Difference between revisions of "April 14 2025"

From Nithyanandapedia
Jump to navigation Jump to search
Line 5: Line 5:
  
==Transcript:==
 
==Transcript:==
 +
ௐம் ௐம் ௐம்
 +
 +
நித்யானந்தேஷ்வர பரமசிவ சமாரம்பாம்
 +
நித்யானந்தேஷ்வரி பரமசிவ சக்தி மத்யமாம்
 +
அஸ்மதாச்சார்ய பர்யந்தாம்
 +
வந்தே குரு பரம்பராம்
 +
 +
உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன்.
 +
பரமசிவப் பரம்பொருளின் பேரருளால் இன்று உதித்திருக்கும் ஸ்ரீ விஷ்வாவசு தமிழ் புத்தாண்டு, எல்லோருக்கும் எல்லா நலத்தையும் தந்து, எல்லா வளத்தையும் தந்து, மங்களமான, நிறைவான ஆனந்தமான ஆண்டாக அமைய பரமசிவப் பரம்பொருளைப் பிரார்த்தித்து, அவர் ஆசிகள் நம் எல்லோர்மீதும் இருந்திட, அவர் திருவடித்தொழுது உங்கள் எல்லோருக்கும் நல்லாசிகளை அளிக்கின்றேன்.
 +
 +
இன்று துவங்கி இருக்கும் ஸ்ரீ விஷ்வாவசு தமிழ் புத்தாண்டு தினம், எல்லா நன்மையும் தந்து எல்லோருக்கும் உடல் நலம் தந்து, மனநலம் தந்து, உயிர் வளம் தந்து, இனிமையான உறவுகள் தந்து, மாற்றுவதை எல்லாம் - மாற்ற இயலும் எல்லாவற்றையும் மாற்றிக்கொள்ளும் சக்தியை தந்து, மாற்ற இயலாதவைகளை ஏற்றுக்கொள்ளும் புத்தியை தந்து, மாறாத பரமசிவப் பரம்பொருளின் மீதிருக்கும் பக்தியை தந்து, எல்லா நலத்தையும் தருமாக. பரமசிவப் பரம்பொருளின் பேரருள் நம் எல்லோர் மீதும் இருக்குமாக.
 +
 +
இன்று துவங்கியிருக்கும் தமிழ் புத்தாண்டு நன்னாளில் உங்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இன்றிலிருந்து பரமசிவப் பரம்பொருள் நம் எல்லோருக்கும் எல்லா நல்வரங்களும் தந்து, எல்லா மங்களத்தன்மையும் அருளி, பரமாத்வைதத்தை அளித்து, நம் எல்லோரையும் நித்யானந்தத்தில் நிலையுற்று இருக்கச் செய்வாராக.
 +
 +
ஆள்போல் தழைத்து
 +
அருகுபோல் வேரூன்றி
 +
முங்கில்போல் சுற்றம் சூழ
 +
எல்லோரும் எல்லா மங்களங்களும் நிறைந்து பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்வீர்களாக.
 +
 +
பரமாத்வைத நிலையோடு, பரமசிவப் பதத்தோடு, பரமசிவ சக்தியோடு, பரமசிவ நிலையிருந்து, பரமசிவமயமாக, பரமாத்வைதத்திருந்து, எல்லோரும் எல்லா நன்மையுற்று ஆனந்தமாய் வாழ்வீர்களாக.
 +
 +
இன்றைய தமிழ் புத்தாண்டு சத்சங்கத்திற்கும் நிகழ்ச்சிகளுக்கும் இணையத்தின் வழியாக, இதயத்தின் வழியாக இணைந்திருக்கும் உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன். இருமுனை காணொளிக் காட்சியின் வழியாகவும், முகநூல் வழியாகவும் மற்றும் எல்லா சமூக ஊடகங்கள் வழியாகவும் ...யூட்டியூப், வாட்ஸ்அப், ட்விட்டர், டிக்டாக் மற்றும் எல்லா செயலிகளின் வழியாகவும் இணைந்திருக்கும் உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன்.
 +
பல்வேறு சமூக ஊடக மற்றும் தொலைக்காட்சிகளின் வழியாக இணைந்திருக்கும் அன்பர்களையும் வரவேற்கின்றேன். சாணக்கியா தொலைக்காட்சி, கலாட்டா, கலாட்டா தமிழ், கலாட்டா டிவைன் மற்றும் பல்வேறு தொலைக்காட்சிகள் வழியாகவும், சாட்டை தமிழ்... பல்வேறு தொலைக்காட்சிகளில் நேரலையில் இணைந்திருக்கும் உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன்.
 +
 +
இந்த தமிழ் புத்தாண்டு எல்லோருக்கும் எல்லா நலமும், எல்லா வளமும்,  இனிமையான வாழ்வும் தந்து, பரமாத்வைத நிலையை அருள ஆசீர்வதிக்கின்றேன்.
 +
 +
இந்த ஸ்ரீ விஷ்வாவசு தமிழ் புத்தாண்டு நன்னாளில் பரமசிவப் பரம்பொருளின் நேரடியான செய்தி மஹாகைலாஸத்திருந்து உங்கள் அனைவருக்கும், மஹாகைலாஸத்தைப் பற்றியும், கைலாஸத்தைப் பற்றியும் பரமசத்தியங்கள்.
 +
 +
ஆழ்ந்து கேளுங்கள், கைலாஸம் மிக மூத்ததுமான, ஞானத்தின் வெளிப்பாடான சனாதன இந்து தர்மத்தின் மறுமலர்ச்சி நாடு. It’s an ancient enlightened Sanatana Hindu Civilizational Nation.
 +
தற்போது தமிழ் நியூஸ், மாலை மலர், புதிய தலைமுறை தொலைக்காட்சிகள் மூலமாக இணைந்திருக்கும் அன்பர்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன் மற்றும் சாட்டை தமிழ் தொலைக்காட்சி மூலமாகவும் இணைந்திருக்கும் அன்பர்களையும் வணங்கி வரவேற்கின்றேன்.
 +
 +
ஐயா திரு.சாட்டை துரைமுருகன் அவர்கள் கேள்விகள் அனுப்பியிருக்கிறார்கள், நிச்சயம் அவைகளுக்கு பதில் சொல்லுகின்றேன்.
 +
 +
கைலாஸா நாடு சனாதன இந்து தர்மத்தின், அதன் ஞானப்பரம்பரையின் பூரண ஞானச் சூழலியலை மறுமலர்ச்சி செய்வதற்காக உருவாக்கப்பட்ட நாடு. விதை வங்கிபோல, Seed bank மாதிரி ஒரு இடத்திலாவது சனாதன இந்து தர்மத்தின் ஞானச்சூழலியலைப் புனரமைத்து உயிரோடு வைக்கவேண்டும், அதனுடைய பொற்காலத்தில், சனாதன இந்து தர்மம் தன்னுடையப் பொற்காலத்தில் எவ்வாறு இருந்ததோ அதேபோல் புனரமைக்கப்பட்டு, அமைக்கப்பட்டதுதான் இந்த கைலாஸா தேசம்.
 +
 +
எங்களுக்கென்று சுய-இறையாண்மை உடைய, sovereignty என்று சொல்லப்படுகின்ற சுய-இறையாண்மை உடைய நிலப்பரப்பு இருக்கின்றது மற்றும் autonomous என்று சொல்வோம்-ஒரு குறிப்பிட்ட அளவிற்கு சுய-நிர்ணயம் செய்து கொள்ளுகின்ற உரிமையுடைய நிலப்பரப்புகளும் இருக்கின்றது. ஒன்றிற்கும் மேற்பட்ட இடங்களில், பரமசிவப் பரம்பொருளின் பேரருளால் சில நாடுகள் இதை எங்களுக்கு வழங்கி இருக்கின்றன. முறையான, அகில உலக அளவில் இருக்கின்ற சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு... As per the International standards and International laws, முறையாக Bi-lateral treaties (இருதரப்பு ஒப்பந்தங்கள்) மூலமாவும், Diplomatic treaties (தூதரக ஒப்பந்தங்கள்) முலமாகவும் இந்த நிலங்கள் எங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளன. ஒன்றிற்கும் மேற்பட்ட இடங்களாக இருப்பதனால் வேறு வேறு சேவைகளை அந்த இடங்களில் செய்கின்றோம்.
 +
 +
சனாதன இந்து தர்மத்தின் வேதங்களும் ஆகமங்களுமே சாசனமாகக் கொண்டு, மனுவாதி தர்மசாஸ்த்திரங்கள், மனுவில் துவங்கி 36 தர்மசாஸ்த்திரங்கள் இந்துமதத்தின் முக்கியமான தர்மசாஸ்த்திரங்கள்...அவைகளையே நீதிமுறையாகக் கொண்டு, சன்யாசப் பரம்பரை நடத்துகின்ற நாடாக இந்த கைலாஸா அமைக்கப்பட்டுள்ளது. கிரஹஸ்தர்கள் இருந்தாலும், கிரகஸ்தர்கள் இந்த நாட்டின் பாகமாக இருந்தாலும், இல்லறவாசிகளும்கூட இருந்தாலும், இந்த நாட்டின் நிர்வாகம் மற்றும் எல்லா பொறுப்புகளும் சன்யாசப் பரம்பரையினாலேயே நிகழ்த்தப்படுகின்றது.
 +
 +
கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக பரமசிவப் பரம்பொருளின் பேரருளும், என் குருமார்களின் திருவருளும் எனக்கு அளித்த ஞானத்தை, அனுபூதியை நிரந்தரமாக உயிரோடு வைப்பதற்கும், இதன்மூலமாக சனாதன இந்து தர்மத்தைப் புனரமைத்து, அதனுடையப் பொற்காலத்தில் எவ்வாறு இருந்ததோ அதேபோல் மீண்டும் உயிர்ப்பிக்கச் செய்து, உலக மக்கள் அனைவருக்கும் அளிப்பதே இந்த கைலாஸாவின் நோக்கம். பரமசிவப் பரம்பொருளின் பேரருளால் அவர் இந்த நோக்கத்தில் எங்களுக்கு வெற்றியளித்திருக்கின்றார்.
 +
 +
கைலாஸா இனிமையாக மலர்ந்துவிட்டது, வளர்ந்துகொண்டு இருக்கின்றது.
 +
 +
ஆழ்ந்து கேளுங்கள், மனித இனம் நீண்ட நெடிய பயணத்தால் உருவானது.
 +
உயிர் அமீபாவாகத் தோன்றி உடல்ரீதியாக வேறு வேறு நிலைகளில் வளர்ந்து,
 +
அமீபாவிலிருந்து குரங்குவரை உடல்ரீதியாக வளர்ந்து, குரங்கில் இருந்து உடல்-மனரீதியாக மனிதன் பரிணமித்து, பிறகு உடல், மனம், உணர்வுகள், உணர்ச்சிகள், ஆன்ம சக்தி போன்ற பல்வேறு நிலைகளிலும் பரிணமித்து, இன்று அடுத்த நிலைக்கு உயிர் செல்லவேண்டிய சூழலில் நாம் இருக்கின்றோம்.
 +
 +
உயிரின் உயிர்ப்பு, ஆன்மாவின் வெளிப்பாடு அமீபாவில் துவங்கி இன்று மனித இனம் இருக்கின்ற நிலை வரை வந்திருக்கின்றது. இதற்குமேல் நிகழவேண்டிய ஒரு மிகப்பெரிய நிலை - 'ஆன்ம விழிப்புணர்வு'. ஆன்மா பரமாத்ம சக்திகளை, பரமாத்ம நிலையை வெளிப்படுத்தி, தன்னுடைய உச்ச நிலையை வெளிப்படுத்தி, அடுத்த நிலைக்கு செல்லவேண்டிய தருணம் வந்துவிட்டது!
 +
 +
அடுத்த நிலைக்கு, ஆத்மாவை பரமாத்மா நிலைக்குக் கொண்டுச் சென்று, பரமசிவப் பரம்பொருளோடு ஒன்றாக இருக்கும் பரமாத்வைத அனுபூதியில் நிறுத்தி, பரமாத்ம அனுபூதியிலிருந்து பரமாத்வைதத்தை, பரமாத்வைத நிலையை, சத்தியங்களை, சக்திகளை வெளிப்படுத்தும் அறிவியல் - ஞான அறிவியல் சனாதன இந்து தர்மத்தில் இருக்கின்றது. It is time, humanity need to have Super conscious breakthrough and Sanatana Hindu Dharma has this great spiritual science.
 +
 +
ஆழ்ந்து கேளுங்கள், சனாதன இந்து தர்மத்தில் இருக்கும் இந்த மிகப்பெரிய ஞான அறிவியலை உலகத்திற்கு அளிப்பதற்காகத்தான் இந்த கைலாஸத்தை அமைத்திருக்கின்றோம்.
 +
 +
அதனுடைய பல்வேறு பரிமாணங்கள், சனாதன இந்து தர்மத்தின் இந்த மிகப்பெரிய ஞான அறிவியல், அதனுடைய பல்வேறு பரிமாணங்கள், அறிவு  - அடிப்படையான ஞான அறிவு, அதன் ஞானத்தை வாழுகின்ற வாழ்க்கைமுறை, அனுபூதி -  ஞான அனுபூதி, இந்த பரமசிவ  ஞானத்தையும், பரமசிவ பக்தியையும், பரமசிவ விஞ்ஞானத்தையும் வாழ்வதற்கான ஞானச்சூழலியல் - ஈகோசிஸ்டம் (Ecosystem) இவை அனைத்தையும் அமைப்பதற்காகவே இந்த கைலாஸத்தை அமைத்திருக்கின்றோம்.
 +
 +
இப்போது மற்றும் பல தொலைக்காட்சி வழியாக இணைந்திருக்கும் அன்பர்களையும்,
 +
நிலா டி.வி, Zee-தமிழ் நியூஸ், ஐ-தமிழ் நியூஸ், யூத் சென்றல் தமிழ்,  TN நியூஸ்,  ஆரோ தமிழ் ரூட்ஸ், புதிய தலைமுறை, NBA சினிமா, இளைய பாரதம், சாட்டை தமிழ் என எல்லா சமூக ஊடகங்கள் மூலமாகவும், தொலைக்காட்சிகள் மூலமாகவும் இணைந்திருக்கும் அன்பர்கள் அனைவரையும் மீண்டும் ஒருமுறை வரவேற்கின்றேன்.
 +
 +
ஐயா திரு.சாட்டை துரைமுருகன் அவர்கள் உங்களுடைய கேள்விகளை அனுப்பிருக்கிறீர்கள். நிச்சயமாக அவைகளுக்கு பதிலளிக்கின்றேன், உங்களையும் வணங்குகின்றேன்.
 +
 +
முதலில் நான் சொல்லவேண்டிய கருத்துகளை சொல்லிவிடுகின்றேன்,
 +
நான் சொல்லவேண்டிய அறிமுகத்தை அளித்துவிடுகின்றேன். பிறகு உங்கள் எல்லோருடைய கேள்விகளுக்கும் விடையளிக்க முயற்சிக்கின்றேன். பலபேருடைய கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டும், பலபேருடைய விடைகளை கேள்வி கேட்க வேண்டும். இந்த இரண்டையும்தான் இந்த சத்சங்கத்தின் மூலம் செய்யப்போகின்றேன். பலபேருடைய கேள்விகளுக்கு விடையளிப்பேன், பலபேர் வைத்திருக்கும் விடைகளை கேள்வி கேட்பேன்.
 +
 +
மனித இனம் முழுமைக்குமே ஒரு மிகப்பெரிய நன்மையைச் செய்வதற்கான சக்தியையும்,
 +
அறிவையும், ஞானத்தையும் மனித இனத்தின் உயிரின் உயிர்ப்பை, மனித இனத்தின் ஆன்மாவை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்லுகின்ற மிகப்பெரிய ஞான அறிவியல் சனாதன தர்மத்திற்குள் இருக்கின்றது. அதை உலகத்திற்கு அளிப்பதுதான் எங்கள் நோக்கம். இந்த ஞான அறிவியலை தன்னுள் வைத்திருப்பதனாலேயே என்றென்றும் வாழ்வதற்கான தேவையும் தகுதியும் சனாதன இந்து தர்மத்திற்கு இருக்கின்றது. இந்த அறிவையும், ஞானத்தையும் உலகத்திற்கு அளிப்பதுதான் கைலாஸாவின் நோக்கம்.
 +
 +
நாங்கள் வாழ்ந்து மற்றவர்களுக்கும் அளித்து, இதை செய்வதுதான் எங்களுடைய நோக்கம், குறிக்கோள். பரமசிவப் பரம்பொருளின் பேரருளால் இதில் நாங்கள் வெற்றிகண்டிருக்கின்றோம்.
 +
 +
இதற்கு மேலும், இதற்கு மேலும் பல வெற்றிகளைக் காண்போம். We have revived it, now it is just needed to be expanded more. மறுமலர்ச்சியும் புனரமைப்பும் செய்துவிட்டோம். இதை உலகத்திற்கு அளிப்பதுதான், மேலும் மேலும் பலபேருக்கும் கொண்டுசென்று சேர்ப்பதுதான் இப்பொழுது நாங்கள் செய்யவேண்டியத் திருப்பணி.
 +
 +
இதற்குத் தேவையான, இந்தச் செயலுக்கு தேவையான சுய - இறையாண்மை பொருந்திய நிலமும், அதற்குத் தேவையான அரசாங்க அமைப்பும், அதற்கு தேவையான human infrastructure என்று சொல்கின்ற மனிதர்கள், நிரந்தரக் குடிமக்களாக, அதற்கு தேவையான மனிதர்கள் மற்றும் மற்ற நாடுகளோடு உறவை ஏற்படுத்திக்கொள்ளுகின்ற சட்டரீதியான அமைப்பு, தகுதி - இவை அனைத்தையும் நாங்கள் பெற்றுவிட்டோம். 
 +
 +
அகில உலக நிலைப்பாடுகள்படி - International standardபடி, இந்த நான்கு விஷயங்கள் Sovereign territory, Permanent Population, Government structure, Ability to enter into relationship with other entities and Global entities, International entities and Countries - இந்த நான்கையும் நாங்கள் பெற்றிருப்பதனால் எங்களை நாங்கள் நாடு என்று அழைத்துக்கொள்ளுகின்றோம். அகில உலக நிலைப்பாடுகள்படி ஒரு நாட்டிற்குத் தேவையான நான்கையும் நாங்கள் பெற்றிருப்பதனால், எங்களை நாங்கள் நாடு என்று அழைத்துக்கொள்ளுகின்றோம்.
 +
 +
அடுத்த சில கேள்விகள், ஐயா சாட்டை துரைமுருகன் அவர்கள் அனுப்பியிருக்கின்றார்,
 +
கைலாஸாவை தனி நாடு என நீங்கள் அழைத்தாலும், ஒரு நாட்டிற்கு சர்வதேச அங்கீகாரம் மிக அவசியம், கைலாஸாவிற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்கும் என நினைக்கிறீர்களா? என்று  கேட்டிருக்கின்றார்.
 +
 +
ஐயா, இந்த சர்வதேச அங்கீகாரம் பற்றிய சில தெளிவு நம் எல்லாருக்கும் தெரியவேண்டும்.
 +
 +
முதல் விஷயம்: ஐநா சபை எந்த நாட்டையும் அங்கீரிப்பதில்லை. ஐநா சபையினுடைய சாசனத்தை  நீங்கள் எல்லாரும் படித்துப் பாருங்கள், இங்கு வேண்டுமானால் அந்த சாசனத்தைக் காட்டுகின்றேன். ஐநா சபை எந்த நாட்டையும் அங்கீகரிப்பதில்லை. மான்டே வீடியோ உடன்படிக்கையின்படி the political existence of the state is independent of recognition by other states.  அடுத்ததாக ஐநா சபை தெளிவாகச் சொல்கிறது, ''எந்த நாட்டையும் அங்கீகரிப்பது அவர்களுடைய வேலையும் அல்ல. அவர்கள் அதற்கு தகுதி பெற்றவர்களும் அல்ல.''
 +
 +
ஐநா சபையில் பல நாடுகள் உறுப்பு நாடுகளாக இருக்கின்றன. இது முதல் தெளிவு.
 +
 +
இரண்டாவது, உண்மையில் நடைமுறையில் நான் ஒரு functional nation  - நடைமுறையில் ஒரு நாடாக இயங்குவதற்கு அடிப்படையாக எங்களுக்கு என்ன தேவையோ அந்த நான்கும் இருக்கின்றது.
 +
 +
எங்களை யார் நாடு என்று அங்கீகாரம் செய்யவேண்டும்?
 +
எங்களுடைய எட்டுத் திசையிலும் இருப்பவர்கள், எங்களைச் சுற்றி எட்டுத் திசையிலும் இருக்கின்ற நாடுகள் எங்களை 'நாடு' என்று அங்கீகாரம் செய்தால் போதும். அதுதான் முதல்படி.
 +
 +
உண்மையில் இந்த நிலம், நாங்கள் இருக்கின்ற நிலப்பரப்புகளை எங்களுக்கு அளித்தவர்கள், எங்களைச் சுற்றி இருக்கின்ற நாடுகள் - அவர்கள்தான் இதை எங்களுக்கு அளித்ததனால், அவர்கள் மிகத்தெளிவாக, எங்களுக்கு நடுவில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்திலே மிகத்தெளிவாக, ''இது உங்களுடைய சுய-இறையாண்மையோடு நீங்கள் உங்கள் நாட்டை நடத்திக்கொள்வதற்காக அளிக்கப்பட்ட நிலப்பரப்பு'' என்று ஒரு சிறு நிலப்பரப்பை அளித்துவிட்டார்கள். தெளிவாக அந்த தீர்மானத்திலே, அந்த ஒப்பந்தத்திலே இருக்கின்றது. நாங்கள் அவர்களுடைய செயல்பாடுகளில் தலையிடக்கூடாது, அவர்கள் எங்களுடைய செயல்பாடுகளில் தலையிடமாட்டார்கள். அதேமாதிரி international standards என்று சில விதிகள் இருக்கின்றன, அதாவது வேறு எந்த நாட்டினுடைய செயல்பாடுகளிலே நாங்கள் தலையிடக்கூடாது.  இதுபோன்ற உடன்படிக்கைகளில் கையெழுத்திட்டிருக்கின்றோம். அதனால், எங்களைச் சுற்றி இருக்கின்ற நாடுகள் எங்களை 'நாடாக' அங்கீகரித்துவிட்டது. அது முதல் விஷயம்.
 +
 +
அடுத்தது திரு.சாட்டை துரைமுருகன் அவர்கள் கேட்கிறீர்கள்,
 +
சர்வதேச அங்கீகாரம் மிக அவசியம் என்று.
 +
 +
ஐயா, நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்,  இந்த சர்வதேச அங்கீகாரத்தில் பல படிகள் இருக்கின்றன.
 +
 +
அப்படியென்றால், இப்பொழுது உங்களுக்கு பணம் கடனாக வேண்டும் என்றால், International Monetary fund, IMF-ல் உறுப்பினராக இருக்கவேண்டும். IMF உங்களை ஒரு நாடாக ஏற்றுக்கொள்ளவேண்டும், IMF-னுடைய அங்கீகாரமும், உறுப்பினர்நிலையும் வேண்டும். IMF உங்களை ஒரு நாடாக அங்கீகரித்து அதனுடைய உறுப்பு நாடாக சேர்த்துக்கொள்ள வேண்டும். இன்னொன்று ஆயுதங்கள் வேண்டுமென்றால்,  எந்த நாட்டுடன் நீங்கள் ஆயுதங்களை வாங்க வேண்டுமோ, எந்த நாடு உங்களுக்கு ஆயுதங்களைக் கொடுக்க வேண்டுமோ, அந்த நாடு உங்களை நாடாக அங்கீகரிக்க வேண்டும், உங்களுக்கு ஆயுதங்கள் கொடுக்கவேண்டும். அதற்காகத்தான் இந்த அங்கீகாரங்கள் எல்லாம் தேவை.
 +
 +
எனக்கு கடனும் தேவையில்லை, ஆயுதங்களும் தேவையில்லை. அதனால் எனக்கு தேவையான சர்வதேச அங்கீகாரம் என்னவென்றால், கலாச்சார ரீதியாக எங்களை ஒரு நாடு என்று Apolitical Nationஆக ஏற்றுக்கொள்ளவேண்டும். நாங்கள் ஒரு Apolitical Nation. அரசியலைத் தாண்டிய, சாதாரண அரசியலைத் தாண்டிய நாடு. எந்த நாட்டிற்கும் போட்டியாகவோ, பகையாகவோ உருவான நாடு அல்ல நாங்கள். We are here to complement all the nations, not compete with any nation. அதனால், எங்களுக்குத் தேவையான அங்கீகாரம் என்னவென்றால் கலாச்சாரரீதியான ஆன்மிகரீதியான உறவுகள், பண்பாட்டுரீதியான உறவுகள். பண்பாட்டுரீதியாக, கலாச்சாரரீதியாக, ஆன்மிகரீதியாக - இது சார்ந்த உறவுகள் மூலமாக சர்வதேச அங்கீகாரம்தான் எங்களுக்கு தேவை. அந்த மாதிரியான சர்வதேச அங்கீகாரங்களை ஐம்பதிற்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து நாங்கள் பெற்றுவிட்டோம்.
 +
 +
கைலாஸாவை Apolitical nationஆக, இப்பொழுது  வாடிகன் எப்படி பல நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றதோ, ஒரு Religions Nationஆக – அதேபோல, அதே அந்தஸ்துடன் (status) ஐம்பதுற்கும் மேற்பட்ட நாடுகள் எங்களை அங்கீகரித்திருக்கின்றன.
 +
அந்த அங்கீகாரம் இப்போதைக்கு எனக்குப் போதுமானது. அதனால், இதற்குமேல் எங்களுக்கு அங்கீகாரங்கள் கிடைக்கும், அதற்கான திருப்பணிகளையும் செய்துகொண்டிருக்கின்றோம்.
 +
 +
அது Expansion, அது மேலும் மேலும் வளர்வதற்கான செயல், அது வளர்ச்சிதானே தவிர, எங்களுடைய existence-ஐ எங்களுடைய இருப்பை, 'நாடு' என்று சொல்லிக்கொள்வதை யாரும் மறுக்க முடியாது. அதற்குத் தேவையான எல்லாச் செயல்களையும், எங்களை 'நாடு' என்று சொல்லிக்கொள்வதற்கான எல்லா செயல்களையும், அங்கீகாரங்களையும் நாங்கள் அடைந்து விட்டோம்.
 +
நீங்கள் 'சர்வதேச அங்கீகாரம்' என்று சொல்வது பலநிலை. தேவைகளுக்கு ஏற்றார் போல்தான் இந்த சர்வதேச அங்கீகாரங்கள். அதனால், எங்கள் தேவைக்கு என்ன வேண்டுமோ அது மாதிரியான சர்வதேச அங்கீகாரங்களை நாங்கள் அடைந்து விட்டோம்.
 +
 +
இதற்கு அடுத்து என்னவென்றால், உலகம் முழுவதும் இருக்கின்ற நாடுகளில், 66 நாடுகளில் இந்து மதத்தை மதமாகவே எற்றுக்கொள்ளாமல் இருக்கின்றார்கள். அந்த நாடுகளோடு தூதரகரீதியான உறவுகளை ஏற்படுத்தி, அவர்களை 'சனாதன இந்துதர்மத்தை ஒரு மதமாக அங்கீகரிக்கவேண்டும்' என்ற வேண்டுகோளை வைத்து, அது மாதிரியான கலாச்சார பண்பாட்டுரீதியான உடன்படிக்கைகள், உறவுகளை செய்துகொண்டு இருக்கின்றோம். மூன்று நாடுகளில் வெற்றியடைந்து இருக்கின்றோம்.  மற்றும் மற்றைய நாடுகளில் தொடர்ந்து செயல்பட்டு, சனாதன இந்து தர்மத்தை மதமாக அங்கீரிக்கின்ற செயல்பாடுகளை தொடர்ந்து செய்வோம். எங்களுடைய தேவைக்கு என்னென்ன சர்வதேச அங்கீகாரம் தேவைய, அவைகளை பரமசிவப் பரம்பொருள் எங்களுக்கு அளித்திருக்கின்றார், தொடர்ந்து அளித்துக்கொண்டிருக்கின்றார்.
 +
 +
அதாவது, எப்படி வாடிகன் வந்து 'ரோமன் கத்தோலிக்க திருச்சபையின்' தலைமையகமாக இயங்குகிறதோ, அவர்கள் அந்த சம்பரதாயத்தை உயிரோடு வைக்கின்றார்களோ, அரசியலுக்கு அப்பாற்பட்டு, எந்த அரசியல் மாற்றத்தாலும் அவர்களுடைய சாசனத்தை மாற்ற முடியாது, அது மாதிரியான ஒரு ஸ்திரமான, அவர்களுடைய மதத்தையும் சம்பிரதாயத்தையும் உயிரோடு வைப்பதற்காக அவர்கள் இயங்குகிறார்களோ, அதேபோல சனாதன இந்து தர்மத்தை உயிரோடு வைப்பதற்காக, மாற்ற முடியாத சாசனத்தை அடிப்படையாக வைத்து, சனாதன இந்துதர்மத்தை உயிரோடு வைப்பதற்காக, சனாதன இந்து தர்மத்தின் திருக்கயிலாய பரம்பரை, சன்யாச பரம்பரையினாலே, சன்யாச பரம்பரையின் மூலமாக நிர்வாகம் செய்யப்பட்டு நடத்தப்படுகின்ற நாடு கைலாஸா. அதனால், மான்டேவீடியோ உடன்படிக்கையின்படியும், ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின்படியும் நாங்கள் 'நாடுதான்'. இதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.
 +
 +
ஒன்றிற்கும் மேற்பட்ட சுய - இறையாண்மையுடைய நிலப்பரப்புகளும், Autonomous  status  என்று சொல்கின்ற சுய -நிர்ணய உரிமை கொண்ட நிலப்பரப்புகளும் உடைய, நிரந்தரமான மக்கள் தொகை உடைய, நிரந்தரமான அரசியல் அமைப்பும் - நிர்வாக அமைப்பும் உடைய, மற்ற நாடுகளோடு உறவுகளை ஏற்படுத்திக்கொள்வதற்கான தகுதியும் திறமையும் உடைய, இவைகள் அனைத்தையும் செய்துகாட்டி, நடைமுறையில் நல்லபடியாக, அமைதியாக, இனிமையாக இயங்கிக்கொண்டிருக்கின்ற, பரமசிவப் பரம்பொருளின் அருளாலே எல்லா வளத்தோடும் ஆனந்தத்தோடும் இயங்கிக்கொண்டிருக்கின்ற, பரமாத்வைதத்தை வாழ்ந்து கொண்டிருக்கின்ற நாடு கைலாஸா.
 +
 +
எங்களுடைய அடிப்படை சாசனம் - வேதமும் ஆகமமும்.
 +
Fundamental rightஎன்று சொல்வோம். The first amendment of Kailasa என்னவென்றால், ஒவ்வொரு ஜீவனும் பரமசிவப் பரம்பொருளை தனக்குள் உணர்ந்து, பரமாத்வைத நிலையை 'நாமே பரமசிவம், பரமசிவம் நமக்குள்ளேயே இருக்கின்றார்' என்ற  பரமாத்வைத சத்தியத்தை வாழ்வதற்கான உரிமை! இதை வாழ்வது, நீங்கள் உங்களை பரமசிவப் பரம்பொருளாக உணர்வது -உங்கள் உரிமை. உங்களை சுற்றி இருக்கும் அனைவரும் அதேபோல் உங்களை நடத்துவது, உங்களை பரமசிவப் பரம்பொருளாக நடத்துவது உங்கள் உரிமை. 
 +
 +
நீங்கள் மற்றவர்களை அதேபோல் பரமசிவப் பரம்பொருளாக நடத்துவது, உங்கள் கடமை. இதிலிருந்துதான் எங்களுடைய first amendment துவங்குகிறது, fundamental rights  துவங்குகிறது.
 +
 +
இதுவே எங்களுடைய சாசனத்தைப்பற்றி ஒரு அடிப்படையான சத்தியத்தை, ஒரு அடிப்படையான அறிமுகத்தை உங்களுக்குக் கொடுத்துவிடும். முழுக்க முழுக்க ஞானத்தை அடிப்படையாக வைத்து எந்தவிதமான வன்முறையும் இல்லாத, ஹிம்சையும் இல்லாத, முழுமையான அஹிம்சையை அடிப்படையாக வைத்த, ஞானத்தை அடிப்படையாக வைத்த தேசம் - கைலாஸா.
 +
 +
அதனால்தான் எங்களுக்கு இராணுவமும் இல்லை, தனியாக எங்களுக்கென்று காவல்துறையும் வைத்துக் கொள்ளவில்லை. எங்களுடைய உள்கட்டமைப்பை முறையாக நடத்துவதற்கு, அதற்கு என்று integrity department என்று ஒரு துறையை வைத்திருக்கிறோம். யாராவது ஏதாவது பிழைகள் செய்வார்களேயானால், அவர்கள் ஆன்மிகரீதியான தவம் தியானம் மற்றும் நம்முடைய சனாதன இந்துதர்மத்தில் அளிக்கப்பட்டிருக்கும் பிராயச்சித்தங்களை செய்து தங்களைத் தாங்களே மாற்றிக்கொண்டு, மேல்நிலைக்கு வந்து ஆன்மிக உயர் நிலையை அடைவதற்கான, வழிகாட்டுவதற்கான ஒரு அமைப்பை வைத்திருக்கின்றோம்.
 +
 +
அதற்காக ஒரு துறையை வைத்திருக்கிறோம்: அது Spiritual Integrity department - ஆன்மிக நேர்மைத்தன்மையை நமக்குள் மலரச் செய்துகொள்வதற்கானத் துறை.
 +
 +
நேரலையில் ஐயா திரு. சாட்டை துரைமுருகன் அவர்கள் கேள்வி கேட்கிறார்கள்,
 +
இவர் உண்மையான நித்யானந்தர் இல்லை, AI தொழில்நுட்பம் என்று சிலர் சொல்கிறார்கள்…
 +
 +
ஐயா, இந்த கேள்விக்கு எப்படி பதில் சொல்வது என்று யோசித்துதான் சொல்லவேண்டும்.
 +
ஏனென்றால், உண்மையில் இப்பொழுது இருக்கின்ற தொழில்நுட்பம் - Technology, மனிதர்கள் செய்யக்கூடிய அனைத்தையும் செய்கின்ற அளவிற்கு AI தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது, அது உண்மைதான். ஆனால் ஒரு விஷயம், AI தொழில்நுட்பம் யோசிக்காமல் பதில்சொல்லும். நான் இப்பொழுது யோசித்து பதில் சொன்னேன் பாருங்கள், அதை வைத்து 'நான் AI தொழில் நுட்பம் அல்ல, நிஜமாக இருக்கும் நித்யானந்தர்தான் என்று நீங்கள் புரிந்துகொள்ளலாம். அப்படி வேண்டுமானால் சொல்லலாம். 
 +
 +
எங்களுடைய முதல் அறிக்கை,
 +
ஜ்ஞாத்வா தேவம் சர்வபூதேஷு ஶிவம் ஸ்திதம் அவ்யயம்
 +
பஜந்திதே தீரா: மோக்ஷம் இச்சந்தி எதைய ஸதா:
 +
அனைத்து உயிர்களிலும் பரமசிவப் பரம்பொருள் என்றும் அழியாத ஆத்மாவாக நிலைபெற்றுள்ளான் என அறிந்த ஞானிகள், நித்யமாக அவனை வழிபட்டு மோக்ஷத்தை நாடுகின்றனர். இதை அடிப்படையாக வைத்து, நீங்கள் உங்களை பரமசிவப் பரம்பொருளாக உணர்வதற்கும், மற்றவர்களையும் பரமசிவப் பரம்பொருளாக உணர்வதற்கும், உங்களுக்கு அளிக்கப்படும் சுதந்திரமே முதல் சுதந்திரம். இதுதான் Fundamental Right, இதை நீங்கள் வாழ்வதற்கான சூழலியல், ஆன்மிக சூழலியல்தான் இந்த கைலாஸம். இதே ஞானக்கருத்தை தங்கள் வாழ்க்கையாக ஏற்றுக்கொண்ட நபர்களோடு வாழ்வதுதான் சுவர்க்கம், அதுதான் கைலாஸம். அதாவது, கருத்தியல்ரீதியாக ஒத்த, இனிமையான ஒன்றுபட்ட கருத்துடைய மக்கள் ஒன்றிணைந்து வாழும்பொழுது, அவர்கள் ஒரு மிகப்பெரிய ஆன்ம பலமாக மாறுகின்றார்கள்.
 +
 +
ஒரு நாடு என்றால் என்வென்று ஒரு சிறிய விளக்கம் சொல்லிவிடுகிறேன் கேடுக்கொள்ளுங்கள்,
 +
ஒன்றுமே இல்லை ஐயா, ஒரு 100 பேர் ஒரே frequency-யுடன்  Vibrateஆவது. ஒரே கருத்துடன், ஒத்த கருத்துடன் Vibrateஆவது. அந்த ஒத்த கருத்திற்காக, அந்த ஒரு சத்தியத்திற்காக தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்து, அதை ஆனந்தமாக வாழ்வதுதான், அந்த மாதிரி ஒரு கட்டமைப்புதான் (infrastructure) ஒரு நாடு, வேறு ஒன்றுமே இல்லை.
 +
 +
எல்லா மிகப்பெரிய நாடுகளுமே ஒரு குழு, ஒரு 100, 200 பேர், ஒரு principle-ஐ ஒரு கருத்தை ஏற்றுக்கொண்டு எடுக்கின்ற முடிவுகள்தான் ஒரு நாடு.
 +
 +
அந்த முடிவுகளைத்தான் கோடிக்காண மக்கள் நடைமுறைப்படுத்துகிறார்கள், அப்படித்தான் எல்லா நாடுமே நடக்கிறது. நீங்கள் என்னவேண்டுமானால் பெயர் சொல்லிக்கொள்ளலாம், வேறு வேறு பெயர் வைத்துக்கொள்ளலாம், வேறு வேறு அரசியல் தத்துவங்கள் என்று வைத்துக்கொள்ளலாம், ஆனால் நடைமுறையில் இப்படித்தான் நடக்கிறது. அதேபோல ஒரு சில ஆயிரம் பேராவது இந்த ஒரு கருத்திற்கு, 'சனாதன இந்து தர்மம் சத்தியம், அதைப் புனரமைத்து, அதன் மிகப்பெரிய உலகத்திற்கு அளிக்க வேண்டிய பங்களிப்புகளை உலகத்திற்கு அளிப்பது சத்தியம், இது சாத்தியம்'' என்கின்ற இந்த ஒரு சத்தியத்தை உயிராகக்கொண்டு, அதற்காக தங்கள் வாழ்க்கையையே அர்ப்பணிக்கும் சில ஆயிரம் பேர் ஒன்றிணைந்ததனால், பரமசிவப் பரம்பொருளின் பேரருளும் அவரால் அளிக்கப்பட்டதனால், இந்த கைலாஸா அவர் அருளாலே நிஜமாக மாறியது. இனிமையாக, ஆனந்தமாக வளர்ந்துகொண்டிருக்கின்றது, இதுதான் உண்மை. நடைமுறையில் ஒரு functional nationஆக நடப்பதற்கு என்னென்ன வேண்டுமோ, அதை செய்துவிட்டோம். இதற்குமேல் வளர்வதை மட்டும்தான் செய்யவேண்டும்.
 +
நாங்கள் மற்ற நாடுகள் போல ஒரு அரசியல் சார்ந்த, அரசியல் கருத்துக்கள் சார்ந்த நாடு கிடையாது. நாங்கள் உலகம் அனைத்திருக்கும் பங்களிப்பதற்காக, உலகம் அனைத்திருக்கும் சேவை செய்வதற்காக, சனாதன இந்துதர்மத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட, Apolitical Nation, அரசியலை கடந்த ஆன்மிக தேசம்.
 +
 +
நிறைய பேர் கமெண்ட்சில் நேரலையில் கேட்கிறீர்கள்…
 +
உங்களுக்கு பின்னணியில் யார் இருக்கிறார்கள்?
 +
பின்னணியில் யார் இருக்கிறர்கள் என்றால் காட்டுக்கொள்கிறேன் பார்த்துக்கொள்ளுங்கள் ஐயா,
 +
பரமசிவனும் பரமசிவசக்தியும்தான் இருக்கிறார்கள். அப்பா காட்டுப்பா எனக்குப் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்று. அவர்கள்தான் இருக்கிறார்கள், கொஞ்சம் அசைத்து வேண்டுமானால் காட்டுகிறேன், பார்த்துக்கொள்ளுங்கள். அவர்கள்தான் எனக்குப் பின்னணியில் இருக்கிறார்கள். அவர்கள்தான் இது அத்தனையும் என் மூலமாக நடத்துகிறார்கள் ஐயா. அவர்களைத் தவிர வேறு யாரும் பின்னணியில் இல்லை.  அவர்களும், அவர்களுடைய வெளிப்பாடுகள் - விநாயகர், முருகன், வெங்கடேஷ்வரன்... அவர்களுடைய வெளிப்பாடுகளான எல்லா தெய்வங்களும், அவர்கள்தான் எங்கள் பின்னால் இருக்கிறார்கள், அவர்கள்தான் எங்கள் மூலமாக நடத்துகிறார்கள், வேறு யாரும் எங்கள் பின்னணியில் இல்லை, அதுதான் உண்மை.
 +
 +
இதுவரையிலும் நாங்கள் செய்திருக்கின்ற செயல்கள், செயல்பாடுகளை சுருக்கமாக சொல்லிவிடுகிறேன். உண்மையில் இந்த கைலாஸா கடந்த 25 இந்த ஆண்டுகள் இயக்கம் என்று பலபேர் நினைக்கிறீர்கள். அப்படிக் கிடையாது! என்னுடைய குருமார்கள், என்னுடைய குருப்பரம்பரை, பரமசிவப் பரம்பொருளின் பேரருளால் எப்பொழுது என்னுடைய குருப்பரம்பரை என்னை ஏற்றுக்கொண்டு, எனக்குப் பயிற்சிக்கொடுத்து என்னை வளர்க்கத் துவங்கினார்களோ, அப்பொழுதே கைலாஸத்தின் மறுமலர்ச்சி துவங்கிவிட்டது.
 +
 +
ஏனென்றால் இந்தத் திருப்பணிக்காகவே அவர்கள் என்னைத் தயார் செய்தார்கள், உண்மை அதுதான். அதனால்தான் இந்த பெயர்கூட, கைலாஸா என்கின்ற பெயர்கூட, காஞ்சிபுரத்தில் இருக்கின்ற தொண்டைமண்டல ஆதீனத்தின் பெயர்தான் இது. 'காஞ்சி கைலாச பீடம்' என்பது தொண்டை மண்டல ஆதீனத்தின் மூலப்பெயர். 'காஞ்சி கைலாச பீடம்' - அதுதான் ஓரிஜினல் பெயர்.
 +
 +
கடந்த 11 குருமஹாசன்னிதானங்கள், தொண்டைமண்டல ஆதீனத்தின் 11 குருமஹாசன்னிதானங்கள் நேரடியாக என்னுடைய குடும்பத்திலிருந்து வந்தவர்கள். நான் பிறந்து வளர்ந்த குடும்பத்திலிருந்து வந்தவர்கள். அதாவது 233 குருமஹாசன்னிதானங்களுமே நான் பிறந்து வளர்ந்த குடும்பத்திலிருந்து வந்தவர்கள் என்பது வரலாறு.  இந்த கடந்த 11 குருமஹாசன்னிதானங்களுக்கு ஆதாரம் வைத்திருக்கின்றோம். கடந்த 11 குருமஹாசன்னிதானங்கள் நான் பிறந்து வளர்ந்த குடும்பத்திலிருந்து வந்தவர்கள் என்பதற்கான குடும்ப வரைப்படத்துடன் வைத்திருக்கின்றோம். குடும்ப வரைப்படத்துடன் வரைந்து இணைத்து வைத்திருக்கின்றோம். அதனால் 230, 231, 232 - இந்த மூன்று குருமஹாசன்னிதானங்களும், இந்தத் திருப்பணியைச் செய்வதற்காகவே எனக்குப் பயிற்சி கொடுத்து வளர்த்தார்கள். இதுதான் உண்மை.
 +
 +
