Difference between revisions of "May 01 2017"
Ma.Stefanie (talk | contribs) |
|||
Line 119: | Line 119: | ||
{{#hsimg:1|364|Mandala Process|http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-5may-1st-nithyananda-diary_DSC_3956DSC_4365_bengaluru-aadheenam-mandala-process-swamiji.jpg}} | {{#hsimg:1|364|Mandala Process|http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-5may-1st-nithyananda-diary_DSC_3956DSC_4365_bengaluru-aadheenam-mandala-process-swamiji.jpg}} | ||
{{#hsimg:1|254|Mandala Process|http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-5may-1st-nithyananda-diary_DSC_3956DSC_4240_bengaluru-aadheenam-mandala-process-swamiji.jpg}} | {{#hsimg:1|254|Mandala Process|http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-5may-1st-nithyananda-diary_DSC_3956DSC_4240_bengaluru-aadheenam-mandala-process-swamiji.jpg}} | ||
+ | <img src="http://drive.google.com/uc?export=view&id=1lYxtkICPWUX2qzFpPu615VrT1YGOtIu-" alt="Mandala Process - DSC_4356.jpg" height = "200"> | ||
+ | <img src="http://drive.google.com/uc?export=view&id=153wW0DHm4PUVIz0oBQokUyLSsmzGyN9h" alt="Mandala Process - DSC_4330.jpg" height = "200"> | ||
+ | <img src="http://drive.google.com/uc?export=view&id=1cbqeiAmjnzz2LLEysYILR3Ql_Ynxkaz3" alt="Mandala Process - DSC_4328.jpg" height = "200"> | ||
+ | <img src="http://drive.google.com/uc?export=view&id=1HhH9azK01CN66ujYpmdO-KHaEB1gcHGT" alt="Mandala Process - DSC_4327.jpg" height = "200"> | ||
+ | <img src="http://drive.google.com/uc?export=view&id=15bcCvcfC8a7R-kTy-ZHnnrJPyA21B3KT" alt="Mandala Process - DSC_4326.jpg" height = "200"> | ||
+ | <img src="http://drive.google.com/uc?export=view&id=1K3hemdIGmBUSGSeRxFQT1hpQAlab7kEg" alt="Mandala Process - DSC_4325.jpg" height = "200"> | ||
+ | <img src="http://drive.google.com/uc?export=view&id=1IgBBj_ZI8dIe6wALsBHhYpGlLObqwVZv" alt="Mandala Process - DSC_4324.jpg" height = "200"> | ||
+ | <img src="http://drive.google.com/uc?export=view&id=15_isEGuBE6ERlOAIpLcj34X-meF5IQzf" alt="Mandala Process - DSC_4239.jpg" height = "200"> | ||
+ | <img src="http://drive.google.com/uc?export=view&id=174Gz2nQDSqdRI25_1JakJ6qcI9l1sD7R" alt="Sadashivoham Tamil Program - DSC_4510.jpg" height = "200"> | ||
+ | <img src="http://drive.google.com/uc?export=view&id=1yQipICdTFgOx3BNn1l0AIWUGZcPtzVVH" alt="Sadashivoham Tamil Program - DSC_4504.jpg" height = "200"> | ||
+ | <img src="http://drive.google.com/uc?export=view&id=1wtCAQpEmQP2A2jlVlJ8ks63UANDncEUZ" alt="Sadashivoham Tamil Program - DSC_4501.jpg" height = "200"> | ||
+ | <img src="http://drive.google.com/uc?export=view&id=1ulhSfzy3LJGtDZj_D08tqPtpa-bUXysg" alt="Sadashivoham Tamil Program - DSC_4490.jpg" height = "200"> | ||
+ | <img src="http://drive.google.com/uc?export=view&id=1YreyFEZEOZ0CRrGMJRJeXt3bj-RFR5rU" alt="Sadashivoham Tamil Program - DSC_4481.jpg" height = "200"> | ||
+ | <img src="http://drive.google.com/uc?export=view&id=1TjXl6ozLDSFUCcmf-IJ4nGXHiuWO6nzA" alt="Sadashivoham Tamil Program - DSC_4479.jpg" height = "200"> | ||
+ | <img src="http://drive.google.com/uc?export=view&id=1zhNAR5-EUta8MeJXt2ic4ZpvDxS2750G" alt="Sadashivoham Tamil Program - DSC_4476.jpg" height = "200"> | ||
+ | <img src="http://drive.google.com/uc?export=view&id=1n_R02b-uVIO3ByngkjNARXes1WGlKLd5" alt="Sadashivoham Tamil Program - DSC_4475.jpg" height = "200"> | ||
+ | <img src="http://drive.google.com/uc?export=view&id=1qSDuKEXhIgGu7Erv2M04VigusuT9jfSk" alt="Sadashivoham Tamil Program - DSC_4464.jpg" height = "200"> | ||
+ | <img src="http://drive.google.com/uc?export=view&id=1ZJQzmw7DCobOXgIaEdSzAGzv9h3DZbWW" alt="Sadashivoham Tamil Program - DSC_4463.jpg" height = "200"> | ||
+ | <img src="http://drive.google.com/uc?export=view&id=1XrnRB2WAhgOslaeXfRi4L_nbDX-6oui4" alt="Sadashivoham Tamil Program - DSC_4452.jpg" height = "200"> | ||
+ | <img src="http://drive.google.com/uc?export=view&id=1N3ycKaRZj_gHMDyfwXcQ0Ye9wLVQFM20" alt="Sadashivoham Tamil Program - DSC_4421.jpg" height = "200"> | ||
+ | <img src="http://drive.google.com/uc?export=view&id=16RaqPl5rn4O7VxDueiueS04dUkQP-7J9" alt="Sadashivoham Tamil Program - DSC_4419.jpg" height = "200"> | ||
+ | <img src="http://drive.google.com/uc?export=view&id=1zZUuOE3N6caQD-UpZ5vFW32oUn0Xn_5_" alt="Sadashivoham Tamil Program - DSC_4415.jpg" height = "200"> | ||
+ | <img src="http://drive.google.com/uc?export=view&id=1p7QqKlmiT3mbi0q5bSPi-6kWKXOuoQ9B" alt="Sadashivoham Tamil Program - DSC_4414.jpg" height = "200"> | ||
+ | <img src="http://drive.google.com/uc?export=view&id=1-772_6T68yHJZCx8dCXceVETP40jbkfn" alt="Sadashivoham Tamil Program - DSC_4412.jpg" height = "200"> | ||
+ | <img src="http://drive.google.com/uc?export=view&id=11gjc5G90KS_c3rXav7bwgIY3K_ifpvIJ" alt="Sadashivoham Tamil Program - DSC_4411.jpg" height = "200"> | ||
+ | <img src="http://drive.google.com/uc?export=view&id=1mtM6F4y57SVn1N5ejmZFqSYyn2CGl4tz" alt="Sadashivoham Tamil Program - DSC_4410.jpg" height = "200"> | ||
+ | <img src="http://drive.google.com/uc?export=view&id=11CmN4YTNjIeEwYNcnRN1cAlg-SgbO6g_" alt="Sadashivoham Tamil Program - DSC_4409.jpg" height = "200"> | ||
+ | <img src="http://drive.google.com/uc?export=view&id=1KppKmjq6oHkk39SZdwxmb96Gl5NXphuJ" alt="Sadashivoham Tamil Program - DSC_4408.jpg" height = "200"> | ||
+ | |||
{{#hsimg:1|293|Nithyananda Satsang in Tamil|http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-5may-1st-nithyananda-diary_DSC_3956DSC_4408_bengaluru-aadheenam-tamil-satsang-session-swamiji.jpg}} | {{#hsimg:1|293|Nithyananda Satsang in Tamil|http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-5may-1st-nithyananda-diary_DSC_3956DSC_4408_bengaluru-aadheenam-tamil-satsang-session-swamiji.jpg}} | ||
{{#hsimg:1|246|Nithyananda Satsang in Tamil|http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-5may-1st-nithyananda-diary_DSC_3956DSC_4421_bengaluru-aadheenam-tamil-satsang-session-swamiji.jpg}} | {{#hsimg:1|246|Nithyananda Satsang in Tamil|http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-5may-1st-nithyananda-diary_DSC_3956DSC_4421_bengaluru-aadheenam-tamil-satsang-session-swamiji.jpg}} | ||
Line 180: | Line 209: | ||
{{#css: img.hsimg { padding: 2px 0; } }} | {{#css: img.hsimg { padding: 2px 0; } }} | ||
− | + | ||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
</div> | </div> |
Revision as of 00:26, 6 September 2020
Title
சதாசிவத்துவம் - மனித உடல் எடுத்த எல்லோரையும் அழைக்கின்றேன்!
