November 04 2017

From Nithyanandapedia
Revision as of 00:54, 22 August 2020 by Rajan (talk | contribs)
Jump to navigation Jump to search

Link to Video

Transcript in Tamil

சத்சங்க நாள் : 04.11.2017 இடம் : திருவண்ணாமலை ஆதீனம் தலைப்பு : சதாசிவத்துவம் மனித வாழ்வின் நோக்கம் :

உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன். இந்த தியான சத்சங்கத்திற்காக.. திருவண்ணாமலை ஆதினத்தில ்ஒன்றுகூடி இருக்கும் உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன். மனித வாழ்வு மிகப்பொிய பொருள் பொதிந்தது. காரணம் சொிந்தது. வெறுமனே உணவும், உறக்கமும், சதாரண சிறு சுகங்களும், சாதாரண சிறு, வெற்றிகளும் மனித வாழ்க்கையின் நோக்கமல்ல. இதைத்தாண்டி உங்கள் உயிர் ஒரு பொிய நோக்கத்தின் பாகமாகத்தான் இந்த மனித வாழ்வை அடைந்திருக்கின்றது. உங்களுக்கு பொிய நோக்கமிருக்கு உங்கள் வாழ்க்கைக்கு பொிய காரணமிருக்கு அப்படின்னு உங்களுக்கு யார் யார் எல்லாம் புரிய வைக்கறவங்க அவங்க எல்லாம் உங்கள் நண்பர்கள். உங்களை மேம்படுத்துகிறார்கள். உங்கள் உயிருக்கு நல்லவர்கள். நல்லாப் புரிஞ்சுக்கங்க உங்களோட வெறுமனே சிரிச்சுப் பேசறவங்களோ, நீங்க எதைக்கேட்க விரும்பறீங்களோ அதை சொல்றவங்களோ உங்க நண்பர்கள் கிடையாது. பெரும்பாலான நேரத்தில நீங்க எதைக்கேட்க விரும்றீங்களோ அதை உங்க முன்னாடி சொல்ற எல்லாருமே மிகப்பொிய துரோகிகளாகத்தான் இருப்பாங்க. கொஞ்ச நாள் கழிச்சு அதைத் தொிஞ்சுப்பீங்க. அவ்வளவுதான். உங்க முன்னாடி உங்களை மாதிரி உண்டா? அண்ணே, உங்களை மாதிரி உண்டா அப்படின்னா என்ன அர்த்தம் உங்க பாக்கெட் காலி. அதுக்கு மேலேயும் தொடர்ந்து அவரை நம்பினீங்கன்னா உங்க உயிரே காலி. நல்லது. வாழ்க்கையின் உண்மையான நல்லது எது? யாருக்கு நம் உயிரின் நோக்கத்தை நமக்கு புரிய வைக்கின்ற சக்தி இருக்கின்றதோ அவர்களுடைய வார்த்தைகளே நல்லது. யாரெல்லாம் உங்க உயிருக்கும், வாழ்க்ககை்கும் மிகப்பொிய காரணமெல்லாம் இல்லைப்பா முடிஞ்ச வரைக்கும் சாப்பிடு, என்னென்ன முடியுமோ அனுபவி, ஒண்ணுமில்லைன்னா கடன் வாங்கியாவது அனுபவி. அதுக்கு மேல இல்லைன்னா திருடியாவது அனுபவி. என்ன வேணா பண்ணு. இதை அனுபவிச்சிட்டு முடிஞ்சு போனா அதுதான் வாழ்க்கை அப்படின்னு யார் எல்லாம் உங்களுக்கு வநயஉா சொல்லிக்கொடுகிகறார்களோ அவர்கள் எல்லாம் உங்களுக்கு மிகப்பொிய துக்கத்தை இழைக்கிறார்கள். அவர்கள் தான் உங்களுடைய விரோதிகள். உங்களுடைய உயிரின் வலிமையும், நோக்கமும் மிக அகன்றது. ஐயா நாம் எல்லாருமே ஒரு செல் உயிரினமான அமீபாவில துவங்கி அங்கருந்து நம்ம வாழ்க்கையை துவங்கறோம். அமீபா மெது மெதுவா வளர்ந்து இருசெல் உயிரியாக மாறுகிறது. பல செல் உயிரியாக மாறுகிறது. மெது மெதுவா வளர்ந்து ஒரு மீனாக மாறுகிறது. மீனிலிருந்து ஆமை. ஆமையிலிருந்து பன்றி. பன்றியிலிருந்து அடுத்த நிலை மனிதனான பாதி மனிதன் பாதி மிருகம் இது மாதிரி உங்கள் உயிர் வளர்ந்து வருவதைத்தான் விஷ்ணுவின் அவதாரங்கள் என்று சொல்கிறோம். நம் உயிர் வளர்ந்து வருவதைத்தான் விஷ்ணுவினுடைய அவதாரங்களாக நமக்கு சொல்லப்பட்டிருக்கிறது. நாம எல்லாருமே இதுமாதிரி புல்லாகி, புடாய் புழவாய் மரமாகி பல்விருகமாகி பறவையாய் பாம்பாய் கல்லாய், மனிதராய், பேயாய். கணங்களாய், வல் அசுரராய், முனிவராய், தேவராய் செல்லா நின்ற இத்தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்னு மாணிக்க வாசகர் சொல்றா மாதிரி எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்திருக்கிறோம். உங்களுடைய பரந்த வாழ்க்கையின் நோக்கத்தை உங்களுக்கு நினைவுட்டுபவர்கள்தான் உங்கள் நண்பர்கள். ஒரு 10 நிமிஷம் உடம்பு அரிப்புக்காக உங்களுடைய வாழ்க்கையின் நோக்கமே அதுதான்னு உங்களுடைய மிகப்பெரிய துரோகிகள். நல்லாப்புரிஞ்சிக்கோங்க..உங்கள் வாழ்க்கையின் மிகப்பொிய துரோகி யார் எனில் உங்க கிட்டேருந்து பணத்தைத் திருடியவர்கள் கிடையாது, உங்கள் பதவியைப் பறித்தவர்கள் கிடையாது. உங்கள் உறவுகளைப் பறித்தவர்கள் கூட கிடையாது. உங்கள் வாழ்க்கையையே பறித்தவர்கள். தவறான கொள்கைகளை, கருத்துக்களை உங்கள் வாழ்க்கையின் அடிப்படையாக உங்களுக்குக் கற்றுக்கொடுத்து உங்கள் வாழ்க்கையையே பறித்தவர்கள் தான் உங்களுடைய மிகப்பொிய துரோகிகள். ஏன் இருக்கோம்? துக்கத்தையோ, தோல்வியையோ, பிரச்னையையோ சந்திப்பது தவறல்ல. சந்தித்த பிறகு அதிலிருந்து நாம் எப்படி எதிர்வினை ஆற்றுகிறோம் அப்படிங்கறதை வைச்சுத்தான் நம் வாழ்க்கையின் முடிவு. வாழ்க்கையினுடைய அகண்ட நோக்கு, பரந்த நோக்கு புரிந்தால் மட்டும்தான் நம்முடைய எதிர்வினை சரியானதாக இருக்கும். நம்முடைய செயல் எதிர்ச்செயல் சரியானதாக இருக்கும். ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள். நீங்கள்ளாம் சொல்வீங்க, இப்ப நான் இருக்கற நிலைமைக்கு வாழ்க்கையில படாதபாடு பட்டிருக்கேன் சாமி. படிக்கும்பொழுது பள்ளியில் பட்டிருக்கேன். காலேஜில பட்டிருக்கேன். வேலைக்கு போகும்பொழுது முதலாளியிடம் பட்டிருக்கேன். கல்யாணம் ஆனதும் கணவனிடமோ, மனைவியிடமோ பட்டிருக்கேன். என் மாமியாரைப் பற்றி உங்களுக்குத் தொியாது சாமி. அவங்க கிட்டே பட்டிருக்கேன். இவ்வளவு எல்லாம் பட்டுத்தான் இப்ப இருக்கற நிலைல நான் இருக்கேன் சாமி. நாம் எல்லோருமே ’’இந்த வாழ்க்கையில் பட்டவைகளை மட்டுமே பார்க்கின்றோம்’’ உங்களுக்குப் புரியலை. இப்ப மட்டுமில்ல நீங்கள் உங்கள் ஒவ்வொரு ஜென்மத்திலும் பட்டவை எல்லாம் சோ்ந்துதான் இன்னிக்கு நீங்க இந்த நிலையில இருக்கீங்க. இந்த ஒரு வாழ்க்கையில் மட்டுமல்ல இந்த ஜென்மமெல்லாம் சோ்ந்து பட்டதுதான் இந்த நிலையில இருக்கீங்க. நம்ம வாழ்க்கையின் மிகப்பொிய பிரச்னை என்னன்னா? பரந்த முழு நோக்கத்தோடேயே நம்முடைய வாழ்க்கையை நோக்காமல் இன்னிக்கு எப்படியாவது தள்ளிடலாம். இன்னைக்கு கடங்காரங்களுக்கு கடன் கொடுத்தாப்போதும். தயவு செய்து ஆழ்ந்து கேளுங்கள். எத்துனை முறை கேட்டாலும், எத்துனை முறை சிந்தித்தாலும், மேலும் மேலும் நமக்கு நன்மை தரக்கூடிய கருத்துக்கள், சத்தியங்கள் அது மாதிரி வாழ்க்கையின் சில அடிப்படையான சத்தியங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். தவறி விஷம் உங்க உடம்புக்குள்ளே போய்விட்டதென்றால் ஒன்று விஷம் உங்களைக் கொல்ல வேண்டும். அப்படி விஷம் உங்களை கொல்லலைனா நீங்கள் அந்த விஷத்தைக் கொன்றுவிட்டீர்கள். அதனால்தான் உயிரோட இருக்கிறீர்கள். அதே மாதிரி தான் உங்க கடந்த காலம் முழுமையும். உங்கள் கடந்த காலம் மொத்தத்தையும் நீங்கள் ஜெயித்ததால் தான் இன்று நீங்கள் உயிரோடு இருக்கின்றீர்கள்.

