Difference between revisions of "November 16 2015"
m (Chronological sequencing of pictures) |
|||
Line 833: | Line 833: | ||
File:20151116_Photo_1205_12Ra56oYA6YS_tkRSb26Sr83Gy4msu-Xc.JPG | File:20151116_Photo_1205_12Ra56oYA6YS_tkRSb26Sr83Gy4msu-Xc.JPG | ||
File:20151116_Photo_1206_1dVXGZ4egRuLfOqCLhcY6vlSiTFd6D-nM.JPG | File:20151116_Photo_1206_1dVXGZ4egRuLfOqCLhcY6vlSiTFd6D-nM.JPG | ||
− | + | ||
File:20151116_Photo_1208_1Ic3O7BfCA5L7dMZ7FQ1AaqJ0dKeadfYN.JPG | File:20151116_Photo_1208_1Ic3O7BfCA5L7dMZ7FQ1AaqJ0dKeadfYN.JPG | ||
File:20151116_Photo_1209_1uOjak-4nNs2jpYyVrHOVnLA78N1X_4fr.JPG | File:20151116_Photo_1209_1uOjak-4nNs2jpYyVrHOVnLA78N1X_4fr.JPG |
Revision as of 06:11, 5 June 2021
Title:
Aadhi Saivam - Introduction (Tamil) ஆதி சைவம் - அறிமுகம்
Link to Video:
Video | Audio |
Transcript in Tamil
உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன். ஆதி சைவம் ஆதி சைவத்தை அறிமுகப்படுத்த முயற்சி செய்வது, ஆண்டவனையே, சிவனையே அறிமுகப்படுத்த முயற்சிப்பதற்கு சமம். சாத்தியம் இல்லாதது என்பது மட்டும் அல்லாது, வாழ்ந்து மட்டுமே பார்த்து, அனுபவித்து மட்டுமே பார்க்ககூடியது என்கின்ற தகுதி உடையது ஆதி சைவம். ஆண்டவனை அறிமுகப்படுத்த இயலாது, வாழ்ந்து மட்டும் தான் பார்க்க இயலும். ஆதி சைவத்தையும் அறிமுகப்படுத்த இயலாது, வாழ்ந்துதான் பார்க்க இயலும். அறிமுகப்படுத்த இயலாது என்கின்ற அறிமுகத்தை வேண்டுமானால் அளிக்க இயலும். ஆதி சைவம், பிரபஞ்சத்தில், இந்த பேர் அருள் வடிவான ஞானப் பிரபஞ்சத்தில் என்றென்றும் விரிவடைந்துகொண்டே சென்று கொண்டிருக்கும். மரணம் இலாத சிரஞ்சீவியான, நிரந்தரமான இந்தப் பிரபஞ்சத்தில் உயிர் தோன்றிய பொழுது, அது எவ்வாறு தன் வாழ்க்கையை மேம்படுத்தி பிரபஞ்சத்தின் எல்லா சக்திகளையும் தன் உள்ளிருந்து வௌிப்படுத்தி, கடவுள்துகள் என்கின்ற நிலையில் இருந்து கடவுளாக மாறுவது எப்படி, தன்னுடைய இருப்பு நிலையை, பிரபஞ்சத்தின் வடிவமாக அகண்ட சச்சிதானந்த பரிபுரண நித்யானந்த நிலையில் எப்படி தன்னுடைய இருப்பைநிலை நிறுத்திக் கொள்வது என்கின்ற அறிவியல், வாழ்வியல் ஆதிசைவம். இப்போ நான் கொடுத்த னநகைெவைழைெ - பள்ளியில், ஒரு பக்கக் கட்டுரை வரைக என்று ஒரு கேள்வியைக் கேட்டு, பத்து மதிப்பெண்களுக்கு அந்தக் கேள்வியை நிர்ணயித்து, ஒரு பக்க கட்டுரையை வரையச்சொன்னா, ஒரே வரியிலே நீங்க விளக்கம் கொடுக்கற மாதிரி, அறிமுகப்படுத்த முடியாத ஆதிசைவத்தை சில வரிகளில் சொல்ல நான் செய்த முயற்சி தான் இது. உயிர் பிரபஞ்சத்தில் மலர்ந்த உடன், கடவுள் துகள் என்கின்ற நிலையில் இருந்து கடவுள் நிலையை உணர்வது, கடவுள் தன்மையை தனக்குள்ளிருந்து வௌிப்படுத்துவது, கடவுள் நிலையிலேயே இருப்பு கொள்வது என்கின்ற மிகப்பெரிய வழியின் அறிவியல், அதை அடைவதற்கான, வாழ்வதற்கான அறிவியல், ஆதி சைவம். ஆதிசைவத்தின் வரலாற்றை