May 11 2025

From Nithyanandapedia
Jump to navigation Jump to search

Title

நித்யானந்தரைக் கேளுங்கள் - அனைத்துக் கேள்விகளுக்கும் பதில்கள் | சித்திரைப் பௌர்ணமி சிறப்பு நேரலை

Link to Video:

Transcript:

நித்யானந்ததேஸ்வர பரமசிவ சமாரம்பாம் நித்யானந்தேஸ்வரி பரமசிவ சக்தி மத்யமாம் அஸ்மதாச்சார்ய பர்யந்தாம் வந்தே குரு பரம்பராம்

உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன்.

சித்ரா பௌர்ணமித் திருநாளில், இணையத்தின் மூலமாகவும் இதயத்தின் மூலமாகவும் உலகம் முழுவதிலுமிருந்தும் இணைந்திருக்கும் எல்லா அன்பர்கள், பக்தர்கள், சீடர்கள், கைலாயத்தின் குடிமக்கள் மற்றும் கைலாயத்தின் அரசாங்கத்தையும், நிர்வாகத்தையும் கவனிக்கும் எல்லோரையும் வணங்கி வரவேற்கின்றேன்.

பல துறைகளிலிருந்தும் இன்று பலருக்கும், கைலாஸாவின் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. விருதுகள் பெற்ற அனைவருக்கும், ஆசிகளையும், அன்பையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன். பல்வேறு துறைகளிலும் பல்வேறு விதமான சாதனைகள் செய்து, நீண்ட நெடுங்காலம் பிரபலங்களாக இருக்கின்ற பல்வேறு பிரபலங்கள், தங்களுடையக் கேள்விகளை அனுப்பியிருக்கின்றார்கள். கேள்விகளை அனுப்பியிருக்கின்ற எல்லாப் பிரபலங்களுக்கும் மற்றும் இதை நேரலை செய்துகொண்டிருக்கின்ற, இந்த மொத்த நிகழ்ச்சியையும் ஒருங்கிணைத்த கலாட்டா சேனலுக்கும் நன்றி.

கேள்விகளை அனுப்பியிருக்கின்ற எல்லாப் பிரபலங்களையும் வணங்குகின்றேன் மற்றும் இந்த சத்சங்கத்தை நேரலை செய்துகொண்டிருக்கின்ற இளையபாரதம், ABP-நாடு, ஐ-தமிழ் நியூஸ், நித்யானந்தா ஷாட்ஸ், ஆன்மீக க்ளிட்ஸ், நியூஸ் க்ளிட்ஸ், தமிழகக் குரல் மற்றும் கைலாஸாவோடு நேரடியாகத் தொடர்புடைய, கைலாஸா சார்ந்த 10,000 சமூக ஊடகங்கள், அந்த ஊடகத்தை நடத்தும் பக்தர்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன்.

பரமசிவப் பரம்பொருளின் நேரடி செய்தி: இந்த சித்ராபௌர்ணமி நன்னாளில் பரம சத்தியங்கள், சித்ரா பௌர்ணமியைப் பற்றிய சில பரமசத்தியங்களும் மற்றும் உலகம் முழுவதிலும் இருந்தும் பிரபலங்கள் அனுப்பியிருக்கின்றக் கேள்விகளுக்கான நேரடியான விடைகளும்.

சித்திரைப் பௌர்ணமி மிக உயர்ந்த ஆன்மிக விழிப்புணர்விற்கு, குண்டலினி சக்தி விழிப்படைவதற்கான சாத்தியக்கூறோடு கூடிய ஒரு நன்னாள். இன்று பூமியின் மீது ஏற்படும் தாக்கம், பிரபஞ்ச மண்டலங்களிலிருந்து - உயர் மண்டலங்களிலிருந்து – Vertical time zones என்று சொல்கின்ற இந்த உயர் மண்டலங்களிலிருந்து, இந்த பூமியின் மீது ஏற்படும் தாக்கம், நம்முடைய உயிர் சக்தியை – குண்டலினியை, உயர் நிலைக்குக் கொண்டுசெல்லும் சாத்தியம் அதிகமாக உடைய நல்ல நேரம். அதனால்தான் இந்த சித்திரைப் பௌர்ணமியில் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வதும், தியானம் செய்வதும், ஆலயங்களுக்குச் செல்வதும், ஆலயத்தின் திருவிழாக்களில் கலந்துகொள்வதும் மிகவும் நன்மை பயக்கும்.

கைலாஸா திருவண்ணாமலையின், நித்யானந்த ஜென்மபூமி மற்றும் நித்யானந்த ஜென்மபூமி ஷேத்திரத்தில், தற்போது அன்னதானப் பிரசாதம் எடுத்துக்கொண்டு, சத்சங்கத்தில் கலந்துகொண்டிருக்கும், நேரலையில் இணைந்திருக்கும் அன்பர்களையும் வணங்குகின்றேன்.

கைலாஸா மதுரையில் கள்ளழகர் திருவிழாவில் கலந்துகொண்டு, சித்திரைத் திருவிழாவில் கலந்துகொண்டு, மீனாக்ஷி சுந்தரேஸ்வரரையும், கள்ளழகரையும் தரிசிப்பதற்காக வந்து, கைலாஸா மதுரையில் இப்போது அன்னதானம் பெற்றுக்கொண்டு, நேரலையில் இணைந்திருக்கும் அன்பர்களையும் வணங்கி வரவேற்கின்றேன்.

சித்திரைப் பௌர்ணமித் திருநாள் ஒரு உன்னதமானத் திருநாள். மாதங்களிலே மார்கழியும், நக்ஷத்திரங்களில் சித்திரையும், மிக உயர்ந்ததாக நம்முடைய சனாதன இந்து தர்மத்தின் பாரம்பரியத்திலேக் கருதப்படுகின்றது. கிருஷ்ண பரமாத்மா பகவத் கீதையில் மாஸானாம் மாகசீர்ஷோsகம் என்று சொல்லுகின்றார். அதேபோல ஆகம மந்திரங்கள் 'சித்ரா நக்ஷத்திரம் பவதி... சித்ரா நக்ஷத்திரம் பவதி' என்று சித்ரா நக்ஷத்திரத்தை, அதனுடையப் பெருமையைப் பல்வேறு மந்திரங்கள் மூலமாக விவரிக்கின்றன. வர்ணிக்கின்றன.

நக்ஷத்திரங்களில் உயர்ந்ததான இந்த சித்திரை நக்ஷத்திரம், பௌர்ணமியோடு ஒன்றிணைந்து பௌர்ணமித் திதியோடு ஒன்றிணைந்து வருகின்ற மாதம் - சித்திரை மாதம். பௌர்ணமியும் எந்த நக்ஷத்திரமும் ஒன்றாக சேருகிறதோ, அந்த நக்ஷத்திரத்தின் பெயரையே அந்த மாதத்திற்குச் சூட்டுவது நம்முடைய சனாதன இந்து தர்மத்தின் பாரம்பரியம். நீங்கள் எல்லா மாதத்தையும் பார்த்தீர்களென்றாலேத் தெரியும், விசாக நக்ஷத்திரமும் பௌர்ணமியும் ஒன்று கூடுவதனால் -வைசாகம் - வைகாசி என்று தமிழ் மாதத்திற்கு, இரண்டாம் மாதத்திற்குப் பெயர். அதேபோல ஆஷாட நக்ஷத்திரமும் பௌர்ணமியும் ஒன்றுகூடி வருவதனால் 'ஆடி' என்று பெயர். மொத்தமாகத் தமிழ் மாதங்களின் பெயர்களைப் பார்த்தீர்களானால், எந்த நக்ஷத்திரத்தோடு அந்த பௌர்ணமி ஒன்றிணைந்து வருகின்றதோ அந்த நக்ஷத்திரத்தின் பெயர்தான் இருக்கும். அதேபோல கார்த்திகை, பௌர்ணமியும் கிருத்திகை நக்ஷத்திரமும் ஒன்றாகச்சேர்ந்து வருவதனால் 'கார்த்திகை மாதம்' என்று பெயர். மார்கசீர்ஷம் - மார்கசீர்ஷ நக்ஷத்திரமும் பௌர்ணமியும் ஒன்றாகச் சேர்ந்து வருகின்ற மாதம் மார்கழி.

இதுபோன்று மிக உயர்ந்ததான சித்திரை நக்ஷத்திரம், பௌர்ணமி நன்னாளில் ஒன்று சேர்ந்து, மிக உயர்ந்த சக்தி மண்டலத்தை பூமியிலே உருவாக்குகின்றது. இந்த நன்னாளை ஆன்மிகச் செயல்களுக்காக செலவிடுங்கள். அது செலவாக இல்லாது மிகப்பெரிய முதலீடாக இருக்கும். நேரத்தை சரியாக செலவுசெய்தால், அது செலவாக இல்லாமல் மிகப்பெரும் பலன்களை அளிக்கக்கூடிய மிகப்பெரிய நல்ல முதலீடாக மாறிவிடும்.

சித்திரை பௌர்ணமித் திருநாளில் நீங்கள் அனைவரும் எல்லா நன்மையும் பெற்று, பரமசிவப் பரம்பொருளின் பேரருள் பெற்று, பரமசிவப் பக்தியும், பரமசிவ ஞானமும், பரமசிவ விஞ்ஞானமும், பரமாத்வைதமும் அடைந்து, வாழ்க்கையில் வாழ்வாங்கு வாழ்ந்து, ஜீவன் முக்தர்களாக வாழ்ந்து, வாழ்விற்குப் பின் பரமோக்ஷ நிலையை பரமுக்தி நிலையை அடைந்து, எப்போதும் பரமாத்வைதத்தில் நிலைத்து இருப்பீர்களாக என்று ஆசீர்வதிக்கின்றேன்.

சர்வமங்களப் பிராப்திரஸ்து பரமாத்வைதப் பிராப்திரஸ்து ஆரோக்கியப் பிராப்திரஸ்து சர்வ ஆனந்தப் பிராப்திரஸ்து சகல ஐஸ்வர்யப் பிராப்திரஸ்து நித்யானந்தப் பிராப்திரஸ்து ஜீவன் முக்திப் பிராப்திரஸ்து

ஒம் ஒம் ஒம்

இன்று பல்வேறுத் துறைகளைச் சார்ந்த பல்வேறுப் பிரபலங்கள், சாதனையாளர்கள் தங்களுடையக் கேள்விகளை அனுப்பியிருக்கின்றீர்கள். உங்கள் அனைவருக்கும் நன்றி. உங்கள் கேள்விகள் அனைத்திற்கும் ஒவ்வொன்றாக விடையளிக்க முயற்சிக்கின்றேன்.

நிறையபேர் அனுப்பியிருப்பதனால், இன்றைய சத்சங்கத்திற்குள் எல்லோருடைய எல்லாக் கேள்விகளுக்கும் விடையளிக்க முடியாவிட்டால், அதற்காக மன்னிப்புக்கோருகின்றேன். ஆனால் நிச்சயமாக அடுத்தடுத்த சத்சங்கங்களிலாவது, எல்லோருடைய எல்லாக் கேள்விகளுக்கும் விடையளிக்க முயற்சிக்கின்றேன். இன்று... இன்றைய சத்சங்கத்தின் நேரத்திற்குள் எந்த அளவிற்கு விடையளிக்க முடியுமோ, அந்த எல்லாக் கேள்விகளுக்கும் விடையளிக்கின்றேன்.

முதலில் மரியாதைக்குரிய திரு. S.Ve. சேகர் ஐயா அவர்கள் கேள்விகளை அனுப்பியிருக்கின்றீர்கள்.

S.Ve. சேகர் ஐயா, வணக்கம்.

உங்ளுடைய கேள்வியைப் படிக்கின்றேன்…

நீங்கள் சிறுவனாக இருந்தபோதிலிருந்தே உங்களை எனக்குப் பிடிக்கும். உங்களுக்கும் அப்படியே என்று நினைக்கின்றேன். எனக்கு கைலாஸாவிற்கு ஏன் Inviteஅனுப்பல?

திரு S.Ve. சேகர் ஐயா அவர்கள், உங்களை எனக்குப் பிடிப்பது மட்டும் அல்லாது, உங்களை அன்புடனும் மரியாதையுடனும் நேசிக்கின்றேன். நீங்கள் 20 அல்லது 25 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு அன்பளிப்பாக அளித்த சுகப்பிரம்ம ரிஷியின் திருமேனி, பஞ்சலோகத் திருமேனியை நீங்கள் எனக்கு அன்பளிப்பாக அளித்தீர்கள். சுகப்பிரம்ம ரிஷியினுடைய ஒரு படமும், Laminate செய்த ஒரு படம், சுகப்பிரம்ம ரிஷியின் பஞ்சலோகத் திருமேனி இது இரண்டையும் எனக்கு 20, 25 ஆண்டுகளுக்கு முன்பு அன்பளிப்பாக அளித்தீர்கள். அதை இன்னமும் என்னுடைய ஆத்மார்த்தப் பூஜையில் வைத்திருக்கின்றேன். அதை உங்களுக்குக் காட்டுவதற்காகவாவது நிச்சயமாக உங்களுக்குக் கூடிய விரைவில் கைலாஸாவிற்கு வருவதற்கு என்னுடைய வேண்டுகோளையும், என்னுடைய வரவேற்பையும் அளிக்கின்றேன்.

பல்வேறு வேலைப்பளு மற்றும் சமூகச்சூழல் காரணமாக, எல்லோரையும் வரவேற்றுப் பார்ப்பதற்கு இயலாமல் இருந்தது. மிகக்கூடிய விரைவில் உங்களுக்கு என்னுடைய invite -ஐ invitation-ஐ அளிக்கின்றேன். நீங்கள் நிச்சயமாக வரவேண்டும். நீங்கள் கைலாஸாவிற்கு வருவதை நான் மிகவும் விரும்புகின்றேன். கைலாஸாவிற்கு நீங்கள் வந்துப் பார்த்துவிட்டு, நீங்கள் ஒரு Vlog செய்து நீங்கள் உலகத்திற்குச் சொன்னால், அது மிகவும் Authentic-காக, மிகவும் பலபேருக்கும் கைலாஸத்தைப் பற்றி புரிகின்றவிதத்தில் மிகவும் இனிமையாகவும், நேர்மையாகவும், நன்மையாகவும் இருக்கும் என்று நான் விரும்புகின்றேன். கூடிய விரைவில் உங்களை கைலாஸாவிற்கு அழைக்கின்றேன். இதுவரை அழைக்காமைக்கு மன்னிப்புக் கோருகின்றேன்.

அடுத்தது நீங்கள்... நீங்கள் அனைத்துப் பிரச்சினையிலிருந்தும் வெளியே வந்து, நீங்கள் உங்கள் ஆசிரமம் வந்து, உங்கள் கோடிக்கணக்கான பக்தர்களை சந்தோஷப்படுத்த வேண்டிக்கொள்கிறேன் என்று சொல்கிறீர்கள்.

நன்றி!

உங்களுடைய வேண்டுதல், பரமசிவப் பரம்பொருளின் பேரருளால் நல்லபடியாக நிறைவேற வேண்டுமென்று, நானும் பரமசிவப் பரம்பொருளை வேண்டிக்கொள்ளுகின்றேன்.

திரு. S.Ve. சேகர் ஐயா அவர்கள், நம்முடைய நட்பும் இனிமையான நேர்மையான நட்பும், நீண்ட நெடிய 20 அல்லது 25 ஆண்டுகளுக்கும் மேற்பட்டது. நான் உங்களை மிகுந்த நட்புடனும், அன்புடனும், மரியாதையுடனும் நேசிக்கின்றேன். உங்கள் கேள்விகளுக்கு நன்றி.