இல்லைன்னா உங்க கடந்த காலத்தில் எத்தனையோ முறை நீங்கள் காணாமல் போயிருக்க முடியும். எத்தனையோ முறை நீங்கள் இல்லாமல் போயிருந்திருக்க முடியும். அவை எல்லாம் தாண்டி இன்றைக்கு நீங்கள் இருக்கிறீர்கள் என்றால்..., நல்லாத் திரும்பிப் பாருங்கள் உங்கள் வாழ்க்கையை ’’ஐயோ இந்த விபத்து நடந்திருந்தா, அந்தப் பிரச்னை வந்திருந்தா இது நடந்திருந்தா நான் இப்போது இருந்திருக்க மாட்டேன்’’ அப்படின்னு உங்க எல்லாருடைய வாழ்க்கையிலும் சுழ்நிலைகள் இருந்திருக்கு. நீங்க எல்லாருமே எதையோ தாண்டி வந்திருக்கீங்க.

நல்லாப் தெரிஞ்சிக்கோங்க. காரணம் இல்லாமல் யாருமே இங்கு இருக்க அனுமதிக்கப்படுவதில்லை. பொிய காரணமில்லாமல் நாம் யாருமே இங்கு இருக்க அனுமதிக்கப்படுவதில்லை. காரணமிருந்தால் நம்மை யாராலும் அழிக்க முடியாது. இந்த சிம்மாசனத்திற்குக் காரணம் இருக்கின்றது. இதில் இருப்பவருக்கு மிகப்பொிய காரியம் இருக்கின்றது என்பதனால் எத்தனை போ் எத்துனையோ விதத்தில் முயற்சித்தும் இந்த சிம்மாசனம் மட்டுமல்ல இங்கு சதாராணமாய் இருக்கும் ஒரு சும்மாசனத்தைக் கூட அசைக்க முடியவில்லை. அகங்காரத்தால் பேசவில்லை. ஆணவத்தால் பேசவில்லை. ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள். காரணத்தால் பேசுகிறேன். காரணம் புரிந்த காரணத்தால் பேசுகிறேன். உங்கள் வாழ்க்கையின் அகன்ற, விரிந்த, நிஜமான, முழுமையான காரணத்தை மட்டும் புரிந்து கொண்டீர்களானால் போதும். வேறெதுவுமே வேண்டாம். வாழ்க்கை தானாகவே வழிபட்டுவிடும். நெறிபட்டுவிடும். நீங்க பொிசா ஒண்ணும் பண்ண வேண்டியதில்லை. பசி வருகிறதென்றால் உணவைத்தேடுகின்ற சக்தியை வௌிப்படுத்த இறைவன் உங்களைத் தூண்டுகிறான். குளிர் வருகிறதென்றால் உடையைத் தேடிக்கொள்ளுகின்ற சக்தியை வௌிப்படுத்த இறைவன் உங்களைத் தூண்டுகின்றான். ஏப்பொழுதெல்லாம் ஒரு துக்கத்தையோ, அசௌகரியத்தையோ உங்கள் முன் கொண்டு வருகிறானோ அப்பொழுதெல்லாம் அதிலிருந்து உங்களைக் காத்துக்கொள்ளும் சக்திகளை வௌிப்படுத்த உங்களைத் தூண்டுகிறான். ஏப்பொழுதெல்லாம் எதிரிகளையும், துரோகிகளையும் என் முன்னால் கொண்டு வருகின்றானோ அப்பொழுதெல்லாம் அவர்களை வெல்வதற்கான சக்தியை வௌிப்படுத்த எனக்கு அவன் கற்றுக் கொடுக்கின்றான். எப்பொழுதெல்லாம் பிரச்னைகளை நம் முன் எடுத்து வருகின்றானோ இறைவன் அப்பொழுதெல்லாம் நம்முடைய வாழ்க்கையின் அகன்ற காரணத்தை நமக்குச் சொல்லுகின்றான். நம் வாழ்க்கையின் ஆழமான காரணத்தை நமக்குச் சொல்லுகின்றான். மேம்போக்காய் சிந்திக்கின்ற, ைஅஅயவரசந உழெஎநசளயவழைளெ, அதாவது நமக்கு நாமே பேசிக்கிற முதிர்ச்சியில்லாத எண்ண ஓட்டங்களை அழிப்பதற்காகத்தான் இறைவன் நம்மை உலுக்குகின்றான். சில நேரத்தில் சொல்வான் ஐயோ ! துக்கம் அடி வயிறு கலங்குது. பிரச்னைங்க மண்டையை வெடிக்குது. என்ன பண்றதுன்னே தொியலை. ஏன்னப் பண்றதுன்னே தொியலை. இப்ப வாழ்க்கையிலருந்து தப்பிச்சிக்க என்னப் பண்றோம் இராத்திரியானால் சாராயம். பகல் முழுக்க செல்போன். வாழ்க்கையிலிருந்து தப்பிக்கிறதுக்கான வழி. வீட்டுக்காறு மனைவிய திட்றாரு.. ’’எத்தன தரம்டி சொன்றது சமைக்கும் பொழுது செல்போன நோண்டிகிட்டே இருக்காதன்னு.. பாரு, இரசத்துல உப்பில்ல..புளி இல்ல, எதுவுமே இல்ல தண்ணி மாரி இருக்குடி. வீட்டுக்காரம்மா அங்கிருந்து சத்தம்போடுது.. ’உனக்கு எத்தனதரம்யா சொல்றது திங்கும்போது செல்போன நோண்டாதன்னு, நீ ஊத்தி இருக்கறது இரசம் இல்ல தண்ணியா’’. இன்னொருத்தர்.. செல்போனை நோண்டிகிட்டே.. வாட்ஸ் அப் பாத்துகிட்டே, பக்கத்துவீட்டுக்கு போய் சோபால உக்காந்துட்டேன். அப்பறம் என்ன ஆச்சு? அந்தம்மா டீவி பாத்துகிட்டு காபி போட்டு எடுத்துட்டுவந்து வச்சிட்டு போயிருச்சு. நல்லவேளை ஹாலோட முடிஞ்சிது.! ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள். வாழ்க்கை அதன் அகன்ற நோக்கம், இதைப்பற்றி உங்களுக்கு சிந்தனை வராமல் உங்கள் வாழ்க்கையில் இருக்கின்ற எல்லா நுவெநசவயைெஅநவெ ம் உங்களுடைய விரோதிகள். துரோகிகள். எல்லா நுவெநசவயைெஅநவெ ம் உங்களுடைய வாழ்க்கையுடைய அகன்ற நோக்கத்தை நினைவு படுத்தாத எல்லா நுவெநசவயைெஅநவெ மே எல்லா பொழுது போக்குமே பொழுதுபோக்கில்லீங்க ஐயா. வாழ்க்கைப்போக்கு. உங்க நேரம் உங்களுடைய பணமல்ல. உங்களுடைய வாழ்க்கை. உங்க நேரம் உங்க முதலாளிக்குப் பணம். நீங்க வாடஸ் அப்பிலும், ஃபேஸ் புக்கிலும் நோண்டிட்டு இருந்தீங்கன்னா அந்த கம்பெனிக்காரனுக்குப் பணம். உங்கள் மகளுக்கு அவள் வாங்கிட்டு போகப்போற சொத்து. உங்க மகனுக்கு நீங்க அவனுக்கு சம்பாதிச்சு வைக்கப்போற பணம். உங்களுடைய கணவனுக்கோ மனைவிக்கோ அவங்களுக்கு கொடுக்கின்ற அன்பளிப்பு. உங்களுக்கு மட்டும்தான் உங்களுடைய நேரம் வாழ்க்கை. சில பேருக்கு அது பணமாய்த் தொியும். உங்க முதலாளி அதை பணமாத்தான் பார்ப்பார். உங்கப் பையன் அவனுக்கு வாங்கிக் கொடுக்கப்போகிற பைக்காகத்தான் பார்ப்பான். உங்க பொண்ணு அவ வாங்கிக்கப் போகிற ஸ்கூட்டியாதான் பார்ப்பாள். ஊங்களுடைய கணவனோ, மனைவியோ நீங்க அவங்களுக்கு வாங்கிக்கொடுக்கப்போகின்ற சேலையாகவோ இல்ல வேற எதாவதாகவோ தான் பார்ப்பாங்க. உங்களுக்கு மட்டும்தான் உங்களுடைய நேரம் வாழ்க்கை. தயவுசெய்து உங்களுடைய வாழ்க்கையின் அகன்ற நோக்கத்தை சிந்திக்கத் துவங்குங்கள். அகன்ற நோக்கத்தைப் பார்க்கத் துவங்குங்கள். இந்த அகன்ற நோக்கத்தைப் பார்ப்பதுதான் மூன்றாவது கண் திறப்பது ஐயா. வெறும் இரண்டு கண்களால் பார்த்ததெல்லாம் போதுமப்பா. இரண்டு கண்களால் கொள்ள முடியாத சில விஷயங்கள் இருக்குன்னு பார்க்கறதுக்கும், அதைப் பார்க்கறதுக்கு மூணாவது கண்ணைத் திறக்கறதும் தான் ஒரு குருவினுடைய நோக்கம். வாழ்க்கையில் பல விஷயங்கள் அகன்றவை. காண்பது வேறு. நோக்குவது வேறு. காண்பது என்பது இரண்டு கண்களால் பார்ப்பது. நோக்குவது என்பது மூன்றாவது கண்ணால் உணர்வது. நீங்க இப்பப் பார்க்கின்ற காண்கின்ற விஷயங்களைத் தாண்டி சிலது இருக்குன்னு புரிந்தால் தான் வாழ்க்கையின் உயர்ந்த பரிமாணங்களுக்குள் நுழைந்தாக வேண்டும் என்று தொிஞ்சாத்தான் வாழ்க்கை துவங்குகின்றது. அது வரைக்கும் வாழ்க்கை துவங்குவதில்லை. நீங்க முதுமை அடையலாம். முதிர்ச்சி அடையலை. முதுமை வேறு. முதிர்ச்சி வேறு. இந்த நிகழ்ச்சிலந்து போன பிறகு ஆஹா ! உண்மைதானே. வாழ்க்கைக்கு நான் நினைப்பதை விட பரந்த நோக்கம் இருக்கின்றதுதானே. நாம நினைச்சது மட்டும் வாழ்க்கையில்லையே. அதை அடைய என்ன செய்யலாம்? என்று சிந்திக்கத் துவங்கினால் முதிர்ச்சி.

இல்லனா நான் போனேன் நல்லாத்தான் பேசினாரு. பொிய தங்க சிம்மாசனம் போட்டிருந்தார். தங்கமா போட்டிருந்தார். சாப்பாடு போட்டாங்க. வந்திட்டேன். அப்படின்னா ஒரு நாள் முதுமை அவ்வளவுதான். முதிர்ச்சியல்ல. சத்தியங்களை வாழ்க்கையின் அகன்ற நோக்கத்தை உள்வாங்கத் துவங்கினீர்களானால் அது முதிர்ச்சி. ஒரே ஒரு விஷயத்தைத்தான் உங்களோடு எல்லாம் இன்று பகிர்ந்துக்கலாம்னு நினைக்கறேன். நீங்க சாதாரண கருத்துக்களையும், எண்ண ஓட்டங்களையும் பிடித்து வைத்து வாழ்க்கையைப் பற்றி வருகின்ற முடிவு மிகவும் தாழ்ந்தது. முழுமை இல்லாதது. பல நேரத்தில் நம்முடைய பிரச்னையே என்ன என்றால் உண்மை நமக்கு தொிவிக்கப்படாமல் போவதில்லை. தொிவிக்கப்பட்டாலும் அது என்ன எனக்குத் தொியாதா? இதில் இன்னும் கொஞ்சம் திமிர் பழுத்தா என்னப் பண்ணுவோம் நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே. அதனால யாருக்கு நஷ்டம். சுந்தரப் பெருமானுக்கு நஷ்டமா. மூட நக்கீரனே மூதேவி உனக்குத்தான் ஐயா நஷ்டம். பெருமான் திருமேனி தாங்கி சுந்தரேஸ்வரராக வரார். நக்கீரனுக்கு போதுமான அளவுக்கு சுட்சுமமா காட்டறார். ஆனா அவனுக்கு ஈகோ. அகங்காரம். ரொம்ப அருமையான புராணம். அந்த காலத்தில் இது மாதிரியான கருத்துக்களை எல்லாம் படமாய் எடுத்திருக்காங்க பாருங்க ஐயா. என்னத் தமிழ்நாடு. தெய்வத் தமிழ்நாடு. ஒரு காலத்தில நம்முடைய கலை, கலாச்சாரம், சினிமா எல்லாமே நம்முடைய சைவம் புராணங்கள் இதெல்லாம் சார்ந்து இருந்து இருக்கு. ஒரு காலத்திலே. அங்கம் புழுதிபட கால்களை அகற்றிப் பரப்பி எண்ணை தடவி சங்கை அறுத்து பெருமான் வந்து நக்கீரனைப் பார்த்து சொல்றாரு : கீறு கீறு என்று அறிவாளில் சங்கை அறுக்கும் நக்கீரனோ என் பாட்டில் குறை காண்பது.

