Jun 11 2025
Title
நித்யானந்த பௌர்ணமி 2025 தமிழ் சிறப்பு சத்சங்கம் | Nithyananda Purnima 2025 Tamil Satsang
Link to Video
Transcript
ஒம் ஒம் நித்யானந்தேஷ்வர பரமசிவ சமாரம்பாம் நித்யானந்தேஷ்வரி பரமசிவசக்தி மத்யமாம் அஸ்மதாசார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம் ஒம் ஒம் ஒம்
உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன். உலகம் முழுவதிலும் இதயத்தாலும் இணையத்தாலும் இணைந்திருக்கும் அன்பர்கள், பக்தர்கள், சீடர்கள், கைலாஸவாசிகள், பல்துறை சிறப்பு சாதனையாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் பல்வேறு தொலைக்காட்சிகள் வழியாக இணையத்தின் மூலமாகவும், இதயத்தின் மூலமாகவும் இணைந்திருக்கும் உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கிறேன்.
இன்றைய தினம் - நித்யானந்த பௌர்ணமி. 36 ஆண்டுகளுக்கு முன்பு இதே நன்னாளில், 1989-இல் வைகாசி மாதம் - விசாக நக்ஷத்திரம் - பௌர்ணமி திதியோடு கூடிய நன்னாளில், மாலை நேரத்தில், பவழக்குன்றில்… திருவண்ணாமலையில் பவழக்குன்றில் அமர்ந்து, எனக்குள் என் மூலத்தை ஆழ்ந்து தேடிக்கொண்டிருக்கும்பொழுது, பரமசிவப் பரம்பொருள் தன்னையே வெளிப்படுத்தி என்னை அவருக்குள் ஈர்த்துக்கொண்டு, 'தான்' தானாய் விளங்கி பரமாத்வைதத்தை வெளிப்படுத்திய நன்னாள். பரமாத்வைதத்தை வெளிப்படுத்திய திருநாள். இந்த நன்னாளில் கைலாயத்திருந்து எல்லோருக்கும் பரமசிவப் பரம்பொருளின் நேரடிச் செய்தி. பரமாத்வைதப் பிராப்திரஸ்து… எல்லோருக்குள்ளும் பரமாத்வைதம் மலரட்டும், பரமாத்வைதம் மலரட்டும். ஒம் ஒம் ஒம் பரமாத்வைதப் பிராப்திரஸ்து... ஒம் ஒம் ஒம் பரமாத்வைதப் பிராப்திரஸ்து…. உங்கள் எல்லோருக்குள்ளும் பரமாத்வைதம் மலரட்டும்.
பரமாத்வைதம் என்றால் என்ன? சற்று ஆழ்ந்து கேளுங்கள், இந்த பரமாத்வைதத்தை முழுமையாகப் புரிந்துகொள்ளுங்கள். ஜீவன் - உங்களுடைய ஜீவன், உங்கள் உயிர் - ஜீவாத்மா ஈஸ்வரன் - பரம்பொருள், பரமாத்மா ஜகத் - இந்தப் பிரபஞ்சம். ஜீவ, ஈஸ்வர, ஜகத். வேறு வேறு சம்பிரதாயங்கள் இந்த ஜீவ, ஈஸ்வர, ஜகத்தைப் பற்றி வேறு வேறு விளக்கங்கள் அளிக்கின்றன. இவை மூன்றிற்கும் இருக்கின்ற உறவை, இவை மூன்றைப் பற்றிய அறிவை வேறு வேறு வார்த்தைகளால் வேறு வேறு விதத்தில் விளக்குகின்றன. வேறு வேறு விதமான தர்க்கம், தத்துவம் இவைகள் மூலமாக இந்த மூன்றைப் பற்றியும் விளக்க முயற்சிக்கின்றன. ஒவ்வொரு சம்பிரதாயமும் சில தெளிவுகளை அளிக்கின்றது, சில கேள்விகளுக்கு பதிலளிக்கின்றது, பல பதில்களை கேள்வி கேட்கின்றது, சில பதில்களைத் தருகின்றது, பல கேள்விகளைத் தருகின்றன. அந்த கேள்விகளைத் தாங்கிக்கொண்டு நாம் நமக்குள் தேடும்பொழுதுதான், பரமசத்தியம் என்ன என்பது நமக்குள் அனுபூதியாக விளங்கும். பரமாத்வைதம் என்பது முடிந்த முடிவாக, பரமசத்தியம் - அதாவது எவ்வாறு ஜீவன், ஈஸ்வரன், ஜகத் உள்ளது? அவைகளுக்கு இடையிலே இருக்கின்ற உறவு என்ன? இந்த சத்தியத்தை எப்படி அடைவது? ஒவ்வொரு நிலையில்... வேறு வேறு நிலையில் இருக்கின்ற மனிதர்கள், அவரவர்கள் நிலையிலிருந்து எந்தெந்த சாதனைகள் வழியாக, என்ன மார்கத்தின் வழியாக, உயர்ந்து உயர்ந்து உயர்ந்து இந்த அறுதியான, உறுதியான, இறுதியான சத்தியமான பரமாத்வைதத்தை அனுபூதியாய் அடைந்து, அதை வெளிப்படுத்தி, அதிலேயே நிறைந்து வாழ முடியும்? என்கின்ற இந்த மொத்தமும் சேர்ந்ததைத்தான் 'பரமாத்வைதம்' என்று அழைக்கின்றேன்.