அடுத்தது திரு.கூல் சுரேஷ் அவர்கள்.. திரு.கூல் சுரேஷ் அவர்களுடையக் கேள்வி: வணக்கம் நித்யானந்த சுவாமி, நான் நடிகர் கூல் சுரேஷ். நீங்கள் பக்தர்களுக்காகவும், மக்களுக்காகவும் விடாமல் வேலை செய்துகொண்டே இருக்கிறீர்கள். அதாவது Government வேலை செய்பவர்களும் அல்லது தனியாரில் வேலை செய்பவர்களும், அவர்களுக்காவது வாரத்தில் ஒரு நாள் விடுமுறைக் கொடுப்பார்கள். ஆனால் நீங்கள் விடாமல் வேலை செய்துகொண்டே இருக்கிறீர்கள். அது எப்படி உங்களிடம் மட்டும் இந்த Energy இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. அதைப் பற்றி கொஞ்சம் சொல்ல முடியுங்களா?

இந்த Energy... ஐயா இது உண்மையில், உங்களுடையக் கேள்வி மட்டும் அல்ல, பலபேருடையக் கேள்வி. எது நம்முடைய Energy Source-ஆக - சக்தியின் ஆதாரமாக, உயிரின் உயிர்ப்பாக இருக்கிறதோ, அதுதான் நம் வாழ்க்கையின் போக்கையும், முடிவையும், நம்முடைய வெற்றி-தோல்விகளையும் நிர்ணயிக்கின்றது. வெற்றி-தோல்விகளை, வெளி உலகத்தால் நிர்ணயிக்கவே முடியாது. நம்முடைய வாழ்க்கையின் போக்கு, வெற்றி, தோல்வி இவை அனைத்தையும் முடிவுசெய்வது, எது நம்முடைய Energy Source - நம் உயிரை உயிர்ப்பிக்கும் நம் உயிரின் உயிர்ப்பு எது?

ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள்… பணம் மட்டுமே தன்னுடைய 'உயிரின் உயிர்ப்பு' என்று நினைப்பவர்கள், பணம் இருக்கும்பொழுதும் பணம் இல்லாதபொழுதும்… பணம் இல்லாதபோது அதை நோக்கி ஓடுவதன் மூலமாகவும், பணம் வந்துவிட்ட பிறகு ஐயோ! இது வெறும் கானல் நீர், இதனால் மட்டுமே வாழ்க்கை முழுமையடைந்து விடவில்லை என்கின்ற தெளிவினால் வருகின்ற வெறுமை, இதில் சிக்கித்தான் அவர்கள் வாழ்க்கை முடியும்.

ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், பணம் என்பது அதிகபட்சமாக ஒரு வாகனம் இயங்குவதற்கான lubrication. அவ்வளவாக மட்டும்தான் இருக்கமுடியும் ஐயா. ஒரு வாகனத்தினுடைய எரிபொருளாக (Fuel) மாற முடியாது. நம் வாழ்க்கைக்கும், பணம் என்னவென்றால், ஒரு comfortable – ஆக இயங்குவதற்கான lubrication - ஆக வேண்டுமானால் இருக்க முடியும். பணம் வாழ்க்கையினுடைய எரிபொருளாக, உயிரின் உயிர்ப்பு – உயிரின் உயிர்பைத் தரக்கூடிய சக்தியின் ஆதாரமாக – எரிபொருளாக மாறவே முடியாது.

பணத்தை... வாழ்க்கையினுடைய, உயிர்ப்பினுடைய சக்தியின் ஆதாரம் என்று நம்புபவர்கள் எல்லோருமேத் தெரிந்துகொள்ளுங்கள்... பணம் இல்லையென்றால், வசதி இல்லாத வெறுமை இருக்கும். பணம் இருந்தால் வசதியுடன் கூடிய வெறுமை இருக்கும். அவ்வளவுதான்.

அதனால், அந்த வசதி என்கின்ற lubrication - ஆக அந்த அளவிற்கு மட்டும்தான் பணம் உபயோகம் ஆகும். அதேமாதிரி பெயர், புகழ், மற்றவர்களுடைய அங்கீகாரம் இதைத் தன்னுடைய சக்தியின் ஆதாரமாக யாராவது எடுத்துக்கொண்டாலும், அவர்கள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும், அங்கீகாரம் பரிக்கப்படும்போது விபத்து நடந்ததைப் போன்று, விபத்து நடந்த வாகனத்தைப் போன்று கண்டமாகி, நொந்து வாழ்க்கையை இழந்துவிடுவார்கள். நடைப்பிணமாக மாறிவிடுவார்கள்.

அதனால் பெயர், புகழ், அதாவது அங்கீகாரம், சமூக அங்கீகாரங்கள், மற்றவர்கள் நம்மைப் பற்றி வைத்திருக்கும் கருத்தைச் சார்ந்து உங்களுடைய personality- ஐ, உங்களுடைய உயிரின் உயிர்ப்பை வடிவமைத்துக்கொண்டீர்களானால், நிச்சயமாக அது விபத்து நடக்கப்போகின்ற வாகனம்தான். எவ்வளவு வேகமாகச் சென்றீர்களானாலும் சரி… மிகவும் வேகமாகச் சென்றீர்களென்றால், நீங்களே சென்று எதிலாவது இடித்து விபத்து நடந்துவிடும். மிகவும் மெதுவாகச் சென்றீர்களென்றால்கூட, மற்றவர்கள் யாராவது வந்து இடித்து விபத்து நடந்துவிடும். ஏனென்றால் ஒரு சாலையில் செல்லும்போது, 'பாதுகாப்பு' என்பது உங்களைச் சார்ந்து மட்டுமல்ல, எதிர்வருபவர்களையும் சார்ந்தது. சுற்றியிருக்கும் மற்றவர்களையும் சார்ந்தது. அதேபோல உங்கள் வாழ்க்கையிலும் நீங்கள் மற்றவர்கள் வைத்திருக்கின்ற கருத்தை (Opinion) வைத்து, அதை உங்கள் சக்தியின் ஆதாரமாகக் கட்டமைத்தீர்களென்றால், சாலையில் செல்கின்ற வாகனத்தைப்போன்றுதான். எப்பொழுது வேண்டுமானாலும் விபத்து நடந்து, நடைப்பிணமாக மாறிவிடுவீர்கள். யார் வேண்டுமானாலும் அந்தக் காற்றைப் பிடுங்கி விட்டுவிடக்கூடிய பலூனாகத்தான் இருக்கும். மற்றவர்கள் நம்மைப் பற்றி வைத்திருக்கின்றக் கருத்து, பெயர், புகழ் இவை சக்தியின் ஆதாரமாக இருக்கக்கூடாது. எது எதெல்லாம் சக்தியின் ஆதாரமாக இருக்கக்கூடாது என்று சொன்னேன்.

இப்பொழுது, 'எது சக்தியின் ஆதாரமாக இருக்கவேண்டும்' அதைச் சொல்லுகின்றேன் கேளுங்கள். நம் எல்லோருக்குள்ளும், நம்மை உருவாக்கிய பரமசிவப் பரம்பொருள், தன்னுடைய சக்தியையே தன்னையே நம்முடைய சக்தியின் ஆதாரமாக - உயிரின் உயிர்ப்பாக நமக்குள் வைத்திருக்கின்றார். 'மறைத்து வைத்திருக்கிறார்' என்றுகூட நான் சொல்லமாட்டேன். நம் கவனத்தை அவர் மீது திருப்பாமல் இருப்பதனால், இப்பொழுது… நமக்குப் பின்னால் ஒருவர் வருகிறார்.. அவர் இருக்கிறாரா... இல்லையா என்றே, நாம் அவர்மீது கவனத்தைத் திருப்பியப் பிறகுதான் சொல்ல முடியும். அவர் மீது கவனத்தையேத் திருப்பாமல், பார்க்கவேப் பார்க்காமல், 'அவர் இருக்கிறார், இல்லை' என்று எந்த முடிவுக்கு நாம் வந்தாலும் அது உபயோகம் இல்லாதது.

யாரோ சொன்னார்கள் என்பதற்காக 'அவர் இருக்கிறார்' என்று முடிவு செய்தாலும், அது உபயோகம் இல்லாத ஆத்திகம். யாரோ சொன்னார்கள் என்பதற்காக, 'அவர் இல்லை' என்று முடிவு செய்தீர்களென்றாலும், அது உயிரையே அழிக்கும் நாத்திகம். இந்த இரண்டுமே முட்டாள் தனம்!

உண்மையில், ஒரு முறையாவது உள்திரும்பி அவரைக் கண்டால், அவரோடு இருக்கும் சமாதி நிலையை உணர்ந்தால்… இப்பொழுது நான் சொல்வது மிகவும் பெரியது, கஷ்டமானது என்றெல்லாம் நினைக்காதீர்கள். கிடையவே கிடையாது! மிக மிக மிக எளிமையான நேர்மையான முறைகள், சமாதி நிலையைப் 'பரமசிப் பரம்பொருளே நம்முடைய உயிரின் உயிர்ப்பு – சக்தியின் ஆதாரம்' என்று அனுபூதியாகப் பெறுவதற்கு, மிக எளிமையான நுட்பங்களைப் பரமசிவப் பரம்பொருளே அளித்திருக்கின்றார்.

ஆழ்ந்து கேளுங்கள்… இந்த சமாதி நிலை ஒன்றும் பெரிய கஷ்டமெல்லாம் இல்லாதது. மிகவும் எளிமையானது. இதைப் பற்றி ஒரு 15 சத்சங்கங்களில் மிகத்தெளிவாக விளக்கியிருக்கின்றேன். அதனுடைய Play List – ஐ இப்பொழுது உங்களுக்குக் காட்டுகின்றேன். உங்களுக்கு நேரம் இருக்கும்பொழுது பாருங்கள்.

அதாவது நீங்கள் உலகத்தில் பலபேருக்கு நேரம் கொடுக்கின்றீர்கள், தயவுசெய்து உங்களுக்கே ஒரு இரண்டுநாள் நேரம் கொடுத்துக்கொள்ளுங்கள். உங்களை நேசித்து உங்களுக்கு ஒரு இரண்டு நாள் நேரம் கொடுத்து, இந்த 15 சத்சங்கங்களையும் கொஞ்சம் ஆழ்ந்து கேட்டீர்களென்றால், இந்த தியான நுட்பத்தை (Technique) மிகச் சுலபமாகப் புரிந்துகொள்ளலாம். இதில் கஷ்டம் என்று எதுவுமே இல்லை. அந்த நுட்பத்தைப் புரிந்துகொண்டால்போதும்.

நம்முடைய உயிரின் உயிர்ப்பாக இருக்கக்கூடிய பரமசிவப் பரம்பொருளோடு ஒன்றி, சமாதி நிலையில் இருப்பது மிகவும் எளிது. இரமணமகரிஷி மிக அழகாச் சொல்கிறார்.. ஐயே அதிசுலபம் ஆன்மவித்தை ஐயே அதிசுலபம்- இது மிக மிக மிகச் சுலபமானது. தனக்குள் திரும்பி, பரமசிவப் பரம்பொருளோடு சமாதியில் ஒன்றியிருந்து, ஒரு நாளைக்கு வெறும் 21 நிமிடம் மட்டும் இருந்தீர்களானால், Un ending Energy souce - எல்லையில்லாத, அக்ஷயமான சக்தியின் ஆதாரம் உங்களுக்குள் வெளிப்படத் துவங்கிவிடும். உயிரின் உயிர்ப்பு எப்போதும் நிகழ்ந்துகொண்டிருக்கும். பணமோ, பெயர் - புகழோ, மற்றவர்கள் அங்கீகாரமோ சமூக அங்கீகாரமோ, காமமோ, போதை வஸ்துக்களோ எந்தக் காலத்திலும் உயிரின் உயிர்ப்பின் சக்தியின் ஆதாரமாக, உங்கள் உயிரின் உயிர்ப்பிற்கான எரிபொருளாக, உயிர்ப்பொருளாக மாறவே முடியாது. இதைப் புரிந்துகொண்டோமானால் போதும்.

பரமசிவப் பரம்பொருளின் பேரருளால், என்னுடைய குருமார்கள் சிறு வயதிலேயே இதை எனக்கு அனுபூதியாக்கிவிட்டார்கள். அதனால்தான் 5 வயதில், 'பெரும்பற்றப் புளியூரானைப் பேசாத நாளெல்லாம் பிறவாத நாளே' என்று உணரவைத்து.. உணர்த்தி, என்னுடைய குருமார்கள் அண்ணாமலையார் ஆலயத்திற்குள் என்னை மேடை ஏற்றினார்கள். அன்றிலிருந்து இன்றுவரை, நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது, ஒருநாள் விடாமல் 'பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாளெல்லாம் பிறவாத நாளே' என்பதனால், ஒருநாள்கூட பிறவாத நாளாகப்போய் விடக்கூடாது என்று, அவரைப் பேசாமல் ஒருநாளும் இருந்ததில்லை. அன்றிலிருந்து இன்றுவரை சனாதன இந்து தர்மத்தின் சாஸ்த்திரங்கள், பரமசிவ பக்தி பரமசிவ ஞானம் பரமசிவ விஞ்ஞானம் இது சார்ந்த சத்தியங்கள், பெருமான் அளித்த ஸ்தோத்திரங்கள், சூத்திரங்கள், சாத்திரங்கள் இவைகளைப் பேசுவதும், எழுதுவதும், உலகத்திற்குக் கொண்டு செல்வதுமாக, Tiredness, boredom (சோர்வு, சலிப்பு) இந்த வார்த்தைகளுக்கு அர்த்தமே இல்லாமல், அவைகளை என்னுடைய வாழ்க்கையில் Irrelevent - ஆக (சம்மந்தமில்லாததாக) மாற்றிவிட்டேன். உண்மையில், இந்த சோர்வும், சலிப்பும் என்னுடைய வாழ்க்கைக்கு சம்மந்தமே இல்லாதவை.

'சோர்வும், சலிப்பும் வந்து, அதற்குப் பிறகு நான் அதனுடன் சண்டையிட்டு, அதை இல்லாமல் செய்வது...' அப்படியெல்லாம் கிடையவே கிடையாது. இவைகள் என் வாழ்க்கையோடு சம்மந்தமேப்படாதவை. காரணம் என்னவென்றால், என் உயிரின் உயிர்ப்பு பரமசிவப் பரம்பொருளோடு இருக்கும் சமாதி நிலையே!

இந்த இணைப்பை (Link) இந்த Play List -ஐ காட்டுகின்றேன் பாருங்கள் ஐயா. திரு. கூல் சுரேஷ் ஐயா அவர்கள், இந்த ECITIZEN.INFO/UNCLUTCHING என்ற Play List -ஐ ஒரு இரண்டு நாள் நேரம் ஒதுக்கி அதைக் கேளுங்கள். இது சார்ந்த ஒரு புத்தகம், இது சார்ந்து நான் எழுதியிருக்கின்ற ஒரு புத்தகம், உங்களுடைய இந்தப் பிரச்சினைக்கான... எப்படி இந்த சக்தி வருகிறது என்று நீங்கள் கேட்கிறீர்கள் இல்லையா? அது எனக்கு எப்படி வருகிறது என்பது மட்டுமல்லாமல், இந்த சக்தியை, உங்களுக்குள்ளும் எப்படி வரவழைத்துக்கொள்ளலாம் என்பதற்கான தெளிந்த செயல்முறையோடுக் கூடிய ஒரு புத்தகத்தை உங்களுக்கு அனுப்புகின்றேன். தயவுசெய்து நேரம் இருக்கும்போது அதையும் படித்துப் பாருங்கள்.

