Difference between revisions of "July 25 2016"
Jayawardhan (talk | contribs) (July 25 2016) |
|||
(2 intermediate revisions by the same user not shown) | |||
Line 95: | Line 95: | ||
− | ==Photos | + | ==Photos Of The Day:== |
<div align="center"> | <div align="center"> | ||
{{#css: img.hsimg { padding: 2px 0; } }} | {{#css: img.hsimg { padding: 2px 0; } }} | ||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
=== Abhishekam === | === Abhishekam === | ||
Line 144: | Line 128: | ||
</div> | </div> | ||
− | |||
===<center>ADI SHAIVAM</center>=== | ===<center>ADI SHAIVAM</center>=== | ||
− | |||
<gallery mode=packed-hover heights=300px widths=200px> | <gallery mode=packed-hover heights=300px widths=200px> |
Latest revision as of 16:25, 6 March 2021
Title
முருகப்பெருமான் பிறப்பின் கதை
Description
25 July 2016 இந்த கல்பதரு த்யான சத்சங்கத்தில் பரமஹம்ச நித்யானந்தா ஸ்வாமிகள் கல்பதரு என்றால் என்ன ? வாழ்வின் அதிநுட்பமான வாழ்வியல் ரகசியங்களை பெருமான் உரைத்ததை பற்றி தெளிவாக எடுத்துரைக்கின்றார் . நம் கற்பனைக்கும் எதை உருவாக்க நினைத்தாலும் அதை நிஜமாக்கி தருகின்ற சக்தியை கல்பதரு என்றழைக்கின்றனர்.
Link to Video:
Video | Audio |
Transcript in Tamil
முருகப்பெருமான் பிறப்பின் கதை : உங்கள் அனைவரையும் வணங்கி வரவேங்கின்றேன்.. தொடர்ந்து மஹாதேவ இரகசியததை உங்களோடு பகிர்ந்துக் கொள்கிறேன். ஆதியில் உருவான தத்துவங்கள் இருபத்து நான்கு. தத்துவங்களை அனுபுதியில்லாது ஆராய முற்பட்டவர்கள் பித்துவமாய் மாற்றினார்கள். தத்துவம் பித்துவம் ஆனதால் அதற்குள் சாரமாக பெருமான் ஔித்து வைத்திருந்த மஹாதேவ இரகசியம் இழக்கப்பட்டது. தமிழ்ல ரொம்ப பிரபலமான ‘பரமார்த்த குருவும் நான்கு சீடர்களும்’ என்று ஒரு கதைத் தொகுப்பு இருக்கு. பரமார்த்த குருவுக்கு நான்கு சீடர்கள் இருந்தாங்களாம். ஆந்த நாலு போ் திரும்ப வந்திருக்காங்கன்னு மட்டும் எனக்குத் தொியும். ஒருநாள் அந்த நாலு சீடர்களையும் கூட்டி அவர் ‘‘அப்பா சந்தைக்குப்போய் ஊசி வாங்கிட்டுவ வாங்கன்னு சொல்றாரு. நாலுபேரு போறாங்க. காலணா கொடுத்து ஊசி வாங்கிட்டு வர திடீர்னு அவங்களுக்குள்ளே பொிய தர்க்கம். ஆ! நம் குருநாதரோ நம்ம நாலு பேரையும் அனுப்பி ஊசி வாங்கிட்டு வரச்சொன்னார். ஊசி இந்த அளவுக்குத்தான் இருக்கு, இதை நீ தூக்கறதா, நான் தூக்கறதா? அப்படின்னு போட்டி. கடைசில அவர்கள் சொன்னார்கள் குரு வாக்கை நாம் மீறக்கூடாது. நாலு பேரையும் சோ்த்து எடுத்துவரச் சொன்னார். அப்ப நாலுபேரும் சோ்ந்து தான் இதைத்தூக்கிட்டு போகணும்..