30 December 2025 SPH Live Darshan

From Nithyanandapedia
Revision as of 13:45, 10 February 2026 by Testkailasa (talk | contribs) (Created new satsang page)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to navigation Jump to search

On this day, THE SUPREME PONTIFF OF HINDUISM (SPH), BHAGAVAN SRI NITHYANANDA PARAMASHIVAM—the ultimate manifestation, Paramavatara of Paramashiva, the ultimate superconsciousness—gave a Live Darshan on the auspicious occasion of the commencement of the 49th Avatara Dina Mahotsava, attended by devotees, disciples, citizens, and e-citizens of the United States of KAILASA (USK). THE SPH inaugurated the 28-day spiritual alchemy process titled "Kathavai Thira Kaatru Varattum," revealing the profound meaning of the Vedic Shanti Mantra and explaining that a Guru achieves completion only when the disciple attains enlightenment through a bond of compassion and trust. THE SPH further elaborated on the Mahavakya "Tat Tvam Asi," declaring that everything one seeks—whether worldly health and wealth or the ultimate Paramadvaita Anubhuti—resides within, and categorized the perceived self in the dream and waking states as a mirage and a shadow, respectively. THE SPH emphasized that the power of visualization and verbalization cannot seek what is not already present within, urging all to internalize these truths to manifest the state of Living Enlightenment.

Title

KATHAVAI THIRA KATRU VARATTUM – (KTKV) - DAY 1

Link to Video

Video link not available

Transcript

நித்யானந்தேஶ்வர பரமஶிவ ஸமாரம்பாம் நித்யானந்தேஶ்வரி பரம ஶக்தி மத்யமாம் அஸ்மதாச்சார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம்

I welcome you all with My love and respects The 49th Avatara Dina Mahotsava celebrations - Nithyotsava is starting today. Poorvanga rituals are beginning today. This Mahotsava, Brahmotsava will happen beautifully for 28 days from today. These 28 days, at this same time, Indian Time morning 8’0 clock to 10 ‘’o clock, every day, Dhyana satsang spiritual alchemy will happen. This spiritual alchemy process will happen under the title ‘Kathavai Tira Kaatru Varattum’, for all the Paramadvaita Truths to become an experience in you. I welcome all the devotees, disciples, viewers who have joined through internet and inner net (heart), from all over the world for this beautiful spiritual meditative blissful satsang spiritual alchemy process. 1978, January 2nd, late night, 3rd early morning, 2nd late night and 3rd early morning... it was at that time that Paramashiva assumed this Divine Form. Paramashiva who exists beyond name, form, time and space, has assumed this Divine Form and manifested and He is doing the Ultimate spiritual work that He is supposed to do. 49th Avatara Dina (Avatar Day) as per the nakshatra (natal star), Hindu Panchang, is falling this time on January 11th in the Margasheersha month, Chitra nakshatra, January 11th. Keeping this as basis, this 28 Mahotsava is being celebrated in all the KAILASA and KAILASA temples all over the world. This spiritual satsang alchemy process is happening for this same purpose. I bow down and welcome all of you who have come. Various programs will be happening in all the KAILASA all over the world during these 28 days. We welcome all of you to come and participate. I once again bow down and welcome all those who have joined from the KAILASAS all over the world, from KAILASA Los Angeles, KAILASA Tiruvannamalai, and all the KAILASA all over the world through the internet. I welcome you all. Om sahana vavatu sahanau bhunaktu sahaviryam karavaavahai tejasvina vadhi tamastu maavid vishavahai Om shanti shanti shantihi

Om Understand. Listen. Internalise this Shanti mantra and listen deeply. This Shanti mantra is a very virtuous mantra embedded with a very deep meaning. It is the Shanti mantra used in our Vedas and Upanishads. Its meaning: Let us both join together and achieve Great Knowledge as anubhuti - experience. Let the Light of Knowledge - Tejas - shine inside the two of us Let all the various powers and goodness happen inside the two of us May we both be without any mental disturbance or any mental agitation or enmity between us. Before the Guru and disciples will sit together and before starting the lessons, before starting the spiritual alchemy process, they will chant this Shanti mantra. 'Upanishad' means, 'Sitting with the Master (Guru)'. That is the meaning of the word 'Upanishad'. This Shanti mantra is the mantra through which the Guru and disciple together pray to Paramashiva before starting this. We can understand that the Guru and disciple together pray, ‘Let the enlightenment blossom completely inside the two of us.’ You may ask, 'Guru has already become enlightened. Then why to ask 'let both of us together attain? Please understand: Enlightenment is Ultimate but not final. So, only when teaching that Ultimate to the disciples, that knowledge that is taught in the proper and right way blossoms. When a woman attains physical maturity and has all the qualifications to become a mother, and even if she has got married, and even if she has become pregnant, she become a mother only when she delivers a healthy good child. Only then she becomes complete. Same way, only when the disciple attains enlightenment, Guru attains a certain completeness. Even if he has achieved the spiritual experience, and even if he has received the power, clarity, initiation and the Avichinna Guru Parampara’s command to transmit that experience to others, even if PAramashiva and the Avichinna Guru Parampara have given their blessings, and even if he has started conducting this spiritual alchemy, only when the disciple attains enlightenment, the Guru Himself attains Completion. That is why the disciple and Guru together pray to Paramashiva, 'Let this spiritual alchemy achieve Completion' They pray to Paramashiva that ‘Let all the good things, powers, tejas, spiritual Light, all the goodness overflow inside all of us’ Next, they pray, 'Let there be no mental agitation, mental disturbance, dissatisfaction, enemity between the two of us' This is very important. The tremendous compassion and love that the Guru has over the disciple and the shraddha (trust) and bhakti (devotion) that the disciple has over the Guru, is very much needed for this spiritual alchemy process. Only if this is there, this spiritual alchemy can happen completely. That is why between the Guru and disciple, there should be no incompletions, no contradictions (murangal) no enmity, no mental disturbance. Because... if the disciple has enmity, mental disturbance or incompletion, he will not completely internalise what the Guru is giving. He will continue to doubt the Guru. He will not internalise completely. If the Guru has any mental diturbance or fear, or any mental agitation or incompletion, he will not give the complete Truths, the Ultimate Truths. He will hide a little or twist it a little or reduce it a little. There is a possibility that he will reduce the spice of the Truths. For this not to happen only, the spiritual alchemy process happens in the state of feeling where the Guru overflows with tremendous compassion and devotion towards the disciple and the disciple overflows with shraddha (trust) and devotion towards the Guru.

பரம்பொருளிடம் அந்த உணர்வு... குருவிற்கு மிகப்பெரும் கருணையும் பேரன்பும் பொங்கிட, சீடர்கள் எல்லோர் மீதும் பொங்கிட, சீடர்களுக்கு குருவின் மீது மிகப்பெரும் பக்தியும், ஶ்ரத்தையும், நேர்மையோடு கூடிய ஶ்ரத்தையும், பக்தியும் பொங்கிட, இந்த ஜ்ஞாந ரஸவாத சூழல் மலர்ந்து, ஜ்ஞாந ரஸவாதம் நிகழ்ந்திட, பரம்பொருளைப் ப்ரார்த்திப்போம்.

ஓம் ஸஹ நாவவது I ஸஹநௌபுநக்து I ஸஹவீர்யம் கரவாவஹை I தேஜஸ்விநாவதீதமஸ்து I மாவித்விஷாவஹை II ஓம் ஶாந்தி: ஶாந்தி: ஶாந்தி: II

முதல் பரம ஸத்யம்: உங்கள் உயிரையே விரித்து… அப்பர் பெருமான் மிக அழகாகச் சொல்வார்… 'ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள' எனப் பெருமானைப் பார்க்கும்பொழுது, தரிசிக்கும்பொழுது என்ன நடக்கிறது என்று சொல்கின்றார். அதேபோல ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள, ஐந்து பேரறிவும், உயிரும் திறந்து இந்த ஸத்யத்தை உள்வாங்குங்கள்.

பரம ஸத்யம், நீங்கள் கேட்க வேண்டிய முதல் ஸத்யம்: தத்வமஸி தத்வமஸி தத்வமஸி தத்வமஸி தத்வமஸி தத்வமஸி

நீங்கள் தேடுகின்ற எல்லாமும் நீங்களே! நீங்கள் தேடுகின்ற எல்லாமும் உங்களுக்குள்ளேயே இருக்கின்றது. நீங்கள் இகத்தில் தேடுவதாய் இருந்தாலும், பரத்தில் தேடுவதாய் இருந்தாலும், இக-பரம் இரண்டிலும் தேடுவதாய் இருந்தாலும், எதைத் தேடுகின்றீர்களோ… அது சாதாரண உடல் நலமாக இருந்தாலும் சரி, மனநலமாக இருந்தாலும் சரி, செல்வ வளமாக இருந்தாலும் சரி, இனிமையான உறவுகளாக இருந்தாலும் சரி, பெயர், புகழ் எனும் சமூகம் சார்ந்த நன்மைகளாக இருந்தாலும் சரி, இதையெல்லாம் தாண்டிய பரம ஜ்ஞாநமாக இருந்தாலும் சரி… உங்களுக்குள்தான் இருக்கின்றது. நீங்களே அது!

நீங்கள் செய்ய வேண்டியது, உணர்ந்து வெளிப்படுத்தல். உணர்ந்து வாழ்தல்.

எப்படி இதை உணர்ந்து வாழ்வது? தொடர்ந்து கேளுங்கள், ஆழ்ந்து கேட்டு உள்வாங்கிக் கொள்ளுங்கள்: இந்த 'தத்வமஸி' என்கின்ற மஹாவாக்யத்திற்கு நூற்றுக்கணக்கான விளக்கங்களைப், பொருளைச் சொல்ல முடியும். நீங்கள் அடிப்படையாகத் தெரிந்து கொண்டே ஆக வேண்டிய, உங்களுக்குத் தேவையான, இந்த ஜ்ஞாந ரஸவாத நிகழ்வு நிகழ்வதற்கான விளக்கத்தை அளிக்கின்றேன், கேளுங்கள்.