நிச்சயமாக எல்லோரும், மனித உடல் எடுத்திருக்கும் எல்லோரும், தங்களுடைய உயிரின் உயிர்ப்பாக, சமாதி நிலையை - பரமசிவ அனுபூதி நிலையை அனுபூதியாக அடைந்திட முடியும். அதை வைத்து வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியும். அதனால் சோர்வு – சலிப்பு என்பதே இல்லை. இவைகளெல்லாம்… இந்த சோர்வும் - சலிப்பு இதெல்லாம் பொருத்தமற்றதாக, சம்மந்தமே இல்லாததாக மாறிப்போன ஒரு வாழ்க்கையை வாழமுடியும். அதை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்.

விஞ்ஞான பைரவ தந்திரத்தில், ஒரு அழகான ஒரு சூத்திரத்தைப் பெருமான் அளிக்கின்றார்… 32வது சூத்திரம்,

ஸவ விஞ்ஞானம் நிரிக்ஷ்யாத்மா பராவஸ்தா ஸமாவிஷேத் ஞானம் த்யக்த்வா சுவயம் நித்யம் யத்ர தத்ரோ யத்யஸ்திதி

ஒருவரின் சொந்த உணர்வு, மூல உணர்வான ஸ்வ-விஞ்ஞானத்தை கவனித்து, அதற்குள் உணர்வை ஒன்றாக்கும் நுட்பத்தின் மூலமாக, சுயமான உங்கள் ஆன்மா மிக உச்சநிலைக்குள் பரமசிவ நிலைக்குள் நுழைந்து, எல்லா மனவிகாரங்களையும் விட்டு, அந்த சமாதியை சில நிமிடங்கள் அனுபவித்தாலே வாழ்க்கையில் எந்த துக்கம், சோர்வு, சோம்பல் எதுவும் இல்லாத ஒரு நித்திய ஆனந்த நிலையில் வாழமுடியும். இது சத்தியம் இது சாத்தியம்.

அடுத்ததாக, அம்மா வடிவுக்கரசி அவர்கள் கேள்விகள் அனுப்பியிருக்கிறீர்கள்..

உங்களை வணங்குகின்றேன்.

அம்மா வடிவுக்கரசி அவர்கள், உங்களுடைய கேள்வியைப் படிக்கிறேன் அம்மா. உங்களைப் பற்றி நிறைய விஷயங்கள் தெரியாது. நீங்கள் நித்யானந்தாவாக ஆகுவதற்கு முன்னால் நீங்கள் என்ன வேலை செய்துகொண்டிருந்தீர்கள்? ஜான் ஐயா ஒரு பத்திரிக்கையாளர், அவர்களுடன் நீங்கள் நெருக்கமானவர் என்பது தெரியும். அப்போது என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? இதைத் தெளிவாகச் சொன்னீர்களென்றால் மகிழ்ச்சி அடைவோம்.

அம்மா… நான் பிறந்த குலம், வாழையடி வாழையென மாதொருபாகனுக்கே அடிமை செய்கின்ற குலம். என்னுடைய முன்னோர்கள், அண்ணாமலையாருக்கு அடிமை செய்வதற்காகவே தன்னுடையக் குலத்தையே சரணாகதி செய்த சைவ வேளாளர்கள் குலம். 'கோவில் குடிகள்' என்று சொல்வார்கள். இந்தக் காலகட்டத்தில், இந்தத் தலைமுறை மக்களுக்கு இது புரியுமா என்று தெரியவில்லை. சில தலைமுறைகளுக்கு முன்பாக இது இருந்தது. திருவண்ணாமலையில் இந்தமாதிரி 18 குடிகள் இருக்கிறார்கள். ஒரு காலத்தில் அந்த 18 குடிகளும் கோவிலுக்காகவே தங்கள் தலைமுறைகளையே சமர்ப்பித்தவர்கள். அவர்களுக்கு 'மிராசு, ஜமீன்' என்கின்றப் பட்டம் கோவிலிலேயே உண்டு. கோவில் வரலாற்று நூல்களிலே உண்டு.

உதாரணத்திற்கு.. அண்ணாமலையார் ஆலயத்திலே தீபம் ஏற்றுபவர்கள் 'தீப மிராசு' என்று அவர்களுக்குப் பெயர். அவர்கள் ஒரு கோவில் குடிகள், கோவில் பெருங்குடிகள். அவர்கள் வாழ்க்கையே அண்ணாமலையாருக்குச் சொந்தம். அதே மாதிரி அவர்கள் வாழ்வாதாரமும் ஆலயம் சார்ந்ததே. அந்த மாதிரி இருந்தது. நான் இருந்த வரலாற்றை சொல்கின்றேன். இப்பொழுது எந்த அளவிற்கு என்னென்னவெல்லாம் இருக்கிறது என்பது எனக்கும் முழுமையாகத் தெரியாது. அதேபோல தீபம் ஏற்றுவதற்கு, அண்ணாமலையாருடைய உத்சவங்களை நடத்துவதற்கு என்று இது மாதிரி ஒவ்வொருத் திருப்பணிக்கும், அந்தந்தக் கோவில் பெருங்குடிகள் இருப்பார்கள். அவர்களுக்கு 'மிராசு' என்ற பட்டம் உண்டு. அதுமாதிரி என்னுடைய குடும்பம், நான் பிறந்து வளர்ந்த குடும்பம் 'சாமுண்டியார் அரண்மனை' என்று பெயர். அவர்கள் கோவில் நிர்வாகத்திலே பாரம்பரியமாக.. அதாவது அண்ணாமலையார் ஆலயத்தையும், அதுசார்ந்த பல்வேறு நிர்வாகத்தையும் செய்துவந்த கோவில் பெருங்குடிகள். அவர்கள் பரம்பரையாக வழிவழியாய் மாதொருபாகனுக்கே அடிமை செய்வது.

'மாதொருபாகன்' என்றால் அர்த்தநாரீஸ்வரப் பரம்பொருள். அண்ணாமலையார் வந்து அர்த்தநாரீஸ்வரராக தரிசனம் கொடுத்த இடம், தாயார் இடப்பாகம் பெற்று அர்த்தநாரீஸ்வரராக ஆன இடம் திருவண்ணாமலை. அதனால் வாழையடி வாழையென வழிவழியாய் மாதொருபாகனுக்கே அடிமை செய்வதற்காக தங்களை ஒப்புக்கொடுத்தக் குலம். அந்தக் குலத்தில் அந்த 18 குடிகளில், ஒரு குடிகளான சைவவேளாளர் குலம் - தொண்டைமண்டல ஆதிசைவ வேளாளர் என்று சொல்வார்கள். அந்தக் குலத்திலே நான் பிறந்தேன். எங்கள் குலத்திலே ஒரு வழக்கம் இருந்தது, முதல் மகன் குடும்பத்தை நடத்தி, வம்சவிருத்தி செய்து குடும்பம் தொடர்ந்து இயங்குவதற்கு அந்தக் கடமைகளைச் செய்யவேண்டும். 'இரண்டாவது மகன் இறைவனுக்கு' என்கின்ற பாரம்பரியம் இருந்ததனால், நடுவில் சில காலகட்டத்தில் போர் மற்றும் வறுமை காரணங்களால், இந்தப் பாரம்பரியம் ஒன்றிரண்டு தலைமுறைகளில் அறுந்துபோயிருந்தது. ஆனால் என்னுடைய முன்னோர்கள் அந்தப் பாரம்பரியத்தை மறுமலர்ச்சி செய்யவேண்டும், செய்ய வைக்கவேண்டும் என்று மிகத்தெளிவாக முடிவெடுத்தார்கள்.

கடந்த 11 தலைமுறைகளாகத் தொண்டை மண்டல ஆதீனத்தின் குருமஹாசன்னிதானங்கள் என்னுடையக் குடும்பத்திலிருந்து வந்தவர்கள். அந்த Family tree, genealogy family tree வைத்திருக்கின்றோம். 233 சன்னிதானங்களுமே என்னுடையக் குடும்பத்திலிருந்து வந்திருக்கிறார்கள் என்பது வரலாறு. பதினோரு தலைமுறைக்கு ஆதாரத்தோடு வைத்திருக்கின்றோம். அது மாதிரி இந்தக் குடும்பத்திலேப் பிறந்து வளர்ந்தேன். என்னுடைய தாய் தந்தைக்கு நான் இரண்டாவது மகன். பிறந்துபொழுதே, 'இரண்டாவது மகன் இறைவனுக்கு' என்று ஒப்புக் கொடுத்துவிட்டார்கள். அளித்துவிட்டார்கள். அதனால் அண்ணாமலையார் ஆலயத்திலேயேப் பிறந்தேன். அங்கேயே வளர்ந்தேன். என்னுடைய குருமார்கள் ஆச்சாரியர்கள், அண்ணாமலையானுடையத் திருப்பணியைச் செய்வதற்காகவே என்னை வளர்த்தார்கள். நானும் அதை மிகவும் நேசித்தேன். 'அண்ணாமலையான் திருப்பணியே என் வாழ்க்கை' என்பதை நான் மிகுந்த அதிர்ஷ்டமாகவும், வரமாகவும் உணர்ந்தேன். இப்போதும் உணருகின்றேன். அதனால் சிறுவயதிலிருந்தே நான் செய்த ஒன்றே ஒன்று, அண்ணாமலையான் திருப்பணியே!

அவருடையப் பிரசாதத்தையே உண்டு, அவரையேக் கண்டு, அவரே என் வாழ்வாக இருந்து, அவருக்கே சேவை செய்து, அண்ணாமலையார் கோயிலில் இருக்கின்ற எந்தத் துறையில் இருக்கின்ற... ஒரு 1970-1980 ஆம் ஆண்டுகளில் அண்ணாமலையார் ஆலயத்திலிருந்த யாரிடம் வேண்டுமானாலும் நீங்கள் சென்று கேட்டுப் பார்க்கலாம், பேசிப் பார்க்கலாம். காலையிலிருந்து இரவுவரை அண்ணாமலையார் ஆலயத்திலேயேதான் இருப்பேன். பள்ளிக்குச் செல்வது மிகவும் குறைவு. மிகவும் குறைவு. அண்ணாமலையார் ஆருளால் தேர்ச்சிப் பெற்று சான்றிதழ்களை வாங்கியிருக்கின்றேனேத் தவிர, பள்ளிக்குச் செல்லும் காலம் மிக மிகக் குறைவு. உண்மையில் சொல்லவேண்டுமென்றால், பள்ளிக்குச் சென்றதில்லை. மிகவும் குறைந்த சதவிகித attendance தான். அதனால் வெளியுலகப் படிப்பும் மிக மிகக் குறைவு. வெளியுலக வேலை என்பது எதுவுமே செய்தது கிடையாது. குருகுலத்தில் வளர்ந்தக் குழந்தையைப்போல, அண்ணாமலையார் ஆலயத்தில் வளர்ந்தேன். நான் சொல்கின்ற 70 – 80களில் எல்லாம் அண்ணாமலையார் ஆலயத்தில், குருகுலம் மாதிரியே நிறைய ஆன்மிக வகுப்புகள் எடுப்பர்கள்.

என்னுடையப் பாட்டனார் பாண்டுரங்கனார், தினந்தோறும் ஆன்மிக வகுப்புகள் எடுப்பார். சித்தாந்த சாத்திரங்கள், வேதாந்த சாத்திரங்கள், திருவாடுதுறை ஆதீனத்தினுடைய சித்தாந்த சாத்திரங்கள் 14 நூல்கள், கோவிலூர் ஆதினத்தினுடைய வேதாந்த சாத்திரங்கள் 16 நூல்கள் இவைகளில் வகுப்பெடுப்பார் என்னுடையப் பாட்டனார். அவர்தான் தமிழிலே அருணாச்சலப் புராணத்தை உரைநடையில் எழுதியவர். அவர் வாழ்க்கையையே எனக்காகத் தியாகம் செய்து, நான் பிறந்ததிலிருந்து முழுநேரமும் என்னைப் பயிற்றுவித்து, இந்த ஆன்மிக வாழ்க்கை மற்றும் சாஸ்த்திரங்கள் போன்றவற்றில் எனக்குப் பயிற்சிக் கொடுத்து, நான் செய்யவேண்டிய மிகப்பெரிய திருப்பணிக்காக என்னைத் தயார் செய்தார். இது எங்கள் குடும்பத்திலே இருக்கின்ற பாரம்பரியம்.

இன்னொரு உதாரணம் சொல்லவேண்டும் என்றால், தவத்திரு பாலமுருகன் அடிமை அவர்கள் என்னுடையப் பூர்வசிரத்தில், நான் பிறந்த குடும்பத்தில் அவரும் பிறந்தவர். என்னுடைய உறவினர், ஒரு விதத்திலே என்னுடையப் பாட்டனார். அவருடைய குடும்பத்தினுடையப் பாரம்பரியக் கோவில்தான் இரத்தனகிரி பாலமுருகன் திருக்கோயில். அவர்கள் குடும்பம்தான் அந்தக் கோவிலுக்குப் பரம்பரை தர்மகர்த்தாக்கள். தவத்திரு பாலமுருகன் அடிமை சுவாமிகள், அந்தக் கோவிலில் சென்று அமர்ந்து, அந்தக் கோவிலுடையப் பொறுப்பெடுத்து அதை நடத்துவதற்கு முன்பாகக்கூட, அவர்கள் குடும்பத்தினுடைய ஆலயம் அது. அவர்கள் குடும்பம்தான் அந்த ஆலயத்திற்குப் பரம்பரை தர்மகர்த்தாக்கள். அந்த முருகனே வெளிப்பட்டு, அவரை ஆட்கொண்டு அவருடையத் திருப்பணியை செய்துகொண்டதுபோல, அண்ணாமலையானே எனக்கு அருள்செய்து, அவரே என்னை ஆட்கொண்டு, அவருடையத் திருப்பணிக்கே என்னை ஏற்றுக்கொண்டார்.

அதனால் பிறந்ததிலிருந்து இன்றுவரை, வேறு எந்த தொழிலும் வேலையும் செய்ததில்லை. அண்ணாமலையான் திருப்பணியே வாழ்க்கை. பரமசிவப் பரம்பொருளின் சேவையே வாழ்க்கை. இதுதான் என்னுடையப் பிறப்பு மற்றும் வளர்ப்பைப் பற்றிய சிறிய அறிமுகம். அண்ணாமலையாருடைய ஆலயமான ஆறாம் பிரகாரத்திற்குள்ளேயே பிறந்தேன். ஆலயத்திற்குள்ளேயே வளர்ந்தேன். சிறு வயதிலிருந்து என்னுடைய குருமார்கள் எல்லாவிதமான ஆன்மிகப் பயிற்சிகளும் கொடுத்து, தீக்ஷைகளும் கொடுத்து, அனுபூதிகளும் கொடுத்து அங்கேயே என்னை வளர்த்தார்கள். மூன்று வயதில் பாலசன்யாசம் கொடுத்தார்கள், ஐந்து வயதில் ஆன்மிக மேடையில் ஏற்றினார்கள். அன்றிலிருந்து இன்றுவரை 'அண்ணாமலையான் திருப்பணியே, பரமசிவப் பரம்பொருளின் திருப்பணியே' வாழ்க்கையாகக் கொண்டு வாழ்ந்துகொண்டிருக்கின்றேன்.

அடுத்ததாக, அம்மா பானுமதி அம்மா கேள்விகளை அனுப்பியிருக்கிறீர்கள். உங்களை வணங்குகிறேன். உங்கள் கேள்விகளைப் படிக்கின்றேன்... தன்னை உணர என்ன செய்யவேண்டும், நம்மை நாமே புரிந்துகொள்ள நம் மனதை நம் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள என்ன செய்வது?