வைத்தோ, ஆதிசைவத்தின் நிலை கொண்ட புவியியல் சுழல்கள், இவைகளைச் சார்ந்தோ ஆதிசைவத்தை சுருக்குவது சாத்தியமே இல்லாதது. ஏனென்றால், வரலாறு, துவக்கமும் முடிவும் இருக்கின்ற ஒன்றுக்குத்தான் இருக்க முடியும். ஓர் இடத்தில் இருந்து, இன்னோர் இடத்தில் இல்லாத ஒன்றைத்தான், புவியல் ரீதியாக நாம் அடையாளம் காட்ட முடியும். அந்தம் இல்லாத ஆதி, ஒன்றில் இருந்து இரண்டாக மாற முடியாத அளவுடையது. அந்தம் இல்லாத ஆதி உடையது, ஒன்று இரண்டாக மாற முடியாத அளவுடையது, ஆதி சைவம். அதனால், வரலாற்றாலோ, வரலாறு சார்ந்தோ, புவிஇயல் சார்ந்தோ, ஆதி சைவத்தை விளக்குவது சாத்தியமில்லாதது. வரையறுப்பது சாத்தியமில்லாதது. ஒரு காலத்தில் தோன்றி, ஒரு காலத்தில் இல்லாமல் போவது கிடையாது ஆதிசைவம். ஒரு இடத்தில் இருந்து, ஓர் இடத்தில் கடைபிடிக்கப்படாமல், இல்லாமல் போவது கிடையாது ஆதிசைவம். புவிஈர்ப்பு விசை எப்படி புவி முழுக்க இருக்கின்றதோ, பிரபஞ்சம் முழுமையும் சில குணங்களால் சத்தியங்களால் நிறைந்து, அந்த சத்தியங்களை சார்ந்து இயங்குகிறது. அந்த சத்தியங்கள்தான் ஆதிசைவம். புவிஈர்ப்பு விசை ஓர் இடத்தில் இருக்கு ஒரு இடத்தில் இல்லை என்று சொல்ல முடியுமா? முடியாது. எப்படி புவி முழுவதும் புவிஈர்ப்பு விசை நிறைந்திருக்கின்றதோ அது போல பிரபஞ்சம் முழுவதும் சில விதிகள், சத்தியங்கள், சாத்தியங்கள், கருத்துக்கள், உண்மைகள் நிறைந்து இந்த புவியே இயங்குகிறது. இந்த பிரபஞ்சமே இயங்குகிறது. அந்த சத்தியங்களை, அந்த பிரபஞ்சமே குறை இலாது, முறை தவறாது வௌிப்படுத்திய வாழ்வியல்முறைதான் ஆதி சைவம். பிரபஞ்சப் பேரருள், பிரபஞ்சப் பரம்பொருள் வடிவம் வடிவமின்மை என்னும் நிலைகளைக் கடந்து தன்னுடைய சாந்நித்ய இருப்பின் மாத்திரத்தாலேயே வௌிப்படுத்திய சத்தியங்களைத் தான் வேதங்கள் என்று சொல்கிறோம். அவைகளின் சாரங்கள், சாரம் உபநிடதங்கள். பிரபஞ்சப் பேரருள், அகண்ட பரிபூரண சச்சிதானந்த பரம்பொருள் தன்னுடைய நித்யானந்த நிலையில் இருந்தவாறே பிரபஞ்சத்தின் சத்தியத்தை தன் நிலையில் இருந்தவாறே தானே தன் மயமாய் தனக்குள்ளேயே ரசித்துக்கொண்டிருக்கும், தனக்குள்ளேயே அதை வாழ்ந்துகொண்டிருக்கும், தனக்குள்ளேயே தன்னையே ருசித்துக்கொண்டிருக்கும் அந்த தன்மையானந்த நிலையில் வௌிப்படுத்தப்பட்ட, உணர்த்தப்பட்ட சத்தியங்கள்தான் வேதங்கள். அதன் சாரம் உபநிடதங்கள். அதே பிரபஞ்சப் பேரருள், அகண்ட பரிபூரண சச்சிதானந்த பரம்பொருள். தன்னுடைய நித்யானந்த நிலையிலேயேதான் இருப்பது மட்டுமல்லாது, உயிர்கள் எல்லாம் உய்வடைய உத்தம நிலை அடைய தன் நிலைதனை உயிர்கள் எல்லாம் உணர்ந்திட சதாசிவனாய் திருமேனி கொண்டு உலகத்திற்கு வௌிப்படுத்திய ஒவ்வொருவரும் பிரபஞ்ச பேரருள் நிலையில் இருந்து சுத்த ஷிவாத்வைத சத்தியத்தை வாழ்ந்திட, சுத்த ஷிவாத்வைத சத்தியத்தில் நிலைபெற்று பொங்கி மலர்ந்திட, பெருமானே சத்தியங்களை வௌிப்படுத்தியதுதான் ஆகமங்கள். தன் இருப்பினாலேயே, சாந்நித்யத்தாலேயே, தன்னுடைய இருப்பின் சாந்நித்யதாலேயே, சாந்நித்ய இருப்பின் பலத்தினாலேயே