September 28 2019-Tamil

From Nithyanandapedia
Revision as of 18:54, 18 September 2020 by Pushpalochananda (talk | contribs)
Jump to navigation Jump to search

Title

Satsang from The Supreme Pontiff of Hinduism HDH Bhagavan Nithyananda Paramashivam in Tamil


Transcript

இன்றைய சத்சங்கத்தின் சாரம்! 28-செப்டம்பர்-2019 நித்யானந்தேஸ்வர பரமசிவ சமாரம்பாம் நித்யானந்தேஸ்வரி பராசக்தி மத்யமாம் அஸ்மதாச்சார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம்... உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன்..

  • உயர்கால மண்டலங்கள்.. Vertical time zone. அதைப் பற்றிய அறிவியலை ஆழ்ந்து கேளுங்கள்.. தாயார் பராசக்தி உலகத்திற்கு கொண்டு வந்த இந்த விஞ்ஞானம்.. கடந்த சில நாட்களாக சத்சங்கங்கள் வாயிலாக இந்த விஞ்ஞானத்தை உங்களோடு.. பகிரிந்துகொண்டு வருகின்றேன்..
  • இப்பொழுது முழுமையாக இதனுடைய சத்தியங்கள், சாத்தியங்கள், தாத்பரியங்கள், பரிமாணங்கள் அனைத்தையும் உங்களோடு பகிர்ந்துகொள்கின்றேன்..

உயிரின் மலர்ச்சியை.. மனம் உடைந்த, உணர்வு அறுந்த நிலையில் இருக்கும் மக்களால் புரிந்துகொள்ள முடியாது.

  • உயிரின் மலர்ச்சி ஒவ்வொரு உயிருக்கும் உரிய அடிப்படை உரிமை!

இந்த உயிரின் மலர்ச்சியை ஒவ்வொரு உயிருக்கும் அளிப்பதே என் கடமை!

  • ஆழ்ந்து கேளுங்கள்..

மனம் அறுந்து. உணர்வு உடைந்த நிலையில் இருக்கின்ற மக்கள்.. இந்த வார்த்தைகளை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்.. Mentally broken, Consciously Destroyed ஒரு காரை எப்படி ஓட்டுவது என்று கற்றுக்கொடுக்காமல் ஒரு குழந்தைக்கு கார் வாங்கித்தருவது தற்கொலை செய்துகொள்வதற்கு கற்றுக்கொடுப்பதற்கு சமம்.

  • எவ்வாறு ஒரு குழந்தைக்கு அறிவு அளிக்கப்படாமல் ஆற்றல் மட்டும் அளிக்கப்படுமானால்.. அந்த குழந்தையை நாம் கொலை செய்வதற்கோ, தற்கொலை செய்துகொள்வதற்கோ நாம் தூண்டுகின்றோம்.
  • உணர்வு அறுந்து, மனம் உடைந்த நிலை என்பது இதேமாதிரிதான்.. வாழ்வதற்கு அந்தக் குழந்தைக்கு அறிவும் தெளிவும் கொடுக்காமல் வாழ்க்கையை அந்தக் குழந்தையின் கையில் கொடுத்துவிடுவோமனால் உணர்வு அறுந்த நிலைக்கும், மனம் உடைந்த நிலைக்கும்தான் அந்த குழந்தையை நாம் தள்ளுகின்றோம்.

  • ஆழ்ந்து கேளுங்கள்..

உணர்வறுந்த நிலையிலும், மனமுடைந்த நிலையிலும் உயிர் மலர்ந்தல் சாத்தியமில்லை. உயிர் மலர்ச்சி ஒவ்வொரு மனிதனுக்குமான அடிப்படை உரிமை.

  • உயர்கால மண்டலங்களைப் பற்றிய அறிவும், எவ்வாறு அது என் வாழ்க்கையிலே பல்வேறு சத்தியங்களாக, சாத்தியங்களாக, சக்திகளாக வெளிப்பட்டது என்பதையும், பரமசிவப் பரம்பொருள் எவ்வாறு பராசக்தியாக எனக்குள் மலர்ந்த அறிவியலையும் அடுத்த 10 நாள் நவராத்திரி விருந்தாக உங்களோடு பகிர்ந்துகொள்கின்றேன்..
  • அடுத்த 10 நாள் எப்படி இந்த சக்திகள் மலர்கின்றன என்ற அறிவியமுல் சாத்தியமும்தான் உங்களுக்கு நவராத்திரி விருந்து!
  • என் குரு ரகுபதி யோகி - பதஞ்சலியின் அவதாரம்... பெருமான் பதஞ்சலி நேரடியாக வந்து யோக விஞ்ஞானத்தை புனரமைப்பதற்காக எடுத்த அவதாரம் ரகுபதி யோகி.

