August 11 2016
Title
THE SUPREME PONTIFF OF HINDUISM HDH BHAGAVAN NITHYANANDA PARAMASHIVAM
Link to Video
Transcript in Tamil
இன்றைய சத்சங்கத்தின் எழுத்தாக்கம்! 11-ஆகஸ்ட்-2016 நித்யானந்தேஸ்வர பரமசிவ சமாரம்பாம் நித்யானந்தேஸ்வரி பராசக்தி மத்யமாம் அஸ்மதாச்சார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம்... உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன்..... சத்சங்கத்தின் தொடர்விற்குள் நுழையலாம்.. கண்கள் ஐந்தும் கலந்திருக்கின்றது.. பரமசிவனின் கண்கள் மூன்று,.. அரசன் கண்கள் இரண்டு, சில நேரத்தில் அறிவிற்கு எட்டாவிட்டாலும், ஆன்மாவிற்கு எட்டும் ஒரு ஆமானுஷ்ய புருஷன் முன் நிற்கின்றான் என்று. அதுமட்டுமல்லாது.. சேர நாட்டுக்கோ, சோழ நாட்டிற்கோ சதாசிவன் எப்போதாவது வந்துசெல்லும் விருந்தாளி, பாண்டி நாட்டுக்கோ வீட்டோடு மருமகன். இமவான் கூட தன் மகளான பார்வதியைக் கொடுத்தான்.. ஆனால் பாண்டி நாட்டிலே நான்கள் பெண் எடுக்கவில்லை, மாப்பிள்ளை எடுத்தோம். எங்களுக்கு வீட்டோடு மாப்பிள்ளை. வீட்டிற்குள் புழங்கும்பொழுதெல்லாம் வீட்டோட மாப்பிள்ளையைப் பார்த்துக்கொண்டிருப்பது சகஜம். வீட்டோடு மாப்பிள்ளையோடு எப்படிப் புழங்குவோமோ அப்படித்தான் பாண்டிநாட்டு மக்கள் சுந்தரேசப் பெருமானோடு புழங்கினார்கள். கேட்டதற்கெல்லாம் கேடில்லாமல் கொடுத்தான். பல நேரத்தில் கேளாது அளித்தான். பாண்டியனுக்கு ஏதோ பொறி தட்டியது, குதிரைகள் அளவுக்கு மீறிய அழகோடும், குதிரைக்கு மீது இருக்கின்ற சேவகர்கள் தேவையே இல்லாத புஜபல பராக்கிரமத்தோடும், குதிரைப்படையின் தலைவனோ, தேவையே இல்லாத அழகோடும், தொழிலுக்கு சம்பந்தம் இல்லாத அளவிற்கு தேஜசோடும், அந்தத் தொழிலுக்குத் தேவையான பணிவு இல்லாமலும் இருப்பதைக் கண்டதும் பாண்டியனுக்குப் பொறிதட்டியது. இவன் வியாபாரி கூட அல்ல, வியாபாரம் முடித்தபிறகு குதிரைகளை ஒப்படைக்க வந்திருக்கின்ற சேவகன். குதிரைச் சேவகனுக்கு இவ்வளவு தைரியமா? மன்னனைக் கண்டு மண்டியிடவும் இல்லை? மண்டியிடுவது போகட்டும் மண்டை வணங்கவே இல்லை. இதுகூட போகட்டும், இங்கிருந்துதான் ஆரம்பிக்கின்றது வில்லங்கமே!. அரசன் வாதவூரரை அணைத்துக்கொண்டு, வாதவுரரே சிறுவயது முதலே எனக்கு நண்பராய் இருந்தும், இதுவரை ஒருமுறைகூட தன் சுகத்திற்காக அரசின் பதவியையோ, பணத்தையோ, சுகத்தை உபயோகப்படுத்தாது