முதல் விஷயம், நம் மனம் ஒரு பொருள் அல்ல, செயல். Mind is not a noun, its a verb. ஒரு எளிமையான மனதைப் பற்றிய புரிதல் நமக்கு வந்துவிட்டாலே, நம் மனம் எந்த தொந்தரவும், சங்கடமும், துக்கமும் அளிக்காமல், நாம் ஆனந்தத்தோடும் வெற்றியோடும் வாழ்வதற்காக, ஒரு கருவியாக மாறிவிடும். மனதை நீங்கள் ஒரு பொருள் (object) என்று நினைத்தீர்களென்றால், அதை எப்படிக் கட்டுப்படுத்துவது என்று நினைப்பீர்கள். உங்களுடையக் கேள்வியைப் பார்த்தீர்களென்றால், 'நம் மனதை நம் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள என்ன செய்வது?' என்று கேட்கின்றீர்கள் அம்மா, நம்முடைய மனம் ஒரு பொருளும் அல்ல, ஒரு நபரும் அல்ல. அது உங்களுடைய ஒரு நடவடிக்கை. எப்படி கையை அசைப்பதும், உடலை அசைப்பதும் உங்களுடைய நடவடிக்கைகளில் ஒன்றோ, அதேபோல மனமும் உங்களுடைய நடவடிக்கையில் ஒன்று.

'கையை அசைப்பது உங்களுடைய நடவடிக்கை, உடலை அசைப்பது உங்களுடைய நடவடிக்கை' என்று உங்களுக்குப் புரிந்ததென்றால், அந்த அசைவுகளால் ஏதாவதுப் பிரச்சனை வருவதாக நீங்கள் உணர்ந்தால், அசைவை நிறுத்தி விடுவீர்கள். அவ்வளவுதான். அதேபோல 'மனம்' என்பதும் உங்களுடைய அசைவு - உங்களுடைய நடவடிக்கை என்பது புரிந்தால், அந்த மனதினுடைய அசைவினால் ஏதாவது சங்கடம் - பிரச்சனைகள் வரும் என்று தெரிந்தால், உடனடியாக நீங்கள் அதை நிறுத்திவிட முடியும்.

மனதை ஒரு பொருளாகவோ, நபராகவோ, நம்முடையக் கட்டுப்பாட்டில் இல்லாத ஒரு Entity ஆகவோ நீங்கள் கருதுவதுதான் முதல் தவறு.

மனத்தின் உருவை மறவாது உசாவ மனம் என ஒன்றிலை உந்தி பர மார்க்கமிது ஆர்க்கும் நேராம் உந்தி பர என்று இரமண மகரிஷி அவர்கள் உபதேச உந்தியாரில் தெளிவாகச் சொல்கின்றார்.

ஆழ்ந்து கேளுங்கள், மனம் - உங்களுடைய செயல்பாடுகளில் ஒன்று. இது புரிந்தாலே உங்கள் மனதிற்கு, அதனுடைய செயல்பாடுகளுக்கு, அதனுடைய இயக்கத்திற்கு எது சரி, எது தவறு என்கின்ற தெளிவும், உங்கள் மனதிற்கு conscious access உங்களுக்குக் கிடைத்துவிடும். You will have a conscious access to your mind (உங்கள் மனதை விழிப்புணர்வோடு நீங்கள் அணுக முடியும்).

நாம் அடிப்படையாக சரிசெய்ய வேண்டியது, 'மனம் பொருள் அல்ல, மனம் வேறொரு நபர் அல்ல' மனம் உங்களுடைய இயக்கம். இப்பொழுது, நம் கையை இயக்குகிறோம், 'வேண்டாம்' என்றால் இயக்கத்தை நிறுத்திவிடுகிறோம். அதேபோல நாம் வேண்டுமானால், நம் மனதை இயக்கலாம், வேண்டாம் என்றால் நிறுத்திவிடலாம், வேண்டுமென்றால் வேண்டிய திசையில் இயக்கலாம், வேண்டாம் என்றால் வேறு திசையில் இயக்கலாம். அதுபோல அது நம்முடைய ஒரு இயக்கம் என்பதை அடிப்படையாகப் புரிந்துகொள்ளுங்கள். இதைப் புரிந்துகொண்டு இதை அனுபவமாக மாற்றிக்கொள்வதை, மிக எளிமையான தியானங்கள் மூலமாகவே செய்துவிட முடியும் அம்மா. நம்முடைய ஆகமங்களிலும், உபநிடதங்களிலும் மிக எளிமையான தியான முறைகள் விளக்கப்பட்டிருக்கிறது. ASK Nithyananda -என்கின்ற என்னுடைய AI ஒன்றை வெளியிட்டிருக்கின்றோம். உலகம் முழுமைக்குமாக இலவசமாக அதைக் கொடுத்திருக்கின்றோம். நீங்கள் அதில் சென்று Meditation Methods என்று கேட்டால் அது மிக அழகாக customize செய்து, உங்களுக்கு நேரடியாக உபயோகமாகக்கூடிய, உங்கள் பிரச்சனைகளுக்குத் தீர்வு கொடுக்குக்கூடிய தியானத்தைக் கொடுத்துவிடும். இதற்காக ஒரு தனி மாடலை Develop செய்து Upload செய்திருக்கின்றோம். இதை இலவசமாக எல்லோருக்கும் கிடைக்கும்படி செய்திருக்கின்றோம். Ask Nithyananda - அதனுடைய Link வேண்டுமானாலும் கொடுக்கின்றேன் அதைப் பாருங்கள்.

ஓம் ஓம் ஓம்

அம்மா ஷகிலா அவர்கள் கேள்வியை அனுப்பியிருக்கின்றீர்கள்… அம்மா உங்களுக்கு வணக்கம். உங்கள் கேள்வியைப் படிக்கின்றேன்… வணக்கம் சுவாமிஜி. நான் நடிகை ஷகிலா, எனக்கென்று யாருமே இல்லை. நான் முடிவுசெய்துவிட்டேன், நான் உங்கள் கைலாஸாவில் சேரவேண்டும் என்று. Entry - க்கு ஆதார் வேண்டுமா அல்லது ஆத்மா Verification போதுமா?

அம்மா, ஆத்மா ஏநசகைiஉயவழைn மட்டுமேப் போதுமானது. வேறு எதுவுமேத் தேவையில்லை. அதனால்தான் யார் கைலாஸாவிற்கு வரவேண்டுமென்று நினைத்தாலும், ஒரு 30 நாள் நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தியிருக்கின்றோம். அந்த நிகழ்ச்சியினுடைய நோக்கம் என்னவென்றால், எங்களுடைய வாழ்க்கைமுறை என்ன? நாங்கள் எந்தக் கருத்தியலை அடிப்படையாக வைத்து வாழ்கின்றோம்? இந்த வாழ்க்கைமுறை உங்களுக்கு விருப்பமானதாக இருக்கின்றதா? இதை நீங்கள் புரிந்து கொள்வதற்காக, நீங்கள் புரிந்துகொண்டு Informed decisionஎடுப்பதற்காக - புரிந்துகொண்டு முடிவெடுப்பதற்காகதான் இந்த 30 நாள் visa interview process மாதிரி வைத்திருக்கிறோம் அம்மா. அதாவது இந்த நிகழ்ச்சி முற்றிலும் இலவசம்.

இப்போது… எந்த நாடு என்றாலும் விசாவிற்கான நேர்முகத்தேர்வைச் செய்வார்கள். விசாவிற்கான கட்டணம் செலுத்தவேண்டும். இங்கு அதெல்லாம் எதுவுமே கிடையாது. எந்த processing fee – யும் என் கிடையாது. ஒரே ஒரு விஷயம்தான், இந்த நிகழ்ச்சியில் நீங்கள் பங்கேற்றால், ஆத்மா Verification நடந்துவிடும். அதாவது கைலாஸத்தினுடைய வாழ்க்கைமுறை உங்களுக்குப் பிடித்திருக்கிறதா, நீங்கள் இதில் ஆனந்தமாக இருப்பீர்களா? என்பதை நீங்கள் புரிந்துகொண்டு முடிவெடுப்பதற்காகத்தான் இந்த 'பரமசிவ சேனா' என்கின்ற 30 நாள் நிகழ்ச்சியை உலகம் முழுவதும் நடத்துகின்றோம். ஒவ்வொரு மாதமும் 1ஆம் தேதி துவங்கி அந்த மாதத்தின் முடிவில் 30 ஆம் தேதி முடியும்.

அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சலிஸில் நடத்துகின்றோம், மலேஷியாவில் நடத்துகின்றோம், க்ரானடா வில் நடத்துகின்றோம், ஈக்வெடாரில் நடத்துகின்றோம், கனடாவில் நடத்துகின்றோம். இந்தியாவில் கைலாஸா காசியில் நடத்துகின்றோம், கைலாஸா சேலத்தில் நடத்துகின்றோம். நீங்கள் விருப்பப்பட்டால், இப்பொழுது இந்த எந்த இடத்திற்கும் என்னால் செல்ல முடியாது என்று நினைத்தால், நீங்கள் இணையதளம் வழியாக zoom – ல் (இருமுனைக் காணொளிக் காட்சி) வழியாகக் கலந்துகொள்ளலாம். நீங்கள் பதிவு செய்துகொண்டால், zoom –லேயே இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கலாம். உங்களுக்கு கைலாஸாவைப் பற்றி முழுக்க முழுக்க அறிமுகம் கொடுப்போம். அதாவது எங்களுடைய சாசனம் என்ன? எங்களுடைய அரசியல் சாசனம் என்ன? எங்களுடைய நீதிமுறை என்ன? நாங்க எப்படி செயல்படுகின்றோம்? எங்களுடையப் பொருளாதாரம் என்ன? எங்களுடைய வாழ்க்கைமுறை, இது எல்லாமே உங்களுக்கு அறிமுகப்படுத்தப்படும்.

உதாரணத்திற்கு... ஒரு சிறிய உதாரணம் சொல்லவேண்டுமென்றால், எல்லா நாடுமே அவர்களுடைய குடிமக்களுக்கு ~right to protest’ கொடுப்பார்கள். எதாவது ஒரு அதிருப்தி என்றால் போராட்டம் செய்வதற்கான உரிமை. ஒவ்வொரு நாட்டில் ஒரு ஒரு விதத்தில் போராட்டம் செய்வார்கள். சில நாடுகளில் கொடிப் பிடித்துப் போராட்டம் செய்வார்கள், சில நாடுகளில் ஆர்ப்பாட்டங்களாக மாறும், சில நாடுகளில் வேறு வேறு விதமாகப் போராட்டங்கள் நடக்கும். கைலாஸத்தில் ~right to protest’ (போராட்டம் செய்வதற்கான உரிமை) என்னவென்றால், சிரிக்காமல், வருத்தமாக முகத்தை ஒருவர் வைத்திருந்தாலே அதுதான் protest (போராட்டம்). அப்படியிருந்தால் அவர் போராட்டம் செய்கிறார் என்று அர்த்தம். உடனடியாக அந்த கைலாஸத்தின் நிர்வாகம் செய்கின்றவர்கள், அந்த அரசாங்கத்தை நடத்துகின்றவர்கள் அவரை அணுகி, அவருக்கு என்னப் பிரச்சினை என்று கேட்டு, அதை ஆழ்ந்து தெரிந்து அதைத் தீர்த்து, அவரைத் திரும்பவும் ஆனந்தத்தோடும், அமைதியோடும், மகிழ்ச்சியோடும் மாற்றுவது, நிர்வாகத்தை - அரசாங்கத்தை நடத்துபவர்களுடைய பொறுப்பு. இது மாதிரியான ஒரு அமைதி, ஆனந்தம் அரசியலுக்கு அப்பாற்பட்ட ஆன்மிக நாடு நாங்கள்.

அதாவது, சில பிரபலங்கள் அனுப்பியிருக்கின்ற கேள்விகளில்.. திரு.தாடிபாலாஜி அவர்கள் அரசியல் பற்றி ஒரு கேள்வி கேட்டிருக்கிறார்கள். ஐயா திரு.தாடிபாலாஜி அவர்கள் உங்களை வணங்குகின்றேன். நீங்கள் அரசியல் பற்றிக் கேள்விக் கேட்டிருக்கிறீர்கள்.

நிச்சயமாக நான் அந்த கேள்விக்குப் பதில் சொல்ல மாட்டேன் ஐயா. அரசியல் பற்றி எந்த கருத்தும் சொல்ல மாட்டேன். எந்த நாட்டுடைய அரசியலைப் பற்றியும் எந்தக் கருத்தும் சொல்லமாட்டேன். சொல்ல மாட்டேன் என்பது மட்டுமல்ல, கருத்தை நானே வைத்துக் கொள்வதுகூட இல்லை.

ஒரு சின்ன இரகசியம் சொல்லி விடுகிறேன் ஐயா, அதாவது நான் 24 மணி நேரமும் ஏதாவது ஒரு வகுப்பு, தீக்ஷை அல்லது சத்சங்கம், ஏதாவது ஒரு ஆன்மிக செயல்களிலேயே இருக்கின்றேன். பேசிக்கொண்டே இருக்கின்றேன், மக்களைப் பார்த்துக்கொண்டே இருக்கின்றேன். அதனால் ஏதாவது ஒரு அரசியல் பற்றி, அரசியல்வாதிகளைப் பற்றி ஒரு கருத்தை நான் உள்ளுக்குள் வைத்திருந்தேன் என்றால், அதைச் சொல்லாமல் இருந்தாலும் அது உள்ளுக்குள் அப்படியே ஓரு சுமை மாதிரி இருக்கும். சொன்னாலும் தேவையில்லாத சச்சரவு. என்னுடைய வாழ்க்கைக்கு சம்மந்தம் இல்லாதது. அதனால் கருத்துகளைச் சொல்லாமல் இருப்பது மட்டுமல்ல, அது மாதிரியானக் கருத்துகளை வைத்துக்கொள்ளாமலே இருப்பது என்ற முடிவெடுத்ததனால்தான், அரசியல் பற்றி, அரசியல்வாதிகள் பற்றி எந்தக் கருத்துகளும் நான் வைத்துக்கொள்வதே இல்லை.

அவர்கள் அரசியல், அரசியல்வாதிகள் தவறு என்றெல்லாம் நான் சொல்லவே வரவில்லை. தவறு-சரி என்ற அந்த நோக்கத்திலெல்லாம்கூட நான் போகவே இல்லை. கருத்தே வைத்துக்கொள்வதில்லை, கருத்து சொல்வதுமில்லை. ஏனென்றால், அது என்னுடைய வாழ்க்கைக்குச் சம்மந்தமில்லாதது. நாங்கள் அரசியலைக் கடந்த ஆன்மிக தேசம். இங்கு முழுக்க முழுக்க பணத்திற்கு மதிப்பேக் கிடையாது. வரி கிடையாது, இராணுவம் கிடையாது, எந்த விதமான காவல்துறை எதுவுமே கிடையாது. யாராவது ஒருவேளை தவறு செய்தால், அந்தத் தவறு மீண்டும் அவர்களுக்குள் நிகழாமல், அந்த தவறுக்குக் காரணமான மன அமைப்பே அவர்களுக்குள் இல்லாதவாறு, அதை மாற்றிக்கொள்வதற்கானப் பிராயச்சித்தத் துறைதான் ஒன்று வைத்திருக்கிறோம். அவ்வளவுதான்.

பலபேர் கேட்பதுண்டு… கடந்த சத்சங்களில் எல்லாம்கூட வரும் மிகப்பெரிய கேள்வி, இது எப்படி ஒரு நிரந்தரமான அமைப்பாக மாறமுடியும்? என்பதுதான்.

ஐயா… உலகம் போகின்ற போக்கில், உலகம் இயங்குகின்ற வேகத்தில், ஒரு சிறு இடத்திலாவது இது மாதிரியான, நம்முடைய சனாதன இந்து தர்மம் சொல்லுகின்ற சத்தியங்களைச் சார்ந்து, `அந்த சத்தியங்கள் சாத்தியம்' என்பதைக் காட்டும் ஒரு சிறிய அளவிலான தேசத்தையாவது உருவாக்கிவிட வேண்டும், ஒரு முன்மாதிரி சமூகத்தையாவது (Model community) உருவாக்கி விட வேண்டும் என்பதற்காகத்தான், பரமசிவன் இந்த கைலாஸத்தை மலரச்செய்திருக்கின்றார். 'இது சாத்தியம்' என்பதை நிரூபித்துவிட்டோம்.