நல்லாப் புரிந்து கொள்ளுங்கள். நக்கீரன் கோபத்தின் உச்சத்திலே இருந்ததனால் பெருமான் என்ன சொல்றாருன்னு அவனுக்குப் புரியல. உடனே அவன் என்ன நினைக்கிறான் சாதியைப்பற்றி சொல்றாரோன்னு நினைச்சு சங்கை அறுக்கின்ற ஜாதி கீரன் எனும் ஜாதி. இவருக்கு நக்கீரனுக்கு நல்லான்னு பேரு. நல் கீரன் தான் நக்கீரன்னு மாறுது. கீரன் ஜாதிப்பெயர். பெருமான் தன் ஜாதியைக் குறித்து பேசுகிறார்னு கோபத்தில் முடிவெடுத்து சங்கறுப்பது எங்கள் குலம். சங்கரனாருக்கு ஏது குலம் அப்படின்னு பெருமானையே ஜாதி சார்ந்து இழுக்கின்றான். உண்மையில் பெருமான் ஜாதியை அங்க சொல்லலீங்க ஐயா. சங்கு என்பது நமது தொண்டையில் இருக்கின்ற சங்கு. காற்றை வார்த்தையாக மாற்றுகின்ற சங்கு தொண்டையில் இருக்கு. அந்தக் காற்றை வார்த்தையாக மாற்றுகின்ற கவிதைக் கலையைத் தொிந்த நக்கீரனா என் பாட்டில் குறை காண்பது என்று கேட்கிறார். இந்த சங்கு கீழே அறுத்தால் வல்லினம். நடுவில் அறுத்தால் இடையினம். மேலே அறுத்தால் மெல்லினம். தனக்குள் இந்த வார்த்தைகளாலே விளையாடத் தொிந்த நக்கீரன் இந்த சங்கை எப்படி வேண்டுமானாலும் அறுத்து. சங்கை நுனியில் அறுத்தால் மோதிரம் நடுவில் அறுத்தால் கை வளையல், உச்சியலிருந்தால் காதணி. அது மாதிரி இந்த தொண்டைக்குள் இருக்கும் சங்கில் வார்த்தைகளை வைத்து அறுத்து கவிதை மாலைகளாக அணிகலன்களாக புட்டத் தொிந்த நக்கீரனா என் பாட்டில் குறை காண்பது என்று கேட்கறார். பிரச்னை என்னன்னா இயற்கையாகவே பெண்களின் தலைமுடிக்கு நறுமணம் உண்டா இல்லையா? நக்கீரன் இல்லவே இல்லைன்னு சொல்ல வாரன். அப்ப பெருமான் வாது செய்யும் பொழுது சொல்கிறார். வார்த்தைகளிலே விளையாடத் தொிந்து விட்டதனால் உனக்கு இறுதி உண்மை தொியும்னு அர்த்தம் கிடையாது. நல்லாத் தொிஞ்சுக்கோங்க. ஒரு அடிப்படையான இரகசியம் சத்தியம் உங்களுக்குப் புரியணும் ரொம்ப சிந்திக்கின்ற ஐவெநடடநஉவரயட - ஆ மூளையை மட்டும் உபயோகம் பண்ணுகிற மனிதர்களுக்கு சுவாசத்தினுடைய தன்மை அந்த ஸ்மெல்லை வாசனையை நுகருகின்ற தன்மை குறையும். இது இயற்கை. ஏதாவது ஆழமா சிந்திச்சிட்டிருந்தா சுற்றி நடக்கும் சத்தம், சுவாசம் தொியுதா? தொியாது. எத்தனைபோ் இதை அனுபவித்திருக்கிறீர்கள். வார்த்தைகளிலேயே சிந்தித்துக் கொண்டிருக்கின்ற, வாழ்ந்து கொண்டிருக்கின்ற மனிதர்களுக்கு சுவாசம் மட்டுப்படுவது இயற்கை. உணர்வு சார்ந்து வாழும் மனிதனுக்கு ஐம்புலன்களும் முக்கியமா சுவாசம் ஆழமா இயங்கும். வாசனை நுகர்கின்ற தன்மை ஆழமாயிருக்கும். வாசனையை நுகர்கின்ற தன்மையும், நம்முடைய மனதினுடைய அமைதியும் நெருக்கமான தொடர்புடையது. நக்கீரனோ எப்பப் பார்த்தாலும் சர்ச்சை. பிரச்னை. இந்தப் புலவர் சரியா? அந்தப் புலவர் தவறா? இந்தக் கருத்து சரியா? அந்தக் கருத்துத் தவறா? சுர்ச்சையிலேயே சிந்தித்துக் கொண்டிருக்கின்ற ஒரு புலவன் என்பதனாலே, வார்த்தைகளிலேயே வாழ்பவன் என்பதனால் அவனுடை நுகரும் தன்மை மட்டுப்பட்டுப் போயிருந்தது.

தன் நுகரும் தன்மை மட்டுப்பட்டுப் போயிருந்ததை புரிந்து கொள்ளாத அவன், அவனுடை வார்த்தை ஜால விளையாட்டின் மீது ஆழமான கர்வத்தை கொண்டிருந்ததனால், வந்திருக்கின்றவர் பெருமான் என்று தொிந்தும், தான் ஒரு ளவயனெ எடுத்திட்டா அந்த ளவயனெ லிருந்து மாறுவதில்லை. நல்லாத் தொஞ்சுக்கங்க ஐயா. நம்ம வாழ்க்கயைிலும் பல நேரத்தில் இறைவன் ஞான குருவாக நம் முன் தோன்றத்தான் செய்கிறார். தோன்றாமல் விடுவதே இல்லை. ஆனால் நாம் என்ன செய்கிறோம். நக்கீரன் மாதிரி முதலிலேயே ஒரு முடிவெடுத்துட்டதனாலே, உண்மையில பார்த்தீங்கன்னா நக்கீரன் கூட நேரடியா பெருமானே வந்திருந்தால் இந்த முடிவெடுத்திருக்க மாட்டான். வந்தது தருமி என்பதால் இவன் வீக்கான ஆளு என்று நினைச்சு ஸ்டேண்ட் எடுத்திட்டான். ஆனா தருமிக்குப் பின்னாடி பெருமான் சுந்தரேசன் இருக்கிறார்னு அவனுக்குத் தொியலை. தொிஞ்ச பிறகு ஸ்டேண்டை மாற்றிக்கொள்ள அகங்காரம் இடம் கொடுக்கவில்லை. நம் வாழ்க்கையில் பல போிடத்தில நடக்கறதுண்டு. மனைவி திருவண்ணாமலைக்குப் போய் தியானம் கத்துக்கிட்டு வந்து கல்பதரு வரம் வாங்கிட்டு வந்து ருத்திராட்சரம் போட்டு மந்திர ஜபம் பண்ணிக் கொண்டிருந்தால் இவர் உடனே இது பண்றது எது உறுப்படியா இருக்கப்போகுது? ஆப்படின்னு அந்த புக்கைத் தூக்கி எறியறது. அது கொண்டு வந்த புஜை சாமானை தூக்கி எறிவது. ஆப்புறமா ஒரு வேளை என்னிக்காவது சாமியோட சத்-சங்கை நேரடியாக கேட்கற ஒரு பாக்கியம் கிடைச்சு, ஒரு புத்தகமே கிடைத்து படித்தாலும் சாமி சொல்றதெல்லாம் சரியா இருக்கலாம். ஆனா என் பொண்டாட்டி பண்றது சரியாகவே இருக்க முடியாது. நானாக நேரடியா சாமியைப் பற்றித் தொிந்து போனாலும் போவேனே தவிர நீ ஐவெசழனரஉந பன்னதால போமாட்டேன். எத்தனையோ நேரத்தில் நாம் கூட எடுத்துவிட்ட முடிவு தவறு என்று தொிந்தாலும் கூட அகங்காரத்தை காத்துக்கொள்வதற்காக அந்த முடிவிலிருந்து மாறாமல் அழிந்தே போகின்றோம். இறைவன் நமக்கு வாய்ப்புத் தராமல் இருப்பதேயில்லை. ஆனா நாம் எடுத்த முடிவிலிருந்து மாறாமல் இருப்பதற்காக அந்த முடிவினோடே நாமும் சோ்ந்து அழிந்துவிடுகிறோம். முடிவோடு சோ்த்து அவர் முடிவுரையையும் அவரே எழுதிக் கொள்கிறார். உண்மையில நக்கீரனுக்குத் தொியும் தப்பான ஒரு ஸ்டேண்ட் எடுத்திட்டாருன்னு..., ஆனா எடுத்த ஸ்டேண்ட் மாத்திக்கற அளவுக்கு