நீங்கள் தேடுவது... உடல் நலமானாலும், உங்களுக்குள்ளே இருக்கின்றது. மன நலமானாலும், உங்களுக்குள்ளே இருக்கின்றது. இனிமையான உறவுகளானாலும், உங்களுக்குள்ளே இருக்கின்றது. பொருளாதாரமானாலும், உங்களுக்குள்ளே இருக்கின்றது. காம சுகங்கள் - இந்த உடல் சார்ந்த சுகங்களானாலும், உங்களுக்குள்ளே இருக்கின்றது. பெயர் - புகழ் என்னும் மனம் சார்ந்த சுகங்களானாலும், உங்களுக்குள்ளே இருக்கின்றது. பரம ஜ்ஞாநமாகிய பரமுத்தியானாலும், ஜீவன் முக்தியானாலும், பரமானுபூதியானாலும், பரமாத்வைத அனுபூதியானாலும், உங்களுக்குள்ளேயே தான் இருக்கின்றது. பரம ஶக்திகளானாலும், உங்களுக்குள்ளேயே தான் இருக்கின்றது.

எதை நீங்கள் தேடினாலும், அது நீங்களே! தத்வமஸி

உங்களுக்குள் இல்லாத ஒன்றை, உங்களால் கற்பனை செய்து பார்க்கவோ, புரிந்துகொள்ளவோ, தேடவோ இயலாது. உங்களுக்குள் இல்லாத ஒன்றை, உங்களுடைய நாதமோ, பிந்துவோ, உங்களுடைய visualization power, உங்களுடைய verbalization power, இதனால் உங்களுக்குள் இல்லாத ஒன்றை தேடவும், புரிந்து கொள்ளவும், நாடவும் இயலாது.

நீங்கள் நாடுகின்ற, தேடுகின்ற எதுவானாலும், உங்களுக்குள்தான் இருக்கின்றது. தத்வமஸி தத்வமஸி தத்வமஸி

இப்பொழுது அடுத்த புரிதல்கள், உங்களுக்கு வரவேண்டிய அடுத்த புரிதல்களைக் கேளுங்கள்: நீங்கள், நீங்கள் நினைக்கின்ற மாதிரி ஒரு நபர் அல்ல. நீங்கள் நினைக்கின்ற மாதிரி, நீங்கள் ஒரு நபர் அல்ல.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: கனவிலே காணுகின்ற நீங்கள், கனவில் உங்களை நீங்கள் அப்படியே ஒரு... அதாவது கனவில் நீங்கள் உங்களை எப்படி perceive பண்ணுகின்றீர்கள், எப்படி experience பண்ணுகின்றீர்கள் என்று நினைத்துப் பாருங்கள். அது கானல் நீர் மாதிரிதான். 'இல்லை' என்றும் சொல்ல முடியாது, 'இருக்கின்றது' என்றும் சொல்ல முடியாது.

கனவிலே நீங்கள் காணுகின்ற 'நீங்கள்', கானல் நீர் போன்றது. கனவிலே நீங்கள் யாரைப் பார்க்கின்றீர்களோ, 'நீங்கள்' என்று யாரைப் பார்க்கின்றீர்களோ, அது கானல் நீ.

கனவில் நீங்கள் அனுபவிக்கும் 'நீ', கானல் நீ. இந்த நனவிலே நீங்கள் அனுபவிக்கின்ற நீ, நிழல் நீ.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: இது கானல் நீரைவிட சற்று நிஜமானது. ஆனால் 'நிஜமானது' அல்ல. கானல் நீரைவிட சற்று நிஜமானது. அதாவது, கானல் நீரைவிட, நிழல் சற்றே நிஜமானது.

கானல் நீர் முழுக்கப் பொய். அங்கு நீரே இல்லாது, முழுக்கப் பொய். ஆனால் நிழல் நிஜம், இருப்பதனால் ஏற்படுகின்ற ஒன்று. அதனால் நிழல், நிஜத்தைச் சார்ந்து இருக்கின்ற, ஆனால் சற்று உண்மை இல்லாதது. இதுதான் நிழல் நீ.

கனவிலே காணுகின்ற நீங்கள் - கானல் நீ. நிஜத்திலே நீங்கள், 'நிஜம்' என்று நீங்கள் நினைக்கின்ற, இந்த உணர்விலே காணுகின்ற நீங்கள், நீங்கள் இப்பொழுது உங்களை 'நீங்கள்' என்று அனுபவிக்கின்றீர்கள் அல்லவா, perceive பண்ணுகின்றீர்கள் அல்லவா, feel பண்ணுகின்றீர்கள், experience பண்ணுகின்றீர்கள் அல்லவா, அந்த நீங்கள் - நிழல் நீ.

நிஜமான நீ, அதாவது இந்த இரண்டு 'நீ'யும், கானல் நீயும் -நிழல் நீயும் 'யாரிடமிருந்து' வெளிப்படுகின்றதோ - அதுதான் நிஜமான நீங்கள். ஆங்கிலத்தில் சொல்லவேண்டுமானால், 'Quantum You' என்று சொல்ல முடியும்,

ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள்: இந்த 28 நாள் ஸத்ஸங்கங்களிலும், நான் மரபுப் பாடம் கேட்டு, ஶாஸ்த்ர ப்ரமாணங்களையும், ஶாஸ்த்ரத்தையும் மரபுப் பாடம் கேட்டு, அந்த மரபுப் பாடம் சொல்லித் தரப்படும் பொழுது உபயோகப்படுத்துகின்ற ஸத் பாஷையிலே கேட்டு, அனுபூதி அடைந்து, அவிச்சின்ன குரு பரம்பரையான ஆப்தர்களுடைய அனுபூதியையும்…. அதாவது பரமஶிவப் பரம்பொருளிலிருந்து துவங்கிய அவிச்சின் குருபரம்பரை… அவிச்சின்ன குரு பரம்பரை மூலமாக வருகின்ற ஆப்தர்கள், குருமார்களின் அனுபூதி, இவை எல்லாவற்றையும் மரபுக்கே உரிய ஸத் பாஷையிலே கேட்டு, உள்வாங்கி அனுபூதி அடைந்து, இப்பொழுது உங்களுக்குச் சொல்கின்றேன்.

அதனால் வேறு வழியே இல்லாமல், இந்த மரபு ஸத் பாஷைதான் என்னுடைய ஸத்ஸங்கத்திலே வெளிப்படும். 'மணிப்பிரவாளம்' என்று சொல்வோம். மணிப்பிரவாளம்போல், அதில் மரபு ஸத் பாஷை, தமிழும் - ஸம்ஸ்க்ரு'தமும் கலந்த அந்த ஸத் பாஷையில்தான் இந்த ஸத்ஸங்கம் நிகழும்.

ஒரே ஒரு உறுதி உங்களுக்குக் கொடுக்கிறேன்… எந்த technical term-மும், முக்கியமான வார்த்தைகளையும், ஆங்கிலத்தில் மொழிபெயர்க்காமல் விடமாட்டேன். உங்களுக்குப் புரிகிற gen-z language-ல், இந்தத் தலைமுறையினரான உங்களுக்கு, இந்தத் தலைமுறை யினரான உங்களுக்குப் புரிகின்ற தமிழமும் - ஆங்கிலமும் கலந்து, உங்களுக்குப் புரிகின்ற மொழியிலே, அதை மொழிபெயர்த்து, உங்களுக்கு முழுமையாகப் புரிகின்ற விதத்திலே சொல்லியே தீருவேன். அந்த உறுதி உங்களுக்குக் கொடுத்து விடுகின்றேன்.

ஆனால் நான் மரபு வார்த்தைகள், மரபுத் தமிழில், மரபு ஸத் பாஷையிலே பொங்கிப் பெருகும் பொழுது கவலைப்படாதீர்கள், 'புரியவில்லை' என்று சஞ்சலப்படாதீர்கள்.

இப்பொழுது இந்த மூன்று நீ-யைப் பற்றிப் புரிந்துகொள்ளுங்கள். கனவிலே நீங்கள் காணும் நீ - கானல் நீ. இந்த விழிப்பு நிலையில், விழித்திருக்கின்ற நிலையில் அல்லது விழித்திருக்கின்ற நிலை என்று நீங்கள் நினைக்கின்ற இந்த நிலையில், நீங்கள் அனுபவிக்கின்ற நீ - நிழல் நீ. இந்த இரண்டிற்கும் ஆதாரமாக, எதிலிருந்து கானல் நீயும், நிழல் நீயும் தோன்றி விளையாடுகின்றதோ, அந்த ஆதாரமே - நிஜ நீ. நிஜமான 'நீங்கள்' அதுதான்.

இந்த கானல் நீயிலிருந்தும், நிழல் நீயிலிருந்தும் கழன்று, அந்த நிஜ நீயை அனுபவிக்கச் செய்வதுதான், இந்த 28 நாள் ஸத்ஸங்க ஜ்ஞாந ரஸவாத நிகழ்வின் நோக்கம்.

ஒரே ஒரு உறுதி உங்களுக்குக் கொடுக்கின்றேன். நிச்சயமாக அதை உங்களை அனுபவிக்கச் செய்துவிடுவேன்.

நான் செய்கின்றவற்றைப்பற்றி முழுமையாக பரமஶிவப் பரம்பொருள் எனக்கு அறிவும், ஆற்றலும், அனுபூதியும், தெளிவும் தந்திருப்பதனால், அவர் ஸாக்ஷியாக இந்த உறுதியை உங்களுக்கு அளிக்கின்றேன்.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள் ஐயா... ஒரு சமூக பிரச்சினை, அரசியல் பிரச்சினை என்றால்… எனக்கு அதைப் பற்றியெல்லாம் முழுதாகத் தெரியாமல் இருப்பதற்கு நிறைய வாய்ப்பு இருக்கின்றது. ஏனென்றால், என்னுடைய நேரம், ஶக்தி, உணர்வு, அறிவு, இதையெல்லாம் அந்த direction–ஐ நோக்கி நான் திருப்பவில்லை. ஆனால், பரமானுபூதியை, பரமாத்வைத அனுபூதியை, பரமஜ்ஞாநத்தை நான் அடைந்திருக்கின்றேன். உங்கள் எல்லோருக்கும் அதை அளிப்பதற்கான, அதற்குத் தேவையான சகல ஜ்ஞாநம், ஶக்தி, அனுபூதி, அனுபவம், சகலமும் எனக்கு இருக்கின்றது. அதில் நீங்கள் சந்தேகமே பட வேண்டாம்.

இது தற்பெருமை அல்ல, அறிமுகம். இப்பொழுது நான் சொல்கின்ற வார்த்தைகள் தற்பெருமை அல்ல, அறிமுகம்.