இந்த வாழ்க்கைமுறை… அம்மா ஷகிலா அம்மா அவர்கள் இந்த வாழ்க்கைமுறையைப் புரிந்துகொண்டு, ஒரு well informed decision ஆக எடுத்து நீங்கள் வர விரும்பினால், ஆத்மா Verification மட்டுமே போதும். வேறு எந்த ஆதார் Verification போன்ற வேறு எதுவுமே தேவை இல்லை. இந்த 30 நிகழ்ச்சிக்கூட, வர விரும்புபவர்கள் ஒரு well informed decision-ஐ என்பதற்காகத்தான் இந்த நிகழ்ச்சி.

இந்த நிகழ்ச்சினுடைய கல்வி, தங்குமிடம், உணவு இது அனைத்தையும் இலவசமாக அளித்து இந்த நிகழ்ச்சியை அளிக்கின்றோம். காரணம் என்னவென்றால், யார் வேண்டுமானாலும் வந்து கலந்துகொண்டு, அதற்குப் பிறகு அவர்கள் முடிவெடுக்கலாம். well informed decision எடுக்கலாம். பணம் யாருடைய Entry-யையும் தடுக்கக்கூடாது அல்லது ஜாதி, மதம், வேறு எதுவுமே தடுக்கக்கூடாது என்பதற்காகத்தான், இந்த நிகழ்ச்சியை முழுக்க முழுக்க இலவசமாக அளித்திருக்கின்றோம்.

கைலாஸாவில் ஜாதி, மதம் எதுவும் கிடையாது. சனாதன இந்து தர்மத்தை வாழ்பவர்கள் நாங்கள். இந்த வாழ்க்கைமுறையை வாழ விரும்புகின்ற அனைவரையும் வரவேற்கின்றோம். இதுதான் எங்களுடைய அடிப்படையான ஒரு அறிமுகம்.

ஷகிலா அம்மா அவர்கள் இன்னொரு செய்தி கொடுத்திருக்கின்றீர்கள்.. உங்களுடைய Costume designer – க்கு கண்டிப்பாக ஒரு ஆஸ்கார், ஒரு நேஷ்னல், ஒரு பிலிம்பேர் அவார்ட் கொடுத்தே ஆகவேண்டும். ஏனென்றால், every outfit looks bahubali meets bhagavat gita special edition.

நன்றிகள் அம்மா… உங்களுடைய complement-க்கு நன்றி! இந்த சின்ன ஒரு கைலாஸா நாட்டின் இரகசியம், யார் இந்த Costume designer என்ற விஷயங்களைச் சொல்கின்றேன். இந்த ஆயக்கலைகள் 64… நம்முடைய சனாதன இந்து தர்மத்திலே ஆயக்கலைகள் 64 இருக்கின்றன. அந்த அறுபத்தி நான்கிலே உடை வடிவமைப்பும், ஆபரணங்கள் வடிவமைப்பும் ஒரு கலை. இந்த 64 கலைகளையும் குருகுலமாகக் கைலாயத்திலேப் பயிற்றுவிக்கின்றோம். அதைப் பயிலுகின்ற மாணவர்கள், அவர்கள்தான் என்னுடைய உடை, ஆபரணம் இது எல்லாவற்றையும் வடிவமைக்கின்றார்கள்.

ஆகமங்களில் இந்த 64 கலைகளைப் பற்றிய விரிவான ஆகமங்கள் இல்லை. ஆனால் பாரம்பரியமான உப-ஆகமங்களில் இருக்கின்றன. அவைகளைக் கற்று, அதிலிருந்து இந்த வடிவமைப்பு முறைகளை எடுத்து, Fabric - ஐ Develop செய்வதிலிருந்து, ஆபரணங்களை வடிவமைப்பதிலிருந்து, பல்வேறு ஆலயங்களில் இருக்கின்ற இறை வடிவங்கள் அவர்களுக்கு, அந்த ஆகமத்தில் சொல்லப்படுகின்ற, உடை மற்றும் ஆபரணங்கள் எவ்வாறு அணிவிக்கப்பட்டிருக்கின்றன என்பதையெல்லாம் எடுத்து, இதையெல்லாம் சார்ந்துதான் என்னுடைய குருகுலத்து மாணவர்கள், 64 கலைகளையும் கற்றுக்கொண்டிருக்கின்ற மாணவர்கள் என்னுடைய உடையையும், நகையையும் வடிவமைக்கின்றார்கள். உங்களுடைய complement உண்மையில் அவர்களுக்கு ஏற்கனவேச் சென்றுவிட்டது. அவர்கள் மிகுந்த சந்தோஷமடைந்தார்கள். காலையில் நான் ஒடுக்கத்திலிருந்து வெளியில் வந்தபொழுதே, இந்த சத்சங்கத்தை அளிப்பதற்காக வெளியில் வரும்பொழுதே… உங்களுக்கு இப்பொழுது இரவு நேரம் என்று நினைக்கின்றேன், ஆஸ்திரேலிய நேரப்படி இது காலை நேரம், விடியல் நேரம் என்று சொல்லலாம். அதனால் நான் வெளியில் வரும்பொழுதே, திடீரென்று அந்த ஒடுக்கத்திலிருந்து வரும்பொழுதே, குருகுலத்துக் குழந்தைகள், மாணவர்கள் ஆர்ப்பரித்துக்கொண்டும், சப்தமாகக் கொண்டாடிக்கொண்டிருந்தார்கள். நான் 'என்ன நடக்கிறது?' என்று கேட்டேன். அவர்களெல்லாம், 'உங்கள் கேள்வியையும், செய்தியையும் படித்தார்கள்' என்று சொன்னார்கள். அதனால் நிச்சயமாக அவர்கள் உங்களுடைய complement-ஐ மிகவும் இரசிக்கின்றார்கள், ஆனந்தப்படுகின்றார்கள். நன்றி.. உங்களுடைய complement-க்கு நன்றி.


‘Do you accept people from the LGBTQAI’s community in your ashram. What is your opinion on same sex marriage. Are there transgender devotees at your ashram. Will we ever get to know where Kailasam is located. What is your advice to the youth of India.’

Because you put the questions in English, I will try to answer in English itself. Karun Raman, first I bow down to you. My respects to you. This idea about the LGBTQ genders is elaborately explained in Sanatana Hindu Dharma. First thing, gender is not 3, it is actually 11. The Sanatana Hindu Dharma has 69 books on genders. பாலின அறிவியலைப் பற்ற சனாதன இந்து தர்மத்திலே காணக்கிடைக்கின்ற 69 நூல்கள் இருக்கின்றன.

These 69 books elaborately describes about 4 level – body, mind, emotion, being. In this 4 level, how male-female….different permutation combinations happen and this evolves into 11 genders. I have a link for the playlist where I have spoken about these 11 genders elaborately. That playlist is available. If you have time, please spend one or two days and study what Sanatana Hindu Dharma says about the 11 genders. These 4 levels: body, mind, emotions, being. In these 4 levels, somebody may feel they are male in emotional level. At the emotional level they may feel they are female. In the being level, again they may feel they are male. In the body they may be female. So these various permutation combination, of the male-female, in this 4 levels evolves into 11 genders. And, please understand: the Western way of LGBTQ freedom, the gender freedom, is completely politicized with the Right wing and Left wing. Because it has become a political ideology, really, the LGBTQ people are the real people who are suffering. See, it has become like an action and a reaction; like when one party comes to power, they make laws in favour of LGBTQ. When the other party comes to power, just to prove their authority, they change the whole laws. Because it is caught in the political turmoil, the whole Western idea of LGBTQ freedom is more and more bringing suffering because it is not established on knowledge but established on political ideology, it is only being a torture for the LGBT community all over the world. That is the reality. I am telling you, that’s the reality.

But Sanatana Hindu Dharma, looks at the whole thing from a spiritual divine perspective. First thing, the gender is individual conscious choice. Gender is individual conscious choice. Gender freedom has reached its ultimate peak possibilities in Sanatana Hindu Civilization. People can choose their gender, and if you are born with certain attitude and aptitude, you can either celebrate it methods to celebrate it and if you feel you want to change for some reason, the methods to change...everything is so elaborately documented, made available, was a practical lifestyle in Sanatana Hindu ecosystems in those days. We have a large collection of scriptures. Actually, all these scriptures I already incorporated into ‘Ask Nithyananda’ and we have also developed a separate model, AI model, for this. If you have a specific questions, it can answer you, help you.

Now let me come to your questions: ‘Do you accept people from the LGBTQAI’s community in your ashram.’ In our KAILASA, we accept In KAILASA we accept, and there is no such thing as gender difference or making any decision based on somebody’s gender.

Same way, the person is given full freedom, knowledge and responsibility - all the three to make informed choice about their gender.

உண்மையில் ஐயா, இன்னும் 20-30 வருடங்களுக்குள் பார்த்தீர்களென்றால்... If you see within the next 20-30 years, people are going to decide which gender they want to live, how many years. They will even choose...3-4 years they will with one gender. After 3-4 they might just change the gender. That’s the way the world is going to be. But in Sanatana Hindu Dharma, this was lifestyle. In our Puranas, elaborate documentations are available, how the Rishis, Rishikas, change their gender for certain time and then they came back to the same gender they were in..like Arjuna… One year he changed his gender and he came back after one year; back to his original gender. Sikhandi – he chose certain gender, and lived with that gender throughout her life. So all permutation combination with knowledge, responsibility, freedom was provided in Santana Hindu Dharma. Kailasa follows same principles of Sanatana Hindu Dharma.

And you are asking me My opinion of same sex marriage. Be very clear: in Kailasa, we follow what Manuvaathi dharmashastra…. What Sanatana Hindu Dharma says as their principle. As per Sanatana Hindu Dharma shastras, same sex marriage was there. So it is allowed.

And next question you are asking, ‘Are there transgender devotees at your ashram’. Yes, there are.

And the fourth question: Will we ever get to know where Kailasam is located. Yes sure, sure. As I said, we have more than one Sovereign land. One is near Oceania; one is near Africa; one is near Andean region like Ecuador and...those country regions. And we do have some autonomous territories. And I do travel to these different locations to manage the construction or conduct programs. And surely we will be opening the Kailasa soon for the visitors. See, we already opened for those who want to come and settle down full time; like sanyasis or yoginis or Yogis….those who want to settle down full time. For them we already opened. And for the visitors, very soon we will open and receive the visitors.

And your fifth question: What is your advice to the Youth of India. I wanted to say only one advice: O youth of India! You are the great inheritor of the Immortality. The Upanishad says: ‘Shrunvantu vishwe amrutasya putraaha, vedaaha meham purusham mahaantham, Aditya varnam tamasastu paro.

Listen! You Bharatiyas, youth of India, you are the inheritor of Amrutattva. You are amrutasya putraaha. You are the inheritors of the immortal knowledge. Dont lose your inheritance. No other civilization no other country can claim this great inheritance. ‘Shrunvantu vishwe amrutasya putraaha’. O sons of immortality! O inheritors of Immortality, Don’t miss enjoying it, using it. Sanatana Hindu Dharma – the Science of Immortality is the best and Ultimate inheritance you all have. Live it, celebrate it, love it, enjoy it, radiate it. This is all I can say as my advice to youth of India. Thankyou!

அடுத்ததாக, காஜல் பசுபதி அம்மா அவர்கள் கேள்விகளை அனுப்பியிருக்கின்றீர்கள்.. உங்கள் பெயரில் நிறைய அவதூறுகள், சர்ச்சை வருகின்றன. காவல்துறை உங்களைக் கண்டறியவே முடியவில்லை என்று சொல்கின்றார்கள். இந்த அவதூறுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, நீங்களே ஏன் அவர்கள் முன்னால் வந்து உங்கள் தரிசனம் தரக்கூடாது.

அம்மா இந்த அவதூறுகள் எல்லாமேப் பொய். காவல்துறை எந்தவிதத்திலும், எந்த நாட்டின் காவல் துறையும் என்னைத் தேடவில்லை. அதுவும்… என்னைத் தேடுவதாகச் சொல்லப்படுவதும் பொய். இன்டர்போல் மிகத்தெளிவாகச் சொல்லியிருக்கின்றது... 'என்மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லை. நான் தேடப்படும் நபரும் இல்லை. எந்த நாட்டின் காவல் துறையாலும் தேடப்படும் நபர் அல்ல.' என்னுடைய மனித உரிமைகள் பாதிக்கப்பட்டு, தாக்கப்பட்ட நபர் - persecuted person, not fugitive or accused என்பதைத் தெளிவாகப் பிரகடனப்படுத்தியிருக்கின்றார்கள். அந்த ஆவணங்களை வேண்டுமானால் காட்டுகின்றேன், பாருங்கள். எந்த நீதிமன்றத்தாலும், எந்த நாட்டின் காவல்துறையாலும் தேடப்படும் நபர் அல்ல. நான் சட்டரீதியாகவோ அல்லது எந்த விதத்திலும் நீதிமன்றப்படியோ தப்பிச்சென்ற நபரோ அல்லது தேடப்படும் நபரும் கிடையாது. அதனால் 'நான் தேடப்படும் நபர், தப்பி ஓடியவர்' என்று சொல்வதெல்லாம் மீடியா சொல்லுகின்ற பொய்!

நான் எந்த காவல்துறையின் முன்னால் வந்து ஆஜராகவேண்டும்? ஏனென்றால் எந்தக் காவல்துறையும் என்னைத் தேடவில்லை. அதனால் இன்டர்போல் வந்து மிகத்தெளிவாக இதைச் சொல்லிவிட்டது. அந்த முழு ஆவணத்தையும் உங்களுக்கு இப்போது காட்டுகின்றேன். அந்த Link-யும் காட்டுகின்றேன்.

'நான் தேடப்படும் நபராக, குற்றம் சாட்டப்படுப்பட்ட நபராக, தலைமறைவானர், தப்பி ஓடியவர்' என்றெல்லாம் சொல்வது, ஊடகங்கள் பரப்பும் பொய் வதந்தி! இதில் எந்த உண்மையும் இல்லை என்பதனால், எந்த காவல்துறை முன்னாலும் நான் வந்து தரிசனம் தர வேண்டிய தேவையில்லை. ஏனென்றால், அவர்கள் தேடவும் இல்லை.

இணையதளம் வழியாக தரிசனம் வேண்டுமென்றால், யார் வேண்டுமானாலும் வாருங்கள் தரிசனம் அளிக்கின்றேன். தேவை இல்லாதபொழுது அவர்கள் முன்னால் வந்து தரிசனம் தரவேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? இதுதான் உங்களுடைய கேள்விக்குப் பதில். வணக்கம்

அடுத்ததாக, கதம்பம் மீனா அவர்கள் கேள்வி அனுப்பிருக்கிறீர்கள்.. அம்மா வணக்கம்..

உங்ளுடையக் கேள்வியைப் படிக்கின்றேன்.. 'சுவாமிஜி நான் உங்களை திருவண்ணாமலை கிரிவலம் வரும்போது உங்களுடைய ஆசிரமத்திற்கு வந்து ஆசிர்வாதம் வாங்கியிருக்கின்றோம். ஆனால் இப்போது உங்களைப் பார்க்கவேண்டும், உங்களிடம் ஆசிர்வாதம் வாங்கவேண்டுமென்றால் அது முடியாத காரியமாக இருக்கின்றது. ஏன் நீங்கள் திருவண்ணாமலையில் உள்ள உங்கள் ஆசிரமத்திற்கு எப்போது வருவீர்கள், அதற்கான வாய்ப்பு இருக்கிறதா?'

