரி நாளைக்கு நான் என்ன பன்றேன், உங்களுடைய சன்னிதியில அவளை கூட்டிட்டு வந்து விட்டுப்பிரிய மாட்டேன், திருவெற்றியூரிலேயே இருப்பேன் என்று சத்தியம் செய்து கொடுக்கின்றேன், நீங்க என்ன பன்னுங்க ஒரு அரைமணி நேரம் அப்படியே வௌியில் போய்ட்டு வந்துவிடுங்கள், மகிழ மரத்தில் போய் உட்கார்ந்திருங்க.., பக்கத்திலேயே மகிழ மரம் இருக்கிறதில்லையா அங்கே போய் உட்கார்ந்துவிடுங்கள், நான் சத்தியம் பண்ணி முடிச்சிப்பறம் வந்துருங்க அப்ப சத்தியத்திற்கு பலமில்லாமல் போய்விடும், பெருமான் அப்பான்னு பெருமூச்சு விட்டார், பிரச்சினைக்குத் தீர்வு பிறந்தது. பாருங்க பெருமானுக்கே விளையாட்டு! எப்படியோ பிரச்சினை தீர்ந்தால் சரின்னு.. சங்கிலி நாச்சியாரிடம் வருகிறார், வந்தவுடனேயே சங்கிலி நாச்சியாரைப் பார்த்தவுடனேயே "இந்தப் பேதை, ஏழைப்பெண் என்ன சின்சியரா, என்ன சிரத்தையோடு எனக்கு பக்தி செய்கின்றாள், இவளுக்கு நான் பொய்ப்பது சரியா?" மனம் கழிந்து, மனம் குழைந்து இவளுக்கு நான் பொய்க்கலாமா? அப்படீன்னு, "மகளே... சுந்தரன் வன்தொண்டன் சுட்சுமக்காரன், இங்கேயே இருக்கிறது, திருவெற்றியூர் எல்லைத் தாண்டாம உன்கூடவே இருக்கிறேன்னு சத்தியம் செய்து கொடுக்கிறேன் என்று ஒத்துக்கொண்டான், ஆனா இதுல ஒரு சின்ன விளையாட்டு செய்கிறான் அவன், நான் சொன்னேன் என்று அவனுக்கு சொல்லாதே, அவன் சொல்லும்பொழுது சரி.. சரி ன்னு சொல்லிட்டு வந்துட்டேன், உன் முகத்தைப் பார்த்தவுடன் எனக்குத் தாங்கல, அவன் சொல்கிறான்.. நாளைக்கு கோயில்ல சத்தியம் செய்து கொடுக்கும்பொழுது, கருவரையில் என்னை இல்லாமல் மகிழ மரம் பக்கம் ஒதுங்கிக்கொள்ள சொல்லியிருக்கிறான், நானும் சரி என்று சொல்லிவிட்டேன், ஆனா நீ என்ன செய், சத்தியத்தை என் சன்னிதியில் கேட்காமல் மகிழ மரத்தின் முன்னால் கேளுன்னு’ என்று சொல்லிவிடுகின்றார். ஐயகோ!!! இதைவிட ஒரு இனிமை வேண்டுமா??? சைவம் வாழ்ந்திட!! பெருமானே!! இந்த ஒருகதை போதுமையா.. ஒரு ஜென்மம் மட்டுமல்ல.. நூறு ஜென்மம் எடுத்து சைவம் வாழலாம், சிவனை துதிக்கலாம், சிவனோடு இருக்கலாம், அவனோடு வாழலாம், அவனை வாசிக்கவும், நேசிக்கவும், சுவாசிக்கவும் இந்த ஒரு கதை போதுமைய்யா!!. இன்னொரு கதை வேண்டுமா?? உன்னை வாசிக்கவும், நேசிக்கவும், சுவாசிக்கவும் உனக்கே தாசியாய் இருந்து தாசிக்கவும் இன்னொரு கதை வேண்டுமா ஐயனே!! ஆசுதோஷானந்தன், ஆசுதோஷன்னு சொன்னா எளிமையாக மனம் இளகிவிடுபவன், இறங்கிவிடுபவன், ஆசுதோஷன். சுந்தரரரைப் பார்த்தவுடனே.. சரி நீ சொல்றபடியே செய்கிறேன்.. சங்கிலி நாச்சியாரைப் பார்த்தவுடனே, உனக்குப்போய் பொய் சொல்லலாமா?, உன்ன நான் ஏமாத்தலாமா? நீ கொஞ்சம் பார்த்து பண்ணிக்கோ கன்னு இரண்டையும் யாராவதுப் பார்த்தான்னா அவன் பைத்தியக்காரனாகிவிடுவான். என்னையாப் பன்றீங்க...? நீங்க நல்லவரா? கெட்டவரா? ஒன்னுமே புரியலையேய்யா.... அங்க இவ்வளவு நேரம் அப்படியே பேசிகிட்டு இருந்தீங்க.. இங்க வந்தவுடனே அப்படியே மாறிட்டீங்களேய்யா.. என்னதான் முடிவா சொல்லவரீங்க சொல்லுங்கையா... இப்ப சுந்தரர் கல்யாணம் பண்ணிக்கனுமா? பண்ணிக்ககூடாதா? முடிவா சொல்லுங்க.! நான் என்னப்பா பன்றது? சுந்தரரைப் பார்த்தவுடனேயே அவரையும் விட முடியல, சங்கிலி நாச்சியாரைப் பார்த்தவுடனே அவரையும் விட முடியல, அதனால் அவன் சொன்னபடி சரி மகிழ மரத்திற்கே