நநூன்கு பேரும் சோ்ந்து எப்படி ஊசியைத் தூக்கறது? யோசித்தார்கள் பரம பக்தர்களான சீடர்கள். நான்கு போ் சோ்ந்து இந்த ஊசியைத் தூக்க முடியாது. அப்ப நான்கு போ் சோ்ந்து தூக்கறா மாதிரி ஒரு பொருளை வாங்கி அது மேல ஊசியைக்குத்தி தூக்கிட்டு போகலாம்னு முடிவு பண்ணார்கள். ஊசி காலணா. நாலு போ் சோ்ந்து தூக்கறா மாதிரி ஒரே பொருள் அந்த சந்தைல இருந்தது பனைமரம். அது பதினாறு அணா. பதினாறு அணாக்கு பனைமரத்தை வாங்கி காலணாக்கு வாங்கின அந்த ஊசியை அதில் குத்தி றாலு பேரும் சோ்ந்து தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு ஆசிரமத்திற்கு திரும்ப வரத் துவங்கினார்கள். காடு மலை எல்லாம் கடந்து கடைசியா அசிரமத்திற்கு வரும்போது ஆல்மோஸ்ட் நடுநடுங்கி உடல் வெதுங்கி எப்பொழுது வேண்டுமானாலும் அவர்கள் விழுந்து மூர்ச்சை அடைந்துவிடுவார்களோ என்கிற நிலையில் வருகிறார்கள். ஆசிரமத்துக்குள்ளே நுழையும்பொழுது பரமார்த்தகுரு பார்த்து நடுநடுங்கிப்போய் விட்டார். ஊசி தானே கேட்டேன் பனைமரத்தைக் கொண்டுவருகிறார்களே என் பரமசீடர்கள். நல்லவேளை இந்தக் கதையெல்லாம் சின்ன வயசிலேயே படிச்சது ரொம்ப வசதியா இருக்கு. இந்த மாதிரி சீடர்களைப் பார்க்கும்பொழுது திடீர்னு ஷாக்கிங்கா, ரூட் சர்ப்ரைஸிங்கா இல்லாம இந்த கதையெல்லாம் படிச்சு வைச்சது, ஒரு அதிர்ச்சித் தரும் வியப்பான சர்ப்ரைஸா இல்லாம இருக்கு. குருவுக்குப் புரியலை ஊசி எங்கடான்னு கேட்கறாரு? நாலுபேரும் நடந்து வந்தக் களைப்பிலே பனைமரத்தை இறக்கி வைக்கக்கூட சக்தியில்லாமல் பொத்துன்னு கீழேபோடறார்கள். போட்ட வேகத்திலே ஊசி உடைந்துபோனது. இதுதான் பரமார்த்த குருவும் அவருடைய நான்கு சீடர்களும் ஊசி வாங்கின கதை. இதேபோல் தான் தத்துவத்தை தன்-துவம் புரியாமல் ஆராயும்பொழுது ஊசி வாங்கப்போய் பனைமரம் வாங்கி பனைமரத்தில் குத்திய ஊசி காணாமல் போனதுபோல தன்துவம் தொியாமல் தத்துவத்தை ஆராயும்பொழுது ஊசி வாங்கப்போய் பனைமரம் வாங்கி, பனைமரத்தில் ஊசியைக்குத்தி பளுவாய் வாழ்க்கையெலாம் சுமந்து காசிக்குப் போயும் காசுக்கு ஆகாத வேசித்தனம் செய்யும் மனத்தாலே மாசுற்று சிவத்துவமஸி எனும் தத்துவத்தை மறந்து மடிந்தார் மக்கள். குரு ஒரு தத்துவத்தை எந்நிலையிலிருந்து தன்துவத்திலிருந்து தருகிறாரோ அதையே தன்-துவமாய் மாற்றிக் கொண்டவர்கள்தான் தத்துவத்தைப் புரிந்து கொள்கிறார்கள். இல்லைன்னா ஊசி வாங்கப் போய் பனைமரம் வாங்கி வந்ததுதான். இதேபோல ஒரு முறை பரமார்த்த குரு தன் நான்கு சீடர்களை அழைத்து ஆனைக்குட்டி வாங்கி வாருங்கள் ஆசிரமத்திற்கு என்று சொல்லி அனுப்புகிறார். ஆயிரம் பொன் கொடுத்து. சந்தையிலே நுழைந்தார்கள் நான்கு சீடர்களும். ஆயிரம் பொன்னோடு. நுழைந்தவுடனேயே ஒருகடை. இருந்தது. கோழிகள் விற்கும் கடை. வாசலில் ஒருத்தர் பத்து முட்டை வாங்கிட்டு இருந்தார். அவரிடம் இவர்கள் பேச்சு கொடுக்கிறார்கள். என்ன வாங்கறீங்க? பத்து முட்டை வாங்குகிறேன். ‘‘என்னுடைய முதலாளி பத்து கோழி வாங்கி வரச்சொல்லி என்னிடம் பத்துப்பொன் கொடுத்திருக்கிறார். ஆனா பத்து முட்டை வாங்கினா ரெண்டு பொன்தான் செலவாகும். இந்த முட்டையை எடுத்துக்கொண்டு போய் நான் வீட்டில் வைப்பேன். மூணு நாள் இ்ந்தப் பத்து முட்டை மேல கோழியை உடக்ார வைச்சேன்னா இந்த பத்து முட்டை கோழி ஆயிடும். அதுக்கு பின்னாடி என்னுடைய முதலாளியிடம் இந்தப் பத்துக் கோழியை கொடுத்திடுவேன். எட்டுப்பொன் எனக்கு. மிச்சமாகும்’’ உடனே பரமார்த்த குருவின் நான்கு சீடர்களுக்கும் உதித்தது ஒரு யோசனை. நாமும் யானை முட்டை வாங்கிச்செல்லலாம். யானை முட்டை மேல யானையை உட்கார வைக்கணுமே அதுக்கென்னப்பண்றது. ஒரு