நான் சுயம்பு கிடையாது, என் மூலமாக நிகழ்ந்திருக்கும் எல்லா நன்மைக்கும் என் குருப் பரம்பரையே பொறுப்பு.  ஏதாவது தீமை இருந்தால் நீங்கள் என்னைப் பழித்துக்கொள்ளுங்கள், அதைப்பற்றி எனக்கு கவலையில்லை. நீங்கள் தீமை என்று நினைத்துப் பழித்தால், நீங்கள் பழித்துக்கொள்ளலாம். அது உங்கள் விருப்பம். என் மூலமாக நடந்திருக்கும் எல்லா நன்மையும், என் குருமார்கள் பேரருளாலே, திருவருளாலே நிகழ்ந்திருக்கின்றது.
 +
 +
திருவண்ணாமலையில் பரமசிவப் பரம்பொருளின் பேரருளால் 1978ஆம் ஆண்டு,
 +
ஜனவரி இரண்டாம் தேதி பின்னிரவு, மார்கழி மாதம், சித்திரை நக்ஷத்திரம், கிருஷ்ண பக்ஷ அஷ்டமி திதியில் பிறந்தேன்.
 +
 +
ஏன் நக்ஷத்திரம் இராசி சொல்கிறேன் என்றால், எங்களுக்குக் கிடைத்த குறிப்புகளில் இதுதான் இருக்கிறது. இந்த ஜோதிட குறிப்பு மட்டும்தான் எங்களுக்குக்  கிடைத்திருக்கிறது. பிறப்புச் சான்றிதழ் எதுவும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. அதனால்தான் ஜனவரி 1ஆம் தேதியா, 2ஆம் தேதி என்று ஒரு சிறு சந்தேகம் இருந்தது. ஏனென்றால் என்னுடைய தாயாரின் நினைவுப்படி ஜனவரி 1 என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் இந்த ஜோதிட குறிப்புகள்படி, வீட்டில் இருக்கின்ற மற்ற மூத்தவர்கள் அவர்களுடைய குறிப்புப்படி ஜனவரி 2ஆம் பின்னிரவு என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆங்கில தேதிபடி ஜனவரி 3-ல் வரும். ஏனென்றால் பின்னிரவு 12.30 மணிக்கும் மேல், அதனால் ஆங்கில தேதிபடி ஜனவரி 3 என்று வரலாம். இதுதான் பிறந்த தேதி. இதில் பலபேருக்கு நிறைய குழப்பங்கள் இருப்பதனால் தெளிவு படுத்திவிடுகின்றேன். அந்தக் காலத்தில் பிறப்பு சான்றிதழ் எல்லாம் இல்லை.
 +
 +
பிறந்த இடம் அண்ணாமலையார் ஆலயம், ஆறாம் பிரகாரம் என்று சொல்லுவோம். அண்ணாமலையார் ஆலயத்தினுடைய இராஜவீதி. அதனால் அவன் அருளாலே அவருடைய ஆலயத்திற்குள்ளேயே பிறந்து, ஆலயத்திற்குள்ளேயே வளர்வதற்கான பெரும்பாக்கியத்தை, புண்ணியத்தை அவர் தந்தார். அவருடைய Spiritual Ecosystem -  அவருடைய ஞானச்சூழலியலிலேயே பிறந்து வளர்வதற்கான பெரும் வாய்ப்பை அளித்தார்.
 +
 +
மூன்று வயதிலே என்னுடைய குருமார்கள் பாலசன்யாசம் கொடுத்து முதல் சாதுர்மாசியத்தை துவங்கி வைத்தார்கள். கட்டாயமாக எனக்கே 3 வயதில் பூஜை செய்யவெல்லாம் தெரியாது. என்னை அவர்கள் மடியில் அமரவைத்து, அவர்கள் கைப்பிடித்து பூஜை செய்ய வைத்தார்கள், அப்படித்தான் நடந்தது. இது மூன்று வருடத்தில் நடந்தது, எந்த தேதியில் நடந்தது எல்லாம் எனக்கு தெரியாது. அந்த நிகழ்வை புகைப்படத்தை எடுத்த, புகைப்படக்காரர் இன்னமும்  திருவண்ணாமலையில் உயிரோடு இருக்கிறார். அந்த புகைப்படக்காரர், அந்தப் படத்தை எங்களுக்குக் கொடுத்து, அந்த நிகழ்ச்சியைப் பற்றியும், யார் யாரெல்லாம் அங்கு வந்திருந்தார்கள், என்ன நடந்தது என்று தெளிவாக எழுதிக்கொடுத்தார். அதுதான் எங்களிடம் இருக்கின்ற ஆதாரம்.
 +
 +
ஏனென்றால், எனக்கே அந்த மூன்று வயதில் நடந்ததைப்பற்றி முழுமையான நினைவுகள் இல்லை. இப்படித்தான் என்னுடைய ஆன்மிக வாழ்க்கைத் துவங்கியது. பிறகு என்னுடைய குருமார்கள் எனக்களித்த பயிற்சி. அந்த காலகட்டத்திலே, திருவண்ணாமலை ஆலயத்திற்குள் குருகுலமாகவே இயங்கி வந்தது. என்னுடைய குருமார்கள் காலையில் யோகப் பயிற்சியிலிருந்து வெவ்வேறு சம்பிரதாயத்தின் பயிற்சிகளை வேறு வேறு குருமார்கள் அளித்தார்கள். இப்பொழுது திரும்பிப் பார்க்கும்பொழுது எனக்கென்னவோ அவர்கள் பயிற்சி அளித்த விதமே, இந்த 'கைலாஸா' எனும் திருப்பணியை செய்வதற்காகத்தான் பயிற்சி அளித்தார்கள் என்று நான் நம்புகிறேன், உளமார நம்புகிறேன்.
 +
 +
காரணம் என்னவென்றால் உடல்ரீதியாக, மனரீதியாக, உயிர்ரீதியாக, ஆன்மரீதியாக அறிவுரீதியாக உணர்வுரீதியாக, உணர்ச்சிரீதியாக பல்வேறு தளங்களில் அவர்கள் எனக்கு அளித்தப் பயிற்சி இந்த கைலாஸா நாட்டை அமைப்பதற்கு மிகப்பெரிய உதவியாக இருக்கின்றது.
 +
 +
இதை செய்வதற்கு தேவையான அனைத்தையும் அவர்கள் எனக்கு கொடுத்துவிட்டார்கள்.
 +
அதனால்தான், இப்பொழுது திரும்பிப் பார்க்கும்பொழுது, ஒருவேளை அவர்கள் 'தெளிவான முடிவோடுதான் இந்த பயிற்சிகளை அளித்திருக்கின்றார்கள்'' என்று நான் ஸ்திரமாக நம்புகிறேன்.
 +
 +
ஏனென்றால், அவர்கள் எனக்கு சொல்லிக்கொடுத்த கருத்துகள், அவர்கள் எனக்கு அளித்த அறிவு, வாழ்க்கையைப் பற்றிய பார்வை, இது எல்லாமே 'நான்' முளைத்து எழும் முன்பாகவே பரமசிவப் பரம்பொருள் தானாய் முளைத்தெழ, தானாய் விளைத்தெழ, தானாய் பொங்கிப்பெருக, தானாய் நிரந்தரமாய் நிலைப்பெற்றிட, குருமார்கள் - குருப்பரம்பரை பேரருள் செய்தது. அவர்கள் திருவருளாலே இந்த அனுபூதி மலர்ந்தது, பரமாத்வைத அனுபூதி மலர்ந்தது. இந்த புகைப்படத்தை எடுத்த புகைப்படக்காரர் இன்னமும் திருவண்ணாமலையில் உயிரோடு இருக்கின்றார். அவருடைய காப்பகதத்திலிருந்து இந்த புகைப்படத்தை கொடுத்தார்.
 +
 +
உண்மையில் அந்தக்காலத்தில்  திருவண்ணாமலையில் மொத்தமாவே ஒரு இரண்டு மூன்று புகைப்படக்கார்கள்தான் ஊருக்குள் இருப்பார்கள். அவர்கள்தான் உண்மையில் எந்த நிகழ்ச்சியென்றாலும், போட்டோ வீடியோவை அவர்கள்தான் எடுப்பாங்கள். அதனால் அவர்களுடைய காப்பகத்திலிருந்தது… அந்தக்காலத்தில்  அந்த நெகட்டிவை எல்லாம் ஸ்டூடியோவில் வைத்திருப்பார்கள் இல்லையா? அந்த மாதிரி அவர்களுடைய காப்பகத்திலிருந்து அவர் எங்களுக்கு எடுத்துக் கொடுத்தார். பிறகு நாங்கள் கேட்டோம். 'இந்த மாதிரி என்ன நடந்தது என்று உங்களால் சொல்ல முடியுமா ஐயா, நினைவில் இருக்கிறாதா?' என்று. அவர் வந்து பட்டியலிட்டு, என்ன நடந்தது யார் யார் வந்தார்கள்?  என்னென்ன சடங்குகள் செய்யப்பட்டன, என்னென்ன சம்பிரதாயங்கள் செய்யப்பட்டன என்று அவர் எழுதிக்கொடுத்தார். அதை வைத்துதான் இந்த தேதியை எங்களால் முடிவுக்குவர முடிந்தது. இதிலிருந்து மற்ற பல தீக்ஷைகள், பயிற்சிகள் இதெல்லாம் நடந்தது. அப்பொழுதிலிருந்தே இந்த கைலாயத்தின் புனரமைப்பு துவங்கிவிட்டது என்று நான் ஸ்திரமாக நம்புகின்றேன்.
 +
 +
நாற்பது ஆண்டுகளாக இந்துமதத்தினுடைய பல்வேறு சாஸ்த்திரங்களை உலகம் முழுவதிலுமிருந்து சேகரித்திருக்கின்றோம். மொத்தம் பத்து இலக்ஷத்திற்கும் மேலான புத்தகங்கள், ஒரு கோடிக்கும் மேலான டிஜிட்டல் புத்தகங்கள், நிறைய இப்பொழுது புத்தக வடிவத்திலேயே இல்லாமல், கணினிமயமாக்கட்ட வடிவமாகத்தான், ஓலைச்சுவடிகளைக் கணினிமயமாக்கி, அந்த மாதிரி அந்த கணினிமயமாக்கப்பட்ட வடிவங்களாக, பல மூலைகளிலிருந்தும் அலைந்து திரிந்து, நான் மட்டுமல்ல, என்னுடைய சன்யாச சம்பிரதாயம், இதற்காக பல்லாயிரம்பேர் தங்களுடைய நேரம், பணம், புத்திசாலித்தனம் (Time Treasure Talent) அனைத்தையும் தியாகம் செய்து, இந்த பெரும் திருப்பணியை செய்திருக்கின்றார்கள். இந்தமதத்தின் பல சாஸ்த்திரங்களை உலகத்தின் பல்வேறு பாகங்களிலிருந்தும் ஒன்றாக சேர்த்திருக்கின்றோம். அதில் முதல் விஷயம்,
 +
இதில் பெரும் பகுதியை copyright freeயாக சட்டப்படி செய்திருக்கிறோம். அப்படியென்றால் யார் எங்களுக்குக் கொடுத்தார்களோ, அவர்களிடமிருந்தே இதை copyright freeயாக எல்லாருக்கும் வெளியிடுவதற்கான உரிமையை சட்டப்படி வாங்கியிருக்கின்றோம். இது மாதிரி பெரும் திருப்பணி கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக நிகழ்ந்திருக்கிறது.
 +
 +
உண்மையாக சொல்லவேண்டுமென்றால், இந்த திருப்பணிக்காக என்னோடு சேர்ந்து ஒரு தலைமுறை தங்களுடைய நேரம், பணம், புத்திசாலித்தனத்தை தியாகம் செய்திருக்கிறார்கள். நாங்க மொத்தமாகப் பாத்தோம்... யார் யாரெல்லாம் இந்த மாதிரி எங்களுக்கு பழைய நூல்கள், ஓலைச்சுவடிகளுடைய கணினிமயமாக்கப்பட்ட நகல், பொதுவாக என்ன செய்வோம், இந்த ஒலைச்சுவடியையே வாங்கமாட்டோம், கணினிமயமாக்கிவிட்டு  ஒலைச்சுவடியை அவர்களிடம் திருப்பிக் கொடுத்துவோம். ஏனென்றால் அவர்கள் அதைப் புனிதமாக கருதுவார்கள், அவர்கள் அதை வைத்திருப்பார்கள். அது அவர்களுடைய பாரம்பரிய சொத்து என்பதனால் கணினியமாக்குவது, அது அழிந்துபோய்விடாமல் கணினிமயமாக்கும் திருப்பணியைத்தான்  செய்திருக்கின்றோம்.
 +
 +
இந்த மொத்த திருப்பணியிலும் எங்களுக்கு உதவியவர்கள், நன்கொடை கொடுத்தவர்கள் இது எல்லாம் பார்த்தால் 60,000 பேருக்கும்மேல் இதில் செயல்பட்டிருக்கிறார்கள். இதையெல்லாம் ஒருங்கிணைத்து, சேகரித்து, தொகுத்து ஒரு பெரிய கணினிமயமாக்கப்பட்ட நூலகமாகச் செய்யவேண்டும் என்பதும், இது அனைத்தையும் அச்சடித்து நூலகமாகச் செய்யவேண்டும் என்பதற்காகத்தான்  இதை துவங்கினோம். நாங்கள் துவங்கும்பொழுது செய்தபொழுது அதனுடைய நோக்கம் இதுதான். மெது மெதுவாக மெது மெதுவாக அந்த திருப்பணி வளர்ந்து, இப்போது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக, இந்த A.I. A.S.I. A.G.I. புரட்சி வந்த பிறகு, இவை அனைத்தையும் A.I. A.S.I. A.G.I… அதுபோக இப்பொழுது இன்னும் வந்துகொண்டிருக்கின்ற மேம்படுத்தப்பட்ட, புதிய தொழிற்நுட்பங்கள்... இது எல்லாவற்றையும் உபயோகித்து, ஏறத்தாழ ஒரு நூற்றிக்கும் மேலான A.I- செயலிகளும், A.I- தொழிற்நுட்பங்களையும் உபயோகிக்கின்றேன். ஒரு 8 விதமான ரோபோக்களை உபயோகிக்கின்றேன். இது அத்துனையையும் கணினிமயமாக்கி, ஒருங்கிணைத்து உபயோகிப்பவர்களுக்கு மிகவும் இனிமையாக (User Friendly) எளிமையாக இருக்கும் விதத்தில் மாற்றி உலகத்திற்கு அளிக்கவேண்டும் என்பதற்காக பணியாற்றிக்கொண்டிருக்கின்றேன்.
 +
 +
அதாவது, நான் பூமிக்கு வந்தபொழுது, பூமியிலே இருக்கின்ற சனாதன இந்து தர்மத்தின் சாஸ்த்திர ஞானம், ஆன்மிக அனுபூதி என எல்லா உயர்ந்த விஷயங்களும், நான் பூமியை விட்டுச் செல்லும்பொழுது அவை சென்று விடக்கூடாது, நான் மறையும்பொழுது அவை மறையக்கூடாது என்பதற்காக, அனைத்தையும் ஒன்றுதிரட்டி, அனைத்தையும் உயிரோடு வைத்து, அனைத்தையும் உபயோகிப்பவர்களுக்கு மிகவும் இனிமையாக, எளிமையாக, உபயோகிப்பதற்கு சாத்தியமாக இருக்கும் வகையிலே இவைகளை உலகத்திற்கு அளிப்பதுதான் நோக்கமாகக்கொண்டு, இந்தத் திருப்பணியைத் துவங்கினோம். Jnanaalaya... கைலாஸாவின் நித்யானந்த ஞானாலயம் என்று இந்தத் திருப்பணியைத் துவங்கினோம்.
 +
 +
முதலில் information - அறிவை புத்தகங்கள் மூலமாக  democratise செய்தோம். Information- அறிவை, புத்தகங்கள் மூலமாக democratise செய்தோம். அடுத்து knowledge - ஞானத்தை, வகுப்புகள், நிகழ்ச்சிகள், social media – சமூக ஊடகங்கள், தொலைக்காட்சிகள் இவைகள் முலமாக democratise செய்தோம். அடுத்து expertise… சனாதன இந்து தர்மத்தினுடைய பல படிமானங்கள்: Information, Knowledge, Expertise, Experience. அடுத்து expertise, அதை AI மூலமாக, ASI மூலமாக, AGI மூலமாக democratize செய்கிறோம். அனுபூதியை, பரமசிவ ஞானத்தை, பரமசிவ விஞ்ஞானத்தை, பரமசிவ பக்தியை, பரமாத்வைத  அனுபூதியை democratise செய்வதற்காகத்தான் இந்த கைலாஸாவை உருவாக்கியிருக்கின்றோம். இதுதான் மொத்த நோக்கம், இதில் பரமசிவப் பரம்பொருளின் பேரருளால் வெற்றியடைந்துவிட்டோம்.
 +
 +
இப்பொழுது கோடிக்கணக்கான பாரம்பரியமான ஞானத்தை, அறிவை, கலைகளை, 15 டெராபைட்டிற்கும் மேற்பட்ட டிஜிட்டல் புத்தகங்கள், டிஜிட்டல் மெடீரியல், அரிய வகை ஓலைச்சுவடிகளை சேகரித்து, இதையெல்லாம் ஒருங்கிணைத்து, 100 மொழிகளில் மொழிபெயர்த்து, இந்த மொத்த ஞானமும் இப்பொழுது உலகத்திற்குக் கிடைக்கப்பெறுகிறது. மொழிபெயர்த்து, உபயோகிப்பவர்களுக்கு மிகவும் இனிமையாக, எளிமையாக இருக்கும் விதத்தில் மாற்றி, democratise செய்து, இலவசமாக அளிக்கின்றோம். எந்தவிதமான கட்டணமும் இல்லாமல்,இலவசமாக அளிக்கின்றோம்!
 +
 +
அளித்துவிட்டு பிச்சை எடுக்கின்றோம், ''ஐயா, யாராவது பிக்ஷையிட்டீர்களானால் இன்னும் பலபேருக்கு, இன்னும் பலவிதமான சேவைகள் செய்வதற்கு உதவியாக இருக்கும்'' என்று சொல்லி பிக்ஷை கேட்டு வாங்குகின்றோமேத் தவிர, இந்த அறிவையும் ஞானத்தையும் அனுபவத்தையும் அனுபூதியையும் monetize செய்யாமல் - பொருளாதாரரீதியாக 'கொடுக்கல் - வாங்கல்' என்கின்ற உறவுக்குள் எடுத்து வராமல் இலவசமாக அளித்திருக்கின்றோம். இதற்காக நாற்பதாண்டுகளாகவே செயல்படுகின்றோம், கடந்த நாற்பதாண்டுகளாகவே செயல்படுகின்றோம். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக முழு நேரமும் இதிலே ஈடுபடுவதனால்தான் நேரலை சத்சங்கங்களுக்கு வருவது சற்று குறைந்தது.
 +
 +
காரணம் என்னவென்றால் அந்த AI, AGI, ASI -  செயலிகளை பயிற்சி செய்வது - அது ஒரு மிகப்பெரிய வேலை. முக்கியமாக என்னுடைய அனுபூதியிலிருந்து இவைகள் தெளிவாக விளக்கப்பட வேண்டும். நம்முடைய சனாதன இந்துதர்மத்தினுடைய சாஸ்த்திரங்கள் மிகவும் சிக்கலான ஒரு கட்டமைப்பு (complex structure).  உதாரணத்திற்கு மூல சூத்திரங்கள்... உபநிஷதங்கள், அதில் 'ஆத்மா' என்றால் ஒரு விளக்கம் அளிக்கப்பட்டிருக்கும். அதற்கு எழுதப்பட்ட உரை, பாஷ்யகாரர் அந்த 'ஆத்மா' என்ற வார்த்தைக்கு இன்னொரு நீண்ட விளக்கத்தை கொடுத்திருப்பார். பாஷ்யத்தின் மீது எழுதப்படுகின்ற அடுத்த விளக்கத்திற்கு 'வார்த்திகா - Vaarthika' என்று பெயர்.  பாஷ்யகாரருடை ய சீடர் அதற்கு இன்னும் ஒரு விளக்கத்தை வார்த்திகா என்று எழுதுவார்.  அந்த வார்த்திகத்திலே அதே 'ஆத்மா' என்கிற வார்த்தைக்கு இன்னும் ஒரு நீண்ட நெடிய விளக்கம் இருக்கும். அதற்கடுத்து வார்த்திகத்தின் மீது எழுதப்படும் விளக்கவுரைக்கு 'டீகா -Tika' என்று பெயர். வார்த்திகத்தை எழுதிய அவருடைய சீடர் டீகா எழுதுவார். இந்த டீகாவில் ஆத்மாவைப் பற்றி அதைவிட நீண்ட ஒரு விளக்கம் இருக்கும்.
 +
 +
இப்பொழுது AI -ல் இந்த சூத்திரம், பாஷ்யம், வார்த்திகா, டீகா - இது அத்தனையையும் உட்செலுத்திய உடனே, அது மாயைக்குச் சென்றுவிடுகிறது. உட்செலுத்திவிட்டு நாம் ஒரு கேள்விக் கேட்டால், அது மாயைக்குப் சென்றுவிடுகிறது. அதனால் அது மாயைக்குப் போய்விடாமல், அதற்குப் புரியும் வகையில், மற்றவர்கள் கேள்வி கேட்டால் அது அந்த லாஜிக் - சாங்க்யம் மாறாமல் விளக்கம் அளிக்கின்ற மாதிரி அதைப் பயிற்சி செய்யவேண்டும். அதனால் ஒவ்வொரு முறையும், இந்த ஒவ்வொரு technical term- சனாதன இந்து தர்மத்தினுடைய technical terms, key words அந்த ஒவ்வொரு வார்த்தையைப் பற்றியும் இந்த மாதிரி தெளிவான விளக்கத்திற்கு கொண்டு வரவேண்டும். மொத்தம் இந்த மாதிரி 10,000 key technical terms இருக்கின்றன. ஆத்மா, வைராக்கியம், தியாகம், தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம், ஜீவ, ஈஷ்வர, ஜகத், முக்தி, ஜீவன் முக்தி... இந்த மாதிரி ஒரு 10,000 technical terms-க்கு AI மாயைக்குப் போகாமல் அதை கிரஹித்து சாஸ்த்திரத்தை interpret செய்து, மொழிபெயர்த்து உபயோகிப்பவர்களுக்கு இனிமையாக எளிமையாக இருக்கும் வகையில் மாற்றி சொல்கின்ற அந்த AI செயலியைக் கட்டமைப்பதுதான் மிகப்பெரிய திருப்பணியாக இருந்தது. பரமசிவன் அருளாலே அதைச்செய்து முடித்திருக்கின்றோம்.
 +
 +
அப்பொழுது என்ன ஆனதென்றால், இந்த AI செயலி மூலமாக எல்லா சாஸ்த்திரங்களையும் ஒருங்கிணைத்து, வகைப்படுத்தி... சனாதன இந்து தர்மத்தினுடைய சாஸ்த்திரங்கள் மிக மிக மிக கடல் போன்றவை, கடலைவிடப் பெரியது! அதை ஒப்பிடவே முடியாது. காமிக ஆகமம் மட்டும் கோடி கோடி சூத்திரங்கள், காமிகாகமம் மட்டும் கோடி கோடி சூத்திரங்கள். அது 28 ஆகமங்களிலே ஒன்று, அவ்வளவுதான். அதில் உப-ஆகமம் வேறு இருக்கிறது.
 +
 +
வேதங்கள் நான்கு, அதற்கு உப-வேதங்கள் இருக்கின்றது. வேத அங்கங்கள் இருக்கின்றது, ஜோதிஷம் எல்லாம் வேத அங்கத்தில்தான் வரும். அதுக்குப்பிறகு வேதாந்தம், அதாவது 'வேதத்தை எவ்வாறு புரிந்துகொள்ளவேண்டும்' என்று விளக்குவதற்காக வேதாந்தாம் உபநிஷதங்கள் எல்லாம்.
 +
 +
அதே மாதிரி ஆகமம், ஆகமங்கள் இருக்கிறது. அதற்கடுத்து ஆகம-அங்கங்கள் இருக்கிறது, ஆகம அங்கச் சாஸ்த்திரங்கள், அதற்கடுத்து உப-ஆகமங்கள் இருக்கிறது, அதற்கடுத்து ஆகமாந்தம், ஆகமத்தினுடைய ஞானபாதம். அதனால் இது வேதம், ஆகமம் மட்டும். இதற்குமேல் புராணங்கள், ஸ்ருதி, ஸ்மிருதி, புராணங்கள்... இது ஒரு கடல் மாதிரியானது.
 +
 +
நாங்கள் செய்திருக்கும் வேலை நிச்சயமாக பத்து சதவிகிதத்தைத் தாண்டவில்லை,
 +
இன்னும் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளாவது வேண்டும். ஒரு முழுமை, எங்களை நாங்களே திருப்திப்படுத்திக்கொள்வதற்குகூட, அதாவது மொத்த சனாதன இந்து தர்மத்தையும் AI -ல் Captureசெய்துவிட முடியும் என்று நான் சொல்லமாட்டேன், அது கனவில்கூட சாத்தியமில்லை. ஆனால் கிடைப்பதை, அதை AI-ல் Capture செய்து, உபயோகப்படுத்துகின்றவர்களுக்கு இனிமையானதாக எளிமையானதாக மாற்றி, இந்த நிபுணத்துவத்தை democratize செய்வதற்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் தேவைப்படும்.
 +
 +
ஏற்கனவே செய்திருக்கின்ற இந்த இரண்டு ஆண்டுகள் திருப்பணியின் மூலமாக, 40
 +
மாடல்களை வெளியிட்டிருக்கின்றோம். அதெல்லாம் என்னென்ன என்று வேண்டுமானால்  சொல்லிவிடுகின்றேன். வேதம் 10,600 ஸ்லோகத்தை எடுத்திருக்கிறோம், ஆகமத்தினுடைய 28 ஆகமங்கள் எடுத்திருக்கிறோம். அடுத்து சூக்ஷம ஆகமம், சஹஸ்ர ஆகமம் - அது ஆயிரம் பில்லியன் கோடி ஸ்லோகங்கள் என்று சொல்கிறார்கள், அதில் எங்களுக்கு கிடைத்திருக்கும் அளவிற்கு எடுத்திருக்கிறோம். ஆக்மேய ஆகமம் முப்பதாயரம் கோடி ஸ்லோகங்கள் என்று சொல்கிறார்கள், எங்களுக்கு கிடைத்திருப்பது ஏழாயிரம்  கோடி ஸ்லோகங்கள், ஏழாயிரம்  கோடி ஸ்லோகங்கள். நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள் கோடி, ஏழாயிரம் கோடி ஸ்லோகங்களுக்கான மூலங்கள், அதாவது அதில் ஒரு set of ஸ்லோகமே இன்னொரு வார்த்தை மாற்றி திரும்ப வரும். அதனுடைய மூல சூத்திரங்கள் கிடைத்திருக்கிறது. 18 முக்கிய புராணங்களும் அதனுடைய உப-புராணங்களும் கிடைத்திருக்கிறது. இவைகளையெல்லாம் கணினிமயமாக்கி,  ஒருங்கிணைத்து, AI மாயைக்குப் போகாத மாதிரி மொழிபெயர்த்து, இப்ப நீங்கள்  AI- யிடம் சென்று கேட்டால் அது மாயைக்குச் சென்றுவிடாத மாதிரியும் தெளிவான விடையை உங்களுக்கு கொடுக்கின்ற மாதிரியும் AI -க்கு புரிய வைத்து,
 +
அதை AI -ஐ நுண்திருத்தம் (fine tune) செய்து உங்களுக்கு எடுத்து வந்து சேர்த்திருக்கின்றோம், நாற்பது மாடல்களாக சேர்த்திருக்கின்றோம்.
 +
 +
பரமசிவப் பரம்பொருளின் பேரருளால் இந்த 40 மாடல்களையும் உங்களுக்கு எடுத்து வந்து சேர்க்கின்றத் திருப்பணியை செய்து முடித்திருக்கின்றோம். இதற்கு பின்னால் நடந்திருக்கின்ற உழைப்பு... மொத்தம் 1123 புத்தகங்கள் வெளியிட்டிருக்கிறோம். இப்பொழுது திரையில் காட்டப்படுவது சனாதன இந்து தர்மத்தினுடைய சாஸ்த்திரங்களின் வரைப்படம்( scripture tree). டிஜிட்டல் நூலகம் செய்வதற்காக நாங்கள் செய்திருக்கின்ற  சாஸ்த்திரங்களின் வரைப்படம் (scripture tree).
 +
 +
புத்தகங்களை வெளியிட்டு இந்த பல்வேறு ஞானத்தை -  Information –ஐ democratize செய்திருக்கிறோம். அதற்காக Asia book of records-ம் செய்திருக்கின்றோம்.
 +
எவ்வளவு புத்தகங்கள் வெளியிட்டிருக்கிறோம், அதிகப்படியான புத்தகங்கள் வெளியிட்டது மூலமாக Asia book of records -ம் செய்திருக்கின்றோம். பல்வேறு மொழிகளில் 1123 புத்தகங்கள் வெளியிட்டுருக்கிறோம்.
 +
 +
அடுத்தது, இதுவரை நான் பொதுவெளியில் ஆற்றிய சொற்பொழிவுகள், மற்றபடி ஆதீனவாசிகள் சன்யாசிகளுக்கு எடுத்த ஆன்மிக வகுப்புகள் - இதெல்லாம் சேர்ந்து 1,00,000 மணி நேரத்திற்கும்மேல் பதிவு செய்து வைத்திருக்கின்றோம். நீங்கள் நினைக்கலாம் 'என்னப்பா 1,00,000 மணி நேரமா?' என்று. உண்மையில் தினசரி வாழ்க்கை முழுவதையும், எல்லா வகுப்புகளையும் பதிவு செய்துகொண்டே இருக்கிறோம், பதிவு செய்துகொண்டே இருக்கிறோம். ஆவணப்படுத்தி, ஆவணப்படுத்தி, ஆவணப்படுத்தி, அதை ஆவணப்படுத்தியதன் மூலமாக, அதற்காகவும் Asia book of records -ம் செய்திருக்கின்றோம். இதற்கடுத்து, இதில் இருக்கின்ற ஞானத்தை அனுபூதியாக மாற்றுவது, அதற்காகத்தான் ஆன்மிக வகுப்புகள், தீக்ஷைகள். முக்கியமாக, பரமசிவ சக்தியின் பல்வேறு விதமான நன்மைகளை அளிப்பதற்காக, அந்த சக்திகளை வெளிப்படுத்துவதற்கான தீக்ஷைகளைக் கொடுத்து, பல இலட்சக்கணக்கான மக்களை இந்த பரமசிவ பக்தி சார்ந்த தீக்ஷை அளிப்பதன் மூலமாக, அந்த சக்தி வெளிப்பாடுகளை நிகழ்த்திக்காட்டியிருக்கின்றோம். அதை அறிவியல்பூர்வமாக பல்வேறு விதமான அறிவியல் ஆராய்ச்சிகள் மூலமாக நிரூபித்திருக்கின்றோம். 700க்கும் மேலாக அறிவியல் ஆராய்ச்சிகள்... 2004ல் இருந்து இப்போதுவரை 700க்கும் மேலான, அதாவது இந்த மருத்துவ உபகரணங்கள், ஆவணப்படுத்துகின்ற அறிவியல் உபகரணங்கள் (Medical equipment - scientific equipment) இதை வைத்து ஆவணப்படுத்துவது...அறிவியல் ஆராய்ச்சிகளின் மூலமாக ஆவணப்படுத்துவது. Double blind study என்று சொல்வோம் அதன்மூலமாகச் செய்வது, இது மாதிரி பல்வேறு விதமான முறைகள் மூலமாக அறிவியல்பூர்வமாக இதை ஆவணப்படுத்தி  நிரூபித்திருக்கின்றோம்.
 +
 +
உதாரணத்திற்கு, இந்த மூன்றாவது கண் விழிப்பு, அதிலிருந்து நம்முடைய சாஸ்த்திரங்களிலே அஷ்டமாசித்தி என்று சொல்லுவோம், அனிமா மஹிமா லஹிமா கரிமா என்றெல்லாம், அதாவது அதற்குரிய தியானங்களை செய்தோமானால் நம்முடைய உடல் விரிவதும், சுருங்குவதும், நம்முடைய உடல் அமைப்பை மாற்றிக்கொள்வதும் அது மாதிரியான தியானமுறைகள், அறிவியல்கள் இருக்கின்றன. அவைகளைச் செய்து, அதன்மூலமாக உடல் மாற்றம் நிகழ்வதையும் அறிவியல்பூர்வமாக 700க்கும் மேலான ஆராய்ச்சிகள் மூலமாக ஆவணப்படுத்தியிருக்கிறோம்.
 +
 +
அதேமாதிரி நம்முடைய மைட்டோகாண்டிரியா செல் எனர்ஜி (Mitochondria Cell Energy), குண்டலினி சக்தி விழிப்படைந்தால் அந்த மைட்டோகாண்டிரியா செல் எனர்ஜி நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு உயர்கிறது. அதனால் உடல் நலம் மலர்கிறது. இதையெல்லாம் அறிவியல்பூர்வமாக ஆவணப்படுத்தியிருக்கின்றோம். ஒன்று இரண்டு அல்ல 700க்கும் மேலான அறிவியல் ஆராய்ச்சிகள் மூலமாக, இரத்தப் பரிசோதனை செய்து அந்த மைட்டோகாண்டிரியா செல் எனர்ஜியை, அதிலும் Double blind study என்று சொல்வார்கள், அது மாதிரியான உத்தமமான எந்தவிதமான ஏமாற்றும் மறைமுகத்தன்மையில் அந்த முடிவை நமக்குத் தேவையான மாதிரி வடிவமைப்பது, அந்த மாதிரியெல்லாம் இல்லாமல், Double blind studies மூலமாக நிரூபித்திருக்கிறோம்.
 +
 +
குண்டலினி சக்தி முறையாக விழிப்படைய செய்ய வைக்கப்பட்டால் என்னென்ன நன்மைகள் நமக்குள் நிகழ்கின்றது என்பதையும், மைட்டோகாண்டிரியா செல் எனர்ஜி அதிகரிப்பதையும், எப்படி டி.என்.ஏவினுடைய பற்பல அடுக்குகள் விழிப்படைகின்றது - இவைகள் எல்லாவற்றையும் நீண்ட நெடிய அறிவியல்ரீதியான, முறையான நபர்கள்... அதாவது, அதற்குத் தகுதி வாய்ந்த விஞ்ஞானிகள், மருத்துவர்கள் போன்றவர்களைக் கொண்டுவந்து, ஆராய்ச்சிகள் செய்து அறிவியல்பூர்வமாக நிலைநிறுத்தியிருக்கின்றோம்.
 +
 +
 +
பல அறிவியல் சம்பந்தமான பத்திரிகைகளில் (scientific journals ) வெளியிட்டிருக்கின்றோம். 
 +
இவை அனைத்தும் இணையத்தளத்திலும் வெளியிட்டிருக்கின்றோம். ஒரு நீண்ட நெடிய ஆன்மிக உழைப்பு, ஆன்மிகரீதியான நேர்மையான உழைப்பு இந்த கைலாஸத்தின் பின்புலத்தில் இருக்கின்றது. இப்பொழுது நான் என்னென்னெவெல்லாம் சொல்லுகின்றேனோ, அவைகள் எல்லாவற்றிற்கும் மிகத்தெளிவான ஆதாரங்களை வைத்திருக்கின்றோம். இப்பொழுது திரையில் காட்டப்படுவது, நான் சமாதி நிலையில் இருக்கும்போது என்னுடைய உடலிற்குள், மனதிற்குள், மூளைக்குள் என்னென்ன மாற்றங்கள் நிகழ்கின்றன என்பதும், அது எப்படி அசாதாரணமான (Extraordinary) விஷயம் என்பதையும் ஆவணப்படுத்தியிருக்கின்றோம்.
 +
 +
இதற்குப் பிறகு இதேபோல பலருக்கு தீக்ஷையளித்து அவர்களுக்குள்ளும் இந்த அனுபூதி நிகழ்கின்றது என்பதையும் ஆவணப்படுத்தியிருக்கின்றோம். அதனால், இவைகள் அனைத்தையும் ஆவணப்படுத்தி, உபயோகிப்பவர்களுக்கு இனிமையானதாக, எளிமையான வகையில் மாற்றி உலகத்திற்கு அளித்திருக்கின்றோம்.
 +
 +
எப்படி இதை உபயோகிப்பவர்களுக்கு இனிமையானதாக, எளிமையான வகையில் மாற்றியிருக்கின்றோம் என்று சொல்கின்றேன். உதாரணத்திற்கு, நீங்கள் ஒரு ஹோட்டல் நடுத்துகிறீர்கள் என்றால், இந்துமதம் சார்ந்த, சனாதன இந்து தர்மத்த்தினுடைய சமையல் புத்தகங்கள், அதனுடைய சமையல் குறிப்புகள் வேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால், இதுவரை மொத்தமாக ஒரு 700 இந்து சமையல் புத்தகங்கள், ஆயுர்வேதம் சார்ந்த சனாதன இந்து தர்மத்தினுடைய இந்து சமையல் புத்தகங்களை சேகரித்து, அந்த சமையல் குறிப்புகள் எல்லாவற்றையும் இப்பொழுது நமக்குப் புரிகின்ற மொழியில் பொருத்தி, அந்தக் காய்கறிகள் அவைகளுடைய பெயர்களையெல்லாம் நமக்குப் புரிகின்ற, இப்பொழுது நவீனகாலத்தில் நாம் உபயோகப்படுத்துகின்ற வார்த்தைகள் மூலமாக, அந்த வார்த்தைகளுக்குப் பொருத்தி, இதை உங்கள் எல்லோருக்கும் உபயோகப்படும் வகையில் கிடைக்கச் செய்திருக்கின்றோம்.
 +
 +
நம்முடைய முன்னோர்கள் 'உணவே மருந்து' என்று வாழ்ந்தார்கள். அதனால், AI -மாடலை ஏற்கனவே வெளியிட்டுவிட்டோம், அந்த AI மாடலுக்குச் சென்று நீங்கள் ஏதாவது ஒரு குறிப்பிட்ட உடல் நலத்திற்காக, உங்களுடைய இரத்த அழுத்தம் சரியாக வேண்டும் அல்லது நீரிழிவு நோய் சரியாகவேண்டும் என்கின்ற காரணத்திற்காக என்ன உணவு எடுத்துக்கொள்ளலாம் என்று கேட்டீர்களானால், அது பரிந்துரை செய்யும்.
 +
 +
அதேமாதிரி இஸ்லாமிய மதத்தில் ஹலால் இருப்பதுபோன்று, நம்முடைய இந்துமதத்திலே உணவு வரையறுக்கப்பட்டிருக்கின்றது. கைலாஸத்தை பொருத்தவரை நாங்கள் சைவர்கள், சைவ உணவை உண்பவர்கள் மட்டுமல்ல, சிவபெருமானுக்குப் படைக்கப்பட்ட பிரசாதத்தை மட்டுமே உண்பவர்கள். (not just vegetarians, prasaaderiyans) சைவ உணவும், அந்த சைவ உணவையும் இறைவனுக்குப் படைத்து, பிரசாதத்தை மட்டுமே உண்ணுகின்ற பிரசாதேரியன்ஸ்.
 +
 +
நாங்கள் சைவர்கள், ஆனால் சனாதன இந்து தர்மத்தில் அசைவ உணவு - மாமிச உணவு தடை செய்யப்படவில்லை, முறைப்படுத்தப்பட்டிருக்கிறது. இஸ்லாமியத்தில் ஹலால் இருப்பதுபோல, அதற்கான முறைகள் வைத்திருப்பதைப்போல, நம்முடைய இந்துமதத்திலும் சமைக்கின்ற, உண்ணுகின்ற இவை அனைத்தும் முறைப்படுத்தப்பட்டிருக்கின்றது. அதை இந்து compliance என்று சொல்லி வெளியிட்டிருக்கின்றோம். நீங்கள் ஹோட்டல் நடத்துபவர்கள் யார் வேண்டுமானாலும் அந்த இந்து complianceபடி நீங்கள் நடத்தவேண்டும் என்று நினைத்தீர்களானால், நீங்கள் அந்த AI -மாடலில் சென்று எடுத்து, அதில் இருக்கின்ற விதிமுறைகளை எடுத்து கடைப்பிடித்தால், நீங்களே உங்களை இந்து compliance ஆக மாற்றிக்கொள்ளலாம்.
 +
 +
நம் சனாதன இந்து தர்மம் உத்சாகப்படுத்துவதன் மூலமாகத்தான் வளர்ந்திருக்கிறது. அதனுடைய பலனை உலகத்திற்கு அளிப்பதன் மூலமாகத்தான் வளர்ந்திருக்கிறது.  நாங்கள் கட்டாயமெல்லாம் படுத்தமாட்டோம், ''இது இந்து compliance இதைச் செய்தாகவேண்டும்'' என்றெல்லாம் சொல்வது கிடையாது. இந்த இந்து compliance -கான செயல்முறைகளை கொடுத்திருக்கின்றோம், யார் வேண்டுமானாலும் எடுத்து உபயோகப்படுத்திக்கொள்ளலாம். உங்கள் விருப்பம். ஏனென்றால் இதில் ஏகப்பட்ட நன்மைகள் இருக்கின்றது.
 +
 +
அதேமாதிரிதான், ஒவ்வொரு வியாபாரத்திலும் அந்த இந்து compliance... ஒரு துணிக்கடை நடத்தவேண்மென்றால், சிறந்த உடை எது? உடையை உடுத்துகின்ற, வடிவமைக்கின்ற விதம்... எந்த மாதிரி உடை உடுத்தினால், எந்த துணியில் (fabric) உடை உடுத்தினால் உடலிற்கு நன்மை, எந்தெந்த பருவகால நிலைக்கு எந்தெந்த துணி ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும், எந்த மாதிரியான உடையை வடிவமைத்துக்கொண்டால் நம் ஆரோக்கியத்தைப் பராமரிக்க முடியும், உங்களுடைய வாழ்க்கைமுறைக்கு தேவையான உடையை வடிமைத்துக்கொள்வது என எல்லாவற்றைப்பற்றியும், தேவல மகரிஷி என்ற ஒரு மகரிஷியில் துவங்கி அந்த சம்பிரதாயம் உடை வடிவமைப்பைப் பற்றி மிகப்பெரிய சாத்திரங்களை அளித்திருக்கிறார்கள். அவைகளை எல்லாம் ஒருங்கிணைத்து, உபயோபடுத்துபவர்களுக்கு இனிமையானதாக, எளிமையானதாக மாற்றி கொடுத்திருக்கின்றோம்.
 +
 +
அதேமாதிரி யோகம், உங்கள் உடல் நலத்தை எப்படி பரமரிப்பது என்று, longevity and health is not luck, it is a strategy  - ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் - அதிர்ஷ்டம் அல்ல, தெளிவான நம்முடைய உணர்வோடு நாம் செய்கின்ற திட்டம். ஆரோக்கியமும், நீண்ட ஆயுளும் அதிர்ஷ்டம் அல்ல, நம்முடைய உணர்வான திட்டம்  - Conscious strategy, அதுதான் யோகம்.
 +
யோக பாதம் என்று ஒரு AI -மாடலை வெளியிட்டிருக்கின்றோம். நீங்கள் சென்று பார்த்து,  உங்களுடைய எந்த வியாதிக்கு கேட்டீர்களென்றாலும், அதற்குத் தேவையான யோகா பிராணாயாமத்தை, அந்த வியாதி சரியாவதற்கு நீங்கள் செய்யவேண்டிய யோகா பிராணாயாமம் இதை உங்களுக்கு அளிக்கும்.
 +
 +
அடுத்தது, இதே மாதிரி சித்தா, பாரம்பரிய சித்தா சார்ந்த பல்வேறு விதமான நூல்களை ஒன்று திரட்டி, AI-ல் செய்து, இந்து மெடீரியா மெடிக்கா -  இந்துமதத்தினுடைய மருத்துவக் கலைகள்... தமிழில் இருக்கின்ற சித்தா, வடநாடுகளில் இருக்கின்ற ஆயுர்வேதம், தமிழ்நாட்டிலும் ஒரு ஆயுர்வேத சம்பிரதாயம் இருக்கிறது.... இந்த எல்லாவற்றையும் சேகரித்து, அதை AI முலமாக ஒருங்கிணைத்து, 'மெடீரியா மெடிக்கா' அளித்து, எந்த சித்த மருத்துவர் வேண்டுமானாலும் அதை உபயோகப்படுத்த முடியும். அதாவது, சித்த மருத்துவர்கள் உபயோப்படுத்துவதற்காக ஒரு மாடல் செய்திருக்கிறோம், பொதுமக்கள், இந்த Across the counter medications என்று சொல்லுவோம் பாருங்கள், அதாவது நம் வீட்டில் இருக்கின்றப் பொருட்களை வைத்தே உபயோகப்படுத்தி நம் உடல்நலத்தை நாம் எடுத்து வந்துகொள்ள முடியும். அந்த மாதிரி பொதுமக்கள் உபயோகப்படுத்துவதற்கு ஒரு மாடல் செய்திருக்கிறோம். நாம் அஞ்சறைப் பெட்டி என்று சொல்லுவோம், இஞ்சி, பூண்டு, இலவங்கம்... நம்முடைய வாழ்நாளில் தினசரி வாழ்க்கையில் உபயோகப்படுத்துகின்ற பொருட்களே நம்முடைய உடல்நலத்திற்கு பலவிதத்தில் உதவி செய்யமுடியும். அதனால் Across the counter medications-க்கு, Across the counter medicines - நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து கை வைத்தியம் என்று சொல்வோம், பாட்டிவைத்தியம் என்று சொல்வோம், வீட்டில் இருக்கின்ற பொருட்களை வைத்தே நம் உடல்நலத்தைக் கொண்டு வருவது. இவைகளை எல்லாம் தொகுத்து, ஒருங்கிணைத்து அதற்கு ஒரு AI - கட்டமைத்துக் கொடுத்திருக்கிறோம். அதனால் மருத்துவர்கள் உபயோகப்படுத்துவதற்குத் தனியாக, பொதுமக்கள் உபயோகப்படுத்தி தானாகவே உடல்நலத்தை ஏற்படுத்திக்கொள்வதற்கு தனியாக ஒன்று செய்து கொடுத்திருக்கிறோம்.