பொங்கிய சத்தியங்கள் வேதங்களும் உபநிஷதங்களும் திருமேனி தாங்கி சதாஷிவனாய் உலகிற்காக அவர் வௌிப்படுத்திய சத்தியங்கள், உயிர்கள் எல்லாம் உய்வதற்காக அவரே வௌிப்படுத்திய சத்தியங்கள் ஆகமங்கள். வேதங்களை சார்ந்து உபநிடதங்களை சார்ந்து பெருமானே வௌிப்படுத்திய ஆகமங்களைச் சார்ந்து உலகமெல்லாம் உய்வதற்கான ஜீவன்முக்த விஞ்ஞானமாக வாழ்வியல் நெறியாக மலர்ந்தது தான் ஆதிசைவம். ஆதிசைவம் ஆதிமதம் மட்டும் அல்லாது மதம் என்கின்ற கருத்து உருவாவதற்கு முன்பாகவே மலர்ந்த ஒரு ஆன்மீக வாழ்வியல் நெறி. வேறு வேறு நாடுகளில் இடங்களில் இருக்கின்ற மக்கள் கல்லாலே ஆயுதங்கள் செய்து ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டு காட்டு மிராண்டிகளாக வாழ்ந்திருந்த காலத்தில் நாங்கள் கல்லாலயம் செய்து ஜீவன்முக்த வாழ்கையை வாழ்ந்து கொண்டிருந்த வாழ்வியல் நெறி ஆதி சைவம். மொழி இல்லாத காலத்தில் மேலை நாட்டவர்கள் பல்வேறு கண்டங்களில் இருந்த மக்கள் ஹீன சப்தங்களால் உணர்ச்சிகளையும் உணர்வுகளையும் வௌிப்படுத்தி கொண்டிருந்த காலத்தில் முறையான செம்மொழியான தமிழி என்னும் அருமையான மொழியில் வாழ்வியல் சத்தியங்களை ஆகமங்களாக நாங்கள் வாழ்ந்து கொண்டு இருந்த வாழ்வியல் நெறி ஆதிசைவம். ஆகமங்கள் சமஸ்க்ருதத்தில் எழுதப்பட்டதாக பல பேர் கருதுவது பொய். அது மிகபெரிய தவறான கருது. உண்மையில் பல சம்ஸ்க்ருத வல்லுனர்கள், அறிஞர்களால் ஆகமத்தின் அரைப்பகுதி 50 சதவிகிததைகூட மொழிபெயர்க்க இயலவில்லை என்பதுதான் நான் நேரடியாக பல சம்ஸ்க்ருத அறிஞர்களோடு தொடர்புகொண்டு வேலை செய்துபார்த்ததன் இறுதி உண்மையாக அறிந்த சத்தியம். உண்மையில் ஆகமங்கள் சமஸ்கிருதத்திற்கும் தமிழுக்கும் மூல மொழியான தமிழி என்னும் மொழியில் தான் அருளப்பட்டது. கிரந்த எழுத்துக்களால் பொறிக்கப்பட்டு தமிழி என்னும் இலக்கணம் சார்ந்து வௌிப்படுத்தப்பட்டு எம்பெருமானே மொழியின் இலக்கணமும் தந்து, எம்பெருமானே வாழும் வழியையும் தந்து, எம்பெருமானே வாழ்வியல் நெறியும் தந்து ஜீவன் முக்த விஞ்ஞானம் மாத்திரம் அல்லாது உணவு சமைக்கும் அடிப்படை விதிகளில் இருந்து உடை நெய்தலில் இருந்து உடை உடுத்தும் முறையில் இருந்து எழுவது விதமான உடை உடுத்தும் முறையை முப்பத்தைந்து விதம் ஆண்களுக்கும் முப்பத்தைந்து விதம் பெண்களுக்குமாக, எழுவது விதமான உடை உடுத்தும் முறையைகூட மிகத்தௌிவாக ஆதி சைவர்கள் பல்வேறு குழுக்களாக தங்களுடைய தொழில் திறமை சார்ந்து தங்களை பிரித்துக்கொண்டார்கள். அந்த பிரிவின் வகையும் திறமும் உட்பட அவர்கள் வாழ்க்கைமுறை, யார் வியாபாரம் செய்ய வேண்டிய கடமையில் இருக்கிறார்கள், யார் ஆட்சி செய்து நாட்டின் முறைமையும் தகைமையும் காப்பாற்ற வேண்டிய நிலையில் இருக்கிறார்கள், யார் இந்த வாழ்வியல் முறையான ஆதிசைவத்தை உலகிற்கு உபதேசித்து உரைக்கவேண்டிய நிலையில் இருக்கிறார்கள் என்று ஒவ்வருக்கும் தங்கள் தங்களுடைய விருப்பம் மற்றும் வேலைகள் சார்ந்து தங்களுடைய வாழ்கை முறை சார்ந்து தங்களைத் தாங்களே பிரித்துக் கொண்டார்கள். இந்த