Description:
நித்யானந்த பீடம் பிடதியில், இரண்டு நாள் நடைபெற்ற சதாசிவோஹம் எனும் தியான வகுப்பில், பரமஹம்சர் திருவாய்மொழிந்தருளிய வகுப்பில் இருந்து எடுக்கப்பட்ட சத்சங்கம். அமீபாவிலிருந்து... மீன் - உடல் வளர்ச்சி மீனிலிருந்து.. குரங்கு - உடல்,மன வளர்ச்சி குரங்கிலிருந்து... மனிதன் - உடல் - மன, உயிர் வளர்ச்சி மனிதனில் இருந்து.. இறை மனிதன் - உடல் - மன - உயிர், ஷக்தி வளர்ச்சி! மனிதர்களை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் நேரம் வந்துவிட்டது! மனிதனி;ல் இருந்து.. இறை சக்தியை வெளிப்படுத்துகின்ற, ஞானபுருஷர்கள், சித்தர்கள் போன்று சக்திகளை வெளிப்படுத்தும் நேரம் வந்துவிட்டது!! அடுத்த 1 வருடத்திற்கு. 10,000 பேருக்காவது சதாசிவனின் சக்திகளை வெளிப்படுத்தும் தீக்ஷைகளை அளிக்கவிருக்கின்றேன்.. சதாசிவனின் இந்த சக்திகளை மனித வாழ்வின் தினசரி வாழ்க்கைப் பொருளாக மாற்றிவிட்டுதான் ஓய்வேன்!!!! கடந்த 200 ஆண்டுகளாக பூமியில் இதற்கான பணி மிகப்பெரிய அளிவில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஸ்ரீ இராமகிருஷ்ணர், பரமஹம்ஸ யோகானந்தர் முதல் ரமண மகரிஷிவரை இவர்களெல்லாம் பூமியில் அவதரித்ததன் இவர்கள் எல்லோரும் செய்த கூட்டு முயற்சியை இன்று சதாசிவனின் அருளால் பரமஹம்ஸ நித்யானந்தர் நிறைவேற்றியுள்ளார். விவேகானந்தர் எதைச் செய்ய விரும்பினாரோ!!! பரமஹம்ஸ யோகானந்தர் எதை செய்ய ஏங்கினாரோ.. அரபிந்தோ எதை வாழ்வெல்லாம் செய்ய முயற்சித்தாரோ.. சதாசிவனின் அருளால் பரமஹம்ஸர் இன்று அதைச் செய்து முடித்தார் மனித உடல் எடுத்த அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றேன்!!! மனிதன் கடவுளாகும் நேரம் வந்துவிட்டது! மனித வாழ்வின் நோக்கம் அல்ல, மனித இனத்தின் நோக்கம் அல்ல, இந்த பூமியில்.. உயிர் தோன்றிய நோக்கத்தை நிறைவேற்ற வந்திருக்கின்றேன்!!! இதை வார்த்தைகள் உயிரில் உரைத்தால் வருவதற்கு தடை ஏதும் இருக்காது.. வருவீர்கள். இந்த வார்த்தைகள் உங்கள் உயிரில் சென்று உரைக்கட்டும் என்று ஆசிர்வதிக்கின்றேன்.
