NaN undefined NaN SPH Live Darshan

From Nithyanandapedia
Revision as of 03:53, 14 February 2026 by Testkailasa (talk | contribs) (Created new satsang page)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to navigation Jump to search

On this day, THE SUPREME PONTIFF OF HINDUISM (SPH), BHAGAVAN SRI NITHYANANDA PARAMASHIVAM—the ultimate manifestation, Paramavatara of Paramashiva, the ultimate superconsciousness—gave a Live Darshan and delivered a Presidential Address on the auspicious occasion of the third day of the Kailasa Nithyananda Jayanthi Mahotsavam and the New Year, attended by devotees, disciples, citizens, and e-citizens of the United States of KAILASA (USK). THE SPH extended divine New Year blessings in over twenty languages and revealed the profound spiritual and scientific mechanisms of the Reticular Activating System (RAS), explaining how the mind filters reality based on pre-existing beliefs and "bad logic." THE SPH further elaborated on the "True Self," guiding seekers to transcend the "opinionated construction" of life and the limiting concepts of ownership to manifest the sovereign freedom, infinite knowledge, and bliss of Paramashiva.

Title

DAY_3 KTKV-Paramaadvaitam_Tamil_FINAL UNICODE

Link to Video

Couldn't parse video from https://youtu.be/Zo293DiBooc?si=0WmDGzV3dSv4-2lV

Transcript

ஓம் நித்யானந்தேஶ்வர பரமஶிவ ஸமாரம்பாம் நித்யானந்தேஶ்வரி பரம ஶக்தி மத்யமாம் அஸ்மதாச்சார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம்

உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன்.

உலகம் முழுவதிலும் இணையத்தாலும், இதயத்தாலும் இணைந்திருக்கும் அன்பர்கள், பக்தர்கள், சீடர்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன்.

இன்று கைலாஸ நித்யானந்த ஜெயந்தி மஹோத்ஸவம், நித்யானந்த உற்சவம், ப்ரஹ்மோற்ஸவத்தின் பூர்வாங்கப் பூஜைகளின் மூன்றாவது நாள். விநாயகரை வழிபட்டு த்வஜாரோஹநத்திற்குள் நுழையப் போகின்றோம்.

இந்த நன்னாளிலே உலகம் முழுவதிலும் இருக்கும் கைலாஸங்கள் அனைத்திலும், இந்த உத்ஸவத்தில் கலந்துகொள்வதற்காக வந்திருக்கும் அன்பர்கள், சீடர்கள், பக்தர்கள் மற்றும் பரமஶிவ சேனா 15ஆவது season - நிகழ்ச்சி, 15ஆவது வகுப்பில் கலந்துகொள்வதற்காக வந்திருக்கின்ற கைலாஸா திருவண்ணாமலையிலும், கைலாஸா லாஸ் ஏஞ்சலிஸிலும் வந்திருக்கும் participants, அன்பர்கள், பக்தர்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன்.

இன்று உலகம் முழுக்க பல நாடுகளிலே புத்தாண்டு பிறந்திருக்கின்றது. கடந்த 24 மணி நேரத்தில் பல நாடுகளிலும் புத்தாண்டு பிறந்திருக்கின்றது. ஆங்கிலப் புத்தாண்டு, இன்னும் சில நாடுகளில் பிறந்து கொண்டே இருக்கின்றது.

உலகம் முழுவதிலும் இருக்கும் எல்லோருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

பரமஶிவப் பரம்பொருளின் வாழும் வெளிப்பாடாய் இருந்து, பரமஶிவப் பரம்பொருளின் வாழும் பரம வெளிப்பாடாக இருந்து, உங்கள் அனைவருக்கும், எல்லோருக்கும் எல்லா நன்மையும் உண்டாக ஆசீர்வதிக்கின்றோம். மீ அந்தரிகி மங்களகரமைன நூதன ஸம்வத்ஸர சுபகாங்க்ஷலு. (தெலுங்கு) நிம்மெல்லரிகூ மங்களகரவாத ஹொச வர்ஷத சுபாஷயகளு. (கன்னடம்) மலையாளத்து பக்தர்கள் அனைவருக்கும் எல்லவர்க்கும் மங்களகரமாய புதுவத்ஸராம்ஷகளு. (மலையாளம்) ஆப் சபிகோ மங்களமை நவ் வர்ஷ் கி ஹார்திக் சுபகாம்னாயேம். (ஹிந்தி) ஆப் சௌனே மங்கள்மய நூதன் வர்ஷ்னா அபிநந்தன். (குஜராத்தி) துமா சர்வான்னா மங்கள்மை நவீன் வர்ஷாச்ச ஹார்திக் சுபேச்சா. (மராத்தி) ஆப்னாதேர் ஷகலேஷு ஷுபோ நபோ பர்ஷேர் மங்கள காம்னா. (பெங்காலி) லேஸ் தேஸியோ ஆ தோதோஸ் உன் அவுஸ்பிஸியோஸோ ஆன்யோ நுயேவோ. (ஸ்பானிஷ்) ர வூ ஸுவேத் ஆ தூஸ் யுன் ஆனே நுவெல் ப்ரோபீஸ். (பிரெஞ்சு) ஜீ தஜியா ஷின் நியான்ஷியாங். (மாண்டரின்) சர்வேப்ய மங்களமயம் நூதன வர்ஷம் ஆசஷாஸ்மஹே. (ஸம்ஸ்க்ரு'தம்) துஹாத்டே சாரியாம் லயி நவாம் சால் சுப் ஹோவே. (பஞ்சாபி) ஆப்னா ஸமஸ்தங்கு ஏக் சுப நவ வர்ஷர அபிநந்தன. (ஒரியா) ஐன் கேஸெக்னெட்டஸ் நோயஸ் யார் ஃபுர்வோயிஷ் அல்லே. (ஜெர்மன்) வி வெனதிகோ துதிகோன் உன் பொலிசே அன்னோ நோவோவோ. (போர்த்துகீசியம்) தேஸேஜோ ஆ தோதோஸ் உம் ப்ராஸ்பெரோ ஆனா நோவோ. (ஸ்பானிஷ்) ஜெலாயு சேம் ப்ளாகோஸ்லோவென்னோகோ நோவோகோ கோடா. (ரஷ்யன்) மினாசாமா நீ சச்சியோகி ஷினேன் ஓ ஓமுகாயே குதாசாய். (ஜப்பானிய மொழி) யோரோபுன் மோதுகே சாங் செரௌன் செஹேகா தொகில் பிம்னிதா. (கொரியன்) ஜுக் தாய் கா சன் நீன் காத்ஸியுங். (வியட்நாமிய மொழி)

ALL OVER THE WORLD, ALL THOSE WHO ARE CELEBRATING THE NEW YEAR, MY BLESSINGS TO ALL OF YOU. AS THE ULTIMATE MANIFESTATION OF PARAMASHIVA, I BLESS YOU ALL WITH ALL THE AUSPICIOUSNESS AND THIS NEW YEAR -BLESSINGS TO VARIOUS KAILAASA'S AND THE PEOPLE OF VARIOUS KAILAASA'S AND ALL THE 20 DIFFERENT ZONES WHERE DEVOTEES HAVE GATHERED IN KAILAASA. IN ALL THE 20 LANGUAGES I HAVE BLESSED RIGHT NOW.

உலகம் முழுவதிலும் வேறு வேறு கைலாஸங்களில் ஒன்றாக இணைந்திருக்கும் அன்பர்கள் அனைவருக்கும் அவரவர்கள் மொழியில் புத்தாண்டு வாழ்த்து கூறியிருக்கின்றோம்.

நீங்கள் எல்லோரும் ஆனந்தத்தோடு, எல்லா விதமான ஆனந்தத்தோடும், வளத்தோடும், இனிமையோடும் நிறைந்து வாழ்ந்திட, எல்லா நன்மையும் பெற்று வாழ்ந்திட, பூரண நல்லாசிகள்.

இன்றைய ஸத்ஸங்கத்திற்குள் நுழைவோம். பரமஶிவப் பரம்பொருளின் இன்றைய செய்தி, மஹா கைலாஸத்திலிருந்து நேரடியாக...

ஆழ்ந்து கேளுங்கள்: உங்களுடைய நிஜ நீ... அதை நீங்கள் உணர்ந்தால், அதை உணரத் துவங்கினீர்களானால், அதைப் பிடித்துக்கொள்வீர்களானால், அதன்மீது உங்கள் கவனத்தைத் திருப்பி, அதை உணர்வீர்களானால்... இகத்திலும் பரத்திலும் எதை வேண்டுமானாலும் வெளிப்படுத்தி... ஸர்வ ஸ்வதந்ரத்தோடும், ஸர்வ ஆனந்தத்தோடும், ஸர்வ ஜ்ஞாநத்தோடும், ஸர்வ வல்லமைகளோடும் நீங்கள் இருப்பீர்கள், வாழ்வீர்கள்.

இந்த ஸத்யத்தைக் கொஞ்சம் ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள். ஒவ்வொரு புரிதலாக உங்களுக்குக் கொடுக்கின்றேன். ஒவ்வொரு ஸத்யமாக விளக்குகின்றேன். சற்றே ஆழ்ந்து கேட்டு என்னோடு இணைந்திருப்பீர்களானால், இதை முழுமையாக உள்வாங்கிக் கொள்ளலாம். நேற்றைய ஸத்ஸங்கத்தில் இந்த R.A.S பற்றிச் சொன்னேன். அதாவது, இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒரு ஸத்யம். நம் புலன்கள் முன்பு விரிந்து கிடக்கின்ற இந்த உலகத்திலிருந்து, 11 million bits of information நம்முடைய மனதைச் சென்றடைந்தால், மனம் அதில் வெறும் ஐம்பதே ஐம்பது information -னை மட்டும் தான் எடுத்து, reality-யை stitch செய்து, நமக்குக் காட்டுகின்றது. Reticular activating system என்று அதற்குப் பெயர்.

அந்த ஐம்பது information -னும், ஏற்கனவே நீங்கள் வைத்திருக்கின்ற நம்பிக்கையைச் சார்ந்து, நீங்கள் இந்த 11 மில்லியனிலிருந்து choose பண்ணுகின்றீர்கள். அப்படியென்றால், ஏற்கனவே நீங்கள் judgment -ஐ முடிவு செய்துவிட்டு, அதற்குத் தேவையான arguments-ஐ select செய்வது போன்றது.

உங்கள் life -ஏ ஐயா, ஒரு opinionated construction. Reality -க்கும் இதற்கும் சம்பந்தமே இல்லாத, 'ஏன் இந்த முடிவுகளை எடுக்கின்றீர்கள்?' என்று உங்களுக்குமே தெரியாத, தெளிவில்லாத, ஏற்கனவே உங்களுக்குள் இருக்கின்ற குருட்டுத்தனமான நம்பிக்கைகளைச் சார்ந்தே நீங்கள் வாழ்க்கையைப் பார்க்கின்றீர்கள், முடிவுகளை எடுக்கின்றீர்கள். இப்படித்தான் normal -ஆக இயங்கிக்கொண்டு இருக்கின்றீர்கள்.

அதனால், உங்களைப் பற்றி மிகத் தாழ்ந்த கருத்துக்களை வைத்திருக்கிறீர்கள். அந்தத் தாழ்ந்த கருத்தை, ரொம்ப bad logic-ஐ மையமாக வைத்து உருவாக்கி வைத்திருக்கின்றீர்கள். அந்த தாழ்ந்த கருத்தை எப்படி உருவாக்கினீர்கள் என்று அதை கொஞ்சம் ஆழ்ந்து பார்த்தாலும், அதில் ஒரு சரியான logic எல்லாம் இருக்காது. சரியான முறையான ஸாங்க்யமோ, ந்யாயமோ இருக்காது.

அந்த logic-க்கே bad logic. அந்த bad logic center பண்ண beliefs. அந்த beliefs-ஐ center பண்ணி திரும்பவும் நாம் life-ஐ perceive பண்ணுவது. இந்த life -ஐ perceive பண்ணுவதை வைத்து, நாம் மீண்டும் accumulate பண்ணுகின்ற experiences -ம் அதே same discontentment.. அதாவது ஒரு vicious circle மாதிரி ஐயா.

இந்த vicious circle - இல் மாட்டிக்கொண்டு, நிஜத்தை அனுபவிக்கவும், ஆனந்திக்கவும், appreciate செய்யவும், complete- ஆக மறந்துவிடுகின்றோம் ஐயா.

என்னால் ஆயிரக்கணக்கான உதாரணங்களைச் சொல்ல முடியும். ஒரு சில உதாரணங்கள் சொல்கின்றேன். கொஞ்சம் உங்களோடு அமர்ந்து பேசினேன் என்றால், நான் சொல்கின்ற இந்த ஒவ்வொரு கருத்தையும், உங்களுடைய வாழ்க்கையோடு பொருத்தி என்னால் நிரூபிக்க முடியும்.

இந்த ஒரு சில உதாரணங்கள் சொல்கின்றேன், கேளுங்கள். உங்கள் முன்பாக பறந்து விரிந்த அருமையான garden அல்லது beach, அழகான மலைத் தொடர் - இது எல்லாம் உங்கள் முன்னால் இருந்தால்கூட, அது legal-லாக உங்களுக்குச் சொந்தமாக இல்லை என்றால் அதை அனுபவிக்காமல் தள்ளிப்போட்டுக்கொண்டே (postpone) இருப்பீர்கள்.

'இந்த beach ல் ஒரு அருமையான beach house இருந்தால், இந்த இடத்தை எப்படி enjoy பண்ணலாம் தெரியுமா? கொடைக்கானலில் என்ன மலைப்பா, என்ன அழகுப்பா! அங்கு ஒரே ஒரு guest house இருந்தால், நாம் எப்படி இந்த இடத்தை enjoy பண்ணலாம் தெரியுமா? வாவ்! எவ்வளோ பெரிய garden பா! இங்கு பக்கத்தில் ஒரு apartment நமக்கு இருந்ததென்றால், அப்படியே அதை daily பார்த்து enjoy பண்ணிட்டு இருக்கலாம்' என்று நினைப்பீர்கள்.

நன்றாகப் பாருங்கள்... ஒவ்வொரு சூழ்நிலையிலுமே, ஏதாவது ஒரு விதத்தில் வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்காமல் தள்ளிப்போடுவது மற்றும் வாழ்க்கையின் எந்த சூழ்நிலையையுமே ஒரு குறையுடனேயே பார்ப்பது.

இதில் ஒரு கொடுமை என்னவென்றால், ownership -ஏ utility -க்காகத்தான். இப்பொழுது சமூகத்தில் ஒரு law and order இருக்க வேண்டும், 'இது உன்னுடைய, இது என்னுடையது - நான் அதில் வரமாட்டேன், நீ இதில் வரமாட்டாய்' என்று ஒரு புரிதலுக்காக ஏற்படுத்தப்பட்டது. அது வெளி உலகத்திலே ஒரு traffic rules மாதிரி ஐயா.

Traffic rules என்றால் என்ன? சிகப்பு விளக்கு இருக்கும்போது போகாதே, பச்சை விளக்கு இருக்கும்பொழுது போ. ஏனென்றால், பச்சை விளக்கு இருக்கும்போது நாம் போகலாம், இந்த பாதை clear -ஆக இருக்கிறது. சிகப்பு விளக்கு இருக்கும்போது மற்றவர்கள் போவார்கள். நீ போனால், வண்டி ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்கள் நடக்கும் என்ற இந்த ஒரு சாதாரண traffic rules மாதிரிதான் இந்த எல்லா ownership எல்லாமே. இந்த traffic rules-ஐ சாலையில் கடைபிடிப்பதில் தவறு இல்லை. அப்படித்தான் இருக்கவேண்டும். சாலையில்தான் கடைபிடிக்க வேண்டும்.

ஆனால் வீட்டிற்கு வந்த பிறகும், அந்த traffic rules-ஐயே வைத்துக்கொண்டு, வீட்டில் எங்கேயுமே red light-ஏ போடமாட்டோம், வீட்டில் எல்லா இடத்திலும் green light-ஏ தான் போட வேண்டும், வீட்டில் எங்கேயுமே yellow light use பண்ணமாட்டோம்... வீட்டிற்குள்ளே மட்டும் அதே சிக்னல் இல்லை, ஆனால் மனதிற்குள் அதே மாதிரி வைத்துக்கொண்டு function பண்ண முடியுமா?

Traffic signal traffic rules - roadல் தான். அதை வீட்டிற்குள் எடுத்து வந்து உபயோகிக்க முடியாது. நம் inner world-க்கு உபயோகிக்க முடியாது. அதேமாதிரி தான் இந்த ownership இதெல்லாம் ஐயா. ஆனால் கொடுமை என்னவென்றால், வெளியில் இருக்க வேண்டிய அந்த ownership - ஐ பற்றிய ideas எல்லாவற்றையும் உள்ளே எடுத்துகொண்டு வந்து, நம்முடைய வாழ்க்கையை வாழுகின்ற capacity-யையே low ஆக்கிவிடுகின்றோம்.

உங்கள் மூளையினுடைய filter system…. R.A.S என்பது உங்கள் மூளையினுடைய ஒரு வடிகட்டி அமைப்பு மாதிரி. மனித மூளைக்கு ஒரு வினாடிக்கு சுமார் 1.1 crore, அதாவது 11 million தகவல் bit-கள் வருகின்றன. அதில் வெறும் 40, 50 bits-களை மட்டும் விழிப்புணர்வு - conscious mind க்கு எடுத்துக்கொண்டு, உங்கள் வாழ்க்கையை வடிவமைத்து காட்டுகின்றது. R.A.S - இந்த Reticular activating system - இதை மற்ற அத்தனையையும் filter பண்ணிவிடுகின்றது.