புத்திசாலித்தனம் இல்லை. நம்ம வாழ்க்கையிலும் பல நேரத்தில நம்ம வாழ்க்கையைப் பற்றிய சிறு நோக்கோடு, சிறு எண்ணப்போக்கோடு பல முடிவுகளை எடுத்துவிடுகிறோம். ஆதற்குப் பிறகு நாம எடுத்த ஸ்டேண்ட் சரின்னு அதைக் காப்பாற்றுவதற்கு அந்த முடிவோடு வாழ்க்கையையே முடித்துக் கொள்கிறோமே தவிர மாற்றிக்கொள்ள மறுக்கிறோம். மாற்றிக்கொள்ள முடிவெடுப்பவன் ஞானி. எப்பொழுது இல்லை முழுச்சிந்தனை பரிமாற்றமும் முழுச்சிந்தனை பரிமாணம் இல்லாமல் என்னுடைய ப்ளைண்ட் ஸ்பாட்ஸ்-னால தான், முழு நோக்கு இல்லாததனால் தான் இந்த முடிவுகளை எடுத்தேன். இப்ப என் நோக்கத்தை மாற்றிக் கொள்கிறேன் என்று யார் யாரெல்லாம் மாற்றிக்கொள்ள முடிவெடுக்கின்றீர்களோ அவர்கள் எல்லோரும் புதுப்பிறவி எடுக்கிறீர்கள். இது நாள் வரையிலும் உங்க வாழ்க்கையை ஏதோ ஒரு நோக்கத்தோடு வாழ்ந்தீங்க. இன்றிலிருந்து எனக்குள்ளிருக்கும் சதாசிவத்தன்மை என்கிற சத்தியத்தை உணர்வதுதான் என் நோக்கம், என் வாழ்க்கையின் நோக்கம் என நீங்க எத்தனை போ் முடிவெடுக்கிறீங்களோ அப்பதான் அதுதான் உங்களுக்கு நடக்கற தீக்ஷை. இல்லையில்லை நான் ஏற்கெனவே என்னைப் பற்றிமுடிவு எடுத்திட்டேன். அதெல்லாம் விட முடியாது. ஏதோ வந்திட்டேன். சாப்பாட்டை போட்டு தீக்ஷையை குடுத்து அனுப்புங்க நான் போறேன் அப்படின்னீங்கன்னா அது நக்கீரன் எடுத்த ஸ்டேன்டு தான். நக்கீரன் எடுத்த நிலைதான். நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே. சரி. யாருக்கு இதனால் நஷ்டம். வறட்டு அகங்காரத்தால் துயருற்றதும், எரிந்து போனதும் நக்கீரன் தானே. வேற யார்க்கும் இல்லையே. ஆழ்ந்து உள்வாங்கிக் கொள்ளுங்கள். இது வரைக்கும் உங்க வாழ்க்கையினுடைய ஆதார எண்ண ஓட்டங்கள் அடிப்படையான சிந்தனை ஓட்டங்கள் இதை அகலமாக்கி உங்கள் வாழ்க்கையின் நோக்கம் இறை நிலை. சதாசிவத்துவ நிலை. மஹா சதாசிவத்துவ நிலை. உங்களுக்குள் இருக்கும் சதாசிவத்துவ நிலையை உணர்வதுதான். அப்படிங்கற ஓட்டத்துல போறதுங்கற முடிவுக்கு வந்தீங்கன்னா அதுதான் புதுப்பிறவி. அதுதான் தீக்ஷை. அது எப்படி செய்வது என்பது அடுத்தது. ஆனா முதலில் வர வேண்டிய தௌிவு என்னன்னா இதுவரை எந்த சிந்தனை ஓட்டங்கள், எண்ண ஒட்டங்களை ஆதாரமாக வைத்து என் வாழ்க்கையை நடத்தினேனோ அது முழு உண்மை கிடையாது. அரைகுறை உண்மையா இருக்கலாம். ஆனா முழு உண்மை கிடையாது. நக்கீரனுக்கும் பெருமான் கேள்வி கேட்டுக் கொண்டே வருகிறார். உயர் குலத்து பெண்களுக்கும் இதுதான் சத்தியமா. இதுதான் உண்மையா? ஏன்று கேட்கிறார். ஆமாம் உயர் குலத்துப் பெண்களுக்கும் செயற்கையில் தான் மணம் இயற்கையில் அல்ல. அதோட நிறுத்தவில்லை. பிரச்னையில்லை. ஏன்னா ஒரு வேளை இவன் உயர்குலத்துப் பெண்களின் கூந்தலை முகர்ந்து பார்த்திருக்க முடியும். அதற்கும் மேலாக என் நாவில் இருக்கும் வாணிக்கும், நான் என்றென்றும் வழிபடும் ஈசனின் இடபாகத்திலிருக்கும் உமையன்னைக்கும்னு சொல்றது அங்க தான் பிரச்னை. உமையன்னையின் கூந்தலை முகர்ந்திருக்கிறாயா நீ? ஆந்தக் கூந்தலோடேயே வாழ்ந்து கொண்டிருக்கின்ற சுந்தரேசப் பெருமான் முன்னாடி நின்றுக் கொண்டிருக்கிறார். அவருக்குத் தொியாதது உனக்கத் தொியுமா? அவங்களுடைய கூந்தலை பத்தி! தன்னுடைய அறிவின் செறுக்கால் எல்லையை மீறுகின்ற நக்கீரனைப்போல நாமும் பல நேரங்களில் நம் அறிவின் செறுக்கினால் நம் வாழ்க்கையின் போக்கின் அறிவின், தௌிவின், செயலின் எல்லையை தாண்டுகிறோம்.

அதுதான் ப்ளைண்ட் ஸ்பாட். அப்ப எல்லாம் பெருமான் நமக்கு நினைவுட்டுகிறார். நேரில் வருகிறர். குருவாய் வந்து அருள் செய்கிறார். ஆனா நாம் என்ன பண்றோம். நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே. நெற்றிக் கண் திறந்தாலும் திறக்கலைன்னாலும் நக்கீரன்தான் குற்றம். ஆழந்து புரிந்து கொள்ளுங்கள். மடிந்தாலும் சரி கடந்த காலத்தில் எடுத்த முடிவை மாற்றுவதில்லைன்னு வாழ்க்கையில துக்கத்தை அனுபவித்திருக்கீங்க கைத் தூக்குங்க.

ஆனா அது புத்திசாலித்தனமா? முட்டாள்தனம். வாழ்க்கையில் மேம்பட்டுக் கொண்டே செல்வது, முடிவுகளை மேம்படுத்திக் கொண்டே செல்பவர்களுக்கு மட்டுமே அமைகின்ற வரம். அறிவும், தௌிவும், ஞானமும் வரும்பொழுதெல்லாம் வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்வதற்கு உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள். நிச்சயமா இப்ப நீங்க வாழ்கின்றதைவிட அகன்ற பரந்த ஆழ்ந்த உணர்வுபுர்வமான வாழ்க்கை உங்களுக்கு சாத்தியம். இது சத்தியம். இதற்கான அறிமுகம் தான் இந்த கல்பதரு யோகமும், சிவ தீக்ஷையும். இன்னைக்கு இந்த முடிவு ஆஹா! சாதாரண மனித உணர்விலிருந்து ஒரு உயர்ந்த உணர்வு நிலைக்குச் சென்று வாழ்வோங்கற முடிவை நீங்கள் எடுத்தால் தீக்ஷை இன்று உங்களுக்கு நடந்திருக்கின்றது. இல்லைன்னா. எல்லாம் கூப்பிட்டாங்க. போனேன். ஏதோ பேசினாரு வந்திட்டேன். சில போ் கேட்கறதுண்டு. எத்தனை பேருக்கு சாமி தீக்ஷை கொடுத்தீங்க என்று. அப்பா ! நான் கோடிக்கணக்கான பேருக்கு கூட கொடுக்கறேன். ஆனா எத்தனை போ் எடுத்துக்கிட்டாங்கன்னு நீங்க அவர்களிடம் தான் கேட்கணும். நான் பொங்கி வரும் கங்கை மாதிரி. உலகத்துக்காகவே பொங்குகிறேன். ஆனா எவ்வளவு போ் பிடிச்சுக்கறாங்களோ பிடிச்சிக்கட்டும். சில போ் குடிக்கறாங்க. சில போ் குளிக்கறாங்க. சில போ் கமண்டலத்தில் கொண்டு போறாங்க. சில