ஆழ்ந்து கேளுங்கள்... ஜீவ, ஈஸ்வர, ஜகத் இந்த மூன்றிற்கும் இடையிலே இருக்கின்ற தொடர்பு, இந்த மூன்றைப் பற்றியும் தெளிவான பரம சத்தியங்கள். அவைகளின் இருப்பு - தன்மை – வெளிப்பாடு, எவ்வாறு ஒன்றோடு ஒன்று இயங்குகிறது, இணைகின்றது, அவைகளின் இருப்பு எவ்வாறு இருக்கின்றது, இவைகளைப் பற்றிய அத்துனை பரம சத்தியங்கள் மற்றும் நீங்கள் இருக்கின்ற நிலையிலிருந்து மேம்பட்டு, மேம்பட்டு, மேம்பட்டு, இந்த இறுதி சத்தியமான அறுதி சத்தியமான பரமசத்திய நிலையை அடைவதற்கான வழிகள், நுட்பங்கள் இவை அனைத்தும் சேர்ந்து, இந்த முழுமையையும் ஒன்றாக 'பரமாத்தைவம்' என்கின்ற பெயரால் அழைக்கின்றேன். அறுதியாக இறுதியாக இந்த மூன்றும் ஜீவ, ஈஸ்வர, ஜகத் - ஜீவாத்மா, பரமாத்மா, பிரபஞ்சம் இந்த மூன்றும், 'வேறுபாடு, ஒன்றாயிருத்தல்' என்கின்ற நிலைகளைக் கடந்த ஒரு ஒருமைத்தன்மையில் இருக்கின்றது. 'வேறாய் இருப்பது, ஒன்றாய் இருப்பது' என்கின்ற வார்த்தைகளால்கூட விளக்க முடியாத, விளக்க இயலாத, இந்த வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட, 'வாங் மனாதி கோசரம் ச நேதி நேதி பாவிதம்' - வாங் மன கோசங்களாலே சிந்திக்கவும், விளக்கவும், விவரிக்கவும் என்கின்ற நிலைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டதாகவும், இவைகள் எல்லாவற்றிற்கும் மூலமானதாகவும், ஒருமைத்தன்மையாக இருக்கின்றது பரம்பொருள்.
இன்னும் சில வார்த்தைகள் மூலமாக, ஆழ்ந்து சில சத்தியங்களை உங்களுக்குள் உள்வாங்கினீர்களானால், பரம்பொருளை அனுபூதியாகப் பற்ற இயலும். உங்களுக்குப் பரம்பொருளை அனுபூதியாகக் காட்டக் கூடிய சில வார்த்தைகளை, சில சத்தியங்களை இப்பொழுது உங்களோடுப் பகிர்ந்துகொள்கின்றேன், கேளுங்கள். எனக்கு என்ன நடந்தது என்பதைப் பலமுறை விளக்கியிருக்கின்றேன். 1989 ஆம் ஆண்டு, வைகாசி மாதம் - விசாக நக்ஷத்திரம் - பௌர்ணமி திதியில், எனக்கு என்ன நடந்தது என்பதை பலவிதத்தில் பலவார்த்தைகளாலே, பல்வேறு தருணங்களில் விளக்கியிருக்கின்றேன். இப்போது மீண்டும், இன்னும் ஆழமான சில சத்தியங்களின் மூலமாக, வார்த்தைகளின் மூலமாக விளக்க முயற்சிக்கின்றேன். அமைதியாக அமர்ந்து ஆழ்ந்து இதைக் கேளுங்கள். வார்த்தைகளைத் தாண்டி நான் வெளிப்படுத்துகின்ற இந்த சத்தியம், இந்த உணர்வு அலைகள் மூலமாக, இந்த உயிர் அலைகள் மூலமாக, இந்த ஆன்ம சக்தியின் மூலமாக, வார்த்தைகளை தாண்டி உங்களுக்குள் வந்து சேரும். வார்த்தைகள் இங்கு பாத்திரம்தான் (container). அதற்குள் இந்த அனுபூதிதான் அமிர்தம் (content). அனுபூதி என்கின்ற அமிர்தத்தை, வார்த்தைகள் என்கின்ற பாத்திரத்திற்குள் வைத்து அனுப்புகின்றேன். ஆழ்ந்து அமைதியோடு கேளுங்கள், இந்த பாத்திரம் உள்ளே வரும்போது அமிர்தத்தை அது உங்களுக்குள் கொடுத்துவிடும். அந்த அனுபூதி தானாகவே மலர்ந்துவிடும்.