நீங்கள் ஏற்கனவே வைத்திருக்கின்ற நம்பிக்கைகளை வைத்துதான் இந்த filtering செய்கின்ற rules-ஏ உருவாகின்றது. நீங்கள் ஏற்கனவே எதை நம்புகின்றீர்களோ, அதற்கேற்ற தகவல்களை மட்டும்தான் உங்கள் விழிப்புணர்விற்கு, உங்களுடைய conscious mind - க்கே இந்த R.A.S அனுப்புகின்றது. உங்கள் செல்போன் மாதிரியேதான் இதன் algorithm. செல்போன் மாதிரியேதான்... அதாவது நீங்கள் எதைப் பார்க்கின்றீர்கள், எதை like பண்ணுகின்றீர்களோ, அது சம்பந்தமானது மட்டும் உங்கள் screen -இல் appear ஆகின்றது பாருங்கள், அதேமாதிரி தான். செல்போனுடைய algorithm-மும், அந்த ecosystem-முமே R.A.S-னுடைய replication தான். வேறு ஒன்றும் கிடையாது.

R.A.S உள்ளே internal organஆக உள்ளே இருக்கின்றது. செல்போன் external organ-னாக வெளியில் இருக்கின்றது. இப்பொழுது சில பேருக்கு, 'செல்போன் external organ மாதிரி' என்று சொன்னால் கோபம் வந்துவிடும். செல்போனை almost தன்னுடைய internal organ மாதிரிதான் மாற்றிக்கொண்டார்கள்.

காலையில் எழுந்ததும் கண்ணைத் திறப்பதே செல்போனில்தான். கண்ணை மூடும்போது கடைசியாகப் பார்ப்பதும் செல்போன்தான். கனவில்கூட scroll செய்து கொண்டிருக்கின்றோம். கனவையே scroll செய்து கொண்டிருக்கின்றோம். கனவு பிடிக்கவில்லை என்றால், கனவை மாற்றுவதற்குப் பதிலாக, கனவை scroll செய்து கொண்டிருக்கின்றோம்.

ஆழ்ந்து கேளுங்கள்…. வைஶ்யத்துவமும், இந்த ownership idea-வான business, chronic capitalist -ஆல், வாழ்க்கையில் அளவிற்கு மீறி enforce பண்ணப்படும்பொழுது, இந்த 'ownership' என்கின்ற இந்த பைத்தியக்காரத்தனத்தில் மாட்டி, life -ஐயே இழந்துவிடுகின்றோம்.

இருக்கின்ற எதையுமே அனுபவிப்பதில்லை. இருக்கின்றதை உற்சாகத்தோடு அனுபவிப்பதற்குப் பொங்கினாலும், இந்த ownership குறுகில் வந்து, 'ஶிவபூஜையில் கரடி புகுந்த மாதிரி' என்று சொல்வார்கள் பாருங்கள், அதுபோன்று நீங்கள் என்ன செய்தாலும், இந்த ownership குறுக்குசால் ஓட்டிக்கொண்டே இருப்பான்.

நீங்கள் எவ்வளவு happy -யாக இருந்தாலும், அந்த mood-ஐ கெடுப்பதற்கென்றே யாராவது ஒரு relative உங்கள் குடும்பத்தில், உங்கள் சொந்த பந்தத்தில் இருப்பார்கள் பாருங்கள். அந்த மாதிரிதான் இந்த ownership idea..

இந்த chronic capitalist ஒரு பக்கம்... நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: இந்த ஒரு வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்ற கருத்திற்கெல்லாம் நான் against-ஏ கிடையாது. ஆனால், பல்வேறு விதத்தில் இந்த chronic capitalist, உங்கள் வாழ்க்கையையே விழுங்குகிறார்கள். அது அவர்களையுமே அறியாமல் நடக்கின்றது.

ஒரு மனிதன் ஒரு நாளைக்கு 70 மணி நேரமல்ல, வாழ்நாள் முழுக்கவுமே வேலை செய்ய வேண்டும். அதுதான் என்னுடைய principle. ஆனால் conscious sovereignty-யோடு, தன்னை வளமைப்படுத்திக் கொள்ள வேலை செய்ய வேண்டும். தன்னை வளமைப்படுத்திக்கொண்டு, தான் விரும்புகின்ற charity -யை, சேவைகளை, நன்கொடைகளைக் கொடுப்பதற்கு வேலை செய்ய வேண்டும்.

ஒரு பக்கம் இந்த chronic capitalist, அவர்கள் intervene செய்வது. இன்னொரு பக்கம் nationalist radicals, nationalism-த்தை politicians உபயோகித்து, mind -ஐ corrupt செய்வது.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: நான் nationalism-த்திற்கு against -ஆன ஆள் இல்லை. Nationalism, நாட்டை நல்லபடியாக நடத்துவதற்கும், நாட்டை செழிக்கச் செய்வதற்குமான ஒரு ecosystem. Nation என்பது ஒரு ecosystem. It is a political brand. Civilization-னுடைய political brand. அந்த political brand-ஐ flourish பண்ணவேண்டும் என்பதில் மாற்று கருத்தே இல்லை. அந்த political brand -ஐ நாம் எல்லோரும் nourish பண்ணவேண்டும், nurture பண்ணவேண்டும், அதை flourish பண்ண வைக்கவேண்டும் என்பதில் மாற்று கருத்தே இல்லை.

ஆனால், நம்முடைய conscious sovereignty-ல், உங்களுடைய conscious existence -ல், nationalist radicals, extreme nationalist are intervening.

பெரிய கொடுமை என்ன தெரியுமா? ப்ரபஞ்சத்தினுடைய இயற்கையான இருப்பின் விதிகளை, 'நாட்டினுடைய சட்டம் replace செய்யும்' என்று நாட்டினுடைய சட்டதிற்கு, ப்ரபஞ்சத்தின் தர்மத்திற்குரிய புனிதத்தன்மையைக் கொடுப்பதுதான் nationalistic radicals செய்கின்ற, மனித இனத்திற்கு எதிரான மிகப்பெரிய crime! மனித இனத்திற்கு எதிரான துரோகம்! மனித இனத்திற்கு எதிரான சதி!

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: நான் சொல்வது ரொம்ப ஆழமான, ரொம்ப நுட்பமான கருத்து. ப்ரபஞ்சத்தின் விதிகள்தான், நம்முடைய வாழ்க்கையை நிகழ்த்துபவையாக இருக்க வேண்டும். ஒரு நாட்டினுடைய விதிகள், இந்த ப்ரபஞ்சத்தின் விதிகளோடு இணைந்து, ப்ரபஞ்சத்தின் விதிகளோடு சேர்ந்து, ப்ரபஞ்சத்தின் விதிகளோடு மனிதர்கள் வாழ்வதற்கு உறுதுணையாகவும், வளமைப்படுத்துவதாகவும் இருக்க வேண்டும்.

ஆனால் பெருங்கொடுமை, இந்த nationalist radicals, extreme nationalist என்ன செய்கின்றார்கள் என்றால், அவரவர்கள் நாட்டினுடைய constitution-னிற்கும் மற்றும் சட்டத்திற்குமே, ப்ரபஞ்ச விதிகளுக்குரிய, ப்ரபஞ்சத்தின் தர்மத்திற்கு உரிய புனிதத்தன்மையைக் கொடுக்க முயற்சிக்கின்றார்கள். ப்ரபஞ்சத்தினுடைய தர்மத்தின் புனிதத்தன்மைக்கு மாற்றாகவோ, ஈடாகவோ, replacement ஆகவோ, ஒருபோதும் எந்த நாட்டினுடைய constitution -னோ, law-வோ வரவே முடியாது.

ப்ரபஞ்சத்தின் இயல்பான தர்மத்தை வலுப்படுத்தவும், வளமை செய்யவும், பலமாக்கவும் இயற்றப்படும் constitution-னும், விதிகளும் மட்டும்தான் நிலைத்து நிற்கும். மனிதனுக்கு நன்மை செய்யும்.

ஆனால் ஒரு கொடுமை, chronic capitalist -ம் சரி, nationalist radicals-ம் சரி, மனிதனுடைய conscious sovereignty-யைப் பற்றிக் கவலையேபடுவதில்லை. Chronic capitalist-க்கு நீங்கள் ஒரு worker அல்லது client. அவர்கள் organisation-க்கு கீழ் வேலை செய்தால், நீங்கள் worker. இல்லையென்றால், அவர்களுடைய product-ஐ வாங்கிக்கொள்கின்ற customer அல்லது அவர்களுடைய service-ஐ வாங்கிக்கொள்கின்ற client. அவ்வளவுதான். உங்களை ஒரு உயிராகப் பார்ப்பதில்லை.

அதே மாதிரிதான் extreme nationalist , nationalist radicals - அவர்கள் அந்த அதிகாரத்தில் இருப்பதற்கு, நீங்கள் ஓட்டு போடுகின்ற ஒரு machine. அதற்காக எப்படி வேண்டுமானாலும் உங்களுடைய inner space-ஐ invade செய்யலாம் என்று இருவருமே தயாராகும்பொழுது… ஒரு பக்கம் chronic capitalist-ம், இன்னொரு பக்கம் nationalist radicals-ம் உங்களுடைய inner space-ஐ invade பண்ணும்பொழுது, உங்களுடைய R.A.S முழுவதுமாக சிதைந்து சின்னாபின்னமாகின்றது.

ஏற்கனவே, you are waiting to get hurt.. இப்பொழுது hurt பண்ணுவதற்கு இவர்கள் இருவரும் தயாராக இருந்து, hurt பண்ணிக்கொண்டிருக்கின்றார்கள். அப்பொழுது என்ன ஆகிறது? மொத்தமாக வாழ்க்கை சின்னாபின்னமாக சிதைந்து போகின்றது.

WHEN YOU AGE, YOU FEEL THE NEED FOR OWNERSHIP. WHEN YOU MATURE, YOU UNDERSTAND THE STUPIDITY OF THE OWNERSHIP.

WHEN YOU AGE, YOU FEEL THE NEED FOR OWNERSHIP. WHEN YOU MATURE, YOU UNDERSTAND THE STUPIDITY OF THE OWNERSHIP.

நீங்கள் முதுமை அடையும்பொழுது, ownership-னுடைய தேவையை உணர்கின்றீர்கள். நீங்கள் முதிர்ச்சி அடையும்பொழுது, ownership-னுடைய முட்டாள்தனத்தை உணர்கின்றீர்கள்.

மீண்டும் கேளுங்கள். நீங்கள் முதுமை அடையும்பொழுது, ownership-னுடைய தேவையை உணர்கின்றீர்கள். நீங்கள் முதிர்ச்சி அடையும்பொழுது, ownership-னுடைய முட்டாள்தனத்தை உணர்கின்றீர்கள்.

இது எல்லாமே... வைஶ்யத்துவம் தவறு அல்ல. க்ஷத்ரியத்துவம் தவறு அல்ல. அவைகள் உங்களுடைய conscious sovereignty-ல் intervene செய்து, உங்களுடைய ஜீவன் முக்த வாழ்க்கையைப் பறிப்பதுதான் தவறு என்று சொல்கின்றேன்.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: மேலை நாடுகள் மாதிரி consumeristic -க்காகவும், போலி ஸ்வதந்த்ரத்தை நோக்கியும் முழு வேகமாக ஓடிக்கொண்டிருக்கின்றீர்கள். ஆனால் உங்களுக்கு தெரியவில்லை, அமெரிக்காவில் incarceration percentage... அமெரிக்காவில் அந்த நாட்டினுடைய குடிமக்கள் சிறையில் வைக்கப்பட்டிருக்கிற percentage… நீங்கள் வேண்டுமானால் கூகுளில் சென்று தேடிப் பாருங்கள். அமெரிக்காவில் incarceration percentage - ஐரோப்பா, ஆஸ்த்ரேலியா போன்ற எல்லா மேலை நாடுகளின் incarceration percentage-ஐ பாருங்கள்.

அதாவது நீங்கள் எந்தக் கலாச்சாரத்தை நோக்கி வேக வேகமாக, கண்மூடித்தனமாக வெறிகொண்டு சென்று கொண்டிருக்கிறீர்களோ, எந்தக் கலாச்சாரத்தைப் பார்த்து, உங்களுடைய நாட்டின் விதிகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்களோ, அந்த நாடுகளின் incarceration percentage-ஐ பாருங்கள். பல ஆயிரம் ஆண்டுகளாக தன்னிலை தாழாது, எத்துனை போர்கள் உள்ளும் வெளியிலும் வந்தாலும், எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு நிற்கும் hindu civilization-னுடைய social spiritual capital...

இந்த வார்த்தையை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: Hindu civilization-னுடைய Social Spiritual capital-லை ஆணிவேர் அறுந்து போகுமாறு அழித்து ஒழிக்கவேண்டும் என்கின்ற முழு வேகத்தோடு, இந்த நுனிக்கிளையில் அமர்ந்துகொண்டு அடிக்கிளையை வெட்டுகின்ற அந்த அளவிற்கான முட்டாள்தனம் கூட அல்ல. அதையும் மீறி, 'மரத்தையே அழிக்க வேண்டும் என்று, தன்னுடைய வீடாக இருக்கின்ற, வாழ்வாதாரமாக இருக்கின்ற மரத்தையே அழிக்க வேண்டும்' என்கின்ற வேகத்தோடு செயல்படுகின்ற அனைவரும், அந்த வேகத்தில் வெறிகொண்டு திரிகின்ற அனைவரும் புரிந்துகொள்ளுங்கள்… அமெரிக்காவைப் போன்ற பெருஞ்சிறைகள் கொண்ட நாடாக உங்கள் நாட்டை மாற்றுவதற்குத்தான், நீங்கள் செய்துகொண்டு, உழைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அதைத்தான் செய்து கொண்டிருக்கின்றீர்கள்.

இப்பொழுது நான் உங்களுக்குக் காண்பிக்கின்ற statistics, இது verified statistics... இது ஒன்றும் கற்பனை கிடையாது. Hindus have the lowest crime rate and smallest prison population in the whole world. உலகத்தில் மொத்த நாடுகளையும் எடுத்து.. நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள் - இது வந்து percentage படி... அதாவது, ஹிந்துக்களுடைய percentage என்ன? எவ்வளவு ஹிந்துக்கள் ஜெயிலில் இருக்கின்றார்கள்? Christian population என்ன? எவ்வளவு Christians ஜெயிலில் இருக்கின்றார்கள்? இந்த No religion -அந்த group எவ்வளவு பேர் இருக்கின்றார்கள்? அதில் எவ்வளவு பேர் ஜெயிலில் இருக்கின்றார்கள்? Muslims population என்ன? அதில் எவ்வளவு பேர் ஜெயிலில் இருக்கின்றார்கள்? - இந்த ஜெயிலில் இருப்பவர்களுடைய percentage எடுத்துதான் காட்டியிருக்கின்றோம்.

2019 statistics படி, இது அமெரிக்காவினுடைய statistics. நன்றாக ஆழ்ந்து கேளுங்கள், ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள்... இரண்டு information நான் இப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப் போகின்றேன். அமெரிக்காவில் இருக்கின்ற prisoners -ல் ... Christians எவ்வளவு, No religion எவ்வளவு, Muslims எவ்வளவு, Unknown எவ்வளவு, Hindus எவ்வளவு? இதைச் சொல்கின்றேன்.

அடுத்தது: அமெரிக்க நாட்டின் குடிமக்களில் எவ்வளவு பேர் ஜெயிலில் இருக்கின்றார்கள், இந்தியாவில், இந்தியாவினுடைய மொத்த மக்கள்தொகையில், எவ்வளவு பேர் ஜெயிலில் இருக்கின்றார்கள். இதைப் பார்த்தால்கூட, உங்களுக்குத் தெளிவாகப் புரியும், அமெரிக்கா ஒரு broken society. Western civilization ஒரு failed broken civilization.

ஆனால் நீங்களும், அவர்களுடைய rules, principles, likes, dislikes, desires, lifestyle flow-வை நோக்கி வேகமாக ஓடுவதனால், உங்கள் நாட்டையும் சிறைகள் நிறைந்த நாடாக மாற்றிக் கொண்டிருக்கிறீர்கள்.

பெரும் சிறைகள், உருவாக்க வேண்டிய கட்டாயத்தையும், பெரும் சிறைகள் நிறைக்க வேண்டிய வாழ்க்கைமுறையையும் நோக்கித்தான் நீங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றீர்கள். நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், இப்பொழுது நான் உங்களுக்குக் காட்டுவது US percentage. ஆழ்ந்து கேளுங்கள்: நான் இப்பொழுது இரண்டு information கொடுக்கிறேன். அதாவது அமெரிக்காவில் இருக்கின்ற prisoners-லும் hindus தான் lowest - 0.02%. அது இல்லாமல் மொத்த அமெரிக்காவிலும் எவ்வளவு prisoners இருக்கிறார்கள், இந்தியாவில் எவ்வளவு prisoners இருக்கிறார்கள் என்றெல்லாம் பார்த்தோமானால், அந்த western civilization -னுடைய விதிகளை, அவர்களுடைய வாழ்க்கைமுறையை நோக்கி நாம் ஓடுகின்ற வேகத்தில், இன்னும் சில ஆண்டுகளில் அமெரிக்காவைப்போல பெருஞ்சிறைகள் நிறைந்த நாடாக, நம்முடைய நாடுகளையும் நாம் மாற்றிக்கொண்டே செல்கின்றோம். அதை நோக்கித்தான் நாம் ஓடுகின்றோம்.