போ் குடத்தில கொண்டு போறாங்க. சில போ் டாங்கர்ல கொண்டு போறாங்க. சில போ் தானும் குடிக்க மாட்டோம். மற்றவர்களையும் கங்கையை நிம்மதியா குடிக்கற அளவுக்கு விட மாட்டோம்னு ஒண்ணு ரெண்டு மூணெல்லாம் கலக்கறாங்க. ஆனா யார் என்னப் பண்ணாலும் அதனால் நான் மாசடைவதில்லை. என் வேகம் குறையப் போவதுமில்லை. ஒரே ஒரு சத்தியம். இவ்வளவு நேரம் பேசியதன் சாரம் இரண்டே வார்த்தைகளில் சொல்லிவிடுகிறேன். இதுவரைக்கும் நீங்கள் உங்கள் உடல், மனம் சார்ந்தே எண்ணப்போக்கை சார்ந்தே உங்க வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறீர்கள். உங்களால் வாழ்க்கையில் எதிர் கொள்ள முடியாத பிரச்னைகளிலிருந்து தப்பிப்பத்துக் கொள்வற்காகத்தான் செல்போனும். சாராயமும். மாற்றுவழிக்கான தந்திரம் அவ்வளவு தான். (டைவர்ஷன் டேக்டிக்ஸ்). உங்களை நீங்களே கையாள முடியாததால் தான் என்னப் பண்றோம் செல்லை எடுத்து வெச்சுக்கறோம். செல்ஃப்பை பார்க்க முடியாததால தான் செல்ஃபியா பார்த்திட்டிருக்கோம். அகநூலை புரட்ட முடியாததால்தான் முகநூலிலேயே புரண்டு கொண்டிருக்கிறோம். முகநூல்னா என்ன பேஸ்புக். ஆகநூலை புரட்ட முடியாததால்தான், அகநூலை திறக்க முடியாததால் முகநூலிலேயே வாழ்க்கை கழிந்து விடுகிறது. சாதாரணமான உங்கள் உடல்-மனம் சார்ந்த எண்ண ஓட்டங்களை வைத்து நீங்கள் இயக்குகிற வாழ்க்கை சிறு வாழ்க்கை. உங்களுக்குள் இறைத்தன்மை இருக்கின்றது. சதாசிவத்தன்மை இருக்கின்றது. அந்த தன்மை வௌிப்படுகின்ற வரையில் அதை வௌி்படுத்தும் முறையிலே உங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் எனும் வாழ்க்கை தன்மை சிவத்தன்மை. சிறுமையா? சுிவத்தன்மையா? என்கிற முடிவை நீங்கள் எடுத்தால் சிவத்தன்மை தான் என்கின்ற முடிவை எடுத்தால் இன்று நீங்கள் தீக்ஷை எடுத்துக் கொண்டீர்கள். தீக்ஷை வெறுமனே அளிப்பது மட்டுமல்ல. எடுக்கவும் செய்யணும். அத்துணை பேருக்கும் நான் கொடுத்துவிடுவேன். எடுத்துக்கொள்வது உங்க விருப்பம்தான். எடுக்கறதுன்னு முடிவு பண்ணிட்டா அடுத்து எப்படி? அது அடுத்த கேள்வி. இரண்டே இரண்டு விஷயங்கள். இன்றைக்கு உங்களுக்குக் கொடுக்கப்பட்ட புரணத்துவ தியானம் தினம்தோறும் இரவு படுக்கப்போகும் முன் 21 நிமிடம் செய்ய ஆரம்பிங்க. நீங்க நினைக்கலாம். சிம்பிள் மெடிடேஷன் டெக்னிக். இதெல்லாம் போய் பண்ண சொல்றீங்களே சாமி. சிம்பிளா இருந்தாலும் செஞ்சி பாக்க ஆரம்பிங்கய்யா. கஷ்டமாயிருந்தாலும் செய்ய மாட்டேங்கறோம். இதெல்லாம் ரொம்ப கஷ்டம் பண்ணசொல்றீங்களே சாமி. சிம்பிளா கொடுத்தா என்னை பற்றி புரிஞ்சுக்கவே மாட்டேங்கறீங்களே சாமி. நான் எவ்ளோ புக்கு படிச்சிருக்கேன்.. நிறைய ஓஷோல்லாம் படிச்சிருக்கேன் இராமகிருஷ்ணரையெல்லாம் படிச்சிருக்கேன். ஜே. கிருஷ்ணமூர்த்தில்லாம் படிச்சிருக்கேன். என்னைப்போய் இவ்வளவு சிம்பிளா செய்யச் சொல்றீங்களே. புதுசா ரோடில் செல்பவர்களுக்கெல்லாம் கொடுக்கற சிம்பிளானதெல்லாம் எனக்கு கொடுத்திருக்கீங்களே. நீச்சலைப் பற்றி எத்துணை புத்தகம் படித்திருந்தாலும் முதல் நாள் நீரில் இறங்கினால் தான் நீச்சல் துவங்கும். வெறும் 21 நிமிடம் இந்த புரணத்துவ தியானத்தை செய்து பாருங்கள். நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் உங்களுக்கு அளிக்கப்படப்போகின்ற சிவ தீக்ஷை மந்திரத்தை மனதிற்குள் இரசித்துக்கொண்டே ருசித்துக்கொண்டே இருங்கள். அவ்வளவுதான். வேற ஒண்ணுமேயில்லை. வேற ஒண்ணுமேயில்லை. முதலில் உங்கள் சிந்தனைப் போக்கை மாற்றிக் கொள்வதா இல்லையான்னு முடிவெடுக்கறது. சிவத்தன்மையோடுதான் வாழப்போகிறேன். சிவத்தன்மையை வௌிப்படுத்தப்போகிறேன். எனக்குள்ள இருக்கிற நுஒவசழனயைெசல ஆன சத்தியங்களையும், சாத்தியங்களையும் சக்திகளையும் வௌிப்படுத்தப்போகிறேன் என்கிற முடிவுக்கு வந்திட்டீங்கன்னா இந்த இரண்டே இரண்டு விஷயத்தைத் துவங்குங்கள். இன்றிலிருந்து உங்களுக்குள் சதாசிவத்தன்மையின் சக்தி மூன்றாவது கண்ணின் சக்தி, பொங்கிக் கொண்டேயிருக்கும். இன்னைக்கு இரண்டு சக்திகளை தீக்ஷைகளை அளிக்கின்றேன். 1) ஜடப்பொருளின் மீது உங்கள் உயிருக்கு இருக்கின்ற சக்தி. ஒரு ஜடப்பொருளை உங்களால் எண்ண மாத்திரத்தால், சங்கல்பத்தின் மூலமாகவே மர்ற்றவும் இயக்கவும் முடியும். இது உங்க எல்லோருக்குள்ளும் இருக்கும் சக்தி. நான் அதை விளக்கைத் தூண்டிவிடுவதுபோல் தூண்டிவிடுகிறேன். அவ்வளவுதான். தூண்டுகோல் இல்லாத விளக்கு அணைந்துவிடும்.. ஒரு குரு உங்களுக்குத் தண்டுகோல் அவ்வளவுதான். உங்களுக்குள் இருக்கும் அந்த ஞான சக்திக்கு ஒரு தூண்டுகோல் அவ்வளவுதான். 