சிஷ்யன் சொன்னான் : யானையை வசியம் பண்ணி உட்கார வைக்கற மந்திரத்தை குரு எனக்குக் கத்துக் கொடுத்திருக்காரு, நாம யானை முட்டை பத்து வாங்கிட்டுப்போய் ஆசிரமத்தில வைச்சு காட்டு வழியா நிறைய யானைகள் வருது அதில் ஒன்றை வசியம் பண்ணி அதை அதன் மேல் நான் உட்சார வைக்கிறேன். மிச்சமாகிற பொன்னையெல்லாம் ஆசிரமத்திற்கே கொடுத்திடலாம். ரொம்ப நல்ல எண்ணம். சுற்றிச் சுற்றி தேடினார்கள் சுகவாசிகள். பரமார்த்த குருவோட நாலு சீடர்கள் சந்தை முழுக்க அலைகிறார்கள். யானை முட்டை எங்க கிடைக்கும்? ஒரு கடையில் போய் கேட்கிறார்கள் யானை முட்டை எங்க கிடைக்கும்? அட கூமுட்டைகளா யானை முட்டை உண்டா அப்படிக் கிடையாது. யானைக்குட்டி தான் கிடைக்கும். உடனே இந்த நான்கு சீடர்களும் நினைக்கிறார்கள். இவன் ஏமாற்றி நம்மிடம் பணம் பறிக்கப் பார்க்கிறான். இவன் திருடன். அப்படின்னு அடுத்தக் கடைக்குப் போகிறார்கள். நான்கு கடைக்கு போறதுக்குள்ளே சந்தை முழுக்க விவரம் பரவிடுது. ஒரு நான்கு கூமுட்டைகள் ஆயிரம் பொன்னோடு வந்திருக்கிறார்கள். யானை முட்டை வேண்டுமென்று. அங்க ஒரு படுபுத்திசாலி வாரன். வந்து யானை முட்டை வேண்டுமென்று கேட்டது நீங்கள்தானே? குட்டாம் ஏற்பாடு பண்ணி கொடுக்கிறேன்.. ஆனால் ஒண்ணு இருபது முட்டை ஒண்ணா தான் கொடுக்க முடியும். ஒரு முட்டை ஐம்பது வராகன். 20 முட்டை ஆயிரம் வராகன். ஹோல்சேல்ல தான் கொடுப்போம். ரீடெய்ல்ல கொடுக்க மாட்டோம். யானை முட்டைக்கு ஒரு விதி முட்டாள்கள் 20 யானைகள் ஆசிரமத்தை சுத்தி சுத்தி வரதை அப்படியே கற்பனை பண்ணிப்பார்க்கிறார்கள். ஐயோ ஒண்ணா இரண்டா இருபது யானையாச்சே! குரு ஒண்ணுத்தானே கேட்டாரு. நாம் இருபது வாங்கி ஆசிரமம் முழுக்க விட்டோம்னா என்ன அழகா அதுபாட்டுக்கு சுத்தி வந்திட்டிருக்குமே. உடனடியாக அவரோடு இரகசிய உடன்பாடு செய்துகொண்டு போகிற வழியிலிருக்கும் மற்ற கடைக்காரர்களையும் திட்டித்தீர்த்தார்கள். அந்த முதல் கடை முன்னா இருக்கான் பாரு அவன் எங்க கிட்டே யானை முட்டைன்னே ஒண்ணு கிடையாது. யானைக்குட்டியைத் தலைமேல கட்டி ஆயிரம் வராகனை அபகரிக்கப் பார்த்தான்ய்யா. எதிர் கடை ஏமாத்தறவன் இருக்கான் பாரு ஐநூறு வராகன் கொடுத்தா கூட போதும் யானைக்குட்டியைக் கொடுத்திடறேன்னு ஒரே ஒரு ஒத்தைக் குட்டி யானையைக் கொடுக்கப் பார்த்தாண்யா. நீதான்யா சத்தியமான தொழிலாளி. உண்மையான வியாபாரி. இருபது யானை முட்டைக்கு வெறும் ஆயிரம் வராகனைக் கொடுக்கறபாரு. ஓண்ணு ரெண்டு செத்தாக்கூட பாரவாயில்லை. பதினெட்டு பத்தொம்பாது வருமேப்பா. இந்த வியாபரி என்னப்பண்ணான்.. இது இரகசியம் தொிஞ்சா எல்லாரும் போட்டி வியாபாரத்திற்கு வந்திடுவாங்க. நான் ஒரு கொடௌன் ல தனியா ஒரு யானையை வெச்சிருக்கேன். அது நிறைய இருபது முட்டை போட்டு ரௌண்ட் ரௌண்டா இருக்கு. நீங்க வந்து துணியில அப்படியே அள்ளி மூட்டைக்கட்டிக்கிட்டு வௌில தொியாம என்ன நீங்கத் தூக்கிட்டுப்போறிங்கன்னு யாருக்கும் தொியாம உங்க ஆசிரமத்துக்கு தூக்கிட்டுப் போயிருங்க. ஒருவேளை இந்த யானை முட்டை பொரிக்கறதுல ஏதாவது பிரச்னை இருந்தா நான் உங்களை எப்படித் தொடர்பு கொள்வது? அதுக்கென்ன என் கடை எல்லாருக்குமே தொியும். அம்போ ஹரோஹரா