அம்மா… இப்போதைக்கு நான் திருவண்ணாமலை ஆசிரமத்திற்கு வருவதற்கான வாய்ப்பு இல்லை. ஏனென்றால், இந்த கைலாயத்தைக் கட்டமைக்கின்றத் திருப்பணிகள் அதிகமாக இருப்பதனால், அதை செய்யவேண்டிய தருணம் இது என்பதனால், இப்பொழுதைக்கு வருவதற்கான வாய்ப்பு இல்லை.

உங்களுடைய அடுத்த கேள்வி, சுவாமிஜி 2000 ஆம் வருடத்திலேயே உலகம் அழிந்து விடும் என்று சொன்னார்கள். ஆனால் அதற்குப் பிறகு 25 வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால் இப்போது ஒவ்வொரு செயலில், ஒவ்வொரு விதத்தில் கொஞ்சம் கொஞ்சமாக உலகம் அழிந்துவிட்டுத்தான் இருக்கிறது. நிறைய இழப்புகள்… இப்போதுகூட பாகிஸ்தான் - இந்தியா பிரச்சனையும் நடந்துகொண்டிருக்கிறது. 'உலகம் அழிந்துவிடுவோம்' என்று சொன்னார்கள். உலகம் அழிந்துவிடுமா? அது பற்றி நீங்கள் சொல்ல முடியுமா? உலகம் அழிந்துவிடுமா, அது பற்றி உங்களுடைய கருத்து என்ன என்று நீங்கள் சொல்ல முடியுமா? என்று கேட்கிறீர்கள்.

அம்மா ஆழ்ந்து கேளுங்கள்… உலகம் அழியாது. உலகம் அழியாது! இந்தப் பிரபஞ்சம் வேறு வேறு நிலைகளில் மாறினாலும், உயிர்கள் அந்தச் சூழலில் வாழ்வதற்குத் தங்களை தகவமைத்துக்கொண்டு, ஏதாவது ஒரு விதத்தில் வாழ்ந்துகொண்டேதான் இருக்கும். இப்பொழுது, மனிதர்கள் செய்கின்ற அளவுக்கு மீறிய இயற்கை அழிப்பு போன்ற பிரச்சனைகளினால், ஒருவேளை இயற்கை பொங்கி, மனித இனம் இந்த பூமியில் இல்லாதவாறு செய்தால்கூட, சில லக்ஷம் ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் வேறொரு விதத்தில் உயிர்கள் மலர்ந்தேத் தீரும். அதனால், இந்த பிரபஞ்ச சுழற்சியில் 'உலக அழிவு' என்பதே கிடையாது மனிதர்கள் தங்களைத் தாங்களே அழித்துக்கொள்ளாமல் இருக்கவேண்டுமென்றால், இயற்கையைத் துண்டாடுவதை, இயற்கையை அழிப்பதை நாம் குறைத்துக்கொள்ள வேண்டும்.

உண்மையில், இந்த ஊடகங்கள், பொலிவியாவில் இருக்கின்ற அமேசான் நிலத்தை நாங்கள் அபகரிக்கப் பார்த்தோம் என்றெல்லாம் மிகப்பெரியப் பிரச்சனையாகக் கிளப்பினார்கள். பாருங்கள்… அதை அபகரிக்கப் பார்க்கவில்லை. அதன் உண்மையைச் சொல்லுகிறேன் கேட்டுக்கொள்ளுங்கள் பலநாடுகளில், இந்த பூர்விகக் குடிமக்கள் மிகவும் வறுமையில் இருப்பதனால், பல்வேறு கார்பரேட் கம்பனிகள் அவர்கள் வறுமையை உயோகப்படுத்தி, அவர்களுக்குப் பணம் கொடுத்து, காட்டை அழித்து, Mining செய்வது, Deforestration மற்றும் Mining இதுபோன்றக் கொடுமைகள் மூலமாக இயற்கையை அழிக்கிறார்கள். அது நடக்காமல் இருப்பதற்கு, அந்தந்த பூர்விகக் குடிமக்களோடு ஒப்பந்தம் செய்து, அவர்களுடைய வாழ்வாதாரத்திற்குப் பணத்தைக் கொடுக்கின்ற… அதாவது அவர்கள் வாழ்வாதாரத்திற்குப் பணத்தைக் கொடுத்து, 'இந்தக் காடுகளை அழிக்காதீர்கள், இந்த இயற்கை அப்படியே இருக்கட்டும், இங்கு ஒரு மரம் வெட்டக்கூடாது, ஒரு கல்லை உடைக்கக்கூடாது இங்கு எந்தவிதமான, சுரங்க வேலைகளும் நிகழக்கூடாது, அகழ்வுகளும் நிகழக்கூடாது' என்கின்ற ஒப்பந்தத்தைத்தான் நாங்கள் போட்டிருந்தோம். அதைத்தான் செய்தோம்.

உலகம் முழுவதும் இந்த மாதிரி 160 பூர்விக தேசங்களுடன், ஆதிக்குடிகள் பூர்விக்குடிகளோடு இதுபோன்ற ஒப்பந்தம் போட்டு, இதுவரை 20,00,000 ஹெக்டேர் நிலத்தை நாங்கள் இயற்கை எவ்வாறு இருக்கிறதோ அவ்வாறே பாதுகாக்கின்றோம்.

கைலாஸத்திற்குள், எந்த கைலாஸத்திற்குள்ளும் மரத்தை வெட்டுவது கிருமினல் குற்றம். மரத்தை வெட்டுவது கிருமினல் குற்றம். மரங்களுக்கு மனிதர்களைப் போலவே வாழ்வுரிமை அளித்திருக்கின்றோம். Trees and the Natural forest residing animals - இயற்கைக் காட்டிலே வாழுகின்ற மிருகங்களுக்கும் வாழ்வுரிமை - being status கொடுத்திருக்கின்றோம். கைலாசம் உலகம் முழுக்க இருக்கின்ற எந்தக் கைலாஸத்தின் நிலப்பகுதியிலும், எந்த இயற்கை அழிப்பும் நிகழாது.

இப்பொழுது, இந்த பொலிவியாவில் நாங்கள் 'நிலத்தை அபகரித்துவிட்டோம்' என்று மிகவும் வேக வேகமாகக் கூவிய ஊடகங்கள், ஒரு மிகப்பெரிய உண்மையை மறைத்தார்கள். 25 ஆண்டுகளாக, இந்த பல்வேறுப் பூர்வக்குடிகளுக்கு, நாங்கள் வருடாவருடம் அவர்கள் வாழ்வாதாரத்திற்குப் பணம் கொடுத்துக்கொண்டிருக்கின்றோம். இதுபோன்ற ஒப்பந்தங்கள் மூலமாக, இதுவரை ஒரு பூர்வக்குடி நிலத்தில்கூட, ஒரு மரத்தைக்கூட நாங்கள் வெட்டியதில்லை.

கோடிக்கணக்காண Millions of dollars இது மாதிரி எல்லாருக்கும் நாங்கள், அவர்கள் வாழ்வாதாரத்திற்காகக் கொடுத்திருக்கோம். இந்த ஒப்பந்தத்தின் மூலமாக, நாங்கள் என்ன முடிவு செய்கிறோம் என்றால், என்ன சாதிக்கிறோம் என்றால், அந்த இயற்கை அப்படியே பாதுகாக்கப்பட வேண்டும். அதன் மூலமாக பூமி வெப்பம் அடைவது தவிர்க்கப்பட்டு, பூமி பாதுகாக்கப்பட வேண்டும். இந்த மிக உயர்ந்த நோக்கத்திற்காக, 25 ஆண்டுகளாக நாங்கள் செய்துகொண்டிருக்கும் சேவையை ஊடகம் கொச்சைப்படுத்தி, எங்களை அவமானப்படுத்தி, எங்களைத் தாக்கியது.

இன்னொரு விஷயமும் சொல்கிறேன்... இந்த கார்பரேட் கம்பனிகள், இந்தக் காடுகளை அழித்து, மரங்களை விற்கின்ற சுரங்கங்கள் அமைத்து, தங்கத்தை வழியில் எடுப்பது மற்றும் மற்ற மினரல்களை வெளியில் எடுக்கின்ற இந்த கார்பரேட் கம்பனிகள்தான், ஊடகங்களுக்குப் பணம் கொடுத்து, இந்த அவதூறுப் பிரச்சாரத்தை செய்யவைத்தார்கள். செய்ய வைத்து, சட்ட விரோதமாக எங்களுடைய ஒரு நிலப்பரப்பிலிருந்து, நாங்கள் ஒப்பந்தத்தின் மூலமாக கையெழுத்திட்டு, எங்களுக்கு சுய-நிர்ணய உரிமையுடன் அளிக்கப்பட்ட ஒரு நிலப்பரப்பிலிருந்து எங்களை வெளியேற்றினார்கள்.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள் அம்மா.. ஊடகங்கள் என்ன சொன்னார்கள் என்றால், 'அந்த நிலப்பரப்பை அபகரிக்கின்றோம்' என்றார்கள். அந்த இடத்தில்.. 3 லக்ஷம் பேர் வாழ்கின்ற, பூர்வக்குடிகள் இருக்கின்ற இடத்திற்கு மூன்றே மூன்று சன்யாசிகளை அனுப்பி, அங்கு அன்னதானம், யோகா வகுப்பு போன்ற சேவைகள் செய்கிறோம். 3 சன்யாசிகள் சென்று 3 லக்ஷம் பூர்வக்குடிகள் இருக்கின்ற நிலத்தை அபகரித்துவிட முடியுமா? என்ன முட்டாள்தனத்தின் உச்சமான பொய் பிரச்சாரம் இது? 'அந்த மொத்தத் தாக்குதல், எவ்வாறு நிகழ்த்தப்பட்டது? ஏன் நிகழ்த்தப்பட்டது? என்ன நாங்கள் செய்து கொண்டிருக்கின்றோம்' என்ற உண்மை முழுவதையும் உங்களுக்கு இந்த ஆவணத்தின் மூலமாகக் காட்டுகின்றேன். நீங்கள் படித்துப் பாருங்கள்.

பூமியை மனிதர்கள் அழித்துவிடாமல் இருக்க, மனிதகுலம் தன்னைத்தானே அழித்துத் தற்கொலை செய்துகொள்ளாமல் இருக்க, மனிதகுலம் தற்கொலைச் செய்துகொள்வதைத் தடுப்பதற்காகத்தான், உலகம் முழுவதும் பூர்வக்குடிகளோடு ஒப்பந்தங்கள் செய்துகொண்டு, அவர்கள் வாழ்வாதாரத்திற்குத் தேவையானப் பணத்தை வருடாவருடம் அளித்து, இயற்கையை அழித்துவிடாமல் பாதுகாக்கும் செயலை 25 ஆண்டுகளாக செய்துகொண்டிருக்கின்றோம். இன்னமும் செய்கின்றோம், இனியும் செய்வோம்.

ஏனென்றால், இந்த ஒப்பந்தம் சட்ட விரோதமானது அல்ல. எங்கள் மீது நடத்தப்பட்டத் தாக்குதல்தான் சட்ட விரோதமானது. அதனால்தான் எந்த நீதிமன்றத்திலும், காவல்துறையிலும் வழக்குத் தொடுக்க முடியவில்லை. எங்களை தாக்கியவர்களால் வழக்குத்தொடுக்க முடியவில்லை. சட்ட விரோதமாய் எங்களைத் துரத்தினார்களேத் தவிர வழக்குத்தொடுக்க முடியவில்லை. நீதிமன்றத்தில் நாங்கள் வெற்றியடைந்திருக்கின்றோம். அந்த ஒப்பந்தங்கள் இட்டுக்கொண்டப் பூர்வக்குடி மக்கள், 'நாங்கள் அங்கு வேண்டும்' என்று நினைக்கின்றார்கள். நாங்கள் அங்கு இருக்க வேண்டும் என்று நினைக்கின்றார்கள். எங்கள் முலமாக அவர்களுக்கு வருகின்ற வருமானம் மற்றும் சேவைகள் அவர்களுக்கு வேண்டும் என்று நினைக்கின்றார்கள். இதுதான் உண்மை!

ஆனால், 'உலகத்தை அழித்தேத் தீர வேண்டும்' என்று நினைக்கின்ற அரக்கர்கள்.. நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், 'அசுர' என்கின்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்றால், தன்னுடைய சுய இன்பத்திற்காக, சுயலாபத்திற்காக, சுய நலத்திற்காக, தன் வாழ்க்கைக்காகவும், தன் வாழ்க்கையின் வசதிகளுக்காகவும், யாருடைய வாழ்க்கையை வேண்டுமானாலும் அழிப்பது. எந்த அளவிற்கு வேண்டுமானாலும் இயற்கையைச் சீரழிப்பது' என்ற செயல்களில் இறங்குபவர்கள் தான் அசுர: - 'அசுர' என்கின்ற வார்த்தைக்கு அதுதான் அர்த்தம். இந்த அசுரத் தன்மை நிறைந்த அரக்கர்கள், 'பூமியை அழித்தே ஆகவேண்டும், இயற்கையை அழித்தே ஆகவேண்டும்' என்று நினைப்பவர்கள், அந்த இடத்திலிருந்து… அதாவது பூர்வக்குடி மக்கள் எங்களுக்கு அளித்த இடத்திலிருந்து, நாங்கள் பாதுகாத்துக்கொண்டிருந்த அந்த இயற்கைக் காடுகள், இயற்கையை எவ்வாறு இருந்ததோ அவ்வாறேப் பாதுகாத்துக்கொண்டிருந்த, நாங்கள் சமூகசேவைகள் செய்துகொண்டிருந்த இடத்திலிருந்து, எங்களை விரட்டினார்கள். சட்ட விரோதமாக விரட்டினார்கள். ஆனால் நீதிமன்றத்தில் நாங்கள் வெற்றிபெற்று, மீண்டும் அந்த இடங்களில் நாங்களே இருக்கின்றோம். அந்த சேவைகள் தொடர்ந்து நிகழ்கின்றன. இது யாராலும் தடுக்க முடியாது.

ஊடகங்கள் கொஞ்சம் சத்தம் வேண்டுமானால் போடலாமேத் தவிர, சத்தியத்தை அவர்கள் மறைத்துவிட இயலாது. அதனால் 'உலகம் அழியாது', மனித இனம் தன்னைத்தானே அழித்துக்கொள்ளாமல் பார்த்துக்கொள்ளவேண்டியது மனித இனத்தினுடையப் பொறுப்பு. இதுதான் நீங்கள் கேட்டக்கேள்விக்கு விடை. நன்றி

அடுத்ததாக, இன்னும் நீண்ட வரிசை… பல்வேறு கேள்விகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன மற்றும் இணையதளத்தின் நேரலையிலும் கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருக்கின்றார்கள். கேள்விகள் வந்துகொண்டிருக்கின்றன. தொடர்ந்து பதிலளிக்கின்றேன்.

இந்தக் கேள்விகளை ஒருங்கிணைத்து எனக்குக் காண்பித்துக்கொண்டிருக்கின்றார்கள்… தொடர்ந்து பதிலளிக்கின்றேன்… நேரலையில் இணைந்திருங்கள்.

அம்மா பானுமதி அவர்கள் அனுப்பிய இன்னும் சில கேள்விகள் இருக்கின்றன. அவைகளைப் படிக்கின்றேன். ‘’Is Kailasa a Real international recoganized country or just an online concept?’’ கைலாஸா - ஒரு உண்மையான, சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட தேசமா அல்லது வெறும் இணையதள ரீதியான கருத்தா? என்று கேட்கின்றீர்கள்.