பிரிவு முறையும் அவர்கள் ஒவ்வருவருக்குமான உணவுமுறை, உடைமுறை ஒரு நகரம் அமைக்கும் பொழுது ஒவ்வொருவருக்கும் எங்கு இருப்பிடம் இருக்க வேண்டும் என்கின்ற இடம் முறை அவர்கள் ஒவ்வொருவரும் எப்படி வாழ்க்கையை அமைத்து கொள்ள வேண்டும் என்கின்ற வாழ்வியல்முறை அனைத்தையும் எண்ணிக்கூட பார்க்க முடியாத அளவிற்கு மிகத் தௌிவாக நுட்பமாக, ஒரு கோசாலை அமைக்க வேண்டும் என்றால் எந்த இடத்தில் பசு போன்ற மிருகங்கள் இருக்க வேண்டும், எந்த இடத்தில் குதிரை போன்ற மிருகங்கள் இருக்க வேண்டும், எந்த இடத்தில் காவலுக்கான நாய்கள் போன்ற மிருகங்கள் இருக்க வேண்டும் என்கின்ற அளவிற்கு, திருநீறு பஸ்மத்தை உருவாக்க வேண்டும் என்றால் எந்த நிற எந்த முறையான பசுவின் சாணத்தை எப்படி எடுத்து எப்படி திருநீற்றை உருவாக்க வேண்டும் என்கின்ற ஆழமான தௌிவான, ஏறத்தாழ சில கோடி ஸ்லோகங்கள் மூலமாக சிலகோடி பாடல்கள் மூலமாக ஆழ்ந்து தெரிந்து கொள்ளுங்கள் சிலகோடி ஏனென்றால் காமிக ஆகமத்தை எம்பெருமான் விவரிக்கும் பொழுது கோடி கோடி ஸ்லோகங்கள் அருளியதாக சொல்லுகின்றார். இப்பொழுது நம்முடைய கையில் கிடைத்து இருப்பவை இருபது லக்ஷம் மாத்திரமே. அதுபோக காரண ஆகமம் மற்ற காமிகம் முதல் இருபதெட்டு ஆகமங்களும் இதுபோக உப ஆகமங்களாக நூற்றிஎட்டு ஆகமங்களும், அதுபோக இதன் பாகமாக அறுபத்திநான்கு தந்திரங்களையும் பெருமானே நேரடியாக அருளி உள்ளார். வேதமும் அதன் சாரமாக உபநிடதமும் அதை வாழும் முறையான ஆகமமும் ஒன்றாய் சேர்ந்து இந்த மூன்றையும் சார்ந்த வாழ்வியல் முறையைத்தான் ஆதி சைவம் என்று சொல்லுகின்றோம். வேதங்கள் பொது நூலாக இருந்து ஆகமங்கள் சிறப்பு நூலாய் இருந்து வாழுகின்ற வாழ்க்கை முறை வாழ்வியல் விஞ்ஞானம் ஜீவன் முக்த வாழ்வியல் விஞ்ஞானம் தான் ஆதி சைவம். பிரபஞ்சம் தோன்றிய பொழுதே உயிரனங்களை உருவாக்கும் பொழுதே எம்பெருமான் ஆகமத்தை உலகுக்கு அளித்து விட்டார். தன்னுடைய இருப்பின் சாந்நித்யத்தினாலேயே உயிர்கள் எல்லாம் உய்வடைந்து மேம்பட்ட வாழ்க்கை நிலையை அடைய ஆகமங்களை பெருமான் சதாசிவன் மகாதேவன் ஆதிசிவன் எம்பெருமான் ஈசன் அண்ணாமலையான் உலகத்திற்கு அருளிய மிகப்பெரிய நன்கொடை வாழ்வியல் சாத்திரம் வாழ்வியல் சுத்திரம் வாழ்பவர்கள் அவனை நோக்கி பொழியும் தோத்திரம் இது எல்லாம் ஒன்று அடக்கி மிகப்பெரிய வாழ்வியல் நெறியாக பெருமான் அருளியதுதான் ஆதி சைவம். தானே அந்த உண்மைகளை உலகத்திற்கு சொன்னது மட்டும் அல்லாமல் எப்பொழுதெல்லாம் மக்கள் அதை மறந்து மாயையிலே சிக்குகிரார்களோ எப்பொழுது எல்லாம் மூடர்கள் அரக்கர்கள் வாழ்க்கையின் அடிப்படை தெரியாதவர்கள் அசுர பலத்தாலே வாழ்வியல் நெறியை அழிக்க முயற்சித்து தனக்கும் மற்றவர்களுக்கும் தீங்கு செய்து கொள்ளுகின்ற ராக்ஷசர்களாக மாறி உலகத்திற்கு பெருங்கேடு விளைவிக்க முயற்சிக்கின்றார்களோ அப்பொழுது எல்லாம் தீமையை அழித்து நன்மையை மலரச்செய்து சைவத்தை புனரமைத்து வேத நெறி தழைத்து ஒங்க மிகு சைவ துறை விளங்க மீண்டும் மீண்டும் பெருமானே அவதரிக்கின்றான். வேத