காரணம் என்னவென்றால்… இந்த 28 நாட்கள், தினந்தோறும் almost இரண்டிலிருந்து மூன்று மணி நேரம் உங்கள் நேரத்தை நான் கேட்கிறேன் எனும்பொழுது, இந்த ஸத்யங்களை, நான் சொல்கின்ற ஸத்யங்களை, உங்களை வாழ்ந்து பார்க்கச் சொல்லி, முயற்சி செய்து பார்க்கச் சொல்லி சொல்லப்போகின்றேன் எனும்பொழுது, நான் உங்களுக்கு ஒரு உறுதியை கொடுத்தாக வேண்டும்.

சத்தியமாக நீங்கள் கொடுக்கும் இந்த நேரம் வீணாகாது. நிச்சயமாக வீணாகாது, வீண் போகாது. இது உங்களுக்குள் நிச்சயமாக அனுபூதியை அளிக்கும். இந்த உறுதியை உங்களுக்கு அளிக்க வேண்டியதும், அனுபூதியையும் அளிக்க வேண்டியதும் என்னுடைய பொறுப்பு. 'நான் சொல்லும் வார்த்தைகளுக்கு நான் பொறுப்பு' என்கின்ற பொறுப்போடு உங்களுக்குச் சொல்கின்றேன். ஆழ்ந்து கேளுங்கள்.

கானல் நீ, நிழல் நீ, நிஜ நீ - இந்த மூன்றையும் புரிந்துகொள்ளுங்கள்.

நிஜ நீ தான் Quantum You!

ஐயா, இப்பொழுது இந்த ஸத்ஸங்கத்தைப் பார்ப்பதற்கு வந்து அமர்ந்திருக்கின்றீர்கள், பார்த்துக்கொண்டிருக்கின்றீர்கள் என்பதே, நீங்கள் இந்த பரமானுபூதிக்குத் தயாராகிவிட்டீர்கள் என்பதனால் மட்டும்தான் நடக்கின்றது ஐயா.

இல்லையென்றால், இங்கு நீங்கள் இல்லாமல் போவதற்கும் அல்லது ஸத்ஸங்கத்தைப் பார்த்தாலும் scroll செய்துவிட்டுப் போய்கொண்டே இருப்பதற்கும், ஒரு லட்சம் காரணங்கள் உள்ளன. ஒரு லட்சம் காரணங்களையும் உடைத்துவிட்டு, நான் சொல்கின்ற வார்த்தைகளை அமர்ந்து கேட்டுக் கொண்டிருக்கின்றீர்கள் என்றால், நீங்கள் 'நிஜ நீ'யை அனுபவிக்கத் தயாராகி விட்டீர்கள். பரமானுபூதி விளைவதற்குப் பழுத்துவிட்டீர்கள். பரமுக்தி விளைவதற்குப் பழுத்துவிட்டீர்கள். You are matured now to experience Quantum You. You are ready for the Quantum You. You are sitting now and listening to this Satsang, because your being is matured. Universe, life is realizing you are matured and it is arranging this encounter.

It is arranging the encounter between the Guru and seeker to make you experience the Quantum You. The Quantum You- நிஜ நீ.

இந்த நிஜ நீயை, நீங்கள் தேடி அடைய வேண்டியது இல்லை ஐயா. இந்த நிழல் நீயாகவும், கானல் நீயாகவும் நீங்கள் விளையாடிக்கொண்டிருக்கின்றீர்கள் பாருங்கள், அந்த விளையாட்டை நிறுத்தினால் போதும். நீங்கள் உங்களையே சுருக்கிக்கொண்டு இருப்பதை நிறுத்தினால் போதும்.

உபநிஷதத்தில் ஒரு அழகான ஒரு கதை இருக்கின்றது. ஒரு சிங்கக்குட்டி, பிறப்பிலிருந்தே ஏதோ ஒரு காரணத்தினால் ஆட்டு மந்தை நடுவிலே சிக்கிக்கொண்டது. அதாவது, தாய் சிங்கம் அந்த குட்டி பிறந்த உடனே இறந்துவிடுகிறது. அந்த நேரத்தில், அங்கு வந்த ஆட்டு மந்தை, அந்த குட்டியை விட்டுவிட்டுப் போகாமல், அனாதையாக விட்டுவிட்டுப் போக மனம் இல்லாமல், கூடவே அழைத்துச்சென்று வளர்க்கின்றது.

அந்த ஆட்டு மந்தையோடு சேர்ந்து வளர்ந்த அந்தச் சிங்கம், தான் 'சிங்கம்' என்பதைப் புரிந்துகொள்ளாமல், இந்த ஆடுகளோடு சேர்ந்து, ஆடுகளைப் போலவே கத்துவதும், ஆடுகள் உண்ணும் உணவை உண்ணுவதும், ஆடுகளைப்போலவே வாழ்வதும், தன்னை 'ஆடாகவே' கருதிக்கொண்டும் வாழ்ந்து கொண்டிருந்தது.

சில ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த இடத்திற்கு வேட்டையாட வந்த வேறொரு சிங்கம், இந்த குட்டி சிங்கத்தைப் பார்த்து, ஆச்சரியப்பட்டு, 'என்ன இந்த குட்டி சிங்கம் இப்படி இருக்கிறதே?' என்று, அந்த குட்டி சிங்கத்தைப் பிடித்துக் கொண்டுபோய், தெளிந்த நீரிலே காட்டி, ஏய் நீ ஆடு அல்ல, ஆடு போல உண்பதும், இருப்பதும், இறப்பதும் உன் வாழ்க்கை அல்ல. நீ சிங்கம், பார் நீயும் நானும் ஒன்று என்று தெளிந்த ஏரி நீரில் காட்ட, அந்தக் குட்டி சிங்கமோ குலை நடுங்கி, உயிர் நடுங்கி, வெலவெலத்துக் கொண்டே மெதுவாக எட்டிப் பார்க்க, அந்த குட்டி சிங்கத்திற்கு ஒன்றும் புரியவில்லை.

பிறகு, பெரிய சிங்கம், பார் இப்பொழுது, நான் பெருங்குரல் எடுத்து, என் பெரும் சத்தத்தைக் கேள் என்று, சிங்கத்தின் கர்ஜனையைச் செய்து காட்டி, நீயும் இதைச் செய் என்று சொல்ல, ஆரம்பித்து ஓரிருமுறை தடுமாறி, கர்ஜிக்கத் துவங்கியது இளம் சிங்கம்.

கர்ஜனை வந்த உடனேயே, அதே கர்ஜனையைத் தன் அனுபவத்தில் பார்த்த உடனேயே, இளம் சிங்கத்திற்குப் பெரும் தைரியம் வந்தது.

சற்றே, ஒரு சிறிய செயலினாலேயே பெரும் தைரியம் வந்து, பிறகு மீண்டும் மீண்டும் கர்ஜிக்கத் துவங்கி, தன்னுடைய மொத்த பழைய, 'ஆடு' என்கின்ற அந்த identity-யே கரைந்து போகும் அளவிற்கு கர்ஜித்தது.

ஆடு அங்கு மறைந்தது, சிங்கம் பிறந்தது. சிங்கக்குட்டி தன் சுயத்தை, தன் நிஜத்தை, நிஜ 'தானை' உணர்ந்தது.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: இப்பொழுது நீங்கள் நிழல் நீயாகவும், கானல் நீயாகவும்... நீங்கள் எல்லாருமே இப்படித்தான், ஆட்டு மந்தையில் சிக்கிய சிங்கக்குட்டிகள்தான் ஐயா. அதனால்தான் கானல் நீயையும், நிழல் நீயையும், 'நீங்கள்' என்று நினைத்துக்கொண்டு விளையாடிக்கொண்டிருக்கின்றீர்கள்.

இந்த விளையாட்டினாலே, நிஜ நீங்கள் யார் என்பதை மறந்துவிட்டு, மறுத்துவிட்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள். You don’t need to seek the Quantum You and achieve it. No. You just need to stop pretending to be small, limited or separated, fake identity. You just need to stop pretending to be small. You just need to stop pretending to be limited.

சமூகம் செய்த மூளைச்சலவையை நீங்களும் ஏற்றுக்கொண்டு, உங்களை நீங்களே சமூகத்தின் உதவியோடு மூளைச்சலவை செய்து கொண்டிருக்கின்றீர்கள். சில நேரங்களில் அது பொருந்தவில்லை. உங்களைப் பற்றி உங்களுக்கே தோன்றுகின்ற கேள்விகள், வாழ்க்கையைப் பற்றி உங்களுக்குத் தோன்றுகின்ற கேள்விகள், ப்ரபஞ்சத்தைப் பற்றி உங்களுக்குத் தோன்றும் கேள்விகள், சந்தேகங்கள், பரம்பொருளைப் பற்றி உங்களுக்கு தோன்றும் கேள்விகள், சந்தேகங்கள்... - இவைகள் எல்லாவற்றிற்கும் சமூகம் உங்களுக்கு, உங்களை 'நீங்கள்' என்று என்னவாக அறிமுகம் செய்து வைக்கின்றதோ, மூளைச்சலவை செய்து வைக்கின்றதோ, அந்த கானல் நீயிலிருந்தும், நிழல் நீயிலிருந்தும் பதில் கிடைக்கவில்லை என்றாலும், தொடர்ந்து சமூகம் செய்து வைத்த மூளைச்சலவையையே நம்பி, உங்களை நீங்களே தொடர்ந்து அதே மூளைச்சலவையைச் செய்து கொண்டிருப்பதுதான் இங்கு மிகப்பெரிய பிரச்சினை.