போகிறேன் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன், இங்க வந்து நான் மகிழ மரத்துக்குப் போறேன் என்பதையும் சொல்லிட்டேன். அவன் என்னைக் கருவரை விட்டு மகிழ மரம் செல்லச்சொன்னான், நீ பாத்து பண்ணிக்க கன்னு, நாளைக்கு கோயில்ல சத்தியம் வாங்க வரும்பொழுது, கோயில்ல கருவரை வேண்டாம், மகிழ மரத்துல சத்தியம் பண்ணச்சொல்லி கேட்று கன்னு.". தோழனைப் பார்ப்பானா? மகளைப் பார்ப்பானா? மறுநாள் பொழுதும் விடிந்தது. சுந்தரமூர்த்திப் பெருமான்.. வேகவேகமாக வெற்றி நடையோடு, வெற்றிப்புன்னையோடு தான் எல்லாவற்றையும் ிசழிநச ஆ ீடயெ பன்னிட்ட ஒரு, ரொம்ப அழகா எல்லாம் இராத்திரியே முடிச்சிட்டோம் இல்ல.. என்கின்ற தௌிவோட வர்ராரு. வந்து கருவரை முன்னின்று சங்கிலி நாச்சியார் கரம் பற்றி, அம்மா சத்தியம் செய்கின்றேன் வா!, உடனே சங்கிலி நாச்சியார், ஐயனே! பெருமான முன்னிலையில் சத்தியம் செய்துவிட்டு, என்றாவது நீங்கள் வழுவிவிட்டால், அது உங்களுக்குப் பெரும் துக்கமாகுமல்லவா? அது எனக்கு மனம் தாங்கவில்லை. மகிழ மரத்தின் முன்பாக செய்தால் போதுமானது ஐயனே! பெருமான் முன்பு எதற்காக இவ்வளவு பெரிய வேதனை?. இந்த வினை வேண்டுமா? மகிழ மரம் முன்பாகவே செய்துகொள்ளலாம் ஐயனே!.. பெருமான் சிரிக்கிறார்.. மகிழ மரம் சிரிக்கிறது.. சங்கிலி நாச்சியார் சிரிக்கிறார்.. சுந்தரமூர்த்தி நடுங்குகின்றார்.

பெருமான் சிரிக்கிறார்.. மகிழ மரம் சிரிக்கிறது.. சங்கிலி நாச்சியார் சிரிக்கிறார்.. சுந்தரமூர்த்தி நடுங்குகின்றார்...


சிரிப்புக்கு தமிழில் பல வார்த்தை உண்டு!. புன்னகை - இங்கு பெருமான் முகத்திலே மலர்ந்தது - புன்னகை. மகிழ மரம் - அது முகத்தில் மலர்ந்தது எள்ளி நகையாடுதல், ஏமாந்தியா? சங்கிலி நாச்சியார் - முகத்தில் மலர்ந்தது மாயப்புன்னகை. மாட்டிகிட்டியா?. பெருமான் புன்னகைக்கிறார், மகிழ மரம் எள்ளி நகையாடுகிறது, சங்கிலி நாச்சியார் மாயப் புன்னகையால் முகம் மலர்கின்றார், சுந்தரமூர்த்தி மூன்றையும் கண்டு நடுங்குகின்றார். பெருமானை சற்றே சந்தேகத்தோடு பார்க்கின்றார். சொல்லிட்டியா? நமக்கொன்றும் தெரியாதப்பா.. நான் சிவனே நீ சொன்னதைத்தானே செய்தேன்!. மகிழ அமைதியாக அமர்ந்திருக்கின்றார். எனக்கென்ன தெரியும்? நீ வேற யார்கிட்யாவது பேசனியான்னு கேட்டுப்பாரு.. இராத்திரி ஏதாவது சத்தமா இதையெல்லம் பெனாத்தினியாப்பா.. ? பக்கத்துல இருந்தவன் கேட்டு சங்கிலி நாச்சிக்கு உளவு சொன்னானான்னு கேட்டுப்பாரு..! எனக்கென்ன தெரியும்!? சங்கிலி நாச்சியாரைக் கூர்ந்து நோக்குகிறார் சுந்தரர், எப்படி டீ கண்டுபிடிச்ச?.. கல்யாணத்துக்கு முன்னாடியே இவ்வளவு வில்லங்கம் பன்ற. அவள் மாயப் புன்னகையை மந்தகாசப் புன்னகையோடு கலந்து, அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு என்கின்ற பெயராலே முக்காடிட்டு முகத்தை மூடிக்கொள்கின்றாள். பார்த்தா கண்டுபிடிச்சிடுவாரோ என்னவோ? யாருக்குத் தெரியும்!. பெருமானோடே விளையாடும் வன்தொண்டர். இதுக்கு மேல ரொம்ப நேரம் யோசிக்க விட்டா ஆபத்து, வாங்க போலாம் மகிழ மரத்துக்கு, இதுக்கு மேல என்ன பன்றது! சுந்தரமூர்த்தி நாயனார்.. சரி வேறென்ன பன்றது. புந்தோட்டத்துல ஆரம்பிச்சது மகிழ மரத்துலதான் முடியனும்போல இருக்கு. சத்தியமும் செய்துகொடுத்து விடுகிறார், திருமணமும் இனிதாக நிறைவேறிவிடுகின்றது.