நெறி தழைத்து ஒங்க மிகு சைவ துறை விளங்க, புத பரம்பரை பொலிய பெருமானே மீண்டும் மீண்டும் அவதரித்து, தன்னைத்தானே அடையாளம் காட்டி தன்மையானந்தத்தில் சின்மையானந்ததில் சிவானந்த போதத்தில் ஜீவன் எல்லாம் திளைத்து இருக்க வழியும் காட்டி, வாழ்வும் காட்டி உய்யவும் காட்டி உணவாய் ஊட்டி உணர்விலும் காட்டி உயிரிலும் காட்டி மெய் நினைவும் உயிர் நினைவும் உயிர் உணர்வும் மலர்த்தி ஆதி சைவத்தை நம் வாழ்வியல் நெறியாக மீண்டும் நிறுத்திடவே குருவாய் மீண்டும் மீண்டும் வருவாய் என கேட்க்கும் ஜீவ ராசிகளுக்காக குருவாய் வருவாய் என ஏங்கும் ஜீவர்களுக்காக தன் திருமேனி விட்டு குருமேனி தாங்கி உறும் உலகத்தில் உய்ய வாழி காட்டவே என்றென்றும் இருக்கும் அண்டம் இல்லாத ஆதி சைவத்தை உயிர் கொடுத்து புனரமைக்க மீண்டும் வாழ்வியல் நெறியாக மாற்றிட இறைவன் குருமேனி தாங்கி வரும் நிகழ்வுகளைத்தான் அவதாரங்கள் என்றும் விளையாடல்கள் என்றும் ஆதிசைவத்தின் பாரம்பரிய சாத்திரங்கள் தௌிவாய் வகுத்து உலகிற்கு வரைத்து உரைக்கின்றன. பாலில் நெய் போலே வேதங்களில் இருக்கும் சத்தியமான நெய்யை உபநிஷதம் மூலமாய் உயிர்க்குச் சொல்லி வெறும் நெய்யை உண்பது சாத்தியம்மில்லை என்பதனால் ஆகமம் என்னும் உணவாய் சமைத்து அதில் நெய்யையும் கலந்து நம் நெஞ்செல்லாம் இனிக்க கல் நெஞ்சாய் இருக்கும் மனமெலாம் கரைந்து நெஞ்சு பஞ்சாக நெஞ்செலாம் இனிக்க உலகத்திற்கு சொன்ன வாழ்வியல் நெறிதான் ஆதி சைவம். ஆதி சைவத்தின் முக்கியமான பாகங்கள் நான்கு, சரியை - வாழ்வியல் முறை எவ்வாறு துயில் எழ வேண்டும், என்பதில் இருந்து துயில் எழுந்ததில் இருந்து செய்ய வேண்டிய செயல்களில் இருந்து நாள் முழுவதையும் உங்கள் உடலும் - மனமும் செய்ய வேண்டிய செயல்கள் செய்யக்கூடாத செயல்கள் எப்படி இருக்க வேண்டும் எப்படி இருக்ககூடாது என்பது துவங்கி, உங்கள் உணவுமுறை, உடைமுறை உறக்கமுறை, உறைவிடமுறை என்னும் எல்லா முறைமைகளையும் வாழ்வியல்முறை சாத்தியங்களையும் நெறியையும் சரியை ஆக சரியாக வாழவேண்டிய இருக்க வேண்டிய முறையை சொல்வது சரியை. இதைத்தாண்டி பிரபஞ்ச பேரருளான அகண்ட சச்சிதானந்தா பரம்பொருளான சதாசிவனோடு பக்தியில் சங்கமித்து பக்தியால் பொங்கும் ஆனந்தத்தை அனுபவித்து சிவஞானத்தால் பொங்கும் சிவபோதத்தை வாழ்ந்து சிவஞானத்தால் பொங்கி பெருகும் சிவபோததில் சிந்தை நறைந்து உறைந்து கிடந்து வாழும் வாழ்க்கை முறை தான் க்ரியை. வழிபடும்முறை மலர் கொய்வதில் துவங்கி சந்தனம் அரைப்பதில் இருந்து மாலை சாற்றுவதில் இருந்து ஆத்மார்த்தமாக இறைவனை வழிபடுவதில் இருந்து பரார்த்தமாக ஆலய வழிபாட்டில் என்னென்ன செய்ய வேண்டும் செய்யக்கூடாது என்பதுவரை எல்லாவற்றையும் முறையாக தானே தன்னை வழிபடும் விதியை தவறு இல்லாது ஜீவன்களுக்கு எல்லாம் சொன்ன விதம் க்ரியை. சரியை வாழ்வியல்முறை, க்ரியை பக்தியால் பொங்கி பழுத்து இறைவனோடு இரண்டற கலந்து இருக்கும் இனிமையான நெறிமுறை, யோகம் - ஜீவன் சிவனாக மாற, ஜீவன் சிவத்துவத்தை உணர்ந்து சிவனுடைய அதே உணர்வு