இருந்தும், அங்கையற்கன்னி அன்னை மீனாட்சியயைும், சுந்தரேஸ்வரரையுமே ஒரே சுகமாய் கருதி வாழ்ந்து வந்த உங்களை, மூட ஒற்றர்கள் உளவு சொல்லியதனால் எத்துனை சாதாரணமாக சந்தேகப்பட்டுவிட்டேன். மன்னியுங்கள் உங்களை சிறையில் அடைத்தமைக்கு என்று தோளைத் தடவி, மேனி சிறையில் வருந்தியதோ என்று கேட்டு சிறையில் சுடேறிய உடலை தன் தண்ணீர் தோய்ந்த கண்களாலும், அன்பு தோய்ந்த கரங்களாலும் குளிர வைத்த மன்னிப்புக் கேட்கின்றான் பாண்டிய நாட்டு அரசன். ஒருவேளை வாதவூரரை சிறையிலிட்ட கோபத்தினால்தான் வந்திருக்கும் குதிரைச் சேவகன் வணங்க மறுக்கின்றானோ? என்று மனதில் நினைத்து, குதிரைச் சேவகளையும் மனம் குளிர வைத்து திருப்பி அனுப்ப வேண்டும் என்பதற்காக பாண்டி நாட்டின் மிக உயர்ந்த பட்டான திருபுவனப்பட்டைக் கொண்டுவந்து, திருபுவனப்பட்டு வௌ்ளியால் நெய்து, தங்கம் கோர்த்து, முத்தால் தைக்கப்பட்டது. பாண்டி நாடு மிகப்பெரிய கடற்கறை உடையதனால், முத்துக்குளித்தல் என்பது பாண்டி நாட்டின் மிகப்பெரிய தொழில். திரிபுவனப்பட்டானான பொன்னாடையை எடுத்துவந்து தானே போர்த்திவிட விரிக்கின்றான்.. குதிரைச் சேவகனோ, பொன்னாடை போர்த்துவதற்குகூட தன் தலை வணங்கிவிடக்கூடாது என்பதற்காக, தலையை வணங்காது குதிரைகள் மீட்டுவந்த சாட்யை நீட்டுகின்றான். இதன் மீது போர்த்தும்.. என்றான். பாண்டி நாட்டு அரசன் சற்று அலண்டுதான் போனான்.. ஆழ்ந்து பார்த்தோமானால் இங்கு பாண்டிய நாட்டு மன்னன் எந்தத் தவறும் செய்யாததுபோலதான் இருக்கின்றது. ஆனால் ஏன் குதிரைச்சேவகனால் உருவெடுத்துவந்த சுந்தரேசன் பாண்டி நாட்டு மன்னனை அவமதிக்கின்றான். மேம்போக்காக பார்த்தால், பாண்டிநாட்டு மன்னன் தவறு செய்யாததுபோலவேத் தோன்றும்.. ஆழ்ந்து பார்த்தால், ஒரு அரசனுக்குத் தேவையான அடிப்படை குணம் அகக்கண் மலர்ந்திருத்தல். அவனுக்கு அகக்கண் மலர்ந்திருக்குமானால் வாதவூரர் இருக்கும் நிலையும், எடுத்த முடிவும், செய்த செயலின் இலக்கணமும், காதிலின் நேர்மையும் புரிந்திருக்கும். அரசின் நடைமுறையில் நல்லவனாய் இருந்தாலும், வாழ்வின் அடிப்படைத் தேவையான அகக்கண் மலராதவனாய் இருந்ததனால், அவனுடைய பொறுப்பை அவன் செய்தாலும் முழுமையான தகுதியை அவன் பெற்றிருக்கவில்லை. அவனுக்கு, நாடு, நகரம், சட்டம், திட்டம், விதிகள், நன்மை, தீமை இவைகளைகத் தாண்டிய வெகு சிலருக்கே வாய்க்கக்கூடிய