இதோடு முடியல.. கொஞ்நாள் கழிச்சி கால் அறிக்க ஆரம்பிக்கிறது. பெருமான் சுகம் கண்டவர், ஒருவேளை மனம் மயங்கி ஒருவிநாடி பெண் சுகத்தை சிந்தித்திருக்கலாம், ஆனால் பெண் சுகத்திலேயே இருந்துவிட முடியாது. ஆசை 60 நாள் மோகம் 30 நாள், சாதாரண மனிதர்களுக்கே! சிவனையே உயிராய் வைத்து வாழ்கிற சிவனடியார்களுக்கு ஆசை 6 மணி நேரம் மோகம் 30 நிமிடம். பறந்தது, திருத்தலங்கள் செல்ல வேண்டும் என்று கால்கள் வேகவேமாய் கேட்கத்துவங்கியது. ஆனால் ஒரு நல்ல விஷயம் பரவை நாச்சியை சென்றுப் பார்க்க வேண்டும் என்பதற்காக அல்ல, பெருமான் திருத்தலங்கள் சென்று பார்க்கவேண்டும் என்றுதான், பெருமானுக்கு, சுந்தரமூர்த்தி நாயனாருக்கு உணர்வு மேலோங்குகிறது. என்னபன்றது பயம்!.. அதுமட்டுமில்லாம் இப்ப ஒரு அளவிற்கு அனுமானத்திற்கு வந்துவிட்டார், பெருமான் னழரடிடந பயஅந விளையாட்ராருன்னு. இங்கையும் சொல்லிட்ராரு.. அங்கேயும் போய் சொல்லிட்ராரு. ஓ! நம்முடைய பக்தி அளவிற்கே அவளுடைய பக்தியும் பலமானதுபோல அதனால, பெருமான் நம்ம சொன்னாலும் கேட்டுக்கிறாரு.. கேட்டத கரெக்டா அந்தப்ப்பக்கம் போய் சொல்லிட்ராரு. எப்படி போவது? கடைசியாக ஒருநாள் ரொம்ப தாங்க முடியாம, திருத்தல யாத்திரை புறப்படுவதென்று முடிவெடுத்துவிட்டு திருவெற்றியூரைத் தாண்டி விடுகின்றார். தாண்டியவுடனேயே இரண்டு கண்ணும் போய்விடுகிறது. தம்பிரான் தோழனே ஆனாலும் சத்தியத்திற்கு மாறாய் நடந்ததனால், இரண்டு கண்ணும் போய்விடுகிறது. மனம் தளரல. எத்துனைநாள் இரண்டு கண்ணும் இல்லாமல் எனை இறைவன் வைத்திருப்பான் பார்த்துக்கொள்கிறேன். வன்தொண்டன் மனம் தளரல. சைவன்! மனம் தளரல. மெதுவாக திருத்தலங்கள், அருகில் இருந்த திருத்தலங்கள் எல்லாம் பார்க்கிறார், தரிசிக்கச் செல்கிறார். தரிசிப்பதற்காகத்தான் செல்வதனால் கண்கள் போய்விடுகிறது. ஆனாலும் மனம் தளரவில்லை. நான் உன்னைப் பார்க்கவில்லையென்னால் பரவாயில்லை. நீ என்னைப் பார்ப்பாய் அல்லவா?.. அதற்காக கோவில் கோவிலாக வருகிறேன் என்று சொல்லி போகிறார். நான் உன்னைக் காணாவிட்டாலும் பரவாயில்லை, நீ என்னைக் காண்பாய் அதுபோதும் என்று நினைத்துக்கொண்டுதான் தல யாத்திரைகள் தொடங்குகிறார். அடுத்த ஆலயத்திலேயே பெருமான் பார்க்கிறார், சுந்தரர் அடியார்கள் தோளைப் பற்றிக்கொண்டு வருவதைப் பார்க்க அவராலேயே தாங்க முடியவில்லை. ஊன்றி வரத் தங்கத்தடி கொடுக்கின்றார். தடி ஊன்றி நடக்கின்றார் சுந்தரர். அடுத்த திருத்தலம் காஞ்சிபும், திருவெற்றியூருக்கும் காஞ்சிபுரத்திற்கும் எவ்வளவு தூரம்? அதிகபட்சமாக 5 நாள் நடந்திருப்பார். சரி கண்ணில்லாமல் நடந்ததனால் 10 நடந்திருப்பார் என்று சொல்லாம். காஞ்சிபுரம் வந்தவுடன் பெருமானுக்கேத் தாங்கவில்லை, கண்ணைக்கொடுத்து விடுகின்றார். ஒரு கண்ணைக் கொடுத்துவிடுகின்றார். மரம் மண் சார்ந்தது. மண்சார்ந்து மண் சக்தி