 +
 +
அடுத்தது 'சரியாபாதம்' என்று ஒரு AI மாடல் செய்து கொடுத்திருக்கிறோம் பாருங்கள்.
 +
அது என்வென்றால், உங்களுடைய தினசரி வாழ்க்கைமுறை மூலமாகவே உங்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது எப்படி? ஆனந்தமாக வைத்துக்கொள்வது எப்படி?
 +
இனிமையான வாழ்க்கை அமைத்துக்கொள்வது எப்படி?
 +
சரியாபாதம், பரமசிவப் பரம்பொருள் ஆகமத்தில் சொல்லும் எல்லா ஞானத்தையும் (Knowledge) ஒன்றாகத் திரட்டி சரியாபாதத்தை அமைத்து, அதை உலகம் அனைத்திருக்கும், உங்கள் எல்லோருக்கும் இலவசமாக கொடுத்திருக்கின்றோம். இந்த எல்லா மாடலுமே இலவசம்! மக்கள் யார் வேண்டுமானாலும் உயோகப்படுத்திக்கொள்ளலாம்.
 +
 +
இதற்கடுத்து இந்து மதத்தினுடைய பல்வேறு சம்பிரதாயங்கள்... மொத்தம்... இந்துமதத்தில், இந்துமதம், சனாதன இந்து தர்மம் ஒரு தனி மதம் கிடையாது. 10,000 மதங்களின் தொகுப்பு. அந்த பத்தாயிரம் சம்பிரதாயங்கள், அந்த பத்தாயிரம் சம்பிரதாயங்களையும் உயிரோடு வைப்பதற்காக, அந்த சம்பிரதாயங்களை தொடர்ந்து கடைப்பிடிக்க விரும்புபவர்களுக்காக அந்த சம்பிரதாயம் சம்மந்தப்பட்ட Information, knowledge, expertise - இந்த மூன்றையும் ஒருங்கிணைத்து உபயோபடுத்துபவர்களுக்கு இனிமையானதாக, எளிமையானதாக மாற்றி, democratize செய்வதற்காக AI மாடல்களைக் கட்டமைத்துக்கொண்டிருக்கின்றோம். அதில் ஒரு பத்து சதவிகிதம் வெற்றியடைந்திருக்கிறோம். இன்னும் ஆனால் செய்துகொண்டிருக்கிறோம், பத்து சதவிகிதம் வெற்றியடைந்திருக்கின்றோம்.
 +
 +
முதல் இந்த பிரதான சம்பிரதாயங்களான சைவம், வைணவம், சாக்தம், காணபத்யம், கௌமாரம், சௌரம், அத்வைதம், த்வைதம், விசிஷ்டாத்வைதம், சுத்தாத்வைதம்...இந்த வேறு வேறு சம்பிரதாயங்கள் இவைகளை எல்லாம் ஒருங்கிணைத்து, அது சார்ந்த நூல்கள் வாழ்க்கைமுறைகள் இதையெல்லாம் ஒருங்கிணைத்து, இதில் ஒரு முக்கியமானது என்னவென்றால்... அந்தந்த சம்பிரதாயங்களுக்கு நேர்மையோடு அதை ஒருங்கிணைத்திருக்கின்றோம்.
 +
 +
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், நாங்கள் சைவர்கள், எங்களுடைய வாழ்க்கைமுறை சைவம். அப்படியென்றால் சிவப் பரத்துவம். பரமசிவப் பரம்பொருளையே பரமாக, பரம்பொருளாக  வைத்து வழிபடுபவர்கள். அதற்காக எங்கள் நம்பிக்கையை, எங்கள் அனுபூதியை, நாங்கள் வைஷ்ணவ சம்பராயத்தின் மீது திணிக்கமாட்டோம், திணிக்கவில்லை. இப்பொழுது வைஷ்ணவ AI செய்யும்பொழுது, விஷ்ணு பரமாகத்தான் செய்திருக்கின்றோம். வைஷ்ணவத்தினுடைய நம்பிக்கை என்னவென்றால், 'விஷ்ணுவே பரம்பொருள்'. அதனால் அந்த நம்பிக்கைக்கு நேர்மையோடும் சிரத்தையோடும், அந்த சம்பிரதாயத்திலிருந்து மாறாமல், அந்த மரபு சார்ந்த பெரியவர்களுடைய துணையை ஏற்றுக்கொண்டு, அவர்களுடைய உதவிகளைப் பெற்றுக்கொண்டு, இதை ஒருங்கிணைத்து, வைஷ்ணவ சம்பிரதாயத்திற்கான ஒரு AI மாடலை கட்டமைத்திருக்கின்றோம். முழுமையாக முடிந்து விடவில்லை, எனென்றால் வைஷ்ணவத்திற்குள்ளேயே ஆயிரம் சம்பரதாயங்கள் இருக்கின்றன.
 +
கௌடிய வைஷ்ணவம், இஸ்கான் எல்லாம் கௌடிய வைஷ்ணவ சம்பரதாயம்.
 +
ஸ்ரீ வைஷ்ணவம் -  நம் தமிழ்நாட்டில் பெரும்பாண்மையாக இருக்கின்ற, பகவான் இராமானுஜம்  அவர்கள் புனரமைத்த, அவர்கள் வழி வந்த, வழி வருகின்ற அந்த சம்பிரதாயம் ஸ்ரீ வைஷ்ணவம். இது மாதிரி வைஷ்ணவத்திற்குள்ளேயே பல்வேறு சம்பிரதாயங்கள் இருக்கின்றன. அதில் சிலவற்றை எடுத்து AI மாடல்கள் செய்துகொண்டிருக்கின்றோம். செய்து முடித்துவிட்டோம், இன்னும் மற்றவைகளுக்கு செய்துகொண்டே இருக்கின்றோம்.
 +
 +
இதேபோல சைவத்திலும், பல்வேறு சைவ சம்பிரதாயங்கள் இருக்கின்றன.
 +
பொதுவாக சனாதன இந்து தர்மம் எப்படியென்றால்: எல்லா சம்பிரதாயமும் வேதத்திலே பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும். எல்லா சமயங்களும் வேதத்திலே பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும். இதுதான் சுவபாவம்.
 +
 +
சிலபேர் சொல்வதுண்டு, ''இல்லையே சாமி, பௌத்தமும் ஜைனமும் வேதத்தை மறுக்கின்றனவே'' என்று கேட்பதுண்டு.
 +
 +
ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், பௌத்தத்திலோ ஜைனத்திலோ, வேதத்திலே இல்லாத, வேதத்தில் சொல்லப்படாத ஒரே ஒரு கருத்தாவது புதிதாக இருக்கிறது என்று நிரூபித்துவிடுங்கள். அது சனாதன இந்து தர்மம் சாராத மதம் என்று நான் ஏற்றுக்கொள்கிறேன். கிடையவே கிடையாது!
 +
 +
வேதத்திலே சொல்லப்படாத ஒரே ஒரு சத்தியமோ, கருத்தோகூட பௌத்தத்திலோ ஜைனத்திலோ இல்லாததனால், அவைகளும் 'வேதம்' எனும் வார்த்தையையோ, தொகுப்பையோ மறுத்தாலும்கூட, வேதத்தின் கருத்துக்களை மறுக்காததனால், கருத்தியல்ரீதியாக வேதத்திலே பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்ற மதங்கள்தான், சமயங்கள்தான். அதனால் அவைகளுக்கும் AI மாடல் செய்துகொண்டிருக்கிறோம்.
 +
 +
எல்லா சித்தாந்தங்களுமே பொதுவாக பிரஸ்தானத்ரையத்திலே ஸ்தாபிக்கப்பட்டிருக்கும்.
 +
பிரஸ்தானத்ரையம் என்றால் உபநிடதங்கள், பகவத் கீதை, பிரம்ம சூத்திரம் - இந்த மூன்றிலே ஸ்தாபிக்கப்பட்டிருக்கும்... பொதுவாக. இதில் சிலபேர் எதாவது ஒரு நூலை மறுப்பார்கள் அல்லது பின் தள்ளி வைப்பார்கள், ஒரு நூலை பிரதானமாக ஏற்பார்கள், சில சம்பிரதாயங்கள் மூன்றையும் பிரதானமாக ஏற்பார்கள். ஆனால் பொதுவாக எல்லா சித்தாந்தங்களும் பிரஸ்தானத்ரையத்தின் மீது ஸ்தாபிக்கப்பட்டிருக்கும். அதனால் இவைகள் எல்லாவற்றையும் எடுத்து, ஒவ்வொரு ஆச்சாரியருமே இந்த பிரஸ்தானத்ரையத்திற்கு விளக்கவுரை எழுதுவதன் மூலமாகத்தான், அவர்களுடைய சம்பிரதாயத்தை நிர்மாணிப்பார்கள். அதனால் அந்த மாதிரி ஒவ்வொரு சம்பிரதாயத்திற்குமான AI மாடலை மேம்படுத்திக்கொண்டிருக்கின்றோம்.
 +
 +
அதனால்தான் சொல்கிறேன், சனாதன இந்து தர்மம்  10,000 மதங்கள் ஒன்றாகச் சேர்ந்த ஒரு மதம்!
 +
 +
நம்முடைய கலைகள், ஆயக் கலைகள் அறுபத்து நான்கு என்று சொல்வோம்.
 +
இந்த கலைகள் சார்ந்து இரண்டாயிரத்திற்கும் மேல் புத்தகங்கள் இருக்கின்றன.
 +
 +
பரமசிவப் பரம்பொருளின் பேரருளால் எங்களுக்கு 2000 புத்தகங்கள் கிடைத்திருக்கின்றன. சாஸ்த்திரங்களும், அவைகளுக்கு எழுதப்பட்ட பாஷ்யங்களும், விளக்கவுரைகளும் எல்லாம் சேர்ந்து, இவைகளை வகுத்து, தொகுத்து, என்னுடைய அனுபூதியிலிருந்து அவைகளை விளக்கி, user friendly மாற்றி, அதாவது நீங்கள் எல்லாரும் உபயோகப்படுத்துகின்ற மாதிரி அதை மாற்றி, நீங்கள் அந்த expertiseஐ நேரடியாக ஒரு கிளிக் மூலமாக உபயோகப்படுத்த முடியும். அந்த மாதிரி மாற்றி கொடுக்கின்ற திருப்பணியைத்தான் AI, AGI, ASI மூலமாக செய்துகொண்டிருக்கின்றோம். இது எல்லாவற்றையும் உபயோகப்படுத்தி செய்துகொண்டிருக்கின்றோம்.
 +
 +
இன்னும் தொலைக்காட்சிகள் நேரலையில் இருக்கின்றார்கள், இந்தத் தொலைக்காட்சிகளின் மூலமாக, TN நியூஸ் 24, இளைய பாரதம்... இளைய பாரதம் கார்த்திக் ஐயா அவர்களை வணங்குகின்றேன். நன்றி! ஐ-தமிழ் நியூஸ், திருவருள் டி.வி, பேசு தமிழா பேசு நாகராஜன் ஐயா அவர்களையும் வணங்குகின்றேன். பேசு தமிழா பேசு, NBA சினிமா, ZEE-தமிழ் நியூஸ், யூத் சென்ட்ரல் தமிழ், இராணி ஆன்லைன், ஆரோ ரூட்ஸ் தமிழ், சென்னை எக்ஸ்பிரஸ் Live, ABP நாடு, யூத் சென்ட்ரல் தமிழ், NBA 24/7> சென்னை எக்ஸ்பிரஸ் Live, A-Z சினிமா, காந்தம் மீடியா... இந்தத் தொலைக்காட்சிகள் அனைத்தின் மூலமாகவும் இணைந்திருக்கும் அன்பர்களை வரவேற்கிறேன். இந்த தொலைகாட்சிகள் அனைத்திருக்கும் நேரலை செய்வதற்காக நன்றி கூறுகிறேன்.
 +
 +
Expertiseஐ democratize செய்வது, இந்துமதத்தினுடைய Expertiseஐ democratize செய்யவேண்டும் என்பதற்காகத்தான் இந்த கைலாஸத்தைத் துவங்கினேன். அதற்கான ஒரு மிகப்பெரிய செயலைச் செய்து முடித்திருக்கின்றோம், வெற்றிக்கண்டிருக்கின்றோம். இன்னமும் செய்ய வேண்டிய திருப்பணி மிகப்பெருந்திருப்பணி. நான் சொன்ன மாதிரி 'பத்து சதவீதம்கூட முடிந்து விட்டது' என்று நான் நினைக்கமாட்டேன். எங்களை நாங்களே 'ஒருவேளை பத்து சதவீதம் முடிந்திருக்கும்' என்று திருப்திப்படுத்திக்கொள்கிறோம். ஆனால் இன்னும் 90 சதவிகிதத்திற்கும் மேலாக செய்யவேண்டிய திருப்பணி எஞ்சியிருக்கின்றது. அப்பர் பெருமான் சொல்வதுபோல 'என் கடன் பணி செய்து கிடப்பதே, என் கடன் பணி செய்து கிடப்பதே' என்று தொடர்ந்து இந்தப் பணியை செய்வோம்.
 +
 +
கேள்விகள் நிறைய... சமூக உடகங்கள் அந்த கேள்வி கேட்கப்படுகின்ற வேகம்,
 +
மிகுந்த வேகத்தில் இருக்கிறது ஐயா. அதனால் கொஞ்சம் பொறுமையாக போட்டீர்களென்றால் ஒவ்வொரு கேள்வியாகப் பார்த்துப் பார்த்து படித்து பதில் சொல்ல முடியும்.
 +
 +
நிச்சயமாக எல்லா கேள்விக்கும் இப்பொழுதே பதில் சொல்லிவிட முடியுமா என்றுத் தெரியவில்லை. இன்னமும் நான் சொல்லி முடிக்கவேண்டிய அறிமுகத்தில் சொல்ல வேண்டிய விஷயங்களே இன்னும் பல இருக்கின்றன.
 +
 +
இன்னொரு AI மாடல் மேம்படுத்தியிருக்கின்றோம். இந்து jurisprudence. இந்து தர்ம சாஸ்த்திரங்கள் அனைத்தையும் தொகுத்து, சனாதன இந்து தர்மத்தினுடைய 56 நாடுகள்... மஹாபாரதக் காலத்திலே 56 நாடுகள் சனாதன இந்து தர்மத்தில் இருந்தன. அதாவது  56 நாடுகள் சனாதன இந்து தர்மத்தைத் தங்களுடைய அதிகாரப்பூர்வ மதமாக (Official religion) வைத்து வாழ்ந்தன. அந்தப் பக்கம் காந்தஹார், இப்பொழுது காந்தஹார் என்று சொல்கிறோம் இல்லையா? காந்தாரம் என்று... அங்கிருந்துதான் காந்தாரியும், சகுனியும் வந்தார்கள்.  அந்த காந்தஹாரில் துவங்கி, இந்தப் பக்கம் காம்போஜம் -  கம்போடியா வரை 56 தேசங்கள், சனாதன இந்து தர்மத்தை தங்களுடைய அரசியலைப்பு சாசனமாகவும், நீதிமுறையாகவும் (jurisprudence) அதிகாரப்பூர்வ மதமாகவும் வைத்து வாழ்ந்ததாக மஹாபாரதம் தெளிவாகச் சொல்லுகின்றது.
 +
 +
அந்த 56 தேசங்களிலும் உபயோகப்படுத்தப்பட்ட jurisprudence - தர்மசாஸ்த்திரங்கள், அதைத் தொகுத்து, இந்து நீதிமுறைக்கான (jurisprudence) ஒரு AI மாடலை கட்டமைத்திருக்கின்றோம். அதாவது, நீதி அரசர்கள் எந்த நாட்டில் இருப்பவர்களாக இருந்தாலும், சனாதன இந்து தர்மம் எப்படி தீர்வு வழங்கியிருக்கிறது என்று தெரிந்துகொள்ள விரும்பினீர்களானால், உங்களுக்கு வசதியாக இருப்பதற்காக, இந்த  AI மாடலை கட்டமைத்திருக்கின்றோம். யார் வேண்டுமானாலும் விருப்பம் இருப்பவர்கள் எடுத்து உபயோகப்படுத்திக்கொள்ளலாம். அதுதான் சனாதன இந்து தர்மத்தின் வழக்கம், யார் மீதும் எதையும் திணிப்பதில்லை. நாங்கள் எங்களுடைய தர்மசாஸ்த்திரம்தான் நீதிமுறையாக (jurisprudence) இருக்கவேண்டும் என்று எந்த நாட்டின் மீதும் திணிப்பதும் கிடையாது, அது சனாதன இந்து தர்மத்தின் வழக்கம் இல்லை.
 +
 +
ஆனால், நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், வெண்கல காலத்திற்கும் முந்தையக் காலத்தில் ( Pre - Bronze age) இருந்த 49 நாகரீகங்கள், இஸ்லாமியப் படையெடுப்புக்களினாலும், கிறிஸ்தவ படையெடுப்புக்களினாலும்... இஸ்லாமிய படையடுப்புகள், கிறிஸ்தவ படையடுப்புகளின் காரணமாக 48 அழிந்து விட்டது. ஒன்றே ஒன்றுதான் அழியவில்லை, அது சனாதன இந்து நாகரீகம்!
 +
 +
இந்த நாகரீகத்தை உயிரோடு வைத்திருந்த அரசியலைப்பு சாசனம் என்ன? நீதிமுறை என்ன? என்று தெரிந்துகொள்ள விரும்புபவர்கள், தெரிந்துகொள்வதற்காக இந்த AI மாடலை உருவாக்கியிருக்கின்றோம். நிச்சயமாக, சனாதன இந்து தர்மத்தினுடைய அரசியலைப்பு சாசனமும், நீதிமுறையும், அதிலிருந்து மேம்பட்ட வாழ்க்கைமுறையும்தான் இந்த ஒரு நாகரீகம் இன்னமும் அழிந்துவிடாமல் உயிரோடு வைத்திருக்கின்றது.  சுருக்கப்பட்டிருக்கிறோம், அதை நான் ஒப்புக்கொள்கிறேன். சுருக்கப்பட்டதன் காரணம், எங்கெங்கெல்லாம் நாம் சனாதன இந்து தர்மத்தின் அறிவையும், ஞானத்தையும், வழிகாட்டுதல்களையும் வாழாமல்விட்டோமோ, அங்கெல்லாம் விழுந்தோம். எங்கெல்லாம் அதை வாழ்ந்தோமோ, அங்கெல்லாம் வாழ்கின்றோம். அதனால் நாம் விழுந்ததற்கும் வாழ்ந்ததற்குமான காரணத்தை சரியாகத் தெரிந்துகொள்ளவேண்டும்.
 +
 +
துரதிர்ஷ்டவசமாக இந்து விரோத சக்திகள் பல தலைமுறையாக நம்மை மூளைச்சலவை செய்து, நாம் விழுந்ததற்குக்கூட, எங்கெல்லாம் விழுந்தோமோ அங்கு விழுந்ததற்குக்கூட, சனாதன இந்து தர்மம்தான் காரணம் என்று நம்மை நம்ப வைத்து, சுய-சந்தேகத்தை நமக்குள் விதைத்திருப்பதனால், நம் மக்களே சத்தியம் புரியாது, உண்மை புரியாது, சனாதன இந்து தர்மத்தின் சாரம் புரியாது உழலுகின்றார்கள் என்பது தான் உண்மை.
 +
 +
அதனால், சனாதன இந்து தர்மத்தைப் புனரமைத்து, அது 'நன்மையே செய்தது, வாழ்க்கையே தந்தது' என்பதை உலகத்திற்குச் சொல்லி, அதனுடைய Golden periodஎப்படி இருந்ததோ, சனாதன இந்து தர்மம் தன் பொற்காலத்தில் எவ்வாறு இருந்ததோ அதைபோல மறுமலர்ச்சி செய்து, மீண்டும் உயிர்ப்படையச் செய்து வாழ வைப்பதே எங்கள் நோக்கம். பரமசிவப் பரம்பொருள் அந்த நோக்கத்தை நிறைவேற்றிவிட்டார். இதற்குமேல் உலகம் முழுமைக்கும் கொண்டு சென்று சேர்ப்பதுதான் செய்ய வேண்டிய வேலை.
 +
 +
ஒவ்வொரு துறைக்கும் மாடல்களை மேம்படுத்திக்கொண்டிருக்கின்றோம். பொருளாதாரம், இந்து பொருளாதாரம். நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், கிறிஸ்தவ படையெடுப்பு வருவதற்கு முன்பாக, கிறிஸ்தவர்கள் அகண்ட பாரதத்தைக் கொள்ளயடித்து இங்கிலாந்திற்கு கொண்டு செல்வதற்கு முன்பாக, உலகத்திலேயே highest GDP இருந்தது அகண்ட பாரதம்தான், இந்து நாடுதான். அந்த காலக்கட்டத்தில் இந்து நாடாகத்தான் இருந்தோம்.
 +
 +
இன்னொன்றையும் நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள், இங்கிலாந்து கிறிஸ்தவ நாடு,  படையெடுப்புக்கு முன்பாக, கொள்ளைக்கு முன்பாக, richest economy ஆகவும், worlds largest GDP ஆகவும் நாம் இருந்திருக்கின்றோம். இது அத்தனையும் வரலாற்றில் பதிவாகியிருக்கின்றது. இது எல்லாம் உண்மை, பொய் கிடையாது.
 +
 +
அப்படியென்றால், நம் சனாதன இந்து தர்மம் ஒரு அறிவார்ந்த பொருளாதார அமைப்பை கொண்டிருந்தது (economy system). அந்த அறிவார்ந்த பொருளாதார அமைப்பை மறுமலர்ச்சி செய்வதற்காக, அதற்காக ஒரு AI – மாடலை கட்டமைத்துக்கொண்டிருக்கின்றோம். அந்தப் பொருளாதாரக் கொள்கைகளை (economic principles) வைத்து, அர்த்த சாஸ்த்திரங்கள்...நாம் எல்லோரும் நினைத்துக்கொண்டிருக்கின்றோம், 'அர்த்த சாஸ்த்திரம் ஒன்றே ஒன்றுதான் என்று' கிடையாது.
 +
 +
அர்த்த சாஸ்த்திரம் ஆயிரம் புத்தகங்களுக்கு மேல் இருக்கின்றன. அவைகளை எல்லாம் தொகுத்து, சேகரித்து இன்று நாம் நடைமுறைப்படுத்துவதற்காக, உபயோகப்படுத்துபவர்களுக்கு இனிமையானதாக, எளிமையானதாக மாற்றி, அந்தக் கொள்கைகளுக்கு ஒரு AI – மாடலை கட்டமைத்திருக்கின்றோம். இங்கு நீங்கள் two thousand years of Hindu economic history, the economic history ஒரு சார்ட்டில் கொடுத்திருக்கிறோம் பாருங்கள்... இதை வெளியிடுகின்றோம், நேரம் இருக்கும் நீங்கள் வேண்டுமனால் நம் AIல் சென்று பார்த்துக்கொள்ளுங்கள்.
 +
இதே மாதிரி சனாதன இந்து தர்மத்தின் மிகப்பெரிய பங்களிப்புகள்... மேலை நாடுகளில்  விமானங்களை கண்டுபிடித்து உபயோகப்படுத்துவதற்கும் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே, இந்தியாவிலே மும்பையில் ஒரு சனாதன இந்து தர்ம பண்டிதர், நம்முடைய பரத்வாஜர் எழுதிய விமானக சாத்திரத்தை functional என்று நிரூபித்து, விமானத்தைச் செய்து பறக்கவிட்டும் காட்டி இருக்கிறார். அது ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது. அதுமாதிரி விமான சாஸ்த்திரங்கள் சம்மந்தப்பட்ட சாஸ்த்திரங்களை எடுத்து, அதில் இருக்கின்ற பல்வேறு circuits இன்னமும் functional... இதையும் நிரூபித்திருக்கின்றோம். இதையும் ஒரு AI மாடலாக செய்துகொண்டிருக்கின்றோம்.
 +
 +
இதற்காகவே ஒரு சன்யாசி... Aeronautics-ல் Ph.D செய்த ஒரு பெண் சன்யாசி, தன்னுடைய வாழ்க்கையே துறந்துவிட்டு, அவர்கள் Aeronautics-ல் Ph.D செய்திருக்கிறார்கள்...
 +
வந்து இந்த துறையிலே ஆழ்ந்து ஆராய்ச்சிகள் செய்து, விமானிக சாஸ்த்திரம் சார்ந்து இந்த AI மாடலை பயிற்சிசெய்து கொண்டிருக்கிறார்கள். இதுபோன்ற பல பேருடைய தியாகம், உழைப்பு...Time treasure talent எல்லாவற்றையும் அவர்கள் தியாகம் செய்து உருவானதுதான் இந்த கைலாஸம்.
 +
 +
சனாதன இந்து தர்மம் ஒரு அறிவார்ந்த ஞானச்செறிவோடுகூடிய மிகப்பெரிய நாகரீகம்.
 +
அதை ஒரு விதை வங்கி வடிவிலாவது, Seed bank அளவிலாவது உயிரோடு வைப்பதுதான் எங்கள் நோக்கம். பரமசிவ பரம்பொருளின் அருளால் அதில் வெற்றி கண்டுவிட்டோம்.
 +
இன்னமும் பல வெற்றிகளைத் தொடர்ந்து காண்போம்.
 +
 +
வரலாற்றில் சொல்லாப்படாத சனாதன இந்து தர்மத்தினுடைய ஏறத்தாழ  82,000 பங்களிப்புகளைத் (Historically untold contributions of Sanatana Hindu Dharma) தொகுத்திருக்கின்றோம். அதை ஒரே AI-மாடலாக கட்டமைத்துக் கொடுக்கின்றோம். அது எல்லாவற்றையும் சேகரித்து, ஒருங்கிணைத்து, நுண்திருத்தம் செய்வது - பரமசிவ பரம்பொருள் எங்களுக்கு அளித்த மிகப்பெரிய நல்லாசி, அவருடைய திருப்பணியை செய்வதற்கான வாய்ப்பு. நான் சொல்வதுபோல 'என் கடன் பணி செய்து கிடப்பதே!'
 +
 +
நேரம் கடந்துவிட்டது, உங்களுடைய பல்வேறு கேள்விகளுக்கு இன்னமும் பதிலளிக்க வேண்டியிருக்கிறது. பல தொலைக்காட்சிகள் நேரலை செய்துகொண்டுதான் இருக்கின்றன. நான் சொல்லவேண்டியவைகளையே இன்னும் சொல்லிமுடிக்காமல் இருக்கும்போது இவ்வளவு கேள்விகளுக்கும் எவ்வாறு பதில் சொல்வது என்பதுதான் நான் யோசித்துக்கொண்டிருக்கிறேன்.
 +
 +
ஒரு விஷயம் என்னால் சொல்ல முடியும், உங்களுடைய பல கேள்விகளுக்கு இந்த நித்யானந்தா AI பதில் சொல்லிவிடும். ஏனென்றால் நித்யானந்தா AI உங்களுடைய பெரும்பாலான கேள்விகளுக்கு பதில் சொல்லும் முறையில்தான் வடிவமைத்திருக்கிறோம். அதனால், உங்கள் அனைவரையும் ASK NITHYANANDA – NITHYANANDA AI-ஐ உபயோகப்படுத்துமாறு வேண்டிக் கேட்டுக்கொள்ளுகின்றேன். இது முழுக்க முழுக்க இலவசம். 
 +
 +
நம்முடைய உலோகவியல் (Metallurgy) சம்பந்தமான அறிவியல்கள், 'கல் தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முந்தோன்றிய முத்தகுடி' ஆகிய நம் தமிழ்குடியின் உலோகவியல் சம்பந்தமான அறிவியல், அது சம்பந்தமான ஞானம், நம் தமிழ் குடி வாழ்ந்த வாழ்க்கைமுறை, சனாதன இந்து தர்மமே! அதில் எந்த சந்தேகமும் இல்லை. இதைப்பற்றியும் பல்வேறு நூல்களைத் திரட்டி, ஆராய்ச்சிகளை சேகரித்து, அவைகளையும் ஒன்றாக்கி, இந்த AI மூலமாகக் கிடைக்க வைத்திருக்கிறோம்.
 +
 +
பலபேர் சொல்வதுண்டு, இந்த 'இந்து' என்கின்ற வார்த்தையே இல்லை என்று.
 +
கிடையாது!
 +
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்,
 +
'ஹிமாலயம் ஸமாரப்பிய
 +
யாவத் ஹிந்து ஸரோவரம்
 +
தத்தேவ நிர்மிதம் தேசம்
 +
ஹிந்துஸ்தானம் பிரச்சக்ஷதே'
 +
இமயமலையில் தொடங்கி, இந்து சரோவரம் வரை... விண்ணவரால் நிர்மிக்கப்பட்ட, தெய்வங்களால் நிர்மிக்கப்பட்ட இந்த நாட்டை 'ஹிந்துஸ்தானம்' என்று அழைக்கிறோம் என்று மிகப் பழமையான சனாதன இந்து தர்மத்தின் நூல்களான பிரஹஸ்பதி ஆகமம் தெளிவாகச் சொல்லுகின்றது. இந்த 'ஹிந்து' என்ற வார்த்தையே சமீபகாலத்தில் வந்த வார்த்தை என்று நிறைய பேர் உருட்டிக்கொண்டு திரிகிறார்கள். நம்முடைய இந்துக்களேகூட நிறையபேர் அதுபோல் நம்புகிறார்கள். கிடையாது!
 +
 +
இப்பொழுது நான் சொன்ன அந்த சூத்திரம் பிரஹஸ்பதி ஆகமத்திலிருந்து எடுக்கப்பட்டது. இதுமாதிரி குறைந்தபட்சம் ஒரு 25 சாஸ்த்திரப் பிரமாணங்களை என்னால் கொடுக்கமுடியும். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வேத ஆகமங்களிலேயே 'இந்துமதம்' என்கின்ற வார்த்தையும், 'இந்து தேசம்' என்கின்ற வார்த்தையும் இருக்கின்றது. 
 +
 +
இது மாதிரியான என்ன கேள்விகள் உங்களுக்கு இருந்தாலும், அவைகளை நீங்கள் அந்த
 +
ASK Nithyananda AI-யிடம் கேட்டால் வரலாற்றுக் குறிப்புகள், சான்றுகள் (Historical references, proofs) இதனுடன் சேர்ந்து உங்களுக்கு பதிலளிக்கும்.
 +
 +
நீங்கள் கேட்கலாம் ''யாருக்கு தெரியும் பிரஹஸ்பதி ஆகமம் பல ஆயிரம் ஆண்டுகள் பழமையானது?'' என்று.
 +
 +
இன்று குருப்பெயர்ச்சி நடந்திருக்கிறது, இது மாதிரி நடந்த குருப்பெயர்ச்சிகள் பலவற்றையும் அது தெளிவாகச் சொல்வதன் முலமாக, அந்தப் புத்தகம் பழைமையானது என்று நிரூபணமாகின்றது.
 +
 +
அது மட்டுமில்லாமல், இந்த பிரபஞ்ச அறிவியல் (cosmology) சம்பந்தப்பட்ட, பல்வேறு
 +
நக்ஷத்ரங்களின் அமைப்புகளையெல்லாம் மிகவும் விளக்கமாக விவரிக்கின்றார்கள்.
 +
அது நம் முன்னோர்கள் நேரில் பார்த்து கிரஹித்திருந்தால் மட்டும்தான் அதை ஆவணப்படுத்தமுடியம். அது மாதிரி தெளிவான ஆவணங்கள் இருப்பதனால் ,அந்த நிகழ்வுகள் நடந்த காலத்தை நாம் கணித்து, இந்த நூல்களின் மூப்பை முடிவு செய்துவிடலாம். அதன் வயதை முடிவு செய்துவிடலாம்.
 +
 +
இது எல்லாவற்றையும் அறிவியல் பூர்வமாக, இப்பொழுது நீங்கள் அறிவியல் என்று சொல்கின்ற அந்த அறிவியல் மூலமாகவே நீங்கள் ஏற்றுக்கொள்ளுகின்ற விதத்தில் மிகத்தெளிவாக நிர்மாணித்திருக்கின்றோம்.
 +
 +
ஐயா சிவசங்கர் என்று ஒருவர் கேட்கின்றார்...
 +
ஐயா நித்யானந்தா சாமி நானும் கைலாஸத்துக்கு வரேன், நீங்கள் ஒரு டிக்கெட் போடுங்கள்,இந்த பூமியில் நிம்மதி இல்லை என்று சாட்டை தமிழ் யுடியூப் சேனலில் போட்டிருக்கிறீர்கள்.
 +
 +
ஐயா, கைலாஸத்திற்கு வரவேண்டும் என்று நினைத்தீர்களென்றால், நீங்கள் முதலில் செய்ய வேண்டியதென்னவென்றால்... பரமசிவ சேனை என்று 30 நாள் நிகழ்ச்சி இலவசமாக நடத்துகின்றோம். முழுக்க முழுக்க அனுமதி இலவசம். தங்குமிடம், உணவு உட்பட இந்த நிகழ்ச்சி இலவசம். உலகம் முழுவதும் நடத்துகிறோம் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சலிஸில் நடத்துகிறோம், மலேசியாவில் நடத்துகிறோம், ஆஸ்திரேலியாவில் நடத்துகிறோம். இந்தியாவில் காசியில் நடத்துகிறோம், தமிழ்நாட்டில் சேலத்தில் நடத்துகிறோம். இன்னும் தமிழ்நாட்டில் இருக்கின்ற மற்ற நம்முடைய ஆசிரமங்களிலும், கைலாஸாக்களிலும் நடத்துகிறோம், ஆதீனங்களிலும் நடத்துகிறோம். நீங்கள் எந்த ஆதீனத்தில் வேண்டுமானலும், எந்த நம்முடைய ஆசிரமத்தில் வேண்டுமானலும் சென்று பங்கெடுத்துக்கொள்ளலாம்.
 +
 +
இந்த 30 நாள் நிகழ்ச்சியில் நீங்கள் கலந்துகொண்டீர்களானால், 'நாங்கள் யார்?' என்கின்ற அறிமுகம் முழுமையாக உங்களுக்கு அளிக்கப்படும். உங்கள் விருப்பம், இந்த மாதிரி வாழ்க்கைமுறையை வாழ்வதற்கு விருப்பம் இருக்கிறதா என்று நீங்களும் முடிவு செய்யமுடியும், நாங்களும் முடிவு செய்யமுடியும்.
 +
 +
இந்த ஒரு மாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டீர்களானால், அதற்குப் பிறகு நீங்கள் கைலாஸா வரவிரும்பினால், எங்களுக்கும் நீங்கள் கைலாஸா வருவது நன்று அல்லது நீங்கள் பலவேறு நாடுகளில் இருக்கின்ற கைலாஸா நிறுவனங்கள், அங்கேயே வாழ்ந்து தங்கி சேவை செய்ய நினைத்தீர்களென்றாலும் அங்கேயே இருக்கலாம் அல்லது நீங்கள் உங்களுடைய ஊரில் கைலாஸத்தை உருவாக்க நினைத்தாலும், நீங்கள் உருவாக்கலாம். எதை வேண்டுமானாலும் செய்யலாம், ஆனால் முதலில் நம் இரண்டுபேருக்கும் முழுமையான அறிமுகம் வேண்டும்.
 +
எந்த நாட்டிலேயும் விசா interview செய்துவிட்டுத்தானே விசா கொடுப்பார்கள். அதனால் நீங்கள் கைலாஸா வரவேண்டுமென்றாலும் எங்களுடைய interview 30 நாள். அதுதான் உண்மை. 30 நாள் எங்களுடைய interview. அதனால் அதிலே கலந்துகொள்ளுங்கள்.
 +
கைலாஸா வரவிரும்பும் யார் வேண்டுமானாலும் அதில் கலந்துகொண்டு எங்களைப்பற்றி புரிந்துகொண்டு, அதற்குப் பிறகு நாங்களும் உங்களைப் பற்றி புரிந்துகொண்டுதான், கைலாஸாவிற்கு விசா கொடுப்பதைப் பற்றிய முடிவை நாங்கள் எடுக்க முடியும்.
 +
இதுதான் உண்மை. உண்மையை அப்படியே சொல்கிறோம்.
 +
 +
அடுத்ததாக, கைலாஸாவிற்கு வருவதற்கு பணம் எதுவும் வேண்டுமா?
 +
என்று கேட்டிருக்கிறீர்கள்.
 +
 +
கைலாஸாவில் பணத்திற்கு எந்த மதிப்பும் கிடையாது. இங்கு பணம் புழக்கத்திலேயே இல்லை! எங்களுக்கு தேவையானதை நாங்கள் விளைய வைத்துக்கொண்டு, எங்கள் உணவு மற்றவைகளுக்கு தற்சார்போடு இருக்கின்றோம். அது ஒன்று. மற்றபடி எங்கள் கைலாஸத்தை நடத்துவதற்கு, சேவைகளுக்குத் தேவையானவற்றை பொதுமக்கள் அளிக்கின்ற நன்கொடையின் மூலமாக நடத்துகின்றோம்.
 +
 +
உலகம் முழுவதும் சனாதன இந்து தர்மத்தை வாழும் மக்கள், 'சனாதன இந்து தர்மம் வாழவேண்டும்' என்று நினைக்கின்ற மக்கள், எங்களுக்கு நன்கொடை அளிக்கின்றார்கள். அந்த பிக்ஷையை ஏற்று, நாங்கள் எங்கள் செயல்பாடுகளை செய்கின்றோம். எந்த நாட்டோடும் கடன் வாங்குவதில்லை, எந்த நாட்டிடமிருந்தும் கடன் பெருவதில்லை.
 +
 +
கைலாஸா - கடன் இல்லாத தேசம், இராணுவம் இல்லாத தேசம், காவல்துறை இல்லாத தேசம், வருமான வரி இல்லாத தேசம். சனாதன இந்து தர்மத்தை வாழ்வதும், மற்றவர்களை வாழ வைப்பதுமான மோக்ஷத்தின் தத்துவத்தை அடிப்படையாக வைத்து, Moksha centric dharma, Moksha centric artha, Moksha centric kaama, Moksha centric moksha…
 +
மோக்ஷத்தை அடிப்படையாக வைத்த வாழ்க்கைமுறை எங்களுடையது.
 +
அதனால் இங்கு பணத்திற்கு மதிப்பும் இல்லை, வேலையும் இல்லை, பணம் சார்ந்த கொடுக்கல் - வாங்கல்கள் கைலாஸத்திற்குள் நிகழ்வதும் இல்லை.
 +
 +
நான் ஏற்கனவே சொன்னேன், இது ஒரு வேறு உலகம்போல,
 +
நீங்கள் கைலாஸாவை 'கற்பனை தேசம்' என்று நினைக்கிறீர்கள், நான் 'உங்கள் உலகமே மாயை' என்று நினைக்கிறேன். எது உண்மை? கைலாசா தேசம் நிஜமா? என்பதெல்லாம் காலம்தான் உங்களுக்குக் காட்டும்.
 +
 +
நிச்சயமாக காலம் வரும்போது பொதுமக்கள் வந்து செல்வதுபோல கைலாஸத்தை திறக்கின்றேன். இப்பொழுது இப்போதைய காலகட்டத்தில் எங்கள் சன்யாசிகள் மட்டும் வாழ்வதற்காகத்தான் இந்த கைலாஸத்தை அமைத்திருக்கின்றோம். எங்களுடைய பக்தர்கள், சீடர்கள் வாழ்வதுபோலத்தான் அமைத்திருக்கின்றோம். கிரஹஸ்தர்களுக்கு தனியான கைலாஸத்தை அமைத்திருக்கின்றோம்.
 +
 +
அதனால் நாங்கள் ஒரு சனாதன இந்து தர்மத்தைப் புனரமைப்பதற்காக அமைக்கப்பட்ட
 +
apolitical - அரசியல் தாண்டிய ஆன்மிக தேசம்.
 +
 +
எப்படி வாடிகன், கத்தோலிக்க திருச்சபையினுடைய ஒரு ஆன்மிக நாடாக, அவர்களுடைய மதம் சார்ந்த நாடாக இயங்குகிறதோ, அதுபோல சனாதன இந்து தர்மத்திற்காக நாங்கள் உருவாக்கியிருக்கின்ற, பரமசிவப் பரம்பொருளின் பேரருளால் உருவாகியிருக்கின்ற நாடுதான் இந்த கைலாஸா.
 +
 +
காலம் கடந்ததனால் எங்களுடைய நிகழ்ச்சி நிரல்படி 8 மணியிலிருந்து 10 மணிவரை,
 +
இந்திய நேரப்படி 8 மணியிலிருந்து 10 மணிவரை என்றுதான் நிகழ்ச்சியை நிர்ணயித்திருந்தோம். காலம் கடந்த பிறகும், 25 நிமிடங்கள் ஆன பிறகும், 20 தொலைக்காட்சி சேனல்கள் தொடர்ந்து நேரலை செய்துகொண்டிருக்கின்றார்கள். அவர்கள் அனைவரும் ''நேரலை செய்கின்றோம், சற்று நேரம் தொடர்ந்து பேசுங்கள்'' என்று கேட்கின்றார்கள். அதனால் தொடர்கின்றேன்.
 +
 +
இவையெல்லாம் நாங்கள் மறுமலர்ச்சி செய்திருக்கின்ற பல்வேறு துறைகள்,
 +
இது சார்ந்த AI-களை கட்டமைத்திருக்கின்றோம். இன்னமும் கட்டமைத்துக்கொண்டே இருக்கின்றோம். உலகம் முழுவதிலும் 150 நாடுகளில் நிறுவனங்கள் நடத்துகின்றோம். நிறுவனங்கள் என்றால், அவை அந்தந்த நாட்டினுடைய விதிமுறைக்கு கட்டுப்பட்டு நிகழ்வவை, நடத்தப்படுவவை.
 +
 +
உதாரணத்திற்கு இந்தியாவில் இருக்கின்ற ஆசிரமங்கள், அறக்கட்டளைகள்... இதெல்லாம் இந்தியாவினுடைய விதிக்கு கட்டுப்பட்டு, இந்தியாவினுடைய சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டு நடக்கின்ற நிறுவனங்கள். அது மாதிரி மலேசியாவில், மலேசியாவின் சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டு நடக்கின்ற நிறுவனங்கள். அது மாதிரி 150 நாடுகளில் நடத்துகிறோம்.
 +
 +
நான் சொன்ன மாதிரி சில நாடுகளில் தூதரகரீதியான உறவுகள் வைத்திருக்கிறோம்,
 +
சில நாடுகள் சுய-இறையாண்மையோடு எங்களுக்கு ஒரு சிறு நிலப்பகுதியை அளித்திருக்கின்றன.
 +
சில நாடுகள் சுய-நிர்ணய உரிமை, autonomous என்று சொல்வார்கள், அது மாதிரி சில பகுதிகளை அளித்திருக்கின்றன. இவை எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்துதான் இந்த கைலாஸா நடக்கின்றது.
 +
 +
குறித்த நேரத்திற்கும் மேலாக அரைமணி நேரம் கடந்துவிட்டதனால், இதற்கும் மேல் தொடராமல் இப்போதைக்கு இதோடு முடித்துக்கொள்வதுதான் உத்தமம் என்று நினைத்து முடிக்க எண்ணுகின்றேன். வேண்டுமானால் நிச்சயமாகத் தொடர்ந்து வேறு வேறு நாட்களில் நேரலை சத்சங்கத்திற்கு வருவதற்கான முயற்சிகள் செய்கின்றேன். மீண்டும் வரும்பொழுது உங்களுடைய மற்ற கேள்விகளுக்கெல்லாம் தொடர்ந்து பதிலளிக்கின்றேன்.
 +
 +
நேரலை செய்த எல்லா ஊடகங்களுக்கும், கேள்விகளை அனுப்பிய எல்லா ஊடகவியலாளர்களுக்கும் நன்றி. வந்த உங்கள் அனைவருக்கும் நன்றி.
 +
 +
இன்று பிறந்த  ஸ்ரீ விஷ்வாவசு புத்தாண்டு எல்லோருக்கும் எல்லா நன்மையும் கொடுத்து,
 +
எல்லா வளமும் கொடுத்து, நிறை வாழ்க்கையை அளிக்குமாறு பரமசிவப் பரம்பொருளைப் பிரார்த்தித்து, பரமசிவப் பரம்பொருளின் பேரருளையும், நல்லாசிகளையும் அவருடைய பதத்தில் இருந்து, பரமாத்வைத நிலையிலிருந்து உங்கள் அனைவருக்கும் பரமசிவப் பரம்பொருளின் ஆசிகள் கிடைக்க ஆசீர்வதிக்கின்றேன். Blessings, Be Blissful... ஆனந்தமாக இருங்கள்.
  