யானை முட்டைக்கடை. இந்த அம்போ ஹரோஹரா யானை முட்டைக்கடை எங்க இருக்குன்னு கேட்டிங்கன்னா இந்த சந்தையில் தொியாதவங்களே இருக்க மாட்டாங்க. கரெக்டா வந்திருங்க நான் உங்களுக்கு எல்லா விளக்கங்களும் அடங்கிய கையேடும் கொடுத்தனுப்பறேன். ஒரு வழியா எல்லா ஒப்பந்தமும் முடிந்து அம்போ ஹரோஹரா யானை முட்டை கடைக்குப் போகிறார்கள். அங்க யானை இருபது இடத்தில மாறி மாறி லத்தி போட்டு வெச்சிருக்கு. இந்த நாலு சீடர்கள்லே ஒரு சீடன் மட்டும் கொஞ்சம் கூரிய புத்தி உடையவன். அவன் சொல்றான் இது யானை முட்டைதான்னு எப்படி கேரண்டி தொியறது? இது யானை தான் போட்டது என்று நாம் எப்படி ஊர்ஜிதப்படுத்தறது? உடனே கடைக்காரர் அதுக்கும் ஒண்ணும் பிரச்னை இல்லை, கவலையேப்படாதீங்க உட்கார்ந்திருங்க இங்கயே. இன்னொரு அரைமணி நேரம். இன்னொரு முட்டைப்போடும். போட்டவுடனேயே தொிஞ்சிடும் அதுவும் இதுவும் ஒரே மாதிரிதான் இருக்கு. மூட்டை கட்டி எடுத்திட்டுப்போங்க. ரொம்பக்கூரிய புத்தியோட இருக்கறதனாலே அங்கேயே நான்கு பேரும் அம்போ அரோஹரா யானை முட்டைக் கடையிலேயே சம்போ சிவ சம்போன்னு உட்கார்ந்திட்டு யானை எப்ப முட்டைப் போடும்னு உட்கார்ந்திருக்க யானையோ கொஞ்ச நேரம் கழிச்சு பொத்து பொத்துன்னு லத்தியைப்போட பார்த்தவுடனே இவங்களுக்கு ஒரே மகிழ்ச்சி. குஷி தாங்கலை. ஆஹா. இது இருபதும் யானை முட்டைத்தாண்டா. யானைப்போட்டதை நாங்களே பார்த்தோம். மூட்டையைக் கட்டி ஆயிரம் வராகனைக் கொடுத்திட்டு ஆயிரம் வராகன் பொன்னையும் கொடுத்துட்டு, மூட்டை இருபது இருக்கறதுனாலே ஆளுக்கு இரண்டு தூக்கினா 8 தான் தூக்க முடியும், ஏன்னா இவங்க நாலுபேரு தான். மீதி பதினாலு இருக்கு ஒரு ஏழு போ் வேலைக்காரங்களை வெச்சுக்கிட்டு ஆசிரமம் போனவுடன் உங்களுக்கு கூலி கொடுக்கறோம்னு சொல்லி, ஆளுக்கு ஒரு வராகன் கூலி பேசி முடிச்சு மொத்தம் பத்துப்போ் இரண்டு மூட்டைகளை இரண்டுப் பக்கம் தோளில் சுமந்து கொண்டு மெதுவாக ஆசிரமம் நோக்கி வருகிறார்கள். குரு பார்த்தார். யானைக் குட்டி எங்கேடா? யானைக் குட்டி எங்கேடா? உடனே அவர்கள் வரி விடாது அவர்களுடைய புத்திசாலித்தனத்தை விவரிக்க. அம்போ அரோஹரா யானை முட்டைக்கடைக்கு சென்று, யானை முட்டை வாங்கி வந்த கதையை வரி தவறாமல் விவரிக்க சில நேரத்தில நான் என் சீடர்களைப் பார்ப்பதுபோல் அவரும் முறைத்துப் பார்த்து அன்றிலிருந்து நேரடியாக எல்லாவற்றையும் தானே நேரடியாக நுண்மேலாண்மை செய்யவேண்டும் என்ற பாடத்தைக் கற்றுக்கொண்டார். தன்-துவம் புரியாது தத்துவத்தை ஆராயும்பொழுது இப்படித்தூன் ஊசி வாங்கப்போய் பனன மரம் வாங்கி வந்து வாங்கி வந்த ஊசியும் காசுக்கு ஆகாத நிலைக்கு ஆனதுபோல் ஞானத்தை அடைவதற்காக எதை எதயோ தேடிச்சென்று அதையும் இறுதியில் அடையாத வாழ்வொழிந்து வழக்கொழிந்து பாழ்பட்டு நிற்பதுமட்டுமல்லாது சத்தியத்தை வாழ்க்கையில் சாத்தியமாக்குவதே சாத்தியமில்லை என்று தனக்கு அனுபவப்படவில்லை என்பதற்காக யாருக்குமே அனுபவப்படாது என்று நாத்திகர்களாகவும் மாறித் திரிகிறார்கள். தன்-துவம் புரிந்து தன்துவத்தை சார்ந்து தத்துவத்தைப் புரிந்து கொள்ளல். தன்துவம் சார்ந்து தத்துவத்தைப் புரிந்து கொண்ட ஒரு நல்ல சீடன் குருவின் முழுமை.
