August 07 2016

From Nithyanandapedia
Revision as of 07:26, 1 September 2020 by Ma.manimegalai (talk | contribs)
Jump to navigation Jump to search

Title

THE SUPREME PONTIFF OF HINDUISM HDH BHAGAVAN NITHYANANDA PARAMASHIVAM

Link to Video

Transcript in Tamil

இன்றைய சத்சங்கத்தின் எழுத்தாக்கம்! 07-ஆகஸ்ட்-2016 நித்யானந்தேஸ்வர பரமசிவ சமாரம்பாம் நித்யானந்தேஸ்வரி பராசக்தி மத்யமாம் அஸ்மதாச்சார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம்... உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன்..... சுத்தாத்வைதமான சதாசிவப் பரம்பொருளின் நேரடியான உபதேசங்களின் சாரத்தை இன்று உங்களோடு பகிர்ந்துகொள்கின்றேன். அடிப்படையான சில சத்தியங்கள்.. எப்படி உங்களை கண்கள், காதுகள், நாக்கு, மூக்கு, தொடும் உணர்ச்சி போன்றவைகளோடு பரம்பொருள் படைத்து அனுப்பியிருக்கின்றாரோ, அதேப்போல உங்களுக்குள் மற்றும் சில இந்திரியங்களையும், ஞானேந்திரியங்களையும், கர்மேந்திரியங்களையும் சில நுண் பாகங்களையும் உங்களுக்குள் செய்து வைத்து அனுப்பியிருப்பதாக பெருமான ஆகமங்களில் விளக்குகின்றார். அவை செய்து வைத்து அனுப்பிய பாகங்கள் என்னென்ன? அவைகளை எவ்வாறு இயக்குவது என்பது அடிப்படையாக நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முதல் பாடம். ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள்.. ஒரு கார், கம்பியூட்டர், செல்போன் இவை எல்லாவற்றிற்குமே ஒனர்ஸ் மேனுவல் என்று ஒன்று இருக்கும். அந்த ஒனர்ஸ் மேனுவலை படிக்காமல் நேரடியாக உபயோகம் செய்தாலும் இயக்க முடியும். ஆனால் அந்தக் கருவியில் இருக்கின்ற எல்லாப்பரிமாணமும் உங்களுக்குப் புரியாது. செல்போனின் ஒனர்ஸ் மேனுவலைப் படிக்காமல் பயன்படுத்தினீர்களானால் குறைந்தபட்சம் அதை வைத்து பேச முடியும். அவ்வளவுதான். ஆனால் அதைப் படித்தீர்களானால் அதில் என்னெ்ன அப்ளிகேஷன்ஸ் இருக்கு, எதையெல்லாம் பதிவிறக்கம் செய்யலாம், அதை வைத்து என்னவெல்லாம் செய்ய முடியும் என்று தெரிந்து அதை முழுமையாக உபயோகம் செய்யலாம். அதன் எல்லா சாத்தியக்கூறையும் தெரிந்துகொள்வதற்கு ஓனர்ஸ் மேனுவலை படித்தால்தான் தெரியும். அதே மாதிரி பெருமான் உங்களுடைய வாழ்க்கைப் பற்றி உங்களுக்குக் கொடுத்திருக்கின்ற ஓனர்ஸ் மேனுவல்தான் ஆகமங்கள். அதைப் படிக்காமலேயேப் பயன்படுத்தினால், பயன்படுத்திக்கொண்டிருக்க முடியும், அப்பன் பரம்பொருள் சதாசிவன், உடலோடு சேர்த்து அதை முழுமையாகப் பயன்படுத்துவதற்கு ஆகமத்தையும் அருளியிருக்கின்றான். அதுதான் ஓனர்ஸ் மேனுவல். ஆகமம் படிக்காமல் வாழ்ந்தால் இரண்டு கண்களைப் பற்றி மட்டும்தான் தெரியும். ஆகமம் படித்து உங்கள் வாழ்க்கையை நடத்தத் துவங்கினீர்களானால் மூன்றாவது கண் மலரும். அதே மாதிரி வெறும் வார்த்தையாக உபயோகப்படுத்துகின்ற வாக்கு, அதை வெறும் ஓனர்ஸ் மேனுவலை படிக்கவில்லை என்றாலும் உபயோகம் செய்வீர்கள். ஆனால் பெருமான் அருளிய ஆகமத்தை