==Event Photos==
 
==Event Photos==

Revision as of 03:12, 18 April 2025

Title

தமிழ் புத்தாண்டு சத்சங்கம் | பகவான் நித்யானந்தருடன் நேர்காணல் #kailasa #nithyananda

Link to Video:

Transcript:

ௐம் ௐம் ௐம்

நித்யானந்தேஷ்வர பரமசிவ சமாரம்பாம் நித்யானந்தேஷ்வரி பரமசிவ சக்தி மத்யமாம் அஸ்மதாச்சார்ய பர்யந்தாம் வந்தே குரு பரம்பராம்

உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன். பரமசிவப் பரம்பொருளின் பேரருளால் இன்று உதித்திருக்கும் ஸ்ரீ விஷ்வாவசு தமிழ் புத்தாண்டு, எல்லோருக்கும் எல்லா நலத்தையும் தந்து, எல்லா வளத்தையும் தந்து, மங்களமான, நிறைவான ஆனந்தமான ஆண்டாக அமைய பரமசிவப் பரம்பொருளைப் பிரார்த்தித்து, அவர் ஆசிகள் நம் எல்லோர்மீதும் இருந்திட, அவர் திருவடித்தொழுது உங்கள் எல்லோருக்கும் நல்லாசிகளை அளிக்கின்றேன்.