எப்பொழுது சமூகம் செய்த மூளைச்சலவை மீது சந்தேகம் வந்ததோ, அப்பொழுது அந்த மூளைச் சலவையிலிருந்து உடைத்துக்கொண்டு வெளியேறாமல், தள்ளிப்போட்டுக் கொண்டு, comfort காரணத்திற்காக, இப்பொழுது வாழ்க்கை நிலைகுலைந்து விடுமே என்கின்ற காரணத்திற்காக, 'இப்பொழுது நான் ஏதாவது இந்த போக்கிலே செல்லாமல் நின்றேனானால், என்னுடைய சுகங்கள், comforts, சமுதாயம் கொடுக்கின்ற, சமூகம் கொடுக்கின்ற பல விஷயங்களை இழக்க வேண்டி இருக்கும்' என்பதனால், சமூகம் உங்களுக்குச் செய்து வைத்த மூளைச்சலவையை, மீண்டும் மீண்டும் நீங்களே உங்களுக்கு செய்துகொண்டு, உங்களை நீங்களே சுருக்கி, கானல் நீயும், நிழல் நீயுமே 'நீ' என்று நினைந்து, கனவில் காணும் கானல் நீயும், நிஜத்தில் காணும் நீழல் நீயும் 'நீ' என நினைந்து, நிஜ நீ மறந்து, நிஜ நீ மறுத்து வாழ்வதுதான் இங்கு மிகப்பெரிய பிரச்சினை. உண்மையில் சொல்லவேண்டுமானால் மிகச்சிறிய பிரச்சினை.

ஆழ்ந்து கேளுங்கள்: இந்த சமூகம் உங்களை மூளைச்சலவை செய்து, நீங்கள் 'கானல் நீ, நிழல் நீ' என்று சொன்னது, சமூகத்திற்கு உங்கள் மீது ஏதோ ஒரு வெறுப்பு, கோபத்தால் அல்ல. சமூகத்திற்கு அவ்வளவுதான் ஐயா அறிவு இருக்கின்றது. பாவம் உங்கள் அப்பா அம்மாவிற்கோ, உங்களுடைய ஆசிரியர்களுக்கோ, உங்களைச் சுற்றியிருக்கின்ற மனிதர்களுக்கோ, உங்கள்மீது வெறுப்பு, கோபம், அதனால் உங்களை மூளைச்சலவை செய்து, உங்களுடைய 'நிஜ நீ'-யை நீங்கள் உணராமல், நிழல் நீ, கானல் நீயில் உங்களைச் சிக்க வைத்துவிட்டார்கள் என்று நினைக்காதீர்கள்.

ஆட்டு மந்தைக்கு அந்த அளவிற்குத்தான் அறிவிருப்பதால், ஆட்டு மந்தையின் கருணைகூட சிங்கக்குட்டிக்கு ஆபத்து.

ஒரு பெரும் சிங்கம், பயமுறுத்தும் வேலையைப் போன்று சிலவற்றை அந்த ஆட்டுக்குட்டிக்குச் செய்தாலும், அது மிகப்பெரும் ஆசி. ஆட்டுக்குட்டியின் கருணை கூட, ஆடுகள், ஆட்டு மந்தையின் கருணைகூட, சிங்கக்குட்டிக்கு ஆபத்து.

ஏனென்றால், அதற்கு எது நல்லது என்று தெரிகின்றதோ, அதற்கு எது சரி என்று தெரிகின்றதோ, அதற்கு எது வாழ்க்கைமுறை என்று தெரிகின்றதோ, அதைத்தான் உங்களுக்குக் கொடுக்கும்.

அதனால் ஜ்ஞாநமில்லாத சமூகம் உங்கள் மீது காட்டும் கருணை கூட, உங்களுக்கு மிகவும் தீங்கும், கொடுமையும், பயமும் விளைவிக்கும். மிகவும் தவறானது. அதனால், விழித்துக்கொள்ள நினைக்கின்ற நீங்கள் எல்லோரும், ஜ்ஞாநமடையாத சமூகத்தை முழுமையாக மறுத்துவிடுங்கள். ஜ்ஞாநமடையாத நபர்கள், சமூகச் சூழல் - இவை அனைத்தையும் முழுமையாக மறுத்துவிடுங்கள்.

ஆழ்ந்து கேளுங்கள்: ஜ்ஞாநமடையாத மனிதர்கள், சமூகம், சூழல் - இவைகளிலிருந்து கருணை உங்களுக்கு வந்தாலும் கூட, அது ஆபத்தானது.

ஒருவேளை, இதுவரை அது புரியாமல் அந்த மூளைச்சலவைக்குள் நீங்கள் சிக்கி இருந்தாலும் கூட, இப்பொழுது விழித்துக்கொள்ளுங்கள். இப்பொழுது விழித்துக்கொள்ளுங்கள்.

நீங்கள் கானல் நீயாக உங்களை உணரும்பொழுது, நிழல் நீயாக உங்களை உணரும்பொழுது ஏற்படுகின்ற பயம், ஆசை, அச்சம், உணர்ச்சிக் கொந்தளிப்புகள் - எதற்கும் எந்த response-ம் செய்யாதீர்கள். காரணம் என்னவென்றால், உங்களுக்குச் சொல்லப்படுகின்ற அடிப்படையானக் கருத்துக்களான, 'இந்த ப்ரபஞ்சத்தில் நீங்கள் இருக்கின்றீர்கள்' என்பதே... அதுவே பொய்!

இந்த ப்ரபஞ்சம், 'நீங்கள்' என்று உங்கள் மூலமாக, தன்னைத்தானே வெளிப்படுத்திக்கொள்கின்றது. இந்த ப்ரபஞ்சத்தில் நீங்கள் இல்லை. ப்ரபஞ்சமே நீங்களாக இருக்கின்றீர்கள். இந்த ப்ரபஞ்சத்தில் நீங்கள் இல்லை. ப்ரபஞ்சமே நீங்களாக இருக்கின்றீர்கள்.

ப்ரபஞ்சம் உங்கள் கண்கள் மூலமாக தன்னைத்தானே பார்த்துக்கொள்கின்றது. உங்கள் காதுகள் மூலமாக தன்னைத்தானே கேட்டுக்கொள்கின்றது. உங்கள் உடல் மூலமாக தன்னைத்தானே அனுபவிக்கின்றது. அதுதான் ஐயா உண்மை.

நெல்லுக்காக செலுத்திய, பாய்ச்சிய நீர், அந்த நீரை உபயோகப்படுத்தி புல்லும் விளைந்து விடுவதுபோலே, களையும் விளைந்து விடுவதுபோலே, ப்ரபஞ்சம் தன்னைத்தானே அனுபவிப்பதற்காக தன்மய ஜ்ஞாந ஆனந்த உணர்வு, உணர்ச்சியை இந்த உடலுக்குள் செலுத்திக்கொண்டு வளரும்பொழுது, பொங்கி மலரும்பொழுது, களைபோலே, கானல் நீயும், நிழல் நீயும் விளைந்து விடுகின்றது.

எப்பொழுது உங்களுக்கு உங்களைப் பற்றியும், வாழ்க்கையைப் பற்றியும் bore அடிக்க ஆரம்பிக்கின்றதோ, tired ஆக ஆரம்பிக்கின்றதோ, 'என்னடா இது? ஏன் இயங்குகின்றோம், எதுக்கு இயங்குகின்றோம், என்ன செய்கின்றேன் என்றே ஒன்றுமே புரியலையேடா. என்னடா இது?' என்று தோன்ற ஆரம்பித்தாலே... புரிந்துகொள்ளுங்கள் - நீங்கள் ஜ்ஞாநமடையத் தயாராகிவிட்டீர்கள்.

அந்த ஜ்ஞாநத் தேடுதலால்தான், வெளியில் இருக்கின்ற... அதாவது நீங்கள் பார்க்கின்ற, கானல் நீயால் பார்க்கின்ற உலகும், நிழல் நீயால் பார்க்கின்ற உலகும் சலிக்கத் துவங்குகிறது.

கானல் நீயாலும், நிழல் நீயாலும் பார்க்கப்படுவதும், அனுபவிக்கப்படுவதும் சலிக்கும்பொழுது, நிஜ நீ விழிக்கத் துவங்குகின்றது. அந்த நிஜ நீயின் விழிப்புதான், 'தேடுதல்' என்கின்ற போராட்டமாக இப்பொழுது உங்கள் எல்லோருக்குள்ளும் நிகழ்ந்துகொண்டிருக்கின்றது.

ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள்: You are not in the universe. You are the universe expressing itself. The universe is looking at itself through your eyes, listening through your ears - enjoying itself.

'ஏகோஹம் பஹூஶ்யாம: - ஒன்றாக இருக்கின்ற நான், பலவாக மாறி, என்னை நானே அனுபவிப்பேனாக. ஆனந்தத்தோடு அனுபவிப்பேனாக' என்கின்ற ஸங்கல்பம் பரம் பொருளுக்குள் மலர்ந்து, தன்னைத்தானே அனுபவிப்பதற்காகவே ப்ரபஞ்சம் நீங்களாக மலர்ந்துள்ளது.

When something within you is growing tired of the disguise and yearning to remember what it already knows, you are ready to be enlightened.

தேஹிநோஸ்மிந்யதா தேஹே கௌமாரம் யௌவநம் ஜரா ததா தேஹாந்தரப்ராப்திர்தீரஸ்தத்ர ந முஹ்யதி II -பகவத் கீதை, 2.13

ஏதோ ஒரு சூழலிலே, சமூகம் செய்து வைத்த மூளைச்சலவையினுடைய effect கொஞ்சம் குறைந்து, 'இல்லடா... நமக்கும் சின்ன வயதில், 'காலேஜ் போனீன்னா life- ஏ மாறிடும்' என்று சொன்னார்கள். காலேஜ் போகும்போது 'வேலை கிடைத்துவிட்டால், சும்மா அதுக்குமேல life-ஏ ஜாலிதான்பா, ஆனந்தமா இருக்கும்பா' என்றார்கள். வேலைக் கிடைத்த பிறகு, 'கல்யாணம் செய்துகொள், happily ever after' என்று சினிமா சினிமாவாகப் போட்டுக் காட்டினார்கள், எல்லோரும் சொன்னார்கள். அவ்வளவு brain washing நடந்தது. சரி என்று கல்யாணம் செய்துகொண்டால்.. ஐயோ!' என்று எங்கேயோ ஒரு இடத்தில், ஒரு இடத்தில் முன்னோ, பின்னோ புரிதல் துவங்கும்பொழுது, 'இல்லை. Something is not right. I think. I'll have to start thinking. How I am thinking, living. I need to reorganize myself. Something is wrong|' என்று தோன்றும்.

NOT SOMETHING... EVERYTHING IS WRONG. அடிப்படைகள் தவறு. அந்த அடிப்படைகள் தவறு என்பதுதான் பிரச்சினை.

ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள். சற்றே பொறுமையோடு கேளுங்கள். Paper, pen வைத்திருந்தீர்களானால், இப்பொழுது இதுவரைப் புரிந்தவைகளை ஒரு இரண்டு, மூன்று வரிகளில் notes எடுத்துக்கொள்ள வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால், நீங்கள் எழுதும்பொழுது உங்களுடையப் புரிதல் ஆழமாகும்.

உங்களுடைய உணர்வாக இந்தப் புரிதல் மாறிவிடும். நீங்கள் வேறு எதுவுமே செய்ய வேண்டியதில்லை ஐயா. இந்த 28 நாட்களும் அமைதியாகக் கேளுங்கள், அமர்ந்து கேளுங்கள். மிகவும் comfortable -ஆக அமர்ந்துகொள்ளுங்கள், சாய்ந்து அமர்ந்துகொள்ளுங்கள். வேண்டுமானால் காபி, டீ என என்ன வேண்டுமோ எடுத்து வைத்துக்கொள்ளங்கள். காபி குடித்துக்கொண்டே கேளுங்கள். காலை நீட்டி உட்கார்ந்துகொள்ளுங்கள். எனக்கு உங்களிடமிருந்து தேவை, நீங்கள் ஶ்ரத்தையோடு கேட்பது தானேத் தவிர, எந்த மரியாதையும் இல்லை.

அடிப்படையாக உங்களிடமிருந்து எனக்குத் தேவை மரியாதை அல்ல. ஶ்ரத்தையோடு கூடிய கேட்டல் - Authentic Listening. அதனால், ஶ்ரத்தையோடு கேளுங்கள். வேண்டுமானால் ஒரு நிமிஷம், main points, முக்கியமான points-ஐ notes எடுத்துக்கொள்ளுங்கள்.

அடுத்த ஸத்யம்: நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: நீங்கள் புரிந்துகொள்ள வேண்டிய அடுத்த அடிப்படை ஸத்யம் ஒன்று. அனுபவம், அனுபவிக்கப்படும் பொருள், அனுபவிப்பவர் - இந்த மூன்றிற்கும் இடையிலே எந்த இடைவெளியும் இல்லை ஐயா.

இந்த மூன்றையும் 'தனித்தனியானவர்' என்று நீங்கள் நினைக்க, 'தனித்தனியானவைகள்' என்று நீங்கள் நினைப்பதுதான் உங்களுடைய மிகப்பெரிய முதல் மாயை, பொய், delusion> brain washing.

உங்களுக்கு உள்ளே நடப்பது, வெளியில் நடப்பது - எல்லாவற்றையும் ஸாக்ஷியாகப் பாருங்கள். Observing the observer. Witnessing the witness ஸாக்ஷியை சற்றே தள்ளி நின்று, என்ன நடக்கின்றது என்று பார்த்தீர்களானால், first இதுதான் புரியும். The quantum world of awareness-ல் think பண்றவருக்கும், thought-க்கும், observer-க்கும், observed-க்கும், அதாவது அனுபவிப்பவருக்கும், அனுபூதிக்கும், அனுபவிக்கப்படுவது - இந்த மூன்றிற்கும் இடையிலே எந்த வித்தியாசமும் இல்லை.

இந்த distinction, இந்த separations எல்லாமே, ஒரு வசதிக்காக, comfort-க்காக சமூகம் உங்களுக்குக் கற்றுக்கொடுத்த ஒரு illusion. இதை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். Observing the observer, Witnessing the witness - இதைச் செய்தீர்களானாலே, முதல் விஷயம் உங்களுக்கு என்ன புரியும் என்றால், நீங்கள் சிந்திக்கவில்லை. 'நீங்கள்' என்கின்ற ஒரு space-ல் இந்த எண்ணங்கள் பொங்குகின்றன. சிந்தனை நிகழுகின்றது. நீங்கள் சிந்திக்கவில்லை. 'நீங்கள்' என்கின்ற ஒரு space-ல், ஒரு உணர்வு ஆதாரத்தில், குளம் மாதிரி அப்படியே அந்த எண்ணங்கள் பொங்கிக்கொண்டிருக்கின்றன. அதில் எண்ணங்கள் வெளியில் நடக்கின்றது என்று நீங்கள் நினைக்கின்றீர்கள். சிலது உள்ளுக்குள் நடக்கின்றது என்று நீங்கள் நினைக்கின்றீர்கள். சிலது இரண்டையும் இணைக்கின்ற அனுபவம் என்று நினைக்கின்றீர்கள். இந்த எல்லா குழப்பங்களும் இருக்கும்.

ஆனால், உண்மை என்னவென்று ஸாக்ஷியாகப் பார்த்தீர்களானால், When you witness the witness, observe the observer, Be Sakshi… The first you will realize, there is no separation between thinker and the thought, observer and the observed. All distinctions are useful illusions, convenient boundaries drawn on the surface of the ocean. பெருங்கடலின் மீது கைகளாலே வரையப்படும் வேலி எவ்வாறு இருக்குமோ, அது மாதிரிதான் நம்முடைய comfort-க்காக, நாம் போட்டுக்கொண்ட boundary தான் ஐயா இந்த thinker தனி, thought தனி, think பண்ணப்படுகின்ற object தனி என்று பிரித்துக்கொண்டது.

அனுபவம் தனி, அனுபவிப்பவன் தனி, அனுபவிக்கப்படும் பொருள் தனி என்று பிரிப்பதே, கடல் மீது கைகளாலே கோடு போட்டு, வேலியாகப் பிரித்துக்கொள்வதைப் போன்றதுதான். கொஞ்சம் அப்படியே பாருங்கள்: எண்ணங்களைப் பார்த்தீர்களானால், 'நீங்கள்' என்கின்ற உங்களுடைய space-ல் இருந்து அந்த எண்ணங்கள் அப்படியே பொங்கிக்கொண்டிருக்கின்றன. அவ்வளவுதான். அது ஒன்றும் உங்களுடைய கட்டுப்பாட்டிலோ, உங்களுடைய விழிப்பிலேயோ நடக்கவில்லை ஐயா.

நீங்கள் அந்த சுத்தமான மஹாகாஶம். அதாவது மேகங்கள்தான் எண்ணங்கள் என்றால், மேகங்களே இல்லாத, மேகங்களுக்கு அப்பாற்பட்ட மஹாகாஶம்தான் நீங்கள். ஆகாஶம், அதுதான் நீங்கள்.

இந்த எண்ணங்கள், மேகம் மாதிரி. உணர்ச்சி கொந்தளிப்புகள், புயல் - Storm மாதிரி.

இந்த உணர்ச்சிக் கொந்தளிப்புகள் இடி, மின்னல், மேகம் - இது எல்லாமே வரும், போகும். ஆனால் நீங்கள் அது அல்ல. எப்பேற்பட்ட இடியானாலும், மின்னலானாலும், புயலானாலும், மேகமானாலும், ஆகாஶத்தை அது பாதிப்பது கிடையாது, பாதிக்க முடியாது.

அதேபோல், எப்பேற்பட்ட எண்ணமானாலும், உணர்ச்சிக் கொந்தளிப்பானாலும், பயமானாலும், ஏக்கமானாலும், என்னவாக இருந்தாலும், 'உங்களை' அது பாதிக்க முடியாது.

ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள்: கொஞ்சம் அப்படியே பாருங்கள்... எப்பேற்பட்டப் பெருந்துக்கமான எண்ணமாக இருந்தாலும், துக்கமாக இருந்தாலும், 'காபி குடிக்க வேண்டும்' என்று தோன்றிய உடனே பார்த்தீர்களானால், அந்தத் துக்கத்தைத் தாண்டி இன்னொரு எண்ணம் வந்தால்தான், அந்த 'காபி குடிக்க வேண்டும்' என்ற எண்ணமே வருகின்றது.

கொஞ்சம் ஆழ்ந்து பாருங்கள் ஐயா... சிலநேரத்தில் நீங்கள் நினைப்பீர்கள், 'ஐயோ, இவ்வளவு பெரிய துக்கம் ஆச்சே. இதில் இருந்து எப்படி வெளியே வருவேன்?' என்று துக்கத்தைப் பார்த்து பயப்படுதல். 'இந்த துக்கத்துல இருந்து நான் எப்படி வெளியில வருவேன்' என்று பயப்படுவது. ஆனால், அந்த நேரத்தில் உங்களுக்குச் சாதாரணமாக, 'ஒரு காபி குடிக்கவேண்டும்' என்று எண்ணம் வந்தாலும் சரி அல்லது 'ரொம்ப முடியல, போய் படுத்து இருக்கலாம்ப்பா' என்ற எண்ணம் வந்தால்கூட சரி, அந்தத் துக்கத்தைத் தாண்டித்தான் இந்த எண்ணம் வந்திருக்கின்றது.

எந்த எண்ணமும் நிரந்தரமாக உங்களைப் பாதிக்கவே இயலாது. அது எந்த அளவிற்குப் பாதிக்கும் என்று நீங்கள் கற்பனை செய்து, அதைப் பிடித்து இழுத்து வைக்கின்றீர்களோ, அந்த அளவிற்குத்தான் அது உங்கள் மீது சுற்றுமே தவிர, அப்பொழுதும் உங்களைப் பாதிக்க முடியாது.

மேகமும், மின்னலும், இடியும், புயலும் - 'வரும் - செல்லும்'. ஆனால் ஆகாஶத்தை அது பாதிப்பதில்லை, பாதிக்க இயலாது. அதேபோல எண்ணங்களும், உணர்ச்சிக் கொந்தளிப்புகளும், உணர்வுகளும், உங்களுக்குள் வரலாம், போகலாம். ஆனால், அது உங்களைப் பாதிப்பதில்லை, பாதிக்க இயலாது.

சிலபேர் என்னிடம் வந்து கேட்பதுண்டு, அந்த நிலைமையை எப்படி சாமி அடைய முடியும்? அடைய முடியுமா சாமி? என்று.

ஐயா, 'அடைய முடியும்' என்பது மட்டுமல்ல, அது INEVITABLE. நீங்கள் 'அதில்தான்' இருக்கின்றீர்கள். அந்த நிலையில்தான் இருக்கின்றீர்கள். 'அடைய முடியுமா?' என்பது கேள்வி அல்ல. அந்த நிலையை தவிர்க்க முடியாது என்பதுதான் ஸத்யம்.

இதை எப்படி அனுபூதியாக மாற்றிக்கொள்வது? அதுதான் இருக்கிறது சரி, அது எப்படி அனுபூதியாக மாற்றிக்கொள்வது? என்றால்… அதைச் சொல்கிறேன். புரிந்துகொள்ளுங்கள். அடுத்த ஸத்யம்: அந்த அனுபூதியாக மாற்றிக்கொள்கின்ற process என்ன? Awakening process -ஐ சொல்கின்றேன், கேளுங்கள். முதல் புரிதல் உங்களுக்கு வர வேண்டியது, உங்கள் வாழ்க்கையில், பல்வேறு விதமான, அதாவது நீங்கள் கேள்வி கேட்காத, conscious -ஆக ஆராயாத, உற்று கூர்ந்து நோக்காத பல்வேறு விதமான assumptions-ஐ வைத்து, உங்களை நீங்களே வடிவமைத்திருக்கின்றீர்கள்

நீங்கள் கேள்வி கேட்காத, conscious-ஆக உற்றுப்பார்க்காத, புரிந்துகொள்ளாத, பல்வேறு விதமான கருத்துக்கள், assumptions-ஐ கொண்டு உங்கள் வாழ்க்கையையே வடிவமைத்துக் கொண்டிருக்கின்றீர்கள்.

ஐயா உங்களுக்கு, உங்கள் வாழ்க்கையில் நீங்கள் assume பண்ணிக்கொள்கின்ற பல விஷயங்கள், உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய முடிவுகளை எல்லாம் எடுப்பதற்கு நீங்கள் வைத்திருக்கின்ற assumptions கூட, assumption-னே தவறானதாக இருக்கும். Assumption-னே தவறானதாக இருந்து, அதை வைத்து முடிவெடுத்தீர்களானால், வாழ்க்கை என்ன ஆகும்? அது மாதிரிதான், assumption-னே தவறாக வைத்து, உங்கள் வாழ்க்கையில் பல முடிவுகளை எடுத்துக்கொண்டிருக்கிறீர்கள். அதைப் புரிந்துகொள்ளுங்கள்.

முதல் விஷயம்: முக்கியமானப் புரிதல் - 'நீங்கள்' என்கின்ற அந்த உங்களை, ஏதோ fixed- ஆன, ஒரு permanent-ஆன, உங்கள் நினைவுகள், உங்களுடைய ஆசை, அச்சங்கள், இது எல்லாம் மையமாக கொண்டு ஒரு permanent -ஆன entity என்று நீங்களே நினைத்துக்கொண்டிருக்கின்றீர்கள்.

ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை உங்களுடைய நினைவுகள், ஆசைகள், அச்சங்கள் இதெல்லாம் காணாமல் போவதைப் பார்க்கலாம். ஒரு பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை, முழுமையாக எல்லாமே காணாமல்போய்விடுகின்றது. இதை அப்படியே திரும்பிப் பார்த்தீர்களானால் புரிந்துகொள்ளலாம்.

ஐயா, உங்களுடைய கடந்தக் காலத்தைப்பற்றி, ஒரு பத்து வருடங்களுக்கு முன்பாக நீங்கள் வைத்திருந்தக் கருத்து, 5 வருடங்களுக்கு முன்பாக நீங்கள் வைத்திருந்தக் கருத்து, இப்பொழுது நீங்கள் உங்கள் கடந்தக் காலத்தைப் பற்றியும், உங்களைப் பற்றியும் வைத்திருக்கின்ற கருத்து முழுமையாக மாறி இருக்கின்றது.

பத்து வருடங்களுக்கு முன்பாக உங்களுக்கு இருந்த ஆசைகள், அச்சங்கள், ஐந்து வருடங்களுக்கு முன்பாக உங்களுக்கு இருந்த ஆசைகள், அச்சங்கள், இப்பொழுது உங்களுக்கு இருக்கின்ற ஆசைகள், அச்சங்கள் முழுமையாக மாறி இருக்கின்றன.

ஏனென்றால், உங்களுக்குள் இருக்கிற எல்லா spare parts-ம் மாறிவிட்டது. ஆனால் நீங்கள் என்னமோ, நீங்கள் permanent-ஆக இருக்கின்ற மாதிரி நம்பிக்கொண்டிருக்கின்றீர்கள்.

வேறு வேறு வேறு time-ல், வண்டியினுடைய நான்கு சக்கரத்தையும் மாற்றியமைத்தாகிவிட்டது. அடிப்படை அந்த base structure- ஐ மாற்றியமைத்தாகிவிட்டது. இழுக்கின்ற அந்த கயிரை மாற்றியமைத்தாகிவிட்டது. மேல் குடையை மாற்றியமைத்தாகிவிட்டது. எல்லாவற்றையும் மாற்றியமைத்தாகிவிட்டது. ஆனால், பத்து வருஷம் கழித்தும் அதே வண்டி என்று 'நம்மை' நினைத்துக்கொண்டு அமர்ந்துகொண்டிருக்கின்றோம்.

இரண்டு வருடங்களுக்கு முன்பாக வண்டியின் wheel-ஐ மாற்றினோம். ஐந்து வருடங்களுக்கு முன்பாக base-ஐ மாற்றினோம். எட்டு வருடங்களுக்கு முன்பாக மேல் குடையை மாற்றினோம். எட்டரை வருடங்களுக்கு முன்பாக கயிறை மாற்றினோம். இப்பொழுது பத்து வருடங்களுக்குப் பிறகு, அதில் இருக்கின்ற ஒரே ஒரு part கூட, அதே part கிடையாது. ஆனால் அதே வண்டி என்று கற்பனையில் நினைத்துக்கொண்டிருக்கின்றோம்.

உங்களைப் பற்றி நீங்கள் வைத்திருந்த கருத்து, உங்களுடைய கடந்த காலத்தின் தொகுப்புதான். கடந்தக் காலத்தைப் பற்றி நீங்கள் வைத்திருக்கின்ற நினைவுகளின் தொகுப்புதான் 'நீங்கள்' என்று உங்களை உணர்வது. அந்த part எல்லாமே மாறிவிட்டது.

ஐந்த வருடங்களுக்கு முன்பாக திடீர் என்று உங்கள் பயங்கள் எல்லாமே போய், வேறு பயம் வந்துவிட்டது. நான்கு வருடங்களுக்கு முன்பாக திடீர் என்று உங்கள் ஆசைகள் எல்லாம் போய், வேறு ஆசை வந்துவிட்டது. எட்டு வருடங்களுக்கு முன்பாக திடீர் என்று உங்களைப் பற்றி நீங்கள் வைத்திருந்த கடந்த கால memories எல்லாம் போய், வேறு மாதிரி memories உருவாக ஆரம்பித்துவிட்டது.

ஆனால் இப்போது, பத்து வருடத்திற்கு முன்னால் இருந்த அதே நபர்தான் நீங்கள் இப்பொழுதும் என்று ஒரு கற்பனையான, மூளைச்சலவை செய்யப்பட்ட, ஒரு assumptions- ல் உட்கார்ந்துகொண்டு இருக்கின்றீர்கள்.

உங்களைப் பற்றி நீங்கள் வைத்திருக்கும் கருத்திலே, எவ்வளவு போலித்தன்மை இருக்கின்றது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். உங்கள் மீது உங்களுக்கு இருக்கின்ற குற்ற உணர்ச்சி, உங்கள் மீது உங்களுக்கு இருக்கின்ற சந்தேகம் - இது எல்லாமே போலி ஐயா.

உங்களுக்கு நான் சொல்கின்ற மிகப்பெரிய நல்ல செய்தி: 'நீங்கள், உங்களிடமிருந்து சுதந்திரம் அடையப் போகின்றீர்கள்' என்பதுதான். ஏனென்றால், உங்களை மிக அதிகபட்சம் torture பண்ணுகின்ற ஒரே ஆள் யார் என்றால், நீங்கள்தான்! எப்பேற்பட்ட எதிரியும் உங்களோடு 24 மணி நேரமும் உங்களுடன் இருந்து உங்களை torture பண்ணுவதில்லை. ஆனால் நீங்கள் 24 மணி நேரமும் உங்களோடு இருந்துகொண்டு, உங்களை torture பண்ணிக்கொண்டிருக்கின்றீர்கள்.

அதில் கொடுமை என்னவென்றால், அந்த torture-க்கு காரணம், எல்லாமே வெளியில் இருக்கின்றவர்கள், மற்ற நபர்கள் அல்லது சூழ்நிலை, சமூகம், வாழ்க்கை என்று எதன்மீதாவது பழியைப் போட்டுக்கொண்டிருப்பீர்கள். உண்மையான காரணத்தைத் திரும்பிப் பார்க்கவே மாட்டீர்கள். பெரும்பாலானவர்கள் இப்படியே செத்துப் போய்விடுகின்றார்கள்.

ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள். கனவுகள் மாறும்பொழுது identity-யும் மாறுகின்றது ஐயா. கனவில் நீங்கள் வைத்திருக்கின்ற அந்த கானல் நீர், நனவிற்கு நீங்கள் வரும்பொழுது, நிழல் நீயாக மாறுகிறது. இதுவே அடுத்த நிலைக்கு, துரியத்திற்குப் போகும்பொழுது, நிஜ நீயாக மாறிவிடும். அல்லுது நிஜ நீயை, நீங்கள் விழிப்படையச் செய்யும்பொழுது, துரியத்திற்குப் போய்விடுவீர்கள்.

The dream is shifting, universe is asking, ‘are you ready to remember?’ Wake up! கானல் நீயும், நிழல் நீயும், கலைகின்றது. நிஜ நீ, உதிக்கின்றது, மலருகின்றது. நீங்கள் தயாரா? இந்த வார்த்தைகளை நான் சொல்லும்பொழுது, உங்கள் உடலுக்குள் நிகழும் ஶக்தி சலனம், ஶக்தி ஓட்டம், உங்கள் awareness-ல் ஏற்படுகின்ற அமைதி, புரிதல் - இதில்தான், உங்களுக்குள் அந்த நிஜ நீ விழிப்படையத் தயாராகுகின்றது. அந்த விழிப்பு நிலை, துரிய நிலையில் கானல் நீயும், நிழல் நீயும் கரைந்து, நிஜ நீ மலரத் துவங்குகின்றது என்று புரிந்துகொள்ளுங்கள். இதுதான் அதனுடையsignal, signs of awakening. The quantum youமலரத் துவங்குகிறது. விடியத் துவங்குகிறது. விழிக்கத் துவங்குகிறது. ஸாக்ஷியை, உங்களுக்குள் நடப்பது அத்தனையையும் உள்ளேயும் வெளியேயும் நடக்கின்ற, அத்தனையும் ஸாக்ஷியாகப் பாருங்கள். அந்த ஸாக்ஷியையே ஸாக்ஷியாகப் பாருங்கள். Witness the witness. Observe the observer. நான் சொல்லும் எல்லா ஸத்யங்களும் அனுபூதியாக மலரும்.