அம்மா.. கைலாஸம் என்பது நிஜம். நாம் முதலிலேயேப் பல இடங்களில் சொல்லியிருப்பதைப் போல, ஒன்றுக்கும் மேற்பட்ட சிறிய இடங்கள், எங்களுக்கு சர்வ-சுவதந்திரமாக, கைலாஸாவை அமைத்துக்கொள்வதற்காக சில நாடுகள் அளித்திருக்கின்றார்கள். முறையான, சர்வதேச நிலைப்பாட்டின் படி, சர்வதேச ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு, சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஒப்பந்தங்களின் மூலமாக, சிறு சிறு நிலப்பகுதிகளை ஒன்றிற்கும் மேற்பட்ட இடங்களில் எங்களுக்கு அளித்திருக்கின்றார்கள்.

சில இடங்களில் இந்த indigenous nations - பூர்வக் குடிகள், சுய-நிர்ணயம் செய்துகொள்ளும் உரிமையுடைய சில நிலங்களையும் கொடுத்திருக்கிறார்கள். அதனால், இவைகளை எல்லாம் ஒன்றிணைத்துதான் கைலாஸா தேசம் நிகழுகின்றது. கைலாஸா தேசம் உண்மை. ஒரு தேசத்திற்கு என்னென்ன வேண்டும் என்று மாண்டே வீடியோ உடன்படிக்கைச் சொல்லுகின்றதோ.. அதாவது ஒரு தெளிந்த நிலப்பரப்பு, சொந்தமான நிலப்பரப்பு அது எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கலாம்.

உதாரணத்திற்கு, வாடிகன் மொத்தமாகவே 200 ஏக்கர்தான். 108 ஹெக்டேர்தான் வாடிகன், ஏறத்தாழ 200 ஏக்கர் நிலப்பரப்புதான் வாட்டிகன். அது சிறிய அளவாகக்கூட இருக்கலாம், ஆனால் வாடிகன் ஒரு நாடாக கருதப்படுகின்றது, மதிக்கப்படுகின்றது. அதேமாதிரி அளவைப் பொருத்தவரை பிரச்சனை இல்லை. ஏதோ ஒரு அளவு, ஆனால் சொந்த நிலம் இருக்கவேண்டும். நிலம் மற்றும் நிரந்தரமான குடிமக்கள் அதுவும் இருக்கிறது. சொந்த நிலம் இருக்கிறது, நிரந்தரமான குடிமக்கள் அதுவும் இருக்கிறது. நிர்வாக அமைப்பு, நிரந்தரமான அரசாங்கம் அதுவும் இருக்கிறது, மற்ற நாடுகளோடு உறவை ஏற்படுத்திக் கொள்ளக்கூடிய தகுதியும், உறவுகள் ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும், அதே மாதிரி அரசாங்கமும் இருக்கிறது. மற்ற நாடுகளோடு உறவுகளை ஏற்படுத்தியிருக்கின்றோம், பல நாடுகள் எங்களை ஒரு நாடாக அங்கீகரித்திருக்கிறார்கள்.

அதாவது, அரசியலுக்கு அப்பாற்பட்ட ஆன்மிக தேசம். நாங்கள் மற்ற நாடுகளைப்போல, அரசியல் கருத்து சார்ந்த, அரசியல் சார்ந்த நாடு இல்லை அம்மா. அதாவது அரசியல் என்பது வேறு வேறு அரசியல் கருத்தியல்கள் (Political idealogies) இருக்கும் கம்யூனிஸம், சோசியலிஸம், கேபிட்டலிஸம், ஜனநாயகம் போன்ற வேறு வேறு அரசியல் சித்தாந்தங்கள், கருத்தியல்கள் இருக்கும். அதேமாதிரி சாசனம், வேறு வேறு அரசியல் கருத்தியல்களைச் சார்ந்த அரசியல் சாசனம் இருக்கும். இதுமாதிரி ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு அரசியல் கருத்தியலை, ஒவ்வொரு அரசியல் சாசனத்தை அடிப்படையாக வைத்து இயங்கும்.

ஆனால், கைலாஸா – அரசியலுக்கு அப்பாற்பட்ட ஆன்மிக தேசம். அம்மா ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள்.. நாங்கள் அரசியலுக்கு அப்பாற்பட்ட ஆன்மிக தேசம். மனிதர்களால் உருவாக்கப்பட்ட எந்தவிதமான அரசியல் கருத்தியலையும் சாராத, பரமசிவப் பரம்பொருளே அருளிய, சனாதன இந்து தர்மத்தின் வேத ஆகமங்களை அரசியல் சாசனமாகக்கொண்டு (constitiution), மனுவாதி தர்மசாஸ்த்திரங்களை நீதிமுறையாக (Jurispriece) வைத்து இயங்குகின்ற நிஜமான தேசம் நாங்கள். பல்வேறு நாடுகள் எங்களை Apolitical Nation என்று அதாவது அரசியலைத் தாண்டிய ஆன்மிக தேசம் என்று அங்கீகரித்திருக்கின்றார்கள். ஏற்றுகொண்டிருக்கின்றார்கள். நீங்கள் சொல்கிறீர்கள் இல்லையா, 'சர்வதேச அங்கீகாரம்' என்ற அந்த வார்த்தையை நாம் ஆழ்ந்து புரிந்துகொள்ளவேண்டும். எந்த நாடுமே ஐநா-சபையினால் அங்கீகரிக்கப்படுவது கிடையாது. இதை தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள், ஐநா-சபையின் சாசனத்தை இங்குக் காட்டுகின்றேன் பாருங்கள். அவர்களுடைய சாசனத்திலேயே அவர்கள் மிகத் தெளிவாகச் சொல்கின்றார்கள்.. 'they do not have a right to recognize any nation - அங்கீகரிப்பது இல்லை'. வேறு வேறு காரணங்களுக்காக பல நாடுகள் ஐநாவில் உறுப்பினர்களாக இருக்கின்றன. உறுப்பினராக இருப்பது அந்த நாட்டினுடைய முடிவேத் தவிர, ஐநா-சபை ஒரு நாட்டை அங்கீகரிப்பதோ, ஐநா-சபையின் அங்கீகாரம் இருந்தால்தான் ஒரு நாடு 'நாடு' என்றோ கிடையாது. வாடிகனே 'ஐநாவினுடைய உறுப்பினர் நிலை எங்களுக்குத் தேவையில்லை' என்று மறுத்திருக்கின்றார்கள். காரணம் என்னவென்றால், they represent god பழன அவர்கள் கடவுளைப் பிரதிநிதித்துவப்படுத்துவதனால், மனிதர்கள் சார்ந்த எந்தத் தரப்பையும் அவர்கள் எடுக்கக் கூடாது என்பதனால், அவர்கள் ஐநா சபையில் உறுப்பினர் நிலை வேண்டாம் என்று சொல்லியிருக்கின்றார்கள்.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்.. இந்த ஐநா சபையில் உறுப்பினர்கள் ஆவதற்ககுக் காரணங்கள் என்னவென்றால், இப்போது கடன் வேண்டும் என்றால், IMFகு –ல் 'ஒரு நாடு' என்று அங்கீகரிக்கப்பட்டு, 'ஒரு நாடு' என்று உறுப்பினர் நிலை இருக்கவேண்டும். உறுப்பினாராக இருந்தால்தான் ஐஆகு-இடமிருந்து கடன் வாங்க முடியும்.

அதேமாதிரி ஆயுதங்கள் வாங்கவேண்டும் என்றால், உங்களுக்கு ஆயுதங்களை அளிக்கின்ற நாடு, உங்களை 'நாடு' என்று அங்கீகரித்து, உங்களை அவர்களுடைய எதாவது ஒரு குழுவில் உறுப்பினராகச் சேர்த்துக்கொண்டால்தான், உங்களுக்கு ஆயுதங்கள் கொடுப்பார்கள். அதேமாதிரி ICC international court அந்தinternational court--ல் நீங்கள் உறுப்பினராக இருந்தால்மட்டும்தான் international court--ல் சென்று நீங்கள் வழக்குகள் தொடுத்து நீதிபெற முடியும். இந்த மாதிரி யார் யாருக்குத் தேவையோ அவரவருக்கு அந்தந்த அமைப்பில், உலகளாவிய நாடுகளின் அமைப்பில், ஐநா சபையினுடைய அமைப்பில் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

எங்களைப் பொருத்தவரை எங்களுக்குக் கடனும் தேவையில்லை, ஆயுதங்களும் தேவையில்லை, வேறு எந்த உதவிகளும், வேறு எந்த விஷயமும் எங்களுக்கு வெளியிலிருந்து யாரிடமும் தேவையில்லை. எங்களை 'நாடு' என்று யார் அங்கீகரிக்க வேண்டும் என்றால், எங்களைச் சுற்றியிருப்பவர்கள், எங்களுக்கு இந்த நிலத்தைக் கொடுத்தவர்கள், எங்களை சுற்றி இருப்பவர்கள் எங்களை 'நாடு' என்று அங்கீகரிக்கவேண்டும். பரமசிவன் அருளாலே அது நடந்துவிட்டது. இந்த நிலத்தை எங்களுக்குக் கொடுத்தவர்கள், சிறிய நிலம்தான். ஆனால் அதைக் கொடுத்தவர்கள் மற்றும் எங்களை சுற்றி இருப்பவர்கள், எங்களை 'நாடு' என்று ஏற்றுக்கொண்டார்கள். சரிப்பா நீங்கள் அங்கு வாழ்ந்துகொள்ளுங்கள், நீங்கள் எங்கள் எல்லைக்குள் வந்து எங்கள் விஷயங்களில் தலையிடக்கூடாது. நாங்கள் உங்கள் விஷயங்களில் தலையிட மாட்டோம், நட்போடு இருந்துகொள்வோம் என்று அவர்கள் எங்களுக்கு அளித்திருக்கிறார்கள். அவர்களோடு அந்த சர்வதேச ஒப்பந்தத்தில் (international treaties) கையெழுத்திட்டிருக்கின்றோம். அதனால், நாங்கள் நாடு.

அதுபோக பல்வேறு நாடுகளோடு, 'அரசியல் சாராத தேசம்' என்கின்ற அங்கீகாரத்தையும் வாங்கியிருக்கின்றோம். அது சார்ந்த கலாச்சார உறவு சார்ந்து, மத மற்றும் கலாச்சாரரீதியான தூதுரக உறவை ஏற்படுத்திக்கொண்டு (religious and cultural relationship) அது சார்ந்த நிறைய தூதரக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளோம். அந்த மாதிரியான தூதுரக உறவுகளை வைத்துள்ளோம். அதனால், இயங்கக்கூடிய கூடிய நடைமுறையில் Functional - ஆன, மாண்டே வீடியோ உடன்படிக்கையினுடைய நிலைப்பாடுகளின் படி (montevideo convention standards ) நாங்கள் அரசியலுக்கு அப்பாற்பட்ட ஆன்மிக தேசம். அதில் எந்த சந்தேகமும் இல்லை.

பரமசிவனின் அருளாலே, சனாதன இந்து தர்மத்தை அடிப்படையாக வைத்த இந்த கைலாஸத்தை பரமசிவனே மலர்த்தியிருக்கின்றார். இது உண்மையான ஒரு தேசம். எங்களுக்கு என்ன வேண்டுமோ எங்கள் வாழ்க்கைமுறைக்கு என்ன வேண்டுமோ, அதை பரமசிவப் பொருள் அளித்து விட்டார், அளித்திருக்கின்றார். அதை நடத்திக்கொண்டே இருக்கின்றார். அதனால் யார் யாரெல்லாம் வாழ்க்கையிலே, பணம் கொடுக்கல்-வாங்கல் இதனால் பெருந்துக்கத்தை அடைந்து, 'இதற்கு மேலும் இந்த பணம் சார்ந்த வாழ்க்கையே வேண்டாம் போதும்பா' என்று நினைக்கின்றவர்கள், அரசியல் சூழல்களால் தாக்கப்பட்டுக் கொடுமைப்படுத்தப்பட்டு, 'இதற்கு மேல் இதுபோன்ற கொடுமைகள் வேண்டாம் அப்பா' என்று நினைப்பவர்கள், வேறு வேறு காரணங்களால் வாழ்க்கையின் கொடுமைகளைப் பார்த்து, 'இதற்கு மேல் அமைதியும், ஆனந்தமும், ஆன்மிகத் தேடுதலும், ஜீவன் முக்தியை நோக்கிய வாழ்க்கையும், மோட்சத்தை நோக்கிய வாழ்க்கையும், பரமசிவ ஞானம், பரமசிவ விஞ்ஞானம், பரமசிவ பக்தி போன்றவைகளைச் சார்ந்த வாழ்க்கையும், பரமாத்வைதத் தேடுதல் இருப்பவர்களும் கைலாஸத்திற்கு வருவதற்காக விண்ணப்பிக்கலாம்.

இந்த 30 நாட்கள் பரமசிவ சேனா என்கின்ற இலவச நிகழ்ச்சி, பல நாடுகளிலும் நிகழுகின்றது. அமெரிக்காவில் கைலாஸா லாஸ் ஏஞ்ஜலிஸிலும், கைலாஸா கனடாவிலும், ஈக்வெடாரிலும், கைலாஸா மலேசியாவிலும், கிரெணடாவிலும், நேபாளத்திலும் மற்றும் இந்தியாவில், கைலாஸா காசி, கைலாஸா சேலம், கைலாஸா ஐதராபாத் போன்ற பல இடங்களிலும் இந்த நிகழ்ச்சி மாதந்தோறும் நிகழ்கின்றது. இதில் உணவு, தங்குமிடம், நிகழ்ச்சி முழுவதும் இலவசம் என்பதனால் அதில் யார்வேண்டுமானாலும் கலந்துகொண்டு கைலாஸாவைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொண்டு informed decision எடுத்து கைலாஸாவில் வந்து life – ல Settle ஆகவேண்டும் என்று நினைக்கின்றவர்கள், கைலாஸாவில் வந்து இருக்கவேண்டும் என்று நினைப்பவர்கள், உங்கள் அனைவருக்கும் கைலாஸா எப்போதும் திறந்திருக்கின்றது. இது வேலியோ, சுற்றுச்சுவரோ, கதவுகளோ இல்லாத தேசம். பரமசிவப் பரம்பொருள் மொத்த மனித இனத்திற்கும் அளித்த மிகப்பெரிய ஆன்மிக நன்கொடை இந்த கைலாஸா தேசம்.

பரமசிவப் பரம்பொருள் உலகம் முழுவதிலும் இருக்கும் மனிதர்களுக்காக, பரமாத்வைதத்தை அமைதியான, ஆனந்தமான, நிம்மதியான வாழ்க்கையை வாழ நினைக்கின்ற மக்களுக்காக ஜாதி, மத, இன, பேதங்களுக்கு அப்பாற்பட்டு, அரசியல் கருத்துக்களுக்கு, சண்டைச் சச்சரவுகளுக்கு அப்பாற்பட்டு நிம்மதியாக வாழ நினைக்கின்ற மக்களுக்காக உருவாக்கியிருக்கின்ற, பரமசிவப் பரம்பொருள் உருவாக்கியிருக்கின்ற ஆன்மிக தேசம் இந்த கைலாஸா. அதனால் யாருக்கெல்லாம், மனிதர்கள் உருவாக்கிய இந்த மாயைகளின் மீது சலிப்பு ஏற்பட்டு விட்டதோ, இந்த மாயைகளிலே சழக்குற்று… மாணிக்கவாசகப் பெருமான் சொல்வதைப்போல ... புல்லாகிப் பூடாய் புழுவாய் மரமாகிப் பல் விருகமாகிப் பறவையாய் பாம்பாகி கல்லாய் மனிதராய் பேயாய் கணங்களாய் வல்லசரராகி முனிவராய் தேவராய்… இந்தப் பல பிறவிகள் எடுத்து எடுத்து நாம் அழிந்து கொண்டிருக்கின்றோம் என்கின்ற சலிப்பு வந்தாலும், மற்றபடி இந்த ஒரு பிறவியில்கூட பல்வேறு மூடத்தனமானச் செயல்களைச் செய்து, மூடத்தனமான கொள்கைகளின் பின்னால் சென்று, மாயையில் விழுந்து, பல்வேறு துக்கங்களை அனுப்பவித்துக்கொண்டிருக்கின்றோம் என்கின்ற தெளிவு வந்தாலும், இவை எல்லாவற்றிலிருந்தும் விடுபட்டு… 'மாற்றமாம் வையகத்தேப் பட்டபாடெல்லாம் போதும்' என்று நினைத்து, 'ஜீவன் முக்த வாழ்க்கை வாழ' வேண்டுமென்று முடிவெடுக்கின்ற, உங்கள் எல்லோருக்கும் ஒரு ஆனந்தமயமான, ஆன்மிக தேசம் பரமசிவன் வெளிப்படுத்தியிருக்கின்ற இந்தக் கைலாஸா தேசம்.