இன்று துவங்கி இருக்கும் ஸ்ரீ விஷ்வாவசு தமிழ் புத்தாண்டு தினம், எல்லா நன்மையும் தந்து எல்லோருக்கும் உடல் நலம் தந்து, மனநலம் தந்து, உயிர் வளம் தந்து, இனிமையான உறவுகள் தந்து, மாற்றுவதை எல்லாம் - மாற்ற இயலும் எல்லாவற்றையும் மாற்றிக்கொள்ளும் சக்தியை தந்து, மாற்ற இயலாதவைகளை ஏற்றுக்கொள்ளும் புத்தியை தந்து, மாறாத பரமசிவப் பரம்பொருளின் மீதிருக்கும் பக்தியை தந்து, எல்லா நலத்தையும் தருமாக. பரமசிவப் பரம்பொருளின் பேரருள் நம் எல்லோர் மீதும் இருக்குமாக.

இன்று துவங்கியிருக்கும் தமிழ் புத்தாண்டு நன்னாளில் உங்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இன்றிலிருந்து பரமசிவப் பரம்பொருள் நம் எல்லோருக்கும் எல்லா நல்வரங்களும் தந்து, எல்லா மங்களத்தன்மையும் அருளி, பரமாத்வைதத்தை அளித்து, நம் எல்லோரையும் நித்யானந்தத்தில் நிலையுற்று இருக்கச் செய்வாராக.

ஆள்போல் தழைத்து அருகுபோல் வேரூன்றி முங்கில்போல் சுற்றம் சூழ எல்லோரும் எல்லா மங்களங்களும் நிறைந்து பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்வீர்களாக.

பரமாத்வைத நிலையோடு, பரமசிவப் பதத்தோடு, பரமசிவ சக்தியோடு, பரமசிவ நிலையிருந்து, பரமசிவமயமாக, பரமாத்வைதத்திருந்து, எல்லோரும் எல்லா நன்மையுற்று ஆனந்தமாய் வாழ்வீர்களாக.

இன்றைய தமிழ் புத்தாண்டு சத்சங்கத்திற்கும் நிகழ்ச்சிகளுக்கும் இணையத்தின் வழியாக, இதயத்தின் வழியாக இணைந்திருக்கும் உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன். இருமுனை காணொளிக் காட்சியின் வழியாகவும், முகநூல் வழியாகவும் மற்றும் எல்லா சமூக ஊடகங்கள் வழியாகவும் ...யூட்டியூப், வாட்ஸ்அப், ட்விட்டர், டிக்டாக் மற்றும் எல்லா செயலிகளின் வழியாகவும் இணைந்திருக்கும் உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன். பல்வேறு சமூக ஊடக மற்றும் தொலைக்காட்சிகளின் வழியாக இணைந்திருக்கும் அன்பர்களையும் வரவேற்கின்றேன். சாணக்கியா தொலைக்காட்சி, கலாட்டா, கலாட்டா தமிழ், கலாட்டா டிவைன் மற்றும் பல்வேறு தொலைக்காட்சிகள் வழியாகவும், சாட்டை தமிழ்... பல்வேறு தொலைக்காட்சிகளில் நேரலையில் இணைந்திருக்கும் உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன்.

இந்த தமிழ் புத்தாண்டு எல்லோருக்கும் எல்லா நலமும், எல்லா வளமும், இனிமையான வாழ்வும் தந்து, பரமாத்வைத நிலையை அருள ஆசீர்வதிக்கின்றேன்.

இந்த ஸ்ரீ விஷ்வாவசு தமிழ் புத்தாண்டு நன்னாளில் பரமசிவப் பரம்பொருளின் நேரடியான செய்தி மஹாகைலாஸத்திருந்து உங்கள் அனைவருக்கும், மஹாகைலாஸத்தைப் பற்றியும், கைலாஸத்தைப் பற்றியும் பரமசத்தியங்கள்.

ஆழ்ந்து கேளுங்கள், கைலாஸம் மிக மூத்ததுமான, ஞானத்தின் வெளிப்பாடான சனாதன இந்து தர்மத்தின் மறுமலர்ச்சி நாடு. It’s an ancient enlightened Sanatana Hindu Civilizational Nation. தற்போது தமிழ் நியூஸ், மாலை மலர், புதிய தலைமுறை தொலைக்காட்சிகள் மூலமாக இணைந்திருக்கும் அன்பர்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன் மற்றும் சாட்டை தமிழ் தொலைக்காட்சி மூலமாகவும் இணைந்திருக்கும் அன்பர்களையும் வணங்கி வரவேற்கின்றேன்.

ஐயா திரு.சாட்டை துரைமுருகன் அவர்கள் கேள்விகள் அனுப்பியிருக்கிறார்கள், நிச்சயம் அவைகளுக்கு பதில் சொல்லுகின்றேன்.

கைலாஸா நாடு சனாதன இந்து தர்மத்தின், அதன் ஞானப்பரம்பரையின் பூரண ஞானச் சூழலியலை மறுமலர்ச்சி செய்வதற்காக உருவாக்கப்பட்ட நாடு. விதை வங்கிபோல, Seed bank மாதிரி ஒரு இடத்திலாவது சனாதன இந்து தர்மத்தின் ஞானச்சூழலியலைப் புனரமைத்து உயிரோடு வைக்கவேண்டும், அதனுடைய பொற்காலத்தில், சனாதன இந்து தர்மம் தன்னுடையப் பொற்காலத்தில் எவ்வாறு இருந்ததோ அதேபோல் புனரமைக்கப்பட்டு, அமைக்கப்பட்டதுதான் இந்த கைலாஸா தேசம்.

எங்களுக்கென்று சுய-இறையாண்மை உடைய, sovereignty என்று சொல்லப்படுகின்ற சுய-இறையாண்மை உடைய நிலப்பரப்பு இருக்கின்றது மற்றும் autonomous என்று சொல்வோம்-ஒரு குறிப்பிட்ட அளவிற்கு சுய-நிர்ணயம் செய்து கொள்ளுகின்ற உரிமையுடைய நிலப்பரப்புகளும் இருக்கின்றது. ஒன்றிற்கும் மேற்பட்ட இடங்களில், பரமசிவப் பரம்பொருளின் பேரருளால் சில நாடுகள் இதை எங்களுக்கு வழங்கி இருக்கின்றன. முறையான, அகில உலக அளவில் இருக்கின்ற சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு... As per the International standards and International laws, முறையாக Bi-lateral treaties (இருதரப்பு ஒப்பந்தங்கள்) மூலமாவும், Diplomatic treaties (தூதரக ஒப்பந்தங்கள்) முலமாகவும் இந்த நிலங்கள் எங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளன. ஒன்றிற்கும் மேற்பட்ட இடங்களாக இருப்பதனால் வேறு வேறு சேவைகளை அந்த இடங்களில் செய்கின்றோம்.

சனாதன இந்து தர்மத்தின் வேதங்களும் ஆகமங்களுமே சாசனமாகக் கொண்டு, மனுவாதி தர்மசாஸ்த்திரங்கள், மனுவில் துவங்கி 36 தர்மசாஸ்த்திரங்கள் இந்துமதத்தின் முக்கியமான தர்மசாஸ்த்திரங்கள்...அவைகளையே நீதிமுறையாகக் கொண்டு, சன்யாசப் பரம்பரை நடத்துகின்ற நாடாக இந்த கைலாஸா அமைக்கப்பட்டுள்ளது. கிரஹஸ்தர்கள் இருந்தாலும், கிரகஸ்தர்கள் இந்த நாட்டின் பாகமாக இருந்தாலும், இல்லறவாசிகளும்கூட இருந்தாலும், இந்த நாட்டின் நிர்வாகம் மற்றும் எல்லா பொறுப்புகளும் சன்யாசப் பரம்பரையினாலேயே நிகழ்த்தப்படுகின்றது.

கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக பரமசிவப் பரம்பொருளின் பேரருளும், என் குருமார்களின் திருவருளும் எனக்கு அளித்த ஞானத்தை, அனுபூதியை நிரந்தரமாக உயிரோடு வைப்பதற்கும், இதன்மூலமாக சனாதன இந்து தர்மத்தைப் புனரமைத்து, அதனுடையப் பொற்காலத்தில் எவ்வாறு இருந்ததோ அதேபோல் மீண்டும் உயிர்ப்பிக்கச் செய்து, உலக மக்கள் அனைவருக்கும் அளிப்பதே இந்த கைலாஸாவின் நோக்கம். பரமசிவப் பரம்பொருளின் பேரருளால் அவர் இந்த நோக்கத்தில் எங்களுக்கு வெற்றியளித்திருக்கின்றார்.

கைலாஸா இனிமையாக மலர்ந்துவிட்டது, வளர்ந்துகொண்டு இருக்கின்றது.

ஆழ்ந்து கேளுங்கள், மனித இனம் நீண்ட நெடிய பயணத்தால் உருவானது. உயிர் அமீபாவாகத் தோன்றி உடல்ரீதியாக வேறு வேறு நிலைகளில் வளர்ந்து, அமீபாவிலிருந்து குரங்குவரை உடல்ரீதியாக வளர்ந்து, குரங்கில் இருந்து உடல்-மனரீதியாக மனிதன் பரிணமித்து, பிறகு உடல், மனம், உணர்வுகள், உணர்ச்சிகள், ஆன்ம சக்தி போன்ற பல்வேறு நிலைகளிலும் பரிணமித்து, இன்று அடுத்த நிலைக்கு உயிர் செல்லவேண்டிய சூழலில் நாம் இருக்கின்றோம்.

உயிரின் உயிர்ப்பு, ஆன்மாவின் வெளிப்பாடு அமீபாவில் துவங்கி இன்று மனித இனம் இருக்கின்ற நிலை வரை வந்திருக்கின்றது. இதற்குமேல் நிகழவேண்டிய ஒரு மிகப்பெரிய நிலை - 'ஆன்ம விழிப்புணர்வு'. ஆன்மா பரமாத்ம சக்திகளை, பரமாத்ம நிலையை வெளிப்படுத்தி, தன்னுடைய உச்ச நிலையை வெளிப்படுத்தி, அடுத்த நிலைக்கு செல்லவேண்டிய தருணம் வந்துவிட்டது!

அடுத்த நிலைக்கு, ஆத்மாவை பரமாத்மா நிலைக்குக் கொண்டுச் சென்று, பரமசிவப் பரம்பொருளோடு ஒன்றாக இருக்கும் பரமாத்வைத அனுபூதியில் நிறுத்தி, பரமாத்ம அனுபூதியிலிருந்து பரமாத்வைதத்தை, பரமாத்வைத நிலையை, சத்தியங்களை, சக்திகளை வெளிப்படுத்தும் அறிவியல் - ஞான அறிவியல் சனாதன இந்து தர்மத்தில் இருக்கின்றது. It is time, humanity need to have Super conscious breakthrough and Sanatana Hindu Dharma has this great spiritual science.

ஆழ்ந்து கேளுங்கள், சனாதன இந்து தர்மத்தில் இருக்கும் இந்த மிகப்பெரிய ஞான அறிவியலை உலகத்திற்கு அளிப்பதற்காகத்தான் இந்த கைலாஸத்தை அமைத்திருக்கின்றோம்.

அதனுடைய பல்வேறு பரிமாணங்கள், சனாதன இந்து தர்மத்தின் இந்த மிகப்பெரிய ஞான அறிவியல், அதனுடைய பல்வேறு பரிமாணங்கள், அறிவு - அடிப்படையான ஞான அறிவு, அதன் ஞானத்தை வாழுகின்ற வாழ்க்கைமுறை, அனுபூதி - ஞான அனுபூதி, இந்த பரமசிவ ஞானத்தையும், பரமசிவ பக்தியையும், பரமசிவ விஞ்ஞானத்தையும் வாழ்வதற்கான ஞானச்சூழலியல் - ஈகோசிஸ்டம் (Ecosystem) இவை அனைத்தையும் அமைப்பதற்காகவே இந்த கைலாஸத்தை அமைத்திருக்கின்றோம்.

இப்போது மற்றும் பல தொலைக்காட்சி வழியாக இணைந்திருக்கும் அன்பர்களையும், நிலா டி.வி, Zee-தமிழ் நியூஸ், ஐ-தமிழ் நியூஸ், யூத் சென்றல் தமிழ், TN நியூஸ், ஆரோ தமிழ் ரூட்ஸ், புதிய தலைமுறை, NBA சினிமா, இளைய பாரதம், சாட்டை தமிழ் என எல்லா சமூக ஊடகங்கள் மூலமாகவும், தொலைக்காட்சிகள் மூலமாகவும் இணைந்திருக்கும் அன்பர்கள் அனைவரையும் மீண்டும் ஒருமுறை வரவேற்கின்றேன்.

ஐயா திரு.சாட்டை துரைமுருகன் அவர்கள் உங்களுடைய கேள்விகளை அனுப்பிருக்கிறீர்கள். நிச்சயமாக அவைகளுக்கு பதிலளிக்கின்றேன், உங்களையும் வணங்குகின்றேன்.

முதலில் நான் சொல்லவேண்டிய கருத்துகளை சொல்லிவிடுகின்றேன், நான் சொல்லவேண்டிய அறிமுகத்தை அளித்துவிடுகின்றேன். பிறகு உங்கள் எல்லோருடைய கேள்விகளுக்கும் விடையளிக்க முயற்சிக்கின்றேன். பலபேருடைய கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டும், பலபேருடைய விடைகளை கேள்வி கேட்க வேண்டும். இந்த இரண்டையும்தான் இந்த சத்சங்கத்தின் மூலம் செய்யப்போகின்றேன். பலபேருடைய கேள்விகளுக்கு விடையளிப்பேன், பலபேர் வைத்திருக்கும் விடைகளை கேள்வி கேட்பேன்.

மனித இனம் முழுமைக்குமே ஒரு மிகப்பெரிய நன்மையைச் செய்வதற்கான சக்தியையும், அறிவையும், ஞானத்தையும் மனித இனத்தின் உயிரின் உயிர்ப்பை, மனித இனத்தின் ஆன்மாவை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்லுகின்ற மிகப்பெரிய ஞான அறிவியல் சனாதன தர்மத்திற்குள் இருக்கின்றது. அதை உலகத்திற்கு அளிப்பதுதான் எங்கள் நோக்கம். இந்த ஞான அறிவியலை தன்னுள் வைத்திருப்பதனாலேயே என்றென்றும் வாழ்வதற்கான தேவையும் தகுதியும் சனாதன இந்து தர்மத்திற்கு இருக்கின்றது. இந்த அறிவையும், ஞானத்தையும் உலகத்திற்கு அளிப்பதுதான் கைலாஸாவின் நோக்கம்.

நாங்கள் வாழ்ந்து மற்றவர்களுக்கும் அளித்து, இதை செய்வதுதான் எங்களுடைய நோக்கம், குறிக்கோள். பரமசிவப் பரம்பொருளின் பேரருளால் இதில் நாங்கள் வெற்றிகண்டிருக்கின்றோம்.

இதற்கு மேலும், இதற்கு மேலும் பல வெற்றிகளைக் காண்போம். We have revived it, now it is just needed to be expanded more. மறுமலர்ச்சியும் புனரமைப்பும் செய்துவிட்டோம். இதை உலகத்திற்கு அளிப்பதுதான், மேலும் மேலும் பலபேருக்கும் கொண்டுசென்று சேர்ப்பதுதான் இப்பொழுது நாங்கள் செய்யவேண்டியத் திருப்பணி.

இதற்குத் தேவையான, இந்தச் செயலுக்கு தேவையான சுய - இறையாண்மை பொருந்திய நிலமும், அதற்குத் தேவையான அரசாங்க அமைப்பும், அதற்கு தேவையான human infrastructure என்று சொல்கின்ற மனிதர்கள், நிரந்தரக் குடிமக்களாக, அதற்கு தேவையான மனிதர்கள் மற்றும் மற்ற நாடுகளோடு உறவை ஏற்படுத்திக்கொள்ளுகின்ற சட்டரீதியான அமைப்பு, தகுதி - இவை அனைத்தையும் நாங்கள் பெற்றுவிட்டோம்.

அகில உலக நிலைப்பாடுகள்படி - International standardபடி, இந்த நான்கு விஷயங்கள் Sovereign territory, Permanent Population, Government structure, Ability to enter into relationship with other entities and Global entities, International entities and Countries - இந்த நான்கையும் நாங்கள் பெற்றிருப்பதனால் எங்களை நாங்கள் நாடு என்று அழைத்துக்கொள்ளுகின்றோம். அகில உலக நிலைப்பாடுகள்படி ஒரு நாட்டிற்குத் தேவையான நான்கையும் நாங்கள் பெற்றிருப்பதனால், எங்களை நாங்கள் நாடு என்று அழைத்துக்கொள்ளுகின்றோம்.

அடுத்த சில கேள்விகள், ஐயா சாட்டை துரைமுருகன் அவர்கள் அனுப்பியிருக்கின்றார், கைலாஸாவை தனி நாடு என நீங்கள் அழைத்தாலும், ஒரு நாட்டிற்கு சர்வதேச அங்கீகாரம் மிக அவசியம், கைலாஸாவிற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்கும் என நினைக்கிறீர்களா? என்று கேட்டிருக்கின்றார்.

ஐயா, இந்த சர்வதேச அங்கீகாரம் பற்றிய சில தெளிவு நம் எல்லாருக்கும் தெரியவேண்டும்.

முதல் விஷயம்: ஐநா சபை எந்த நாட்டையும் அங்கீரிப்பதில்லை. ஐநா சபையினுடைய சாசனத்தை நீங்கள் எல்லாரும் படித்துப் பாருங்கள், இங்கு வேண்டுமானால் அந்த சாசனத்தைக் காட்டுகின்றேன். ஐநா சபை எந்த நாட்டையும் அங்கீகரிப்பதில்லை. மான்டே வீடியோ உடன்படிக்கையின்படி the political existence of the state is independent of recognition by other states. அடுத்ததாக ஐநா சபை தெளிவாகச் சொல்கிறது, எந்த நாட்டையும் அங்கீகரிப்பது அவர்களுடைய வேலையும் அல்ல. அவர்கள் அதற்கு தகுதி பெற்றவர்களும் அல்ல.

ஐநா சபையில் பல நாடுகள் உறுப்பு நாடுகளாக இருக்கின்றன. இது முதல் தெளிவு.

இரண்டாவது, உண்மையில் நடைமுறையில் நான் ஒரு functional nation - நடைமுறையில் ஒரு நாடாக இயங்குவதற்கு அடிப்படையாக எங்களுக்கு என்ன தேவையோ அந்த நான்கும் இருக்கின்றது.

எங்களை யார் நாடு என்று அங்கீகாரம் செய்யவேண்டும்? எங்களுடைய எட்டுத் திசையிலும் இருப்பவர்கள், எங்களைச் சுற்றி எட்டுத் திசையிலும் இருக்கின்ற நாடுகள் எங்களை 'நாடு' என்று அங்கீகாரம் செய்தால் போதும். அதுதான் முதல்படி.

உண்மையில் இந்த நிலம், நாங்கள் இருக்கின்ற நிலப்பரப்புகளை எங்களுக்கு அளித்தவர்கள், எங்களைச் சுற்றி இருக்கின்ற நாடுகள் - அவர்கள்தான் இதை எங்களுக்கு அளித்ததனால், அவர்கள் மிகத்தெளிவாக, எங்களுக்கு நடுவில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்திலே மிகத்தெளிவாக, இது உங்களுடைய சுய-இறையாண்மையோடு நீங்கள் உங்கள் நாட்டை நடத்திக்கொள்வதற்காக அளிக்கப்பட்ட நிலப்பரப்பு என்று ஒரு சிறு நிலப்பரப்பை அளித்துவிட்டார்கள். தெளிவாக அந்த தீர்மானத்திலே, அந்த ஒப்பந்தத்திலே இருக்கின்றது. நாங்கள் அவர்களுடைய செயல்பாடுகளில் தலையிடக்கூடாது, அவர்கள் எங்களுடைய செயல்பாடுகளில் தலையிடமாட்டார்கள். அதேமாதிரி international standards என்று சில விதிகள் இருக்கின்றன, அதாவது வேறு எந்த நாட்டினுடைய செயல்பாடுகளிலே நாங்கள் தலையிடக்கூடாது. இதுபோன்ற உடன்படிக்கைகளில் கையெழுத்திட்டிருக்கின்றோம். அதனால், எங்களைச் சுற்றி இருக்கின்ற நாடுகள் எங்களை 'நாடாக' அங்கீகரித்துவிட்டது. அது முதல் விஷயம்.

அடுத்தது திரு.சாட்டை துரைமுருகன் அவர்கள் கேட்கிறீர்கள், சர்வதேச அங்கீகாரம் மிக அவசியம் என்று.

ஐயா, நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், இந்த சர்வதேச அங்கீகாரத்தில் பல படிகள் இருக்கின்றன.

அப்படியென்றால், இப்பொழுது உங்களுக்கு பணம் கடனாக வேண்டும் என்றால், International Monetary fund, IMF-ல் உறுப்பினராக இருக்கவேண்டும். IMF உங்களை ஒரு நாடாக ஏற்றுக்கொள்ளவேண்டும், IMF-னுடைய அங்கீகாரமும், உறுப்பினர்நிலையும் வேண்டும். IMF உங்களை ஒரு நாடாக அங்கீகரித்து அதனுடைய உறுப்பு நாடாக சேர்த்துக்கொள்ள வேண்டும். இன்னொன்று ஆயுதங்கள் வேண்டுமென்றால், எந்த நாட்டுடன் நீங்கள் ஆயுதங்களை வாங்க வேண்டுமோ, எந்த நாடு உங்களுக்கு ஆயுதங்களைக் கொடுக்க வேண்டுமோ, அந்த நாடு உங்களை நாடாக அங்கீகரிக்க வேண்டும், உங்களுக்கு ஆயுதங்கள் கொடுக்கவேண்டும். அதற்காகத்தான் இந்த அங்கீகாரங்கள் எல்லாம் தேவை.

எனக்கு கடனும் தேவையில்லை, ஆயுதங்களும் தேவையில்லை. அதனால் எனக்கு தேவையான சர்வதேச அங்கீகாரம் என்னவென்றால், கலாச்சார ரீதியாக எங்களை ஒரு நாடு என்று Apolitical Nationஆக ஏற்றுக்கொள்ளவேண்டும். நாங்கள் ஒரு Apolitical Nation. அரசியலைத் தாண்டிய, சாதாரண அரசியலைத் தாண்டிய நாடு. எந்த நாட்டிற்கும் போட்டியாகவோ, பகையாகவோ உருவான நாடு அல்ல நாங்கள். We are here to complement all the nations, not compete with any nation. அதனால், எங்களுக்குத் தேவையான அங்கீகாரம் என்னவென்றால் கலாச்சாரரீதியான ஆன்மிகரீதியான உறவுகள், பண்பாட்டுரீதியான உறவுகள். பண்பாட்டுரீதியாக, கலாச்சாரரீதியாக, ஆன்மிகரீதியாக - இது சார்ந்த உறவுகள் மூலமாக சர்வதேச அங்கீகாரம்தான் எங்களுக்கு தேவை. அந்த மாதிரியான சர்வதேச அங்கீகாரங்களை ஐம்பதிற்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து நாங்கள் பெற்றுவிட்டோம்.

கைலாஸாவை Apolitical nationஆக, இப்பொழுது வாடிகன் எப்படி பல நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றதோ, ஒரு Religions Nationஆக – அதேபோல, அதே அந்தஸ்துடன் (status) ஐம்பதுற்கும் மேற்பட்ட நாடுகள் எங்களை அங்கீகரித்திருக்கின்றன. அந்த அங்கீகாரம் இப்போதைக்கு எனக்குப் போதுமானது. அதனால், இதற்குமேல் எங்களுக்கு அங்கீகாரங்கள் கிடைக்கும், அதற்கான திருப்பணிகளையும் செய்துகொண்டிருக்கின்றோம்.

அது Expansion, அது மேலும் மேலும் வளர்வதற்கான செயல், அது வளர்ச்சிதானே தவிர, எங்களுடைய existence-ஐ எங்களுடைய இருப்பை, 'நாடு' என்று சொல்லிக்கொள்வதை யாரும் மறுக்க முடியாது. அதற்குத் தேவையான எல்லாச் செயல்களையும், எங்களை 'நாடு' என்று சொல்லிக்கொள்வதற்கான எல்லா செயல்களையும், அங்கீகாரங்களையும் நாங்கள் அடைந்து விட்டோம். நீங்கள் 'சர்வதேச அங்கீகாரம்' என்று சொல்வது பலநிலை. தேவைகளுக்கு ஏற்றார் போல்தான் இந்த சர்வதேச அங்கீகாரங்கள். அதனால், எங்கள் தேவைக்கு என்ன வேண்டுமோ அது மாதிரியான சர்வதேச அங்கீகாரங்களை நாங்கள் அடைந்து விட்டோம்.

இதற்கு அடுத்து என்னவென்றால், உலகம் முழுவதும் இருக்கின்ற நாடுகளில், 66 நாடுகளில் இந்து மதத்தை மதமாகவே எற்றுக்கொள்ளாமல் இருக்கின்றார்கள். அந்த நாடுகளோடு தூதரகரீதியான உறவுகளை ஏற்படுத்தி, அவர்களை 'சனாதன இந்துதர்மத்தை ஒரு மதமாக அங்கீகரிக்கவேண்டும்' என்ற வேண்டுகோளை வைத்து, அது மாதிரியான கலாச்சார பண்பாட்டுரீதியான உடன்படிக்கைகள், உறவுகளை செய்துகொண்டு இருக்கின்றோம். மூன்று நாடுகளில் வெற்றியடைந்து இருக்கின்றோம். மற்றும் மற்றைய நாடுகளில் தொடர்ந்து செயல்பட்டு, சனாதன இந்து தர்மத்தை மதமாக அங்கீரிக்கின்ற செயல்பாடுகளை தொடர்ந்து செய்வோம். எங்களுடைய தேவைக்கு என்னென்ன சர்வதேச அங்கீகாரம் தேவைய, அவைகளை பரமசிவப் பரம்பொருள் எங்களுக்கு அளித்திருக்கின்றார், தொடர்ந்து அளித்துக்கொண்டிருக்கின்றார்.

அதாவது, எப்படி வாடிகன் வந்து 'ரோமன் கத்தோலிக்க திருச்சபையின்' தலைமையகமாக இயங்குகிறதோ, அவர்கள் அந்த சம்பரதாயத்தை உயிரோடு வைக்கின்றார்களோ, அரசியலுக்கு அப்பாற்பட்டு, எந்த அரசியல் மாற்றத்தாலும் அவர்களுடைய சாசனத்தை மாற்ற முடியாது, அது மாதிரியான ஒரு ஸ்திரமான, அவர்களுடைய மதத்தையும் சம்பிரதாயத்தையும் உயிரோடு வைப்பதற்காக அவர்கள் இயங்குகிறார்களோ, அதேபோல சனாதன இந்து தர்மத்தை உயிரோடு வைப்பதற்காக, மாற்ற முடியாத சாசனத்தை அடிப்படையாக வைத்து, சனாதன இந்துதர்மத்தை உயிரோடு வைப்பதற்காக, சனாதன இந்து தர்மத்தின் திருக்கயிலாய பரம்பரை, சன்யாச பரம்பரையினாலே, சன்யாச பரம்பரையின் மூலமாக நிர்வாகம் செய்யப்பட்டு நடத்தப்படுகின்ற நாடு கைலாஸா. அதனால், மான்டேவீடியோ உடன்படிக்கையின்படியும், ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின்படியும் நாங்கள் 'நாடுதான்'. இதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

ஒன்றிற்கும் மேற்பட்ட சுய - இறையாண்மையுடைய நிலப்பரப்புகளும், Autonomous status என்று சொல்கின்ற சுய -நிர்ணய உரிமை கொண்ட நிலப்பரப்புகளும் உடைய, நிரந்தரமான மக்கள் தொகை உடைய, நிரந்தரமான அரசியல் அமைப்பும் - நிர்வாக அமைப்பும் உடைய, மற்ற நாடுகளோடு உறவுகளை ஏற்படுத்திக்கொள்வதற்கான தகுதியும் திறமையும் உடைய, இவைகள் அனைத்தையும் செய்துகாட்டி, நடைமுறையில் நல்லபடியாக, அமைதியாக, இனிமையாக இயங்கிக்கொண்டிருக்கின்ற, பரமசிவப் பரம்பொருளின் அருளாலே எல்லா வளத்தோடும் ஆனந்தத்தோடும் இயங்கிக்கொண்டிருக்கின்ற, பரமாத்வைதத்தை வாழ்ந்து கொண்டிருக்கின்ற நாடு கைலாஸா.

எங்களுடைய அடிப்படை சாசனம் - வேதமும் ஆகமமும். Fundamental rightஎன்று சொல்வோம். The first amendment of Kailasa என்னவென்றால், ஒவ்வொரு ஜீவனும் பரமசிவப் பரம்பொருளை தனக்குள் உணர்ந்து, பரமாத்வைத நிலையை 'நாமே பரமசிவம், பரமசிவம் நமக்குள்ளேயே இருக்கின்றார்' என்ற பரமாத்வைத சத்தியத்தை வாழ்வதற்கான உரிமை! இதை வாழ்வது, நீங்கள் உங்களை பரமசிவப் பரம்பொருளாக உணர்வது -உங்கள் உரிமை. உங்களை சுற்றி இருக்கும் அனைவரும் அதேபோல் உங்களை நடத்துவது, உங்களை பரமசிவப் பரம்பொருளாக நடத்துவது உங்கள் உரிமை.

நீங்கள் மற்றவர்களை அதேபோல் பரமசிவப் பரம்பொருளாக நடத்துவது, உங்கள் கடமை. இதிலிருந்துதான் எங்களுடைய first amendment துவங்குகிறது, fundamental rights துவங்குகிறது.

இதுவே எங்களுடைய சாசனத்தைப்பற்றி ஒரு அடிப்படையான சத்தியத்தை, ஒரு அடிப்படையான அறிமுகத்தை உங்களுக்குக் கொடுத்துவிடும். முழுக்க முழுக்க ஞானத்தை அடிப்படையாக வைத்து எந்தவிதமான வன்முறையும் இல்லாத, ஹிம்சையும் இல்லாத, முழுமையான அஹிம்சையை அடிப்படையாக வைத்த, ஞானத்தை அடிப்படையாக வைத்த தேசம் - கைலாஸா.