Link to Video 1:
Link to Audio 1
சதாசிவத்துவம் - மனித உடல்எடுத்த எல்லோரையும்அழைக்கின்றேன்
Link to Video 2:
Link to Video 3:
Transcript:
சதாசிவத்துவம்
புல்லாய் பூடாய் புழுவாகி, பல்மிருகமாகி பறவையாய் பாம்பாகி கல்லாய் மனிதராய் பேயாய் கணங்களாய் வல்லசுரராகி முனிவராய் தேவராய் செல்லான் இன்ற இத்தாவர சங்கமத்துள் எல்லா பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான். சிவபுராணத்துலே மாணிக்கவாசகர் சொல்றாரு. ஆழ்ந்து கேளுங்க, அமீபா ஒரு செல், அந்த அமீபா நிலையிலிருந்து மீன் வரைக்கும் நாம வளந்தது வந்து உடல் வளர்ச்சி. நாம எல்லோரும் அங்கிருந்துதான் வரோம். அமீபா என்கிற ஒரு செல்லிலிருந்து மீன் வரைக்கும் வந்தது. அது உடல் வளர்ச்சி. மீன் லருந்து குரங்கு வரை உடல் மனம் இரண்டும் சேர்ந்த வளர்ச்சி. அமீபாலேருந்து ஒரு செல்லிலிருந்து மீன் வரைக்கும் உடல் வளர்ச்சி. மீனிலிருந்து குரங்கு வரைக்கும் உடல் - மனம் வளர்ச்சி. குரங்கிலிருந்து மனிதன் வரை உடல் மனம் பிளஸ் உயிர் வளர்ச்சி. அதனாலதான் சிந்தனை, எதையும் கட்டுப்பாட்டில் கொண்டு வருகின்ற திறமை, இதெல்லாம் மனிதனுக்குள்ளே வளர ஆரம்பிச்சுது. அடுத்து மனிதரிலிருந்து இறை சக்தியை வௌிப்படுத்துகின்ற ஞானபுருஷர்களாக அவதார இறை புருஷர்களாக சித்தர்களாக சுப்பர் மேனாக, மனிதர்களை அடுத்த நிலைக்கு எடுத்து செல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது. ஆழ்ந்து கேளுங்க. அமீபாலருந்து மீன் வரைக்கும் உடல் வளர்ச்சி, மீன்லருந்து குரங்கு வரைக்கும் உடல் மன வளர்ச்சி. குரங்கிலிருந்து மனத்தான் வரைக்கும் உடல் மன உயிர் வளர்ச்சி. இப்ப மனிதனிலிருந்து இறை மனிதனுக்கு மனிதனை எடுத்து செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. இதனால் உடல் மன உயிர் சக்தி வளர்ச்சி. இறை சக்தி வளர்ச்சி. இந்த நாங்கயும் அதாவது பிஸிக்கல் மெண்டல், கான்ஷியஸ் அண்ட் சுப்பர் கான்ஷியஸ், இது நடக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. விவேகானந்தர் விரும்பினார். யோகானந்தர் ஏங்கினார். அரபிந்தோ வாழ்வெல்லாம் முயற்சித்து அலறித்துடித்து முயற்சித்தார். சதாசிவன் செய்து முடித்தார். மனிதனுடைய கான்ஷியஸ்னஸ்அ உயிரை அடுத்த நிலைக்கு கொண்டு செல்வதற்கான முயற்சி கடந்த 200 ஆண்டுகளாக மிகப்பெரிய அளவில் புமியில் நடந்து கொண்டிருக்கிறது. அந்த முயற்சியின் பாகம் தான் ராமகிருஷ்ணர், விவேகானந்தர், யோகானந்தர், அரபிந்தோ, காஞ்சன் காடு பப்பா ராமதாஸ், ரமண மகரிஷி, இவங்க எல்லாரும் செய்த காலெக்ட்டிவ் முயற்சி சதாசிவன் அருளால், இப்பொழுது நித்யானந்தர் நிறைவேற்றி இருக்கின்றார். மனிதன் இறை சக்திகளை வௌிப்படுத்துவதை சகஜமான தினசரி வாழ்க்கையாக மாற்றுகின்ற வேலையே செய்து முடித்தே தீருவேன். நல்லா புரிஞ்சிக்கோங்க, முதல் முதல்ல ஒரு குரங்கு எந்திருச்சு நின்னு ரெண்டு கால்ல நடக்க முயற்சிக்கும் போது சுத்தி இருந்த குரங்குகளெல்லாம் கண்டிப்பா அந்த கொரங்கு படாத பாடு படுத்தி கிண்டல் பண்ணிடுவோம். என்னென்னெல்லாம் முடியுமோ பண்ணிருக்கோம் அந்த கொரங்க அந்த குரங்க னநிசநளள பண்றதுக்கு. என்னே நீ நம்ம ஜாதி மாதிரி இருக்க மாட்டேங்கறே. என்னென்னவோ பண்ணிட்டு இருக்கிறே. உன்னே ஜாதிலிருந்து தள்ளி வெச்சுடுவோம். உருக்குள்ளேருந்து தள்ளி வெச்சுடுவோம். அந்த கொரங்கு என்ன பண்ணிருக்கு வேறே வழி இல்லாமே ஏதோ ஒரு காட்லே போய் ஒக்கார்ந்திருக்கும். அந்த காடு நாடா போயிருக்கும். எப்போ அந்த கொரங்கு அந்த மாதிரி ரெண்டு கால்ல நடக்கற சயின்ஸ் ஆலே பிரைன் ஹையர் ஆ டெவெலப் ஆகுது வாழ்க்கையை பத்தி பல விஷயங்கள புரிஞ்சிக்க முடிதுனு நிரூபிக்குதோ அப்போ அந்த காடும் நாடா போயிருந்திருக்கும். அதே மாதிரி இந்த காடும் நாடாகும் நேரம் வந்து விட்டது. குரங்கு இரண்டு காலில் எழுந்து நின்றதுதான் மனித இனத்திற்கான முதல் செயல். நடவடிக்கை. எந்திருச்சு நின்னு ரெண்டு கால்ல நிக்கும் பொழுது அந்த ப்ரைனுக்கு போகின்ற பிளட் டோட வேகம் குறையும். அப்போ ப்ரைனோட அகலமும் ஆழமும் அதிகமாகி சிந்திக்கின்ற திறன் அப்போதான் ஆரம்பிக்குது. சட்டில் க்ரூவ்ஸ் பிரைன்ல அப்போதான் உருவாக ஆரமிக்குது. இந்த மெம்பரேன் டிஸ்ஸுஸ் னு சொல்லுவோம். அது அறுபடாமல் உடைபடாமல் வேகமாக ரத்தப் போக்கு இருந்தா அந்த சட்டில் க்ரூவ்ஸ் மெம்பரேன் உருவாகாது. அந்த