மனிதனை, அவனுடைய ஸ்பாவப்படி ஆனந்தத்திலே இருக்கவிட்டோமானால், அந்த ஆனந்தத்தோடு இருப்பதற்கான வழிமுறைகளை, பாடத்தை, அதை வாழ்க்கைக் கல்வியை அடிப்படைப் பாடமாக வைத்து, அதை encourage செய்கின்ற legal ecosystem, social ecosystem, இது மாதிரி உருவாக்கினோமானால், இப்பொழுது இருப்பதைவிட ஆயிரம் மடங்கு, அவன் தனக்கும் மற்றவர்களுக்கும் productive-வாக மாறிடுவான்.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். ஹிந்துக்களே புரிந்துகொள்ளுங்கள்! இப்பொழுது உங்கள் நாடுகளில் இருக்கின்ற வளமைகூட, hindu civilization-னுடைய social spiritual capital-லை enjoy செய்துகொண்டிருக்கின்றீர்கள்.

Hindu civilization-னுடைய social spiritual capital என்று எதைச் சொல்லவருகின்றேன் என்றால், நம்முடைய hindu civilization நமக்குள் கற்றுக்கொடுத்தக் கருத்துக்கள், அதனால் விளைந்த moral, அதனால் விளைந்த சமூகக் கட்டமைப்பு, நாட்டிற்குப் பெரும் சுமைகள் இல்லாமல் காக்கின்றன.

உதாரணத்திற்கு… முதியவர்களைப் பார்த்துக்கொள்வது, பெற்றோர்களைப் பார்த்துக்கொள்வது. வேக வேகமாக மேலை நாட்டோட சமூகத்தை, அந்த western civilization-ஐ கண்மூடித்தனமாகப் பின்தொடர்வதனால் ஏற்பட்டிருக்கிற கொஞ்சம் முதியோர் இல்லங்களைத் தவிர, இன்னமும் இந்தியாவில் பெரும்பான்மையான ஹிந்துக்கள், பெரும்பான்மையானவர்கள், இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுக்க பெரும்பான்மையான ஹிந்துக்கள், தங்களுடைய முன்னோர்களை, மூத்தவர்களை, முதியவர்களை, பெற்றோர்களை தங்கள் உடனேயே வைத்துப் பார்த்துக்கொள்வதனால், வயதானவர்களைப் பார்த்துக்கொள்ள வேண்டிய சுமை state மீது, government மீது இல்லாமல் போகின்றது.

இன்னமும் தங்கள் குழந்தைகளை, தங்கள் சம்பாத்தியத்தின் மூலம் படிக்க வைக்கின்ற ஒரே civilization, hindu civilization தான். வேறு எந்த civilization -லும் அந்தப் பழக்கம் இல்லை. அது மட்டுமல்ல, நம் civilization- ல் பெரியவர்கள், 'என்னுடைய தலைமுறைக்கு நான் சேர்த்து வச்சுட்டேன்பா' என்று நினைத்துத்தான் அவர்களுடைய முதுமையை வாழ்வார்கள். ஆனால், western civilization-ல், 'என் last cheque bounce ஆகவேண்டும்' என்றுதான் வாழ்வார்கள். அவர்களுடைய வாழ்க்கைமுறையே இப்படித்தான்.

நம்முடைய முன்னோர்கள், நம் பெரியவர்களிடம் பல கோடி சொத்து, வீடு இருக்கும். ஆனால் இன்னமும் two wheeler-ல் சென்றுகொண்டிருப்பார்கள் அல்லது வாடகைக்கு taxi எடுத்துக்கொண்டு செல்வார்கள். சொந்த Car கூட வைத்துக்கொள்ள மாட்டார்கள். இதெல்லாம் நம் civilization-னுடைய social cultural spiritual capital... இந்த மாதிரி பல விஷயங்களை, என்னால் ஆயிரக்கணக்கான விஷயங்களை அடுக்க முடியும். இவைகளை எல்லாம் நாம் வேரறுத்துக் கொண்டிருக்கின்றோம்.

US-ல் US population 347 million. அதில் prison-ல் இருப்பது 1.8 million. 0.52% prison-ல் இருக்கின்றார்கள் - incarcerated. 347 மில்லியனில், 1.8 மில்லியன் என்றால், 0.52% incarcerated... ஜெயிலில் இருக்கின்றார்கள். இந்தியாவில் 1.46 billion population. ஜெயிலில் இருப்பவர்கள் வெறும் 5 லட்சத்து 30 ஆயிரம் பேர். 0.036%. தான். நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: 0.036%. Not even 0.1 %

0.036  % தான்.   

இதற்கு ஒரே காரணம், இந்த மாதிரி low incarceration rate-க்கு ஒரே காரணம் புரிந்துகொள்ளுங்கள்... நம்முடைய hindu civilization நமக்குக் கொடுத்த social spiritual moral cultural capital.

இப்பொழுது வேக வேக வேகமாக western civilization-ஐ நோக்கி போகின்றீர்கள். அது மாதிரியான சட்டங்களை ஏற்படுத்துகின்றீர்கள், அது மாதிரியான ecosystem-த்தை ஏற்படுத்துகின்றீர்கள், அது மாதிரியான சந்தேகங்களை ஏற்படுத்துகின்றீர்கள். சமுதாயத்தில் ஒவ்வொரு மனிதனுக்கும் false promise கொடுக்கின்றீர்கள், 'government- ஏ உங்களை end to end பார்த்துவிட முடியும்' என்று பொய்யான வாக்குறுதியை அளிக்கின்றீர்கள்.

அது முடியாது! குடும்பம் வேண்டும். Large join families வேண்டும், Tight-knit families வேண்டும். அதோடு இணைந்து வாழ்வதுதான் ஸ்வதந்த்ரம்.

ஆனால் இப்பொழுது என்ன நினைக்கிறோம்? குடும்பத்தை வெட்டுவதை, எல்லோரையும் எடுத்தெறிவதை, சமூகத்தை அழிப்பதை, அதைத்தான் 'ஸ்வதந்த்ரம்' என்று claim பண்ணி, அதையே கற்றுக்கொடுக்கின்றோம். அதனால் இப்பொழுது எங்கு போகப்போகின்றீர்கள்?

0.52% population-ஐ incarcerate செய்ய வேண்டும் என்றால், government- க்கு என்ன expense ஆகும் என்று தெரியுமா? இது government மீது எவ்வளவு பெரிய load தெரியுமா? Government மீது இருக்கின்ற load மொத்த list-யும் எடுத்தோமானால், அதவாது வயதானவர்களைப் பார்த்துக்கொள்கின்ற pension, elders- பார்த்துக்கொள்வது, elders-க்கு mental care கொடுப்பது, குழந்தைகளைப் படிக்க வைப்பது, அவர்கள் productive-வான citizen-ஆக மாறுகின்ற வரை, அவர்களைப் படிக்க வைப்பது, அவர்கள் retire ஆன பிறகு அவர்களைப் பார்த்துக்கொள்வது... இது மாதிரி ஒவ்வொரு துறையை எடுத்தாலும், ஹிந்துக்கள் அந்த நாட்டினுடைய government மீது போடுகின்ற load மிக மிக மிகக் குறைவு. Lowest load... Minimum load-உடன் இருக்கின்றார்கள்.

காரணம், நம்முடைய civilization -னுடைய Social cultural economical capital.. இது எதுவுமே புரியாமல், ஸநாதன ஹிந்து தர்மத்தினுடைய economic impact, social impact, ஸநாதன ஹிந்து தர்மத்தினுடைய spiritual science-ம், culture-ம் ஒரு நாட்டிற்கு எந்த அளவிற்கு மிகப்பெரிய நன்மையாகவும், பலமாகவும் இருக்கிறது என்று தெரியாமல், தெரிந்தும், தெரிந்து கொள்ள விரும்பாமல், புரிந்தும், அதைப்பற்றி கவலை இல்லாமல், கொடுமையான வேகத்தோடு, 'நம்முடைய ஸநாதன ஹிந்து தர்மத்தினுடைய civilization-ஐ, அதனுடைய வாழ்க்கைமுறையை வேரறுத்தே தீருவோம்' என்று வெறித்தனம் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கும் தீய ஶக்திகளே, அவைகளின் பின்னால் சென்று கொண்டிருக்கும் மூட ஹிந்துக்களே... புரிந்துகொள்ளுங்கள்… நீங்களும் 0.52% population-ஐ incarcerate செய்கின்ற அந்த structure-ஐ தான் நோக்கி ஓடிக்கொண்டிருக்கின்றீர்கள்.

பள்ளிகள் எல்லாவற்றையும் இடித்து சிறையாக்கிக் கொள்ளுங்கள். பள்ளிகளில் பகவத் கீதையை மறுப்பதாலே, அவைகளைச் சிறையாக்கி, சிறையிலே நிரப்பி, சிறையிலே பகவத் கீதை படித்துக்கொள்ள அனுமதித்து, இப்படித்தான் நடந்துகொண்டிருக்கின்றது... இதை நோக்கித்தான் ஓடிக்கொண்டிருக்கின்றீர்கள்.

இதைப் புரிந்துகொள்ளுங்கள்: இந்தப் புத்தாண்டில் ஆன்மீக விழிப்பு, உயிர்மை, நமக்குள்ளும் நம்மைச் சுற்றி இருப்பவற்றையும், நடப்பவற்றையும் ஆன்மீக விழிப்புணர்வோடு பார்க்கத் துவங்குங்கள்.

2026-ஆம் வருடத்தை உங்களுடைய ஆன்ம விழிப்பிற்காக, உயிரை உயிர்ப்பிப்பதற்காக, உங்களுடைய தனிப்பட்ட ஆன்ம விழிப்பிற்காக, உங்கள் உயர்வுக்காகச் செலவிடுங்கள். இந்த 2026ஆம் வருடத்தை 'உங்களுக்கு' என்று எடுத்து வைத்துவிடுங்கள். போதும், யார் யாருக்காகவெல்லாமோ உழைத்ததும், ஓடியதும், அடைந்ததும், அழிந்ததும் போதும்.

இந்த 2026 உங்களுக்கு!

உங்கள் உடல் நலத்தை மேம்படுத்துவது, உங்கள் உடலைப் பற்றி நீங்கள் வைத்திருக்கும் கருத்தைச் சரியானதாக, முழுமையானதாக ஆக்குங்கள். அப்பொழுது தானாகவே... அதாவது உங்கள் உடலைப் பற்றி நீங்கள் வைத்திருக்கும் கருத்து, முழுமையானதாக ஆனாலே, உங்களை அறியாமலேயே நீங்களே காலையில் 4 மணிக்கு எழுந்து யோகா செய்ய வந்துவிடுவீர்கள்.

ப்ரஹ்ம முஹுர்த்தத்தில் தூங்கக்கூடாது. என்னுடைய biological clock perfect- ஆக வேலை செய்ய வேண்டும். அதனுடன் இணைந்து என்னுடைய உடலையும், உடலின் செயல்கள், வாழ்க்கைமுறையை align செய்துகொள்ள வேண்டும் என்று correct- ஆக நம்முடைய மரபு, ஸநாதன ஹிந்து தர்மத்தின் மரபு வாழ்க்கைமுறைகளான ப்ரஹ்ம முஹுர்த்தத்தில் யோகமும், பூஜையும், த்யானமும் செய்ய ஆரம்பித்துவிடுவீர்கள்.

சூரியன் விழித்தெழுந்த பிறகே உண்பது, சூரியன் சாய்ந்த பிறகு உண்பதில்லை. மாமிச உணவு normal உணவாக மாறக்கூடாது.

கேளுங்கள்... உங்களுடைய உடல், மனம், உயிர் - இவைகளைப் பற்றி நீங்கள் வைத்திருக்கும் கருத்துக்கள் முழுமையானதாகவும், சரியானதாகவும், நேர்மையானதாகவும் மாற வேண்டும். அதுதான் 'ஆன்ம விழிப்புணர்வு' என்று சொல்கின்றேன்.

நீங்கள் உங்கள் வாழ்க்கையில், வேறு ஒன்றும் பெரிதாகச் சாதிக்க வேண்டியதில்லை. உங்கள் உடல், மனம், உயிர், வாழ்க்கை - இவைகளைப் பற்றி வைத்திருக்கின்ற கருத்திலே தெளிவு வந்தால் மட்டும் போதும். தானாகவே, இந்த ப்ரபஞ்சத்தின் இயக்கம், தர்மத்தோடு இணைந்து உடலும், மனமும், உயிர்மெய்யும் உச்சத்தில் இருக்கின்ற இனிமையான வாழ்க்கையை வாழ ஆரம்பித்துவிடுவீர்கள் ஐயா. தானாகவே align ஆகிவிடுவீர்கள்.

உங்களைப் பற்றி வைத்திருக்கின்ற low beliefs, உங்களுடைய past bad logic, இவை எல்லாவற்றையும் உங்களுக்குக் கொடுத்தது மட்டும் இல்லாமல், அதிலிருந்து நீங்கள் வெளியில் வரவே முடியாமல், ஒரு ecosystem-த்தில் உங்களை நெரித்து வைத்திப்பதுதான் இந்த chronic capitalist-ம், extreme nationalist-டும், nationalist radicals -ம் உருவாக்குகின்ற ecosystem.

ஒரு மனிதனுடைய முதல் தேவை, அடிப்படைத் தேவை ஆன்ம விழிப்புணர்வு. தன் உடலைப் பற்றியும், மனதைப் பற்றியும், உயிரைப் பற்றியும், வாழ்க்கையைப் பற்றியும் தெளிந்த தெளிவிற்கு வருதல்.

அது owners manualமாதிரி ஐயா. Owners manual -ஐ படிக்காமல், காரில் ஏறி உட்கார்ந்து, ஓட்ட ஆரம்பித்தீர்களானால் என்ன ஆகும்? Break க்கு பதிலாக accelerator pedal-ஐ press செய்தீர்களானால் என்ன ஆகும்? Owners manual படிக்காமல் காரில் ஏறி, கார் ஓட்ட ஆரம்பிக்கின்ற மாதிரிதான், இந்த உடல், மனம், உயிர் - இதனுடைய owners manual-ஐ படிக்காமல், இதை ஓட்ட ஆரம்பித்து வாழ்ந்துகொண்டிருக்கின்றீர்கள்.

Accidental-ஆக இன்னும் accident ஆகாமல் இருக்கிறது. நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: Accidental-ஆக இன்னும் accident ஆகாமல் இருக்கிறது.

நான் சொல்லிக்கொண்டிருந்தேன் இல்லையா கணக்கு… அதாவது அமெரிக்காவில் 347 million population. 1.8 million – 0.52% ஜெயிலில் இருக்கின்றார்கள் என்று. அதுபோல், இந்தியாவில் 1.46 பில்லியன் population. இப்பொழுது இதே population-க்கு US -இல் இருக்கின்ற அதே 0.52% percentage, இந்தியாவிலும் ஜெயிலுக்குப் போனால் 7.7 million people ஜெயிலில் இருப்பார்கள். ஆனால் இப்பொழுது இருப்பது வெறும் 5.3 லக்ஷம்தான். அதாவது 0.5 million தான் ஜெயிலில் இருக்கின்றார்கள். 5 லக்ஷத்து 30 ஆயிரம் பேர்தான் ஜெயிலில் இருக்கின்றார்கள்.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: சமூகத்தினுடைய, நம்முடைய hindu civilization-இல் social spiritual capital, இந்த cultural capital இதையெல்லாம் வெகு வேகமாக சீரழித்துக் கொண்டிருக்கின்றோம். இப்பொழுது அந்த capital -இல் தான் வாழ்ந்துகொண்டு இருக்கின்றோம்.

நமக்கு இருக்கின்ற எல்லா நல்லதும், இந்த ஸநாதன ஹிந்து civilization கொடுத்த நல்லது. ஆனால் வேக வேகமாக அதை சிதைத்துக்கொண்டிருப்பதனால், அடுத்த தலைமுறைகளுக்கு அது இல்லாமல், இந்த western civilization காட்டுகின்ற Jail centric legal ecosystem life style-ஐ நோக்கி வேக வேகமாக ஓடிக்கொண்டிருக்கின்றீர்கள்.

விழித்துக்கொள்ளுங்கள். விழித்துக்கொள்ளுங்கள். இன்னொன்றை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், நான் முதலிலேயே சொன்னேன். Gen-z புரட்சி எல்லாம் வேலைக்கு ஆகாது. Gen-z புரட்சி எல்லாமே பார்த்தீர்களானால், இருப்பதையும் சீரழித்து விட்டுவிடும். தேரை இழுத்து தெருவில் விட்டுவிட்டு ஓடிப்போய்விடுவார்கள். அந்தப் புரட்சியை யார் தூண்டி விடுகின்றார்களோ, அவர்களுக்குச் சகாயமாக, அவர்களுக்குத் தேவையானதை வேண்டுமானால் செய்துகொள்ள முடியுமே தவிர, Gen-z புரட்சி தீர்வு அல்ல.

தனி மனித எழுச்சியே தீர்வு.

2025-இல் நிகழ்ந்ததைப் பாருங்கள்… அதாவது 2024, 2025 இந்த இரண்டுவருடங்களில், 24 மாதங்களில் 25 Gen-z புரட்சிகள் நடந்திருக்கின்றன். அந்த 25 நாடுகளும் நாசமாகப் போனது. ஒன்றும் உருப்படவில்லை.

ஒரே தீர்வு என்னவென்றால், தனி மனிதன் விழித்துக்கொள்வது. தனி மனிதனின் ஆன்மீக விழிப்புதான், இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு.

ஸநாதன ஹிந்து தர்மத்திலும் ஐயா, தனிமனித விழிப்படைந்தவர்களால் மட்டும்தான், இன்னமும் ஸநாதன ஹிந்து தர்மம் உயிரோடு இருக்கின்றதேத் தவிர, The living stream is still maintained by those individuals who got enlightened. அந்த ஜ்ஞாநம் அடைந்த, பர முக்தி அடைந்த, ஜீவன் முக்தி அடைந்த, ஆன்மீக விழிப்படைந்த தனிமனிதர்கள்தான், இன்றளவும் இந்த ஸநாதன ஹிந்து ecosystem-த்தை உயிரோடு வைத்திருக்கின்றார்கள்.