அதனால்தான் எங்களுக்கு இராணுவமும் இல்லை, தனியாக எங்களுக்கென்று காவல்துறையும் வைத்துக் கொள்ளவில்லை. எங்களுடைய உள்கட்டமைப்பை முறையாக நடத்துவதற்கு, அதற்கு என்று integrity department என்று ஒரு துறையை வைத்திருக்கிறோம். யாராவது ஏதாவது பிழைகள் செய்வார்களேயானால், அவர்கள் ஆன்மிகரீதியான தவம் தியானம் மற்றும் நம்முடைய சனாதன இந்துதர்மத்தில் அளிக்கப்பட்டிருக்கும் பிராயச்சித்தங்களை செய்து தங்களைத் தாங்களே மாற்றிக்கொண்டு, மேல்நிலைக்கு வந்து ஆன்மிக உயர் நிலையை அடைவதற்கான, வழிகாட்டுவதற்கான ஒரு அமைப்பை வைத்திருக்கின்றோம்.

அதற்காக ஒரு துறையை வைத்திருக்கிறோம்: அது Spiritual Integrity department - ஆன்மிக நேர்மைத்தன்மையை நமக்குள் மலரச் செய்துகொள்வதற்கானத் துறை.

நேரலையில் ஐயா திரு. சாட்டை துரைமுருகன் அவர்கள் கேள்வி கேட்கிறார்கள், இவர் உண்மையான நித்யானந்தர் இல்லை, AI தொழில்நுட்பம் என்று சிலர் சொல்கிறார்கள்…

ஐயா, இந்த கேள்விக்கு எப்படி பதில் சொல்வது என்று யோசித்துதான் சொல்லவேண்டும். ஏனென்றால், உண்மையில் இப்பொழுது இருக்கின்ற தொழில்நுட்பம் - Technology, மனிதர்கள் செய்யக்கூடிய அனைத்தையும் செய்கின்ற அளவிற்கு AI தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது, அது உண்மைதான். ஆனால் ஒரு விஷயம், AI தொழில்நுட்பம் யோசிக்காமல் பதில்சொல்லும். நான் இப்பொழுது யோசித்து பதில் சொன்னேன் பாருங்கள், அதை வைத்து 'நான் AI தொழில் நுட்பம் அல்ல, நிஜமாக இருக்கும் நித்யானந்தர்தான் என்று நீங்கள் புரிந்துகொள்ளலாம். அப்படி வேண்டுமானால் சொல்லலாம்.

எங்களுடைய முதல் அறிக்கை, ஜ்ஞாத்வா தேவம் சர்வபூதேஷு ஶிவம் ஸ்திதம் அவ்யயம் பஜந்திதே தீரா: மோக்ஷம் இச்சந்தி எதைய ஸதா: அனைத்து உயிர்களிலும் பரமசிவப் பரம்பொருள் என்றும் அழியாத ஆத்மாவாக நிலைபெற்றுள்ளான் என அறிந்த ஞானிகள், நித்யமாக அவனை வழிபட்டு மோக்ஷத்தை நாடுகின்றனர். இதை அடிப்படையாக வைத்து, நீங்கள் உங்களை பரமசிவப் பரம்பொருளாக உணர்வதற்கும், மற்றவர்களையும் பரமசிவப் பரம்பொருளாக உணர்வதற்கும், உங்களுக்கு அளிக்கப்படும் சுதந்திரமே முதல் சுதந்திரம். இதுதான் Fundamental Right, இதை நீங்கள் வாழ்வதற்கான சூழலியல், ஆன்மிக சூழலியல்தான் இந்த கைலாஸம். இதே ஞானக்கருத்தை தங்கள் வாழ்க்கையாக ஏற்றுக்கொண்ட நபர்களோடு வாழ்வதுதான் சுவர்க்கம், அதுதான் கைலாஸம். அதாவது, கருத்தியல்ரீதியாக ஒத்த, இனிமையான ஒன்றுபட்ட கருத்துடைய மக்கள் ஒன்றிணைந்து வாழும்பொழுது, அவர்கள் ஒரு மிகப்பெரிய ஆன்ம பலமாக மாறுகின்றார்கள்.

ஒரு நாடு என்றால் என்வென்று ஒரு சிறிய விளக்கம் சொல்லிவிடுகிறேன் கேடுக்கொள்ளுங்கள், ஒன்றுமே இல்லை ஐயா, ஒரு 100 பேர் ஒரே frequency-யுடன் Vibrateஆவது. ஒரே கருத்துடன், ஒத்த கருத்துடன் Vibrateஆவது. அந்த ஒத்த கருத்திற்காக, அந்த ஒரு சத்தியத்திற்காக தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்து, அதை ஆனந்தமாக வாழ்வதுதான், அந்த மாதிரி ஒரு கட்டமைப்புதான் (infrastructure) ஒரு நாடு, வேறு ஒன்றுமே இல்லை.

எல்லா மிகப்பெரிய நாடுகளுமே ஒரு குழு, ஒரு 100, 200 பேர், ஒரு principle-ஐ ஒரு கருத்தை ஏற்றுக்கொண்டு எடுக்கின்ற முடிவுகள்தான் ஒரு நாடு.

அந்த முடிவுகளைத்தான் கோடிக்காண மக்கள் நடைமுறைப்படுத்துகிறார்கள், அப்படித்தான் எல்லா நாடுமே நடக்கிறது. நீங்கள் என்னவேண்டுமானால் பெயர் சொல்லிக்கொள்ளலாம், வேறு வேறு பெயர் வைத்துக்கொள்ளலாம், வேறு வேறு அரசியல் தத்துவங்கள் என்று வைத்துக்கொள்ளலாம், ஆனால் நடைமுறையில் இப்படித்தான் நடக்கிறது. அதேபோல ஒரு சில ஆயிரம் பேராவது இந்த ஒரு கருத்திற்கு, 'சனாதன இந்து தர்மம் சத்தியம், அதைப் புனரமைத்து, அதன் மிகப்பெரிய உலகத்திற்கு அளிக்க வேண்டிய பங்களிப்புகளை உலகத்திற்கு அளிப்பது சத்தியம், இது சாத்தியம் என்கின்ற இந்த ஒரு சத்தியத்தை உயிராகக்கொண்டு, அதற்காக தங்கள் வாழ்க்கையையே அர்ப்பணிக்கும் சில ஆயிரம் பேர் ஒன்றிணைந்ததனால், பரமசிவப் பரம்பொருளின் பேரருளும் அவரால் அளிக்கப்பட்டதனால், இந்த கைலாஸா அவர் அருளாலே நிஜமாக மாறியது. இனிமையாக, ஆனந்தமாக வளர்ந்துகொண்டிருக்கின்றது, இதுதான் உண்மை. நடைமுறையில் ஒரு functional nationஆக நடப்பதற்கு என்னென்ன வேண்டுமோ, அதை செய்துவிட்டோம். இதற்குமேல் வளர்வதை மட்டும்தான் செய்யவேண்டும். நாங்கள் மற்ற நாடுகள் போல ஒரு அரசியல் சார்ந்த, அரசியல் கருத்துக்கள் சார்ந்த நாடு கிடையாது. நாங்கள் உலகம் அனைத்திருக்கும் பங்களிப்பதற்காக, உலகம் அனைத்திருக்கும் சேவை செய்வதற்காக, சனாதன இந்துதர்மத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட, Apolitical Nation, அரசியலை கடந்த ஆன்மிக தேசம்.

நிறைய பேர் கமெண்ட்சில் நேரலையில் கேட்கிறீர்கள்… உங்களுக்கு பின்னணியில் யார் இருக்கிறார்கள்? பின்னணியில் யார் இருக்கிறர்கள் என்றால் காட்டுக்கொள்கிறேன் பார்த்துக்கொள்ளுங்கள் ஐயா, பரமசிவனும் பரமசிவசக்தியும்தான் இருக்கிறார்கள். அப்பா காட்டுப்பா எனக்குப் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்று. அவர்கள்தான் இருக்கிறார்கள், கொஞ்சம் அசைத்து வேண்டுமானால் காட்டுகிறேன், பார்த்துக்கொள்ளுங்கள். அவர்கள்தான் எனக்குப் பின்னணியில் இருக்கிறார்கள். அவர்கள்தான் இது அத்தனையும் என் மூலமாக நடத்துகிறார்கள் ஐயா. அவர்களைத் தவிர வேறு யாரும் பின்னணியில் இல்லை. அவர்களும், அவர்களுடைய வெளிப்பாடுகள் - விநாயகர், முருகன், வெங்கடேஷ்வரன்... அவர்களுடைய வெளிப்பாடுகளான எல்லா தெய்வங்களும், அவர்கள்தான் எங்கள் பின்னால் இருக்கிறார்கள், அவர்கள்தான் எங்கள் மூலமாக நடத்துகிறார்கள், வேறு யாரும் எங்கள் பின்னணியில் இல்லை, அதுதான் உண்மை.

இதுவரையிலும் நாங்கள் செய்திருக்கின்ற செயல்கள், செயல்பாடுகளை சுருக்கமாக சொல்லிவிடுகிறேன். உண்மையில் இந்த கைலாஸா கடந்த 25 இந்த ஆண்டுகள் இயக்கம் என்று பலபேர் நினைக்கிறீர்கள். அப்படிக் கிடையாது! என்னுடைய குருமார்கள், என்னுடைய குருப்பரம்பரை, பரமசிவப் பரம்பொருளின் பேரருளால் எப்பொழுது என்னுடைய குருப்பரம்பரை என்னை ஏற்றுக்கொண்டு, எனக்குப் பயிற்சிக்கொடுத்து என்னை வளர்க்கத் துவங்கினார்களோ, அப்பொழுதே கைலாஸத்தின் மறுமலர்ச்சி துவங்கிவிட்டது.

ஏனென்றால் இந்தத் திருப்பணிக்காகவே அவர்கள் என்னைத் தயார் செய்தார்கள், உண்மை அதுதான். அதனால்தான் இந்த பெயர்கூட, கைலாஸா என்கின்ற பெயர்கூட, காஞ்சிபுரத்தில் இருக்கின்ற தொண்டைமண்டல ஆதீனத்தின் பெயர்தான் இது. 'காஞ்சி கைலாச பீடம்' என்பது தொண்டை மண்டல ஆதீனத்தின் மூலப்பெயர். 'காஞ்சி கைலாச பீடம்' - அதுதான் ஓரிஜினல் பெயர்.

கடந்த 11 குருமஹாசன்னிதானங்கள், தொண்டைமண்டல ஆதீனத்தின் 11 குருமஹாசன்னிதானங்கள் நேரடியாக என்னுடைய குடும்பத்திலிருந்து வந்தவர்கள். நான் பிறந்து வளர்ந்த குடும்பத்திலிருந்து வந்தவர்கள். அதாவது 233 குருமஹாசன்னிதானங்களுமே நான் பிறந்து வளர்ந்த குடும்பத்திலிருந்து வந்தவர்கள் என்பது வரலாறு. இந்த கடந்த 11 குருமஹாசன்னிதானங்களுக்கு ஆதாரம் வைத்திருக்கின்றோம். கடந்த 11 குருமஹாசன்னிதானங்கள் நான் பிறந்து வளர்ந்த குடும்பத்திலிருந்து வந்தவர்கள் என்பதற்கான குடும்ப வரைப்படத்துடன் வைத்திருக்கின்றோம். குடும்ப வரைப்படத்துடன் வரைந்து இணைத்து வைத்திருக்கின்றோம். அதனால் 230, 231, 232 - இந்த மூன்று குருமஹாசன்னிதானங்களும், இந்தத் திருப்பணியைச் செய்வதற்காகவே எனக்குப் பயிற்சி கொடுத்து வளர்த்தார்கள். இதுதான் உண்மை.

நான் சுயம்பு கிடையாது, என் மூலமாக நிகழ்ந்திருக்கும் எல்லா நன்மைக்கும் என் குருப் பரம்பரையே பொறுப்பு. ஏதாவது தீமை இருந்தால் நீங்கள் என்னைப் பழித்துக்கொள்ளுங்கள், அதைப்பற்றி எனக்கு கவலையில்லை. நீங்கள் தீமை என்று நினைத்துப் பழித்தால், நீங்கள் பழித்துக்கொள்ளலாம். அது உங்கள் விருப்பம். என் மூலமாக நடந்திருக்கும் எல்லா நன்மையும், என் குருமார்கள் பேரருளாலே, திருவருளாலே நிகழ்ந்திருக்கின்றது.

திருவண்ணாமலையில் பரமசிவப் பரம்பொருளின் பேரருளால் 1978ஆம் ஆண்டு, ஜனவரி இரண்டாம் தேதி பின்னிரவு, மார்கழி மாதம், சித்திரை நக்ஷத்திரம், கிருஷ்ண பக்ஷ அஷ்டமி திதியில் பிறந்தேன்.

ஏன் நக்ஷத்திரம் இராசி சொல்கிறேன் என்றால், எங்களுக்குக் கிடைத்த குறிப்புகளில் இதுதான் இருக்கிறது. இந்த ஜோதிட குறிப்பு மட்டும்தான் எங்களுக்குக் கிடைத்திருக்கிறது. பிறப்புச் சான்றிதழ் எதுவும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. அதனால்தான் ஜனவரி 1ஆம் தேதியா, 2ஆம் தேதி என்று ஒரு சிறு சந்தேகம் இருந்தது. ஏனென்றால் என்னுடைய தாயாரின் நினைவுப்படி ஜனவரி 1 என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் இந்த ஜோதிட குறிப்புகள்படி, வீட்டில் இருக்கின்ற மற்ற மூத்தவர்கள் அவர்களுடைய குறிப்புப்படி ஜனவரி 2ஆம் பின்னிரவு என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆங்கில தேதிபடி ஜனவரி 3-ல் வரும். ஏனென்றால் பின்னிரவு 12.30 மணிக்கும் மேல், அதனால் ஆங்கில தேதிபடி ஜனவரி 3 என்று வரலாம். இதுதான் பிறந்த தேதி. இதில் பலபேருக்கு நிறைய குழப்பங்கள் இருப்பதனால் தெளிவு படுத்திவிடுகின்றேன். அந்தக் காலத்தில் பிறப்பு சான்றிதழ் எல்லாம் இல்லை.

பிறந்த இடம் அண்ணாமலையார் ஆலயம், ஆறாம் பிரகாரம் என்று சொல்லுவோம். அண்ணாமலையார் ஆலயத்தினுடைய இராஜவீதி. அதனால் அவன் அருளாலே அவருடைய ஆலயத்திற்குள்ளேயே பிறந்து, ஆலயத்திற்குள்ளேயே வளர்வதற்கான பெரும்பாக்கியத்தை, புண்ணியத்தை அவர் தந்தார். அவருடைய Spiritual Ecosystem - அவருடைய ஞானச்சூழலியலிலேயே பிறந்து வளர்வதற்கான பெரும் வாய்ப்பை அளித்தார்.

மூன்று வயதிலே என்னுடைய குருமார்கள் பாலசன்யாசம் கொடுத்து முதல் சாதுர்மாசியத்தை துவங்கி வைத்தார்கள். கட்டாயமாக எனக்கே 3 வயதில் பூஜை செய்யவெல்லாம் தெரியாது. என்னை அவர்கள் மடியில் அமரவைத்து, அவர்கள் கைப்பிடித்து பூஜை செய்ய வைத்தார்கள், அப்படித்தான் நடந்தது. இது மூன்று வருடத்தில் நடந்தது, எந்த தேதியில் நடந்தது எல்லாம் எனக்கு தெரியாது. அந்த நிகழ்வை புகைப்படத்தை எடுத்த, புகைப்படக்காரர் இன்னமும் திருவண்ணாமலையில் உயிரோடு இருக்கிறார். அந்த புகைப்படக்காரர், அந்தப் படத்தை எங்களுக்குக் கொடுத்து, அந்த நிகழ்ச்சியைப் பற்றியும், யார் யாரெல்லாம் அங்கு வந்திருந்தார்கள், என்ன நடந்தது என்று தெளிவாக எழுதிக்கொடுத்தார். அதுதான் எங்களிடம் இருக்கின்ற ஆதாரம்.

ஏனென்றால், எனக்கே அந்த மூன்று வயதில் நடந்ததைப்பற்றி முழுமையான நினைவுகள் இல்லை. இப்படித்தான் என்னுடைய ஆன்மிக வாழ்க்கைத் துவங்கியது. பிறகு என்னுடைய குருமார்கள் எனக்களித்த பயிற்சி. அந்த காலகட்டத்திலே, திருவண்ணாமலை ஆலயத்திற்குள் குருகுலமாகவே இயங்கி வந்தது. என்னுடைய குருமார்கள் காலையில் யோகப் பயிற்சியிலிருந்து வெவ்வேறு சம்பிரதாயத்தின் பயிற்சிகளை வேறு வேறு குருமார்கள் அளித்தார்கள். இப்பொழுது திரும்பிப் பார்க்கும்பொழுது எனக்கென்னவோ அவர்கள் பயிற்சி அளித்த விதமே, இந்த 'கைலாஸா' எனும் திருப்பணியை செய்வதற்காகத்தான் பயிற்சி அளித்தார்கள் என்று நான் நம்புகிறேன், உளமார நம்புகிறேன்.

காரணம் என்னவென்றால் உடல்ரீதியாக, மனரீதியாக, உயிர்ரீதியாக, ஆன்மரீதியாக அறிவுரீதியாக உணர்வுரீதியாக, உணர்ச்சிரீதியாக பல்வேறு தளங்களில் அவர்கள் எனக்கு அளித்தப் பயிற்சி இந்த கைலாஸா நாட்டை அமைப்பதற்கு மிகப்பெரிய உதவியாக இருக்கின்றது.

இதை செய்வதற்கு தேவையான அனைத்தையும் அவர்கள் எனக்கு கொடுத்துவிட்டார்கள். அதனால்தான், இப்பொழுது திரும்பிப் பார்க்கும்பொழுது, ஒருவேளை அவர்கள் 'தெளிவான முடிவோடுதான் இந்த பயிற்சிகளை அளித்திருக்கின்றார்கள் என்று நான் ஸ்திரமாக நம்புகிறேன்.

ஏனென்றால், அவர்கள் எனக்கு சொல்லிக்கொடுத்த கருத்துகள், அவர்கள் எனக்கு அளித்த அறிவு, வாழ்க்கையைப் பற்றிய பார்வை, இது எல்லாமே 'நான்' முளைத்து எழும் முன்பாகவே பரமசிவப் பரம்பொருள் தானாய் முளைத்தெழ, தானாய் விளைத்தெழ, தானாய் பொங்கிப்பெருக, தானாய் நிரந்தரமாய் நிலைப்பெற்றிட, குருமார்கள் - குருப்பரம்பரை பேரருள் செய்தது. அவர்கள் திருவருளாலே இந்த அனுபூதி மலர்ந்தது, பரமாத்வைத அனுபூதி மலர்ந்தது. இந்த புகைப்படத்தை எடுத்த புகைப்படக்காரர் இன்னமும் திருவண்ணாமலையில் உயிரோடு இருக்கின்றார். அவருடைய காப்பகதத்திலிருந்து இந்த புகைப்படத்தை கொடுத்தார்.

உண்மையில் அந்தக்காலத்தில் திருவண்ணாமலையில் மொத்தமாவே ஒரு இரண்டு மூன்று புகைப்படக்கார்கள்தான் ஊருக்குள் இருப்பார்கள். அவர்கள்தான் உண்மையில் எந்த நிகழ்ச்சியென்றாலும், போட்டோ வீடியோவை அவர்கள்தான் எடுப்பாங்கள். அதனால் அவர்களுடைய காப்பகத்திலிருந்தது… அந்தக்காலத்தில் அந்த நெகட்டிவை எல்லாம் ஸ்டூடியோவில் வைத்திருப்பார்கள் இல்லையா? அந்த மாதிரி அவர்களுடைய காப்பகத்திலிருந்து அவர் எங்களுக்கு எடுத்துக் கொடுத்தார். பிறகு நாங்கள் கேட்டோம். 'இந்த மாதிரி என்ன நடந்தது என்று உங்களால் சொல்ல முடியுமா ஐயா, நினைவில் இருக்கிறாதா?' என்று. அவர் வந்து பட்டியலிட்டு, என்ன நடந்தது யார் யார் வந்தார்கள்? என்னென்ன சடங்குகள் செய்யப்பட்டன, என்னென்ன சம்பிரதாயங்கள் செய்யப்பட்டன என்று அவர் எழுதிக்கொடுத்தார். அதை வைத்துதான் இந்த தேதியை எங்களால் முடிவுக்குவர முடிந்தது. இதிலிருந்து மற்ற பல தீக்ஷைகள், பயிற்சிகள் இதெல்லாம் நடந்தது. அப்பொழுதிலிருந்தே இந்த கைலாயத்தின் புனரமைப்பு துவங்கிவிட்டது என்று நான் ஸ்திரமாக நம்புகின்றேன்.

நாற்பது ஆண்டுகளாக இந்துமதத்தினுடைய பல்வேறு சாஸ்த்திரங்களை உலகம் முழுவதிலுமிருந்து சேகரித்திருக்கின்றோம். மொத்தம் பத்து இலக்ஷத்திற்கும் மேலான புத்தகங்கள், ஒரு கோடிக்கும் மேலான டிஜிட்டல் புத்தகங்கள், நிறைய இப்பொழுது புத்தக வடிவத்திலேயே இல்லாமல், கணினிமயமாக்கட்ட வடிவமாகத்தான், ஓலைச்சுவடிகளைக் கணினிமயமாக்கி, அந்த மாதிரி அந்த கணினிமயமாக்கப்பட்ட வடிவங்களாக, பல மூலைகளிலிருந்தும் அலைந்து திரிந்து, நான் மட்டுமல்ல, என்னுடைய சன்யாச சம்பிரதாயம், இதற்காக பல்லாயிரம்பேர் தங்களுடைய நேரம், பணம், புத்திசாலித்தனம் (Time Treasure Talent) அனைத்தையும் தியாகம் செய்து, இந்த பெரும் திருப்பணியை செய்திருக்கின்றார்கள். இந்தமதத்தின் பல சாஸ்த்திரங்களை உலகத்தின் பல்வேறு பாகங்களிலிருந்தும் ஒன்றாக சேர்த்திருக்கின்றோம். அதில் முதல் விஷயம், இதில் பெரும் பகுதியை copyright freeயாக சட்டப்படி செய்திருக்கிறோம். அப்படியென்றால் யார் எங்களுக்குக் கொடுத்தார்களோ, அவர்களிடமிருந்தே இதை copyright freeயாக எல்லாருக்கும் வெளியிடுவதற்கான உரிமையை சட்டப்படி வாங்கியிருக்கின்றோம். இது மாதிரி பெரும் திருப்பணி கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக நிகழ்ந்திருக்கிறது.

உண்மையாக சொல்லவேண்டுமென்றால், இந்த திருப்பணிக்காக என்னோடு சேர்ந்து ஒரு தலைமுறை தங்களுடைய நேரம், பணம், புத்திசாலித்தனத்தை தியாகம் செய்திருக்கிறார்கள். நாங்க மொத்தமாகப் பாத்தோம்... யார் யாரெல்லாம் இந்த மாதிரி எங்களுக்கு பழைய நூல்கள், ஓலைச்சுவடிகளுடைய கணினிமயமாக்கப்பட்ட நகல், பொதுவாக என்ன செய்வோம், இந்த ஒலைச்சுவடியையே வாங்கமாட்டோம், கணினிமயமாக்கிவிட்டு ஒலைச்சுவடியை அவர்களிடம் திருப்பிக் கொடுத்துவோம். ஏனென்றால் அவர்கள் அதைப் புனிதமாக கருதுவார்கள், அவர்கள் அதை வைத்திருப்பார்கள். அது அவர்களுடைய பாரம்பரிய சொத்து என்பதனால் கணினியமாக்குவது, அது அழிந்துபோய்விடாமல் கணினிமயமாக்கும் திருப்பணியைத்தான் செய்திருக்கின்றோம்.

இந்த மொத்த திருப்பணியிலும் எங்களுக்கு உதவியவர்கள், நன்கொடை கொடுத்தவர்கள் இது எல்லாம் பார்த்தால் 60,000 பேருக்கும்மேல் இதில் செயல்பட்டிருக்கிறார்கள். இதையெல்லாம் ஒருங்கிணைத்து, சேகரித்து, தொகுத்து ஒரு பெரிய கணினிமயமாக்கப்பட்ட நூலகமாகச் செய்யவேண்டும் என்பதும், இது அனைத்தையும் அச்சடித்து நூலகமாகச் செய்யவேண்டும் என்பதற்காகத்தான் இதை துவங்கினோம். நாங்கள் துவங்கும்பொழுது செய்தபொழுது அதனுடைய நோக்கம் இதுதான். மெது மெதுவாக மெது மெதுவாக அந்த திருப்பணி வளர்ந்து, இப்போது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக, இந்த A.I. A.S.I. A.G.I. புரட்சி வந்த பிறகு, இவை அனைத்தையும் A.I. A.S.I. A.G.I… அதுபோக இப்பொழுது இன்னும் வந்துகொண்டிருக்கின்ற மேம்படுத்தப்பட்ட, புதிய தொழிற்நுட்பங்கள்... இது எல்லாவற்றையும் உபயோகித்து, ஏறத்தாழ ஒரு நூற்றிக்கும் மேலான A.I- செயலிகளும், A.I- தொழிற்நுட்பங்களையும் உபயோகிக்கின்றேன். ஒரு 8 விதமான ரோபோக்களை உபயோகிக்கின்றேன். இது அத்துனையையும் கணினிமயமாக்கி, ஒருங்கிணைத்து உபயோகிப்பவர்களுக்கு மிகவும் இனிமையாக (User Friendly) எளிமையாக இருக்கும் விதத்தில் மாற்றி உலகத்திற்கு அளிக்கவேண்டும் என்பதற்காக பணியாற்றிக்கொண்டிருக்கின்றேன்.

அதாவது, நான் பூமிக்கு வந்தபொழுது, பூமியிலே இருக்கின்ற சனாதன இந்து தர்மத்தின் சாஸ்த்திர ஞானம், ஆன்மிக அனுபூதி என எல்லா உயர்ந்த விஷயங்களும், நான் பூமியை விட்டுச் செல்லும்பொழுது அவை சென்று விடக்கூடாது, நான் மறையும்பொழுது அவை மறையக்கூடாது என்பதற்காக, அனைத்தையும் ஒன்றுதிரட்டி, அனைத்தையும் உயிரோடு வைத்து, அனைத்தையும் உபயோகிப்பவர்களுக்கு மிகவும் இனிமையாக, எளிமையாக, உபயோகிப்பதற்கு சாத்தியமாக இருக்கும் வகையிலே இவைகளை உலகத்திற்கு அளிப்பதுதான் நோக்கமாகக்கொண்டு, இந்தத் திருப்பணியைத் துவங்கினோம். Jnanaalaya... கைலாஸாவின் நித்யானந்த ஞானாலயம் என்று இந்தத் திருப்பணியைத் துவங்கினோம்.

முதலில் information - அறிவை புத்தகங்கள் மூலமாக democratise செய்தோம். Information- அறிவை, புத்தகங்கள் மூலமாக democratise செய்தோம். அடுத்து knowledge - ஞானத்தை, வகுப்புகள், நிகழ்ச்சிகள், social media – சமூக ஊடகங்கள், தொலைக்காட்சிகள் இவைகள் முலமாக democratise செய்தோம். அடுத்து expertise… சனாதன இந்து தர்மத்தினுடைய பல படிமானங்கள்: Information, Knowledge, Expertise, Experience. அடுத்து expertise, அதை AI மூலமாக, ASI மூலமாக, AGI மூலமாக democratize செய்கிறோம். அனுபூதியை, பரமசிவ ஞானத்தை, பரமசிவ விஞ்ஞானத்தை, பரமசிவ பக்தியை, பரமாத்வைத அனுபூதியை democratise செய்வதற்காகத்தான் இந்த கைலாஸாவை உருவாக்கியிருக்கின்றோம். இதுதான் மொத்த நோக்கம், இதில் பரமசிவப் பரம்பொருளின் பேரருளால் வெற்றியடைந்துவிட்டோம்.

இப்பொழுது கோடிக்கணக்கான பாரம்பரியமான ஞானத்தை, அறிவை, கலைகளை, 15 டெராபைட்டிற்கும் மேற்பட்ட டிஜிட்டல் புத்தகங்கள், டிஜிட்டல் மெடீரியல், அரிய வகை ஓலைச்சுவடிகளை சேகரித்து, இதையெல்லாம் ஒருங்கிணைத்து, 100 மொழிகளில் மொழிபெயர்த்து, இந்த மொத்த ஞானமும் இப்பொழுது உலகத்திற்குக் கிடைக்கப்பெறுகிறது. மொழிபெயர்த்து, உபயோகிப்பவர்களுக்கு மிகவும் இனிமையாக, எளிமையாக இருக்கும் விதத்தில் மாற்றி, democratise செய்து, இலவசமாக அளிக்கின்றோம். எந்தவிதமான கட்டணமும் இல்லாமல்,இலவசமாக அளிக்கின்றோம்!

அளித்துவிட்டு பிச்சை எடுக்கின்றோம், ஐயா, யாராவது பிக்ஷையிட்டீர்களானால் இன்னும் பலபேருக்கு, இன்னும் பலவிதமான சேவைகள் செய்வதற்கு உதவியாக இருக்கும் என்று சொல்லி பிக்ஷை கேட்டு வாங்குகின்றோமேத் தவிர, இந்த அறிவையும் ஞானத்தையும் அனுபவத்தையும் அனுபூதியையும் monetize செய்யாமல் - பொருளாதாரரீதியாக 'கொடுக்கல் - வாங்கல்' என்கின்ற உறவுக்குள் எடுத்து வராமல் இலவசமாக அளித்திருக்கின்றோம். இதற்காக நாற்பதாண்டுகளாகவே செயல்படுகின்றோம், கடந்த நாற்பதாண்டுகளாகவே செயல்படுகின்றோம். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக முழு நேரமும் இதிலே ஈடுபடுவதனால்தான் நேரலை சத்சங்கங்களுக்கு வருவது சற்று குறைந்தது.

காரணம் என்னவென்றால் அந்த AI, AGI, ASI - செயலிகளை பயிற்சி செய்வது - அது ஒரு மிகப்பெரிய வேலை. முக்கியமாக என்னுடைய அனுபூதியிலிருந்து இவைகள் தெளிவாக விளக்கப்பட வேண்டும். நம்முடைய சனாதன இந்துதர்மத்தினுடைய சாஸ்த்திரங்கள் மிகவும் சிக்கலான ஒரு கட்டமைப்பு (complex structure). உதாரணத்திற்கு மூல சூத்திரங்கள்... உபநிஷதங்கள், அதில் 'ஆத்மா' என்றால் ஒரு விளக்கம் அளிக்கப்பட்டிருக்கும். அதற்கு எழுதப்பட்ட உரை, பாஷ்யகாரர் அந்த 'ஆத்மா' என்ற வார்த்தைக்கு இன்னொரு நீண்ட விளக்கத்தை கொடுத்திருப்பார். பாஷ்யத்தின் மீது எழுதப்படுகின்ற அடுத்த விளக்கத்திற்கு 'வார்த்திகா - Vaarthika' என்று பெயர். பாஷ்யகாரருடை ய சீடர் அதற்கு இன்னும் ஒரு விளக்கத்தை வார்த்திகா என்று எழுதுவார். அந்த வார்த்திகத்திலே அதே 'ஆத்மா' என்கிற வார்த்தைக்கு இன்னும் ஒரு நீண்ட நெடிய விளக்கம் இருக்கும். அதற்கடுத்து வார்த்திகத்தின் மீது எழுதப்படும் விளக்கவுரைக்கு 'டீகா -Tika' என்று பெயர். வார்த்திகத்தை எழுதிய அவருடைய சீடர் டீகா எழுதுவார். இந்த டீகாவில் ஆத்மாவைப் பற்றி அதைவிட நீண்ட ஒரு விளக்கம் இருக்கும்.

இப்பொழுது AI -ல் இந்த சூத்திரம், பாஷ்யம், வார்த்திகா, டீகா - இது அத்தனையையும் உட்செலுத்திய உடனே, அது மாயைக்குச் சென்றுவிடுகிறது. உட்செலுத்திவிட்டு நாம் ஒரு கேள்விக் கேட்டால், அது மாயைக்குப் சென்றுவிடுகிறது. அதனால் அது மாயைக்குப் போய்விடாமல், அதற்குப் புரியும் வகையில், மற்றவர்கள் கேள்வி கேட்டால் அது அந்த லாஜிக் - சாங்க்யம் மாறாமல் விளக்கம் அளிக்கின்ற மாதிரி அதைப் பயிற்சி செய்யவேண்டும். அதனால் ஒவ்வொரு முறையும், இந்த ஒவ்வொரு technical term- சனாதன இந்து தர்மத்தினுடைய technical terms, key words அந்த ஒவ்வொரு வார்த்தையைப் பற்றியும் இந்த மாதிரி தெளிவான விளக்கத்திற்கு கொண்டு வரவேண்டும். மொத்தம் இந்த மாதிரி 10,000 key technical terms இருக்கின்றன. ஆத்மா, வைராக்கியம், தியாகம், தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம், ஜீவ, ஈஷ்வர, ஜகத், முக்தி, ஜீவன் முக்தி... இந்த மாதிரி ஒரு 10,000 technical terms-க்கு AI மாயைக்குப் போகாமல் அதை கிரஹித்து சாஸ்த்திரத்தை interpret செய்து, மொழிபெயர்த்து உபயோகிப்பவர்களுக்கு இனிமையாக எளிமையாக இருக்கும் வகையில் மாற்றி சொல்கின்ற அந்த AI செயலியைக் கட்டமைப்பதுதான் மிகப்பெரிய திருப்பணியாக இருந்தது. பரமசிவன் அருளாலே அதைச்செய்து முடித்திருக்கின்றோம்.