2) உங்களுடைய மனதையும், மற்றவர்களுடைய மனதையும் படிக்கின்ற சக்தி. மத்தவங்க மனதைப் படிப்பதை விட உங்க மனதைப் படிப்பது தான் பொிய சக்தி. மற்றவர்கள் மனதில் என்ன எண்ணம் ஓடுகிறது என்பதைக்கூட ஈஸியா கண்டுபிடித்துவிடலாம். ஆனா உங்க மனதில் என்ன ஓடுகிறது என்பதை கண்டுபிடிப்பது மிகப்பொிய வேலை. ஏன்னா ஒவ்வொரு விநாடியும், ஒவ்வொரு திசையில்? ஒவ்வொரு மாதிரி ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த இரண்டு சக்திகளையும் உங்களுக்குள் மலர வைக்கின்ற தீக்ஷையை அளிக்கின்றேன். நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். வாழ்க்கை மிகப்பொியது. அதை சாதாரண, உங்களை மயங்க வைக்கின்ற மூடகங்கள், ஊடகங்களைத்தான் அப்படி சொன்றேன்.. மூடகங்கள் கொடுக்கின்ற பொழுதுபோக்கிலேயே உங்கள் வாழ்க்கையை கழித்துவிடாதீர்கள். அதில் வாழ்க்கையை தொலைக்க முடியுமே தவிர கண்டுபிடிக்க முடியாது. ஏதாவது ஒரு பிரச்னையை புதாகாரமாய் உங்கள் முன் நிறுத்துவார்கள். அடுத்து இன்னொரு பிரச்னை வந்ததும் அதை புதாகாரப்படுத்துவார்கள். உங்க உள்ளே பொங்கிக்கிட்டேயிருக்கறதுதான் அவங்க புழயட். ஆவங்க வேணா வளரலாம் நீங்க வளர முடியாது. இன்னிக்கு முகநூலில் ஒரு மீம்ஸ் பார்த்தேன். அப்ப இருந்த முதலமைச்சர் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு சென்னை வௌ்ளத்தை பார்வையிடுவதுபோல் காட்சி. அதுக்கப்புறமும் பல முதலமைச்சர்கள் சென்னை வௌ்ளத்தை பார்வையிட்டுள்ளார்கள். அப்பவே சென்னைல வௌ்ளம் வந்திருக்கு. எத்துனை முதல்வர்கள் வந்துபோனாலும் அந்தப் பிரச்னை முடியவில்லை. நல்லா பாத்துக்கோங்க கரனெயஅநவெயட ஆன பிரச்சினை யுளெறநச ஆகப்படவேயில்ல. கரனெயஅநவெயட ஆ நம்முடைய பிரச்னை என்னன்னா? தண்ணியோட வீட்டில் நாம் வீட்ட கட்டினதனாலே நம்ம வீட்டில் தண்ணி வீடு கட்டுது. அவ்வளவுதான். தண்ணியோட வீட்டில் நாம் வீட்ட கட்டினதனாலே நம்ம வீட்டில் தண்ணி வீடு கட்டுது. அடிப்படையான பிரச்னை நோக்கப்படவில்லை. நமக்கு என்னன்னா பொிய பொிய ஆளுங்க எல்லாம் வந்து பார்த்தாங்க அவ்வளவுதான். நம்முடைய யுவவநவெழைெ னைஎநசவ ஆகிடுகிறது. நல்லாத் தொிஞ்சுக்கங்க. உலகத்திலேயே மிகப்பொிய ஊழல் எது தெரியுமா? நாமெல்லாம் இந்த ஊழல், அந்த ஊழல், அந்த நாட்டு ஊழல் என்னெ்னவோ சொல்றோம்ல.. 2ஜி 3ஜி என்னெ்னனவோ சொல்றோம். உலகத்திலேயே மிகப்பொிய ஊழல் வந்து பணம் என்கிற கான்செப்ட் தான் மிகப்பெரிய ஊழல். பணம் என்கிற கான்செப்ட் தான் மிகப்பெரிய ஊழல். யாரோ ஒருத்தரால் நம்ம பிரச்னை தீர்ந்திடும்னு நினைக்கறோம் பாருங்க. இதுதான் மிகப்பொிய முட்டாள்தனம். வாழ்வு யாராலும் தீர்வதல்ல. நாம் தான் தீர்த்துக் கொள்ள வேண்டும். வாழ்வு யாராலும் மாற்றப்படுவதில்லை. நாம் தான் மாற்றிக் கொள்ள வேண்டும். நாம நம்முடைய வாழ்க்கையைப் பற்றி என்ன முடிவெடுக்கின்றோமோ நாம நம்முடையப் பிரச்னைகளைப் பற்றி என்ன் முடிவெடுக்கின்றோமோ நம்முடைய சரி தவறு துக்கம் நோ்மை நியாயம்ஈ உண்மை இதைப்பற்றி நாம் என்ன நினைக்கிறோமோ இதைச்சார்ந்து தான் நம் வாழ்க்கை மலர்கின்றது. நான் அந்த பேஸ்புக் மீம்ஸ் பாத்தேன். ஓ இவ்வளவுபேர், எல்லாரும் வந்து வௌ்ளத்த பார்வையிட்டு போயிருக்காங்க.. அப்படீன்னா என்ன அர்த்தம்? அப்ப இத்துனை ஆண்டுகாலமாக இந்தப் பிரச்சினையின் அடிப்படையை நாம் புரிந்துகொள்ளவில்லை அல்லது மாற்ற முடியாத நிலையில் இருக்கிறது பிரச்சினை. முத்திப்போயிருச்சு. அதாவது இதுக்குமே இத்தனபேர காலிபண்ண முடியாது. நிறைய பேர் அங்க வாழ ஆரம்பிச்சிட்டாங்க. சட்டத்தாலோ வேறு எதனாலோ இவங்கள காலி பன்றது சாத்தியமில்லை அப்படீன்னு ஆயிருச்சு. அப்ப என்ன? மழை அடிக்கிறாமாதிரி அடிக்கும், நாம அழுவுறா மாதிரி அழுவனும், நிவாரண உதவி நடக்கறாமாதிரி நடக்கும், திரும்ப அடுத்த மழை வர்றப்ப அடிக்கிறாமாதிரி அடிக்கும், அழுவுறா மாதிரி அழுவனும், நிவாரண உதவி நடக்கறாமாதிரி நடக்கும் அவ்வளவுதான். அப்ப அடுத்ததறவ வரும்போது என்னென்னல்லாம் மீம்ஸ் போடனும்னு இப்பவே ரெடி பண்ணியாவது வச்சிக்கலாம். அவ்வளவுதான். வேற இதுல ஒன்றும் தீர்வு அப்படீன்னு பேசறதுக்கால்லாம் இல்ல. எங்கோ நாம் நிஜத்தோடு இயற்கையோடு நம்முடைய தொடர்பை இழந்துவிட்டோம். அதுதான் பிரச்சினை. இயற்கையோடு நம்முடைய தொடர்பை இழந்துவிட்டோம். சாதாரண குறுகிய உடல் மனம் சார்ந்த பிரச்னைகள், உடல் மனம் சார்ந்த சிந்தனைகள், செயல்பாடுகள் இது ஜீவத்தன்மை. சிறுதன்மை. நமக்குள் சிவத்தன்மை இருக்கின்றது. சதாசிவத்தன்மை இருக்கின்றது என்கின்ற தௌிவோடு செயல்படுவதும், சிந்தனைபடுவதும், நோ்படுவதும், இயங்குவதும் சிவத்தன்மை. சிவத்தன்மையை நோக்கி நகருங்கள். உடனடியாக இந்த இரண்டே இரண்டு விஷயங்கள் இரவு உறங்கும் முன் புரணத்துவ தியானம் - நாள் முழுவதும் இந்த சிவ தீக்ஷை மந்திரத்தை ரசித்துக் கொண்டே ருசித்துக் கொண்டே சிந்தித்துக்கொண்டே இருப்பது. இந்த இரண்டையும் செய்யுங்கள். இது உடனடியா செய்ய வேண்டியது. இதுக்கு மேல இந்த சக்திகளை மெம்மேலும் வௌிப்படுத்தி முழுமையா சதாசிவத்தன்மையிலேயே வாழ வேண்டும் என்று நினைச்சிங்கன்னா சில சீரியஸ்ஸான, சின்சிரியான, சிரத்தையுடைய மக்கள் அதை நினைப்பீங்க. யாருக்கு அந்த எண்ணம் இருக்கின்றதோ வாருங்கள் ஆதினத்தின் வாசல் திறந்தே இருக்கின்றது. எத்துணை போ் வந்தாலும் இந்த சத்தியத்தை வாழவேண்டும் என்று நினைத்தீர்களானால், உங்கள் அனைவருக்கும் ஆதீனத்தில் ஆதீனவாசியாய் இடமிருக்கின்றது. ஐயா, இந்த சத்தியங்கள் எல்லாம் எனக்குள் பழுத்து பழமாக மாறி மற்றவர்களுக்கும் பழம் கொடுக்கின்ற மரமாக மாறியபிறகுதான் என்ன சமூகம் சப்போர்ட் பண்ண ஆரம்பிச்சது. ஆப்பவும் சப்போர்ட் பண்ணல கல்லெறிந்து அந்தப் பழங்களைப் பறித்தது அவ்வளவுதான். ஆனால் நான் எப்ப இந்த சத்தியங்களை வாழ முயற்சித்து, என்னுடைய சாதனையை செய்துகொண்டிருந்தேனோ அப்பொழுது இந்த சமூகம் என்னை எந்த விதத்திலும், எந்த விதமான உதவியும் சப்போர்ட்டும் பண்ணல. எனக்கு நடந்தது மற்றவர்களுக்கு நடக்ககூடாது. எனக்கு சப்போர்ட் இல்லாம போனாமாதிரி உங்களுக்கு சப்போர்ட் இல்லாம போகக்கூடாதுன்னுதான் இந்த ஆதீனங்களையே