அதனால், தனிமனித விழிப்புதான், இந்த 2026-ஆம் ஆண்டின் குறிக்கோளாக இருக்க வேண்டும். 2026 ஆம் ஆண்டின் முதல் குறிக்கோள் - உங்கள் எல்லாருக்குமே உங்கள் உடலைப் பற்றி, உங்கள் மனதைப் பற்றி, உங்கள் உயிரைப் பற்றி நீங்கள் வைத்திருக்கும் கருத்துக்கள் சரியானதாகவும் முழுமையானதாகவும் மாற வேண்டும்.

வேறு ஒன்றுமே தேவையில்லை… உங்களுடைய உடல், மனம் இவைகளைப் பற்றிய கருத்துக்கள் தெளிவாகுமானால், automatic-ஆக உங்கள் உணவு, உடை, வாழ்க்கை பழக்கம் எல்லாமே align ஆகிவிடும். இந்த conscious living-க்கு align ஆகிவிடும். Enlighten living-க்கு align ஆகிவிடும். ஜீவன்முக்த வாழ்க்கைக்கு align ஆகிவிடும்.

அடிப்படையாகச் செய்ய வேண்டிய அந்த தனிமனித விழிப்பு என்றால், என்னவென்று சொல்கின்றேன் கேட்டுக்கொள்ளுங்கள். தனிமனித ஆன்மீக விழிப்பு… முண்டக உபநிஷதத்தில ஒரு அருமையானக் கதை. முண்டக உபநிஷதம் சொல்கின்ற ஒரு அருமையானக் கதை ஐயா. ஒரு இரண்டு பறவைகள் ஒரு மரத்திலே இருந்து வாழ்வதைப் பற்றி ஒரு கதை.

முண்டக உபநிஷதத்தினுடைய 3-1-1, மூன்றாவது chapter, first canto, first ஸுத்ரம். நான்கு ஸ்லோகங்கள்தான் உங்களுக்குச் சொல்கின்றேன்.

द्वा सुपर्णा सयुजा सखाया समानं वृक्षं परिषस्वजाते । तयोरन्यः पिप्पलं स्वाद्वत्त्यनश्नन्नन्यो अभिचाकशीति ॥3.1.1॥

த்வா ஸுபர்ணா ஸயுஜா ஸகாயா ஸமானம் வ்ருக்ஷம் பரிஷஸ்வஜாதே | தயோரன்ய: பிப்பலம் ஸ்வாத்வத்த்யநஷ்ன்நன்யோ அபிச்சாகஶீதி ॥3.1.1॥

समाने वृक्षे पुरुषो निमग्नोऽनिशया शोचति मुह्यमानः । जुष्टं यदा पश्यत्यन्यमीशमस्य महिमानमिति वीतशोकः ॥3.1.2॥ ஸமானே வ்ருக்ஷே புருஷோ நிமக்னோऽநிஶாயா ஶோசதி முஹ்யமாந: | ஜுஷ்டம் யதா பஶ்யத்யன்யமீஶமஸ்ய மஹிமாநமிதி வீதஶோக: ॥3.1.2॥

यदा पश्यः पश्यते रुक्मवर्णं कर्तारमीशं पुरुषं ब्रह्मयोनिम्‌ । तदा विद्वान्‌ पुण्यपापे विधूय निरञ्जनः परमं साम्यमुपैति ॥3.1.3॥

யதா பஶ்ய பஶ்யதே ருக்மவர்ணம் கர்த்தாரமீஶம் புருஷம் ப்ரஹ்மயோநிம் । ததா வித்வான் புண்ய பாபே விதூய நிரஞ்ஜன: பரமம் ஸாம்யமுபைதி ॥3.1.3॥

प्राणो ह्येष यः सर्वभूतैर्विभाति विजानन्‌ विद्वान्‌ भवते नातिवादी । आत्मक्रीड आत्मरतिः क्रियावानेष ब्रह्मविदां वरिष्ठः ॥3.1.4॥ ப்ராணோ ஹ்யேஷ ய: ஸர்வபூதைர்விபாதி விஜாநந் வித்வான் பவதே நாதிவாதீ । ஆத்மக்ரீட ஆத்மரதி: க்ரியாவாநேஷ ப்ரஹ்மவிதாம் வரிஷ்ட: ॥3.1.4॥

இதனுடைய தமிழ் பொருள் சொல்கின்றேன் கேட்டுக்கொள்ளுங்கள்: பலபேர் என்னிடம் கேள்வி கேட்பதுண்டு, 'ஏன் சாமி இந்த ஸம்ஸ்க்ரு'த ஸ்லோகங்களைச் சொல்லாமல் அப்படியே தமிழிலேயே சொல்லிவிடக் கூடாதா?' என்று.

இல்லை, சொல்லமாட்டேன். இந்த ஸம்ஸ்க்ரு'த ஸ்லோகங்களை மீண்டும் மீண்டும் சொல்வதன் மூலமாக, படிப்பதன் மூலமாக இது பதிவிடப்பட வேண்டும். என் சீடர்கள் நேரடியாக ஒரு ஸம்ஸ்க்ரு'த நூலைப் படித்து புரிந்துகொள்கின்ற அளவிற்காவது ஸம்ஸ்க்ரு'தம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகின்றேன், வலியுறுத்துகின்றேன், வேண்டுகோள் வைக்கின்றேன். என்னுடைய கைலாஸவாசிகளுக்கு, என்னுடைய குடிமக்களுக்குக் கட்டளையிடுகின்றேன்.

ஆழ்ந்து கேளுங்கள், ஸம்ஸ்க்ரு'த அறிவு இருக்க வேண்டும், வளர்க்க வேண்டும், அது விருத்தியாக வேண்டும் என்கின்ற காரணத்தினால்தான், இந்த மூல ஸ்லோகங்களை தவறாது ஒவ்வொரு முறையும் படித்துவிட்டுத்தான் தமிழில் பொருள் சொல்வேன்.

இப்பொழுது கேளுங்கள்: தமிழ் பொருள், இந்த பொருளோடு சேர்ந்து அந்தக் கதையை அழகாக விளக்குகின்றேன். புரிந்துகொள்ளுங்கள். அதில் இருக்கின்ற ஆழமான நுட்பங்களை விளக்குகின்றேன்.

எப்போதும் ஒன்றாக இணைந்த நெருங்கிய நண்பர்களாக, இரண்டு பறவைகள் ஒரே மரத்தைப் பற்றிக்கொண்டு இருக்கின்றன. அவற்றில் ஒன்று இனிப்பும் - கசப்பும் கலந்தக் கனிகளைச் சுவைக்கின்றது. மற்றொன்று எதையும் உண்ணாமல் பார்த்துகொண்டே இருக்கின்றது. அதே மரத்தில் கட்டுப்பாடற்றத் தன்மையாலும், உடலோடு அடையாளம் செய்துகொள்வதாலும், 'தனி ஆத்மா' மூழ்கி, குழம்பி துயருறுகின்றது. அதே மரத்தில் மற்றொருவரை, வணக்கத்திற்குரிய ஈசனை, அவன் மகிமையுடன் காணும்போது, அந்த ஆத்மா துயரத்திலிருந்து விடுபடுகின்றது. பார்ப்பவன் தங்க ஒளி நிறம் கொண்ட படைப்பாளியான புருஷனை, ப்ரஹ்மத்தின் மூலமான ஈசனை காணும்பொழுது, ஜ்ஞாநி புண்ணியமும், பாவமும் இரண்டையும் முற்றிலும் களைந்து, குற்றமற்ற நிலையில் பரம சாத்துவத்தை அடைகின்றான். இதுதான் அனைத்து உயிர்களிலும் ஒளிரும் உயிர்ஶக்தி. இதை விஜ்ஞாந ஜ்ஞாநத்தின் மூலம் உணர்ந்த ஜ்ஞாநி அமைதியானவன் ஆகிறான். தன்னிலே விளையாடுபவன், தன்னிலேயே ஆனந்தம் அடைவான். செயலில் முழுமையாக ஈடுபட்டிருப்பவன், அவனே ப்ரஹ்ம ஜ்ஞாநிகளில் உயர்ந்தவன்.

இப்பொழுது இந்த கதையைச் சொல்கிறேன் கேளுங்கள் ஐயா. இன்னும் சிலபேர் கேட்பதுண்டு இந்த 'உபநிஷதங்களையெல்லாம் எந்தப் புத்தகத்தில் படிக்க வேண்டும் சாமி? எது best translation?' என்று.

Best translation.... நான் பல உபநிஷத translations படித்திருக்கின்றேன். Best translation என்றால், as it is அதைப் படிக்கவேண்டும் என்று நினைத்தீர்களானால், ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தினுடைய 'உபநிஷத் சாரம்' என்று 108 உபநிஷதங்களுடைய சாரங்களையும் publish பண்ணியிருக்கின்றார்கள். அது best.

ஒரு தனி பாஷ்யம் ஶங்கரபாஷ்யம் படிக்க வேண்டும் என்று நினைத்தீர்களானால், கடலங்குடி நடேஸ சாஸ்த்ரிகள் புத்தகம். அது best. அந்த மாதிரி தனித்தனி பாஷ்யங்கள் படிக்க வேண்டும் என்று நினைத்தீர்களானால், அந்தந்த வேறு வேறு ஆச்சார்யர்கள் publish பண்ணியிருப்பதைப் படிக்கலாம்.

உபநிஷதங்களை அப்படியே தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தீர்களானால், best ராமகிருஷ்ண மடம் publish பண்ணியிருக்கின்ற உபநிஷத் சாரம். மிக அருமையான மொழிபெயர்ப்பு. ஸ்வாமி ஆசுதோஷானந்தர் என்ற மிக உயர்ந்த கற்றறிந்த அறிஞர் மட்டுமல்லாது, தபஸ்வி. கற்றறிந்த ஜ்ஞாநி, தபஸ்வி ஸ்வாமி ஆசுதோஷானந்தர் அவர்கள். அவர் தமிழில் மிக அழகாக எழுதியிருக்கின்றார். அதனால் உபநிஷதத்தை அப்படியே படிக்க வேண்டும் என்று நினைக்கின்றவர்கள் எல்லோரும், தயவுசெய்து அந்த ராமகிருஷ்ண மடம் வெளியிட்டு இருக்கின்ற புத்தகத்தை வாங்கிப் படியுங்கள்.

இப்போது நான் கொடுக்கின்ற விளக்கத்தை எல்லாம் Ask Nithyananda AI-ல் நீங்கள் தமிழிலேயே எடுத்துகொள்ள முடியும். இந்த விளக்கங்கள் - இவைகளை பற்றி, இவைகளை தமிழில் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தீர்களானால், Ask Nithyananda AI -ல் இருந்து நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.

நல்லது. இப்பொழுது கேளுங்கள். 'எப்போதும் இணைந்த நெருங்கிய நண்பர்களாக இரண்டு பறவைகள், ஒரே மரத்தை பற்றிக் கொண்டிருக்கின்றன'.

அதாவது இந்தக் கதையைப் புரிந்துகொள்ளுங்கள்: இரண்டு பறவைகள், மிக நெருங்கிய நண்பர்கள், ஒரே மரத்தில் இருக்கின்றன. அதில் ஒரு பறவை மரத்தின் மீது, மர உச்சியில் இருக்கின்றது. அமைதியாக உட்கார்ந்துகொண்டிருக்கின்றது. தங்க ஒளியோடு தகதக தகதக தகவென்று, அவ்வளவு இனிமையாக, அமைதியாக உட்கார்ந்துகொண்டிருக்கின்றது.

இன்னொரு பறவை, கொஞ்சம் சின்னப் பறவை, கீழே ஒரு கிளைக்கும் இன்னொரு கிளைக்கும் தாவித் தாவி ஓடிக்கொண்டிருக்கின்றது. திடீரென்று ஒரு கிளையில் தாவிப் பழத்தை சாப்பிடுகின்றது. 'அது மிகவும் taste-ஆக இருக்கிறது' என்று, 'இனிமையான பழம்' என்று நன்றாக ருசித்துக்கொண்டே, இன்னொரு கிளைக்குத் தாவி இன்னொரு பழத்தை சாப்பிடுகின்றது. அது ஆனால் கசப்பான பழமாக இருக்கின்றது.

உடனே துப்பிவிட்டு, 'வே வே' என்று கஷ்டப்பட்டு நொந்துவிட்டு மரத்தையும், வாழ்க்கையையும், சுற்றியிருப்பவர்களையும் - எல்லோரையும் திட்டிக்கொண்டு இருக்கின்றது. ஆனால் சும்மா இருக்க முடியவில்லை.

ஏனென்றால், ஏற்கனவே ஒரு ருசியான பழத்தைச் சாப்பிட்டதனால், 'ஒருவேளை இந்தப் பழம் ருசியாக இருக்குமோ?' என்று jump பண்ணி இன்னொரு பழத்தைச் சாப்பிடுகிறது. இன்னொரு கிளைக்கு jump பண்ணி வேறொரு பழத்தைச் சாப்பிடுகிறது.

தொடர்ந்து ஒரு 10-15 பழங்கள் மிகவும் கசப்பாகவும், உண்ணவே முடியாததாகவும், கொடுமையான உணர்வை அளிக்கக் கூடியதாகவும் இருக்கின்றன. ஆனால் திடீரென்று ஒரு பழம் கொஞ்சம் சுவையோடு இருக்கின்றது. முதலில் சாப்பிட்ட அளவிற்கு இனிப்பாக இல்லையென்றாலும், இந்தக் கசப்பில் இருந்து, கொஞ்சம் குறைந்த கசப்போடு, கொஞ்சம் இனிப்போடு இருக்கிறது. உடனே அந்தப் பறவைக்கு உற்சாகம் வந்துவிடுகிறது. 'ஆஹா பரவாயில்லை' என்று மீண்டும் ஆரம்பிக்கின்றது.

திடீரென்று ஒரு பழம் இனிப்பாக வருகிறது. ஆனால் பல பழங்கள் கசப்பாக வருகின்றன. இப்படியே சாப்பிட்டுக்கொண்டிருக்கிறது.

ஆழ்ந்து கேளுங்கள்: இந்த சின்னப் பறவை இங்கேயும் அங்கேயும், இந்த கிளையிலும், அந்தக் கிளையிலும் தாவி, இந்த புளிப்புப் பழம், கசப்புப் பழம், இனிப்புப் பழம் என இவைகளையெல்லாம் சாப்பிட்டு சாப்பிட்டு, ஒரு காலகட்டத்தில் ரொம்ப கொடுமையாக நிறைய கசப்புப் பழங்களாகவே இருந்ததனால், 'இது என்னடா இது? ஒரே ஒரு இனிப்புப் பழம் வந்தால், நூறு கசப்புப் பழம் வருகிறது?' என்று தேம்பி, துயருற்று மெதுவாக மேலே பார்க்கின்றது.

தன்னுடைய நண்பனாகிய அந்தப் பறவை, எந்த சலனமும் இல்லாமல் அமைதியாக, அந்த 'endless distraction-ஐ, pleasure’ என்று நினைக்காமல், 'பயத்தையே பாதுகாப்பு' என்று நினைக்காமல் அமைதியாக உட்கார்ந்திருக்கின்ற அந்தப் பறவையைப் பார்த்து, இந்த சின்னப் பறவைக்கு ஏதோ ஒரு ஈர்ப்பு.

'ஆஹா! என்னடா இந்தப் பெரிய பறவை இவ்வளவு ஶாந்தமாக இனிமையாக இருக்கிறதே! இது என்ன ரகசியம்? இது என்ன?' என்று இந்த சின்னப் பறவைக்கு, பெரிய பறவையை நோக்கி தன்னையறியாத ஒரு ஈர்ப்பு.

பெரிய பறவையும், சின்னப் பறவையைப் பார்த்து, கண்களாலேயே, தான் இருக்கின்ற அந்த நிலையினுடைய உயர்வையும், ஆனந்தத்தையும் அந்தச் சின்னப் பறவையின் மீது பொழிகின்றது.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், சரியான நேரத்தில் சரியான நபர்களுடைய கண்ணில் படுவதுதான் வாழ்க்கையிலேயே மிகப்பெரிய நன்மை ஐயா.

இந்தச் சின்னப் பறவை, பெரிய பறவையினுடைய கண்ணில் படுகின்றது. பெரிய பறவை, சின்னப் பறவையின் கண்ணில் படுகின்றது.

இதில் ஒரு முக்கியமானது என்னவென்றால்... சிலநேரம் இந்தச் சின்ன பறவை பெரிய பறவையைப் பார்க்காமல், இந்த மரங்களில், கிளைகளில் தாவி, எதையாவது கொத்தித் தின்றுகொண்டு விளையாடிக்கொண்டிருந்தாலும், பெரிய பறவை தன்னுடைய ஶக்தியினால், ஸங்கல்ப ஶக்தியினாலேயே, அது அந்த சின்னப் பறவையைப் பார்ப்பதனால், சின்னப் பறவையை, தன்னை நோக்கிப் பார்க்க வைக்கின்றது.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், பெரிய பறவை சின்னப் பறவையைப் பார்த்து, சின்னப் பறவையை தன்னை நோக்கிப் பார்க்க வைக்கின்றது. அப்பொழுதுதான் அந்தச் சின்னப் பறவை, இந்த குழப்பம், துக்கம் என இதிலிலெல்லாம் மூழ்கிக்கொண்டிருப்பதில் இருந்து விடுபட்டு, கொஞ்சம் நிமிர்ந்து… 'என்னதான் நடக்கின்றது? அந்தப் பறவை இப்படி இருக்கே, நாம் ஏன் இப்படி இருக்கின்றோம்? நமக்கு ஏன் இவ்வளவு கஷ்டம்? நமக்கு ஏன் இவ்வளவு துக்கம்? இதிலிருந்து எப்படித்தான் வெளியில் வருவது?' என்று யோசிக்கத் துவங்குகிறது.

ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள்: என்னுடைய வாழ்வில் இருக்கின்ற அத்துனை நன்மைக்கும், நான் ஒரே ஒரு காரணம்தான் சொல்வேன். சரியான நேரத்தில், சரியான நபர்களின் கண் என் மீது பட்டது. என்னுடைய கண் அவர்கள் மீது படுமாறு அவர்கள் செய்தார்கள். அதுதான். வேறு எதுவும் கிடையாது.

மொத்தமாக நித்யானந்தருடைய வாழ்க்கை மொத்தத்தையும் ஒரு line- ல் சொல்லிவிடுகின்றேன் ஐயா. சரியான நபர்கள், சரியானக் காலகட்டத்தில், அவர்கள் கண் என் மீது விழுந்தது. என் கண் அவர்கள் மீது விழும் வகையிலே அவர்கள் செய்தார்கள். அவ்வளவுதான் ஐயா.

என் வாழ்க்கையில் இருக்கிற ஜ்ஞாநம், அனுபவம், அனுபூதி, நன்மை, நான் உலகத்திற்கு செய்திருக்கின்ற ஏதாவது நன்மை இருந்தால், என் வாழ்க்கையில் நல்லது என்று நீங்கள் எதையாவது நினைத்தீர்களானால், அதற்கு ஒரே காரணம் இதுதான். பார்த்துகொள்ளுங்கள். சரியான நேரத்தில், சரியான நபர்கள், அவர்கள் கண் பார்வை என் மீது விழுந்தது. அதனால் என் பார்வை அவர்கள் மீது விழுமாறு தூண்டினார்கள், செய்தார்கள். அவ்வளவுதான். மற்ற எல்லாமே, தானாக நடந்துவிட்டது.

ஒரு ஜ்ஞாந குரு நம்மைப் பார்ப்பதும், அவர் கண் பார்வை நம் மீது விழுவதும், சாதாரண வேலை இல்லை. அங்கு எல்லாமே முடிந்து விடுகின்றது ஐயா. அது விழுந்துவிட்டால், அவர் என்ன செய்யவேண்டுமோ செய்வார். Correct-ஆக உங்கள் பார்வை அவர் மீது விழ வைத்தேத் தீருவார். அவர் பார்வை உங்கள் மீது விழுந்து, உங்கள் பார்வை அவர் மீது விழுந்துவிட்டால், முடிந்தது வாழ்க்கை!

துக்கம், துயரம், இது எல்லாம் பட்டு, கஷ்டப்பட்டு, துக்கப்பட்டு, துயரப்பட்டு, இது எல்லாம் பட்டுக் கொண்டிருக்கும் வாழ்க்கை முடிந்தது! அதற்குமேல் ஸர்வ ஸ்வதந்த்ர, ஸர்வ ஆனந்த ஜீவன்முக்த வாழ்க்கைதான்.

ஒரு அழகான ஒரு diagram காட்டுகின்றேன், உங்களுக்கு ஒரு painting காட்டுகின்றேன், பாருங்கள்.

இந்தச் சின்னப் பறவை அலைந்து கொண்டிருப்பதை பார்த்து, பெரிய பறவை தன்னுடைய ஸங்கல்ப ஶக்தியினாலேயே, ஶாந்த தன்மையினாலேயே, தன்னுடைய ஸாந்நித்யத்தினாலேயே, ஸாந்நித்ய ஶக்தியினாலேயே, சிறியப் பறவையை தன்னை நோக்கி பார்க்க வைக்கின்றது.

பார்த்த சிறியப் பறவையும், 'ஏன் நான் இப்படி எல்லாம் இருந்து கொண்டிருக்கின்றேன்? ஆனால் இவர் மட்டும் இப்படி ஆனந்தமாக, ஶாந்தமாக, நிம்மதியாக இருக்கின்றார்? இவரைப் பார்த்த மாத்திரத்திலேயே எனக்கு ஏதோ ஒரு ஆழமான நட்புதன்மை இவரை நோக்கி பொங்குகின்றதே, ஏன்? நான் தேடுகின்ற ஒன்று இவரிடம் நிறைந்திருக்கின்றது' என்று மெதுமெதுவாக வளர்கின்றது.

அப்பொழுதும் அந்தப் பறவை உடனே வந்துவிடவில்லை. இந்த பக்கம் தாவுகிறது, அந்த பக்கம் தாவுகிறது, சுற்றி வருகிறது. அங்கு சற்றி வருகின்ற வழியில், திடீரென்று, ஒரு இரண்டு நல்ல அருமையான இனிப்பான பழங்கள் வந்துவிடுகிறது. அந்தப் பழத்தைச் சாப்பிட்டுக்கொண்டு, மேல இருக்கின்ற பறவையை மறந்துவிட்டு, அப்படியே கொஞ்ச நேரம் படுத்திருக்கின்றது. மீண்டும் கண்ணை திறக்கும்பொழுது பசி எடுக்கின்றது. சரி என்று அடுத்து போய் சாப்பிடும்பொழுது, மீண்டும் கசப்பானப் பழங்கள் வரும்போது, தலையைத் தூக்கி அந்தப் பெரிய பறவையைப் பார்க்கின்றது.

பொன்னார் மேனியனாய் மின்னும் பறவையை, கண்ணாரக் காண்கின்றது.

சரி, இந்தப் பறவையிடம் சென்று, 'எப்படித்தான் உங்களை மாதிரி இருப்பது?' என்று கேட்கலாமா என்ற ஒரு எண்ணம் வருகின்றது. உடனே ஒரு கிளை கீழிருந்து மேல வருகின்றது. வரும்பொழுதே இன்னொரு கிளை காலில் தடுக்கின்றது. உடனே ஒரு சந்தேகம். 'போலாமா, வேண்டாமா? இங்கு நிறைய இனிப்பான பழம் எல்லாம் இருக்கிறதே. மேல் கிளைக்குப் போனால் அதெல்லாம் கிடைக்குமா, கிடைக்காதா என்று தெரியலையே?. அது வேறு உச்சிக் கிளையில் உட்கார்ந்துகொண்டிருக்கின்றது. சரிவருமா வராதா? இங்கிருந்து போய்விட்டால் இந்தப் பழம் கிடைக்குமா? கிடைக்காதா? என்ற சந்தேகம்.

ஆனால் வாயில் அந்த கசப்பு அதிகமாக, அந்த கசப்பின் துக்கம் அதிகமாக இருப்பதனால், 'சரி முயற்சி செய்துதான் பார்ப்போம்' என்று ஒரு கிளைத் தாண்டுகின்றது.

மெதுவாக பரமஶிவ சேனை நிகழ்ச்சிக்கு வந்து உட்காருகின்றது. 'என்னதான் சொல்கின்றார்?' என்று கேட்டு பார்ப்போம் என்று.

அங்கு வந்து உட்கார்ந்தால், கொஞ்சம் எல்லாமே இனிப்பான பழமாகத்தான் இருக்கின்றது. கொஞ்சம் கசப்பாகவே இருந்தால்கூட, 'அது மருந்து' என்று சொல்லி புரிய வைத்துக் கொடுப்பதனால், பொறுத்துக்கொண்டு சாப்பிடுகின்றது.

ஆனால் சில நேரத்தில் உணவே உண்டாலும், மலம் தின்ற பழக்கம் இருப்பதனால், அந்தப் பழக்கத்தின் ஈர்ப்பு, சற்று மேல் கிளையில் இனிப்புப் பழம் கிடைத்தாலும், 'கீழ் கிளையில் கிடைக்கும் இனிப்புப் பழம் போல் இது இல்லை' என்று மனம் சற்று சஞ்சலிக்க வைத்து, மீண்டும் மலம் திண்ண இழுக்கின்றது.

ஒரு வழியாக 30 நாள் கழித்து வீட்டிற்கும் சென்றாகிவிட்டது.

அங்கு சென்று இன்னொரு நான்கு பழம் சாப்பிடும்போதுதான் தெரிகிறது, 'அய்யய்யோ, முதலிலாவது 10 பழத்திற்கு ஒரு இனிப்புப் பழம் வந்தது, இப்பொழுது எல்லாமே கசப்பாக இருக்கிறதே' என்று. இந்த கீழ் கிளையிலே இனிப்பு என்று நினைத்துக்கொண்டிருந்த பழம்கூட, சற்று மேல் கிளையில் இருக்கும் இனிப்புப் பழத்தைச் சுவைத்த பிறகு, இதுவும் கசப்பாகத் தெரிகின்றது.

வீடு, உலகம், உறவுகள் எதுவுமே ஒட்டவில்லை. பழைய party, friends - நமக்கும் அவர்களைப் பிடிக்கவில்லை, அவர்களுக்கும் நம்மைப் பிடிக்கவில்லை. நமக்கும் அவர்களுடைய friendship, subject, பழகுகின்ற விதம், குடிக்கின்ற தண்ணி எதுவுமே பிடிக்கவில்லை.

அவர்களுக்கும், 'இவன் பாருடா பட்டை பட்டையாக போட்டுக்கொண்டு, ருத்ராக்ஷத்தைக் கட்டிக்கிட்டு, எப்ப பார்த்தாலும் 'நித்யானந்தா நித்யானந்தா' என்று புலம்பிக்கொண்டிருக்கின்றான். Mood-ஐயே out பண்ணிவிடுகின்றான், போடா நீ அடுத்த தடவ பார்ட்டிக்கு வராத' என்று துரத்தி விட்டுவிடுகின்றார்கள்

அங்கு எல்லாம் lonely-யாக இருக்கிறது. இந்தப் பறவை பார்க்கிறது. 'சரி, அந்த பெரிய பறவையிடமே இன்னொருமுறை சென்றுதான் பார்ப்போம் என்று ஒரு நான்கு படி அதிகமாக ஏறுகிறது, நான்கு கிளை அதிகமாக தாவுகின்றது.

வந்து பார்த்துவிட்டு, இன்னும் ஒரு பத்து நாள் அப்படியே volunteering செய்வது, சுற்றி இருப்பது, 'என்னதான் செய்வது?' என்று பார்ப்பது. பிறகு இரண்டாவது ஒரு பரமஶிவ சேனை நிகழ்ச்சியை செய்து பார்ப்பது.

அதற்குப் பிறகு மீண்டும், 'இல்லை இல்லை... இன்னும் ஒருமுறை சென்று கீழே எப்படிதான் இருக்கிறது என்று அந்த 4 பழத்தை சாப்பிட்டுதான் பார்ப்போமா? கீழே இருக்கின்ற ஒரு 4-5 பறவைகளோடு பேசிவிட்டுதான் வரலாமா?' என்று செல்கிறது, மீண்டும் வருகின்றது. ஒரு 2 – 3 முறை மெது மெதுவாக அது ஏறுகின்ற கிளைகளின் உயரம் அதிகமாகின்றது.

திடீரென்று ஒருநாள் அந்தப் பெரிய பறவை, 'சரி நீ என்னிடமும் வர வேண்டாம், கீழேயும் போக வேண்டாம். என்னிடம் வருவதற்குத்தானே பயப்படுகின்றாய்? நீ என்னிடமும் வராதே, கீழேயும் போகாதே, சுற்றி சுற்றி வந்துகொண்டு இரு' என்று பரிவ்ராஜகம் போகச் சொல்கிறது.

அதை கேட்டுவிட்டு இந்த பறவை, 'சரிடா, ஆஹா! இது நல்ல ஐடியாவாக இருக்கிறதே. முழுதாக இவரிடம் போவதுற்குத்தான் நமக்கு பயமாக இருக்கிறது. இவரும் ஒன்னும் 'முழுதாக வா' என்று சொல்லவில்லையே, கீழே போவதற்கும் பிடிக்கவில்லை. ஏனென்றால், அந்த வாழ்க்கையே உபயோகம் இல்லாமல் போச்சு. சரி சுற்றிச் சுற்றி வரலாம்' என்று சுற்றி வர ஆரம்பிக்கின்றது.

பரிவ்ராஜகமாய் இந்த சின்னப் பறவை சுற்றி வர ஆரம்பிக்கும்பொழுது, எந்தப் பக்கம் போனாலும், மேலே இருக்கின்றப் பறவையின் ஒளியே பரவிக் கிடப்பதை, அந்த ஒளியே பரவிக் கிடப்பதை இந்தச் சின்னப் பறவை மெது மெதுவாக கண்டுபிடிக்கின்றது.

சுற்றி சுற்றி சுற்றி வரும்பொழுது, கீழ் பறவைகளும், கீழ் கிளை பழங்களின் ருசியும் முழுமையாக விடுபட்டு, மேலிருக்கும் பறவையின் ஸாந்நித்யத்தின் ஶக்தியே, சுற்றி சுற்றி வரும் எல்லா இடங்களிலும் இருப்பதை உய்த்து, உயிராலே உணர்ந்து, மெதுவாக இந்த பரிவ்ராஜகம் எல்லாம் போய் சுற்றி வரும்பொழுது, 'ஆஹா, எங்கு போனாலும் அந்தப் பறவையினுடைய ஸாந்நித்யத்தின் ஒரு கீற்றுத்தானப்பா இருக்கிறது' என்று புரிந்துகொண்டு, மெது மெதுவாக அந்தப் பெரிய பறவையை நோக்கி வருகின்றது, வருகின்றது, வருகின்றது...

கடைசியாக இந்தச் சின்னப் பறவைக்கு ஒரு தைரியம் வந்துவிடுகிறது, 'ஆனதெல்லாம் ஆச்சு, போனதெல்லாம் போச்சு. எப்படியும் கீழே இருக்கின்ற கிளை பழங்களும் நமக்குப் பிடிக்கவில்லை. Set ஆகவில்லை. அந்தக் கீழ் கிளையில் இருக்கின்ற பறவைகள் friends- ம் set ஆகவில்லை. அதுவும் நமக்குப் பிடிக்கவில்லை. அது எல்லாமே நம்முடைய வாழ்க்கையில் redundant-ஆக, irrelevant ஆக போய்விட்டது. இப்பொழுது ஒரே கதி, ஒன்று சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருக்க வேண்டும். இவருடைய ஒளி எங்கெங்கெல்லாம் படுகின்றதோ, அங்கெல்லாம் போய் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும். இல்லையென்றால் இவரிடமே போக வேண்டும். கொஞ்சம் risk தான், பரவாயில்லை எடுத்துவிடுவோம்' என்று அந்தச் சின்னப் பறவை, பெரிய பறவையை நோக்கி மெது மெதுவாக வருகிறது. ஆதீனவாசி ஆகின்றது

மெது மெதுவாக ஸாலோக்ய முக்தி. அடுத்து கொஞ்சம் ஸாமீப்ய முக்தி. அடுத்து கொஞ்சம் ஸாரூப்ய முக்தி.

முதலில் ஸாலோக்யம். அடுத்து ஸாமீப்யம். அடுத்து ஸாரூப்யம்.

திடீரென்று கண்ணைத் திறந்து பார்க்கின்றது, 'தான் தனிப்பட்ட ஒரு பறவையே அல்ல. இந்தப் பறவையோட நிழல் தான்' என்பது புரிகின்றது. உடனே அளப்பற்றப் பெருங்காதலால், ஆனந்தத்தால், 'அய்யா... அண்ட முடியாத மலையாக இருப்பவனே, அண்ணாமலையானே... அண்ணனாய் தெரிந்தாய், இப்பொழுது அண்ணாமலையானே உன் நிழல்தான் நானா? நான்தான் நீயா? என் மூலம் நீயா? என் ஆழம் நீயா? என் உயிர் நீயா? என்னுடைய source-ஏ நீதானா? என்பதைத் தெரிந்து, நிழல் நிஜத்தை அணைக்க, நிகழும் ஶக்திபாதம், ஶக்தினி பாதத்திலே நிழல் நிஜத்தோடு கலந்து, 'நிழல் வேறு, நிஜம் வேறு' என்று இல்லாமல், ஒன்றாய் இருந்து பரமாத்வைதத்தில், பரமுக்தியில், ஜீவன் முக்தியில் நிறைந்து கிடந்தது.

பெரிய பறவையோ, 'தன் ஒரு வேலை முடிந்தது' என்று, அடுத்த சிறியப் பறவைகளை நோக்கித் தன் பார்வையைத் திருப்பியது.

இதுதான் ஐயா தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்றது. நடந்து கொண்டே இருக்கின்றது.

சற்றே புரிந்துகொள்ளுங்கள்... உங்களுக்குள் அனைத்திற்கும் ஸாக்ஷியாக, 'ஸர்வதீ ஸாக்ஷிபூதம்' என, ஸாக்ஷியாக இருப்பவனே பெரிய பறவை.

ஸாக்ஷியாக இருக்க இருக்க இருக்க, பெரிய பறவையோடு தன்னை மறந்து நீங்கள் கரைந்து, 'நீங்கள் தனியொரு பறவையாக என்றுமே இருந்ததில்லை' என்று உணர்ந்து, சாயல், 'நிழல்தான் நீங்கள்' என்று உணர்ந்து, பொன்னார் மேனியனோடு, தன்னார் உயிர் கரைந்து, தன்மயமாய், பொன்மயமாய், சின்மயமாய் பரமஶிவானந்த போதத்துள் நிலைத்திருங்கள்.

நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். இது கதையோ, பெரும் தத்துவமோ, இயலாத ஒன்றோ அல்ல. நிஜம்! இப்பொழுது சாத்தியம்!

நித்ய நிகழ்விற்குள் வாருங்கள். இப்பொழுது சாத்தியம்!

இதை எப்படி அடைவது என்று, இன்னொரு சிறு அழகான ஒரு ஸத்யத்தைச் சொல்கின்றேன் கேளுங்கள்.