அப்பொழுது என்ன ஆனதென்றால், இந்த AI செயலி மூலமாக எல்லா சாஸ்த்திரங்களையும் ஒருங்கிணைத்து, வகைப்படுத்தி... சனாதன இந்து தர்மத்தினுடைய சாஸ்த்திரங்கள் மிக மிக மிக கடல் போன்றவை, கடலைவிடப் பெரியது! அதை ஒப்பிடவே முடியாது. காமிக ஆகமம் மட்டும் கோடி கோடி சூத்திரங்கள், காமிகாகமம் மட்டும் கோடி கோடி சூத்திரங்கள். அது 28 ஆகமங்களிலே ஒன்று, அவ்வளவுதான். அதில் உப-ஆகமம் வேறு இருக்கிறது.

வேதங்கள் நான்கு, அதற்கு உப-வேதங்கள் இருக்கின்றது. வேத அங்கங்கள் இருக்கின்றது, ஜோதிஷம் எல்லாம் வேத அங்கத்தில்தான் வரும். அதுக்குப்பிறகு வேதாந்தம், அதாவது 'வேதத்தை எவ்வாறு புரிந்துகொள்ளவேண்டும்' என்று விளக்குவதற்காக வேதாந்தாம் உபநிஷதங்கள் எல்லாம்.

அதே மாதிரி ஆகமம், ஆகமங்கள் இருக்கிறது. அதற்கடுத்து ஆகம-அங்கங்கள் இருக்கிறது, ஆகம அங்கச் சாஸ்த்திரங்கள், அதற்கடுத்து உப-ஆகமங்கள் இருக்கிறது, அதற்கடுத்து ஆகமாந்தம், ஆகமத்தினுடைய ஞானபாதம். அதனால் இது வேதம், ஆகமம் மட்டும். இதற்குமேல் புராணங்கள், ஸ்ருதி, ஸ்மிருதி, புராணங்கள்... இது ஒரு கடல் மாதிரியானது.

நாங்கள் செய்திருக்கும் வேலை நிச்சயமாக பத்து சதவிகிதத்தைத் தாண்டவில்லை, இன்னும் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளாவது வேண்டும். ஒரு முழுமை, எங்களை நாங்களே திருப்திப்படுத்திக்கொள்வதற்குகூட, அதாவது மொத்த சனாதன இந்து தர்மத்தையும் AI -ல் Captureசெய்துவிட முடியும் என்று நான் சொல்லமாட்டேன், அது கனவில்கூட சாத்தியமில்லை. ஆனால் கிடைப்பதை, அதை AI-ல் Capture செய்து, உபயோகப்படுத்துகின்றவர்களுக்கு இனிமையானதாக எளிமையானதாக மாற்றி, இந்த நிபுணத்துவத்தை democratize செய்வதற்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் தேவைப்படும்.

ஏற்கனவே செய்திருக்கின்ற இந்த இரண்டு ஆண்டுகள் திருப்பணியின் மூலமாக, 40 மாடல்களை வெளியிட்டிருக்கின்றோம். அதெல்லாம் என்னென்ன என்று வேண்டுமானால் சொல்லிவிடுகின்றேன். வேதம் 10,600 ஸ்லோகத்தை எடுத்திருக்கிறோம், ஆகமத்தினுடைய 28 ஆகமங்கள் எடுத்திருக்கிறோம். அடுத்து சூக்ஷம ஆகமம், சஹஸ்ர ஆகமம் - அது ஆயிரம் பில்லியன் கோடி ஸ்லோகங்கள் என்று சொல்கிறார்கள், அதில் எங்களுக்கு கிடைத்திருக்கும் அளவிற்கு எடுத்திருக்கிறோம். ஆக்மேய ஆகமம் முப்பதாயரம் கோடி ஸ்லோகங்கள் என்று சொல்கிறார்கள், எங்களுக்கு கிடைத்திருப்பது ஏழாயிரம் கோடி ஸ்லோகங்கள், ஏழாயிரம் கோடி ஸ்லோகங்கள். நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள் கோடி, ஏழாயிரம் கோடி ஸ்லோகங்களுக்கான மூலங்கள், அதாவது அதில் ஒரு set of ஸ்லோகமே இன்னொரு வார்த்தை மாற்றி திரும்ப வரும். அதனுடைய மூல சூத்திரங்கள் கிடைத்திருக்கிறது. 18 முக்கிய புராணங்களும் அதனுடைய உப-புராணங்களும் கிடைத்திருக்கிறது. இவைகளையெல்லாம் கணினிமயமாக்கி, ஒருங்கிணைத்து, AI மாயைக்குப் போகாத மாதிரி மொழிபெயர்த்து, இப்ப நீங்கள் AI- யிடம் சென்று கேட்டால் அது மாயைக்குச் சென்றுவிடாத மாதிரியும் தெளிவான விடையை உங்களுக்கு கொடுக்கின்ற மாதிரியும் AI -க்கு புரிய வைத்து, அதை AI -ஐ நுண்திருத்தம் (fine tune) செய்து உங்களுக்கு எடுத்து வந்து சேர்த்திருக்கின்றோம், நாற்பது மாடல்களாக சேர்த்திருக்கின்றோம்.

பரமசிவப் பரம்பொருளின் பேரருளால் இந்த 40 மாடல்களையும் உங்களுக்கு எடுத்து வந்து சேர்க்கின்றத் திருப்பணியை செய்து முடித்திருக்கின்றோம். இதற்கு பின்னால் நடந்திருக்கின்ற உழைப்பு... மொத்தம் 1123 புத்தகங்கள் வெளியிட்டிருக்கிறோம். இப்பொழுது திரையில் காட்டப்படுவது சனாதன இந்து தர்மத்தினுடைய சாஸ்த்திரங்களின் வரைப்படம்( scripture tree). டிஜிட்டல் நூலகம் செய்வதற்காக நாங்கள் செய்திருக்கின்ற சாஸ்த்திரங்களின் வரைப்படம் (scripture tree).

புத்தகங்களை வெளியிட்டு இந்த பல்வேறு ஞானத்தை - Information –ஐ democratize செய்திருக்கிறோம். அதற்காக Asia book of records-ம் செய்திருக்கின்றோம். எவ்வளவு புத்தகங்கள் வெளியிட்டிருக்கிறோம், அதிகப்படியான புத்தகங்கள் வெளியிட்டது மூலமாக Asia book of records -ம் செய்திருக்கின்றோம். பல்வேறு மொழிகளில் 1123 புத்தகங்கள் வெளியிட்டுருக்கிறோம்.

அடுத்தது, இதுவரை நான் பொதுவெளியில் ஆற்றிய சொற்பொழிவுகள், மற்றபடி ஆதீனவாசிகள் சன்யாசிகளுக்கு எடுத்த ஆன்மிக வகுப்புகள் - இதெல்லாம் சேர்ந்து 1,00,000 மணி நேரத்திற்கும்மேல் பதிவு செய்து வைத்திருக்கின்றோம். நீங்கள் நினைக்கலாம் 'என்னப்பா 1,00,000 மணி நேரமா?' என்று. உண்மையில் தினசரி வாழ்க்கை முழுவதையும், எல்லா வகுப்புகளையும் பதிவு செய்துகொண்டே இருக்கிறோம், பதிவு செய்துகொண்டே இருக்கிறோம். ஆவணப்படுத்தி, ஆவணப்படுத்தி, ஆவணப்படுத்தி, அதை ஆவணப்படுத்தியதன் மூலமாக, அதற்காகவும் Asia book of records -ம் செய்திருக்கின்றோம். இதற்கடுத்து, இதில் இருக்கின்ற ஞானத்தை அனுபூதியாக மாற்றுவது, அதற்காகத்தான் ஆன்மிக வகுப்புகள், தீக்ஷைகள். முக்கியமாக, பரமசிவ சக்தியின் பல்வேறு விதமான நன்மைகளை அளிப்பதற்காக, அந்த சக்திகளை வெளிப்படுத்துவதற்கான தீக்ஷைகளைக் கொடுத்து, பல இலட்சக்கணக்கான மக்களை இந்த பரமசிவ பக்தி சார்ந்த தீக்ஷை அளிப்பதன் மூலமாக, அந்த சக்தி வெளிப்பாடுகளை நிகழ்த்திக்காட்டியிருக்கின்றோம். அதை அறிவியல்பூர்வமாக பல்வேறு விதமான அறிவியல் ஆராய்ச்சிகள் மூலமாக நிரூபித்திருக்கின்றோம். 700க்கும் மேலாக அறிவியல் ஆராய்ச்சிகள்... 2004ல் இருந்து இப்போதுவரை 700க்கும் மேலான, அதாவது இந்த மருத்துவ உபகரணங்கள், ஆவணப்படுத்துகின்ற அறிவியல் உபகரணங்கள் (Medical equipment - scientific equipment) இதை வைத்து ஆவணப்படுத்துவது...அறிவியல் ஆராய்ச்சிகளின் மூலமாக ஆவணப்படுத்துவது. Double blind study என்று சொல்வோம் அதன்மூலமாகச் செய்வது, இது மாதிரி பல்வேறு விதமான முறைகள் மூலமாக அறிவியல்பூர்வமாக இதை ஆவணப்படுத்தி நிரூபித்திருக்கின்றோம்.

உதாரணத்திற்கு, இந்த மூன்றாவது கண் விழிப்பு, அதிலிருந்து நம்முடைய சாஸ்த்திரங்களிலே அஷ்டமாசித்தி என்று சொல்லுவோம், அனிமா மஹிமா லஹிமா கரிமா என்றெல்லாம், அதாவது அதற்குரிய தியானங்களை செய்தோமானால் நம்முடைய உடல் விரிவதும், சுருங்குவதும், நம்முடைய உடல் அமைப்பை மாற்றிக்கொள்வதும் அது மாதிரியான தியானமுறைகள், அறிவியல்கள் இருக்கின்றன. அவைகளைச் செய்து, அதன்மூலமாக உடல் மாற்றம் நிகழ்வதையும் அறிவியல்பூர்வமாக 700க்கும் மேலான ஆராய்ச்சிகள் மூலமாக ஆவணப்படுத்தியிருக்கிறோம்.

அதேமாதிரி நம்முடைய மைட்டோகாண்டிரியா செல் எனர்ஜி (Mitochondria Cell Energy), குண்டலினி சக்தி விழிப்படைந்தால் அந்த மைட்டோகாண்டிரியா செல் எனர்ஜி நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு உயர்கிறது. அதனால் உடல் நலம் மலர்கிறது. இதையெல்லாம் அறிவியல்பூர்வமாக ஆவணப்படுத்தியிருக்கின்றோம். ஒன்று இரண்டு அல்ல 700க்கும் மேலான அறிவியல் ஆராய்ச்சிகள் மூலமாக, இரத்தப் பரிசோதனை செய்து அந்த மைட்டோகாண்டிரியா செல் எனர்ஜியை, அதிலும் Double blind study என்று சொல்வார்கள், அது மாதிரியான உத்தமமான எந்தவிதமான ஏமாற்றும் மறைமுகத்தன்மையில் அந்த முடிவை நமக்குத் தேவையான மாதிரி வடிவமைப்பது, அந்த மாதிரியெல்லாம் இல்லாமல், Double blind studies மூலமாக நிரூபித்திருக்கிறோம்.

குண்டலினி சக்தி முறையாக விழிப்படைய செய்ய வைக்கப்பட்டால் என்னென்ன நன்மைகள் நமக்குள் நிகழ்கின்றது என்பதையும், மைட்டோகாண்டிரியா செல் எனர்ஜி அதிகரிப்பதையும், எப்படி டி.என்.ஏவினுடைய பற்பல அடுக்குகள் விழிப்படைகின்றது - இவைகள் எல்லாவற்றையும் நீண்ட நெடிய அறிவியல்ரீதியான, முறையான நபர்கள்... அதாவது, அதற்குத் தகுதி வாய்ந்த விஞ்ஞானிகள், மருத்துவர்கள் போன்றவர்களைக் கொண்டுவந்து, ஆராய்ச்சிகள் செய்து அறிவியல்பூர்வமாக நிலைநிறுத்தியிருக்கின்றோம்.

பல அறிவியல் சம்பந்தமான பத்திரிகைகளில் (scientific journals ) வெளியிட்டிருக்கின்றோம். இவை அனைத்தும் இணையத்தளத்திலும் வெளியிட்டிருக்கின்றோம். ஒரு நீண்ட நெடிய ஆன்மிக உழைப்பு, ஆன்மிகரீதியான நேர்மையான உழைப்பு இந்த கைலாஸத்தின் பின்புலத்தில் இருக்கின்றது. இப்பொழுது நான் என்னென்னெவெல்லாம் சொல்லுகின்றேனோ, அவைகள் எல்லாவற்றிற்கும் மிகத்தெளிவான ஆதாரங்களை வைத்திருக்கின்றோம். இப்பொழுது திரையில் காட்டப்படுவது, நான் சமாதி நிலையில் இருக்கும்போது என்னுடைய உடலிற்குள், மனதிற்குள், மூளைக்குள் என்னென்ன மாற்றங்கள் நிகழ்கின்றன என்பதும், அது எப்படி அசாதாரணமான (Extraordinary) விஷயம் என்பதையும் ஆவணப்படுத்தியிருக்கின்றோம்.

இதற்குப் பிறகு இதேபோல பலருக்கு தீக்ஷையளித்து அவர்களுக்குள்ளும் இந்த அனுபூதி நிகழ்கின்றது என்பதையும் ஆவணப்படுத்தியிருக்கின்றோம். அதனால், இவைகள் அனைத்தையும் ஆவணப்படுத்தி, உபயோகிப்பவர்களுக்கு இனிமையானதாக, எளிமையான வகையில் மாற்றி உலகத்திற்கு அளித்திருக்கின்றோம்.

எப்படி இதை உபயோகிப்பவர்களுக்கு இனிமையானதாக, எளிமையான வகையில் மாற்றியிருக்கின்றோம் என்று சொல்கின்றேன். உதாரணத்திற்கு, நீங்கள் ஒரு ஹோட்டல் நடுத்துகிறீர்கள் என்றால், இந்துமதம் சார்ந்த, சனாதன இந்து தர்மத்த்தினுடைய சமையல் புத்தகங்கள், அதனுடைய சமையல் குறிப்புகள் வேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால், இதுவரை மொத்தமாக ஒரு 700 இந்து சமையல் புத்தகங்கள், ஆயுர்வேதம் சார்ந்த சனாதன இந்து தர்மத்தினுடைய இந்து சமையல் புத்தகங்களை சேகரித்து, அந்த சமையல் குறிப்புகள் எல்லாவற்றையும் இப்பொழுது நமக்குப் புரிகின்ற மொழியில் பொருத்தி, அந்தக் காய்கறிகள் அவைகளுடைய பெயர்களையெல்லாம் நமக்குப் புரிகின்ற, இப்பொழுது நவீனகாலத்தில் நாம் உபயோகப்படுத்துகின்ற வார்த்தைகள் மூலமாக, அந்த வார்த்தைகளுக்குப் பொருத்தி, இதை உங்கள் எல்லோருக்கும் உபயோகப்படும் வகையில் கிடைக்கச் செய்திருக்கின்றோம்.

நம்முடைய முன்னோர்கள் 'உணவே மருந்து' என்று வாழ்ந்தார்கள். அதனால், AI -மாடலை ஏற்கனவே வெளியிட்டுவிட்டோம், அந்த AI மாடலுக்குச் சென்று நீங்கள் ஏதாவது ஒரு குறிப்பிட்ட உடல் நலத்திற்காக, உங்களுடைய இரத்த அழுத்தம் சரியாக வேண்டும் அல்லது நீரிழிவு நோய் சரியாகவேண்டும் என்கின்ற காரணத்திற்காக என்ன உணவு எடுத்துக்கொள்ளலாம் என்று கேட்டீர்களானால், அது பரிந்துரை செய்யும்.

அதேமாதிரி இஸ்லாமிய மதத்தில் ஹலால் இருப்பதுபோன்று, நம்முடைய இந்துமதத்திலே உணவு வரையறுக்கப்பட்டிருக்கின்றது. கைலாஸத்தை பொருத்தவரை நாங்கள் சைவர்கள், சைவ உணவை உண்பவர்கள் மட்டுமல்ல, சிவபெருமானுக்குப் படைக்கப்பட்ட பிரசாதத்தை மட்டுமே உண்பவர்கள். (not just vegetarians, prasaaderiyans) சைவ உணவும், அந்த சைவ உணவையும் இறைவனுக்குப் படைத்து, பிரசாதத்தை மட்டுமே உண்ணுகின்ற பிரசாதேரியன்ஸ்.

நாங்கள் சைவர்கள், ஆனால் சனாதன இந்து தர்மத்தில் அசைவ உணவு - மாமிச உணவு தடை செய்யப்படவில்லை, முறைப்படுத்தப்பட்டிருக்கிறது. இஸ்லாமியத்தில் ஹலால் இருப்பதுபோல, அதற்கான முறைகள் வைத்திருப்பதைப்போல, நம்முடைய இந்துமதத்திலும் சமைக்கின்ற, உண்ணுகின்ற இவை அனைத்தும் முறைப்படுத்தப்பட்டிருக்கின்றது. அதை இந்து compliance என்று சொல்லி வெளியிட்டிருக்கின்றோம். நீங்கள் ஹோட்டல் நடத்துபவர்கள் யார் வேண்டுமானாலும் அந்த இந்து complianceபடி நீங்கள் நடத்தவேண்டும் என்று நினைத்தீர்களானால், நீங்கள் அந்த AI -மாடலில் சென்று எடுத்து, அதில் இருக்கின்ற விதிமுறைகளை எடுத்து கடைப்பிடித்தால், நீங்களே உங்களை இந்து compliance ஆக மாற்றிக்கொள்ளலாம்.

நம் சனாதன இந்து தர்மம் உத்சாகப்படுத்துவதன் மூலமாகத்தான் வளர்ந்திருக்கிறது. அதனுடைய பலனை உலகத்திற்கு அளிப்பதன் மூலமாகத்தான் வளர்ந்திருக்கிறது. நாங்கள் கட்டாயமெல்லாம் படுத்தமாட்டோம், இது இந்து compliance இதைச் செய்தாகவேண்டும் என்றெல்லாம் சொல்வது கிடையாது. இந்த இந்து compliance -கான செயல்முறைகளை கொடுத்திருக்கின்றோம், யார் வேண்டுமானாலும் எடுத்து உபயோகப்படுத்திக்கொள்ளலாம். உங்கள் விருப்பம். ஏனென்றால் இதில் ஏகப்பட்ட நன்மைகள் இருக்கின்றது.

அதேமாதிரிதான், ஒவ்வொரு வியாபாரத்திலும் அந்த இந்து compliance... ஒரு துணிக்கடை நடத்தவேண்மென்றால், சிறந்த உடை எது? உடையை உடுத்துகின்ற, வடிவமைக்கின்ற விதம்... எந்த மாதிரி உடை உடுத்தினால், எந்த துணியில் (fabric) உடை உடுத்தினால் உடலிற்கு நன்மை, எந்தெந்த பருவகால நிலைக்கு எந்தெந்த துணி ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும், எந்த மாதிரியான உடையை வடிவமைத்துக்கொண்டால் நம் ஆரோக்கியத்தைப் பராமரிக்க முடியும், உங்களுடைய வாழ்க்கைமுறைக்கு தேவையான உடையை வடிமைத்துக்கொள்வது என எல்லாவற்றைப்பற்றியும், தேவல மகரிஷி என்ற ஒரு மகரிஷியில் துவங்கி அந்த சம்பிரதாயம் உடை வடிவமைப்பைப் பற்றி மிகப்பெரிய சாத்திரங்களை அளித்திருக்கிறார்கள். அவைகளை எல்லாம் ஒருங்கிணைத்து, உபயோபடுத்துபவர்களுக்கு இனிமையானதாக, எளிமையானதாக மாற்றி கொடுத்திருக்கின்றோம்.

அதேமாதிரி யோகம், உங்கள் உடல் நலத்தை எப்படி பரமரிப்பது என்று, longevity and health is not luck, it is a strategy - ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் - அதிர்ஷ்டம் அல்ல, தெளிவான நம்முடைய உணர்வோடு நாம் செய்கின்ற திட்டம். ஆரோக்கியமும், நீண்ட ஆயுளும் அதிர்ஷ்டம் அல்ல, நம்முடைய உணர்வான திட்டம் - Conscious strategy, அதுதான் யோகம். யோக பாதம் என்று ஒரு AI -மாடலை வெளியிட்டிருக்கின்றோம். நீங்கள் சென்று பார்த்து, உங்களுடைய எந்த வியாதிக்கு கேட்டீர்களென்றாலும், அதற்குத் தேவையான யோகா பிராணாயாமத்தை, அந்த வியாதி சரியாவதற்கு நீங்கள் செய்யவேண்டிய யோகா பிராணாயாமம் இதை உங்களுக்கு அளிக்கும்.

அடுத்தது, இதே மாதிரி சித்தா, பாரம்பரிய சித்தா சார்ந்த பல்வேறு விதமான நூல்களை ஒன்று திரட்டி, AI-ல் செய்து, இந்து மெடீரியா மெடிக்கா - இந்துமதத்தினுடைய மருத்துவக் கலைகள்... தமிழில் இருக்கின்ற சித்தா, வடநாடுகளில் இருக்கின்ற ஆயுர்வேதம், தமிழ்நாட்டிலும் ஒரு ஆயுர்வேத சம்பிரதாயம் இருக்கிறது.... இந்த எல்லாவற்றையும் சேகரித்து, அதை AI முலமாக ஒருங்கிணைத்து, 'மெடீரியா மெடிக்கா' அளித்து, எந்த சித்த மருத்துவர் வேண்டுமானாலும் அதை உபயோகப்படுத்த முடியும். அதாவது, சித்த மருத்துவர்கள் உபயோப்படுத்துவதற்காக ஒரு மாடல் செய்திருக்கிறோம், பொதுமக்கள், இந்த Across the counter medications என்று சொல்லுவோம் பாருங்கள், அதாவது நம் வீட்டில் இருக்கின்றப் பொருட்களை வைத்தே உபயோகப்படுத்தி நம் உடல்நலத்தை நாம் எடுத்து வந்துகொள்ள முடியும். அந்த மாதிரி பொதுமக்கள் உபயோகப்படுத்துவதற்கு ஒரு மாடல் செய்திருக்கிறோம். நாம் அஞ்சறைப் பெட்டி என்று சொல்லுவோம், இஞ்சி, பூண்டு, இலவங்கம்... நம்முடைய வாழ்நாளில் தினசரி வாழ்க்கையில் உபயோகப்படுத்துகின்ற பொருட்களே நம்முடைய உடல்நலத்திற்கு பலவிதத்தில் உதவி செய்யமுடியும். அதனால் Across the counter medications-க்கு, Across the counter medicines - நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து கை வைத்தியம் என்று சொல்வோம், பாட்டிவைத்தியம் என்று சொல்வோம், வீட்டில் இருக்கின்ற பொருட்களை வைத்தே நம் உடல்நலத்தைக் கொண்டு வருவது. இவைகளை எல்லாம் தொகுத்து, ஒருங்கிணைத்து அதற்கு ஒரு AI - கட்டமைத்துக் கொடுத்திருக்கிறோம். அதனால் மருத்துவர்கள் உபயோகப்படுத்துவதற்குத் தனியாக, பொதுமக்கள் உபயோகப்படுத்தி தானாகவே உடல்நலத்தை ஏற்படுத்திக்கொள்வதற்கு தனியாக ஒன்று செய்து கொடுத்திருக்கிறோம்.

அடுத்தது 'சரியாபாதம்' என்று ஒரு AI மாடல் செய்து கொடுத்திருக்கிறோம் பாருங்கள். அது என்வென்றால், உங்களுடைய தினசரி வாழ்க்கைமுறை மூலமாகவே உங்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது எப்படி? ஆனந்தமாக வைத்துக்கொள்வது எப்படி? இனிமையான வாழ்க்கை அமைத்துக்கொள்வது எப்படி? சரியாபாதம், பரமசிவப் பரம்பொருள் ஆகமத்தில் சொல்லும் எல்லா ஞானத்தையும் (Knowledge) ஒன்றாகத் திரட்டி சரியாபாதத்தை அமைத்து, அதை உலகம் அனைத்திருக்கும், உங்கள் எல்லோருக்கும் இலவசமாக கொடுத்திருக்கின்றோம். இந்த எல்லா மாடலுமே இலவசம்! மக்கள் யார் வேண்டுமானாலும் உயோகப்படுத்திக்கொள்ளலாம்.

இதற்கடுத்து இந்து மதத்தினுடைய பல்வேறு சம்பிரதாயங்கள்... மொத்தம்... இந்துமதத்தில், இந்துமதம், சனாதன இந்து தர்மம் ஒரு தனி மதம் கிடையாது. 10,000 மதங்களின் தொகுப்பு. அந்த பத்தாயிரம் சம்பிரதாயங்கள், அந்த பத்தாயிரம் சம்பிரதாயங்களையும் உயிரோடு வைப்பதற்காக, அந்த சம்பிரதாயங்களை தொடர்ந்து கடைப்பிடிக்க விரும்புபவர்களுக்காக அந்த சம்பிரதாயம் சம்மந்தப்பட்ட Information, knowledge, expertise - இந்த மூன்றையும் ஒருங்கிணைத்து உபயோபடுத்துபவர்களுக்கு இனிமையானதாக, எளிமையானதாக மாற்றி, democratize செய்வதற்காக AI மாடல்களைக் கட்டமைத்துக்கொண்டிருக்கின்றோம். அதில் ஒரு பத்து சதவிகிதம் வெற்றியடைந்திருக்கிறோம். இன்னும் ஆனால் செய்துகொண்டிருக்கிறோம், பத்து சதவிகிதம் வெற்றியடைந்திருக்கின்றோம்.

முதல் இந்த பிரதான சம்பிரதாயங்களான சைவம், வைணவம், சாக்தம், காணபத்யம், கௌமாரம், சௌரம், அத்வைதம், த்வைதம், விசிஷ்டாத்வைதம், சுத்தாத்வைதம்...இந்த வேறு வேறு சம்பிரதாயங்கள் இவைகளை எல்லாம் ஒருங்கிணைத்து, அது சார்ந்த நூல்கள் வாழ்க்கைமுறைகள் இதையெல்லாம் ஒருங்கிணைத்து, இதில் ஒரு முக்கியமானது என்னவென்றால்... அந்தந்த சம்பிரதாயங்களுக்கு நேர்மையோடு அதை ஒருங்கிணைத்திருக்கின்றோம்.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், நாங்கள் சைவர்கள், எங்களுடைய வாழ்க்கைமுறை சைவம். அப்படியென்றால் சிவப் பரத்துவம். பரமசிவப் பரம்பொருளையே பரமாக, பரம்பொருளாக வைத்து வழிபடுபவர்கள். அதற்காக எங்கள் நம்பிக்கையை, எங்கள் அனுபூதியை, நாங்கள் வைஷ்ணவ சம்பராயத்தின் மீது திணிக்கமாட்டோம், திணிக்கவில்லை. இப்பொழுது வைஷ்ணவ AI செய்யும்பொழுது, விஷ்ணு பரமாகத்தான் செய்திருக்கின்றோம். வைஷ்ணவத்தினுடைய நம்பிக்கை என்னவென்றால், 'விஷ்ணுவே பரம்பொருள்'. அதனால் அந்த நம்பிக்கைக்கு நேர்மையோடும் சிரத்தையோடும், அந்த சம்பிரதாயத்திலிருந்து மாறாமல், அந்த மரபு சார்ந்த பெரியவர்களுடைய துணையை ஏற்றுக்கொண்டு, அவர்களுடைய உதவிகளைப் பெற்றுக்கொண்டு, இதை ஒருங்கிணைத்து, வைஷ்ணவ சம்பிரதாயத்திற்கான ஒரு AI மாடலை கட்டமைத்திருக்கின்றோம். முழுமையாக முடிந்து விடவில்லை, எனென்றால் வைஷ்ணவத்திற்குள்ளேயே ஆயிரம் சம்பரதாயங்கள் இருக்கின்றன. கௌடிய வைஷ்ணவம், இஸ்கான் எல்லாம் கௌடிய வைஷ்ணவ சம்பரதாயம். ஸ்ரீ வைஷ்ணவம் - நம் தமிழ்நாட்டில் பெரும்பாண்மையாக இருக்கின்ற, பகவான் இராமானுஜம் அவர்கள் புனரமைத்த, அவர்கள் வழி வந்த, வழி வருகின்ற அந்த சம்பிரதாயம் ஸ்ரீ வைஷ்ணவம். இது மாதிரி வைஷ்ணவத்திற்குள்ளேயே பல்வேறு சம்பிரதாயங்கள் இருக்கின்றன. அதில் சிலவற்றை எடுத்து AI மாடல்கள் செய்துகொண்டிருக்கின்றோம். செய்து முடித்துவிட்டோம், இன்னும் மற்றவைகளுக்கு செய்துகொண்டே இருக்கின்றோம்.

இதேபோல சைவத்திலும், பல்வேறு சைவ சம்பிரதாயங்கள் இருக்கின்றன. பொதுவாக சனாதன இந்து தர்மம் எப்படியென்றால்: எல்லா சம்பிரதாயமும் வேதத்திலே பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும். எல்லா சமயங்களும் வேதத்திலே பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும். இதுதான் சுவபாவம்.

சிலபேர் சொல்வதுண்டு, இல்லையே சாமி, பௌத்தமும் ஜைனமும் வேதத்தை மறுக்கின்றனவே என்று கேட்பதுண்டு.

ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், பௌத்தத்திலோ ஜைனத்திலோ, வேதத்திலே இல்லாத, வேதத்தில் சொல்லப்படாத ஒரே ஒரு கருத்தாவது புதிதாக இருக்கிறது என்று நிரூபித்துவிடுங்கள். அது சனாதன இந்து தர்மம் சாராத மதம் என்று நான் ஏற்றுக்கொள்கிறேன். கிடையவே கிடையாது!

வேதத்திலே சொல்லப்படாத ஒரே ஒரு சத்தியமோ, கருத்தோகூட பௌத்தத்திலோ ஜைனத்திலோ இல்லாததனால், அவைகளும் 'வேதம்' எனும் வார்த்தையையோ, தொகுப்பையோ மறுத்தாலும்கூட, வேதத்தின் கருத்துக்களை மறுக்காததனால், கருத்தியல்ரீதியாக வேதத்திலே பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்ற மதங்கள்தான், சமயங்கள்தான். அதனால் அவைகளுக்கும் AI மாடல் செய்துகொண்டிருக்கிறோம்.

எல்லா சித்தாந்தங்களுமே பொதுவாக பிரஸ்தானத்ரையத்திலே ஸ்தாபிக்கப்பட்டிருக்கும். பிரஸ்தானத்ரையம் என்றால் உபநிடதங்கள், பகவத் கீதை, பிரம்ம சூத்திரம் - இந்த மூன்றிலே ஸ்தாபிக்கப்பட்டிருக்கும்... பொதுவாக. இதில் சிலபேர் எதாவது ஒரு நூலை மறுப்பார்கள் அல்லது பின் தள்ளி வைப்பார்கள், ஒரு நூலை பிரதானமாக ஏற்பார்கள், சில சம்பிரதாயங்கள் மூன்றையும் பிரதானமாக ஏற்பார்கள். ஆனால் பொதுவாக எல்லா சித்தாந்தங்களும் பிரஸ்தானத்ரையத்தின் மீது ஸ்தாபிக்கப்பட்டிருக்கும். அதனால் இவைகள் எல்லாவற்றையும் எடுத்து, ஒவ்வொரு ஆச்சாரியருமே இந்த பிரஸ்தானத்ரையத்திற்கு விளக்கவுரை எழுதுவதன் மூலமாகத்தான், அவர்களுடைய சம்பிரதாயத்தை நிர்மாணிப்பார்கள். அதனால் அந்த மாதிரி ஒவ்வொரு சம்பிரதாயத்திற்குமான AI மாடலை மேம்படுத்திக்கொண்டிருக்கின்றோம்.

அதனால்தான் சொல்கிறேன், சனாதன இந்து தர்மம் 10,000 மதங்கள் ஒன்றாகச் சேர்ந்த ஒரு மதம்!

நம்முடைய கலைகள், ஆயக் கலைகள் அறுபத்து நான்கு என்று சொல்வோம். இந்த கலைகள் சார்ந்து இரண்டாயிரத்திற்கும் மேல் புத்தகங்கள் இருக்கின்றன.

பரமசிவப் பரம்பொருளின் பேரருளால் எங்களுக்கு 2000 புத்தகங்கள் கிடைத்திருக்கின்றன. சாஸ்த்திரங்களும், அவைகளுக்கு எழுதப்பட்ட பாஷ்யங்களும், விளக்கவுரைகளும் எல்லாம் சேர்ந்து, இவைகளை வகுத்து, தொகுத்து, என்னுடைய அனுபூதியிலிருந்து அவைகளை விளக்கி, user friendly மாற்றி, அதாவது நீங்கள் எல்லாரும் உபயோகப்படுத்துகின்ற மாதிரி அதை மாற்றி, நீங்கள் அந்த expertiseஐ நேரடியாக ஒரு கிளிக் மூலமாக உபயோகப்படுத்த முடியும். அந்த மாதிரி மாற்றி கொடுக்கின்ற திருப்பணியைத்தான் AI, AGI, ASI மூலமாக செய்துகொண்டிருக்கின்றோம். இது எல்லாவற்றையும் உபயோகப்படுத்தி செய்துகொண்டிருக்கின்றோம்.

