May 22 2012
Title:
மதுரை ஆதீனம் வரலாறும் தத்துவமும்
Description:
தென்னிந்திய வரலாற்றில் குறிப்பிடத்தக்க முக்கிய இடம் மதுரைக்கு உண்டு. முற்கால மற்றும் பிற்கால பாண்டியர்கள், சுல்தான்கள், நாயக்கர்கள் மற்றும் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் பல சாதனைகளையும் சோதனைகளையும் தாண்டி வந்தது இம்மதுரை நகரம். பராசக்தியின் வடிவமான அன்னை மீனாட்சி பிறந்து, வளர்ந்து, ஆட்சிசெய்து, தெய்வமான இடமாகக் கருதப்படும் மதுரை, மேலும் மதுரை ஆதீனம் அன்னை மீனாக்ஷி சுந்தேரஷ்வர பெருமானால் நேரடிய உருவாக்கப்பட்டது . பின்பு திருஞான சம்பந்தர் வந்திருந்து புனரமைத்த உலகில் தோன்றிய முதல் ஆதீனம் மதுரை ஆதீனம். இந்து சமயத்தைச் சேர்ந்தவர்களின் மிக முக்கிய சக்திஸ்தலமாக விளங்குகிறது. இக்கோயிலில் நடக்கும் திருவிழாக்கள் சமுதாய ஒருங்கிணைப்பிற்கு ஒரு எடுத்துக்காட்டாக மட்டுமன்றி, அன்றைய மன்னராட்சியின் ஆட்சிச் சிறப்பையும் எடுத்துரைக்கும் வண்ணம் கொண்டாடப்படுகின்றன. தமிழ் வளர்ச்சிக்குத் தனியே சங்கம் வைத்து வளர்த்த பெருமையும் இந்த நகரத்துக்கு உண்டு என்று பழமையான வரலாறுகள் தெரிவிக்கின்றன.
திருஞான சம்பந்தர்
திருஞானசம்பந்தர், தமிழ்நாட்டில், சைவ சமயத்தவர்களால் நாயன்மார்கள் என அழைக்கப்படும் அறுபத்து மூவருள் முதல் வைத்து எண்ணப்படும் நால்வருள் ஒருவராவார்.
ஞானப்பால் உண்டது:
இவர் மூன்று வயதுக் குழந்தையாக இருந்தபோது, தந்தையாருடன் கோயிலுக்குச் சொன்றதாகவும், அங்கே குழந்தையைக் கரையில் அமரவிட்டுக் குளிக்கச் சென்ற தந்தையார், சிறிது நேரம் நீருள் மூழ்கியிருந்த சமயம், தந்தையைக் காணாத குழந்தை அம்மையே அப்பா என்று கூவி அழுததாகவும், அப்போது உமாதேவியார், சிவபெருமானுடன் இவர் முன் காட்சி கொடுத்து ஞானப்பாலூட்டியதாகவும் சொல்லப்படுகிறது.
குளித்துவிட்டு வெளியே வந்த தந்தையார், பிள்ளையின் வாயிலிருந்து பால் வடிவதைக் கவனித்து, அது குறித்துக் கேட்கவே கோயிலிலுள்ள இறைவனைச் சுட்டிக்காட்டித் "தோடுடைய செவியன்" என்று தொடங்கும் தனது முதல் தேவாரத்தை திருஞானசம்பந்தர் பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருஞான சம்பந்தர் "மந்திரமாவது திருநீறு" என்ற பாடலைச் சொல் லி மன்னனின் வயிற்றில் திருநீற்றை தடவி வயிற்று வலியைப் போக்கினார்.
Link to Video
மதுரை ஆதீனம் வரலாறும் தத்துவமும் - 1
| Video | Audio |
மதுரை ஆதீனம் வரலாறும் தத்துவமும் - 2
| Video | Audio |
மதுரை ஆதீனம் வரலாறும் தத்துவமும் - 3
| Video | Audio |
Title:
Making Visualisation A Reality
Video - Making Visualisation A Reality
| Video | Audio |
Photos









































































































































