மீது செய்த சத்தியம் என்பதனால், திருவாரூரும் காஞ்சிபுரமும் மண் ஸ்தலங்கள், மண் சார்ந்த பஞ்ச பூதங்களிலே மண் சார்ந்த திருத்தலங்கள், இரண்டிலும் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு கண்ணை அளித்துவிடுகின்றார். காஞ்சிபுரம் வந்ததும் பெருமான் பாட ஒரு கண்ணை அளித்துவிடுகின்றார். சுந்தரமூர்த்திப் பெருமான் பாட இறைவன தம்பிரான் ஒரு கண்ணை அளித்துவிடுகின்றார். ஒரு கண்ணோடேயே பல திருத்தலங்களுக்குச் சென்று இறுதியில் திருவாரூரும் வந்துவிடுகின்றார். புற்றிடம்கொண்டாரைத் தியாகராஜனைச் சென்று ஐயனே! உன் அழகு காண்பதற்கு கோடிக்கண் பத்தாது ஒரு கண்ணை வைத்து எப்படி நான் கண்டு ரசிப்பேன், ருசிப்பேன் என்று கரைந்து அழுதவுடன், எப்பெருமான் பேரருள் பெருங்கருணை பேராளன், எப்பவும் உழஅிடநவழைெ லையே இருக்கிறவர், நம்ம உழஅிடநவந பண்ணா போதும் அவர் உழஅிடநவழைெ -ல தானே இருக்கிறார், நம்ம ைெஉழஅிடநவழைலெ இருந்தா மட்டும்தான் அந்த கருமம் வருமே தவிர, அவரு ைெஉழஅிடநவழைகெ்கு போறதே இல்ல. நம்ம உழஅிடநவழைனெோட அழம் என்னவென்று வநளவ பண்ணி பார்ப்பாரேத் தவிற அவர் ைெஉழஅிடநவழைகெ்கு போவதே இல்லை. நல்லா தெரிஞ்சிக்கோங்க இறைவன் கொடுக்கும் எல்லா தண்டனைகள் என்று நீங்கள் நினைக்கின்ற எல்லாமே, நம்முடைய பலத்தை அவர் செய்கின்ற சோதனை தானே தவிர, தண்டனை கிடையாது. சோதனையை வேதனையாக எடுத்தால் வாழ்க்கை போச்சு. வேதனையே வந்தாலும் சோதனைன்னு நினைத்தால் சாதனையாகிவிடும். கடைசியாக சத்தியம் செய்து கொடுக்கும்பொழுது அதில் குளருபடி செய்ய முயற்சித்து, அதில் தோல்வியுற்று சத்தியமும் செய்துகொடுத்து அதையும் மீறி கடைசியில் அந்த மீறியதற்கான ிரளைோஅநவெ டயும் வாங்கி, அந்த ிரளைோஅநவெ டையும் முடிச்சி ஜெயிச்சு வௌியில் வந்துவிட்டார். அடுத்த கதையைக் கேளுங்கள்.. இதுதான் கதையின் உச்சம்! வந்திருக்கார், சுந்தரமூர்த்திசுவாமிகள் வந்துவிட்டார், திருவாரூரில் இருக்கிறார்.. வீட்டுக்கு வரப்போகிறார்ன்னு செய்தி அனுப்புகிறார் பரவை நாச்சியாருக்கு.. உடனிருக்கும் தொண்டர்கள் மூலமாக. பரவை நாச்சியார் கதவை பளீரென்று சாத்திவிட்டு, சொல்லாம் இன்னொரு திருமணம் செய்ததனால் இந்தப்புரம் வரக்கூடாதுன்னு ஜன்னல் வழியாக சொல்லியனுப்புகிறார்கள். சந்திக்கக்கூட மறுத்துவிடுகிறாள். சுந்தரமூர்த்திப்பெருமான் ஊரில் இருக்கும் சான்றோர்களையெல்லாம் ஒன்றுசேர்த்து அனுப்புகிறார். முதலில் படை நடத்தும் சேனை முதலியார்கள் செல்கிறார்கள், கதவைப் படார்னு சாத்தி அனுப்பிவிடுகிறார்கள் பரவை நாச்சி. சான்றோர்கள் சைவ வேளாளர்கள் செல்கிறார்கள், அப்பவும் கதை சாத்தி அனுப்பிவிடுகின்றாள். ஆதிசைவர்களான சிவாச்சாரியார்கள் தூது போகிறார்கள், அப்பவும் கதவை சாத்தி திருப்பி அனுப்பிவிடுகிறாள். பிறகு சுந்தரருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.