ரத்த ஓட்டத்தின் வேகம் குறையும் பொழுது உருவாகிற அந்த சட் டில் க்ரூவ்ஸ் மெம்பரேன் அதுதான் வாமைெபைெ அப்டீங்கற விஷயத்த அந்த குரங்கிற்குள் துவங்குகிறது. அப்போதான் குரங்கு மனிதனாகிறது. எந்திரிச்சு நிக்க ஆரம்பிச்ச அந்த முதல் குரங்கு தான் அவதார புருஷன். அதுக்கப்பறம் அது என்ன பண்ணிருக்கும்? கட்டாயமா இன்னொரு 4 குரங்கை கூப்பிட்டு கால்ல கட்டையை கட்டி நிறுத்த கத்துகொடுத்திருக்கும். அதுக்கப்பறம் ஒரு கொல்ல பிடிக்க காது கொடுத்திருக்கும். அந்த கட்டைக்கு தான் ஸ்பீரிசுவல் அல்கமி ப்ரோடக்ட்னு பேரு. மெது மெதுவா மெது மெதுவா நிறெய குரங்குகள் அந்த மாதிரி ரெண்டு காலாலே நடக்க விட்டிருக்கும். அப்போ மத்த குரங்குங்களாம் இந்த குரங்குகல பாத்து அந்த காட்டுக்குள்ளே போயிட்டு போயிட்டு வர்றே. என்னே பன்னிட்டு வர்றே. அந்த குரங்கு வந்து தப்பு தப்பா எல்லா ஊர்லே சொல்றாங்க. ஆனா நீ ஜாலியாத்தான் இருக்குற. அப்பறோம் எப்போ போறே சொல்லு நானும் வர்றேன். மெதுமெதுவாக அந்த குரங்கு இரண்டு காலில் நடப்பதை சமூகத்தின் வழக்கமாகவே மாற்றி விட்டுதான் மறைந்தது. அதேபோல உங்களுக்கு உறுதி அளிக்கின்றேன். மனித இனத்தின் உணர்வை, உயிரை அடுத்த நிலைக்கு கொண்டு சென்று விட்டுத்தான் உடலை விடுவேன். மூன்றாவது கண்ணும் சதாசிவன் வௌிப்படுத்தி இருக்கும் 460 சக்திகளும், போஸ்ட் கார்டு, ஈமெயில், செல் போன், வாட்ச் மாதிரி எல்லா மனிதனுடைய வாழ்க்கையிலும் தினசரி வாழ்க்கை பொருளாக மாற்றிவிட்டுதான் ஓய்வேன். எப்படி நீங்க வாட்ச் , செல் போன், போஸ்ட் கார்டு, ஈமெயில் தினசரி வாழ்க்கையே எல்லாரும் யுஸ் பண்றீங்களோ அதே மாதிரி இந்த சக்திகள் அத்துனையையும் நீங்க தினசரி வாழ்க்கையில எல்லா மனித இனத்திற்கும் மனித இனமே இந்த சக்திகளை தினசரி வாழ்க்கையா வாழ்ந்து அந்த அடுத்த உயர் நிலை, இறை நிலை மனிதனாக மாறுவதற்காகத்தான் வந்திருக்கிறேன். அதை செய்தே தீருவேன். அதுக்குதான் நான் வந்திருக்கிறேன். அதை செஞ்சே தீருவேன். இப்போ உங்களுக்கு ரெண்டு சாய்ஸ் இருக்கு. வௌியிலிருந்து கிண்டல் பண்ணிக்கிட்டு இருந்த குரங்காவும் இருக்கலாம். உள்ள வந்து நிக்க கத்துக்கிட்டு மத்தவங்க நிக்கறதுக்கு கத்து கொடுக்குற குரங்காவும் இருக்கலாம். வௌியிலிருந்துகிட்டு "காட்டுக்கு போயிட்டு போயிட்டு வர்றே! என்ன குடுத்தாரு அந்த அந்த குரங்கு என்ன கொடுத்துச்சு உனக்கு?" அந்த மாதிரி கேக்குறே ஆளாவும் இருக்கலாம். உள்ள வந்து தான் நிக்க கத்துக்கிட்டு மத்தவங்க நிக்கறதுக்கு ஹெல்ப் பண்ற கொரங்காவும் மாறலாம். முடிவு உங்களுடையது. சாய்ஸ் உங்களது. அடுத்த ஒரு வருஷத்துக்கு அடுத்த குரு புர்ணிமா வரை இப்போ வருகிற குரு புர்ணிமா லருந்து அடுத்த வருகிற குரு புர்ணிமாவரை போன ஆண்டே இந்த அடிப்படை விஷயத்தை துவக்கிட்டேன். போன ஆண்டே ஒரு 400, 500 பேராவது வந்து இந்த சக்திகளை வாங்கி ப்ராக்டீஸ் பண்ணி மேனிபெஸ்ட் பண்ணனும்னு நினைச்சு போன ஆண்டே இந்த செயல் பாட்டுகளை துவக்கிட்டேன். இப்போதான் இது முழு அறிவியலாக பரிணமிக்கிறது. இப்போதான் எனக்கு டைம் கிடைச்சிருக்கு. இது எல்லாத்தையும் செஞ்சி இதை ஒரு தௌிந்த அறிவியலாக, அதாவது சமைச்சி வெச்சிட்டு வாங்க சாப்பிடலாம்னு கூப்பிட இப்போதான் எனக்கு டைம் கிடைச்சிருக்கு. போன வருஷம் வரைக்கும் சாதம் வடிச்சிருந்தோம். சாம்பார் நடந்திட்டு இருக்கு. வாழை இலை வெட்டணும். பொரியல் நெருக்கணும். இப்போ எல்லாம் முடிஞ்சி இலை போட்டு தண்ணி தௌிச்சு உப்பும் வெச்சி வெச்சாச்சு. இந்த சதாசிவத்துவம் மே 13 யிலிருந்து அடுத்த குரு புர்ணிமை வரை இந்த குரு புர்ணிமை இல்லை. அடுத்த குரு புர்ணிமை வரை ஒரு ஆண்டிற்கு இங்கேயே உட்கார்ந்து இருந்து ஒரு 10000 ஆதீன வாசிகளையாவது இந்த 460 சக்திகளையும் வௌிப்படுத்துகின்ற மாதிரி முழுமையாக பயிற்சி கொடுக்க தயார் பண்ண போறேன். இந்த ஒரு ஆண்டை இதற்காகவே டெடிகேட் பண்றேன். அதுக்கு பிறகு இவர்கள் உலகம் முழுக்க போய் இந்த சக்திகளை வௌிப்படுத்தி காட்டி இது சாத்தியம்னு மத்தவங்குளுக்கு புரிய வெச்சு முதல் பேட்ச் கொரங்குகளை நடக்க வெச்சு ஊருக்குள்ளே அனுப்ப போறேன். நடந்து காட்டி அவங்களுக்கும் சாத்தியம்னு சொல்லிட்டு வாங்கையா. முதுகெலும்பு நேரா நின்ன உடனேதான் மூளைக்கு போற்ற ரத்தம் வேகம் குறைஞ்சி மூலையினுடைய சட்டில் சுக்ுசுமமான பகுதிகள் டெவெலப் ஆக