காதலின் நேர்மையான பக்தி மற்றும் அந்த பக்தி நிலையிலிருந்து பக்தனின் மனம் எந்த நிலையில் இயங்கும் என்பதற்கான அறிவு, அந்த இலக்கணத்தை புரிந்துகொள்ளும் தௌிவு நிச்சயம் தேவைப்பட்டிருக்கின்றது. பாண்டிய நாடு, சுந்தரேசனின் நாடு. வெறும் விதி சார்ந்து இயங்குதும், சட்டம் சார்ந்து இயங்குவது மட்டும் சாத்தியமல்ல, பீடத்தில் இருப்பவன் தெய்வீகம் தெரிந்தவனாகவும் இருந்தாகவேண்டும். எப்பொழுதெல்லாம் பாண்டிய நாட்டு மக்களுக்கு விதி புரியவில்லையோ, சுந்தரேசன் கண்ணகியை அனுப்பினான், வாழ்வின் மதி புரியவில்லையோ அப்பொழுது தானே வந்தான். விதி புரியாது சதிக்கு ஆட்பட்டுக் கோவலனைக் கொன்றதால் தன் நகரையே எரித்தான்.. கண்ணகி விரும்பினாலும், சுந்தரேசன் அனுமதியளிக்காது எரிந்திருக்க முடியாது. எரிக்க அனுமதித்தார். ஏனெனில் பீடத்தில் இருப்பவனுக்குப் புரிந்தாக வேண்டும். இப்பொழுதும் பாண்டியக்கு புரிந்தாக வேண்டும் என்பதற்காக.. வருகின்றார். இந்தமுறை எரிக்கவில்ல, ஏனெனில் பாண்டியன் கொன்று வர உத்தரவிடவில்லை. சிறையில்தான் வைத்தான். சிறிய தண்டைதான். அதனால் வைகை ஆற்றைப் பெருக்கெடுத்து நீரால் நனைத்தார். நேரடியாக தானே இருந்து ஆண்டு, ஆண்டுகொண்டிருக்கும் பரமனின் தேசம் பாண்டிய தேசம். எந்த நாட்டில் நடந்த எந்த லீலைகளை வேண்டுமானாலும் சொல்லுங்கள், தன் சொந்த நாட்டில் பெருமான் செய்த லீலைகளுக்கு சமமாகாது. சில நாடுகளுக்கு பெருமான் இன்டர்நேஷனர் ஐஎஸ்டி கால், சில நாடுகளுக்கு பெருமான் ஸ்டேட் கால், சில நாடுகளுக்கு பெருமான் லோக்கல் கால், சில நாடுகளுக்கு பெருமான் இன்டர்காம் பாண்டி நாட்டவர்களுக்கோ வீடியோ கால்.. நினைத்தவுடன் நேர் நின்று நிஜமாய் நிலைத்திருக்கும் பெருமான். சற்றே அதிர்ந்துபோனான் பாண்டி நாட்டு அரசன், இருந்தாலும் சுழலை இன்னும் கசப்பாக்கிக் கொள்ளாமல், தான் செய்தது தவறு, இன்னொரு முறை செய்ய வேண்டாம் என்கிற காரணத்தினாலே திரிபுவனத்துப்பொன்னாடையை கொண்டுவந்த சாட்டைக்கே அளிக்கின்றான் அரசன். அது சாட்டை அல்ல, பெருமான் கையில் இருப்பதால் திரிசுலம். அஸ்திரத்திற்கே பொன்னாடை அளிக்கப்படுகின்றது, வாங்கிய பெருமான் லாவகமாக அதை தலைமீது தூக்கி எரிகின்றார். அது தானாகவே தலையைச் சுற்றி தலைப்பாகையாக நிற்கின்றது. கண்ட பாண்டியன் சற்று கடுகடுத்துதான் போனான். வாங்கிய விதமே ஒரு மாதிரியாகத்தான் இருக்கிறது, இதுல