யோகத்தின் உச்சத்தை அடைந்த யோகி!

  • என்னை இந்த டெலிடேஷசன் அறிவியலில் பயிற்சி அளிக்க அவருக்கு மொத்தம் 3 மாதம் எடுத்தது.
  • டெலிடேஷசன் - தமிழில் 'உயர்தல்' எனலாம்.

சித்தர்கள் பரிபாசையில் சொல்லவேண்டுமென்றால்.. - மாங்காய் பாலுண்டு மலைமேல் இருப்பவர்களுக்கு.. தேங்காய்ப் பால் எதுக்கடி குதம்பாய் தேங்காய்ப் பால் எதுக்கடி? என்று குதம்பைச் சித்தர் பாடுகின்ற அந்த உயர் நிலை இந்த நிலைதான்.. ஆழ்ந்து கேளுங்கள்..

  • நான் பேசுகின்ற வார்த்தைகள் உங்கள் காதில் வந்து விழுவதற்கு ஊடகமாக இருப்பது காற்று

காற்றின் மூலமாகத்தான் ஒலி அலைகள் என்னிடமிருந்து உங்களை வந்த அடைகின்றது!

  • அதேமாதிரி சூரியன் எங்கோ இருக்கின்றது, சந்திரன் எங்கோ இருக்கின்றது, பூமி எங்கோ இருக்கின்றது, ஆனால் சூரியனின் ஈர்ப்பு சக்தி பூமியின் மீது இருக்கின்றது. அதனால்தான் ஒரே சீரான இயக்கத்தில் பூமி சூரியனைச் சுற்றி வருகின்றது.

பிரபஞ்சவியலைப் பற்றி இந்துக்கள் தெரிந்து வைத்திருப்பதைப்போன்ற தெளிந்த அறிவு வேறு எந்த சமூகமும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது.

  • 2000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வராக அவதாரம் பூமியை மீட்டெடுத்து வருகின்ற காட்சியை விளக்கும்பொழுது பூமியை பந்தாக கோள மண்டலமாகத்தான் அந்த விக்ரகத்திலே திருமேனியிலே அமைத்திருக்கிறார்கள்.
  • வேதங்களும் ஆகமங்களும் தெளிவாக சொல்லுகின்றன..

பூமி - கோளம் பூ மண்டலம் - தண்டை

  • இந்தப் பிரபஞ்சப் பெருவெளி - லிங்க வடிவானாது இதை வேதங்களும் ஆகமங்களும் தெளிவாக சொல்லுகின்றன.

காரணம் பரமசிவப் பரம்பொருளே நேரடியாக இந்த சத்தியங்களையும், சூட்சுமங்களையும், சாத்தியங்களையும், சக்திகளையும், பரிணாமங்களையும், பரிணாமங்களையும் தெளிவாக விளக்கியிருக்கின்றார். அந்த ஞானத்தை உள்வாங்கி கொள்ளும் தெளிவையும் நமக்கும் தந்திருக்கின்றார்.

  • ஆழ்ந்து கேளுங்கள்.. என்னுடைய வார்த்தைகள் உங்கள் காதில் விழுவதற்காக ஊடகம் காற்று!

பூமியின் மீது ஈர்ப்பு விசையை சூரியன் செலுத்துவதற்கான, பூமியின் மீது தன் சக்தி மண்டல தாக்கத்தை வைத்திருப்பதற்கான ஊடகம் ஆகாசம்

  • அதேபோல, பிரபஞ்சப் பெருவெளியான பரமசிவப் பரம்பொருளின் இருப்புநிலையான கைலாயம், உயர்ந்த ஞான மண்டலமான, சக்தி மண்டலமான கைலாசம் நம் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கான, நாம் அதோடு நம்மை இணைத்துக்கொள்வதற்கான ஊடகம் - Consciousness - உயிர்ப்புதன்மை!
  • ஒரே ஒரு விஷயம் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டியது..