நிலையில் சிவமயமாய் ஔிர்ந்து மிளிர்ந்து சிவத்துவதிற்க்கு தன்னை யோக்கியனாக்கி கொள்ளும் முறை யோகம். தாமே சிவமாய் தன்மயமாய் ஷிவோஹம் என்னும் ஜீவன் முக்த தன்மையை நிலைத்து இருக்கும் நுட்பம் ஞானம். சரியை - ஆதி சைவத்தின் வாழ்வியல்முறை. க்ரியை - ஆதி சைவத்தின் வழிபாட்டு இயல் முறை யோகம் - ஆதி சைவ நிலையை உடலையும் மனதையும் வைத்து அடைகின்ற முறை. ஞானம் - ஆதி சைவ நிலையில் சிவோஹோம் எனும் ஜீவன்முக்த நிலையில் நிலை பெற்று இருப்பதற்கான சத்திய சிவபோத சுகபோத சிவஞான ரகசிய சத்தியங்கள். இதைதான் ஞானம் வித்யை என்கின்றோம். ஆகமம் நான்கு முக்கிய பகுதிகளாக இருந்து ஆதிசைவத்தின் வாழ்வியல் முறைகளை நமக்கு காட்டுகிறது. சரியை க்ரியை யோகம் ஞானம். அடுத்த பத்து நாட்களும் இந்த தொடர்ந்த சத்சங்கங்களின் மூலமாக சரியை க்ரியை யோகம் ஞானம் என்று ஆதி சிவன் ஆதிப்பரம்பொருள் வேதங்களின் மூலம் ஆகவும் உபநிஷதங்களின் சாரம் ஆகவும் ஆகமங்களின் மூலம் ஆகவும் வௌிப்படுத்தி அருளிய மிகப்பெரிய வாழ்வியல் முறையான ஆதி சைவத்தின் சாரத்தை இந்த நான்கு முக்கியமான சரியை க்ரியை யோகம் ஞானம் எனும் நான்கு முக்கியமான தலைப்புக்களின் வழியாக உங்களோடு பகிர்ந்து கொள்ளுகின்றேன். இதை உங்களின் வாழ்வியலாக மாற்றி கொள்வதற்கு உங்களுக்கு தேவையான சத்தியங்களையும் அதில் உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள் போன்றவற்றை நீக்கி கேள்விகளுக்கான விடைகளை கொடுத்து அடுத்த 10 நாட்களும் இந்த ஆதிசைவத்தின் சாரத்தை அனுபவமாக மாற்றி கொள்வதற்காக, இந்த வாழ்வியல் விஞ்ஞானத்தை உங்கள் முன் திறந்து வைப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன். நீங்கள் எல்லோரும் சிரத்தையுடனும் சீரிய பக்தியுடனும் இந்த ஆதி சைவத்தின் சாரத்தை உள்வாங்கி, உங்களுக்குள் இருக்கும் கடவுள் துகள் விழிப்ப்படைந்து கடவுள்நிலை அடைந்து சிவோஹம் எனும் அனுபுதியில் நிலை பெற்று சிவஞானத்தில் நிலைத்து இருந்து ஷிவபோதத்தில் வாழ்வீர்களாக... நித்ய ஆனந்தத்தில் நிலைவீர்களாக. எத்துனையோ நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான சம்பிரதாயங்களையம், வாழ்வியல் முறைகளையும், மதங்களையும் தத்துவக் கோட்பாடுகளையம், சித்தாந்தங்களையும் கருத்துக்களையும் கம்யூனிசம், நாத்திகம் உட்பட எல்லாவிதமான வாழ்வியல் கருத்துக்களையும் பல்வேறு கோணங்களிலும் ஆராய்ந்து அறிந்து படித்து சிந்தித்து அவைகளின் உட்பொருளை உள்வாங்கி இருக்கின்ற தௌிவினாலும் தைர்யத்தலும் உங்களுக்கு சொல்லுகின்றேன் ஆழ்ந்து கேளுங்கள் மக்களே தமிழ் எனும் பெருமொழி புரிகின்ற உடலும் மனமும் கொண்டதனாலேயே நீங்கள் புண்ணியவான்கள.