ஆரம்பிச்சுதான் நாம மனிதனா மாறினோம். குரங்கிலிருந்து மனிதனாய் மாறினோம். சிம்பிளான செயல் நிமிந்து, முதுகெலும்பு நிமிந்து ரெண்டு காலால நடக்கறது சிம்பிலான செயலாலதான் குரங்கு மனிதனானது. அதே மாதிரியான மிக மிக சிம்பிளான எளிமையான சக்திபாதம், குருவோடு அந்த ஒருமை நிலையில் சுத்தாத்வைத சுக போத நிலையில் லயித்து இருத்தல் அந்த சிம்பிளான ஆக்ட் நாலதான் மனிதன் கடவுளாக மாரப் போகின்றான். மனிதன் சதாசிவத்தன்மையை அடைகின்றான். மனிதன் மகாதேவ தன்மையை அடைகின்றான். அடுத்த ஒரு வருஷத்துக்கு இந்த ஒரேயொரு காரணத்துக்காக என்னுடைய நேரம் சக்தி எனர்ஜி இன்டெலிஜென்ஸ் எல்லாத்தையும் தியாகம் பண்ண போறேன். இந்த பத்தாயிரத்தில் பாகமாக இருப்பவர்கள் ஆசீர்வதிக்க பட்டவர்கள் நான் சொல்லி தெரிய வேண்டியது இல்ல. உங்கள் வாழ்க்கையின் நோக்கம் அல்ல. மனித உயிர் வாழ்க்கையின் நோக்கம் அல்ல. உயிர் இனத்தின் நோக்கத்தை நிறைவேற்றுகின்றேன். வெறும் உங்களுடைய வாழ்க்கையின் நோக்கம் அல்ல. மனிதர்கள் எல்லா மனிதர்களுடைய வாழ்க்கையின் நோக்கம் மட்டும் அல்ல. அமீபாவிலிருந்து செல் மீனாய், மீன் குரங்காய், குரங்கு மனிதனாய், மனிதன் சிவனாய், உயிர் எக்காரணத்திற்காக இந்த புமியில் மலர்ந்ததோ அதன் நோக்கத்தை நிறைவேற்றுகின்ற செயல் இது. உயிரின் நோக்கத்தை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லுகின்றேன். நான் வுடு கட்ட ஒரு லோன் வாங்கி வெச்சிருக்கேன். அது கூடு கட்டிட்டு ரெண்டு வருஷம் கழிச்சு வரட்டுமா? வா யாரு வேண்டாங்கறது? வந்தா வா வராட்டி போ. யாருக்கெல்லாம் இந்த வார்த்தை உயிரில் உரைக்கிறதோ வருவீர்கள்! தடை இருக்க வாய்ப்பே இல்லை. உயிரில் உரைக்காதவர்கள் உறங்கி கொண்டே இருங்கள். என்றாவது ஒரு நாள் என்னோடு நடக்கின்ற குரங்குகள் வந்து உங்களை எழுப்பட்டும். நான் நேரடியா யுளுீ எடுத்தப்போ அட்டென்ட் பண்ணாதவங்களுக்கெல்லாம் பனிஷ்மென்ட் என்னென்னா ஏன் னளைஉைிடநள எடுக்கறப்போ அட்டென்ட் பண்ணி ஆகணும். ஆச்சாரியார் எடுக்கும் போது அட்டென்ட் பண்ணி ஆகணும். இப்போ நா நேரடியா உக்கார்ந்து சதாசிவத்துவதை இந்த 460 சக்திகளையும் வௌிப்படுத்த ட்ரைன் பண்றே ஒரு ஆண்டு இன்னொன்னு பலபேர் கேட்டாங்க இப்போ ஆதீனவாசியா வந்துட்டு சதாசிவத்துவம் அட்டென்ட் பண்ணிட்டு நான் சேலம் பிரென்ச் ல திருவண்ணாமலை ப்ராஞ்சுல ராஜபாளையம் ப்ராஞ்சுளே ஆதீனவாசியா இருக்கலாமான்னு? இந்த ஒரு ஆண்டிற்கு எங்கேயுமே போக முடியாது. ஒரு ஆண்டிர்க்கு நானும் இங்கெயேதான் இருந்து ஆகணும் நீங்களும் இங்கேயேதான் இருந்து ஆகணும். நானும் எங்கேயும் போக முடியாது. நீங்களும் எங்கேயும் போக முடியாது. ரெண்டு பெரும் ஒண்ணா ஒட்காரதோனாதான் சம்பந்தம் கலக்கருது நடக்கும். இந்த ழநெநௌள சுத்தாத்வைதம் கலக்கருத்து நடக்கும். தினந்தோறும் காலைல 4 மணி நேரம் நம்ம ரெண்டு பெரும் ஒண்ணா ஒட்கார்ந்தாகணும். சத்சங்கம் நேரத்தை நான் சொல்லல. அதுக்கப்பறம் பவர் மணிபஸ்டேஷன் செஷன் நம்ம ரெண்டு பெரும் ஒண்ணா ஒட்கார்ந்தோனாதான் அதாவது உழபெவைழைளெ உயிரை மலரச்செய்து சக்திகளை மலரச்செய்கின்ற தீக்ஷைகள் உடம்பிலிருந்துதான் உடம்பிற்குள் செலுத்த முடியும். அதனாலே அடுத்த குரு புர்ணிமை வரைக்கும் நீங்க ப்ரான்ச் ஆதீனவாசியாலாம் போக முடியாது. இந்த ஒரு கேம்பஸ்ல நா இருக்குறே எடத்துல உட்கார்ந்தாகணும். இப்போ வராமே அடுத்த வருஷம் வந்தீங்கனா இந்த மாதிரி தீக்ஷை எடுத்த யாராவது ஒருத்தர்கூட ஒட்கார்ந்துட்டு ப்ராஞ்சுல இருக்கலாம். நானே ஏஎஸ்பி எடுத்தப்போ அட்டென்ட் பண்ணாதவங்களுக்கு பனிஷ்மென்ட் என்னென்னா ஆச்சாரியார்ஸ் எடுக்கும் போது அட்டென்ட் பண்ணி ஆகணும். அதே மாதிரி இப்போ நானே சதாஷிவத்துவம் நடத்தி இந்த ஒரு வருஷம் 460 சக்திகளையும் வௌிப்படுத்த வெக்குற இந்த முழுமையான பயிற்சியை செய்யும்போது, ஒரு வருடமாவது நீங்க எங்கேயும் போகாமே இங்கு தான் இருக்க போறீங்க. அதுக்கு பிறகு கூட ப்ராஞ்சுல தான் அதீனாவாசியா இருப்பீங்க. தேவைப்படறே இடங்கள்ல மட்டும். இப்போ வராதவர்கள் என்ன ஆவார்கள்னா கட்டாயமா உங்களேயே உங்களால தடுக்க முடியாது ஏன்னா இவங்க வௌிப்படுத்தபோற சக்தியினுடைய வீச்சும் பலமும் எவனாலும் தன்னை தடுத்துக் கொள்ள முடியாது. நல்லா தெரிஞ்சிக்கோங்க நாட்டின் முதல்வர்கள், தலைவர்கள், ஜனாதிபதிகள், குடியரசு தலைவர்கள், பிரதமர்கள், மன்னர்கள், ஷேக்குகள் இங்கே வந்து தங்கி இருந்து சக்திகளை பயிற்சி எடுத்து கொண்டு செல்வார்கள். அடுத்த ஆண்டே நடக்க போகின்ற விஷயம் இது. ஜனாதிபதிகள், பிரைம் மினிஸ்டர்ஸ், ப்ரெசிடெண்ட்ஸ், அரபு மன்னர்கள், ஷேக்குகள், அரசர்கள், ராணிகள், ராஜாக்கள். இவர்களுடைய குழந்தைகள் இந்த குருகுலத்தில் வந்து படிப்பார்கள். இதெல்லாம் அடுத்த ஆண்டிற்குள் நடக்க போகின்ற விஷயம். ஏனா பணம் வெச்சிருக்கறது, கார் வெச்சிருக்கறது, பிளைட் வெச்சிருக்கறது இதெல்லாம் ஓல்ட் பேஷன். பவர் வெச்சிருக்குறவந்தாயா நியு பேஷன். இதெல்லாம் நித்யானந்தா வர்றதுக்கு முன்னாடி பேஷன். 