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், 1989 ஆம் ஆண்டு, வைகாசி விசாகம், பௌர்ணமி திதி அன்று என்ன நடந்தது என்கின்ற தெளிந்த விளக்கத்தைச் சொல்கின்றேன். அந்த நாளுக்கு ஒரு சில நாட்களுக்கு முன்பு, அந்த வைகாசி விசாகம் - அதாவது நாங்கள் இப்பொழுது நித்யானந்த பௌர்ணமி என்று கொண்டாடுகின்ற இந்த பௌர்ணமிக்கு ஒரு சில நாட்களுக்கு முன்பாக, இரமண மகரிஷியினுடைய ஞானமடைந்த சீடர்களில் ஒருவரான அண்ணாமலை சுவாமிகளுடைய சத்சங்கம். சத்சங்கம் என்றால் சென்று அமர்வோம். யாராவது கேள்வி கேட்பார்கள், அவருக்குத் தோன்றும்பொழுது பதில் சொல்வார். இல்லையென்றால் அமைதியாக அமர்ந்திருப்பார். அந்த மாதிரி ஒரு intimate ஆன talks. அருகாமையிலிருந்து, அவர்கள் திருவடியில் அமர்ந்து அவர்களிடமிருந்து நேரடியாக இந்த ஞானக்கருத்துக்களை, சத்தியத்தைக் கேட்கின்ற பாக்கியத்தை அண்ணாமலையான் அளித்தான். அதனால்தான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன், திருவண்ணாமலை ஒரு சாதாரண ஊர் இல்லை. அது பரமசிவப் பரம்பொருளின் திருமேனி. அவரே பிரத்யக்ஷமாக இருக்கின்றார். அவருடைய breathing space அது. அவருடைய ஞானச்சூழல், அவருடைய இருப்பு. எத்துனைமுறை விவரித்தாலும், எத்துனைமுறை வர்ணித்தாலும், எத்துனை வார்த்தைகளால் சொல்ல முயற்சித்தாலும் விளக்கவொண்ணாத, சொல்லவொண்ணாத ஸ்வயம்பிரகாசப் பரஞ்ஜோதிப் பரம்பொருள். அண்ணாமலையானே, அந்த மலையே பரமசிவப் பரம்பொருளின் திருமேனி. ஒரு வாழ்கின்ற ஞானகுருவைவிட அதிகமான நன்மை அளிக்கக்கூடியது திருவண்ணாமலையின் எல்லைக்குள்ளே வாழ்வது. காரணம் என்னவென்றால், நமக்கு என்ன வேண்டுமோ... நம்முடைய சாதனையிலே, நாம் அந்த பரமாத்வைத நிலையை அடைவதற்கு, நமக்கு நாம் இருக்கின்ற நிலையிலிருந்து, அடுத்த நிலைக்குச் செல்வதற்கு நமக்கு என்ன வேண்டுமோ, அது குருமார்களோ, புத்தகங்களோ, ஆச்சாரியர்களோ, சூழ்நிலையோ என நமக்கு என்ன வேண்டுமோ, பெருமானே correct ஆக அதை எடுத்து வந்துக் கொடுத்து, சரியான அந்த ஞான இரசவாதத்தை நமக்குள் நிகழவைத்து, அவரே பரமாத்வைதத்தை மலரச்செய்து விடுவார். அதனால் திருவண்ணாமலையில் வாழுகின்ற எல்லோரும் புரிந்துகொள்ளுங்கள், பிரத்யக்ஷமாக பரமசிவப் பரம்பொருள் அருணாச்சலமாக வீற்றிருக்கின்றார். அதனால்தான் அவர் சொல்கிறார் அருணாச்சல புராணத்தில், இந்த எல்லைக்குள்ளே இருப்பவர்களுக்கு தனியாக தீக்ஷை போன்ற வேற எதுவுமே தேவையில்லை. எல்லாவற்றையும் நான் பார்த்துக்கொள்கிறேன் என்கின்றார்.