இது உயிர்ப்புத்தன்மை, ஊடகம் மட்டும் அல்லாது, மென்பொருளாகவும், தன்னைத்தானே புனரமைத்துக்கொள்கின்ற Self rejuvenate energy source வும் இருக்கின்றது..

  • ஒவ்வொரு கருத்தாகத் தெரிந்தகொள்ளுங்கள்..

இந்த அறிவு உங்களுடைய அடிப்படை தேவை மட்டுமல்ல, அடிப்படை உரிமை அதனால் கேளுங்கள்.. நீங்கள் உயிர் - ஆத்மா என்பதை உணரத் துவங்கினீர்களால் கைலாயம் தன்னை நோக்கி உங்களை ஈர்க்கிறது.

  • பூமி தன்னை நோக்கி உங்களை ஈர்ப்பதுதான் புவிஈர்ப்பு விசை..

கையிலாம் தன்னை நோக்கி உங்களை ஈர்ப்பதுதான் சக்திபாதம்!

  • நீங்கள் உங்களை ஜடம் என்று நினைத்தல்.. புவிஈர்ப்பு விசைக்கு ஆளாவீர்கள்..

உயிர் என்று நினைத்தால்.. கைலாயம் ஈர்ப்பு விசைக்கு ஆளாவீர்கள்..

  • உயிர்ப்புத்தன்மை ஒரு மென்பொருளைப்போல செயல்படுகின்ற சாத்தியமும் உண்டு.
  • சாங்க்யம் என்கிற ஒரு வார்த்தையை அறிமுகப்படுத்துகின்றேன் கேளுங்கள்..

சாங்க்யம் - முiறாயக உயர் ஞான சத்தியங்களை அனுபூதியான உங்களுக்குள் மலரவைக்கின்ற எண்ண ஓட்டம். சாங்க்யம் - படிப்படிப்படியாக உங்களை ஞான சத்தியங்கiயும் விஞ்ஞான சக்திகளை அடையச் செய்யக்கூடிய எண்ண செயலி.

  • இப்பொழுது நான் உங்களுக்குக் கற்றக்கொடுக்கின்ற சத்தியங்களை சாங்கியம் என்கிற வார்த்தையினாலே சொல்லலாம்!
  • நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்.. சைவம் பலவிதம்.. லகுலீச சைவம், காஞ்மீர சைவ., சித்தாந்த சைவம், வீர சைவம். நூற்றுக்கணக்கான வை சம்பிரதாயங்கள் இருக்கின்றன.
  • வேதங்களிலும், ஆகமங்களிலும் வேர்கொண்டு, பரமசிவப்பரம்பொருளே பராசக்திக்கு அருளி, நாராயணன் அதைப் பெற்று பிரபஞ்சத்தை இயக்குகின்ற மென்பொருளாக்கியிருக்கின்ற இந்த ஞானவிஞ்ஞானம் பரமசிவமே நீலகண்ட சிவாச்சாரியாக அவதாரம் செய்து, பிரம்ம சூத்திரத்திற்கு பாஷ்யம் செய்தருளிய அதில் அவர் ஆப்தப்பிரமணாங்களாக காட்டியருளிய சத்தியங்களை என் ஆத்மப்பிரமாணமாக ஞானகுருநாதன் அருணகிரியோகீஸ்வரரா வந்து எனக்கு அளித்தருளியதை உங்கள் சாட்சிப்பிரமணாமகா, வாழ்வின் அனுபவமாக மாற்றுவதைத்தான் நான் செய்துகொண்டிருக்கின்றேன். அதை பரமசாவத்வைத சைவம் என்று சொல்லலாம்.
  • இதை உங்களுக்கு அனுபூதியான மற்றுகின்ற இந்த எண்ண ஓட்டத்தை சாங்க்யம் என்ற சொல்கின்றேன்.

இந்த சத்தியத்தை ஆழ்ந்து சிந்தியுங்கள், தியானியுங்கள்.

  • நீங்கள் உங்களை உயிர் என்று நினைக்கும்பொழுதெல்லாம் கைலாசம் உங்களை ஈர்க்கும்.

கைலாசம் உங்களை ஈர்க்கும்பொழுதெல்லாம் உடல் உயரத்துவங்கும். இதை மீண்டும் மீண்டும் நீங்கள் சிந்திக்கும்பொழதுதான் உங்களுக்குப் புரியம்! இதுதான் இந்த அறிவியல்!