1978 கு முன்னாடி. இப்போ இல்லே. இப்போ லேட்டஸ்ட் பேஷன் என்னே? பவர் இருக்கா? இதான் லேட்டஸ்ட் பேஷன். அடுத்த ஆண்டிற்குள் பார்ப்பீர்கள். பணத்தாலும், புகழாலும், பொருட்களாலும், போரடித்து போன மனிதர்கள் எல்லாவற்றையும் பார்த்தவர்கள் அதை தாண்டி வாழ்க்கையின் உச்சத்தை பார்ப்பதற்கு வருகின்ற இடம் இது ஒன்றேயாக இருக்கும். யாரெல்லாம் நேரடியா சாமி கிட்டேருந்தே ட்ரைனிங் எடுத்து 460 சக்திகளையும் வௌிப்படுத்தி உலகத்துக்கு இதை கொண்டு சென்று சேர்க்கலாம்னு நினைக்கறீங்களோ அவங்கெல்லாம் வந்துடுங்க. அந்த மாதிரி முடிவெடுக்கறவங்க எத்தனை பெரு கொஞ்சும் கை தூக்குங்க. ஒரு பெரிய லிஸ்ட் கொடுத்தாங்க. நல்லது. நீங்கல்லாம் வந்துடுங்க. மத்தவங்கல்லாம் இந்த கை தூக்கிணவங்கள பாத்து இவங்க கிட்டேர்ந்து கத்துக்கோங்க. எல்லாம் பிளான் பண்ணுங்க. மத்தவங்கனு நான் சொல்றது இங்கே உட்கார்ந்து இருக்கற மத்தவங்கள மட்டும் இல்லே. உலகத்தையே சொல்றேன். நல்லா தெரிஞ்சிக்கோங்க. ஒரு வெற்றியடைந்த அந்த அறிவியல் கொடுக்கின்ற தயிரியத்தால் பேசுகின்றேன். இது சும்மா வறட்டு வார்த்தையோ வறட்டு புகழ்ச்சியோ அல்ல. வெற்றி அடைந்த அறிவியல். நிரூபிக்க பட்டுவிட்ட அறிவியல். யாரோ ஒன்னு ரெண்டு பேருக்கு பிளுாக்குல அடிக்கிற அறிவியல் அல்ல. நிரூபிக்க பட்டு விட்ட தௌிவான அறிவியல். அதன் மீது அமர்ந்து கொண்டு இருக்கும் தைரியத்தாலே நான் பேசுறேன். 10,000 பேரையாவது இந்த ஒரு ஆண்டிற்குள்ளே 1ளவ பேட்ச் சுப்பர் ஹியுமன் பீயிங்ஸ், ஜீவன் முக்தர்கள், சித்த புருஷர்கள், அப்படிலாம் நாம் என்ன கேள்வி பட்டுர்க்கமோ அந்த நிலையை அதாவது சதாஷிவனோட உணர்வை நிலையை வாழ்ந்து உணர்வை வௌிப்படுத்தி சக்திகளை வாழ்க்கையின் பாகமாக வாழுகின்றவர்கள். சதாஷிவனின் உணர்வில் வாழ்ந்து அவருடைய உணர்வு தன்மையை வௌிப்படுத்தி அவருடைய சக்திகளை பொங்கச் செய்து வாழுகின்ற வாழ்க்கை ஒரு 10,000 பேரையாவது முதல் பேட்ச் ரெடி பண்ண போறேன். பாகமாக மாற நினைப்பவர்கள் வாருங்கள். மனித வாழ்க்கைல இல்லே உயிர் வாழ்க்கையிலேயே இதை தவிர வேறு செய்வதற்கு ஒண்ணுமே இல்லே. மீதி எல்லாமே தேவையில்லாத ஆணிதான். புடுங்கறே மீதி எல்லா ஆணியுமே என்னே தேவையில்லாத ஆணிதான். தெரிஞ்சவங்க புரிஞ்சிக்கோங்க. புரிஞ்சவங்க கிளம்பி வாங்க. சிலபேர் என்கிட்டே கேக்கறாங்க நான் வீட்லருந்தே பண்ணட்டுமா? நான் கூடத்தான் கைலாயத்திலிருந்தே உங்களுக்கு என்லைட்மென்ட் கொடுத்திருக்கலாம். அய்யா, சக்திகள் மலர்ந்தாகணும்னா சதாஷிவனே மனித உடம்பு எடுத்தாகணும். உங்களுக்கு தீக்ஷை கொடுத்தாகணும்னா உங்களுக்குள்ளே கொடுத்தாங்கனும்னா சதாஷிவனே மனித உடம்பு எடுத்தாகணும். இல்லேனா அங்கேயே உட்கார்ந்து வேலைய முடிச்சிட்டு போக போறாரு. மனித உடம்பு எதுக்கு. உங்களோட இந்த பாடு படறதுக்கா? நானே கைலாயத்துலேருந்து வரும்போது உங்க ஊர்லேருந்து வர முடியாதா? கைலாயத்துலேர்ந்து பிடதிக்கு வர்றது விட உங்க ஊர்லேருந்து பிடதிக்கு வர்றது கஷ்டமா? நம்ம ரெண்டு பெரும் உடலால் ஒரு இடத்தில் உட்கார்ந்தாகணும் அப்போ மட்டும் தான் தீக்ஷை நடக்கும். அப்போ மட்டும் தான் சக்திகள் வௌிப்படும். அதனாலதான் ஒரு இடத்தில் அமர்ந்தாக வேண்டும் என்கின்ற கட்டாயம். உலகம் முழுவதிலுமிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் முதல் பேட்ச் சதாஷிவத்துவத்து்க்காக வராங்க. நிரந்தரமாக ஆதீனவாசிகளாக இருப்பதற்கு தங்களுடைய தேவையில்லாத ஆணியெல்லாம் புடிங்கி முடிச்சிட்டு கிளம்பி வராங்க. மனித உடலெடுத்த எல்லோருக்கும் அழைப்பு விடுக்கின்றேன். கதவுகளை திறந்து வைத்து, கைலாயத்தின் கதவுகள் திறந்து வைத்து இருக்கின்றன. வாருங்கள். கதவை நான் திறந்தாலும் நீங்கள் காலெடுத்து வைத்தால் தான் உள்ளே வர முடியும். கதவை நான் திறந்தாலும் நீங்கள் காலெடுத்து வைத்தால் தான் உள்ளே வர முடியும். 