பூசலார் நாயனார்: அதாவது, நாம் எதை வேண்டுமானாலும் manifest பண்ண முடியும். இகத்திலும் சரி, பரத்திலும் சரி, எதை வேண்டுமானாலும் manifest பண்ண முடியும் என்பதற்கான அருமையான உதாரணம் பூசலார் நாயனார்.

இந்த manifestation science-ஐ கொஞ்சம் ஆழமாகப் புரிந்துகொள்ளுங்கள். Manifest செய்வது, positive thinking கிடையாது.

இந்த மேக்ஸ் முல்லேரியன், மெக்கால்லே education, மேக்ஸ் முல்லேரியன் religious education தான் மனிதர்களுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரும் கொடுமை.

இந்த மேக்ஸ் முல்லேரியன் translation hindu books படித்துவிட்டு உருவாகின்ற குருமார்கள் உருவாக்கினற் குழப்பம் இருக்கிறது பாருங்கள்… இந்த positive thinking, creative visualization, positive visualization… இந்த எல்லா stuff-மே இந்த மேக்ஸ் முல்லேரியன் translations-ஐ படித்துவிட்டு, மேக்ஸ் முல்லேரியன் ஸம்ப்ரதாயத்தில் ஸநாதன ஹிந்து தர்மத்தை படித்துவிட்டு வருகின்ற கும்பல் உருவாக்குகின்ற பெரும் குழப்பம் தான்.

இந்த manifestation science-னுடைய ஆழமான நுட்பத்தைச் சொல்கின்றேன், கேட்டுக்கொள்ளுங்கள்.

இந்த மேக்ஸ் முல்லேரியன் கும்பலே, உண்மையைப் பார்த்தீர்களானால் ஸநாதன ஹிந்து தர்மத்தை digest பண்ணி, அதில் இருக்கின்ற மொத்தத்தையும், knowledge-ஐயும் அவர்களுடையதாக மாற்றிக்கொள்வதற்காகத் தான் அவர்கள் வேலை செய்தார்கள்.

ஆனால் ஒரு கொடுமை என்னவென்றால், ஸநாதன ஹிந்து தர்மத்தை முழுமையாக digest பண்ண முடியாது. அதில் பரம ஸத்யங்கள் எல்லாம் poison pill-ஆக உள்ளே வைக்கப்பட்டிருக்கின்றன. அந்த poison pill-ஐ அவர்களால் digest பண்ண முடியாதனால், அந்தப் பரம ஸத்ய ரகசியங்களை துப்பிவிட்டார்கள். அவர்களால் அதை translate பண்ணவும் முடியவில்லை, digest பண்ணவும் முடியவில்லை, புரிந்துகொள்ளவும் முடியவில்லை.

சாரத்தை மட்டும் தின்றுவிட்டுச் சென்று, வாந்தி எடுத்ததுதான் இந்த மேக்ஸ் முல்லேரியன் பரம்பரை உருவாக்கிய atrocity literature-ம், atrocity குருமார்களும்.

அதனால்தான் சாமி எப்போதும் சொல்வேன், 'ஜ்ஞாநமடைந்தவர்களாக இருந்தால்கூட, அவிச்சின்ன குரு பரம்பரையில் பாடம் கேட்காதவர்களிடமிருந்து, ஸநாதன ஹிந்து தர்மத்தை கற்றுக்கொள்ளாதீர்கள். ஸநாதன ஹிந்து தர்மம் சார்ந்த யோகம், ஜ்ஞாநம் - இவைகளைத் தெரிந்து கொள்ளாதீர்கள்.'

காரணம் என்னவென்றால், அவிச்சின்ன குரு பரம்பரையில் பாடம் கேட்காதவர்கள் எல்லோருமே, மேக்ஸ் முல்லேரியன் மரபிலே, அந்த translations-ஐ படித்தவர்கள்.

இந்த manifestation ரகசியத்தைச் சொல்கின்றேன், கேட்டுக்கொள்ளுங்கள்.

பூசலார் நாயனார் கதை உங்கள் எல்லோருக்கும் தெரியும். 12 ஆம் திருமுறையில், பெரியபுராணத்தில், மிக அழகாக பூசலார் நாயனார் புராணத்தில், சேக்கிழார் ஆவணப்படுத்துகின்றார். அருமையான வார்த்தைகளால் ஆவணப்படுத்துகின்றார்.

அன்றினார் புரம் எரித்தார்க்கு ஆலயம் எடுக்க எண்ணி, ஒன்றும் அங்கு உதவாது ஆக உணர்வினால் எடுக்கும் தன்மை நன்றென மனத்தினாலே நல்ல ஆலயந்தான் செய்த நின்றவூர் பூசலார்தம் நினைவினை உரைக்கலுற்றாம். - இந்தப் பாடலை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். 'அன்றினார் புரம் எரித்தார்க்கு ஆலயம் எடுக்க எண்ணி' - ஶிவபெருமானுக்கு ஆயிரம் கோடி பெயர்கள் இருக்கின்றன. அதில் எல்லாவற்றையும் விட்டுட்டு, 'புரம் எரித்தார்' என்ற வார்த்தையை இங்கு எடுத்து உபயோகிக்கின்றார் சேக்கிழார் பெருமான்.

'அன்றினார் புரம் எரித்தார்க்கு' முப்புரம் எரி செய்த, புரம் எரித்தார்க்கு ஆலயம் எடுக்க எண்ணி... 'ஒன்றும் அங்கு உதவாது ஆக, உணர்வினால் எடுக்கும் தன்மை' - அப்படியென்றால் என்னவென்றால், 'புறம் எரித்தார்' என்றால் என்ன? அவர் மூன்றாவது கண் திறந்த உடனேயே மொத்தத்தையும் எரித்துவிட்டார்.

இப்போது அது மாதிரியான ஒரு பரம்பொருளுக்கு, இறைவனுக்கு, மரத்தாலோ, கல்லாலோ வேறு எதனால் கோயில் கட்ட வேண்டும் என்றாலும், அது உதவாது.

ஏனென்றால், ப்ராண ப்ரதிஷ்டைக்கு 'நேத்ரத்ரயாய வௌஷட்' என்று ப்ராண ப்ரதிஷ்டை செய்தால், அவர் மூன்றாவது கண்ணைத் திறந்த உடனே, சுற்றியிருப்பது மொத்தமும் எரிந்துபோய்விடும். கும்பாபிஷேகத்தன்றே மொத்தமும் காலி. ப்ராண ப்ரதிஷ்டை செய்த உடனே மொத்தமும் எரிந்துபோய்விடும். அப்பொழுது, எதனால் கட்டியும் உதவாது.

'அன்றினார் புரம் எரித்தார்க்கு ஆலயம் எடுக்க எண்ணி, ஒன்றும் அங்கு உதவாதாக' - மரமோ, கல்லோ, செம்போ, வெள்ளியோ, பொன்னோ எதனாலும், எதனால் ஆலயம் செய்தாலும் புரம் எரித்தார்க்கு ப்ராண ப்ரதிஷ்டை செய்து, மூன்றாவது கண்ணை அவர் திறந்தார் என்றால், உடனே எரிந்துபோய்விடும். எதுவும் உதவாது.

ஏனென்றால், முப்புரம் ஒரு புறம் செப்பினாலும், ஒரு புறம் வெள்ளியினாலும், ஒரு புறம் பொன்னாலும் ஆன உலகங்கள். ஆனால், மூன்றாவது கண்ணைத் திறந்த உடனே முப்புரம் எரிந்தது. இப்போது ஆலயத்தில் ப்ராண ப்ரதிஷ்டையின் போது மூன்று கண்ணையும் த்யானம் செய்ய வேண்டும்.

அதனால், நம்முடைய அங்கந்யாஸ கரந்யாஸ மந்த்ரமே பாருங்கள், 'நேத்ர த்ரயாய வௌஷட்' - நேத்ர த்ரயங்களுக்கு ப்ராண ப்ரதிஷ்டை செய்து கண் திறந்தார் என்றால் என்ன ஆகும்? ஒன்றும் இருக்காது. அதனால், பெருமானுக்கு ஆலயம் எடுப்பதற்கு best material என்னவென்றால், 'உணர்வு - consciousness!'

ஏனென்றால், அவன் super conscious வடிவம் என்பனால், அதே consciousness -இல் அவருக்கு ஆலயம் செய்து வைத்தால் மட்டும்தான் அது அழியாது, நிரந்தரமாய் இருக்கும் என்பதனாலே, பூசலார் நாயனார் உணர்வினால் ஆலயம் செய்கின்றார்.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், வறுமையினால் அல்ல, தெளிவினால்! வறுமை காரணத்தால் அல்ல, தெளிவின் காரணத்தால்!

காரணம் என்னவென்றால், பூசலார் நாயனார் கல்லாலோ, மரத்தாலோ, செங்கல்லாலோ ஆலயம் செய்து வைத்திருக்க நினைத்தால், அவரிடம் பணமில்லாவிட்டாலும்கூட, அவரால் பணம் திரட்டுகின்ற அளவிற்கு சமூக நன்மதிப்பும் சூழலும் அவருக்கு இருந்திருக்கின்றது. அதனால் வறுமையால் அல்ல, அறிவின் காரணத்தால் உணர்வினால் கோவில் செய்ய முடிவெடுத்தார்.

'உணர்வினால் எடுக்கும் தன்மை நன்று என' - நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: சேக்கிழார் பெருமான், 'நன்று' - என்று comparative words தான் உபயோகிக்கின்றார். அதனால், அவர் வேறு வழியில்லாமல் உணர்வால் கோயில் எடுக்கவில்லை. வறுமையால் அல்ல, தெளிந்த காரணத்தால், 'இதுதான் நன்று' என்று… அதவாது 'உணர்வினால் எடுக்கும் தன்மை நன்று' என மனத்தினாலே ஆலயம் செய்கின்றார். சேக்கிழார் பெருமான் ஆவணப்படுத்துகின்ற இந்த ஒவ்வொரு வார்த்தையையும் பார்த்தீர்களானால் இது புரியும்.

நிறைய இந்தப் பொதுத்தனமான பொழிப்புரைகள், உரை செய்பவர்கள், 'பூசலார் நாயனாரை, வறுமை உடையவராகவும், அவரால் ஆலயம் எழுப்ப முடியாத காரணத்தாலே, மனத்தாலே கோயில் செய்தார்' என்றும் சொல்லி உரை எழுதுகின்றார்கள். கிடையாது.

இந்த வார்த்தைகளை நன்றாகப் பாருங்கள். 'அன்றினார் புரம் எரித்தார்க்கு ஆலயம் எடுக்க எண்ணி, ஒன்றும் அங்கு உதவாதாக' - அதாவது கல்லோ, மண்ணோ, மரமோ, செம்போ, வெள்ளியோ, பொன்னோ உதவாது என்று முடிவு செய்து, 'உணர்வினால் எடுக்கும் தன்மை நன்று என மனத்தினாலே நல்ல ஆலயந்தான் செய்த நின்றவூர் பூசலார்தம் நினைவினை உரைக்கலுற்றாம்.'

Consciousness-னால் ஒரு விஷயத்தை உருவாக்கி, அதை manifest பண்ண முடியும் என்பதை பூசலார் நாயனார் நிரூபித்துக் காட்டியிருக்கிறார்.

முதல் தேவை, வறுமையில் இருந்து இயங்காமை. நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: பூசலார் நாயனார் வறுமையினால் மனத்திலே செய்யவில்லை. 'அதுதான் சிறந்தது' என்று முடிவெடுத்து, அறிவினால் மனத்தில் செய்தார்.

நீங்களும் புரிந்துகொள்ளுங்கள்: நீங்கள் செய்ய வேண்டியதை, நீங்கள் அடைய வேண்டிய வாழ்க்கை.. அது இகமானாலும் சரி, பரமானாலும் சரி, அகமானாலும் சரி.

இகமானாலும் சரி, அகமானாலும் சரி, பரமானாலும் சரி. எந்தத் தளத்திலே நீங்கள் எதை அடைய வேண்டுமானாலும், அகத்திலே - உணர்விலே அதை உருவாக்கினால், தானாகவே இகம்-பரம் இரண்டும் அதை நோக்கித் தன்னைத்தானே நெறிப்படுத்திக்கொண்டு, அகத்தில் நீங்கள் செய்தது, புறத்திலும், பரத்திலும் வெளிப்படும்.

இதுதான் ஸத்யம். இதுதான் ஆழ்ந்த பரம ரகசிய, பரம ஸத்யம்.

உடல்நலம் வேண்டுமானாலும், பெரும் செல்வம் வேண்டுமானாலும், மனநலம் வேண்டுமானாலும், நல்ல உறவுகள் வேண்டுமானாலும், ஜீவன் முக்தி வேண்டுமானாலும், பர முக்தி வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் இந்த ஒரு ஸத்யத்தைப் புரிந்துகொள்ளுங்கள்.

வறுமையிலிருந்து துவங்கினீர்களானால், வறுமையில்தான் வாழ்க்கை முடியும். அகத்துள் வறுமையினால் ஒரு முடிவெடுத்து செயல்பட்டால், வறுமையில்தான் வாழ்வு முடியும்.

இந்த manifestation game ஐயா, சின்னப் பறவையாக இருந்து விளையாடுகின்ற game இல்லை ஐயா. பெரியப் பறவையாக மாறி விளையாடுகின்ற game. சின்னப் பறவையாக இருந்து விளையாடுகின்ற game அல்ல. பெரியப் பறவையாக இருந்து விளையாடுகின்ற game.

இன்னொரு சின்னக் கதை சொல்கின்றேன் கேட்டுக்கொள்ளுகள், முதல் நாள் ஸத்ஸங்கத்தில் சொன்னேன்… ஒரு குட்டிச் சிங்கம், ஆட்டு மந்தையிலே சிக்கி…

அதாவது அந்த ஒரு சிங்கம், தன் குட்டிக்குப் பிறப்பைக் கொடுத்துவிட்டு, அந்தப் பிறப்பின் பொழுதே இறந்துவிடுகின்றது. இந்த குட்டிச் சிங்கம் மட்டும் கத்திக்கொண்டே சுற்றிக் கொண்டிருக்கிறது. அங்கு வந்த ஆட்டுக்கூட்டம், தற்செயலாக இந்தச் சிங்கத்தைப் பார்த்துவிட்டு, சிங்கக் குட்டியைப் பார்த்துவிட்டு, அதை தனியாக விட்டுவிட்டுச் செல்ல மனமில்லாமல் தங்களுடனேயே அழைத்துச் சென்று, தாங்கள் உண்ணும் உணவையே கொடுத்து, தங்களுடைய வாழ்க்கைமுறையுடனேயே வளர்த்து வந்தன.

அந்த குட்டிச் சிங்கமும், தான் 'சிங்கம்' என்கின்ற அறிவே இல்லாமல், ஆட்டு சிங்கமாகவே வளருகின்றது. ஆடுகளைப் போல உண்டு, ஆடுகளுடனேயே திரிந்து, ஆடுகளைப் போலேவே குரல் சப்தமிட்டு, ஆட்டுத் தன்மையுடனேயே, ஆட்டுச் சிங்கமாகவே வாழுகின்றது. அது மெதுவாக வளர்ந்து வரும்போது, இன்னொரு ஆட்டுடன் அதற்கு கல்யாணம் செய்து வைப்பதற்குக் கூட முடிவு செய்கின்றார்கள்.

இந்த ஆட்டு சிங்கம் தன் வாழ்க்கையில் எத்தனை கஷ்டப்பட்டாலும், அதிகபட்சமாக 100 டன் தீவனத்தை வேண்டுமானால் சேர்த்து வைக்கலாம். புல்லையும், வைக்கோலையும் அல்லது ஆடுகளுடைய உணவைச் சேர்த்து வைக்கலாம்.

ஆனால் அதிர்ஷ்டவசமாக, அந்த ஆட்டு சிங்கம் ஒருநாள், ஒரு நிஜ சிங்கத்தின் கண்ணிலே படுகின்றது.

இந்த நிஜ சிங்கம், இந்த ஆட்டுச் சிங்கத்தைப் பார்த்து அதிர்ந்து போகின்றது! 'என்ன.. ஒரு சிங்கக்குட்டி, வளர்ந்த சிங்கக்குட்டி, இப்படி ஆடுகளோடு கத்திக்கொண்டு, ஆடுகளுடன் ஆட்டு உணவை தின்று கொண்டு சுற்றிக் கொண்டிருக்கிறதே? இது சரி அல்ல' என்று மெதுவாக ஒருநாள் அந்த ஆட்டு சிங்கத்தை, கழுத்தைப் பிடித்துக் கவ்வியது.

அந்த ஆட்டு சிங்கம், 'ஒருவேளை இந்த சிங்கம் தன்னை கொன்றுவிடுவதற்காக வேட்டையாடிக் கொல்கிறது' என்று நினைத்து கத்தத் துவங்குகிறது. 'மே... மே...' என்று ஆடுகளைப் போலவே கத்துகின்றது.

இந்தச் சிங்கம், என்னடா இது? நீ ஆடு இல்லடா என்று சொல்கின்றது.

ஆனால் ஆட்டு சிங்கம், இல்லை... இல்லை… இல்லை.. இல்லை.. என்னை விட்டுவிடு, என்னை விட்டுவிடு, என்னை விட்டுவிடு, என்னை விட்டுவிடு, என்னை விட்டுவிடு, எனக்கு இப்பதான் கல்யாணம் நிச்சயம் பண்ணி இருக்காங்க. நான் நிறைய காடெல்லாம் தேடி, தீவனம் எல்லாம் சேர்த்து வச்சிருக்கேன். கல்யாணத்துக்கு வரதக்ஷணையா கொடுப்பதற்கு என்று கத்துகின்றது.