படித்தால், அந்த வார்த்தைகள் உருவாகின்ற தாத்பர்யத்தைப் படித்தால் மூன்றாவது கண்ணைப்போல வாக் என்கிற ஒரு இந்திரியம் நமக்கு இருக்கின்றது, அதைப்பற்றிய தத்துவங்களை, இரகசியங்களைத் தெரிந்துகொள்ளலாம். கொடுமை என்னவென்றால்.. அந்தக் காலத்து புரணாங்களில் எல்லாம் கேள்விப் பட்டிருப்பீர்கள், இந்த ரிஷிகள் முனிவர்கள் எல்லாம் யாகம் செய்தால், நல்ல விஷயங்களை உலகிற்கு சொல்கிற சத்சங்கங்கள் செய்தால் இந்த ரௌடிகள், ராட்சஸர்கள் அங்கு வந்து தொந்திரவு செய்வார்கள், அதை நடக்கவிட மாட்டார்கள். இப்பொழுதும் அதை நீங்கள் நிதர்சனமாகப் பார்க்கலாம். கொரில்லா தாக்குதல் என்று சொல்வார்கள்.. எங்கிருந்து தாக்குகிறார்கள் என்றேத் தெரியாமல் தாக்கிக்கொண்டிருப்பார்கள். உண்மையில் பார்த்தீர்களானால், உங்களுக்குள் நீங்கள் உபயோகப்படுத்தாத பல்வேறு சாத்தியக்கூறுகளையும், சக்திகளையும் வைத்துத்தான் பெருமான் உங்களை அனுப்பியிருக்கின்றார். என்ன சாத்தியக்கூறுகளை சக்திகளை உங்களுக்குள் வைத்திருக்கிறார் என்று சொல்லத்தான் ஆகமம் எனும் உரிமையாளர் கையேட்டை எழுதியிருக்கின்றார். அவர் சொன்ன ஆகமத்தின்படி உங்களுக்குள் இருக்கின்ற பல்வேறு சக்திகளை உயிர்பிப்பது, அந்த சக்திகளையும் சாத்தியங்களையும் வாழ்வது இதுதான் சுத்தாத்வைதத்தின் சாரம். மேனுவல் படிக்காமல் வாழ்ந்தால் மேனாகவே வாழ்ந்து செத்துவிடுவீர்கள். பரம்பொருள் நமக்குச் சொல்லவேண்டிய அகம் பொருளை எல்லாம் ஆகமப் பொருளாக ஆக்கி வைத்திருக்கிறார். உங்களுக்குள் மூன்றாவது கண் என்கிற ஒரு ஞானேந்திரியம் இருக்கின்றது, வாக் என்கிற சுட்சுமமான ஒரு ஞானேந்திரியம் இருக்கின்றது, மனம் என்கிற சுட்சுமமா ஒரு ஞானேந்திரியம் இருக்கின்றது, இந்தப் புலன்களை இயக்குவதற்கு சில நெறிமுறைகள், வழிமுறைகள் இருப்பதுபோல, அந்தப் புலன்களை இயக்குவதற்கும் சில வழிமுறைகள், நெறிமுறைகள் இருக்கின்றன. பெரிய கொடுமை என்னவென்றால், இதையெல்லாம் அனுபவித்து வாழவேண்டிய ஆகமத்தின் சொந்தக்காரர்களான, அதைத் தன்னுடைய வாழ்க்கைமுறையாக வாழ்ந்து அடுத்தடுத்த தலைமுறைக்கு கற்பிக்கவேண்டியவர்கள் கூட அதை இழக்கின்ற அளவிற்கு தாக்கப்பட்டிருப்பதுதான் கொடுமை! இதை வாழ்ந்து உலகத்திற்குப் பரப்ப வேண்டிய ஆதிசைவப் பெருங்குடியினர்கூட, பிராம்மண பெருமக்கள்கூட தன் மகனையோ, மகளையோ பொறியியல் கல்விக்கு அனுப்ப வேண்டும் என்றுதான் நினைக்கின்றார்கள். பொறியில் படித்துவிட்டால் உடனே வேலை கிடைத்துவிடுமா? ஒவ்வொரு ஊரிலும் எலியைவிட இன்ஜினியர்ஸ்தான் அதிகமாக இருக்கின்றார்கள். இந்த உள்ளுலகத்தின் அறிவியலை உயிரோடு வைத்திருக்கவேண்டிய, வாழ்க்கைக் கடமையைச் செய்யவேண்டிய ஆதிசைவரும், பிராம்மண சமூத்தவரும்கூட, இந்த அறிவியலை வாழ்வதும் மற்றவர்களுக்குப் பரப்புவதையும் முழுநேர வாழ்க்கையாக ஏற்றுக்கொண்டால் அது பாதுகாப்பில்லாதது என்று பயப்படுகின்ற அளவிற்கு சமூகத்தில் பாதிப்பு ஏற்பட்டிருக்கின்றது. நான் ஆழ்ந்து சிந்தனை