துவங்கியிருக்கின்றேன். யாரெல்லாம் இந்த சத்தியத்தை வாழ நினைக்கின்றீர்களோ, இந்த சத்தியத்தை நான் சிந்திச்சி, கடைபிடிச்சு வாழறநேரத்துல யார் சாமி எனக்கு சாப்பாடு போடுவாங்க? யார் எனக்கு துணிமணி குடுப்பாங்க? யார் என்னுடைய அடிப்படைத் தேவைங்கள பாத்துப்பாங்க? ஏன்னா என் வாழ்க்கை என் அடிப்படைத் தேவைகளிலேயே போயிடுதே நீங்க சொல்ற வாழ்க்கை மிகப்பெரிய உத்தமமான உன்னதமான வாழ்க்கை உண்மைதான், அதை நான் கடைபிடிக்கின்ற சாதனை பன்ற அந்த நேரத்துல யார் எனக்கு சாப்பாடுபோடுவாங்க? அப்படீன்ற கவலை உங்களுக்கு இருந்தால் என்னுடைய கதவுகள் திறந்திருக்கின்றன. ஏனக்கிருந்த சுழ்நிலையான ஆதரவின்மை பலமின்மை உங்களுக்கு வேண்டாம் என்பதற்காகத்தான் ஆதினவாசியாக, யார் வேண்டுமானாலும் ஆதினவாசியாக வருவதற்காக கதவுகளை திறந்து வைத்திருக்கின்றேன். இப்பவும் சொல்கிறேன். பணக்காரர்களின் பங்களாக்குள் இடம் பற்றாமல் போகும் ஏழைகளின் குடிசையில் இடம் பற்றாமல் போவதே இல்லை.. வாருங்கள் ஆதீனவாசியா மாறனும்னு நினைக்கிறவங்களுக்காகவே சதாசிவத்துவம்-னு ஒரு இலவசமான 21 நாட்கள் வகுப்பு. அந்த 21நாள்ல நீங்க முடிவு பண்ணலாம். அந்த 21 நாள்லு நீங்க இந்த வாழ்க்கை எனக்கு பிடிச்சிருக்கு இருக்கனும்னு நினைச்சிங்கனான இருக்கலாம். இல்லனா 21 நாள் முடிச்சி திரும்பபோகலாம். அது உங்களுடைய விருப்பம். ஆனாம் அந்த 21நாள் முடிவெடுகக்கறத்துக்கான வாய்ப்பு. இந்த ஆன்மீக கருத்துக்கள், சத்தியங்கள் உங்களுக்குள் ஊறத்துவங்கும்பொழுது நீங்கள் எதிர்பாராத சக்திகள் எல்லாம் வௌிப்படும். ஆனந்தமும், முழுமைத்தன்மையும் வௌிப்பட ஆரம்பிக்கும். அந்த சக்திகள் மலர்ந்துவிட்டதெனில் ஆஹா இதுதானப்பா வாழ்க்கை இதற்கு மேல் வேறு வாழ்க்கையில்லை. ஒருவேளை அது உங்களுக்கு அந்த அளவிற்கு பிடிபலன்னா.. சரி இது நமக்கு முடியாது. நம்ம கதி பொரி-கடலை தின்னுட்டு தின்னைல உருள்ரதுதான் அப்படீன்னா சரி நீங்க அத பாக்கலாம். எல்லோருக்குமான ஒரு வாய்ப்பாக ஆதீனத்தின் கதவுகளை சதாசிவத்துவம் எனும் 21 நாள் தியான வகுப்பு மூலமாக திறந்து வைக்கின்றேன். யார் வேண்டுமானாலும் ஆண், பெண், அலி என்கின்ற பால் மாறுபாடில்லாமல், ஜாதி மத வித்தியாசம் இல்லாமல் எந்த விதமான பேதமுமில்லாமல் வயது வித்தியாசம் இல்லாமல் யார் வேண்டுமானாலும் வந்து கலந்து கொள்ளலாம். 21 நாள் இலவச நிகழ்ச்சி. இந்த ஆதீனவாசி வாழ்க்கை முறை சதாசிவத்தன்மையை சார்ந்து சக்திகளை வௌிப்படுத்தி வாழ்கின்ற வாழ்க்கை முறை. உங்களால் வாழ முடியுமா? உங்களுக்கு வேண்டுமா? உங்களுக்கு பிடித்திருக்கின்றதா? அதுவும் -நீங்களும் வாழ்க்கையில் இணைந்து வாழமுடியுமா என்று நீங்கள் ட்ரை பண்ணி பார்க்கலாம். அதுக்கான சாத்தியம் உங்கள் எல்லோருக்கும் திறந்துவைக்கப்படுகின்றது. இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை இந்த நிகழ்ச்சி பெங்களுரு ஆதீனத்தில் நடைபெறுகின்றது. நீங்கள் பங்கெடுத்துப்பார்த்து முடிவெடுக்கலாம். இன்னும் ஒரு 25 நாள் மஹாசதாசிவோகம் எனும் நிகழ்வு. இந்த நிகழ்வு உங்களுக்குள் ஆன்மீக மறுமலர்ச்சியை, மஹாசதாசிவ சக்திகளை வௌிப்படுத்துகின்ற ஆன்மிக ஞான இரசவாத நிகழ்வு. இந்த நிகழ்வு இலவசம் அல்ல. ஆனால் இந்த நிகழ்வுக்கு பணம் ஒரு தடையாக நிச்சயம் இருக்காது. கலந்துகொள்ளவேண்டும் என்கிற முடிவை நீங்கள் எடுத்தால் இயற்கையும் இலக்ஷ்மியும் உங்களுக்கு எல்லா விதத்திலும் துணைசெய்வார்கள். நல்லா புரிஞ்சிகோங்க.., உங்களாலான நீங்க செய்யவேண்டியதையெல்லாம் நீங்க செய்ங்க, சதாசிவத்துவ நிலையை அடையலாம். நான் செய்ய வேண்டியத நான் செய்யறேன்.. நீங்க அங்க இருப்பீங்க. நீங்கள் கல்லை நகர்த்துங்கள் நான் கிரகங்களை நகர்த்துகின்றேன். 25 நாள் நிகழச்சியில் கலந்துகொள்ள வேண்டும் என்று நினைப்பவர்களும், சதாசிவத்துவம் 21 நாள் நிகழ்ச்சி. இந்த 21 நாள் நிகழ்ச்சி வந்து ஆதீனவாசியாக வாழனும்னு நினைக்கிறவங்களுக்கான ஒரு ட்ரெயினிங் செஷ்ஸன். அந்த 21 நாள்ல நீங்க முயற்சி பண்ணி பாக்கலாம். இந்த வாழ்க்கை முறை நமக்கு ஒத்துவருமா? இந்த வாழ்க்கை நமக்கு பிடித்திருக்கிறதா? இந்த சக்திகள் எல்லாம் உண்மையிலேயே நிஜம்தானா? இதையெல்லாம் நாம் வாழ்ந்துபார்க்கலாமா? இது மத்தவங்களுக்குத்தான் வருமா, நமக்கும் உண்டா? அப்படீங்கறதையெல்லாம் நீங்க முயற்சி செய்து பாக்கறதுக்கான வாழ்க்கை முறைதான் சதாசிவத்துவம் நிகழ்ச்சி. ஜனவரி மாதம் 11ம் தேதி அடுத்த சதாசிவத்துவம் துவங்க இருக்கின்றது. யார் வேண்டுமானாலும் கலந்துகொண்டு இந்த சதாசிவத்துவ நிலையை அடையுங்கள்.

Photos

http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-11-Nov-04-nithyananda-diary_bengaluru-adheenam_mss-tour-london-address_IMG_1275.jpg?1510047866 http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-11-Nov-04-nithyananda-diary_bengaluru-adheenam_mss-tour-london-address_IMG_1334.jpg?1510047871 http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-11-Nov-04-nithyananda-diary_bengaluru-adheenam_mss-tour-london-address_IMG_1348.jpg?1510047874 http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-11-Nov-04-nithyananda-diary_bengaluru-adheenam_mss-tour-london-address_IMG_1434.jpg?1510047880