இப்ப ஒரே வழி என்ன? பெருமான் தான்! நேராக பெருமானிடம் செல்கின்றார். என்ன? அது வந்து.. அது வந்து ம், பரவை நாச்சி வீட்டுக்கு வரவேண்டான்னு சொல்ராளாம்... சொல்லியிருக்க மாட்டாரு.. ஒருவேளை பெருமான் மனசுக்குள்ளயே நினைத்திருக்கலாம் நீ பண்ண வேளைக்கு ஊருக்குள்ளேயே விட்டிருக்கக்கூடாது, வீட்டுக்கு மட்டும்தான வரவேண்டாம்னு சொன்னா ஆசுதோஷன் அல்லவா! அன்பிற்கு இனியான், சரி பரவை நாச்சி வீட்டிற்கு வரவேணான்னு சொல்ரா, என்ன பண்ணனும்? பெருமானே ஒருதரம் தூது போய்விட்டு வந்தால் நன்றாக இருக்கும்!. ஆஹா!! அது ஒன்னுதாம்பா செய்யாம இருந்தோம். போய்ட்டு வந்துட்டா நல்லா இருக்கும்.. பெருமான், சரி நான் என்ன சொல்லனும்னு சொல்லு இவர் உடனே சொல்கிறார்.. பெருமான் என்ன சொல்லனும்னு இவர் அந்த டயலாக் எல்லாம் ரெடி பண்ணி கொடுக்கின்றார். பெருமான் அப்படியே அதக்கேட்டுட்டு, சரி அப்படியே சொல்கிறேன். போய் பரவை நாச்சியாரின் வீட்டுக் கதவைத்தட்டி, பரவை நாச்சியார் சிவனடியார் வந்திருக்கிறார், சிவனடியார் கோலத்திலே பெருமான் செல்கிறார், சிவனடியார் வந்திருக்கிறாரே..


இன்னொரு விஷயம் போவதற்கு முன்னாடியே.. பெருமான் சிவனடியார் திருக்கோலத்தில் கிளம்பி போகிறார். அப்பொழுது, தூது போகிறவர்கள் பாதுகை போட்டிருந்தால் அவ கண்டுபிடித்துவிடுவாள், பாதுகை போட்டிருக்ககூடாது இது பாரம்பரியம். சரி என்று பாதுகையை விட்டுவிட்டு பெருமான் செல்கின்றார். கால் தேய திருவாரூரிலே சுந்தரன் தங்கியிருந்த மாளிகைக்கும் பரவை நாச்சியின் மாளிக்கைக்கும் தூதாகச் செல்லுகின்றார். நடு ராத்திரியில் சுந்தரன் சொல்லி அனுப்பிய எல்லாவற்றையும் போய் பரவை நாச்சியாரிடம் சொல்கிறார். பரவை நாச்சியார் எல்லாவற்றையும் கேட்டுவிட்டு "வேறு ஏதாவது சொல்ல வேண்டுமா அடியாரே"ன்னு கேட்கிறார்கள். இல்ல அவ்வளவுதாம்மா.. "நீங்கள் சிவனடியாராக இருந்ததனால் உங்கள் வார்த்தைகளை இவ்வளவு நேரம் கேட்டேன், நீங்கள் சென்று வரலாம்" என்று திருப்பி அனுப்பிவிடுகிறாள். பெருமானை திருப்பி அனுப்பிவிடுகிறாள் பரவை நாச்சி. சுந்தரமூர்த்தி நாயனாரோ வாசிலில் அமர்ந்துகொண்டு எப்பொழுது பெருமான் வரப்போகிறார் என்று நல்ல செய்திக்காக காத்துக்கொண்டிருக்கிறார். தூரத்தில் இருந்து பார்த்தால் பெருமான் தலையைத் தொங்கப்போட்டுக்கொண்டு வருகின்றார். முகத்திலே மலர்ச்சி இல்லை. சுந்தரமூர்த்தி நாயனார்.. (முகபாவம் - சைகை பேச்சு)

"சொன்னா கேட்க மாட்டேன் என்கிறாள்.. நீ சொன்னதையெல்லாம் சொன்னேன், அவள் என்னென்னவோ எதிர் கேள்வி கேட்கிறாள்.." 