் ஏனென்றால் அந்த ஒரு மொழியில்தான் ஆதிசைவத்தின் சாத்தியங்களை நேரடியாய் திறந்து வைக்கப்பட்டு இருக்கின்றது. மற்றவர்கள் எல்லோருமே மொழி பெயர்ப்பைத்தான் படித்தாக வேண்டும். நீங்கள் ஒருவர் மட்டுமே நேரடியாய் படிக்கவும் அதன் துடிப்பை உங்கள் இதய துடிப்பாய் உணரவும் உங்களுக்குள் அதை உள்வாங்கவும் வாழவும் வாழ்வியல் அனுபவமாக மாற்றி கொள்ளவும் மிக பெரிய வாய்ப்பு உடையவர்களாக இருக்கின்றீர்கள் நீங்கள் மட்டும் தான் இந்த மிக பெரிய புண்ணியத்திற்கு ஆளானவர்கலாக இருக்கின்றீர்கள். தெரிந்து கொள்ளுங்கள் தமிழ் மொழி புரிந்து கொள்ளுகின்ற மனம் உங்களுக்கு இருந்து இருக்குமானால் இருக்குமானால் இருந்தோ அல்லது இப்போது இருக்குமானால் சைவத்தை இழக்காதீர்கள் சைவத்தை கண்டு கொள்ளுங்கள் கண்டு அறியுங்கள் வாழுங்கள். அது உங்களுடைய வாழ்வியல் நெறியாக மாறட்டும். உங்கள் வாழ்வியல் சத்தியமாக மாறட்டும். வேறு எந்த சித்தாந்ததிலும் இத்துனை தௌிவாக கடைநிலை மனிதனுக்கும் கடைதேறும் வழியை இடைசெருகல் ஏதும் இல்லாது ஒரு இம்மி எடையும் சத்தியத்தில் குறையாது எடையும் குறையாது மாத்திரையும் குறையாது சத்தியத்தை சத்தியமாகவே சத்தியமாய் சதாசிவன் சொல்லி அருளிய வாழ்வியல் முறையான சைவம் பிடியுங்கள். வாழ்ந்திட வாழ வைக்கும் பெரு வழியான சைவம் வாழுங்கள். மேண்மைகொாள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம். மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம். மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம். ரமண மகரிஷி ரொம்ப அருமையாக அண்ணாமலையானை பார்த்து வாழ்த்துவார் "என்போலும் தீனரை இன்புற காத்து நீ எந்நாளும் வாழ்ந்து அருள் அருணாச்சலா" என்னை போன்ற தீனார்களை எல்லாம் இன்புற காக்கின்ற நீ இதேபோல் எல்லா காலத்திலும் காத்து எந்நாளும் வாழ்ந்து அருள் என்று இதே வார்த்தையைத்தான் ஆதிசைவத்தை நோக்கியும் நான் சொல்ல கடமைப்பட்டு இருக்கின்றேன். என்போலும் தீனரை நித்யானந்தத்தில் நிலைபெறச் சய்த சைவ சத்தியமே ஆதிசிவமே உலகமெலாம் நீ பொங்கி பெருக மேன்மை கொள் சைவநீதி மேன்மை தரும் சைவ நீதி விளங்குக உலகம் எல்லாம். மேன்மையை தரும் இந்த சைவ நீதி விளங்குக உலகம் எல்லாம். ஆகமங்களாலும் வழிவழியாய் வந்த சைவத்தை மீண்டும் உயிர்ப்பித்து ஸ்தாபனம் செய்த சர்வஞ்னபீடாரூடரான ஞான சம்பந்த பெருந்தகையாலும் அப்பர் பெருமான் எனப்படும் திருநாவுக்கரசு சுவாமிகளாலும் சுந்தரராலும் மாணிக்கவாசகராலும் நாயன்மார்களாலும் நெறிபடுதபட்டு, வாழ்வியல் முறையாக வாழ்ந்து காட்டப்பட்ட பெருமானோடு இரண்டற கலக்கும் சிவோஹம் எனும் நிலையில் நித்ய ஆனந்தமாய் நிலைபெற்று இருக்கும் இந்த மிகப்பெரிய வாழ்வியல் ஞானம் சொல்லவும், கேட்கவும் மிகுந்த புண்ணியத்தை தருவது சொல்லவும், கேட்கவும் வாழ்கையை மேம்படுத்துவது. அதனால்தான் மேன்மை கொள் என்னும் வார்த்தையை உபயோகிக்கிறார்கள். மேன்மை கொள் என்றால், சொன்னவர்கள், கேட்டவர்கள், எதிர் காலத்தில் கேட்கப்போகிரவர்கள், இவர்கள் எல்லோருக்கும் மேன்மையை கொடுப்பது, மேன்மையில் அவர்களை நிறுத்துவது மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம். சைவநீதி ஆதிசைவம் சார்ந்து உங்கள் எல்லோருக்கும் இருக்கும் கேள்விகள் சந்தேகங்கள் இவைகள் அனைத்தையும் நித்யானந்த தியானபீடம் பெங்களுரு ஆதீனத்திற்கு அனுப்பலாம். உங்கள் சந்தேகங்களை கேள்விகளை அனுப்பலாம். அதுமட்டும் அல்லாது