ஸ்டைல் வேறயா? குதிரைச் சேவகன் கேட்கின்றான்.. ‘ம்.. அடுத்து என்ன செய்யலாம்? போதும் உபசரிப்பெல்லாம்.. சுழலைப்பார்த்தால், அரசன்தான் சேவன் போலவும், குதிரைச் சேவகன் அரசனைப்போலவும் தெரிந்தது, பாண்டிய நாட்டு அரசன் சொல்கிறான்.. ‘கொண்டுவந்த குதிரையை எல்லாம் லாயத்தில் கட்டிவிடுங்கள். எங்கள் நாட்டில் மிகப்பெரிய லாயம் இருக்கின்றது.‘ சிரித்துக்கொண்டே சொன்னான் சேவகன்.. ‘உங்கள் நாட்டு லாயங்கள் எதுவும் எங்கள் நாட்டு குதிரைகளுக்கு லாயக்கற்றவை, உங்கள் நாட்டு குதிரைகள் 6 அடி குதிரைகள், நான் கொண்டு வந்திருக்கும் குதிரைகள் 10 அடி குதிரைகள், உங்கள் நாட்டின் குதிரைகள் 6 அடி நீளம் மட்டுமே உடையவை, இப்பொழுது நான் கொண்டு வந்திருக்கும் குதிரைகள் 12 அடி நீளம் உடையவை!, உங்கள் லாங்கள் எங்கள் குதிரைகளுக்கு லாயக்கற்றவை, அதுமட்டுமல்லாது எண்ணிக்கையிலும் 2000 ஆயிரம் குதிரைகளுக்குத்தான் வைத்திருக்கிறீர்கள், நான் கொண்டு வந்திருப்பதோ 80000 குதிரைகள்‘. எப்பொழுதெல்லாம் பாண்டி நாட்டு மக்கள், பாண்டிநாடு சதாசிவனுக்குச் சொந்தமானது, அதனால்தான் எல்லாப்பெருமையும் என்பதை மறந்து, எல்லாம் பெருமையும் தமக்கு என்று நினைக்கின்றார்களோ அப்பொழுதெல்லாம் அவர்களுக்குப் பாடம் சொல்லியாகவேண்டியிருக்கின்றது. அன்னை மீனாட்சி திருமணத்திற்கே சமைத்து உணவை எல்லாம் ஒருவனை வைத்து உண்டுமு முடித்தவன், இரண்டாம் நபருக்கு அன்னம் இல்லாமல் செய்து வைத்தவன் குதிரைகளுக்கா குறை வைப்பான்.? அரசன் சற்று வெட்கித்தான் போனான்.. பின், குதிரைச் சேவகனே தீர்வையும் அளிக்கின்றான்.. இந்தக் குதிரைகள் மழையினாலும், வெயிலினாலும் மடிந்துபோகாதவை அதனால் கவலைப்பட வேண்டாம். வெட்ட வௌி நிலத்தைக் காட்டுங்கள் எங்கள் சேவகர்களுக்கு, நாங்களோ லாயங்களை நாங்களே கட்டிவைத்து குதிரைகளை வைத்துவிட்டுச் செல்கின்றோம். சற்றே வெட்கப்பட்டாலும், அரசனுக்கு.. அகம் குளிர்ந்தது.. ஆஹா! பெரும்பிரச்சினை தீர்ந்தது, அப்படியே ஆகட்டும் என்றான். வாதவூர் பெருமானுக்கு விடுதலை.. நேரடியாக அவர் சுந்தரேசனை தரிசிக்கச் செல்கின்றார்.. வந்த குதிரைச் சேவகனோ, வெட்ட வௌியில் குதிரை லாயம் செய்து, குதிரைகளை எல்லாம் கட்டி வைத்துவிட்டு கணக்கை ஒப்படைத்துவிட்டுச் சென்றுவருகின்றேன் என்று மறைந்துவிடுகின்றான். இதெல்லாம் நடப்பதற்கு மாலை ஆகிவிடுவின்றது.. அதுவரை