460 சக்திகளையும் நீங்கள் வௌிப்படுத்தி இறை நிலைக்கு செல்வீர்கள் என்பதற்கு நான் உறுதி. அது யாராக இருந்தாலும் சரி. அறிவியல். வெற்றி அடைந்த அறிவியல். சயின்ஸ் சக்சஸ்புல் ஆயிடுச்சு. கூன், குருடு, செவிடு, பேடாக இருந்தாலும் சக்திகளை வௌிப்படுத்த முடியும்னு மிகத் தௌிவாக அனுபவப்புர்ணமாக செஞ்சிட்டோம். இது வெறும் மனித வாழ்க்கையின் நோக்கம் அல்ல. வெறும் மனித உயிரின் நோக்கம் அல்ல. புமியில் உயிர் வந்த காரணத்தின் நோக்கம். செல் மீனாய் மீன் குரங்காய் குரங்கு மனிதனாய் மனிதன் இறைவனாய் மாறும் நேரம் வந்து விட்டது. பாகமாக மாறுபவர்கள் வரலாற்றின் பாகமாக மாறுகிறீர்கள். வேறே ஏதாவது கேள்வி கேட்க்கணும்னு நினைசீங்கனா சொல்லுங்க. யளெறநச பண்றேன். கே: சுவாமி என் பய்யன் வந்து லவந்த் படிக்கறான். இப்போ லவந்த்லருந்து ட்வல்த் போறான். இப்போ 10 டேஸ் கிலாஸ்காக கொண்டு வந்து விட்டிருக்கேன். பொண்ணு வந்து 3சன இயர் படிச்சிட்டு இருக்கா. ஆனா எனக்கு வந்து இங்கே மே 13 லருந்து றழசம் பண்ணனும் உள்ளே உங்க கூட தழைெ பண்ணிக்கனும்னு ஆசை இருக்கு. பதில்: றழசம பண்ணனும். அப்படீங்கற வார்த்தையே தப்பு. முதல்ல உங்க உயிரை மலர வெச்சு இறை சக்தியை நோக்கி போங்க. போனும். அதுதான் ரைட்டான காரணமா இருக்க முடியும். இங்க வர்றதுக்கு. இங்க வர்ரர்த்துக்கான முதல் காரணம் என்னவா இருக்கணும்னா நன் சதாசிவத்துவதில் மலர வேண்டும். சதாசிவன் சக்திகளை வௌிப்படுத்த வேண்டும். ஏன் உயிர் மேல் நிலை அடைய வேண்டும். அதுதான் காரணமா இருக்க முடியும். வேறே எந்த காரணமாக இருந்தாலும் அது உங்களுக்கு அடிப்படையே புரியலேங்கறதுதான் உண்மை. இந்த அடிப்படை காரணம் புரிஞ்சா, உங்களுக்கு தெரியும், அடப்பாவிகளா! இப்படியே தானேடா இந்த மனுஷ உடம்பு எடுத்து, மாதாவும் உடல் சலித்தால் நானோ கால் சலித்தேன். வேதாவும் கை சலித்தான். பெத்து பெத்து போட்டு எத்தனையோ தாய்மார்கள் உடல் சாலித்தார்களாம். என்னேயே பெத்து பெத்து போட்டு நானும் பொறந்து செத்து, பொறந்து செத்து, பொறந்து செத்து இந்த நடந்து நடந்து கால் சலித்தேன். என்னை படைத்தது படைத்தது படைத்தது வேதா பிரம்மா கை சலித்தான். அய்யனே இதற்கு மேல் இன்னொரு கருவில் புகாமல் காப்பாற்று. டகைந ஓட ிரசிழளந புரிஞ்சிதுன்னா இப்புடியேதான் பொறந்து யாரையாவது ஒருத்தர் அம்மா அப்பா அண்ணண் தம்பி பய்யன் பொண்ணு அப்படின்னு புடிச்சுகிட்டு இதனோடு எல்லா அளப்பரிய பண்ணி தப்புனு செத்து போய் திரும்ப இன்னொரு எடத்துல பொறந்து இன்னொரு அப்பன் இன்னொரு அண்ணன் இன்னொரு தம்பி இன்னொரு மாமா இன்னொரு மச்சான் இன்னொரு எல்லாத்தையும் புடிச்சுகிட்டு, அங்கே இன்னொரு அளப்பறைய பண்ணி டப்புன்னு செத்து போய் இப்படியே தான் போய்ட்டிருக்கணும் னு அடிப்படை புரிந்தால் இந்த கேள்விக்கு பதில் புரியும். அடிப்படையை மட்டும் தான் நான் சுட்டி காட்ட முடியுமே தவிர என்ன பண்ணனும்னு நான் சொல்ல முடியாது. நீங்க புடுங்குறது தேவையான ஆணியா தேவையில்லா ஆணியா நீங்களே முடிவு பண்ணிக்கோங்க. இந்த டெக்னீக்கல் ப்ரோப்லேம்னு மட்டும் தப்பா நினைக்காதீங்க. இது என்ன பன்ட்மெண்டல் ப்ரோப்லேம். புரிஞ்சிச்சா? ரொம்பவே பெத்துட்டோம் ரொம்பவ வளத்துட்டோம் ரொம்பவ தரம் பிறந்துட்டோம் இப்போ நீங்க பண்ணிட்டிருக்கும் எல்லாத்தியுமே வாழ்க்கையிலே ரொமபத்ரம் பண்ணிட்டீங்க. நீங்க பண்ணாதது ிழறநச அயெகைநளவயவழைெ தான் வந்து பண்ணி வேலேய கவனிங்க. இதைதவிரே நீங்க பண்ணிட்டு இருக்கறது எல்லாத்தையுமே என்ன பண்ணிட்டேங்க எத்தனை ஆயிரம் தடவ எத்தனை லக்ஷம் தரம் பண்ணிருக்கீங்கனு உங்களுக்கே தெரியாது. அதனாலதான் போர் அடிக்குது. போர் அடிக்கற எதையுமே ரெண்டாவது தடவ பண்ணாதீங்க. அந்த மாதிரி வாழ்ந்தீங்கனா போதும். ஏன் போரடிக்குது? இதையே தான் பண்ணிட்டிருக்கீங்க. மொத்தமுமே நல்லா தெரிஞ்சிக்கோங்க. எல்லா உறவுமே கள்ள உறவுதானுங்கய்யா. எல்லா உறவும். ஏன்னா அண்ணன் தம்பி அக்கா தங்கச்சி பய்யன் பொண்ணு அப்பா அம்மா எல்லாம் உங்கள சுத்தி இருக்கிறே எந்த உறவை வேணும்னா பாருங்க. ஏதாவது நேரான உறவா? எல்லா உறவும் கள்ள உறவுதான் . எல்லாமே தேவையில்லாத ஆணியத்தான் புடிங்கிட்டு இருக்கீங்க. அது ரொம்போ முக்கியம்னா உட்கார்ந்து புடுங்கிட்டு இருங்க. நா சொல்றத