  • 1. இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடும் அன்னை மாதா அமிர்த்தானந்தமயி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்ந்துக்கள் சொல்வதற்கு வயதில்லைஎன்பதனால், அவரை வணங்குகின்றேன்..
  • 2. சத்குரு ஸ்ரீ ஜக்கி வாசுதேவ் அவர்கள் நிகழ்த்துகின்ற காவேரிக்கூக்குரல் எனும் அவருடைய சேவைக்கு என்னுடைய சிறு காணிக்கையாக ஒரு மரத்திற்கு 42 ரூபாய் என்கிற வகையில் 10,000 மரங்கள் நடுவதற்கான தொகையை சமர்ப்பிக்கின்றேன். நிச்சயமாக அவர்கள் செய்கின்ற பெரும்பணிக்கு நான் செய்வது உறுதுணையாக இல்லையென்றாலும், சிறுதுணையாகவாவது இருக்கட்டும் என்று என் காணிக்கைகளை சமர்ப்பிக்கின்றேன்.
  • 3. நமது நித்யானந்த சங்கம், பல்வேறு விதத்திலும் இராமகிருஷ்ண மட கட்டமைப்பை அதாரமாக்கொண்டது, பிரம்ம்மச்சரிய பயிற்சி, பொருளாதார கொள்கை, நிர்வாக அமைப்பு, கிளை மடங்கள் நடத்தப்படுகின்ற விதம் இதில் இராமகிரஷ்ண மடத்தை ஆதாரமாக கொண்டது. அதனால் நம்முடைய எல்லா ஆதீனங்களிலும் ராமகிருஷ்ண மடம் வெளியிட்டிருக்கின்ற எல்லா நூல்களும் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகின்றேன்.

நித்யானந்தத்தில் நிறைந்து, நித்யானந்தத்தில் கரைந்து, நித்யானந்தத்தில் மலர்ந்து நித்யானந்தமாகிட ஆசீர்வதிக்கின்றேன்! ஆனந்தமாக இருங்கள்!

Photos

Adi Shaivam Tamil Satsang

Nithya Satsang Tamil - 2019-09-28_IMG_1971_nithya-satsang-tamil.jpg Nithya Satsang Tamil - 2019-09-28_IMG_1975_nithya-satsang-tamil.jpg Nithya Satsang Tamil - 2019-09-28_IMG_1977_nithya-satsang-tamil.jpg Nithya Satsang Tamil - 2019-09-28_IMG_1978_nithya-satsang-tamil.jpg Nithya Satsang Tamil - 2019-09-28_IMG_1979_nithya-satsang-tamil.jpg Nithya Satsang Tamil - 2019-09-28_IMG_1983_nithya-satsang-tamil.jpg Nithya Satsang Tamil - 2019-09-28_IMG_1985_nithya-satsang-tamil.jpg Nithya Satsang Tamil - 2019-09-28_IMG_1986_nithya-satsang-tamil.jpg Nithya Satsang Tamil - 2019-09-28_IMG_1987_nithya-satsang-tamil.jpg Nithya Satsang Tamil - 2019-09-28_IMG_1989_nithya-satsang-tamil.jpg Nithya Satsang Tamil - 2019-09-28_IMG_1994_nithya-satsang-tamil.jpg Nithya Satsang Tamil - 2019-09-28_IMG_1997_nithya-satsang-tamil.jpg Nithya Satsang Tamil - 2019-09-28_IMG_2001_nithya-satsang-tamil.jpg Nithya Satsang Tamil - 2019-09-28_IMG_2010_nithya-satsang-tamil.jpg Nithya Satsang Tamil - 2019-09-28_IMG_2214_nithya-satsang-tamil.jpg Nithya Satsang Tamil - 2019-09-28_IMG_2217_nithya-satsang-tamil.jpg Nithya Satsang Tamil - 2019-09-28_IMG_2220_nithya-satsang-tamil.jpg Nithya Satsang Tamil - 2019-09-28_IMG_2244_nithya-satsang-tamil.jpg Nithya Satsang Tamil - 2019-09-28_IMG_2292_nithya-satsang-tamil.jpg Nithya Satsang Tamil - 2019-09-28_IMG_2295_nithya-satsang-tamil.jpg


Link to Facebook

https://www.facebook.com/srinithyananda.swami/posts/1410151379139857