அப்பொழுதான் சுந்தரனுக்கு உரைச்சது!, பெருமானை இதை செய்து முடித்துவிட்டு வா ன்னு சொல்றதை விட்டுவிட்டு, நான் சொன்னதை போய் சொல்லிவிட்டு வா என்றா சொல்வது? பெருமானுக்கு சரியாக என்ன கேட்கனுமோ அதைக் கேட்பதை விட்டு, நான் சொன்னதை போய் சொல்லிட்டு வா என்று தானே சொன்னோம்! ஆஹா!! சுந்தரனுக்கு சுளீர் என்று உரைத்தது! உரைச்ச உடனே, பெருமானே! பெருமானே வந்திருக்கீங்கன்னு சொன்னீங்களா? அதைச் சொல்லச்சொல்லி நீ என்கிட்ட சொல்லல இல்லையா.. அதனால நான் சொல்லல ஆஹா!! என்ன? இன்னொருமுறை போய்ட்டு வந்துடுங்க.. சரி -ம் வேஷம் போட்டாச்சு செய்துதானே ஆக வேண்டும். பக்தனுக்காய் பரம்பொருள் இன்னொருதரம் கிளம்புகிறார். இந்தமுறை கிளம்பும்பொழுது என்னென்ன சொல்லனும்னு ஒழுங்காகச் சொல்லிவிடு எல்லாத்தையும் சொல்லிவிட்டு வருகிறேன், இவர் சொல்கிறார்.. நீங்கள் வேறு எதுவும் சொல்ல வேண்டாம்.. நான்தான் பெருமான்னு அவளுக்கு காட்டுங்கள்.. அதுக்கு மேல நீங்க என்ன சொல்ல வேண்டுமோ அது உங்கள் விருப்பம், ஆனா வேலையை முடித்துவிட்டு வாருங்கள்! பக்தன் சரணாகதிக்கு வந்துவிட்டான் என்கிற ஆனந்தத்தை தன் புன்னகையில் வௌியில் காட்டாமல் மறைத்துக்கொண்டு, தன் ஆனந்ததத்தை காட்டிவிடாமல் மறைத்துக்கொண்டு பெருமான் பாதுகையின்றி திருவடி தோய, மீண்டும் திருவாரூர் தெருக்களில் இறங்கி நடக்கத் துவங்கினான். வானவரெல்லாம் பெருமான் கருணையை நினைந்த ஒருபுரம் ஆனந்தத்தால் கண்ணீர் சொறிய.. பெண்டிரெல்லாம், வானவப் பெண்டிரெல்லாம் பெருமான் திருப்பாதம், திருவடி இன்றி திருவாரூர் கால்களில் தேய்வதைப் பார்த்து துக்கத்தால் கண்ணீர் சொறிய.. இரண்டு கண்ணீரும் மழையாய்ப் பொழிந்து திருவாரூரை நனைக்க.. பெருமான் பொய்யும் மழைதனில் பரவை நாச்சியாரின் மாளிகை நோக்கிச் செல்கின்றார். மாளிகைக்குச் சென்று கதவைத் தட்டுகிறார்.. கதவைத் திறந்தவுடன், சுந்தரனுக்கு அளித்த வாக்கின்படி நான்கு திருக்கரங்களோடு.. தானே பரம்பொருள் என்கின்ற ஆதிசிவ ஸ்வரூபத்தை, சதாசிவ வடிவத்தைக் காட்டி அருளுகின்றார். வீழ்ந்தாள் பரவை நாச்சி..! பெருமான் திருவடியில் வீழ்ந்து, ஐயனே! தாங்களே வீடுதேடி வர என்ன புண்ணியம் செய்தேன்!? வந்த காரியம் யாதோ!.. வாருங்கள் என்று.. ஆசமனம் ஆசனம் என்று எல்லாவிதமான 16 உபச்சாரங்களையும் செய்து பெருமானைத் துதிக்க, அம்மா நம் தொண்டன், வன்தொண்டன், நம்தோழன் சுந்தரனுக்காய் தூதாய் வந்திருக்கின்றோம்.. நீ அவனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்க, ஐயனே வந்தது தாங்கள்தான் என்று போனமுறை வந்தபோதே சொல்லியிருக்கக்கூடாதா..? இருமுறை உங்களை நடக்க வைத்தேன் என்று திருமுறை ஓதும் பக்தர்களுக்கெல்லாம் தெரிந்தால் அவர்கள் என்னை என்ன நினைப்பார்கள்? கருணையே இல்லாத கொடுமைக்காரி என்று நினைக்கமாட்டார்களா? அவர்கள் மனமெல்லாம் நோகுமே!.. ஐயனே! இது தகுமா..? இது முறையா? என்று இறைவனின் பாதங்களில் தன் கண்ணீரை பூக்களாய் சமர்ப்பித்து, பாத்யமாக தன்னுடைய கண்களில் பொங்கும் ஆனந்தக் கண்ணீரையே அர்ப்பித்து, ஐயனே! தங்களுடைய ஆணைக்கு மற்றொரு எண்ணம் உண்டோ! என்று, சுந்தரனை ஏற்றுக்கொள்கிறேன் என்று உறுதிமொழி அளிக்க, ஆனந்தத்தோடு பெருமான் மீண்டும் தூது செல்லும் தூதுவனின் தர்மப்படி, திருவடி இல்லாது திருவாரூர் தெருக்களில் கால் தேய நடந்து சுந்தரன் தங்கியிருக்கும் மாளிகையை வந்து சேர்ந்து, சுந்தரா அவள் உன்னை ஏற்றுக்கொள்கின்றேன் என்று பரவை நாச்சி வார்த்தை கொடுத்துவிட்டாள், சென்று அவளோடு வாழ்! என்று ஆசீர்வதிக்க மறுநாள்.. சுந்தரமூர்த்தி நாயனார் பெருமானைத் தொழுது, தியாகராஜனை கண்குளிரக் கண்டு தரிசித்து, வன்மீகநாதரை புற்றிடம்கொண்டாரை தரிசித்து, பூஜித்து பரவை நாச்சியாரின் இல்லைத்தை அடைந்து, பரவை நாச்சியார் மனம் உவந்து அவரை ஏற்றுக்கொள்ள இருவரும் இனிதே வாழ்க்கையைத் துவங்கினார்கள். இது க்ளைமாக்ஸ் இல்ல. இது க்ளைமாக்ஸ் இல்ல. பெருமான் கருணை இதோடு முடிந்துவிடவில்லை!. பெருமான் கருணையின் ஆழத்தை, சுந்தரமூர்த்தி நாயனாரின் பக்தியின் சக்தியை நாளைக் காண்போம். விளையாடல்கள் செய்து சங்கிலி நாச்சியார் திருமணத்தை நடத்தியது உச்சம் அல்ல! கால்தேய திருவாரூர் வீதிகளில் முன்னும் பின்னுமாய் தூது சென்று இருவரையும் சேர்த்து வைத்தது இதன் உச்சம் அல்ல! இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டதும் சிவனடியார்களுள் ஒருவர், சுந்தரமூர்த்தி நாயனார் மீது கடும்கோபம் கொண்டார். நல்ல சிவ பக்தனா இருந்தால் யாராக இருந்தாலும் இதைக் கேட்டவுடன் கடும்கோபம் கொள்வான். இரவிலே திருவடி இல்லாமல் பெருமானை தெருவின் தரைமீது முன்னும் பின்னுமாக தன் பெண்ணாசைக்காக நடக்க வைப்பவன் சிவபக்தனா? யாருக்குத்தான் கோபம் வராது. யாருக்குத்தான் கொதிப்பு வராது? கொதிப்படைந்த பக்தனையும் சுந்தரனையும் எப்படி சேர்த்து வைக்கிறார் என்பதுதான் உச்சம்! அதை நாளை காண்போம்.! பக்தியின் சக்தியின் உச்சத்தை, சுந்தரமூர்த்தியின் பக்தியின் சக்தியின் உச்சத்தை, பெருமான் செய்த விளையாட்டை நாளை காண்போம்!