மிக முக்கியமான இந்த ஆதி சைவத்தை உங்கள் வாழ்வியல் நெறியாக அனுபவமாக மாற்றி கொள்வதற்கு எம்பெருமான் அருளி இருக்கும் மிக முக்கியமான சமய தீக்ஷை, விசேஷ தீக்ஷை என்கின்ற இரண்டும் வருகின்ற 21,22,23,24 ஆகிய நான்கு தேதிகளில் பெங்களுரு ஆதினத்தில் நித்யானந்த நகரத்தில் நடைபெறும். அன்பர்கள் அனைவரும் வந்து கலந்து கொண்டு சமய தீக்ஷையும், விசேஷ தீக்ஷையும் பெற்று ஆதி சைவத்தை அனுபவமாக மாற்றிக் கொண்டு எம்பெருமானோடு இரண்டற கலந்து இறைநிலை உணர்ந்து சிவஞானத்தை அனுபுதி ஆக்கிக்கொண்டு, சிவபோதத்தில் நிலைத்து வாழுமாறு சிவபோதத்தில் நிலைபெற்று இருக்குமாறு உங்கள் அனைவரையும் ஆசிர்வதிக்கின்றோம். எம்பெருமான் ஆகமத்திலே மிகத் தௌிவாக விளக்குகின்றார் பத்து விதமான தீக்ஷை முறைகள், ஒன்பது விதமான தீட்சைகள் சமய தீக்ஷை, விசேஷ தீக்ஷை, நிர்வாண தீக்ஷை, ஆச்சர்ய அபிஷேகம் என்று ஒன்பது விதமான தீக்ஷைகளையும் பத்து விதமான தீக்ஷை முறைகளையும் ஆகமத்தில் இறைவன் விளக்குகின்றார். அதில் ஒரு முக்கியமான விதியாக சமய தீக்ஷையும் விசேஷ தீக்ஷையும் ஜாதி இன, மதம் ஏதும் பாராது எல்லா மனிதர்களுக்கும் எல்லா ஜீவராசிகளுக்கும் பிரதிபலன் எதிர்பாராது கைமாறு கருதாது அளிக்கப்பட வேண்டும் என்று ஆணையிடுகின்றார். அவரின் உத்தரவை அவரின் ஆணையை சிரமேற்கொண்டு எந்த கட்டணமும் இல்லாமல் விலை இல்லாது அனுமதி இலவசமாக சமய தீக்ஷையும், விசேஷ தீக்ஷையும் நவம்பர் 21, 22, 23, 24 ஆகிய நான்கு நாட்களும் பெங்களுரு ஆதீனத்தில் நடைபெறுகின்றது, நித்யானந்த தியானபீடத்தில் நடைபெற இருக்கின்றது அன்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு இறைஅருள் பெற்று சிவோஹம் எனும் அனுபுதியை உணர்ந்து ஜீவன் முக்த நிலையில் வாழ்ந்து சிவ போதத்தில் நிறைந்து நித்யானந்த நிலையில் மலருமாறு உங்களை வாழ்த்துகின்றேன். எந்தவிதமான அனுமதி கட்டனமுமின்றி சமய தீக்ஷையும் விசேஷ தீக்ஷையும் அளிக்கப்படும். விசேஷ தீக்ஷை பெற்றவர்கள் தினந்தோறும் சிவபுஜை செய்வதற்க்கான பாத்திரங்களும், ஆத்மலிங்கமும் புஜை செய்யும் முறை பற்றிய விளக்க புத்தகமும் மற்ற பொருட்களும் உங்களுக்கு சிவசேவையாக இலவசமாக அளிக்கப்படும். ஆழ்ந்து இதை வாழ்ந்து பாருங்கள் ஆதி சைவம் வாழ்ந்து பார்த்து அனுபவிக்க வேண்டிய சத்தியம். வெறும் எண்ணத்தாலோ வார்த்தையாலோ புரிந்துகொள்ள முடியாத வாழ்ந்து பார்த்தோ உணர்ந்து கொள்ளப்பட வேண்டிய வாழ்வியல் நெறி, வாழ்வியல் சத்தியம் வாருங்கள் சைவத்தை வாழுங்கள். மேன்மை கொள்வீர்கள். மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம். நீங்கள் எல்லோரும் நித்ய ஆனந்தத்தில், நிறைந்து நித்ய ஆனந்தத்தில் கரைந்து நித்யானந்தமாகிட ஆசீர்வதித்து முடிக்கின்றேன் நன்றி ஆனந்தமாக இருங்கள்.
Link to Video:
Photos Of The Day:
Satsang
Adisaivam Session with participants
Satsang
Cultural program
INITIATION-INTO-KRAMA-BRAHMACHARYA
NITHYA-KIRTANS-PADUKA-POOJA
SOORA-SAMHARAM
ADISHAIVAM-TAMIL-SATSANG