நல்லா தெரிஞ்சிகோங்க.. தன்துவம் சார்ந்து தத்துவத்தைப் புரிந்து கொண்ட ஒரு சீடன் குருவின் முழுமை. முருகப்பெருமான் சதாசிவனின் முழுமை. ஆப்டேட்டட் வொ்ஷன். தன்துவம் புரிந்து தத்துவத்தை உணரும்பொழுது சீடன் குருவின் முழுமை ஆகிறான். முருகப்பெருமான் சதாசிவனின் முழுமைத்தன்மை. அதனால்தான் தனது முழுமைத்தன்மை முருகன் என்பதை உலகிற்கு சொல்லவே சுவாமிமலையில் முருகனிடமே பாடம் கேட்டான் சதாசிவன். கச்சியப்பர் மிக அழகாக சொல்வார் : தனது வலது தோளில் அமர்த்தி கந்தக் கடவுளை உபதேசம் கேட்டுக்கொண்டிருந்தான் சதாசிவன். திடீரென இடது தோளுக்கு மாற்றுகிறான். முருகன் கேட்கிறான் ஏன் தோள் வலிக்கிறதா? ‘‘இல்லை மகனே உனை சுமந்து வளர்த்த தோள்கள் வலிக்கவில்லை. அவளும் கேட்கட்டுமென்று இடது காதுக்கு மாற்றினேன், நான் மட்டும் கேட்டால் போதுமா?’’ இடப்பாகம் உமையவளுக்கு உரியது அன்றோ அவளும் கேட்கட்டும் உன் அருட்த்திறனை, ஆண்மைத்திறனை, முழுமைத்திறனை. முருகப்பெருமான் சதாசிவனின் முழுமை. சிலபோ் என்னிடம் கேட்பதுண்டு. அப்படின்னா முருகனை சிவபெருமானைவிட உயர்ந்த இடத்தில் வைக்கிறீர்களா? என்று. சதாசிவனுக்கும் உயர்ந்தவரா முருகன்? இது எப்படி சாத்தியம்? குஞ்சு கோழிக்கு மிஞ்சி ஆகுமா? முருகப்பெருமான் சதாசிவனின் முழுமை. சதாசிவன் ஐந்து திருமுகம் உடையவர். நான்கு வேதங்களும் நான்கு முகத்தின் வழியாகவும், ஆகமங்கள் எல்லாம் ஐந்தாவது முகத்தின் வழியாகவும் வௌிப்பட்டன. ஆதனால்தான் வேதங்களையும், ஆகமங்களையம் சிவஞான சாஸ்திரம் என்று சொல்வது பாரம்பரியம். சத்யோஜாதம் தத்புருஷம் அகோரம் வாமதேவம் ஈசானம் ஐந்து முகங்ளின் வழியாக நான்கில் இருந்து நான்கு வேதங்களும் ஐந்தாவது திருமுகத்திலிருந்து ஆகமங்களும் மலர்ந்தருளின. இதில் ஆறாவது திருமுகம் என்ன சொல்ல வேண்டும் எதை உணர்த்த வேண்டும் என்பதற்காக இந்த ஐந்து திருமுகங்கள் வழியாக இந்த சாஸ்த்திரங்களை வௌிப்படுத்தினாரோ அந்த உள ்உணர்வு இன்னர் ஸ்பேஸ் ஆறாவது திருமுகத்தின் வழியாக வௌிப்பட்டது. கான்டெக்ஸ்ட். எதைச் சொல்வதற்காக இந்த ஐந்து திருமுகங்களும் மலர்ந்து நான்கு வேதங்களையும், ஆகமங்களையும் வௌிப்படுத்தினவோ எதைச் சொல்லவேண்டுமென்று, எதை வௌிப்படுத்த வேண்டும் என்று அவர் நினைத்தாரோ உள்ளத்தால் உள்ளியது இன்னர் ஸ்பேஸ் அவர் உள் உணர்வு ஆறாம் திருமுகமான அஜோ முகத்தின் வழியாக வௌிப்பட்டது. இந்த ஆறு தீப்பொறிகள் சத்யோஜாதம், தத்புருஷம், வாமதேவம், அகோரம், ஈசானம் என்கிற ஐந்து முகங்கள் ஞானிகளுக்கு மட்டுமே, சிவத்துவ நிலையை அடைந்தவர்களுக்கு மட்டுமே அவர்களால் மட்டுமே உணரக்கூடிய இன்னடி ஸ்பேஸ் - உள் உணர்வான அதோ முகம், யாராலும் காணமுடியாத ஞானிகளுக்கு மட்டுமே காட்டப்படுகின்ற அதோ முகமான உள்உணர்வு நிலையான ஆறாம் திருமுகத்திலிருந்தும் தீப்பொறி வௌிப்பட்டு இந்த ஆறு தீப்பொறிகளையும், ஆறு திருமுகத்தின் நெற்றிக்கண்களிலிருந்தும் வௌிப்பட்ட ஆறு தீப்பொறியும் ஒன்றுபட்டு உள் உணர்வான கான்டெக்ஸ்ட்டும் சோ்ந்த வௌிப்பாடு முருகப்பெருமான். அதனால்தான் நாலு வேதம், ஆகமங்கள் இதற்கு அப்பாற்பட்டு தனியான ஒரு நூல் சர்வக்ஞானோத்தர ஆகமம். அதோ முகத்திலிருந்து உள் உணர்விலிருந்து உள் கான்டெக்ஸ்ட் என்ன என்கின்ற உண்மையை அதோ முகத்திலிருந்து முருகப்பொருமானுக்கு இறைவன் அருளுகின்றார். பாரம்பரியத்தின்படி இந்த சர்வக்ஞானோத்தர ஆகமம். நூன்கு வேதங்கள் ஆகமங்களுக்குள் அடங்கவில்லை