Photos From The Day:



http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2015-11nov-21st-nithyananda-diary_IMG_8822_blr-adheenam-samaya-vishesha-deeksha-swamiji.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2015-11nov-21st-nithyananda-diary_IMG_8901_blr-adheenam-samaya-vishesha-deeksha-swamiji.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2015-11nov-21st-nithyananda-diary_IMG_8952_blr-adheenam-samaya-vishesha-deeksha-swamiji.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2015-11nov-21st-nithyananda-diary_IMG_9117_blr-adheenam-samaya-vishesha-deeksha-swamiji.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2015-11nov-21st-nithyananda-diary_IMG_9124_blr-adheenam-samaya-vishesha-deeksha-swamiji.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2015-11nov-21st-nithyananda-diary_IMG_9146_blr-adheenam-samaya-vishesha-deeksha-swamiji.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2015-11nov-21st-nithyananda-diary_IMG_9148_blr-adheenam-samaya-vishesha-deeksha-swamiji.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2015-11nov-21st-nithyananda-diary_IMG_9150_blr-adheenam-samaya-vishesha-deeksha-swamiji.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2015-11nov-21st-nithyananda-diary_IMG_9152_blr-adheenam-samaya-vishesha-deeksha-swamiji.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2015-11nov-21st-nithyananda-diary_IMG_9153_blr-adheenam-samaya-vishesha-deeksha-swamiji.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2015-11nov-21st-nithyananda-diary_IMG_9154_blr-adheenam-samaya-vishesha-deeksha-swamiji.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2015-11nov-21st-nithyananda-diary_IMG_9166_blr-adheenam-samaya-vishesha-deeksha-swamiji.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2015-11nov-21st-nithyananda-diary_IMG_9187_blr-adheenam-samaya-vishesha-deeksha-swamiji.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2015-11nov-21st-nithyananda-diary_IMG_9188_blr-adheenam-samaya-vishesha-deeksha-swamiji.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2015-11nov-21st-nithyananda-diary_IMG_9189_blr-adheenam-samaya-vishesha-deeksha-swamiji.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2015-11nov-21st-nithyananda-diary_IMG_9190_blr-adheenam-samaya-vishesha-deeksha-swamiji.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2015-11nov-21st-nithyananda-diary_IMG_9191_blr-adheenam-samaya-vishesha-deeksha-swamiji.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2015-11nov-21st-nithyananda-diary_IMG_9191_blr-adheenam-samaya-vishesha-deeksha-swamiji_0.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2015-11nov-21st-nithyananda-diary_IMG_9193_blr-adheenam-samaya-vishesha-deeksha-swamiji.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2015-11nov-21st-nithyananda-diary_IMG_9441_blr-adheenam-nithyanandeshwar-brahmotsavam-tamil-satsang-adishaivam-swamiji_0.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2015-11nov-21st-nithyananda-diary_IMG_9460_blr-adheenam-nithyanandeshwar-brahmotsavam-tamil-satsang-adishaivam-swamiji.