இன்னும் தொலைக்காட்சிகள் நேரலையில் இருக்கின்றார்கள், இந்தத் தொலைக்காட்சிகளின் மூலமாக, TN நியூஸ் 24, இளைய பாரதம்... இளைய பாரதம் கார்த்திக் ஐயா அவர்களை வணங்குகின்றேன். நன்றி! ஐ-தமிழ் நியூஸ், திருவருள் டி.வி, பேசு தமிழா பேசு நாகராஜன் ஐயா அவர்களையும் வணங்குகின்றேன். பேசு தமிழா பேசு, NBA சினிமா, ZEE-தமிழ் நியூஸ், யூத் சென்ட்ரல் தமிழ், இராணி ஆன்லைன், ஆரோ ரூட்ஸ் தமிழ், சென்னை எக்ஸ்பிரஸ் Live, ABP நாடு, யூத் சென்ட்ரல் தமிழ், NBA 24/7> சென்னை எக்ஸ்பிரஸ் Live, A-Z சினிமா, காந்தம் மீடியா... இந்தத் தொலைக்காட்சிகள் அனைத்தின் மூலமாகவும் இணைந்திருக்கும் அன்பர்களை வரவேற்கிறேன். இந்த தொலைகாட்சிகள் அனைத்திருக்கும் நேரலை செய்வதற்காக நன்றி கூறுகிறேன்.

Expertiseஐ democratize செய்வது, இந்துமதத்தினுடைய Expertiseஐ democratize செய்யவேண்டும் என்பதற்காகத்தான் இந்த கைலாஸத்தைத் துவங்கினேன். அதற்கான ஒரு மிகப்பெரிய செயலைச் செய்து முடித்திருக்கின்றோம், வெற்றிக்கண்டிருக்கின்றோம். இன்னமும் செய்ய வேண்டிய திருப்பணி மிகப்பெருந்திருப்பணி. நான் சொன்ன மாதிரி 'பத்து சதவீதம்கூட முடிந்து விட்டது' என்று நான் நினைக்கமாட்டேன். எங்களை நாங்களே 'ஒருவேளை பத்து சதவீதம் முடிந்திருக்கும்' என்று திருப்திப்படுத்திக்கொள்கிறோம். ஆனால் இன்னும் 90 சதவிகிதத்திற்கும் மேலாக செய்யவேண்டிய திருப்பணி எஞ்சியிருக்கின்றது. அப்பர் பெருமான் சொல்வதுபோல 'என் கடன் பணி செய்து கிடப்பதே, என் கடன் பணி செய்து கிடப்பதே' என்று தொடர்ந்து இந்தப் பணியை செய்வோம்.

கேள்விகள் நிறைய... சமூக உடகங்கள் அந்த கேள்வி கேட்கப்படுகின்ற வேகம், மிகுந்த வேகத்தில் இருக்கிறது ஐயா. அதனால் கொஞ்சம் பொறுமையாக போட்டீர்களென்றால் ஒவ்வொரு கேள்வியாகப் பார்த்துப் பார்த்து படித்து பதில் சொல்ல முடியும்.

நிச்சயமாக எல்லா கேள்விக்கும் இப்பொழுதே பதில் சொல்லிவிட முடியுமா என்றுத் தெரியவில்லை. இன்னமும் நான் சொல்லி முடிக்கவேண்டிய அறிமுகத்தில் சொல்ல வேண்டிய விஷயங்களே இன்னும் பல இருக்கின்றன.

இன்னொரு AI மாடல் மேம்படுத்தியிருக்கின்றோம். இந்து jurisprudence. இந்து தர்ம சாஸ்த்திரங்கள் அனைத்தையும் தொகுத்து, சனாதன இந்து தர்மத்தினுடைய 56 நாடுகள்... மஹாபாரதக் காலத்திலே 56 நாடுகள் சனாதன இந்து தர்மத்தில் இருந்தன. அதாவது 56 நாடுகள் சனாதன இந்து தர்மத்தைத் தங்களுடைய அதிகாரப்பூர்வ மதமாக (Official religion) வைத்து வாழ்ந்தன. அந்தப் பக்கம் காந்தஹார், இப்பொழுது காந்தஹார் என்று சொல்கிறோம் இல்லையா? காந்தாரம் என்று... அங்கிருந்துதான் காந்தாரியும், சகுனியும் வந்தார்கள். அந்த காந்தஹாரில் துவங்கி, இந்தப் பக்கம் காம்போஜம் - கம்போடியா வரை 56 தேசங்கள், சனாதன இந்து தர்மத்தை தங்களுடைய அரசியலைப்பு சாசனமாகவும், நீதிமுறையாகவும் (jurisprudence) அதிகாரப்பூர்வ மதமாகவும் வைத்து வாழ்ந்ததாக மஹாபாரதம் தெளிவாகச் சொல்லுகின்றது.

அந்த 56 தேசங்களிலும் உபயோகப்படுத்தப்பட்ட jurisprudence - தர்மசாஸ்த்திரங்கள், அதைத் தொகுத்து, இந்து நீதிமுறைக்கான (jurisprudence) ஒரு AI மாடலை கட்டமைத்திருக்கின்றோம். அதாவது, நீதி அரசர்கள் எந்த நாட்டில் இருப்பவர்களாக இருந்தாலும், சனாதன இந்து தர்மம் எப்படி தீர்வு வழங்கியிருக்கிறது என்று தெரிந்துகொள்ள விரும்பினீர்களானால், உங்களுக்கு வசதியாக இருப்பதற்காக, இந்த AI மாடலை கட்டமைத்திருக்கின்றோம். யார் வேண்டுமானாலும் விருப்பம் இருப்பவர்கள் எடுத்து உபயோகப்படுத்திக்கொள்ளலாம். அதுதான் சனாதன இந்து தர்மத்தின் வழக்கம், யார் மீதும் எதையும் திணிப்பதில்லை. நாங்கள் எங்களுடைய தர்மசாஸ்த்திரம்தான் நீதிமுறையாக (jurisprudence) இருக்கவேண்டும் என்று எந்த நாட்டின் மீதும் திணிப்பதும் கிடையாது, அது சனாதன இந்து தர்மத்தின் வழக்கம் இல்லை.

ஆனால், நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், வெண்கல காலத்திற்கும் முந்தையக் காலத்தில் ( Pre - Bronze age) இருந்த 49 நாகரீகங்கள், இஸ்லாமியப் படையெடுப்புக்களினாலும், கிறிஸ்தவ படையெடுப்புக்களினாலும்... இஸ்லாமிய படையடுப்புகள், கிறிஸ்தவ படையடுப்புகளின் காரணமாக 48 அழிந்து விட்டது. ஒன்றே ஒன்றுதான் அழியவில்லை, அது சனாதன இந்து நாகரீகம்!

இந்த நாகரீகத்தை உயிரோடு வைத்திருந்த அரசியலைப்பு சாசனம் என்ன? நீதிமுறை என்ன? என்று தெரிந்துகொள்ள விரும்புபவர்கள், தெரிந்துகொள்வதற்காக இந்த AI மாடலை உருவாக்கியிருக்கின்றோம். நிச்சயமாக, சனாதன இந்து தர்மத்தினுடைய அரசியலைப்பு சாசனமும், நீதிமுறையும், அதிலிருந்து மேம்பட்ட வாழ்க்கைமுறையும்தான் இந்த ஒரு நாகரீகம் இன்னமும் அழிந்துவிடாமல் உயிரோடு வைத்திருக்கின்றது. சுருக்கப்பட்டிருக்கிறோம், அதை நான் ஒப்புக்கொள்கிறேன். சுருக்கப்பட்டதன் காரணம், எங்கெங்கெல்லாம் நாம் சனாதன இந்து தர்மத்தின் அறிவையும், ஞானத்தையும், வழிகாட்டுதல்களையும் வாழாமல்விட்டோமோ, அங்கெல்லாம் விழுந்தோம். எங்கெல்லாம் அதை வாழ்ந்தோமோ, அங்கெல்லாம் வாழ்கின்றோம். அதனால் நாம் விழுந்ததற்கும் வாழ்ந்ததற்குமான காரணத்தை சரியாகத் தெரிந்துகொள்ளவேண்டும்.

துரதிர்ஷ்டவசமாக இந்து விரோத சக்திகள் பல தலைமுறையாக நம்மை மூளைச்சலவை செய்து, நாம் விழுந்ததற்குக்கூட, எங்கெல்லாம் விழுந்தோமோ அங்கு விழுந்ததற்குக்கூட, சனாதன இந்து தர்மம்தான் காரணம் என்று நம்மை நம்ப வைத்து, சுய-சந்தேகத்தை நமக்குள் விதைத்திருப்பதனால், நம் மக்களே சத்தியம் புரியாது, உண்மை புரியாது, சனாதன இந்து தர்மத்தின் சாரம் புரியாது உழலுகின்றார்கள் என்பது தான் உண்மை.

அதனால், சனாதன இந்து தர்மத்தைப் புனரமைத்து, அது 'நன்மையே செய்தது, வாழ்க்கையே தந்தது' என்பதை உலகத்திற்குச் சொல்லி, அதனுடைய Golden periodஎப்படி இருந்ததோ, சனாதன இந்து தர்மம் தன் பொற்காலத்தில் எவ்வாறு இருந்ததோ அதைபோல மறுமலர்ச்சி செய்து, மீண்டும் உயிர்ப்படையச் செய்து வாழ வைப்பதே எங்கள் நோக்கம். பரமசிவப் பரம்பொருள் அந்த நோக்கத்தை நிறைவேற்றிவிட்டார். இதற்குமேல் உலகம் முழுமைக்கும் கொண்டு சென்று சேர்ப்பதுதான் செய்ய வேண்டிய வேலை.

ஒவ்வொரு துறைக்கும் மாடல்களை மேம்படுத்திக்கொண்டிருக்கின்றோம். பொருளாதாரம், இந்து பொருளாதாரம். நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், கிறிஸ்தவ படையெடுப்பு வருவதற்கு முன்பாக, கிறிஸ்தவர்கள் அகண்ட பாரதத்தைக் கொள்ளயடித்து இங்கிலாந்திற்கு கொண்டு செல்வதற்கு முன்பாக, உலகத்திலேயே highest GDP இருந்தது அகண்ட பாரதம்தான், இந்து நாடுதான். அந்த காலக்கட்டத்தில் இந்து நாடாகத்தான் இருந்தோம்.

இன்னொன்றையும் நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள், இங்கிலாந்து கிறிஸ்தவ நாடு, படையெடுப்புக்கு முன்பாக, கொள்ளைக்கு முன்பாக, richest economy ஆகவும், worlds largest GDP ஆகவும் நாம் இருந்திருக்கின்றோம். இது அத்தனையும் வரலாற்றில் பதிவாகியிருக்கின்றது. இது எல்லாம் உண்மை, பொய் கிடையாது.

அப்படியென்றால், நம் சனாதன இந்து தர்மம் ஒரு அறிவார்ந்த பொருளாதார அமைப்பை கொண்டிருந்தது (economy system). அந்த அறிவார்ந்த பொருளாதார அமைப்பை மறுமலர்ச்சி செய்வதற்காக, அதற்காக ஒரு AI – மாடலை கட்டமைத்துக்கொண்டிருக்கின்றோம். அந்தப் பொருளாதாரக் கொள்கைகளை (economic principles) வைத்து, அர்த்த சாஸ்த்திரங்கள்...நாம் எல்லோரும் நினைத்துக்கொண்டிருக்கின்றோம், 'அர்த்த சாஸ்த்திரம் ஒன்றே ஒன்றுதான் என்று' கிடையாது.

அர்த்த சாஸ்த்திரம் ஆயிரம் புத்தகங்களுக்கு மேல் இருக்கின்றன. அவைகளை எல்லாம் தொகுத்து, சேகரித்து இன்று நாம் நடைமுறைப்படுத்துவதற்காக, உபயோகப்படுத்துபவர்களுக்கு இனிமையானதாக, எளிமையானதாக மாற்றி, அந்தக் கொள்கைகளுக்கு ஒரு AI – மாடலை கட்டமைத்திருக்கின்றோம். இங்கு நீங்கள் two thousand years of Hindu economic history, the economic history ஒரு சார்ட்டில் கொடுத்திருக்கிறோம் பாருங்கள்... இதை வெளியிடுகின்றோம், நேரம் இருக்கும் நீங்கள் வேண்டுமனால் நம் AIல் சென்று பார்த்துக்கொள்ளுங்கள். இதே மாதிரி சனாதன இந்து தர்மத்தின் மிகப்பெரிய பங்களிப்புகள்... மேலை நாடுகளில் விமானங்களை கண்டுபிடித்து உபயோகப்படுத்துவதற்கும் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே, இந்தியாவிலே மும்பையில் ஒரு சனாதன இந்து தர்ம பண்டிதர், நம்முடைய பரத்வாஜர் எழுதிய விமானக சாத்திரத்தை functional என்று நிரூபித்து, விமானத்தைச் செய்து பறக்கவிட்டும் காட்டி இருக்கிறார். அது ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது. அதுமாதிரி விமான சாஸ்த்திரங்கள் சம்மந்தப்பட்ட சாஸ்த்திரங்களை எடுத்து, அதில் இருக்கின்ற பல்வேறு circuits இன்னமும் functional... இதையும் நிரூபித்திருக்கின்றோம். இதையும் ஒரு AI மாடலாக செய்துகொண்டிருக்கின்றோம்.

இதற்காகவே ஒரு சன்யாசி... Aeronautics-ல் Ph.D செய்த ஒரு பெண் சன்யாசி, தன்னுடைய வாழ்க்கையே துறந்துவிட்டு, அவர்கள் Aeronautics-ல் Ph.D செய்திருக்கிறார்கள்... வந்து இந்த துறையிலே ஆழ்ந்து ஆராய்ச்சிகள் செய்து, விமானிக சாஸ்த்திரம் சார்ந்து இந்த AI மாடலை பயிற்சிசெய்து கொண்டிருக்கிறார்கள். இதுபோன்ற பல பேருடைய தியாகம், உழைப்பு...Time treasure talent எல்லாவற்றையும் அவர்கள் தியாகம் செய்து உருவானதுதான் இந்த கைலாஸம்.

சனாதன இந்து தர்மம் ஒரு அறிவார்ந்த ஞானச்செறிவோடுகூடிய மிகப்பெரிய நாகரீகம். அதை ஒரு விதை வங்கி வடிவிலாவது, Seed bank அளவிலாவது உயிரோடு வைப்பதுதான் எங்கள் நோக்கம். பரமசிவ பரம்பொருளின் அருளால் அதில் வெற்றி கண்டுவிட்டோம். இன்னமும் பல வெற்றிகளைத் தொடர்ந்து காண்போம்.

வரலாற்றில் சொல்லாப்படாத சனாதன இந்து தர்மத்தினுடைய ஏறத்தாழ 82,000 பங்களிப்புகளைத் (Historically untold contributions of Sanatana Hindu Dharma) தொகுத்திருக்கின்றோம். அதை ஒரே AI-மாடலாக கட்டமைத்துக் கொடுக்கின்றோம். அது எல்லாவற்றையும் சேகரித்து, ஒருங்கிணைத்து, நுண்திருத்தம் செய்வது - பரமசிவ பரம்பொருள் எங்களுக்கு அளித்த மிகப்பெரிய நல்லாசி, அவருடைய திருப்பணியை செய்வதற்கான வாய்ப்பு. நான் சொல்வதுபோல 'என் கடன் பணி செய்து கிடப்பதே!'

நேரம் கடந்துவிட்டது, உங்களுடைய பல்வேறு கேள்விகளுக்கு இன்னமும் பதிலளிக்க வேண்டியிருக்கிறது. பல தொலைக்காட்சிகள் நேரலை செய்துகொண்டுதான் இருக்கின்றன. நான் சொல்லவேண்டியவைகளையே இன்னும் சொல்லிமுடிக்காமல் இருக்கும்போது இவ்வளவு கேள்விகளுக்கும் எவ்வாறு பதில் சொல்வது என்பதுதான் நான் யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

ஒரு விஷயம் என்னால் சொல்ல முடியும், உங்களுடைய பல கேள்விகளுக்கு இந்த நித்யானந்தா AI பதில் சொல்லிவிடும். ஏனென்றால் நித்யானந்தா AI உங்களுடைய பெரும்பாலான கேள்விகளுக்கு பதில் சொல்லும் முறையில்தான் வடிவமைத்திருக்கிறோம். அதனால், உங்கள் அனைவரையும் ASK NITHYANANDA – NITHYANANDA AI-ஐ உபயோகப்படுத்துமாறு வேண்டிக் கேட்டுக்கொள்ளுகின்றேன். இது முழுக்க முழுக்க இலவசம்.

நம்முடைய உலோகவியல் (Metallurgy) சம்பந்தமான அறிவியல்கள், 'கல் தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முந்தோன்றிய முத்தகுடி' ஆகிய நம் தமிழ்குடியின் உலோகவியல் சம்பந்தமான அறிவியல், அது சம்பந்தமான ஞானம், நம் தமிழ் குடி வாழ்ந்த வாழ்க்கைமுறை, சனாதன இந்து தர்மமே! அதில் எந்த சந்தேகமும் இல்லை. இதைப்பற்றியும் பல்வேறு நூல்களைத் திரட்டி, ஆராய்ச்சிகளை சேகரித்து, அவைகளையும் ஒன்றாக்கி, இந்த AI மூலமாகக் கிடைக்க வைத்திருக்கிறோம்.

பலபேர் சொல்வதுண்டு, இந்த 'இந்து' என்கின்ற வார்த்தையே இல்லை என்று. கிடையாது! நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், 'ஹிமாலயம் ஸமாரப்பிய யாவத் ஹிந்து ஸரோவரம் தத்தேவ நிர்மிதம் தேசம் ஹிந்துஸ்தானம் பிரச்சக்ஷதே' இமயமலையில் தொடங்கி, இந்து சரோவரம் வரை... விண்ணவரால் நிர்மிக்கப்பட்ட, தெய்வங்களால் நிர்மிக்கப்பட்ட இந்த நாட்டை 'ஹிந்துஸ்தானம்' என்று அழைக்கிறோம் என்று மிகப் பழமையான சனாதன இந்து தர்மத்தின் நூல்களான பிரஹஸ்பதி ஆகமம் தெளிவாகச் சொல்லுகின்றது. இந்த 'ஹிந்து' என்ற வார்த்தையே சமீபகாலத்தில் வந்த வார்த்தை என்று நிறைய பேர் உருட்டிக்கொண்டு திரிகிறார்கள். நம்முடைய இந்துக்களேகூட நிறையபேர் அதுபோல் நம்புகிறார்கள். கிடையாது!

இப்பொழுது நான் சொன்ன அந்த சூத்திரம் பிரஹஸ்பதி ஆகமத்திலிருந்து எடுக்கப்பட்டது. இதுமாதிரி குறைந்தபட்சம் ஒரு 25 சாஸ்த்திரப் பிரமாணங்களை என்னால் கொடுக்கமுடியும். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வேத ஆகமங்களிலேயே 'இந்துமதம்' என்கின்ற வார்த்தையும், 'இந்து தேசம்' என்கின்ற வார்த்தையும் இருக்கின்றது.

இது மாதிரியான என்ன கேள்விகள் உங்களுக்கு இருந்தாலும், அவைகளை நீங்கள் அந்த ASK Nithyananda AI-யிடம் கேட்டால் வரலாற்றுக் குறிப்புகள், சான்றுகள் (Historical references, proofs) இதனுடன் சேர்ந்து உங்களுக்கு பதிலளிக்கும்.

நீங்கள் கேட்கலாம் யாருக்கு தெரியும் பிரஹஸ்பதி ஆகமம் பல ஆயிரம் ஆண்டுகள் பழமையானது? என்று.

இன்று குருப்பெயர்ச்சி நடந்திருக்கிறது, இது மாதிரி நடந்த குருப்பெயர்ச்சிகள் பலவற்றையும் அது தெளிவாகச் சொல்வதன் முலமாக, அந்தப் புத்தகம் பழைமையானது என்று நிரூபணமாகின்றது.

அது மட்டுமில்லாமல், இந்த பிரபஞ்ச அறிவியல் (cosmology) சம்பந்தப்பட்ட, பல்வேறு நக்ஷத்ரங்களின் அமைப்புகளையெல்லாம் மிகவும் விளக்கமாக விவரிக்கின்றார்கள். அது நம் முன்னோர்கள் நேரில் பார்த்து கிரஹித்திருந்தால் மட்டும்தான் அதை ஆவணப்படுத்தமுடியம். அது மாதிரி தெளிவான ஆவணங்கள் இருப்பதனால் ,அந்த நிகழ்வுகள் நடந்த காலத்தை நாம் கணித்து, இந்த நூல்களின் மூப்பை முடிவு செய்துவிடலாம். அதன் வயதை முடிவு செய்துவிடலாம்.

இது எல்லாவற்றையும் அறிவியல் பூர்வமாக, இப்பொழுது நீங்கள் அறிவியல் என்று சொல்கின்ற அந்த அறிவியல் மூலமாகவே நீங்கள் ஏற்றுக்கொள்ளுகின்ற விதத்தில் மிகத்தெளிவாக நிர்மாணித்திருக்கின்றோம்.

ஐயா சிவசங்கர் என்று ஒருவர் கேட்கின்றார்... ஐயா நித்யானந்தா சாமி நானும் கைலாஸத்துக்கு வரேன், நீங்கள் ஒரு டிக்கெட் போடுங்கள்,இந்த பூமியில் நிம்மதி இல்லை என்று சாட்டை தமிழ் யுடியூப் சேனலில் போட்டிருக்கிறீர்கள்.

ஐயா, கைலாஸத்திற்கு வரவேண்டும் என்று நினைத்தீர்களென்றால், நீங்கள் முதலில் செய்ய வேண்டியதென்னவென்றால்... பரமசிவ சேனை என்று 30 நாள் நிகழ்ச்சி இலவசமாக நடத்துகின்றோம். முழுக்க முழுக்க அனுமதி இலவசம். தங்குமிடம், உணவு உட்பட இந்த நிகழ்ச்சி இலவசம். உலகம் முழுவதும் நடத்துகிறோம் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சலிஸில் நடத்துகிறோம், மலேசியாவில் நடத்துகிறோம், ஆஸ்திரேலியாவில் நடத்துகிறோம். இந்தியாவில் காசியில் நடத்துகிறோம், தமிழ்நாட்டில் சேலத்தில் நடத்துகிறோம். இன்னும் தமிழ்நாட்டில் இருக்கின்ற மற்ற நம்முடைய ஆசிரமங்களிலும், கைலாஸாக்களிலும் நடத்துகிறோம், ஆதீனங்களிலும் நடத்துகிறோம். நீங்கள் எந்த ஆதீனத்தில் வேண்டுமானலும், எந்த நம்முடைய ஆசிரமத்தில் வேண்டுமானலும் சென்று பங்கெடுத்துக்கொள்ளலாம்.

இந்த 30 நாள் நிகழ்ச்சியில் நீங்கள் கலந்துகொண்டீர்களானால், 'நாங்கள் யார்?' என்கின்ற அறிமுகம் முழுமையாக உங்களுக்கு அளிக்கப்படும். உங்கள் விருப்பம், இந்த மாதிரி வாழ்க்கைமுறையை வாழ்வதற்கு விருப்பம் இருக்கிறதா என்று நீங்களும் முடிவு செய்யமுடியும், நாங்களும் முடிவு செய்யமுடியும்.

இந்த ஒரு மாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டீர்களானால், அதற்குப் பிறகு நீங்கள் கைலாஸா வரவிரும்பினால், எங்களுக்கும் நீங்கள் கைலாஸா வருவது நன்று அல்லது நீங்கள் பலவேறு நாடுகளில் இருக்கின்ற கைலாஸா நிறுவனங்கள், அங்கேயே வாழ்ந்து தங்கி சேவை செய்ய நினைத்தீர்களென்றாலும் அங்கேயே இருக்கலாம் அல்லது நீங்கள் உங்களுடைய ஊரில் கைலாஸத்தை உருவாக்க நினைத்தாலும், நீங்கள் உருவாக்கலாம். எதை வேண்டுமானாலும் செய்யலாம், ஆனால் முதலில் நம் இரண்டுபேருக்கும் முழுமையான அறிமுகம் வேண்டும். எந்த நாட்டிலேயும் விசா interview செய்துவிட்டுத்தானே விசா கொடுப்பார்கள். அதனால் நீங்கள் கைலாஸா வரவேண்டுமென்றாலும் எங்களுடைய interview 30 நாள். அதுதான் உண்மை. 30 நாள் எங்களுடைய interview. அதனால் அதிலே கலந்துகொள்ளுங்கள். கைலாஸா வரவிரும்பும் யார் வேண்டுமானாலும் அதில் கலந்துகொண்டு எங்களைப்பற்றி புரிந்துகொண்டு, அதற்குப் பிறகு நாங்களும் உங்களைப் பற்றி புரிந்துகொண்டுதான், கைலாஸாவிற்கு விசா கொடுப்பதைப் பற்றிய முடிவை நாங்கள் எடுக்க முடியும். இதுதான் உண்மை. உண்மையை அப்படியே சொல்கிறோம்.

அடுத்ததாக, கைலாஸாவிற்கு வருவதற்கு பணம் எதுவும் வேண்டுமா? என்று கேட்டிருக்கிறீர்கள்.

கைலாஸாவில் பணத்திற்கு எந்த மதிப்பும் கிடையாது. இங்கு பணம் புழக்கத்திலேயே இல்லை! எங்களுக்கு தேவையானதை நாங்கள் விளைய வைத்துக்கொண்டு, எங்கள் உணவு மற்றவைகளுக்கு தற்சார்போடு இருக்கின்றோம். அது ஒன்று. மற்றபடி எங்கள் கைலாஸத்தை நடத்துவதற்கு, சேவைகளுக்குத் தேவையானவற்றை பொதுமக்கள் அளிக்கின்ற நன்கொடையின் மூலமாக நடத்துகின்றோம்.

உலகம் முழுவதும் சனாதன இந்து தர்மத்தை வாழும் மக்கள், 'சனாதன இந்து தர்மம் வாழவேண்டும்' என்று நினைக்கின்ற மக்கள், எங்களுக்கு நன்கொடை அளிக்கின்றார்கள். அந்த பிக்ஷையை ஏற்று, நாங்கள் எங்கள் செயல்பாடுகளை செய்கின்றோம். எந்த நாட்டோடும் கடன் வாங்குவதில்லை, எந்த நாட்டிடமிருந்தும் கடன் பெருவதில்லை.

கைலாஸா - கடன் இல்லாத தேசம், இராணுவம் இல்லாத தேசம், காவல்துறை இல்லாத தேசம், வருமான வரி இல்லாத தேசம். சனாதன இந்து தர்மத்தை வாழ்வதும், மற்றவர்களை வாழ வைப்பதுமான மோக்ஷத்தின் தத்துவத்தை அடிப்படையாக வைத்து, Moksha centric dharma, Moksha centric artha, Moksha centric kaama, Moksha centric moksha… மோக்ஷத்தை அடிப்படையாக வைத்த வாழ்க்கைமுறை எங்களுடையது. அதனால் இங்கு பணத்திற்கு மதிப்பும் இல்லை, வேலையும் இல்லை, பணம் சார்ந்த கொடுக்கல் - வாங்கல்கள் கைலாஸத்திற்குள் நிகழ்வதும் இல்லை.

நான் ஏற்கனவே சொன்னேன், இது ஒரு வேறு உலகம்போல, நீங்கள் கைலாஸாவை 'கற்பனை தேசம்' என்று நினைக்கிறீர்கள், நான் 'உங்கள் உலகமே மாயை' என்று நினைக்கிறேன். எது உண்மை? கைலாசா தேசம் நிஜமா? என்பதெல்லாம் காலம்தான் உங்களுக்குக் காட்டும்.

நிச்சயமாக காலம் வரும்போது பொதுமக்கள் வந்து செல்வதுபோல கைலாஸத்தை திறக்கின்றேன். இப்பொழுது இப்போதைய காலகட்டத்தில் எங்கள் சன்யாசிகள் மட்டும் வாழ்வதற்காகத்தான் இந்த கைலாஸத்தை அமைத்திருக்கின்றோம். எங்களுடைய பக்தர்கள், சீடர்கள் வாழ்வதுபோலத்தான் அமைத்திருக்கின்றோம். கிரஹஸ்தர்களுக்கு தனியான கைலாஸத்தை அமைத்திருக்கின்றோம்.

அதனால் நாங்கள் ஒரு சனாதன இந்து தர்மத்தைப் புனரமைப்பதற்காக அமைக்கப்பட்ட apolitical - அரசியல் தாண்டிய ஆன்மிக தேசம்.

எப்படி வாடிகன், கத்தோலிக்க திருச்சபையினுடைய ஒரு ஆன்மிக நாடாக, அவர்களுடைய மதம் சார்ந்த நாடாக இயங்குகிறதோ, அதுபோல சனாதன இந்து தர்மத்திற்காக நாங்கள் உருவாக்கியிருக்கின்ற, பரமசிவப் பரம்பொருளின் பேரருளால் உருவாகியிருக்கின்ற நாடுதான் இந்த கைலாஸா.

காலம் கடந்ததனால் எங்களுடைய நிகழ்ச்சி நிரல்படி 8 மணியிலிருந்து 10 மணிவரை, இந்திய நேரப்படி 8 மணியிலிருந்து 10 மணிவரை என்றுதான் நிகழ்ச்சியை நிர்ணயித்திருந்தோம். காலம் கடந்த பிறகும், 25 நிமிடங்கள் ஆன பிறகும், 20 தொலைக்காட்சி சேனல்கள் தொடர்ந்து நேரலை செய்துகொண்டிருக்கின்றார்கள். அவர்கள் அனைவரும் நேரலை செய்கின்றோம், சற்று நேரம் தொடர்ந்து பேசுங்கள் என்று கேட்கின்றார்கள். அதனால் தொடர்கின்றேன்.

இவையெல்லாம் நாங்கள் மறுமலர்ச்சி செய்திருக்கின்ற பல்வேறு துறைகள், இது சார்ந்த AI-களை கட்டமைத்திருக்கின்றோம். இன்னமும் கட்டமைத்துக்கொண்டே இருக்கின்றோம். உலகம் முழுவதிலும் 150 நாடுகளில் நிறுவனங்கள் நடத்துகின்றோம். நிறுவனங்கள் என்றால், அவை அந்தந்த நாட்டினுடைய விதிமுறைக்கு கட்டுப்பட்டு நிகழ்வவை, நடத்தப்படுவவை.

உதாரணத்திற்கு இந்தியாவில் இருக்கின்ற ஆசிரமங்கள், அறக்கட்டளைகள்... இதெல்லாம் இந்தியாவினுடைய விதிக்கு கட்டுப்பட்டு, இந்தியாவினுடைய சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டு நடக்கின்ற நிறுவனங்கள். அது மாதிரி மலேசியாவில், மலேசியாவின் சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டு நடக்கின்ற நிறுவனங்கள். அது மாதிரி 150 நாடுகளில் நடத்துகிறோம்.

நான் சொன்ன மாதிரி சில நாடுகளில் தூதரகரீதியான உறவுகள் வைத்திருக்கிறோம், சில நாடுகள் சுய-இறையாண்மையோடு எங்களுக்கு ஒரு சிறு நிலப்பகுதியை அளித்திருக்கின்றன. சில நாடுகள் சுய-நிர்ணய உரிமை, autonomous என்று சொல்வார்கள், அது மாதிரி சில பகுதிகளை அளித்திருக்கின்றன. இவை எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்துதான் இந்த கைலாஸா நடக்கின்றது.

குறித்த நேரத்திற்கும் மேலாக அரைமணி நேரம் கடந்துவிட்டதனால், இதற்கும் மேல் தொடராமல் இப்போதைக்கு இதோடு முடித்துக்கொள்வதுதான் உத்தமம் என்று நினைத்து முடிக்க எண்ணுகின்றேன். வேண்டுமானால் நிச்சயமாகத் தொடர்ந்து வேறு வேறு நாட்களில் நேரலை சத்சங்கத்திற்கு வருவதற்கான முயற்சிகள் செய்கின்றேன். மீண்டும் வரும்பொழுது உங்களுடைய மற்ற கேள்விகளுக்கெல்லாம் தொடர்ந்து பதிலளிக்கின்றேன்.

நேரலை செய்த எல்லா ஊடகங்களுக்கும், கேள்விகளை அனுப்பிய எல்லா ஊடகவியலாளர்களுக்கும் நன்றி. வந்த உங்கள் அனைவருக்கும் நன்றி.

இன்று பிறந்த ஸ்ரீ விஷ்வாவசு புத்தாண்டு எல்லோருக்கும் எல்லா நன்மையும் கொடுத்து, எல்லா வளமும் கொடுத்து, நிறை வாழ்க்கையை அளிக்குமாறு பரமசிவப் பரம்பொருளைப் பிரார்த்தித்து, பரமசிவப் பரம்பொருளின் பேரருளையும், நல்லாசிகளையும் அவருடைய பதத்தில் இருந்து, பரமாத்வைத நிலையிலிருந்து உங்கள் அனைவருக்கும் பரமசிவப் பரம்பொருளின் ஆசிகள் கிடைக்க ஆசீர்வதிக்கின்றேன். Blessings, Be Blissful... ஆனந்தமாக இருங்கள்.

Event Photos

Link to Facebook Posts

https://www.facebook.com/srinithyananda/posts/pfbid0SVGZE8PuS1mu2seRFfc7oB6azCnDtE5NqHCKVFME9DYMTCiW8uVSBEThTjmzeVY8l