என்றாலும் அதை அதன் மூலமாக மட்டுமே இந்த நான்கு வேதங்களையும், ஆகமங்களையும் புரிந்து கொள்ள வேண்டுமென்பது விதி. ஏனென்றால் அது பெருமானுடைய உள் உணர்வு. ஏந்த நிலையில் எந்த இருப்பை உரைப்பால் வௌிப்படுத்தினாரோ அந்த இருப்பே சர்வஞானோத்தர ஆகமம். உரைப்பு ஐந்து. இருப்பு ஒன்று. உரைப்பு ஐந்து இருப்பு ஒன்றும் ஆன ஆறும் சோ்ந்த முழுமைத்தன்மை ஞானக்கடவுள் முருகன். பெருமானுடைய உயிர் உணர்வு (பயோ எனர்ஜி) பார்வதியின் அன்னை, இறைவி உமையன்னை ஜகன்மாதாவின் உயிர் நினைவு (பயோ மெமரி) இரண்டோடும் கங்கையின் தசை-நினைவு இந்த இரண்டையும் பிரசவிப்பதற்கு இந்த இரண்டையும் ஒன்றாக்கிவைத்து முழுமை அளிப்பதற்கு கங்கை பொறுப்பெடுக்கின்றாள். அன்னை கங்கையின் தசை நினைவு (மசில் மெமரி) பெருமானின் உயிர் உணர்வு, பார்வதியின் உயிர் நினைவு, கங்கையின் தசை நினைவு இது மூன்றும் சோ்ந்து முழுமையின் வௌிப்பாடாக ‘கல்பதரு’ என்று நான் எதை சொல்கின்றேனோ வேண்டியதையெல்லாம் வௌிப்படுத்தும் உள்ளுணர்வு அறிவியல். வேண்டியதையெல்லாம் வௌிப்படுத்தும் உயிர் உணர்வு அறிவியல். இதன் முழுமைத்தன்மையாக வௌிப்பட்டார் முருகப்பெருமான். இவர் பிறப்பின் கதையே ஒரு பொிய தத்துவம். தாத்பரியம். பெருமானும் அன்னையும் ஆண்-பெண் உணர்வு கடந்த திவ்ய சரீரங்கள். சாதாரண சரீரங்கள் அல்ல. இவர்கள் இருவருக்குள்ளும் இருந்து சக்தி மாத்திரம் வௌிப்பட்டு ஒன்றாய் கலக்கின்றது. கலந்து அந்த பொங்கிய உயிரோ யாராலும் தாங்க முடியாத பெரும் சக்தியை வௌிப்படுத்துகின்றது. நெருப்பையே எறிக்கும் சக்தியாய் இருந்ததனால் அக்னியே கலங்கிப்போனான் நெருப்பை எரிக்கும் சக்தி. நீரையே நனைக்கும் சக்தி. காற்றையே கலக்கும் சக்தி. ஆகாயத்தை அரட்டும் சக்தி. மண்ணையே மண்ணால் மூடும் சக்தி. சக்தி பிறந்துவிட்டது. அது சரீரமாக மாறுகின்றவரை அதை காக்க வேண்டும். யாராலும் இயலவில்லை. மனதாலேயே பெருமானோடு வாழ்ந்து அவர் திருமேனியிலேயே குடிகொண்டிருக்கும் அன்னை கங்கை முன்வருகின்றாள். நான் இந்த கர்ப்பத்தை தாங்கி முழுமையான திருமேனியாக மாறும்வரை தாங்குகின்றேன். பெருமானும் பிராட்டியும் ஆசி உரைக்க, ‘‘அவ்வாறே ஆகட்டும் என’’ கர்ப்பத்தை தாங்குகின்றாள். தாங்கி, 6 தீப்பொறிகள் வௌிப்பட்டு சத்யோஜதாம்-தத்புருஷம்-அகோரம்-வாமதேவம்-ஈசானம் எனும் 5 திருமுகத்திலிருந்தும் ஆஜோ முகம் எனும் 6 வது திருமுகத்திலிருந்தும் தீப்பொறி வௌிப்பட்டு, இந்த ஆறு திவ்ய முகங்களிலிருந்தும் பயோ எனர்ஜி வௌிப்பட்டதனாலே, ஆறு சரீரங்களாக கர்ப்பம் மலர்ந்தது. சரீரம் ஆறாக இருந்ததனால் சீராட்டி பாலுட்டி வளர்க்கவும் ஆறு பெண்கள் தேவைப்பட்டனர். ஏற்கெனவே இதற்காக தவமிருந்து பெருமானையே தன் பிரானாக வரித்து மதுரத்தில் தவமிருந்த கார்த்திகைப் பெண்கள் அறுவரையும் பெருமான் அழைத்து நம் திருமகனுக்கு நீங்கள் அறுவரும் முலைப்பால் ஊட்டி வளர்ப்பதன் மூலமாக உங்கள் மதுர நிலையில் புர்த்தி அடைவீர்களாக என்று ஆசீர்வதிக்க ஆறுபேரும் கன்னிப்பெண்களாக இருந்தாலும் பெருமான் ஆசிர்வதித்ததனால் குமரனைக் கண்டதும் தாயைப்போலவே உணர்ந்து தாய்ப்பாலுட்டி சீராட்டி தன் குழந்தையாகவே வளர்க்க, அவதார நோக்கத்தின் காலம் கனிந்த காரணத்தால் ஆறு திருமேனிகளையும் அன்னை ஆதிசக்தி ஒன்றாக்கி, ஒரு திருமேனியாக்க அளப்பரிய சக்தியோடு ஐந்து முகங்களிலிருந்து வௌிப்பட்ட வேதங்கள் ஆகமங்களின் சாரத்தோடு, உள்-உணர்வு நிலையான ஆறாம் சக்தியோடும் முழுஞானக்கடவுளாக, முழுஞானப்பொருளாக, முழு