அதுதான் உண்மை. சரியான ஆச்சாரியர்கள் சரியாக வருவார்கள். சரியான சித்தர்கள், ஞானிகள் சரியாக உங்கள் வாழ்க்கையில் வருவார்கள். யார் வரவேண்டுமோ வருவார்கள், எந்த சத்தியத்தை உங்களுக்குச் சொல்லவேண்டுமோ அதைச் சரியாகச் சொல்வார்கள். அதற்குப்பிறகு அவர் திடீரென்று இருக்கக்கூட மாட்டார்கள். சில நேரங்களில் அசரீரி மாதிரி வருவார்கள், உங்களுக்குச் சொல்ல வேண்டிய சத்தியத்தைச் சொல்வார்கள், அடுத்த ஒரு 5 நிமிடம், 10 நிமிடத்தில் திரும்பிச் சுற்றிப் பார்த்தீர்களானால் இருக்க மாட்டார்கள். இதெல்லாம் நிதர்சனமாக திருவண்ணாமலையிலே நடக்கின்ற ஒன்று. இன்னமும் நடந்துகொண்டே இருக்கின்ற ஒன்று. காலாவதி தேதியே (expiry date) இல்லாத பரமசிவப் பரம்பொருள் கொடுத்திருக்கின்ற உறுதி. அருணாசல புராணத்திலே, இந்த எல்லைக்குள்ளே… திருவண்ணாமலையில் வாழுகின்ற எல்லோருக்கும் பரமாத்வைத நிலையை அடைந்திட, அந்த அனுபூதியை அடைந்திட, என்னென்ன வேண்டுமோ சகலத்தையும் அவரே கொண்டுவந்து, என்னென்ன சாதனைகள் செய்ய வேண்டுமோ, அதற்குத் தேவையானவற்றையும் அவரே கொண்டுவந்து, அவரே அளித்து பரமாத்வைதத்தையும் அளித்து விடுவார். அதனால்தான் சொல்கிறேன், பரமாத்வைத நிலையை அடைய வேண்டும் என்று நினைக்கின்ற எல்லோரும், திருவண்ணாமலையில் சென்று வாழத்துவங்குங்கள். அருணாச்சல வாசம் மிக உயர்ந்த நன்மையை அளிக்கும். பலபேர் என்னுடைய பக்தர்கள்கூட என்னுடைய கைலாஸத்தில் வந்து இருக்க முடியவில்லை, வேறு வேறு காரணங்களுக்காக என்னுடைய கைலாஸ சங்கத்தோடு இருக்க முடியவில்லை என்றால்கூட, அவர்களுக்கு நான் சொல்வேன், அப்பொழுது அடுத்த choice, next choice என்னவென்றால், நேராக திருவண்ணாமலையில் சென்று இருங்கள். எக்காரணம் கொண்டும் திருவண்ணாமலை எல்லை தாண்டாதீர்கள். திருவண்ணாமலை எல்லை என்பது மூன்று யோஜனை தூரம், அண்ணாமலையார் ஆலயத்திலிருந்து மூன்று யோஜனை சுற்றளவு, அதுதான் திருவண்ணாமலை எல்லை. அதை தாண்டாதீர்கள். உங்களுக்குத் தேவையான அனைத்தையும் பெருமான் கொண்டுவந்து, அளித்து, அன்பாலும் அளித்து, அறக்கருணையும் தந்து, மரக்கருணையும் தந்து, தேவைப்பட்டால் மரக்கருணையும் காட்டுவார். அதாவது ferocious ஆகப் புரியவைப்பார். தாயைப்போல் கருணையும் காட்டி, தந்தையைப்போல் பாடமும் சொல்லி, அறக்கருணையும் காட்டி, மரக்கருணையும் காட்டி, சரியான தேவையான ஆன்மீக நூல்களை எடுத்து வருவார், ஆன்மீக குருமார்களை எடுத்து வருவார், தீக்ஷைக்கு சரியான தேவையானவைகளை எல்லாம் கொண்டு வருவார், முழுஞான இரசவாதத்தையும் அவரே செய்வார். ஆலயத்தை மையமாக வைத்து மூன்று யோஜனை தூரத்திற்குள் வாழத்துவங்குங்கள். அதைத் தாண்டாதீர்கள். பரமாத்வைத நிலைக்குத் தேவையான அத்துனையையும் அவர் கொண்டுவந்து கொடுத்து, பரமாத்வைதத்தையும் அவரே அளித்து விடுவார். பிரத்ய