அந்தக் காலத்தில் ஆண்கள் வரதக்ஷணை கொடுக்கும் வழக்கம் இருந்தது. அந்த ஆட்டு சிங்கம், ஒருவேளை 90’s kid போல. அதனால், வரதக்ஷணையாக கொடுப்பதற்காக சேர்த்து வச்சிருக்கேன், என்னை விட்டுவிடு, என்னை விட்டுவிடு என்று கத்துகின்றது.

இந்த பெரிய சிங்கம், 'சீ, போய் தொலை' என்று விட்டுவிடுகின்றது.

ஆனால் அந்த சிங்கம் சும்மா இருக்கவில்லை. ஒரு 2 - 3 நாள் கழித்து மீண்டும் வருகின்றது. இந்த ஆட்டு சிங்கம், மீண்டும் இந்த சிங்கத்தைப் பார்த்த உடனே நடுங்கி ஓட ஆரம்பிக்கின்றது.

ஆனால் இந்த சிங்கம், மீண்டும் கழுத்தைப் பிடித்துவிடுகின்றது. பிடித்துக்கொண்டு, டேய் நீ ஆடு இல்லடா, சிங்கம்டா, பாருடா என்று சொல்கின்றது.

ஆனால் இப்பொழுதும் அந்த ஆட்டு சிங்கத்திற்கு பயம். அதால், என்னை விட்டுவிடு, என்னை விட்டுவிடு, என்னை விட்டுவிடு என்று கத்துகின்றது. இந்த நிஜ சிங்கம், 'சரி' என்று விட்டுவிடுகின்றது.

இந்த நிஜ சிங்கம், இரண்டு முறை இந்த ஆட்டு சிங்கத்தைப் பிடித்தும், கொல்லாமல் விட்டுவிடுவதனால், ஆட்டு சிங்கத்திற்கு யோசனை வருகிறது… 'என்னடா இந்த சிங்கம், இரண்டுமுறை நம்மைப் பிடித்துவிட்டது. ஆனால் கொல்லாமல், நம்மை சாப்பிடாமல் விட்டுவிட்டதே? ஒருவேளை இது நல்ல சிங்கமா இருக்குமோ?' என்று யோசிக்கின்றது.

மூன்றாவது முறை பெரிய சிங்கம் வரும்பொழுது, இந்த ஆட்டு சிங்கம் தப்பித்து ஒடவில்லை. நின்று பொறுமையாகப் பார்க்கின்றது.

ஆட்டு சிங்கம், பெரிய சிங்கத்திடம் மெதுவாகப் பேச்சு கொடுக்கின்றது. தன்னை அறியாமலேயே, ஆட்டு சிங்கத்திற்கு, பெரிய சிங்கத்தின் மீது ஒரு ஆழ்ந்த ஈர்ப்பும் ஈடுபாடும் வருகின்றது.

உடனே இதுதான் Chance என்று பெரிய சிங்கம் என்ன செய்கிறது? இந்த ஆட்டு சிங்கத்தை அப்படியே இழுத்துச் சென்று, ஒரு தெளிந்த குளத்திலே, பார்… உன் முகத்தைப் பார், என் முகத்தைப் பார். நீயும் நானும் ஒன்று! என்று காட்டுகின்றது.

ஆட்டுச் சிங்கம் குளத்தில் எட்டிப் பார்க்கின்றது. இந்த சிங்கத்தின் முகத்தைப் பார்க்கின்றது. அதற்கு ஒன்றுமே புரியவில்லை. ஒருவேளை குளத்திற்குள் வேறு ஏதாவது இரண்டு சிங்கங்கள் இருக்கின்றதா? என்பதற்காக உற்று உற்று பார்க்கின்றது.

ஆனால், இந்த இரண்டு சிங்கங்களும் என்ன செய்கின்றதோ, அதையேத்தான் குளத்திற்குள் இருக்கின்ற அந்த பிம்பமும் செய்வதனால், ஒருவழியாக 'இது உண்மைதானோ?' என்று நினைக்கின்றது.

அந்த நேரம் பார்த்து இந்த சிங்கம், ஏய் நான் கர்ஜனை செய்கின்றேன் பார். என்னை பார்த்து நீயும் செய் என்று கர்ஜிக்கின்றது.

இந்த ஆட்டு சிங்கம் ஒரு 2 – 3 முறை முயற்சி செய்து, ம்மே... ம்மே... என்று முயற்சி செய்து, இல்லையே வரவில்லையே என்கிறது.

இந்தச் சிங்கம், தன் கையினாலே ஆழ்ந்து ஆட்டு சிங்கத்தை அறைந்திட, தன்னை அறியாமல் ஆட்டு சிங்கம் கர்ஜிக்கத் துவங்குகிறது. அந்த கர்ஜனையின் முதல் விளிம்பு, முதல் சப்தத்தில் ஆட்டுச் சிங்கம் கரைகின்றது.

அதனுடன் விடாமல், அந்தச் சிங்கம், தான் கையோடு கொண்டுவந்திருந்த மாமிசத்தை, ஆட்டு சிங்கத்தின் வாயில் திணிக்க, ஆட்டு சிங்கத்தின் வாய் ரத்தத்தையும், மாமிசத்தையும் சுவைத்து உள்ளெடுத்த உடன், பிறந்தது நிஜ சிங்கம்!

ஆட்டு சிங்கம், 'நிஜ சிங்கம்' ஆனது. 'சாமி, ஒன்னுடா!' என்கின்ற அனுபூதி, பரமாத்வைத அனுபூதி ஆட்டு சிங்கத்துள் மலர்ந்து, ஆட்டு சிங்கம் 'நிஜ சிங்கம்' ஆனது. நிழல் நீ... கானல் நீயும், நிழல் நீயும் மறைந்து, 'நிஜ நீ' உதித்தது!

இப்பொழுது இந்த manifestation என்கின்ற game... Life-ல் ஐயா, ஆட்டு சிங்கம் identity-ல் இருந்து நீங்கள் என்ன முயற்சி செய்து manifest பண்ணாலும், அதிகபட்சமாக 100 டன் வைக்கோல் சேர்த்து வைப்பீர்கள். ஒருவேளை மிகவும் கஷ்டப்பட்டு கார்ப்பரேட் ஆட்டு சிங்கமாக மாறினீர்களானல், 1000 டன் வைக்கோல் போர் சேர்த்து வைப்பீர்கள். அதற்கு whole seller -ஆக மாறுவீர்கள்.

நிஜ சிங்கம் அடுத்த வேளை சாப்பாட்டைக்கூட அடித்து வைத்திருக்காது. ஆனால், 'காடே தன்னுடையது' என்று நிஜ சிங்கத்திற்குத் தெரியும். எப்போது என்ன வேண்டுமோ, அதை எப்படி எடுத்து சாப்பிட வேண்டும் என்றும், சாப்பிடவும் நிஜ சிங்கத்திற்குத் தெரியும்.

நிழல் ஆட்டு சிங்கத்திற்கு இருக்கிற எந்த insecurity-யும், நிஜ சிங்கத்திற்கு இருப்பதில்லை. சேர்த்தே வைக்கவில்லை என்றாலும், நிஜ சிங்கம், 'நிஜ சிங்கம்' தான்.

அதனால், manifestation-னே ஐயா, நிஜ சிங்கம் identity-ல் இருந்து விளையாட வேண்டிய game. பெரியப் பறவை identity-ல் இருந்து விளையாட வேண்டிய game.

இந்த சிங்கக் கதையை, விவேக சூடாமணியில் ஆதிஶங்கரர் சொல்கின்றார்.

ஸிம்ஹோ ஜாதக கரூகேண ஏதாரே மேஷ யூதகே I மேஷைஹி சகசரன் மேஷ: ஸிம்ஹத்வம் நைவ கச்சதி II

ஸிம்ஹேன த்ருஷ்டப்ருஷ்ட: ச கிம் த்வம் மேஷஸ்சரன்னீதி I ஸப்தம் ஸிம்ஹஸ்ய ச்ருண்வான ஸ்வரூபம் ப்ரதிபத்யதே II

தத் ஜீவ: தத்வத் ஜீவ: ஸ்வயம் ப்ரஹ்ம ஸம்சாரீதி அவபுத்யதே I குருவாக்யேன கேநாபி ந தூ ஸ்வாதந்த்ர்ய கல்பநாத் II

விவேகசூடாமணியில் 474, 475, 476 ஸ்லோகங்களிலே ஆதிஶங்கரர் அருமையாக இந்தச் சிங்கத்தின் கதையைச் சொல்கின்றார். சிங்கம் - ஆட்டு சிங்கத்தின் கதையைச் சொல்லுகின்றார்.

முதலில் சொன்ன இந்தப் பெரியப் பறவை, சின்னப் பறவை கதை உபநிஷதக் கதை. இந்தச் சிங்கம் - ஆட்டு சிங்கத்தின் கதை, விவேகசூடாமணியிலே சொல்லப்படுகின்றது.

இதை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள் ஐயா, இந்த manifestation என்கின்ற game, நிஜ சிங்கமாக மாறிவிட்டு, பெரியப் பறவையாக மாறிவிட்டுச் செய்ய வேண்டிய, விளையாட வேண்டிய game.

சின்னப் பறவையாக இருந்துகொண்டு நீங்கள் என்ன manifest செய்ய முயற்சிசெய்து, கஷ்டப்பட்டு, உழைத்து, கற்பனை செய்து, ஏங்கி, அவதரித்து என எல்லாமே செய்தீர்களானாலும், அதிகபட்சமாக ஒரு 1000 மூட்டைக் கசப்புப் பழத்தைச் சேர்த்து வைப்பீர்கள். அதில் ஒரு 50 இனிப்புப் பழம் இருக்கும்.

ஆட்டுச் சிங்கமாக இருந்து, நீங்கள் என்ன அலைந்துத் தேடினாலும், மிஞ்சி மிஞ்சிப் போனால், 1000 டன் புல்லைச் சேர்த்து வைப்பீர்கள். ஆட்டுத் தீவனத்தைச் சேர்த்து வைப்பீர்கள்.

அதிலே கொஞ்சம் rich ஆன ஆடாக இருந்தால், ஒரு 4 – 5 பெண் ஆடுகளை வைத்துக்கொண்டு, ஒரு 4 – 5 தீவனம் விற்கின்ற கம்பெனிகளை வைத்துக்கொண்டு, மற்ற ஆடுகளையும் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டிருப்பீர்கள். இதைத்தான் செய்வீர்கள்.

உங்களுடைய manifestation எல்லாமே ஆட்டினுடைய அளவோடு முடிந்துவிடும். ஆட்டுச் சிங்கமாய் நீங்கள் ஆடும் அத்துனை ஆட்டமும், அத்தனையும், வெறும் ஆட்டுச் சிங்கத்தின் அளவில் தான் முடியும்.

Manifestation என்ற game, தனக்கு வேண்டியதைச் சாதிக்க வேண்டும் என்கின்ற வெற்றி. இந்த 'வெற்றி' என்கின்ற ஆட்டமே, நிஜ சிங்கமாய் மாறி, அந்த identity-ல் இருந்து ஆட வேண்டிய ஆட்டம் ஐயா.

நிஜ சிங்கமாய் மாறி நீங்கள் ஆடினால் மட்டும்தான், அது வெற்றியாட்டம். வெறும் ஆட்டுச் சிங்கமாய் இருந்து, நீங்கள் எத்தனை வெறிகொண்டு ஆடினாலும், அது வெறும் வெறியாட்டம். வெறி பிடித்து ஆடினாலும், அது வெறும் ஆட்டம்தான். வெற்றியாட்டம் அல்ல.

அதனால், வாழ்க்கையில் எதை வேண்டுமானாலும் manifest பண்ணுவதற்கு, நாம் செய்ய வேண்டிய முதல் விஷயம் - 'நம்முடைய நிஜ நீ, நிஜமான identity-ஐ' விழிப்படையச் செய்தல். 'ப்ரத்யகாத்ம சைதன்ய ஜாக்ரதம்' - தனி மனிதனின் ஆன்மீக விழிப்பு! இதுதான் அடிப்படைத் தேவை.

Observer- ஐ observe செய்யுங்கள். ஸாக்ஷியை ஸாக்ஷியாகப் பாருங்கள்.

அந்தச் சுத்த விழிப்பு நிலையில் இருந்து, உங்களுக்குள் என்ன கற்பனை, கனவு, எதிர்காலத் திட்டம் என எது வந்தாலும், நிஜமாக அது வெற்றியாகிவிடும்.

ஏனென்றால், சிங்கம் ஆடுகின்ற வெற்றியாட்டம் அது.

ஆடு, வெறிகொண்டு ஆடினாலும் - அது வெறும் ஆட்டம். சிங்கம், இருந்த இருப்பிலே இருந்து கர்ஜனை செய்தாலும் - அது வெற்றியாட்டம்.

அதனால், முதலில் நீங்கள் செய்ய வேண்டியது: - ஆட்டு சிங்கம், 'நிஜ சிங்கம்' ஆக வேண்டியது. - சிறியப் பறவை, பெரியப் பறவை ஆக வேண்டியது. - நிழல், 'நிஜத்தை' உணர வேண்டியது. இதுதான் நீங்கள் செய்ய வேண்டிய முதல் செயல்.

ஆழ்ந்து கேளுங்கள்: நிஜ சிங்கம், அதாவது தன்னை தான் பார்த்தல். உங்கள் identity-யினுடைய source-ஐ, ஆழத்தை நீங்கள் பார்க்கின்ற இந்த நிலைமையில் இருந்தீர்களானால், அதில் இருக்க இருக்க இருக்க… தெளிந்த, உயர்ந்த, சரியான... அதாவது உங்கள் வாழ்க்கையின் நிஜமான நோக்கு, போக்கு - எல்லாமே புரியும். உங்கள் வாழ்வும், வாக்கும் செல்ல வேண்டிய திசைப் புரியும். நோக்கும், போக்கும் - அதன் இயக்கமும் தெளிவாகத் தெரியும், வெளிப்படும்.

நீங்கள் செய்ய வேண்டியது எல்லாமே ஒன்றுதான். இப்பொழுது நீங்கள் செய்ய வேண்டியது எல்லாமே ஒன்றுதான். இந்த 2026 ஆம் ஆண்டு முழுவதும் உங்களுடைய identity-யினுடைய source -ஐ, மூலத்தை ஆழ்ந்து பாருங்கள். உங்களுக்குள் நடக்கின்ற அத்தனையையும் ஸாக்ஷியாகப் பார்த்து, அந்த ஸாக்ஷியையும் ஸாக்ஷியாகப் பார்த்து, பார்ப்பவனைப் பார்ப்பதுதான் உங்களுடைய first priority பார்ப்பவனைப் பார்ப்பதுதான் உங்களுடைய first priority இதில் focus பண்ணுங்கள், மற்ற அனைத்தும் மிக உயர்ந்த நிலையில் வெளிப்படும்.

சரியான visualization manifest ஆகும். உங்களுடைய நிஜமான ஆசைகள் என்னவென்று புரியும். Endless distraction-னே 'சுகம்' என்ற மயக்கத்தில் இருக்கமாட்டீர்கள். 'பயமே பாதுகாப்பு' என்ற delusion-ல் இருக்கமாட்டீர்கள். உங்களுடைய deception- ஐ devotion என்று நினைத்துக்கெர்ணடிருக்க மாட்டீர்கள். எல்லாமே தெளிவாகும்.

One Hey Shyaam என்கின்ற Instagram ID -ல் இருந்து ஒருவர் கேட்டிருக்கின்றார். 'குருநாதா, fasting OK. நோய், disease இல்லாமல் ஜாலியாக வாழவேண்டும். ஒரு life hack-ஐ gift பண்ணுங்க குருநாதா" என்று கேட்டிருக்கின்றார். இவ்வளவுதான்… ஹே ஷ்யாம் ஐயா, கேளுங்கள். இந்த ஒரே ஒரு life hack. நீங்கள் இதைச் சாப்பிடுங்கள், அதைச் சாப்பிடுங்கள் என்றுகூட நான் restriction போடவில்லை ஐயா. சாப்பிடும்பொழுதுகூட, 'அந்த உணவு உள்சென்று, இந்த 'உணவு' என்கின்ற அனுபவத்தை அனுபவிக்கின்ற, இந்த அனுபவத்தை உணர்வது யார்?' என்று ஆழ்ந்து பார்த்துக்கொண்டே சாப்பிடுங்கள். இந்த endless distraction..... செல்போனை நோண்டிகொண்டே அல்லது device-ஐ நோண்டிகொண்டே, வேறு எதிலாவது attention-ஐ வைத்துக்கொண்டே, பேசிக்கொண்டே சாப்பிடுவது. அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். அதையெல்லாம் விட்டுட்டு, 'சாப்பிடுவது யார்? எப்படி உணவு உள்ளே சென்று, இந்த சுவை எப்படி நடக்கிறது? எப்படி? என்னென்னவெல்லாம் உள்ளே நடக்கிறது? யார் இதையெல்லாம் உள்ளிருந்து நடத்துகிறார்கள்?' என்று பாருங்கள்.

பார்ப்பவனைப் பார்த்துக்கொண்டு, அனுபவிப்பவனை ஆழ்ந்து பார்த்துக்கொண்டே உண்ணுங்கள். இந்த ஒரே ஒரு life hack- ஐ செய்யுங்கள் ஐயா. வேறு ஒன்றும் வேண்டாம் ஐயா. Disease-ஏ இல்லாத வாழ்க்கைக்கு வந்துவிடுவீர்கள். தானாகவே உங்களுடைய உடல், சரியான உணவு, சரியான வாழ்க்கைமுறை என இதையெல்லாம் நோக்கி align-ஆக ஆரம்பித்துவிடும் ஐயா.