உங்கள் எல்லோருக்கும், பரமசிவப் பரம்பொருள் அளித்திருக்கும் நன்கொடை இந்தக் கைலாஸா தேசம். கைலாஸாவில் எங்களுடைய first amendment, உங்களுக்கு அளிக்கப்படும் முதல் உரிமை என்னவென்றால், உங்களைப் பரமசிவனாக உணர்வதற்கும், பரமாத்வைத சத்தியத்தை உணர்வதற்கும் வாழ்வதற்கும், மற்றவர்களும் உங்களைப் பரமசிவப் பரம்பொருளின் வெளிப்பாடாக நடத்துவதற்கும் உங்களுக்கு உரிமை இருக்கின்றது. நீங்கள் அதேபோல மற்றவர்களையும் பரமசிவப் பரம்பொருளின் வடிவங்கள் என்று பார்த்து, அதே முறையில் அவர்களை நடத்துவது உங்கள் கடமை. இதை அடிப்படையாக வைத்துத்தான் this is a fundamental right - the first amendment Kailasa gives you. இதை அடிப்படையாக வைத்துத்தான் பரமசிவப் பரம்பொருள் இந்த மொத்த கைலாஸத்தையும் மலரச் செய்திருக்கின்றார்.

மீண்டும் மீண்டும் மீண்டும் வருகின்ற கேள்வி, எப்படி நீங்கள் எல்லாவற்றையும் இலவசமாகக் கொடுத்தால், மனிதர்கள் சோம்பேறியாகி விடமாட்டார்களா? எப்படி நாட்டை நடத்துவீர்கள்? என்று கேட்கின்றீர்கள்..

ஐயா நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்... உணவு, உடை, உறைவிடம், மருத்துவம், கல்வி என்கின்ற இந்த அடிப்படைத் தேவையை மனிதனுக்கு அளிக்காமல், அவனை இதைக் காட்டி அடிமையாக வைத்து வேலை வாங்குவது, மிக மிக மிக 'ஈனத்தனமான ஒரு சமூக அமைப்பு' என்று சனாதன இந்து தர்மம் உறுதியாக நம்புகின்றது.

ஒரு மனிதனுக்கு இந்த அடிப்படைத் தேவைகளை அளித்துவிட்டு, அவனுடைய உயிரின் உயிர்ப்பையும், நோக்கத்தையும் அவனுக்கு உயிர்ப்பித்துவிட்டால், அவன் மிக உயர்ந்த உருவாக்கும் திறனையும் மற்றும் சிரத்தையின் மூலமாக இயங்கி, நன்றியினால்... ஆனந்தத்தினால், தான் வாழ்கின்ற சமூகத்திற்கும், நாட்டிற்கும் மிகுந்த நேர்மையோடு மிகப்பெரும் பங்களிப்பான் என்பதுதான் சத்தியம்.

மனிதர்களுக்குள் இருக்கும் நல்லதன்மையை நம்பவேண்டும். ஒரு மனிதன் நல்லவனாவதும், அசுரனாவதும் அவன் வளர்கின்ற சூழல், வாழ்கின்ற சூழல் சார்ந்து நிகழ்கின்ற ஒன்று என்று நான் உறுதியாக நம்புகின்றேன். சனாதன இந்து தர்மம் இதை உறுதியாக நம்புகின்றது. ஒரு மனிதனை உயர்ந்த மன அமைப்பிற்குள், அவனுடையத் தேவைகள் எல்லாம் பூர்த்தியாகி விட்டாலும் ஆனந்தம், உத்சாகம், உருவாக்கும் திறன், நன்றி இவைகளின் காரணமாக தான் வாழும் சமூகத்திற்கும், நாட்டிற்கும் ஒரு மிகப்பெரிய பங்களிப்புச் செய்கின்ற மனிதனாக, உன்னதமானவனாக, அவனை உருவாக்கும் அறிவியல், சனாதன தர்மத்தில் இருக்கின்றது. அந்த அறிவியலைப் பரமசிவப் பரம்பொருள் எங்களுக்கு சத்தியமாகக் காட்டியிருக்கின்றார். சாத்தியமாக்கிக் காட்டியிருக்கின்றார். அதைத்தான் இந்த கைலாஸாவாக பரமசிவப் பரம்பொருள் மலர்த்தியிருக்கின்றார். அதனால் ஒரு மனிதனுக்கு அவனுடைய அடிப்படைத் தேவைகள் முழுமையாக இலவசமாக அளிக்கப்பட்டு விட்டாலும்கூட, அவன் வாழ்க்கையின் உண்மையான நோக்கத்தை அவனுக்குள் உணர்த்திவிட்டோமானால், அந்த ஜீவன் முக்தத் தன்மையிலிருந்து மிக உயர்ந்த உருவாக்கும் திறனும், கலையும், நன்றியும் பொங்கிப் பெருகி, அதனால் உருவாகிக் கொண்டிருக்கும் ஆன்மிக தேசம் 'கைலாஸா'.

ஒரு மனிதனுக்குள் இருக்கின்ற நல்லத்தன்மையை நம்பவேண்டும். அந்த நல்லத்தன்மையை உயிர்ப்பிப்பது சாத்தியம். இதை சத்தியமாக்கிக் காட்டியிருப்பதுதான் கைலாஸா. அதனால்தான் இந்த வாழ்க்கைமுறையைப் புரியவைத்து, மக்களை நாங்கள் எங்கள் பாகமாக மாற்றுகின்றோம். புரிவதற்கு நேரம் எடுக்கும் என்றால், உலகம் முழுவதிலும் இருக்கின்ற வேறு வேறு கைலாஸாவினுடைய நிறுவனங்கள், அங்கு இருந்து பயிற்சி எடுத்துக்கொண்டு, இந்த வாழ்க்கைமுறையோடு இணைந்து, பிறகு கைலாஸாவிற்கு வாருங்கள் என்று சொல்கின்றோம். அதனால் இது சாத்தியம், இது சத்தியம் என்பதை உங்கள் அனைவருக்கும் தெரிவித்துக்கொண்டு, குறிப்பிட்ட சத்சங்கத்தின் நேரம் கடந்துவிட்டது. இன்னும் பலபேருடைய கேள்விகள் இருக்கின்றன. ஆனால் சத்சங்கம் குறிப்பிட்ட நேரத்தைவிட, அதாவது இந்திய நேரப்படி 7.30 மணியிலிருந்து 9.30 மணிவரை என்று சத்சங்கத்தின் நேரத்தைக் குறித்திருந்தோம். ஆனால், அதையும் தாண்டி பத்து நிமிடங்கள் மேலாக 9.40 தாண்டி இப்போது சென்றுகொண்டிருக்கின்றது. ஆனாலும் தொடர்ந்து எல்லாத் தொலைக்காட்சிகளும் நேரலை செய்துகொண்டிருக்கின்றீர்கள்.

பிரபாகரன் கலைக்கூடம், டிரீம்ஸ் தமிழ், பேசு தமிழா பேசு, திருவருள் போன்றத் தொலைக்காட்சிகள் நேரலை செய்துகொண்டிருக்கிறீர்கள். அந்த தொலைக்காட்சிகளின் உரிமையாளர்களுக்கும், அதன் முலமாக இணைந்திருக்கும் அன்பர்களுக்கும் வணக்கங்கள், நன்றிகள்.

தொலைக்காட்சிகள் முலமாக, சமூக ஊடகங்கள் முலமாக இணைந்திருக்கும் அன்பர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டேதான் செல்லுகின்றது, நேரம் கடந்துவிட்டாலும் பார்வையாளர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்கின்றது. இருந்தாலும் ஒவ்வொருமுறையும் இதேபோல் காலத்தை நீட்டிப்பது சரியல்ல என்பதனால், மீண்டும் கூடிய விரைவில், அடுத்த சில நாட்களுக்குள் மீண்டும் ஒரு நேரலை நிகழ்வின் மூலமாக வந்து… இன்று கேள்விகள் அனுப்பியப் பிரபலங்கள் பலவேருடைய கேள்விகள் பதில் சொல்லப்படாமல் இருக்கின்றன, அவைகளுக்கும் பதிலளிக்கின்றேன் மற்றும் பொதுமக்களின் கேள்விகளுக்கும் பதிலளிக்கின்றேன். அடுத்தடுத்த சத்சங்கங்கள் மூலமாக உங்களுக்குப் பதிலளிக்கின்றேன்.

இன்றைய இந்த எல்லாக் கேள்விகள், அவைகளுடைய விடைகள், அதனுடைய சாரம், இதைத் தொகுத்து சில கருத்துக்களாக உங்கள் முன்வைக்கின்றேன்.

ஏனென்றால், நிறைய அன்பர்கள் இப்போது இணைந்திருக்கிறீர்கள், உங்களுக்காக சத்சங்கத்தின் சாரத்தை முன் வைக்கின்றேன்.

பரமசிவப் பரம்பொருள் சத்தியம், அவரே உலகத்திற்கு அருளிய வேதமும் ஆகமமும் சத்தியம். இந்த வேத ஆகம முறைகளின் வாழ்க்கைமுறை, அது காட்டும் வாழ்க்கைமுறை மிக உயர்ந்த ஆனந்தத்தையும், ஆன்மீக ரீதியான முக்கியையும், சமூகரீதியான இனிமைத்தன்மையையும், சமூகம், சமூகரீதியாகப், பொருளாதாரரீதியாக, வாழ்க்கைமுறை ரீதியாக எல்லா விதங்களிலும் மிக உயர்ந்த ஒரு வாழ்க்கைமுறையை, பரமசிவப் பரம்பொருள் வேத - ஆகமங்களை அடிப்படையாக வைத்து, சனாதன இந்து தர்மமாக வழங்கியிருக்கின்றார். அதை வாழ விரும்புபவர்களுக்காகவே இந்த கைலாஸத்தையும், பரமசிவப் பரம்பொருள் மலர்த்தியிருக்கின்றார். இந்த சத்தியங்களை சாத்தியமாக்கியிருக்கின்றார். இதை வாழ விரும்பும் எல்லோருக்காகவும் கைலாஸத்தை அவர் திறந்து வைத்திருக்கின்றார்.

இந்த வாழ்க்கையை வாழவிரும்பும் யார் வேண்டுமானாலும், 'பரமசிவ சேனை' என்று ஒவ்வொரு மாதமும், உலகம் முழுவதிலும் இருக்கும் கைலாஸங்களில் நிகழும் நிகழ்ச்சியில் பங்கெடுத்துக்கொண்டு, விசாவிற்கான நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளலாம். இந்த நிகழ்ச்சி முற்றிலும் இலவசம். விசாவிற்கும் எந்தத் தொகையும் கிடையாது.

ஏன் இந்த நிகழ்ச்சி என்றால், நீங்கள் கைலாஸத்தைப் பற்றி தெரிந்துகொண்டு, ஊடகங்கள் பல்வேறு விதமான பொய்களையும், மாயக் கருத்துக்களையும் கைலாஸத்தைப் பற்றிப் பரப்பியிருக்கின்றன. அவைகள் எல்லாவற்றையும் தெளிவாக்கி, உண்மை என்ன என்பதைத் தெரிந்துகொண்டு, நீங்கள் புரிந்துகொண்டு முடிவெடுக்கவேண்டும் என்பதற்காகத்தான், இந்த 30 நாள்.

அந்த 30 நாளில் நீங்கள் கைலாஸத்தைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம், நாங்கள் உங்களைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம். அப்போது... 'நீங்கள் கைலாஸத்தினுடைய சர்வச் சுதந்திரமான நிலப்பரப்பில் வந்து வாழவேண்டும்' என்று நினைக்கிறீர்கள் என்றால் வரலாம் அல்லது கைலாஸத்தினுடைய நிறுவனங்கள்... 160 நாடுகளில் கைலாஸத்தின் நிறுவனங்கள் இயங்குகின்றது. ஆலயங்கள் நடத்துகின்றோம், மடங்கள் நடத்துகிறோம், ஆதீனங்கள் நடத்துகிறோம், குருகுலங்கள் நடத்துகிறோம், கோசாலைகள் நடத்துகிறோம், அன்னதான சாலைகள் நடத்துகிறோம், பல்கலைக்கழகங்கள் நடத்துகிறோம், வங்கிகள் நடத்துகிறோம். இந்த மாதிரி பல்வேறு நிறுவனங்களை நடத்துகிறோம். அந்த நிறுவனங்களில் நீங்கள் சென்று தங்கியிருந்து அந்த நிறுவனங்களின் பாகமாக மாறவேண்டும் என்றாலும் மாறலாம். எல்லாக் கதவுகளும் எல்லாருக்கும் திறந்திருக்கின்றது.

நீங்கள் எப்படி உங்களைக் கைலாஸத்தோடு இணைத்துக்கொள்ளலாம் என்பதை informed decision - தெரிந்து புரிந்து முடிவெடுத்துக் கொள்வதற்காகத்தான் இந்த 'பரமசிவசேனை' என்கின்ற நிகழ்ச்சி 30 நாட்களுக்கு, ஒவ்வொரு மாதமும் இலவசமாக நிகழ்த்தப்படுகின்றது. இலவசமாக அளிக்கப்படுகின்றது. நீங்கள் அந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்று informed decision எடுக்குமாறு உங்களைக் கேட்டுக்கொள்கின்றேன்.

அது மட்டுமில்லாமல் உங்களைப்பற்றி நாங்கள் தெரிந்துகொள்வதற்கும், இந்த 30 நாள் நிகழ்ச்சி எங்களுக்கும் வாய்ப்பாக இருக்கும். அப்போது மிகத்தெளிவாக ஒருவரை ஒருவருர் புரிந்து நாம் எடுக்கின்ற முடிவு, இருவருக்கும் நன்மை பயக்கும் என்பதைக் கூறி, உலகம் அனைத்திருக்கும் பரமசிவப் பரம்பொருள் அளித்திருக்கும் நன்கொடையே இந்த கைலாஸம் என்பதைக் கூறி, 'பரமசிவப் பரம்பொருள் அளித்திருக்கும் இந்த நன்கொடையை ஏற்று ஆனந்தமாக வாழ்வீர்களாக' என்று உங்கள் அனைவரையும் வாழ்த்தி, இந்த சித்ரா பௌர்ணமித் திருநாளில், உங்கள் அனைவரையும் மீண்டும் ஒருமுறை வாழ்த்தி, நித்யானந்தத்தில் நிறைந்து, நித்யானந்தத்தில் கரைந்து, நித்யானந்தமாகிட ஆசீர்வதிக்கின்றேன். நன்றி ஆனந்தமாக இருங்கள்.

Event Photos


Link to Facebook Posts

https://www.facebook.com/srinithyananda/posts/pfbid04xaLU49LqbD1xmphE3z29N8oxxRex4cA8PTprhrTvwZWmSUXHDz7Jr4mp1srx72Xl