செய்துகொண்டிருந்தேன்.. ஏனெனில் ஒவ்வொருநாளும் என் குருகுலத்தில், என் குருகுல குழந்தைகள் மலர்கின்ற விதம், வௌிப்படுத்துகின்ற சக்திகள் இதையெல்லாம் பார்க்கும்பொழுது யோசித்தேன், இவ்வளவு பெரிய அறிவியல் எப்படி திடீரென்னு அடிப்படை இல்லாமல் துடைக்கப்பட்டிருக்கின்றது என்று. முதலில் இதை வாழ்ந்து மற்றவர்களுக்கு வாழ வைக்கவேண்டிய சமூகத்தவர்களே, தங்கள் வாழ்க்கையில் இது பாதுகாப்பிற்கு உதவுமா? என்ற பயத்திற்குள் மூழ்கத் தொடங்கினார்கள். அவர்களே, தங்களுடைய மகன்கள், மகள்களை வேதங்களை, ஆகமங்களைப் படிப்பதும் அதைப் பரப்புவதும் என்கிற செயலை ஒரு பகுதி நேரமாகச் செய்தால் பரவாயில்லை, ஆனால் முழுநேரமாக இதைச் செய்வதை அவர்களே விரும்பவில்லை. ஏனெனில் எதிர்காலம் பற்றிய பயம். அதுபோல் அவர்கள் இப்பணியைச் செய்தால் சமூகம் அவர்களை பாதுகாக்காத அளவிற்கு சமூகம் சீரழித்தது. சமூகம் அவர்களை பாதுகாக்க மறுத்ததனால், அவர்களும் குழந்தைகளின் எதிர்காலப் பாதுகாப்பைப் பற்றி சிந்திக்க வேண்டிய சுழலுக்கு ஆளானார்கள். எந்த குழுவினர் இந்த சத்தியத்தை உயிரோடு வைக்க வேண்டுமோ.. அவர்களுக்கு இது பாதுகாப்பில்லாத ஒரு சுழ்நிலையை உருவாக்கும்பொழுது அந்த சத்தியத்தை அழிப்பது சுலபம். இப்படித்தான் இது அழிக்கப்பட்டது. இல்லையென்றால், திரும்பிய திசை எல்லாம் தென்னாடைய சிவனின் திருக்கோபுரங்கள் தெரியும் இந்நாட்டிலா ஆகமங்கள் அந்நியப் பொருளாக மாறுவது? சில லட்சம் பேராவது.. வாழ்க்கைககான் ஒனர்ஸ் மேனுவலாக பெருமான் அளித்திருக்கின்ற இந்த ஆகமத்தை வாழ்ந்து, அனுபவமாக்கிக்கொண்டு, இதை மற்றவர்களுக்கும் பகிர்ந்தளித்து வாழ்க்கை முறையாக மாற்றிவிட்டால் நான் வந்த நோக்கம் நிறைவடைந்தது என்று நான் நிம்மதியடைவேன். உங்களுக்குள் இருக்கும் ஞானேந்திரியங்களை உயிர்ப்பிக்கச் செய்யுங்கள்.. அவைகளின் சக்திகளை உங்கள் வாழ்க்கையில் வாழத்துவங்குங்கள். இன்று ஒரு ஞானேந்திரியத்தைப் பற்றிச் சொல்கிறேன்.. ஏன் ஞானசம்பந்தர் பாடினால், அப்பர் பெருமான பாடினால் கதவு திறக்க வேண்டும், கதவு மூட வேண்டும் ? நாம் பாடினால் என்ன ஆகும் என்று நமக்கேத் தெரியும்.. ஏன் அப்பர் பெருமானும்கும், சம்பந்தருக்கும் அந்த சக்தி இருந்தது? இது ஒரு அறிவியல்.. அப்பருக்கும் சம்பந்தருக்கும்கூட அந்த சக்தி இருந்ததே இல்லை என்று சொல்கிறவர்கள்கூட முழு நாத்திக மூடர்கள். அப்பருக்கும் சம்பந்தருக்கும் இருந்தது, அது நமக்கு வராது என்பவர்கள் அரை நாத்திகர்கள். வரவேண்டும் என்று நினைக்கின்றேன், ஆனால் இதெல்லாம் எப்படி என்னால் செய்ய முடியும் என்பவன் குறை நாத்திகன். நமக்கும் உண்டு, நானும் செய்வேன், எனக்கும் இது வாழ்க்கை முறை என்பவன்தான் ஆத்திகன். ஆழ்ந்து கேளுங்கள்.. அப்பருக்கே அது இருந்ததில்லை, அதெல்லாம் கட்டுக்கதை என்பவன் முழுநாத்திகன், அப்பருக்கு இருந்திருக்கலாம் உங்கள் அப்பனுக்கு இருக்கோ என்று கேட்பவன் குறை நாத்திகன், அப்பருக்கும் இருந்திருக்கிறது, அப்பனுக்கும் இருந்தது,எனக்கு ஆகுமோ? குறை நாத்திகள்