ஒரு பிரச்சினையும் இல்லை. இரவு 12 மணிக்குமேல் தான் ஆரம்பித்தது பிரச்சினை. வந்த பரி எல்லாம் திடீரென்று நரியாய் மாறி.. அக்கம் பக்கத்தில் இருந்த யானைகள், காளாட்கள் என் அனைத்தையும் கடிக்கத் துவங்க, மிச்சம் இருந்த நரிகள் ஊறுக்குள் புகுந்த அட்டகாசம் செய்ய ஊரே அல்லோலப்பட்டது. ஒற்றர்கள் ஓடுகின்றார்கள் அரசனிடம், அரசே என்ன நடந்தது என்று தெரியவில்லை, ஏதோ மந்திரம், ஏதோமாயம், ஏதோ சதி, ஏதோ சுது! வந்தக் குதிரைகள் எல்லாம் குதிரைகள் அல்ல, நரிகள்! அரசன் அலன்டுபோனான், என்னடா நடக்கிறது இங்கே? ஒருவேளை வாதவூரார் மாயமந்திரம் செய்கிறாரோ? தந்திரம் செய்கிறாரோ? என் நினைத்து, யார் அங்கே பிடித்து வாருங்கள் வாதவுரானை மீண்டும்.. என உத்தரவிடுகின்றார். மணிவாசகப் பெருமானுக்கு மீண்டும் விலங்கு. கையிலும், காலிலும் விலங்கிட்டு இழுத்துவருகின்றார்கள். கடுங்கோபத்தோடு, வாதவூராரைப் பார்த்து அரசன் கேட்கின்றான்.... ‘என்ன விளையாட்டு இது? யாரிடம் இந்த மாயமும், மந்திரமும்? காலையில் பரிகளாய் வருகின்றன, இரவில் நரியாய் மாறி நகரத்தையே உலுக்குகின்றன. யாரிடம் இந்த மாய மந்திர சித்து வேலை? என்கிறான். ஐயா இது சித்து வேலையெல்லாம் அல்ல, சக்தி என்று அவனுக்கு புரிந்திருக்கவா போகின்றது? டேய்.. பித்தர்கள் செய்தால் சித்து, ஜீவன் முக்தர்கள் செய்தால் சக்து, இது புரியாத நீ ஒரு தத்து,. இன்னமும் பாண்டியன் பாடம் கற்க வில்லை, தன்னைத் தாண்டிய ஏதோ ஒன்று நடக்கின்றது, சற்று அகத்தை அகற்றி வைத்து, அகக்கண்ணால் பார்ப்போம் என்று அவன் பார்க்கத் தவறுகின்றான். கொண்டகோபம் கண்களை மறைக்க.. வாதவூரனை சிறையில் தள்ளி வாட்டுங்கள் என்று காவலர்களுக்கு உத்தரவிடுகின்றான். பரிகளாய் வந்து நரிகளாய் மாறிய இந்த நரிகளை எல்லாம் அடித்து விரட்டுங்கள். இப்பொழுது அதுக்கு வேற தனியா பணம் செலவு செய்தாகனும் (சிரித்துக்கொண்டே) என்னே பாண்டிய நாட்டுக்கு வந்த சோதனை..? யாராலும் இந்த நரிகளை அடக்க முடியவில்லை, சிவ கணங்கள்.. யாரால் என்ன செய்ய முடியும்? அம்பு துளைக்க மறுக்கின்றது.. கதை பிளக்க மறுக்கின்றது.. நெருப்பு பந்தங்களை கண்டு அஞ்ச மறுக்கின்றன. இரவு முழுவதும் பாண்டிய நாடு அல்லோலப்பட்டது. விடிந்ததும் ஒன்றுமே நடக்காததுபோல எல்லா நரிகளும் மறைந்துவிட்டன.. அரசனுக்கு திடீரென்று சந்தேகம்.. கண்டதெல்லாம் கனவா? இரவு