அடுத்த ஸத்யம்: நாம் எல்லோரும் நினைப்பது… 'எனக்கு இவ்வளவு ஆசை இருக்கே சாமி. இவ்வளவு ஆசையை வைத்துக்கொண்டு, என்னால் அந்த பரமானுபூதியை அடைய முடியுமா?'

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: ப்ரபஞ்சமே… அதாவது பரமானுபூதியை மையமாக வைத்து இயங்குகின்ற ப்ரபஞ்சமே, விரிந்துகொண்டே இருக்கின்றது.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: இப்பொழுது நான் சொல்வது அறிவியல் உண்மை. இந்த ப்ரபஞ்சமே, தொடர்ந்து விரிந்துகொண்டே இருக்கின்றது. Universe is expanding. அதனால், ஆசை என்பது, 'தன்னிடம் ஏதோ இல்லை, குறை' என்கின்ற உணர்வை உங்களுக்கு ஏற்படுத்தினால், அந்த குறைஉணர்வுதான் தவறே தவிர, தான் expand ஆகிக்கொண்டே போவது, விரிவடைந்து கொண்டே செல்வது என்கின்ற தெளிவோடு பொங்குமானால், அந்த ஆசை சரியானது.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: ஆசை சரியா தவறா? என்று கேட்டீர்களானால், இதுதான் விடை. ஆசையே தவறல்ல. 'நீங்கள் ஏதோ இல்லாதவர், குறைபட்டவர்' என்கின்ற எண்ணத்தில், என்கின்ற மாயையில், என்கின்ற மயக்கத்தில், என்கின்ற தவறானக் கருத்திலிருந்து ஆசை தோன்றுமானால், அந்த ஆசை தவறு.

'நீங்கள் முழுமை'. - இந்த முழுமை, 'தன்னை' மேம்படுத்திக்கொள்கின்றது, விளக்கிக்கொள்கின்றது, விரிவடைகின்றது. தொடர்ந்து விரிவடைகின்றது… அதாவது தொடர்ந்து விரிவடைதல் வாழ்க்கையின் இயல்பு, ப்ரபஞ்சத்தின் இயல்பு. இறைவனுடைய இருப்பின் இயல்பு... 'நிறை'… 'மேலும் பொங்கிப் பொங்கிப் பொங்கி விரிவடைவது, உங்கள் இயல்பு' என்று புரிந்து, அதிலிருந்து வரும் ஆசைகள் நல்லவை. அவை, கெட்டவை இல்லை. இது முதலாவது.

இரண்டாவது, அதுதான் உங்கள் வாழ்க்கையினுடைய direction - விரிவின் திசைகாட்டி. உங்கள் வாழ்வினுடைய மலர்ச்சியின் வழிகாட்டி. உங்கள் வாழ்வினுடையப் போக்கின் திசைகாட்டி. அதனால், நீங்கள் தேடும் எல்லாமே, 'நீங்கள் தான்' என்று புரிந்து, உங்களுக்குள் இருந்து பொங்கும் ஆசை தவறானது அல்ல. அது, உங்களுடைய மலர்ச்சியின், விரிவின் வழிகாட்டி. இவை இரண்டிற்கும் வித்தியாசம் புரிந்துகொள்ளுங்கள்.

'குறை'வில் இருந்து வரும் ஆசைகள் நிறைவேறுவதே இல்லை. 'நிறை'வில் இருந்து வரும் ஆசைகள் , நிறைவேறாமல் போவதும் இல்லை.

குறைவில் இருந்து வரும் ஆசைகள் நிறைவேறுவதே இல்லை. நிறைவு நிறைவிலிருந்து, நிறைவில் இருந்து பொங்குகின்ற ஆசைகள்… நிறைவு நிறைவிலிருந்தே, வாழ்க்கையின் விரிவு நிகழ்ந்து கொண்டே இருக்கும்.

அதைத்தான் உபநிஷதம் மிக அழகாகச் சொல்கின்றது... பூர்ணமத: பூர்ணமிதம் - நிறைவில் இருந்து நிறைவு பொங்குகின்றது. முழுமையில் இருந்து முழுமை பொங்குகின்றது. முழுமையில் இருந்து பொங்கும் முழுமையை, முழுமையில் இருந்து பிரித்தாலும் குறைவதில்லை, முழுமையாகவே இருக்கின்றது.

பூர்ணமத பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே I பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவா வஸிஷ்யதே II ஓம் ஶாந்தி ஶாந்தி ஶாந்தி: II

ஆழ்ந்து கேளுங்கள்... ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள்: உங்கள் ஆசைகளைச் சற்றே ஆழ்ந்து பாருங்கள். ஸாக்ஷியாக, பொங்கும் எண்ணங்கள் அனைத்திற்கும் ஸாக்ஷியாக இருந்து பார்த்தீர்களானால், 'உங்களிடம் ஏதோ ஒன்று இல்லை என்றும், குறை என்றும்' நீங்கள் குறைவாக உணர்வதனால் அதிலிருந்து பொங்கும் ஆசைகள் நிறைவேறுவதே இல்லை. நிறைவேறினாலும், நீங்கள் அதை முழுமையாக, நிறைவாக உணர்வதும் இல்லை. பொருளை அடைந்தாலும், அந்த ஆசை அடையப்பட்டாலும், திருப்தி அடையப்படுவதில்லை. நிறைவு அடையப்படுவதில்லை.

நிறைவில் இருந்து பொங்குகின்ற எல்லா ஆசைகளும் விரிவு என்பதனால், அது நிகழ்ந்து கொண்டே இருக்கும். அது உங்களுக்கு ஒருநாளும், ஒருபொழுதும், பொங்கும் பொழுதும், மலரும்பொழுதும், எக்காலத்தும், அது உங்களுக்குக் குறை உணர்வைத் தருவதில்லை.

உருவாகும் பொழுதும், மலரும் பொழுதும், நிறைவாக மாறும் பொழுதும், அது உங்களுக்குக் குறை உணர்வையே தராததாக இருக்கும்.

Desire is not a signal of lack, but a signal of direction. Desire is, life saying, ‘come this way.’

நிஜமான ஆசை, வாழ்க்கைக் காட்டுகின்ற வழி. விரிவிற்கும், தன் ஸ்வபாவமான மலர்ச்சிக்கும், பெரும் விரிவிற்கும், வாழ்வு காட்டும் வழி, நிஜமான ஆசைகள்.

நிஜமான 'நீங்கள்', ஆசைகளைத் தேடி ஓடுவதில்லை. அது நிகழ்வதற்கு அனுமதிக்கின்றீர்கள். அவ்வளவுதான்.

அந்த ஆசைகளைத் தேடி 'நீங்கள்' ஓடுவதில்லை, பிக்ஷை எடுப்பதில்லை. அது தானாக உங்களை நோக்கி வருவதற்கு, உங்கள் வாழ்க்கையில் நிஜமாவதற்கு அனுமதிக்கின்றீர்கள். அவ்வளவுதான். அங்கு struggle இருக்காது. கஷ்டம் இருக்காது. Effort-ஏ இருக்காது ஐயா. Relaxed-ஆக, effortless precision-ல் நடக்கும். எந்தவிதமான stress-ஓ, effort-ஓ, பயமோ, அச்சமோ, anxiety-யோ, அழுத்தமோ, 'இல்லாமல் போய்விடுமோ' என்ற ஏக்கமோ எதுவுமே இல்லாமல், இனிமையான இயக்கத்தைப்போல, கங்கை பொங்கி இனிமையாய் ஓடுவதைப்போல, வாழ்க்கையின் விரிவாக இது விரியும். இதுதான் ஐயா கல்பதரு.

பூர்ணத்வத்தில் இருந்து வெளிப்படுவது எல்லாமே, பூர்ணமாக ஆகிக்கொண்டே செல்லும்.

கானல் நீயையும், நிழல் நீயையும் - 'நீ' என்று நினைத்துக் கொண்டு, கதவை அடைத்துவிட்டு, உள்ளே புழுக்கமும், வேதனையும், கொந்தளிப்பும், பயமும், துக்கமும் இருப்பதைப் புரிந்துகொண்டு... கதவைத் திறங்கள் - ஜ்ஞாநக் காற்று வரட்டும். கதவைத் திறங்கள் - பரமுக்திக் காற்று வரட்டும். கதவைத் திறங்கள் - ஆனந்தக் காற்று வரட்டும். கதவைத் திறங்கள் - ஜீவன்முக்திக் காற்று வரட்டும்.

'நிஜ நீ எது?' என்று உங்களுக்குள் பாருங்கள். அனுபவிப்பவன், அனுபவம், அனுபவிக்கப்படுவது - இந்த மூன்றும் எங்கிருந்து தோன்றுகின்றதோ, அதைப் பாருங்கள். நிஜ நீ யார்? என்று விழித்துக்கொள்வீர்கள்!

'ALIGNMENT' IS, RECOGNIZING 'YOU AND THE UNIVERSE' IS NEVER TWO, WAS NEVER TWO, WERE NEVER TWO, IS NEVER TWO, WILL NEVER BE TWO.

விழிப்பென்பது, ஜ்ஞாநமென்பது, 'நீங்களும், இந்த ப்ரபஞ்சமும் ஒருகாலத்தும் தனித்தனியாக, இரண்டாக இருந்ததில்லை, இருப்பதுமில்லை, இருக்கப் போவதுமில்லை' என்ற புரிதலே விழிப்பு.