மனித வாழ்க்கையோட குறிக்கோள் மட்டும் இல்லே. உயிர் உயிர் இனத்தின் குறிக்கோள். நெக்ஸ்ட் லெவெல்க்கு எடுத்துட்டு போறேன். சில பழைய பக்தர்களுக்கு என்னேடா இது வேறே மாதிரி பேசுறாரு முதல்லதான் ஒரு மாதிரியாதான் பேசிட்டு இருந்தாரு, நானும் பாக்குறேன் ஜடே வெச்சி தாடி வெச்சதிலிருந்து வேறே மாதிரியே பேசிட்டு இருக்காரு. சட வௌியிலே மட்டும் வளரலே. உள்ளேயும் சேர்ந்து வளந்திருக்கு. வெறும் மனித வாழ்க்கையோட குறிக்கோளான ஜீவன் முக்தியை மட்டும் செஞ்சிட்டு இருந்த வேலை ஜட வெக்கறதுக்கு முன்னாடி செஞ்சிட்டு இருந்த வேலை. நீங்க பார்த்த அந்த சின்ன பய்யன். இப்போ ரியல் வேலேய ஆரம்பிச்சி வெச்சிருக்கு. ரீல் வேலெயெல்லாம் முடிஞ்சு போய்டுச்சு. அதெலாம் நான் நடந்து வரும் போது கால ஓடிட்டு வந்திருக்கிறே தூசுங்க. இப்போ தான் சுட்கேசை திறக்கறேன். கையிலே கொண்டு வந்த சுட் கேஸை இப்போதான் தரக்கறேன். இப்போதான் திறக்க ஆரம்பிக்கிறேன். அந்த நித்தியானந்தரை பார்த்தவர்கள் இந்த நித்தியானந்தரை புரிந்து கொள்ளகூட முடியாது. அதே வெச்சி இதை புரிஞ்சிக்க முயற்சி பண்ணீங்கன்னா நீங்களும் தேவையில்லாத அணியத்தான் புடிங்கிட்டு இருக்கீங்க. அந்த நித்யானந்தரே பாக்காதவங்க ஒரு விதத்துல அட்வான்டேஜ் உங்களுக்கு. ஏன்னா டிரெக்ட்டா பாத்துக்கலாம் இப்போ. மனித வாழ்க்கையின் குறிக்கோளான ஜீவன் முக்தி. அதை டீச் பண்ணிட்டு இருந்த டைம் முடிஞ்சிருச்சு. உயிரின் குறிக்கோளான இறைநிலை அத டீச் பண்றது மட்டும் இல்லே தீக்ஷையாக சக்தியை வௌிப்படுத்துகின்ற தீக்ஷையாக உங்களுக்குள் அளிக்கின்ற வேலையை துவங்கிவிட்டேன். நல்லா தெரிஞ்சிக்கோங்க. ஆயிரம் கணக்கான சித்தர்களையும் ஜகத் குருக்களையும் ஞானிகளையும் ரிஷிகளையும் ஜகத் குருக்களையும் உருவாக்கிய தீருவேன். அடுத்த சில ஆண்டுகளுக்குள். அதை உருவாக்கறதுக்கான வேலைல இறங்கிட்டேன். நீங்க உங்களுடைய அந்த சின்ன வட்டத்தோட அந்த சுதந்திரம். நான் நினைச்சா காலைலே எழுந்திருச்சு காபி குடிப்பேன். அப்படியே பராக்கா வாக்கிங் போயிட்டு டி கடைலே உட்காந்து சுத்தி இருக்கறவங்களோடே கத பேசிட்டு இருப்பேன். அப்பாலே கொஞ்சும் கஞ்சி குடிச்சிட்டு மெதுவா குளிச்சிட்டு மதுர மீனாட்சியை பாக்காமே என்னாலே இருக்க முடியாது. அதுனாலே மீனாக்ஷி கோயிலுக்கு போயிட்டு வருவேன். இதெல்லாம் இங்கே இருந்தா முடியுமா? சாய்ங்காலமா தெப்ப குளத்துலே போய் உட்கார்ந்து இருந்து பக்கத்துக்கு வீட்டு பாட்டிங்கலாம் சேர்ந்து கதை பேசிட்டு வருவோம். இங்கே வந்தா அதெல்லாம் முடியுமா? அங்கேயே இருந்துக்கலாம் உடப்பா. மீனாட்சியோட வேறே என்னப்பா இருக்கு. இந்த மாதிரி ஆளுங்க மீனாக்ஷியே நேர்ல இருக்கும் போது கூட இருந்திருக்க முடியாது. செலயா இருக்கறதாலதான் இந்த மாதிரி உட்கார்ந்து வம்பு பண்ணிட்டு இருக்கலாம். இது யோசனை பண்ணி சிந்திச்சுலாம் முடிவெடுக்க முடியாது. நான் சொன்ன இந்த சில சத்தியங்கள் மனித உயிர் வாழ்க்கையின் நோக்கத்தை நிறைவேற்றுவது மட்டுமல்ல. உயிர். உயிர் புமியிலே ஏன் உயிர் வந்தது அமீபா ஏன் வந்தது அமீபா ஏன் மீனானது. மீன் ஏன் குரங்கானது. குரங்கு ஏன் மனிதனானது. அப்படீங்கற அந்த நோக்கத்தை நிறைவேற்றுகின்ற வேலையை செய்கின்றேன். உயிரின் நோக்கத்தை நிறைவேற்றியே தீருவேன். அதனாலே இந்த சத்தியம் உங்கள் உயிருக்குள் உரைத்தால் உங்களை எதுவும் தடுக்க முடியாது இங்கு வந்தே தீருவீர்கள். இருந்தே தீருவீர்கள். இது உயிருக்குள் உரைக்க மறுத்தால் இன்னும் கொஞ்ச நாள் நீங்க வளரனும். அது உயிர் உரைக்கறதுக்கு. ஆனா என்னே வேறே யாராவது ஒருத்தர் இப்போ கத்துகிட்ட ஒருத்தர் வந்து ஏதாவது ஒரு ஆதீனத்துலே ஹெட்டா இருப்பாரு, ஒரு மஹந்தா இருப்பாரு. நீங்க கத்துக்க வேண்டியிருக்கும். அதுக்கு தயாராகுங்க வேறே ஒன்னும் இல்லே. வாழ்க்கை இவ்வோளவுதான். எளிமையான சக்கரம். இனிமையான சக்கரம். உங்கள் எல்லோருக்குள்ளும் இந்த சத்தியம் உயிரில் உரைக்கட்டும் என்று ஆசீர்வதிக்கின்றேன். நீங்கள் எல்லோரும் இங்கே வந்து சதாஷிவத்துவதில் மலர்ந்து கைலாயத்தில் சாலோக்கிய முக்தியாக சதாசிவனோடு சாலோக்கிய முக்தியிலிருந்து சதாசிவத்துவதை வௌிப்படுத்தி உலகிற்கெல்லாம் நன்மை செய்வீர்களாக. நித்யானந்ததில் நிறைந்து நித்யானந்தத்தில் மலர்ந்து நித்யானந்தம் ஆகிட ஆசீர்வதிக்கின்றேன். ஆனந்தமாக இருங்கள்.
Photos
Tags:
Tamil