நம் நடத்தியபோரெல்லாம் ஒருவேளை நம் பைத்தியக்காரத் தனமா? சேனை எல்லாம் திரட்டி, வீட்டிற்கு ஒரு ஆன்மகனைக் கொடுக்கச்சொல்லி விரட்டியடிக்க எல்லாம் திரட்டி வைத்தால் காலையில் ஒரு நரிகூட காணவில்லையே! ஆனால் அவைகள் விட்டுச்சென்ற எச்சமும், மிச்சமும் மட்மும் எங்கு பார்த்தாலும் இருக்கின்றது. அப்பொழுதும் இந்த மூடப் பாண்டியனுக்கு மனதில் உரைக்கவில்லை. அப்பொழுதாவது வாதவூரரை சிறையிலிருந்து விடுவித்து, அவர்வழி செல்ல அனுமதிக்கவில்லை. என்ன செய்வது.. பாண்டியனுக்கு வந்த கெட்ட நேரம்.. அதைச் செய்ய மனம் மறுத்தது, செய்யவில்லை. சுந்தரேசப் பெருமான் மூன்றாவது கண்ணால் சற்று கீழ்நோக்கிப்பார்த்தால் நெருப்பு! மேல் நோக்கிப் பார்த்ால் நீர் - கங்கை. சற்றே மேல்நோக்கிப் பார்க்கின்றார். மேல்நோக்கிப் பார்த்து.. கங்கா என்று அழைக்கின்றார்.. புரிந்துவிட்ட அன்னை கங்கை, பொங்கி எழுந்து நாட்டையே வைகையால் மூழ்கடித்தாள். வரலாறு காணாத வௌ்ளம். வைகை கரையை உடைத்துக்கொண்டு, ஊறுக்குள் புகுந்து, அரண்மனையை நிரப்பி, ஆலயத்தின் வாசலைத் தொட்டு நமஸ்கரித்துவிட்டு நிற்கின்றாள். ஆலயம் தவிற மற்ற எல்லாம் இடமும் பெரு வௌ்ளம் சுழ்ந்து கிடக்கின்றது. என்ன செய்வதென்று தெரியாமல் திக்கி திணிறனான் அரசன். அமைச்சர்களிடம் கேட்கின்றான்.. அடியார் நெஞ்சம் கலங்கினால் நாடே கலங்கும்.. அதனால் வந்த வௌ்ளம் என்ற உண்மையச் சொல்லாமல்.. அரவே வீட்டிற்கு ஒரு ஆளைத் திரட்டி வௌ்ளத்தை அடைத்துவிடாலாம் என்கிறார்கள். இடிப்பார் இல்லாது இருக்கும் அரசன் கெடுப்பார் இன்றி தானே கெடுவான் என்பதுபோல.. இடித்துரைக்க யாரும் இல்லாததனால் அரசனும் இதுதான் தீர்வு என்று கருதிக்கொண்டு, முரசரைந்து ஊருக்கெல்லாம் உத்தவிட்டான். வீட்டிற்கு ஒரு ஆள் வரவேண்டும், ஒரு வீட்டிற்கு இத்துனை நீளம் கரையை அடைக்க வேண்டும், வைகையின் உடைப்பைத் தடுக்க வேண்டும். ஊரேத் திரண்டது, எங்கெல்லாமோ கல்லையும், மண்னையும் சுமந்து வந்து கொட்டினார்கள். எல்லாரும் சேர்ந்து, வைகையை அடைப்பதற்கு, தனக்கு நியமிக்கப்பட்ட பாகங்களிலே வேலையைச் செய்துகொண்டிருக்கின்றார்கள். ஒரு குறிப்பிட்ட இடம் மாத்திரம் வேலை நடக்காமல் தாழ்வான பகுதியாகவே இருக்கின்றது. அந்த ஒரு இடம் தாழ்வான பகுதியாக இருப்பதனால் அதன் மூலம் வைகை பொங்கிவந்து கொண்டிருக்கின்றாள். மற்ற கரை எல்லாம் பலமாக இருந்தாலும், அந்த