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2015-11nov-21st-nithyananda-diary_IMG_9505_blr-adheenam-nithyanandeshwar-brahmotsavam-tamil-satsang-adishaivam-swamiji.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2015-11nov-21st-nithyananda-diary_IMG_9528_blr-adheenam-nithyanandeshwar-brahmotsavam-tamil-satsang-adishaivam-crowd-participants_0.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2015-11nov-21st-nithyananda-diary_IMG_9534_blr-adheenam-nithyanandeshwar-brahmotsavam-tamil-satsang-adishaivam-swamiji_0.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2015-11nov-21st-nithyananda-diary_IMG_9560_blr-adheenam-nithyanandeshwar-brahmotsavam-tamil-satsang-adishaivam-swamiji_0.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2015-11nov-21st-nithyananda-diary_IMG_9564_blr-adheenam-nithyanandeshwar-brahmotsavam-tamil-satsang-adishaivam-swamiji_0.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2015-11nov-21st-nithyananda-diary_IMG_9578_blr-adheenam-nithyanandeshwar-brahmotsavam-tamil-satsang-adishaivam-swamiji_0.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2015-11nov-21st-nithyananda-diary_IMG_9730_blr-adheenam-nithyanandeshwar-brahmotsavam-tamil-satsang-adishaivam-swamiji.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2015-11nov-21st-nithyananda-diary_IMG_9737_blr-adheenam-nithyanandeshwar-brahmotsavam-tamil-satsang-adishaivam-swamiji_0.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2015-11nov-21st-nithyananda-diary_IMG_9642_blr-adheenam-nithyanandeshwar-brahmotsavam-tamil-satsang-adishaivam-swamiji.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2015-11nov-21st-nithyananda-diary_IMG_9766_blr-adheenam-nithyanandeshwar-brahmotsavam-tamil-satsang-adishaivam-swamiji.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2015-11nov-21st-nithyananda-diary_IMG_9787_blr-adheenam-nithyanandeshwar-brahmotsavam-culturals-bharatanatyam-_0.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2015-11nov-21st-nithyananda-diary_IMG_9813_blr-adheenam-nithyanandeshwar-brahmotsavam-culturals-bharatanatyam-swamiji_0.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2015-11nov-21st-nithyananda-diary_IMG_9824_blr-adheenam-nithyanandeshwar-brahmotsavam-culturals-bharatanatyam-_0.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2015-11nov-21st-nithyananda-diary_IMG_9091_blr-adheenam-nithyanandeshwar-brahmotsavam-procession-swamiji_0.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2015-11nov-21st-nithyananda-diary_IMG_9094_blr-adheenam-nithyanandeshwar-brahmotsavam-procession-swamiji_0.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2015-11nov-21st-nithyananda-diary_IMG_9097_blr-adheenam-nithyanandeshwar-brahmotsavam-procession-swamiji_0.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2015-11nov-21st-nithyananda-diary_IMG_9154-1_blr-adheenam-nithyanandeshwar-brahmotsavam-procession-swamiji_0.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2015-11nov-21st-nithyananda-diary_IMG_9173_blr-adheenam-nithyanandeshwar-brahmotsavam-procession-swamiji_0.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2015-11nov-21st-nithyananda-diary_IMG_9197_blr-adheenam-nithyanandeshwar-brahmotsavam-procession-swamiji_0.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2015-11nov-21st-nithyananda-diary_IMG_9231-1_blr-adheenam-nithyanandeshwar-brahmotsavam-procession-participants-deities_0.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2015-11nov-21st-nithyananda-diary_IMG_9237-1_blr-adheenam-nithyanandeshwar-brahmotsavam-procession-swamiji.JPG