அவருக்கும் இருந்தது, இவருக்கும் இருக்கிறது, எனக்கும் உண்டு, நானும் செய்வேன் என்பவன்தான் ஆத்திகன். 

அந்த பலத்தால் செய்து முடிப்பவன்தான் சைவன். உங்க எல்லாருக்குள்ளையும் வாக்கு என்கிற ஒரு ஞானேந்திரியம் இருக்கிறது.., உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சாதாரண ஒரு ஜீவன் என்கிற குறைமனதோடு சொல்கின்ற வார்த்தைகளை நிறைவுபடுத்தாதது, நிறைவேற்றப்போவதில்லை என்று தெரிந்தும் வர்த்தைகளை சொல்வது போன்ற செயல்கள் எல்லாம் இந்த வாக் என்கிற ஞானேந்திரியத்தை பாதிக்கும். ஏன் அதைச் செய்கிறீர்கள் என்றால், உங்களை நீங்கள் சக்தி இல்லாத ஜீவனாக நினைக்கும்பொழுது இதுமாதிரியான குரூரமான விளையாட்டை வாழ்க்கையில் விளையாடுகின்றீர்கள். ஒரு சக்தி வாய்ந்த சிவமாக உங்களை உணர்ந்தீர்களானால், கொடுத்த வாக்கை நிறைவேற்றாது இருத்தல், நிறைவேற்ற முடியாது என்று தெரிந்தே வார்த்தையைக் கொடுத்தல் போன்ற குரூரமான விளையாட விளையாடமாட்டீர்கள். உங்களை ஜீவன் என்று நினைத்து, ஒவ்வொரு முறை இயங்கும்பொழுதும் உங்கள் வாக்கு என்ற இந்திரியத்தைப் பழுது படுத்துகின்றீர்கள். புண் புண் புண்ணாய் குத்தி, சீழால் புழுத்து உங்கள் வாக்கு தன் சக்தியை இழந்துவிடுகின்றது. எப்பொழுது நீங்கள் சிவம் என்கின்ற சத்தியத்திலிருந்து உங்களை இயக்கத் துவங்குகின்றீர்களோ.. அப்பொழுது கொடுத்த வார்த்தைகளை நிஜமாக்குவீர்கள், நிஜமாக்ககூடிய வார்த்தைகளைத்தான் கொடுப்பீர்கள். வாழ்க்கையில் ஒருங்குவத்தல் வந்துவிடும்.. அதுதான் வாக் சக்தி. வாக் என்கிற ஞானேந்திரியத்தை நீங்கள் இயக்கத் துவங்கினால், சிவம் என்கிற உணர்விலிரு:ந்து இயக்கத் துவங்கினால் உங்களுக்குள் வாக் சக்தி மலரும். எப்பொழுதெல்லாம் வார்த்தையைக் கொடுத்துவிட்டு நிறைவேற்றாமல் இருக்கிறோம், இல்லை நிறைவேற்ற முடியாது என்று தெரிந்து வார்த்தையைக் கொடுக்கின்றோனம் என்று யோசித்துப்பாருங்கள். எப்பொழுதெல்லாம் உங்களை ஒரு சக்தியில்லாத ஜீவனாக உணர்கின்றீர்களோ அப்பொழுதுதான் இந்தக் குரூரத்தனமான விளையாட்டை விளையாடுவீர்கள் . எப்பொழுதெல்லாம் உங்களை சிவமாக உணர்கின்றீர்களோ, அப்பொழுதெல்லாம் கொடுத்த வாக்கை நிஜமாக்குவீர்கள், நிஜமாக்கக்கூடிய வார்த்தைகளைக் கொடுப்பீர்கள். ஜீவனான இருந்து இயங்க வாக் சிதறும். சிவமாக இருந்து இயக்க வாக் சக்தி மலரும். இதுவரைக்கும் வாக்கைப் படாதபாடு படுத்தி பாழ்படுத்தியிருப்பீர்கள். ஆனால் அதற்காகக் கவலைப்பட வேண்டாம். கங்கையை 100 ஆண்டுகளாக அசுத்தம் செய்தாலும் , சுத்தம் செய்வதற்கு இன்னும் 100 ஆண்டுகள் தேவையில்லை. அசுத்தம் செய்யும் பொருட்களை அதனுள் அனுப்பபுவதை நிறுத்தினால் போதும், அது 24 மணி நேரத்தில் தானே தன்னைச் சுத்தம் செய்துகொள்ளும். ஏனெனில் கங்கையின் போக்கே.. அசுத்தங்களைத் தானே சுத்தம் செய்துகொள்கின்ற தன்மை உடையது, போக்கு உடையது. அப்படித்தான் இந்த ஞானேந்திரியமும், எப்பொழுது நீங்கங் உங்களை ஒரு அசக்தி ஜீவனாக