ஒரு கரை மட்டும் பலகீனமாக இருப்பதனால் மற்ற கட்டப்பட்ட கரைகள் உடைந்துவிடுமோ என்ற அச்சம் நிலவுகின்றது. மீண்டும் ஒற்றர்கள் பாண்டியன் அரண்மனைக்கு ஓடுகின்றார்கள்.. அரசே.. அரசே.. நாடு முழுவதும் சேர்ந்து கரையைக் கட்டிவிட்டது. ஒரு இடத்தில் மாத்திரம் கரை கட்டப்படவில்லை. வந்தி எனும் வயதான பாட்டிக்கு அளிக்கப்பட்ட இடம் அது. அவள் இடம் மட்டும் கரை கட்டப்படாததனால் அந்த இடத்தின் வழியாக வைகை பொங்கி ஊருக்குள் வருகின்றது. அந்த ஒரு இடத்தின் வழியாக வருவதினாலே மற்ற இடத்தை உடைத்துவிடுமோ என்கிற பயம் நிலவுகின்றது. அரசனுக்கு கோபம்.. யார் அந்தக் கிழவி? ஏன் அடைக்கவில்லை? அரசே நாங்களும் விசாரித்தோம்.. அவளோ வயதான கிழவி! மதுரையிலே வீதியிலே புட்டு விற்றுப் பிழைக்கும் கிழவி! ஏன் அவளுக்கு ஆள் பிடிக்க வசதி இல்லையா? இருக்கிறது.. அவளும் ஒருத்தனை பிடித்திருக்கிறாள். பின் ஏன் அதை அடைக்கவில்லை.. ? அவன் ஏன் வேலை செய்யவில்லை, என்ன பிரச்சினை அது.. அரசே நாங்கள் நேரில் சென்று பார்த்தோம்.. அவள் ஆளைப் பிடித்திருக்கிறாள். வாட்ட சாட்டமாக, ஆஜானுபாகுவாக, தாடி மீசையுடன், தலைப்பாகையுடன் நன்றாகத்தான் இருக்கின்றான். இவள் என்ன கூலி வேண்டுமனாலும் தருகிறேன் என்று சொல்ல, அவனோ இல்லை இல்லை, பிட்டும், இட்லியும் போதும் என்று சொல்ல.. இவளும் சமைத்துப் போட்டுக்கொண்டே இருக்கின்றாள். அவனும் தின்றுகொண்டே இருக்கின்றான். அவனுடைய வாய், வாயா? வாய்க்காலா? என்று தெரியமால் இட்லியும் பிட்டும் உள்ளே சென்றுகொண்டே இருக்கின்றது. நீங்கள் ஏன் அவனைக் கேட்கவில்லை? இவர்களோ அரசே.. கேட்பதற்காகத்தான் சென்றோம்.. அவனோ தின்றுகொண்டே இருந்தான்.. ஏனடா தின்றுகொண்டே இருந்தால் எப்பொழுது வைகையை அடைப்பாய்? கரை உடைந்து நாட்டிற்குள் வந்தால் பெரும் அபாயம் அல்லவா? என்று கேட்டோம். அவன் எங்களைத் திரும்பிக்கூட பார்க்காமல், புறங்கையை நீட்டீ.. ஹா.. என்று ஒரு நாயைத் துரத்துவதுபோலக் கையை அசைத்தான். எங்களுக்கு உயிரே நடுநடுங்கி ஓடி வந்திருக்கின்றோம். என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை? எல்லாம் மாய மந்திரமாய் இருக்கின்றது. நீங்களே வந்து நீதி கேட்க வேண்டும் செங்கோலைத் தாங்கி பாண்டியன் சினத்தோடு புறப்பட்டான்! கிளப்பிடிச்ச கைப்புள்ள (சிரித்துக்கொண்டே)
வேக வேகமாக.. வைகை கரைக்கு வந்துவிட்டது!
ஏற்கனவே மேல் மூச்சும் கீழ்மூச்சும் வாங்க தட்டுத்தட்டாய் பிட்டும், இட்லியும் சட்டினி வகைகயைும் சேர்த்து வைத்து மொத்தமாய் முழுங்கிவிட்டு, உண்ட மயக்கம் தொண்டனுக்கு உண்டு பாட்டி, வேலை தானே செய்தால் போச்சு.. அதற்கென்ன? என்று செம்மாட்டை சுட்டி அடியில் வைத்துக்கொண்டு குப்புறப்படுத்துக் கிடந்தான் வேலையாளி. வந்திப் பாட்டியோ.. காலை வருடிக்கொண்டு, ஐயா.. நீ சொன்னபடி கூலிதான் கொடுத்துவிட்டேனே.. வேலைக்குப் போகக்கூடாதா? அரசனின் ஊழியர்கள் வந்து எற்கனவே பார்த்துவிட்டுப் போய்விட்டார்கள். இன்நேரம் அரசனுக்குச் சொல்லியிருப்பார்கள். வந்துகேட்டால் நான் என்ன பதில் சொல்வேன்.. ஐயா எழுந்திரு! ஐயா எழுந்திடு.. இந்தக் கூலியாலே வந்திப் பாட்டி காலை வருடுவதை தனக்கு பாத சேவை செய்வதாக நினைத்துக்கொண்டு ‘ஆஹா உண்ட மயக்கத்தில் ஒரு பாட்டி பாதசேவை செய்தால் நன்றாகத்தான் இருக்கிறது‘ என்று கையில் முகம் பதித்து, கவலையில்லாமல் படுத்துகிடக்கின்றான். வேகத்தோடு செங்கோல் தாங்கி வந்த பாண்டியனோ.. யார் அங்கே? வந்திக்கு வந்த கூலியாள் நீதானோ.. ? வேலையை செய்யாமல் உண்டுவிட்டு உறங்கிக்கொண்டிருப்பது யார் அங்கே? எழுந்திரு! என்று அதற்றினான் வேகத்தோடு. குப்புறப்படுத்துக்கிடந்த கூலியாள்.. ‘யாரப்பா அது.. அளவுக்கி மீறி சத்தத்தை அரற்றுவது?‘ என்று மெதுவாக முழு உடலையும் திருப்பாமல் தலையை மட்டும் திருப்பி நிமிர்ந்து பார்த்தான். கண்கள் ஐந்தும் கலந்தன! திரும்பவுமா? அதே நீலம் பொதிந்த ஜாலக் கண்கள்! குதிரைச் சேவகனாய் வந்தவனின் இரட்டைப்பிறவியாய் இருப்பானோ என்று சந்தேகப்படுகின்ற விதத்திலே, தோளும், இரு புஜமும், ஆஜானுபாகுவான கரங்களும், முட்டியைத் தொடுகின்ற விரல்களும், தௌிந்த மார்ப்பும், குளிர்ந்த கண்களும், குழித்த கன்னமும், குமிழ் செவ்வாயும், பணித்த செஞ்சடை பக்கத்தில் இருப்போர்க்கு தெரியாது இருக்க.. தரித்த தலைப்பாகையும், மண்ணொட்டாத மீசையும், மலர்ந்த முகத்து தாடியும், யாரையடா வேலைச் செய்யச் சொல்கிறாய்? என்கிற ஏளனத்தோடு நிமிர்ந்த பார்வையும். பாண்டியன் நின்றிருந்தாலும், பாண்டியன் உயிர் விழுந்தது! கூலியாள் படுத்திருந்தாலும், அவன் உயிர் விழுந்திருக்கிவில்லை! குதிரைச் சேவைகனின் இரட்டைப் பிறவியாக இருக்குமா? அல்லது அவனே தானா? இல்லை இன்னும் இவன் ஊரை விட்டுப்போவில்லையா? அன்றே அவனைப் பிடித்து வைக்க மறந்தது நம் முட்டாள் தனமா? எப்படி இந்தச் சுழலை எதிர்கொள்வது என்றுத் தெரியாமல் கண்கள் ஐந்தும் கலக்க நின்றுகொண்டிருக்கின்றான் பாண்டியன். சத்சங்கம் துவங்கும்பொழுது கலந்திருந்த அதே ஐந்து கண்கள் இப்பொழுது மீண்டும் கலந்திருக்கின்றன். எப்படி பிரியும்? எப்பொழுது பிரியும்? ஏன் பிரியும்? என்ன நடக்கும்? தொடர்ந்து காணுங்கள்.. நீங்கள் எல்லோரும் நித்யானந்தத்தில் நிறைந்து, நித்யானந்தத்தில் கலந்து, நித்யானந்தத்தில் கரைந்து நித்யயானந்தமாகிட ஆசிர்வதிக்கின்றேன். ஆனந்தமாக இருங்கள்!