Awareness இல்லாமல் கொட்டித் திணிப்பதனால்தான், quantity அதிகமாகப் போவதும், quality சரியாக இல்லாத உணவை மீண்டும் மீண்டும் சாப்பிடுவதும், உணவிற்கு, நாக்கிற்கு அடிமையாவதும், வயிற்றுக்குத் தேவை இல்லாதது, கொடுமை விளைவிப்பது என்று தெரிந்தும், நாக்கிற்கு ருசியாக இருக்கின்றது என்பதற்காக junk food-ஐ கொட்டி, உடலை dustbin ஆக மாற்றவது என இது எதுவுமே இல்லாமல், ஆரோக்யம் அமைவதற்கான ஒரு சின்ன life hack ஐயா.

உண்ணும் பொழுதுகூட, 'உண்பவன் யார்? அதை ருசிப்பவன் யார்? ஜீரணிப்பவன் யார்? எவ்வாறு இந்த அனுபவங்கள் எனக்குள் நிகழ்கின்றது?' என்று ஆழ்ந்த awareness உடன், ஸாக்ஷியை ஸாக்ஷியாகப் பார்த்துக்கொண்டு சாப்பிடுங்கள்.

விஜய் புகழ் என்பவர் கேட்டிருக்கின்றார்… 'உங்களது உரையாடல் பதிவுகள் 1 நிமிடம் கேட்டால், 1 மணி நேரம் நிம்மதி கிடைக்கின்றது' என்று.

ஐயா, அருமையான நுட்பத்தை நீங்கள் கண்டுபிடித்துவிட்டீர்கள். அப்பொழுது நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், 24 நிமிடம் மட்டும் கேளுங்கள் ஐயா, முடிந்துவிட்டது. 24 மணி நேரம் நிம்மதியாக இருக்கப்போகிறது. அவ்வளவுதான். ஏனென்றால், நீங்களே formula-வை கண்டுபிடித்துவிட்டீர்கள். 1 நிமிஷம் கேட்டால், 1 மணி நேரம் நிம்மதியாக இருக்கிறது. உங்களுக்கு ஒரு நாளில் 24 மணி நேரம் தான். வெறும் 24 நிமிடம் கேளுங்கள், 24 மணி நேரமும் நிம்மதியாக இருக்கும். முடிந்துவிட்டது!

வேல், 6588 என்றவர் கேட்டிருக்கின்றார்.. ‘Gratitude for the clarity and the fresh air you bring with your new satsangs. I open the door to them and choose to be established in being instead of feeling.’

வேல் 6588, welcome, welcome, welcome! Join the team, join the ecosystem. You are welcome. Enjoy this. Open the door, let the breeze In. Open the window let the breeze In. I am with you. அதனால் பார்ப்பவனைப் பார்த்து, அளவில்லாது முன்னிலையிலும், படர்க்கையிலும் மூழ்கிக் கிடப்பதை விட்டு, தன்மைக்குள் ஆழ்ந்து மூழ்கி, பரமாத்வைதத்தில் நிலை பெறுவீர்களாக என்று உங்கள் அனைவரையும் வாழ்த்துகின்றேன்.

இந்த 2026 ஆம் ஆண்டில் செய்ய வேண்டிய ஒரே விஷயம் இதுதான் ஐயா. மீதி எல்லாமே தேவையில்லாத ஆணிதான். இந்தத் தேவையில்லாத ஆணியைப் புடுங்குகின்ற வேலையெல்லாம் விட்டுவிட்டு, முழுக்க முழுக்க உங்களுடைய கவனத்தை இந்த ஒன்றில் focus பண்ணுங்கள். சில நாள்களில் இந்த அனுபவம் நடந்துவிடும் ஐயா.

அதற்குப் பிறகு நீங்கள் இகத்திலும், பரத்திலும், புறத்திலும் எங்கு என்ன வேண்டுமோ, அத்தனையும் வாழ்க்கையில் வெளிப்படும். அதனால் இதற்குத் தயாராகுங்கள்.

இப்பொழுது அடுத்தது… இந்தியா முழுவதும் பரிவ்ராஜக யாத்ரை செல்கின்ற அன்பர்களை, இந்தப் பரிவ்ராஜக யாத்ரையை ஆசீர்வதித்து, கொடி அசைத்து வைத்து, துவங்கி வைக்க இருக்கின்றோம்.

அடுத்து ஆலயத்திலே, இன்றைய ப்ரஹ்மோத்ஸவத்தின் பூஜைகள், பூர்வாங்கப் பூஜைகள், விநாயகப் பெருமானுக்கு வழிபாடும், பூஜைகளும் நிகழ இருக்கின்றது.

தொடர்ந்து இணைந்திருங்கள். இப்பொழுது தீரர்களாக… அதாவது வெளி உலகத்தில் ஒன்றை சாதிப்பது வீரம். உள்ளுலகத்தில் ஒன்றை சாதிப்பது தீரம். உள்ளுலகத்திலே தைரியத்தோடு, 'இந்த பரிவ்ராஜக யாத்ரை சென்றே தீருவது' என்று முடிவெடுத்த தீரர்களாகிய, பரிவ்ராஜக யாத்ரைக்காக கைலாஸா திருவண்ணாமலையிலிருந்து இன்று கிளம்புகின்ற, இந்த ஒரு வருட பரிவ்ராஜக யாத்ரைக்காக கிளம்புகின்ற உங்கள் அனைவரையும், பரமஶிவப் பரம்பொருளின் பரம வெளிப்பாடாய் முழுமையாக ஆசீர்வதித்து அனுப்புகின்றேன்.

கிளம்புங்கள். வெற்றி நமதே!

பரமாத்வைத ப்ராப்திரஸ்து. இந்த பரிவ்ராஜக யாத்ரையில், யாத்ரையின் மூலமாக, யாத்ரையின் வழியாக, யாத்ரையின் போதே, பரமாத்வைதத்தில் நிலை பெற்றிருப்பீர்களாக என்று ஆசீர்வதிக்கின்றேன்.

பரமாத்வைத ப்ராப்திரஸ்து.

தீர தீரர்களாக பரமாத்வைதத்தை அடைந்து, பெரும் வெற்றியோடு வாழ்வீர்களாக, நீங்கள் வாழ்க்கையில் அடைய நினைத்த எல்லா வெற்றிகளையும் அடைவீர்களாக என்று ஆசீர்வதித்து, பரிவ்ராஜக யாத்ரையை துவக்கி வைக்கின்றேன்.

யார் வேண்டுமானாலும், இந்த பரிவ்ராஜக யாத்ரையில் கலந்துகொள்ளலாம். இன்று துவங்குகின்ற இந்த பரிவ்ராஜக யாத்ரையில் கலந்துகொள்ள விரும்பும் யார் வேண்டுமானாலும், உங்கள் பெயரைப் பதிவு செய்துகொண்டு, கைலாஸா திருவண்ணாமலைக்கு வந்து ஒரு மாத பயிற்சி - உடல், மன, உணர்வு, ஆன்மீகப் பயிற்சியை எடுத்துக்கொண்டு, இந்த பரிவ்ராஜக யாத்ரைக் குழு எங்கு இருக்கிறார்களோ, அங்கு நீங்கள் சென்று இணைந்துகொள்ளலாம்.

உதாரணத்திற்கு, இவர்கள் இப்பொழுது கிளம்பி, நேரடியாக நடந்தே பெங்களூரு செல்கிறார்கள். 11-ஆம் தேதி என்னுடைய ஜெயந்தி celebration பெங்களுருவில், பிடதி - ஆதி கைலாஸத்தில் கொண்டாடிவிட்டு, அங்கிருந்து மற்ற மிகப்பெரிய ஆன்மீக ஸ்தலங்கள், தர்மஸ்தலா போன்ற மற்ற மிகப்பெரிய ஆன்மீக spiritual ecosystems எல்லாவற்றிற்கும் சென்று explore பண்ணப்போகின்றார்கள்.

நீங்க ஒருவேளை அடுத்த மாதம் இணைய வேண்டும் என்று நினைத்தால்கூட, வந்து கைலாஸா திருவண்ணாமலையில் பரமஶிவ சேனா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, அந்த நேரத்தில்… அதாவது பிப்ரவரி மாதமோ அல்லது மார்ச் மாதமோ ஏதோ ஒரு நேரத்தில், இந்த பரிவ்ராஜக பரமஶிவ சேனை குழு மக்கள் எங்கு இருக்கின்றார்களோ, அந்த இடத்திற்கு நீங்கள் நேரடியாகச் சென்று கலந்துகொள்ளலாம்.

இது தொடர் யாத்ரையாக நிகழ்ந்து கொண்டிருக்கும். எல்லோரும் வந்து ஒரு வருடம் participate செய்துகொள்வீர்கள். ஒரு வருடம் முடித்துவிட்டு, நீங்கள் போகவேண்டும் என்றால் போகலாம். அது உங்கள் விருப்பம். ஆனால் இது தொடர் யாத்ரையாக நடந்துகொண்டே இருக்கும்.

அடுத்தடுத்த, அடுத்தடுத்த, அடுத்தடுத்த batch வந்து கலந்துகொண்டே இருப்பார்கள். இது நடந்துகொண்டே இருக்கப்போகின்றது.

இன்று துவங்கும், என்றும் முடியாத பரிவ்ராஜக யாத்ரை துவங்குகின்றது.

பரமஶிவப் பரம்பொருளின் பேரருளால், இந்தப் பரிவ்ராஜக யாத்ரை செய்கின்ற உங்களுக்கும், உங்களைக் காண்கின்றவர்கள், நீங்கள் யார் யாரை எல்லாம் காண்கின்றீர்களோ, வளப்படுத்துகிறீர்களோ, enrich பண்ணுகின்றீர்களோ அவர்கள் எல்லோருக்கும், உங்களுக்கும், உலகத்திற்கும் பெரும் நன்மை செய்யட்டும்.

பரமாத்வைதம் அருளட்டும். பரமாத்வைத ப்ராப்திரஸ்து என்று ஆசீர்வதிக்கின்றேன். ஆனந்தமாக இருங்கள்.

ஆஹா! என்ன அருமையான பெரும் நற்செயல். பெரும் நற்செயல்.

பரமஶிவ பரம்பொருளின் பரம வெளிப்பாடாய் இருந்து, உயிரெலாம் மலர்ந்து ஆனந்தத்தாலே முழுமையாக ஆசீர்வதிக்கின்றேன்.

பரமாத்வைத ப்ராப்திரஸ்து.

உங்களுக்கும் உலகத்திற்கும் இந்தப் பரிவ்ராஜக யாத்ரையினால் பெரும் நன்மை உண்டாகட்டும். பரம நன்மை உண்டாகட்டும். பரம மங்களம் உண்டாகட்டும். பரமாத்வைதம் உண்டாகட்டும். ததாஸ்து.

பரமாத்வைத ப்ராப்திரஸ்து. ஜீவன் முக்தி ப்ராப்திரஸ்து. பரமுக்தி ப்ராப்திரஸ்து. ஸர்வ மங்கள ப்ராப்திரஸ்து. ஸர்வ ஆரோக்ய ப்ராப்திரஸ்து. ஸர்வ ஐஸ்வர்ய ப்ராப்திரஸ்து. ஸர்வ ஆனந்த ப்ராப்திரஸ்து.

ஆழ்ந்து கேளுங்கள். இன்று இந்த ஸத்ஸங்கத்தில் நிறைய விஷயங்கள் சொல்லிவிட்டேன். ஒரே ஒரு practical life hack கொடுக்கிறேன். நீங்கள் செய்யக்கூடிய, யாருமே காரணம் சொல்லி மறுக்கவே முடியாத ஒரு விஷயம் சொல்கின்றேன். இதை மட்டும் செய்யுங்கள்

உங்களுடைய உறங்கும் நேரத்தில் இதைச் செய்யுங்கள் போதும். வேறு ஒன்றும் வேண்டியதில்லை.

நீங்கள் விழித்துக்கொண்டிருக்கின்ற நேரத்தை நான் கேட்டால், நீங்கள் இல்லாத காரணம் எல்லாம் சொல்வீர்கள். ஆனால் தூங்குகின்ற நேரம் எப்படியாயிருந்தாலும், தூங்கத்தான் போகின்றீர்க்ள். அதனால் எல்லோரும் தூங்கித்தான் தீரப்போகின்றீர்கள்.

தூங்கும்பொழுது படுக்கையில் படுத்துக்கொண்டு, மிக மெதுவாக, relaxed ஆக ஸ்வாசித்துவிட்டு, எப்படி உங்கள் உடல் அப்படியே படுக்கையில் அழுந்தி, relax ஆகின்றது என்று பாருங்கள். மெதுவாக உங்களுடைய அந்த 'நான்' என்கின்ற உணர்வு கரைந்து, மெதுமெதுவாக, மெதுமெதுவாக, மெதுமெதுவாக வேறொரு நிலைக்கு, அதாவது 'நான்' என்கின்ற அந்த தனி உணர்வு இல்லாத ஒரு உணர்வு நிலைக்குச் செல்வதை அப்படியே பாருங்கள்.

அதை ஸாக்ஷியாகப் பார்த்துக்கொண்டே, மெதுவாக நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எதை manifest செய்யவேண்டும் என்று நினைக்கின்றீர்களோ, அந்த manifest செய்யவேண்டும் என்று நினைக்கின்ற அந்த ஸத்யத்தை மட்டும் அப்படியே உங்களுடைய உணர்விற்குள் ஒரு drop மாதிரி விடுங்கள்.

Health வேண்டுமா? அந்த health… பூசலார் நாயனார் மாதிரி, என்ன வேண்டும் என்று அவர் நினைத்தாரோ, அதை அகத்திலே உருவாக்கினார்.

அது மாதிரி, சும்மா ஒரு சில வினாடிகள், நீங்கள் என்ன வேண்டும் என்று நினைக்கின்றீர்களோ, அகத்திலே அதை ஒரு drop ஆக விடுங்கள். இப்பொழுது நீங்கள், 'எனக்கு பணம் வேண்டும் என்று நினைக்கிறேன் சாமி. ஆனால் பணம் இல்லை என்ற வறுமை மிகவும் மனவலியாக இருக்கிறது. பணத்தை நினைக்கும் போதே அந்த வலி வந்து விடுகிறது' என்று நினைக்கலாம்.

ஒரு சில வினாடிகள் மட்டுமாவது அந்த வலியை ஓரமாக வைத்துவிட்டு, 'நான் என்ன வெளிப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறேனோ, அதை என்னால் வெளிப்படுத்த முடியும் என்று எனக்குத் தெரியும். ஏனென்றால், பல நேரங்களில் நான் வெளிப்படுத்த நினைத்ததை, என் வாழ்க்கையில் நான் வெளிப்படுத்தி இருக்கேன். அதை மறந்து இருக்கிறேனே தவிர, மறந்துவிடுகின்றேனே தவிர, ஆனால் வெளிப்படுத்தி இருக்கேன்' என்று உணருங்கள்.

கட்டாயமாக உங்கள் எல்லோருடைய வாழ்க்கையிலுமே, நீங்கள் வெளிப்படுத்த நினைத்த சிலவற்றையாவது வெளிப்படுத்தியிருக்கின்றீர்கள். ஆனால் அதை மறந்துவிடுகின்றீர்கள். இந்த வலியின் அழுத்தத்தாலே சாதித்தவைகளை மறந்துவிடுகின்றீர்கள். ஆனால் சிலவற்றையாவது நிச்சயம் சாதித்திருக்கின்றீர்கள்.

அதனால், 'இதை சாதிக்க முடியும்' என்கின்ற தெளிவோடு, என்ன வேண்டுமோ... அது உடல் நலமோ, மன நலமோ, செல்வ வளமோ, உயிர் வளமோ, பரமானுபூதியோ, ஜீவன் முக்தியோ, என்ன வேண்டுமோ... அதை ஒரு சில நிமிடங்கள் அப்படியே உங்களுக்குள் விதை மாதிரி தூவுங்கள்.

இது ஒரு ஆழமான 'ஸ்வப்ன பீஜ தந்த்ரம்' என்று ஒரு த்யான நுட்பம்.

வலி, துக்கம் இதையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, அந்த ஒரே ஒரு விதை மாதிரி அந்த conscious, அந்த thought-ஐ, அப்படியே drop செய்துவிட்டு, relaxed ஆக தூங்கிவிடுங்கள். அவ்வளவுதான். வேறு ஒன்றுமே இல்லை. Relaxed ஆக தூங்கிவிடுங்கள்.

இந்த த்யானத்தை எப்படிச் செய்வது என்று ஒரு அழகான slide ஆக போட்டு, சோஷியல் மீடியால் upload பண்ணுகின்றேன், Just அப்படியே அதை செய்யுங்கள். வேறு ஒன்றும் வேண்டாம்.

இதனுடைய அடுத்த நிலையை நாளை சொல்கின்றேன். இதை இன்று செய்யுங்கள். இதை இன்னும் ஆழமாக எடுத்துச்செல்ல முடியும். இதை நீங்கள் செய்துவிட்டு வந்த பிறகு, அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்கின்றேன்.

நீங்கள் எல்லோரும், பரமாத்ம இதயத்தில் நிலைபெற்று, பரமானந்தத்தில் நிலைத்திருந்து, நித்யானந்தத்தில் நிலைத்திருக்க, ஆசீர்வதிக்கின்றேன்.

ஆனந்தமாக இருங்கள்.


Event Photos

Photo 1 Photo 2 Photo 3
Photo 4 Photo 5 Photo 6
Photo 7 Photo 8 Photo 9
Photo 10 Photo 11 Photo 12
Photo 13 Photo 14 Photo 15
Photo 16 Photo 17 Photo 18
Photo 19 Photo 20 Photo 21
Photo 22 Photo 23 Photo 24
Photo 25 Photo 26 Photo 27
Photo 28 Photo 29 Photo 30
Photo 31 Photo 32 Photo 33
Photo 34 Photo 35 Photo 36
Photo 37 Photo 38 Photo 39
Photo 40 Photo 41 Photo 42
Photo 43 Photo 44 Photo 45