நினைக்கத்துவங்கினீர்களோ, எனில் நீங்கள் பிறந்ததிலிருந்து, உங்களைப் பற்றி நீங்கள் ஒரு கருத்தை உருவாக்கியதிலிருந்து உங்களை பலமற்ற ஒரு ஜீவனாகவே கருதி உங்கள் வாக்கை உபயோகப்படுத்திக்கொண்டிருக்கின்றீர்கள். வாக் என்பது தொண்டையில் இருக்கும் ஞானேந்திரியம்.. வாக் என்கிற ஞானேந்திரியத்தை அசக்தி நிலையிருந்து உபயோகப்படுத்தி அளவுக்கு அதிகமாக அசுத்தப்படுத்தி விட்டீர்கள். இதற்குமேல் செய்ய வேண்டிய ஒரே வேலை அதை அசுத்தப்படுத்துவதை நிறுத்தினாலே 21 மணிநேரத்திற்குள் அந்த வாக்கு தானாகவே தூய்மைய அடைந்துவிடும். கழிவுநீர் கங்கையில் கலப்பதை நிறுத்தினாலே கங்கை தானாய் தூய்மை அடைவதுபோல நீங்கள் ஜீவன் என்கிற நினைப்பிலிருந்து நீங்கள் வாக்கை உபயோகப்படுத்தவதுதான் கழிவுநிலை வாக்கோடு கலத்தல். ஜீவன் என்கிற நிலையிலிருந்து வாக்கை உபயோகப்படுத்துவதை நிறுத்திவிட்டு சிவம் என்கிற நிலையிலிருந்து வாக்கை உபயோகப்படுத்த துவங்கினாலே 21 மணி நேரத்திற்குள் வாக் சக்தி மலர்ந்துவிடும். பிறந்ததிலிருந்து எப்பொழுதெல்லாம் நீங்கள் வாக்கை ஜீவன் என்கிற நிலையிலிருந்து உபயோகப்படுத்திக் கொடுத்த வாக்கை நிறைவேற்றவில்லையோ, நிறைவேற்ற முடியாது என்று தெரிந்தே வாக்கைக் கொடுத்தீர்களோ அதையெல்லாம் பட்டியலிட்டு, காலபைரவர் திருமேனி முன்பு அமர்ந்து, படம் கிடைக்கவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம் உங்கள் கடிகாரமே காலபைரவர் தான் கடிகாரத்தின் முன்பு அமர்ந்தாலும் தவறில்லை, அதுவே காலபைரவர்தான். காலத்தைக் காட்டுவதும் கடிகாரம், காலபைரவரைக் காட்டுவதும் கடிகாரம், அதன் முன் அமர்ந்து, காலபைரவனை நினைத்து, இதுவரைக்கும் எப்படியெல்லாம் ஒருங்குவித்தல் இல்லாமல் வாழ்ந்து உங்கள் வாக்கை அசுத்தப்படுத்தியிருக்கின்றீர்கள் என்பதை ஒவ்வொன்றாக நினைத்து இதற்குமேல் உங்கள் வாக்கை அசுத்தப்படுத்துவதில்லை, ஜீவன் நீங்கள் என்று செயல்பட்டு வாக்கை அசுத்தப்படுத்துவதில்லை. அப்படியென்றால், இதற்கு மேல் கொடுத்த வாக்கை நிறைவேற்றியேத் தீருவது, நிறைவேற்ற முடியவில்லை என்றால் அந்த வர்த்தையைக் கொடுப்பதில்லை, ஒரு வார்த்தைக் கொடுத்துவிட்டால் அதற்குப் பொறுப்பெடுத்துக்கொள்வது. இந்தத் தௌிவை வாழ்வது என்கிற முடிவெடுங்கள். அதை நீங்கள் சிவம் என்கிற நிலையிலிருந்து செய்யுங்கள். நான் ஜீவன் அல்ல, சிவம் என்பதை ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள்.. உங்களைப் பற்றி உங்களைவிட உங்கள் குருநாதருக்குத் தௌிவாய்த் தெரியும். நீங்கள் உங்களை ஜீவன் என்கிறீர்கள், குரு உங்களை சிவன் என்கிறார் இது இரண்டிற்கும் நடுவில் நடக்கின்ற போராட்டம்தான் வாழ்க்கை. பெங்களுரு ஆதீனம் வந்தால் சிவன் மாதிரித்தான் தெரிகிறது.. திரும்ப வீட்டிற்கு சென்றுவிட்டால் இல்லையில்லை ஜீவன்தான் என்றுத் தோன்றுகிறது. என்ன செய்வது? வெகுநாட்கள் நீங்கள் ஜீவன் என்கிற மாயையில் வாழ்ந்ததனால், உங்கள் குருநாதர் சொல்வது தத்துவமாக இருக்கிறதே தவிறட வாழ்க்கையும், மனமும் மறுக்கின்றது. ஒருவேலை அவர் சொல்வது அவரு்ககு ஓகே. நமக்கெல்லாம் எப்படிப்பா.. காலையில் எழுந்துநான் வேலைக்குச் சென்றாக வேண்டும். என்னென்னவோ வேலை இருக்கிறது, இதற்கெல்லாம் நடுவில், நம்மை சிவம் என்று சொல்கிறாரே.. சரி கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. ஆழ்ந்து தெரிந்துோள்ளுஙகள்.. உங்களைத் செய்து வைத்தவன் உங்களைப்பற்றிக் கொடுக்கின்ற சத்தியமான அறிமுகம் நீங்கள் சிவம். உங்களைச் செய்துவைத்தவனுக்கு, ஏன் செய்தான், எப்படி செய்தான் என்ற இரகசியம் புரியுமேத் தவிற, அரைகுறையாய் நீங்கள் இயக்கும் இயந்திரத்தைப் பற்றி உங்களுக்கு முழுமையாய்த் தெரிந்துவிடுவதற்கு வாய்ப்பே இல்லை. செய்தவனுக்கேத் தெரியும் இயந்திரத்தின் செயல்பாடுகளும், சிறப்பும். வருத்தி அரைகுறையாய் உய்தவனுக்கு கருத்தினை முழுமையாய் புரியாது. உங்களை உருத்திவந்து ஊட்டும் ஊழ்வினைக்கும், உங்கள் சத்திய உண்மை நித்யம் உங்களுக்குள் மலர்ந்திட ஊழ்வினையும் அனுமதிக்காது. ஆழ்ந்து கேளுங்கள்.. நீங்கள் ஜீவன் என்கிற நினைப்பிலேயே வாழ்க்கையை கழித்தீர்களானால் உங்கள் வாக் ஏனம் ஞானேந்திரியம் பலகீனத்திற்குள்ளாகி பழுதுபட்டுப் போய்விடுகின்றது. சிவம் என்கிற தௌிவோடு வாழத்துவங்கினீர்களேயானால், இந்த ஞானேந்திரியம் தூய்மை அடைந்து, முழுமை அடைந்து மலர்ந்து வாக் சக்தியாக வௌிப்படும். இந்த நுட்பத்தை ஆழ்ந்து கேளுங்கள்.. பிறந்ததிலிருந்து இதுவரை எப்பொழுதெல்லாம் ஒரு வார்த்தையைக் கொடுத்து நிறைவேற்றவில்லையோ, நிறைவேற்ற முடியாது என்று தெரிந்தும் வார்த்தையைக் கொடுத்தீர்களோ அதையெல்லாம் பட்டியலிடுங்கள். காலபைரவன் முன்பு அமர்ந்து, இதையெல்லாம் சமர்ப்பித்து நிறைவாக்கி, பெருமானே இனி ஒருமுறை நான் ஜீவன் எனும் அசக்தி நிலையிலிருந்து வார்த்தையைக் கொடுப்பதில்லை, நிறைவேற்ற முடியாது எனும் வார்த்தைகளைக் கொடுப்பதில்லை. கொடுத்த வார்த்தையை நிறைவேற்றாமல் விடுவதுமில்லை என்கிற உறுதியான சத்ய சங்கல்பம் எடுங்கள். நான் சிவம் எனும் சக்தி நிலையிலிருந்தே வார்த்தைகளைக் கொடுப்பேன், கொடுத்த வார்த்தைகளுக்கு முழுமையாய் பொறுப்பெடுப்பேன். முழுமையாக்க முடியும் என்கிற வார்த்தைகளை மட்டுமே கொடுப்பேன் என்கிற நிறைநிலைக்கு வாருங்கள். 21 மணி நேரத்திற்குள் உங்களுக்குள் வார்த்தைகளை நிஜமாக்கும் வாக் சக்தி மலரும். இந்த வார்த்தைகளுக்கு நான் பொறுப்பு. இது ஆகமத்தில் சதாசவின் அளித்த சாஸ்திரப்பிரமாணம் மட்டும் அல்ல, நானே இதை வாழ்ந்து அனுபவித்திருக்கின்ற ஆத்மப் பிரமாணம். இந்த வார்த்தைகளுக்கு நான் பொறுப்பு. வாழ்க்கையின் உயர்ந்த ரசனைக்கு வாருங்கள். எப்பொழுது நீங்கள் கொடுத்த வார்த்தையை நீங்கள் நிறைவேற்றவில்லையோ, நிறைவேற்றத் தெரியாது என்று தெரிந்தும் வார்த்தையைக் கொடுக்கின்றீர்களோ, அப்பொழுது சிறிது நாட்களில் உங்களுக்கே உங்கள் மீது மரியாதை இல்லாமல் போய்விடும். ஏனெனில் நீங்கள் சொல்வதைதான் நீங்களே நம்புகின்றீர்களா என்று தெரியாமல் பேச ஆரம்பித்துவிடுவீர்கள். உயர்தினை உடலில் ஊற்றிருந்தாலம், அகம் அக்ரினை நிலையில் இருப்பதனால் அதுகளை அது என்கிற அக்ரினை வார்த்தைகளால் சொல்கின்றேன். கொடுத்த வார்த்தையை நிறைவேற்றவில்லை என்றால் உங்கள் மீது உங்களுக்கே மரியாதை போய்விடும். உங்களை நீங்களே மதிக்கவில்லை என்றால் யார் மதிப்பார்கள்? குரூரமான மன அமைப்பினாலேயே எவ்வளவுநாள் உங்களுடைய மரியாதையைத் தக்க வைத்துவிட முடியும் என்று கனவு காண்கின்றீர்கள். நாம் எல்லோருமே நினைக்கின்றோம், நம்முடைய தந்திர யுத்திகளாலேயே வாழ்க்கையில் மேலே சென்றுவிடலாம் என்று. சத்தியமாக முடியாது. எப்பொழுதெல்லாம் சிவம் என்கிற தௌிவோடு வாக்கை உபயோகிக்கின்றீர்களோ, அப்பொழுதெல்லாம் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள், நிறைவேற்ற முடித்த வாக்கை மட்டும் கொடுப்பீர்கள். இதனால் வாக் சக்தி மலரும். அதுவே உயர்வை அளிக்கும். அதேமாதிரி ஏமாற்றுதல், திருடுதல், கொள்ளையடித்தல் அதிலேயே ஒரு பெரிய கும்பல் வாழ்கிறது. இதெல்லாம் எவ்வளவுநாள் வரும் என்று நினைக்கின்றீர்கள். இது எல்லாவற்றையும் செய்தால்கூட ஒரு நடுத்தர வர்க்கமாகத்தான் வாழ்ந்து சாக வேண்டியிருக்கும். உங்கள் மீது உங்களுக்கு மரியாதை இருக்காது. நடுத்தர வர்க்கமாக, நாலாந்தர மனிதர்களாக நாளுக்கு நாள் அழிய வேண்டியிருக்கும். அத வாழ்க்கையை உச்ச நிலைக்க கொண்டு செல்லாது, உங்கள் மீது உங்களுக்கு நம்பிக்கையை தராது. எப்பொழுது சிவம் எனும் உணர்விலிருந்து உங்கள் வாக்கு எனும் ஞானேந்திரியத்தை இயக்கத் துவங்குகிறீர்களோ, கொடுத்த வாக்கை நிறைவேற்றுவது என்கிற தௌிவான பொறுப்பை எடுத்தபிறகே வாக்கை கொடுப்பது, வார்த்தையைக் கொடுத்தபின் அதற்கான பொறுப்பை எடுப்பது போன்ற தௌிவிற்கு வருகின்றீர்களோ அப்பொழுதே உங்கள் வாக் சக்தி மலரும். அடுத்தடுத்து, மனம் என்கிற ஞானேந்திரியம் எப்படி மலர்வது? உணர்வு என்கிற ஞானேந்திரியம் எப்படி மலர்வது? உயிர் என்கிற ஞானப்பொருள் எப்படி மலர்வது? போன்ற சத்தியங்களை தொடர்ந்து சத்சங்கங்களில் காண்போம். இந்த உண்மைகளை வெறும் அறிவுறையாக அடைய நினைப்பவர்கள் வெறும் சத்சங்கத்தைப் பாருங்கள். அனுபூதியாக வாழ நினைப்பவர்கள் நித்யா தியான யோக முகாமிற்கு வாருங்கள். இந்த ஞான சத்தியங்களை வெறும் சுட்டறிவாய் மட்டும் தெரிந்துகொள்ளாமல், பட்டறிவாய் மாற்றிக்கொள்வதற்கான அருமையான தியான வகுப்பு. வாருங்கள் சதாசிவத் தன்மையை வாழ்ந்திடுங்கள். சைவம் வாழ்ந்திட.. ஆன்மீக சத்தியங்களை வாழ்ந்திட.. சைவம் நீங்கள் வாழ, உங்கள் மூலமாக சைவம் வாழ, தர்மம் உங்களை காக்க, உங்கள் மூலமாக தர்மத்தைக் காக்க வாழ்க்கை மலர்ந்திட வாருங்கள் நித்ய தியான யோகத்திற்கு. நீங்கள் எல்லோரும் நித்யானந்தத்தில் நிறைந்து, நித்யானந்தத்தில் மலர்ந்து, நித்யானந்தத்தில் கரைந்து நித்யானந்தமாகிட ஆசீர்வதிக்கின்றேன். ஆனந்தமாக இருங்கள்.

Photos From The Day:


Puja

Nithyananda Puja - Devotion to the Divine Nithyananda Puja - Devotion to the Divine Nithyananda Puja - Devotion to the Divine Nithyananda Puja - Devotion to the Divine Nithyananda Puja - Devotion to the Divine Nithyananda Puja - Devotion to the Divine Nithyananda Puja - Devotion to the Divine

Satsang

Nithyananda Satsang - LSP Session 1 Nithyananda Satsang - LSP Session 1 Nithyananda Satsang - LSP Session 1 Nithyananda Satsang - LSP Session 1 Nithyananda Satsang - LSP Session 1 Nithyananda Satsang - LSP Session 1 Nithyananda Satsang - LSP Session 1 Nithyananda Satsang - LSP Session 1 Nithyananda Satsang - LSP Session 1 Nithyananda Satsang - LSP Session 1 Nithyananda Satsang - LSP Session 1 Nithyananda Satsang - LSP Session 1 Nithyananda Satsang - LSP Session 1

Darshan

Kalpataru Darshan Kalpataru Darshan Kalpataru Darshan Kalpataru Darshan Kalpataru Darshan Kalpataru Darshan Kalpataru Darshan

Satsang

Kalpataru Darshan Aadi Shaivam - Tamil Evening Satsang Aadi Shaivam - Tamil Evening Satsang Aadi Shaivam - Tamil Evening Satsang Aadi Shaivam - Tamil Evening Satsang Aadi Shaivam - Tamil Evening Satsang Aadi Shaivam - Tamil Evening Satsang Aadi Shaivam - Tamil Evening Satsang Aadi Shaivam - Tamil Evening Satsang Aadi Shaivam - Tamil Evening Satsang Aadi Shaivam - Tamil Evening Satsang

Sakshi Pramana:

Sharing from Nithyananda yoga