ஞானப்பரம்பொருளாக குமரப்பெருமான் உருப்பெற்றார். தத்துவம் உரைப்பது. உணர்வு இருப்பது, சதாசிவனின் இருப்பும் உரைப்பும் ஒன்றாய்ச் சோ்ந்த நிறைப்பே ஆறுமுகக்கடவுள். ஒரு நல்ல சீடன் உரைப்பையும், இருப்பையும் உள்வாங்குவானேயானால் குருவின் நிறைப்பாக மாறுகின்றான். ஒரு நல்ல சீடன் உரைப்பையும், இருப்பையும் உள்வாங்குவானேயானால், சத்குருவின் நிறைப்பாக, குருவோட கம்ப்ளீசன் சீடன். ஒரு நல்ல சீடன், குருவின் நிறைப்பாக மாறுகின்றான். கம்பளீஷன் நடக்கும்போதுதான் பாரம்பரியம் உயிரோடு இருக்கின்றது. எப்போ என்னுடைய கம்ப்ளீஷனாக என்னுடைய சீடர்கள் உருவாகின்றார்களோ அப்பொழுதுதான் என் அவதார நோக்கம் நிறைவு பெறுகின்றது. அப்ப மட்டும் தான் நான் கொண்டு வந்தது இந்த உலகில் என்றும் உலகில் நிலைநின்று இருக்கும் என்கின்ற உத்தரவாதம் எனக்கு அளிக்கப்படுகின்றது. குருவின் நிறைவு சீடன். உங்கள் எல்லோருக்கும் நான் சொல்லிக் கொண்டிருக்கின்ற இந்த அறிவியல் நினைத்ததை நினைத்தபடி நிஜமாக்கும் கல்பதரு எனும் இந்த அறிவியல் வேதாந்த, சித்தாந்த, ஆகமாந்தத்தின் சாரம், சுத்தாத்வைத் சைவத்தின் சாரம் சிவத்துவமஸி எனும் சத்தியம் உங்களுக்குள் அனுபுதியாக மாறும்பொழுது நான் எப்படி உரைக்கிறேனோ அந்த உரைப்பும், எதை உரைக்க வேண்டும் என உள்ளில் உணர்கிறேனோ அந்த இருப்பும் உங்களுக்குள் நிஜமாகும்பொழுது என் முழுமையாக நீங்கள் மாறுகிறீர்கள். என் முழுமையான என் சீடர்கள் தான் என் அவதார நோக்கத்தை நான் நிறைவேற்றியதற்கான அடையாளம். பலபோ் என்கிட்டே கேட்கறதுண்டு என்ன சாமி 24 மணிநேரமும் உழைச்சுகிட்டே இருக்கீங்க. நீங்க சாமியார், யாருக்காக உழைக்கறீங்க. அவசியமென்ன. 24 மணி நேரம் எதாவது எழுதறீங்க. எதாவது பேசறீங்க. ஏதாவது சொல்றீங்க. ஏதாவது வேலை செஞ்சிட்டேயிருக்கீங்க. காரணமென்ன? நன்றாகத் தொிந்து கொள்ளுங்கள். உங்களிடமிருந்து எதையும் எதிர்பார்த்து அல்ல. நீங்கள் மலரும்பொழுதுதான் நான் முழுமைத்தன்மை அடைகின்றேன் என்கின்ற ஒரே காரணத்திற்காக. உங்கள் மலர்ச்சி என் முழுமை, உங்கள் மலர்ச்சி என் முழுமை ன்கின்ற ஒரே காரணத்திற்காகத்தான் அயராது தயங்காது தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கின்றேன். சிந்தையெல்லாம் சிவமயமாய் சிவத்துவமஸி எனும் சத்தியத்தை வாழ்க்கையின் அடித்தளமாய் வாழத்துவங்குகின்றவர்கள் தொடர்ந்து இதை வாழத்துவங்குகின்றவர்கள் வாழ்க்கையின் முழுமையை மட்டுமல்லாது குருவின் முழுமையாக மாறுகிறார்கள். வாழ்க்கையின் உச்சத்தை நீங்கள் வாழும்பொழுது நீங்கள் உங்கள் முழுமையாக மட்டுமல்லாது என் முழுமையாக மாறுகிறீர்கள். லுழுரு யுசுநு ழேுவு துருளுவு லுழுருசு ஊழுஆீடுநுவுஐழுே யுடுழுநேு. லுழுரு டீநுஊழுஆநு ஆலு ஊழுஆீடுநுவுஐழுே. நீங்கள் உங்கள் முழுமையாக மட்டுமல்லாது என் முழுமையாகவும் மாறுகின்றீர்கள். சத்தியங்கள் சிந்திக்க சிந்திக்க சிந்தையை இனிக்க வைக்கும் சத்தியங்கள். பேரும், ஊரும், சீரும் என்னவெல்லாம் வேண்டுமென்று நினைக்கின்றீர்களோ இவையெல்லாம், தந்து இதன் நிலையற்ற தன்மையையும் உங்களுக்குக் காட்டி இதையும் தாண்டி வாழ்வு ஒன்று உண்டு என்பதையும் உணர்த்தி, அது என்ன என்று அனுபுதிமயமாக உங்களுக்கு ஆக்கி, சத்தியம் சங்கடம் இல்லாது உங்களுக்குள் அனுபுதியாய் மாறுகின்ற அருள் நிலையாய் மலருகின்ற நிஜமாய் மாறுகின்ற, வெறும் படிப்பறிவாய் அல்லாது, பகுத்தறிவாய் அல்லாது, சுட்டறிவாய் அல்லாது பட்டறிவாய் மாறும் அறிவியல், இந்த கல்பதரு அறிவியல். மனிதன் மனிதனுக்குள் உயிர்த்திருக்கும் உயிர் இறைவனின் விதை. மனிதன் சதாசிவனின் விதை. ஆதிசக்தியின் கவிதை.