एको देवः सर्वभूतेषु गूढः सर्वव्यापी सर्वभूतान्तरात्मा। कर्माध्यक्षः सर्वभूताधिवासः साक्षी चेता केवलो निर्गुणश्च॥ 6.11

ஏகோ தேவ: ஸர்வபூதேஷு கூட: ஸர்வ வ்யாபி ஸர்வபூதாந்தராத்மா । கர்மாத்யக்ஷ: ஸர்வபூதாதிவாஸ: ஸாக்ஷீ சேதா கேவலோ நிர்குணஸ்ச ॥ 6.11

ஸ்வேதாஸ்வர உபநிஷதத்தில் மிக அருமையான ஸத்யம்.

ஒரே உயர் ஸத்யமான பரம்பொருள் எல்லா உயிர்களிலும் நிறைந்து, மறைந்து இருக்கின்றது. அது எங்கும் நிறைந்தது. எல்லா உயிருக்கும் உள் ஆன்மாவாய் இருக்கின்றது. அதுவே கர்மங்களை ஸாக்ஷியாய் மேற்பார்வை செய்கின்றது. எல்லா உயிர்களிலும் வாசம் செய்கின்றது. அது ஸாக்ஷி, சிந்திக்கும் அறிவு, தனிமை, குணங்கள் இவைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டது.

ஏகோ தேவ: ஸர்வபூதேஷு கூட: ஸர்வ வ்யாபி ஸர்வபூதாந்தராத்மா । கர்மாத்யக்ஷ: ஸர்வபூதாதிவாஸ: ஸாக்ஷீ சேதா கேவலோ நிர்குணஸ்ச ॥

அதனால், உங்களுடைய நிஜ நீ-யைப் புரிந்துகொண்டு, அதிலிருந்து வருகின்ற எந்த ஆசையும், அச்சமும் உங்களுக்குக் கெடுதி இல்லை. ஆனால், உங்கள் கானல் நீயிலிருந்து, நிழல் நீயிலிருந்து வருகின்ற எல்லாமே உங்களுக்குக் கெடுதிதான். 'நன்மை' என்று நினைத்தால் கூட, அதுகூட உங்களுக்குக் கெடுதிதான்.

இந்த நிழல் நீயிலிருந்து ஒரு ஆசையோ, அச்சமோ வந்தது என்றால், அதற்கு நீங்கள் எப்படி react பண்ணினாலும் மாட்டிக்கொள்வீர்கள். உங்கள் மனைவியோடும், கணவரோடும் நடக்கின்ற argument-ல், நீங்கள் எந்த stand எடுத்தாலும் மாட்டினீர்கள். அந்த argument-க்குள் நுழைந்தாலே நீங்கள் fail ஆகவிட்டீர்கள்.

ஏனென்றால், நீங்கள் என்ன answer பண்ணப்போகின்றீர்கள் என்று அவர்கள் complete-ஆக prepare செய்துவிட்டு, நீங்கள் அடுத்துக் கொடுக்கப் போகின்ற எட்டு answer-க்கும் அவர்கள் mental-ஆக ready பண்ணி, எந்த answer-க்கு என்ன argument வைக்கவேண்டும் என்று clean- ஆக plan பண்ணி விட்டுத்தான் அவர்கள் உங்களிடம் எடுத்துக்கொண்டு வருகின்றார்கள்.

அதனால், அது legal argument இல்லை ஐயா... law fare... அது prosecution இல்லை, persecution ஐயா. அந்த argument-ல் எந்த direction-ஐ நீங்கள் எடுத்தீர்களானாலும் போச்சு, முடிந்தது, மாட்டினீர்கள்.

அதனால், நிஜ நீயை விழிப்படைய வைப்பதற்காக, ஸாக்ஷியாக இருப்பதுதான் நீங்கள் செய்ய வேண்டிய முதல் சரியான செயல். Witnessing the witness. Observing the observer.

அடுத்த ஸத்யத்தைக் கேளுங்கள். உண்மையில், நீங்கள் எதிர்பார்க்காத சூழ்நிலையில்தான் அந்த நிஜ நீ மலரத் துவங்கும். திடீர் என்று ஏதோ ஒரு கருத்து மனதிற்குள் உதிக்கும். திடீர் என்று ஒரு ஜ்ஞாநக் கருத்து உங்களுக்குள் அனுபூதியாகப் புரிய ஆரம்பிக்கும். திடீர் என்று ஒரு glimpse மாதிரி அந்தப் புரிதல் அப்படியே மலரும். சூரிய உதயம் மாதிரி உங்களை அறியாத ஒரு புரிதல். அது coincidence கிடையாது ஐயா. ஸாக்ஷியை ஸாக்ஷியாகப் பார்க்க ஆரம்பித்தீர்களானால், அது inevitable awakening. ஸாக்ஷியை ஸாக்ஷியாகப் பார்க்க ஆரம்பியுங்கள்.

உங்களுக்கு உள்ளேயும் வெளியிலேயும் என்னென்னவெல்லாம் நடக்கின்றதோ, அதை ஸாக்ஷியாகப் பாருங்கள். 'அந்த ஸாக்ஷியாகப் பார்ப்பது யார்?' என்று அவரையும் ஸாக்ஷியாகப் பாருங்கள். ஸாக்ஷியை ஸாக்ஷியாகப் பார்ப்பவர் யார் என்றும் ஸாக்ஷியாகப் பாருங்கள். இதைப் பார்க்கும்பொழுது coincidence இல்லை, inevitable awakening நடக்கும். அப்பொழுதுதான் life refuses to let you remain asleep, when the cocoon becomes too tight. வாழ்க்கை மிகவும் புழுக்கமாகும்போது, ப்ரபஞ்சம் உங்களைத் தொடர்ந்து தூங்குவதற்கு அனுமதிக்காது. கதவைத் திறக்கச் சொல்லித் தட்டும். கதவைத் திறந்துவிடும்.

இப்பொழுது, வெளியிலிருந்து இந்த வார்த்தைகள் மூலமாக, கதவைத் திறக்கச் சொல்லி நான் தட்டுகின்றேன். உங்களுக்குள் ஶக்திபாதத்தை அளித்து, தீக்ஷையை அளிப்பதன் மூலமாக, உள்ளுக்குள்ளிருந்து கதவைத் திறந்தும் விடுகின்றேன். காற்று வரட்டும். ஜ்ஞாநக் காற்று வரட்டும். ஆனந்தக் காற்று வரட்டும்.

வடக்கிருந்து வந்தால் அது வாடை. தெற்கிருந்து வந்தால் அது தென்றல். கைலாயத்திலிருந்து வந்தால் அது ஜ்ஞாநக் காற்று. கைலாயத்திலிருந்து வருகின்ற ஜ்ஞாநக் காற்று வரட்டும், உயிர்க் கதவைத் திறந்திடுங்கள். மனக்கதவைத் திறந்திடுங்கள்.

கானல் நீயும், நிழல் நீயும் திறக்கட்டும். நிஜ நீ பிறக்கட்டும்! நிஜ நீ விழிக்கட்டும்! ப்ரபஞ்சம் உங்கள் கதவைத் தட்டுகின்றது. இந்த வார்த்தைகளின் மூலமாக, இந்த தீக்ஷையின் மூலமாக, ப்ரபஞ்சமே உங்களுக்குள்ளிருந்து கதவையும் திறந்து விடுகின்றது.

'கதவைத் திற காற்று வரட்டும்'

இன்று முதல் நாள் ப்ரஹ்மோத்ஸவத்தின், அவதார தின மஹோத்ஸவத்தின், நித்யானந்த உத்ஸவத்தின் பூஜைகள், உலகம் முழுவதிலும் இருக்கும் எல்லா கைலாயங்களிலும் நிகழவிருக்கின்றன.

அவைகளைத் தரிசித்தவாரே அமருங்கள்.

உங்களுக்குள் ஶக்தி பாதத்தையும், ஶக்தினி பாதத்தையும், ஜ்ஞாந ஶக்தியைப் பாய்ச்சி, ஶக்தி தர்ஶநம் அளிக்கின்றோம்.

இந்த அனுபூதி, நான் சொல்லும் இந்த அனுபூதி உங்களுக்குள் இப்பொழுது மலரத் துவங்கும்.

ஆழ்ந்து கேளுங்கள். இப்பொழுது நான் சொல்கின்ற எல்லா ஸத்யங்களையும், உங்களால் முடிந்த அளவிற்கு ஶ்ரத்தையோடு செய்யுங்கள்.

இப்பொழுது, அடுத்த ஒரு பத்து நிமிடம் ஸாக்ஷியை ஸாக்ஷியாகப் பார்த்து அமைதியாக அமருங்கள். Witnessing the witness Observing the observer. Sit.

இந்த ஸத்யங்களை உங்களுக்குள் அனுபூதியாக மாற்ற வேண்டியது என் பொறுப்பு.

நிமிர்ந்து அமருங்கள். கண்களைத் திறந்தும் இருக்கலாம், மூடியும் இருக்கலாம், உங்கள் விருப்பம். ஆனால், உள்ளுக்குள்ளும், வெளியிலும், உங்களைச் சுற்றிலும் நடக்கின்ற எல்லாவற்றையும் ஸாக்ஷியாகப் பாருங்கள். React பண்ணாதீர்கள், Endless diversions-ல் divert ஆகாதீர்கள். Endless distractions-ல் distract ஆகாதீர்கள்.

உள்ளும் - வெளியும் - நடப்பது அனைத்தையும் ஸாக்ஷியாகப் பாருங்கள்.

ஏகோ தேவ: ஸர்வபூதேஷு கூட: ஸர்வ வ்யாபி ஸர்வபூதாந்தராத்மா । கர்மாத்யக்ஷ: ஸர்வபூதாதிவாஸ: ஸாக்ஷீ சேதா கேவலோ நிர்குணஸ்ச ॥ 6.11

நிமிர்ந்து அமருங்கள். ஸாக்ஷியாக இருங்கள்.

நீங்கள் எல்லோரும் ஸாக்ஷி நிலையிலே நிலைபெற்று, 'நீங்கள் பரம்பொருள்' என்பதை உணர்ந்து, பரமானுபூதியில் திளைத்து, நித்யானந்தத்தில் நிலைத்திருக்க ஆசீர்வதிக்கின்றேன். ஆனந்தமாக இருங்கள்.



Event Photos

Photo 1 Photo 2 Photo 3
Photo 4 Photo 5 Photo 6
Photo 7 Photo 8 Photo 9
Photo 10 Photo 11 Photo 12
Photo 13 Photo 14 Photo 15
Photo 16 Photo 17 Photo 18
Photo 19 Photo 20 Photo 21