குருவின் அகவிதை. மீண்டும், மீண்டும், மீண்டும் எத்துனைமுறை கேட்டாலும் வாழ்ந்தால் மட்டுமே சத்தியம் சாத்தியம். யோகாசனத்தை பற்றி 100 புத்தகம் படிச்சா வயிறு குறைந்துவிடாது. ஆயிரம் மணி நேரம் அதைப் பற்றி டி.வி பார்த்தா வீடியோ பார்த்தாலும் தொப்பை குறையாது. எழுந்து உடலை வளைத்தால் மட்டுமே யோகத்தின் சத்தியம் சாத்தியம். கட்டில்லையே படுத்துகிட்டு டிவி விதவிதமான வெரைட்டி வெரைட்டியான யோக எப்படி பன்றதுங்கிற வீடியோக்களைப் போட்டுப் போட்டு பாத்தீங்கன்னாலும் அணுவும் வயிறு குறையாது. செய்திடவே சத்தியம் சாத்தியம் ஆகும். வாழ்ந்திடவே சத்தியம் சாத்தியம் ஆகும். இல்லைன்னா வாழ்க்கை நடந்திட்டே இருக்கும், நீங்கள் வாழ்ந்த சுவடே இருக்காது. ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டு போினை நீக்கி பிணமென்று பெயரிட்டு சுறையன் காட்டிடை கொண்டு போய் சுட்டிட்டு நீரினில் முழ்கி நினைப்பொழிந்தனரே. ரொம்ப வலிக்கிற விஷயம் அந்த நினைப்பொழிந்தனரே என்ற வார்த்தைதான்.. ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுவார்கள், ஆஹா! பாரவாயில்லை ஒலிக்க அழுகிறார்களே போினை நீக்கி பிணமென்று பெயரிட்டு பரவாயில்லை ஏதோ ஒரு பெயர் இருக்கே, சுறையன் காட்டிடை கொண்டு போய் சுட்டிட்டு பாரவாயில்லை பரவாயில்லை நாய் நரிக்கு போடாம கொண்டு போய் எரிச்சிட்டாங்களே நீரினில் முழ்கி இது கூட ஓகே பரவாயில்லை. நினைப்பொழிந்தனரே. நினைப்பு ஒழிவார்கள். மறந்துடுவாங்க. ஐயோ மறந்திடுவாங்களே நாளைக்கு..
நீரினில் முழ்கி நினைப்பொழிந்தனரே. அதுதான் வலிக்குது மறந்துருவானுங்களே..
ஆழ்ந்து தொிந்து கொள்ளுங்கள். சிந்தையெல்லாம் இனிக்கும். சிவத்தன்மையை உணர்ந்தால் ஒழிய வேறு ஒரு காரணத்தாலும் நிலையாத உலகில் நிலைத்திருக்கலாகாது. ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டு - இந்தக் காலத்துல லவுட் ஸ்பீக்ர் போட்டு அழறாங்க.. போினை நீக்கி பிணமென்று பெயரிட்டு சுறையன் காட்டிடை கொண்டு போய் சுட்டிட்டு நீரினில் முழ்கி நினைப்பொழிந்தனரே. போட்டோ எடுத்து உள்ள மாட்டுடாப்பா.. பாக்கும்போதெல்லாம் வரவங்க போறவங்க எல்லாம் இல்லாத கேள்வியெல்லாம் கேட்கிறங்க.. நடுக்கூடத்தில் இருக்கும் படம், குறுக்கும் நெடுக்குமாய் நாம் நடந்துகொண்டிருக்கும் நடுக்கூடத்தில் இருக்கும் படம் வருடத்திற்கு ஒருமுறை செல்லும் பூஜை அறைக்குள் சென்ற உடனேயே நினைப்பொழிந்தனரே. ஆழந்து தொிந்து கொள்ளுங்கள். நினைப்பில் இருக்கும். நினைப்பையே இனிக்க வைக்கும் சத்தியத்தை நினைந்து வாழ்க்கையை மலர்த்தினீர்களானால் மட்டும்தான் நிரந்தர வாழ்க்கை. காலிருக்கும்போதே காசிக்குப் போங்கள். நாலுபோ் எட்டுககால் வழியாக தூக்கிச் செல்லக் காத்திருக்காதீர்கள். இரண்டு காலிருக்கும்போதே காசிக்குப் போங்கள். பத்துக்கால் அதை தூக்கிச் செல்லக் வேண்டும் என்று காத்திருக்காதீர்கள். பற்றுக்கால் பிடித்து இரண்டு ஊன்றி காசிக்கு செல்லாமல் பத்துக்கால் தூக்கிச் செல்லும்வரை காத்திருப்பீர்கள். இருக்கும்பொழுது இறைவனைப் பற்றிடுங்கள். சிந்தையெலாம் இனிக்கும். சிவமாய் மாறிடுங்கள். சிந்தையெல்லாம் இனிக்கும் சிவத்துவமஸி எனும் சத்தியத்தை உணர்ந்திடுங்கள்.
Photos Of The Day: